பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (2)

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (2)

 

நரகாசுரன் மலர் 2010 விடுதலை

நரகாசுரன் மலர் 2010 விடுதலை

குறிப்பு: திபாவளிக்கு எதிராக செய்யப்பட்டு வரும் நாத்திகப் பிரச்சாரத்திற்கு பதிலாக இப்பதிவு செய்யப் படுகிறது. இதன் முதல் பதிவை இங்கே பார்க்கவும்[1].

 

விவேகானந்தரின் வார்த்தைகளைத் திரித்துக் கூறுவது, அம்பேத்கர்ஆரியதிராவிட இனவாதத்தைமறுப்பது என்பதனை மறைப்பது: சித்தாந்த ரீதியில், சிலர் எதிர்க்கும் போது, உண்மைகளை மறைத்து, தமக்கு சாதகமாக உள்ளதை மட்டும் எடுத்துக் காட்டுவது வழக்கமாக இருந்தது. அதுமட்டுமல்ல, விவேகானந்தரே இப்படி சொல்லியிருள்ளார் என்று குறிப்பிடுவர். ஆனால், அவர்கள் அதனை திரித்து, மாற்றி கூறியிருப்பர். அதில் திராவிட சித்தாந்திகள் வல்லவர்கள் தாம்! விவேகானந்தர் சொன்னார் என்று இவர்கள் சில நேரம் கதை விடுவார்கள். அரக்கர்களையும், வானரங்களையும் வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் என்று எழுதினர். அப்பொழுது, உண்மையினை எடுத்துக் காட்டினேன். “விவேகாநந்தர் எழுத்துகளில் அந்த மாதிரியான வரிகள் இல்லை. இருப்பது, கீழே தருகிறேன்[2], “His devotion to Rama was so great that he is worshipped by the Hindus as the ideal of a true servant of the Lord. You see, by the “monkeys” and “demons” are meant the aborigines of South India”. இங்கு “monkeys” and “demons” என்ற வார்த்தைகளை “inverted commas”களில் கொடுக்கிறார். அதாவது, உண்மையில் மனிதர்களே. ஏனெனில், அம்பேத்கரைப் போல, இவரும் ஆரிய-திராவிட இனவாத கட்டுக்கதைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.  சரித்திர ரீதியாக ஆரியர்கள்-திராவிடர்கள் இல்லை. அவர்கள் படையெடுத்து வரவில்லை, இவற்றிற்கு சரித்திர-அகழ்வாய்வு ஆதாரணங்கள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த அறிவுஜீவிகள் மட்டும் தூக்கியெறியப் பட்ட கட்டுக்கதைகளை வைத்துக் கொண்டு ஏமாற்றப் பார்க்கின்றன. ஆகவே, தமிழர்கள் இன்னும் அத்தகைய சரித்திர ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை இன்னும் உண்மை என்று பிடித்துக் கொண்டு நம்பி கொண்டிருந்தால் என்ன செய்வது?

 

தீபாவளி - பெரியார் கதை

தீபாவளி – பெரியார் கதை

ஹால்டேன், கேலன் எல்லோரும் முட்டாள்கள், இவர்கள் தாம் அறிவுஜீவிகள்: மரபியல் விஞ்ஞானி (geneticist) ஜே. பி. எஸ். ஹால்டேன் (J. B. S. Haldane, 1892-1964) என்பவருக்கு விஷ்ணுவினுடைய அவதாரங்கள் பரிணாமவியல் சித்தாந்தத்தை (Theory of Evolution) படிப்படியாக எடுத்துக் காட்டுவதாக கூறினார். பன்றி அவதாரமானது நரசிம்ஹ-வாமன அவதாரங்களுக்கு முன்பு வருகின்றது. பாதி-மனிதன் பாதி-மிருகம் மற்றும் குள்ள மனிதன் இஅவர்களுக்கு முன்பாக பன்றி பரிணாம வளர்ச்சியில் இருந்தது. ஹோமோ-செபயின் (Homo sapien) நிலையிலிருந்து ஹோமோ ஹெரக்டஸ் (Homo erectus) நிலையில் வருகின்றது. பன்றியின் மகத்துவத்தை அறிந்து, கேலன் (Galen) என்ற விஞ்ஞானி பன்றியை அறுத்து, மனித உடலின் தனமையைப் பற்றி விளக்கினார். “கேலனும் அலரும் பன்றியும்” (Galen and squealing pig) என்பது அறுவைசிகிச்சை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குத் தெரியும். மனித உடலை அறுத்து சோதிக்கத் தடை இருந்தபோது, மனித உடலுக்குப் பதிலாக, பன்றி உடலை அறுத்து ஆராய்ந்தாலே மனிதனைப் பற்றி – மனித உடலியலைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்ற உண்மையினை கேலன் அறிந்திருந்தார். ஆனால், அவர்களைப் போல அல்லாது, பெரியாருக்கும். வீரமணிக்கும் இப்படித்தான் சிந்திக்கத் தெரியும்போல. போதாகுறைக்கு மதிவாணன்கள், மதியழகன்கள், மதிவண்ணன்கள் என்றும், தமிழச்சிகள், தமிழச்சர்கள் என்றும் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் சரித்திரத்தில் இப்பொழுது என்ன நிலை என்பதனை எடுத்துக் கொள்ளாமல் பழைய “ஆரிய-திராவிட” இனவாதங்களையே வைத்துக் கொண்டு வாதிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 

Dharmapura-adhinam-bows-down-to-Karu

Dharmapura-adhinam-bows-down-to-Karu – இது ஆத்திக-நாத்திக சந்திப்பல்ல!

அமானுஷ்யங்களை நீக்குவது, ஒவ்வாதவற்றை முழுவதுமாக நீக்குதல் என்றில்லாமல், அவற்றை வைத்து அறியாமையை வளர்க்கும் கூட்டம்: மற்ற மத இலக்கியங்களைப் போல இந்தியமத நூல்கள் அமானுஷ்யங்களை நீக்குவது (Demythologization), ஒவ்வாதவற்றை முழுவதுமாக நீக்குதல் (expurgation), திருத்திப் பதிப்பித்தல் (editing) முறைகளுக்குட்படுத்தப் படவில்லை. பல இடங்களில் பலர் எழுதியுள்ளது மக்களிடையே பிரபலமாக உள்ளன. உதாரணங்களுக்காக, அவற்றில் பாமர மக்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக சில சொல்லப்படிருக்கும். உதாரணத்திற்கு, பூகோள ஆசிரியர் உலகம் ஆரஞ்சு பழம்போல உள்ளது என்று சொல்லி விளக்கியிருப்பது ஞாபகம் இருக்கலாம். இருப்பினும் உலகம் உருண்டை என்று வாதிக்கலாம். ஆனால், உலகமானது உருண்டை இல்லை, ஏனேனில், பூமத்திய ரேகைப் பகுதி விட்டமானது, துருவங்களில் உள்ள விட்டத்தை விட அதிகமானது. ஆகவே பூமி ஒரு நீள்வட்ட-உருண்டை (ellipsoid) வடிவமானது. இது இந்தியர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் [சூரிய சித்தாந்தம், ஆரிய படீயம் முதலியவற்றைப் பார்க்கலாம்]. இத்தகைய விஞ்ஞான உண்மைகளை விடுத்து, திராவிட-ஆரிய இனமாயைகள், காட்டுக் கதைகளை சரித்திர ஆசிரியர்கள் ஏற்கெனவே பொய் என்று, இனசித்தாந்தங்களை குப்பையில் எறிந்து விட்டதை, இன்றும் அதனைப் பிடித்துக் கொண்டு இன்றளவிலும் தமிழகத்தில் வெறுப்பை வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு இந்து பண்டிகையின்போதும் திட்டமிட்டு அவற்றைப் பற்றி அவதூறு பேசி, தூஷணம் புரிந்து பேசி எழுதி வருவது இந்த திராவிட தலைவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இதை பற்றி விவரமாக என்னுடய பதிவுகளை படங்களுடன் கீழ் கண்ட தளங்களில் காணலாம்: www.indiainteracts.com,
www.suleka.com, www.wordpress.com.

 

கரு ஜெயா தீபாவளி மோதல்!

கரு ஜெயா தீபாவளி மோதல்!

கருணாநிதியும், ஜெயலலிதாவும், தீபாவளியும்: திகவிலிருந்து, திமுக மற்றும் திமுகவிலிருந்து அதிமுக தோன்றியிருந்தாலும், ஆரம்ப காலங்களில் அண்ணா மீது, பெரியார் சாடியுள்ளார், எம்ஜியார் மீது கருணாநிதி சேற்றை, அவதூறை வாரிக் கொட்டியுள்ளார். அதாவது, அவர்களது சித்தாந்தங்களில் ஒரு தரம், கட்டுப்பாடு, விதிமுறைகள் என்பதெல்லாம் இல்லை. கடவுள் இல்லை என்பார் ஒருவர், மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார் இன்னொருவர். ஆனால், இந்துக்களை வசைப்பாட வேண்டும் என்றால், ஒற்றுமை வந்து விடும். அவ்வாறே, இந்துக்கள் மீது அவதூறாக பேசுவது, இவரது வழக்கமாக இருந்து வந்தது. கருணாநிதியின் மீது ஏற்கெனவே பதிவான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரால் நியமிக்கப் பட்ட எந்த நீதிபதிக்கும் அவ்வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க திராணி இல்லை. பாவம், நீதிதேவதை திராவிட மதுவை / சரக்கைக் குடித்துவிட்டு கண்களை மறைத்துக் கொண்டு மயங்கிக் கிடக்கிறாள். ஆனால், 2006ல் ஜெயலலிதா, இவரை நரகாசுரனோடு ஒப்பிட்டுப் பேசியதும், இவர் பொங்கியெழுந்து விட்டார். பதிலுக்கு சுரர்-அசுரர், ஆரியர்-திராவிடர் என்றேல்லாம் அவிழ்த்து விட்டார். இதனால், வெளிப்பட்டது, அவரது உபயோகமற்ற சித்தாந்த உளறல்கள் தாம்! அதாவது திராவிடம் பேசி, திராவிடக் கட்சிகளை வைத்துக் கொண்டு, ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், ஜெயலலிதா ஆண்டால் “பிரமாண ஆட்சி”, கருணாநிதி ஆண்டால் “சூத்திர ஆட்சி” என்றுதான் விளக்கம் கொடுத்து வருகிறார்கள். “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்”, “ஆரிய அம்மையாரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம்”, என்றுதான் சுவரொட்டிகள் ஒட்டினார்கள், பேசி வருகிறார்கள். திராவிடத்துனுள் இப்படி நடந்து வரும் ஆரிய-திராவிடம் தமிழ்-மலையாள, பார்ப்பன-சுத்திரப் போராட்டங்கள் அலாதியானவை தாம்!

 

பெரியார், பன்றி, நரகாசுரன்

பெரியார், பன்றி, நரகாசுரன்

பன்றியைப் பற்றி 2014ம் உளறல்கள்: அவர்கள் நாயகன் நரகாசுரன் பிறந்ததை வைத்து விவாதிக்கும் போது, வராக அவதாரத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளமல் பெரியார் உளறுவதை வைத்துக் கொண்டு, பகுத்தறிவு ஜீவிகள் இன்றும் காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றன. மருத்துவப் பரிசோதனை முறையில், கிரேக்கர்கள் மற்றும் ரோம் நாட்டவர் குறிப்பாக கேலன் (Galen) பன்றியை வைத்துக் கொண்டு தான் ஆய்வுகளை நடத்தினர். ஹிப்போகிரேட்ஸ் (Hippocrates) கிரேக்க மருத்துவத்தை வளர்த்தவர்களில் ஒருவர். இவர் பெயரில் தான் மருத்துவம் படிப்பவர்கள் உறுதிமொழியை (Hippocates oath) எடுத்துக் கொள்கின்றனர். பன்றிகள் மனிதனுடைய அமைப்பைக் கொண்டிருந்ததனால் மருத்துவ சோதனைக் கூடங்களில் அவை பயன்படுத்தப் பட்டன. அத்தகைய பன்றிகள், “கனியா / குனியா பிக்ஸ்” (guinea pig) எனப்பட்டன. புராணம் மட்டுமல்ல மற்றவர்களும் பூமியை எப்பொழுதும் தாயாகத்தான் பாவிக்கிறார்கள். ஆகவே, பன்றிக்கும் பூமிக்கும் “நரகாசுரன்” பிறந்தான் என்றால், அத்தகைய குணங்களைக் கொண்டவர்களுக்கு அவன் பிறந்தான் என்றாகிறது. ஏனென்றால், விஞ்ஞான ரீதியில் பன்றிக்கும், பூமிக்கும் குழந்தை பிறக்காது என்று எல்லோருக்கும் தெரியும். அதை ஒரு “பெரியார்” சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் “பெரியார் கரடி” போல, “பெரியார் பன்றி” விளக்கங்ககள் சுற்றில் இருந்து கொண்டுள்ளன.

 

பன்றி அலரும் சோதனை - கேலன்

பன்றி அலரும் சோதனை – கேலன்

பன்றிகளும், பெரியாரும், சித்தாந்தமும்: கேலன் பன்றிகளை வைத்து பரிசோதனை செய்ததில், மூளை, தண்டுவடம், தசைகள், நரம்பு மண்டலம் முதலியவற்றிற்குள்ள சம்பந்தத்தைப் புரிந்து கொண்டார். பன்றிகளை அறுத்து, அவற்றின் தண்டுவடங்களை பல இடங்களில் ஆராய்ந்ததில், நரம்பு மண்டலம் எவ்வாறு செய்திகளை மூளையிலிருந்து தசைகளுக்கு எடுத்துச் செல்கின்றன என்பதை அறிந்து கொண்டார். இதனால், கத்தும் பன்றி என்ற பரிசோதனை (Galen’s squeaking pig experiment) பிரபலமாக உள்ளது. ஆனால், “நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன்”, பெரியார் புரிந்து கொண்டது. ஆனால், கேலனோ மருத்துவம் புரியவேண்டுமானால், பன்றி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறான். அப்படியென்றால், பகுத்தறிவுவாதிகள் யாரைப் பின்பற்ற வேண்டும்? மருத்துவர்கள் பன்றியை, கேலனை அல்லது பெரியாரைப் பின்பற்ற வேண்டுமா? அவரவர் தீர்மானித்துக் கொள்ளலாம்.

 

தீபாவளி - பெரியார் கதை. பெண்ணியம்

தீபாவளி – பெரியார் கதை. பெண்ணியம்

தேவடியாள் பிள்ளைகள்போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது: “திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப்பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம். தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்! குடிஅரசுதலையங்கம் – 15.10.1949”, என்று பெரியார் எழுதியுள்ளதாக இன்றுவரை மறுபடிமறுபடி போட்டு, திராவிடர்களை கேவலப் படுத்தி வருகிறார்கள்[3]. பாவம் பெரியார் என்கின்ற ராமசாமி நாயக்கர், புராணத்தை அரைகுறையாகப் படித்து அசிங்கமாக எழுத்தத்தான் முடிந்தது. விஞ்ஞான ஞானம் இல்லாததால், கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தி, கெட்டதையே சொல்லி பரப்பி விட்டார். அதனை, இக்கால பகுத்தறிவுகளும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள், திராவிட நாட்டில், திராவிடர்கள், அதிகமாகவே தீபாவளி கொண்டாடி வருகின்றனர். பாவம், பெரியார்!

 

நரகாசுரன் - பெரியார் கட்டுரை - விடுதலை

நரகாசுரன் – பெரியார் கட்டுரை – விடுதலை

பெரியார் மோசமாகத் திட்டியும் திராவிடர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்?: பெரியார் கண்டித்தும், திட்டியும் கூட திராவிடர்கள் தீபாவளி கொண்டாடி வருகிறார்கள். ஆனால், திராவிடர்களோ, விடுவதாக இல்லை, தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்! பட்டாசு வாங்கு வெடிக்கிறார்கள். சொல்லப் போனால், அதிகமாகிக் கொண்டிருக்கிறது. உடனே அவர்களது ஆஸ்தான வித்வான் நாகநாதன் போன்ற பொருளாதார விற்பன்னர்களுக்கும் உருத்துகிறது, “தீபாவளி வணிகம்” என்று எழுதுகிறார்[4]. மங்கள முருகேசன் போன்றோர், “தீபாவளி தேசியத் திருவிழா கிடையாது”, என்று விடுதலையில் எழுதுகிறார்[5]. இவர்கள் படித்தவர்கள், பொறுப்புள்ளவர்கள் என்றால், இந்த அளவுக்கு பொய்யாக எழுதியிருப்பார்களா என்று தெரியவில்லை. மேலும், உண்மை தெரிந்தும் எழுதியுள்ளர்கள் எனும்போது, நிச்சயமாக தம்மைச் சார்ந்தவர்களையே ஏமாற்றி வருகிறார்கள் என்அதும் உறுதியாகிறது. இப்படி திராவிட சித்தாந்திகளை குருடர்கள் போல ஏன் வைத்திருக்கிறார்கள்? எப்படியாகிலும் விசுவாசமான தொண்டர்களுக்கு இருநாள் உண்மை தெரிய வரும்போது, தமது தலைவர்கள், ஆஸ்தான பண்டிதர்கள், அடிவருடிகள் எல்லாம் எப்படி ஏமாற்றி பிழைப்பை நடத்தி வந்துள்ளனர் என்றுதான் தீர்மானித்துக் கொள்வார்கள்.

 

 

© வேதபிரகாஷ்

24-10-2014

[1] https://dravidianatheism.wordpress.com/2014/10/24/dravidian-anti-deepavali-stance-utterances-writings-etc/

[2] The Complete Works of Swami Vivekananda; Volume 4     [  Page : 70 ] THE RAMAYANA

 

[3] http://www.vinavu.com/2014/10/21/periyar-on-diwali/

[4] விடுதலை, நரகாசுரன் மலர் 2010, 03-11-2010, பக்கம்.4.

[5] விடுதலை, நரகாசுரன் மலர் 2010, 03-11-2010, பக்கம்.14-15.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

2 பதில்கள் to “பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (2)”

  1. பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறி Says:

    […] […]

  2. பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறி Says:

    […] [2] https://dravidianatheism.wordpress.com/2014/10/24/anti-deepavali-stand-of-dk-turning-into-anti-brahmi… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: