சிலை, உருவசிலை, திருவுருவ சிலை, பெரியாரின் திருவுருவசிலை – துணி போட்டு மூடுலாமா, கூடாதா – இதில் உள்ளது அரசியலா, பகுத்தறிவா, செக்யூலரிஸமா, எது?

சிலை, உருவசிலை, திருவுருவ சிலை, பெரியாரின் திருவுருவசிலை துணி போட்டு மூடுலாமா, கூடாதா இதில் உள்ளது அரசியலா, பகுத்தறிவா, செக்யூலரிஸமா, எது?

Statues of Anna and Periyar near Tirupur railway station spotted with garlands put by Dravidar Viduthalai Kazhagam 15-03-2014தமிழக சட்டமன்றத்துக்கு வருகிற மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. தேர்தலில் ஓட்டுகள் சின்னங்கள், உருவங்கள், அடையாளங்கள், குறியீடுகள் முதலியவற்றை மக்களின் மனங்களில் பதிய வைத்து, அதன் மூலம் தமக்கு சாதகமாக ஓட்டுகளைப் பெறுவது வழக்கமாக அரசியல்வாதிகள் கொண்டுள்ளனர். படிக்காதவர்கள் சின்னங்களை வைத்துக் கொண்டுதான், ஓட்டுகளைப் போடுவார்கள் என்பதனால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிடக் கட்சிகள் எல்லாமே அத்தகைய விளம்பரங்களில், பிரச்சாரங்களில், ஓட்டுக் கேட்கும் வித்தைகளில் வித்தகர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் விதிமுறை என்று கூறி, கோயம்புத்தூர் முதலிய பல இடங்களில் பெரியார் சிலைகளை மறைத்தும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளையும் தேர்தல் ஆணையம் அகற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது[1]. திராவிடர் விடுதலை கழகம் என்பது திராவிட கழகத்தின் உதிரிகளில் ஒன்றாகும்.  இவையெல்லாம் தாமும் இருக்கிறோம் என்பதனை எடுத்துக் காட்டுவதற்காக, அவ்வப்போழுது, ஏதாவது ஒரு கலாட்டா, ஆர்பாட்டம், எதிர்ப்பு, வழக்கு என்று ஈடுபடுவர்.

DVK petioned before Tiruppur collector, 12-03-2014பெரியார் சிலைகளை மறைக்கக் கூடாது என்று தொடுத்த மனு: திராவிடர் விடுதலை கழகத்தின் [Dravidar Viduthalai Kazhagam (DVK)] அமைப்பு செயலாளர் ரத்தினசாமி [Petitioner Rethinasamy, Organaisation Secretary, DVK] ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[2]: “சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். இவர், மூடநம்பிக்கை எதிராக கடுமையாக போராடியவர். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் திருவுருவ சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது என்று கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டுள்ளனர்.  எங்களது இயக்கம், அரசியல் கட்சி கிடையாது. தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதேபோல, தந்தை பெரியார் அரசியல் தலைவர் இல்லை. அவர் சமூக சீர்திருத்தவாதி.கடந்த முறை தேர்தலின்போது, பெரியாரின் சிலைகள் இதுபோல் மூடவேண்டும் என்று அதிகாரிகள் கூறியபோது, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பெரியாரின் சிலையை மறைக்க தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு விவரங்களை, கோவை தேர்தல் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும், அவர்கள் பெரியாரின் சிலையை துணியால் கட்டி மறைத்துவிட்டனர். எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலையை மறைக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது[3].

பெரியார் விக்கிரகம், பூசனிக்கய் சிலை இத்யாதிபெரியாரின் சிலையை மறைக்கும் எண்ணம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை: இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா [Justices M M Sundaresh and S Vimala] ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது[4]. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் டி. அருண், தேர்தல் ஆணையத்தின் சார்பில் வக்கீல் நிரஞ்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[5]: “தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், தந்தை பெரியாரின் சிலையை மறைக்கும் எண்ணம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்றார். இதற்கு அர்த்தம் என்ன அர்த்தம் என்றால், மாநிலம் முழுவதுமுள்ள பெரியாரின் சிலைகள் மறைக்கப்படாது என்பதாகும். மேலும், கொடியை பொருத்தவரை, தேர்தல் ஆணையத்திடம் மனுதாரர் கோரிக்கை மனு கொடுக்கவேண்டும். அந்த மனுவை தேர்தல் ஆணையம் விரைவாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்[6]. இந்த மனுவை முடித்துவைக்கிறோம்”, இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்[7].  ஆகையால், தேர்தல் ஆணையம் இது விசயமாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை கவனிக்க வேண்டும்[8]. இது பி.டி.ஐ செய்தியாகி விட்டதால், அச்செய்தி அப்படியே ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டுள்ளது[9].

நாத்திகச் சின்னத்திற்கு மாலை, மரியாதை, பூஜை எல்லாம்கடந்த ஆண்டுகளில் நடத்தியுள்ள போரட்டங்கள், வழக்குகள்: கடந்த 2014ல் கூட திருப்பூரில் இவ்வ்வாறு இக்கட்சியினர் ஆர்பாட்டம் செய்துள்ளனர்[10]. அப்பொழுது திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்[11]. திராவிடர் கழகம் 2011லேயே தேர்தல் நேரத்தில் பெரியார் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆணையிட்டதை சுட்டிக் காட்டினர். பிறகு தேர்தல் ஆணையம் அப்பொழுது உயிரோடுள்ள தலைவர்களின் சிலைகளைத் தான் மூட சொன்னதாக தெளிவு படுத்தியது[12]. அதாவது, இறந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என்றாகியது. உருவவழிபாட்டை மறுக்கும் நாத்திகக் கூட்டங்கள், இவ்வாறு சிலைகளை மூடக்கூடாது என்று நீதிமன்றங்களில் வாதிடுவது வியப்பாகத்தான் இருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் உயிருள்ளவர்களின் சிலைகள் மற்றும் உயிரற்றவர்களின் சிலைகள் என்றெல்லாம் பிரித்து விளக்கம் அளித்தது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது. உயிரோடு இருக்கும் போதே, சிலை வைத்துக் கொண்டது கருணாநிதி தான் என்று தெரிகிறது. 1987ல் எம்,ஜி.ஆர் இறந்தபோது, ரசிகர்கள் அச்சிலையை உடைத்தெறிந்தனர். அதற்குப் பிறகு, கருணாநிதியும் தனது சிலையிப் பற்றிக் கவலைப்படவில்லை, திமுகவினரும் கவலைப்படவில்லை.

நாத்திகச் சின்னத்திற்கு மாலை, மரியாதை, பூஜை எல்லாம் வீரமணி, ரங்கநாதன்பெரியார் சிலை அரசியல், சின்னம், வியாபாரம்: சிலை, உருவசிலை, திருவுருவசிலை, பெரியாரின் திருவுருவசிலை, பெரியாரின் திருவுருவ சிலை என்றெல்லாம் திக உதிரிகள் கூறி வருவது வேடிக்கையாக இருக்கிறது. “பெரியார்” ஒரு சின்னமாகி விட்டப் பிறகு, பல கட்சிகள் அவர் பெயர், உருவன் முதலியவற்றைப் போட்டு ஓட்டுகள் கேட்கும் போது, அவரை, அவரது சிலையை-உருவத்தை சின்னமாக உபயோகப்படுத்தப் படுகிறதா இல்லையா என்பதனை தெரிந்து கொல்ளலாம். மேலும் திராவிட கழகம், பெரியார் சிலையை வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகிறது. ஶ்ரீரங்கத்தில் கோவில் கோபுரத்தின் முன்பாக, சிலையை வைத்து, பிரச்சினைக் கிளப்பியதை தகிழக மக்கள் அறிவர். ஆட்சி அதிகாரம், போலீஸார் முதலியவற்றை வைத்துக் கொண்டு தான், அத்தகைய “செக்யூலரிஸ” வெறித்தனம் நடந்தேறியது. அர்ச்சகர் படிப்பு, படித்து விட்டப் பிறகு வேலை போன்ற சர்ச்சைகளிலும், பெரியார் சிலை உபயோகப்படுத்தப் பட்டு வந்துள்ளது. பூம்புகார் போன்ற அரசு-சார் நிறுவனஙள் பெரியார் சிலைகளை உற்பத்தி செய்து விற்றுக் கொண்டிருக்கின்றன. உண்மையில் எதிர்கட்சிகள் இதனைத் தட்டிக் கேட்க வேண்டும், ஆனால், பெரியாரை சின்னமாகக் கொண்ட அவை எதிர்க்காது. பிறகு, பிஜெபி போன்ற கட்சிகள் நீதிமன்றங்களில் சட்டரீதியாகக் கேட்க வேண்டும். ஆனால், அப்படி செய்தால், கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட கிடைக்காமல் போய்விடும் என்று அமைதியாகத் தான் இருக்கும். அந்நிலையில், இத்தகைய வரைமீறல்கள் இருக்கத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

12-03-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் சிலைகளை மறைக்கும் திட்டம் எதுவும் இல்லை: தேர்தல் ஆணையம் உறுதி, By: Karthikeyan, Published: Saturday, March 12, 2016, 3:18 [IST].

[2] http://www.dailythanthi.com/News/State/2016/03/12023419/No-intention-to-cover-Periyar-statues-CEO-tells-HC.vpf

[3] தினத்தந்தி, தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை; ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல், மாற்றம் செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 2:34 AM IST.

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/does-not-plan-hide-the-periyar-statues-ec-confirmed-248804.html

[5] நியூஸ்.7, பெரியார் சிலைகளை மறைக்கும் எண்ணம் இல்லை: தேர்தல் ஆணையம், Updated on March 11, 2016.

[6] Disposing of the petition, a division bench, comprising Justices M M Sundaresh and S Vimala, said it was open to the petitioner to make a detailed representation to the respondent (EC) which should consider the same and take appropriate action.

http://www.business-standard.com/article/pti-stories/no-intention-to-cover-periyar-statues-ceo-tells-hc-116031101188_1.html

[7] http://ns7.tv/ta/no-intention-hiding-periyar-statues-ec.html

[8] Business Standard, No intention to cover Periyar statues, CEO tells HC, Press Trust of India ,  Chennai March 11, 2016 Last Updated at 20:14 IST.

[9] http://www.ptinews.com/news/7207976_No-intention-to-cover-Periyar-statues–CEO-tells-HC-

[10] http://www.thehindu.com/news/cities/Coimbatore/stir-against-covering-periyar-statue/article5776180.ece

[11] Dravidar Viduthalai Kazhagam members at the Tirupur Collectorate on Tuesday to petition election officials against the covering of Periyar’s statue with black cloth, soon after the election dates were announced. Photo: R. Vimal Kumar, The Hindu dated March.12, 2014.

[12] http://www.thehindu.com/news/cities/Coimbatore/veil-goes-off-statues-of-anna-periyar-in-tirupur/article5787646.ece

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: