சன்டிவி சக்சேனாவுக்கு எதிராக கமிஷனரிடம் நித்யானந்தா, ரஞ்சிதா கொடுத்த புகார்கள் – அரசியலா, ஆன்மீகமா, பகுத்தறிவா!

சன்டிவி சக்சேனாவுக்கு எதிராக கமிஷனரிடம் நித்யானந்தா, ரஞ்சிதா கொடுத்த புகார்கள் – அரசியலா, ஆன்மீகமா, பகுத்தறிவா!

 

சன் நெட்வொர்க் நிறுவனம் மீதளிக்கப்பட்ட இரண்டாவது புகார்: சென்னையில் கடந்த ஆண்டு 2010ல், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பியதாக் குற்றம்சாட்டி சன் டிவி தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் 8 பேருக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை சென்னை போலீசிடம் நித்யானந்தா அளித்துள்ளார். இதே குற்றச்சாட்டுகளைக் கூறி சன் நெட்வொர்க் நிறுவனம் மீது ஏற்கனவே நித்யானந்தா சென்னை பீடம் சார்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டது. தற்போது ஜூலை.13 அன்று, தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2-வது புகாராகும்[1].

 

ஆட்சி மாற்றத்தினால், இவ்வாறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்று சந்தேகம் / புகார் வரலாம். ஆனால், சென்ற வருடம் இவர்கள் புகார் செய்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, புகார் கொடுத்த இவர்கள் மீதுதான் வழக்குகள் போடப்பட்டன. சென்னையில் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்தாலும், பிறகு சாமர்த்தியமாக கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டன. ஆகவே, அப்பொழுது, அரசியல் ரீதியில் அவ்வாறு செய்யப்பட்டனவா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது.

 

நித்ய ஆத்மபிரபானந்தாவை சந்தித்த வழக்கறிஞர் யார்? நித்யானந்தா தியானபீட அறக்கட்டளையின் மேலாளர் நித்ய ஆத்மபிரபானந்தா இந்த புகாரை அளித்துள்ளார். புகாரில் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் மற்றும் நக்கீரன் வார இதழ் ஆசிரியர் ஆர்.கோபால் ஆகியோருக்கு உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  “நித்யானந்தா ஆசிரமத்துக்கு உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். எங்களது தலைமை பீட குருவாக நித்யானந்தா உள்ளார். ஏராளமான சமூக பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.   இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி நித்யானந்தா சாமிகள் கோவையில் பகவத் கீதை சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது வழக்கறிஞர் ஒருவர் எங்களது நிர்வாக அதிகாரியை சந்தித்து பேசினார். நித்யானந்தாவை உடனே சந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார். சாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். சிறிது நேரம் காத்திருங்கள் என்று கூறினோம். பின்னர் 21-ந்தேதி என்னிடம் அந்த வழக்கறிஞர் தொலைபேசியில் பேசினார். என்னிடம் நித்யானந்தா சாமிகள், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ மற்றும் படங்கள் உள்ளன. இதனை ஆசிரம சீடர் லெனின் மற்றும் ஆர்த்திராவ் ஆகியோர் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். நேரில் சென்னைக்கு வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.

ரூ 60 கோடி மற்றும் இடம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞர் யார்? “இதையடுத்து நானும் பிடதி ஆசிரம செயலாளர் நித்ய சதானந்தா, நித்ய பக்தானந்தா ஆகியோர் உடனடியாக பெங்களூரில் இருந்து சென்னை வந்து அவரை சந்தித்தோம். அப்போது அவர் இந்த வீடியோ காட்சிகள் வெளி வராமல் இருக்க வேண்டும் என்றால் 60 கோடி ரூபாய் தர வேண்டும். மேலும் ஐதராபாத், சென்னையில் உள்ள ஆசிரமத்துக்கு சொந்தமான 2 இடங்களை எழுதி தர வேண்டும் என்று கேட்டார். இதற்கு நாங்கள் உடன்பட வில்லை.

 

அவ்வாறான சிடிக்கள் உள்ளது, இணைத்தளத்தில் போட்டத்து, பரப்பியது, ஊடகங்களில் அவ்வப்போது அவதூறாக செய்திகள் போட்டது, பேசியது, செந்தமிழ் மாநாட்டில் கூட கோபால், லெனின் பெயர் குறிப்பிட்டு, “நித்தி, நித்தி” என்று பேசியது, முதலியவை சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் மற்றும் நக்கீரன் வார இதழ் ஆசிரியர் ஆர்.கோபால், லெனின், குமார், ஆர்த்திராவ், காமராஜ், முதலியோர் சம்பந்தப்பட்டுள்ளாதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது முதலியவை இந்த பின்னணியைக் காட்டுகிறது.

லெனினுடன் சேர்ந்து நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரும் எப்படி மிரட்டினர்?. “இதனால் கோபம் அடைந்த அவர் உடனடியாக அட்வான்ஸ் தொகையாக ரூ. 60 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் லெனினிடம் அந்த ஆபாச காட்சிகளை வெளியிட சொல்லி விடுவேன் என்று மிரட்டினார்.   நாங்கள் சொல்வதை கேட்கா விட்டால் நித்யானந்தா உள்பட நீங்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று மிரட்டினார். லெனினுடன் சேர்ந்து நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரும் மிரட்டினர். கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் நக்கீரன் பத்திரிகையிலும் இணையதளத்திலும் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினார்கள்.   இதனால் பயந்து போன நாங்கள் 2 மணி நேரம் கழித்து 2 தவணைகளாக ரூ.30 லட்சம் ரூபாயை அந்த வழக்கறிஞரிடம் வழங்கினோம்.

 

ரூ 30 லட்சம் வாங்கிக் கொண்டு வாக்குத்தவறிய லெனின், குமார், ஆர்த்திராவ், நக்கீரன்கோபால், காமராஜ் முதலியோர்: “உடனே வழக்கறிஞர் இந்த வீடியோ காட்சிகள் வெளிவராது என்று உறுதி அளித்தார். ஆனால் மார்ச் 2-ந்தேதி சன் டி.வி.யில் நித்யானந்தா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதனால் எங்களது ஆசிரம நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சென்னையில் உள்ள வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு பேசினேன். சென்னைக்கு புறப்பட்டு வாருங்கள் என்றனர். அவசரமாக சென்னை வந்த நான் அந்த வழக்கறிஞரை சந்தித்து பேசினேன். அவர் நான் வந்திருக்கும் விஷயத்தை லெனின், குமார், ஆர்த்திராவ், நக்கீரன் கோபால், காமராஜ், சன் டி.வி. தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது நெருங்கிய உதவியாளர் அய்யப்பன் ஆகியோரிடம் தெரிவித்தார்.

புகார் கொடுத்து ஊடகங்களிடம் விஷயத்தைச் சொன்னதால் மறுபடியும் மிரட்டல்: “இதன்பிறகு அய்யப்பன் எங்களை தொடர்பு கொண்டு சன் டி.வி.யில் வெளிவரும் ஆபாச வீடியோ காட்சிகளை நிறுத்த வேண்டும் என்றால் ரூ.60 கோடி தரவேண்டும் என்று கேட்டார். பணத்தை உடனடியாக தரவேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து ஆபாச சி.டி, வெளியான 2 நாள் கழித்து சென்னையில் எங்களது ஆசிரம நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். கடந்த ஆண்டு மார்ச் 5-ந்தேதி பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்துக்கு அய்யப்பனும் அவருடன் சேர்ந்த சில குண்டர்களும் புகுந்து ஆசிரமத்தில் இருந்தவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசினர். என்னையும் தாக்கினர்.   அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு லெனினை ஆயுதமாக வைத்து இவ்வளவு சம்பவங்களும் நடந்துள்ளன. இதுதொடர்பாக அப்போது நாங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே லெனின், குமார், ஆர்த்திராவ், நக்கீரன் கோபால், காமராஜ், சன் டி.வி. சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்ய ஆத்மபிரபானந்தா அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ரூ. 100 கோடி வரை மிரட்டிய பேரம்: சன்,”டிவி’யில் ஒளிபரப்பான காட்சிகள் குறித்தும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகள் குறித்தும், சென்னை எழும்பூரில் உள்ள மெரீனா டவர்ஸ் ஓட்டலில் நித்யானந்தர் இன்று நிருபர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்[2]. அப்போது பேசிய நித்யானந்தா, ஆபாச வீடியோவை ஒளிபரப்பு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.100 கோடி கொடுக்க வேண்டும் என்று சன் டி.வி., மிரட்டியது. மேலும் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று கூறினார்.

 

சன், “டிவி’, தினகரன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை வேண்டும்: ரஞ்சிதா நம்பிக்கை[3] சென்னை: “”நித்யானந்தாவுடன் இருப்பது நான் இல்லை. அது, “மார்பிங்’ முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. என்னை பற்றி அவதூறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய சன், “டிவி’ மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என, எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என, நடிகை ரஞ்சிதா கூறினார்.

இவ்வாறு கோடிக்கணக்கில் பேரம் உயர்ந்து வந்துள்ளபோது, அதிலும் நித்யானந்தா மடத்தின் மூலம் புகார் அளித்தும் ஏற்காதது, மடத்தின் ஆசிரமங்கள், சீடர்கள் முதலியவைத் தாக்கப்பட்டது, முதலியவை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இரண்டு பக்கங்களிலும் நெருப்பு இல்லாமல் புகையாது என்று மக்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.

சென்னையில் 13-07-2011 நேற்றிரவு, நிருபர்களுக்குரஞ்சிதாஅளித்தபேட்டி: சில பத்திரிகைகள், மீடியாக்கள் மனசாட்சி இல்லாமல் என்னைப்பற்றி எழுதி, தெருவில் நிற்க வைத்துவிட்டன. இஷ்டத்திற்கு கற்பனையாக எழுதி, என் தனிப்பட்ட வாழ்க்கை சுதந்திரத்தை பறித்துவிட்டன. அருவருக்கத்தக்க, ஆபாச காட்சிகளை, சன் நெட்வொர்க், “டிவி’க்கள், தினகரன் நாளிதழ், தினகரன் வெப்சைட்டிலும், வெளியிட்டனர். இப்படி, என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, என்னை மக்கள் மத்தியில் அசிங்கப்படுத்தி விட்டனர். இது தொடர்பாக புகார் கொடுக்க சென்னையில் கால் வைத்தால், உடனே, கைது செய்து உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டினர். இதனால், ஒன்றரை ஆண்டுகளாக பாதுகாப்பு கருதி சென்னை வரவில்லை; போலீசிலும் புகார் செய்யவில்லை. அப்போது நான் புகார் கொடுத்திருந்தால், எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள். அப்போது இருந்த ஆட்சி நிலை வேறு, தற்போது உள்ள ஆட்சி நிலை வேறு. தனி மனித உரிமைகள் பற்றி அப்போது எனக்குத் தெரியாது. தற்போது முழுவதுமாக தெரிந்து கொண்டதால் தைரியம் வந்துள்ளது. தற்போது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையால், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் செய்துள்ளேன்.

லண்டன் உதாரணத்தைக் காட்டி புகார் கொடுக்கப்பட்டுள்ளது: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும், போலீஸ் கமிஷனர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. லண்டனில், 168 ஆண்டு பாரம்பரியமிக்க, “நியூஸ் ஆப் த வேர்ல்டு’ பத்திரிகை, தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, சில தினங்களுக்கு முன் மூடப்பட்டுள்ளது. சித்தரித்த ஆபாச காட்சிகளை வெளியிட்டு, என் கண்ணியத்தைக் காயப்படுத்திய, “டிவி’ பத்திரிகைகள் மீது ஒன்றரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்ட ரீதியாக நடவடிக்கை கோரியே போலீசில் புகார் செய்துள்ளேன்.

ரஞ்சிதா கொடுத்த அடுத்த புகார்: நித்யானந்தருடன் இருப்பது நான் அல்ல. அது, “மார்பிங்’முறையில் சித்தரிக்கப்பட்வை. எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. உண்மையை மாற்றி மாற்றி பேச முடியாது. காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியவர்கள் பற்றிய முழு விவரத்தை போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன். இப்போது வெளிப்படையாக சொல்ல நான் விரும்பவில்லை. என் மீது அவதூறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய சன், “டிவி’, செய்தி வெளியிட்ட தினகரன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. முதல்வரை நேரில் சந்திப்பீர்களா என கேட்கிறீர்கள். நான் உங்கள் மீடியாக்கள் மூலமே முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு ரஞ்சிதா கூறினார்.

 

  1. அத்தகைய வீடியோ எடுக்கப்பட்டது / தயாரிக்கப்பட்டது உண்மை
  2. சிடிக்கள் தயாரிக்கப்பட்டது உண்மை. இணைத்தளங்களில் பரப்பியது உண்மை.
  3. நக்கீரன் / தினகரன் இதழில் வெளியிட்டது, சன் டிவியில் ஒலி/ஒளிபரப்பப்பட்டது உண்மை. இவையெல்லாம் தொழிற்நுட்பத்தினால் எளிதாக செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து விடலாம்.
  4. நித்யானந்தா, மடம் மற்ற மடத்தவர் தாக்கப்பட்டுள்ளது உண்மை. பெண்கள் தாக்கப்பட்டபோது கூட, யாரும் கண்டு கொள்ளாமல் நாத்திகம் பேசியது, பகுத்தறிவுவாதம் பேசியது முதலியவை பாரபட்சத்தைத் தான் எடுத்துக் காட்டியது.
  5. நித்யானந்தா, ரஞ்சிதா முதலியோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மை.
  6. நித்யானந்தா கைது செய்யப்பட்டது, சிறையில் அடைக்கப்பட்டது, பைலில் வெளியே வந்தது, தொடர்ந்து ஊடகங்களினால் அவதூறாக்கப்பட்டது முதலியவையும் உண்மை.
  7. அதே காலத்தில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முதலியவை ஆரம்பித்தது முதலியனவும் உண்மை.
  8. ஆக இருதரப்பிலும் பிரச்சினைகள் உள்ளதால் நெருப்பு இல்லாமல் புகையாது என்று மக்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.
  9. இதில் நாத்திகர்கள், பலம் பொறுந்திய அரசியல்வாதிகள், செக்யூலரிஸ ஊடகங்கள், இந்து-விரோத சக்திகள் முதலியவை உள்ளதால் தான், அதை கருத்திற்கொண்டு, இவ்விஷயம் அலசப்படுகிறது. குற்றாஞ்சாட்டப்பட்ட நித்யானந்தாவை ஆதரித்து செய்யப்படவில்லை.
  10. இந்து மதம், இந்துமத நிறுவனங்கள், இந்துமத சின்னங்கள், இந்துமத பழக்க-வழக்கங்கள், சம்பிரதாயங்கள், வழிமுறைகள் முதலியவற்றை வாதிகள்-பிரதிவாதிகள் என்ற இரு கூட்டத்தாரும் கேலி செய்வது, அவதூறு செய்வது, தூஷிப்பது, முதலியவற்றை மக்கள் உணர்ந்துள்ளதால், இனி அத்தகைய காரணம் சொல்லி இருகூட்டத்தாரும் தப்பித்துக் கொள்ளமுடியாது.

 

 

 

 


[1] தினமணி, சன்டிவி சக்சேனாவுக்கு எதிராக கமிஷனரிடம் நித்யானந்தா கொடுத்த புகார், Fi rst Published : 13 Jul 2011 05:31:08 PM IST

http://dinamani.com/edition/story.aspx?Title=%…..ID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: