திராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்?

திராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்[1]? திமுகவினர் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்று “ஆர்யாள்” எல்லோரும் பேசிக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது, கனிமொழிக்கு பதிலாக ராஜாவிற்கு கொடுக்கப்படவேண்டும், குறிப்பாக டெலிகம்துறை கொடுக்கப்படவேண்டும், கொடுக்காவிட்டால் கருணாநிதி ஆதரவை விளக்கிக் கொள்வார், ஆனால் சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்று இப்படியெல்லாம் பேசுவது அவர்கள் ஏதோ கருணாநிதி குடும்பத்திற்கு அப்படி நெருக்கமானவர்கள் போல இருக்கிறது. இது என்ன பந்தம்?

கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித்: “முன்புமுந்திராஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். “முந்திராஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது[1]. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர். இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? “ஸ்பெக்ட்ரம்ஊழலை நிரூபிக்க தயாரா? பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார். விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்,”இவ்வாறு கருணாநிதி பேசினார்


[1] “The Kalkis and Dinamanis did not bother to write anything about the Mundra scandal after that. But, even after Mr. Raja resigned over the spectrum issue, the Opposition and certain sections of the press continue to harp on the need for a JPC probe just because Mr. Raja is a Dalit.”

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article917996.ece

 

வேதபிரகாஷ்

© 29-11-2010


குறிச்சொற்கள்: , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: