தியான பீடம் மீதான தாக்குதல் மத ரீதியானது: நித்யானந்தா பேட்டி!

தியான பீடம் மீதான தாக்குதல் மத ரீதியானது: நித்யானந்தா பேட்டி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=274899

நித்யானந்தாவைப் பற்றிய விவகாரங்கள் ஏற்கெனவே பல பதிவுகளில் விவாதிக்கப்பட்டுவிட்டது. மறுபடியும் இப்பொழுது பழைய புகாருடன் வெளிவந்துள்ளார். ஊடகங்கள், டிவிக்கள், போலீஸார் என அனைவரும் பாரபட்சமாக அல்லது ஒருதலைப்பட்சமாகவே அப்பொழுது செயல்பட்டனர்[1]. அதாவது மற்ற மதத்தினர் இதைப்போன்ற அல்லது இதைவிட கொடூரமான குற்றங்கள் செய்திருந்த போதிலும் அடக்கி வாசிக்கப் பட்டன. ஆனால், இவ்விஷயம் பிரபலமாக்கப் பட்டது[2].

பிரச்சினையை அரசியலாக்கித் திசைத் திருப்பும் போக்கில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை. தவறு / குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.

நித்யானந்தாவின் புகார்: முன்னரே இத்தகைய புகார் கொடுக்கப்பட்டுள்ளது, செய்திகளும் வெளிவந்துள்ளன. ஆனால், அப்பொழுது, பிரச்சினையை அரசியல் ரீதியில் திசைத்திருப்ப, வழக்குகளை பெங்களூருக்கு மாற்றி விட்டனர். ஆனால், அதே நேரத்தில் சில வழக்குகள் இங்கேயே பதிவு செய்தாலும், எதிர்-புகார்களைக் கண்டுக்கொள்ளவில்லை. இப்பொழுது நித்யானந்தா சொல்வது, “நில அபகரிப்பில் ஈடுபடும் நோக்கில், “மார்பிங்முறை வீடியோவை ஒளிபரப்பி, என் மீது, சன்,”டிவியினர் பழி சுமத்தினர். அவர்கள் ராட்சதர்கள். தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதல், தனிப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். ராட்சதர்கள் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,” என, நித்யானந்தா கூறினார்.

இப்படி எதிர்-குற்றச்சாட்டுகளை எழுப்புவதால் மக்களிடம் / பக்தர்களிடம் ஏற்ப்பட்டுள்ள சந்தேகங்கள் நீங்கி விடாது. உண்மையை வெளிக்கொணர்ந்தால் ஒழிய, அந்நிலை மாறாது.

நித்யானந்தா, சென்னையில் நேற்றுநிருபர்களுக்கு அளித்த பேட்டி: சன், “டிவி’யில் வெளியான வீடியோ காட்சிகளில் இருப்பது நான் அல்ல. அது உண்மையானது அல்ல. முற்றிலும், “மார்பிங்’ முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் தான். தினகரன் மதுரை அலுவலக எரிப்பு சம்பவத்தில், சன், “டிவி’ எடுத்த காட்சிகள் கொண்ட வீடியோவை சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த வீடியோவையே, கோர்ட் தூக்கி வீசிவிட்டது. தயாரித்ததும், ஒளிபரப்பியதும் தான் குற்றம். இது தவிர, எந்த குற்றமும் அதில் இல்லை. அது ஒரு சதி வேலைதான். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அதிலிருந்து தப்பிக்க, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களை திசை திரும்பும் வகையில், மீடியாக்களை ஆயுதமாக பயன்படுத்தி, என் மீது பழியைச் சுமத்தினர். அந்த நேரத்தில், மிகவும் சமூகப் பொறுப்போடு, ஆழ்ந்த, தெளிந்த நிலையில், “தினமலர்’ போன்ற நாளிதழ்கள், “டிவி’க்கள் செயல்பட்டன. பழித்தவர்களைப் பார்த்து, சில, “டிவி’க்கள் தங்கள், “ரேட்டிங்’கை கூட்டும் விதமாக செயல்பட்டன. அவ்வாறு பழித்தவர்கள் மீதும் தவறில்லை. அழிக்க நினைத்தவர்கள் சன், “டிவி’ ராட்சதர்கள். வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என, ஐகோர்ட் தடை போட்டும், அதன் பெஞ்ச் அதை உறுதி செய்தும், அதைப் பற்றி கவலைப்படாமல், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். வீடியோ காட்சிகளை வெப்சைட் மூலம் விற்று, பிழைப்பு நடத்துகின்றனர்.

முன்பு போலீஸ் துறை கருணாநிதியின் கீழ் இருந்ததால், புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பாகுபாட்டுடன், போலீஸார் செயல்பட்டுள்ளனர் என்றால், அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களின் நம்பிக்கை இவ்விஷ்யங்களில் தகர்ந்து விடும்.

சன், “டிவிதரப்பில் 100 கோடிரூபாய்கேட்டனர்: ஊடகங்களுக்கு இருக்கும் மரியாதையை அழிக்கின்ற இவர்கள், மீடியாக்கள் அல்ல. வீடியோவை வெளியிடாமல் இருக்க, சன், “டிவி’ தரப்பில் 100 கோடி ரூபாய் கேட்டனர். பின், 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். வார இதழ் ஒன்றின் மீடியேட்டராக சுரேஷ் வந்து மிரட்டினார். சன், “டிவி’ சக்சேனாவின் சார்பில், அவரது உதவியாளர் அய்யப்பனும் பணம் கேட்டு மிரட்டினார்; சக்சேனாவும் போனில் பேசினார். என் ஆசிரம நிர்வாகிகள் அதற்கு அடிபணியாததால், “மார்பிங்’ முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டனர். அதன் பின்பும் என் பக்தர்களை மிரட்டி, பணம் பிடுங்கிக் கொண்டனர். அப்போது, தியான பீட நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர்; புகார்கள் ஏற்கப்படவில்லை. தமிழகத்தில் 120 தியான பீடங்களை ரவுடிகள், கூலிப்படையினரை வைத்து, அடித்து நொறுக்கினர். அங்குள்ள இந்து விக்ரகங்களை நொறுக்கினர்.

முன்பு போலீஸ் துறை கருணாநிதியின் கீழ் இருந்ததால், புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பாகுபாட்டுடன், போலீஸார் செயல்பட்டுள்ளனர் என்றால், அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களின் நம்பிக்கை இவ்விஷ்யங்களில் தகர்ந்து விடும்.

மதரீதியான தாக்குதல்: இது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். அமெரிக்காவில் உள்ள, “இந்து பெடரேஷன்’ வீடியோ காட்சிகளை, மத அமைப்புகளுக்கான கூட்டமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. இதை ஆய்வு செய்த கூட்டமைப்பு, வீடியோ காட்சிகள், உயர்தர யுக்திகள் கையாண்டு, “மார்பிங்’ முறையில், சித்தரிக்கப்பட்ட காட்சிகள் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில், கூட்டமைப்பின் மூத்த வழக்கறிஞர், “இந்த புகார்கள் மீதான குற்றப்பத்திரிகை நகல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்’ என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 ஆட்சி மாற்றத்தால் குற்றங்கள் மாறிவிடாது. சட்டங்களும் மாறிவிடாது. ஆனால், சட்டங்களும் சட்டங்களை அமூல் படுத்த வேண்டிய துறைகள், அதிகாரிகள், அவற்றை ஆட்டி வைக்கும் அரசியல்வாதிகள் சித்தாந்தங்களால் ஊறி செயல்பட்ட நிலை மாறவேண்டும்.

பெண்-சன்யாசிகளின் புடவைகளை உருவியுள்ளனர்: 17 இடங்களில் பெண் சன்யாசிகளின் புடவைகளை உருவியுள்ளனர். ஏழு இடங்களில் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. எங்கள் ஆசிரமத்தில் மூன்று சன்யாசிகளை ஒரு அறையில் வைத்து பூட்டி, பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மற்றொரு புறமாக வந்த பக்தர்கள், கதவை உடைத்து அவர்களை மீட்டுள்ளனர். பெங்களூரில் நடந்த சம்பவத்திற்கு, சென்னை, எழும்பூர் போலீஸ் நிலையத்தில், என் மீது எப்.ஐ.ஆர்., போட்டனர். சம்பந்தப்பட்டவர் பெயர் இல்லாமல் போடப்பட்ட இந்தியாவின் முதல் எப்.ஐ.ஆர்., அதுவாகத் தான் இருக்கும். எங்களிடம் பலவற்றை பறிக்க முயற்சி நடந்தது. நாங்கள் பறி கொடுக்கவில்லை. நீதித்துறை மீதும், தமிழக முதல்வர் மீதும், பத்திரிகைகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆளும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்பேன். அழைப்பு வந்தால் சூழ்நிலைகளைப் பார்த்து முடிவு செய்வேன். முதல்வர் மீது முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

இத்தகைய செய்திகள் முன்னரே வெளிவந்தன. அப்பொழுது  போலீஸ் துறை பாரப்பட்சமாகத் தான் செயல்பட்டுள்ளது. குறிப்பாக பெண்ணுரிமைகள் பேசும் கூட்டங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது அதிசயம்! ஒரே ஒருமுறை கம்யூனிஸ கட்சி பெண்மணி ரஞ்சிதாவிற்கு ஆதரவாக பேசினார், அறிக்கை விட்டார். புவனேஸ்வரி விஷயத்தில் கொதித்தெழுந்த நடிக-நடிகையர், ரஞ்சிதா விஷயத்தில் அடங்கிவிட்டனர் அல்லது அடக்கப்பட்டனர் போலும்!

நாய்கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது: ஆசிரம், தியான பீடம் மீதான தாக்குதல் குறித்து குறிப்பிட்ட நித்யானந்தா, “என் ஆசிரமம், தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதலால், என் பக்தர்கள் எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருப்பர். அவர்கள் உங்கள் சிலைகளை ஆசிரமம் முன் வைத்து, செருப்பால் அடிக்க வேண்டும் என்று துடித்தனர். நான் தான், “நாய் கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது என்று, அவர்களை சமாதானப்படுத்தினேன்’ என்றார்.

கண்டுகொள்ளாத மாஜிமுதல்வர் கருணாநிதி? : அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் குறித்து நித்யானந்தா கூறியதாவது: கடந்த ஆண்டு டிச.,29ல், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். தியான பீடங்கள் மீதான தாக்குதல் குறித்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், உணர்வளவில் மிகவும் காயப்பட்டு, தமிழக மக்கள் இழந்த மத சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத் தர வேண்டுமென, 60 ஆயிரம் பக்தர்கள் ரத்தக் கையெழுத்துடன், நீதிகேட்டு சந்திக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. பின், தேர்தல் பிரசாரத்தின் போது,”நான் ஆன்மிகவாதிகளுக்கு எதிரி அல்ல. நடந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை’ என்று பேசியுள்ளார். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

ரூ.35 கோடி கேட்டு மிரட்டிய பிரசன்னா? : நித்யானந்தா தனது பேட்டியின் இடையே பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக, ஆடியோ உரையாடல் ஒன்றை நிருபர்களுக்கு போட்டுக் காட்டினார். அதில், லெனின் கருப்பனின் உதவியாளர் பிரசன்னா, ஆசிரம நிர்வாகியுடன் போனில் பேசுகிறார். “டேபிளில் 25 கோடி ரூபாயை தூக்கிப் போட்டால் போதும். அதில் எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விடுகிறேன். அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து 35 கோடியைக் கொடுங்கள்’ என்கிற ரீதியில் பேச்சு தொடர்கிறது.

நித்யானந்தா ஒன்பதா…? : பேட்டியின் போது, வார இதழ் ஒன்றின் நிருபர், நித்யானந்தரைப் பார்த்து, “ஒன்பது’ என்று கூறி, சைகை காட்டினார். இதைப் பார்த்து சிரித்த நித்யானந்தா, “ஆம்’ என்று கூறிவிட்டு தொடர்ந்தார். “ஆன்மிகத்தில் இருக்கும் எனக்கு பேச வாயும், ஆசிர்வதிக்க கையும் செயல்பட்டால் போதும். நான் ஆண், பெண், அலி, குழந்தை நிலைகளைக் கடந்து, ஆன்மிக மார்க்கத்தில் வாழ்பவன். அதனால் அவர், “ஒன்பது’ என்று சொன்னதால் வருத்தப்படவில்லை. ஆனால், அவர், பாலியல் சிறுபான்மை இனத்தை (அரவாணிகளை) இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது’ என்றார்.

நான்அவள்இல்லை…! : “வீடியோவில் இருப்பது நான் இல்லை’ என நித்யானந்தா கூறியதும், “அதில் இருப்பது ரஞ்சிதாவும் இல்லையா?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஞ்சிதா, “வீடியோ காட்சியில் உள்ளது நான் இல்லை என்று, திரும்பத் திரும்ப பலமுறை கூறிவிட்டேன். எத்தனை முறைதான் இதை கேட்பீர்கள். கும்பிடுகிற கடவுளுடன், என்னைச் சேர்த்து கொச்சைப்படுத்தினால் எனக்கு எப்படிப்பட்ட நிலை இருக்கும்’ என்றார்.

 நாத்திகம், இந்து-விரோதம், செக்யூலரிஸம் முதலிய சக்திகள் இவ்விவகாரத்தில் ஈடுபட்டிருந்தால், அத்தகைய சக்திகள் அடையாளங்காணப் படவேண்டும். கிருத்துவர்கள் பின்னணியில் இருப்பது சாத்தியமே, ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் அந்நேரத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு சிக்கினர்.

கருணாநிதி குடும்பத்தினர் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி விவரங்கள் அப்போது வெளிவர ஆரம்பித்தது உண்மை. அவற்றை செந்தமிழ் மாநாடு, நித்யானந்தா, காஞ்சிபுரம் ஐயர் என்று பரபரப்புகளினால் திசைத் திருப்ப அவர்கள் முயன்றிருக்கலாம்.

ஆனால், இப்படி மற்ற காரணங்களுக்காக, இந்து மதம், இந்துமத நிறுவனங்கள், சின்னங்கள், யோகா முதலியவை கேலிக்குள்ளாவது, கேவலப்படுத்துவது, அவதூறு செய்வது என்ற முறையில் இருந்தால், நிச்சயம் அவை கண்டிக்கப்பட வேண்டும். நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்.


Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “தியான பீடம் மீதான தாக்குதல் மத ரீதியானது: நித்யானந்தா பேட்டி!”

  1. Sirippou Singaram Says:

    இதுபோன்றதொரு கேமராவை மாறன் சகோதரர்களின் கெஸ்ட் ஹவுஸில் வைத்தால் நன்றாக இருக்கும்….செய்வீகளா… ????????….செய்வீகளா… ????????

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: