Archive for மார்ச், 2017

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திர-தந்திர-யந்திர அகோரி ஜாலங்கள் – அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும் என்று இணைய தளம் மூலம் நடக்கும் வியாபாரம் (7)

மார்ச் 23, 2017

 

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திரதந்திரயந்திர அகோரி ஜாலங்கள்அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும் என்று இணைய தளம் மூலம் நடக்கும் வியாபாரம் (7)

Mantrika books arabic-malayala-printed and circulated

இணைதளத்தில் மாந்தீரிகம் செய்வது, புத்தகங்கள் விற்பது வியாபாரமாகி விட்டது: பகுத்தறிவு பேசும், பெரியார் மண்ணில் தான், “ஆவிகள் உலகம்” போன்ற பத்திரிக்கைகள் விற்கப்படுகின்றன. போதாகுறைக்கு, தொலைவழி கல்வி, பயிற்சி என்றெல்லாம் கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு இணைதளத்தில் உள்ளது கொடுக்கப் படுகிறது[1] . “வாழ்வை வளமாக்கவும், நடைமுறை துன்பங்கள் நீங்கவும் தெய்வ பலத்துடன் நாம் சிறப்பாக வாழ்வுமே இந்த மலையாள மாந்திரீக பயிற்சி புத்தகத்தினை வெளியிடுகிறோம், இதனால் பொதுமக்கள் ஜோதிடர்கள், பூசாரிகள், குறி சொல்பவர்கள், ஆன்மிகவாதிகள் எந்த வித முன் அனுபவம் இல்லாதவர்கள் ஆர்வம் சுயவிருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பயிற்சி புத்தகத்தினை வாங்கி பயனடையலாம். இதனால் பல ஆயிரம் பேர்கள் பயனடைந்துள்ளனர்.  இந்த பயிற்சி புத்தகத்தில்

1.        குலதெய்வ அழைப்பு பூஜை முறை,

2.       அஷ்ட கணபதி சித்தி முறை,

3.       ஜனவசியம் தான வசியம்,

4.       கணவன் மனைவி வசியம்,

5.        நம் எதிரிகள் செயல் இழந்து ஸ்தம்பித்து நிற்க,

6.       தோஷம் துஷ்ட சக்தி ஏவல்,

7.        பில்லி சூன்யம் உடன் நிவாரண முறை,

8.       கொடுத்த கடன் வசூலாக்கும் முறை

9.       தீராத நாட்பட்ட வியாதிகள் நீக்கும் அற்புத முறை,

10.     குடும்ப ஒற்றுமை உண்டாக்கும் அற்புத சக்கரம்,

11.      வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உடனே வேலைகிடைக்க,

12.     மனிதர்கள் மரண கண்டம் நீங்கி ஆயள் விருத்தி முறை,

13.     வேறு மந்திரவாதியின் கட்டுகளை தகர்க்கும் முறை,

14.     தொழிலை கெடுக்க மாந்திரீகம் செய்த கட்டுகளுடைக்கும் முறை,

15.     மாந்திரீக பாதிப்பு உள்ளதா என அறிய,

16.     சொர்ண பைரவர் பூஜை முறை,

மேலும் இன்னும் ஏராளமான விசயங்கள் எளிய வழியில் பிரயோகிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். இந்த பயிற்சி புத்தகம் மொத்தம்  3 பாகங்கள் அடங்கியது, ஒரு புத்தகத்தின் விலை 2000 ரூபாய் மொத்தம் 3 புத்தகங்களின் விலை  6000 மூன்று புத்தகத்தையும் வாங்குவோருக்கு 5000 ரூபாய் மதிப்புள்ள குலதெய்வ வசிய அஞ்சனம் ஓன்று இலவசமாக கொடுக்கப்படும்”, இப்படியெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. இன்னொரு இணைதளம்அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும்” என்ற முறையில் அறிவிப்புகள்[2].

Mantrika correspondence course -books- offered for 5000

ஒரு மணி நேரத்தில் ஆவிகளுடன் பேசும் பயிற்சி: “இதுவரை அனைவராலும் மறைக்கப்பட்ட அதிரகசிய அபூர்வ தெய்வீக கலை[3]. பயிற்சிக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே நீங்கள் ஆவிகளுடன் பேசலாம். உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும்நொடிப்பொழுதில் ஆவிகளுடன் பேசலாம். நீங்கள் கூப்பிட்ட உடனேயே ஆவிகள் வந்து உங்களிடத்தில் பேசும். இக்கலையினால் எந்த ஒரு ஆவியினாலும், உங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும், எந்த ஒரு சூழ்நிலையிலும், வரவே வராது. காலை, பகல், இரவு என எந்த வேளையிலும் நீங்கள் ஆவிகளை அழைத்து பேசி, அவர்களது உதவியையும் பெற முடியும். இக்கலையை கற்றுக்கொல்வதினால், முன்னோர் ஆன்மாக்களுடன் பேசுவது மட்டுமில்லாமல், அவர்களது ஆசியும் பெற்று, அவர்களது வழிக்கட்டுதலும் கிடைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவார்கள். நம்முடன் வாழ்ந்து இறந்த ஆன்மாக்களுடன் பேச நினைப்பவர்கள், நமது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய உறவுகளின் இறப்பால் துயரப்படும் நபர்கள், நிச்சயம் இக்கலையை கற்று, அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களின் வழிக்கட்டுதலும், பாசத்தையும் பெற முடியும். வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைக்கும், சரியான தீர்வை நாம் ஆவிகள் மூலம் பெறமுடியும். இக்கலை மிகவும் பாதுகாப்பான, மிகவும் சக்திவாய்ந்த கலையாகும். இக்கலையை கற்றுக்கொள்ளும் மாணவர்களின் கவனத்திற்கு. உங்களைப்போன்றே உங்களை சுற்றி உள்ளவர்களும், நிச்சயம் உறவுகளை பிரிந்து வாடுவார்கள், அவர்களுக்கு நிச்சயம் இந்த கலையை என்னிடம் பழக எடுத்துரைக்கவும். பெண்களுக்கு இந்த பயிற்சி கற்பிக்கப்பட மாட்டாது. 100% MONEY BACK GUARANTEE[4]. குறிப்பு: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இங்கிருந்தபடியே பயிற்சி கொடுத்து 1 மணி நேரத்தில் பேச வைக்க முடியும். பயிற்ச்சி தொகை: ரூ: 10,000”, இப்படி இன்னொரு இணைதளம் விளக்குகிறது[5].

Mantra-tantra-yantra books plenty in market

மந்திரதந்திரயந்திர ஏராளமாக புத்தகங்கள் வெளியாகி வருவது: இந்த மந்திர-தந்திர-யந்திர புத்தகங்கள் என்று பார்த்தால், புத்தகக் கடைகளில் எதையும் விட்டு வைக்காத அளவிற்கு புத்தகங்களை எழுதி, பதிப்பித்துக் குவித்து வைத்துள்ளார்கள்[6]. அவற்றில் 10% கூட பிரயோஜனமில்லாத வகையில், மற்ற மொழிகளில் உள்ள புத்தகங்கள், பழைய பதிப்புகளில் உள்ளவை[7] முதலியவற்றை அப்படியே “ஈ அடிச்சான் காப்பி” முறையில், காப்பியடித்து எழுதப் பட்டவைகளாக இருக்கின்றன. ஜோசியத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். சுலபமாகக் கிடைக்கும் சாப்ட்வேர்களையே மாற்றி ஆயிரக்கணக்கு ரூபாய் விலை வைத்து விற்க முயல்கிறார்கள்[8]. “சித்தர்கள்” பெயரில் ஏகப்பட்ட புரட்டு நூல்கள். ஒரு பக்கம் சித்தர்களை வைத்துக் கொண்டு தமிழ்வெறியோடு, சமஸ்கிருதத்தை எதிர்ப்பதை காணலாம். மறு புறம் சமஸ்கிருத மொழியை தூஷித்து, அதே மொழியில் உள்ள தந்திர-யந்திர படங்களை போட்டு புத்தகங்கள் எழுதுகிறார்கள்[9]. பார்ப்பனர்களின் அயோக்கியத் தனம் என்று சொல்லப்படுகின்ற மந்திரங்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இவர்களே எல்லாவற்றையும் கண்டு பிடித்தது போலவும், எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்குடன், இவ்வாறு அரைகுறை அளவில் கூட இல்லாமல், மிகமோசமாக புத்தகங்களை எழுதி, பதிப்பித்து, பரப்பி வருவது, போலித் தனமாக இருக்கிறது. “திருடுவது எப்படி-திருட்டைத் தடுப்பது எப்படி” என்று எதிர்-புதிருமாக புத்தகங்களை வெலியிடுவது, வியாபாரம் என்று நியாயப் படுத்தலாம். ஆனால், படித்து ஏமாந்தவர்கள் சபித்தால், அது ஏமாற்றியவர்களை பாதிக்குமா-பாதிக்காதா என்று யோசிக்க வேண்டும்.

Tantrik sheets sold - faking

மந்திரதந்திரயந்திர தகடுகள் தயாரிப்பு, வியாபாரம்: பிரம்ம்ப முகூர்த்தத்தில் எழுத்து, நித்திய கர்மாக்களை சிரத்தையாக செய்து, மன-உடல் தூய்மையுடன், ஆராதித்து, பூஜை செய்து, ஒரு மண்டலம், இரண்டு மண்டலங்கள் என்று அவ்வாறு கிரியைகள் செய்து, முறைப்படி தாமிர தகடு தயாரித்து, அதில் சக்கரங்களை-மந்திரங்களை எழுதி, சுருட்டி தாயத்தில் வைத்து, மந்திரித்து, பூஜை செய்து கொடுப்பதற்கு பதிலாக, தொழிற்சாலையில், தகடுகளில் யந்திரங்களில் வெட்டி, எழுத்துகள்-படங்கள் பொரித்து விற்கிறார்கள், சஞ்சிகைகளுடன் இலவசமாகக் கொடுக்கிறார்கள்[10]. ஏன் ரூ 10/- என்று கூட கோவில்களில் விற்கிறார்கள். இதெல்லாம் எந்த வழியில் சரியானது, என்பதை அத்தொழில் செய்பவர்களுக்கேத் தெரியும். போலியாக “படிப்பு சான்றிதழ்கள்”, கள்ள நோட்ட்டுகள் அடிப்பதற்கு சமமான, ஈனத்தனமான, சமூக-விரோத, மனிதத்தன்மையற்ற தொழில் என்றே இவற்றைச் சொல்லலாம். ஆனால், திராவிட அதிகாரம், பாதுகாப்பு, ஆதரவு, முதலியவற்றால், இத்தொழில்கள் அமோகமாக நடக்கிறது. அதனால், கைதான ஒருவன், சசிகலாவைக் காப்பாற்றவே அவ்வாறான “அகோரி” பூஜை செய்தேன் என்று அளக்கிறான்.

Mantrika correspondence course by some people

கஷ்டப்பட்டு உழைக்காமல், கற்காமல், குறுக்கு வழியில் எதையும் அடைய முடியாது: மனிதன் படிப்படியாக, பள்ளியிலிருந்து, கல்லூரிக்குச் சென்று, பட்டம் பெற்று, வேலைக்குச் சென்று சம்பாதித்து, திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை நிர்வகிக்க அடையும் நிலையை, இத்தகைய போலி புத்தகங்கள வைத்து அடையலாம் என்று சில சோம்பேறி மனிதர்களை கவர, ஏமாற்றவே செய்யப்படுகின்ற வேலையாக இருக்கிறது. தனக்கே வழியில்லாமல், இப்படி ஏமாற்றி அலையும் இவர்கள், மற்றவர்களின் நலன்களைப் பற்றி எப்படி கவலைப் பட முடியும் என்று யோசிப்பதே இல்லை. கலை என்று சொன்னால், முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும், ஏதோ “பாஸ்ட் புட்” [துரித உணவகம்] போன்று, துரிதமாக, எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்பதெல்லாம் அபத்தமானது[11]. இன்றைக்கு “காப்பி ரைட்” அறிவுஜீவித்தனத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு முதலியவை அதிகமாகவே பேசப்படுகின்றன. ஆனால், இந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் முதலியோர் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதேயில்லை. நாளைக்கு “நுகர்வோர்” என்ற முறையில், வழக்கு போட்டால், அப்பொழுது தான் புரியும் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-03-2017

Mantrika books printed and circulated

[1] http://src83.blogspot.in/2016/12/blog-post_17.html

[2] http://www.ujiladevi.in/

[3]  சரித்திரம் மறைக்கப்பட்டுள்ள நிலையில், பொய்கள் பரப்படும் நிலையில், அவற்றைப் பற்றிக் கவலைப் படாமல், இப்படி அதிரடி ரீதியில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

[4]  இது சுத்தமான வியாபாரன் என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது. அதாவது, பொருள் நன்றாக இல்லை, பிரயோஜனம் இல்லை, பிடிக்கவில்லை என்றால், திருப்பிக் கொடுத்தால், பணம் வாபஸ் என்ற ரீதியில் செய்யப்படும் ரீதியில், இந்த விளம்பரம் உள்ளதை கவனிக்கலாம்.

[5] http://vasiyam.co.in/en/HOME/

[6] இதில் நர்மதா பதிப்பகம், செண்பகா பதிப்பகம் என்று எல்லோருமே அடக்கம்.

[7] 1940களில் வெளிவந்த பெரிய எழுத்து புத்தகங்கள், 1980களில் வெளிவந்த பிரேமா பிரசுரம் முதலியன.

[8] http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89982

[9] திராவிடத்துவ சித்தாந்திகள், திக-திமுகக் கட்சி ஆதரவாளர்கள், அவர்களுடைய உறவினர்கள் என்றிருப்பவர்கள், இத்தொழிலி அதிகமாக ஈடுபட்டிருப்பதை கவனிக்கலாம்.

[10]  நக்கீரன் போன்ற போலி ஆத்திக, பெரியாரிஸ சித்தாந்த கோஷ்டிகள் செய்து வந்ததை, வருவதை கவனிக்கலாம்.

[11] ஒரு மணி நேரத்தில் ஆவிகளுடன் பேசும் பயிற்சி, http://vasiyam.co.in/en/HOME/

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திர-தந்திர-யந்திர அகோரி ஜாலங்கள் – பரம்பரை தொழில் செய்வது, மாந்தீரீக மாநாடுகள் நடத்துவது, பகுத்தறிவை பாதிக்காதா? – (6)

மார்ச் 22, 2017

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திரதந்திரயந்திர அகோரி ஜாலங்கள் – பரம்பரை தொழில் செய்வது, மாந்தீரீக மாநாடுகள்  நடத்துவது, பகுத்தறிவை பாதிக்காதா? – (6)

Karthikeyan -Rajarahavan-Tantrik - conducted conference -workshop-in 2015

போலீஸார் கைப்பற்றிய பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்: மருதடி குடில், ஆசிரமத்தில், திராவிட பூசாரி, மந்திர-தந்திர-யந்திர வேலைகள் செய்தது விளக்கப்பட்டது. இந்த குடிலில் இருந்து, தடயங்கள் எதையும் போலீசார் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காக, மந்திரவாதி கார்த்திகேயன், தன் ஆதரவாளர்கள் மூலம், குடிலை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது[1]. மந்திரவாதியின், எம்.எம்., நகர் வீட்டில், 11 மண்டை ஓடுகள், ஒரு கூடை மண்டை ஓட்டு துகள்கள், சடலம் இருந்த, 6 அடி மரப்பெட்டி, விநாயகர், காளி, லிங்கம் சிலைகள், ஏ.டி.எம்., கார்டுகள், அவன் பயன்படுத்தி வந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மகேந்திரா சொகுசு கார் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை 20-03-20117 அன்று, பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவன் உருது, மலையாளம், தெலுங்கு மொழிகளில் எழுதிய புத்தகத்தைப் பற்றி விசாரித்தார்கள என்று தெரியவில்லை. போலீஸார் மாற்றுதல், சட்டம் மீறி மயானத்தில் உள்-நுழைதல், பிணத்தை வைத்திருந்ததால் நோய் பரவும் என்ற சட்டமீறல், மதத்தின் பெயரால் ஏமாற்றியது[2] முதலிய பிரிவுகளில் தன் வழக்குப் பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

Karthikeyan Tantrik - conducted conference -workshop-in 2015

2015ல் நடத்திய மூன்று நாட்கள் மாந்திரீக மாநாடு[3]: திராவிட மாந்தீரிகன், பெரம்பலூரில் 2015ல் மூன்று நாட்கள் மாந்தீரீக மாநாடு நடத்தியிருப்பது தமாஷாக இருக்கிறது, ஏனெனில், எந்த பகுத்தறிவுவாதியும் இதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்யவில்லை, பெரியார் பக்தனும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை. “மாந்தீரீக ஆசான்”, “மாந்தீரிக மன்னன்” என்று அட்டகாசமாக, பின்னணி பேனர் வைத்து, இவன் சொற்பிழிவு நடத்தினான். நசீமா பானுவின் கணவனாக இருந்தாலும், ராஜராகவ் என்ற பெயர் கொண்ட அவன், பேன்ட்-சர்ட் சகிதம் நவீன தோற்றத்தில் மாநாட்டை நடத்தியுள்ளான். “கார்புரேட்” ஸ்டைலில் விளக்கம் கொடுத்து கூட்டம் கூடியுள்ளான். சுழலும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி அசத்தியுள்ளான். இதற்காக நாளிதழ்களிலும் விளம்பரங்கள் கொடுத்துள்ளான். “ராஜராஹவன்” என்று தன்னக் குறிப்பிட்டு கொண்டு மூன்று தலைமுறைகளாக மாந்தீரீகம் செய்வதாக சொல்லிக் கொண்டான்[4]. அண்டை மாநிலங்களில் இருந்து நிறைய பேர் கலந்து கொண்டார்கள். அவர்களிடம், ரூ 3,000/- முதல் 5,000/- வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. 300-400 பேர் வந்துள்ளதாக, வீடியோவில் பார்க்கும் போது தெரிகிறது. மந்திரம், தந்திரம், யந்திரம், வசியம், சூனியம், பில்லை போன்றவற்றைப் பற்றி பேசினர், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மூன்றாவது நாளன்று, குறிப்பிட்ட மாந்தீரீகர்கள் தனியாக உட்கார்ந்து, சில விசயங்களைப் பற்றி, பேசினர், கலந்தாலோசித்தனர். விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Karthikeyan Tantrik - conducted conference in 2015- participants

தாத்தா விஜயராகவ ஆச்சாரியின் பேரன் அதே வேலையைமாந்தீரிகம்செய்தது: மாநாட்டில் தாத்தா விஜயராகவ ஆச்சாரியிடமிருந்து கற்றுக் கொண்டு, பிறகு, கேரளா சென்று, அரேபிய-முகமதிய முறைகளையும் கற்றுக் கொண்டதாக அறிவித்தான். ஆக, இதில் குலத்தொழில் செய்வதை எந்த பகுத்தறிவுவாதியும் எதிர்க்கவில்லை. நல்லவேளை, ஒருவேளை, நாளைக்கு “பெரியார் பல்கலைக்கழகம்”, “பெரியார்-மணியம்மை” பல்கலைக்கழகம் போன்றவற்றில், இதைப் பற்றிய பாடம் அறிமுகப் படுத்தினால், அப்பொழுது, இடவொதிக்கீடு என்று கேட்டுப் பிரிக்கலாம். போலீஸார், இம்மாநாடு பற்றிய விவரங்களை விசாரித்தார்களா, போன்ற விவரங்களும் வெளியிடப் படவில்லை. நான்காவது கூட தேறாதவன், எப்படி மாந்திரீக மாநாடு நடத்தினான், புத்தகங்களை வெளியிட்டான், முதலியவை போலீஸாருக்கே ஆச்சரியமாக இருக்கிறாதாம்[5]. 11-03-2017 அன்று கைது செய்யப்பட்டதிலிருந்து, தனது பிரதாபங்களை போலீஸாரிடம் கூறி வருகிறானாம்[6]. ஊடகங்கள் சசிகலா பற்றிய விவரங்கள், இவன் சொன்னதாக முதலில் செய்தியில் வெளியிட்டாலும், பிறகு அமைதியாகி விட்டன.

Karthikeyan Tantrik - interested as his grandfather practiced black magic

ஊடகங்கள் மூடநம்பிக்கை ஆதரிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவது ஏன்?: பெரியாரிஸத்தில் ஊறியவர்கள், பெரியாரின் அடிமைகள் / பக்தர்கள், பகுத்தறிவு பிரகஸ்பதிகள் ஏன் இவ்வாறு மூட நம்பிக்கைகளை ஆதரிக்கும் முறையில் செய்திகளை வெளியிட வேண்டும்?

  1. குடில் கடந்த ஒரு ஆண்டாக காலியாகவே இருந்தது என்கிறது தினகரன்.
  2. இந்த தீ விபத்தில் கொட்டகையிலிருந்த பூஜை பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகிவிட்டன என்கிறது தினத்தந்தி.
  3. திராவிட மந்திரவாதி கார்த்திகேயன் 2016ல் ஆலத்தூர் தாலுகா, மருதடி மலையடிவாரத்தில்ஐந்து ஏக்கரை வளைத்துப்போட்டு குடில் அமைத்து மண்டை ஓடுகளுடன் மாந்திரீகம் செய்துவந்தார் என்கிறது தினகரன்.
  4. பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் இருந்து மருதடி செல்லும் சாலையில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மந்திரவாதி கார்த்திகேயனுக்கு சொந்தமான நிலம் உள்ளது என்கிறது தினமலர்.
  5. ஏப்ரல் 2016ல் கைதானவன் எப்படி வெளியே வந்தான் என்று விளக்கவில்லை.
  6. இப்பொழுது கைதாகி உள்ளேயிருக்கும் போது, “சிறையில் இருந்தவாறே கார்த்திகேயன் குடிலைத் தீப்பிடிக்க செய்துவிட்டதாக ஊர் மக்கள் கருதுவதால் பரபரப்பு நிலவுகிறது”, என்கிறது தினகரன்[7].

Karthikeyan Tantrik - conducted conference in 2015

முஸ்லிம் தொடர்புகள் திகைக்க வைக்கின்றன: தனது பரம்பரை தொழிலை செய்தாலும், கேரளாவுக்குச் சென்று அங்கிருக்கும் முறைகளையும் கற்று வந்ததாக ஒப்புக்கொண்டான். நஸீமா பானு முஸ்லிம் என்று ஊடகங்கள் குறிப்பிடாமல் இருப்பதும் அவர்களது “செக்யூலரிஸத் தன்மையினை” காட்டுகிறதா “ஶ்ரீ மஹா காளி மந்த்ராலயம்” என்பதால், இந்துமதத்தின் மீது பழி போடும் நோக்கம் உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. அல்லது 2016 மற்றும் 2017 கைதுகளில் முஸ்லிம்கள் இருப்பதால், முஸ்லிம்களின் தொடர்பு இதில் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து, அடிக்கடி வந்து செல்கின்றனர் என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. அவன் வீட்டில் அரேபிய மாந்தீரிக புத்தகங்கள் இருப்பதை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். காளி படங்களைப் போட்டு, இந்துமத மந்திரவாதி போன்று சித்தரிக்க முயன்றாலும், இதில் சம்பந்தப் பட்டவர்கள் முஸ்லிம்களாக உள்ளனர்[8]. மேலும், மதமாற்றத்திற்கும் இத்தகைய வேலைகளை பெரம்பலூரில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களை அணுகி, அவர்களது பிரச்சினையை பில்லி-சூன்யம் முறைகளில் தீர்த்து வைக்கிறோம் என்று வளைவீசி வருகின்றனர்[9]. இதையெல்லாம், இந்துத்துவவாதிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

22-03-2017

Kartikeyan and Naseema - the tantrics-Arabic book

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1734932

[2]  நாளைக்கு இந்து மதம் தான் காரணம் என்பான், அதைப் பெரிதாக்கி விவாதங்கள் நடத்தலாம். பொறுத்துப் பார்க்க வேண்டும்.

[3] சன் – டிவி வீடியோ –  https://www.youtube.com/watch?v=G1PcnI9V0XA

[4] Raj TV video, Koppiyam – இளம்பெண் சடலம் மீது அமர்ந்து மந்திரவாதி கார்த்திகேயன் நள்ளிரவு பூஜை !!!, https://www.youtube.com/watch?v=T1Tm3jmUvVA

[5]  “A class IV dropout, he had even conducted a conference on Mantrika. As editor, he publishes books on the subject. It looks like he has lots of rich clients who seek advice and black magic help from him to solve their problems. He had been also spending a lot,” police revealed. Ever since the police picked him up on Saturday [11-03-2017], he had been boasting about his capabilities to the police team. More than 20 skulls were recovered along with many other pooja articles, books and idols of god and goddess from his apartment. It is not clear if he had procured any other body from any graveyards in the past.

DECCAN CHRONICLE. Four more held in black magic case, by  R VALAYAPATHY, Published: Mar 13, 2017, 6:08 am IST; Updated: Mar 13, 2017, 6:20 am IST.

[6] Perambalur police had arrested him in 2015 for his suspicious activities. http://www.deccanchronicle.com/nation/in-other-news/130317/four-more-held-in-black-magic-case.html

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=288578

[8] http://www.perambalur.kalaimalar.com/the-human-body-is-made-to-keep-the-wizards-plea-to-arrest-mantirikam/

[9] http://www.perambalur.kalaimalar.com/in-perambalur-district-efforts-to-increase-proselytizing/

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திர-தந்திர-யந்திர அகோரி ஜாலங்கள், நிர்வாண பூஜைகள், திராவிட சித்து வேலைகள் – தீ பிடித்த குடில் (5)

மார்ச் 22, 2017

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திரதந்திரயந்திர அகோரி ஜாலங்கள், நிர்வாண பூஜைகள், திராவிட சித்து வேலைகள்தீ பிடித்த குடில் (5)

Marudhati cottage where tantic practiced- torched - 19-03-2017

திராவிட மந்திரவாதி, நரபலி, மாந்திரீகம் பற்றி ஏன் விவாதங்கள் நடைபெறுவதில்லை?: பகுத்தறிவு, விஞ்ஞான பூர்வமான விளக்கம் என்றெல்லாம் பேசி ஆர்பாட்டம் செய்யும் பெரியாரிஸ பழங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சாமியார் முதல்வர் ஆகக் கூடாது என்று காரசாரமாக பெரியார் பெயர் சொல்லி வாதிக்கின்றனர். கருப்பாடை அணிந்து “ஏன்டி-கிறைஸ்ட்” சடங்குகள் செய்யும் பூஜாரிகள் போன்று ஆண்கள்-பெண்கள் என்று முகங்களைக் காட்டுகின்றனர்[1]. ஆனால், பெரியார் பிறந்த மண்ணில் மந்திரம்-தந்திரம் நடப்பதை எதிர்க்கவில்லை. இதைப் பற்றி எந்த விவாதமும் இல்லாதிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆவி-பேய் படங்கள் வெளிவருவதும், தொலைகாட்சியில் இத்தகைய நிகழ்வுகளை நியாயப் படுத்துவது போன்ற காட்சிகளை வைப்பதும், அவற்றை திமுக போன்ற திராவிட கட்சிகளின் தொலைகாட்சிகளே காசு கொடுத்து வாங்கி உரிமை பெற்று வெளியிட்டு வருவது, ஒலிபரப்புவது முதலியன, திராவிடத்துவத்தின் போலித்தனத்தை அல்லது இரட்டைவேடத்தைக் காட்டுகிறது.

Srcerers cottage torched - 18-03-2017

திராவிட மந்திரவாதியின் கதை இப்பொழுது தொடர்கிறது: திராவிட மந்திரவாதி எஸ். கார்த்திகேயன் [S. Karthikeyan (33)] 2016ல் ஆலத்தூர் தாலுகா, மருதடி மலையடிவாரத்தில் ஐந்து ஏக்கரை வளைத்துப்போட்டு குடில் அமைத்து மண்டை ஓடுகளுடன் மாந்திரீகம் செய்துவந்தார். ஏப்ரல் 2016ல் நரபலி கொடுக்கப்பட்டது என்ற புகார் எழுந்தது. அப்போதும் அவர் கைது செய்யப் பட்டார். ஆனால், அதே ஆள், இப்பொழுது மறுபடியும், ஒரு பிணத்தை வைத்து பூஜை செய்தான் என்ற புகாரினால், கையும் களவுமாக கைதாகியுள்ளான். மேலும் “ஜல்லிக்கட்டு” கலாட்டா நேரத்தைப் பயன்ன்படுத்திதான், பிணம் சென்னையிலிருந்து, பெரம்பலூருக்கு காரில் அனுப்பியதாக “சன் – டிவி” கூறுகிறது[2]. இவ்வழக்கை சோனல் சந்திரா [Superintendent of Police Sonal Chandra], சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ் விசாரித்து வருகிறார்.

Naseema in her pardha- with police

திராவிட மந்திரவாதிக்கு துணைவி ஒருத்தி, மனைவி இன்னொருத்தி: இவரது மனைவி நசீமா பானு [Naseema Bhanu (21)] விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். ஏற்கனவே கார்த்திகேயன் சென்னையில் இருந்தபோது ஒரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார். அந்த பெண்ணின் தோழி தான் நசீமா என கூறப்படுகிறது. ஏற்கனவே நெருக்கமாக இருந்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டதால் நசீமாவைக் கார்த்திகேயன் தன்னுடன் சேர்த்துக்கொண்டு வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. தனது வசியத்தால் கார்த்திகேயன் ஏன் அவளை இழுக்கவில்லை என்று தெரியவில்லை. ஆக, இந்த திராவிட மந்திரவாதி, பெரியாரிஸத்தை விசுவாசமாக பின்பற்றி வருவது தெரிகிறது. பெரியார் பக்தர்களுக்கு மனைவி, துணைவி என்றெல்லாம் இருப்பது சகஜம் தான். இதற்கெல்லாம் மந்திர்ரம்-வசியம் தேவையில்லை. மருதகுடி மலையடிவாரத்தில் குடில் அமைத்திருந்தபோது, கார்த்திகேயனைச் சந்திக்க அடிக்கடி கார்களில் விஐபிக்கள் பலர் வந்து சென்று உள்ளனர். அண்டை மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு மாந்திரீகம் சொல்லிக் கொடுத்தான்[3]. ஆண்களை பெண்கள் எப்படி வசியப்படுத்துவது, பெண்களை ஆண்கள் எப்படி வசியப்படுத்துவது, போன்றவற்றையும் செய்துவந்தான், நிர்வாண பூஜை செய்தான் என்று ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசியுள்ளன[4]. ஆனால், ஐந்து / எட்டு ஏக்கர் நிலம், நிலத்தை வளைத்துப் போட்டான் / சொந்தம், என்றெல்லாம் வெளியிடுவது தமாஷாக இருக்கிறது.

 Marudhati cottage torched - 19-03-2017

கார்த்திகேயன் குடிலைத் தீப்பிடிக்க செய்துவிட்டதாக ஊர் மக்கள் கருதுவதால் பரபரப்பு நிலவுகிறது: ஏப்ரல் 2016ல் அங்கு கார்த்திகேயனை கைது செய்தபோது பெருமளவில் பணமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. குடில் கடந்த ஒரு ஆண்டாக காலியாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை [18-03-2017] அந்த குடில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் குடில் முழுவதும் எரிந்தது.  போலீசார் வழக்கு பதிந்து, குடிலுக்கு தீவைத்தது யார், மந்திரவாதி கார்த்திகேயனால் பாதிக்கப்பட்டவர்கள் தீவைத்தார்களா, அல்லது பழைய தடயங்களை அழிப்பதற்காக கார்த்திகேயன் ஆட்களே தீவைத்தார்களா என பல கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்[5]. அதேசமயம் சிறையில் இருந்தவாறே கார்த்திகேயன் குடிலைத் தீப்பிடிக்க செய்துவிட்டதாக ஊர் மக்கள் கருதுவதால் பரபரப்பு நிலவுகிறது, என்கிறது தினகரன்[6]. எப்படியிருந்தாலும்ம், அங்கிருக்கும் மண், சாம்பர் முதலியவற்றை போரன்ஸிக் லெபோரட்டிரியில் கொடுத்தாலே, மனித ரத்தம், மிருக ரத்தம் எல்லாம் அங்கிருந்ததா, முதலியவற்றைக் கண்டு பிடித்து விடலாம்.

Srcerers cottage with skulls torched - 18-03-2017

ஆவணங்களை மறைக்க தீவைப்பா?[7]: பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் இருந்து மருதடி செல்லும் சாலையில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மந்திரவாதி கார்த்திகேயனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவில் கோரைப்புற்களை வைத்து கொட்டகை அமைத்து கடந்த ஆண்டு 2016 ஏப்ரல் மாதம் மாந்திரீகம் செய்து வந்ததாக கார்த்திகேயனை பாடாலூர் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அதன் பிறகு அவர் வெளியே வந்து விட்டார்[8]. இந்த நிலையில் மருதடியில் இருந்த கார்த்திகேயனுக்கு சொந்தமான கொட்டகைக்கு மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு [18-03-2017] தீ வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் தீயணைப்பு படைவீரர்கள் அந்த கொட்டகையின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் அந்த கொட்டகை எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த தீ விபத்தில் கொட்டகையிலிருந்த பூஜை பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகிவிட்டன. இந்த குடிலில் முக்கிய ஆவணங்களை மந்திரவாதி பதுக்கி வைத்திருக்கலாம் எனவும், இந்த ஆவணங்கள் போலீசுக்கு கிடைத்து விட்டால் முக்கிய நபர்கள் சிக்கிவிடுவார்கள் என்பதால் கார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பர்கள் தான் தீ வைத்துள்ளனர் என போலீசார் சந்தேகிக்கின்றனர்[9]. எனவே இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்[10].

Cottage torched - DM- 21_03_2017_011_011

ஏப்ரல் 2016ல் நரபலி கொடுக்கப் பட்டதா? (தினத்தந்தி): பெரம்பலூரில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள மந்திரவாதியின் குடில், நேற்று முன்தினம் இரவு, திடீரென தீ வைத்து எரிக்கப்பட்டது. தடயத்தை அழிப்பதற்காக, மந்திரவாதியின் ஆதரவாளர்களால் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரம்பலூரைச் சேர்ந்தவன் கார்த்திகேயன், 31. இவன், பெரம்பலூர் மாவட்டம், மருதடி கிராமத்தில், எட்டு ஏக்கர் நிலத்தில் குடில் அமைத்து, மாந்திரீக பூஜைகள் செய்து வந்தான். இந்த குடிலில், நரபலி கொடுத்ததாக, பொதுமக்கள் பாடாலூர் போலீசில் கொடுத்த புகாரை அடுத்து, 2016 ஏப்., 17ல் போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த கார்த்திகேயன், பெரம்பலூர், எம்.எம்., நகரில் உள்ள ஒரு வீட்டில், இளம்பெண் சடலத்தை வைத்து, அகோரி பூஜை செய்ததாக, 10ம் தேதி பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்.இந்நிலையில், நேற்று முன்தினம் [ஞாயிற்றுக் கிழமை] இரவு, 8:15 மணியளவில், மந்திரவாதி கார்த்திகேயனின், மருதடி கிராமத்தில் உள்ள குடில் தீப்பற்றி எரிந்தது[11]. தகவலறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு, மீட்பு படையினர் மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

© வேதபிரகாஷ்

22-03-2017

[1] “ஏன்டி-கிறைஸ்ட்” சடங்குகள் பற்றி விவரிப்பதால் தான், “டாவின்சி கோட் படம்” தடைசெய்யப் பட்டது. எங்கு உண்மை தெரிந்து விடுமோ என்று தடை விதிக்க

கிருத்துவர்கள் ஆர்பாட்டம் செய்தது ஞாபகம் இருக்கும்.

[2] https://www.youtube.com/watch?v=G1PcnI9V0XA

https://www.youtube.com/watch?v=tURpx51peZs

[3] விகடன், பெண்களை வசியம் செய்வது, ஆவிகளுடன் பேசுவது..! போலீஸையே அதிரவைத்த மந்திரவாதி!, Posted Date : 15:09 (11/03/2017); Last updated : 17:33 (11/03/2017)

[4] http://www.vikatan.com/news/tamilnadu/83364-speaks-to-spirits-mesmerises-women-black-magician-leaves-police-startled.html

[5] தினகரன், மருதடி மலையடிவாரத்தில் மந்திரவாதி குடில் எரிப்பு: தடயம் அழிப்பதற்காகவா?, 2017-03-20@ 21:14:01.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=288578

[7] தினமலர், மந்திரவாதியின் குடிலுக்கு தீ: தடயத்தை அழிக்க திட்டம்?, பதிவு செய்த நாள். மார்ச்.21, 2017, 00.18.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1734585

[9] தினத்தந்தி, மந்திரவாதியின் குடிலுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு, மார்ச் 20, 02:19 AM

[10] http://www.dailythanthi.com/News/Districts/2017/03/20021930/Unidentified-persons-hut-sorcery-arson.vpf

[11] தினமலர், மந்திரவாதியின் குடிலுக்கு தீ: தடயத்தை அழிக்க திட்டம்?, பதிவு செய்த நாள். மார்ச்.21, 2017, 07.07.

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திர-தந்திர-யந்திர அகோரி ஜாலங்கள், கூடு விட்டு கூடு பாயும் மாயங்கள், திராவிட சித்து வேலைகள் (4)

மார்ச் 18, 2017

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திரதந்திரயந்திர அகோரி ஜாலங்கள், கூடு விட்டு கூடு பாயும் மாயங்கள், திராவிட சித்து வேலைகள் (4)

Kartikeyan and Naseema - the tantrics-to save Sasikala

2,000 ஆவிகளை வைத்திருக்கும் நஸீமாகார்த்திகேயன் தம்பதி: இதைவிட அடுத்த அதிர்ச்சியாக, தன்னிடம் 2,000 ஆவிகள் உள்ளன என்றும் அதனை யார் மீது வேண்டுமானாலும் ஏவலாம் என்று கூறியது வேடிக்கையாக இருந்தது. “ஜெர்க் கொடுத்துள்ளார்”, என்று மரியாதையோடு குறிப்பிட்டது அதைவிட வேடிக்கை! மந்திரவாதியா அல்லது சைக்கோவா என்ற சந்தேகம் அவரது பேச்சு காரணமாக போலீசாருக்கு எழுந்துள்ளது[1]. எனவே, அவரை அழைத்து சென்று பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மந்திரவாதி கார்த்திகேயன் அறையில் இருந்து வசிய மை, ஏராளமான இளம்பெண்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இருந்தன. இந்த போட்டோக்கள் இறந்த பெண்களுடையதாக இருக்குமா அல்லது நரபலி கொடுக்க தேர்வு செய்யப்பட்டதா என்ற உச்சக்கட்ட சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்[2]. மந்திரவாதிவீட்டிலிருந்து அடிக்கடி அலறல் சத்தம் கேட்கும் என்று அந்த ஏரியா மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. தேடி பார்த்தும் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது போலீஸாரின் வாதம்!

Black magic things - Perambalur- earlier hut

பிணம் மறுபடியும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, எரியூட்டப்பட்டது: மந்திரவாதி கார்த்திகேயன் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட, இளம்பெண் அபிராமியின் உடல், மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அப்பிணத்தின் மீது ஏதாவது செய்யப்பட்டிருக்கிறதா என்று பரிசோதிக்கப் பட்டது. மஞ்சள், குங்குமம், கருப்புப் பொடி முதலியவை காணப்பட்டன[3]. அவற்றையெல்லாம் வைத்து பிணத்திற்கு பூசை செய்யப்பட்டிருக்கிறது[4]. பிறகு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது[5].  பின், பெரம்பலுார் ஆத்துார் சாலையில் உள்ள மின் மயானத்தில், 12-03-2017 அன்று மாலை, அபிராமியின் உடல் தகனம் செய்யப்பட்டது[6].  ஒரு பிணத்திற்கு இரண்டு விதமான புதைத்தல் மற்றும் எரித்தல் என்று நடந்தது இதுதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. தற்கொலைக்குப் பிறகு, அவளது உடல் இவ்வாறு பாடுபடுவது, திராவிடத்தின் மகத்துவம் போலிருக்கிறது.

Kartikeyan and Naseema - the tantrics-Arabic book

மனைவி நஸீமா, அரேபியபாரசீக சக்கரங்கள், மந்திரங்கள், தகடுகள்: கார்த்திக்கின் மனைவி நஸீமா என்கிறார்கள், அவளும் முஸ்லிம் போலவே காணப்படுகிறாள். அவள் திருமணம் ஆனவள் என்றால், கார்த்திக் எப்படி “கார்த்திக்காக” இருக்கிறான் என்பது மர்மமாக இருக்கிறது. இஸ்காத்தைப் பொறுத்த வரையில், ஆணோ-பெண்ணோ ஒரு முஸ்லீமை கல்யாணம் செய்து கொண்டால் அவன் அல்லது அவள் முஸ்லீமாக மதம் மாற வேண்டும். பிறகு, கார்த்திக் எப்படி, நஸீமாவை மனையாக்கி அப்படியே இருந்திருக்கிறான் என்பது புதிராக இருக்கிறது. அரேபிக், பாரசீகம், மலையாளம், தமிழ் மொழிகளில் மந்திரம், தந்திரம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வித்தைகளைக் குறித்த புத்தகங்கள், படங்கள் முதலியவை இருந்தன[7]. இவ்வித்தியை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க, விளம்பரம் கொடுப்பதற்கும் தயராக இருந்ததாக சொல்லிக் கொண்டான்[8]. அப்படியென்றால், அரேபிய-பாரசீக மொழிகள் தெர்ந்தவர்கள் யார், இவர்களுக்கே தெரியுமா அல்லது தெரிந்தவர்கள் உதவுகிறார்களா என்று தெரியவில்லை. கேரள தொடர்புகள் நிச்சயமாக முஸ்லிம் மாந்திரிகத்துடனான தொடர்பைக் காட்டுகிறது. அங்கிருந்து வந்து இவனை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன, யார் சந்திப்பது என்பதையும் விசாரிக்க வேண்டும்.

Black magic things - Perambalur

போலீஸார் கொடுக்கும் விவரங்கள்[9]: பெரம்பலூர் நாரணமங்கலம் அருகே மருதடி செல்லும் பாதையில் குடில் அமைத்து மாந்திரீகம் செய்ததாக கார்த்திகேயன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  அவர் அருகில் உள்ளவர்களிடம் அதிகம் பேசமாட்டார். கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வாலிபர்கள் கார்த்திகேயனிடம் மாந்திரீகம் பற்றி கேட்டு விட்டு செல்வது உண்டு என்று கூறினர்.  கேரள தொடர்புகள் நிச்சயமாக முஸ்லிம் மாந்திரிகத்துடனான தொடர்பைக் காட்டுகிறது. முன்பு மருதாடி என்ற இடத்தில் இருந்து, இத்தகைய வேலைகளை செய்ததால், 2015ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து விரட்டப் பட்டான். அதனால், இப்பொழுது எம்.எம்.நகருக்கு வந்து விட்டான் என்று ஊடகங்கள் கூறுகின்றன[10]. முன்பு புகாரின் மீது, வீட்டை சோதனையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை, ஆனால், இப்பொழுது, 20 மண்டையோடுகள், எலும்புகள், ரத்தக்கறைத் தோய்ந்த துணிகள் முதலியவைக் கிடைத்துள்ளன. அத்துணிகள், இரண்டு பைகளில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன.

Kartikeyan and Naseema - the tantrics

ஆதாரங்கள் கிடைக்கும் வரை போலீஸார் காத்திருந்தது ஏன்?: ஆக, ஆதாரங்கள் கிடைக்கும் வரை போலீஸார் காத்திருந்தனர் என்று தெரிகிறது. இது அவனது அரசியல் மற்றும் இதர தொடர்புகளைக் காட்டுகிறது. திராவிட அரசியல்வாதிகள் எதற்காக இத்தகைய மூட நம்பிக்கைகளை ஆதரிக்க வேண்டும்? பெரியார் வழி வந்தவர்களுக்கு தான் எதுவுமே இல்லை எனும்போது, இவ்வாறு கோஷ்டிகளை உருவாக்கி, ஆதரித்து, வளர்த்து அவர்கள் மூலம், இவர்கள் என்ன பலனை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை பெரியார் ஆவியை வரவழைத்து, அதன் மூலம், பகுத்தறிவு ரீதியில், பேசி பலனைப் பெறப் போகிறார்களா? முன்பு கூட, ஒருவர், எல்லா ஆவிகளுடனும் தொடர்பு கொண்டாராம், ஆனால், பெரியார் ஆவி மட்டும் வரவில்லையாம்.

Can talk with Periyar Spirit - Amudha

பெரியாருக்கு ஆவி இருந்ததாஇல்லையா?: மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆவி ஆராய்ச்சியாளர்  ஆர். ரமணி, “பெரியார்கிட்ட பேசணும்னு பல தடவை முயற்சி பண்ணிக் கூப்பிட்டும் வரவே இல்லை” என்றார்[11]! இவர் ஆத்திகர் என்றதால் வரவில்லியா அல்லது ஆவியே இல்லையா? அப்படியென்றால், பெரியாருக்கு ஆவி இருந்ததா-இல்லையா என்று தெரியவில்லை. “பேய், பில்லி, சூனியம், ஆவி, சோதிட மோசடிகள்ளென்று குறும்புத்தகத்தை திகவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால், வருடாவருடம் கல்லறைக்கு மாலை போட்டு கும்பிட்டு வருகின்றனர், படையலும் வைக்கின்றனர். அப்படியென்றால், பெரியார் ஆவி அவர்களுக்கு மட்டும் இருக்கின்றது என்றாகிறது. திராவிட சித்தாந்திகளுக்கு இதில் குழப்பம் அதிகமாகத்தான் இருக்கிறது. கருணாநிதி கூட இதைப் பற்றி அதிகமாகவே உளறியிருக்கிறார்[12]. எது எப்படியாகிலும், இப்படி திராவிட கட்சிகள் சூனியம் வைத்துக் கொள்வதாக, ஒருவர் சொல்வது நோக்கத்தக்கது. ஒருவேளை பெரியார் ஆவி வந்து இவர்களைக் காப்பாறுமா என்று பார்க்க வேண்டும்! “ஆவி உமா” என்பவரோ, “பெரியார் ஆவியோட பேச முடியும்” என்றாராம்!

© வேதபிரகாஷ்

18-03-2017

Kartikeyan and Naseema - the tantrics-skull, body etc

[1] தமிழ்.ஒன்.இந்தியா, சசிகலாவை சிறையிலிருந்து மீட்க, கூடுவிட்டு கூடு பாய தயாரான மந்திரவாதி.. மடக்கிப்பிடித்த போலீசார், By: Veera Kumar, Published: Wednesday, March 15, 2017, 18:21 [IST].

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/wizard-arrested-keeping-woman-body-277002.html

[3] Times of India, Re-postmortem done on girl’s body, TNN | Mar 14, 2017, 06.59 AM IST

[4] http://timesofindia.indiatimes.com/city/trichy/re-postmortem-done-on-girls-body/articleshow/57621933.cms

[5] தினமலர், சசிகலாவை விடுதலை செய்திருப்பேன்: ‘அகோரிமந்திரவாதி திடுக் தகவல், பதிவு செய்த நாள். மார்ச்.13, 2017.22:07.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1729591

[7] India Today, Tamil Nadu: 3 arrested along with black magic teacher who used dead body for practice, Pramod Madhav | Posted by Dianne Nongrum, Perambalur, March 12, 2017 | UPDATED 15:13 IST.

[8] Karthikeyan admitted that he used the body to conduct Agori poojas and that he was planning to put an advertisement in the papers stating that he was willing to teach black magic.

 http://indiatoday.intoday.in/story/black-magic-mylapore-cemetery-tantric-arrested-perambalur/1/902850.html

[9] A police officer said that they have got calls in the past claiming that there were black magic rituals taking place at the house of Karthik and Naseema but whenever they went there to conduct a search they could not find anything. But on Friday, police found more than 20 skulls, some human bones and two large bags stuffed with blood-stained clothes.http://www.thenewsminute.com/article/five-people-arrested-smuggling-dead-body-chennai-practicing-black-magic-58493

[10] A police officer told TOI that Karthik has been involved in such cases when he lived at Marudhadi. He said that he was chased away from the place due to his black magic activities. A case was registered in 2015 and then he had moved to MM Nagar.

 http://www.thenewsminute.com/article/five-people-arrested-smuggling-dead-body-chennai-practicing-black-magic-58493

[11] விகடன், பெரியார் ஆவி மட்டும் பேச மாட்டேங்குது, Posted Date : 06:00 (21/11/2014)

http://www.vikatan.com/timepassvikatan/2014-nov-29/special/100938.art

[12] மறைந்த க. இராசாராம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து – 29.2.2008.

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திர-தந்திர-யந்திர அகோரி ஜாலங்கள், கூடு விட்டு கூடு பாயும் மாயங்கள், திராவிட சித்து வேலைகள் (3)

மார்ச் 18, 2017

 

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திரதந்திரயந்திர அகோரி ஜாலங்கள், கூடு விட்டு கூடு பாயும் மாயங்கள், திராவிட சித்து வேலைகள் (3)

perambur-posh bungalow where it was performed

பெரம்பலூர் பங்களாவில் சென்னையில் புதைக்கப் பட்ட பிணம் கண்டெடுக்கப்பட்டது (10-03-2017): பெரம்பலூர் எம்.எம்., நகரில், 10-03-2017 அன்று ஒரு பங்களா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசாருக்கு அங்கு கண்ட ஒவ்வொரு காட்சியும் நடு நடுங்க வைத்தது. வீட்டின் அனைத்து அறைகளிலும் 20-க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள், மந்திர தகடுகள், மாந்திரீகம் தொடர்பான புத்தகங்கள், மை டப்பாக்கள், ஆண்மை விருத்தி மற்றும் ஆஸ்துமா நோய்க்கு பயன்படுத்தப்படும் 40 கடல் குதிரைகள், ஆவிகளுக்கான சிலைகள் இருந்தன. இதற்கெல்லாம் மேல் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், ஒரு மரப்பெட்டியில், இளம்பெண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து, அந்த வீட்டில் தங்கியிருந்த மந்திரவாதி கார்த்திக், 33, அவனது மனைவி நசீமா / தீபிகா, 27 [Deepika aka Nazeema], உட்பட, நான்கு பேரை கைது செய்து விசாரித்தனர். இவர்கள் நான்கு ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனர். தமிழ் ஊடகங்கள் பெரும்பாலும் தீபிகா என்று குறிப்பிட்டாலும், ஆங்கில ஊடங்கள் தீபிகா என்ற நசீமா / நஸீமா என்றே குறிப்பிடுகின்றன.

Naseema or Dheepika changing faces

ஜனவரி 19ல் தற்கொலை செய்து கொண்டு, 20-01-2017 அன்று புதைக்கப் பட்ட பிணம், 21-01-2017 அன்று பெரம்பலூருக்குச் சென்றது: பிரச்னைகளை சரி செய்வதாக கூறி, பில்லி, சூனியம், மாந்திரீக பூஜைகள் செய்து, பலரிடம் கார்த்திக் பணம் பறித்து வந்தது தெரியவந்தது. மேலும், மாந்திரீக வேலைக்காக, மந்திரவாதி கார்த்திக்குக்கு இளம்பெண்ணின் சடலம் தேவைப்பட்டது. இதற்காக, சென்னை மயிலாப்பூரில் கைலாசபுரத்தில் உள்ள மயான ஊழியர்களை, கார்த்திக் அணுகினான். மயான ஊழியர்கள், 20 ஆயிரம் ரூபாய்க்கு சடலத்தை தர சம்மதித்தனர். இதன்படி, ஜன., 18ல் தற்கொலை செய்து, பிரேத பரிசோதனைக்கு பின் புதைக்கப்பட்ட, சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகள் அபிராமி, 21, என்பவரது சடலத்தை, மறுநாள் ஜனவரி 19ம் தேதி, மயான ஊழியர்கள் மூவரும் தோண்டி எடுத்து கொடுத்துள்ளனர்[1]. மயான ஊழியர்கள் வண்டியில் அதை நஸீமா வீட்டிற்கு கொண்டு சென்று கொடுத்தனர்[2]. தோண்டியடுத்த பிணம் என்பதினால், குளிர் பெட்டியுடம் கூடிய ஆம்புலன்ஸ் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. அந்த சடலத்தை, பெரம்பலூரில் உள்ள தன் வீட்டில் வைத்து கார்த்திக், அகோரி பூஜை செய்தது தெரியவந்தது[3]. இதையடுத்து, மயிலாப்பூர் மயான ஊழியர்கள் மூன்று பேரையும், மார்ச்.11, 2017 அன்று, பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மந்திரவாதி கார்த்திக்கின் சிஷ்யனான வினோத்குமார், 32, என்பவன், புரோக்கராக செயல்பட்டு, சடலத்தை பேரம் பேசி, மந்திரவாதிக்கு வாங்கி கொடுத்தது தெரியவந்தது. வினோத்குமாரை, போலீசார் 12-03-2017 அன்று கைது செய்தனர்.

Kartikeyan changing faces-tantric

மயானத்திலிருந்து பிணங்கள், மண்டையோடுகள், எலும்புகள் வெளியே செல்வது எப்படி?: கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றான, ஆனால், கைலாசபுரத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. பிணங்கள் இவ்வாறு தோண்டி விற்பனை செய்யப்படுவதில், பெரிய திட்டம் உள்ளது என்றும் தெரிகிறது[4]. மாணவர்கள், படிப்பிற்காக அவ்வப்போது, மண்டையோடு, எலும்பு முதலியவற்றை காசு கொடுத்து வாங்கிச் செல்வது வழக்கமாம். ஆனால், பிணமே மாந்திரீகத்திற்கு விற்கப்பட்டது திகைப்படைய வைத்திருக்கிறது[5]. சாவிக்குப் பிறகும், மனிதனுக்கு நிம்மதி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது. மனிதன், அடுத்த மனிதனின் உணர்வுகள், நம்புக்கைகளைக் கூட மதிக்காமல், மரத்துப் போன நிலையில் உள்ளதும் கவனிக்கத் தக்கது. மனிதனுக்கு நம்பிக்கை இருப்பதனால் தான், பிணத்தை எரிக்கிறார்கள், புதைக்கிறார்கள், ஆனால், அதையே கேள்விக்குறியாக்கும், இந்த பகுத்தறிவுவாளிகளை என்னென்பது?

perambur-story-coffin and skulls

சிறையிலிருந்து சசிகலாவுக்காக அகோரி பூசை செய்தானாம்: போலீசார் கார்த்திகேயனை கைது செய்து வெளியே அழைத்து வரும்போது, எனக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டார். எதற்கு என்று போலீசார் கேட்டபோது[6], “சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள .தி.மு.. பொதுச்செயலாளர் சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான அகோரி பூஜையின் உச்சக்கட்டத்தில் உள்ளேன். அதற்காக இளம்பெண்ணின் பிணத்தின் மீது அமர்ந்து பல்வேறு பூஜைகள் செய்து எனது மாந்திரீக சக்தியை பெருக்கிக்கொண்டேன். கூடு விட்டு கூடு பாயும் நேரம் பார்த்து நீங்கள் என்னை கைது செய்துவிட்டீர்கள். நான் இந்த இடத்தை விட்டு வெளியே சென்றுவிட்டால் மீண்டும் அந்த சக்தியை பெறுவது கடினம். விரைவில் சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சிக்கு வாய்ப்பு தாருங்கள்”, என்றும், சசிகலாவை முதல்வராக்க நரபலி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்[7]. “சசிகலாவை வெளியே கொண்டுவர கூடுவிட்டு கூடு பாய்ந்தேன்” என்றபோது, போலீஸாருக்கு ஒன்றும் புரியவில்லை. உண்மையை சொல்கிறானா அல்லது தப்பித்துக் கொள்ள அத்தகைய அரசியல் சாயம் பூசப் பார்க்கிறானா என்று போலீசார் திகைத்தனர்.

Dravida pujari, to release Sasi from jail

மாந்திரீகம் கற்றுக் கொடுக்கும் கார்த்திக்கும், பிணத்தோடு சென்ற மாணவனும்: இன்னொரு ஊடக தகவலின் படி[8], பாலாஜி என்பவன், கார்த்திக்கிடம் மாந்திரீகம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்ட போது, அவன் ஒரு இளம்பெண்ணின் பிணத்தை எடுத்துவரச் சொன்னானாம். அதன்படி, பாலாஜி சென்னை கார்புரேஷனில், தன்ராஜ் (37) என்பவனுடன் பேச்சு நடத்தியுள்ளான். அப்பொழுது அவன் அபிராமி என்ற பெண் ஜனவரி.19 அன்று தற்கொலை செய்து கொண்டதாகவும், கைலாசபுரம் கல்லறையில் ஜனவரி 20 அன்று புதைக்கப் பட்டதாகவும் அறிவித்தான். அதன்படி, பாலாஜி ஏற்பாடு செய்து, பிணத்தை, ஜனவரி 21, 2017 அன்று பெரம்பலூருக்கு எடுத்துச் சென்றான்[9]. “வசூல் ராஜா” படம் பாணியில், பிணாத்தோடு வந்த மாணவன் இவனாகத் தான் இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், இனி தமிழக இடுகாடு-சுடுகாடு விவகாரங்களில் மக்கள் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும் என்றாகிறது. இல்லையென்றால், புதைக்கிற மாதிரி புதைத்து, பிணங்களை விற்று விடுவார்கள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

18-03-2017

Muslim tantric real and myth

[1] தினமலர், புதைத்த பிணத்தை தோண்டி எடுத்துஅகோரிபூஜை செய்த மந்திரவாதி, பதிவு செய்த நாள். மார்ச். 13, 2017.06.37.

[2] The young woman’s corpse, exhumed from a corporation burial ground at Kailasapuram in Mylapore, had been ‘bought’ from a small group of men employed there. Two of them were picked up by the Perambalur police and they reportedly admitted to have dug up the body—it was of a young woman of Teynampet who had hanged herself due to prolonged illness—and loaded it into a vehicle for the drive to the apartment of Karthikeyan-Deepika aka Nazeema in Perambalur.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/120317/chennai-decomposed-body-skulls-found-in-tantriks-house.html

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1729321

[4] Deccan Chronicle. Chennai: Decomposed body, skulls found in tantrik’s house, Prince Jebakumar & S Thirunavukarasu, Published. Mar 12, 2017, 1:33 am IST; Updated. Mar 12, 2017, 1:45 am IST.

[5] http://www.deccanchronicle.com/nation/current-affairs/120317/chennai-decomposed-body-skulls-found-in-tantriks-house.html

[6] மாலைமலர், சசிகலாவை வெளியே கொண்டுவர கூடுவிட்டு கூடு பாய்ந்தேன்: போலீசாரை மிரள வைத்த மந்திரவாதி, பதிவு: மார்ச் 15, 2017 16:58.

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/15165817/1073993/wizard-tried-to-sasikala-out-from-the-prison.vpf

[8] TNM Staff, Five people arrested for smuggling dead body from Chennai practicing black magic, Sunday, March 12, 2017 – 08:39

[9] http://www.thenewsminute.com/article/five-people-arrested-smuggling-dead-body-chennai-practicing-black-magic-58493

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் கொக்கோக காம லீலைகள் – கருணாநிதி, வீரமணி திருமணம் செய்து வைக்கும் போது, நாங்கள் ஏவல் செய்யக்கூடாதா என்று புறப்பட்டு விட்டனர்! (2)

மார்ச் 18, 2017

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் கொக்கோக காம லீலைகள் கருணாநிதி, வீரமணி திருமணம் செய்து வைக்கும் போது, நாங்கள் ஏவல் செய்யக்கூடாதா என்று புறப்பட்டு விட்டனர்! (2)

Rajendran, the dravidian priest who took porn video-2

பல குற்றங்களில் ஈடு பட்டுள்ள திராவிட பூசாரி: விசாரணை நடத்திய மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், ராஜேந்திரனை, சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். போலி சாமியார் ராஜேந்திரன், கடந்த, 16 ஆண்டுகளாக, அருள் வாக்கு கூறி பணம் சம்பாதித்து வருகிறார் என்கின்றன ஊடகங்கள். ஆனால், 16 ஆண்டுகளாக எப்படி அத்தகைய போலி வேலையை செய்ய முடியும், எப்படி அனுமதிக்கப் பட்டது என்று ஆராய்ச்சி செய்யவில்லை. திராவிட சித்தாந்திகளும் கண்டுகொள்ளவில்லை, மாறாக, அரசியல்வாதிகளே ஒத்துழைத்துள்ளார்கள். தொடக்கத்தில் இ.பி.யில் பணியாற்றி வந்த அவர், பிறகு வருவாய்துறைக்கு மாறினார். வாடகை நிலத்தில் கோவில் கட்டியிருந்த அவர், கொங்களம்மன் கோவில் அருகே விவசாய நிலத்தை சொந்தமாக வாங்கி, கருப்பசாமி கோவிலும், 20 அடி உயரத்தில் சாமி சிலையும் வைத்துள்ளார். இதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது என்று நாத்திகக் கடவுளைத்தான் கேட்க வேண்டும். கடந்த ஆண்டு 2016ல் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காலபைரவர், சிவலிங்கம் உள்ளிட்ட சாமி சிலைகளை கடத்தி வந்ததாகவும் இவர் மீது புகார் வந்தது. ஆனால், தாசில்தார் விசாரிக்கும் முன், இரவோடு இரவாக ராசிபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்திலேயே சிலைகளை போட்டுவிட்டார். ஆக லஞ்சம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்த கதை தான். 2ஜி விவகாரத்தில் ராஜாத்தி அம்மாள் 180 கோடிகள் கொடுக்கப்பட்டது என்ற போது, திருப்பிக் கொடுத்தாகி விட்டது என்ற கதை தான்! சிலை கடத்தலில் திராவிட பூசாரி ஈடுபட்டதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் போலும். இல்லை, அவர்களையும் கவனித்து விட்டான் போலும்!

Dravida pujari, walking on swords-different types

உள்ளூர் போலீசார் கண்டுக்கொள்ளாத அளவுக்கு லீலைகள் செய்த பூசாரி: ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி நாளில் அருள்வாக்கு கூறுவதாக, மது போதையில் அருள்வாக்கு சொல்வதாகவும், பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக, ராஜேந்திரன் மீது ஏற்கனவே புகார் எழுந்தது. ஆனால், உள்ளூர் போலீசார் கண்டுக்கொள்ளவில்லை. இதெப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இப்பொழுது, மாவட்ட கலெக்டர் நேரிடையாக தலையிட்டு, தற்போது அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்[1]. கடந்த 16 ஆண்டுகளாக அருள்வாக்கு கூறி லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து வருவதாகவும், ஆரம்ப காலத்தில் மின்வாரியத்துறையில் பணியாற்றி வந்த ராஜேந்திரன், லஞ்சம் கொடுத்து வருவாய்த் துறைக்கு மாற்றலாகியுள்ளார்[2]. போலி பூசாரி ராஜேந்திரன், ராணியை மட்டும் தான் ஆபாச படம் எடுத்தாரா? இல்லை ஏராளமான பெண்கள் ராஜேந்திரனால் ஏமாற்றப்பட்டுள்ளனரா? இதுவரை எத்தனை பெண்கள் ராஜேந்திரனிடம் சிக்கி பணத்தையும், மானத்தையும் இழந்துள்ளனர்? என்பதை கண்டறிய ராஜேந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்[3]. மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு, பணம் பறிக்கும் போலி சாமியார்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கிறது இந்த சம்பவம்[4].

Dravida pujari, fake etc

“போலி பூசாரி” என்று குறிப்பிடுவது ஏன்?: “திராவிட பூசாரி”, “நாத்திக பூசாரி”, “அரசியல்வாதிகளின் பூசாரி” என்பதால், அவனி “போலி பூசாரி” என்று குறிப்பிடுகிறார்கள் போலும். பிறகு, கருணாநிதி, வீரமணி போன்றோர் திருமணம் செய்து வைக்கின்றானரே, அவர்களை “திராவிட பூசாரி” என்பதா அல்லது “போலி பூசாரி” என்பதா? இல்லை, இனிமேல் திருமணம், தாலியறுப்பு விழாக்களுக்கு தலைமை தாங்குவது, செய்து வைப்பது முதலியவற்றை விட்டு விடுவார்களா, ஆயிர/லட்சக்கணக்கில் “தக்ஷிணை” வாங்குவதை நிறுத்தி விடுவார்களா? பகுத்தறிவு பேசிக்க்கொண்டு தானே, இந்த வியாபாரத்தையும் நடத்தி வருவார்கள்? கடவுள், ஆன்மா, முதலியவை இருக்கின்றன அல்லது இல்லை என்ற நிலைகளும் நம்பிக்கைதான். மனிதனுக்கு நோய், உபாதை, மூப்பு முதலியவை நாத்திகன்-ஆத்திகன் இருவருக்குமே தான் வருகின்றன. அப்படியிருக்கும் போது, நாத்திக அரசியல்வாதிகள் திருட்டுத் தனமாக, இத்தகைய பூசைகளை செய்ய, திருட்டுத் தனமாக, ரகசியமாக பூசாரிகளை, மாந்திரீகர்களை, ஜோசியர்களை வைத்துள்ளார்கள் என்று தெரிகிறது. இதனால் தான், ஆத்திகர்களின் பெயர் கெடுகிறது. நாங்களும், தீச்சட்டி எடுக்கிறோம், அலகு குத்துகிறோம் என்று இப்படி ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிகிறது.

Madurai Adheenam with Viramani DK

மது, மாது, பௌர்ணமி, அமாவாசை என்றெல்லாம் தேர்ந்தெடுத்து பூசை செய்யும் பூசாரி: திராவிட பூசாரிகள் ரகசியமாக மாந்த்ரீக வேலைகளில் ஈடுபட்டு வந்தது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். 1960களில் வீடுகளிலிருந்து, யாரையாவது காலி செய்ய வேண்டும் என்றால், அத்தகைய முறைகளை கையாண்டு வந்தார்கள். அதாவது மந்திரித்த எலுமிச்சைப் பழத்தை வீட்டில் போட்டு வருவது, கழிவு-பொம்மை வைப்பது, கழிவு எடுக்கிறேன் என்று வருவது, காசுப் பிடுங்கிக் கொள்வது வழக்கமாக இருந்தது. இப்பொழுது, ஜெயலலிதா இறந்த பிறகு, திராவிட பூசாரிகளிடம் இவை ஆரம்பித்து, வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது. பவுர்ணமியன்று தனியாக வரச்சொல்லி, பூஜை செய்துள்ளார். அதன்படி பூஜைக்கு வந்த அவரிடம் மஞ்சள் துணியை கொடுத்து மங்களம் உண்டாக இந்த துணியை அணிந்து வருமாறு கூறியுள்ளார் என்கின்றன செய்திகள். திராவிட பூசாரி மஞ்சள் பதிலாக கருப்புத் துணியைக் கொடுத்திருக்கலாமே? ஏன் சிகப்புக் கூட இருக்கலாம், ஆனால், மஞ்சளில் மகிமை என்று கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது மஞ்சள் துண்டு போன்றதற்கு அர்த்தம் என்ன என்று விளங்கியிருக்கும். நாத்திகம் பேசி, ஊரை ஏமாற்றி வரும் கரு கூட மஞ்சள் துண்டைப் போட்டிருப்பது கவனிக்கலாம்.

Dharmapura-adhinam-bows-down-to-Karu

Dharmapura-adhinam-bows-down-to-Karu

நாத்திக-பகுத்தறிவு-பெரியாரிஸ பூசைகள், மாந்திரீக வேலைகள், ஏவல்கள், பில்லி-சூன்ய கிரியைகள் முதலியவை வளர்ந்த விதம்: கருணாநிதி முதல் வீரமணி வரை இந்துவிரோதம் தூஷணம் பேசி, தூஷித்து வரும் திராவிட பூசாரிகள் ஒரு பக்கம் திருமணங்களை செய்து வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் “தாலியறுக்கும்” கழிசடை, கருமாந்திர வேலைகளையும் செய்து வருகிறார்கள். இதனால், திராவிடத்தில் ஊறிப் போன, நவீன நாத்திக பூசாரிகள், “திராவிட தெய்வங்களை” வைத்துக் கொண்டே, மக்களை பகுத்தறிவோடு ஏமாற்ற திட்டமிட்டு, 1960களிலிருந்து செய்து வருகிறார்கள் போலும். முன்பு ரகசியமாக செய்து வந்தனர். இப்பொழுது, 60 ஆண்டுகளில் தனியாக ஒரு கூட்டத்தையே உருவாக்கி விட்டனர் போலும். அதனால் தான், கருணாநிதிக்கு, 16-வயது பெண் திருமணம் செய்து வைக்கப் பட்டு, ஆயுள் நீட்டிக்கப் பட்டது என்ற “நாத்திக கிசுகிசு” வந்தது. அவ்விவகாரம் ஒரு நடிகையோடு இணைத்துப் பேசப்பட்டது. ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று யோகா செய்ய ஆரம்பித்தார், ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டார், பிறகு, மஞ்சள் துண்டு விவகாரம் வந்தது. இப்படி, மறைமுக ஆதரவு கொடுத்ததால், நாத்திக-பகுத்தறிவு-பெரியாரிஸ பூசைகள், மாந்திரீக வேலைகள், ஏவல்கள், பில்லி-சூன்ய கிரியைகள் முதலியவை வளர்ந்தன. ஆக இப்பொழுது, ஒரு அகோரி-நரபலி திராவிட சாமியார் உருவாகி விட்டான்!

© வேதபிரகாஷ்

18-03-2017

Karuppusamy - illustrative

[1] தமிழ்.ஒன்.இந்த்இயா, ராத்திரி நேரத்து பூஜையில்பெண்களை ஆபாச படம் பிடித்து பண வேட்டைவருவாய் ஆய்வாளர் கைது, By: Lakshmi Priya, Published: Thursday, March 16, 2017, 12:45 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/ri-from-namakkal-arrested-demands-money-taking-dress-changing-video-of-lady-277065.html

[3] பாலிமர் செய்தி, நாமக்கல்: அருள்வாக்கு சொல்வதாக பெண்ணை ஆபாச படம் எடுத்த பூசாரி, 16-Mar-2017 00:49

[4]http://polimernews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A/

 

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் கொக்கோக காம லீலைகள் – கருணாநிதி, வீரமணி திருமணம் செய்து வைக்கும் போது, நாங்கள் ஏவல் செய்யக்கூடாதா என்று புறப்பட்டு விட்டனர்! (1)

மார்ச் 17, 2017

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் கொக்கோக காம லீலைகள் கருணாநிதி, வீரமணி திருமணம் செய்து வைக்கும் போது, நாங்கள் ஏவல் செய்யக்கூடாதா என்று புறப்பட்டு விட்டனர்! (1)

Rajendran, the dravidian priest who took porn video-2

திருச்செங்கோட்டில் இருக்கும் திராவிட பூசாரி: திருச்சேங்கோடு பெரியார் ராமசாமி நாயக்கர் பிறந்த ஈரோடுக்கு அருகில் தான் உள்ளது. இங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலைப் பற்றி தான் பெருமாள் முருகன் என்ற கம்யூனிஸ, நாத்திக, இந்து விரோதி மற்றும் திராவிட எழுத்தாளர் ஆபாசமாக எழுதி புத்தகத்தை வெளியிட்டதும், பிறகு நடந்த ஆர்பாட்டம், எதிர்ப்பு பிரச்சாரங்களும் தெரிந்த விசயமே. இப்படி இருக்கும் நிலையில், ஒரு திராவிட பூசாரி, தமிழக அரசு ஊழியராகவும் இருந்து கொண்டு, ஆபாச வீடியோ எடுத்து, காமலீலைகளை செய்து கொண்டே அருள்வாக்கு சொன்ன செய்திகள் வெளிவந்துள்ளன. சண்டி கருப்புசாமி அருள் கிடைத்ததோ இல்லையோ, பெரியார்சாமியின் அருள் அதிகமாகவே இருந்து வந்ததால், ஒவ்வொரு போஸ்டிங்கிலும் காசு கொடுத்து, காசு அள்ளியிருக்கிறாராம் இந்த பலே திராவிட பூசாரி! 1967 முதல், திராவிட ஆட்சியில், வேலைக்கு, ஆர்டருக்கு, போஸ்டிங்-மாற்றலுக்கு என்று காசு கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிந்த விசயமே. பெரியார் பிறந்த மண்ணில் பிறந்தால் என்ன, அந்த பழக்க-வழக்கங்களை மாற்றவா முடியும்? திராவிட அரசு பூசாரி பயிற்சி கொடுத்தது என்கிறார்களே, இத்தகைய பயிற்சிகள் எல்லாம் கூட கொடுத்தார்களா என்று தெரியவில்லை. வீரமணி முதல் மற்ற பூசாரிகள் எல்லாம் கோவிலில் வேலை கொடு என்று கத்திக் கொண்டிருந்தார்களே, அவர்கள் இப்படித்தான் வேலை செய்வார்கள் போலும்!

Rajendran, the priest who took porn video

திராவிட பூசாரியிடம் அருள்வாக்கு கேட்ட ராணி: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொல்லப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி ராணி, 45. [திராவிட வழி வந்ததால் அண்ணாதுரை, ராணி என்று பெயர் வைத்துக் கொண்டதில்லாமல், அதே போல கணவன்–மனைவி என்றிருக்கிறார்கள்] இவர் சங்ககிரி ரோட்டில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார்[1]. அண்ணாதுரைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, நடக்கமுடியாமல் அவதிப்பட்டார்[2]. இதனால், ராணி, நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டி, சண்டி கருப்புசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்[3]. சண்டிகருப்பசாமி கோவில் பூசாரியான ராஜேந்திரன், 41, முள்ளுக்குறிச்சி வருவாய்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்[4]. இதனால், வருவாய்துறை அலுவலர்கள், அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட பழக்கத்தை, தன் கோவில் வருவாய்க்கு பயன்படுத்திக்கொண்டார். திராவிட அதிகாரிகள், அரசியல்வாதிகள் எப்படித்தான் இதையெல்லாம் நம்பினார்களோ தெரியவில்லை. ஒருவேளை பெரியார் ஆவியே வந்து அருள்வாக்கு சொன்னது என்று நம்பினார்களோ என்னமோ? ஆனான பட்ட திராவிட குஞ்சுகள், பிஞ்சுகள், பழங்கள் என்று பலர் வந்து சென்றதை பார்த்த ராணி, அவரிடம் தனது கணவரின் பிரச்சினையைக் கூறி வாக்கு கேட்டுள்ளார்.

Rajendran, the dravidian priest who took porn video

பௌர்ணமி இரவன்று தனியாக வரச் சொன்ன திராவிட பூசாரி: திராவிட பூசாரி திராவிட கடவுளை தியானித்து, அருள்வாக்கில், இதில், அண்ணாதுரை குணமாக, எண்ணெய் தருகிறேன், அதற்கு, 4.2 லட்சம் ரூபாய் செலவாகும் எனக்கூறினார். என்னடா இது, எண்ணைக்கு இப்படி லட்சங்களில் கேட்பார்களா என்று ராணி யோசிக்கவில்லை போலும், கணவனுக்காக கொடுக்கத் தயாரானார், கொடுத்தும் விட்டார். பணத்தை வாங்கி கொண்டார். பிறகு, பவுர்ணமியன்று தனியாக வரச்சொல்லி, பூஜை செய்துள்ளார். சண்டி கருப்புசாமிக்கு பூசை செய்தாரா அல்லது பெரியாருக்கு  பூசை செய்தாரா என்பதெல்லாம், அந்த பரிசுத்த ஆவிக்குத்தான் தெரியும் போலிருக்கிறது. அதன்படி பூஜைக்கு வந்த அவரிடம் மஞ்சள் துணியை கொடுத்து மங்களம் உண்டாக இந்த துணியை அணிந்து வருமாறு கூறியுள்ளார். அதற்கு, 80 ஆயிரம் ரூபாய் தனியாகப் பெற்றுக்கொண்டார். அப்போது, மஞ்சள் உடை மாற்றிக்கொண்டு வா எனக்கூறி, ராணியை ஒரு அறைக்குள் அனுப்பி வைத்தார்.

Yellow cloth – tantric Rajendran

ஆடை மாற்றுவதை ஆபாச படம், வீடியோ எடுத்த திராவிட பூசாரி: அங்கு ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கேமிராவால் ராணி ஆடை மாற்றுவதை ஆபாச படம், வீடியோ எடுத்தார்[5]. அந்த ஆபாச படத்தை காட்டி ராணியிடம், அடிக்கடி பணம் பறித்துள்ளார். எண்ணெய் தடவியும் தன் கணவர் குணமாகததால், பூஜைக்கு கொடுத்த பணத்தை ராணி திரும்ப கேட்டு வந்தார். அப்போது ஆபாச படத்தை மொபைல், நெட்டில் வெளியிடுவேன் என, ராஜேந்திரன் மிரட்டியுள்ளார்[6]. அதாவது அந்த அளவுக்கு நன்றாக நவீன-திராவிட சாமியாக இருக்கிறார். இதையடுத்து, கோவிலுக்கு வந்து தகராறு செய்வேன் என, ராணி கூறியதை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக, ராஜேந்திரன் கோவிலுக்கு வந்து பூஜை செய்யவில்லை, அருள் வாக்கும் கூறவில்லை. பக்தர்கள் ராஜேந்திரன் எங்கே என்று கேட்டதற்கு, ராஜேந்திரனின் கூட்டாளிகள், ‘அவர் சபரிமலை சென்றுவிட்டார்; உடல் நிலை சரியில்லை’ என, கூறி சமாளித்து வந்தனர். கடந்த, 15 நாட்களுக்கு முன் போலீஸ் பாதுகாப்புடன் ராஜேந்திரன் அருள் வாக்கு கூறியுள்ளார். நியாயம் கேட்டுவந்த ராணியை, உள்ளூர் போலீசார் மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனால், விரக்தியடைந்த ராணி, இது குறித்து கடந்த 123-03-2017, திங்கட்கிழமை, நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார்.

Yellow cloth – tantric Rajendran-oil

பாதிக்கப்பட்ட பெண் 13-03-2017 அன்று கொடுத்த புகார் விவரம்[7]: “நானும், என் கணவர் அண்ணாதுரையும் சங்ககிரி ரோட்டில் கோர்ட்டுக்கு எதிரே பழைய இரும்புக்கடை வியாபாரம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த 2013ம் ஆண்டு, எனது கணவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தற்போது நடக்க முடியாத நிலையில் உள்ளார். சில மாதங்களுக்கு முன், எங்கள் வீட்டில் குடியிருந்த சின்னப்பிள்ளை என்பவர், ‘உங்கள் கணவருக்கு செய்வினையால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். முள்ளுக்குறிச்சியில் ஆர்ஐ., அலுவலகத்தில் உதவியாளராக உள்ள எனது அக்கா மகன் ராஜேந்திரன், நாமகிரிப்பேட்டை அரியாகவுண்டம்பட்டி சண்டி கருப்புசாமி கோயில் பூசாரியாக உள்ளதால் செய்வினையை எடுத்து விடுவார்என கூறினார். இதை நம்பி, எனது கணவரை அழைத்து சென்றேன். என் கணவரை பரிசோதித்த ராஜேந்திரன், அவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, தான் கொடுக்கும் எண்ணெயை கணவரின் உடல் மீது தேய்க்க வேண்டும் எனவும், இதற்காக 4,20,000 செலவாகும் எனவும் கூறினார்.

 

லட்சங்கள் கொடுத்தும் எண்ணை கொடுக்கவில்லை: ராணியின் புகார் தொடர்கிறது: அவர் கேட்ட தொகையை கொடுத்து 6 மாதத்திற்கு மேல் ஆகியும், ராஜேந்திரன் இன்னும் எண்ணெய் கொடுக்கவில்லை. இதுகுறித்த கேட்ட போது, சக்தி வாய்ந்த செய்வினை வைக்கப்பட்டுள்ளதால், சண்டி கருப்புசாமி கோயிலுக்கு பவுர்ணமியன்று நீ தனியாக வந்து பூஜை செய்ய வேண்டும் என ராஜேந்திரன் கூறினார். இதற்காக 80 ஆயிரம் வசூலித்தார்.  இதையடுத்து பவுர்ணமியன்று நான் பூஜைக்கு சென்ற போது, என்னை மஞ்சள் உடை உடுத்தி வருமாறு ராஜேந்திரன் கூறினார். நான் உடை மாற்றியபோது, என்னை மறைந்திருந்து வீடியோ எடுத்துக்கொண்டார். இதை வைத்துக் கொண்டு, என்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வருகிறார். இதுபோல் பல பெண்களிடம் மோசடி செய்து, ராஜேந்திரன் பணம் கேட்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே, போலி சாமியாரான ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

17-03-2017

Yellow cloth – tantric Rajendran-oil- puja alone

[1] வெப்துனியா, நள்ளிரவு பூஜை; பெண்களை ஆபாச படம் பிடித்து பண வேட்டை; வருவாய் ஆய்வாளர் கைது, Last Modified: வியாழன், 16 மார்ச் 2017 (13:32 IST)

[2] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/men-threatened-women-by-showing-her-scandal-video-and-earned-money-117031600026_1.html

[3] தமிழ்.முரசு, பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டல்அரசு ஊழியர் சஸ்பெண்ட், 3/16/2017 3:40:00 PM

[4] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=105091

[5] தினமலர், சண்டிகருப்புசாமி பெயரில் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து பணம் பறித்த வருவாய்துறை ஊழியர் சஸ்பெண்ட், பதிவ்ய் செய்த நாள் மார்ச்.16, 2017. 07:34.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1731651

[7] தினகரன், பெண்ணை ஆபாச படம் எடுத்து பணம் பறித்த போலி சாமியார் கலெக்டரிடம் பரபரப்பு புகார், 3/14/2017 12:23:23 PM.

[8] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=693300