பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (3)

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (3)

 

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்-ஜெயா-கரு

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்-ஜெயா-கரு

குறிப்பு: திபாவளிக்கு எதிராக செய்யப்பட்டு வரும் நாத்திகப் பிரச்சாரத்திற்கு பதிலாக இப்பதிவு செய்யப் படுகிறது. இதன் முதல்[1] மற்றும் இரண்டாம்[2] பதிவுகளை கொடுத்துள்ள லிங்கில் பார்க்கவும்.

 

ஒபாமா தீபாவளியின் போது ஆடியவுடன், கருணாநிதியும் ஆடாத குறைதான்[3]: 2009ல் ஒபாமா இந்தியாவுக்கு வந்தபோது, தீபாவளி கொண்டாடி ஆடினார். மனைவியும் சேர்ந்து ஆடினார்[4]. ஒபாமா ஆடிய ஆட்டத்தைப் பார்த்து நிச்சயமாக இந்திய அரசியல்வாதிகள் ஆடியே போய் விட்டனர். “பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்” என்ற பாட்டுதான் ஞாபகம் வந்தது. நிச்சயமாக நாத்திக கருணாநிதியே இதை பார்க்கும் போது, பொறாமைப் பட்டிருப்பார். இப்பொழுதுகூட சக்கர நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயற்சி செய்திருப்பார். நல்லவேளை, அமைதியாக உட்கார்ந்துவிட்டார், ஏனெனில், ஜெயலலிதா ஞாபகம் வந்ததால்தான்! ஆமாம், அப்படத்தில் எம்.ஜி.ஆர் பாடியது ஜெயலலிதாவை ஆட வைப்பதற்காகத்தான்! இனி ஒபாமா ஆட்டத்தால், யாரெல்லாம் ஆடப்போகின்றனரோ தெரியவில்லை! மேனாட்டவர்களுக்கு பண்டிகைகளின் போது ஆட்டமும், பாட்டமும் சகஜம். கருணாநிதி, வீரமணி போன்றோர்களுக்கோ பண்டிகைகளின் போது வசைவும், தூஷணமும் தான் சகஜம்.

 

சாய்பாபா கரு ராஜாத்தி

சாய்பாபா கரு ராஜாத்தி – படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்

தீபாவளியன்று சூத்திரன் பாப்பானுக்கு சொன்ன வாழ்த்து[5]: பார்ப்பன சூழ்ச்சியே தீபாவளி என்று பெரியார் சொன்னார் என்றுள்ளதாலும், பார்ப்பனரான கமல்ஹஸன் நாத்திகம் பேசுவதனாலும், கருணாநிதி மற்ரும் கமல்ஹஸன் இருவருமே ராமனுக்கு விரோதமாக பேசியிருப்பதாலும், இத்தலைப்பிடப்படுகிறது. நாத்திகம் பேசினால், பாப்பானுக்கும், சூத்திரனுக்கும் உறவு வந்துவிடும் போல. அவ்வுறவுகளில் எல்லாமே ஒட்டிக்கொள்ளும் போல[6]. 2010 ஆண்டில் கருணாநிதி முதலமைச்சர், நாத்திகர், நரகாசுரனை விரும்பவர். முதலமைச்சர் என்ற முறையில் தீபாவளி அன்று யாருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், நாத்திக கமல் ஹஸனுக்கு தீபாவளியன்று வாழ்த்து சொன்னது பெரிய வேடிக்கையாக இருந்தது[7]. இன்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் கமலஹாசனுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ் திரையுலகின் கவுரவமாகவும், மகுடமாகவும் திகழ்பவர் கமல்; தமிழ் சினிமாவில் கமலுக்கு என்றுமே தனியிடம் உண்டு; சிறுவனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கமல், தற்போது உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளார்; அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்; மனதளவில் அவர் கவிஞராக இருப்பதே அவரின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்; அவர் சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்”, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  இந்த வாழ்த்தை நான் விமர்சித்து எழுதிய கட்டுரையை இங்கே பார்க்கவும்[8].

 

பாவளி எதிர்ப்பு போஸ்டர்கள் - இந்து முன்னணி

பாவளி எதிர்ப்பு போஸ்டர்கள் – இந்து முன்னணி

2009ல் திகவின் தீபாவளி எதிப்பு போஸ்டரும், ஹிந்து முன்னணி எதிர்ப்பும்: 2009ல் நடந்த விசயங்கள் (ஓபாமா தீபாவளி கொண்டாடியது, பிரிட்டன் பிரதமர் தீபாவளி உலகப் பண்டிகை என்றது, கருணாநிதி கமல்ஹஸனுக்கு தீபாவளியன்று வாழ்த்து சொன்னது) திகவினரை அதிகமாகவே பாதித்திருக்க வேண்டும். தீபாவளியை எதிர்த்து போஸ்டர்கள் ஒட்ட, இந்து முன்னணியினர் அதனை எதிர்த்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். உடனே, இனமான தளபதி வீரமணிக்கு பொத்துக் கொண்டு வந்து விட்டது. “மிரட்டலா?” என்று தலையங்கத்தில் 20-10-2009 அன்று ஒப்பாரி வைத்தார்[9].

பொருளாதாரப் பேரழிவு!

சுற்றுச்சூழல் சீர்கேடு!

சுகாதாரக் கேடு! உயிர்ப்பலி!

ஆரிய ஆபாசப் பண்டிகை!

தீபாவளியைப் புறக்கணிப்போம்!

என்று அந்தச் சுவரொட்டிகளில் கூறப்பட்டு இருந்தது. இதில் என்ன குற்றம்? என்ன பிழை? ஒரே ஒரு வரியை கால் புள்ளி, அரைப் புள்ளியை மறுக்க முடியுமா? – வீரமணி அப்பொழுது தலையங்கத்தில் கேட்டது!

2009ல் தீபாவளி நேரத்தில் விருதுநகரில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டன. “மறுக்கவியலாத -_ எதிர்த்துக் கருத்துச் சொல்ல வக்கில்லாத சில பேர் இந்து முன்னணி என்ற பெயரால் சிவகாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனராம். இதற்காகக் காவல்நிலையத்தை முற்றுகை-யிட்டனராம். சுவரொட்டி வெளியிட்டவர்கள் மீதும், அச்சிட்ட அச்சகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளாராம். உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு வகையில் இதனை வரவேற்கிறோம். நீதிமன்றத்திலேயே இந்த ஆபாச, மூடத்தன தீபாவளி பண்டிகையைப்பற்றி அக்குவேர் ஆணி வேராகக் கிழித்திட திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த அரியதோர் நல்ல சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகிறோம்”, என்று எழுதித் தள்ளினார்[10]. ஆனால், இவர்களும் மற்ற பண்டிகைகளின் போது, இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டாததும், திராவிட செக்யூலரிஸம் அல்லது செக்யூலரிஸ நாத்திகத்தைக் காட்டுகிறது போலும்!

 

சரஸ்வதிக்கு-பூஜை-சேலம்-2010

சரஸ்வதிக்கு-பூஜை-சேலம்-2010 திகவினரின் அராஜகம்

சென்ற கருணாநிதி ஆட்சியில் நடந்தவை: கடந்த கருணாநிதி ஆட்சியில், குறிப்பாக 2006 – 2009 காலத்தில் பல கோவில்கள், குருக்கள் தாக்கப் பட்டு, விக்கிரங்கள் உடைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசப் பட்டு, அறிவாளால் வெட்டப் படவும் நேர்ந்தது. அத்தகைய அப்பாவி தமிழக இந்து மக்களின் மீது அவிழ்த்து விடப் பட்ட வன்முறையைப் பற்றி முதல்வரோ அல்லது எந்த தலைவரோ கண்டு கொள்ளவில்லை. மாறாக முதல்வரான, கருணாநிதியே இந்துக்கள் “திருடர்கள்” என்றெல்லாம் பேசி, பல வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, நிலுவையிலேயே வைக்கப் பட்டுள்ளன. திட்டமிட்ட முறையில் வீரமணியும், தனது – ஒரு நிகர பல்கலைகழகத்தின் வேந்தர் – என்றப் பொறுப்பான நிலையையும் மறந்து, அத்தகைய கீழ்த்தரமான கேள்விகளைக் கேட்டு, போஸ்டர்கள் ஒட்டினால், நிச்சயமாக இந்துக்கள் கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள். இதே ரீதியில் நாகநாதன், மங்கள முருகேசன் போன்றோர்களும் மக்களுக்குத் தெரிந்தால் கேள்வி கேட்பார்கள்[11]. எல்லாவற்றிற்கும் மேலாக, “தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தீபாவளி வாழ்த்துச் சொல்லாததன் அருமையை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி”யதற்கு நன்றி சொல்லவேண்டும்! ஏனெனில், அவர்களே அத்தகைய இந்து-விரோத உண்மையினை / போக்கை சொல்லியிருப்பது நல்லது. ஏற்கெனவே அவர்மீது தொடுக்கப் பட்ட நிலுவையில் உள்ள வழக்குகளில் கூட, வாதி இந்த முக்கியமான உண்மையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

கருணாநிதி - ஜெயலலிதாவுக்கு பதில் - ஒப்புமைக்கு

கருணாநிதி – ஜெயலலிதாவுக்கு பதில் – ஒப்புமைக்கு

செக்யூலார் எத்தியிஸம் (Secular atheism) / சமதர்ம நாத்திகம் ஏன் பின்பற்றப்படுவதில்லை?:  இந்தியா ஒரு செக்யூலார் நாடு (Secular nation) என்பதால், இங்கு செக்யூலரிஸம் (Secularism) பின்பற்றப் படுகிறது. அப்படியென்றால், சமயுரிமைகளுடன், சமத்துவக்கொள்கைகளுடன், செக்யூலார் எத்தியிஸம் (Secular atheism) / சமதர்ம நாத்திகம் என்பதனை பின்பற்றலாமே. விடுமுறைகள் அரசு, நாத்திக அரசையும் சேர்ந்து தீபாவளிக்கு மட்டும் விடுவதில்லை, எல்லா பண்டிகைகளுக்கும் – ரம்ஜான், பக்ரீத், முகமது நபி பிறந்த நாள், புத்தாண்டு, ஈஸ்டர், கிருஸ்துமஸ், மகாவீரர் ஜெயந்தி, புத்த ஜெயந்தி- அளிக்கப்படுகிறது. பிறகு அப்பண்டிகைகளையும், இதே முறையில் ஏன் அலசுவதில்லை, விமர்சிப்பதில்லை? எதற்கு பாரபட்சம், தயக்கம் அல்லது பயம்? எது அவர்களைத் தடுக்கிறது? நடுநிலையில் அவர்களால் நடந்து கொள்வதில்லை என்றால், அவர்களது போலித்தனம், இரட்டைவேடம், ஏமாற்று வேலை முதலியவை வெளிப்படுகின்றன. அப்படியென்றால், அவர்களது கொள்கைகளும் பொய் என்றாகிறது. “இந்து கடவுள் இல்லை” என்று நம்புவது மட்டும் நாத்திகம் ஆகாது, “முஸ்லிம் கடவுள் இல்லை”, “கிருத்துவ கடவுள் இல்லை” என்றெல்லாம் நம்பினால் தான், அவர்கள் உண்மையான நாத்திகர்கள் ஆகின்றார்கள். ஆனால், அவர்கள் அப்படியிருக்கவில்லை.

 

© வேதபிரகாஷ்

24-10-2014

[1] https://dravidianatheism.wordpress.com/2014/10/24/dravidian-anti-deepavali-stance-utterances-writings-etc/

[2] https://dravidianatheism.wordpress.com/2014/10/24/anti-deepavali-stand-of-dk-turning-into-anti-brahmin-and-anti-hindu/

[3] http://onenewsmany.wordpress.com/2010/11/10/93-ideaological-deepavali-celebrated-internationally/

[4] http://liberalizationprivatizationglobalization.wordpress.com/2010/11/07/obama-dipavali-celebration/

[5] இத்தலைப்பு சம்பந்தப் பட்டவர்களின் இரட்டைவேடங்களை எடுத்துக் காட்ட, இவ்வாறு கொடுக்கப் பட்டுள்ளது. நாத்திகப் போரவையில் எப்படி இப்படிப்பட்ட சித்தாந்த ரீதியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

[6] அடிக்கடி பிராமண துவேசத்தில் பற்பல வார்த்தைகள், சொற்றோடர்கள் உபயோகப் படுத்தப் படுகின்றன. ஜெயலலிதா ஒரு பார்ப்பனர் என்று வைத்துக் கொண்டு கூட அவரை கெட்ட வார்த்தைகளில் விளித்து, தூஷித்து வந்துள்ளனர், வருகின்றனர். இதை மற்ற பார்ப்பான்கள் கண்டிப்பதில்லை.

[7] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=121755

[8] http://onenewsmany.wordpress.com/2010/11/09/ideological-deepavali-celebrated-internationally/

[9] விடுதலை, தலையங்கம், 20-10-2009 http://www.viduthalai.com

[10] http://tamilheritage.wordpress.com/2009/10/20/deepavali-debate-continues-dravidian-ideology/

[11] விடுதலையில் எழுதிக் கொண்டிருப்பதால், மக்கள் பார்ப்பதில்லை, படிப்பதில்லை. அவர்களின் இரட்டை வேடங்களையும் அறிந்து கொள்வதில்லை. மேலும் இவர்கள் எல்லோரும் தங்களது குடும்பங்களிலேயே, இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இவர்கள் ஒரு பக்கம் தீபாவளியை தூஷித்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் குடும்பத்தினர் ஜாலியாக தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (3)”

  1. பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறி Says:

    […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: