Archive for ஒக்ரோபர், 2021

நாத்திகர்கள், திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகள் வள்ளலாரைப் பிடித்துக் கொள்வதேன்? மாமிசம் சாப்பிட்டுக் கொண்டு, சாராயம் குடித்துக் கொண்டு சன்மார்க்கம் பேச முடியுமா? ஜோதியில் கலக்க முடியுமா? (2)

ஒக்ரோபர் 29, 2021

நாத்திகர்கள், திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகள் வள்ளலாரைப் பிடித்துக் கொள்வதேன்? மாமிசம் சாப்பிட்டுக் கொண்டு, சாராயம் குடித்துக் கொண்டு சன்மார்க்கம் பேச முடியுமா? ஜோதியில் கலக்க முடியுமா? (2)

ஸ்டாலினுக்கு, சேகர் பாபுவுக்கு நன்றி தெரிவிக்கும் உள்ளூர் பிரமுகர்கள்: இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு அதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மிகச் சிறந்த முறையில் அதை செயல்படுத்தி வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கு நன்றி தெரிவிக்கவும், சர்வதேச மையத்திற்கான பொருள் உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து தரவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயங்கிவரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை சார்பாக அதன் பொறுப்பாளரும் எஸ்.எஸ்.எம் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவருமான பா மஞ்சுளா, ஒருங்கிணைப்பாளர் நா. சங்கரராமன், செயற்குழு உறுப்பினர்கள் இந்திரஜித், சந்திரசேகர், விக்னேஷ், ஞானசம்பந்தம், அமெரிக்க வாழ் சன்மார்க்க சங்கத்தை சார்ந்த முருகேசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து வாழ்த்துக்களையும், வள்ளலார் பல்கலைக்கழகம் அமைய வேண்டி விண்ணப்பத்தையும் வழங்கினார். தலைமைச் சங்க பொதுச்செயலாளர் வெற்றிவேல் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசின் துணையோடு பல சர்வதேச மையத்திற்கான பணிகளில் பங்கு பெறவும் அதற்கான திட்டங்களை அரசின் அனுமதியோடு மேற்கொள்ளவும் உறுதி அளித்துள்ளனர்.

கருணையில்லா ஆட்சி கடிந்து ஒழிந்துஉருவாகி இருக்கிறது கருணை மிகு ஆட்சி! 07-10-2021 முரசசொலி தலையங்கம்[1]: தன்னைச் சந்தித்த சங்கராச்சாரியார், சமற்கிருதத்தை அனைத்து மொழிகளுக்குமான தாய்மொழி என்று சொன்னபோது, அப்படியானால் ‘தந்தை மொழி தமிழ்’ என்றவர் வள்ளலார். “வட நாட்டு சாமியார்களை போற்றும் தமிழனே வடலூர் வள்ளலார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்?’’ என்று கேட்டவர் பெரியார். “இராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கர் எந்த விதத்தில் அவரை விடத் தாழ்ந்தவர். அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண்டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரையாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியதென்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி, உனக்கு இவ்வளவு ஆரியப்பற்று? இனியேனும் இன உணர்வு கொண்டெழு தம்பி! உன் இனத்தான் எந்த விதத்திலும் அறிவிலோ, ஆற்றலிலோ தாழ்ந்தவன் அல்ல என்பதை இன்றே உணர்வாய்” என்று எழுதியவர் தந்தை பெரியார்.திடீரென்று இராமலிங்க அடிகளைப் பற்றி தி.மு.க பேச ஆரம்பித்திருக்கிறது என்று நினைக்கக் கூடாது. கருணையும் அன்பும் வற்றிப் போய் – வன்மம் பிரித்தாளும் சதிச்சூழ்ச்சிகளும் முற்றிப் போய்வரும் இக்காலத்தில் ‘தனிப்பெரும் கருணை’ நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிவித்து இருப்பது ஒரு வகைப்பட்ட பண்பாட்டுப் புரட்சியே!, என்று ஏன் தீர்மானித்தோம் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது[2].

இராமலிங்கர் முருகனைக் கண்ட, தியாகராஜரைப் போற்றிப் பாடிய தீவிர சைவர்: இராமலிங்கர் (1823-1874) நிச்சயமாக சைவர் தான், அதிலும் தீவிர சைவர். 1832ல் முருகனைக் கண்ணால் கண்டவர், பிறகு மற்ற கடவுளர்களையும் பார்த்திருக்கிறார். திருவொட்டியூர், ஶ்ரீதியாகராஜரின் கோவிலுக்கு தினமும் செல்வார்.  1835ல் ஶ்ரீதியாகராஜரைப் போற்றி பாடல்களை இயற்றியுள்ளார். சிதம்பரம் நடராஜர் மீதும் ஆழ்ந்த பக்தி கொண்டார். அவரது இறைத் தேடல்களில் மற்ற மதத்தினரின் இடையூறல், வாத-விவாதங்கள், முதலியவற்றால், சிக்குண்டார். சில பாடல்களில் இவருக்கு பெண்களின் சகவாசமும் இருந்ததாகக் காட்டுகிறது. 1850ல் 27 வயதில், தன்னுடைய அக்காள் உண்ணாமலை அம்மாளின் மகளான தனம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், முறையான இல்லற வாழ்க்கை வாழவில்லை. பெரிய-சமரச-சித்தாந்தங்கள் எல்லாம் போதிக்கும் இவர் தனது மனைவியை அவ்வாறு விட்டது கேள்விக்குரியாகும்[3]. உருவ-அருவ வழிபாடு, சமஸ்கிருதம்-தமிழ், புதைப்பது-எரிப்பது, ரசவாதம், சாகாக்கலை போன்றவற்றில் ஈடுபட்டு, பக்தர்கள், தீவிர பின்பற்றுவோர் முதலியோர்களால் அவரது ஆன்மீக-இறைத்தேடல் திசை மாறியது. பொதுவாக இப்படி தோன்றினாலும், அவர் பாடல்களை கவனமாகப் படித்தால், சைவத்தைத் தான் போற்றுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சமகால சுவாமிகளுக்கு எப்படித் தெரியால் போனது?: குமரஸ்வாமி தேசிகர் (1711-1810), சுந்தரேச தேசிகர் (1817-1878), ஆறுமுக நாவலர் (1822-1879), பாம்பன் சுவாமிகள் (1848-1929), ஸ்வாமிநாத தேசிகர் / சூசை (1860-1939) போன்றோர் இவர்காலத்தில் சென்னையில் வாழ்ந்துள்ளனர் மற்றும் வந்துள்ளனர். ஆகவே, ஆறுமுக நாவலர் போல மற்றவர்களும் இவரை சந்திந்திருப்பர். 1874ல் இவர் மறைந்த போது, குமரஸ்வாமி தேசிகருக்கு வயது 63, சுந்தரேச தேசிகருக்கு 57, ஆறுமுக நாவலருக்கு 52, பாம்பன் சுவாமிகளுக்கு 26, ஸ்வாமிநாத தேசிகருக்கு 14 – ஆகவே, இவர்களுக்கு எல்லாம் விசயம்-உண்மை நிச்சயம் தெரிந்திருக்கும். வள்ளலார் அப்படியே மறைந்து விட்டார் என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஸ்வாமிநாத தேசிகர் விசித்திரமானவர்[4], கிருத்துவத்தை விமர்சித்து நூல்களை எழுதியவர். இறக்கும் முன்னர் சூசை என்ற பெயரோடு கிருத்துவர் ஆகி விட்டதாக கதைகளும் உண்டு. நிச்சயமாக ஆறுமுக நாவலர் மற்றும் பாம்பன் சுவாமிகள் சும்மா இருந்திருக்க மாட்டார்கள். பாம்பன் சுவாமிகள் “மந்திர-தந்திர-யந்திர” உபாசானைகளில், வித்தைகளில் ஈடுபட்டவர், முருக பக்தர்[5], ஆகவே, முருகனையே நேரில் பார்த்த ராமலிங்கரை, சந்திந்து விவரம் அறிந்திருப்பார். மேலும், இவர்களது அக்தர்கள், சீடர்கள் பின்பற்றுபவர்கள் இவ்விவகாரங்களை அறிந்திருப்பர். ஆகையால், யாருக்குமே தெரியாமல் போனது விசித்திரமாக உள்ளது.

இந்துஅறநிலையத் துறை மூலம் மடங்களைப் பிரிக்கும் வேலை நடக்கிறதா?: இந்து அறநிலையத் துறையின் கீழ் வரும் மடங்களை ஒருவேளைப் பிரிக்க, இத்தகைய திட்டங்களைப் போடுகிறார்களா என்றும் கவனிக்க வேண்டும். திமுக அமைச்சர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு கோவில்-மடங்கள் நிலங்கள் விற்றதில் சில மடாதிபதிகள் சிக்கியுள்ளனர். அவை நீதிமன்றங்களுக்கும் சென்று அவர்களின் பெயர்கள், நடவடிக்கைகள் பதிவாகி உள்ளன.  அவர்களும் “இந்துக்கள் அல்ல,” என்று பேசியுள்ளனர். அயோத்திதாசரை இப்பொழுது திடீரென்று தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, ராமலிங்க அடிகளையும் இதில் இணைப்பதில் அவசியம் இல்லை. ஆனால், இவையெல்லாம் ஒரு சில மாதங்களில் நடக்கிறது. செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இப்படி எல்லா விவகாரங்களும் ஒன்றாக, ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருப்பதால், இவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது.

வள்ளலாரும்-பெரியாரும், பெரியாரும்-இஸ்லாமும் என்று கட்டுக் கதைகள் பெருகலாம்: சமீபகாலத்தைய மனிதர்கள், அவர்களது வாழ்க்கை விவரங்கள், சம்பந்தப் பட்ட ஆவணங்கள், பேச்சுகள், எழுத்துகள் முதலியவை திரிபுகளுக்கு, மாற்றங்களுக்கு, ஒன்றிற்கு மேற்பட்ட விளக்கங்களுக்கு, அதே சித்தாந்தம் கொண்டவர்களே வெவ்வேறு மாதிரி பேசுவது-எழுதுவது என்ற முறை ஏற்படுவது, அடிப்படையில் ஏதோ சரியில்லை, மறைக்கிறார்கள், மறைக்க முற்படுகிறார்கள் என்றே ஆகிறது. நாத்திகம்-ஆத்திகம், நம்பிக்கை-நம்பிக்கையில்லாத் தன்மை, ஆதரிப்பது-எதிர்ப்பது, சட்டங்களை ஆதரிப்பது-எதிர்ப்பது, பெண்மையினைப் போற்றுவது-தூற்றுவது, பொறுந்தாதவற்றை பொறுத்தப் பார்ப்பது, ஒப்பீடு செய்ய முடியாததை ஒப்பிடுவது, முரண்பாடுகளை மறைத்து புகழ்வது, இவையெல்லாம், இத்தகைய தலைப்புகளில் பார்க்கலாம். இவையெல்லாம், ஒரு கட்டுக் கதை/பொய்/மாயை உருவாக்குவது, அதற்கு ஆதாரமாக, இன்னொரு அல்லது பல கட்டுக் கதைகளை உருவாக்கி இணைப்பது, சம்பந்தப் படுத்துவது என்ற பாணியில் வளர்கிறது. யாராவது எடித்துக் காட்டினால், ஒரேயடியாக மறைப்பது, அடக்குவது, ஒருநிலையில் வன்முறை மூலம் மொத்தமாக அமுக்கி விடுவது, ஒழித்துக் கட்டுவது என்ற ஃபார்முலாவையும் கடைபிடித்து நிறைவேற்றி வருகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்துத் தான் பார்க்க வேண்டு.

© வேதபிரகாஷ்

29-10-2021


[1] கலைஞர் செய்தி, அக்.5ஆம் நாளைதனிப்பெரும் கருணைநாளாக அறிவித்து இருப்பது வகைப்பட்ட பண்பாட்டுப் புரட்சியே!”: முரசொலி!, Prem Kumar, Updated on : 7 October 2021, 08:41 AM

[2] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/10/07/murasoli-editorial-praises-chief-minister-mk-sudalin-for-announcing-on-vallalar-birthday

[3]  இவற்றைப் பற்றி இவரது பக்தர்களும் சங்கடமாகத்தான் எழுதியுள்ளனர். ஒரு பக்கம் ஆதரிப்பது இன்னொரு பக்கம் மென்மையாக எதிர்ப்பது போன்ற நிலைகளில் எழுதியுள்ளனர். துறவி கந்தசாமி, இராமலிங்கர் பெற்ற இறைவடிவமும் ஐந்தொழிலாற்றலும், திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்கள், வடலூர், 1989, பக்கங்கள்.181-200.

[4] சுவாமிநாத தேசிகர் அனைத்து கலைகளையும் தனது இளமையிலேயே கற்றுத் தேறினவரானார். அக்காலத்தின் தலைசிறந்த தத்துவவாதியாக திகழ்ந்த அவர் சிறந்த சிற்பியுமாவார். சைவ சித்தாந்த பிரிவினராக இருந்தபடியால் அனைத்து கோவில்களிலும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்தும் வந்தார். அவரது பெரிய தாத்தா எழுதிய இயேசு மத நிராகரணம் என்ற நூலிலிருந்தே பெரும்பாலும் சொற்பொழிவாற்றி வந்தார்.

[5] முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது.

நாத்திகர்கள், திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகள் வள்ளலாரைப் பிடித்துக் கொள்வதேன்? மாமிசம் சாப்பிட்டுக் கொண்டு, சாராயம் குடித்துக் கொண்டு சன்மார்க்கம் பேச முடியுமா? (1)

ஒக்ரோபர் 29, 2021

நாத்திகர்கள், திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகள் வள்ளலாரைப் பிடித்துக் கொள்வதேன்? மாமிசம் சாப்பிட்டுக் கொண்டு, சாராயம் குடித்துக் கொண்டு சன்மார்க்கம் பேச முடியுமா? (1)

புதிய ஆட்சி நடக்கிறதா, விளம்பரங்கள் மூலம் ஓடுகிறதா?: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினம்-தினம் அறிக்கைகள், திட்டங்கள், பணி நியமனங்கள், ஆணைகள், விழாக்கள், புகைப் படங்கள், செய்திகள், முதலமைச்சர்-அமைச்சர்கள் அதிரடி விசிட்டுகள்-விஜயங்கள், தொலைக் காட்சிகளில் வாத-விவாதங்கள்…..இப்படி 100 நாட்கள், 150 நாட்கள் என்று ஓடுகின்றன, சுவரொட்டிகள் ஒட்டப் படுகின்றன, விளம்பரங்கள் கொடுக்கப் படுகின்றன, நாங்கள் தான் நம்பர்.1 என்று கணிப்புகள் வருகின்றன. இடையிடையே, நீதிமன்ற வழக்குகள், தற்காலிக தடை, ஒத்தி வைப்பு, தள்ளி வைப்பு, தள்ளுபடி, …….பிறகு அமைதியான நிலை. எல்லாம் சரி, உண்மையில், இயல்பு வாழ்க்கையில், நிதர்சனத்தில் என்ன நடக்கிறது?  மக்கள் என்ன சினிமாவா பார்த்துக் கொண்டிருக்கின்றனர்? சாதாரண மக்கள் உழைக்கத்தான் வேண்டும், சம்பாதிக்க வேண்டும், பொருட்களை வாங்கத்தான் வேண்டும். அப்பொழுது தான் உலை எரியும், சாப்பாடு கிடைக்கும், குடும்பம் நடக்கும்! அவர்கள் ஆட்சியாளர்கள் போல படம் காட்டிக் கொண்டிருக்க முடியாது.

நாத்திகர்கள் கைகளில் வள்ளலார் படும் பாடு: நக்கீரன் நாரதராக ஆறியதை விட ஜோக்கராக, எட்டப்பனாக, அரைகுறை ஆதாரங்களுடன் கட்டுக் கதைகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கி வருவது தெரிகிறது. தமிழக மக்களுக்கு, விருவிருப்பாக, பரபரப்பாக, அதிரடியாக, ஆபாசம், விரசம், கொச்சைத்தனம், கொலை, கொள்ளை என்றெல்லாம் வரும் செய்திகள், படங்கள், வீடியோக்கள் என்றால் ஜாலியோ ஜாலிதான். கேட்டுக் கொண்டே, பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அத்தகையோர் இன்று தமிழக பாடதிட்டத்திற்கும் தலைவராக, உறுப்பினராக வது விட்டனர். ஆக, ராமலிங்கம், இராமலிங்க அடிகள், வள்ளலார், என்ன பாடு படப் போகிறார் என்பதனை அறிந்து கொள்ளலாம். நக்கீரன், “வடலூரில் சுத்த சன் மார்க்க நெறிகளுக்கு இடையூறு வராமல், தமிழக அரசு நெறிப் படுத்த வேண்டும்என்ற குரல், பக்தர்கள் தரப்பிலிருந்து பலமாக எழுந்துவருகிறது[1]. மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கொடி பிடித்த ஆன்மிகப் புரட்சியாளராக வடலூர் வள்ளலாரை முற்போக்கு உலகம் போற்றிவருகிறது[2]. சாதி மத பேதங்களுக்கு எதிராகக் கொடி பிடித்த ஆன்மீகப் புரட்சியாளராக வடலூர் வள்ளலாரை முற்போக்கு உடலகம் போற்றி வருகிறது,” என்ற பீடிகையோடு, தனது வேலையை ஆரம்பித்துள்ளது. 24-03-2010 தீர்ப்பினைக் குறிப்பிட்டு, “பார்ப்பன எதிர்ப்பைச்” சேர்த்து, ஜோதி வழிபடு மட்டும் நடத்தப் பட வேண்டும் என்று இழுத்து முடித்துள்ளது.

72 ஏக்கர் பரப்பளவில், கோடிக்கணக்கில் செலவுடன் சர்வதேச மையம்: வடலூரில் உள்ள சத்திய ஞான சபை வளாகத்தில் சர்வதேச வள்ளலார் மையம் அமைப்பதற்காக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் ஜூன் 2021ல் வடலூர் வந்து ஆய்வு செய்தனர்[3]. பின்னர் அவர்  சத்திய ஞானசபை, தர்மசாலை, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்[4]. அதன்பிறகு சர்வதேச மைய அமைப்பதற்கான திட்ட வரைபடத்தை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில்[5], விரைவில் டெண்டர் கோரப்பட்டு, 72 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச மையமாக தொடங்குவதற்கான திட்ட மதிப்பீடு உலக அளவில் கோரப்பட்டு முடிவு செய்யப்பட்டு வெகு விரைவில் சர்வதேச மைய பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்[6].  அதோடு, சென்னை ஏழுகிணறு இராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீடு அரசு சார்பில் சீரமைக்கப்பட்டு அமைக்கப்பட்டு, மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்ஜீனியர்  சிவக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள், சன்மார்க்க ஆர்வலர்கள் உடனிருந்தனர்[7].

திட்ட வரைபடம், திட்ட மதிப்பீடு, உலக அளவில் டெண்டர், 72 ஏக்கர் நிலம், கோடிக்கணக்கில் செலவு முதலியன: அயோத்திதாசருக்கு மணிமண்டபம், கருணாநிதிக்கு அதே இடத்தில் சிலை, பெரியாருக்கு ரூ 100 கோடிகளில் சிலை, என்றெல்லாம் ஆரம்பித்து “சர்வதேச மையம்,” ஏழுகிண்று வீடு என்று முடிந்துள்ளது. எல்லாமே தயாரக வைத்துக் கொண்டு, பார்வையிடுவது என்பது, திட்டமிட்டே செய்வது தெரிகிறது. திட்ட வரைபடம், திட்ட மதிப்பீடு, உலக அளவில் டெண்டர், 72 ஏக்கர் நிலம், கோடிக்கணக்கில் செலவு என்பதெல்லாம், “அல்லாவுத்தீனும் அற்புத விளக்கும் பாணியில் ஜீ பூம்பா,” அல்லது “கதவைத் திறந்திடு சீஸே” என்று வந்து விடாது. 11-06-2021 அன்று ஆணையிடப் படுகின்றது என்றால், முன்னமே தயாராகி, தயாராக உள்ளார்கள் என்று தெரிகிறது. இதன் மூலம், எத்தனை கான்ட்ராக்டர்கள், கம்பெனிகள், முதலாளிகள் பலன் பெறப் போகிறார்கள் என்பதை, “அரும்பெறும் ஜோதியே” வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். “தனிபெரும் கருணை”யுடன் தான் எல்லோருக்கும் ஆர்டர்கள் கொடுக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும். உலக டென்டர், உலக உதவி என்றெல்லாம் இருக்கும் போது, அவற்றின் பின்னணி முதலியவை இனிமேல் தான் தெரியவரும். கிருத்துவர்-துலுக்கர் முதலியோரின் ஆதிக்கம் இருக்கும். ராமலிங்கர் காலத்திலேயே இருந்த போது, இபொழுது இருப்பதில் ஆச்சரியமில்லை. வள்ளலார் வணிக சின்னமாகிறது, வியாபாரமயமாக்கப் படுகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

வள்ளலார் புத்தமதத்தைப் பின்பற்றச் சொன்னாரா?: ஓய்வு பெற்ற நீதிபதி, சந்துரு புத்தமதத்தைப் பின்பற்றும்படி மறைமுகமாக மக்களை வேண்டியுள்ளார் என்பதே அக்கருத்தாகும் என்று எடுத்துக் காட்டியுள்ளது திக பத்திரிக்கை[8]. இதற்குச் சான்றாக,

‘சாக்கிய வேதந் தேக்கிய பாதம்

தாக்கிய ஏதம் போக்கிய பாதம்’

‘புத்தந்தரும் போதா வித்தத்தருந் தாதா

நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா;

என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை முன் வைக்கிறார் என்றும் விளக்குகிறது[9]. ஓய்வு பெற்ற பிறகு இவர் தனது மார்க்சீய-திராவிடத்துவக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்[10]. சம்பந்தார் சாக்கியர்களை கடுமையாகத் தாக்கியுள்ளபோது, இவர் பௌத்தத்தை ஆதரித்தார் என்பது முரண்பாடானது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் “சைவசித்தாந்தத்” துறைத் தலைவர், சைவர்கள் இந்துக்கள் இல்லை என்று வெளிப்படையாக பேசி, உலக மாநாட்டையும் நடத்தியுள்ளார். இனி, வள்ளலார் கூட்டங்களும் அதே போல நாங்கள் இந்துக்கள் இல்லை என்று அறிவிக்கலாம், மைனாரிட்டி ஸ்டேடஸ் கூட கேட்கலாம்.

உலகத்தில் இருக்கும் நிறுவனங்கள் உதவ முன்வருவது: பசிப்பிணி போக்கிய வள்ளலார் பெருமானின் பெயரில் அமைய உள்ள இந்த சர்வதேச மையத்திற்கு ஹலோ ஒத்துழைப்பை நல்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயங்கிவரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை, வடலூர் தலைமைச் சங்கம், தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள சன்மார்க்க சங்கங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள சன்மார்க்க சங்கங்கள் கூட்டமைப்புகள் அனைத்தும் இணைந்து வள்ளலார் சர்வதேச மையத்திற்கு தேவையான பொருள் உதவியை வழங்க முடிவு செய்துள்ளனர்[11]. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளிடம் நிதியினை திரட்டித் தரவும் ஏற்பாடு செய்து வருகின்றன[12]. அரசு காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றி இந்த சர்வதேச மையமும் அதைச் சார்ந்த பணிகளையும் முழு ஈடுபாட்டோடு செய்வதற்கு சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர். உலகின் மிகப்பெரிய புரட்சியாளர்களில் ஒருவரான வள்ளல் பெருமானின் பெயரில் அமைய உள்ள இந்த சர்வதேச மையம் தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையும், சன்மார்க்கக் கொள்கைகளை உலகம் கொண்டு செல்லவும் இந்த சர்வதேச மையம் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

© வேதபிரகாஷ்

29-10-2021


[1] நக்கீரன், வள்ளலார் பக்தர்கள் கோரிக்கை நிறைவேறுமா? –அரசு உருவாக்கும் சர்வதேச மையம்!, Published on 27/10/2021 (04:12) | Edited on 27/10/2021 (09:55).

[2] https://www.nakkheeran.in/nakkheeran/will-request-vallalar-devotees-be-fulfilled/will-request-vallalar-devotees-be-fulfilled

[3] தினத்தந்தி, வடலூர் சத்திய ஞானசபையில்சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்அமைச்சர் சேகர்பாபு தகவல், ஜூன் 11, 10:39 PM.

[4] https://www.dailythanthi.com/amp/News/Districts/2021/06/11223919/The-task-of-setting-up-an-international

[5] NEWS18 TAMIL, சர்வதேச மையமாகும் வள்ளலார் சத்திய ஞான சபை: பணிகள் விரைவில் தொடங்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தகவல், LAST UPDATED : JUNE 13, 2021, 14:19 IST.

[6] https://tamil.news18.com/news/tamil-nadu/cuddalore-district-cuddalore-vadallur-vallalar-sathiya-gnana-shaba-will-change-into-international-centre-soon-says-dmk-sekarbabu-mur-481343.html

-center.vpf

[7] கடலூர் மாவட்டம், செ.வெ.எண்.19 நாள்: 11-06-2021, https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2021/06/2021061476.pdf

[8] உண்மை, பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முடித்த வழக்கின் தீர்ப்பு, பிப்ரவரி 16-28, 2015.

[9] http://www.unmaionline.com/index.php/2015-magazine/133-febraury-16-28/2446-finishing-brahmin-cultural-invasion-case-hearing.html

[10]  சிபிஎம் கட்சியின் உறுப்பினர், கம்யூனிஸ்ட் மாணவ இயக்கத்தின் தலைவர், என். ராமின் கல்லூரி தோழர். ஶ்ரீரங்கத்தில் பிறந்த இவரது குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருக்கின்றன. சிலைத் திருட்டு விவகாரத்தில் அர்ச்சகர்கள் ஏன் கைது செய்யப் படவில்லை என்று கேள்வி எழுப்பியவர். அப்படியென்றால் பொறுப்புள்ள அறநிலையத்துறை அமைச்சர், முதலமைச்சர் என்று எல்லோருமே கைது செய்யப் படலாமே?

[11] மக்கள் குரல், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்: தமிழக அரசுக்கு சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நன்றி, Posted on July 19, 2021

[12]https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87/

பெரியாரும், இஸ்லாமும் – கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (2)

ஒக்ரோபர் 27, 2021

பெரியாரும், இஸ்லாமும்கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (2)

ஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929)[1]. ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை[2]. ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[3].

பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் முதலியன[4]: ஆனைமுத்து, விடுதலை ராஜேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, முதலியோர்களின் தொகுப்புகள் மற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தின் வெளியீடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு[5], தமக்கு வேண்டியவற்றைத் தொகுத்து, பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் என்றெல்லாம் எழுதுகிறார்கள், ஆனால், அவற்றை சரிபார்த்து, உண்மையறிந்து, மெய்யாகவே மறுபக்கம் அலசி, ஆராய்ந்து அவர்கள் எழுதுவது இல்லை[6]. அரசியல், பரிந்துரை, ஆதாயம், அதிகாரம் என்றெல்லாம் உள்ளதால், பரஸ்பர ரீதியில் அத்தகைய வெளியீடுகள், ஆதரவாளர்களிடம் பிரபலமாகி சுற்றில் இருக்கின்றன. ஆனால், 1940-80களில் திராவிடத் தலைவர்களின் பேச்சுகளை நேரில் கேட்டவர்களுக்கு, அவர்கள் பேசியதற்கும், இப்பொழுது தொகுப்பு புத்தகங்களில் இருப்பவற்றிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகளை காணலாம். எந்த அளவுக்கு ஒட்ட்யும், வெட்டியும், மாற்றியமைத்து, அவை வெளியிடப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இங்கும்-அங்கும் உள்ளவற்றை எடுத்தாண்டு, தொகுத்து எழுதியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து ஆராய்ச்சிக்கு வர வேண்டும்.

பிரச்சாரம் கட்டுக்கதைகள் ஆராய்ச்சி ஆகாது: இவ்வாறு, துலுக்கர் அடிக்கடி, புதிய கதைகளை உருவாக்கி, பிரபலமடையச் செய்து, பரப்பி வருவதில், பெரிய விற்பன்னர்கள் எனலாம். இப்பொழுது, இன்னொரு கதையைக் கிளப்பி விடுகிறார்கள் போலும். இந்துத்டுவ வாதிகள், முக்கியமாக, ஆவணங்களை சரிபார்த்து ஆராய்ச்சி செய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஏதோ, ஒருபக்கமாக ஒரு சாரார் பேசியதாக அச்சில் வந்துள்ளவை என்றெல்லாம் வைத்து, முடிவுக்கு வருவது, தொடரும் போக்கு தெரிகிறது. “தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,” என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று இப்பொழுது, இத்தகைய விசயங்கள் வெளிவருவது விசித்திரமாக இருக்கிறது..“முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று / போன்று பிதற்றினாரா?,” என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆன்மா இல்லை, ஆவி இல்லை …..என்றெல்லாம் பேசி, கிண்டலடித்து வந்த பெரியார், பெரிய சித்தர் என்றெல்லாம் சிலர் போற்றி வந்த நிலையில், அவர் அழுதார், அரற்றினார், உடன் இறக்க முயன்றார்… என்று செய்தி உருவானது திகைப்பாக இருக்கிறது. மூலம் / உண்மை ஒன்று என்றால், சமீபத்தை நிகழ்வுகள் பற்றி ஒன்றிற்கு மேலான விவரங்கள் வருவது சிந்திக்க வேண்டிய பொருளாக மாறுகிறது.

ஜின்னாபெரியார்அம்பேத்கர் சந்திப்புகள், கடிதங்கள் இந்த கட்டுக் கதைகளை கிழிக்கின்றன: இவர்கள் எல்லாம் ஒன்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இறக்கவில்லை. 70-80 ஆண்டுகள் முன்னர் இருந்தவர்கள், சென்னைக்கு வந்துள்ளனர். பலர் பார்த்திருக்கின்றனர், அவர்கள் பேசியதைக் கேட்டிருக்கின்றனர். இன்றைய 60-70-80 வயதானவர்களுக்கு விசயங்கள் தெரியும். முன்பு “தி மெயில்,” “சென்டினல்” போன்ற நாளிதழ்களில் வந்துள்ளன. இப்பொழுது, திராவிடத்துவவாதிகள், முஸ்லிம்கள், பெரியாரிஸ்டுகள் மறைத்தாலும், ஜின்னா கடிதங்கள் ஈவேராவைத் தோலுருத்திக் காட்டுகிறது. அம்பேத்கர் எப்படி ஈவேராவை பௌத்தம்மாறுவதற்கு எதிர்த்தாரோ, அதேபோல ஜின்னா இவரை பொருட்படுத்தியதே இல்லை. 1948ற்குப் பின்னர், இவர் பல தமாஷாக்களை (பிள்ளையார் சிலைகள் உடைத்தது. ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டது, இந்து விரோதம் செய்தது) செய்திருக்கிறார். இதனை, திமுக ஊக்குவித்து வந்தது. அம்பேத்கரை 1970கள் வரை தமிழகத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. பிறகு தான் அம்பேத்கர் சிலைகள் தோன்ற ஆரம்பித்தன. அதே போல, பெரியார் இறந்த பிறகு, 1970களில் ஊதி பெரிதாக்கப் பட்டார்.  ஆனால், முத்துராமலிங்க தேவர், மபொசி, கண்ணதாசன் முதலியோர் பேசியது, எழுதியது மறைக்கப் படுகின்றன.

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் இத்தகைய கட்டுக் கதைகளைப் பரப்புவது ஆபத்தானது: பச்சையப்பன் கல்லூரியில் திராவிட இயக்கத்தைப் பற்றி பலர் அரைத்த மாவையே அரைத்து பேசினர். அத்தொடர் சொற்பொழிவுகளக் கூர்ந்து கேட்கும் போது, அரசியல் செய்ததைத் தவிர வேறொதுவும் தெரியவில்லை. திராவிடத்துவத்தில் ஊறிய-நாறிய அவர்களால் வேறெதையும் பேச முடியவில்லை. ஏ.ஆர். வெங்கடசாலபதி போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை வைத்துக் கூட விவரிக்க முடியாது. ஆகவே, ஏதோ நடத்த வேண்டுமே என்ற போக்கில் நடத்துவது, ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது, முகஸ்துதி செய்தது, கேள்விகள் கேட்கக் கூடாது, விவாதிக்கக் கூடாது என்று இவ்வாறு கூட்டங்கள் நடத்துவது பிரயோஜனம் அல்லாதது மற்றும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றின் தரத்தையே கேலிக் கூத்தாக்கி விடும்.  இதனால் தான், மற்றவர்கள் திராவிடர்கள், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு அரசியல் செய்து கொண்டுவருபவர்களை மற்றவர்கள் கண்டு கொள்வதில்லை.

© வேதபிரகாஷ்

27-10-2021


[1]  வேதபிரகாஷ், 19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாராபெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!, 02-04-2016.

[2]https://dravidianatheism.wordpress.com/2016/04/02/islamization-of-dravidian-movement-by-making-periyar-a-mohammedan/

[3] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013, http://bushracare.blogspot.in/2013/09/5.html

[4] வேதபிரகாஷ், முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1], 07-02-2021.

[5] பெரும்பாலும், இத்துகுப்புகள்,  இப்பொழுது, இவை இணைதளங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவையெல்லாம், “கிரிடிகல் எடிஷன் பதிப்பு” போன்றவை இல்லை.

[6] ம.வெங்கடேசன், க. சுப்பு போன்ற வலதுசாரி, இந்துத்துவ எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகங்கள். இப்பொழுது இந்துத்துவவாதிகள் பெரியாரிஸத்தை ஆதரிப்பதால், இதைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.

பெரியாரும், இஸ்லாமும் – கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (1)

ஒக்ரோபர் 27, 2021

பெரியாரும், இஸ்லாமும்கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (1)

பெரியாரும், இஸ்லாமும் சொற்பொழிவு: திமுகவின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெரியாரைத் தூக்கிப் பிடித்து, பெரிய சிலை வைக்கிறோம் என்றெல்லாம் திராவிடத்துவாதிகள் கிளம்பி விட்டனர். இந்நிலையில், மனோன்மணியம் பல்கலைகழகத்தில் ‘பெரியாரும் இஸ்லாமும்’ சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்[1]. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் சமூக விலக்கல் மற்றும் ஆட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்துடன் இணைந்து ‘பெரியாரும் இஸ்லாமும்’ என்ற தலைப்பில் அக்டோபர் 27 அன்று பகுத்தறிவு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது[2]. இதில் புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அகமது சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சொற்பொழிவாற்ற இருந்த நிலையில், இந்து முன்னணியினர் திடீரென இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து முன்னணி மிரட்டல், ‘பல்கலைக் கழகமா அல்லது திராவிடர் கழகமா’ என கேள்வியெழுப்பி, பல்வேறு விமர்சனங்களை இந்து முன்னணியினர் முன்வைத்தனர். இந்து முன்னணியின் மிரட்டல் காரணமாக மேற்கண்ட சொற்பழிவு நிகழ்ச்சியை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தயக்கம் காட்டியது தெரியவந்தது.

உதயகுமார் கண்டனம்: இதுகுறித்து துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்டபோது, சில பாதிப்புகள் ஏற்படும் என்பதால் நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும், நடத்த வேண்டாம் என்பது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என 24-10-2021 அன்று தெரிவித்திருந்தார். இருப்பினும் தமிழ்நாடு அரசால் சமூகநீதி நாள் கடைபிடிக்கப்படும் ஒரு தலைவரின் பெயரில் நிகழ்ச்சி நடத்த பல்கலை நிர்வாகம் அஞ்சியது, சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப உதயகுமார்[3], “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர் கழக அலுவலகமா? ஐஎஸ் பயிற்சி கூடாரமா? என்றெல்லாம் உருட்டி மிரட்டி, ஓர் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தடுக்க முயலும் இந்து முன்னணி பாசிஸ்டுகளை வன்மையாக கண்டிப்போம்! பல்கலைக்கழக நிர்வாகமே முதுகெலும்புடன் செயல்படு!” என்று பதிவிட்டிருந்தார்[4].

இந்து முன்னணி எதிர்ப்பு, போலீஸ் காவல்: இதுகுறித்து ஈடிவி பாரத் தளத்தில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக தற்போது இந்து முன்னணியின் மிரட்டலுக்கு அஞ்சாமல் ‘பெரியாரும் இஸ்லாமும்’ தொடர்பான சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்த துணைவேந்தர் பிச்சுமணி சமூகவியல் துறைக்கு அனுமதி அளித்துள்ளார். இதனிடையே சொற்பொழிவு நடத்தினால் அக்டோபர் 27ஆம் தேதி காவிகள் நாம் பல்கலைக்கழகத்தில் அணி திரள்வோம் என இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. எனவே, அன்றைய தினம் பல்கலைக்கழகத்தில் காவல் பாதுகாப்பு கோருவது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர். அதன்படி, போலீஸ் பாதுகாப்பு கோரப் பட்டது.

இந்து முன்னணி சமூகவளைத் தள எதிர்ப்பு: இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர் கழக அலுவலகமா? ஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி கூடாரமா? புரியவில்லை. ‘பெரியார், சாமுவேல் ஆசீர்ராஜ், ரியாஸ் அகமது’ என்னவிதமான கூட்டணி. கல்வி நிலையத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சியா?மனோன்மணியம் பல்கலைக்கழகம்நிகழ்ச்சி குறித்த போஸ்டர் அக்டோபர் 27 ம் தேதி காவிகள் நாம் அணி திரள்வோம். என்ன பேசுகிறார்கள் என பார்ப்போம். கடவுள் மறுப்பு, இஸ்லாத்தின் சமூகநீதி என அனைத்திற்கும் எதிர் கேள்வி மற்றும் விளக்கம் கேட்போம்” எனத் தெரிவித்திருந்தனர்.

27-10-2021 அன்றுபெரியாரும் இஸ்லாத்தும்பெயரிலான கருத்தரங்கு நடைபெற்றது: இந்த நிலையில் திட்டமிட்டபடி பல்கலைக்கழக அரங்கில் “பெரியாரும் இஸ்லாத்தும்” பெயரிலான கருத்தரங்கு நடைபெற்றது[5]. இதில் துறை சார்ந்த மாணவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்[6]. பல்கலைக்கழக வாசலில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி முடியும் வரை வெளியாட்களை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய அதே நேரத்தில் பல்கலைக்கழகத்திற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்ததாக தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து காவல் அதிகாரி பல்கலைக்கழக துணைவேந்தரை செல்போனில் தொடர்பு கொண்டு அனுமதிக்கலாமா எனக்கேட்டார். அதற்கு அவர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மாணவர்கள் மட்டுமே அனுமதி என்பதால் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என்று மறுத்து விட்டார்.

ரியாஸ் அகமது பேசியது: வழக்கம் போல, ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தான் எடுத்துக் காட்டி பேசியுள்ளது, ஒரு பிரச்சாரம் என்று வெளிப்பட்டது. 2021 பிப்ரவரியில், மணிச்சுடரில்[7], “1972ம் ஆண்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலமானபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தந்தை பெரியோர் கதறி அழுத சம்பவம் நம் நெஞ்சங்களை உருகச் செய்யும். ஆம். இமைய மலை போல் எதற்கும் அசையாத் நெஞ்சுரம் கொண்ட தமிழர் தந்தை பெரியார் அவர்கள், காயிதேமில்லத் அவர்களின் மறைவு சற்று நிலை குலையச் செய்தது. “தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,” என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று வெளி வந்தது. முன்பு, பெரியார்தாசன் / அப்துல்லாஹ் இத்தகைய கட்டுக் கதையை விட்டுப் பார்த்தார், எடுபடவில்லை. புஷ்ரா நல அறக்கட்டளையும் 2013ல் முயன்றது, யாரும் கண்டு கொள்ளவில்லை.

பெரியார் துலுக்கர் ஆனாரா?- முகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[8]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்[9]. “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார்[10]. இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[11]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[12]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

27-10-2021


[1] இ.டிவி.பாரத், இந்து முன்னணி எதிர்ப்பை மீறிபெரியாரும் இஸ்லாமும்நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு, Published on: Oct 25, 2021, 4:19 PM IST; Updated on: Oct 25, 2021, 5:16 PM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/etv-bharat-story-impact-nellai-ms-university-approved-periyarum-islamum-program/tamil-nadu20211025161918390

[3] இ.டிவி.பாரத், மனோன்மணியம் பல்கலைக்கழகமே முதுகெலும்புடன் செயல்படு! – சு.. உதயகுமார், Published on: Oct 24, 2021, 10:58 PM IST; Updated on: Oct 24, 2021, 11:07 PM IST

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/periyarum-islamum-function-to-be-hold-by-nellai-manonmaniam-university/tamil-nadu20211024225831363

[5] மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன் இந்து முன்னணி போராட்டம், By M.Ganapathi, Reporter 27 Oct 2021 1:51 PM

[6] https://www.instanews.city/tamil-nadu/tirunelveli/tirunelveli/manonmaniyam-sundaranagar-university-hindu-munnani-protest-1060843

[7] மணிச்சுடர், தந்தை பெரியாரின் தம்பி காயிதே மில்லத், பிப்ரவரி 6, 2021, பக்கம்.4

[8] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[9] வேதபிரகாஷ், நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!, 02-04-2016.

[10]  https://dravidianatheism.wordpress.com/2016/04/02/converting-periyar-to-islam-falsification-of-recent-history-by-muslims/

[11]  https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[12] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

பெரியாரைத் தூஷித்ததால் சீதைமைந்தன் மீது புகார், கைது இத்யாதி! ஆனால், இந்து தூஷணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

ஒக்ரோபர் 16, 2021

பெரியாரைத் தூஷித்ததால் சீதைமைந்தன் மீது புகார், கைது இத்யாதி! ஆனால், இந்து தூஷணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

ஈவேரா அல்லது பெரியாரின் மீது தூஷணமா?: இதுவரை தமிழகத்தில், ஈவேரா, பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் போன்றோர் இந்துமதம், கடவுளர், நம்பிக்கை, முதலியவற்றைப் பற்றி அவதூறாகப் பேசிவந்ததது, புத்தகங்கள் போட்டது, அவை இன்றும் புழக்கத்தில் உள்ளது முதலியவை அறியப் பட்டுள்ளது. அவற்றைப் பற்றி ஆராய்ந்தால், அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்ற கேள்வி எழும். பிறகு, அவர்களின் பேச்சுகளை-எழுத்துகளை புத்தகங்களாகப் போட்டு, விற்று விநியோகிக்கும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகம், பெரியார் திராவிடக் கழகம், போன்ற பதிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுதும், இது இந்துவிரோத மற்றும் இந்திய தேசவிரோத சக்திகளின் உட்பூசலே தவிர உண்மையில் அவர்கள் ஒன்றும் விடாமல் சட்டப் படி நடவடிக்கை எடுத்து, மூன்றாண்டு-ஐந்தாண்டுகள் சிறையில் தள்ளப் போவதில்லை. அப்படி செய்தால், செய்திருந்தால், 90& அத்தகைய திராவிடத்துவ, தமிழ்தேசிய மற்ற வகையறாக்கள் சிறையில் தான் இருந்திருப்பர். சிறைத் தண்டன பெற்றவர்கள் மாறியிருப்பர். அதனால், இப்பொழுது ஒருவர் ஈவேராவை-பெரியாரை தூஷித்ததால் கைது செய்யப் பட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது.

பெரியார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக ழகரம் வாய்ஸ் யூடியூப்: பெரியார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலின் தட்சிணாமூர்த்த்தியை போலீசார் 15-10-2021, வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர்[1]. அன்றே, சில டிவிசெனல்களில் இச்செய்தியை வெளிட்டாலும் விவரங்கள் கொடுக்கப் படவில்லை. அதாவது, அதன் மூலம், அந்த விமர்சனங்களை மக்கள் அறியக் கூடாது என்று அமுக்கி வாசித்தனர் என்று தெரிகிறது. ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனல் தொடந்து அரசியல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளது[2]. இந்த யூடியூப் சேனலை சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி நடத்தி வருகிறார்[3]. இந்த நிலையில், ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் அக்டோபர் 11ம் தேதி 11-10-2021 அன்று பெரியார் குறித்து ஒரு வீடியோ வெளியானது[4]. அதில், பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்[5].

தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் புகார் கொடுத்தது: இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் என்பவர் அளித்த புகாரில்[6], “காலமெல்லாம் தமிழ் மக்களுக்காக உழைத்த தந்தை பெரியாரையும், நான் சார்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் அவர்களையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவு படுத்தி, தட்சிணாமூர்த்தி என்பவர் மிகவும் கீழ் தரமாக பேசியுள்ளார், தந்தை பெரியார் விபச்சாரம் செய்தார் என தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இந்த செயல் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுகிற என்னைப் போன்ற பெரியார் தொண்டர்களை மிகவும் கவலையடைய செய்துள்ளது. மேலும், முடிந்தால் தன் மீது வழக்கு தொடுத்து பார் என வீடியோவில் தட்சிணாமூர்த்தி சவால் விடுத்துள்ளார். இதுபோன்ற பேச்சுக்கள் அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாட்டில் மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் சூழலுக்கு வழிவகுக்கிறது.

திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் ஏன் புகார் கொடுக்கவில்லை?: இங்கு திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் ஏன் புகார் கொடுக்கவில்லை என்பது நோக்கத் தக்கது. ஏனெனில், உண்மையிலேயே பாதிப்பு ஏற்படும் என்றால் அவர்களுக்குத் தான் என்று நன்றாகத் தெரியும். பிறகு தந்தை பெரியார் திராவிட கழக ஏன் முந்திக் கொள்கிறது அல்லது பெரியார் பிராண்டிற்கு பாடுபடுகிறது என்று தெரியவில்லை. அயோத்தியா மண்டபத்து அப்பவி பார்ப்பனர்களை வெட்டியது முதல், பன்றிக்கு பூணூல் போட்டது வரை இந்த தந்தை பெரியார் திராவிட கழக தான் செய்து வருகிறது. இதனால், திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் இந்துக்களுக்கு உதவுகின்றனர் என்றாகாது. இது எதோ இவர்களுக்குள் உள்ள ஒப்பந்தம் போலே தோன்றுகிறது. சுப.வீரப் பாண்டியனும், திராவிடர் கழகத்தில் இல்லை, ஆனால், ஒத்து ஊதும் போது, இந்துக்களைத் தாக்கும் போது, ஒன்று படுகின்றனர். விடுதலை ராஜேந்திரனும் அமைதியாக அதே வேலையைச் செய்து வருவது கவனிக்கத் தக்கது.

திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் நோக்கு உள்ளதா?: தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை மிக மிக கீழ்த்தரமாக ஆபாசமாக விமர்சிக்கின்ற சீதையின் மைந்தன் என்கிற அந்த நபர் ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் கடந்த 11/10/21 தேதியன்று பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் நோக்கில் இவர் பேசி உள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது, ஆகவே அய்யா அவர்கள் இவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[7]. இந்த புகாரின் பேரில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி மீது போலீசார் 153A, 504B, 505 (1) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்[8]. இதையடுத்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். விசாரணையில் தட்சிணமூர்த்தி இதேபோல் மூன்று யூ-ட்யூப் சேனலை நடத்திவந்ததும், கச்சத்தீவு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவருவது தெரியவந்தது[9]. இதனையடுத்து தட்சிணமூர்த்தி பெரியார் குறித்து பேசிய காணொலியை சைபர் கிரைம் காவல் துறையினர் சேனலிலிருந்து நீக்கினர்[10]. இவரிடம் காவல் துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றது.

இபிகோ 153A, 504B, 505 (1) ஆகிய 3 பிரிவுகள் சொல்வது என்ன?: இபிகோ  153Aன்படி –

1. (a) பேச்சாலோ, எழுதாலோ அல்லது சைகையாலோ மத, இன, மொழி சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்வது குற்றமாகும்.

(b) அத்தகைய விரோத உணர்ச்சிகளால் போது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதும் குற்றமாகும்.

(c) குற்றம் என்று கருதக்கூடிய வன்முறை அல்லது வன்செயலை பயன்படுத்தும் கருத்துடன் அல்லது பயன்படுத்த பயிச்சி அளிக்கும் கருத்துடன் அல்லது சாதி, சமூகம், இனம், மதம், மொழி அல்லது வட்டாரக் குழு எதற்கும் விரோதமான வன்முறை அல்லது வன்செயலை பயன்படுத்தக்கூடிய பயிற்சி இயக்கம் உடற்பயிற்சி அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் பங்கு பெறுவோர் அநேகமாக பயன்படுத்த பயிற்சி அளிக்கக்கூடிய நடவடிக்கையாக அவை இருக்கின்றன என்று அறிந்தும் அவற்றில் பங்குபெறுவதும் பயிற்சி வேலையில் ஈடுபடுவதும் குற்றமாகும்.

அத்தகைய ஜாதி, சமூகம், இனம், மதம், மொழி அல்லது வட்டார குழுவினருக்கு அச்சத்தை அல்லது பீதியை அல்லது பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை அத்தகைய நடவடிக்கைகள் எந்த காரணம் கொண்டு உண்டாகின்றன. அல்லது உண்டாக்கக் கூடும் என்று அறிந்தும் அதில் பங்கு பெறுவோர் குற்றம் புரிந்தவர் ஆவார்.

இந்த குற்றத்திற்கு தண்டனையாக 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் சிறைக்காவலுடன் கூடிய அபராதங்கள் விதிக்கப்படும்.

2. மேலே விவரிக்கப்பட்டுள்ள குற்றத்தின் வழிபாடு நடைபெறும் இடத்தில் செய்வது குற்றம், மத வழிபாட்டுக்கு ஆன மக்கள் கூடியிருக்கும் அரங்கிலும் அந்த குற்றத்தினை புரிய கொடுத்தது. அப்படி புரிந்தால் அதற்காக 5 ஆண்டுகள் வரை சிறைக் காவலும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி முதலானவற்றின் அடிப்படைகளில் வெவ்வேறு வகுப்புகளிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிலக்கணப் பேணலுக்கு பாதகமான செயல்களைச் செய்தல்

(1) எவரேனும் :-

(a).பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தல்களால் அல்லது மற்றபடியாக, மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி, ஜாதி அல்லது பிரிவு அல்லது எந்தவிதமான ஏதாவதொரு பிற அடிப்படையில், வெவ்வேறான மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்புகள் அல்லது ஜாதிகள் அல்லது பிரிவுகளிடையே ஒற்றுமையின்மை அல்லது பகைமை உணர்வுகள், வெறுப்பு அல்லது மனக்கசப்பை ஊக்குவித்தால் அல்லது ஊக்குவிப்பதற்கு முயன்றால் அல்லது

(b). எந்தஒரு செயல், வெவ்வேறான மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்புகள் அல்லது ஜாதிகள் அல்லது பிரிவுகளிடையே நல்லிலக்கணத்தைப் பேணுவதற்குப் பாதகமாக இருக்கிறதோ, மற்றும் எந்தவொரு செயல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறதோ, அல்லது அநேகமாக விளைவிக்குமோ, அந்தவொரு செயலைப் புரிந்தால், அல்லது

(c) ஏதாவதொரு பயிற்சி, இயக்கம், படைப் பயிற்சி அல்லது பிற ஒத்த செய்கையை, அத்தகைய செய்கையில் பங்குபெறுவோர்கள் குற்றமுறு பலப்பிரயோகம் அல்லது வன்முறையைப் பயன்படுத்த அல்லது அநேகமாக பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்ட, அல்லது அத்தகைய செய்கையில் பங்குபெறுவோர்கள் குற்றமுறு பலப்பிரயோகத்தை அல்லது வன்முறையை பயன்படுத்துவார்கள் அல்லது அநேகமாக பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்படுவார்கள் என்று தெரிந்தே, ஏதாவதொரு மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவுக்கு எதிராக மற்றும் அத்தகைய செய்கை ஏதாவதொரு எந்தவிதமான காரணத்திற்க்காகவும், அத்தகைய மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவிற்கு இடையில் பயம் அல்லது பீதி அல்லது பாதுகாப்பற்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதற்கு அல்லது அநேகமாக ஏற்படுத்தலாமென்ற, ஏற்பாடு செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

அப்படி பார்த்தால், மேலே குறிப்பிட்டப் படி, அந்த நபர்களின் பேச்சுகள், வார்த்தைகள், எழுத்துகள், புத்தகங்கள் இன்றளவிலும் அத்தகைய குற்றங்களை செய்து கொண்டு தான் வருகின்றன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

© வேதபிரகாஷ்

16-10-2021


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், பெரியார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது!, Written By WebDesk, Updated: October 16, 2021 1:22:52 am

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/youtuber-arrested-for-derogatory-video-released-on-periyar-356213/

[3] டாப்.தமிழ்.நியூஸ், பெரியார் விபச்சாரம் செய்தாரா? என யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தவர் கைது!,  By AISHWARYA G , Fri, 15 Oct 20219:22:41 PM

[4] https://www.toptamilnews.com/thamizhagam/youtuber-arrested-for-commands-about-periyar/cid5537412.htm

[5] தினகரன், ழகரம் வாய்ஸ் என்ற யூட்டியூப் சேனலை நடத்தி வரும் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி கைது, 2021-10-15@ 19:09:01.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=712620

[7] தினத்தந்தி, பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுயூடியூபர் தட்சிணாமூர்த்தி கைது, Uploaded on 16/10/2021.

[8] https://www.youtube.com/watch?v=kl_2s7LxAbU

[9] ஈ.டிவி.பாரத், பெரியார் குறித்து அவதூறு: யூட்யூபர் கைது, Published on: 16-10-2021 7.00 hours.

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/youtuber-arrested-in-chennai-for-slandering-father-periyar/tamil-nadu20211016065810895