பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (4)

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (4)

ஆரிய-திராவிட கூட்டணி

குறிப்பு: திபாவளிக்கு எதிராக செய்யப்பட்டு வரும் நாத்திகப் பிரச்சாரத்திற்கு பதிலாக இப்பதிவு செய்யப் படுகிறது. இதன் முதல்[1], இரண்டாம்[2] மற்றும் மூன்றாம்[3] பதிவுகளை கொடுத்துள்ள லிங்குகளில் பார்க்கவும்.

 

சிவனே அயோக்கியன், அவனுக்கு எதற்கு சிவராத்திரி என்று கேட்கும் தமிழக நாத்திகர்களே[4], அதேபோல ஏசுவே, அல்லாவே, மேரியே என்று ஏன் கேட்கவில்லை?: விடுதலையில் “சிவனே அயோக்கியன், அவனுக்கு எதற்கு சிவராத்திரி” என்றெல்லாம், சிவராத்திரி சமயத்தில் அச்சடிக்கிறார்கள்[5]. ஆனால், “ஏசுவே அயோக்கியன், அவனுக்கு எதற்கு கிருஸ்துமஸ்”, “அல்லாவே ஒரு அயோக்கியன் அவனுக்கெதற்கு பக்ரீத்” என்றெல்லாம் சமதர்ம நாத்திக தோரணையில், நம்பிக்கயோடு இல்லை நம்பிக்கையில்லாமல் ஏன் கேட்பதில்லை? பிறகு இந்துக்களை மட்டும் தூஷிக்கலாம் என்ற உரிமையை யார் திராவிடத்துவ நாத்திகர்களுக்குக் கொடுத்தது? இதனை ஏன் அரசுகள், சட்டங்களை அமூல் படுத்துபவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்? சமதர்மமாக பண்டிகைக் கொண்டாட விடுமுறை அளிக்கும் போது, சமதர்மமாக அவை மதிக்கப்பட வேண்டும், ஒரு பண்டிகைக்கு சலுகை, அடுத்த பண்டிகைக்கு கட்டுப்பாடு, தடை என்றெல்லாம் இருக்கக் கூடாது. மேலும் தீபாவளி போன்ற பண்டிகைகள் இந்தியாவில் உள்ள மக்கள் பெருமளவில் கொண்டாடுகின்றார்கள். இக்காலக் கட்டத்தில், அயல்நாடுகளிலும் கொண்டாடப் படுகின்றது. ஆகவே, நாத்திகன் என்ற தகுதியுடன், இதனை இவ்வாறு தூஷிப்பது மடத்தனமாகும்.

 

LTTE-Prabhakar-as-Shiva

LTTE-Prabhakar-as-Shiva

இந்த பண்டிகைகள் தூஷிக்கப் படுவது ஏன்?: விடுதலை மற்றும் குறிப்பிட்ட இணைதளங்கள், எப்பொழுது இந்து பண்டிகைகள் வந்தாலும், அவற்றைப் பற்றி இழிவாக எழுதி பதிப்பிப்பது என்பதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளது. பெரியார் எழுதினார் என்றிருப்பதால், நடவடிக்கை எடுப்பதில்லையா அல்லது அந்த அளவிற்கு பெரியார் கீழ்த்தரமாக எழுதியிந்தார் என்றால், அவரது ஞானம் என்ன என்பதையும் ஆராய வேண்டும். உதாரணத்திற்கு சில கட்டுரைகள் கொடுக்கப் படுகின்றன:

 

 1. அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும்[6].
 2. மகா சிவராத்திரியாம்! மகா ஒழுக்கக்கேடு!!, விடுதலை[7] – 09-02-2010, ப.8
 3. நவராத்திரி விழா? பாலுறவு கொள்ளும் பள்ளியறையா? பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி, விடுதலை[8], முதல் பக்கம், 27-11-2009.
 4. கார்த்திகை தீபம்: தந்தை பெரியார்[9], (22-11-1931 குடிஅரசு)
 5. கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் திருமாவளவன் பேச்சு[10]
 6. குடி அரசு கருவூலம்:மார்கழிப் பீடை: எழுதியது – ஸ்க்ரூஉலூஸ்[11]. மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான…..

இப்படி பெரியார் எழுதினார் என்றால், அவரையும் அலசவேண்டிய நிலையுள்ளது. பிள்ளையார் உடைப்பு வழக்கில் தப்பித்து ஓடினார் என்று இன்னொரு இடத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன். எனவே, செக்யூலரிஸ நாட்டில் அவை விவாதிக்கப் படவேண்டும்.

 

தீபாவலி மூடத்தனம் - சாமி.சிதம்பரனார்

தீபாவலி மூடத்தனம் – சாமி.சிதம்பரனார்

இந்த பண்டிகைகளை எதிர்க்கும் பின்னணி: குறிப்பாக இந்த குறிப்பிட்ட பண்டிகைகளை மட்டும் இப்படி ஒட்டுமொத்தமாக, பலவித ரகமான, தினுசான சித்தாந்தவாதிகள், திரிபுவாதிகள், குழப்பவாதிகள் என்று எல்லோரும் சேர்ந்து செயல்படுவது, கீழ்கண்ட காரணிகளின் மேலாக இருந்து வருகின்றன:

 

 1. ஆரிய-திராவிட இனவாத கருதுகோள்கள் மற்றும் சித்தாந்தங்கள் (Aryan-Dravidian race hypotheses and theories)
 2. நாத்திகவாதம், ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான கடவுள்-மறுப்பு கொள்கை கொண்டது (Anti-Hindu atheism)
 3. பிராமண எதிர்ப்பு, காழ்ப்பு, துவேஷம் – இனவெறியுடன் கூடியது (anti-Brahmin hatred attacks, particularly racial)
 4. வருணாஷ்ரம மறுப்பு – ஜாதிகளை ஒழிப்பேன் என்று ஜாதியத்தை வளர்த்து இதனை எதிர்க்கும் போக்கு (attacking Varnashrama taking it as Caste system)
 5. சமஸ்கிருத எதிர்ப்பு (attacking Sanskrit)
 6. இந்து-எதிர்ப்பு (anti-Hindu under the guise of the above)
 7. இந்திய-எதிர்ப்பு (ultimately anti-Indian by joining with other forces)

 

இவை ஒன்றொன்றாக அலசப் படுகின்றன.

 

ஆரியர் வெறுத்த ராட்சதர்கள்

ஆரியர் வெறுத்த ராட்சதர்கள்

 1. ஆரியதிராவிட இனவாத கருதுகோள்கள் மற்றும் சித்தாந்தங்கள் (Aryan-Dravidian race hypotheses and theories): ஐரோப்பியர்கள் தாங்கள் மற்ற மக்களை விட உயர்ந்தவர்கள் என்றுக் காட்டிக் கொள்ள, உலக மக்களை உடல்நிறம் ரீதியாகப் பிரித்து அடையாளங்கொண்டு, ஆரம்பித்து வைத்த வாதம் தான் “இனசித்தாந்தம்”. “ஆரிய” என்ற சொல்லிற்கு திரிபு விளக்கம் கொடுத்து, அதனையே தமது சித்தாந்தத்தில் உருவான இனத்திற்கு பெயாக வைத்துக் கொண்டு உருவாக்கிய விஞ்ஞானத்திற்கு ஒவ்வாதனான கருதுகோள்.கைந்தியாவைப் பொறுத்த வரைக்கும், “ஆரியரை” உருவாக்கிய மாக்ஸ் முல்லர் மறுத்தவிட்டப் பிறகும், கா;டுவெல் உருவாக்கிய “திராவிடர்” சித்தாந்திகளின் மனங்களில் வாழ்ந்து வருகின்றனர். இனம் (race) மூலம் இனவெறி (racism) உண்டாகி, அதன் மூலம் மக்களை அழிக்கும் குரோதம் (racialism) உருவாகிய நிலை ஏற்பட்ட போது, அவ்வார்த்தைகளையே உபயோகிக்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை மூலம் 1950லகளில் அறிவிக்கப் பட்டது.

 

 1. நாத்திகவாதம்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், நாத்திகவாதம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான கடவுள்-மறுப்பு கொள்கை கொண்ட (Anti-Hindu atheism) சித்தாந்தமாக இருந்து வருகிறது. பெரியாரின் எழுத்துகளே அவ்விதமாகத்தான் இருக்கிறது. பெரியார் திடலில் விற்கும் புத்தகங்கள், பிரச்சார குறும்புத்தகங்கள் அவ்வாறே உள்ளன. கிருத்துவர்களையும் விமர்சிக்கிறோம் என்று பொதுவான, எல்லோருக்கும் தெரிந்த ராபெர்ட் ஹிங்கர்சாலின் “நான் ஏன் கிருத்துவன் இல்லை” என்ற சிலவுள்ளன. ஆனால், இஸ்லாத்திற்கு எதிராக ஒன்று கூட இல்லை. இதுதான் இவர்களின் நாத்திகம் மற்றும் கடவுள்-மறுப்பு கொள்கைகளின் லட்சணம். புத்தகக் கண்காட்சிகளின் போது, திக-முஸ்லிம்களின் கடைகள் அடுத்தடுத்து இருப்பத்ன் மூலம், ஒருவேளை இவர்களின் சித்தாந்தக் கொள்கையின் தரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

 

 1. பிராமண எதிர்ப்பு, காழ்ப்பு, துவேஷம்இனவெறியுடன் கூடியது (anti-Brahmin hatred attacks, particularly racial): மேற்குறிப்பிட்டபடி, ஐரோப்பிரர்கள், உலகில் உயர்ந்த இன மக்களை அடையாளங்காண ஆராய்ந்தபோது, முதலில் கங்கைக்கரையில் தான் சிறந்த கலைகள், விஞ்ஞானங்கள் முதலியவை தோன்றின, அவற்றை பிராமணர்கள் தாம் காத்து வருகிறார்கள் என்று முடிவுக்கு வந்தனர். அதனால், முதலில் இந்திய மதத்தைக் குறிப்பினும் போது, ஏதோ பிராமணர்கள் தாம் எல்லாவற்றிற்கும் சொந்தம் என்பது போல குறிப்பிடு வந்தனர். அத்தகைய பிராமணிஸத்தை “பிராமணிகல் இந்துயிஸம்” என்றும் குறிப்பிட்டு குழப்பினர். ஏனெனில் அவ்வாறே “சத்திரிய இந்துயிஸம்”, “வைசிய இந்துயிஸம்”, “சூத்திர இந்துயிஸம்” முதலியவற்றை அடையாளங்காண முடியவில்லை. பிறகு தங்களின் எழுத்துகளைத் திரித்துக் கொண்டாலும், இன்றுவரை அத்தகைய சொற்றோடர்கள் உபயோகத்தில் உள்ளன. இதனால், ஐரோப்பியர்கள், குறிப்பாக ஜெசுவைட் மற்ற கிருத்துவ மிஷனரிகள் தங்களது இனவெறிச்செயல்களை, குற்றங்களை, கொலைகளை மறைக்க அதை எதிர்த்து, எழுதி வருகின்றன. இதனால், பிராமணர்கள் எல்லாவிதமான தாக்குதல்களுக்கு உள்ளானர்கள். தமிழக நாத்திகவாதிகள், திராவிடக் கழகத்தினர் முதலியோரும் அவர்களை தாக்கினர், அடித்தனர், வெட்டினர், தூஷித்து வருகின்றனர். இது இனவெறி ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது.

 

 1. வருணாஷ்ரம மறுப்புஜாதிகளை ஒழிப்பேன் என்று ஜாதியத்தை வளர்த்து இதனை எதிர்க்கும் போக்கு (attacking Varnashrama taking it as Caste system): வருணாஷ்ரம் வேறு, ஜாதிமுறை வேறு என்பது, ஐரோப்பியர் புத்தகங்கள் மற்றும் ஆங்கில ஆட்சி ஆவணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இருப்பினும், இரண்டும் ஒன்று என்று வைத்துக் கொண்டு, அதை எதிர்பக்கும் போக்கு, மறுபடியும் “பிராமண எதிர்ப்பாகவே” குறுகி முடிகிறது. சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சுத்திரர்கள் இவர்களை மற்றும் அவர்களது “இஸங்களை” எதிர்ப்பதில்லை. திராவிட ஆட்சிகளில் எப்படி ஜாதி சங்கங்கள் உருவாகின என்பதனை ஆராய்ந்தாலே, ஜாதிகள், ஜாதியம் முதலியவற்றை, திராவிட ஆட்சியாளர்களே வ்வாறு வளர்த்து வருகிறார்கள் என்பதனைப் பார்க்கலாம்.

 

 1. சமஸ்கிருத எதிர்ப்பு (attacking Sanskrit): தமிழின் தொன்மை, திராவிடர்களின் மேன்மை, குமரிக்கண்டம், முச்சங்கங்கள் முதலியவை வேண்டும் என்றால், சமஸ்கிருதம் வேண்டும், மற்ற நேரங்களில் அது வேண்டாம், என்ற நிலைதான் திராவிட சித்தாந்திகளில் உள்ளது. தமிழ் ஏதோ தனியாகத் தோன்றியது, சங்க இலக்கியங்களை அப்படியே படித்துப் புரிந்து கொள்ளலாம் என்று பிடிவாதமாக இருந்தாலும், சமஸ்கிருத இலக்கியங்கள் உதவியின்றி, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் பதினென்கீழ்கணக்கு நூல்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. பனம்பரணார் என்ற புலவர், தொல்காப்பியத்திற்கு உரையெழுதும் போது, அதனால்தான், “வடநூல் உணர்ந்தார்க்கன்றி தமிழ் இயல்பு விளங்காது” என்று பதிவு செய்துள்ளார். குமரிக்கண்டம், முச்சங்கங்கள் வேண்டும் என்றால், இறையனார் அகப்பொருள் முன்னுரை வேண்டும், அது எழுதியதோ ஒரு பார்ப்பனர், பிறகு அதனை எப்படி உண்மை என்று எடுத்துக் கொள்வது? இது போன்றவற்றை இவர்கள் கண்டுகொள்வதே கிடையாது.

 

 1. இந்துஎதிர்ப்பு (anti-Hindu under the guise of the above): பொதுவாக இப்படி தொடர்ந்து குறிப்பிட்ட பண்டிகைகளைத் தாக்கி விமர்சிப்பது, அவதூறு பேசுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது, தடை செய்வது முதலிய காரியங்கள், இந்து-எதிர்ப்பாக உள்ளது வியப்பாக இருக்கிறது.
  1. தீபாவளி குறிப்பிட்ட நேரங்களில் கொண்டாடப் படவேண்டும்.
  2. ஒலி குறைவாக இருக்க வேண்டும்.
  3. ஒலிமாசு ஏற்படக் கூடாது.
  4. சுற்றுப்புற மாசு இருக்கக் கூடாது.
  5. ……..

என்று விதிகளை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால், பக்ரீத் போது, விலங்குகள் கொல்லப்படுவதை, யாரும் கண்டுகொள்வதில்லை. அஹிம்சாவாதிகளான ஜைனர்களும், பௌத்தர்களும் கூட கேட்பதில்லை. செக்யூலார் அரசும் அவர்களது அஹிம்சா கொள்கைகள் பாதிக்கப் படுமே என்ரு கவலைக் கொண்டதில்லை. ஆகவே, இது இந்து-எதிர்ப்பாக இருப்பது, செக்யூலரிஸ கொள்கையினையே கேவலப்படுத்துவதாக உள்ளது.

 

Noise level before and aftyer deepavali-myth

Noise level before and aftyer deepavali-myth

 1. இந்தியஎதிர்ப்பு (ultimately anti-Indian by joining with other forces): நாத்திகப் போர்வையில் மற்ற எல்லா சித்தாந்திகளும் இந்த பிரச்சாரத்தில் சேர்ந்துவிடுகின்றனர். ஊடகங்களில் அதிரடியில் பிரச்சாரங்கள் முடுக்கப் படுகின்றன. இந்த தீபாவளியின்போதே, ஒரு பக்கம் தீபாவளி வாழ்த்துகள் முதலியன, மறுபக்கமோ தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்பு நின்று கொண்டு போதனை, இப்படி இரட்டைவேட கூத்துகள் அரங்கேருகின்றன. தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்றால், ஏன் அந்த செனல்கள் தீபாவளி பற்றிய செய்திகள், விளம்பரங்கள் ஒலிப்பரப்ப வேண்டும்? கம்யூனிஸ வகையறாக்கள் (பலவித பெயர்களில் உலாவரும் பற்பல குழுக்கள்), கிருத்துவ கோஷ்டிகள், முஸ்லிம், முகமதிய, இஸ்லாமிய, ஜிஹாதி கூட்டங்கள், என்று எல்லோரும் சேர்ந்து கொண்டு செய்து வருகின்றனர். தி ஹிந்து முதல் ஈ.டபிள்யூ.பி வரை எல்லாவற்றிலும் தாக்கிக் கட்டுரைகள். ஆனால், மற்றப் பண்டிகைகளின் போது அமைதியாக இருக்கும் அல்லது பாராட்டும் வகையில் இருக்கும். இவ்வாறு இந்திய-விரோதமாக ஏன் அவர்கள் இருக்க வேண்டும் என்பதனையும் மற்ற இந்தியர்கள், இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

20-10-2014

[1] https://dravidianatheism.wordpress.com/2014/10/24/dravidian-anti-deepavali-stance-utterances-writings-etc/

[2] https://dravidianatheism.wordpress.com/2014/10/24/anti-deepavali-stand-of-dk-turning-into-anti-brahmin-and-anti-hindu/

[3] https://dravidianatheism.wordpress.com/2014/10/24/secular-atheism-or-atheistic-secularism-acting-against-hindus-in-the-case-of-deepavali/

[4] http://viduthalai.periyar.org.in/20100209/news13.html

[5] http://dravidianatheism2.wordpress.com/2010/02/09/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/

[6] http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

[7] http://viduthalai.periyar.org.in/20100209/news13.html

[8] http://viduthalai.periyar.org.in/20091128/news01.html

[9]http://dravidianatheism2.wordpress.com/2009/11/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0/

[10] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22401

[11] http://viduthalai.periyar.org.in/20100103/news08.html

 

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (4)”

 1. S. P. Shanmuganathan Says:

  Why cant they write such articles about the festivals of Islam, Christianity etc?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: