ஶ்ரீரங்கம் பிரம்மரத பல்லக்கு முறை, தேவையற்ற வழக்குகள், அரசியல் கலப்பு, அதிகார துஷ்பிரயோகம் – முடிவு இந்து-விரோத வெளிப்பாடு (2)

ஶ்ரீரங்கம் பிரம்மரத பல்லக்கு முறை, தேவையற்ற வழக்குகள், அரசியல் கலப்பு, அதிகார துஷ்பிரயோகம்முடிவு இந்துவிரோத வெளிப்பாடு (2)

 

2010 ஶ்ரீரங்கம் பிரம்மரத பிரச்சினை

2010 ஶ்ரீரங்கம் பிரம்மரத பிரச்சினை

திக பிராமணன்சூத்திரன் என்று பிரச்சினையை எழுப்பப் பார்க்கிறது: விடுதலை தொடர்கிறது, “இந்நிலையில் தி-.மு.க ஆட்சியில் கருணாநிதி, பிராமண துவேஷம் செய்துவிட்டார். அம்மா ஆட்சியிலாவது அந்த துவேஷத்தை போக்கி இந்த பிரம்மரத முறையை நடத்திவிட வேண்டும் என ஆலோசனை கூட்டம் நடத்தப் பட்டு தற்போது சொர்க்க வாசல் திறப்புக்கு பின்னர், பிரம்மரதமுறை நடத்திட தீவிர முயற்சியில் பர்ப்பனர்கள் ஈடுபட்டு வருகின் றனர். பார்ப்பனர்கள் செல்லும் பல்லக்கை தூக்க சீமான் தாங்கி என்று அழைக்கப்படும் அரையர்கள் மறுப்பு தெரிவித்து வருவதால், வெளியிலிருந்து பல்லக்கை தூக்கும் நபர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் பேரம் பேசி ஆள்களை ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்”, என்று பொய்மைகளைக் கலந்து அள்ளி வீசியிருக்கிறது[1]. “இந்நிலையில் தி-.மு.க ஆட்சியில் கருணாநிதி, பிராமண துவேஷம் செய்துவிட்டார். அம்மா ஆட்சியிலாவது அந்த துவேஷத்தை போக்கி இந்த பிரம்மரத முறையை நடத்திவிட வேண்டும்” என்று அந்த சதியை வெளிப்படுத்திக் கொண்டது. “உள்ளா சூத்திர ஆட்சியைக் காப்போம்” என்று சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியது எத்தனை பார்ப்பனர்களுக்கு நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை.

srirangam-என்னா லுக்கு - வினவு படம்

srirangam-என்னா லுக்கு – வினவு படம்

பார்ப்பன விவகாரங்களில் இந்துவிரோதிகளின் தலையீடு ஏன்?: விடுதலையில், “சிறீரங்கத்தில் பல்வேறு இந்து மதவெறி அமைப்புகளின் துணையோடுவரும் சனிக்கிழமை (ஜன. 10 ஆம் தேதி) பிரம்மரத முறையை நடத்திட பார்ப்பனர்கள் திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் பிரம்ம ரத முறையை தடுத்து நிறுத்தக் கோரி மாநகர காவல் ஆணை யரிடம் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தை, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற தடையை மீறி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஏற்கெனவே திட்டமிட்டப்படி பிரம்மரத முறையை இன்று (ஜன.10) நடத்திட ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதையறிந்த திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் மக.இக உள்ளிட்ட கட்சியினர் சிறீரங்கத்தில் திரண்டனர். இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்”, என்று கூறியுள்ளது[2]. அதாவது, திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் மக.இக உள்ளிட்ட கட்சியினருக்கு இவ்விசயத்தில் என்ன கவலை என்று தெரியவில்லை. இதேபோல, கிருத்துவ-முஸ்லிம் விழாக்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று, இதே மாதிரி இவர்கள் கலாட்டா செய்வார்கள என்று தெரியவில்லை. இங்கும் “செக்யூலரிஸ நாத்திகம்” மற்றும் “இந்து-விரோதம்” முதலியவைத்தான் வெளிப்படுகின்றன.

 

srirangam-பக்தர் நடந்தார் - வினவு படம்

srirangam-பக்தர் நடந்தார் – வினவு படம்

தேவையில்லாது மறியல் செய்த இந்துவிரோத கும்பல்கள் கைது (2015): விடுதலை, “மதியம் 12.30 மணியளவில் ரங்கநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அரை யான் குடும்பம், பட்டர் அய்யர், வேதவியாசகர், பராசுர பட்டர் ஆகியோர்  பிரம்மரத முறையை ஏற்றுக் கொண்டு  பல்லக்கில் செல்ல தயாராக இருந்தனர். அப்போது கோவில் வெளியே திராவிடர் கழகத்தினர் மாவட்ட தலைவர் மு.சேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  இதனால் பார்ப்பனர்கள் பிரம்ம ரதத்தில்  செல்லாமல் அந்த வகையார்கள் கோவிலின் உள்ளே இருந்து கொண்டனர். இதனால் சிறீரங் கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது”, என்று சொல்வதில் வியப்புதான் மேலிடுகிறது. தினமணியில் உள்ளது[3], “பிரம்ம ரத மரியாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த சுமார் 57 பேர் தெற்கு சித்திரை வீதியில் கூடியிருந்தனர். அவர்கள் பிரம்ம ரத மரியாதையை தடுத்து நிறுத்துமாறு முழக்கமிட்டனர். போலீஸார் அவர்கள் அனைவரையும் கைது செய்து, திருவானைக்கா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பிரம்ம ரத மரியாதை ஊர்வலத்தில் வெளி ஆட்கள் யாரும் நுழைந்து விடாதபடி காவல் துறை துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்”. விழாக்கூட்டத்தில் இப்படி கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற சதிதிட்டத்துடன் செயல்பட்டால், போலீஸார் கைது தான் செய்வார்கள். முன்பு, கருவறையில் நுழைவோம் என்று கலாட்டா செய்தபோது, பக்தர்களே, நன்றாக உதைத்து அனுப்பியது அவர்களுக்கு நினைவில் இருக்கலாம். ஆக, அத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்றுதால், போலீஸார் இவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

srirangam-பல்லக்கு ரத்து - பக்தர் நடந்தார் - வினவு படம்.

srirangam-பல்லக்கு ரத்து – பக்தர் நடந்தார் – வினவு படம்.

ஸ்ரீரங்கம் கோயிலில் பிரம்ம ரத ஊர்வலம் நடத்த எதிர்ப்பு[4]: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரம்ம ரத நிகழச்சி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று மணப்பாறையில் தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலர் கோவை ராமகிருஷ்ணன் அறிவித்தார். வரும் 10,11 ஆகிய தேதிகளில் பிரம்ம ரத ஊர்வலம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரம்ம ரத ஊர்வலம் நடத்துவது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்தார்[5] என்று தினகரனில் செய்தி வந்தது. ஆனால், இக்கூட்டமும் நேற்று (10-01-2015) அன்று அங்கு வந்ததா என்ரு தெரியவில்லை. முந்தைய “வினவின்” விமர்சனம்[6] படிக்க நேர்ந்தது, அதில், “பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது. இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் ‘பாதந்தாங்கிகள்’ (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். “கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு” என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார். இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்”, என்றுள்ளதைப் படித்தபோது, இக்கூட்டங்களின் வக்கிரப்புத்தி வெளிப்பட்டது. எப்படியாவது பிரச்சினையை கிளப்ப வேண்டும், கலாட்டா செய்ய வேண்டும் என்று தயாராக இருக்கும் போக்கு வெளிப்பட்டது.

srirangam-போலீஸ் காவல் - வினவு படம்.

srirangam-போலீஸ் காவல் – வினவு படம்.

2010ல் இந்துக்கள் சமரசமாகப் பிரச்சினையை முடித்து வைத்தனர்: நீதிமன்றத்தில் நரசிம்ம பட்டரின் வழக்கு நிலுவை மற்றும் திராவிட கூட்டத்தினரின் எதிர்ப்பு என்றுள்ள அந்நிலையில், 2010 செப்., 27ம் தேதி நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், “பிரம்ம ரத மரியாதையை ரத்து செய்ய வேண்டும்’ என்று தீர்மானிக்கப்பட்டது. அப்போது, ஒரு தரப்பினர் இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது[7].ஆதாவது, ஒற்றுமையாக இருந்த அறங்காவலர் குழுமத்தில் பிரிவை ஏற்படுத்தியது அரசின் தந்திரமே என்று அறிந்து கொள்ளலாம். அத்தீர்மானத்தால், பல்லக்கு மரியாதை கிடையாது என்று அறநிலையத் துறை அதிகாரி அறிவித்தார். ஆனால், பாரமரியமுறைப்படி, கைசிக புராணம் வாசித்த பட்டர், நடந்தே வீட்டுக்குச் சென்று இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஸ்ரீரங்கத்தில், பிரம்ம ரத பல்லக்கு மரியாதை வழங்கப்படாத கைசிக புராணம் வாசித்த பட்டர், நடந்தே சென்று, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்[8] என்று தினமலர் செய்தி வெளியிட்டது. இதனை “வினவு” என்ற இணைத்தளத்தில் உள்ளவற்றுடன் ஒப்பிட்டுப் படிப்பது மற்ற விசயங்களை வெளிப்படுத்துகிறது.

© வேதபிரகாஷ்

11-01-2015

[1] http://www.viduthalai.in/e-paper/94271.html

[2] விடுதலை, 10-01-2015, இணைதள பதிப்பு.

[3] http://www.dinamani.com/edition_trichy/trichy/2015/01/11/4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/article2614476.ece

[4] தினகரன், ஸ்ரீரங்கம் கோயிலில் பிரம்ம ரத ஊர்வலம் நடத்த எதிர்ப்பு, பதிவு செய்த நேரம்: 2015-01-08 13:02:13

[5] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=126362

[6] http://www.vinavu.com/2010/11/20/srirangam-pallaku-battar/

[7] தினமலர், ஸ்ரீரங்கத்தில் “பிரம்ம ரத மரியாதை’ விவகாரம் : நடந்தே சென்று கைசிக புராணம் வாசித்த பட்டர், திருச்சி பதிப்பு, பதிவு செய்த் நாள்: டிசம்பர்.7, 2011, 23.55.

[8] http://dhinamalar.info/district_detail.asp?id=363557

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “ஶ்ரீரங்கம் பிரம்மரத பல்லக்கு முறை, தேவையற்ற வழக்குகள், அரசியல் கலப்பு, அதிகார துஷ்பிரயோகம் – முடிவு இந்து-விரோத வெளிப்பாடு (2)”

  1. S. P. Shanmuganathan Says:

    The temple, temple rituals and other routines have been unnecessarily caught with the red-tapism type interference, that too, that of atheists and anti-Hindus and therefore, it is right time that the temple authorities should legally fight to send the HR&CE out!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: