Archive for ஜனவரி, 2015

ஶ்ரீரங்கம் பிரம்மரத பல்லக்கு முறை, தேவையற்ற வழக்குகள், அரசியல் கலப்பு, அதிகார துஷ்பிரயோகம் – முடிவு இந்து-விரோத வெளிப்பாடு (3)

ஜனவரி 11, 2015

ஶ்ரீரங்கம் பிரம்மரத பல்லக்கு முறை, தேவையற்ற வழக்குகள், அரசியல் கலப்பு, அதிகார துஷ்பிரயோகம்முடிவு இந்துவிரோத வெளிப்பாடு (3)

பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது-வினவு படம்

பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது-வினவு படம்

திகவை வினவு வசைப் பாடுவதும் வினோதமே[1]: வினவு, முழுக்க இந்துக்களை திட்டித் தீர்த்து விட்டு, திகவை வசைப் பாடியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதனை அப்படியே இங்கு கொடுக்கப்படுகிறது, “இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள். ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் ’கைப்புள்ள கதைபோல்’ ’கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!’ என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர்.  ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது. அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை.

ஆரிய-திராவிட கூட்டணிதிக இவர்களது படங்களைத் திருடிக் கொண்டதாம்: வினவின் வசை தொடர்கிறது, “அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள். பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள். எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது “அயோத்தி அல்ல”, தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்” என்று முடித்திருக்கிறது.

Madurai Adheenam with Viramani DKதிகவை வசைப்பாடும் போக்கில் அதிக தாக்குதலுக்கு இந்துமதத்தை உட்படுத்தியுள்ளது: திகவைத் தான் கண்டபடி, இவ்வாறு தைரியமாகத் திட்டுகிறர்கள் என்ரு பார்ப்பனர்கள் கூட மிகிழ முடியாது, ஏனெனில், அவர்களைத்தான் அளவுக்கு அதிகமாக சாடியுள்ளார்கள். மேலும், பார்ப்பனர்களையும், திகவினரையும் ஒப்பிட்டிருப்பது, சரியான ஜோக் எனலாம். ஒருவேளை வீரமணி முதலியோர் பார்ப்பனர்கள் போல வெள்ளையாக இருப்பதினால், “இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல்” என்று புகழ்ந்திருக்கிறார்கள் போலும்! பதிலுக்கு நாளை, அவர்களும், இவர்களை “சிவப்பு பார்ப்பனக் கும்பல்” என்றோ, “பச்சை இந்த பார்ப்பனக் கும்பல்” என்றோ விமர்சிக்கலாம், ஆனால், எல்லாவற்றிலும் அடிபடுவது “பார்பனர்” தாம்! இதெல்லாம் கம்யூனிஸ சித்தாந்திகளுக்கு (எல்லா வகையறாக்களையும் சேர்த்து) கைவந்த கலை. “யு டூ புரூடஸ்” என்பதை இவர்கள் எப்படி வேண்டுமானாலும், யாரைக் குறித்தும், எங்கு வேண்டுமானாலும் குறிப்பிடுவார்கள், பேசுவார்கள், எழுதுவார்கள். இப்பொழுது கூட “பிரென்ட் லைன்” ஆர்.எஸ்.எஸ்.ஐ முசோலினியுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளது. அதாவது ஒரு முஸ்லீமை வைத்து, மார்க்சீய பத்திரிக்கை அவ்வாறான வேலையை செய்துள்ளது. இதெல்லாம் சித்தாந்த கூட்டில் ஏற்புடையதே. ஆனால், எல்லொருமே, ஆர்.எஸ்.எஸ்.ஐ தாக்குகிறாம் என்று இந்துக்களைத் தாக்குகிறார்கள், பிஜேபியை திட்டுகிறோம் என்று இந்துக்களைத் திட்டுகிறார்கள்; மோடியை வசைப்பாடுகிறோம் என்று இந்துக்களை வசைப்பாடுகிறார்கள்…..ஆக அந்த முறை இவர்கள் எல்லோரிடத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது.

2010 வழக்கு எண்கள், வாதி-பிரதிவாதிகள்

2010 வழக்கு எண்கள், வாதி-பிரதிவாதிகள்

வழக்கு விவரங்கள் 2006 முதல் 2011 வரை: லக்ஷ்மி நரசிம்மன் [ Sri Vedavyasa R. Lakshmi Narasimha Bhattar (71) ] என்பவர், தனது குடும்பத்திற்கு நெடுங்காலமாக பிரம்மரதம் மரியாதைக் கொடுக்கப் பட்டு வந்துள்ளது, ஆனால், இப்பொழுது மூன்று குடும்பங்களுக்குத் தான் கொடுக்கப்பட்டு வருகிறது என்று 2006ல் வழக்கு தொடுத்தார். அது திருச்சி முன்சீப் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. 2009ல் இப்பிரச்சினை எழுந்ததால், அவர் சென்னை உயர்நீதி மன்றம், மதுரை கிளையில் வழக்கைப் பதிவு செய்தார். ஆனால், அறநிலையத்துறை பாரபட்சத்தினால், எதிர் தன்னிலை விளக்கத்தில் தேவையில்லாத விசயங்களை நுழைத்துப் பிரச்சினையைத் திசைத்திருப்பினர். இந்துக்களுக்குள், குறிப்பாக வைணவர்களுக்குள் அல்லது பிராமணர்களுக்குள் இருந்தப் பிரச்சினையை, “கருணாநிதி-ஜெயலலிதா” என்று குறிப்பிட்டு அர்ச்டியலைப் புகுத்தினர். பார்ப்பனர் என்று குறிப்பிட்டு, “பார்ப்பனர்-சூத்திரர்” வெருப்பையும் சேர்த்தனர். 2010 மற்றும் 2011 தீர்ப்புகளில் நீதிபதிகள் எம். ஜெயச்சந்திரன் மற்றும் கே. சந்துரு இருந்தனர். இவர்கள் திராவிடக் கட்சிகளின் பரிந்துரைகளால் நீதிபதிகளாகினர் என்பது தெரிந்த விசயமே. இருப்பினும், முடிவு எடுப்பது அறங்காவலர் குழு என்று முடியும் போது, அது இப்பொழுது 2015ல் அனுமதி அளித்ததால், பிரம்மரத மரியாதை நிகழ்ச்சி நடக்க முடிந்தது.

2011 வழக்கு எண்கள், வாதி-பிரதிவாதிகள்.

2011 வழக்கு எண்கள், வாதி-பிரதிவாதிகள்.

2015ல் அறங்காவலர் குழு பிரம்ம ரத மரியாதை நிகழ்ச்சியை நடத்த அனுமதியளித்தது[2]: ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி இராப்பத்து விழாவின் பத்தாம் நாளான சனிக்கிழமை (10-01-2015) தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவையொட்டி, பட்டர்களுக்கு மரியாதை செய்யும் பிரம்ம ரத மரியாதை நிகழ்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி, கைசிக ஏகாதசி விழாவின்போது நம்பெருமாள் முன்பு புராணம் படிக்கும் பட்டர்கள், அரையர்களை மரியாதை செய்யும் விதமாக பல்லக்கில் அமர வைத்து ஊழியர்கள் ஊர்வலமாக தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் விடுவர். மனிதனை மனிதன் சுமப்பதா என்று கடந்த 2011-ம் ஆண்டு அறங்காவலர் குழு இதற்கு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்டர்களும், அரையர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், மனுவை திரும்ப பெற்றனர். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற அறங்காவலர் குழு பிரம்ம ரத மரியாதை நிகழ்ச்சியை நடத்த அனுமதியளித்தது. வைகுந்த ஏகாதசி இராப்பத்து விழாவின் பத்தாம் நாளான சனிக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சி சந்திர புஷ்கரணியில் நடைபெற்றது. தொடர்ந்து நம்பெருமாள் உபயக்காரர் மரியாதையுடன் ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்தார். பின்னர், கைசிக புராணம் பாடிய திருவேங்கட பராசுர பட்டருக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டது. பல்லக்கில் அவரை அமரவைத்து நம்பெருமாள் சன்னதி, கருடாழ்வார் சன்னதி,திருப்பாணாழ்வார் சன்னதி, கூரத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட இடங்களில் மரியாதை செய்விக்கப்பட்டது. பின்னர் நான்கு உத்தர வீதிகளிலும் வலம் வந்து அவரது வீட்டில் கொண்டு விட்டனர்.

© வேதபிரகாஷ்

11-01-2015

[1] http://www.vinavu.com/2010/11/20/srirangam-pallaku-battar/

[2] தினமணி, 4 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீரங்கம் கோயிலில் பிரம்ம ரத மரியாதை, By ஸ்ரீரங்கம், First Published : 11 January 2015 05:48 AM IST

ஶ்ரீரங்கம் பிரம்மரத பல்லக்கு முறை, தேவையற்ற வழக்குகள், அரசியல் கலப்பு, அதிகார துஷ்பிரயோகம் – முடிவு இந்து-விரோத வெளிப்பாடு (2)

ஜனவரி 11, 2015

ஶ்ரீரங்கம் பிரம்மரத பல்லக்கு முறை, தேவையற்ற வழக்குகள், அரசியல் கலப்பு, அதிகார துஷ்பிரயோகம்முடிவு இந்துவிரோத வெளிப்பாடு (2)

 

2010 ஶ்ரீரங்கம் பிரம்மரத பிரச்சினை

2010 ஶ்ரீரங்கம் பிரம்மரத பிரச்சினை

திக பிராமணன்சூத்திரன் என்று பிரச்சினையை எழுப்பப் பார்க்கிறது: விடுதலை தொடர்கிறது, “இந்நிலையில் தி-.மு.க ஆட்சியில் கருணாநிதி, பிராமண துவேஷம் செய்துவிட்டார். அம்மா ஆட்சியிலாவது அந்த துவேஷத்தை போக்கி இந்த பிரம்மரத முறையை நடத்திவிட வேண்டும் என ஆலோசனை கூட்டம் நடத்தப் பட்டு தற்போது சொர்க்க வாசல் திறப்புக்கு பின்னர், பிரம்மரதமுறை நடத்திட தீவிர முயற்சியில் பர்ப்பனர்கள் ஈடுபட்டு வருகின் றனர். பார்ப்பனர்கள் செல்லும் பல்லக்கை தூக்க சீமான் தாங்கி என்று அழைக்கப்படும் அரையர்கள் மறுப்பு தெரிவித்து வருவதால், வெளியிலிருந்து பல்லக்கை தூக்கும் நபர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் பேரம் பேசி ஆள்களை ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்”, என்று பொய்மைகளைக் கலந்து அள்ளி வீசியிருக்கிறது[1]. “இந்நிலையில் தி-.மு.க ஆட்சியில் கருணாநிதி, பிராமண துவேஷம் செய்துவிட்டார். அம்மா ஆட்சியிலாவது அந்த துவேஷத்தை போக்கி இந்த பிரம்மரத முறையை நடத்திவிட வேண்டும்” என்று அந்த சதியை வெளிப்படுத்திக் கொண்டது. “உள்ளா சூத்திர ஆட்சியைக் காப்போம்” என்று சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியது எத்தனை பார்ப்பனர்களுக்கு நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை.

srirangam-என்னா லுக்கு - வினவு படம்

srirangam-என்னா லுக்கு – வினவு படம்

பார்ப்பன விவகாரங்களில் இந்துவிரோதிகளின் தலையீடு ஏன்?: விடுதலையில், “சிறீரங்கத்தில் பல்வேறு இந்து மதவெறி அமைப்புகளின் துணையோடுவரும் சனிக்கிழமை (ஜன. 10 ஆம் தேதி) பிரம்மரத முறையை நடத்திட பார்ப்பனர்கள் திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் பிரம்ம ரத முறையை தடுத்து நிறுத்தக் கோரி மாநகர காவல் ஆணை யரிடம் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தை, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற தடையை மீறி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஏற்கெனவே திட்டமிட்டப்படி பிரம்மரத முறையை இன்று (ஜன.10) நடத்திட ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதையறிந்த திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் மக.இக உள்ளிட்ட கட்சியினர் சிறீரங்கத்தில் திரண்டனர். இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்”, என்று கூறியுள்ளது[2]. அதாவது, திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் மக.இக உள்ளிட்ட கட்சியினருக்கு இவ்விசயத்தில் என்ன கவலை என்று தெரியவில்லை. இதேபோல, கிருத்துவ-முஸ்லிம் விழாக்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று, இதே மாதிரி இவர்கள் கலாட்டா செய்வார்கள என்று தெரியவில்லை. இங்கும் “செக்யூலரிஸ நாத்திகம்” மற்றும் “இந்து-விரோதம்” முதலியவைத்தான் வெளிப்படுகின்றன.

 

srirangam-பக்தர் நடந்தார் - வினவு படம்

srirangam-பக்தர் நடந்தார் – வினவு படம்

தேவையில்லாது மறியல் செய்த இந்துவிரோத கும்பல்கள் கைது (2015): விடுதலை, “மதியம் 12.30 மணியளவில் ரங்கநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அரை யான் குடும்பம், பட்டர் அய்யர், வேதவியாசகர், பராசுர பட்டர் ஆகியோர்  பிரம்மரத முறையை ஏற்றுக் கொண்டு  பல்லக்கில் செல்ல தயாராக இருந்தனர். அப்போது கோவில் வெளியே திராவிடர் கழகத்தினர் மாவட்ட தலைவர் மு.சேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  இதனால் பார்ப்பனர்கள் பிரம்ம ரதத்தில்  செல்லாமல் அந்த வகையார்கள் கோவிலின் உள்ளே இருந்து கொண்டனர். இதனால் சிறீரங் கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது”, என்று சொல்வதில் வியப்புதான் மேலிடுகிறது. தினமணியில் உள்ளது[3], “பிரம்ம ரத மரியாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த சுமார் 57 பேர் தெற்கு சித்திரை வீதியில் கூடியிருந்தனர். அவர்கள் பிரம்ம ரத மரியாதையை தடுத்து நிறுத்துமாறு முழக்கமிட்டனர். போலீஸார் அவர்கள் அனைவரையும் கைது செய்து, திருவானைக்கா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பிரம்ம ரத மரியாதை ஊர்வலத்தில் வெளி ஆட்கள் யாரும் நுழைந்து விடாதபடி காவல் துறை துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்”. விழாக்கூட்டத்தில் இப்படி கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற சதிதிட்டத்துடன் செயல்பட்டால், போலீஸார் கைது தான் செய்வார்கள். முன்பு, கருவறையில் நுழைவோம் என்று கலாட்டா செய்தபோது, பக்தர்களே, நன்றாக உதைத்து அனுப்பியது அவர்களுக்கு நினைவில் இருக்கலாம். ஆக, அத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்றுதால், போலீஸார் இவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

srirangam-பல்லக்கு ரத்து - பக்தர் நடந்தார் - வினவு படம்.

srirangam-பல்லக்கு ரத்து – பக்தர் நடந்தார் – வினவு படம்.

ஸ்ரீரங்கம் கோயிலில் பிரம்ம ரத ஊர்வலம் நடத்த எதிர்ப்பு[4]: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரம்ம ரத நிகழச்சி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று மணப்பாறையில் தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலர் கோவை ராமகிருஷ்ணன் அறிவித்தார். வரும் 10,11 ஆகிய தேதிகளில் பிரம்ம ரத ஊர்வலம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரம்ம ரத ஊர்வலம் நடத்துவது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்தார்[5] என்று தினகரனில் செய்தி வந்தது. ஆனால், இக்கூட்டமும் நேற்று (10-01-2015) அன்று அங்கு வந்ததா என்ரு தெரியவில்லை. முந்தைய “வினவின்” விமர்சனம்[6] படிக்க நேர்ந்தது, அதில், “பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது. இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் ‘பாதந்தாங்கிகள்’ (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். “கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு” என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார். இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்”, என்றுள்ளதைப் படித்தபோது, இக்கூட்டங்களின் வக்கிரப்புத்தி வெளிப்பட்டது. எப்படியாவது பிரச்சினையை கிளப்ப வேண்டும், கலாட்டா செய்ய வேண்டும் என்று தயாராக இருக்கும் போக்கு வெளிப்பட்டது.

srirangam-போலீஸ் காவல் - வினவு படம்.

srirangam-போலீஸ் காவல் – வினவு படம்.

2010ல் இந்துக்கள் சமரசமாகப் பிரச்சினையை முடித்து வைத்தனர்: நீதிமன்றத்தில் நரசிம்ம பட்டரின் வழக்கு நிலுவை மற்றும் திராவிட கூட்டத்தினரின் எதிர்ப்பு என்றுள்ள அந்நிலையில், 2010 செப்., 27ம் தேதி நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், “பிரம்ம ரத மரியாதையை ரத்து செய்ய வேண்டும்’ என்று தீர்மானிக்கப்பட்டது. அப்போது, ஒரு தரப்பினர் இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது[7].ஆதாவது, ஒற்றுமையாக இருந்த அறங்காவலர் குழுமத்தில் பிரிவை ஏற்படுத்தியது அரசின் தந்திரமே என்று அறிந்து கொள்ளலாம். அத்தீர்மானத்தால், பல்லக்கு மரியாதை கிடையாது என்று அறநிலையத் துறை அதிகாரி அறிவித்தார். ஆனால், பாரமரியமுறைப்படி, கைசிக புராணம் வாசித்த பட்டர், நடந்தே வீட்டுக்குச் சென்று இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஸ்ரீரங்கத்தில், பிரம்ம ரத பல்லக்கு மரியாதை வழங்கப்படாத கைசிக புராணம் வாசித்த பட்டர், நடந்தே சென்று, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்[8] என்று தினமலர் செய்தி வெளியிட்டது. இதனை “வினவு” என்ற இணைத்தளத்தில் உள்ளவற்றுடன் ஒப்பிட்டுப் படிப்பது மற்ற விசயங்களை வெளிப்படுத்துகிறது.

© வேதபிரகாஷ்

11-01-2015

[1] http://www.viduthalai.in/e-paper/94271.html

[2] விடுதலை, 10-01-2015, இணைதள பதிப்பு.

[3] http://www.dinamani.com/edition_trichy/trichy/2015/01/11/4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/article2614476.ece

[4] தினகரன், ஸ்ரீரங்கம் கோயிலில் பிரம்ம ரத ஊர்வலம் நடத்த எதிர்ப்பு, பதிவு செய்த நேரம்: 2015-01-08 13:02:13

[5] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=126362

[6] http://www.vinavu.com/2010/11/20/srirangam-pallaku-battar/

[7] தினமலர், ஸ்ரீரங்கத்தில் “பிரம்ம ரத மரியாதை’ விவகாரம் : நடந்தே சென்று கைசிக புராணம் வாசித்த பட்டர், திருச்சி பதிப்பு, பதிவு செய்த் நாள்: டிசம்பர்.7, 2011, 23.55.

[8] http://dhinamalar.info/district_detail.asp?id=363557

ஶ்ரீரங்கம் பிரம்மரத பல்லக்கு முறை, தேவையற்ற வழக்குகள், அரசியல் கலப்பு, அதிகார துஷ்பிரயோகம் – முடிவு இந்து-விரோத வெளிப்பாடு (1)

ஜனவரி 11, 2015

ஶ்ரீரங்கம் பிரம்மரத பல்லக்கு முறை, தேவையற்ற வழக்குகள், அரசியல் கலப்பு, அதிகார துஷ்பிரயோகம்முடிவு இந்துவிரோத வெளிப்பாடு (1)

நாத்திகர்களின் பிழைப்பு

நாத்திகர்களின் பிழைப்பு

திக ஜன.1.2015ல் சம்பந்தமே இல்லாமல் பிரம்ம ரதம் விசயத்தில் மூக்கை நுழைத்தது:  10-01-2015 தேதியிட்ட விடுதலை நாளிதழின் படி வெளியாகிய செய்தி என்னைத் தூண்டியதால், விசயம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தேன். அது இவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தது,உயர்நீதி மன்ற தடையை மீறி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில்  பிரம்மரத முறையை கண்டித்து மறியலில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர் கைது செய்யப் பட்டனர், என்று திக விடுதலையில் செய்தி வெளியிட்டது. சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேதவி யாசகர், பராசுர பட்டர் ஆகியோரை கோவிலிலிருந்து அவர்களது வீடு வரை பல்லக்கில் சுமந்து செல்வதும், இதனை பிரம்ம ரதமரியாதை என்றும், நீண்டகாலமாக பார்ப்பனர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனை சீமான் தாங்கி (பிரம்ம ரதம்) என்று அழைக்கின்றனர்”. வீரமணிக்கு இதில் என்ன அக்கரை என்று படித்துப் பார்த்தேன்[1].

 

ஶ்ரீரங்க பல்லக்கு பிரச்சினை

ஶ்ரீரங்க பல்லக்கு பிரச்சினை

திராவிடர் கழகம் 2011ல் ஏதோ கண்டுபிடித்துவிட்டது போல கூட்டம் போட்டது: விடுதலை, “பிரம்ம ரதமுறையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சிறீரங்கம் 2011 ஆம் ஆண்டு மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்து உரையாற்றினார். மேலும் பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர், என்று விடுதலை கூறுகிறது. மேலும் தொட்ரரும் போது, “ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் வேதம் ஓதி விட்டு தனது சொந்த பல்லக்கில் வீடு வரையில் சென்று வந்தனர். அண்மைக் காலமாக இதனை அறநிலையத் துறை சார்பில் (கோவில் நிருவாகம்) பிரம்மரத மரியாதை வழங்கப்பட்டு வந்தது. இந்த மரியாதையை கொடுக்கக் கூடாது என்று பார்ப்பனர்களில் ஒரு பிரிவான வைணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மனிதனை மனிதன் (பார்ப்பனர்களை) சுமக்கும் அவலத்தை கண்டித்து கடந்த 2011 தி.மு.க. ஆட்சியில் அப்போதிருந்த கோவில் இணை ஆணையர் ஜெயராமன் இந்த முறைக்கு தடைவிதித்தார்”, என்று உண்மையினைத் திரித்துக் கூறியது.

 

திகவினரின் நுழைவு

திகவினரின் நுழைவு

ஆர். லக்ஷ்மி நரசிம்மன் 2006ல் தொடர்ந்த வழக்கு[2]: பிறகு தொடரும் போது, “இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரம்மரத முறைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும் பார்ப்பனர்கள் இதனை நடத்திவிட வேண்டுமென்று முயன்றனர். ஆனால் முடியவில்லை”, என்று உண்மையினை சிறிதே கூறியுள்ளது. அதாவது, வழக்குத் தொடுத்தது பார்ப்பனர்கள் தாம், ஆனால், அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர் என்பது பொய். ஆர். லக்ஷ்மி நரசிம்மன் [ Sri Vedavyasa R. Lakshmi Narasimha Bhattar (71) ] என்பவர், தனது குடும்பத்திற்கு நெடுங்காலமாக பிரம்மரதம் மரியாதைக் கொடுக்கப் பட்டு வந்துள்ளது, ஆனால், இப்பொழுது மூன்று குடும்பங்களுக்குத் தான் கொடுக்கப்பட்டு வருகிறது என்று 2009ல் வழக்கு தொடுத்தார். அவரது மனுவில், அறநிலையத்துறை இந்த பழக்கத்தில் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்[3]. இந்துக்கள் சிலர் இப்படி வழக்குத் தொடர்வது தான், விபரீதமாகி விடுகிறது, அதாவது, இது போன்ற இந்து-விரோதிகளுக்கு பிரச்சினையை பெரிதாக்க உதவுகிறது. மேலும், நாத்திக-திராவிட ஆட்சி நடந்து கொண்டிருப்பதாலும், கடந்த 60 ஆண்டு காலத்தில் அத்தகைய சிந்தனை கொண்டவர்கள் பல பதவிகளில் இருப்பதாலும், இந்துக்களுக்கு சாதகமாக எதுவும் இருக்காது என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது, இந்துமதத்திற்கே நல்லதல்ல.

2010 வழக்கு எண்கள், வாதி-பிரதிவாதிகள்

2010 வழக்கு எண்கள், வாதி-பிரதிவாதிகள்

2010ல் இந்து அறநிலையத் தலையீடு: அறநிலையத் துறை ஶ்ரீரங்கம் கொவில் டிரஸ்ட் நிர்வாகிகளை மிரட்டி, “பிரம்மரதம்” விழா நடத்த மாட்டோம் என்று தீர்மானத்தை செப்டம்பர்.27, 2010 அன்று நிறைவேற்ற வைத்தது. ஏனெனில், “கோவில் ஒழுகு” முதலியவற்றை அறிந்த, டிரஸ்ட் நிர்வாகிகள் அவ்வாறு தடுப்பார்களா என்று புரியவில்லை. அதேபோல தமிழ்நாடு கோவில் சங்கத்தினரும் அக்டோபர் 23, 2010 அன்று தீர்மானத்தை கொண்டுவந்தனர்[4]. இது திராவிடக் கட்சிகளின் தூண்டுதல் பேரில் என்று அவர்களே ஒப்புக் கொண்டதாக, “பெரியார் தத்துவ மையம்” விவரங்களை வெளியிட்டுள்ளன. இவற்றை வைத்துக் கொண்டு நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், தேவையில்லாமல் பி.யு.சி.எல், பெரியார் தத்துவ மையம் முதலியோர் தொடுத்த மனுக்களையும், இவ்வழக்கிற்கு சம்பந்தமில்லை என்று தள்ளுபடி செய்தது[5]. இருப்பினும் இப்பொழுது 2015ல் அரைகுறையாக செய்திகளை வெளியிட தயாராக உள்ளனர் என்றால், அத்திராவிட சித்தாந்திகளின் நேர்மையினைப் புரிந்து கொள்ளலாம்.

Times of India - Dennis selven

Times of India – Dennis selven

2012ல் ஒரு கிருத்துவ நாளிதழ் செய்தியாளர் தலையிட்டது[6]: ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கிருஷ்ணமாச்சாரி என்ற ஆராய்ச்சியாளர், பண்டிதர், ஶ்ரீரங்க சரித்திரம் பற்றி மூலநூல்கள், ஆவணங்கள் முதலியவற்றை ஆராய்ந்து பல நூல்களை வெளியிட்டுள்ளார். RTI மூலம் இந்து அறநிலைத்துறையின் அடாவடி வேலைகளையும் தட்டிக்கேட்டுள்ளார்[7]. இந்த அறநிலைய அதிகாரிகளில் பெரும்பாலோர் திராவிட ஆட்சிட்யாளர்களால் நியமிக்கப்படுவதாலும், அவர்களே நாத்திக எண்ணங்களைக் கொண்டுள்ளதாலும், அவர்களுக்கு கோவில் நிர்வாகம் பற்றி எந்த கவலையும் இல்லாதவர்களாக, ஆனால், கோவில் பணத்தை எப்படி செலவழிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். “டைம்ஸ் ஆப் இந்தியா”வைச் சேர்ந்த ஒரு கிருத்துவ நிருபர் – டென்னிஸ் செல்வன் [Dennis Selvan], கிருஷ்ணமாச்சாரி என்ற ஆராய்ச்சியாளர், பண்டிதரை அணுகி அவரது செயல்களைப் பாராட்டுவது போல பாராட்டி, சில விசயங்களைத் தெரிந்து கொண்டு, அறநிலைய அதிகாரியிடம் சென்று அவ்விசயங்களை கூறியுள்ளார்[8]. அதை வைத்துத் திரிர்த்து “டைம்ஸ் ஆப் இந்தியா”வில் செய்தியையும் வெளியிட்டார்[9]. இது குஜராத் விசயத்தில் “டெஹல்கா-என்டிவிவி” செய்திகளை வெலியிட்ட முறையில் உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

ஆத்திகம்-நாத்திகம்

ஆத்திகம்-நாத்திகம்

திமுக ஆட்சியும் (2010 வரை), அதிமுக ஆட்சியும் (2010லிருந்து): விடுதலை தொடர்கிறது[10], “ஜெயலலிதா முதல்வரான பிறகு மீண்டும் இந்த பிரம்மரத முறையை கொண்டு வரும் முயற்சியில் பார்ப்பனர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்போதைய அறநிலையத்துறை ஆணையர் தனபால் திருச்சிக்கு வருகை தந்த போது, பராசர சுந்தரரேசன் பட்டர், திரு வேங்கட பட்டர், பக்கிரி நாராயண பட்டர் ஆகியோர் ஆணையரை சந்தித்து பிரம்மரத முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 2013 ஜன. 2, 3 தேதிகளில் இந்த பிரம்ம ரதமுறை எப்படியாவது நடத்திவிட வேண்டுமென்று முடிவு செய்து 2012 டிச.14 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையை பார்ப்பனர்கள் அணுகினர். ஆனால் நீதி மன்றம் அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பியதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பான விசாரணை 2013 ஜனவரி 8 ஆம் தேதி ஒத்தி வைத்தது. அதனால் 2013 இல் பிரம்மரத முறையை நடத்த முடியாமல் போனது. ஆனாலும் பிரம்மரத முறையை எப்படியாவது நடத்திவிட வேண்டுமென்று அன்று முதல் பார்ப்பனர்கள் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்”. அதாவது, இங்கு ஜெயலலிதா-கருணாநிதி என்று வேறுபடுத்திக் காட்டி, பிராமணன்-சூத்திரன் என்று பிரச்சினையை எழுப்பப் பார்க்கிறது. “ஆரிய-திராவிட யுத்தம்” தொடர்கிறது என்று முன்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, ஒரு சிறு புத்தகத்தை “பெரியார் சுயமரியாதை கழகம்” வெளியிட்டது வேடிக்கையே!

© வேதபிரகாஷ்

11-01-2015

[1] http://www.viduthalai.in/e-paper.html

[2] Justice M. Jaichandren said that the High Court could not go into such disputes and it was for the petitioner, Sri Vedavyasa R. Lakshmi Narasimha Bhattar (71), to establish his right — to be carried in the palanquin — before the Tiruchi District Munsif Court which was seized of a civil suit pending since 2006.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/high-court-dismisses-brahmaratham-case/article903185.ece

[3] He went on to state: “The officer cannot prevent anybody from carrying the palanquin out of their own volition. If he does so, he is not only interfering with the customary practice that is being followed for more than 1,000 years but he is interfering with the basic human rights of a citizen who on his own volition does some religious act upon a faith that he has.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/madras-high-court-reserves-judgement-on-brahmaratham/article895384.ece

[4] He pointed out that the Board of Trustees of the Temple had passed a resolution on September 27 to give up the practice of ‘Brahmaratham.’ Tamil Nadu Association of Temple Employees also had passed a resolution on October 23 stating that they would not carry anyone in a palanquin inside the temple premises. “The said resolutions have not been challenged till date… In such circumstances, this Court is of the considered view that the petitioner has not shown sufficient cause or reason to grant the reliefs as prayed for in the present writ petition,” Mr. Justice Jeyachandran observed.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/high-court-dismisses-brahmaratham-case/article903185.ece

[5] He also dismissed three intervening applications filed by the Centre for Protection of Civil Liberties, Human Rights Protection Centre and Periyar Thathuva Maiyam against the petitioner’s plea. The judge said that permitting them to intervene would “unnecessarily enlarge” the ambit of the case.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/high-court-dismisses-brahmaratham-case/article903185.ece

[6] http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2178

[7] http://www.srivaishnavasri.com/2011/01/23/atrocities-committed-by-pseudo-h-r-and-c-e-in-tamilnadu/

[8] http://timesofindia.indiatimes.com/city/chennai/Uproar-after-temple-ritual-is-stopped/articleshow/11482750.cms

[9] Dennis Selvan, Uproar after temple ritual is stopped, TNN | Jan 14, 2012, 05.51AM IST

[10] http://www.viduthalai.in/e-paper/94271.html