“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – நீர்த்துப் போய், இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும்!

“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – நீர்த்துப் போய், இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும்!

பெரியாரும், ஆவியும், ஆத்மாவும்

2016 தேர்தல் நேரத்தில், அதிலும் ஓட்டளிக்கும் தேதியில், வீரமணி அதிகமாக பாதிக்கப்பட்டுவிட்டார் என்ற நிலையில், “திராவிட தமிழர்களே உஷார்! உஷார்!!” என்று தலையங்கம் எழுதியிருப்பது அவரது விரக்தியின் வெளிப்பாடு என்றே புலனாகிறது.  ஏனெனில், இத்தேர்தலில், “திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்றம் வேண்டும்” என்ற கருத்து பரவலாக வாத-விவாதங்களுக்கு உட்பட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது[1]. குறிப்பாக இளைஞர்கள் அதனை நன்றாகவே உணர்ந்து கொண்டு, திராவிட கட்சிகளின் ஆட்சியைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர்[2]. ஏன் அத்தகைய மாற்றம் தேவை என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர். மற்ற மாநிலங்கள் எல்லாம் தொழிற்துறை ரீதியில் சிறந்து முன்னேறிக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு ஏன் பின்தங்கி இருக்க வேண்டும்[3], டிவிஸ், லேலேண்ட், அமல்கமேஷன்ஸ் போன்ற குழுமங்களைத் தவிர[4] ஏன் மற்ற குழுமங்கள் கடந்த 50-100 ஆண்டுகளில் சிறக்கவில்ல, வெறும் சினிமா மற்றும் சினிமா சார்ந்த துறைகளில் மட்டும் சிறந்த, மற்றவற்றை பின்தள்ளிய நிலை என்ன போன்ற கேள்விகள் இளைஞர்களின் மனங்களில் எழுகின்றன. அந்நிலையில் அந்த தலையங்கம், அலச வேண்டியுள்ளது. அத்தலையங்கம் ஐந்து பத்திகளாக சேர்த்து, அங்கங்கு, அருகில் கட்டத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. கடைசியில், முடிவாக கருத்து கொடுக்கப்பட்டுள்ளது.

nedunchezhiyan_karunanidhi_mgr-eating-together

nedunchezhiyan_karunanidhi_mgr-eating-together

 1. திராவிட தமிழர்களே[5] உஷார்! உஷார்!![6]: இப்பொழுதெல்லாம் திராவிட இயக்கத்தைப்பற்றி குறை கூறுவது என்பது ஒரு வகையான ஃபேஷனாகப் போய் விட்டது.
1967 முதல் திமுகவும் அ.இ.அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில், இதில் மாற்றம் ஏதாவது நடக்க வேண்டுமானால் திராவிட இயக்கத்தைப்பற்றி ஏதாவது குறை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் – விரக்தியின் காரணமாகவும் இது இருக்கிறது. ஊடகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களின் கைகளில் சிக்குண்டு கிடப்பதால், திராவிட இயக்க எதிர்ப்பு செய்திகளையும் திராவிட இயக்கம் பற்றி கொச்சைப்படுத்தி எழுதுவோர்களையும் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்துவது பார்ப்பனீயத்துக்கே உரிய ‘கல்யாண திருக்குணங்களாகும்.

திராவிட ஆட்சியின் மோசடிகள், ஊழல், சீரழிவு மக்களுக்குத் தெரிந்து விட்டதால் தான், அத்தகைய கருத்து வலுவடைந்துள்ளது. வெறும் மேடைப்பேச்சால் மட்டும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. ஊடகங்களையும் திராவிட முதலாளிகள் கைகளில் சென்றாதால் தான், இலவச டிவி போன்ற திட்டங்கள் ஆரம்பம் ஆகின. ஏனெனில், நிறையபேர் டிவி-மோகத்தில் வீழ்ந்தால், லாபம் திராவிட முதலாளிக்களுக்குத்தான் என்பது தெரிந்த விசயம்[7]. தங்களது ஊடக ஆதிக்கத்தையும் மீறி அத்தகைய கருத்து வெளிப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

அதுவும் பிஜேபி சங்பரிவாரங்கள் தமிழ் மண்ணில் கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களின் சித்தாந்தமும், திராவிட இயக்கமும்தான் என்கிறபோது, அந்த இந்துத்துவா அமைப்பு இங்கு காலூன்ற வேண்டுமானால்  திராவிட இயக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரமும், செயல்பாடும் தவிர்க்க முடியாததாகி விட்டன.

krishna_tn_denigration[1]

கரு-கிருஷ்ணன், ஸ்டாலின்-அர்ஜுனன்!

 1. பிஜேபியும், சங்பரிவாரமும் தமிழ் மண்ணில் பரவ முடியாமல் போனதற்கு திராவிட இயக்கம் தான் காரணம்[8]: மோடி, ராஜ்நாத்சிங், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் குழுப் பாடலாக சுருதிப் பேதம் இல்லாமல் பாடுவதையும் கேட்க முடிகிறது.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பிஜேபியும், சங்பரிவாரமும் தமிழ் மண்ணில் பரவ முடியாமல் செய்த இந்த ஒரே ஒரு காரணம்கூட போதுமானது. திராவிட இயக்கத்தின் சாதனைக்கு!  தமிழ்த் தேசியவாதிகளாக இருந்தாலும் சரி, பதவி மேக நோய்கள் படர்ந்து சொரிந்து கொண்டவர்களாக இருந்தாலும் சரி, திராவிடர்கழகம் மற்றும் தி.மு.க. மீது பழி சுமத்திப் பிரச்சாரம், செய்வது யாருக்குப் பயன்படப் போகிறது என்பதுதான் மிக முக்கியம்?

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று ஆரம்பித்ததே, திராவிட சித்தாந்திகள் தாம். இதெல்லாம் அந்த இந்தி பேசும் அரசியல்வாதிகளுக்குத் தெரியாது. இந்துவிரோத நாத்திகத்தால் தான் திராவிடகட்சிகளின் முகமூடி கிழிந்து, அது “ஆதிபராசக்தி” போன்ற இயக்கங்களில் வெளிப்பட்டு, இன்று, வெளிப்படையாக, பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் என்று மாறிவிட்டது. இதனால் தான், திராவிட நாத்திகர்கள் அலறுகிறார்கள்.

பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தைத் தந்தை பெரியார் தொடங்கிப் பாடுபட்டதன் பலனை பார்ப்பனர் அல்லாதார் இன்று அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

 1. பிராமண எதிர்ப்பும், வேலை வாய்ப்பும்: அடி மட்டத்தில் அழுத்தி நொறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கல்வியும், வேலை வாய்ப்பும் செழித்துக் குலுங்குகிறது என்றால் அந்தப் பார்ப்பன எதிர்ப்பின் விளைச்சலால்தான்[9].
பார்ப்பன எதிர்ப்பு என்பதே எனக்கு ஏ.பி.சி.டி.யாக இருந்தது என்று தந்தை பெரியார் அவர்களே கூறி இருப்பது கவனிக்கத்தக்கதாகும். இத்திசையில் பார்ப்பனர் அல்லாதார் – தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் சிறுபான்மையினர் பயணிக்க வேண்டிய தூரம் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

வேலை விசயங்களில் இப்பொழுது பார்ப்பனர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்பது தெரிந்த விசயமாகி விட்டது. மற்ற ஜாதியினர் தான் முன்னுக்கு வந்துள்ளனர், இதனால், “இடவொதிக்கீட்டில்” தளர்ந்தவர்கள், பிந்தள்ளப்பட்டுள்ளார்கள். இன்றைய போட்டி-உலகத்தில், அவரவர் ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இன்னும் சொல்லப் போனால் 1928லேயே இடஒதுக்கீட்டை முதன் முதலில் செயல்படுத்தியது திராவிடர் இயக்கம்தான் – இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்ததும் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான்[10].

 1. வீரமணி சாதனை என்ற தம்பட்டம்: மத்திய அரசுத் துறைகளில் கல்வி வேலை வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்திட மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகமும் – அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு வீரமணி அவர்களும்தான்.
இன்றைக்கு அந்த இடஒதுக்கீட்டைக் கொல்லைப்புற வழியில் நுழைந்து தகர்த்திட பல்வேறு சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டு வருகின்றன. அதனுடைய சமீபத்திய நச்சுக் கொடுக்குதான் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பதாகும்.

இப்படி சுய-தம்பட்டம் அடித்துக் கொள்வதில் எந்த் பிரயோஜனமும் இல்லை. “பெரியார்” பெயரில் இயங்கிவரும், வீரமணியின் கல்வி நிறுவனங்களிலேயே, இவர் வெறுக்கும் ஜாதியினர் தான் பணம் கொடுத்து சேர்ந்துள்ளனர். இவர் ஒன்றும், இலவசமாக “திராவிடர்களுக்கு” சீட கொடுத்து படிக்கவைக்கவில்லை.

இந்த வகையில்கூட இந்தியாவிலேயே நுழைவுத் தேர்வை சட்டப்படி ஒழித்ததும் தமிழநாடுதான் – கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிதான்.

பெரியார் முஸ்லிம்

 1. அப்பழுக்கற்ற தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் காரணம்: சமூக சீர்திருத்த திசையில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டியாக இருப்பது தமிழ்நாடு என்பது வரையறுக்கப்பட்ட தெளிந்த உண்மையாகும்.
அந்த சீர்திருத்தத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதற்கு யார் காரணம்? எந்த இயக்கம் காரணம்? அழுக்காறற்ற[11] முறையில் அறிவைத் தங்கு தடையின்றிச் செலுத்துவோர் யாராக இருந்தாலும் அதற்கான காரணம் அப்பழுக்கற்ற தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் என்று எடுத்த எடுப்பிலேயே கூறி விடுவர்.

அழுக்காறற்ற முறையில், அப்பழுக்கற்ற……போன்ற அடைமொழிகள் ஏன் தேவைப்படுகின்றன என்று உபயோகித்த வீரமணியே யோசிக்க வேண்டும். தனக்குத்தானே, யாரும் தர-நிர்ணயம் செய்து “அக்-மார்க்” முத்திரை குத்திக் கொள்ளமாட்டார்கள், அழுக்காறற்ற …….. அப்பழுக்கற்ற……போன்ற சான்றிதழ்களையும் கொடுத்துக் கொள்ளமாட்டார்கள்..

தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்களே அவற்றின்மீது புழுதி வாரித் தூற்றுவது என்பது வெட்கக் கேடானதாகும்.

தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்களே அவற்றின்மீது புழுதி வாரித் தூற்றுவது என்பது வெட்கக் கேடானதாகும்: இந்த கடைசி வாக்கியம், வீரமணியை முழுவதுமாக தோலுருத்திக் காட்டுகிறது. பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் என்று ஆரம்பித்து, பிறகு “தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள்” என்று முடித்திருப்பதிலிருந்தே, “பழி ஓரிடம், பாவம் வேறிடம்” என்றுள்ளது என்றும் தெரிகிறது. ஏனெனில், பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் முதலியோரை “தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள்” என்றால், சிரிப்பார்கள்! இதில் பல கேள்விகள் எழுகின்றன:

 1. தந்தை பெரியாரால் பயன் பெற்றவர்கள் யார்?
 2. திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள் யார்?
 3. அவர்கள் ஏன் பெரியார் மீது புழுதி வாரித் தூற்ற வேண்டும்?
 4. அவர்கள் ஏன் திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரித் தூற்ற வேண்டும்?
 5. புழுதி வாரித் தூற்ற வேண்டிய நிலை என்ன?
 6. இப்பொழுது ஏன் அந்நிலை உருவாகியுள்ளது?
 7. உண்மையிலேயே பலன் பெற்றார்களா இல்லையா?
 8. பயன்பெற்றது போதவில்லையா அல்லது அதில் பாரபட்சம் இருந்ததா?
 9. வீரமணி அதனை எப்படி அந்நிலையை இப்பொழுது அறிந்து கொண்டார்?
 10. வீரமணியிடத்திலிருந்து இந்த ஒப்பாரி ஏன் வெளிவர வேண்டும்?

© வேதபிரகாஷ்

19-05-2016

[1] பாமக வெளிப்படையாகவே திராவிட கட்சிகள் ஒழிக்கப்படவேண்டும், மாற்று வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றது.

[2]  தினத்தந்தி போன்ற ஊடகங்களில் வாத-விவாதங்களும் நடத்தப்பட்டன. மக்கள் அவற்றை உன்னிப்பாக கவனித்துள்ளனர்.

[3]  பன்னாட்டு கம்பெனிகள், திராவிடகட்சிகளின் ஊழல் மற்றும் இதர அச்சுருத்தல்கள் காரணங்களினால், விலகி, மற்ற மாநிலங்களில் தங்களது தொழிலைத் தொடங்கினார்கள்.

[4] இவையெல்லாம் “பார்ப்பன” நிறுவனங்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அப்படியென்றால், மற்றவர்களின் நிறுவனங்கள் ஏன் அவ்வாறு அடையாளம் காணப்படவில்லை என்று விளக்கப்படவில்லை. செட்டியார்கள், ரெட்டியார்கள், முதலியார்கள், கவுண்டர்கள் கூட அத்தகைய நிறுவனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்த விசயமே.

[5] திராவிட சித்தாந்தத்தை ஆரம்பத்திலிருந்தே, மற்ற தென்னிந்திய மாநிலங்கள் ஒப்புக் கொள்ளாததால், “திராவிடஸ்தான்”, தமிழகத்தில் சுருங்கி, மறைந்து விட்டது.

[6] கே. வீரமணி, திராவிட தமிழர்களே உஷார்! உஷார்!!, விடுதலை, தலையங்கம்,, பக்கம்.2, திங்கள், 16-05-2016.

[7]  சன்-டிவி, ஜெயா-டிவி, ராஜ்-டிவி, விஜய்-டிவி, மக்கள் டிவி, என்றுள்ள நிறுவனங்கள் பார்ப்பன நிறுவனங்கள் அல்ல. பச்சையான திராவிடர்களின் நிறுவனங்கள் என்பது தெரிந்த விசயமே.

[8] http://viduthalai.in/page-2/122256.html

[9] அப்படியென்றால், திராவிட முதலாளிகள் நடத்தும் “பார்ப்பனர்-அல்லாத” நிறுவனங்களில் ஏன் இந்த அடக்கப்பட்டோர், நொறுக்கப்பட்டோர், முதலியோர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.

[10]  இத்தகைய திரிபு விளக்கம் முதலியவற்றைக் கொடுப்பதில் இவர்களுக்கு ஈடானவர்கள் இவர்களே தான். அம்பேத்கர் இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.

[11] இத்தனை அசுத்தங்கள் “அழுக்காறு, அப்பழுக்கு…..” உள்ளன என்றால், அவற்றை முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: