கால்டுவெல்லை வைத்துக் கொண்டு, தமிழர்களை இழிவு படுத்தும் செயல்கள்!

கால்டுவெல்லை வைத்துக் கொண்டு, தமிழர்களை இழிவு படுத்தும் செயல்கள்

தமிழர்களது சரித்திரம் தெரியாமலே தமிழர்கள் வாழ்வது: கால்டுவெல் தமிழுக்கு என்ன செய்தார், என்று தமிழர்கள் சரித்திரத்தைப் படித்து அறிய வேண்டும்[1]. கால்டுவெல்லைப் பற்றிய இணைத்தளத்திலேயே, அவரது உண்மையான சுயரூபம் பதிவிடப் பட்டுள்ளது. அதிலிருந்து மொழிபெயர்த்து சில விஷயங்களை ஏற்கெனவே, நான் பதிவு செய்துள்ளேன்[2]. ஏனெனில், இப்பொழுது அண்மைக்கால சரித்திரத்தையே மறைத்து பொய்-புளுகளை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர். அதிலும், தேவையில்லாத அளவிற்கு, கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள், உள்நோக்கத்தோடு, கால்டுவெல்லைப் பற்றி புளுகியிருக்கிறார். தமிழுக்கு ஆற்றியத் தொண்டுகள் என்று பேசவே, முதலில் இவர்கள் வெட்கப்படவேண்டும். அப்படியென்றால், உள்ள தமிழர்களுக்கு சூடு, சொரணை, வெல்கம், மானம் ……..முதலியவை இல்லையா என்ன?

இந்தியாவைப் பிரிக்க கிருத்துவர்கள் தமிழ் கற்க ஆரம்பித்தார்கள்: கிருத்துவர்கள் இந்தியர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவே, இந்திய மொழிகளைக் கற்றுக் கொண்டனர். தமிழை மட்டும் ஒன்றும்  தனியாகக் கற்றுக் கொண்டுவிடவில்லை. குறிப்பாக, கிருத்துவ மததைப் பரப்பவே அவர்கள் தமிழைக் கற்றுக் கொண்டார்கள். ஆகவே, “தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சிறப்புக்கும் கிருஸ்துவ அறிஞர்கள் ஆற்றியிருக்கும் அரிய பணி அளவிட முடியாதது”, என்று முதல்வர் கருணாநிதி கூறுவதில், உண்மை இல்லை. ஜீஜன்பால்கு செயல்களைப் படித்தலே, கிருத்துவர்களின் உண்மை முகம் தெரிந்து விடும்.  தமிழைப் படிக்கிறோம் என்று, “திராவிட மாயை”யைத் தோற்றுவித்து, தமிழர்களை பிரித்ததுதான் அதன் விளைவு.

ரூ. 19 லட்சம் செலவித்ததே விரயம் தான்: நெல்லை மாவட்டம் இடையன்குடியில் தமிழறிஞர் கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இல்லம் ரூ. 19 லட்சம் செலவில் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் பணத்தை இவ்வாறு செலவிட்டிருப்பது, தேவையற்றச் செயலாகும். இந்த சாக்கில், யாரோ கான்டிராக்டர்கள், வழக்கம் போல, நன்றாக சம்பாதித்திருப்பார்கள் அவ்வளவே. தமிழுக்கு, இதனால் இழுக்கே தவிர, பெருமை இல்லை. இது ஒரு அவமானச் சின்னமாகத்தான் இருக்கும்.

தமிழால் கால்டுவெல் கவரப்பட்டார் என்பது அப்பட்டமான பொய்: இந்த இல்லத்தை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்[3]. அப்போது அவர் பேசுகையில், “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த தமிழறிஞர் கால்டுவெல் வாழ்ந்து-மறைந்த நெல்லை மாவட்டம் இடையன்குடியில் உள்ள இல்லத்தை நினைவில்லமாக மேம்படுத்தி, அதை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்[4]. தமிழ் மொழியின் தொன்மையும், தூய்மையும், வலிமையும், வனப்பும், கற்றோர் அனைவரையும் கவர்ந்திழுத்து, உயிருக்கும் மேலென உணர வைத்திடும் தகுதி மிக்கது. அப்படி தமிழால் கவரப்பட்ட வெளிநாட்டவர் மிகப்பலர். அவர்களில் தலையா அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சிறப்புக்கும் கிருஸ்துவ அறிஞர்கள் ஆற்றியிருக்கும் அரிய பணியை, இந்த இனிய வேளையில் நினைவு கூர்வது எனது கடமையாகும். தமிழ் மொழியைப் பொறுத்தவரை, கிருஸ்துவர்கள் ஆற்றிய பணி பலவகைப்பட்டதாகும்”.
அகராதிகளின் முன்னுரையைப் படித்திருந்தால், சேதுபிள்ளை அவ்வாறு உளறி இருக்க மாட்டார்: கருணாநிதி தொடர்கிறார், “தமிழ்நாட்டுக் கலைச்செல்வத்தை மேலைநாட்டினர்க்குக் காட்டினர் சிலர். தமிழ் இலக்கியத்தின் பண்புகளை பாட்டாலும், உரையாலும் விளக்கியவர்கள் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து தமிழின் தொன்மையையும், செம்மையையும் துலக்கினர் சிலர். மேலைநாட்டு முறையில் தமிழ் அகராதியை தொகுத்து உதவினர் சிலர். தெல்லிய தமிழ் வசன நடையில் அறிவுநூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர் என்று சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்”.

கிருத்துவர்கள் தங்களுக்குள் தாக்கி எழுதிக் கொண்ட தமிழ் புத்தகங்களும் முதலில் தோன்றியது தமிழகத்தில் தான்: கருணாநிதி தொடர்கிறார், “இந்திய மொழிகளில் முதன்முதல் அச்சுப் புத்தகம் உண்டானது தமிழ் மொழியிலேதான். கிருஸ்துவ மதத்தைப் பரவச் செய்வதற்காகப் பெருந்தொண்டாற்றி வந்த ஏசு சபை பாதிரிமார்கள், முதன்முதலில் தமிழில் அச்சுப் புத்தகம் உண்டாக்கினர். பெஸ்கி என்னும் வீரமாமுனிவர்தான் தமிழில் முதன்முதலில் உரைநடை நூல் இயற்றியவர்[5]. முதன்முதலில் தமிழில் அகராதி எழுதியவரும் வீரமாமுனிவரே ஆவார்”. இப்படி பெஸ்கியைப் பற்றி பொய் சொல்வதில், கருணாநிதி மாபெரும் துரோகத்தை செய்கிறார். ஏனெனில், இந்த பெஸ்கி தான், சிவபிரகாசரின் நூல்களை எரித்து அழித்தவர். அப்படிப் பட்ட, தமிழ் துரோகியை பாராட்டிப் பேசுவது வேடிக்கையே. அதுமட்டுமல்லாது, ஜீஜன்பால்கு மற்றும் இந்த பெஸ்கிற்கும் நடந்த சணை கொஞ்ச நஞ்சம் அல்ல. “நச்சுப் பாம்பின் விஷக்கடிக்கு மருந்து” என்று ஒரு புத்தகத்தை தமிழில் எழுதி பெஸ்கியைச் சாடியுள்ளார். அப்படி தமிழிலேயே தாக்கிக் கொண்ட மர்மத்தை கருணாநிதி விளக்குவாரா?

ஜி.யு. போப்பின்மாய்மாலவேலைகள்: கருணாநிதி தொடர்கிறார், “திருக்குறள் போன்ற தலைசிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவற்றின் சிறப்புகள் உலகமெங்கும் பரவிட காரணமாக இருந்தவர் ஜி.யு.போப். தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் நன்கொடையைக் கொண்டு, தனது கல்லறை அமைக்கப்பட வேண்டும் என்றும், தனது கல்லறையில் தன்னை தமிழ் மாணவன் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்றும் விரும்பியவர் போப். இறையியல் ரீதியில், சித்தாந்தத்தை குழப்புவதற்காக, போப் வேலை செய்தார்.

கருணாநிதி தொடர்கிறார், “தமிழ்-ஆங்கில அகராதியை தயாரித்த ராட்லர், யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் ஆக்கபூர்வமான தமிழ்த் தொண்டு புரிந்த டாக்டர் வின்ஸ்லோ ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். நம் நாட்டுக் கிருஸ்துவர்களின் தமிழ்த் தொண்டும் சாமானியமானதல்ல. ரட்சண்ய யாத்திரிகம்என்னும் காவியத்தைப் படைத்த கிருஷ்ணபிள்ளை, ‘குறவஞ்சிநாடகம் எழுதிய இன்பகவி, ‘பிரதாப முதலியார் சரித்திரம்எழுதிய வேதநாயகம் பிள்ளை, ‘தொல்காப்பிய நன்னூல்எழுதிய சாமுவேல் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்”.

திருட்டுத்தனமாக அகழ்வாய்வு செய்து ஆதாரங்களை மறைத்ததை-அழித்ததை[6] பாராட்டுவதும் வேடிக்கைத்தான்: கருணாநிதி தொடர்கிறார், “அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்டுவெல், 1838ம் ஆண்டில், தமது 24வது வயதில் மதபோதகராக, சென்னை மாநகர் வந்தடைந்தவர், பின்னர் நெல்லை பேராயராக பொறுப்பேற்று, பன்னூறு ஓலைச்சு வடிகளையும், சங்ககாலத் தமிழ் இலக்கியங்களையும் பயின்றவர், புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பாண்டியர் காலத்திற்குச் சொந்தமான கயல் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் கண்டுபிடித்தவர், நெல்லை வரலாற்றை ஆய்வு செய்து, தமது ஆய்வுகளின் அடிப்படையில், ‘திருநெல்வேலி சரித்திரம்எனும் பெயரில், நெல்லை வரலாற்றை நூலாக எழுதியவர்”.

சாணார்களை இழிவு படுத்தி எழுதிய புத்தகங்களைப் பற்றி மறைப்பதும் கருணாநிதியின் கயமைத்தனம் தான்: சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள், அவர்கள் படிப்பதர்கு லாயக்கில்லை…..என்றெல்லாம் ஒரு புத்தகத்தில் எழுதினார். பிரச்சினை எழுந்தவுடன், அப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதாக, ஆங்கில அரசு அரிவித்தது. ஆனால், விரிவான மற்றொரு புத்தகத்தை, லண்டனில் வெளியிட்டது. அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், அது திரும்பப் பெற்றதாக இருக்கலாம், ஆனால், உலகத்தைப் பொறுத்த வரைக்கும், அக்கருத்துதான், படித்தவர்கல் எல்லோரும் கொண்டிருப்பர். கருணாநிதி, நிச்சயமாக, வேண்டுமென்றே அமைதியாக இருந்திருக்கிறார்.

தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் முழக்கமிட்ட வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்தான்: கருணாநிதி தொடர்கிறார், “தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளையும் கற்றவர், திராவிட மொழிகளுக்கிடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து ஆய்வு செய்தவர், அதன் பயனாக `திராவிட மொழிகள்என்னும் சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர், அத்துடன் தமிழ் மொழி, ‘செம்மொழிஎன முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால், தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் முழக்கமிட்ட வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்தான். பரிதிமாற்கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856ஆண்டில் அறிஞர் கால்டுவெல் தாம் எழுதிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், “திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே அகற்றிவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்என்னும் வரலாறு போற்றும் மகத்தான உண்மையையும் நிலைநாட்டியவர். அதன்மூலம் செம்மொழித் தமிழின் மேன்மையையும் உலகறியச் செய்தவர்”, என்றார் கருணாநிதி[7].

வேதபிரகாஷ்

18-02-2011


[1] வேதபிரகாஷ், கால்டுவெல் வாழ்ந்த வீடு நினைவிடமாக மாற்றம்!,  https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

[2] வேதபிரகாஷ், கால்டுவெல் புராணம் தொடர்கிறது…………, https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

[6] வேதபிரகாஷ், சரித்திரத்தை மறைத்த பாதிரியாருக்கு கருணாநிதி கௌரவம்,

https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “கால்டுவெல்லை வைத்துக் கொண்டு, தமிழர்களை இழிவு படுத்தும் செயல்கள்!”

  1. எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்! « திராவிடநா Says:

    […] https://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/ […]

  2. கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது! | atheism Says:

    […] [7] வேதபிரகாஷ், கால்டுவெல்லைவைத்துக்கொண்டு, தமிழர்களைஇழிவுபடுத்தும்செயல்கள், https://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/ […]

  3. கால்டுவெல் புராணம் பாடும் கருணநிதி: கோயம்புத்தூரிலிருந்து இடையன்குடிக்கு போகும் தீவிரவாத ஆத Says:

    […] [5] https://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: