கால்டுவெல் புராணம் பாடும் கருணாநிதி: கோயம்புத்தூரிலிருந்து இடையன்குடிக்கு போகும் தீவிரவாத ஆதரவு!

கால்டுவெல் புராணம் பாடும் கருணாநிதி: கோயம்புத்தூரிலிருந்து இடையன்குடிக்கு போகும் தீவிரவாத ஆதரவு!

கால்டுவெல் 200 வருட விழா 2014.ஸ்டாம்ப்

கால்டுவெல் 200 வருட விழா 2014.ஸ்டாம்ப்

கோயம்புத்தூரிலிருந்து   இடையன்குடிக்கு போகும் தீவிரவாத  ஆதரவு!: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடித்து, இரண்டு நாட்களிலேயே, கருணாநிதி கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை அலசிவிட்டு, வேகமாக இடையன்குடிக்குச் சென்றுள்ளது வியப்பாக இருந்தாலும்,  எப்படி சிறுபான்மையினரை தாஜா செய்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். கருணநிதிக்கும், ஜெயலலிதாவுக்கு “சஷ்டாஸ்டகம்” என்ற தோஷம் இருப்பதுபோல, ஒருவர் ஒன்று சொன்னால், உடனே அடுத்தவர் அதனை மறுத்துப் பேசுவது என்ற நிலைதான் உள்ளது.  அந்த தத்துவத்தை நாத்திக கருணாநிதி நன்றாகப் புரிந்துகொண்டு, இப்பொழுது ஆத்திக ஜெயலலிதாவை சீண்டி பார்க்க, கால்டுவெல்லை எடுத்திருக்கிறார்!ஒட்டுமொத்த உலகத்தமிழ்ச் சமுதாயம் சார்பில், நன்றியுடன் நினைத்து வணங்கி மகிழ்வோம்,  என்று ஒரேயடியாக கும்பிடு போட்டிருக்கிறார்!

கால்டுவெல் 200 வருட விழா 2014.குடும்பத்தார் வந்தனர்

கால்டுவெல் 200 வருட விழா 2014.குடும்பத்தார் வந்தனர்

1968 முதல்  2010  வரை: 1968ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டின் போது,  சென்னை கடற்கரை சாலையில் கால்டுவெல்லுக்கு சிலை அமைக்கப்பட்டது.  பிறகு அச்சிலைகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 42 வருடம் கழித்து திடீரென்று 2010 ஜனவரியில்நெல்லைமாவட்டம், இடையன்குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை, அவரது நினைவைப் போற்றும் வகையில்,  அரசு நினைவு இல்லமாக மேம்படுத்திப் பராமரிக்க அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார்[1]. ஆனால், அப்பாதிரி உண்மையில்,  இந்திய சரித்திரத்தைப் புரட்டத்தான் வந்தார் என்பது கலைஞருக்கு தெரியவில்லை போலும்.  1821ல் தமிழ் பேசப்பட்ட பகுதிகள் கொச்சிற்கு மாற்றப் பட்டபோதும், 1828-30களில் நடந்த ஜாதிக்கலவரங்களுக்கும் கால்டுவெல்- மாமனார்-மாமியார் தான் காரணம், திருட்டுத்தனமான அகழ்வாய்வு மேற்கொண்டு பலஆதாரங்களை மறைத்தது,  இந்தியர்களை இனரீதியில் பிரிக்கத்தான்“திராவிடக் குடும்ப மொழிகள்” என்று கருதுகோளை வைத்தது, போன்ற உண்மைகளை வெளிப்படுத்தவில்லை[2].

 

எலிஸா விதவை

எலிஸா விதவை

தமிழுக்கோ,  தமிழ்நாட்டுக்கோ,  எந்த  கௌரமும்  இல்லை: இவ்வாறு அரசின் சார்பில் செய்வது, தமிழுக்கோ, தமிழகத்திற்கோ, எந்த பெருமையும் இல்லை. உண்மையை அறிந்தால், தமிழுக்கு கேவலம், தமிழகத்திற்கு, அசிங்கம், தமிழர்களுக்கு அவமானம் தான் என்பதை விவரங்களோடு விளக்கியிருந்தேன்[3].  ஏனெனில்,  நீலகிரி மலையில் சென்னை பிஷப்பான ஜியார்ஜ்ஸ் பென்ஸர் என்பரைப் பார்த்து விவரங்களை கால்டுவெல் கேட்டுக் கொள்கிறார்.  ஒரு விசுவாச ஊழியனாக (Deacon) உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார். பிறகுதான்,  தனது ஊழியத்தைச் செய்வதாற்காக இடையன்குடிக்கு அனுபப்படுகிறார். 1841ல் வந்து சேர்கிறான். 1844ல் கல்யாணம்! 1844 முதல் 1851-52 வரை ஏழு குழந்தைகளைப் பேற்றுக் கொள்கிறார். பிறகு எப்படி கால்டுவெல், தமிழுக்கு சேவை செய்திருக்க முடியும்?  பிரௌனிடம் சமஸ்கிருதம் படித்து, மற்ற ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு,  இந்தியர்களை எப்படிப் பிரிக்கலாம் என்ற நோக்கத்துடந்தான், வேலை செய்தவன் கால்டுவெல்.  இவரைத் தூக்கி வைத்துக் கொண்டு தமிழர்கள் ஆடுவதை என்னவென்று சொல்வது? தமிழர்கள், “திராவிடர்கள்” என்று நினைக்கும் வரையில்,  இத்தகைய அடிமை சிந்தனை மற்றும் கூலிமனப்பாங்கு இருக்கத்தான் செய்யும்[4].

எலிஸா வயதான காலத்தில்

எலிஸா வயதான காலத்தில்

சாணார்களை  இழிவுபடுத்தி  எழுதிய  புத்தகங்களைப்  பற்றி  மறைப்பதும்  கருணாநிதியின்  கயமைத்தனம்  தான்[5]  (2011): சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள்,  அவர்கள் படிப்பதற்கு லாயக்கில்லை…..என்றெல்லாம் கால்டுவெல் ஒரு புத்தகத்தில் எழுதினார். பிரச்சினை எழுந்தவுடன்,  அப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதாக, ஆங்கில அரசு அறிவித்தது. ஆனால், விரிவான மற்றொரு புத்தகத்தை, லண்டனில் வெளியிட்டது. அதாவது, இந்தியாவைப் பொறுத்த வரைக்கும், அது திரும்பப் பெற்றதாக இருக்கலாம், ஆனால், உலகத்தைப் பொறுத்தவரைக்கும், அக்கருத்துதான், படித்தவர்கள் எல்லோரும் கொண்டிருப்பர்.  சாணர்களை இழுவு படுத்திய புத்தகம் முதலில் சென்னையில் 1849ல் வெளியிடப் பட்டது[6]. அப்பொழுதே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. அதனால், பிரதிகளை ஆங்கில அரசு பதுக்கிவிட்டது. ஆனால், மறுவருடமே, அதாவது 1850ல்  லண்டனில் அதனை விரிவாக்கி வெளியிடப் பட்டது[7]. இவைற்றையெல்லாம் நன்கறிந்த கருணாநிதி, நிச்சயமாக, வேண்டுமென்றே அமைதியாக இருந்திருக்கிறார்.  இப்பொழுது நாடார்கள் கருணாநிதியை எதிர்த்து கேட்டால் என்ன செய்வார்?

எலிஸா நீ மௌட், கால்டுவெல்லின் பெண்டாட்டி

எலிஸா நீ மௌட், கால்டுவெல்லின் பெண்டாட்டி

கால்டுவெல்  சிலை  ஊழியம்  செய்யும்  கிறிஸ்தவராலேயே  சேதப்படுத்தப்  பட்டது –  ஞாயிற்றுக் கிழமைதிருப்பலி  நாள்  (2013): தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருந்தது. “யூகேரிஸ்ட்”  அந்த பலியில் அப்பம் மற்றும் சாராயம் ஏசுகிருஸ்துவின் மாமிசம் மற்றும் ரத்தமாக மாற்றி உண்மை கிருத்துவனுக்கு ஞானத்தைக் கொடுக்கும்.  அத்தகைய பலியில் பங்கு கொண்டிருந்த பொழுது அருள் ராஜின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பது கர்த்தருக்கும், ஏசுவிற்கு, பரித்தஆவிக்கும் தான் தெரியும். அந்த திரியேகத்துவ சர்ச்,  கால்டுவெல் நினைவிடத்திற்கு முன்னால் தான் இருக்கிறது. ஆராதனை முடிந்ததும்,  வெளி வந்த அருள் ராஜுக்கு கால்டுவெல்லின் சிலை தெரிகிறது.  ஏதோ தீர்மானம் செய்தது போல வேகமாக நடந்தான். திடீரென சம்மட்டியால் பிஷப் கால்டுவெல் சிலையின் பக்கவாட்டு பகுதி மற்றும் தலையின் பின்பகுதியை சேதப்படுத்தினார்.  பீடத்தில் பதிக்கப் பட்ட கிரானைட்டையும் உடைத்தார். இவர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். ஆகவே,  கிருத்துவ மதம் பரப்பிய கால்டுவெல் மீது, கிறிஸ்தவனான அவனுக்கே ஏன் அத்தகைய கோபம் வந்தது,  உணர்ச்சி மேலிட சிலையைத் சேதப்படுத்த, எது தூண்டியது என்று யோசிக்கும் போது வியப்பாக இருக்கிறது. ஆனால், சாணர்களுக்கு,  இவர் மீது நிச்சயம் கோபம் இருக்கிறது. ஏனெனில்,  தனது புத்தகத்தில் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாக எழுதியிருக்கிறார் தமிழுக்காக பாடுபட்ட கால்டுவெல். பிறகு, அவர் போலீசில் தானாகாவே சரணடைந்தார்[8]. ஆக 2013 நிகழ்ச்சி இவ்வாறு முடிந்தது.

கால்டுவெல் புருஷன் பெண்டாட்டி புதைக்கப்பட்ட இடம்

கால்டுவெல் புருஷன் பெண்டாட்டி புதைக்கப்பட்ட இடம்

 கால்டுவெல்  200வது  ஆண்டு  விழாவை,   நன்றியுடன் போற்றி  மகிழ்வோம்: இத்தகைய பின்னணியில்,  ”கால்டுவெல் 200வது ஆண்டுவிழாவை, நன்றியுடன் போற்றி மகிழ்வோம்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்[9] என்று இப்பொழுது 2014ல் படிக்கும் போது சரித்திரம் அறிந்தவர்கள் சொல்ல வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப் படுகிறார்கள். கருணாநிதி சொல்கிறார், “தமிழ்மொழியின், இலக்கணக் கட்டமைப்பும், இலக்கியச் செழுமையும் எவரையும் ஈர்க்கவில்லை. அதனால் தான் சமயத் தொண்டுகளாற்றிட வந்த, ஐரோப்பிய பாதிரியார்கள்  / குருமார்கள்[10], தமிழ் மொழியினால், ஈர்க்கப்பட்டு, அதன் சிறப்புகளில் மயங்கி,  அதன் மேன்மைகளை மேதினிக்கும் புலப்படுத்தினர். அவர்களுள் முதன்மையானவர், தமிழ் தனித்தன்மை வாய்ந்த மொழி, செம்மொழி, திராவிட மொழி குடும்பத்தின் மூத்த முதல்மொழி எனக்கூறி, உரியசான்றுகளுடன் நிறுவிய மாமேதை கால்டுவெல்”. இவ்வாறு  ஒட்டுமொத்தமாக எல்லா தமிழ் புலவர்கள், வித்வான்கள், ஆசிரியர்கள் எல்லோரையும் அந்த அளவுக்கு கேவலமாக மதிக்கிறார் கருணாநிதி!

இளையன்குடி-சர்ச்

இளையன்குடி-சர்ச்

கால்டுவெல்  புராணம்  பாடும் கருணாநிதி[11]: கருணநிதி சொல்கிறார், “அயர்லாந்து நாட்டில்,  கிளாடி ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூரில், ஓர் ஏழைக் குடும்பத்தில் 1814-ஆம் ஆண்டு மேதிங்கள் 7-ஆம்நாள் பிறந்தவர்.  கால்டுவெல், தமது 24வது வயதில் மதபோதகராக சென்னை வந்ததை குறிப்பிட்டுள்ளார்[12]. 1841-ல் நெல்லையில் பேராயராகப் பொறுப்பேற்று இடையன்குடி என்னும் ஊரில் தங்கி, தமது சமயப்பணிகளைச் சிறப்புடன் ஆற்றி,  தமிழ் மொழியையும் செம்மையாகக் கற்றார்.  மதகுருவாக அங்குப் பணியாற்றிய காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று புதைபொருள் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.  அதன் பயனாகப் பழங்காலக் கட்டடங்களின் அடிப்படைகளையும், ஈமத்தாழிகள் பலவற்றையும் வெளிக் கொணர்ந்தார்.  இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தாம் கண்டவற்றை, “திருநெல்வேலி சரித்திரம்’ எனும் பெயரில் நூலாக உருவாக்கினார். அந்நூல், 1881-ம் ஆண்டு சென்னையில் அப்போதிருந்த ஆங்கிலேய சென்னை மாகாண அரசினால் வெளியிடப் பட்டது”. ஆனால், சாணர்களின் சரித்திரம் புத்தகம் பற்றி மூச்சுவிடவில்லை, இதுதான் கருணாநிதியுன் விசமத்தனம்.

கால்டுவெல் 200 வருட விழா 2014.அகஸ்டின் ஜெபகுமார்.அழைப்பிதழ்

கால்டுவெல் 200 வருட விழா 2014.அகஸ்டின் ஜெபகுமார்.அழைப்பிதழ்

18 மொழிகளைக்  கற்றவராக  விளங்கினார்: இவ்வளவு விசயங்களையும் மறைத்து, இப்பொழுது, கருணாநிதி தொடர்கிறார், “இவர், தமிழகத்தில்தங்கியிருந்தபோது, தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிடமொழிகளுடன், 18 மொழிகளைக் கற்றவராக விளங்கினார்.  பின்னர், கால்டுவெல் அவர் ஆற்றி வந்த சமயப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்று, கொடைக்கானல் மலையில் தங்கி வாழ்ந்து வந்தார். 1891  ஜனவரி 31-ஆம் தேதி கொடைக்கானலிலேயே காலமானார். அவரது உடல் இடையன்குடியில்,  அவர் எழுப்பிய தேவாலய வளாகத்திலேயே அடக்கம் செய்யப் பட்டுள்ளது”. இந்த அளவிற்கு தேதியுடன் விவரத்தைச் சொல்லும் போது, மற்ற விவரங்களும் தெரிந்திருக்கிறது என்றாகிறது. இருப்பினும், தனக்கேயுரித்தான, திறனமையுடன் உண்மைகளை அப்பட்டமாக மறைத்திருக்கிறார்.

கால்டுவெல் 200 வருட விழா 2014

கால்டுவெல் 200 வருட விழா 2014

ஒட்டுமொத்த  உலகத்  தமிழ்ச்  சமுதாயம்  சார்பில்,  நன்றியுடன்  நினைத்து  வணங்கி  மகிழ்வோம்: கருணாநிதி முடிவாக சொல்கிறார், “தன், 77 ஆண்டுகளில், 53 ஆண்டுகள், தமிழகத்தில் வாழ்ந்துள்ளார்.  தமிழ் மொழிக்கு செய்த தொண்டுகளால், இன்றும் உலகம் முழுவதும் புகழப்படும் கால்டுவெல் பிறந்த, 200ம் ஆண்டு, 7ம் தேதி நிறைவு பெறும் வேளையில், ஒட்டுமொத்த உலகத் தமிழ்ச் சமுதாயம் சார்பில், நன்றியுடன் நினைத்து வணங்கி மகிழ்வோம்”, இவ்வாறு, கருணாநிதி கூறிஉள்ளார்[13]. அதென்ன வணங்கி மகிழ்வோம் என்று தெரியவில்லை. இந்தியர்களுக்கு எதிராக இவ்வளவு மோசடிகளை செய்த ஆளை நன்றியுடன் நினைத்து வணங்கி மகிழ்வோம் என்றால், எத்தகைய அடிமைத்தனம் ஆட்டிப்படைக்கிறது என்பதைத்தன் காட்டுகிறது. இதுவும் ஒருவகையான தீவிரவாதம் தான்!

கால்டுவெல் 200 வருட விழா 2014.தேர்தல் புறக்கணிப்பு

கால்டுவெல் 200 வருட விழா 2014.தேர்தல் புறக்கணிப்பு

© வேதபிரகாஷ்

05-05-2014

[1] https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

[2] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[3]https://dravidianatheism.wordpress.com/2010/01/29/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/

[4] https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

[5] https://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

[6] Robert Caldwell, The Tinnevelly Shanars: A Sketch of Their Religion and Their Moral Condition, and Characteristics as a Caste. With Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, London, 1849.

[7] Michael Bergunder, Heiko Frese, and Ulrike Schröder (Edited by), Ritual, Caste, and Religion in Colonial South India, Verlag der Franckeschen Stiftungen zu Halle, 2010, p.139

[8] https://dravidianatheism.wordpress.com/2013/05/06/christian-damages-the-statue-of-caldwell/

[9]தினமலர், கால்டுவெல் 200வதுஆண்டுவிழா : போற்றிமகிழகருணாநிதிஅழைப்பு, சென்னை, 05-05-2014.

[10]தினமணி, ,

[11] http://www.dinamani.com/tamilnadu/2014/05/05/200-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F/article2206095.ece

[12]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-200%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-137939.html

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=968537

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: