திராவிட இயக்கம், கேடு விளைவிக்காத கட்சி, அக்கட்சியுடன் கூட்டணி, கருணாநிதி: திராவிட மாயையில் உழலும் வயோதிக அரசில் சாணக்கியர்கள்!

திராவிட இயக்கம், கேடு விளைவிக்காத கட்சி, அக்கட்சியுடன் கூட்டணி, கருணாநிதி: திராவிட மாயையில் உழலும் வயோதிக அரசில் சாணக்கியர்கள்!

திராவிட  இயக்கத்துக்கு  கேடு  விளைவிக்காத  கட்சியுடன்  கூட்டணி:   கருணாநிதி[1]: கருணாநிதியின் சுயசரிதை நூலான “நெஞ்சுக்கு நீதி’ 6-ஆம் பாகம் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறவுள்ள திமுகவின் பொதுக்குழுவில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதை சிந்தித்துச் செயலாற்றுவோம்[2]. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்; எந்தக் கட்சியுடன் சேரமாட்டோம் என்பதை கடந்த கால அனுபவத்தில் நியாயமாக சிந்தித்துப் பார்த்து நீங்களே (திமுகவினர்) முடிவு செய்து கொள்ளுங்கள். தற்போது எந்த அணியோடு கூட்டணி அமைப்போம் என்று கேட்காதீர்கள். அது பிணியாகி விடும். ஆனால், நாம் கூட்டணி அமைக்கும் அணி திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்காத அணியாக இருக்கும் என்பதை மட்டும் கூறுகிறேன்”, என்று கருணாநிதி சொன்னது இன்னொரு திராவிட மாயையின் தோற்றன் எனலாம்[3]. கடந்த கால அனுபவத்தில் நியாயமாக சிந்தித்துப் பார்த்து முடிவு செய்து கொள்ள திமுகவினருக்கு எந்த அதிகாரமும் இல்லை. திமுகவினரைக் கேட்டால், பெரும்பான்மையானவர் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்வார்கள். மேலும், ஜெயலலிதா முந்தும் முன்னர், தாம் முந்திவிடலாம் என்றும் ஆலோசனை கூறுவர்[4].

எந்தக்  கட்சியுடன்  கூட்டணி  அமைப்போம்; எந்தக் கட்சியுடன்  சேரமாட்டோம்: இப்படி கருணாநிதிக்கே உரிய பேச்சைக் கேட்டு, பழக்கமாகி விட்டவர்களுக்கு, பாம்பின் கால், பாம்பறியும் என்ற ரீதியில் தான் இருக்கும். 2ஜி ஊழல் கூட்டணியிலிருந்து காங்கிரஸோ-திமுகவோ பிரிந்துவிட முடியாது, இதுதான் உண்மை. இப்பணத்தை செலவழித்து, காங்கிரஸ் அதிரடியாக செயல்பட ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதை முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி அமையாது என தெரிவித்துள்ளதிலிருந்து அறியலாம்[5]. கூட சிதம்பரம் அவர்கள் வரும் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்[6]. பலவித கட்சிகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். இப்பொழுது காங்கிரசுக்கு பெரிய சவாலாக இருப்பவர் மோடிதானே தவிர, பிஜேபி கூட இல்லை என்ற நிலை வந்து விட்டது. அந்நிலையில் மோடியை இன்னொரு வாஜ்பேயியாக மக்களும், அரசியல்வாதிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றுதான், மோடி-விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆகவே, இவ்விசயத்தில் கருணாநிதி மோடியுடன் ஒட்டி வரமுடியாது. காங்கிரஸுடன் சென்றால், இப்பொழுதைக்கு ராகுல் மட்டும் தான் எதிராக உள்ளார், அதனை சோனியா பார்த்துக் கொள்வார்.

கமலாலயம்  குளத்தில்  நீந்தி  களித்த  கருணாநிதி: திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் சிறுவயதில் கருணாநிதியும் அவர் நண்பர் தென்னனும் நீந்தி களித்தனர். பாதி தூரத்துக்கு மேல் நீந்த முடியாமல் திரும்பிவிடலாம் என்று தென்னன் கூறினார். ஆனால் திரும்ப வேண்டாம் என்று கூறி எதிர்நீச்சல்போட்டு கருணாநிதி கரை சேர்ந்தார். கமலாலயத்தை அன்றே கருணாநிதி கடந்தவர் என்று அழுத்தம் கொடுத்துப் பேசினார். கமலம் என்றால் தாமரை. அது பாஜக சின்னத்தைக் குறிக்கக்கூடியது. பாஜகவின் அலையைக் கருணாநிதி கடப்பார் என்பதேயே வைரமுத்து இவ்வாறு குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய கவிஞர்கள், பேச்சாளிகளின் கருத்தை ஏற்றுக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது எனலாம், ஏனெனில், இப்பொழுதுள்ள இளைஞர்கள் உண்மையிலேயே சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நடக்காதத்தை கேட்கும் கேஜரிவால் மாதிரியான திமுக பொதுக்குழுவின் 23-தீர்மானங்கள்[7]: 15-12-2013 செயல்கூட்டத்தின் 23 தீர்மானங்கள்[8] / அம்சங்கள், கேஜரிவாலின் கோரிக்கைகள் போலத்தான் இருக்கின்றன[9]. இவையெல்லாம் நடக்காது என்று தெரிந்தும், வெறுமனே கோரிக்கைகளகவும், தீர்மானங்களாகவும் வைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஆட்சியில் இருக்கும் போது செய்யாததை, ஆட்சியில் இல்லாதபோது பேசுவது மடத்தனமானது. விளம்பரத்திற்காக அவ்வாறு பேசலாம், செய்திகள் ஆக்கி விற்பனை செய்யலாம். ஆனால், மக்களிடம் எடுபட முடியாது. கேஜரிவாலைப் போல, காங்கிரஸுக்கு எதிரான ஓட்டுகளைப் பிரிப்பதில், கூட்டணி அமைக்க, காங்கிரஸின் ஆதரவான காட்சிகள் வேலை செய்யும். இதில் தேசிய அளவில் காங்கிரஸின் பங்கும் வெளிவருகிறது. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸைத் தோற்கடித்தது என்பதை விட, பிஜேபி பதவிக்கு வருவதைத் தடுத்துள்ளது எனலாம். ஏனெனில், பிஜேபி-காங்கிரஸ் என்று தேர்தல் இருந்திருந்தால், நிச்சயம் பிஜேபி அமோகமாகவே ஜெயித்திருக்கும்.

 

திராவிட இயக்கம்  இன்றளவில்  செல்லாத  காசாகி  விட்டது  எனலாம்: பிஜேபியுடன் 1999ல் கூட்டு வைத்துக் கொண்டபோது, திராவிடர்களுக்கு “திராவிட இயக்கம்” கொள்கை மறந்து விட்டது போலும். பிறகு, சுத்தமான 100% “ஆரிய அம்மையார்” சோனியாவுடன் கூட்டு வைத்து 2ஜி கொள்ளையடித்தபோதும், திராவிடத்துவம் ஒன்றும் மனசாட்சியைக் குத்திக் காட்டவில்லை[10]. மாறன் குடும்பம் முழுவதுமாக பார்ப்பன மயமாக்கப்பட்டு விட்டது; கருவின் மூன்றாம் தலைமுறையும் ஆரியமயமாக்கப் பட்டுவிட்டது. இனி திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்காத அணி என்றால், எந்த தங்கமாளிகையில் போய் வாங்குவது என்று தெரியவில்லை. ஊழல் என்ற பிணியில் ஊறியிருக்கும் போது, ஊழலில்லாத அணியை எங்கும் செய்து பார்க்க முடியாது. இன்று மதவாதத்தை விட ஊழல் ஒரு பெரிய பிரச்சினையாகி உள்ளது. “குற்றவாளி” அரசியல்வாதிகள் என்ற அளவுகோல் வரும் போது, ஊழல்தான் அதனை அடையாளம் காட்டுகிறது. காங்கிரஸ்-திமுக அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. முஸ்லிம்களே மாறிவரும்போது, திராவிடமாயை மொத்தமாகவே மறைந்து விடும்  நேரம் வந்தாகிவிட்டது எனலாம்.

வேதபிரகாஷ்

© 14-12-2013


[1] தினமணி, திராவிட  இயக்கத்துக்கு  கேடு  விளைவிக்காத கட் சியுடன்  கூட்டணி:  கருணாநிதி, By dn, சென்னை, First Published : 15 December 2013 04:25 AM IST

[4] இல. கணேசன் ஜெயலலிதா பிரதம மந்திரி வேட்பாளர் என்பதால், அதிமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது என்று அறிவித்தது, ஒரு யுக்தியே தவிர உண்மையில்லை. இருப்பினும், ஜெயலலிதாவின் துரோகத்தை உண்மையான பிஜேபிக்காரர்கள் மறக்க மாட்டார்கள்.

[10] ஜெயலலிதாவை திக-திமுகவினர் செல்லமாக “ஆரிய அம்மையார்” என்று குறிப்பிடுவதுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போதெல்லாம், வீரமணி “ஆரிய-திராவிட போராட்டம் தொடர்கின்றது” என்று சிறுபுத்தகத்தைப் போடுவது வழக்கமாக இருக்கிறது என்பதை திராவிட சித்தாந்திகள் அறிவர்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “திராவிட இயக்கம், கேடு விளைவிக்காத கட்சி, அக்கட்சியுடன் கூட்டணி, கருணாநிதி: திராவிட மாயையில் உழலும் வயோதிக அரசில் சாணக்கியர்கள்!”

  1. தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் Says:

    […] [1] https://dravidianatheism.wordpress.com/2013/12/15/dmk-to-have-alliance-with-dravidian-ideaology-orien… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: