Archive for மார்ச், 2014

1970ல் சமஸ்கிருத சுலோகம் சொன்ன கருணாநிதி இப்பொழுது 2014ல் இந்தி பாட்டுப் பாடியுள்ளாராம்- திராவிடப்பழங்களின் ஆரிய விளையாட்டுகள்!

மார்ச் 28, 2014

1970ல்  சமஸ்கிருத  சுலோகம்  சொன்ன  கருணாநிதி  இப்பொழுது   2014ல்  இந்திபாட்டுப்  பாடியுள்ளாராம் –  திராவிடப்  பழங்களின்  ஆரிய  விளையாட்டுகள்!

 

Arise, awake, till the goal is achieved

Arise, awake, till the goal is achieved

2014 தேர்தல்  பிரச்சரத்தில்  இந்திபாட்டுப்  பாடிய  கருணாநிதி: சிந்தாத்ரிபேட்டையில் “இந்து, முஸ்லிம், சிக், இசாய்எல்லோரும்  சகோதரர்கள்” ஹிந்துபாட்டைப் பாடிதேர்தல்பிரச்சாரம் செய்துள்ளார்[1]. மக்களிடத்தே  ஒற்றுமை  வேண்டும்  என்பதனை  எடுத்துக்காட்ட “ஹிந்துஸ்தான்  ஹமாரா” என்ற  பழைய  இந்தி  பாட்டை  எடுத்துக்கோளாகக்  காட்டி  பேசினார்[2]. இப்பகுதியில்  இந்திபேசும்  வடநாட்டவர்  மற்றும்  உருது  பேசும்  முஸ்லிம்கள்  அதிகம் என்பதால்,  இந்தி-விரோதியான  கருணாநிதி  இவ்வாறு  இந்தி  சினிமாப்பாட்டை  படித்துக்காட்டியுள்ளார்[3].   தினமலர், “’இந்து,  முஸ்லிம்,  சீக், இசாயிஆபஸ்மேபாயி, பாயி’ என்ற, வடமொழி, மதநல்லிணக்க  பாடலை, நேற்று  முன்தினம்,  சென்னை,  சிந்தாதிரிப்பேட்டையில், தேர்தல்  பிரசாரப் பொதுக்கூட்டத்தில் , தி.மு.க., தலைவர்  கருணாநிதி  பாடிக்காட்டி   அனைவரையும், கோவில்  திருவிழாவில்  வெடித்தவாண  வேடிக்கை  போல  அசத்தினார். அதற்கு  விளக்கம்  அளித்து  பேசுகையில், அவர், ”இந்துவாக  இருந்தாலும்,  முஸ்லிமாக  இருந்தாலும்,  சீக்கியராக  இருந்தாலும், கிறிஸ்தவராக  இருந்தாலும்எல்லோரும்  இணைந்து  வாழவேண்டும்  என்பதே, எங்களது  நோக்கம்.  இதையே  தொடர்ந்து  வலியுறுத்தி  வருகிறோம். மக்களின்  இதயத்தை  புரிந்துகொண்டு, அவர்களுக்கிடையே  நல்லுறவுக்காக, பாடுபட்டுக்  கொண்டிருக்கிறோம்,” என்றார்”,   இவ்வாறு  விளக்கியுள்ளது[4]. காங்கிரஸ்காரர்கள்  பொதுவாக  இப்பாட்டை  பாடிக்  காட்டுவதுண்டு[5].

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் karunanidhi-sang-a-hindi-song-2014-dm.jpg

இந்தி  பாடலை  பாடிய  கருணாநிதி[6]பாராளுமன்ற  தேர்தலையொட்டி   தி.மு.க.  தலைவர்  கருணாநிதி  தனது  முதல்   தேர்தல்  பிரசாரத்தை  சிந்தாரிப்பேட்டையில்  நேற்று  தொடங்கினார்.  மாலை 6 மணிக்கு  பேச தொடங்கிய அவர்,  6.45 மணிக்கு  தனது  உரையை முடித்தார்.  பேச்சுக்கிடையே  இடையே  மதநல்லிணக்கத்தை  உருவாக்கும்  இந்திபாடல்  ஒன்றை  முழுவதுமாக  மனப்பாடமாக  படித்தார்.  அப்போது  தொண்டர்கள்  பலத்த  கரகோஷம்  எழுப்பினர்.

 

Karunanidhi singing Hindi song 2014 cartoon

Karunanidhi singing Hindi song 2014 cartoon

தினத்தந்தி   “மதநல்லிணக்கத்தை  உருவாக்கும்  இந்திபாடல்  ஒன்றை  முழுவதுமாக  மனப்பாடமாக  படித்தார்” என்று  குறிப்பிட்டுள்ளது,   அதாவது,   கருணாநிதிக்கு  இந்தி  நன்றாகவே  தெரிந்துள்ளது.  பொதுமக்களை  இந்திபடிக்கவிடாமல், கடந்த 50 ஆண்டுகளாக  திராவிடக்  கட்சியினர்,  இந்த  தலைவர்கள்  வெற்றிகரமாக  செய்துள்ளனர். ஆனால், இவர்கள்  தேசிய  அளவில்  கூட்டணிஆட்சியில்  இடம்  பெற, குறிப்பாக  மந்திரி  பதவிகள்  பெற  எல்லா  பொய்களையும்  சொல்லி, நாடகம்  நடித்துள்ளனர். கருணாநிதியின்  இரட்டை  வேடங்கள்  பலமுறை  வெளிப்பட்டுள்ளன. ஆனால், மாற்றி-மாற்றி  பேசி  மக்களை  ஏமாற்றி  வருவதுதான்  வேடிக்கை.

 

Eknath Ranade Karunanidhi 02-09-1970

Eknath Ranade Karunanidhi 02-09-1970

மார்ச்.  2010ல்  படா  கானா  கொடுத்து  இந்தி  வேலையாட்களை  ஊக்கிவித்த  கருணாநிதி: மார்ச்.2010ல்   ரூ.500 கோடிகள்  செலவில்  புதியதாக  தமிழ்நாடு  சட்டசபை  கட்டிடம்  கட்டப்பட்டிருக்கும்  போது, அவ்வளாகத்தில்  இந்திபாடல்கள்  ஒலித்துக்  கொண்டிருந்தன.   அவர்சுமார்   10,000 இந்திபேசும்  தொழிலாளர்களுக்காக  ஒருபிரமாண்டமான  மதிய  விருந்து-நிகழ்ச்சி  ஏற்பாடு  செய்திருந்தார்.   “பாடா-கானா” என்று  வெளிப்படையாகவே  பேசப்பட்டது[7].  மன்மோஹன்  சிங்  இதன்  துவக்கவிழாவை  ஆரம்பித்து  வைத்தார். பிரியானி  சகித ம்  பலவடவிந்திய   உணவுவகைகள்  பரிமாரப்பட்டன. அப்பொழுது  இந்திபாடல்கள்  ஒலித்துக்  கொண்டிருந்ததால்,   அதைப்பற்றி  கருணாநிதியிடம்  கேட்டபோது, “நாங்கள்  இந்திக்கு  எதிரியானவர்கள்  அல்லர்,   இந்திமொழி  திணிப்பிற்குத்தான்  எதிராக  உள்ளோம்”, என்று  விளக்கம்  அளித்தார்[8]. 1965ல்   இந்தி-எதிர்ப்பு  போராட்டத்தை  திமுக  ஆரம்பித்து, 1967ல்  பதிவிக்கு  வந்ததும்  இந்தியை  நீக்கிவிட்டு, “இரண்டு  மொழி  பார்முலா”வை  பள்ளிகளில்  அறிமுகப்படுத்தினார்[9].

    இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் karunanidhi-asked-sonia-two-ministership.jpg

இந்தி  பேசி,   மந்திரி  பதவிகள்  வாங்கிய  திராவிட  அரசியல்வாதிகள்: என்.டி.ஏ  மற்றும்  யு.பி.ஏ  கூட்டணிகளுடன்  சேர்ந்து  கொண்டு   16 ஆண்டு  காலம்  மந்திரிபதவிகள்  பெற்று,   பலன்களை  அனுபவித்து, மந்திரி  பதவிகளுக்காக  பேரம்  பேசி, பதவி பரிக்க  ப்பட்டபோது,   கருணாநிதி  குடும்பம்  சகிதம்  சோனியாவைப்  பார்த்துப்  பேசியது,   முதலியவற்றைக்  கவனிக்கும்போது,  இவற்றில்  சம்பந்தப்பட்டவர்களுக்கு  இந்தி  தெரிந்திரிதிருக்கிறது,   இந்தியில்  பேசியுள்ளார்கள்  என்று  தெரிகிறது. வியாபாரிகள்  எப்படி  அவசியத்திற்காக, தேவைக்காக  இந்தியைக்  கற்றுக்கொள்வது  போல,  இந்தி  திராவிட  அரசியல்வாதிகளும்  இந்தியைக்  கற்றுக்  கொண்டுள்ளார்கள்.   இதனால்தான், முக்கியமான  மந்திரி  பதவிகளைப்  பெற்றுள்ளார்கள். 2ஜி  ஊழல்  காரணத்திற்காகத்தான், திமுகவிற்கும்,  காங்கிரஸுக்கும்  சண்டை  ஏற்பட்டது.   தொடர்ந்து   ஏ. ராஜா, கனிமொழி  சிறைக்கு  செல்ல  நேர்ந்தது,   ஆனால்,   மற்றவர்கள்  தப்பிக்கொண்டனர். திமுகவைச்  சேர்ந்த  இரு  மந்திரிகள்,  குறிப்பாக, கனிமொழி, கருணாநிதியின்  மகள்  சிறைக்குச்  செல்ல  நேர்ந்ததால், கருணாநிதிக்கு  காங்கிரஸ்  மீது, சோனியா  மீது  கோபம்  இருக்கத்தான்  செய்கிறது.   இப்பொழுது  மறுபடியும்  ஆதரவு,  கூட்டணி  எனும்போது,  கருணாநிதி  சோனியாவுக்கு  ஏற்றமுறையில்  இந்திபாட்டு  பாட  ஆரம்பித்துள்ளார்  என்று  தெரிகிறது.

 

Vivekananda Rock Memorial VV Giri and Karunanidhi Name-plaque

Vivekananda Rock Memorial VV Giri and Karunanidhi Name-plaque

செப்டம்பர்   1970ல்  சமஸ்கிருத  சுலோகம்  சொல்லிய  கருணாநிதி[10]: 1970ல்  விவேகானந்த  நிலையம்  கன்னியாகுமரியில்  திறந்து  வைக்கப்பட்டது. அப்பொழுது  முதலமைச்சராக  இருந்த  கருணாநிதி, தனது  பேச்சில்  விவேகானந்தர்  சொல்லிய   “உத்திஸ்டத  ஜாக்ரத,   ப்ரப்யவர்ண்  நிபோததா”   அதே  வார்த்தைகளைச்  சொல்லி  பேசினார்.   பச்சைத்  திராவிடன்  ஏன்  ஆரிய  பாடை  பேசினான்  என்று  அப்பொழுது  யாரும்  கேட்காதது  ஆச்சரியம்தான்!

Karunidhi in 1970 ad 2008: Karunanidhi has been an expert in telling the lies as facts and present facts as lies or that never happened. Do you know that Karu recited Sanskrit verse: “Uthistahtha Jagrata, Prapyavarn Nibhodhata”? If anyone does not know the meaning or cannot recollect, kindly read the following. No doubt, that he was the CM and on September 2, 1970, the President V. V. Giri inaugurated under his Presidentship. But, anybody remembers or can recall what he spoke there:“The name ‘Vivekananda’ means, one who can distinguish the right from the wrong. He ia noble sage who had universal vision, which ennobled everyone who came in contact with him or with teachings.

 

“Though he is not with us today, the flame he lit is still alight and from his teachings have sprung the conscience of India and faith in her unity. And his great message manking finds solace and confidence.

“The memorial stands here today will be a sentinel guarding not only our frontiers but also our cultural traditions.

“Swami Vivekananda always had before him the great motto of elevation of masses. His messages are always gospels of salvation, social elevation and equality for everyone.

“I am very happy to inform on this historica occasion that the Tamilnadu government is wedded to the thoughts and gospels for which Swami Vivekananda stood.

Sri M. Karunanidhi concluded by quoting Vivekananda’s exhortation[11]: “Uthistahtha Jagrata, Prapyavarn Nibhodhata” (Arise, Awake and stop not till the goal is reached). So he now tries to blackout Eknath Ranade[12] (1914-1982) who shed sweat and blood to create the Memorial at Kanmyakumari. In fact, The statue of Thiruvalluvar[13] was erected strategically on a minor rock off the shore[14], in Kanyakumari, near Vivekananda Memorial. The statue sponsored by the Government of Tamilnadu, Karuinanidhi sarcastically remarked that it should be above the Memorial! Of course, in the 10 crores project, there has been CAG report pending for misappropriation of money by producing fake vochers. It was unveiled on 1st January 2000, by M Karunanidhi. Last year, the House, where Swami Vivekanda stayed was demolished at Tirunelveli without any sense of history[15].

 

இப்படி  1970, 2000, 2014 என்று   சமஸ்கிருதம், இந்திபாட்டுப்  பாடிக்  கொண்டிருக்கும்  இந்த  திராவிட  கருணாநிதியின்  எண்ணம்தான்  என்ன?   வயதாகி  விட்டகாலத்தில்  இன்னும்  இப்படி  பொய்களை  சொல்லிக்  கொண்டு  தமிழக  மக்களை  ஏமாற்றி  வரமுடியுமா?

 

© வேதபிரகாஷ்

28-03-2014

 

[1]“Hindu, Muslim, Sikh, Isai, aapas mein bhai bhai (Hindus, Muslims, Sikhs, Christians… all are brothers),” he told his audience at Chintadripet in Chennai on Wednesday, where he launched his campaign for Lok Sabha elections. The DMK is committed to the unity and harmony of the people, he said, quoting lines from the patriotic Hindi song, Hindustan hai hamara.

[2] http://www.chennaivision.com/news/2014/79828.php

Chennai Vision, Thursday 27th of March 2014 04:58:13 AM GMT

[3] http://timesofindia.indiatimes.com/lok-sabha-elections-2014/news/When-Karunanidhi-recites-Hindi-verse/articleshow/32749698.cms?

[4] http://election.dinamalar.com/detail.php?id=2005

[5] http://www.brunchnews.com/times-of-india/general-news/when-karunanidhi-recites-hindi-verse%E2%80%A6-874863

[6] http://www.dailythanthi.com/2014-03-26-Supporting-the-Congress-Party-after-the-election%25253F-Karunanidhi-in-Chennai-campaign-rally-speech

[7] Tamil Nadu Chief Minister M Karnanidhi on Wednesday offered a “Bada Kana” (Big Feast in Hindi) to Ten Thousand migrant workers, including those from Bihar, Jharkand and Utter Pradesh, who tirelessly engaged themselves to built the new Assembly Complex which was his(Karunanidhi’s) dream project. A day after Prime Minister Manmohan Singh inaugurated, Mr karunandhi offered them ‘Biriyani’ along with North Indian Food Items. In a thanksgiving gesture and to honor the workers, engineers and contractors who toiled day in and day out, spending more than 1.12 crore man hours, to get ready the complex in time for the inauguration, Karunanidhi hosted a grand lunch for them. Apart from “Bada Kana,” the Chief Minister treated them with a cultural programme by the ‘Chennai Sangamam’ Troupe.

http://www.asiantribune.com/news/2010/03/15/karunanidhi-offered-big-feast-10000-workers-who-shaped-his-assembly-complex-project

[8] Asserting that the DMK was not against Hindi as a language, Tamil Nadu chief minister M Karunanidhi on Sunday (13-03-2010) said the party was only opposed to its imposition on non-Hindi speaking people. “We are not against Hindi, but only opposed to its imposition,” he said, addressing a large number of Hindi-speaking workers involved in construction of the Rs 500 crore new Tamil Nadu Legislative Assembly complex here.

[9] http://timesofindia.indiatimes.com/india/DMK-not-against-Hindi-Karunanidhi/articleshow/5682871.cms

[10] http://rationalisterrorism.wordpress.com/2010/05/22/karunanidhi-swami-vivekananda-the-threatening-of-an-atheist/

[11] Lokesh Chandra (Ed.in Chief), India’s Contribution to World Thought and Culture, Vivekananda Rock Memorial Committee, 12, Pillaiyar Koil Street, Triplicane, Madras, 600 005, 1970, pp.xlvi-xlvii

[12] http://www.vkendra.org/eknathji_ranade.htm

[13]   http://www.ivarta.com/columns/OL_070307.htm

[14]  At that time, the Christians taking the advantage of Karunanidhi, decided to construct a statue of Jesus Christ on the rock. Therefore, to prevent it, it was said that ordered for the Tiruvalluvar statue.

[15] http://www.vastuved.com/vastu-thiruval.html