பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (2)

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (2)

நாடார்கள் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார்களா அல்லது அரசியல் லாபத்திற்காக பேசுகிறார்களா?; தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது[1]: “நேற்று மாலை 7மணி அளவில் மயிலாப்பூர் கோவிலில் பிரார்த்தனை முடித்துக் கொண்டு மாதவப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 80 வயது நிரம்பிய பெரியவரான விஸ்வநாத குருக்களைத் தாக்கி துன்புறுத்தி அவரது பூணூலையும் அறுத்தெறிந்து பெரியார் வாழ்க என்று கோஷமிட்டவாறே அராஜகம் செய்துள்ளனர். கொளத்தூர் மணியை தலைவராக கொண்டுள்ள திராவிட விடுதலை கழகத்தினர் இச்செயல் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் யாருக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்கவியலாது. தமிழக பாரதிய ஜனதா கட்சி இதை மிக வன்மையாக கண்டிக்கிறது. அவரவர் கொள்கைகளை ஓங்கிப்பிடித்து கருத்துக்களை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்காக ஏதுமறியாத அப்பாவி பெரியவரை அவரது வீட்டிற்கு அருகிலேயே, நடுத்தெருவில் தாக்கியது மிகக் கொடூரமான செயல் என்பதோடு, அனைத்து தரப்பினராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். விஸ்வநாத குருக்கள், பாரதிய ஜனதா கட்சியின் தென்சென்னை கலை மற்றும் கலாச்சாரப்பிரிவில் பொறுப்பாளராக இருக்கும் மங்கலநாதனின் தகப்பனார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்திற்குப் பிறகு, அப்பெரியவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.

 

தாலி அறுப்பு, இணைதள யுத்தங்கள், நாத்திகம்

தாலி அறுப்பு, இணைதள யுத்தங்கள், நாத்திகம்

பிரதான கட்சிகள் அமைகாக்கும் போதது, உள்ளூர் பிஜேபி மட்டும் கண்டிக்கிறது: கருத்துச் சுதந்திரமும், கொள்கைப்பிடிப்பும் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளும் அவரவரின் விருப்பு, வெறுப்புக்களைப் பொறுத்தது. இதில் மற்றவர் தலையீடு என்பது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பாகும். திராவிடக் கழகத்தினர் இம்மாதிரியான கோழைத்தனமான செயல்களை அரங்கேற்றுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளுடனும் உரிமைகளுடனும், விளையாடுவதை இனியும் தொடரக்கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் இதே மாதிரியான பிறிதொரு நிகழ்வு, நேற்று, மேற்கு மாம்பலம் சத்திய நாராயணா கோவில் அருகிலும் நடந்தேறியுள்ளது என்பதை நோக்குகையில், திராவிடக் கழகத்தினர் திட்டமிட்ட முறையில் இம்மாதிரியான நாகரீகமற்ற செயல்களை நடத்தியுள்ளனர் என்பது தெரியவருகிறது. திராவிட விடுதலைக் கழகத்தினர் தமது கருத்துக்களை மற்றவர்கள் மீது நேரடியாகத் திணிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்து குழப்பத்தையும், வேறுபாடுகளையும் தோற்றுவிக்கும் இம்மாதிரியான அராஜக செயல்களை இனியும் அவர்கள் தொடராத வண்ணம் இந்நிகழ்வினை அனைத்துக் கட்சியினரும் வன்மையாகக் கண்டிக்க முன் வர வேண்டும். வன்முறையில் ஈடுபட்டுள்ள திராவிட விடுதலைக் கழகத்தின் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருப்பினும் தமிழக அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்து இம்மாதிரியான அராஜகங்கள் தமிழ்நாட்டில் தொடராத வண்ணம் சட்டம் ஒழுங்கினைப் பேண வேண்டும். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். வன்முறைச் செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்[2]. இருப்பினும் மற்ற பிரதான அரசியல் கட்சிகள் மௌனமாக இருக்கின்றன[3].

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

தாக்கப்பட்டது எத்தனை பிராமணர், அறுக்கப்பட்டது எத்தனை பூணூல்: பூணூல் என்பது பிராமணர்களுக்கு மட்டுமல்ல, மற்ற சமூகத்தினருக்கும் புனிதமாக உள்ளது, எனவே, அதனை அவமதித்தல், அவற்றை அணிந்தவர்களைத் தாக்குதல் முதலியன குற்றம் ஆகும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது[4]. இருப்பினும் பிராமணர்களிடையே இது ஒரு பீதியினையும், பயத்தையும் கிளப்பிவிட்டுள்ளது என்றும் அறியப்படுகிறது[5]. 80லிருந்து 12 வயதுள்ள நான்கு பிராமணர்கள் தாக்கப்பட்டனர் என்று “தி டெலிகிராப்” தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. மேலே குறிப்பிட்ட இருவரைத் தவிர, திருவல்லிக்கேணியில் ஒரு வயதானவர் மற்றும் 12 வயது பையன் கோவிலுக்குச் சென்று வரும்போது தாக்கப்பட்டு, பூணூல் அறுக்கப்பட்டுள்ளது[7]. அப்படியென்றால், இவர்கள் இருவரும் பயந்துகொண்டு புகார் கொடுக்கவில்லை என்றாகிறது. இத்தகைய நிகழ்சிகள் 1960களிலிருந்தே நடந்து வருகின்றன. பூணூல் அறுப்புகளில் பலியான பிராமணர்கள் நிறைய பேர்கள் உள்ளனர். பொதுவாக பிராமணர்களை பயமுறுத்த அவர்களை “ஏய் பாப்பான்” என்று விளித்து ஏளனம் செய்வது, “என்ன ஐயரே?” என்று அடையாளங்காட்டி பேசுவது, “ஏ குடுமி, பார்த்து போ”, “ஐயரே வீட்ல அம்மா சௌக்கியமா?” என்ற பல தொணியில் கத்திப் பேசி அவர்களை கிண்டல் செய்வது என்பதைவிட, தாக்குதலில் ஈடுபடுவர். ஆனால், 90% பேர் அவற்றை வெளியில் சொல்வதில்லை. செய்திகள் வழியாகத்தான் இப்பொழுது விசயங்களை அறிய வேண்டிய நிலயுள்ளது. ஆனால், சாதாரண மக்கள் இருக்கும் செய்திகளைத் தேடி பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள். அந்நிலையில் செய்திகளை காலந்தாழ்த்தி வெளியிடுவது, முன்னும்-பின்னுமாக வெளியிடுவது, நடந்த கண்டனத்திற்குரிய குற்றத்தை முதலில் வெளியிடாமல், அதனை கண்டித்த செய்தியை முதலில் போடுவது போன்ற யுக்திகளை சித்தாந்த, பாரபட்ச மற்றும் வியாபார பலன்களை எதிர்பார்க்கும் ஊடகங்கள் கையாளுகின்றன.

பொன்.ராதா, விடுதலை, சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்சாரியார்

பொன்.ராதா, விடுதலை, சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்சாரியார்

பொன்.ராதாகிருஷ்ணன், சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்ச்சாரி படம் போட்டு விடுதலை திரிபுவாதம்: முன்பு பேஸ்புக்கில், ஒரு படத்தில் சங்கராச்சாரிரியார் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும், அவருக்கெதிரே, கீழே பொன்.ராதாகிருஷ்ணன், உட்கார்ந்திருப்பது போலவும், இன்னொரு படத்தில் சுப்ரமணியன் சுவாமி அவருக்கிணையாக நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும் காட்டி, இப்படித்தான் நாடார்கள் நடத்தப்படுகிறார்கள் என்பது போல விவாதித்திருந்தார்கள். இப்பொழுது, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் பூணூல்-அறுப்பு விசயத்தில் கண்டித்து பேசியிருந்ததால், வீரமணி உடனே அப்படத்தைப் போட்டு, திரிபுவாதம் செய்திருக்கிறார்[8].  “கருங்சட்டை” என்ற பெயரில் பேஸ்புக்கில், சில இந்துக்கள் ஜாதி ரீதியில் விவாதித்தை இங்கு உபயோகப்படுத்தி விமர்சிக்கப்பட்டுள்ளது[9]. இந்துக்கள் தாங்களே பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். ஏனெனில், அது எதிரிகளுக்கு உபயோகமாகி விடும்.

Attack on temples racial in US and Tamilnadu also

Attack on temples racial in US and Tamilnadu also

இனவெறி குற்றங்கள் இந்தியாவில் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை?: சமீபத்தில், வெளியில் நடந்த ஒரு நிகழ்சியில், மத்திய அமைச்சர் கிரிராஜ் கிஷோர் என்பவர், “ராஜிவ் காந்தி ஒரு நைஜீரிய நாட்டுப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால், காங்கிரஸ் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா?”, என்று பேசினார். அதனை, காங்கிரஸ் ஊடகங்களின் உதவியோடு, ஊதி பெரிதாக்கி, அமைச்சர் உடல்-நிறம் பற்றி பேசி, இனரீதியில், பாரபட்சமாக தாக்கியுள்ளார், அதனால், பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். அவரும் அவ்வாறே, வெளியே-உள்ளே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதேபோல, தமிழகத்திலும், திராவிடக்கழகம் மற்றும் கருப்புப் பரிவார் கூட்டங்கள், மேலே எடுத்துக் காட்டியபடி, பலவிதங்களில் பிராமணர்களைத் தாக்கி வருகிறார்கள். அது இனரீதியில், இனவெறி மனப்பாங்கில் தான் உள்ளது. அத்தகைய இனவெறி மனப்பாங்கை, வார்த்தை தீவிரவாதம் முறையில் பேசி-எழுதுவதை விட, இவ்வாறான “கொலைவெறி” தாக்கிதல்களிலும் வெளிப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இப்பொழுது இந்து கோவில்கள் தாக்கப்பட்டு வருவதை, “இனவெறி தாக்குதல்” என்றே அடையாளம் கண்டுள்ளனர். அதேபோல, நாத்திகத்தால் இந்து மதத்தை மட்டும் தாக்கி, பிராமணர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப் பட்டுவருவதால், இவர்கள் அத்தகய குற்றங்களை செய்து வருவது கவனிக்கத்தக்கது. நாகரிகத்தில் சிறந்த, வளர்ச்சியில் உயர்ந்த, அதிக முன்னேற்றம் கண்ட ‪அமெரிக்கர் ‪ இனவெறி ரீதியில் இந்து கோவில்களைத் தாக்கி வருகின்றனர்! இங்கு ‪திகவினரும், கடந்த 60 ஆண்டுகளாக அதே குற்றங்களை செய்து வருகின்றனர்! பிறகு எப்படி இவ்விரு கூட்டத்தினரும் ஒரே குற்றங்களை செய்து வருகின்றனர்?

© வேதபிரகாஷ்

23-04-2015.

[1] http://www.maalaimalar.com/2015/04/21133515/Thamizhisai-condemns-Traditiou.html

[2] மாலைமலர், பூசாரிகள் பூணூல் அறுப்பு: தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் , பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 1:35 PM IST

[3] The Bharatiya Janata Party’s Tamil Nadu unit president Tamizhisai Soundararajan said she was shocked and condemned the attacks. However, major political parties in the state were silent on the issue.

http://www.business-standard.com/article/news-ians/six-held-for-attacks-on-brahmins-in-chennai-115042101166_1.html

[4] http://newstodaynet.com/chennai/brahmins-attacked-poonool-cut-city

[5] G. C. Sekhar, Attacks fuel Brahmin fears, The Telegraph, Wednesday, April.22, 2015. http://www.telegraphindia.com/1150422/jsp/nation/story_15964.jsp#.VTboMdKqqko

[6]  Four Brahmins, including an 80-year-old and a 12-year-old, were attacked here by suspected activists of a fringe group who snapped their holy threads, the first such assaults in over two decades.

http://www.telegraphindia.com/1150422/jsp/nation/story_15964.jsp#.VTboMdKqqko

[7] A third elderly man and a 12-year old boy were attacked at Triplicane today while on way to a temple. G. C. Sekhar, Attacks fuel Brahmin fears, The Telegraph, Wednesday, April.22, 2015.

[8] http://www.viduthalai.in/page-8/100141.html

[9] கருங்சட்டை, வன்முறையைத் தூண்டுகிறார் மத்திய அமைச்சர்?, http://www.viduthalai.in/page-8/100141.html

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: