பெரியாரின் வக்கிர எழுத்துகள் – “சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை” – 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து….- உபயம் – திருவாளர் வீரமணி!
பெரியாரின் வக்கிர மனத்தை அறிந்து கொள்ளுங்கள்: பெரியார் எழுதியுள்ளதாக, “விடுதலை”யில் வழக்கம் போல, “சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை” ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது[1]. தலைப்பிலேயே, விகல்பமான மனப்பாங்கு, வக்கிரமான எண்ணங்கள், குதர்க்கமான சிந்தனை, விரச வார்த்தைப் பிரயோகம், என்று அனைத்தையும் பார்க்க முடிந்தது. 1934ல் இதை இவர் எழுதிய போது, யார் படித்தார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் படித்திருந்தால், அப்பொழுதே, இவரது யோக்கியதை எல்லோராலும் அறியப்பட்டிருக்கும். தமிழில் அந்நேரத்தில் சுதந்திரம், பக்தி, நாட்டுப்பற்று முதலிய விசயங்களில் பாடல்கள், நாட்டியங்கள், தெருகூத்துகள் முதலியவை நடந்து கொண்டிருக்கும் போது, இத்தகைய மோசமான தமிழில் எழுதியுள்ளதை யாரும் படித்திருக்க மாட்டார்கள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் சுமார் 50-100 பேர் படித்திருக்கலாம். அப்படி படித்திருந்தாலும், இவரது யோக்கியதையை தெரிந்து கொண்டவர்கள் மனதிற்குள் வைது, அமைதியாகத்தான் இருந்திருப்பார்கள். இப்பொழுது 2016ல், அதை “விடுதலை”யில் மறுபடியும் பதிப்பித்து, ஈ.வே.ராவின் தன்மையினை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுத்துள்ளது திருவாளர் வீரமணிதான். வழக்கம் போல அக்கட்டுரையை அப்படியே போடு, வேண்டிய இடத்தில், எனது விமர்சனத்தை வலது பக்கத்தில் குறிப்பிட்ட இடங்களில் கொடுத்திருக்கிறேன்.
சித்தர்க்காடு மாரியம்மன் கோவில், வைசூரி வியாதி, கஞ்சி ஊற்றல், கரகாட்டம்[2]: சித்தர்க்காடு என்ற ஊர் மாயவரம் முனிசிபாலிட்டியின் ஒரு பாகம். அதாவது டவுனின்மேல் கோடியைச் சேர்ந்தது, மாயவரம் ஜங்ஷனும் இந்த சித்தர்க்காட்டில் தான் இருக்கிறது. இந்த ஊரில் பிரபலமான மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்தப் பக்கத்து ஜனங்களுக்கு இந்த மாரியம்மன் தான் பிரபலமான தெய்வம்.
அந்த மாரியம்மா இடத்தில் ஜனங்களுக்கு இருக்கும் பக்தி மேலீட்டிலேயே மிக க்ஷீண திசையுடனிருந்த கோவில் இப்போது பலமாகக் கட்டப் பட்டிருக்கிறது.இம்மாதிரியான ஒரு மாரியம்மா இருந்தும் சித்தர்க் காட்டைச் சுற்றிலும் சில காலமாய் வைசூரிநோய் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்த நோயால் சிலர் இறந்து விட்டார்கள். சிலர் இறக்கும் தருவாயை எதிர்பார்த்துக் கொண்டு மிருக்கிறார்கள். வைசூரி வியாதியால் ஏற்படும் இந்த மோசமான நிலையில் பாமர மக்கள் பீதிகொள்வதில் ஆச்சரியமொன்றுமில்லை. | இக்காலத்திலும் புதிய-புதிய நோய்கள் வரத்தான் செய்கின்றன, மக்கள் இறக்கத்தான் செய்கின்றனர். மருத்துவத் துறை, மருந்துகள், சிகிச்சை முறைகள் எலாம் அபாரமாக முன்னேறியிருந்தாலும், அத்தகைய இறப்புகளைத் தடுக்கமுடிவதில்லை. இதனால், விஞ்ஞானத்தைக் குறைகூற முடியாது. மருந்தால் குஅப்படுத்த முடியாத நிலையில், மருத்துவர்களே, இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று விட்டு விடுகிறார்கள். அத்தகைய நிலையில் தப்பித்து குணமானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். |
இதனால் சித்தர்க்காடு மாரியம்மாவின் மனதைக் குளிர வைக்க அந்தப்பக்கத்து வாசிகள் நினைத்தார்கள். மாரியாத்தாளின் மனது குளிர்ந்துவிட்டால் வைசூரி நோய் பறந்துவிடுமென்று மனப்பால் குடித்த சித்தர்க்காடுவாசிகள், தங்கள் நிறைந்த பக்தியை பூர்த்திசெய்ய வேண்டி சென்ற 1.4.1934 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பகலில் கஞ்சி காய்ச்சி ஊற்றினார்கள். இரவில் கரகம் கட்டி வீதி வலம் வந்தார்கள்.
நிவேத்தியம் செய்ய வந்த பெண்ணிடம் தவறாகப் பேசிய பூசாரி[3]: வழக்கம்போல் கோவில் பூசாரி கரகத்தை எடுத்து வீதிவலம் வந்துகொண்டிருந்தான்.
ஊர் ஜனங்களும் கரகத்தைக் சூழ்ந்து கொண்டு ஆரோக்கியசாமி ஆசாரி பட்டறையின் மேல் பக்கத்துச் சந்தில் கரகம் வந்து கொண்டிருந்தது. இந்தத் தெருவிலுள்ள ஒரு யவனப் பெண்மணி கரகத்திற்குத் தீபாராதனை எடுக்க நிவேத்திய சாமான்களுடன் முன்வந்து நின்றாள், நிவேத்தியத் தட்டை நிவேத்தியம் புரியும் தனி பூசாரியிடம் கொடுத்துவிட்டு பிரசாதம் பெற்றுப்போக பிரஸ்தாபப் பெண்மணி நின்று கொண்டிருந்தாள். கரகம் தூக்கிக் கொண்டிருந்த கோவில் பூசாரியான வன் தன் எதிரில் நிற்கும் பெண்மணியின் கையைக் கெட்டியாகப் பிடித்து பிசைந்துகொண்டு பின்வருமாறு சம்பாஷிக்கலானான்: | பூசாரி ஒரு பெண்ணுடன் கையைப் பிடித்து தவறாக நடந்து கொண்டான் என்பது இங்கு பிரச்சினை. அது தவறுதான். தட்டிக் கேட்க வேண்டியதுதான், நன்றாக உதைக்க வேண்டியதுதான். ஆனால், ஏதோ சினிமா “டையலாக்” மாதிரி எழுதுவதில் அல்லது கதை எழுதுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒழுக்கம், தனிமனித ஒழுக்கம் முதலிய நற்பண்புகள் இல்லையென்றல், சமூகத்தில் இத்தகைய சீர்கேடுகள் நடக்கும். அதனால், நற்பண்புகளைப் பேண வேண்டிய அவசியம் உள்ளது. அதை விட்டுவிட்டு, விரசமாக எழுதுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. |
“நீ ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்! உனக்கு எவரும் லட்சியமில்லை. நான் இருக்கிற வரையில் உனக்கென்ன பயம் சொல்லு. உன்னை நான் வைத்து காப்பாற்றுகிறேன். உனக்கு எது வேண்டுமானாலும் தருகிறேன். நான் சொல்லுகிறபடி கேட்கிறயா?” என்பது போன்ற வார்த்தைகளே நடந்தது. மேற்படி சம்பாஷணை பெண்ணின் கையைப்பிடித்து பிசைந்து கொண்டபடியே முக்கால் மணிநேரம் நடைபெற்றது.
கரகம் முடிந்த பிறகு காளாஞ்சி கொடுக்கும் சம்பிரதாயம் ஆரம்பமானது[4]: கரகம் தூக்கிய பூசாரியானவன் வாலிப வர்க்கத்தைச் சார்ந்தவன். கரகத்துக்கு நிவேத்தியம் செய்து போக வந்த பெண்மணியும் இளம் வயதைச் சேர்ந்தவள், என்றாலும் கரகத்தை சூழ்ந்து கொண்டிருக்கும் பக்த சிகாமணிகளெல்லாம் பிரஸ்தாப சம்பாஷணையை மாரியம்மன் சன்னதியின் பேரிலேயே நடப்பதாகக் கருதிக் கொண்டிருந்தார்கள். இது எத்தனையோ இடத்தில் நடத்தும் வழக்கத்தை ஒட்டியதால் இதைப்பற்றி ஆச்சரியப்பட வேண்டிய தில்லை. இந்த சம்பவம் முடிந்து கரகம் கோயிலுக்குப் போய் இறங்கியது. இறக்கும்படி சடங்குகள் முறையே முடிந்ததும் வந்திருக்கும் பக்தர்களுக்கு காளாஞ்சி கொடுக்கும் சம்பிரதாயம் ஆரம்பமாயிற்று, கரகம் தூக்கிய பூசாரி ஒரு தட்டில் தேங்காய் மூடி, பழம், பாக்கு, வெற்றிலை, புஷ்பம் உள்பட விபூதி பிரசாதங்களுடன் மகா மண்டபத்தில் நிற்கும் பக்த கோடிகளான பொது ஜனங்கள் முன் தோன்றினான்.
போதையில் இருந்த பூசாரி பக்தர்கள் மரியாதை செய்த பணத்தைத் தூக்கியெரிந்தது: நின்ற மகாஜனங்களில் முக்கியமானவர்களிடத்தில் காளாஞ்சி தட்டை சமர்ப்பித்தான், பெற்றுக்கொண்ட முக்கியஸ்தர்கள் பூசாரிக்கும் மரியாதை செய்வான் வேண்டி ரூபாய் 1.7.0 கொடுத்தார்கள்.
இந்தத் தொகை வழக்கத்துக்கு மீறியதாகவும், மிக கொஞ்சமாகவுமிருந்ததாக பூசாரி கருதினான். இது சமயமும் பிரஸ்தாப பூசாரியானவன் கரகமெடுத்து வீதிவலம் வருகிற போதும், லேகிய உருண்டையை அளவுக்கு மீறி தின்றிருந்த தால் அவன் வீதி வலத்தில் வரும் போதும், கோயிலில் இறங்கியதும் தன் நிலை தடுமாறி எல்லா காரியத்திலும் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதாய் சொல்லப்படுகிறது. இது எப்படியாவது இருக்கட்டும். பக்தர்கள் மரியாதை செய்த ரூ.1-7-0 பெற்றுக்கொள்ளாமல் தூக்கி எறிந்து விட்டான். | ஈவேராவுக்கு வீட்டு வாடகை குறைவாக இருந்தாலே, வழக்குப் போட்டு, இடைஞ்சல் கொடுத்து, வெளியேற்றிய மனிதர். நன்கொடை விசயத்திலும் ஈவேரா கடுமையாகத்தான் நடந்து கொண்டார். ஆகவே, இவரும் பூசாரியை விட எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. உண்மையினை சொல்வதானால், மோசமாகவே எல்லோரிடத்திலும் நடந்து கொண்டார். அப்படியிருக்கும் போது, போதையுடன், பூசாரி இருந்திருக்கிறான் என்றால், அவனை அவ்வாறு அனுமதித்தது தவறாகும். |
வந்திருந்த பக்த கோடிகளை லேகிய உருண்டை வெறியால் வாயில் வந்தபடி திட்டினதோடு கர்ப்பகிரகத்தில் அலங்காரத்துடனிருக்கும் மாரியம்மனை நோக்கினான்.
ஆத்தாள் மகமாயியை நோக்கி 5,6 உதை காலாலேயே கொடுத்தது: இவ்வளவு நாள் உனக்கு உழைத்தும் நீ எனக்கு ஒன்றும் செய்யவில்லை என்றான். நீ இருந்துதான் என்ன? தொலைந்து தான் என்ன?
என்று பலவாறு சொல்லிக்கொண்டே ஆத்தாள் மகமாயியை நோக்கி 5,6 உதை காலாலேயே கொடுத்தான். மகமாயிக்கு செய்திருந்த அலங்கார புஷ்பங்களை எல்லாம் பிய்த்து நாலா பக்கமும் எறிந்தான். பூசாரியின் போக்கிரித் தனத்தை கண்ட பக்த கோடிகள் ஒன்றும் சொல்ல முடியாமல் தங்கள் தங்கள் வீடு திரும்பினார்கள். | “பூசாரியின் போக்கிரித் தனத்தை கண்ட பக்த கோடிகள் ஒன்றும் சொல்ல முடியாமல் தங்கள் வீடு திரும்பினார்கள்” என்பதிலிருந்தே, அவன் பெரிய ரௌடியாக இருந்திருப்பான் என்று தெரிகிறது. அதாவது, கடவுள் மீது நம்பிக்கையில்லாதவன், பூசாரியானால், அத்தகைய நிலை தான் ஏற்படும்[5]. |
மறுதினம் தெருக் கூட்டம் போட்டு பூசாரியின் நடத்தையைக் கண்டிக்கப்பட்டது. கரகம் வீதி வலம் வரும்போது நிவேத்திய மெடுத்து வந்த பெண்மணியின் கையைப் பிடித்து பிசைந்ததற்கும், மாரியம் மனை காலால் உதைத்து பக்த கோடிகளை அவமானப் படுத்தியதற்கும் ரூபாய் 25 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட தொகையும் வசூலாகிவிட்டது.
© வேதபிரகாஷ்
20-03-2016
[1] ஈ.வே.ரா, “சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை” – 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து….,, குடியரசு, 1934.
[2] http://viduthalai.in/page-7.html
[3] ஈ.வே.ரா, “சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை”, விடுதலை / குடியரசு, 1934.
[4] http://viduthalai.in/page-7/119051.html
[5] இன்று ஏதோ டிப்ளாமோ / பயிற்சி வகுப்பு முடித்து விட்டு, பூசாரி வேலை வேண்டும் என்று கிளம்பி விட்டார்கள். பெரியார் சிலைக்கு மாலை போட்டு, நாத்திக வாதம் பேசிக்கொண்டு, ஆர்பாட்டம்-போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பூசாரி பதவிக்கு வந்தால் என்னாகும் என்று மக்கள் நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.
குறிச்சொற்கள்: ஆரியர், இந்துவிரோத பேச்சுகள், கடவுள், சரித்திர புரட்டுகள், செக்யூலார் நாத்திகம், திராவிடர், நாத்திகம், பெரியார், பெரியார் நாத்திகம், மாரி, மாரியத்தாள், மாரியம்மா, மாரியாத்தா, வீரமணி, வீரமணி நாத்திகம்
1:05 பிப இல் திசெம்பர் 27, 2018 |
[…] [2] https://dravidianatheism.wordpress.com/2016/03/20/priest-kicked-goddess-the-perverted-writing-of-evr… […]
1:15 பிப இல் திசெம்பர் 27, 2018 |
[…] [2] https://dravidianatheism.wordpress.com/2016/03/20/priest-kicked-goddess-the-perverted-writing-of-evr… […]