தமிழச்சி குச்பு, கவர்ச்சி குஷ்பு, திமுக நடிகை குஷ்பு, குஷ்பு சுந்தர் – மாறிவரும் அவதாரங்கள்!

தமிழச்சி குச்பு, கவர்ச்சி குஷ்பு, திமுக நடிகை குஷ்பு, குஷ்பு சுந்தர் – மாறிவரும் அவதாரங்கள்!

தமிழனுக்கு பித்தேறியபோது, மும்பையிலிருந்து இறக்குமதியான இந்த முஸ்லீம் நடிகைக்குக் கோவில் கட்டி கும்பிட்டானாம்!

கவர்ச்சி காட்டி நடித்தபோது, பித்தம் இன்னும் ஏறி பலான படங்கள் கிடைக்குமா என்று ஏங்கவும் செய்தார்களாம்!!

ஜெயா டிவியிலிருந்து விரட்டியடிக்கப் பட்டதும், கொதித்து போய், பித்தம் இவருக்கு ஏறிவிட்டதாம்.

ஜாக்பாட்டும் மாறி விட்டது, ஜாக்கெட்டுகளும் மாறி விட்டன. கண்ணாடி போட்ட ஜிகினா ஜாக்கேட்டுகளில் வேறு நடிகைகள் வந்து விட்டார்கள்!

உடம்பு சிறுத்து விட்டதே என்று மக்களுக்கு ஏக்கம் தான், ஆனால் என்ன செய்வது? கலைஞர் டிவியில் ஜாக்பாட்டா காட்டமுடியும்?

நடுவில் சுந்தருக்கு கோபம் வந்துவிட, குழந்தைகளோடு, ஹனிமூன் / தேன்நிலவு என்று லண்டனுக்குச் சென்று விட்டாராம்!!

திமுகவில் சேர்ந்து மேடை பேச்சாளராகி விடலாம் என்று குழறி மழலை தமிள் பேச, ஒருமுறை கருணாநிதியிடமே வாங்கிக் கட்டிக் கொண்டாராம்!!!

திமுக தோற்றவுடன், நிலைமை மோசமாகியவுடன், மழலையோட பேச ஆரம்பித்து விட்டார். ஜாக்பாட் மேடையேறிவிட்டது போலும்!

கனிமொழி பிரச்சினையில், இந்த மழலைமொழி பெண்ணுக்கு சுதந்திரமாம்! வேறு வழியில்லை, தமிழன் இந்த தமிழை கேட்டே ஆகவேண்டும்!!!

வடக்கில் அன்பழகனாம் தெற்கில் குஷ்புவாம், பாவம் திசைகள் மாறிவிட்டன!! அண்ணாதுரை இருந்திருந்தால் “தெற்கு பெருக்கிறது, வடக்கு சிறுக்கிறது” என்று மாற்றி சொல்லியிருப்பார்!!

வடக்கில் வந்த குச்பு, தெற்கில் ஆதிக்கம். ராமையா பாடு திண்டாட்டம்தான்!!! எல்லாம் தட்சிணாமூர்த்தி வேலைதான்!!!!

இனி தட்சிணாமூர்த்தி வடக்கு பார்க்கவே மாட்டார், பெயருக்கேற்றார்போல இருந்து விடுவார். ஆனால், தெற்கில் தான் சனி உள்ளது. இருப்பினும் பகுத்தறிவு உள்ளதே, சனியை வடக்கே அனுப்பி விடுவாரா என்று பார்ப்போம்!!

வேதபிரகாஷ்

07-12-2011

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

10 பதில்கள் to “தமிழச்சி குச்பு, கவர்ச்சி குஷ்பு, திமுக நடிகை குஷ்பு, குஷ்பு சுந்தர் – மாறிவரும் அவதாரங்கள்!”

 1. vedaprakash Says:

  ஒய் திஸ் கொலைவெறிம்மா: ஜெ.வைப் பார்த்து மக்கள் கேட்கிறார்கள்-குஷ்பு
  திங்கள்கிழமை, டிசம்பர் 5, 2011, 17:09 [IST] A A A
  http://tamil.oneindia.in/news/2011/12/05/tamilnadu-why-this-kolvaerimma-tn-people-ask-jaya-kushboo-aid0128.html

  சென்னை: பால் விலை, பேருந்து கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து ஏன் இந்த கொலைவெறிம்மா? உங்களுக்கு வாக்களித்தற்காகவா என்று கேட்கிறார்கள் என்று நடிகை குஷ்பு திமுக கண்டன பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

  பால் விலை, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் தி.நகர் பஸ் நிலையம் அருகே சில தினங்களுக்கு நடந்த கண்டனப் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் குஷ்பு பேசுகையில்,

  அம்மையார் ஜெயலலிதா சர்வாதிகாரி ஹிட்லர் போன்று ஆட்சி நடத்துறாங்க. ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தில் கை வைச்சாங்க. அதனால குழந்தைகள் எல்லாம் 3 மாதமாக பாடம் படிக்காம சும்மா பள்ளிக்கூடம் போனாங்க.

  பசங்க படிப்பை 3 மாதம் கெடுத்தது போதாதென்று புத்தகங்களில் சில பக்கங்கள் மீது பேப்பரை ஒட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் மறுபடியும் வேற பேப்பரை ஒட்டி ரூ.200 கோடிக்கு மேல் செலவு செஞ்சிருக்கீங்க. அந்த வீண் செலவை மிச்சப்படுத்தியிருந்தா பால் விலையை ஏற்றியிருக்க வேண்டாமே.

  மக்களுடைய வரிப் பணத்தில் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை தலைவர் கருணாநிதி கட்டியதால் அவருக்கு பெருமை சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அந்த கட்டிடத்தில் கால் வைக்க மாட்டேன் என்று சொல்லி, கோட்டைக்கு போனீங்க. புதிய தலைமைச் செயலகத்தில் சட்டமன்றத்தை உங்களால் நடத்த முடியாதா என்ன?, எல்லாம் வாஸ்து படு்ததுற பாடு. படிச்ச காலத்தில வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறீங்க.

  அரசாங்கம் வருடத்திற்கு ஒரு முறை தான் பட்ஜெட் போடும். ஆனால் குடும்பத் தலைவிகள் மாதாமாதம் பட்ஜெட் போடுவாங்க. ரூ.1000க்கு வாங்கிய பால் தற்போது ரூ.1500 ஆகவும், ரூ.1300 ஆக இருந்த பஸ் கட்டணம் ரூ.1,800 ஆகவும் உயர்ந்துவிட்டது. 5,10 வேண்டும் என்று அக்கம்பக்கத்தில் வாங்கிவிட்டு அடுத்த மாசம் கொடுத்திடலாம். ரூ.200 தேவைப்பட்டால் சொந்தக்காரங்க, நண்பர்கள்கிட்ட கேட்கலாம். ஆனால் ரூ.2,000, 3,000 அல்லவா பட்ஜெட்டில் இடிக்கிறது. மாதம் ரூ.5,000, 6,000 சம்பளம் வாங்குகிறவர்கள் எல்லாம் எங்க போறது?.

  குழந்தைகளுக்கு ஒரு வேலை சோறு கொடுக்க முடியாட்டியும் பால் கொடுத்து தூங்க வைக்கலாம். ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் தாய்மார்கள் கண்ணீர் அதுவும் ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க. வெளியே போயிட்டு வீட்டுக்கு வர்ற ஆண்கள் ஒரு டம்ளர் காபி கேட்க பயப்படுகிறாங்க. அதற்கு காரணம் ஜெயலலிதா அம்மையார் தான். அவங்களுக்கு என்ன ஏசி வண்டில சுத்திக்கிட்டு, கொடநாடு போய் ஜாலியாக இருப்பாங்க. கஷ்டப்படுவது எல்லாம் தமிழக மக்கள் தான்.

  அந்த அம்மையார் கர்நாடக நீதிமன்றத்திற்கு போய் 1,400 கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டு வந்தாங்க. ஆனால் தமிழக மக்கள் அந்த அம்மாவைப் பார்த்து ஒரேயொரு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காங்க. அந்த அம்மா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார்கள். பதில் தெரிந்தால் தானே சொல்வதற்கு.

  அந்த அம்மாவைப் பார்த்து தமிழக மக்கள் ஏன் எங்களை இப்படி பழிவாங்குறீங்க என்ற ஒரு கேள்வியைத் தான் கேட்கிறாங்க. நாங்களும் அதைத் தான் கேட்கிறோம்.

  பொய் வழக்கு போட்டு திமுகவினரை கைது செய்து அவர்கள் மீது மேல் மேலும் பல வழக்குகளைப் போடுறீங்க. எல்லாம் பொய் வழ்ககுகள். கடந்த 6 மாதமா இதைப் பார்த்து பார்த்து தமிழக மக்களுக்கும் போர் அடிச்சிடுச்சு.

  தினமும் காலையில எழுந்து பேப்பரைப் பார்த்தா யாராவது திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பாங்க. அதைப் படிக்கும் மக்கள் இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லையான்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு வேலை எதுவும் இல்லைன்னு தான் நானும் நினைக்கிறேன்.

  காலை எழுந்து காபியைக் குடிச்சதும் இன்றைக்கு யாரை கைது செய்யலாம், என்ன பொய் வழக்கு போடலாம் என்று தான் நினைக்கிறாங்க.

  கருணாநிதி ஆட்சியில் நிம்மதியா, சந்தோஷமா இருந்த தமிழக மக்கள் அந்த அம்மா ஆட்சியில் கண்ணீர் வடிக்கிறாங்க. ஏன் இந்த கொலைவெறி?- இதுதான் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துக் கேட்கும் கேள்வி.

  ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறிமா என்று கேட்கிறாங்க. ஏன் இப்படி மக்களை பழிவாங்குகிறீங்க என்று நான் ஒரு அதிமுகவைச் சேர்ந்தவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 1996, 2006 தேர்தல்களில் எங்களுக்கு வாக்களிக்காததற்கு பழிவாங்க வேண்டாமா என்றார். பழிவாங்குறத்துக்கா மக்கள் வாக்களித்தனர்.

  நீங்கள் எல்லாம் கருணாநிதி ஆட்சியில் அனைத்தையும் பார்த்ததால் ஒரு மாற்றம் வேண்டி அவங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சீங்க. மாற்றம் வேண்டியவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். அந்த அம்மா தேர்தல் நேரத்தில எவ்வளவு பொய் சொன்னாங்க. அத தர்றேன், இத தர்றேன், அத செய்வேன், இத செய்வேன்னு ஏதாவது செய்தாங்களா. இந்த 6 மாதத்தில் மக்களுக்கு உதவுகிற மாதிரி ஏதாவது ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தாங்கன்னு யாராவது சொல்ல முடியுமா?.

  காவல்துறை மேலிடத்து உத்தரவுபடி திமுகவினரை கைது செய்வதில் பிசியாக இருக்கு. அதனால் மக்களைப் பாதுகாக்க அவர்களுக்கு நேரமில்லை.

  வெய்யிலின் அருமை நிழலில் தெரியும் என்பது போல கருணாநிதி ஆட்சியின் அருமையை மக்கள் தற்போது தான் உணர்கின்றனர். தலைவரின் அருமை, பெருமையை மக்கள் உணரக் காரணமா இருக்கும் அதிமுகவுக்கு நன்றி.

  இந்த அம்மா சமீபத்தில் தான் கொடநாடு போனாங்க, இப்ப ஏன் மீண்டும் போகனும். கருணாநிதி என்னைக்காவது லீவு எடுத்துக்கிட்டு எங்காவது போனாரா? 24 மணி நேரமும் மக்களுக்காக பாடுபடும் ஒரே தலைவர் அவர் தான்.

  பம்பரம் கூட சாட்டை இருந்தால் தான் சுத்தும். ஆனால் நம்ம தளபதி பதவி என்னும் சாட்டை இல்லாமலே தமிழகத்தை சுற்றி வருகிறார். யாருக்காக, எல்லாம் மக்களுக்காக.

  புத்திசாலித்தனமா உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு வரியை ஏத்திட்டாங்க. அதுவே முன்னாடி செய்திருந்தா ஒரு ஓட்டு கூட கிடைத்திருக்காது. பெரிய புத்திசாலின்னு நெனப்பு. ஆனால் தமிழக மக்கள் கேள்வி கேட்கப் போகிறார்கள். அந்த நேரம் கூடிய சீக்கிரம் வரும். அதற்காக 5 வருஷம் காத்திருக்க வேண்டாம்.

  கஷ்டத்தில் இருக்கையில் குரல் கொடுத்தா உதவ கோபாலபுரம் இருக்கு. கஷ்டத்தில் ஆறுதல் தரும் ஆலயம் போல அண்ணா அறிவாலயம் என்னைக்குமே இருக்கு. நம்ம தலைவரும், தளபதியும் மூச்சிருக்கும் வரை தமிழக மக்களை கைவிடமாட்டார்கள் என்றார்.

 2. vedaprakash Says:

  பெரிய பாரம் குறைந்தது போல உள்ளது, கனிமொழி குறித்து குஷ்பு சந்தோஷம்!
  செவ்வாய்க்கிழமை, நவம்பர் 29, 2011, 12:12 [IST] A A A
  http://tamil.oneindia.in/news/2011/11/29/tamilnadu-bail-for-kanimozhi-kushboo-elated-aid0091.html

  சென்னை: கனிமொழி ஜாமீனில் விடுதலையாகியிருப்பது பெரிய பாரம் குறைந்தது போல உள்ளது என்று கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு.

  இதுகுறித்து குஷ்பு கூறுகையில், 6 மாத காலமாக டெல்லி திஹார் சிறையில் இருந்த கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தி. வரவேற்கக்கூடிய செய்தி.

  கனிமொழி விடுதலையான தகவலையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். தி.மு.க.வில் உள்ள எங்களைப் போன்ற தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறோம்.

  மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக தலைவரை சந்தித்தேன். அவரிடம் எனது மகிழ்ச்சியை தெரிவித்தேன். தலைவர் மிகுந்த திருப்தியாக இருக்கிறார். கனிமொழி 6 மாதங்களாக பிரிந்திருந்த தனது குடும்பத்தினருடன் இருக்கவேண்டும். அவர் சென்னைக்கு எப்போது வருவது என்பதை தலைவரிடம் பேசி முடிவு செய்வார்.

  எப்போது வந்தாலும் கனிமொழியை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் ஜாமீனில் வெளி வந்ததால் எங்களுக்கு பெரும் பாரம் குறைந்ததுபோல இருக்கிறது. கனிமொழி சென்னை வரும்போது வரவேற்க எல்லோரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் குஷ்பு.

  முன்னதாக நேற்று கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த குஷ்பு, வீட்டுக்கு முன்பு கூடியிருந்த தொண்டர்களிடம் லட்டு வழங்கி தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்.

 3. vedaprakash Says:

  திமுக கண்டனக் கூட்டம்… வட சென்னை – அன்பழகன்; தென் சென்னை- குஷ்பு!
  வியாழக்கிழமை, டிசம்பர் 1, 2011, 15:57 [IST] A A A
  http://tamil.oneindia.in/news/2011/12/01/tamilnadu-k-anbazhagan-kushboo-speak-against-price-hike-aid0136.html
  உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
  சென்னை: பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் இன்று நடக்கும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலர் க அன்பழகன், நடிகை குஷ்பு ஆகியோர் பேசுகிறார்கள்.

  பால் விலை, பஸ் கட்டண விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் வட சென்னை, தென் சென்னை, மாவட்ட தி.மு.க. சார்பில் தனித் தனியாக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் தி.மு.க. சார்பில் புதுவண்ணாரப் பேட்டையில் தி.மு.க. கூட்டம் நடக்கிறது. தென்சென்னை மாவட்டம் தியாகராய பகுதி தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் நடக்கிறது.

  வடசென்னை ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க. சார்பில் நடைபெறும் கண்டன பொதுக் கூட்டம், புது வண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் திடலில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. டன்லப் ரவி தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார். புலவர் சாமிநாகப்பன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வடசென்னை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, செங்கை சிவம், இரா.மதிவாணன், மற்றும் பலராமன், ராஜன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

  தென்சென்னை தியாகராய நகர் பகுதி தி.மு.க. சார்பில் தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்துக்கு கே.ஏழுமலை தலைமை தாங்குகிறார். நடிகை குஷ்பு சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.

 4. vedaprakash Says:

  கோவணத்தோடு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் வரவேற்பாரா?-இந்து மக்கள் கட்சி கேள்வி!
  புதன்கிழமை, நவம்பர் 23, 2011, 10:03 [IST] A A A
  http://tamil.oneindia.in/news/2011/11/23/tamilnadu-hmk-condemns-kushboo-supporting-less-dressed-aid0091.html

  சென்னை: நமீதா குட்டைப்பாவாடை அணிவதை விரும்புவார். இதைப் போய் பிரச்சினையாக்குவதா என்று கேட்டுள்ளார் நடிகை குஷ்பு.அப்படியானால் அவரது வீட்டுக்கு கோவணம் அணிந்தபடி 200 பேர் வந்தால் அவர்களை அவர் சந்திப்பாரா, வரவேற்பாரா அல்லது பேசத்தான் செய்வாரா என்று இந்து மக்கள் கட்சி கேட்டுள்ளது.

  சினிமா நடிகைகள் பலர் படு கவர்ச்சியாக உடை அணிந்தும், குட்டைப் பாவாடை அணிந்தும் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது சமீப காலமாக சர்ச்சையாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்பு, நடிகை ஷ்ரேயா படு கவர்ச்சிகரமாக டிரஸ் போட்டு வந்து அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

  இந்த நலையில் நமீதா அணியும் கவர்ச்சி ஆடைகளும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதுகுறித்து ‘கருத்து புகழ்’ குஷ்பு கருத்து தெரிவிக்கையில்,

  நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச் செல்வார்.

  ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன என்று கூறியிருந்தார்.

  இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் பி.ஆர்.குமார் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  தமிழகம், கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக்கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.

  கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா?

  அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அத்தகு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

 5. vedaprakash Says:

  கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா…? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?
  http://cinema.dinamalar.com/tamil-news/5708/cinema/Kollywood/Hindu-Makkal-Party-warns-Kushboo.htm

  பொது விழாக்களில் நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் அவரது வீட்டுக்கு கோவணம் கட்டி 200பேர் வந்தால் அவர்களை வரவேற்பாரா என்று இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சினிமாவில் தான் நடிகைகள் படுகவர்ச்சியாக வருகிறார்கள் என்றால், பொது நிகழ்ச்சிககளிலும் படுகவர்ச்சியான உடையணிந்தும், குட்டை பாவாடை அணிந்து வருகின்றனர். சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது.

  இந்நிலையில், நடிகை நமீதா அணிந்து வரும் கவர்ச்சியான உடைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இருந்த நடிகை குஷ்பு, நமீதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் குட்டை பாவாடை அணிகிறார், கவர்ச்சியான உடையணிந்து வருகிறார் என்று பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். அது அவருடைய தனிப்பட்ட விஷயம். சினிமாவில் உள்ளவர்கள் கூட இதை எதிர்க்கவில்லை. ஆனால் சில சுயநல சக்திகள் வெறும் புகழுக்காக இதை எதிர்க்கின்றனர் என்று கூறியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டன் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாச்சாரம், பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலமே தமிழகம் தான். அதனால் தான் கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல், 2 நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் நடிகைகள் அதுபோல் அணியட்டும், பொது விழாக்களில் அப்படி அணிய வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.

  நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் 200பேர் கோவணம் கட்டி அவர் வீட்டு வாசல் முன் வந்து நின்றால், அவர்களை சந்திப்பாரா…? அல்லது பேசத்தான் செய்வாரா…? ஆகவே, இதுபோன்ற நடிகைகளுக்கு வக்காலத்து வாங்குவதை குஷ்பு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

 6. ராஜன் Says:

  இதுதான் போலி நாத்திகர்களின் உண்மை நிலை!திராவிட போர்வாள் குசுபு!என்னா காமடி இது?

  • vedaprakash Says:

   இந்த “திராவிடர்களுக்கு” எப்படி திடீரென்று “ஆரியர்களுடன்” சகவாசம், தொடர்பு, உறவு எல்லாம் வைத்துக் கொள்ள முடிந்தது என்று அவர்களது “பகுத்தறிவுக்கு” எட்டவில்லை போலும்.

   குஷ்பு ஆரிய இனமா, குச்பு திராவிட இனமா, குசுபு இரண்டும் சேர்ந்த கலவையா?

   பகுத்தறிவுகள் பட்டி மன்றம் வைத்து தீர்க்க வேண்டிய பிரச்சினை தான்!

 7. ssrinivasan Says:

  Next general secretary of DMK party, THamilachi KUSHBU

  • vedaprakash Says:

   Whether you have commented sarcastically or otherwise, it could be possible, as she has been trying to dominate the DMK shows.

   That is why clever Karunanidhi snubbed her and curtailed her movements.

   Unfortunately, she has mesmerised the leaders and she has been able to attract them. Of course, there have been other affairs also.

 8. lg6932@yahoo.com Says:

  தமிழனுக்கு பித்தேறியபோது, மும்பையிலிருந்து இறக்குமதியான இந்த முஸ்லீம் நடிகைக்குக் கோவில் கட்டி கும்பிட்டானாம்!

  கவர்ச்சி காட்டி நடித்தபோது, பித்தம் இன்னும் ஏறி பலான படங்கள் கிடைக்குமா என்று ஏங்கவும் செய்தார்களாம்!!

  ஜெயா டிவியிலிருந்து விரட்டியடிக்கப் பட்டதும், கொதித்து போய், பித்தம் இவருக்கு ஏறிவிட்டதாம்.

  ஜாக்பாட்டும் மாறி விட்டது, ஜாக்கெட்டுகளும் மாறி விட்டன. கண்ணாடி போட்ட ஜிகினா ஜாக்கேட்டுகளில் வேறு நடிகைகள் வந்து விட்டார்கள்!

  உடம்பு சிறுத்து விட்டதே என்று மக்களுக்கு ஏக்கம் தான், ஆனால் என்ன செய்வது? கலைஞர் டிவியில் ஜாக்பாட்டா காட்டமுடியும்?

  நடுவில் சுந்தருக்கு கோபம் வந்துவிட, குழந்தைகளோடு, ஹனிமூன் / தேன்நிலவு என்று லண்டனுக்குச் சென்று விட்டாராம்!!

  திமுகவில் சேர்ந்து மேடை பேச்சாளராகி விடலாம் என்று குழறி மழலை தமிள் பேச, ஒருமுறை கருணாநிதியிடமே வாங்கிக் கட்டிக் கொண்டாராம்!!!

  திமுக தோற்றவுடன், நிலைமை மோசமாகியவுடன், மழலையோட பேச ஆரம்பித்து விட்டார். ஜாக்பாட் மேடையேறிவிட்டது போலும்!

  கனிமொழி பிரச்சினையில், இந்த மழலைமொழி பெண்ணுக்கு சுதந்திரமாம்! வேறு வழியில்லை, தமிழன் இந்த தமிழை கேட்டே ஆகவேண்டும்!!!

  வடக்கில் அன்பழகனாம் தெற்கில் குஷ்புவாம், பாவம் திசைகள் மாறிவிட்டன!! அண்ணாதுரை இருந்திருந்தால் “தெற்கு பெருக்கிறது, வடக்கு சிறுக்கிறது” என்று மாற்றி சொல்லியிருப்பார்!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: