பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (1)

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (1)

Viswanatha sastri and 5 arrested youth of DK

Viswanatha sastri and 5 arrested youth of DK

பூணூல் அறுப்பு பற்றி தமிழ் ஊடகங்களின் செய்தி வெளியீடுகள்: சென்னையில் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில், இரண்டு இடங்களில் கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு, தாக்கப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னை மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் 4வது தெரு  மாதவப் பெருமாள் அக்ரகாரத்தில் வசிக்கும் விஸ்வநாத குருக்கள் என்பவர் 19-04-2015 அன்று இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, கருப்பு சட்டை அணிந்து  3 பைக்குகளில் வந்த “6 பேர்” என்று தினகரனும், மோட்டர் சைக்கிள்களில் வந்த “சிலர்” என்று பிபிசியும் குறிப்பிட்டு, திடீரென அவரைத் தாக்கி, அவரது பூணூலை அறுத்ததாகக் கூறப்படுகிறது[1] என்கிறது தமிழ்.பிபிசி. விஸ்வநாத குருக்களை வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தி பூணூலை அறுத்தெறிந்தது. அவர் விழுந்து மயங்கினார் என்றும் தினகரன் கூறுகிறது.  76 வயதாகும் விஸ்வநாதன்[2] காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்துவருகிறார், என்கிறது பிபிசி. ஆனால், தினகரன், சிவ விஸ்வநாத குருக்கள் (78) திண்டிவனம் அருகே உள்ள கோயில் ஒன்றின் பூசாரி. இவரது மகனும் பூசாரி.  மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.  துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் ஷியாம் வின்சென்ட் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அதற்குள் கும்பல் பைக்கில் தப்பியது.  விஸ்வநாத குருக்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலிசிடம் புகார் - seythikal.com photo

போலிசிடம் புகார் – seythikal.com photo

பார்ப்பன ஆட்சியில் சூத்திரர்களின் தாக்குதலா அல்லது திராவிடர் கலகமா?: “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்” என்று கடந்த மாநில தேர்தலுக்கு முன்னர் போஸ்டர்கள் ஒட்டினார்கள், “ஆரிய அம்மையார் ஆட்சிக்கு வந்து விடுவார்”, என்று கருணாநிதியே வெளிப்படையாக பேசினார். அதாவது திராவிடம் பேசி, திராவிடக் கட்சிகளை வைத்துக் கொண்டு, ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், ஜெயலலிதா ஆண்டால் “பிரமாண ஆட்சி”, கருணாநிதி ஆண்டால் “சூத்திர ஆட்சி” என்றுதான் விளக்கம் கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் வெளிப்ப்டையாக, “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்”, “ஆரிய அம்மையாரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம்”, என்றுதான் சுவரொட்டிகள் ஒட்டினார்கள், பேசி வருகிறார்கள். திராவிடத்துனுள் இப்படி நடந்து வரும் ஆரிய-திராவிடம் தமிழ்-மலையாள[3], பார்ப்பன-சுத்திரப் போராட்டங்கள் அலாதியானவை தாம்! குற்றம் புரிய தூண்டும் நோக்கம்-மூலம் (mens rea) எங்கிருந்து வந்துள்ளது, பாதுக்காக்கப்படுகிறது என்பதனை, “இந்துக்கள்” கண்டு கொள்ள வேண்டும்[4]. வீரமணி, ஜெயலலிதா முதலில் ஆட்சிக்கு வந்தபோது, “ஆரிய-திராவிட யுத்தம் தொடர்கிறது” என்ற சிறுபுத்தகத்தை வெளியிட்டார், பிறகு மறைத்துவிட்டார். இப்பொழுது, இத்தாக்குதல் கடந்த ஆண்டுகளில் பிரமண துவேசத்தில், அவர்கள் இலக்கானது நினைவுகூற வைக்கிறது[5] என்று “பிசினஸ் ஸ்டான்டெர்ட்” என்ற ஆங்கில நாளேடு குறிப்பிடுகிறாது. இதை எழுதி முடிக்கும் வேளையில், “தி இந்து”வின் செய்தி ஏனோதானோ என்ற விதத்தில் “BJP condemns attack” வந்துள்ளது[6].  அதாவது இச்செய்தி, செய்தி இல்லையா அல்லது அறிவிக்கப்பட வேண்டிய அவசியல் இல்லையா அல்லது மறைக்கப்பட வேண்டிய தேவையா?

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கைது: இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து, இரவு 8.30 மணியளவில் மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சந்தான கோபாலன் என்ற 69 வயது முதியவர் ஒருவரும் தாக்கப்பட்டார்.  அவர் அணிந்திருந்த பூணூலை பைக்கில் வந்த கும்பல் அறுத்து வீசியது. அங்குள்ள சத்திய பெருமாள் கோயிலில் பஜனை பாடும் சந்தான கோபால் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இன்னொரு நாளேடு குறிப்பிடுகிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் [ Dravidar Viduthalai Kazhagam (DVK)] முதலில் கைது செய்யப்பட்டனர். பிறகு இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாக பேசித் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7] என்று பிபிசி கூறுகிறது. போலீசார் இரவோடு இரவாக விசாரணை நடத்தி, திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ராயப்பேட்டை நந்தகுமார், பிரபாகரன், திவாகர், பிரதீப்,  ராவணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் திருவல்லிக்கேணியை சேர்ந்த அருண் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர் என்று தினகரன் கூறுகிறது[8].

2006ல் தாக்குதல் - அயோத்தியா மண்டபம்- விழுப்புரம் கோவில்

2006ல் தாக்குதல் – அயோத்தியா மண்டபம்- விழுப்புரம் கோவில்

குற்றங்களில் ஈடுபட்டவரை, மறுபடிமறுபடி குற்றங்களில் ஈடுபடுத்தும் போக்கு: கைது செய்யப்பட்டவர்களுள் இருவர் ஏற்கெனவே 2013ல் பெட்ரோல் குண்டு எறிந்த வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது[9] என்று “பிசினஸ் ஸ்டான்டெர்ட்” எடுத்துக் காட்டிட்டியுள்ளது. இவ்வாறு, குற்றங்களில் ஈடுபட்டவரை, மறுபடி-மறுபடி குற்றங்களில் ஈடுபடுத்தும் போக்கு (habitual offenders), ஜிஹாதிகள், அல்-உம்மா-சிமி கோஷ்டிகளின் போக்கைக் காட்டுகிறது.  குற்றங்களை கூட்டி-ஒன்றக்கும் (Compunding of offences) முறையில் தண்டனை கொடுப்பதால், அதே குற்றத்தை மறுபடி-மறுபடி செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு கொலை செய்தாலும் கொலை, ஒன்றிற்கு மேற்பட்ட கொலைகள் செய்தாலும் கொலை தான் என்று கொலைக்குற்றத்திற்கு தண்டனைக் கொடுக்கப்படுகிறது. இதே நிலை தான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு, நூற்றூக்கணக்கான அப்பாவி மக்களைக் கொள்ளும் கிராதகர்களுக்கும் இருக்கிறது! “காலையில் கைது, மாலையில் விடுதலை” என்ற பாரம்பரியமும் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், இவர்களும் தொடர்ந்து, அதே குற்றங்களை செய்து வருகின்றனர்.

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

பிராமணர்களின் எதிர்ப்பும், உள்ளூர் பிஜேபி ஆதரவும்: இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மைலாப்பூரில் பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்[10]. இதுதொடர்பாக, தேசிய அகில பாரத பிராமணர் சங்க கொள்கை பரப்பு செயலாளர் ராமசுப்பிரமணியன் கூறும்போது, ‘விசுவநாத குருக்களை தாக்கி பூணூலை அறுத்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், பெரியார் கொள்கைகளை பின்பற்றும் அமைப்பை தடை செய்ய வேண்டும். நாங்கள் ஒன்று சேருவோம். பொங்கி எழுவோம்’ என்றார்[11]. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகளைத் தடைசெய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரினர். ஆனால், இவர்கள் எல்லோருமே, மற்ற நேரங்களில் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். திராவிட சித்தாந்திகளின் தொந்தரவுகள், தாக்குதல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்ந்து இருப்பதை கண்டும் காணாமல் இருக்குக் போது, குற்றங்கள் பெருங்குற்றங்கள் ஆகும் மற்றும் திட்டமிட்ட குற்றங்களாகவும் (organized crimes) வெளிப்பட்டு பாதிக்கும்.

thamizh mithran photo- thread cut

thamizh mithran photo- thread cut

தாலி அறுப்பு, பூணூல் அறுப்பாக மாறியுள்ளது: சில நாட்களுக்கு முன்பு வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் போராட்டம் நடந்தது. அப்போது திராவிடர் கழகத்தினருக்கும் சிவசேனா தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களின் தாலியை அகற்றிய திராவிடர் கழகத்தினரின் கறுப்பு சட்டையை அகற்றுவோம் என்று பாஜக எச்சரிக்கை விடுத்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது, “கருப்பு சட்டை அணிவது அவர்கள் உரிமை என்றால் தாலி அணிவது இவர்கள் உரிமை”, என்று பேசினார். இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் “திராவிடர் கழகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேட்டி அளித்தார்”, என்கிறது இன்னொரு நாளேடு! “கருப்பு துணி என்பது துக்க நிகழ்ச்சிக்கு அடையாளமாக அணிவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்க கூடாது என்று பெண்கள் வெகுண்டெழுந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? நம்பிக்கை சார்ந்த விசயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும்”, என்று எச்சரிக்கை விடுத்தார்[12]. எச். ராஜா கூறுகையில், ‘‘இந்துக்களின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் திராவிடர் கழகத்தினரின் வாசகங்களை அழிப்போம்’’, என்றார். இதற்கு பழிவாங்கும் செயலாக பூணூல் அறுப்பு செயல் நடந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்[13]. இதற்கிடையே பாஜவின் கலை கலாசார அணி சார்பில் லஸ் கார்னரில் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது[14]. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், ஊடகங்களிடம் பேசிய போது, பாஜகவின் எச். ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இது போன்ற சம்பவங்களைத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டார்[15]. ஆனால், இந்த மெத்தப் படித்த வழக்கறிஞர், பெரியார் இந்துக்களைப் பற்றியும், இந்து மதம், மத-கடவுளர்கள் பற்றியும் அவதூறாக, ஆபாசமாக தூஷித்து பேசி-எழுதியதை சிறு-குறும்புத்தகங்களாக வெளியிட்டதை, வெளியிட்டு வருவதை கண்டுகொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

22-04-2015.

[1] பிபிசி.தமிழ், கோவில் அர்ச்சர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது, 21-04-2015

[2] இவரது வயதும் 76, 78, 80 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 80 என்று குறிப்பிட்டால், இரக்கம் அதிகமாகும் என்று 70களிலேயே போட விரும்புகிறார்கள் போலும்!

[3] எம்ஜியார் ஆட்சியின் போது, அவரை “மலையாளத்தான்”, “தமிழன்” அல்ல, அதனால், “தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்”, என்ற கோஷத்தை வைத்தார்கள்.

[4] https://dravidianatheism.wordpress.com/2010/10/23/jayalalitas-arayan-rule/

[5] The attacks were reminiscent of the hatred towards Brahmins in Tamil Nadu that prevailed many decades ago.

http://www.business-standard.com/article/news-ians/six-held-for-attacks-on-brahmins-in-chennai-115042101166_1.html

[6] The BJP on Tuesday strongly condemned the attack on priests carried out by workers of the Dravidar Viduthalai Kazhagam (DVK) and urged the State government to take stern action to put an end to such incidents. In a statement, BJP leader, Subramanian Swamy, said there were reports that miscreants entered houses of several Brahmin priests and attacked them violently. Their sacred threads were also cut. “These wanton attacks are because of the incompetent administration in Tami Nadu, which is today unable to maintain law and order or act in any way which is required of them under the Constitution,” he alleged. Reacting to the development, BJP Tamil Nadu president, Tamilisai Soundararajan, said the attacks were cowardly. One of the victims, Vishwanatha Gurukkal of Mylapore, was the father of a BJP functionary. “No one can accept the DVK imposing its views on others. In order to ensure they do not continue such divisive activities, all political parties should condemn these attacks,” she said. The State should ensure protection for the people against such attacks and stern punishment should be awarded to the perpetrators of such violence, she said.

http://www.thehindu.com/news/cities/chennai/bjp-condemns-attack/article7127944.ece

இதற்கான பதிலை ஏற்கெனவே, அங்கு இவ்வாறு பதிவு செய்து, “When Churches were targeted for petty theft or otherwise, the media hype created would be phenomenal, but when Brahmins attacked and their sacred threads cut, it has been very slow to report. Incidentally,  One of those held included a man detained in 2013 under the National Security Act for allegedly hurling a petrol bomb. In other words, the habitual offenders are used to commit such crimes targeting Brahmin community. Then what is the difference between the racial attacks on Hindu temples there in US and here on the Hindus? By the way how is Ganapathy, your reporter was attacked and his sacred threat cut some 35 years ago?”, பேஸ்புக்கில் ஷேரும் செய்து விட்டேன்.

[7] All those arrested have been booked under several sections of IPC, including rioting, wrongful restraint, promoting enmity on grounds of religion or caste and causing public mischief.

http://www.business-standard.com/article/pti-stories/priest-bhajan-singer-attacked-sacred-threads-cut-115042101204_1.html

[8] தினகரன், கோயில் குருக்கள் பூணூல் அறுப்பு தி.வி.கழகத்தினர் 6 பேர் கைது, 22-04-2015: 02:01:14.

[9] While five of the attackers, belonging to Dravidar Viduthalai Kazhagam and aged between 25 to 30, were arrested and remanded to judicial custody, police said they are on the lookout for the other two.  One of those held included a man detained in 2013 under the National Security Act for allegedly hurling a petrol bomb, police said.

http://www.business-standard.com/article/pti-stories/priest-bhajan-singer-attacked-sacred-threads-cut-115042101204_1.html

[10] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/04/22042018/Hindu-organizationsDemonstration.vpf

[11] தினத்தந்தி, பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு: இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், மாற்றம் செய்த நாள்: புதன், ஏப்ரல் 22,2015, 4:20 AM IST; பதிவு செய்த நாள்: புதன், ஏப்ரல் 22,2015, 4:20 AM IST

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/dvk-cadres-misbehave-with-archakar-chennai-225168.html

[13] http://www.ptinews.com/news/5944477_Priest–bhajan-singer-attacked–sacred-threads-cut.html

[14] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=142158

[15] http://www.bbc.co.uk/tamil/india/2015/04/150421_punool

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: