“சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை” – 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து…. பெரியாரை வெளிக்காட்டும் கட்டுரை – உபயம் – திருவாளர் வீரமணி!
பால் குத்திக் கொள்ளுதலும், கரகம்கட்டுவதும், கண்முழிப்பதும், துள்ளுமாவு இடித்து தின்பதும், கஞ்சி குடிப்பதும்: பூசாரி, மாரியம்மனை உதைத்ததால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க மறு தினம் பிராமண குருக்களைக் கொண்டு பிராயச்சித்தம் செய்யப்பட்டது.
பூசாரி போதை வெறியால் செய்த போக்கிரித்தனமும், கஞ்சி காய்ச்சியும் கரகமெடுத்தும் ஊரைப் புழுதி பண்ணிய பக்த சிகாமணிகளின் லீலைகளும் எப்படியாவது போகட்டும். அதைப் பற்றி நாம் கவலைகொள்ளவுமில்லை. வைசூரி நோய் அபிவிர்த்தியானால் பால் குத்திக் கொண்டால் பரவிக் கொண்டிருக்கும் நோயானது தடைப்பட்டு விடுமென்பது சுகாதார முறை. |
“பூசாரி போதை வெறியால் செய்த போக்கிரித்தனம்” எனும் போது, ஈவேராவுக்கே உண்மை தெரிந்திருந்திருக்கிறது. பிறகு, ஏன் இவ்வாறான மோசமான, வக்கிரமான கட்டுரை எழுத வேண்டும்? அங்குதன் அவரது அசிங்கமான மனோநிலை வெளிப்படுகிறது. மக்களின் நம்பிக்கையை மதிக்காத குணமும் வெளிப்படுகிறது. |
இதைப்பின்பற்றாமல் கரகம்கட்டுவதும், கண்முழிப்பதும், துள்ளுமாவு இடித்து தின்பதும், கஞ்சி குடிப்பதுமான காரியமுமெல்லாம் வைசூரி நோயுடன், காலரா நோயும் சேர்த்துக்கொள்ளச் செய்யும் முட்டாள்தனமென்பதை புத்திசாலிகள் உணர்ந்த உண்மை. இதுவும் ஒரு பக்கமிருக்கட்டும்.
மாரியம்மன் தரிசனத்துக்கு தங்கள் தங்கள் வீட்டு பெண்மணிகளை தனியாக அனுப்ப வேண்டாம்: சித்தர்க்காடு மாரியம்மன் கோவிலில் நடந்த பிரஸ்தாப நிகழ்ச்சியைக் கொண்டு குறிப்பாக சித்தர்க்காடு வாசிகளுக்கும் ஒரு வார்த்தை சொல்லவிரும்புகிறேன். அதாவது:-
பொதுவாக மக்களுக்கும், சிறப்பாக பெண்களுக்கும் மாரியம்மன் என்ற ஒரு தேவதையிடத்திலிருக்கும் மூட பக்தி அளவு கடந்ததாகும். மாரி, காளி, பிடாரி போன்ற தெய்வங்களிடத்தில் பெண்கள் கொள்ளும் மூட பக்தியை தணிக்க வேண்டுவது அந்தந்த ஆண் மகனின் கடமையில் முக்கியமானதாகும். ஏனென்றால், பெண்களுக்கிருக்கும் பக்தியை ஒரு கருவியாக கோயில் பூசாரிகள் உபயோகப்படுத்திக் கொண்டு, பெண்களை வசப்படுத்தி கற்பழிக்கவும் எத்தனிக்கிறார்கள். கற்பழித்துமிருக்கிறார்கள். |
பூசாரி மட்டுமல்ல, டாக்டரும், இஞ்சினியரும், ஏன் எத்தகைய ஆளானாலும், போதை வெறி, போக்கிரித்தனம் முதலியவை இருந்தால், அயோக்கியத் தனங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். இப்பொழுதே பப்புக்குச் செல்வது, குடிப்பது, கூத்தாடுவது எல்லாம் எங்கள் உரிமை என்று சொல்லும் அளவிற்கு, பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். கற்ப்பைப் பற்றி கவ்லை இல்லை என்ற அளவுக்கு, மனியம்மையாக நடித்த நாத்திக நடிகை குஷ்புவே விளக்கம் கொடுத்துள்ளது, அவரது ஆவிக்குத் தெரிந்தால் சரிதான்! |
கோயில் பூசாரியை பக்தி சம்பாதித்துக் கொடுக்கும் பக்தன் என்ற பேதை எண்ணத்தால் எத்தனையோ பெண்கள் பூசாரியின் வலையில் சிக்கிவிடுகிறார்கள். முடிவாக மாரியம்மன் தரிசனத்துக்கு தங்கள் தங்கள் வீட்டு பெண்மணிகளை தனியாக அனுப்பிவைக்கும் ஆண் மக்கள் கவனித்து தக்கபடி நடந்து கொள்ள வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன், என்று அக்கட்டுரை முடிந்து விடுகிறது.
கடவுளை எதிர்க்கும் பக்தனும், ஆத்திகனும், நாத்திகனும்: கடவுள்-மறுப்பு, நாத்திகம், முதலியவற்றைப் பற்றி பேசும் சித்தாந்திகள் இந்த வித்தியாசத்தை அறிந்தும் அறியாத மாதிரி நடிப்பது தான், நிதர்சனமாக இருக்க்கிறது, அவர்களது போலி சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறது. கடவுள் பக்தி கொண்டுள்ளவர்களிலும் பலநிலைகளில் உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள்.
- சுகம்-துக்கம், இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு என்ற எல்லா நிலைகளிலும் சமமாக பாவிக்கும் கடவுள்-நம்பிக்கையாளர்கள் எல்லாவற்றிற்கும் கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
- உயர்ந்த நிலையில், இவர்களும் கடவுள் இல்லை என்று சொல்லலாம்.
- கடவுளுக்கு உருவம் இல்லை, அதனால் விக்கிரகம் வேண்டாம் என்ரு சொல்லலாம்.
- பூசை-புனஸ்காரம் தேவையில்லை, மனிதன்–மனிதனாக, ஒழுக்கமாக இருந்தாலே போதும் எனலாம்.
- அவ்வாறு பாவிக்கத் தெரியாதவர்கள் தான் வேண்டியபடி / விரும்பியபடி நடந்தால் கடவுளுக்கு நன்றி சொல்வான்.
- எதிர்பார்த்து செய்யும் பூசை-புனஸ்காரங்கள் முதலியவை – அத்தகைய வகையறாக்கள்.
- எல்லாவற்றிற்கும் பரிகாரங்கள் செய்பவர்கள்.
- அவ்வாறு நடக்காவிட்டால், ஐயோ நான் ஏதோ தவறு செய்து விட்டேன், என்று மறுபடியும் வேண்டிக் கொள்வான்.
- அதில் இன்னொரு வகை, நடக்காதலால், கடவுளைக் கோபித்துக் கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
- அதிக எதிர்பார்ப்பு, நடக்காவிட்டால் தெய்வ-நிந்தனை.
- விரக்தியினால் நடந்து கொள்ளும் வகையறாக்கள்.
- அப்படியே நடக்காவிட்டாலோ, தொடர்ந்து வேண்டிக்கொண்டு நடக்காவிட்டாலும், கடவுளே இல்லை, நீ கல் தான் என்று வெறுத்துப்போய் ஒரு நிலைக்கு வந்துவிடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
- ஆனால், இவர்கள் எல்லோருமே கடவுள் இருக்கிறார் என்று தான் நம்பிக்க்கொண்டு இருக்கிறார்கள்.
- திருடன், கொள்ளைக்காரன், கொலைக்காரன், சமூக-விரோதி, அரசியல்வாதி, முதலியோர்களும் கடவுளை வேண்டிக் கொள்கிறார்கள். இது சமூகத்தில் தனது நிலையைக் காட்டிக் கொள்வதற்காகவோ, அல்லது வேண்டியது கிடைத்தது என்ற நிலையிலோ இருக்கும்.
- இங்கு பூசாரி இவ்வகையில் தான் வருகிறான்.
- திருடன், கொள்ளைக்காரன், கொலைக்காரன் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- இதில் அரசியல்வாதி, ஒட்டுமொத்த குற்றங்களையும் செய்பவனாக இருக்கிறான்.
- திராவிட நாத்திகம் வளர்ந்த நிலையில், திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவதும், மனைவி-மக்கள்-சுற்றத்தாரை வைத்து சாமி கும்பிடும் நிலையும் இருந்து வருகிறது. இதில் பெரியாரே விலக்கல்ல.
- இறைன்றைய நிலையில் திராவிட-நாத்திகர்களில் 90% இப்படித்தான் இருக்கிறார்கள்.
- வீடுகளில் சாமிபடங்களை வைத்துக் கொண்டு பூசை செய்து வருகிறர்கள்.
- வெளியில் சாமியில்லை என்பது, உள்ளே சாமி குடும்பிடுவது என்ற போலி நாத்திகனும் இருக்கிறான்.
- இவன் போலி நாத்திகன்.
- இவனால் பெரிய அளவில் பாதிப்பில்லை.
- வெளியில் கடவுள் இருக்கிறார் என்று அறிவித்து, சாமி குடும்பிடுவது, உள்ளே ஆனால் உள்ளே சாமியில்லை என்ற போலி ஆத்திகனும் இருக்கிறான்.
- இவன் போலி ஆத்திகன்.
- ஆனால், இவனால் ஆபத்து அதிகமாக இருக்கிறது.
- இதையெல்லாம் மீறி, உண்மையான நாத்திகன் இருக்கிறான். ஆனால், அவன் ஆத்திகன் போலத்தான், மனிதனுக்கு எந்த விதத்திலும் தீங்கு நினைக்க மாட்டான்.
- வேற்றுமை வளர்க்க மாட்டான்.
- மனிதர்களை சித்தாந்தம் மூலம் பிரித்து வைக்க மாட்டான்.
- மனிதர்களுக்குள் துவேசத்தை, வெறுப்பை வித்திட மாட்டான், வளர்க்க மாட்டான்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், ஈவேரா அல்லது பெரியர் அந்த அளவுக்கு சிந்தனையாளன் அல்ல.
ஈவேரா அல்லது பெரியாரின் குணாதிசயங்கள்: ஈவேராவுக்கு அகந்தை, ஆணவம், அகம்பாவம், மமதை முதலியவை அதிகமாகவே இருந்தது. தன்னை யாரும் குறைக்கூறக்கூடாது என்ற மனப்பாங்கும் இருந்தது. தான் பெரிய பணக்காரன் என்பதனால் –
- பணத்தை வைத்து எல்லோரையும் பணிய வைத்து விடலாம் என்ற யதேச்சதிகாரமான போக்கு;
- முதலில் உதவுவது போல காட்டிக் கொண்டு, ஒருவரை தன்னிடம் பணிய வைப்பது;
- எல்லோருமே தான் நினைத்தப்படி / சொல்லியபடி செய்ய வேண்டும், இல்லையென்றால், அவனுக்கு பலவகைகளில் துன்பம் கொடுப்பது;
- அதிகமான பேராசைக் கொண்டு, அது நடக்காவிட்டால் எல்லாமே மோசடி என்று கற்பனை-விரோதியை உண்டாக்கி அவனுடன் போராடிக் கொண்டிருப்பது;
- ஜாதியத்தை வளர்ப்பதற்காக, ஜாதியத்தை எதிர்ப்பது போலக் காட்டிக் கொள்வது;
- தீண்டாமை எதிர்ப்பு, பெண்கள் விடுதலை முதலியவை அத்தகைய எதிர்மறை பிரச்சாரங்களில் உருவானது;
- தொடந்து தோல்விகளை சந்தித்தப் பிறகு, விரக்தியாகி எல்லாவற்றையும் எதிர்ப்பது;
- முடிந்த வரை ஒருவருக்கு அதிக அளவில் எப்படி தொல்லை-தொந்தரவு-பாதிப்பு கொடுக்கலாம்-ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு வேலைசெய்வது;
- குடும்பப் பிரச்சினை, குழந்தை இறந்தது, விரக்தியான வாழ்க்கை, கூடாத உறவுகள்-சகவாசங்கள், தனிமனித தோல்வி, முதலியவை அரசியல்-அதிகார ஆசைகள் கூடாததனால், இரண்டும் சேர்ந்து உதுக்கிவிட்ட நிலை உருவானது;
- விகல்பமான மனப்பாங்கு, வக்கிரமான எண்ணங்கள், குதர்க்கமான சிந்தனை, விரச வார்த்தைப் பிரயோகம், முதலியவற்றை பயன்படுத்தி, தனது விரோதிகளைத் தாக்குவது;
இவையெல்லாம் தான் ஈவேரா அல்லது பெரியார் என்ற மனிதனின் குணாதிசயக்களாக இருந்தன. சமீப காலத்தைய ஒரு மனிதனின் வாழ்க்கை உண்மைகளில் பலவற்றை மறைத்து உருவாக்கப்பட்டுள்ளது தான் பெரியாரின் கதை!
© வேதபிரகாஷ்
20-03-2016
குறிச்சொற்கள்: ஆசை, ஆரியர், கடவுள், கருணாநிதி, குஷ்பு, சரித்திர புரட்டுகள், சித்தர் காடு, சித்தர்காடு, சித்தர்க்காடு, சித்தாந்த முரண்பாடு, செக்யூலார் நாத்திகம், சோகம், திராவிடர், நாகம்மை, நாத்திகம், பூசாரி, பூஜாரி, பேராசை, மணியம்மை, மாரி, மாரியத்தாள், மாரியம்மா, மாரியாத்தா, மோசம், விரக்தி, வீரமணி நாத்திகம்
10:59 முப இல் மார்ச் 20, 2016 |
But for Periyar many of us will still be superstitious.
.only because of him some awakening took place in Tamil Nadu.
Venky Ramakrishnan, noble pize winner said the other day India has not developed on par with western nations only due to lingering on to age old superstitions.
Venky is not from DK but an Ayyer from Kumbakonam.
Kanal Hassan and Arvind Swamy are agnostics.
You better stop writing these silly mails trying to defame one of the greatest thinkers ofnTamil Nadu.
Periyar campaigned to remove casteism, male domination, superstitions ,education etc.
He has to be treated with respect .
Subbiah
Sent from my iPad
3:23 முப இல் மார்ச் 22, 2016 |
Can you approve such nonsense, just because, you are a follower of Periyar!
Why he did not write such stuff against “Meriyaththa”, “kadija-atha” etc?
Cant you understand his vulgar perversity in such writings?
10:40 முப இல் மார்ச் 21, 2016 |
“silly mails” – I have not send any mail to you.
Be at your “enlightened” status, and I would be at my status!
But you have to analyse the publication of such article now buy Veeramani, when Bharat Bhata is denigrated by your so called enlightened souls!
We have to treat the issue in a particular context.
Have the persons mentioned read the “enlightened story” of Periyar?
You have not come out as to whether you accept with his such perverted writings!
Where he respected womanhood there?
Can any believer reads this .”enlightened story” of Periyar would respect him?
3:24 முப இல் மார்ச் 22, 2016 |
Perhaps, they cannot change!
They do not want facts to be discussed, calling a spade a spade!
1:05 பிப இல் திசெம்பர் 27, 2018 |
[…] [3] https://dravidianatheism.wordpress.com/2016/03/20/evr-periyar-perversion-and-characteristics-were-du… […]