Archive for the ‘அறிவுஜீவி’ Category

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் – திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார்.

தமிழகத்திற்கு சிலைவைப்பு, சிலையுடைப்பு, சிலைஅரசியல் எல்லாம் புதியதல்ல: ஈவேராவால் தமிழகத்தில் சிலையுடைப்பு அரசியல் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு பிள்ளையார் / விநாயகர் சிலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அது இந்துவிரோதமாகி அந்த போலி நாத்திகர்களை வெளிப்படுத்தியது. உச்சநீதி மன்றம் வரை அவர் மீதான வழஜக்குச் சென்றாலும், ஈவேரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இருப்பினும் சிலையுடைப்பு அக்கிரமங்களை செய்து வந்தார். 1968ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிலிருந்தே சிலைவைத்தல்[1], அதிலும் மெரினா பீச்சில் சிலை வைத்தல் என்ற அரசியல் ஆரம்பித்தது. அப்பொழுதே, அண்ணா பலதரப் பட்ட அழுத்தங்களுக்குட் பட்டார். வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தம்-ஆதிக்கங்கள் அதிலிருந்தன. இதனால், சில சிலைகள் தேவையில்லாமல் சேர்க்கப் பட்டன, அதாவது, சில நீக்கவும் பட்டன. 1970களில் ஈவேராவின் பிள்ளையா சிலையுடைப்பு / ராமர் பட அவமதிப்பு உச்சங்களுக்குச் சென்றன[2].

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார். கருணாநிதியும் அந்த சடங்கை முறையாக செய்தார். ஆனால், அது உடைப்பு கிரியையில் முடிந்ததது. உடைப்பு சம்பிரதாயத்தையும் ஈவேரா தான் ஆரம்பித்து வைத்தார்.

ஈவேராஅண்ணாகருணாநிதி சிலைகள்: அதேபோல, பிறகு மவுண்ட் ரோடில் சிலைவைப்பதில், வைத்துக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. ஈவேரா (இந்து அலுவகத்து அருகில்), அண்ணா என்றாகி (மவுண்ட் ரோடு-வாலாஜா ரோட் சந்திப்பு), உயிரோடு இருக்கும் போதே கருணாநிதி தனக்கும் சிலை வைத்துக் கொண்டார் (மவுண்ட் ரோட்-பாட்டுலஸ் ரோட் சந்திப்பு). ஆனால், 1987ல் அது உடைக்கப் பட்டது. அது அரசியலாகி, திராவிடத்துவமாகி, ஒரு நம்பிக்கையாகவும் மாறியது. அதாவது, அது அபசகுனமாகக் கருதப் பட்டது. திமுக ஆட்சி அதிகாரம் இழந்தது. எம்ஜிஆருக்கு ஸ்பென்சர் சந்திப்பில் சிலை வைக்கப் பட்டது. இனி மவுண்ட் ரோடில் எங்கு, யாருக்கு வைப்பார்களோ தெரியாது.

மவுண்ட் ரோடில் முதலில் ஈவேரா, பிறகு அண்ணா, கருணாநிதி என்று வரிசையாக சிலைகள் வைக்கப் பட்டது.

அம்பேத்கர் சிலை வைத்தலும், போராட்டமும்: இதற்குள் அம்பேதகருக்கு சிலை வைக்கும் அரசியல் ஆரம்பித்து, அது தீவிரமாகி, அதிகமாகியது. முதலில் இந்துக்களைத் தாக்க அது உதவும் என்று நினைத்து ஊக்குவிக்கப் பட்டது, ஆனால், அது திராவிட உயர்ஜாதியினருக்கே எதிராக அமைந்தது. இது நிச்சயமாக திராவிடத்துவவாதிகளுக்குப் பிடிக்கவில்லை[3]. அதனால், திக ஈவேரா சிலை வைக்கும் அதிரடியை ஆரம்பித்தது. அந்த தீவிரம் ஶ்ரீரங்கம் கோவில் வாசலுக்குச் சென்ற போது பிரச்சினையாகியது[4]. இடையில் கண்ணகி சிலை வைத்தும் கருணாநிதி அர்சியல் நடத்தினார். ரஜினி 2021ல் பேசியதும் எதிர்க்கப் பட்டது, ஆனால், விவரங்கள் வெளியே வந்து விட்ட போது, திராவிட நாத்திக-இந்துவிரோத முகங்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

சிலைகளுக்குப் பிறகு கோவில்களும் கட்டப் பட்டது. இப்பொழுது சமாதிகள் கோவில்களாக மாறி அங்கு தினம்-தினம் பூஜைகள், படையல்கள், ஆராதனைகள், அலங்காரங்கள்-வாத்தியங்கள் சகிதம் நடந்து கொடிருக்கின்றன…

வள்ளுவர் கோட்ட அரசியல்: கடந்த 1971- 76 ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார்[5]. அதன் திறப்பு விழாவை 1976ம் ஆண்டு பிரவரி மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்த முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விழா தொடர்பாக வானொலியில் விளம்பரம்கூட ஒலிபரப்பப்பட்டது. அப்போது இந்திரா காந்தி பிரதமர். நெருக்கடிநிலை (மிசா) அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதனால் கோபமடைந்த இந்திராகாந்தி, பிப்ரவரி ஒன்றாம் தேதி, 1976 வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடக்க இருந்த நிலையில், ஜனவரி 30ம் தேதி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்[6]. அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது வந்து, வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் என்ற முறையில், வள்ளுவர் கோட்டம் திறப்புவிழாவில் பார்வையாளராகக் கலந்து கொள்ள கருணாநிதிக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. பத்தாவது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. விழா நடக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் காரை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து விழாவுக்கு கருணாநிதி நடந்து வரவேண்டும். விழாவைப் புறக்கணித்தார் கருணாநிதி[7].

ஈவேரா இந்த வழக்கில் தான் உச்சநீதி மன்றத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், நாங்கள் பார்க்காத கோர்ட்டா என்றெல்லாம் பேசுவார்கள். ஈவேரா இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவில்லை..

முதல்வராக இருந்த கருணாநிதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, கடற்கரைச் சாலையில் சிலை வைத்தார். 2011ல் அந்த சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்தில் இப்போது வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவின்போது, சிலையின் பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு, சிவாஜி சிலை பீடத்தில் இப்போது அகற்றப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.

அங்கில அடிவருடித்தனம் கட்டுக்கதைகளால் இவ்வாறெல்லாம் பகுத்தறிவு திராவிடத்துவ போதை கொண்டு, புதிய பக்தர்கள் உருவாகி வருகிறார்கள்!

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன், சென்னையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார் கருணாநிதி, சிலைக்கு மாலை அணிவிக்க இயலாதபடி, அங்கே வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை ஆட்சியாளர்கள் அகற்றிவிட்டனர். உலகத்தமிழ் மாநாட்டின்போது, அரசு சார்பில், அண்ணா முதல்வராக இருக்கும்போதே வைக்கப்பட்டதுதான் அந்தசிலை. ஆனால், அந்த சிலை நிறுவுவதற்கான தொகையை நன்கொடையாகக் கொடுத்தவர் எம்ஜிஆர். படிக்கட்டு அகற்றப்பட்டதையடுத்து,சிலையின் பீடத்தில் மாலையை வைத்துவிட்டுச் சென்றார் கருணாநிதி. இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுகவுக்கென்று தனியாக அண்ண சிலை நிறுவ முடிவு செய்தார் கருணாநிதி. இதற்காக அண்ணா சாலையில் இடம் ஒதுக்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் அரசு மறுத்துவிட்டது. வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க திமுகவுக்கு அனுமதி தரப்பட்டது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார் கருணாநிதி. சிலையின் பீடத்தில், “சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் கட்டியது கருணாநிதி என்பதை அங்கே பதிவு செய்தனர். அண்ணா பிறந்த நாளில், இந்த சிலைக்குதான் திமுகவினர் மாலை அணிவிப்பார்கள். அதிமுகவினர், அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.

கட்டுக் கதையைப் பரப்பும் திராவிடத்துவம், அதை அரசு ரீதியில், 2022ல் முதலமைச்சரே பரப்புகிறார்! சரித்திரம் பற்றி எந்த கவலையும் இல்லை.

1969 முதல் 2018 வரை – மெரினாவில் சமாதி அரசியல்: முதலில் 1969ல் அண்ணா இறந்தபோது, அவருக்கு சமாதி கட்டப் பட்டது. அப்பொழுது, அதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, 1987ல் எம்ஜிஆருக்கு சமாதி வைத்த போது, திமுகவினர் சில சலசலப்பு காட்டினாலும், கருணாநிதி சிலையுடைப்பு, வன்முறை முதலியவற்றை கவனித்து அமைதியாகினர். 2016ல் ஜெயலலிதாவுக்கு சமாதி வைக்க்ப்பட்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு 2018ல் கருணாநிதி இறந்தபோது, மெரினாவில் சமாதி அரசியலும் உண்டானது. வழக்கும் தொடரப் பட்டது, ஆனால், முடித்து வைக்கப் பட்டது, சமாதி வைக்கப் பட்டது. இனி, திராவிடத்துவவாதிகள், மெரினாவில் தங்களுக்கு சமாதி வைக்க “ரிசர்வ்” செய்துகொண்டு இடத்தைப் பிடித்து வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

Stuart Sampson – ஸ்ய்ரௌட் சாம்ப்ஸன் மதுரையின் பென்னிகுக்கிற்கு வீடு இருந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிலை அரசியலை ஆரம்பித்து விட்டது: இப்பொழுது 2022ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடம் அதைவிட தீவிரமான சிலை / மணிமண்டபம் அரசியல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அயோத்தி தாசர், வ.உ.சிதம்பரம், ஈவேரா, வள்ளலார், ஜான் பென்னிகுக் என்று நீள்கிறது. இதற்கெல்லாம் கோடிகளில் திட்டங்கள்! பிறகென்ன கட்டுக்கதைகளுக்கு குறைவா? இட்டுக்கட்டுவதில் வல்லவர்களான, தமிழ் செப்படி வித்தை[8] வல்லுனர்கள் சதுரங்க வேட்டையிலும் இறங்கி விடுவர். ஆனால், சரித்திர ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்க முன்படும் போது, உண்மைகள் வெளிவரத்தான் செய்யும். இவ்விதமாகத்தான், இப்பொழுது ஸ்டாலின் மாட்டிக் கொண்டுள்ளார். நிச்சயமாக யாரோ அவருக்கு இந்த ஸ்கிரிப்டை எழுதி கொடுத்துள்ளார்கள். அது நாகநாதன், ஜகதீசன், கருணானந்தம் போன்ற ஆஸ்தான சரித்திராசியர்களாக இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] World Tamil Conference (WTC) என்பது முதலில் 1966ல் கோலாலம்பூர் மற்றும் 1968ல் சென்னையில் நடத்தப் பட்டது.

[2] 1971ல் ராமர் போன்ற படங்களுக்கு செருப்பு மாலை போடப் பட்டது மற்றும் இந்து கடவுளர்களை நிர்வாணமாக, ஆபாசமாகச் சித்தரித்து திக-திமுகவினர் துருச்சியில் ஊர்வலம் நடத்தினர்.

[3] தமிழனே இல்லாத நபருக்கு, தமிழகத்தில் சிலை ஏன் என்று கூட கேள்விகள் எழுப்பப் பட்டன.

[4] One.India, Life-size Bronze statue of ‘Periyar’ was unveiled at Srirangam, By Staff | Published: Monday, December 18, 2006, 3:51 [IST]

https://www.oneindia.com/2006/12/16/life-size-bronze-statue-of-periyar-was-unveiled-at-srirangam-1166394083.html

Srirangam, Tamilnadu, Dec 16 (UNI) In an event preceded by controversy, a life-size bronze statue of late Rationalist leader and Founder of Dravidar Kazhagam (DK) Periyar E V Ramasamy Naicker,was formally unveiled near the Sri Ranganatha temple by DK General Secretary K Veeramani, here .  the statue mounted on a 12-feet high pedestal,was installed near the ‘Rajagopuram’ (temple tower). Union Minister for Environment and Forests A Raja, State Ministers K N Nehru and N Selvaraj, also participated in the event.

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சிலை அரசியல், Written by WebDesk, Updated: October 2, 2017 11:06:36 am.

[6] https://tamil.indianexpress.com/opinion/statue-politics/

[7] இதில் முக்கியமானது என்னவென்றால், வள்ளுவர் கோட்டத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு அகற்றப்பட்டதுதான். வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதிதான் கட்டினார் என்ற தகவல் அங்கு எந்த வகையிலும் இடம் பெறவில்லை. இது இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த வேலை.

[8] பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.

ரஜினியும் இக்கட்டுக்கதை வைத்து படம் எடுத்ததால், இரண்டாம் பெனிகுக் நிலைக்கு உயர்ந்துள்ளாறா அல்லது தள்ளப் பட்டாரா என்று தெரியவில்லை.

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? வேறெந்த காரணமா? (1)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? வேறெந்த காரணமா? (1)

இட்டுக்கதை, கட்டுக்கதை, மாயைகள் முதலியவற்றை உருவாக்குவதில் வல்லவர்கள் திராவிடத்துவ வாதிகள்: கட்டுக்கதைகளை உருவாக்குதில் திராவிடத்துவவாதிகள் கைத் தேர்ந்தவர்கள் ஆவர்.  அவற்றில் அரசியல் ஆதாயம், பணம், கான்ட்ராக்ட் கிடைக்கும் என்றால், பெரிதாக்கி ஊதுவார்கள்! சம்பந்தமே இல்லாத ஆட்கள் எல்லாம் திடீரென்று தோன்றி அதில் அதி-தீவிரமான விருப்பம் கொண்டிருப்பதைப் போலவும், அதற்கு உயிரையே கொடுப்பேன் என்ற ரீதியில் உழைப்பது போலவும் நாடகம் ஆடுவர். விவகாரங்கள் தெரிய வந்தால், சமாளித்துப் பார்ப்பார்கள், மாட்டிக் கொண்டால் அடங்கி விடுவார்கள், வழக்கு என்றெல்லாம் ஆகி விட்டால், எல்லாவற்றையும் அடியோடு மறைக்கப் பார்ப்பர்கள். திராவிடத்துவ சரித்திரம் என்றதே கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப் பட்டதே. எல்லாமே, ஒருதலைப் பட்ட கதைகள், அவர்களே வெளியிட்டுள்ள புத்தகங்கள், முதலியன…. அவற்றை சரிபார்க்க முடியாது, அவர்கள் சொல்லியுள்ளதை, எழுதியுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தான் எழுது முறை ஆராய்ச்சி நெறிமுறை எல்லாமே நடந்து வருகிறது. சரித்திராசிரியர்கள் என்று பிரகடப் படுத்திக் கொள்பவர்களும், அவ்வாறே ஆதரித்து, விருதுகள், பட்டங்கள், நிதியுதவிகள் பெற்றுக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். உண்மையுரைக்க அவர்களுக்கு திராணி இல்லை, மன்னசாட்சியும் கிடையாது. அப்படி செய்தால், தூக்கியெறியப் படுவர்.

திராவிடத்துவ வாதிகளின் பதினெண் புராணங்கள் உருவாக்கும் முறைகள்: பெரியார் புராணம், நாகம்மை புராணம், பெரியம்மை புராணம், பெஸ்கி புராணம், அண்ணா புராணம், கருணாநிதி புராணம், வீரமாமுனிவர் புராணம், தத்துவ போதகர் புராணம், எல்லீஸர் புராணம், ஜி.யு.போப் புராணம், வரிசையில் பென்னி குக் புராணமும் சேர்ந்துள்ளது. “நதிமூலம், ரிஷி மூலம் கேட்கக் கூடாது,” என்றால், இங்கும் மூலங்கள் கேட்கக் கூடாது, காண்பிக்கப் படாது. எழுதி வைத்ததைப் படி, ஒப்புக்கொள், பிரச்சரம் செய், கேள்விகள் கேட்காதே – என்பவை தான் ஆணைகள், ஏற்றுக் கொள்ளப் படவேண்டும். ஒருவர் முதலில் எழுதுவார், இன்னொருவர் விரிவாக்குவார், இன்னொமொருவர் இன்னும் கொஞ்சம் சேர்ப்பார், புத்தகங்கள் வெளிவரும், பிஎச்.டிக்களும் உருவாக்கப் படும், விழா எடுப்பர், விருதுகள்-பட்டகள் கொடுக்கப் படும், அவ்வளவு தான், பொற்றாமரைக் குளத்தில், பூமேடையில் வைத்து, தமிழ் சங்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது போன்ற ரீதியில் அரங்கேற்றப் படும். கலைமாமணி, பெரியார் விருது என்றெல்லாமும் கொடுக்கப் படும்.

2018 – முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கின் பெயரால் நூதன மோசடி அரங்கேறி வருவதாக திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது:. முல்லைப்பெரியாறு அணை என்பது தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குக் ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு முன்பு இராணுவப் பணிப் பொறியாளராகப் பணியாற்ற இந்தியா வந்தவர். அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் ஒருபுறம் தென் மாவட்ட மக்கள் தண்ணீர்ப் பிரச்னையால் வாடுவதையும் மறுபுறம் பெரியாற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதையும் பார்த்து, ஆற்றின் குறுக்காக ஒரு அணையைக் கட்டலாம் என்று ஆங்கில அரசிடம் அனுமதி பெற்றார். பின் பாதி கட்டப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அணை உடைந்து ஆங்கில அரசு திட்டத்தை மூட்டை கட்டினாலும் இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையெல்லாம் விற்று அணையைக் கட்டி முடித்தார். இன்றளவும் அவர் பெயரைச் சொல்லி பொங்கல் வைக்கும் அளவுக்கு அன்பும் நன்றியும் பாராட்டுகிறார்கள் தென்மாவட்ட மக்கள். இந்நிலையில், கடந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் பென்னி குக்கின் கொள்ளு பேரன் பேத்திகள் என டயானா ஸிப், ஸானி மற்றும் உறவினர்கள் என்று சிலர் தேனிக்கு வந்தனர்.ஆனால், இவர்கள் யாரும் பென்னி குக்கின் நேரடி வாரிசுகள் அல்ல என்பதும் இவர்களில் ஒருவர் மட்டும் பென்னிகுக்கிற்கு தூரத்து சொந்தம் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

சந்தன பீர் ஓலி ஈடுபடுள்ளதாக, கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி குற்றம் சாட்டுகிறார்: கம்பம் அருகே உத்தமப்பாளையம் பகுதியைச் நேர்ந்த சந்தன பீர் ஓலி என்பவர், லண்டனைச்சேர்ந்த டயானா ஸிப் உள்ளிட்ட 3 பேரும் பென்னிகுக்கின் கொள்ளு பேத்திகள் என்று கூறி அறிமுகப்படுத்தி அழைத்து வந்ததோடு, லண்டனில் உள்ள பென்னிகுக் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையை சீர்செய்யவும் அங்கு பென்னிகுக்கிற்கு நினைவுச்சிலை எழுப்பவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக கூறுகிறார்கள் கம்பம் பகுதி மக்கள். இந்நிலையில்  பென்னிகுக்கின் பேத்திகள் என்று நம்பி தாங்கள் உதவி செய்ததாக கூறுகிறார்கள் அந்த நிகழ்ச்சிக்கு உதவி புரிந்தவர்கள்.  ஒரு பக்கம் பேரன், இன்னொரு பக்கம் பேத்திகள் என்று வருவதும் விசித்திரமாக இருக்கிறது.

கம்ப – கோவிந்தன் என்பவர் வழக்கு தொடர்வதாகக் கூறியது: இதனைதொடர்ந்து கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி தேனி கம்பம் பகுதியில் பென்னி குக்கின் பெயரில் நிதி வசூல் செய்தநிலையில், கொடைக்கானலில் பென்னிகுக் ட்ரஸ்ட் என்ற பெயரில் இதே சந்தன பீர் ஒலி என்பவர் பென்னிகுக்கின் நிலத்தை அபகரிக்க, முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்[1]. மேலும் 1‌980 வரை பென்னி குக் பெயரில் கொடைக்கானலில் இருந்த 21 ஏக்கருக்கும் அதிக நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிர்ச்சித்தகவலை கூறுகிறார்[2]. இச்சுழலில் கம்பம் பகுதி மக்களின் புகார்கள் குறித்து லண்டனில் வசிக்கும் சந்தன பீர் ஒலியிடம் கேட்டபோது இந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் மறுப்பு தெரிவித்தாலும், பென்னிகுக்கின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளார் கோவிந்தன். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

ஜனவரி 2022 – ஸ்டாலின் – பென்னி குயிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப் படும்: முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்குக்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தன்னிடம் இருந்த சொத்தை எல்லாம் விற்று அரும்பாடு பட்டு 1895-ம் ஆண்டு இந்த அணையை கட்டியவர் இங்கிலாந்தை சேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுயிக். இந்த நிலையில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்[3]. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்[4], “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான இன்று (ஜனவரி 15) அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்[5].

கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகரத்தில் அமைக்கப் படும்: கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள்[6]. ஆங்கிலேயப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக், தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்தார்[7]. அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இம்மாவட்ங்களில் தற்பொழுது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன[8].

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] புதிய தலைமுறை, பென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி: திடுக்கிடும் புகார் , NewsPT, Published :07,Dec 2018 08:14 AM.

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/39312/Fraud-in-the-name-of-PennyCuick-at-theni

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு சிலை நிறுவப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, By Rayar A, Updated: Saturday, January 15, 2022, 13:29 [IST].

[4] https://tamil.oneindia.com/news/chennai/a-statue-of-john-pennycuick-will-be-erected-in-england-on-behalf-of-the-government-of-tamil-nadu-say/articlecontent-pf640795-445443.html

[5] தினத்தந்தி, இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலைமுதல் அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, பதிவு: ஜனவரி 15,  2022 12:25 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2022/01/15122526/Statue-of-Pennywick-in-the-UK–Announcement-by-Chief.vpf

[7] புதியதலைமுறை, இங்கிலாந்தில் பென்னிகுயிக்கிற்கு சிலை நிறுவப்படும்” – முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, தமிழ்நாடு,  கலிலுல்லா,  Published :15,Jan 2022 12:33 PM.

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/127124/John-Pennycuick-statue-will-be-installed-in-uk

பெரியாரைத் தூஷித்ததால் சீதைமைந்தன் மீது புகார், கைது இத்யாதி! ஆனால், இந்து தூஷணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

ஒக்ரோபர் 16, 2021

பெரியாரைத் தூஷித்ததால் சீதைமைந்தன் மீது புகார், கைது இத்யாதி! ஆனால், இந்து தூஷணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

ஈவேரா அல்லது பெரியாரின் மீது தூஷணமா?: இதுவரை தமிழகத்தில், ஈவேரா, பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் போன்றோர் இந்துமதம், கடவுளர், நம்பிக்கை, முதலியவற்றைப் பற்றி அவதூறாகப் பேசிவந்ததது, புத்தகங்கள் போட்டது, அவை இன்றும் புழக்கத்தில் உள்ளது முதலியவை அறியப் பட்டுள்ளது. அவற்றைப் பற்றி ஆராய்ந்தால், அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்ற கேள்வி எழும். பிறகு, அவர்களின் பேச்சுகளை-எழுத்துகளை புத்தகங்களாகப் போட்டு, விற்று விநியோகிக்கும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகம், பெரியார் திராவிடக் கழகம், போன்ற பதிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுதும், இது இந்துவிரோத மற்றும் இந்திய தேசவிரோத சக்திகளின் உட்பூசலே தவிர உண்மையில் அவர்கள் ஒன்றும் விடாமல் சட்டப் படி நடவடிக்கை எடுத்து, மூன்றாண்டு-ஐந்தாண்டுகள் சிறையில் தள்ளப் போவதில்லை. அப்படி செய்தால், செய்திருந்தால், 90& அத்தகைய திராவிடத்துவ, தமிழ்தேசிய மற்ற வகையறாக்கள் சிறையில் தான் இருந்திருப்பர். சிறைத் தண்டன பெற்றவர்கள் மாறியிருப்பர். அதனால், இப்பொழுது ஒருவர் ஈவேராவை-பெரியாரை தூஷித்ததால் கைது செய்யப் பட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது.

பெரியார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக ழகரம் வாய்ஸ் யூடியூப்: பெரியார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலின் தட்சிணாமூர்த்த்தியை போலீசார் 15-10-2021, வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர்[1]. அன்றே, சில டிவிசெனல்களில் இச்செய்தியை வெளிட்டாலும் விவரங்கள் கொடுக்கப் படவில்லை. அதாவது, அதன் மூலம், அந்த விமர்சனங்களை மக்கள் அறியக் கூடாது என்று அமுக்கி வாசித்தனர் என்று தெரிகிறது. ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனல் தொடந்து அரசியல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளது[2]. இந்த யூடியூப் சேனலை சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி நடத்தி வருகிறார்[3]. இந்த நிலையில், ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் அக்டோபர் 11ம் தேதி 11-10-2021 அன்று பெரியார் குறித்து ஒரு வீடியோ வெளியானது[4]. அதில், பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்[5].

தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் புகார் கொடுத்தது: இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் என்பவர் அளித்த புகாரில்[6], “காலமெல்லாம் தமிழ் மக்களுக்காக உழைத்த தந்தை பெரியாரையும், நான் சார்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் அவர்களையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவு படுத்தி, தட்சிணாமூர்த்தி என்பவர் மிகவும் கீழ் தரமாக பேசியுள்ளார், தந்தை பெரியார் விபச்சாரம் செய்தார் என தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இந்த செயல் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுகிற என்னைப் போன்ற பெரியார் தொண்டர்களை மிகவும் கவலையடைய செய்துள்ளது. மேலும், முடிந்தால் தன் மீது வழக்கு தொடுத்து பார் என வீடியோவில் தட்சிணாமூர்த்தி சவால் விடுத்துள்ளார். இதுபோன்ற பேச்சுக்கள் அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாட்டில் மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் சூழலுக்கு வழிவகுக்கிறது.

திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் ஏன் புகார் கொடுக்கவில்லை?: இங்கு திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் ஏன் புகார் கொடுக்கவில்லை என்பது நோக்கத் தக்கது. ஏனெனில், உண்மையிலேயே பாதிப்பு ஏற்படும் என்றால் அவர்களுக்குத் தான் என்று நன்றாகத் தெரியும். பிறகு தந்தை பெரியார் திராவிட கழக ஏன் முந்திக் கொள்கிறது அல்லது பெரியார் பிராண்டிற்கு பாடுபடுகிறது என்று தெரியவில்லை. அயோத்தியா மண்டபத்து அப்பவி பார்ப்பனர்களை வெட்டியது முதல், பன்றிக்கு பூணூல் போட்டது வரை இந்த தந்தை பெரியார் திராவிட கழக தான் செய்து வருகிறது. இதனால், திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் இந்துக்களுக்கு உதவுகின்றனர் என்றாகாது. இது எதோ இவர்களுக்குள் உள்ள ஒப்பந்தம் போலே தோன்றுகிறது. சுப.வீரப் பாண்டியனும், திராவிடர் கழகத்தில் இல்லை, ஆனால், ஒத்து ஊதும் போது, இந்துக்களைத் தாக்கும் போது, ஒன்று படுகின்றனர். விடுதலை ராஜேந்திரனும் அமைதியாக அதே வேலையைச் செய்து வருவது கவனிக்கத் தக்கது.

திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் நோக்கு உள்ளதா?: தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை மிக மிக கீழ்த்தரமாக ஆபாசமாக விமர்சிக்கின்ற சீதையின் மைந்தன் என்கிற அந்த நபர் ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் கடந்த 11/10/21 தேதியன்று பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் நோக்கில் இவர் பேசி உள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது, ஆகவே அய்யா அவர்கள் இவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[7]. இந்த புகாரின் பேரில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி மீது போலீசார் 153A, 504B, 505 (1) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்[8]. இதையடுத்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். விசாரணையில் தட்சிணமூர்த்தி இதேபோல் மூன்று யூ-ட்யூப் சேனலை நடத்திவந்ததும், கச்சத்தீவு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவருவது தெரியவந்தது[9]. இதனையடுத்து தட்சிணமூர்த்தி பெரியார் குறித்து பேசிய காணொலியை சைபர் கிரைம் காவல் துறையினர் சேனலிலிருந்து நீக்கினர்[10]. இவரிடம் காவல் துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றது.

இபிகோ 153A, 504B, 505 (1) ஆகிய 3 பிரிவுகள் சொல்வது என்ன?: இபிகோ  153Aன்படி –

1. (a) பேச்சாலோ, எழுதாலோ அல்லது சைகையாலோ மத, இன, மொழி சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்வது குற்றமாகும்.

(b) அத்தகைய விரோத உணர்ச்சிகளால் போது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதும் குற்றமாகும்.

(c) குற்றம் என்று கருதக்கூடிய வன்முறை அல்லது வன்செயலை பயன்படுத்தும் கருத்துடன் அல்லது பயன்படுத்த பயிச்சி அளிக்கும் கருத்துடன் அல்லது சாதி, சமூகம், இனம், மதம், மொழி அல்லது வட்டாரக் குழு எதற்கும் விரோதமான வன்முறை அல்லது வன்செயலை பயன்படுத்தக்கூடிய பயிற்சி இயக்கம் உடற்பயிற்சி அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் பங்கு பெறுவோர் அநேகமாக பயன்படுத்த பயிற்சி அளிக்கக்கூடிய நடவடிக்கையாக அவை இருக்கின்றன என்று அறிந்தும் அவற்றில் பங்குபெறுவதும் பயிற்சி வேலையில் ஈடுபடுவதும் குற்றமாகும்.

அத்தகைய ஜாதி, சமூகம், இனம், மதம், மொழி அல்லது வட்டார குழுவினருக்கு அச்சத்தை அல்லது பீதியை அல்லது பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை அத்தகைய நடவடிக்கைகள் எந்த காரணம் கொண்டு உண்டாகின்றன. அல்லது உண்டாக்கக் கூடும் என்று அறிந்தும் அதில் பங்கு பெறுவோர் குற்றம் புரிந்தவர் ஆவார்.

இந்த குற்றத்திற்கு தண்டனையாக 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் சிறைக்காவலுடன் கூடிய அபராதங்கள் விதிக்கப்படும்.

2. மேலே விவரிக்கப்பட்டுள்ள குற்றத்தின் வழிபாடு நடைபெறும் இடத்தில் செய்வது குற்றம், மத வழிபாட்டுக்கு ஆன மக்கள் கூடியிருக்கும் அரங்கிலும் அந்த குற்றத்தினை புரிய கொடுத்தது. அப்படி புரிந்தால் அதற்காக 5 ஆண்டுகள் வரை சிறைக் காவலும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி முதலானவற்றின் அடிப்படைகளில் வெவ்வேறு வகுப்புகளிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிலக்கணப் பேணலுக்கு பாதகமான செயல்களைச் செய்தல்

(1) எவரேனும் :-

(a).பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தல்களால் அல்லது மற்றபடியாக, மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி, ஜாதி அல்லது பிரிவு அல்லது எந்தவிதமான ஏதாவதொரு பிற அடிப்படையில், வெவ்வேறான மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்புகள் அல்லது ஜாதிகள் அல்லது பிரிவுகளிடையே ஒற்றுமையின்மை அல்லது பகைமை உணர்வுகள், வெறுப்பு அல்லது மனக்கசப்பை ஊக்குவித்தால் அல்லது ஊக்குவிப்பதற்கு முயன்றால் அல்லது

(b). எந்தஒரு செயல், வெவ்வேறான மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்புகள் அல்லது ஜாதிகள் அல்லது பிரிவுகளிடையே நல்லிலக்கணத்தைப் பேணுவதற்குப் பாதகமாக இருக்கிறதோ, மற்றும் எந்தவொரு செயல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறதோ, அல்லது அநேகமாக விளைவிக்குமோ, அந்தவொரு செயலைப் புரிந்தால், அல்லது

(c) ஏதாவதொரு பயிற்சி, இயக்கம், படைப் பயிற்சி அல்லது பிற ஒத்த செய்கையை, அத்தகைய செய்கையில் பங்குபெறுவோர்கள் குற்றமுறு பலப்பிரயோகம் அல்லது வன்முறையைப் பயன்படுத்த அல்லது அநேகமாக பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்ட, அல்லது அத்தகைய செய்கையில் பங்குபெறுவோர்கள் குற்றமுறு பலப்பிரயோகத்தை அல்லது வன்முறையை பயன்படுத்துவார்கள் அல்லது அநேகமாக பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்படுவார்கள் என்று தெரிந்தே, ஏதாவதொரு மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவுக்கு எதிராக மற்றும் அத்தகைய செய்கை ஏதாவதொரு எந்தவிதமான காரணத்திற்க்காகவும், அத்தகைய மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவிற்கு இடையில் பயம் அல்லது பீதி அல்லது பாதுகாப்பற்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதற்கு அல்லது அநேகமாக ஏற்படுத்தலாமென்ற, ஏற்பாடு செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

அப்படி பார்த்தால், மேலே குறிப்பிட்டப் படி, அந்த நபர்களின் பேச்சுகள், வார்த்தைகள், எழுத்துகள், புத்தகங்கள் இன்றளவிலும் அத்தகைய குற்றங்களை செய்து கொண்டு தான் வருகின்றன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

© வேதபிரகாஷ்

16-10-2021


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், பெரியார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது!, Written By WebDesk, Updated: October 16, 2021 1:22:52 am

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/youtuber-arrested-for-derogatory-video-released-on-periyar-356213/

[3] டாப்.தமிழ்.நியூஸ், பெரியார் விபச்சாரம் செய்தாரா? என யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தவர் கைது!,  By AISHWARYA G , Fri, 15 Oct 20219:22:41 PM

[4] https://www.toptamilnews.com/thamizhagam/youtuber-arrested-for-commands-about-periyar/cid5537412.htm

[5] தினகரன், ழகரம் வாய்ஸ் என்ற யூட்டியூப் சேனலை நடத்தி வரும் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி கைது, 2021-10-15@ 19:09:01.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=712620

[7] தினத்தந்தி, பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுயூடியூபர் தட்சிணாமூர்த்தி கைது, Uploaded on 16/10/2021.

[8] https://www.youtube.com/watch?v=kl_2s7LxAbU

[9] ஈ.டிவி.பாரத், பெரியார் குறித்து அவதூறு: யூட்யூபர் கைது, Published on: 16-10-2021 7.00 hours.

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/youtuber-arrested-in-chennai-for-slandering-father-periyar/tamil-nadu20211016065810895

பெரியார் உலகம் பெயரில் சுற்றுலா தலம்-வணிக வளாகம் அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! சரித்திரத்தை மறைக்கும் போக்கு! (3)

செப்ரெம்பர் 22, 2021

பெரியார் உலகம் பெயரில் சுற்றுலா தலம்-வணிக வளாகம் அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! சரித்திரத்தை மறைக்கும் போக்கு! (3)

ஈவேராவின் இந்துவிரோதமும், பெரியாரின் ஆபாச ஊர்வலமும்: இந்த உண்மைகளும் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை, தெரிவதில்லை. அதனால், ஈவேரா ஏதோ பெரிய ரிஷி-முனிவர்-சீர்திருத்தவாதி என்பது போல மாயையினை உருவாக்கி வந்துள்ளனர், இன்றும் அதிகமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர் –

 1. ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தார்.
 2. அதற்காக, உச்சநீதி மன்றம் வரை வழக்கு சென்றபோது, ஆஜராகாமல் ஓடி ஒளிந்தார்.
 3. ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தினார்.
 4. முருகனைப் பற்றி ஆபாசமாக படம் வரைந்து, செருப்பால் அடிக்க வைத்தார்.
 5. ஐயப்பன் பிறப்பிப் பற்றியும் ஆபாசமாக சித்திரங்கள் வரைந்து, ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப் பட்டது.
 6. அப்பொழுது, துக்ளக்கில் அப்படங்கள் வெளியிட்ட போது, துக்ளக் இதழ்கள் வாங்கி எரிக்கப் பட்டன.
 7. அதாவது, எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை போன்றவற்றிற்கு திக-திமுக அந்த அளவுக்கு மதிப்பு கொடுத்தார்கள்.
 8. விடுதலையில், இன்றுவரை, ஒவ்வொரு இந்து பண்டிகை வரும் போது, தூஷித்து வருகிறது. அதனை பெரும்பாலானவர்களுக்குத் தெரியாமல் போகிறது. ஏனெனில், அதனை அவர்கள் வாங்கிப் படிப்பதில்லை.
 9. மேலும், அவர்களுடைய இந்துவிரோத ஆர்பாட்டங்கள், நிகழ்ச்சிகள், பெரியார் திடல் என்ற வளாகத்தில் உள்ளே இருக்கும் மண்டபத்தில் நடத்திக் கொள்கிறார்கள்.
 10. இவர்களுக்குத் தான் இன்று “இந்து” ராம், மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணு, கம்யூனிஸ்ட் இத்யாதிகள் முதலியவை வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகின்றனர்.

இப்பொழுது அமைக்கு வளாகத்தில் இவற்றை – இந்த விவரங்களை, புகைப் படங்களை, ஆதாரங்களை – தைரியமாக வைப்பார்களா?

செக்யூலரிஸ நாத்திகமும், கடவுள் மறுப்பும், விக்கிர ஆராதனை எதிர்ப்பும் இல்லாத பெரியாரிஸம், போலித்தனம்:

 1. கடவுள் மறுப்பு நம்பிக்கை, –
  1. நாத்திகம் (Atheism),
  1. ஞானத்தால் அறியும் தமையினை மறுப்பது (agnosticism), 
  1. பொதுவாக நம்பிக்கையில்லாதத் தன்மை (skepticism),
  1. ஏளனத் தனமாக அறியாமல் ஏற்றுக் கொள்ளா தன்மை (cynicism),
  1. இருக்கின்ற அமைப்புகளை எதிர்க்கும் தன்மை (rationalism)

இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டாலும், இந்த திராவிடத்துவ சித்தாந்திகள் இந்துவிரோதிகளாகத் தான் இருந்து வருகிறார்கள்.

 • கடவுள் இல்லை என்றால், எல்லா மதக் கடவுளர்களும் இல்லை, ஆனால், பெரியாருக்கு, பெரியாரிஸ்டுகளுக்கு இந்து கடவுள் மட்டும் இல்லை என்ற கொள்கையுள்ளது.
 • மற்ற மதங்களின் நூல்களை, புராணங்களை விமர்சிப்பதில்லை.
 • உண்ணும்நோன்பு, தீச்சட்டி ஏந்துதல் போன்று மற்ற மத சடங்குகளை செய்து கிண்டலடிப்பதில்லை. சிலுவையில் அறைந்து கொள்ளலாம், கத்திகளால் உடலில் கீறி காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம், சாட்டையினால் ரத்தம் வரும் வரை அடித்தும்கொள்ளலாம். ஆனால், செய்வதில்லை.
 • நாத்திக சமத்துவமாக, பிள்ளையாருடன், கிருத்துவ-துலுக்கக் கடவுள் உருவங்களை உடைக்கவில்லை.
 • மற்ற கடவுள் பிறப்புப் பற்றிய படங்களை வரையவில்லை, எந்தவித ஊர்வலமும் நடத்தவில்லை.
 • மற்ற மதங்களைப் பற்றி விமர்சிப்பதில்லை, ஆனால், அம்மத விழாக்களில் கலந்து கொண்டு, இந்துமதத்தை விமர்சித்துள்ளனர், கேலி பேசியுள்ளனர்.
 • மற்ற மதங்களுக்கு போட்டிப் போடுக் கொண்டு வாழ்த்துகள், ஆனால், இந்து மதத்திற்கு இல்லை, மாறாக தூஷணங்கள் உண்டு.
 • கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டத்திற்குச் சென்று கேக் தின்பது, துலுக்க ரம்ஜான் இஃப்தர் பார்ட்டிகளில் கஞ்சிக் குடிப்பது என்றெல்லாம் செய்து, அங்கேயே இந்து பண்டிகைகளை மோசமாக விமர்சிப்பது கருணாநிதி[1], ஸ்டாலின்[2] செய்து வந்தது தெரிந்த விசயமே.
 • இந்து பண்டிகைகளின் போது, தூஷணங்களை நேரிடையாக விடுதலை, முரசொலி நாளிதழ்களில் காணலாம், மறைமுகமாக சன் மற்றும் கலைஞர் டிவிசெனல்களில் பார்க்கலாம்.

இவற்றிலிருந்து, இவர்களின் போலித் தனமான சித்தாந்தத்தை அறிந்து-புரிந்து கொள்ளலாம்.

சிலைகள் உருவாக்கும் வியாபாரம் ஏற்கெனவே ஆரம்பித்தாகி விட்டது: ஈவேரா, அண்ணா, கருணாநிதி என்று சிலைகள் செய்து விற்க ஆரம்பித்து விட்டனர். கொலு பொம்மைகள் மாதிரி ஏற்கெனவே விற்கப் படுகின்றன. இப்பொழுது, மார்பளவு, நிற்கும் கோலம், திராவிட-மும்மூர்த்திகள், மார்பளவு, உயரமான தூண்-பீடத்துடன், கருப்பு மற்றும் தங்க முலாம் பூசியது, என்று ஒரு குறிப்பிட்ட கம்பெனி பலவிதமாக தயாரிக்கின்றனர். அவை வெவ்வேறு அளவுகளிலும், வெண்கலத்திலும் உற்பத்தி செய்கிறார்கள். நாத்திக ஆட்சியில், திராவிட கடவுள் மறுப்பு சித்தாந்தத்தில், பிள்ளையார் சிலைகள் உடைத்த ஈவேரா வழியில், அவருக்கும், உடன் பிறப்புகளுக்கு சிலைகள் தயாரிக்கின்றனர், விற்கின்றனர். இதில் ஆன்-லைன் வியாபாரம் வேறு! “திராவிட மும்மூர்த்திகள்” உருவாகி விட்டதால், இனி “ஈவேரா-நாகம்மை-மணியம்மை” என்று “பிள்ளையார்-ஶ்ரீதேவி-பூதேவி” கணக்காக சிலைகளையும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்! கருணாநிதி-பத்மாவதி-தயாளு-ராஜாத்தி ஜோடிகளும் உருவாகி விடும். இதற்கான “Iconography” (உருவமைப்பு முறை) ஏற்கெனவே உருவாகி விட்டது. ஆக, இது, “திராவிட சிற்பகலை” என்று நூல்களில் சேர்க்கப் படலாம். திராவிட வாஸ்துமுறையும் உண்டாக்கப் படலாம். அதற்கேற்ற பாடதிட்டங்களை சுப.வீரபாண்டியன், லியோனி முதலியோர் உருவாக்கத் தயாராக உள்ளார்கள். பாலகிருஷ்ணன்[3], உதயசந்திரன்[4] அவற்றை “எலைட்” லெவலில் (Elite level) எடுத்துச் செல்வார்கள். நன்றாக வியாபாரம் ஆகிறது. இனி இந்த ரூ 100 கோடி வியாபார திட்டத்தில், செலவு செய்தால் போல காண்பித்து, நன்றாகவே, வரியேய்ப்பும் நடக்கும்.

மறுப்புமறைப்பு முறை சித்தாதம் (Negationism) கடைபிடிப்பது சரியில்லை: சமீபகால சரித்திரத்தில் மறுப்பு-மறைப்பு முறை சித்தாதம் (Negationism) செயல்பட முடியாது, ஏனெனில், அக்காலத்தவர் இன்னும் இருக்கிறார்கள், சாட்சிகளாக வாழ்கிறார்கள். மறுப்பு-மறைப்பு முறை சித்தாதம் (Negationism) என்பது சரித்திரத்தில் ஒருவர் பற்றிய, ஒருவர் செய்த செயல்கள் பற்றிய உண்மைகளை மறைத்து, ஆதரங்களை மறைத்து, ஒருதலைப் பட்சமாக, அவர்கள் நல்லது செய்தார்கள் என்பது போல சித்தரித்துக் காட்டும் முறையாகும்[5]. இவர்கள் என்னவெல்லாம்-எப்படியெல்லாம்-எந்நிலைகளில்-எங்கு பேசியிருக்கிறார்கள், என்பதெல்லாம் தெரியும். நாடகம்-சினிமா என்று சம்பந்தப் பட்டிருப்பதால், அந்த வாழ்க்கை முறையும் தெரியும். அப்பொழுது “மீ-டூ” (Me Too) போன்றவை இருந்திருந்தால், பாதிக்கப் பட்டவர்களே சொல்லியிருப்பார்கள்[6]. கண்ணதாசன், மபோசி போன்றார் எழுதியதைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈவேரா, அண்ணா, கருணாநிதி பேசியதை-எழுதியதை மறைக்கவேண்டிய தேவையும் இல்லை. அவர்களை மீறி, மிரட்டி, உண்மைகளை மறைத்து சரித்திரத்தை எழுத முடியாது. அத்தகைய சரித்திரவரையறையும் (historiography) எடுபடாது. முரண்பாடுகள், எதிர்மறை நடவடிக்கைகள், இரட்டை செயல்பாடுகள், இரண்டு வேடங்கள், என்றெல்லாம் இருப்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1]  இந்துமதத்தில் ஏகாதசி போன்ற உண்ணா நோன்புகள் உள்ளன, ஆனால், இந்துக்கள் வகைவகையாக பலகாரங்கள் செய்து சாப்பிடுவார்கள் என்று கருணாநிதி பேசியுள்ளது தெரிந்த விசயம்.

[2]  ஒரு திருமண நிகழ்ச்சியில், இந்து திருமண மந்திரங்களைப் பற்றி ஆபாசமாக பேசியது வீடியோவில் உள்ளது. பலரும் அதனைப் பார்த்து-கேட்டுள்ளனர்.

[3] IAS (Retd.) அதிகாரி, சமீபத்தில், முழுவதுமாக திராவிடத்துவ சரித்திராசிரியராக மாறிவிட்டார். புத்தகமும் எழுதிவிட்டார். இவரது எழுத்துகள் தமிழக பாடபுத்தகங்களிலும் சேர்க்கப் பட்டுள்ளன.

[4] IAS பணியில் உள்ளார், திராவிட சித்தாந்தத்திற்கு வெளிப்படையாக உதவுகிறார், தங்கம் தென்னரசு அமைச்சருக்கு துணையாக இருக்கிறார்.

[5]  உதாரணத்திற்கு ஔரங்கசீப், மாலிகாபூர் போன்றவர்கள் நல்லவர்கள், அவர்கள் கோவில் கட்ட நிதி அளித்தார்கள், கோவில்களை காப்பாற்றினார்கள் என்றெல்லாம் கடைவிடும் முறைகள். இத்தகையை சரித்திரம் எழுதும் போக்கை, பலர் எடுத்துக் காட்டியுள்ளனர். அது மிகவும் ஆபத்தானதும் கூட.

[6] சமீபத்தில் கூட கண்ணதாசன் குறிப்பிட்டதை எடுத்துக் காட்டியதற்கு, வழக்குகள் போடப் பட்டன. பிறகு, உண்மைக்கு ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

ஶ்ரீராமநவமி அன்று ராமரை தூஷித்து, தப்லிக் ஜமாத் மர்கஸ் கோஷ்டியை ஆதரிக்கிறது! திராவிட நாத்திகம் துலுக்கரை ஆதரிக்கிறது, இந்துக்களை வெறுக்கிறது!

ஏப்ரல் 2, 2020

ஶ்ரீராமநவமி அன்று ராமரை தூஷித்து, தப்லிக் ஜமாத் மர்கஸ் கோஷ்டியை ஆதரிக்கிறது! திராவிட நாத்திகம் துலுக்கரை ஆதரிக்கிறது, இந்துக்களை வெறுக்கிறது!

Veeramani supporting Tabliq, Viduthalai, 02-04-2020

விடுதலைமூலம், இந்துவிரோதிவீரமணி கக்கும் துவேசம்: டில்லியில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கணிசமான எண்ணிக்கையில் ‘கரோனா’ தொற்று ஏற்பட்டதை மய்யப்படுத்தி, அந்த மதத்தின்மீது வெறுப்பை, காழ்ப்பைத் தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்றும்[1], அப்படி நடந்துகொள்வோரின் நடவடிக்கையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளதாக “விடுதலையில்,” முதல் பக்க செய்தி[2].  பிறகு, இரண்ட்சாம் பக்கத்தில், “ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  ” என்ற தோரணையில் விளித்து, கீழ்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது:

EVR asked idiotic questions, Viduthalai, 02-04-2020

பல லட்சங்களுக்கு முன்னர் இருந்தவைக்கு இப்பொழுது அத்தாட்சிகள் இருக்குமா?[3]: இருபது லட்ச வருடங்களுக்கு முன் இராமன், அயோத்தி இருந்தனவா? இந்த நாள் – கோள் இருந்தனவா? இராவணன் இருந்தானா? பார்ப்பனர்கள் ராமநவமி என்று சொல்லிக் கொண்டு வருடத்திற்கு ஒருநாள், போலி நாளை மக்களிடம் விளம்பரப் படுத்திக் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாட்டம் நடத்துகின்றார்கள். இதை அரசாங்கம் அனுமதிப்பதுடன் அதற்காகச் சில இடங்களில் ஒருநாள் லீவும் கொடுக்கிறார்கள். இராமன் பிறந்தநாள் என்று சொல்லப் படுவது இன்றைக்கு 20 லட்சம் (20,00,000) ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 20 லட்ச வருடத்தில் உலகத்தில் உள்ளது எல்லாம் நாசமடைவதும் – உலகமே மாற்றமடைவதும் போன்ற காரியங்கள் நடந்து இருக்க வேண்டும். அப்போது மனித சமுதாயம் – மனிதன் – காடு மேடு – உலக பூகோளம் – மலை – சமுத்திரம் போன்ற யாவும் அழிவும் – மாற்றமும் அடைந்துவிடும். இது யாவரும் அறிந்ததும் – புராணக் கூற்றும் – சரித்திர உண்மையும் ஆகும். இப்படிப்பட்ட நிலையில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தி என்ற ஒரு ஊரும், தசரதன் என்ற ஒரு அரசனும், அவனுக்கு அநேக பெண்டாட்டிகளும் இருந்தனர்; அவனுக்கு இராமன் என்று ஒரு பிள்ளை பிறந்தான். அதற்கு வருடம் – மாதம் – தேதி – கிழமை – நாள் – கோள் – இன்ன இன்னது என்பதும், அவை மாத்திரம் அல்லாமல் அந்த 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிட நாடு – பாண்டிய நாடு – இலங்கை நாடு என்பவை இருந்தன என்பதும் எப்படி உண்மையாக இருக்க முடியும்? 20 லட்சம் வருடங்களாகக் கோள்கள் மாறாமல் மறையாமல் இருக்க முடியுமா?

The hand bill that was seized -Salem

ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும்[4]: பார்ப்பனர்கள் தங்கள் சுக வாழ்வுக்காக எதையும் சொல்லுவார்கள் – செய்வார்கள் என்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் – விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? என்பதும் நமக்குப் புரியவில்லை. இந்தக் கற்பனைப் புளுகை நமது மாணவர்கள் எப்படி நம்புகிறார்கள்? என்பதும் அதிசயமாக உள்ளது. வடநாட்டில் இராவணனைக் கொளுத்தினார்கள் என்றால், தென்னாட்டில் ஏன் இராமனைக் கொளுத்தக் கூடாது? ஒரு பொய்யான கற்பனைக் கதையில் இருந்து தென்னாட்டு மக்களை அவமானமும், இழிவுபடுத்தலுமான காரியத்தைப் பார்ப்பனரும், வடநாட்டாரும் செய்தால் – அதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புத்தி வரும்படியான காரியத்தை நாம் ஏன் செய்யக் கூடாது? ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், கட்டாயமாகச் சிந்தித்து, நல்ல படி யோசித்து, எனக்காக என்றே அல்லாமல், தங்களுக்குச் சரி என்றும், அவசியம் என்றும் தோன்றினால், இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். நமது (பார்ப்பனரல்லாத) மக்கள் ஆதரவு, பார்ப்பனர்களுக்கு இந்தப்படி யான பித்தலாட்டங்களில் ஏமாறாமலும், நம்மை இழிவுபடுத்தும் இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும்தான் நாம் இராமன் படத்தைக் கொளுத்துவது போன்ற செயல்களில் இறங்க வேண்டும்.

1971 DK procession denigrating Rama.news cutting

ஈவேராவுக்கு அந்த அளவுக்கூத் தான் அறிவு இருந்தது என்று தெரிகிறது: இந்த மாதிரி ஆட்களை பேச விட்டால் தான், அது போன்ற ஆட்களுக்கு, எந்த அளவுக்கு வாதம் புரிய காரணம், தர்க்கத் தன்மை, வாதத் திறமை முதலிய உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கீழ்கண்ட கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

 1. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிடநாடு – பாண்டியநாடு – இலங்கை நாடு இருந்தன என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? கேட்பது ஈவேரா!
 2. இராவணன் இருந்தானா? என்று கேட்ட பிறகு, “இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்,” என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது.
 3. ராமாயணம் கட்டுக்கதை என்றால், அதைப் பற்றி நாத்திகள் கவலைப் படவேண்டும் என்ற அவசியம் இல்லை.
 4. இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் – விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? கேட்பது ஈவேரா!
 5. குமரிக் கண்டம் என்று ஊளையிடும் தமிழர்கள் ஈவேராவை எதிர்ப்பார்களா? கீழடி பற்றி என்ன சொல்வாரோ?
 6. ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும், என்று விடுதலையில் ஈவேரா சொன்னதாக செய்தியைப் போட்டுள்ள வீரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
 7. இந்த அளவுக்கு ஶ்ரீராம நவமி அன்று துவேசத்தை கக்கும் கயவர்கள் ! ராமனைக் கும்பிடும் இந்துத்துவ வாதிகளுக்கு சூடு-சொரணை இல்லையா?
 8. ரஜினி மீது திகவினர் வழக்குப் போட்டார்களே, இப்பொழுது இந்த இந்துவிரோதியின் மீது ரஜினி-ரசிகர்களே போடலாமே?!
 9. கடவுள் நம்பிக்கை இல்லாதவன், கடவுள்-நம்பிக்கைக் கொண்டவர்களை, எப்படி கேள்வி கேட்க முடியும்?இவை இரண்டும் நம்பிக்கை தானே?

o apology Rajini IE

செக்யூலரிஸ நாத்தில், வாதத்தில் செக்யூலரிஸத்திற்கு பதிலாக, இந்துவிரோதம் தான் இருக்கிறது: இப்பொழுது, இந்திய ஊடகங்கள் முழுவதிலும், நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் மாநாடு பற்றிய விவகாரங்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. ‘கரோனா’வில் மதச் சாயத்தை பூசவேண்டாம்! மாச்சரியங்களை மறந்து ஒன்று படவேண்டிய சமயம் இது என்று முதல் பக்கத்தில் வக்காலத்து வாங்கி, அடுத்த பக்கத்தில், இத்தகைய செய்தி ஏன் போட வேண்டும்? பெரியார் மண்ணில் இவ்வளவு நடந்து விட்டதே, அப்பொழுது ஏன் ஒன்றையும் கேட்கவில்லை. இப்பொழுது வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு பக்கத்தில் துலுக்கனுக்கு ஆதரவு, அடுத்த பக்கத்தில் இந்து துவேசம், இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா? இன்னும் மக்கள் முட்டாள்களாகவே இருப்பார்களா? மேலும்-மேலும் ஈவேரா உளறல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால், இனி இருக்கின்ற மரியாதையும் போய் விடும். ஏற்கெனவே, சில பெண்கள் வியாக்கியானம் கொடுத்து, அசிங்கப் பட்டு விட்டனர். ஆகவே, இனி மக்களை ஏமாற்ற முடியாது. இளைஞர்கள் முழித்துக் கொண்டு விட்டார்கள்!

EVR photos of naked Hindy gods 1971 paaraded

நாத்திகமும், கடவுள் நம்பிக்கையும், செக்யூலரிஸமும், ஆன்மீகமும்: உண்மையாக நாத்திகன் “கடவுள் இல்லை” என்றால், எந்த கடவுளும் இல்லை என்று தான் சொல்வான். இந்தியாவில், தமிழகத்தில், “கடவுள் இல்லை” என்றால், ஏதோ இந்துமத கடவுள் மட்டும் தான் இல்லை என்ற நிலையில், நாத்திகம்-கிருத்துவம்-இஸ்லாம்-கம்யூனிஸம் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, இந்துமதத்தை எதிர்த்து, இந்துதுரோகிகளாகிறனர். செக்யூலரிஸம் என்றால், எல்லாமதங்களையும் சரிசாமாக பாவிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில், அதையும் பின்பறுவதில்லை. உண்மையான நாத்திகம் எல்லா மதங்களையும் எதிர்க்க வேண்டும். திராவிட நாத்திகம், இந்துதுவேச நாத்திகத்தில் முடிகிறது. கருத்துருவாக்கம், எண்ணங்கள், அவற்றில் தோன்றி பேச்சுகள்-எழுத்துகள் என்றாக வெளிப்படும் போது, அவை, இந்து விரோதமாகவே இருக்கிறன. தெரிந்தும், தொடர்ந்து நடக்கும் போது, அது போலித்தனமாக செயல்பட்டு வருவதை அறிய நேர்கிறது.

©  வேதபிரகாஷ்

02-04-2020

15-02-1971 Thuglak issue-reconstructe d

[1] விடுதலை, மாச்சரியங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் இது! ‘கரோனாவில் மதச் சாயத்தை பூசவேண்டாம்!, வியாழன், 02 ஏப்ரல் 2020 13:37

[2] http://www.viduthalai.in/headline/197907-2020-04-02-08-14-36.html.

[3] விடுதலை, ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  வியாழன், 02 ஏப்ரல் 2020 14:510, பக்கம்.2, . http://www.viduthalai.in/e-paper/197917.html

[4] விடுதலை, ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  வியாழன், 02 ஏப்ரல் 2020 14:510 . http://www.viduthalai.in/e-paper/197917.html

காஞ்சிப் பெரியவர் – ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [3]

மார்ச் 19, 2020

காஞ்சிப் பெரியவர்ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [3]

Meetings against Sankaracharyas-DK book

ஈரோட்டு ஈவேரா அல்லது பெரியாரின் அனுபவம்: ஆனால், ஈவேராவை வெளிநாட்டவர் யாரும் சந்தித்ததாகத் தெரியவில்லை. அவரைப் பற்றி எழுதியுள்ளதாகவும் இல்லை. ஈவேரா தான், ராமநாதனுடன் 1932ல் அயல்நாடுகளுக்குச் சென்று வந்தார். 1973 வரை இந்திய விரோத, இந்து துவேச செயல்களை செய்து கொண்டு, பேசிக் கொண்டிருந்தது அவரது வழக்கமாக இருந்தது. பொதுவாக எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற போக்கில் இருந்தார். கிளர்ச்சி, போராட்டம், கலாட்டா, கைது, சிறை, வழக்கு என்ற ரீதியில் இருந்தார்[1]. அவர் இறந்த பிறகு, திகவினர் செய்த பிரச்சாரம், விளம்பரங்களினால், அவர் பெயர் திடீரென்று பரவ ஆரம்பித்தது. திமுக அட்சிக்கு வந்த பிறகு, அது அதிகமாகி, பரவ ஆரம்பித்தது. பணத்தை செலவழித்து, ஈவேரா வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். அந்நிலையில், காஞ்சிப் பெரியவரை, ஈவேரா,  இவ்வாறு ஒன்றிற்கும் மேலாக சந்தித்திருந்தால், அதைப் பற்றி விவரமாக பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இக்கதைகளை உலாவிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, நாள், நேரம், புகைப்படம், போன்ற ஆதாரங்களைக் கொடுப்பதில்லை. இவையெல்லாம் 60-70 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்றால், ஆதாரங்கள் கொடுப்பதில் என்ன பிரச்சினை?

Meetings against Sankaracharyas-DK book.audience

காஞ்சி பெரியவரை கிண்டல் அடித்த பகுத்தறிவு தலைவர்களும், அடிவருடி தொண்டர்களும்: அந்நிலையில் தான், காஞ்சிப் பெரியவரை, திராவிட தலைவர்கள் உட்பட கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். “மூக்குக் கண்ணாடி” போட்டுக் கொண்டார். “காட்ரேக்ட் ஆபரேஷன்” செய்து கொண்டார் என்றெல்லாம் நக்கல் அடித்தன. அண்ணா கேன்சர் நோயுக்கு, அமெரிக்கா சென்றது, சிகிச்சை பெற்றது, பலன் இல்லாமல் இறந்தது பற்றியெல்லாம் பகுத்தறிவுகள் அறிந்தும், இவரை கிண்டல் செய்தன. பெரியாருக்கும் சுகவினங்கள் பல இருந்தன. எல்லோருக்கும் தெரிந்தும் இருந்தன. ஆனால், “பகுத்தறிவு” இல்லாதவர்கள் அவ்வாறு கிண்டல் செய்யவில்லை. பெரியார், அண்ணா, கரு, மற்ற திகக்காரர்கள் பேசியதை எழுத முடியாத அளவில் அசிங்கமாக இருந்தததால், அவை மறைக்கப் பட்டன [எழுதாமல் விடப்பட்டன]. ஞாபகம் இருந்தாலும், இன்றும் அவை அவ்வாறுத்தான் உள்ளன. அவர்கள் இல்லை என்றாலும், கேட்டவர்கள் பலர் சாட்சிகளாக இன்றும் இருக்கிறார்கள். நாகரிகம் கருதி தான் அவற்றையெல்லாம் வெளியே சொல்லாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தால், அவர்களுடன் அந்த உண்மைகளும் மறைந்து விடும்.

1986 to 2012 anti-Hindu DK book

காஞ்சி சங்கரமட ரகசியங்கள்சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் 1986ல்  கி. வீரமணி[2] வெளியிட்ட புத்தகம்:  06-04-1983 முதல் 01-08-1983 வரை நடந்த கூட்டங்கள் என்று குறிப்பிட்டு, கீழ்கண்ட தலைப்புகளில், அப்புத்தகம் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தில் இருக்கும் படி அத்தியாயங்கள், பக்க எண்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:

 1. மனிதாபிமானமற்ற சங்கராச்சாரியார். 5
 2. மோசடியில் பிறந்த காஞ்சி மடம் 15
 3. ஜாதியும், சங்கராச்சாரியும்.35
 4. அரசியல் சட்டத்தில் சங்கராச்சாரியாரின் திருவிளையாடல்! 41
 5. சங்கராச்சாரியாரின் கம்யூனல்! வகுப்புரிமைப் பற்றிய கருத்து. 63
 6. விளம்பரக் கலை. 67
 7. காமக் கதை படிக்கும் காமகோடி.74
 8. அறிவு நாணயம் இல்லை பார்ப்பனருக்கு வக்காலத்து. 81.
 9. சங்கராச்சாரியார் பார்வையில் நாத்திகன் யார்? 86
 10. சங்கராச்சாரியாரின் மனிதாபிமானம் – நாத்திகனுக்கு வைத்தியம் செய்யக் கூடாதாம். 94
 11. சமஸ்கிருதப் பற்று.101.
 12. சங்கராச்சாரியார் நடத்தும் டிரஸ்டுகள் யாருக்காக? 104
 13. விவேகசாகரம் என்ற அய்ந்தாம் வேதம்.126
 14. பார்ப்பனர் இல்லாவிட்டால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டா?.131.
 15. சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் கூடாதாம்! 135
 16. எல்லோருக்கும் சமவாய்ப்பும் கூடாதாம்!.146
 17. சிவமதத்தை ஏற்க மறுக்கும் சங்கராச்சாரியார் திருஞானசம்பந்தரை மட்டும் ஏற்பது ஏன்? 151.
 18. தேவதாசி ஒழிப்புக்கு வருத்தம்!. 158.
 19. பார்ப்பனர்கள் மேளம்-நாயனம் வாசிக்காதது ஏன்? 161.
 20. முத்ராதிகாரி திட்டம்! 164
 21. சங்கராச்சாரியார் பற்றி அண்ணாவின் படப்பிடிப்பு.171.
 22. சம்பந்தியை வெறுக்கும் சங்கராச்சாரியார்.179.
 23. கோவிலில் கூட்டம் கூடுவது ஏன்? 184.
 24. நேருவை கேலி செய்யும் சங்கராச்சாரியார்! 197.
 25. பெண்களின் உரிமைகளை நசுக்கும் தெய்வத்தின் குரல் (!) 203.
 26. சங்கராச்சாரியாரி வீட்டிலும் கலப்புத் திருமணம். 225.
 27. ஆதிசங்கரர் நடத்திய ஆபாச பரிசோதனை! 234.

சங்கரரைப் பற்றி விவேகானந்தர் என்று முடிகிறது. இவவற்றை பொறுமையாகப் படித்துப் பார்த்தால், எந்த அளவுக்கு, ஆதாரங்கள் இல்லாமல், வாய்ஜாலம், திராவிடப் பேச்சு, மேடைமுழக்கம் போன்ற ரீதியில் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

Sankaracharyas-DK book.speakers

1986-87களில் பிரிவினை வாதம் எழுந்த நேரத்தில் இப்பிரச்சினை எழும்புவது[3]: இக்கூட்டங்களில் பேசியவர்கள்[4]

1.       கே. வீரமணி

2.       கீ. ராமலிங்கன்.

3.       தெ. தருமராசன்.

4.       கா. அப்பாதுரை.

5.       சுரதா.

6.       மா. நன்னன்.

7.       ந. ராமநாதன்.

8.      பழனிசாமி

9.       பொன்னிவளவன்.

10.   இறையன்.

11.    பெருஞ்சித்தரனார்.

இவர்கள் எல்லோருமே தமிழ்-பிரிவினை [Tamil separatism], தனித்தமிழகம் [Separate Tamil Country], தமிழ்தேசியம் [Tamil Nation], தமிழ் இனவெறி [Tamil race, racism, racialism], போன்ற தீவிர சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் [extreme / extremist ideologists] என்பது தெரிந்த விசயமே. தமிழ்நாடு விடுதலைப்படை தமிழ்நாடு பொதுவுடைமைக்கட்சியின் ஆயுதப்படை ஆகும். இதன் தலைமைத்தளபதியாக தமிழரசன் இருந்தான். இது தமிழர்களுக்காக தனி தேசம் அமைக்க போராடிய தமிழ்த்தேசிய அமைப்பாகும். 1980களில் பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தமிழ்நாட்டில் தோன்றின. அதிலும் குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்ற போது இந்த இயக்கங்கள் தீவிரமாக இயங்கிவந்தன. அதில் குறிப்பிடத்தகுந்தது இந்த தமிழ்நாடு விடுதலைப்படை பல கொள்ளைகள், கொலைகள், குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டன. இந்த இயக்கம் ஜூலை 2, 2002 அன்று இந்திய அரசால் பொடா சட்டப்படி தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசால் 2002ல் பொடா சட்டப்படி தடை செய்யப்பட்ட பின்னர் இது தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் செயல்படுகிறது. எனவே, இவர்களுக்கு, சங்கராச்சாரியாரை, சங்கர மடத்தை எதிர்க்க ஏன் ஒன்று சேர்ந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது எவ்வாறு சின்னங்கள், அடையாளங்கள் கண்டெடுக்கப் பட்டு, தாக்கப் பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனெனில், இவையெல்லாம் மிருதுவான, எளிமையான, இலக்குகள் [soft targets] என்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

19-03-2020

Meetings against Sankaracharyas-DK book.wrapper

[1] அண்ணா, கரு முதலில் இவரது சட்டவிரோத வேலைகளை ஆதரித்தாலும், பிறகு, அவை தலைவலியாக மாறியதை அவர்களே கண்டு நொந்து கொண்டார்கள். பெரியாரும், இதையெல்லாம் உணர்ந்திருந்தார். அரசியலில் அவரை தனிமைப் படுத்தியது அண்ணா, கரு முதலியோரின் சாதுர்யம் என்றாகியது.

[2] Veeramani was born in a middle-class family in Cuddalore, South Arcot District, Tamil Nadu, his original name was Sarangapani. ஆனால், இவரது பெற்றோர் பெயர்கள் விகியில் குறிப்பிடப் படவில்லை. C.S.Krishnaswamy and Meenakshi  என்று மற்ற தளங்களில் காணப்படுகிறது.

[3] Tamil Nadu Liberation Army (TNLA) was a small militant separatist movement in India. It seeks an independent nation for the Tamil people, and first appeared in the 1980s, when the Indian Peacekeeping Force (IPKF) was sent to Sri Lanka. It had its roots in the Naxalite movement, and was headed by Thamizharasan, an engineering student from Ponparappi village. TNLA was involved in minor bomb blasts, murders and looting banks. On September 1, 1987, the people of Ponparappi village lynched Thamizharasan and four of his associates, when they attempted to rob a bank. After his death, the group is believed to have splintered into factions. TNLA was banned by the Tamil Nadu State Government, and also by the Union Government on the recommendation of the State Government. It has been declared a terrorist organisation by the Government of India. https://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/TNLA.htm

[4] கி. வீரமணி, காஞ்சி சங்கரமட ரகசியங்கள்சங்கராச்சாரி யார்?, திராவிடர் கழக வெளியீடு, சென்னை, 1986, பதிப்புரை. இரண்டாம் பக்கம்.

காஞ்சிப் பெரியவர் – ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [2]

மார்ச் 18, 2020

காஞ்சிப் பெரியவர் ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [2]

V. Ganapathy, the Hindu reporter attacked in 1989

[சென்ற பதிவின் தொடர்ச்சி] இக்கதை மூலம் அறியப் படுவதாவது –

 1. பிராமணர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக, அந்த “பிரபலமான நாஸ்திகரை”க் கண்டு பயந்து கொண்டிருந்தனர்.
 2. ஏன் பயந்தனர் என்று யாரும் விளக்கவில்லை, காரணம் சொல்லவில்லை.
 3. “பிரபலமான நாஸ்திகர்”, பிராமணரைப் பார்த்து, “மிஸ்டர் ஐயர், எதற்காக பயப்படுகிறீர்? நான் ஒன்றும் செய்ய மாட்டேன்….” என்றால், அந்த அளவுகு அந்த ஆள் என்ன பயமுருத்தி வைத்திருந்தார் என்று சொல்லவில்லை.
 4. “பிரபலமான நாஸ்திகர்”, தொடர்ந்து சொன்னது, “…………ஏனென்றால், நாம் போகும் வழியில், பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நீர் வேறு கோச்சிற்கு சென்றால், அவர்கள் கோச்சில் நுழைந்து உம்மை தாக்கக் கூடும். இந்த கோச்சில் எனக்கு பாதுகாப்பு போடப் பட்டிருக்கிறது. அதனால், பாதுகாப்பாக இருக்கலாம். உமது நன்மைக்காகத்தான் இதனை சொல்கிறேன்,” அப்படியென்றால் –
  1. அந்த போராட்டம் என்ன, ஏன்?
  2. அவர்கள் கோச்சில் நுழைந்து [பிராமணரை]தாக்கக் கூடும்,” ஏன் அப்படி?
 5. எப்பொழுது நடந்தது என்று தெரியா விட்டாலும், அத்தகைய நிலை இருந்தது உண்மையாகிறது.

இதே போன்று கீழ் கண்ட சம்பவங்கள்.

V. Ganapathy, the Hindu reporter attacked in 1989-2

தந்தை பெரியாரும், காஞ்சி பெரியவரும்! லஸ்ஸில் எதிர்எதிரில் வந்தது[1]: லக்ஷ்மிநாராயணன் என்பவர் சொன்னது, “காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது. காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்”.

1963 padayatra, Madurai

காஞ்சி பெரியவர் கோவிலுக்குச் சென்று கும்பிட்டது, ஈவேரா கும்பலுக்கு ஆணை இட்டது: லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்து சொன்னது, “பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்புஅந்த நேரத்தில், .வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார். பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது. இனி இன்னொரு கதையினைப் பார்ப்போம்.

Sri Chandrasekhara Saraswati, taken in rickshaw

தந்தை பெரியாரும், காஞ்சி பெரியவரும்! பல்லக்கில் வந்தது, ஈவேரா விமர்சித்தது![2]: இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.  ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது. அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்,!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள். “இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்,” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன…,

The Lotus and robot

1931லிருந்து வெளிநாட்டவர் பெரியவரை சந்திப்பது அவரைப் பற்றி புத்தகங்களில் எழுதுவது: 1994 வரை வாழ்ந்த ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியாருடன், பல வெளிநாட்டு அறிஞர்கள், எழுத்தாளர்கள் என்று வந்து பேட்டி கண்டு தங்களது அனுபவங்களை எழுதி வந்தனர். இந்த விசயத்தில் தான் மற்றவர்களுக்கு [மற்ற சங்கரமடாதிபதிகளுக்கு] இவர் மீது பொறாமையாக இருந்தது. பால் பிரென்டன் இவரை 1931ல் வந்து பேட்டி கண்டபோது, இவருக்கு வயது 37 தான்[3]. இருப்பினும் தனது அறிவுசாதுர்யத்தால், அவரை கவர்ந்தார். குறிப்பாக அவரது எளிமை அனைவரையும் ஈர்த்தது, திகைக்க வைத்தது.

1955ல் பேராசிரியர் மில்டன் சிங்கர், சிகாகோ பல்கலைகழகம், சந்தித்தார்[4].

Prof. Milton Singer of the University of Chicago, met the Sage in 1955.

1959ல் ஆர்தர் கோயஸ்ட்லர் இவரை பார்த்த போது, ஆச்சரியமாகத்தான் இருந்தது.

Arthur Koestler met Arthor Koestler with V. Raghavan 1959

1962ல் அர்ஜென்டினாவைச் சேர்ந்த, யூஹினா போர்கினி என்ற ஆராய்ச்சியாளர் சந்தித்தார்[5].

1963ல், டாக்டர் ஆல்பர்ட் பிராங்ளின் என்ற அமெரிக்கத் தூதுவர், பெரியவரை மதுரையில் சந்தித்தார்[6].

1965ல் கிரேக்க அரசி மற்றும் இளவரசி  காளாஹஸ்தியில் பெரியவரை சந்தித்து பேசினர்[7].

Sri Chandrasekhara Saraswati,met Queen Frederica Greece and Irene

1970ல், சென்னையில் உலக தத்துவ மாநாடு நடந்தபோது, டெஹ்ரான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியர், சையீத் நாசர் சந்தித்தார்[8]. இப்படி, அயல்நாட்டவர் குறிப்பாக, மதம், தத்துவம், ஆன்மிகம் போன்ற விசயங்களில் கவரப் பட்டவர்கள், இவரை பேட்டி எடுக்க, உரையாட ஏன் சோதிக்கக் கூட வந்த போது, அவர்களுடன் இணையாக உரையாடினார். அவர் மேனாட்டு அறிஞர்களை மேற்கோளாகக் காட்டிய போது, அவர்கள் வியந்தனர். அதாவது, 20ம் நூற்றாண்டு வரையிலான  மதம், தத்துவம், ஆன்மிகம் போன்ற சங்கதிகளில் உள்ள பிரபலங்கள், அக்கால கருத்துகள் முதலியவற்றை அறிந்திருந்தார்.

© வேதபிரகாஷ்

18-03-2020

With Ramsuratkumar

[1] இது அப்படியே பலரால் பதிவு செய்யப் பட்டுள்ளது, ஆனால், ஆதாரத்தை யாரும் கொடுக் கவில்லை. சிலர், பல்லாக்கு சமாசாரம் மட்டும் தனியாக போட்டிருக்கிறார்கள்.

[2] இது அப்படியே பலரால் பதிவு செய்யப் பட்டுள்ளது, ஆனால், ஆதாரத்தை யாரும் கொடுக்கவில்லை. சிலர், பல்லாக்கு சமாசாரம் மட்டும் தனியாக போட்டிருக்கிறார்கள் இது “வேதம் புதிது” படத்திலும் சித்தரிக்கப் பட்டுள்ளது.

[3]  Dr.Paul Brunton, author of the well-known book “A Search in Secret India”, first published in London in 1934, was the first Westerner to have an interview with the Sage in 1931.

[4] Prof. Milton Singer of the University of Chicago, met the Sage in 1955.

[5] A scholar from Argentina, Miss. Eughina Borghini met His Holiness in 1962

[6] Dr.Albert Franklin, U.S.Consul General in Madras, saw the Paramachrya for the first time in 1963 in the Madurai Meenakhi Temple during the Kumbhabhishekham ceremony

[7] Queen Frederica from Greece and her daughter Princess Irene met the Paramacharya in 1965 at Kalahasti.

[8]  Professor Sayeed Nasr, the Vice-Chancellor of Teheran University who participated in a World Conference on Philosophy in Madras in 1970 met the Paramacharya in Kanchi

இந்து-விரோத நாத்திக வீரமணியின் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது! மலேசிய இந்துக்களின் வெற்றி!! இது ஒரு பாடமாக அமைய வேண்டும்!!!! [1]

நவம்பர் 24, 2019

இந்துவிரோத நாத்திக வீரமணியின் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது! மலேசிய இந்துக்களின் வெற்றி!! இது ஒரு பாடமாக அமைய வேண்டும்!!!! [1]

Veeramani, Malaysia programme cancelled-3

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலேசியாவில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது[1]: மலேசிய இந்து மத ஆர்வலர்களும், சில இந்து அமைப்புகளும் தெரிவித்த எதிர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுவதால் சலசலப்பு நிலவியது என்றெல்லாம் பிபிசி ஒத்து ஊதியது[2]. மலேசிய இந்திய பாரம்பரியக் குழுவின் ஏற்பாட்டில் நவம்பர் 24ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்த ‘பெரியார்’ திரைப்படத்தை திரையிடுவதாகவும் இருந்தது. திரையிடலுக்கு முன்பாக, ‘பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்’ என்ற தலைப்பில் கி.வீரமணி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது[3]. இந்நிலையில் கி.வீரமணி இந்து மதம் குறித்தும், இந்துக் கடவுள்கள் குறித்தும் கடந்த காலங்களில் மோசமாக விமர்சித்துள்ளார் என்றும், சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடிய அவரை மலேசியாவில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் ஒரு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது[4]. இதையடுத்து எதிர்ப்பாளர்கள் தரப்பு மலேசிய உள்துறை அமைச்சின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றதாகவும், அதையடுத்து கி.வீரமணி பங்கேற்கும் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மலேசிய உள்துறை அமைச்சு அறிவுறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

Malaysian Dravidar Association, anti-hindu

மலேசிய திராவிடர் கழகம்: மலேசிய திராவிடர் கழகம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதன் இணையதளம் மற்றும் முகநூலில் பதிவுகள் காணப்படுகின்றன அவற்றை கவனமாகப் பார்க்கும் பொழுது அவர்கள் இந்துவிரோத மற்றும் முரண்பட்ட போக்கு கடைப் பிடிப்பது தென்படுகிறது. இவர்களால் இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். அவர்களில் பணக்காரர்களாக இருப்பவர்கள் வர்த்தக ரீதியில் தங்களது நிலையை பாதுகாத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். வீரமணி போன்றோர், மலேசியாவுக்கு வந்தால் அவர்களை தங்களது வீடுகளில் தங்க வைத்து பாராட்டி, பொன்னாடை போர்த்தி, அனுப்பி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு அவர்களும் ஒத்துழித்திருக்கலாம். இருப்பினும் நிலவிவரும் மத ரீதியான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அமைதியாகி விட்டனர் என்று தெரிகிறது.

Veeramani, Malaysia programme cancelled-MHS

தமிழ்.ஆதரவு கூட்டங்கள் தைரியமாக காரணத்தை வெளியிட வேண்டும்: இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது, என்ன காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது, எந்தத் தரப்பு இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது, என்பது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பிபிசி தமிழ் விவரம் கேட்டது[5]. மலேசிய – இந்திய பாரம்பரியக் குழுவின் தலைவரான பிரபாகரன் நாயர் கூறுகையில், நிகழ்ச்சியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமலேயே சிலர் கண்மூடித்தனமாக எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார். எனவே, வீண் சர்ச்சைகளைத் தவிர்க்கும் பொருட்டு அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்[6]. பிபிசி.தமிழ் ஒருதலைப் பட்சமாகவே செய்திகள், பேட்டிகள் மற்றும் கட்டுரைகள் வெளியிட்டு வருவதைக் கவனிக்கலாம். பிறகு அத்தகைய பிரச்சாரப் போக்கு, ஊடகக் காரர்களிடமிருந்து உண்மை வெளி வராது. மலேசிய உள்துறை அமைச்சு நிகழ்ச்சியை ரத்து செய்தால், காரணம் மற்றும் அதற்குரிய ஆவணம் இருக்குமே? அழைப்பிதழை வெளியிட்டது போலல், அதையும் வெளியிடலாமே?

Malaysian Hindus condemned Veeramani

மலேசிய நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள், பகுத்தறிவுவாதங்கள் இரட்டை வேடம் போட முடியாது: நிகழ்ச்சியின் நோக்கத்தை இந்துக்கள் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பு தெரிவித்தனர் என்று பிரபாகரன் நாயர் கூறுவதெல்லாம் போலித்தனமாக இருக்கிறது. ஏனெனில் சமீபகாலத்தில் வீரமணி மிக்கவும் அசிங்கமாக, ஆபாசமாக இந்து கடவுளர்களை பற்றி அவதூறாக பேசி வருவது, ஊடகங்களில் தாராளமாகவே வெளிவந்திருக்கின்றன. மேலும் அதே கருத்துகளை மலேசிய திராவிடர் கழகம் செய்து வருகிறது, கீதையின் மறுபக்கம் போன்ற புத்தகங்களை தமது இணையதளத்தில் போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இங்கு தமிழகத்தில் வீரமணி கண்டனை ஆபாசமாக பேசி வருகின்றார் என்ற நிலையில் பார்த்தால், மலேசியாவிலும், இத்தகைய புத்தகத்தை அவர்கள் வாங்கி விற்பது, விளம்பரம் அளிப்பது, அதற்கு துணை போகின்ற முறையைத் தான் வெளிப்படுத்துகிறது. ஆகவே மலேசியாவில் இருக்கின்ற இந்திய பாரம்பரியக் குழு என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லோரும், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நடிக்க முடியாது. ஒன்று இந்துக்கள் என்றால் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டும், ஆனால் அவர்களிடம் ஒற்றுமை இல்லை மாறாக அவர்கள் தமிழகத்தில் இருக்கின்ற இத்தகைய இந்திய விரோத மற்றும் இந்து விரோத சக்திகளுக்கும் துணைபோவதாக தான் அவர்களது பேச்சும் நடவடிக்கைகளும் இருக்கின்றன.

Veeramani, Malaysia programme Invitation

வீரமணியை அழைத்தது ஏன்?: “எதிர்ப்பு தெரிவித்தவர்கள் யாரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான எங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசவில்லை. சமூக வலைத்தளங்கள் மூலம் சிலர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டது என் கவனத்துக்கும் வந்தது.” “இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே பல்வேறு வகையில் நீண்ட கால தொடர்புகள் உள்ளன. இது தொடர்பான ஏராளமான வரலாற்றுப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அத்தகைய தகவல்களைப் பெற வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.” என்கிறார் பிரபாகரன் நாயர். “அதனால் தந்தை பெரியாரின் மலேசியப் பயணமும், அதனூடே மலேசிய வாழ் இந்தியர்களிடம் ஏற்பட்ட தாக்கமும் குறித்து உரையாற்றவே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அழைத்திருந்தோம்.” என்கிறார் அவர். 2012லேயே, வீரமணி இந்து கடவுளர்களை தூஷித்த போது, மலேசிய இந்துக்கள் வெளிப்படையாக கண்டித்தனர்[7]. ஆகவே, 2019ல் எதிர்ப்புத் தெரிவித்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், எந்த இந்துவும் அவ்வாறு பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டான்.

Veeramani, Malaysia programme Invitation-2
பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்என்ற தலைப்பில் கி.வீரமணி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது: “இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவு தொடர்பில் வரலாற்றுப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம். அதனால்தான் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கி.வீரமணி மலேசியா வருவதை அறிந்து, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்.” “தவிர, கி.வீரமணி குடும்பத்தாருக்கும் மலேசியாவுக்கும் நல்ல தொடர்புகள் உண்டு. எனவே தந்தை பெரியாரின் வருகை குறித்து அவர் கூடுதல் தகவல்களை அறிந்திருப்பார். எங்களது நிகழ்ச்சிக்கும் மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆனால், சிலர் எங்களுடைய நோக்கத்தை அறியாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் தரப்பு விளக்கத்தை அவர்கள் கேட்கவே இல்லை,” என்று பிரபாகரன் நாயர் தெரிவித்தார். ‘பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்,’ வீரமணி ஒன்றும் உண்மை சொல்லப் போவதில்லை. ஏற்கெனவே, எஸ். ராமநாதனை ஈவேரா “அம்போ” என்று விட்டு-விட்டு ஓடி விட்டார். அந்த கதையினை, வீரமணி சொல்ல மாட்டார். பிறகு, எதற்காக இந்த கூட்டம், சினிமா எல்லாம். அவரவர் வீட்டில் டிவிடியில் பார்ப்பதற்கு முடியாத ஏழைகளா மலேசிய தமிழர்கள்!

© வேதபிரகாஷ்

24-11-2019.

K. Veeramani - anti-MAPOSI article

[1] பிபிசி.தமிழ், இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து, 22 நவம்பர் 2019.

[2] https://www.bbc.com/tamil/global-50516687

[3] தமிழ்.சமயம்.காம், மலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ரத்துஇதுதான் காரணமாம்!!, Updated:Nov 22, 2019, 11:57PM IST.

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/dravidar-kazhagam-president-k-veeramanis-function-cancelled-in-malaysia/articleshow/72191024.cms

[5] இந்தியன்.எக்ஸ்பிரஸ்.தமிழ், இந்து அமைப்புகள் எதிர்ப்பு: கி.வீரமணி மலேசியா நிகழ்ச்சி ரத்து?, WebDesk, November 21, 2019 06:43:25 pm

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/k-veeramani-malaysia-event-hindu-organisations-opposes/

https://dhinasari.com/politics/118266-malaysian-hindus-oppose-invite-to-dravidar-kazhagam-leader-who-has-disparaged-hindu-gods-for-an-event-organised-by-the-indian-high-commission-event-is-now-cancelled.html

[7] Indian MalaysianOnline, Veeramani stirred a commotion, The Traveler, Tuesday, April 17, 2012.

Malaysian Hindu Sangam quickly jumped into the fray to condemn Veeramani for denigrating the Hindus and applauded Rajendran as a ‘Tamilan with dignity’ for speaking-up bravely. Some others also joined to criticize Veeramani. http://indianmalaysian.com/2012/veeramani.html

ஈவேராவின் 1931-32 ஐரோப்பிய விஜயம் மற்றும் நிர்வாண சங்கங்களில் பங்கு கொண்ட விவகாரங்கள்! [1]

மே 29, 2019

ஈவேராவின் 1931-32 ஐரோப்பிய விஜயம் மற்றும் நிர்வாண சங்கங்களில் பங்கு கொண்ட விவகாரங்கள்! [1]

EVR, with Ramanathan, Ramu

பெரியார் நிர்வாண விஜயம்பரிசோதனைகளைப் பற்றி திராவிட எழுத்தாளர்கள் மறைப்பதேன்?: ஈ. வே. ராமசாமி நாயக்கர் [1879-1973][1], எஸ். ராமநாதன் [1895-1970] மற்றும் ஈரோடு ராமு[2] என்ற மூவரும் 13-12-1931 அன்று சென்னையிலிருந்து கப்பலில், ஐரோப்பிய பயணத்திற்குச் சென்றனர்.  14-02-1932 அன்று மாஸ்கோவை அடைகின்றனர். பெரியார் ஆராய்ச்சியாளர்கள், பெரியாரிஸ்ட் விற்பன்னர்கள் மற்றும் எழுத்தாளர்கள், பொதுவாக ஈவேராவின் நிர்வாண கிளப் விஜயம், பரிசோதனை, அம்மண குளியல் முதலியவற்றைத் தவிர்த்தனர் எனலாம். காந்தி, “உண்மையுடன் நான் மேற்கொண்ட பரிசோதனை” [My Experiments with Truth]   என்பது போல, ஈவேரா / பெரியார் “பொய்யுடன் நான் மேற்கொண்ட பரிசோதனை” [My Experiments with Untruth] என்று எதையும் எழுதவில்லை. காந்தி பெண்களுடன் இருந்தது பற்றி பல புத்தகங்கள் எழுதப் பட்டுள்ளன. ஆனால், ஈவேரா பெண்களுடன் இருந்தது பற்றி யாரும்மூச்சுக் கூட விடவில்லை. “திராவிட கழகம்” என்று விதவிதமாக பெயர்களை வைத்துக் கொண்டு, புத்தகங்களை வெளியிடும்  நபர்களும், இயக்கங்களும் மறைக்கிறார்கள் எனலாம். பெரியார் பற்றி ஆராய்ச்சி செய்து வெளிவந்துள்ள ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் மௌனம் சாதிக்கப் படுகிறது. இனி சில புத்தகங்களில் இதைப் பற்றியுள்ள விவரங்களைப் பார்ப்போம்.

EVR and Gandhi with women - not compared

ஈவேராவின் நிர்வாணத்துடனான சோதனை: எஸ். கருணானந்தம் ரஷ்யாவில் “அரசு விருந்தினராக ஏற்றுக் கொள்ளப்பட்டு” இருந்தனர் என்று குறிப்பிட்டாலும், நிர்வாண விஜயங்கள் பற்றி மூச்சுக் கூட விடவில்லை[3]. “தந்தை பெரியார் – முழு முதல் வாழ்க்கை வரலாறு,” என்பதில் இவ்வாறு இருப்பது, மறைப்பு சித்தாந்தத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. தஞ்சை மருதவாணன்[4], 1912லிருந்து 1973 வரை “திராவிடர் இயக்க வரலாற்றுச் சுவடுகள்” என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டாலும், இதைப் பற்றி ஒன்றையும் சொல்லக் காணோம். அதே தஞ்சை மருதவாணன், இன்னொரு புத்தகத்தில், மிக விவரமான ஐரோப்பிய பயணத்தை விவரித்தாலும், இந்த சமாசாரம் வரும் பொழுது, “பல நிர்வாண சங்கங்களுக்கும் சென்று அவர்களுடன் கலந்து பழகினார்,” என்று ஒரே வரியில் முடிப்பதும் வேடிக்கையாக இருக்கிறது[5]. ஏ.எஸ். வேணு[6], “காமவெறியைத் தடுத்து, பால் உணர்ச்ச்சிக்கு எல்லைக்கோடு அமைக்க மேல்நாடுகளில் நிலவும் நிர்வாண இயக்கத்தையும் நம் நாட்டில் புகுத்த நினைத்துப் பெரியார் ஒரு சில நாட்கள் தாமே நிர்வாண இயக்கத்தைக் கடைபிடித்துப் பின்னர் பழையபடி தம்மை மாற்றிக் கொண்டார் என்பதும் வியப்பாகும். பெரியார் பிறர் கூறுவதைச் சுலபத்தில் ஏற்பவர் அல்லர். முரட்டுத் தனமும், பிடிவாதமும் கொண்ட பெரியார் தம் மனைவியின் பேச்சைத் தட்டாமல் கேட்டுத் திருந்தி நிர்வாண இயக்கப் பற்றைத் துறந்தார்,”  என்று பதிவு செய்கிறார். ஆனால், இத்தகைய நிர்வாண இயக்கத்தை ஈரோட்டில், தமிழகத்தில் அறிமுகப்படுத்தினாரா என்று தெரியவில்லை. “ஒரு சில நாட்கள்” என்பதால், ஒருவேளை ஒன்றுமே செய்யவில்லை என்றும் சொல்லலாம். இனி பிரச்சினையை ஆய்வோம்.

EVR with Nude club members 1932-changed

நிர்வாண சங்கம்[7], கிளப்பில் கலந்து கொண்ட ஈவேரா: ஈவேரா கலந்து கொண்ட நிர்வாண சங்கம் அல்லது கிளப்[8] பெர்னிலில் உள்ளது, ஜெர்மனியில் உள்ளது என்றெல்லாம் பொதுவாகக் குறிப்பிடப் படுகிறது. ஆனால், போட்ஸ்டாம் [potsdam] என்ற இடத்தில் இருந்த கிளப்பில் தான் உறுப்பினர் ஆனால் என்று தெரிகிறது. பெர்லினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார்,” என்று தெரிகிறது[9]. போட்ஸ்டாம் நகரம் பெர்லின் நகரில் இருந்தது என்று தெரிகிறது. நிர்வாணமாக குளிப்பது என்பது தான், இந்த கிளப்புகளில் விசேஷம். அதாவது ஆண்-பெண் சேர்ந்து நிர்வாணமாகக் குளிப்பர். இருப்பினுஜ் 1931ல் வெளியே குளிப்பது ததை செய்யப் பட்டது. 1933ல் இந்த நிர்வாண கிளப்புகள் எல்லாம் மூடப்பட்டன அல்லது மற்ற விளையாட்டு கிளப்புகளுடன் இணைக்கப் பட்டன[10]. மேலும், இவ்விடம் விபச்சாரத்திற்கும் பிரசித்திப் பெற்றது! சாமி. சிதம்பரனார், “அவர்கள் பல நிர்வாண சங்கங்களுக்கு [Nude societies] சென்று அவர்களுடைய உண்மை நோக்கங்களை உணர்ந்தார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்[11]. பன்மையில் குறிப்பிட்டாலும், எவ்வளவு சங்கங்ளுக்குச் சென்றனர், அவற்றின் பெயர்கள், அங்கு என்ன செய்தனர் போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்ல. மேலும், “உண்மை நோக்கங்கள்” என்னவென்பதும் எடுத்துக் காட்டப்படவில்லை.

EVR at Nude society - 1

நிர்வாண கிளப்பின் விவரங்கள்: வெங்கடாசலபதி எடுத்துக் காட்டுவது, “காலை 9லிருந்து மாலை 4.30 வரையிலும் பலதரப்பட்டவர்கள்- ஏற்படுத்தியுள்ள நிருவனங்களை எதிர்ப்பவர்கள், பேசிஸ்டுகள், சோசியலிஸ ஜனநாயக சிந்தனையாளர்கள், கம்யூனிஸ்டுகள் –  நிர்வாணமாக இருப்பர். நீந்துவது, உடற்பயிற்சி செய்வது, சூரிய குளியலில் ஈடுபடுவது, ஓடுவது, கால்பந்து விளையாடுவது, வாத்தியங்களை இசைப்பது என்று எல்லாவற்றையும் நிர்வாணமாகவே செய்தனர். ஈவேரா 3000 முதல் 4000 பேர் அங்கு கூடினர் என்ற தகவலை சேகரித்தார். அதுமட்டுமல்லாது, அந்த நிர்வாண சங்கத்தின் அங்கத்தினர் எண்ணிக்கை பல-ஆயிரங்களில் இருந்தது, மற்றும் அதில் 40,000 பெர்லினில் இருந்தனர் என்று ஈவேராவுக்குத் தெரிய வந்தது.  26, விக்டோரியா பார்க் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சிற்கு சென்றனர். அங்கு 3000 பேர் கூடியிருந்தனர். அந்த நேரங்களில் நிர்வாணமாக இருந்த பெரியாரை பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 1939ல் தன்னுடைய சுயசரித்திரத்தில், அந்த புகைப்படங்கள் எல்லாம் சேர்ப்பதாக இருந்தது. ஆனால், சேர்க்கப்படவில்லை[12]. 1940 மற்றும் 1962 பதிப்புகளிலும் காணப்படவில்லை. “புகைப்படங்கள் எடுக்கப் பட்டிருக்கின்றன,” எனும்போது, அத்தகைய ஏற்பாடுகள் இருந்துள்ளன என்று தெரிகிறது.

EVR at Nude society - 2

ஈவேராவின் நிர்வாண புகைப்படங்கள் ஏன் வெளியிடப்படவில்லை?: ஏ. ஆர். வெங்கடாசலபதி[13] என்கின்ற திராவிடத்துவ ஆராய்ச்சியாளர், 10-15 போட்டோக்கள் இருக்கின்றன என்கிறார். ஈவேராவை நிர்வாணமாக வைத்து கிளிக் செய்யப்பட்டன என்கிறார். ஆனால், ஒரே ஒரு படம் தான் காணப்படுகிறது. இவரும் தன்னுடைய கட்டுரையில், எந்த புகைப்படத்தையும் சேர்க்கவில்லை.  இதிலிருந்து, அவரும் மறைத்துள்ளார் என்றாகிறது. முன்னர், காந்தியை சந்தித்தது போன்ற வெளியிட்ட புகைப்படம் உண்மையானதல்ல என்று தெரிந்தது.  அந்நிலையில் திராவிடத்துவ வாதிகளின் பொய்கள், மறைப்புகள் செய்து வருகிறார்கள் என்பதால், இச்சித்திரம் மட்டும் பொய்யானது அல்ல, உண்மையில் ஈவேரா காந்தியை சந்தித்ததும் பொய்யா என்ற கேள்வி எழுந்தது. இங்கு முக்கியமான விசயம் என்னவென்றால், ஆராய்ச்சியாளர் தமக்குக் கிடைத்துள்ள முழுவிவரங்களையும் வெளியிடாமல் இருப்பது தான்[14]. ஆன்கிலத்தில் மற்றும் தமிழில் ஒரே விசயத்தை வேறு மாதிரி கொடுத்துள்ள போக்கும் தெரிகிறது. தமிழில் சுருக்கம் என்றாலும், உண்மையினை சொல்லியிருக்கலாம்[15].

Potsdam nude club, bath etc ad

ஈவேரா எந்த நிர்வாண சங்கத்திற்குச் சென்றார்?: ஈவேராவுக்கு பாலியல் பலவீனம் உள்ளதை, பவானி ஆற்றங்கரையில், அவர் பெண்களுடன் சல்லாபித்ததை, அவ்வூர் வயதானவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[16]. ஈவேரா காணாமல் போய் ஆந்திராவில் காணப்பட்டார் என்ற போது, நாடகக் கம்பெனிகளில் தான், தேடிப் பார்த்தனர். ஏனெனில், எந்த நடிகையுடன் இருப்பாரோ என்ற சந்தேகம் தான். இவையெல்லாம், ஈவேராவின் வாலிப வயது நிலையைக் காட்டுகிறது. மேலும், ஜெர்மனி நிர்வாண சங்கத்தில், ஜெர்மானியர் அல்லாதவருக்கு அனுமதி இல்லை[17]. ஒருவேளை விபச்சார விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். ஆகவே, இவர், அங்கு சென்றாரா அல்லது வெறேங்கேயாவது சென்றாரா என்ற கேள்வியும் எழுகின்றது. மேற்குறிப்பிட்டபடி, எல்லா விவரங்களையும் தொகுத்துப் பார்க்கும் போது, போட்ஸ்டாம் என்ற கிளப்பிற்குத் தான் சென்றதாகத் தெரிகிறது. மறுப்பதாக இருந்தால், உண்மை விவரங்கள் தரவேண்டும்.

© வேதபிரகாஷ்

27-05-2019

Freikoerperkultur

[1] எஸ். இராமநாதன் (30 டிசம்பர் 1895-9 மார்ச் 1970) தன்மான இயக்க முன்னோடிகளில் ஒருவரும் தந்தை பெரியாரின் வலக்கையாக இயங்கியவர். தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கொடை விளாகம் என்னும் சிற்றூரில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். 1929 திசம்பர் 15இல் பெரியார் மலேசியா சுற்றுப் பயணம் சென்றபோது இராமநாதனும் உடன் சென்றார். 1931 ஆம் ஆண்டு பெரியார் ஏறத்தாழ 11 மாதங்கள் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட போது, அவருடன் இராமநாதனும் ஈரோடு இராமுவும் உடன் சென்றார்கள்.

[2]  இவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. நிச்சயமாக, ஈவேராவுக்கு வேண்டியவர் என்று தெரிகிறது.

[3] எஸ். கருணானந்தம், தந்தை பெரியார் முழு முதல் வாழ்க்கை வரலாறு, மூவேந்தர் அச்சகம், சென்னை, 1979, ப.87.

[4] தஞ்சை மருதவாணன், 1912லிருந்து 1973 வரை திராவிடர் இயக்க வரலாற்றுச் சுவடுகள், திராவிடர் விடுதலைக் கழகம், சென்னை, திராவிடர் விடுதலைக் கழகம், சென்னை, ப.15.

[5] தஞ்சை மருதவாணன், இவர்தான் பெரியார் வரலாற்றுச் சுருக்கம் ஆண்டு வாரியாக,  திராவிடர் விடுதலை கழகம், சென்னை, 2015.

[6] ஏ.எஸ். வேணு, பெரியார் ஒரு சரித்திரம், பெரியார் பட்டறை, திருவாரூர், ப.36.

[7] Freikoerperkultur [FKK] என்ற நிர்வாண அமைப்பு – வேறு, இது வேறு என்று தெரிகிறது. மற்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

[8]  The Nude Society, Nudist club, Bathing club, Free Body club, Strip club, Strip society என்று பல பெயர்களில் அழைக்கப் படுகிறது.

[9] காலச்சுவடுசெப்டம்பர் 2004.

[10] Potsdam, a city located near Berlin outskirts – In 1931, nude bathing outside closed club grounds was again generally prohibited, and in 1933, nudist clubs were either dissolved or integrated as sports associations in National Socialist organizations. Incidentally, it is also famous for prostitution.

[11]  சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார  நிறுவன வெளியீடு, சென்னை, 1938/1997, பக்கம்.110.

[12] A. R. Venkachalapathy, From Erode to Volga: Periyar EVR’s Soviet and European tour, 1932, India and the World in the First Half of the Twentieth Century, edited by Madhavan K. Palat, Routledge, New York, 2018.

[13] A. R. Venkachalapathy,  chalapathy@mids.ac.in

[14] தி.இந்து.தமிழ், பெரியாரும் சோஷலிசப் பயணமும்!, ஆ.இரா.வேங்கடாசலபதி, Published : 20 Sep 2017 10:11 IST; Updated : 20 Sep 2017 10:19 IST

[15] https://tamil.thehindu.com/opinion/columns/article19719433.ece

[16] என். ஜி. நடேசன், பெரியார் ஒரு புனலாறா, புரட்சியாளரா?, திருசெங்கோடு, 2007.

[17] ஜெர்மனி இனரீதியில் இருந்து வந்த காலத்தில், இந்தியரான, இவர் சென்றது, சந்தேகத்திறுரியதாக உள்ளது. மேலும், திராவிடராக இருந்து கொண்டு, ஆரியர்களுடன் எவ்வாறு தொடர்பு வைத்தார் என்பதும் புதிராக உள்ளது.

விநாயக சதுர்த்தியை கலவரமாக்கிய பெரியார் குஞ்சும், பிள்ளையார் பிறந்தநாளை அரசியலாக்கிய கருணாநிதி பிள்ளைகளும் [1]

செப்ரெம்பர் 16, 2018

விநாயக சதுர்த்தியை கலவரமாக்கிய பெரியார் குஞ்சும், பிள்ளையார் பிறந்தநாளை அரசியலாக்கிய கருணாநிதி பிள்ளைகளும் [1]

EVR, Karuna blaspheming Pillaiyar

விநாயக சதுர்த்திற்கு திரிபு விளக்கம் கொடுக்கும் இந்துவிரோத சக்திகள்: விநாயக சதுர்த்தி பற்றி இப்பொழுது எல்லோரும் அறிந்துள்ளனர். இந்துக்கள் பலநாடுகளில் பரவி இருப்பதால், எல்லா நாடுகளிலும் கொண்டாட்டப் படுகின்றன. இக்கால ஊடகங்கள் மூலம் துரிதமாக விவரங்கள் வெளிவருகின்றன, பகிரப் படுகின்றன. அதனால், இக்கால இளைஞர்கள் சொந்தமாக சிந்திப்பதால், உண்மை அறிய ஆரம்பித்து விட்டனர். செக்யூலரிஸம் என்பது, இந்து விரோதம் என்று நன்றாகவே உணர்ந்து விட்டனர். இது இந்து அல்லாத இளைஞர்களுக்கேப் புரிய ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், கட்டுக்கதைகளை வைத்து அவர்களைக் குழப்ப ஆரம்பித்துள்ளனர். பேஸ் புக்கிலேயே, இந்த் விரோதிகள், “இந்து” பெயர்களை, புரோபைல்கள் வைத்துக் கொண்டு, துர்பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். உண்மையினை அவர்கள் அறிந்து கொண்டால், இப்பிரச்சினையும் தீர்ந்து விடும்.

Pillaiyar produced ny Buddhism

ஜைனபௌத்ததுலுக்கப் புராணங்களை வைத்துக் கொண்டு குழப்புவது: இந்துக்களை விட, இந்துக்கள் அல்லாதோர், செக்யூலரிஸ நாத்திகர், இந்து விரோதிகள் அதிகமாகவே தெரிந்து கொண்டுள்ளனர். 2018ல் ஓரளவுக்கு கருணாநிதி-ஸ்டாலின் போன்றோரே வெளிப்படையாக, இந்துவிரோதத்துடன் இருக்கும் நிலையில், இப்பிரச்சினையை வெளிப்படையாகவே அலசலாம். ஆனால், உண்மை அறிந்தும், அவற்றை விடுத்து, திரிபுகளை எடுத்து வைத்துக் கொண்டு, 100 ஆண்டுகளாக துர்பிரச்சாரம் செய்து வருகின்றனர். மயிலை சீனி. வேங்கடசாமி என்பவர் எழுதியுள்ள புத்தங்களை வைத்துக் கொண்டு, பெரும்பாலான அத்தகைய பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன[1]. “ஆரிய-திராவிட” இனவாத கட்டுக் கதைகளை வைத்துக் கொண்டு, 1940-50களில் எழுதியவை. இப்பொழுது அவை காலாவதியாகி விட்டாலும், அவற்றை வைத்துக் கொண்டு, இந்து விரோத அரசியல்-பிரிவுனைவாதிகள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்[2]. முன்னர் வீரமணியின் முகத்திரை கிழிக்கப் பட்ட, தினத் தந்தி நேர்காணலிலும் அத்தகைய போக்கைக் காணலாம்[3]. திக-வீரமணி போன்றோர், புராணக் கட்டுக் கதைகளை வைத்துக் கொண்டு, அவதூறு செய்து வருகின்றனர்[4]. கிருத்துவர்களோ “அகத்தியர் ஞானம்” போன்ற போலி புத்தகம், மோசடி ஆராய்ச்சி என்று ஏமாற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர்[5]. ஏற்கெனவே, ஆனால், இதுவரை யாரும் ஒழுங்காக அதை எதிர்த்ததாகத் தெரியவில்லை. கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் தனது ஆராய்ச்சிகள் மூலம், எவ்வாறு, ஜைன-பௌத்தர்கள், இந்திய இலக்கிய நூல்களில் பல இடைசெருகல்கள் செய்துள்ளார்கள் என்று எடுத்துக் காட்டியுள்ளார்[6].

Veeramani article blaspheming Pillaiyar-13-09-2018

வீட்டுக்குள் முடங்கி இருந்த விநாயகர் சதுர்த்தியை இந்துத்துவாவைப் பரப்ப அரசியல் நோக்கோடு வீதிக்குக் கொண்டு வந்தவர் திலகர் என்ற மராட்டிய பார்ப்பனர்[7]: விநாயகர் சதுர்த்தி என்று வீட்டுக்குள் மட்டுமே நடந்து வந்தது. அதனை மாற்றி இந்துத்துவாவைப் பரப்பிட, மகாராட்டிரத்தில் வீதிக்குக் கொண்டு வந்தவர் திலகர் என்ற மராட்டிய பார்ப்பனரே! பவுத்தத்தை விரட்ட பிள்ளையார் உருவாக்கமும் நடந்துள்ளது என்பது வரலாறு; மதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காத்திட உறுதி கொள்வோம் என்று திக கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு: “ஆற்றங்கரையில், குளத்தங்கரையில், ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையார் இப்போதுஇந்துத்துவா சக்திகளால் ஆர்.எஸ்.எஸ். பிள்ளையாராக, மதவெறிச் சின்னமாக அந்தப் பிள்ளையாரை அரசியல் ஆயுதமாக ஆக்கியவர் மகாராஷ்டிரத்து வர்ணாசிரம வெறியரான பால கங்காதர திலகர் என்ற மராத்திய சித்பவன் பார்ப்பனர் ஆவார்[8]. [வழக்கம் போல, இடது பக்கம் வீரமணியின் எழுத்தை அப்படியே போட்டு, வலது பக்கத்தில், என்னுடைய விமர்சனத்தை சேர்த்துள்ளேன்.]

Vinyaka Chaturthi celebrated in USA

திலகர் கொளுத்திப் போட்ட தீ!: “1893 ஆம் ஆண்டில் இவர்தான், பிள்ளையார் பக்தியை – ‘‘கணபதி வழிபாடுஎன்ற பெயரால் ஆக்கி, பிள்ளையார் சிலைகளை வைத்து, பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் விழாவாக அதனை ஆக்கி, இந்துத்துவா உணர்வை இதில் புகுத்தி, தனி நபர்களின் அடக்கமான நிகழ்வாக நடத்தியதை ஒரு அரசியலுக்கான மூலதனமாக ஆக்கினார்!

தமிழ்நாட்டைப் பொருத்தவரைஇது வாதாபியிலிருந்து பரஞ்சோதியால் கொண்டு வந்து இறக்குமதியான கடவுள்; ஆதி வேதங்களில்கூட பிள்ளையார் கிடையாது, பிறகு புராணங்கள்மூலம் புகுத்தப்பட்ட ஒன்று. ‘பிறந்தது எப்படியோஎன்ற நூலில் பன்மொழிப் புலவர்பழுத்த ஆஸ்திகரமானதெ.பொ.மீனாட்சிசுந்தரனார் எழுதியுள்ளார். இந்த பிள்ளையார் வாதாபியிலிருந்து கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சுமார் 1,300 ஆண்டுகளுக்குள்தான் தமிழ்நாட்டுக்குள் இது படையெடுத்தது”.

இப்படி 2018ல் உளறுவதிலிருந்தே, இந்த ஆளின் சரித்திர அறிவைத் தெரிந்து கொள்ளலாம். ஆதிவேதங்களில் இல்லையாம்! இத்தகைய முட்டாளை நிச்சயமாக பார்க்க முடியாது. ஏனெனில், பூஜ்ய அறிவைக் காட்டிக் கொள்வதால்……

சிந்துசமவெளி பிள்ளையார் பற்ரியெல்லாம், இந்த நாஸ்திகர்-ஆஸ்திகர் கூட்டத்திற்கு ர்கெஇயவில்லை போலும்…

அது திராவிட நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு, இப்படி பித்தலாட்டம் செய்வதிலிருந்தே, இவர்களது அறிவை கண்டு கொள்ளலாம்.

Vinyaka Chaturthi celebrated in Pakistan 2017

பவுத்தத்தை விரட்டவே பிள்ளையார்: வீரமணி தொடரும் கதை, “வெறும் பக்தி, உள்ளூர் கோவில், குளங்கள், ஆற்றங்கரை புராணக் கடவுளைபவுத்தத்தைப் பரவாமல் தடுக்கவே அப்போது வடக்கே கண்டறிந்து விநாயகன் என்று அரச மரத்திற்கு அடியில்  (போதிமரம்அரச மரம்) வைத்து பவுத்தத்தை விரட்டினர் ஆரியப் பார்ப்பனர்கள்!

(புத்தருக்கு விநாயகர் என்ற பெயரும் உண்டு) கடவுளைப் பயன்படுத்தி  மதப் போதையை மதவெறியாக்கினர்பக்தி உணர்வை பாமரர்களிடம் தீவிரப்படுத்திட, பயன் படுத்தினர். இந்து மத விழாக்களை ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவமயமாக்க வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களில் ஒன்றான விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஒன்றுகூடியே பிள்ளையார், இராமர் போன்ற கடவுளரைக் கருவியாக்கி அரசியல் போராட்டப் போர் நடத்தி, சிறுபான்மையோர் உள்பட மற்றவர்களை மதக் கலவரத்தைத் தூண்டி அச்சுறுத்துகின்றனர்!”.

சரித்திர புரட்டலான, இத்தகைய கட்டுக் கதையை இப்படி பரப்புவதிலிருந்து, ஜைன-பௌத்தங்களில் இருந்த பிள்ளையாரை மறைக்கப் பார்க்கின்றனர் போலும். இல்லை, வேண்டுமென்றே, தெரிந்தும், அத்தகைய மொசடியில் ஈடுபட்டுள்ளனர் போலும்.

மறுபடி-மறுபடி, ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் என்று சொல்லிக் கொண்டு, இவர்களது துலுக்க சார்பு, இந்து விரோதத்தை வெலிப்படுத்தி வருகின்றனர். இதை மக்களும் கவனித்து வருகின்றனர்.

Vinyaka Chaturthi celebrated in London

“செட்-அப்” வடநாட்டு திருவிழா: வீரமணி தொடரும் கதை, “வடநாட்டிலிருந்து பல கோடி ரூபாய் வந்து, தமிழ் நாட்டில் ஒரு பிள்ளையார் சிலைக்கு இவ்வளவுரேட்‘  கொடுக்கப்படும் என்று கூறி, வறுமையிலும், ஏழ்மையிலும் உள்ள அப்பாவிகளான ஒடுக்கப்பட்டோரை திட்டமிட்டே இதற்கும் பயன்படுத்தும் ஏற்பாடு (‘செட் அப்‘) விழாதானே தவிர, பக்தர்கள் பெரிதும் களிமண் பிள்ளையாரை விலை கொடுத்து வாங்கி வீட்டுக்குள் வைத்து, பிறகு கிணற்றிலோ, குளத்திலோ கரைக்கும்  பழக்கம் மாற்றப்பட்டது.

இந்தப் பக்தி போதையை வைத்து தேவையற்ற மதக் கலவரத்தை உருவாக்குவது என்பது முன்பே திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்றது! சுமார் ஒரு லட்சம் காவல்துறையினரை இதற்கு அழைத்து வந்து, காவல் காத்து, கலவரம் நிகழாமல் காக்கும் நிர்ப்பந்தத்தை இவர்கள் உருவாக்கி வருகின்றனர். நீதிமன்றம் தலையிடும் நிலைகள் எல்லாம் உருவாக்கப்படுகின்றன. இதுதான் கடவுள் பக்தியா? சக்தியா?

பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு, ஈவேரா பிள்ளையார் சிலை உடைத்ததால் தான், சென்னையில், இந்த ஊர்வலங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

மேரி, ஏசு சிலைகளை வைத்தும், சந்தன கூடு என்ற பெயரில் கோபுர சிலைகளை வைத்துக் கொண்டு, கிருத்துவர்-துலுக்கர்களும் ஊர்வலங்கள் நடத்தி வருகிறார்கள். பிறகு அவற்றை ஏன் உடைக்கவில்லை, தடுக்கவில்லை, எதிர்த்து இப்படி கட்டுரைகள் எழுதவில்லை என்று தெரியவில்லை.

EVR statues compete Pillaiyar - SC

பிள்ளையார் என்பது ஒரு மூடநம்பிக்கை: வீரமணி தொடரும் கதை, “பிள்ளையார் என்பது ஒரு மூடநம்பிக்கை; அதற்கென எந்த தனி சக்தியும் இல்லை என்று நிரூபித்துக் காட்டவே பிள்ளையார் உருவத்தை தந்தை பெரியாரும், அவர்தம் தொண்டர்களும் உடைத்துக் காட்டினர்!

அது ஒரு வகையான நிரூபணக் காட்சி செயல்முறையே! (அதுவும் கழகத்தவர்களின் சொந்த செலவில்!). 27.5.1954 இல் உடைத்துக் காட்டிய பெரியார், 1973 வரை 95 வயது வரை வாழ்ந்து காட்டி – ‘‘பிள்ளையார் கண்களைக் குத்தவில்லைஎன்று காட்டி, மதக் கலவரங்களுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்று நிரூபித்தார்”. ஆனால், உச்சநீதி மன்றத்தில் தோன்றாமல் ஒளிந்து கொண்டதும், அதனிடம் வாங்கிக் கொண்ட விசயத்தையும் மறைப்பது தான், இவர்களது போலித் தனம். இன்று பிள்ளையார் சிலையை உடைத்தால், நிச்சயம் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப் படும்.

© வேதபிரகாஷ்

16-09-2018

Vinyaka Chaturthi celebrated - EVR gang fumes

[1] மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும், தமிழும், சமயப்போர், திருநெல்வேலி சைவசித்தாந்த கழக வெளியீடு, 1954, ப.53-61

மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும், தமிழும், கா.ஏ. வள்ளிநாதன் [பதிப்பாசிரியர்], மயிலாப்பூர், சென்னை, 1940.

[2] நக்கீரன் வீடியோ, விநாயகர் சதுர்த்தி என்பது இந்து அமைப்புகளுடைய மதவெறியை தூண்டும் நிகழ்வாக இருக்கிறது. இது தடைசெய்யப்பட வேண்டும், திருமுருஅன் காந்தி, .https://www.youtube.com/watch?v=qZqqjori-Xc

[3] வீரமணி, கேள்விக்கு என்ன பதில்?, பாண்டே “தினத் தந்தி” நேர்காணல், Kelvikkenna Bathil : Exclusive Interview with K.Veeramani (28/03/15) – Thanthi TV, https://www.youtube.com/watch?v=bU0H077e4DA; தமாஸான வீடியோ –  https://www.youtube.com/watch?v=64_AJzfOYpM.

[4] வருடாவருடம், விடுதலையில் அத்தகைய மோசடி செய்திகள், கட்டுரைகள்,, துணுக்கள் முதலியவற்றை அச்சிட்டு வருகிறது.

[5] வீ. ஞானசிகாமணி, அகத்தியர் ஞானம், அசோசியேசன் சாலை, மாதவரம்.

[6] K. V. Ramakrishna Rao, A Study of Role of Women in Jaina Mantra, Tantra and Yantra,https://kvramakrishnarao.wordpress.com/2012/02/15/a-study-of-role-of-women-in-jaina-mantra-tantra-and-yantra/; also see at:

https://www.scribd.com/document/139524737/A-Study-of-Role-of-Women-in-Jaina-Mantra-Tantra-and-Yantra-K-v-Ramakrishna-Rao

 

[7] விடுதலை, வீட்டுக்குள் முடங்கி இருந்த விநாயகர் சதுர்த்தியை இந்துத்துவாவைப் பரப்ப அரசியல் நோக்கோடு வீதிக்குக் கொண்டு வந்தவர் திலகர் என்ற மராட்டிய பார்ப்பனர், வியாழன், 13 செப்டம்பர் 2018 15:48.

[8] http://www.viduthalai.in/e-paper/168353.html