இந்து அறநிலையத் துறை அமைச்சரின் மகனின் திருமணத்தில் அரசியல் செய்யும் கருணாநிதி!

இந்து அறநிலையத் துறை அமைச்சரின் மகனின் திருமணத்தில் அரசியல் செய்யும் கருணாநிதி!

என்ன நெற்றியில் காயமா? ஏன் ரத்தம் வருகிறது? இப்படி ஒரு தொண்டரைப் பார்த்து நக்கலடித்து, கிண்டல் செய்ததை எபடித்தான், தமிழ் மக்கள் மறப்பார்களோ, தெரியவில்லை? இன்றோ, குங்குமம் அதிகமாக வைத்திருந்ததால், அமைச்சர் படவி கொடுத்தேன் என்று ஊத்தைவாயை வைத்துக் கொண்டு புளுகிறார்! இருக்கின்ற ஊழல், கோவில் கொள்ளை, கோவில் நிலத்தை விற்ற ஊழல் ஏல்லாவற்றையும் மறைத்து, ஏதோ பூஜைகள் எல்லாம், இந்த நாத்திக-கொள்ளைக்காரர்களின் ஆட்சியில் தவறாமல் நடப்பது போல பொய்களை அள்ளிவீசுகிறார். இதனால்தான் போலும், வெளியே, ஒரு பனைமரம், அலேக்காக, வயர்கம்பிகளின் மீது கிடந்து, ஊஞ்சாலாடிக் கொண்டிருந்தது

ஒவ்வொரு மாதம், வாரம் தவறாமல் குடமுழுக்கு நடைபெறு.கிறதாம்!, அந்த கோவில்களுக்கு தேவையான எல்லாவகையான பூஜைகளும் நடைபெறு.கிறதாம்!!: அது மட்டுமா? பெரியகருப்பனை பார்த்து, “இந்த ஆண்டு எத்தனை கோவில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம்‘, என்று. கேட்டதாகவும். அதற்கு அவர், ன்னிடம் ஒரு பட்டியலை கொடுத்தாகவும் ரீல் விட ஆரம்பித்து விட்டார். அதில், ஒவ்வொரு மாதம், வாரம் தவறாமல் குடமுழுக்கு நடைபெறுவதும், அந்த கோவில்களுக்கு தேவையான எல்லாவகையான பூஜைகளும் நடைபெறுவது குறித்து இருந்ததாம்!. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆன்மிகத்திற்கு, நாம் எதிரானவர்கள் அல்ல”, என்று பெரிய குண்டைப் போட்டார்! அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் மகன் கோகுலகிருஷ்ணன் – பாரு பிரியதர்ஷினி திருமணம், சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்: “மத்திய அமைச்சர் சிதம்பரம், தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்றார். அதனால், என்னை பெண் வீட்டுக்காரனாக ஆக்கி, இந்த இல்லறக் கூட்டணியின் சார்பாக இருவரும் இணைந்து மணமக்களை வாழ்த்துவோம். பெரியகருப்பனின் பணிகள் என்னை மாத்திரமல்ல, ஆன்மிகவாதிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒரு கோவில் விழாவில், மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன். பெயராலும், மீசையாலும் பெரியகருப்பன் அச்சுறுத்தல் தரக் கூடியவர்; ஆனால், உள்ளத்தால் நம் அன்பையெல்லாம் கவர்ந்தவர்.அவர் கொண்டிருக்கும் தெய்வ நம்பிக்கையைக் கூட, என் மீது கொண்டிருக்கும் மரியாதையால், அதை கொஞ்சம் மறைத்து திறம்பட பணி புரிகிறார்”.

ஒவ்வொரு மாதம், வாரம் தவறாமல் குடமுழுக்கு நடைபெறுகிறதென்றால் ஊழல் ஏன் நாறுகிறது?: “சட்டசபையில், ஒருநாள், எதிர்க்கட்சியினர் பல கேள்விகளை அடுக்கிய போது, பின்னால் அமர்ந்திருந்த பெரியகருப்பனை திரும்பி பார்த்து, “இந்த ஆண்டு எத்தனை கோவில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம்என்ற விவரம் கேட்டேன். அவர், என்னிடம் ஒரு பட்டியலை கொடுத்தார். அதில், ஒவ்வொரு மாதம், வாரம் தவறாமல் குடமுழுக்கு நடைபெறுவதும், அந்த கோவில்களுக்கு தேவையான எல்லாவகையான பூஜைகளும் நடைபெறுவது குறித்து இருந்தது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆன்மிகத்திற்கு, நாம் எதிரானவர்கள் அல்ல”.
ஊழல் செய்து விட்டு, ஊழலே இல்லை என்று பேசுவதே பெரிய கலைத்தான்!பனகல் அரசரால் நிறுவப்பட்டதுதான் இந்து அறநிலையத்துறை. ஆலயங்களுக்கு வருகின்ற காணிக்கை ஒழுங்காகச் செலவிடப்படுகிறதா, திருவிழா, தெப்ப உற்சவ விழாக்களில் செலவழிக்கப்படும் பணத்துக்கு ஒழுங்கான கணக்கு இருக்கிறதா, தினம் தினம் ஆலயத்துக்கு ஆகின்ற செலவுக்கு, ஆலயப் பணியாளர்களின் ஊதியங்களுக்குக் கணக்கு இருக்கிறதா என ஆராய்ந்து, ஊழல் வராமல் பார்த்துக் கொள்கின்ற பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது பனகல் அரசரின் ஆட்சி[1]. கோவில்களில் ஆகும் செலவுகளுக்கு, பணியாளர்களின் ஊதியத்திற்கு கணக்கு இருக்கிறதா என ஆராய்ந்து, அதிலே, சிறு ஓட்டை உடைசல் வராமல், ஊழல் வராமல் பார்த்துக் கொண்டதுதான் அந்த சட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி. அவ்வெற்றியின் ஒரு கட்டத்தைத்தான், சிதம்பரத்தில் நாம் அனுபவித்தோம். தீட்சிதர்கள் கையில் இருந்த கோவில் ஆதிக்கம் மாற்றப்பட்டு, இன்று அரசுடமையாகி உள்ளது. அந்த துறையில் நல்லவர்களை அமைச்சர்களாக்க வேண்டும்[2]. அதே நேரத்தில், அவர்கள், மனிதாபிமானத்தோடு பணியாற்ற வேண்டும் என்று தான், பெரியகருப்பனை அமைச்சராக ஆக்கினேன்.
முதல்வர் பதவியில் தொடர்வதை விட, தி.மு.க., தலைவர் பதவியில் தொடரவே விரும்புகிறேன்[3]: “தமிழகம் மேலும், மேலும் வளம் பெற வேண்டும். இந்த ஆட்சி தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை, பெரியகருப்பனுக்கு உள்ளது. அவரை அமைச்சர் என சொல்வதை விட, மாவட்டச் செயலர் என கூறிய போது, நீங்கள் அதிக ஆர்வம் காட்டினீர்கள். எனக்குக் கூட அப்படி ஒரு ஆசை இருக்கிறது. முதல்வர் என்பதை விட, தி.மு.க., தலைவர் என்பதில் தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகவே, நான் அந்த முடிவிற்கே விரைவில் வருவேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். முதல்வர் பதவியில் தொடர்வதை விட, தி.மு.க., தலைவர் பதவியில் தொடரவே விரும்புகிறேன்,” என, அமைச்சர் பெரியகருப்பன் இல்லத் திருமண விழாவில், கருணாநிதி பேசினார்[4]. திருமணத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அழகிரி, தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட, பல முக்கிய பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர். பெரியகருப்பன் நன்றி கூறினார்.

கருணாநிதிக்குப் பிறகு யார் –ஸ்டாலின்-அழகிரி?: முதல்வர் பதவியில் இருந்து விலகும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று கருணாநிதி கூறியபோது, கட்சியின் மூத்த தலைவர்கள் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி ஆகியோர் மேடையில் இருந்தனர். முதல்வரின் மகன்கள் மு.க.ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் மேடையில் இருந்தனர். கடந்த ஆண்டு 2010 செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, “மாநாட்டுக்குப் பின் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, மாநாட்டுக்குப் பின் முதல்வர் பதவியில் இருந்து விலகி அவரது மகன் மு.க.ஸ்டாலின் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்த நிலையில், கட்சித் தலைவர் பதவி மட்டுமே என்ற நிலையை கருணாநிதி எடுத்திருப்பது மூலம் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

 

© வேதபிரகாஷ்

20-01-2011

 


[1] தினமணி, விரைவில் பதவி விலகுவேன்: முதல்வர் கருணாநிதி, http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=366392&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

 

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “இந்து அறநிலையத் துறை அமைச்சரின் மகனின் திருமணத்தில் அரசியல் செய்யும் கருணாநிதி!”

  1. திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும Says:

    […] [8] https://dravidianatheism.wordpress.com/2011/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%A… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: