செபாஸ்டியன் சீமான் ஒருவழியாக திராவிட முறைப்படி சென்னை கிறிஸ்தவ அரங்கத்தில் திருமண ஒப்பந்தம் செய்து கொள்கிறாராம்!

செபாஸ்டியன் சீமான் ஒருவழியாக திராவிட முறைப்படி சென்னை கிறிஸ்தவ அரங்கத்தில் திருமண ஒப்பந்தம் செய்து கொள்கிறாராம்!

Seeman-Kayalvizhi-Dinamani

சீமானுக்கு கல்யாணம்: நாம் தமிழர் கட்சி தலைவரும், சினிமா டைரக்டருமான சீமானுக்கும் தமிழக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெரியோர்களின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நாளை (8–ந்தேதி) காலை 9 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடக்கிறது[1].  தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையிலும், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு முன்னிலையிலும் நடைபெறும் இந்த திருமணத்தில் தமிழ் அறிஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள். தமிழ் முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடைபெறுகிறது[2]. திருமண விழாவுக்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்[3]. இப்படி செய்திகள் வந்துள்ளன.

Seeman-Kayalvizhi-Dinamani-marriage-declaration

சென்ற வருடம் திருமணம் ரகசியமாக நடந்ததா?: ஆனால் பழைய செய்திகளின் படி, திருமணம் கடந்த வருடம் அக்டோபரிலேயே (01-10-2012) நடந்து விட்டதாகத் தெரிகிறது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் மதிவதனி இவர்களின்ஆண்டு மணவிழா அன்று ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டு, ஆகஸ்டில் (27-08-2013) முறைப்படி அறிவிப்பதாக இருந்தது[4]. அவ்வாறு ரகசியமாக ஏன் மணம் செய்து கொள்ளவேண்டும் என்ற விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் நடிகை விஜயலட்சுமியின் புகார், பிறகு அமைதியானது என்ற விசயங்களும் சேர்த்து சொல்லப்படுகின்றன[5].

Jeyalalita condoled the death of Kalimuthu 2006

மறைந்த காளிமுத்துவின் இந்து மகள்களில் ஒருவர் கயல்விழி: கே. காளிமுத்து (1942-2006) அதிமுக எம்.ஜி.ஆர் ஆட்சியில் விவசாய மந்திரியாகவும் 2001-06 காலத்தில் சட்டசபை தலைவராக இருந்தவர். காலமாகும் வரை அதிமுகவில் இருந்தார்[6]. 2006ல் மதிமுகவை, அதிமுக கூட்டணியில் சேர முயற்சித்தவர்[7]. இவருக்கு நான்கு மகன்கள், ஐந்து மகள்கள் இருக்கின்றனர். “தி ஹிந்து” ஆசிரியரை கைது செய்யவேண்டும்[8] போன்ற சர்ச்சையான ஆணைகளைப் பிறப்பித்தவர். 2006ல் கூட இவர் மீது, எம்.எல்.ஏ. ஹாஸ்டல் கட்டுவதற்கான ஒப்பந்தம் விசயமாக விசாரணை செய்யப்பட்டது[9].

ordered to arrest the editor of The Hindu RAM

சீமானின் இந்தியவிரோத பேச்சுகள், நடவடிக்கைகள்: மறைந்த மாமனாரைப் போல, மறுமகன் சீமானும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன, நிலுவையிலும் உள்ளன. சமீப காலத்தில், குறிப்பாக அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இவர் அக்கட்சியின் சார்பாக செயல்படுவதாகத் தெரிகிறது. தேர்தலின் போதே, ஜெயலலிதாவை ஆதரித்து பேசியுள்ளார். மே மாதத்தில் யாசின் மாலிக்கை கடலூருக்கு அழைத்து வந்து பேசவைத்துள்ளார்[10]. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டாலும், இப்பொழுது, சுருதியை குறைத்துக் கொண்டுள்ளார்[11]. அப்பொழுது, இவரது தன்னிப்பட்ட வாழ்க்கையில் இவரது தொடர்புகள் பற்றி இணைதளங்களில் அலசப்பட்டது[12]. பொதுவாக, திராவிட கழகம், விடுதலைப் புலிகள், மற்ற பகுத்தறிவு சித்தாந்திகளுக்கு இந்துவிரோத போக்கு மட்டுமல்லாது, கிறிஸ்தவ தொடர்புகள் இருந்து வருகின்றன[13].

Demonstration against The Hindu

இந்துக்களுக்கு எதிராக கூட்டத்தில் பேசியது: முன்னர் கபாலீஸ்வரர் கோவிலில் கிறிஸ்தவர்கள் பிரச்சினை ஏற்படுத்தியபோது, சீமான் கிறிஸ்தவர்களை ஆதரித்து கூட்டத்தில் கலந்து கொண்டது நினைவில் இருக்கலாம்[14]. அதில் நெடுமாறனின் பங்கும் வெளிப்பட்டது[15]. இக்கூட்டம் தெய்வநாயகம் என்ற போலி கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர் தலைமையில், ஆர்ச் பிஷப் ஆதரவில் நடைப்பெற்றதால், அதன் பின்னணி அலசப்பட்டது. சீமான் இப்படி நேரிடையாக இந்துக்களுக்கு எதிராக கூட்டத்தில் கலந்து கொண்டது, பேசியது முதலியன “பழைய தாமஸ் மோசடியை” வெளிப்படுத்தியது. பிறகு இந்து அமைப்பினர், இதற்கு எதிராக கூட்டம் நடத்த முற்பட்டபோது, விவரங்கள் வெளிவந்தன. ஒருநிலையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டது கூட சர்ச்சையை ஏற்படுத்தியது[16]. இது யாசின் மாலிக் கூட்டத்திற்குப் பிறகு வெளிப்பட்டது[17]. விஜய் திரைப்படத்தின் விசயத்தில், இருவரும் கிறிஸ்தவர்கள் என்றாலும், கருத்து மோதல் ஏற்பட்டபோது, எதிர்-எதிர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன[18].

LTTE-Prabhakar-as-Shiva

LTTE-Prabhakar-as-Shiva

எது எப்படியானாலும், நாளை நிகழ்ச்சி நடக்கப் போகிறது. மேலும் விவரங்கள் வெளிவரலாம். இனி கயல்விழி சீமானை மாற்றுவாரா என்று பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

06-09-2013


[4] The reports are surfacing in the tinsel town that Seeman has married Kayalvizhi, daughter of former AIADMK minister and Assembly Speaker Kalimuthu. According to reports, Seeman had wedded Kayalvizhi last October 1st on the wedding anniversary of late LTTE leader Prabhakaran and Madhivadhini. We also hear that Seeman would formally announce that he is married to Kayalvizhi but holding a reception on August 27th, this year.

http://www.tamilcinema24.com/news-id-seemans-secret-marriage-with-politicians-daughter-seeman-16-07-135538.htm

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “செபாஸ்டியன் சீமான் ஒருவழியாக திராவிட முறைப்படி சென்னை கிறிஸ்தவ அரங்கத்தில் திருமண ஒப்பந்தம் செய்து கொள்கிறாராம்!”

 1. vedaprakash Says:

  இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் இன்று(செப்.,8ம் தேதி) திருமணம் நடந்தது. அரசியல் பிரபலங்கள், திரைநட்சத்திரங்கள் பலர் மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினர்.

  பாஞ்சலாங்குறிச்சி, இனியவளே, தம்பி, வாழ்த்துக்கள் போன்ற படங்களை இயக்கியவர் சீமான், பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர நாம் தமிழர் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவருக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி இவர்களது திருமணம் இன்று சென்னை, ஒய்.எம்.சி. திடலில் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான அ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை மணமகள் கழுத்தில் கட்டினார் சீமான். தமிழ்முறைப்படி நடந்த இந்த திருமணத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

  பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, அமீர், பாலா, பாலாஜிசக்திவேல், ஜெயம்ராஜா, ஜெயம் ரவி, ஜாக்குவார் தங்கம், வாகை சந்திரசேகர், வையாபுரி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பலரும், அரசியல் கட்சியினர் பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

 2. P. M. Chengalvarayan Says:

  He has been from cine-field and therefore, it is ridiculous to expect any virtues from him.

  He can talk about Dravidianism and so on, but none could expect that he can follow!

  It is just like drunkard who blurts out so many thinks.

  He would do whatever he wants.

  As long as, he has money, he will have his group following and they would be his slaves to go around him and shout “long live” etc

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: