Archive for the ‘கடவுள் இல்லை’ Category

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் – திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார்.

தமிழகத்திற்கு சிலைவைப்பு, சிலையுடைப்பு, சிலைஅரசியல் எல்லாம் புதியதல்ல: ஈவேராவால் தமிழகத்தில் சிலையுடைப்பு அரசியல் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு பிள்ளையார் / விநாயகர் சிலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அது இந்துவிரோதமாகி அந்த போலி நாத்திகர்களை வெளிப்படுத்தியது. உச்சநீதி மன்றம் வரை அவர் மீதான வழஜக்குச் சென்றாலும், ஈவேரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இருப்பினும் சிலையுடைப்பு அக்கிரமங்களை செய்து வந்தார். 1968ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிலிருந்தே சிலைவைத்தல்[1], அதிலும் மெரினா பீச்சில் சிலை வைத்தல் என்ற அரசியல் ஆரம்பித்தது. அப்பொழுதே, அண்ணா பலதரப் பட்ட அழுத்தங்களுக்குட் பட்டார். வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தம்-ஆதிக்கங்கள் அதிலிருந்தன. இதனால், சில சிலைகள் தேவையில்லாமல் சேர்க்கப் பட்டன, அதாவது, சில நீக்கவும் பட்டன. 1970களில் ஈவேராவின் பிள்ளையா சிலையுடைப்பு / ராமர் பட அவமதிப்பு உச்சங்களுக்குச் சென்றன[2].

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார். கருணாநிதியும் அந்த சடங்கை முறையாக செய்தார். ஆனால், அது உடைப்பு கிரியையில் முடிந்ததது. உடைப்பு சம்பிரதாயத்தையும் ஈவேரா தான் ஆரம்பித்து வைத்தார்.

ஈவேராஅண்ணாகருணாநிதி சிலைகள்: அதேபோல, பிறகு மவுண்ட் ரோடில் சிலைவைப்பதில், வைத்துக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. ஈவேரா (இந்து அலுவகத்து அருகில்), அண்ணா என்றாகி (மவுண்ட் ரோடு-வாலாஜா ரோட் சந்திப்பு), உயிரோடு இருக்கும் போதே கருணாநிதி தனக்கும் சிலை வைத்துக் கொண்டார் (மவுண்ட் ரோட்-பாட்டுலஸ் ரோட் சந்திப்பு). ஆனால், 1987ல் அது உடைக்கப் பட்டது. அது அரசியலாகி, திராவிடத்துவமாகி, ஒரு நம்பிக்கையாகவும் மாறியது. அதாவது, அது அபசகுனமாகக் கருதப் பட்டது. திமுக ஆட்சி அதிகாரம் இழந்தது. எம்ஜிஆருக்கு ஸ்பென்சர் சந்திப்பில் சிலை வைக்கப் பட்டது. இனி மவுண்ட் ரோடில் எங்கு, யாருக்கு வைப்பார்களோ தெரியாது.

மவுண்ட் ரோடில் முதலில் ஈவேரா, பிறகு அண்ணா, கருணாநிதி என்று வரிசையாக சிலைகள் வைக்கப் பட்டது.

அம்பேத்கர் சிலை வைத்தலும், போராட்டமும்: இதற்குள் அம்பேதகருக்கு சிலை வைக்கும் அரசியல் ஆரம்பித்து, அது தீவிரமாகி, அதிகமாகியது. முதலில் இந்துக்களைத் தாக்க அது உதவும் என்று நினைத்து ஊக்குவிக்கப் பட்டது, ஆனால், அது திராவிட உயர்ஜாதியினருக்கே எதிராக அமைந்தது. இது நிச்சயமாக திராவிடத்துவவாதிகளுக்குப் பிடிக்கவில்லை[3]. அதனால், திக ஈவேரா சிலை வைக்கும் அதிரடியை ஆரம்பித்தது. அந்த தீவிரம் ஶ்ரீரங்கம் கோவில் வாசலுக்குச் சென்ற போது பிரச்சினையாகியது[4]. இடையில் கண்ணகி சிலை வைத்தும் கருணாநிதி அர்சியல் நடத்தினார். ரஜினி 2021ல் பேசியதும் எதிர்க்கப் பட்டது, ஆனால், விவரங்கள் வெளியே வந்து விட்ட போது, திராவிட நாத்திக-இந்துவிரோத முகங்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

சிலைகளுக்குப் பிறகு கோவில்களும் கட்டப் பட்டது. இப்பொழுது சமாதிகள் கோவில்களாக மாறி அங்கு தினம்-தினம் பூஜைகள், படையல்கள், ஆராதனைகள், அலங்காரங்கள்-வாத்தியங்கள் சகிதம் நடந்து கொடிருக்கின்றன…

வள்ளுவர் கோட்ட அரசியல்: கடந்த 1971- 76 ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார்[5]. அதன் திறப்பு விழாவை 1976ம் ஆண்டு பிரவரி மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்த முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விழா தொடர்பாக வானொலியில் விளம்பரம்கூட ஒலிபரப்பப்பட்டது. அப்போது இந்திரா காந்தி பிரதமர். நெருக்கடிநிலை (மிசா) அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதனால் கோபமடைந்த இந்திராகாந்தி, பிப்ரவரி ஒன்றாம் தேதி, 1976 வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடக்க இருந்த நிலையில், ஜனவரி 30ம் தேதி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்[6]. அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது வந்து, வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் என்ற முறையில், வள்ளுவர் கோட்டம் திறப்புவிழாவில் பார்வையாளராகக் கலந்து கொள்ள கருணாநிதிக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. பத்தாவது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. விழா நடக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் காரை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து விழாவுக்கு கருணாநிதி நடந்து வரவேண்டும். விழாவைப் புறக்கணித்தார் கருணாநிதி[7].

ஈவேரா இந்த வழக்கில் தான் உச்சநீதி மன்றத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், நாங்கள் பார்க்காத கோர்ட்டா என்றெல்லாம் பேசுவார்கள். ஈவேரா இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவில்லை..

முதல்வராக இருந்த கருணாநிதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, கடற்கரைச் சாலையில் சிலை வைத்தார். 2011ல் அந்த சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்தில் இப்போது வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவின்போது, சிலையின் பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு, சிவாஜி சிலை பீடத்தில் இப்போது அகற்றப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.

அங்கில அடிவருடித்தனம் கட்டுக்கதைகளால் இவ்வாறெல்லாம் பகுத்தறிவு திராவிடத்துவ போதை கொண்டு, புதிய பக்தர்கள் உருவாகி வருகிறார்கள்!

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன், சென்னையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார் கருணாநிதி, சிலைக்கு மாலை அணிவிக்க இயலாதபடி, அங்கே வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை ஆட்சியாளர்கள் அகற்றிவிட்டனர். உலகத்தமிழ் மாநாட்டின்போது, அரசு சார்பில், அண்ணா முதல்வராக இருக்கும்போதே வைக்கப்பட்டதுதான் அந்தசிலை. ஆனால், அந்த சிலை நிறுவுவதற்கான தொகையை நன்கொடையாகக் கொடுத்தவர் எம்ஜிஆர். படிக்கட்டு அகற்றப்பட்டதையடுத்து,சிலையின் பீடத்தில் மாலையை வைத்துவிட்டுச் சென்றார் கருணாநிதி. இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுகவுக்கென்று தனியாக அண்ண சிலை நிறுவ முடிவு செய்தார் கருணாநிதி. இதற்காக அண்ணா சாலையில் இடம் ஒதுக்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் அரசு மறுத்துவிட்டது. வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க திமுகவுக்கு அனுமதி தரப்பட்டது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார் கருணாநிதி. சிலையின் பீடத்தில், “சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் கட்டியது கருணாநிதி என்பதை அங்கே பதிவு செய்தனர். அண்ணா பிறந்த நாளில், இந்த சிலைக்குதான் திமுகவினர் மாலை அணிவிப்பார்கள். அதிமுகவினர், அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.

கட்டுக் கதையைப் பரப்பும் திராவிடத்துவம், அதை அரசு ரீதியில், 2022ல் முதலமைச்சரே பரப்புகிறார்! சரித்திரம் பற்றி எந்த கவலையும் இல்லை.

1969 முதல் 2018 வரை – மெரினாவில் சமாதி அரசியல்: முதலில் 1969ல் அண்ணா இறந்தபோது, அவருக்கு சமாதி கட்டப் பட்டது. அப்பொழுது, அதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, 1987ல் எம்ஜிஆருக்கு சமாதி வைத்த போது, திமுகவினர் சில சலசலப்பு காட்டினாலும், கருணாநிதி சிலையுடைப்பு, வன்முறை முதலியவற்றை கவனித்து அமைதியாகினர். 2016ல் ஜெயலலிதாவுக்கு சமாதி வைக்க்ப்பட்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு 2018ல் கருணாநிதி இறந்தபோது, மெரினாவில் சமாதி அரசியலும் உண்டானது. வழக்கும் தொடரப் பட்டது, ஆனால், முடித்து வைக்கப் பட்டது, சமாதி வைக்கப் பட்டது. இனி, திராவிடத்துவவாதிகள், மெரினாவில் தங்களுக்கு சமாதி வைக்க “ரிசர்வ்” செய்துகொண்டு இடத்தைப் பிடித்து வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

Stuart Sampson – ஸ்ய்ரௌட் சாம்ப்ஸன் மதுரையின் பென்னிகுக்கிற்கு வீடு இருந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிலை அரசியலை ஆரம்பித்து விட்டது: இப்பொழுது 2022ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடம் அதைவிட தீவிரமான சிலை / மணிமண்டபம் அரசியல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அயோத்தி தாசர், வ.உ.சிதம்பரம், ஈவேரா, வள்ளலார், ஜான் பென்னிகுக் என்று நீள்கிறது. இதற்கெல்லாம் கோடிகளில் திட்டங்கள்! பிறகென்ன கட்டுக்கதைகளுக்கு குறைவா? இட்டுக்கட்டுவதில் வல்லவர்களான, தமிழ் செப்படி வித்தை[8] வல்லுனர்கள் சதுரங்க வேட்டையிலும் இறங்கி விடுவர். ஆனால், சரித்திர ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்க முன்படும் போது, உண்மைகள் வெளிவரத்தான் செய்யும். இவ்விதமாகத்தான், இப்பொழுது ஸ்டாலின் மாட்டிக் கொண்டுள்ளார். நிச்சயமாக யாரோ அவருக்கு இந்த ஸ்கிரிப்டை எழுதி கொடுத்துள்ளார்கள். அது நாகநாதன், ஜகதீசன், கருணானந்தம் போன்ற ஆஸ்தான சரித்திராசியர்களாக இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] World Tamil Conference (WTC) என்பது முதலில் 1966ல் கோலாலம்பூர் மற்றும் 1968ல் சென்னையில் நடத்தப் பட்டது.

[2] 1971ல் ராமர் போன்ற படங்களுக்கு செருப்பு மாலை போடப் பட்டது மற்றும் இந்து கடவுளர்களை நிர்வாணமாக, ஆபாசமாகச் சித்தரித்து திக-திமுகவினர் துருச்சியில் ஊர்வலம் நடத்தினர்.

[3] தமிழனே இல்லாத நபருக்கு, தமிழகத்தில் சிலை ஏன் என்று கூட கேள்விகள் எழுப்பப் பட்டன.

[4] One.India, Life-size Bronze statue of ‘Periyar’ was unveiled at Srirangam, By Staff | Published: Monday, December 18, 2006, 3:51 [IST]

https://www.oneindia.com/2006/12/16/life-size-bronze-statue-of-periyar-was-unveiled-at-srirangam-1166394083.html

Srirangam, Tamilnadu, Dec 16 (UNI) In an event preceded by controversy, a life-size bronze statue of late Rationalist leader and Founder of Dravidar Kazhagam (DK) Periyar E V Ramasamy Naicker,was formally unveiled near the Sri Ranganatha temple by DK General Secretary K Veeramani, here .  the statue mounted on a 12-feet high pedestal,was installed near the ‘Rajagopuram’ (temple tower). Union Minister for Environment and Forests A Raja, State Ministers K N Nehru and N Selvaraj, also participated in the event.

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சிலை அரசியல், Written by WebDesk, Updated: October 2, 2017 11:06:36 am.

[6] https://tamil.indianexpress.com/opinion/statue-politics/

[7] இதில் முக்கியமானது என்னவென்றால், வள்ளுவர் கோட்டத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு அகற்றப்பட்டதுதான். வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதிதான் கட்டினார் என்ற தகவல் அங்கு எந்த வகையிலும் இடம் பெறவில்லை. இது இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த வேலை.

[8] பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.

ரஜினியும் இக்கட்டுக்கதை வைத்து படம் எடுத்ததால், இரண்டாம் பெனிகுக் நிலைக்கு உயர்ந்துள்ளாறா அல்லது தள்ளப் பட்டாரா என்று தெரியவில்லை.

பெரியாரும், இஸ்லாமும் – கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (2)

ஒக்ரோபர் 27, 2021

பெரியாரும், இஸ்லாமும்கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (2)

ஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929)[1]. ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை[2]. ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[3].

பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் முதலியன[4]: ஆனைமுத்து, விடுதலை ராஜேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, முதலியோர்களின் தொகுப்புகள் மற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தின் வெளியீடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு[5], தமக்கு வேண்டியவற்றைத் தொகுத்து, பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் என்றெல்லாம் எழுதுகிறார்கள், ஆனால், அவற்றை சரிபார்த்து, உண்மையறிந்து, மெய்யாகவே மறுபக்கம் அலசி, ஆராய்ந்து அவர்கள் எழுதுவது இல்லை[6]. அரசியல், பரிந்துரை, ஆதாயம், அதிகாரம் என்றெல்லாம் உள்ளதால், பரஸ்பர ரீதியில் அத்தகைய வெளியீடுகள், ஆதரவாளர்களிடம் பிரபலமாகி சுற்றில் இருக்கின்றன. ஆனால், 1940-80களில் திராவிடத் தலைவர்களின் பேச்சுகளை நேரில் கேட்டவர்களுக்கு, அவர்கள் பேசியதற்கும், இப்பொழுது தொகுப்பு புத்தகங்களில் இருப்பவற்றிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகளை காணலாம். எந்த அளவுக்கு ஒட்ட்யும், வெட்டியும், மாற்றியமைத்து, அவை வெளியிடப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இங்கும்-அங்கும் உள்ளவற்றை எடுத்தாண்டு, தொகுத்து எழுதியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து ஆராய்ச்சிக்கு வர வேண்டும்.

பிரச்சாரம் கட்டுக்கதைகள் ஆராய்ச்சி ஆகாது: இவ்வாறு, துலுக்கர் அடிக்கடி, புதிய கதைகளை உருவாக்கி, பிரபலமடையச் செய்து, பரப்பி வருவதில், பெரிய விற்பன்னர்கள் எனலாம். இப்பொழுது, இன்னொரு கதையைக் கிளப்பி விடுகிறார்கள் போலும். இந்துத்டுவ வாதிகள், முக்கியமாக, ஆவணங்களை சரிபார்த்து ஆராய்ச்சி செய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஏதோ, ஒருபக்கமாக ஒரு சாரார் பேசியதாக அச்சில் வந்துள்ளவை என்றெல்லாம் வைத்து, முடிவுக்கு வருவது, தொடரும் போக்கு தெரிகிறது. “தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,” என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று இப்பொழுது, இத்தகைய விசயங்கள் வெளிவருவது விசித்திரமாக இருக்கிறது..“முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று / போன்று பிதற்றினாரா?,” என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆன்மா இல்லை, ஆவி இல்லை …..என்றெல்லாம் பேசி, கிண்டலடித்து வந்த பெரியார், பெரிய சித்தர் என்றெல்லாம் சிலர் போற்றி வந்த நிலையில், அவர் அழுதார், அரற்றினார், உடன் இறக்க முயன்றார்… என்று செய்தி உருவானது திகைப்பாக இருக்கிறது. மூலம் / உண்மை ஒன்று என்றால், சமீபத்தை நிகழ்வுகள் பற்றி ஒன்றிற்கு மேலான விவரங்கள் வருவது சிந்திக்க வேண்டிய பொருளாக மாறுகிறது.

ஜின்னாபெரியார்அம்பேத்கர் சந்திப்புகள், கடிதங்கள் இந்த கட்டுக் கதைகளை கிழிக்கின்றன: இவர்கள் எல்லாம் ஒன்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இறக்கவில்லை. 70-80 ஆண்டுகள் முன்னர் இருந்தவர்கள், சென்னைக்கு வந்துள்ளனர். பலர் பார்த்திருக்கின்றனர், அவர்கள் பேசியதைக் கேட்டிருக்கின்றனர். இன்றைய 60-70-80 வயதானவர்களுக்கு விசயங்கள் தெரியும். முன்பு “தி மெயில்,” “சென்டினல்” போன்ற நாளிதழ்களில் வந்துள்ளன. இப்பொழுது, திராவிடத்துவவாதிகள், முஸ்லிம்கள், பெரியாரிஸ்டுகள் மறைத்தாலும், ஜின்னா கடிதங்கள் ஈவேராவைத் தோலுருத்திக் காட்டுகிறது. அம்பேத்கர் எப்படி ஈவேராவை பௌத்தம்மாறுவதற்கு எதிர்த்தாரோ, அதேபோல ஜின்னா இவரை பொருட்படுத்தியதே இல்லை. 1948ற்குப் பின்னர், இவர் பல தமாஷாக்களை (பிள்ளையார் சிலைகள் உடைத்தது. ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டது, இந்து விரோதம் செய்தது) செய்திருக்கிறார். இதனை, திமுக ஊக்குவித்து வந்தது. அம்பேத்கரை 1970கள் வரை தமிழகத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. பிறகு தான் அம்பேத்கர் சிலைகள் தோன்ற ஆரம்பித்தன. அதே போல, பெரியார் இறந்த பிறகு, 1970களில் ஊதி பெரிதாக்கப் பட்டார்.  ஆனால், முத்துராமலிங்க தேவர், மபொசி, கண்ணதாசன் முதலியோர் பேசியது, எழுதியது மறைக்கப் படுகின்றன.

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் இத்தகைய கட்டுக் கதைகளைப் பரப்புவது ஆபத்தானது: பச்சையப்பன் கல்லூரியில் திராவிட இயக்கத்தைப் பற்றி பலர் அரைத்த மாவையே அரைத்து பேசினர். அத்தொடர் சொற்பொழிவுகளக் கூர்ந்து கேட்கும் போது, அரசியல் செய்ததைத் தவிர வேறொதுவும் தெரியவில்லை. திராவிடத்துவத்தில் ஊறிய-நாறிய அவர்களால் வேறெதையும் பேச முடியவில்லை. ஏ.ஆர். வெங்கடசாலபதி போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை வைத்துக் கூட விவரிக்க முடியாது. ஆகவே, ஏதோ நடத்த வேண்டுமே என்ற போக்கில் நடத்துவது, ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது, முகஸ்துதி செய்தது, கேள்விகள் கேட்கக் கூடாது, விவாதிக்கக் கூடாது என்று இவ்வாறு கூட்டங்கள் நடத்துவது பிரயோஜனம் அல்லாதது மற்றும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றின் தரத்தையே கேலிக் கூத்தாக்கி விடும்.  இதனால் தான், மற்றவர்கள் திராவிடர்கள், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு அரசியல் செய்து கொண்டுவருபவர்களை மற்றவர்கள் கண்டு கொள்வதில்லை.

© வேதபிரகாஷ்

27-10-2021


[1]  வேதபிரகாஷ், 19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாராபெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!, 02-04-2016.

[2]https://dravidianatheism.wordpress.com/2016/04/02/islamization-of-dravidian-movement-by-making-periyar-a-mohammedan/

[3] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013, http://bushracare.blogspot.in/2013/09/5.html

[4] வேதபிரகாஷ், முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1], 07-02-2021.

[5] பெரும்பாலும், இத்துகுப்புகள்,  இப்பொழுது, இவை இணைதளங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவையெல்லாம், “கிரிடிகல் எடிஷன் பதிப்பு” போன்றவை இல்லை.

[6] ம.வெங்கடேசன், க. சுப்பு போன்ற வலதுசாரி, இந்துத்துவ எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகங்கள். இப்பொழுது இந்துத்துவவாதிகள் பெரியாரிஸத்தை ஆதரிப்பதால், இதைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.

பெரியாரும், இஸ்லாமும் – கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (1)

ஒக்ரோபர் 27, 2021

பெரியாரும், இஸ்லாமும்கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (1)

பெரியாரும், இஸ்லாமும் சொற்பொழிவு: திமுகவின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெரியாரைத் தூக்கிப் பிடித்து, பெரிய சிலை வைக்கிறோம் என்றெல்லாம் திராவிடத்துவாதிகள் கிளம்பி விட்டனர். இந்நிலையில், மனோன்மணியம் பல்கலைகழகத்தில் ‘பெரியாரும் இஸ்லாமும்’ சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்[1]. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் சமூக விலக்கல் மற்றும் ஆட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்துடன் இணைந்து ‘பெரியாரும் இஸ்லாமும்’ என்ற தலைப்பில் அக்டோபர் 27 அன்று பகுத்தறிவு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது[2]. இதில் புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அகமது சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சொற்பொழிவாற்ற இருந்த நிலையில், இந்து முன்னணியினர் திடீரென இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து முன்னணி மிரட்டல், ‘பல்கலைக் கழகமா அல்லது திராவிடர் கழகமா’ என கேள்வியெழுப்பி, பல்வேறு விமர்சனங்களை இந்து முன்னணியினர் முன்வைத்தனர். இந்து முன்னணியின் மிரட்டல் காரணமாக மேற்கண்ட சொற்பழிவு நிகழ்ச்சியை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தயக்கம் காட்டியது தெரியவந்தது.

உதயகுமார் கண்டனம்: இதுகுறித்து துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்டபோது, சில பாதிப்புகள் ஏற்படும் என்பதால் நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும், நடத்த வேண்டாம் என்பது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என 24-10-2021 அன்று தெரிவித்திருந்தார். இருப்பினும் தமிழ்நாடு அரசால் சமூகநீதி நாள் கடைபிடிக்கப்படும் ஒரு தலைவரின் பெயரில் நிகழ்ச்சி நடத்த பல்கலை நிர்வாகம் அஞ்சியது, சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப உதயகுமார்[3], “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர் கழக அலுவலகமா? ஐஎஸ் பயிற்சி கூடாரமா? என்றெல்லாம் உருட்டி மிரட்டி, ஓர் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தடுக்க முயலும் இந்து முன்னணி பாசிஸ்டுகளை வன்மையாக கண்டிப்போம்! பல்கலைக்கழக நிர்வாகமே முதுகெலும்புடன் செயல்படு!” என்று பதிவிட்டிருந்தார்[4].

இந்து முன்னணி எதிர்ப்பு, போலீஸ் காவல்: இதுகுறித்து ஈடிவி பாரத் தளத்தில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக தற்போது இந்து முன்னணியின் மிரட்டலுக்கு அஞ்சாமல் ‘பெரியாரும் இஸ்லாமும்’ தொடர்பான சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்த துணைவேந்தர் பிச்சுமணி சமூகவியல் துறைக்கு அனுமதி அளித்துள்ளார். இதனிடையே சொற்பொழிவு நடத்தினால் அக்டோபர் 27ஆம் தேதி காவிகள் நாம் பல்கலைக்கழகத்தில் அணி திரள்வோம் என இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. எனவே, அன்றைய தினம் பல்கலைக்கழகத்தில் காவல் பாதுகாப்பு கோருவது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர். அதன்படி, போலீஸ் பாதுகாப்பு கோரப் பட்டது.

இந்து முன்னணி சமூகவளைத் தள எதிர்ப்பு: இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர் கழக அலுவலகமா? ஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி கூடாரமா? புரியவில்லை. ‘பெரியார், சாமுவேல் ஆசீர்ராஜ், ரியாஸ் அகமது’ என்னவிதமான கூட்டணி. கல்வி நிலையத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சியா?மனோன்மணியம் பல்கலைக்கழகம்நிகழ்ச்சி குறித்த போஸ்டர் அக்டோபர் 27 ம் தேதி காவிகள் நாம் அணி திரள்வோம். என்ன பேசுகிறார்கள் என பார்ப்போம். கடவுள் மறுப்பு, இஸ்லாத்தின் சமூகநீதி என அனைத்திற்கும் எதிர் கேள்வி மற்றும் விளக்கம் கேட்போம்” எனத் தெரிவித்திருந்தனர்.

27-10-2021 அன்றுபெரியாரும் இஸ்லாத்தும்பெயரிலான கருத்தரங்கு நடைபெற்றது: இந்த நிலையில் திட்டமிட்டபடி பல்கலைக்கழக அரங்கில் “பெரியாரும் இஸ்லாத்தும்” பெயரிலான கருத்தரங்கு நடைபெற்றது[5]. இதில் துறை சார்ந்த மாணவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்[6]. பல்கலைக்கழக வாசலில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி முடியும் வரை வெளியாட்களை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய அதே நேரத்தில் பல்கலைக்கழகத்திற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்ததாக தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து காவல் அதிகாரி பல்கலைக்கழக துணைவேந்தரை செல்போனில் தொடர்பு கொண்டு அனுமதிக்கலாமா எனக்கேட்டார். அதற்கு அவர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மாணவர்கள் மட்டுமே அனுமதி என்பதால் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என்று மறுத்து விட்டார்.

ரியாஸ் அகமது பேசியது: வழக்கம் போல, ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தான் எடுத்துக் காட்டி பேசியுள்ளது, ஒரு பிரச்சாரம் என்று வெளிப்பட்டது. 2021 பிப்ரவரியில், மணிச்சுடரில்[7], “1972ம் ஆண்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலமானபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தந்தை பெரியோர் கதறி அழுத சம்பவம் நம் நெஞ்சங்களை உருகச் செய்யும். ஆம். இமைய மலை போல் எதற்கும் அசையாத் நெஞ்சுரம் கொண்ட தமிழர் தந்தை பெரியார் அவர்கள், காயிதேமில்லத் அவர்களின் மறைவு சற்று நிலை குலையச் செய்தது. “தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,” என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று வெளி வந்தது. முன்பு, பெரியார்தாசன் / அப்துல்லாஹ் இத்தகைய கட்டுக் கதையை விட்டுப் பார்த்தார், எடுபடவில்லை. புஷ்ரா நல அறக்கட்டளையும் 2013ல் முயன்றது, யாரும் கண்டு கொள்ளவில்லை.

பெரியார் துலுக்கர் ஆனாரா?- முகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[8]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்[9]. “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார்[10]. இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[11]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[12]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

27-10-2021


[1] இ.டிவி.பாரத், இந்து முன்னணி எதிர்ப்பை மீறிபெரியாரும் இஸ்லாமும்நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு, Published on: Oct 25, 2021, 4:19 PM IST; Updated on: Oct 25, 2021, 5:16 PM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/etv-bharat-story-impact-nellai-ms-university-approved-periyarum-islamum-program/tamil-nadu20211025161918390

[3] இ.டிவி.பாரத், மனோன்மணியம் பல்கலைக்கழகமே முதுகெலும்புடன் செயல்படு! – சு.. உதயகுமார், Published on: Oct 24, 2021, 10:58 PM IST; Updated on: Oct 24, 2021, 11:07 PM IST

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/periyarum-islamum-function-to-be-hold-by-nellai-manonmaniam-university/tamil-nadu20211024225831363

[5] மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன் இந்து முன்னணி போராட்டம், By M.Ganapathi, Reporter 27 Oct 2021 1:51 PM

[6] https://www.instanews.city/tamil-nadu/tirunelveli/tirunelveli/manonmaniyam-sundaranagar-university-hindu-munnani-protest-1060843

[7] மணிச்சுடர், தந்தை பெரியாரின் தம்பி காயிதே மில்லத், பிப்ரவரி 6, 2021, பக்கம்.4

[8] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[9] வேதபிரகாஷ், நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!, 02-04-2016.

[10]  https://dravidianatheism.wordpress.com/2016/04/02/converting-periyar-to-islam-falsification-of-recent-history-by-muslims/

[11]  https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[12] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

பாரம்பரிய தீர்த்த யாத்திரை பாதையில் பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! (1)

செப்ரெம்பர் 22, 2021

பாரம்பரிய தீர்த்த யாத்திரை பாதையில் பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! (1)

தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பெயரில் வளாகம் அமைக்க அனுமதி: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தந்தை பெரியாரின் 95 அடி உயர் சிலை வைக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்[1].  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி 30-08-2021 அன்று சந்தித்தார்[2]. அப்போது, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூர் கிராமத்தில் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் ஆகியவை அமைக்க அனுமதி வழங்கி ஆணைப் பிறப்பித்ததற்கு பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, திராவிடர் கழக பொதுச்செயலாளர் அன்புராஜ்[3], துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பெரியார் சிலை வளாகமா, ஹைவே ரெஸ்டாரென்டா?: அதன்படி  திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க உள்ளதாக பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர். இங்கு 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க இருப்பதாக திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை அறிவித்துள்ளது. அங்கு 40 அடி உயர பீடத்தில் 95 அடி உயரம் கொண்டுள்ள தந்தை பெரியாரின் வெண்கல சிலை ஒன்று அமைய உள்ளது. 133 அடி உயரத்தில் அமையும் உலகின் மிக உயரமான பெரியார் சிலையாக இது அமைகிறது. 135 அடி என்று பிறகு சொல்லப் பட்டது[4]. அதாவது வள்ளுவர் சிலையை விட உயரமாக இருக்க வேண்டும் என்ற திட்டம் போலிருக்கிறது[5]. ஏற்கெனவே ஈவேராவுக்கு திருவள்ளுவர், திருக்குறள் மீதெல்லாம் அபாரமான விருப்பம் இருந்ததனால், நன்றாக வைது, வசை பாடி, திட்டியுள்ளது தெரிந்த விசயமான நிலையில், இப்படியொரு ஆசை, நாத்திகவாதிகளுக்கு! ஒரு துலுக்கர் திருக்குறள் மோசடி வியாபாரம் செய்து மாட்டிக் கொண்டதும், இப்பொழுது தான் செய்தியாக வந்துள்ளது[6].

பெரியார் உலகம்சுற்றுலா தலம்வளாகம் என்று வேறு விளக்கம்: இங்கு பெரியாரின் வரலாற்றை விளக்கும் ஒளி – ஒலி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், மெழுகு சிலை அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மிகப்பெரிய பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியார் படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம் ஆகியவனவும் அங்கு அமைக்கப்பட உள்ளன. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது[7]. இது தான் உண்மையே தவிர பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாக உள்ளதாக உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வதை தோழர்கள், பற்றாளர்கள் சமூக வைதளங்களில் வெளிப்படுத்துவீர் என  திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை தலைமை அறிவித்துள்ளது[8].  இதை ஈரோட்டில் அமைக்காமல், இங்கு அமைக்க வேண்டிய மர்மம் என்ன என்றும் ஆராய வேண்டியுள்ளது.

2018 முதல் 2021 வரை அனுமதி கிடைக்கவில்லையாம், ஸ்டாலின் வந்ததும் கிடைத்து விட்டதாம்: கலி. பூங்குன்றன் “இந்த வளாகம் அமைப்பதற்கான மத்திய அரசின் அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில், மாநில அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்தபோது, அதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்படவில்லை……..இப்போது மு.. ஸ்டாலின் முதல்வரான பிறகு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது[9]. இப்போது பெரியார் பிறந்து 143 ஆண்டுகளாகின்றன. 150 ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். முதல்கட்டமாக சிலையின் பணிகள் முடிவடையும். பிறகு படிப்படியாக அடுத்தடுத்த பணிகள் நடக்கும்,” என்கிறார்[10].  மூன்றாண்டுகளில் கிடைக்காதது, ஸ்டாலின் வந்தவுடன் கிடைத்து விட்டது என்றால், மத்திய அரசுடன், திமுக அல்லது திக என்ன பேரம் பேசியது, என்ன விவகாரம் என்பதனை வெளியில் சொல்வார்களா? பிஜேபிக்கும்-திமுகவிற்கும் ஏதாவது ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா? ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ரூ 100 கோடி செலவு யார் செய்யப் போகிறது?: இந்நிலையில், பெரியாருக்கு 95 அடி உயர சிலையை அரசு அமைக்கப்போவதாக பா.ஜ.க – நாம் தமிழர் பொய் செய்திகளை பரப்பினர்[11]. உண்மையான விவரங்களை வெளிப்படையாக அறிவித்திருந்தால், யாரும் ஒன்றும் கேட்டிருக்க மாட்டார்கள். “பெரியாருக்கு சிலை,” என்பதே முரண்பாடு என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்நிலையில் 95 அடி உயரம், 135 அடி உயரம், 135 அடி உயரம் என்றெல்லாம் செய்திகள் வருவது வேடிக்கையாக இருக்கிறது. மொத்த வளகத்திற்கு ஆகும் செலவு ரூ.100 கோடி என்று வீரமணி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மை இவ்வாறு இருக்க பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாகிறது என்று உண்மைக்கு மாறாகப் பிரச்சாரம் செய்வதை – கழகத் தோழர்கள், பற்றாளர்கள் சமூகவலை தளங்களில் வெளிப்படுத்துவீர்!” எனத் தெரிவித்துள்ளனர்[12]. சிலைக்கு ரூ 100 கோடிகளா அல்லது மொத்த வளாகத்திற்கான செலவு மதிப்பீடா என்பதெல்லாம் சரி, இதை யார் செலவு செய்யப் போகிறாற்கள்? தமிழக அரசு எத்தகைக் கொடுக்கிறது, பெரியார் டிரஸ்ட் எவ்வளவு செலவு செய்யப் போகிறது அல்லது புதியதாக ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பனி ஆரம்பிக்கப் போகிறார்களா? இவ்விவரங்களை வெளிப்படையாக சொல்லப் படவில்லை.

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை – பிஜேபி முன்னாள் மத்திய அமைச்சர் கூறியது (09-09-2021): நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்[13]. அப்போது அவர் கூறுகையில்[14], “…..பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துகளை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும்………” ஆக பிஜேபியின் ஆதரவும் கிடைத்து விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் முதல் பிஜேபி வரை பல தலைவர்கள் (வைத்யா, வானதி, குஷ்பு முதலியோர்) பெரியார், பெரியாரித்துவம், பெரியாரிஸம், பெரியாரின் சித்தாதம், சிலை என்று எல்லாவற்றிற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வணிக ரீதியில் செயல்படப் போகின்ற “பெரியார் உலகம்” திட்டத்தைப் புரிந்து கொண்டு பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. ஒருவேளை, பிஜேபி-திமுக கூட்டணி 2023ல் உருவாகும் என்ற கோணத்தில் ஒப்புக் கொண்டாரா என்றும் புரியவில்லை.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] தினகரன், பெரியாரின் 95 அடி உயர சிலை வைக்க அனுமதி: முதல்வருக்கு கி.வீரமணி நன்றி, ஆகஸ்ட் 31, 2021.

[2] https://m.dinakaran.com/article/News_Detail/701592/amp

[3] கே. வீரமணியின் மகன், இப்பொழுது பெரியார் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரி, வீரமணிக்குப் பிறகு பதவிக்கு வரத் தயாராக இருக்கும் இளவரசர், “பெரியாரின் வாரிசு” என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ் வள்ளுவர் சிலையை விட 2 அடி கூடுதல் உயரத்தில் பெரியார் சிலை.. காரணம் இதுதானா..?, Ezhilarasan Babu, Chennai, First Published Sep 9, 2021, 10:38 AM IST, Last Updated Sep 9, 2021, 10:38 AM IST.

[5] https://tamil.asianetnews.com/politics/periyar-statue-is-2-feet-higher-than-valluvar-statue-is-this-the-reason–qz5iaa

[6]  திராவிட, திராவிடத்துவ ஆட்சியில், திருக்குறள், திருவள்ளுவர் என்றும் வைத்துக் கொண்டு, நன்றாக அரசியல் செய்யலாம், வியாபாரமும் செய்யலாம்.

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், 133 அடி உயரத்தில் பெரியார் வெங்கல சிலை… 27 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவாகும் பெரியார் உலகம்.. எங்கு தெரியுமா?, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Sep 8, 2021, 1:24 PM IST, Last Updated Sep 8, 2021, 1:24 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/periyar-bronze-statue-at-a-height-of-133-feet-the-world-of-periyar-is-huge-on-27-acres-do-you-know-where–qz3vay

[9] பிபிசி தமிழ், பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு? உண்மை என்ன? #FactCheck, முரளிதரன் காசி விஸ்வநாதன், 7 செப்டெம்பர் 2021

[10] https://www.bbc.com/tamil/india-58476523

[11] கலைஞர்.செய்தி, ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? – உண்மை என்ன?”: பா..சீமான் வகையறாக்களுக்கு திராவிடர் கழகம் பதிலடி!, Prem Kumar, Updated on : 8 September 2021, 10:37 AM.

[12] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/08/dravidar-kazhagam-explains-what-is-the-truth-about-rs-100-crore-periyar-statue

[13] NEWS18 TAMIL, பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்,  LAST UPDATED: SEPTEMBER 10, 2021, 13:34 IST.

[14] https://tamil.news18.com/amp/news/tamil-nadu/there-is-nothing-wrong-with-placing-a-statue-of-periyar-ponradhakrishnan-ekr-556987.html

கிறிஸ்தவ மேடைக்குப் பிறகு, துலுக்க மேடை – முகமது இஸ்மாயில்-கருணாநிதி கூட்டு, ஜின்னா-ஈவேரா கூட்டுப் போன்றதே – ஸ்டாலினின் துர்பிரசாரம், ஆன்மீக எதிர்ப்பு மற்றும் இந்து தூஷணம் தொடர்கிறது (2)

ஜனவரி 8, 2021

கிறிஸ்தவ மேடைக்குப் பிறகு, துலுக்க மேடைமுகமது இஸ்மாயில்-கருணாநிதி கூட்டு, ஜின்னா-ஈவேரா கூட்டுப் போன்றதே – ஸ்டாலினின் துர்பிரசாரம், ஆன்மீக எதிர்ப்பு மற்றும் இந்து தூஷணம் தொடர்கிறது (2)

திமுக, கருணாநிதி, முரசொலி இவற்றிற்கு உதவியவர்கள் முஸ்லிம்கள்[1]: தலைவர் கலைஞர் அவர்களே அடிக்கடி சொல்வார்கள்: நான் சிறு வயது இளைஞனாக இருந்தபோது ஒரு கையில் குடி அரசு இதழையும் இன்னொரு கையில் தாருல் இஸ்லாம் இதழையும் வைத்துக் கொண்டு திருவாரூரில் வலம் வந்தேன்,” என்று குறிப்பிடுவார்கள்.

 1. தந்தை பெரியாரைப் போலவே, என்னுள் சிந்தனை மாற்றம் ஏற்படுத்தியவர்களில் பா. தாவூத் ஷாவுக்கும் பங்குண்டு என்று கலைஞரே சொல்லி இருக்கிறார்கள்.
 2. பேரறிஞர் அண்ணா அவர்களையும் தலைவர் கலைஞர் அவர்களையும் இணைக்க, பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாயம் தான். திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாவுக்குப் பேச வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்த ஊரில் கருணாநிதி என்றால் யார்? அவரை அழைத்து வாருங்கள்’என்று சொல்லி அழைத்துள்ளார். இருவரும் முதன்முதலாக சந்திக்கக் காரணமாக இருந்தது மிலாதுநபி விழா தான்!
 3. பள்ளிக் காலத்தில் கலைஞருக்கு உற்ற தோழனாய் இருந்து உதவி செய்தவர் அசன் அப்துல் காதர்!
 4. கையெழுத்து இதழாக இருந்த முரசொலியை அச்சில் வெளியிடக் கலைஞர் திட்டமிட்டபோது அதனை அச்சிட்டுக் கொடுத்தவர் கருணை ஜமால்!
 5. உள்ளூரில் எழுதிக் கொண்டு இருந்த கலைஞரை சேலம் மார்டன் தியேட்டர்ஸூக்கு அழைத்துச் சென்று மாபெரும் கதை வசன கர்த்தாவாக ஆக அடித்தளம் இட்டவர் கவிஞர் காமு ஷெரீப்!
 6. கலைஞர் என்ற ஒரு தலைவரை தனது காந்தக் குரலால் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர் இசை முரசு நாகூர் அனீபா அவர்கள்!

இப்படி பட்டியல் இட்டு, எவ்வாறு, முஸ்லிம்கள் திமுக, அண்ணாதுரை, கருணாநிதி என்று உதவியவர்கள் துலுக்கர் தான் என்று விவரித்துப் பேசினார். அவ்வாறு, திமுகவுக்கும், அவர்களுக்கு அத்தகையப் பிணைப்பு இருக்கும் போது, திமுகவின் பெயரையும், “துலுக்க முன்னேற்றக் கழகம்,” என்று மாற்றி விடலாம் போலிருக்கிறது.

காயதே மில்லத்துடன் கருணாநிதியின் நெருக்கம்[2]: ஸ்டாலின் தொடர்ந்து பேசியது, “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தலைவர் ஆகியோருடன் இணைத்து கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் படமும் இங்கே வைக்கப்பட்டுள்ளது[3]. ஏன் இப்படி வெளியிட்டுள்ளோம் என்றால்காயிதே மில்லத் அவர்களும் நம்முடைய தலைவர்களுடைய வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டிய மாபெரும் தலைவர்! காயிதேமில்லத் அவர்கள் தன்னுடைய மதத்தை மட்டுமல்ல, இந்திய நாட்டையும், தாய்மொழியாம் தமிழ் மொழியையும் காப்பாற்றத் தொண்டு செய்தவர் ஆவார். …….தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணாவுக்கு அப்போது தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள்! ………”. முகமது இஸ்மாயில், முகமது அலி ஜின்னாவின் நெருங்கிய நண்பர், அவருக்கு இந்தியாவைப் பற்றிய விவரங்களை கொடுத்து உதவியவர். பாகிஸ்தானை ஆதரித்து, இந்தியன் முஸ்லிம் லீகை விடாமல், இந்தியாவில் தொடர்ந்து நடத்தியவர். ஆக அத்தகையோருடன் “தொப்புள் கொடி உறவு,” என்பதை அவர்கள் தான் விவரிக்க வேண்டும்.

1972- காயதே மில்லத்தை நேரில் சென்று பார்த்த கருணாநிதி: ஸ்டாலின் தொடர்ந்து பேசியது, “………………1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் காயிதேமில்லத் அவர்கள் மறைந்தார்கள். அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது என்ற செய்தி கிடைத்தபோது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோவையில் இருந்தார்கள். செய்தி கேள்விப்பட்டதும் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு சென்னை வந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ஸ்டேன்லி மருத்துவமனைக்குச் சென்றார்கள். கேரள சிங்கம் என்று போற்றப்பட்ட முகமது கோயா, அப்துல் சமது, அப்துல் லத்தீப் போன்றவர்கள் அப்போது இருந்தார்கள். ………1947 முதல் 1962 வரை தமிழகத்தில் இசுலாமிய அமைச்சர் இல்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் தான், இசுலாமிய சமூகத்துக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்கள். காங்கிரஸ் ஆட்சி காலம் அது. கடையநல்லூர் அப்துல் மஜீத் அவர்கள் அதன்பிறகு தான் அமைச்சர் ஆக்கப்பட்டார்கள்”.  இத்தகைய, இஸ்லாம் சார்பு, சம்பந்தம் மற்றும் அரசியலையும் மீறிய உறவுகளின் பின்னணி என்னவென்று தெரியவில்லை.

ஸ்டாலின் துலுக்க-திமுக கூட்டு, நெருக்கம், அந்நியோன்யம் ….முதலியவற்றைத் தொடர்ந்து விவரித்தது.
முகமது இஸ்மாயில், தொடர்ந்து திமுகவை ஆதரித்தது, திராவிடப் பிவினைவாதக் கொள்கையினால் தான்.

திமுக, கருணாநிதி, முஸ்லிம்களுக்காகச் செய்தது என்று ஸ்டாலின் பட்டியல் இட்டது[4]: பிறகு, ஸ்டாலின் எவ்வாறு திமுக, முஸ்லிம்களுக்கு உதவியது என்று பட்டியல்போட்டு, படித்துக் காட்டினார், “எதிர்க்கட்சியாக இருந்தபோதே சிறுபான்மையினர் உரிமைக்கு குரல் கொடுத்த கழகம், ஆட்சி அமைத்த பின்னர் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்தது.

உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

 1. 1989 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 2. 1990 ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 3. 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 4. 2000 ஆம் ஆண்டில் உருது அகாடமி தொடங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
 5. தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகச் செலவுக்காக தமிழக அரசின் சார்பில் நிதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
 6. ஹஜ் மானியத்தை அதிகப்படுத்தியவர் முதலமைச்சர் கலைஞர்!
 7. 2002 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தத் துறையைத் தோற்றுவித்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 8. நபிகள் நாயகம் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 9. சிறுபான்மையின மாணவியர் விமானப் பணிப்பெண் பயிற்சி பெற இலவச வசதிகளைச் செய்து கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 10. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இசுலாமியர்க்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 2007 ஆம் ஆண்டு வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
 11. 2007 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 12. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவர் முதலமைச்சர் கலைஞர்!

இவை சிறுபான்மை இன மக்களுக்காகச் செய்யப்பட்டவை மட்டும் தான். இப்படி ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் கலைஞர்,” என்று முடித்தார். ஆனால், அதே நேரத்தில், பெரும்பான்மையினருக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்லவில்லை, ஏன், மூச்சுக் கூட விடவில்லை. பிறகு, எதற்கு, இந்த /மேடைகள், பேச்சுகள் எல்லாம்?

© வேதபிரகாஷ்

07-01-2021


[1] https://tamil.news18.com/news/politics/tn-assembly-election-2021-mk-stalin-campaign-vjr-390427.html

[2] கலைஞர்.செய்திகள், அரசியலுக்கும் ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்”- மு..ஸ்டாலின் எழுச்சியுரை!, 10:08:07 pm – Jan 06, 2021

[3] https://m.kalaignarseithigal.com/article/m-k-stalin/dmk-chief-mk-stalin-speech-at-dmk-minorities-wing-public-meeting/f2e9759e-148d-4884-adb0-e7862d47494b

[4]  முரசொலி, சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் அச்சுறுத்தலாக இருப்பது பாஜகஅதிமுக, 07-01-2021, பக்கங்கள்.1,4,5.

ஶ்ரீராமநவமி அன்று ராமரை தூஷித்து, தப்லிக் ஜமாத் மர்கஸ் கோஷ்டியை ஆதரிக்கிறது! திராவிட நாத்திகம் துலுக்கரை ஆதரிக்கிறது, இந்துக்களை வெறுக்கிறது!

ஏப்ரல் 2, 2020

ஶ்ரீராமநவமி அன்று ராமரை தூஷித்து, தப்லிக் ஜமாத் மர்கஸ் கோஷ்டியை ஆதரிக்கிறது! திராவிட நாத்திகம் துலுக்கரை ஆதரிக்கிறது, இந்துக்களை வெறுக்கிறது!

Veeramani supporting Tabliq, Viduthalai, 02-04-2020

விடுதலைமூலம், இந்துவிரோதிவீரமணி கக்கும் துவேசம்: டில்லியில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கணிசமான எண்ணிக்கையில் ‘கரோனா’ தொற்று ஏற்பட்டதை மய்யப்படுத்தி, அந்த மதத்தின்மீது வெறுப்பை, காழ்ப்பைத் தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்றும்[1], அப்படி நடந்துகொள்வோரின் நடவடிக்கையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளதாக “விடுதலையில்,” முதல் பக்க செய்தி[2].  பிறகு, இரண்ட்சாம் பக்கத்தில், “ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  ” என்ற தோரணையில் விளித்து, கீழ்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது:

EVR asked idiotic questions, Viduthalai, 02-04-2020

பல லட்சங்களுக்கு முன்னர் இருந்தவைக்கு இப்பொழுது அத்தாட்சிகள் இருக்குமா?[3]: இருபது லட்ச வருடங்களுக்கு முன் இராமன், அயோத்தி இருந்தனவா? இந்த நாள் – கோள் இருந்தனவா? இராவணன் இருந்தானா? பார்ப்பனர்கள் ராமநவமி என்று சொல்லிக் கொண்டு வருடத்திற்கு ஒருநாள், போலி நாளை மக்களிடம் விளம்பரப் படுத்திக் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாட்டம் நடத்துகின்றார்கள். இதை அரசாங்கம் அனுமதிப்பதுடன் அதற்காகச் சில இடங்களில் ஒருநாள் லீவும் கொடுக்கிறார்கள். இராமன் பிறந்தநாள் என்று சொல்லப் படுவது இன்றைக்கு 20 லட்சம் (20,00,000) ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 20 லட்ச வருடத்தில் உலகத்தில் உள்ளது எல்லாம் நாசமடைவதும் – உலகமே மாற்றமடைவதும் போன்ற காரியங்கள் நடந்து இருக்க வேண்டும். அப்போது மனித சமுதாயம் – மனிதன் – காடு மேடு – உலக பூகோளம் – மலை – சமுத்திரம் போன்ற யாவும் அழிவும் – மாற்றமும் அடைந்துவிடும். இது யாவரும் அறிந்ததும் – புராணக் கூற்றும் – சரித்திர உண்மையும் ஆகும். இப்படிப்பட்ட நிலையில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தி என்ற ஒரு ஊரும், தசரதன் என்ற ஒரு அரசனும், அவனுக்கு அநேக பெண்டாட்டிகளும் இருந்தனர்; அவனுக்கு இராமன் என்று ஒரு பிள்ளை பிறந்தான். அதற்கு வருடம் – மாதம் – தேதி – கிழமை – நாள் – கோள் – இன்ன இன்னது என்பதும், அவை மாத்திரம் அல்லாமல் அந்த 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிட நாடு – பாண்டிய நாடு – இலங்கை நாடு என்பவை இருந்தன என்பதும் எப்படி உண்மையாக இருக்க முடியும்? 20 லட்சம் வருடங்களாகக் கோள்கள் மாறாமல் மறையாமல் இருக்க முடியுமா?

The hand bill that was seized -Salem

ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும்[4]: பார்ப்பனர்கள் தங்கள் சுக வாழ்வுக்காக எதையும் சொல்லுவார்கள் – செய்வார்கள் என்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் – விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? என்பதும் நமக்குப் புரியவில்லை. இந்தக் கற்பனைப் புளுகை நமது மாணவர்கள் எப்படி நம்புகிறார்கள்? என்பதும் அதிசயமாக உள்ளது. வடநாட்டில் இராவணனைக் கொளுத்தினார்கள் என்றால், தென்னாட்டில் ஏன் இராமனைக் கொளுத்தக் கூடாது? ஒரு பொய்யான கற்பனைக் கதையில் இருந்து தென்னாட்டு மக்களை அவமானமும், இழிவுபடுத்தலுமான காரியத்தைப் பார்ப்பனரும், வடநாட்டாரும் செய்தால் – அதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புத்தி வரும்படியான காரியத்தை நாம் ஏன் செய்யக் கூடாது? ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், கட்டாயமாகச் சிந்தித்து, நல்ல படி யோசித்து, எனக்காக என்றே அல்லாமல், தங்களுக்குச் சரி என்றும், அவசியம் என்றும் தோன்றினால், இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். நமது (பார்ப்பனரல்லாத) மக்கள் ஆதரவு, பார்ப்பனர்களுக்கு இந்தப்படி யான பித்தலாட்டங்களில் ஏமாறாமலும், நம்மை இழிவுபடுத்தும் இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும்தான் நாம் இராமன் படத்தைக் கொளுத்துவது போன்ற செயல்களில் இறங்க வேண்டும்.

1971 DK procession denigrating Rama.news cutting

ஈவேராவுக்கு அந்த அளவுக்கூத் தான் அறிவு இருந்தது என்று தெரிகிறது: இந்த மாதிரி ஆட்களை பேச விட்டால் தான், அது போன்ற ஆட்களுக்கு, எந்த அளவுக்கு வாதம் புரிய காரணம், தர்க்கத் தன்மை, வாதத் திறமை முதலிய உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கீழ்கண்ட கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

 1. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிடநாடு – பாண்டியநாடு – இலங்கை நாடு இருந்தன என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? கேட்பது ஈவேரா!
 2. இராவணன் இருந்தானா? என்று கேட்ட பிறகு, “இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்,” என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது.
 3. ராமாயணம் கட்டுக்கதை என்றால், அதைப் பற்றி நாத்திகள் கவலைப் படவேண்டும் என்ற அவசியம் இல்லை.
 4. இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் – விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? கேட்பது ஈவேரா!
 5. குமரிக் கண்டம் என்று ஊளையிடும் தமிழர்கள் ஈவேராவை எதிர்ப்பார்களா? கீழடி பற்றி என்ன சொல்வாரோ?
 6. ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும், என்று விடுதலையில் ஈவேரா சொன்னதாக செய்தியைப் போட்டுள்ள வீரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
 7. இந்த அளவுக்கு ஶ்ரீராம நவமி அன்று துவேசத்தை கக்கும் கயவர்கள் ! ராமனைக் கும்பிடும் இந்துத்துவ வாதிகளுக்கு சூடு-சொரணை இல்லையா?
 8. ரஜினி மீது திகவினர் வழக்குப் போட்டார்களே, இப்பொழுது இந்த இந்துவிரோதியின் மீது ரஜினி-ரசிகர்களே போடலாமே?!
 9. கடவுள் நம்பிக்கை இல்லாதவன், கடவுள்-நம்பிக்கைக் கொண்டவர்களை, எப்படி கேள்வி கேட்க முடியும்?இவை இரண்டும் நம்பிக்கை தானே?

o apology Rajini IE

செக்யூலரிஸ நாத்தில், வாதத்தில் செக்யூலரிஸத்திற்கு பதிலாக, இந்துவிரோதம் தான் இருக்கிறது: இப்பொழுது, இந்திய ஊடகங்கள் முழுவதிலும், நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் மாநாடு பற்றிய விவகாரங்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. ‘கரோனா’வில் மதச் சாயத்தை பூசவேண்டாம்! மாச்சரியங்களை மறந்து ஒன்று படவேண்டிய சமயம் இது என்று முதல் பக்கத்தில் வக்காலத்து வாங்கி, அடுத்த பக்கத்தில், இத்தகைய செய்தி ஏன் போட வேண்டும்? பெரியார் மண்ணில் இவ்வளவு நடந்து விட்டதே, அப்பொழுது ஏன் ஒன்றையும் கேட்கவில்லை. இப்பொழுது வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு பக்கத்தில் துலுக்கனுக்கு ஆதரவு, அடுத்த பக்கத்தில் இந்து துவேசம், இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா? இன்னும் மக்கள் முட்டாள்களாகவே இருப்பார்களா? மேலும்-மேலும் ஈவேரா உளறல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால், இனி இருக்கின்ற மரியாதையும் போய் விடும். ஏற்கெனவே, சில பெண்கள் வியாக்கியானம் கொடுத்து, அசிங்கப் பட்டு விட்டனர். ஆகவே, இனி மக்களை ஏமாற்ற முடியாது. இளைஞர்கள் முழித்துக் கொண்டு விட்டார்கள்!

EVR photos of naked Hindy gods 1971 paaraded

நாத்திகமும், கடவுள் நம்பிக்கையும், செக்யூலரிஸமும், ஆன்மீகமும்: உண்மையாக நாத்திகன் “கடவுள் இல்லை” என்றால், எந்த கடவுளும் இல்லை என்று தான் சொல்வான். இந்தியாவில், தமிழகத்தில், “கடவுள் இல்லை” என்றால், ஏதோ இந்துமத கடவுள் மட்டும் தான் இல்லை என்ற நிலையில், நாத்திகம்-கிருத்துவம்-இஸ்லாம்-கம்யூனிஸம் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, இந்துமதத்தை எதிர்த்து, இந்துதுரோகிகளாகிறனர். செக்யூலரிஸம் என்றால், எல்லாமதங்களையும் சரிசாமாக பாவிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில், அதையும் பின்பறுவதில்லை. உண்மையான நாத்திகம் எல்லா மதங்களையும் எதிர்க்க வேண்டும். திராவிட நாத்திகம், இந்துதுவேச நாத்திகத்தில் முடிகிறது. கருத்துருவாக்கம், எண்ணங்கள், அவற்றில் தோன்றி பேச்சுகள்-எழுத்துகள் என்றாக வெளிப்படும் போது, அவை, இந்து விரோதமாகவே இருக்கிறன. தெரிந்தும், தொடர்ந்து நடக்கும் போது, அது போலித்தனமாக செயல்பட்டு வருவதை அறிய நேர்கிறது.

©  வேதபிரகாஷ்

02-04-2020

15-02-1971 Thuglak issue-reconstructe d

[1] விடுதலை, மாச்சரியங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் இது! ‘கரோனாவில் மதச் சாயத்தை பூசவேண்டாம்!, வியாழன், 02 ஏப்ரல் 2020 13:37

[2] http://www.viduthalai.in/headline/197907-2020-04-02-08-14-36.html.

[3] விடுதலை, ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  வியாழன், 02 ஏப்ரல் 2020 14:510, பக்கம்.2, . http://www.viduthalai.in/e-paper/197917.html

[4] விடுதலை, ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  வியாழன், 02 ஏப்ரல் 2020 14:510 . http://www.viduthalai.in/e-paper/197917.html

இந்து-விரோத நாத்திக வீரமணியின் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது! மலேசிய இந்துக்களின் வெற்றி!! இது ஒரு பாடமாக அமைய வேண்டும்!!!! [1]

நவம்பர் 24, 2019

இந்துவிரோத நாத்திக வீரமணியின் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது! மலேசிய இந்துக்களின் வெற்றி!! இது ஒரு பாடமாக அமைய வேண்டும்!!!! [1]

Veeramani, Malaysia programme cancelled-3

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலேசியாவில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது[1]: மலேசிய இந்து மத ஆர்வலர்களும், சில இந்து அமைப்புகளும் தெரிவித்த எதிர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுவதால் சலசலப்பு நிலவியது என்றெல்லாம் பிபிசி ஒத்து ஊதியது[2]. மலேசிய இந்திய பாரம்பரியக் குழுவின் ஏற்பாட்டில் நவம்பர் 24ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்த ‘பெரியார்’ திரைப்படத்தை திரையிடுவதாகவும் இருந்தது. திரையிடலுக்கு முன்பாக, ‘பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்’ என்ற தலைப்பில் கி.வீரமணி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது[3]. இந்நிலையில் கி.வீரமணி இந்து மதம் குறித்தும், இந்துக் கடவுள்கள் குறித்தும் கடந்த காலங்களில் மோசமாக விமர்சித்துள்ளார் என்றும், சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடிய அவரை மலேசியாவில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் ஒரு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது[4]. இதையடுத்து எதிர்ப்பாளர்கள் தரப்பு மலேசிய உள்துறை அமைச்சின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றதாகவும், அதையடுத்து கி.வீரமணி பங்கேற்கும் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மலேசிய உள்துறை அமைச்சு அறிவுறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

Malaysian Dravidar Association, anti-hindu

மலேசிய திராவிடர் கழகம்: மலேசிய திராவிடர் கழகம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதன் இணையதளம் மற்றும் முகநூலில் பதிவுகள் காணப்படுகின்றன அவற்றை கவனமாகப் பார்க்கும் பொழுது அவர்கள் இந்துவிரோத மற்றும் முரண்பட்ட போக்கு கடைப் பிடிப்பது தென்படுகிறது. இவர்களால் இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். அவர்களில் பணக்காரர்களாக இருப்பவர்கள் வர்த்தக ரீதியில் தங்களது நிலையை பாதுகாத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். வீரமணி போன்றோர், மலேசியாவுக்கு வந்தால் அவர்களை தங்களது வீடுகளில் தங்க வைத்து பாராட்டி, பொன்னாடை போர்த்தி, அனுப்பி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு அவர்களும் ஒத்துழித்திருக்கலாம். இருப்பினும் நிலவிவரும் மத ரீதியான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அமைதியாகி விட்டனர் என்று தெரிகிறது.

Veeramani, Malaysia programme cancelled-MHS

தமிழ்.ஆதரவு கூட்டங்கள் தைரியமாக காரணத்தை வெளியிட வேண்டும்: இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது, என்ன காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது, எந்தத் தரப்பு இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது, என்பது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பிபிசி தமிழ் விவரம் கேட்டது[5]. மலேசிய – இந்திய பாரம்பரியக் குழுவின் தலைவரான பிரபாகரன் நாயர் கூறுகையில், நிகழ்ச்சியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமலேயே சிலர் கண்மூடித்தனமாக எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார். எனவே, வீண் சர்ச்சைகளைத் தவிர்க்கும் பொருட்டு அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்[6]. பிபிசி.தமிழ் ஒருதலைப் பட்சமாகவே செய்திகள், பேட்டிகள் மற்றும் கட்டுரைகள் வெளியிட்டு வருவதைக் கவனிக்கலாம். பிறகு அத்தகைய பிரச்சாரப் போக்கு, ஊடகக் காரர்களிடமிருந்து உண்மை வெளி வராது. மலேசிய உள்துறை அமைச்சு நிகழ்ச்சியை ரத்து செய்தால், காரணம் மற்றும் அதற்குரிய ஆவணம் இருக்குமே? அழைப்பிதழை வெளியிட்டது போலல், அதையும் வெளியிடலாமே?

Malaysian Hindus condemned Veeramani

மலேசிய நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள், பகுத்தறிவுவாதங்கள் இரட்டை வேடம் போட முடியாது: நிகழ்ச்சியின் நோக்கத்தை இந்துக்கள் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பு தெரிவித்தனர் என்று பிரபாகரன் நாயர் கூறுவதெல்லாம் போலித்தனமாக இருக்கிறது. ஏனெனில் சமீபகாலத்தில் வீரமணி மிக்கவும் அசிங்கமாக, ஆபாசமாக இந்து கடவுளர்களை பற்றி அவதூறாக பேசி வருவது, ஊடகங்களில் தாராளமாகவே வெளிவந்திருக்கின்றன. மேலும் அதே கருத்துகளை மலேசிய திராவிடர் கழகம் செய்து வருகிறது, கீதையின் மறுபக்கம் போன்ற புத்தகங்களை தமது இணையதளத்தில் போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இங்கு தமிழகத்தில் வீரமணி கண்டனை ஆபாசமாக பேசி வருகின்றார் என்ற நிலையில் பார்த்தால், மலேசியாவிலும், இத்தகைய புத்தகத்தை அவர்கள் வாங்கி விற்பது, விளம்பரம் அளிப்பது, அதற்கு துணை போகின்ற முறையைத் தான் வெளிப்படுத்துகிறது. ஆகவே மலேசியாவில் இருக்கின்ற இந்திய பாரம்பரியக் குழு என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லோரும், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நடிக்க முடியாது. ஒன்று இந்துக்கள் என்றால் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டும், ஆனால் அவர்களிடம் ஒற்றுமை இல்லை மாறாக அவர்கள் தமிழகத்தில் இருக்கின்ற இத்தகைய இந்திய விரோத மற்றும் இந்து விரோத சக்திகளுக்கும் துணைபோவதாக தான் அவர்களது பேச்சும் நடவடிக்கைகளும் இருக்கின்றன.

Veeramani, Malaysia programme Invitation

வீரமணியை அழைத்தது ஏன்?: “எதிர்ப்பு தெரிவித்தவர்கள் யாரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான எங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசவில்லை. சமூக வலைத்தளங்கள் மூலம் சிலர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டது என் கவனத்துக்கும் வந்தது.” “இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே பல்வேறு வகையில் நீண்ட கால தொடர்புகள் உள்ளன. இது தொடர்பான ஏராளமான வரலாற்றுப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அத்தகைய தகவல்களைப் பெற வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.” என்கிறார் பிரபாகரன் நாயர். “அதனால் தந்தை பெரியாரின் மலேசியப் பயணமும், அதனூடே மலேசிய வாழ் இந்தியர்களிடம் ஏற்பட்ட தாக்கமும் குறித்து உரையாற்றவே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அழைத்திருந்தோம்.” என்கிறார் அவர். 2012லேயே, வீரமணி இந்து கடவுளர்களை தூஷித்த போது, மலேசிய இந்துக்கள் வெளிப்படையாக கண்டித்தனர்[7]. ஆகவே, 2019ல் எதிர்ப்புத் தெரிவித்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், எந்த இந்துவும் அவ்வாறு பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டான்.

Veeramani, Malaysia programme Invitation-2
பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்என்ற தலைப்பில் கி.வீரமணி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது: “இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவு தொடர்பில் வரலாற்றுப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம். அதனால்தான் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கி.வீரமணி மலேசியா வருவதை அறிந்து, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்.” “தவிர, கி.வீரமணி குடும்பத்தாருக்கும் மலேசியாவுக்கும் நல்ல தொடர்புகள் உண்டு. எனவே தந்தை பெரியாரின் வருகை குறித்து அவர் கூடுதல் தகவல்களை அறிந்திருப்பார். எங்களது நிகழ்ச்சிக்கும் மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆனால், சிலர் எங்களுடைய நோக்கத்தை அறியாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் தரப்பு விளக்கத்தை அவர்கள் கேட்கவே இல்லை,” என்று பிரபாகரன் நாயர் தெரிவித்தார். ‘பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்,’ வீரமணி ஒன்றும் உண்மை சொல்லப் போவதில்லை. ஏற்கெனவே, எஸ். ராமநாதனை ஈவேரா “அம்போ” என்று விட்டு-விட்டு ஓடி விட்டார். அந்த கதையினை, வீரமணி சொல்ல மாட்டார். பிறகு, எதற்காக இந்த கூட்டம், சினிமா எல்லாம். அவரவர் வீட்டில் டிவிடியில் பார்ப்பதற்கு முடியாத ஏழைகளா மலேசிய தமிழர்கள்!

© வேதபிரகாஷ்

24-11-2019.

K. Veeramani - anti-MAPOSI article

[1] பிபிசி.தமிழ், இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து, 22 நவம்பர் 2019.

[2] https://www.bbc.com/tamil/global-50516687

[3] தமிழ்.சமயம்.காம், மலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ரத்துஇதுதான் காரணமாம்!!, Updated:Nov 22, 2019, 11:57PM IST.

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/dravidar-kazhagam-president-k-veeramanis-function-cancelled-in-malaysia/articleshow/72191024.cms

[5] இந்தியன்.எக்ஸ்பிரஸ்.தமிழ், இந்து அமைப்புகள் எதிர்ப்பு: கி.வீரமணி மலேசியா நிகழ்ச்சி ரத்து?, WebDesk, November 21, 2019 06:43:25 pm

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/k-veeramani-malaysia-event-hindu-organisations-opposes/

https://dhinasari.com/politics/118266-malaysian-hindus-oppose-invite-to-dravidar-kazhagam-leader-who-has-disparaged-hindu-gods-for-an-event-organised-by-the-indian-high-commission-event-is-now-cancelled.html

[7] Indian MalaysianOnline, Veeramani stirred a commotion, The Traveler, Tuesday, April 17, 2012.

Malaysian Hindu Sangam quickly jumped into the fray to condemn Veeramani for denigrating the Hindus and applauded Rajendran as a ‘Tamilan with dignity’ for speaking-up bravely. Some others also joined to criticize Veeramani. http://indianmalaysian.com/2012/veeramani.html

கருணாநிதிக்கு ஈமச்சடங்கு நடத்தப் படவில்லை, துர்கா காசிக்கு சென்றது ரூ.இரண்டு லட்சம் பனாரஸ் புடவை வாங்கத்தான்! சொந்தக்கார நாளிதழ் “தி.இந்து” கொடுக்கும் விளக்கம் [3]

திசெம்பர் 30, 2018

கருணாநிதிக்கு ஈமச்சடங்கு நடத்தப் படவில்லை, துர்கா காசிக்கு சென்றது ரூ.இரண்டு லட்சம் பனாரஸ் புடவை வாங்கத்தான்! சொந்தக்கார நாளிதழ்தி.இந்துகொடுக்கும் விளக்கம் [3]

Durga sojourn to Kasi , boat

ஸ்டாலின் அநாகரிகமும், யோகி ஆதித்யநாத்தின் பெருந்தன்மையும்: ஸ்டாலின் மனைவி துர்கா காசி வருகை பற்றி அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் துர்காவுக்கும், அவர் குழுவினருக்கும் தேவையான வசதிகளை செய்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிததார். ஆங்கிலமோ இந்தியோ தெரியாத துர்காவுக்கு உதவ தமிழ் தெரிந்தரொரு இளம் ஐஏஎஸ் அதிகாரியை முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமித்ததாகவும் கூறுகிறார்கள். சரி, இதையெல்லாம் அந்த ஸ்டாலின் நினைத்துப் பார்த்தாரா? பதிலுக்கு என்ன செய்தார்? ஊடகங்கள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லக் காணோம். “முரசொலியில்” ஏதாவது வருமா என்று பார்க்க வேண்டும்ம். அந்த வீரமணியும், ஒன்றையும் சொல்லக் காணோம். இனி “விடுதலையில்” யாதாவது வருமா என்று பார்ப்போம்.

Durga sojourn to Kasi , thithi given for KARU-crticism

இது தவறில்லை: திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா காசி சென்று திரும்பிய படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதைப் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் செய்து வருகின்றனர். அதே நேரம் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர் அதில் இந்த விஷயத்தில் துர்காவை விமர்சிக்க தேவையில்லை. அவர் எப்போதுமே தெய்வ நம்பிக்கை உள்ளவராக இருக்கிறார். தன்னை நாத்திகர் என்றோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று ஒரு நாளும் சொன்னதில்லை. திமுகவில் இப்போது 90 சதவீதம் பேர் ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

Durga sojourn to Kasi , riksha

துர்காவின் ரிக்ஷா நகர்வலம்: துர்கா ரிக்ஷாவில் பயணம் மேற்கொண்டு காசியில் சுற்றி வந்திருக்கிறார், இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. அதேபோல படகில் செல்வது, சாமியாருடன் பேசுவது, மடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன “ஆன்மா சாந்தி அடைய இல்லை,” என்ற தலைப்புகளில் வெளியான செய்தி திருச்சி பதிப்பில் வந்துள்ளது[1]. டிசம்பர் 29 2018 என்ற செய்துவிட்டு நான்காம் பக்கத்தில் புகைப்படங்களுடன் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது இருந்தாலும் மற்ற பிரதிகளில் காணப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. ஆங்கில ஊடகங்களில் ஒன்றையும் காணவில்லை. துப்பறியும் ஜார்னலிஸம் இங்கு வேலை செய்யவில்லை போலும்!

Durga sojourn to Kasi , taking food at mutt

காசியும், பெரியாரும், பிண்டமும், கிரியைகளும்: ஈவேரா கிண்டலாக எழுதியது:

சுயமரியாதைக்காரன்:- சுயமரியாதை இயக்கத்திற்கும் தாங்கள் காசிக் குப் போவதற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லையே?

புராண மரியாதைக்காரன்:- என்ன சம்பந்தம் என்றா கேட்கின்றீர்கள்? நானோ வயது முதிர்ந்த கிழவன். ஒரு வேளை திடீர் என்று செத்துப்போய் விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னுடைய பிள்ளைகள் எனக்கு கர்மம் செய்வார்களா? திதி செய்வார்களா? …. எள்ளுந் தண்ணீர் இறைப்பார்களா? பிண்டம் போடுவார்களா? நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். இந்த நாசமாய்ப் போன சுயமரியாதைக் காரர்களால் எவ்வளவு தொல்லை?

சுயமரியாதைக்காரன்:- சரி. அதைப் பற்றி பிறகு பேசுவோம். அதற்காக நீங்கள் காசிக்கேனையா போகின்றீர்கள்? என்றால் அதற்கு ஒன்றும் பதில் இல்லாமல் சும்மா சுயமரியாதைக்காரரையே வைகின்றீர்களே?

புராண மரியாதைக்காரன்:-  சொல்லுகிறேன் கேளுங் கள். முதலாவது காசியில் செத்தால், திதி பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் பிண்டம் போட்டாலும் போடாவிட்டாலும் மோட்சம் கிடைக்கும். இரண்டாவது அதில் ஏதாவது கொஞ்ச நஞ்சம் சந்தேகமிருந்தாலும் கயாவுக்குப் போய் நமக்கு நாமே பிண்டம் போட்டுக் கொண்டு விட்டால் பிறகு எவனுடைய தயவும் நமக்கு வேண்டியதில்லை. ஆதலால் இப்போது நேரே கயாவுக்குப் போய் எனக்கே நான் பிண்டம் போட்டு விட்டுப் பிறகு காசிக்குப் போய் சாகப் போகின்றேன். அப்போது இந்த சுயமரியாதைகள் என்ன பண்ணுமோ பார்ப்போம்”.

எப்படியோ, துர்கா செய்து முடித்து விட்டார்! இருப்பினும், 3012-2018 அன்று, தி.இந்து, “இங்கு துர்கா எந்த சடங்கும் செய்யவில்லை,” என்று செய்தி போட்டுள்ளது!

Tamilnadu with soul - Karu

தமிழ்.இந்துவின் வக்காலத்து சிரிப்பாக இருக்கிறது: “தமிழ்.இந்துவை” நம்புவதானால், “தினமலர்” சொல்வது பொய் என்றாகிறது, பிறகு, மற்ற நாளிதழ்களும் பொய் என்றாகிறது. பத்து நாளிதழ்கள் பத்துவிதமான செய்திகளை வெளியிட்டால், வாசகர்கள் எதை நம்புவது? பிறகு, எதற்காக காசு கொடுத்து, அவற்றைப் படிக்க துர்கா ஸ்டாலின் காசிக்குச் சென்றது உண்மை, மடங்களுக்கு சென்றது உண்மை, அங்கு [மடங்களில்] உணவு உண்டது உண்மை, மடத்தில் புரோகிதகளுடன் பேசியதும் உண்மை, ஆனால், பிண்டம் வைக்கவில்லை என்றால், அதனை அவரிடமே கேட்டு உறுதியாக செய்தியை வெளியிட்டிருக்கலாமே?  அங்கு ஈமம் இல்லாதலால், ஈமசடங்கு செய்ய முடியாது என்பது தெரிந்த விசயம் தானே? அதாவது உடல் சென்னை மெரினாவில் புதைக்கப் பட்டு விட்டது. எரிக்கப்படவில்லை. எரித்திருந்தால், சாம்பல் / அஸ்தி வந்திருக்கும், பிறகு சடங்கை அங்கு / காசியில் செய்திருக்கலாம். பிறகென்ன, “இங்கு துர்கா எந்த சடங்கும் செய்யவில்லை,” என்று எதையோ கண்டு பிடித்து சொல்வது மாதிரி செய்தி போடுவது?

Durga sojourn to Kasi 29-12-2018 DM

ஊடக ஊழல், கருத்து மறப்பு, உண்மை மறுப்பு முதலியன: இன்றைய நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கின்ற காலத்திலேயே, ஊடகங்கள் துர்கா காசிக்கு சென்று வந்த நிகழ்ச்சியை பலவிதமாக செய்திகளை வெளியிட்டதை கவனிக்கவும். ஆங்கில ஊடகங்கள் மொத்தமாக மௌனமாக இருக்கின்றன. சுமார் ஒரு வாரம் கழித்து “தி.இந்து” குழுமத்தின் தமிழ் நாளிதழ் துர்கா வாரணாசிக்கு சென்றதும் மடங்களுக்கு சென்றதும், அதில் உணவு உண்டதும், பட்டுப்புடவையை வாங்கியதும், படகுகளில் சவாரி செய்தும் எல்லாமே உண்மை என்று சொல்லிவிட்டு ஈமச்சடங்குகள் எதுவும் செய்யவில்லை என்று செய்தி வெளியிட்டு இருப்பது நோக்கத்தக்கது தி இந்து குழுமம் இப்பொழுது கருணாநிதி குடும்பத்துடன் உறவினர் ஆகி விட்டதால், அவர்களை மீறி செய்திகள் வராது போலும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட நாத்திகம், அதிலும் இந்து மத எதிர்ப்பு மறுப்பு கொள்கை கொண்ட பகுத்தறிவுவாதம், சித்தாந்தத்தில் வந்தவர் என்று இருப்பவர் மற்றும் அவர்களுக்கு துணை போகும் தொழிலதிபர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு இத்தகைய பாரபட்ச போக்கு உண்மையை மறைக்கும் தங்களது ஊடக சாம்ராஜ்யம் மூலம் தகவல்களை மறைக்கும் வேலையை நோக்கும் பொழுது மிகவும் அச்சமாகவே இருக்கின்றது. ஈவேரா பெரியார் பேசியது, எழுதியது பற்றிய உண்மையான தகவல்கள் இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைப்பதில்லை. திராவிட சுயமரியாதை பிரச்சார கழகம் வெளியிட்டுள்ள குறும்புத்தகங்கள், தொகுப்புகள் தவிர, கையெழுத்துப் பிரதிகள் அதாவது மூல Manuscrpts கயெழுத்துப் பிரதிகள் / ஆவணங்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு கிடைப்பதில்லை. குடியரசு நாழ்தழ்கள் மட்டும் கிடைக்கின்றன. அதாவது 1940-1973 காலத்தைச் சேர்ந்த விவரங்கள் கூட மறைக்கப்படுன்றன. கடந்தகால நிகழ்ச்சிகளை மறந்து மக்கள் மறந்து விடுவர் என்ற தைரியத்தில் உள்ளனர். இதனை ஊடக ஊழல் எனலாம்.

DNK Cadre take oath in the name of KARU Soul

இதை எழுதி முடிக்கும் நேர்த்தில்தி.இந்துஇதையும் சேர்த்துள்ளது[2]: 13:14 ISTக்கு, “தி இந்து” அப்டேட் செய்தது:

மடத்துடன சம்பந்தம்: வாரணாசியில் உள்ள திருக்கோவிலூர் மடம் மற்றும் ஸ்ரீகுமாரசாமி மடத்திற்கும் துர்கா சென்றுள்ளார். இவ்விரு மடங்களும் தமிழகத்தைச் சேர்ந்தவை. குமாரசாமி மடத்துடன் துர்காவின் மாமனார் குடும்பத்திற்கு சம்பந்தம் உள்ளது.

மாமனாரின் தந்தை பணியாற்றிய மடம்: திருவாரூரில் உள்ள தட்சணாமூர்த்தி மடத்தில் கருணாநிதியின் தந்தை பணியாற்றி இருந்தார். இது, திருக்குவளையின் தர்மபுரம் ஆதீனம் மடத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த ஆதீனம் மடத்தார், தன் கிளை மடமாகக் கருதி குமாரசாமி மடத்தின் மடாதிபதிகளாக வருபவர்களுக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

30-12-2018

இந்த மூஞ்சிகளுக்கு தேவைப்பட்டதோ

[1] தினமலர், கருணாநிதி ஆன்மா சாந்தியடையலே, திருச்சி, 29-12-2018, பக்கம்.4

[2] https://tamil.thehindu.com/india/article25863478.ece?fbclid=IwAR305Pjus7wYCe-Ic_v1T-llL2R20opSxQ-8Rlc2lhp_crL2NUcHg-quEJ4

துர்கா ஸ்டாலின் காசிக்குச் சென்றது கருணாநிதி ஆத்மா சாந்தியடைய காசியில் பிண்ட-பிரதானம் கொடுக்கவா, அரசியலா, ஆன்மீகமா, உல்லாச சுற்றுலாவா? [2]

திசெம்பர் 30, 2018

துர்கா ஸ்டாலின் காசிக்குச் சென்றது கருணாநிதி ஆத்மா சாந்தியடைய காசியில் பிண்டபிரதானம் கொடுக்கவா, அரசியலா, ஆன்மீகமா, உல்லாச சுற்றுலாவா? [2]

Durga sojourn to Kasi , at Mutt

துர்கா மற்றும் ஸ்டாலின் காசி சடங்குகளைப் பற்றி விவாதித்தல்: துர்கா, மேலும் காசிக்குச் செல்வது குறித்து ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார் துர்கா. ஏனெனில் இதுபோன்ற சடங்குகளை மகன் தான் உடனிருந்து செய்யவேண்டும். ஆனால் ஸ்டாலின் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கூறவே, ஜோதிடர் “பிராக்ஷி” முறையில் செய்யலாம் என்று பரிகாரத்துடன் வழியை சொன்னார் போலும். ஆகவே, சடங்குகளை தாமாக செய்வதற்காக காசி புறப்பட்டிருக்கிறார் துர்கா. கோவில், கங்கை, படகு – இதை எல்லாம் பார்த்து பிரமித்து போன துர்கா ஸ்டாலின் கடைசியாக, அங்குள்ள பாரதியார் இல்லத்தையும் சுற்றி பார்த்து பிரமித்து நின்றுள்ளார்[1]. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களில் வெற்றி பெற்று வருகிறது. இதனால் ராகுல் மட்டுமல்லாது ஸ்டாலினும் மகிழ்ச்சியாக உள்ளார். இந்த வெற்றி அப்படியே தமக்கு தமிழக சட்டசபை தேர்தலில் கிடைக்கும் என நம்புகிறார். காசிக்கு அதுவும் மோடியின் தொகுதிக்கு துர்காவின் திடீர் விஜயம் குறித்து தகவலறிந்த வட்டாரங்களிடம் விசாரித்தோம்[2]. அப்போது அவர்கள் கூறுகையில் காசிக்கு தனது குடும்பத்தினருடன் செல்வது என்பது துர்காவின் நீண்ட நாள் ஆசை. அதோடு மோடியின் தொகுதிக்கு போய்விட்டு வருமாறு ஜோசியரும் கூறியுள்ளார் என்றனர். அதனால் துர்கா ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கும் விதமாக காசி விஸ்வநாதரை தரிசனம் செய்துள்ளார்[3].

Durga sojourn to Kasi , at Kumaraswamy Mutt

மோடிக்கு எதிராக மு..ஸ்டாலின், மோடியின் தொகுதியில் துர்கா ஸ்டாலின்[4]: 26-12-2018 அன்று, கரூரில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் பிரமாண்டமான விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக பேசும் நிலையில்,  இந்துக்களின் புண்ணிய ஸ்தலமான காசியில் முகாமிட்டிருக்கிறார் அவரது மனைவி துர்கா[5]. முன்னர் அவர் மோடியை “சாடிஸ்ட்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். உண்மையில் அத்தகைய அநாகரிகமாக பேசியவரின் மனைவி அங்கு வந்த போது, உரிய முறையில் அவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததே, யோகி ஆதித்யநாத் தான்! ஆக, ஸ்டாலின் தான் அவருக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு அடுத்தவரை தூஷிக்க, கண்ட கெட்ட வார்த்தைகளால் வசைப்பாடத் தான் தெரியும் என்பதை, தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருப்பாகள். ஈவேரா வழிவந்த அண்ணா, கருணாநிதி போல, அப்பனுக்கு தப்பாமல், இந்த பிள்ளை வைசைப் பாட் இருப்பதில் வியப்பில்லை.

Tamil Hindu, slightly differing 30-12-2018

தி.இந்து சிறிது மாறுபடுகிறதுஉபி அரசு பாதுகாப்பு ஏற்பாடு செய்தது, முதல்வர் செய்யவில்லை!: மேலும், “துர்கா வருகையை அறிந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை செய்யுமாறு உத்தரவிட்டார். தமிழ் தெரிந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியையும் நியமித்தார்” என்றும் தகவல் வெளியானது[6]. இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் வாரணாசியில் விசாரித்ததில் சில உண்மை கள் தெரியவந்தன. துர்கா ஸ்டாலின் கடந்த 19-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் இருந்து வாரணாசிக்கு விமானத்தில் சென்றார். வெளிமாநிலத்தில் இருந்து வாரணாசிக்கு செல்லும் முக்கிய அரசியல்வாதிகளுக்கு உ.பி. அரசு சார்பில் பாதுகாப்பு வசதிகள் செய்வது வழக்கம். அதன்படி தமிழக முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி என்பதால் துர்காவுக்கு பாதுகாப்பாக 2 போலீஸார் பணி அமர்த்தப்பட்டனர். இதற்காக, சென்னையில் இருந்து வாரணாசி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல்வரால் பாதுகாப்பு வழங்கப்பட்டது என கூறுவதில் உண்மை இல்லை[7].

Durga praying at Pamban Swamigal Mutt-full

மனைவிதுணைவிகளின் பக்தி மார்க்கமும், மறுமகளின் காசி விஜயமும்: புருஷனின் வசைபாடல் அப்படியிருக்க, மனைவி துர்கா கோவிலுக்கு செல்வது இது முதல் முறை அல்ல தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்துவது அவரது வழக்கம். குறிப்பாக பவுர்ணமி. அமாவாசை நாட்களில் கோவில்களில் விசேஷ பூஜைகள் பரிகாரங்கள் யாகங்கள் நடத்தி வந்தார். கருணாநிதி நாத்திகம் பேசினாலும் கடவுள் மறுப்பாளர் என்று கூறிக் கொண்டாலும், அவர் மனைவி தயாளு ராஜாத்தி ஆகியோரின் ஆரிய ஆன்மீகத்தை அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. கோபாலபுரத்தில் இருக்கும் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல கருணநிதி துணைவி ராஜாத்தி தீவிரமான சாய்பாபா பக்தை. வாரம்தோறும் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கும் செல்வார். ஸ்டாலின் மனைவி துர்கா தீவிர பக்தை தான். நெற்றியில் குங்குமம், விபூதி இல்லாமல் வெளியே வரமாட்டார். நிலையில்தான் துர்கா காசிக்கு சென்றிருக்கிறார், என்றெல்லாம் ஊடகங்கள் வரிந்து தள்ளின.

Durga sojourn to Kasi , boat journey

நாத்திக, இந்துவிரோதிக்கு தர்ம சாத்திரம் படி பரிகாரம், பிண்டம் இத்யாதி: காசியில் இறந்து போன தம் குடும்பத்து மூத்தோர்க்கு தர்ம சாத்திரம் கூறும் சடங்குகளை அவர் செய்து விட்டு வந்திருக்கிகிறார். துர்காவைப் பொறுத்த வரை, ஜோதிடர் சொல்படி நடப்பவர். ஜோதிடர் சொல்லித்தான் அவர் காசி சென்று வந்திருக்கிறார். கருணாநிதி மரணம் இயற்கையானது தான். ஆனாலும், இரண்டு ஆண்டுகள் படுக்கையில் இருந்தார். அவரின் நிறைவேறாத ஆசைகள் இருப்பதாக சொல்கிறார்கள் இதுபற்றி துர்கா ஜோதிடரிடம் கேட்டபோது சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதன் அடிப்படையிலேயே அவரின் ஆத்மா சாந்தி அடைவதற்கான பரிகாரங்களை காசிக்குச் சென்று முடித்து துர்கா சென்னை திரும்பியிருக்கிறார். காசியில் பாம்பன் சுவாமிகள் மடம், ஶ்ரீகுமாரசாமி மடம், காசி கேதார் கட் ஆகிய பகுதிகளுக்கு சென்று, பித்ரு தர்ப்பணம் செய்திருக்கிறார். கங்கை ஆற்றில் படகில் சென்று பிண்டங்களை கரைந்து விட்டு வந்திருக்கிறார். ஆன்மாவை நம்பாத இந்த நாத்திகர்களுக்கு எப்படி ஆன்மா / ஆத்மா இருக்க முடியும், பிறகு இல்லாத ஆத்மா எப்படி சாந்தி அடைய முடியும்?

Durga sojourn to Kasi , at Mutt.With locals

தி.இந்து சிறிது மாறுபடுகிறதுஇங்கு துர்கா எந்த சடங்கும் செய்யவில்லைரூ.2 லட்சம் ரூபாய்க்கு பனாரஸ் பட்டு புடவைகளையும் வாங்கினார்: மேலும் பொதுவாகவே கோயில்களுக்கு செல்லும் வழக்கம் உடையவர் துர்கா. அந்த வகையில்தான் வாரணாசிக்கு முதன்முறையாக சென்றுள்ளார். இவர் கருணாநிதிக்கு ஈமச்சடங்கு செய்தார் என்பது தவறான செய்தி ஆகும். இதுகுறித்து வாரணாசியில் ஈமச்சடங்குகள் செய்துவரும் தமிழக புரோகிதர்கள் வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “கருணாநிதியின் உடலை புதைத்துவிட்டதால் இங்கு எந்த சடங்குகளும் இப்போதைக்கு செய்யத் தேவையில்லை. ஒரு ஆண்டு முடிந்த பிறகு வேண்டுமானால் பிண்டதானம் செய்யலாம். இங்கு துர்கா எந்த சடங்கும் செய்யவில்லை” என்றன[8]. துர்காவுடன் அவரது வயதான சித்தி, சகோதரி சாருமதி, உறவினர்களான ஷண்முகசுந்தரம் மற்றும் ஜெயந்தி ஆகியோரும் வாரணாசி சென்றிருந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த இவர்கள், கங்கையில் படகு சவாரி செய்தனர். குறுகலான தெருக்களில் செல்ல சைக்கிள் ரிக் ஷாவை பயன்படுத்தினர். மேலும் ரூ.2 லட்சம் ரூபாய்க்கு பனாரஸ் பட்டு புடவைகளையும் துர்கா வாங்கி உள்ளார்[9].

© வேதபிரகாஷ்

30-12-2018

ஸ்டாலின் குங்குமத்தை அழித்தது

[1] https://tamil.asianetnews.com/tamilnadu/durga-stalin-sudden-visit-to-kasi-along-with-their-sisters-and-relations-pkeers

[2] தமிழ்.ஒன்.இந்தியா, மோடி தொகுதியான காசியில் தாய் வீட்டாருடன் துர்கா ஸ்டாலின்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் , By Vishnupriya R | Updated: Thursday, December 27, 2018, 17:34 [IST]

[3] https://tamil.oneindia.com/news/chennai/durga-stalin-visited-kasi-viswanathar-337499.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider

[4] தமிழ்.வெப்துனியா, மோடிக்கு எதிராக மு.க.ஸ்டாலின், மோடியின் தொகுதியில் துர்கா ஸ்டாலின், Last Modified வியாழன், 27 டிசம்பர் 2018 (22:12 IST)

[5] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/durga-stalin-in-modi-constituency-varanasi-118122700091_1.html

[6] தமிழ்.இந்து, வாரணாசி கோயிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின்: கருணாநிதிக்கு ஈமச்சடங்கு செய்ததாக சர்ச்சை, Published : 30 Dec 2018 09:11 IST; Updated : 30 Dec 2018 09:11 IST.

[7] https://tamil.thehindu.com/india/article25863478.ece?fbclid=IwAR305Pjus7wYCe-Ic_v1T-llL2R20opSxQ-8Rlc2lhp_crL2NUcHg-quEJ4

[8] [8] தமிழ்.இந்து, வாரணாசி கோயிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின்: கருணாநிதிக்கு ஈமச்சடங்கு செய்ததாக சர்ச்சை, Published : 30 Dec 2018 09:11 IST; Updated : 30 Dec 2018 09:11 IST.

[9] https://tamil.thehindu.com/india/article25863478.ece?fbclid=IwAR305Pjus7wYCe-Ic_v1T-llL2R20opSxQ-8Rlc2lhp_crL2NUcHg-quEJ4

நாத்திக-இந்துவிரோதி கருணாநிதிக்கு, ஆத்மா சாந்தியடைய காசியில் பிண்ட-பிரதானம் கொடுத்தது! [1]

திசெம்பர் 30, 2018

நாத்திகஇந்துவிரோதி கருணாநிதிக்கு, ஆத்மா சாந்தியடைய காசியில் பிண்டபிரதானம் கொடுத்தது! [1]

பெண்ட்டாட்டி வணங்குவது

திராவிடத் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் இந்துவிரோத போக்கு, நடவரடிக்கைகள் (1940-2018): தமிழகத்தை பொறுத்தவரையில் ஈவேரா பெரியார் ஆரம்பித்து வைத்த இந்து விரோத போக்கு அவரது குறும்புத்தகங்களிலும், பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு, மேடையில் பேசிய தூஷணங்கள், என்று பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளன. திமுக 1969 இல் பதவிக்கு வந்ததிலிருந்து, இந்த துவேசம், கடவுள் மறுப்பு கொள்கை என்ற போர்வையில், இந்துமதம் மற்றும் இந்துக்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்துள்ளது. பிறகு, பிராமண எதிர்ப்பாக மாறிய போது, பூணூல் அறுப்பு படலத்தில் முடிந்து, தொடர்ந்து இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு பிராமணரின் பூணூல் அறுக்கப் பட்டது மட்டுமல்லாது, பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்ற நிலையிலும் சென்னையிலேயே அரங்கேறியுள்ளது. கருணாநிதியைப் பொறுத்த வரையிலும் அவரது இந்துவிரோத பேச்சுகள், காரியங்கள் முதலியவற்றை விளக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், மக்களுக்கு அவை நன்றாகவே தெரியும்[1]. ஸ்டாலின் நெற்றியில் வைத்த குங்குமம், சந்தனம் முதலியவற்றை அழித்ததும், மக்கள் பார்த்து விட்டனர்[2]. இவ்வாறெல்லாம் இந்துக்கள் கடைபிடிக்கும் விழாக்கள், முறைகள் முதலியவற்றை கேவலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தான், கருணாநிதி ஆத்மா சாந்தியடைய காசியில் பிண்டப்பிரதானம் கொடுக்கப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது.

KARU Soul -vairamuthu poured milk.jpg

கருணாநிதிக்கு ஆன்மா இருந்ததா, இல்லையா?: வைரமுத்து, கருணாநிதி சமாதிக்கு வந்து பால் ஊற்றி மரியாதை செய்தபோது, திராவிடத்துவ வாதிகளுக்கு சுருக்கென்றது. மணிசங்கர் போன்ற பீப்-உண்ணும் பார்ப்பனர், கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், “ஆன்மாவை இழந்த தமிழகம்”, என்றெல்லாம் கட்டுரை எழுதினர்[3]. அதாவது கருணாநிதி இறந்ததால், தமிழகத்திற்கு ஆன்மாவே இல்லாமல் போய் விட்டதாம்! பார்ப்பனர்களை தூஷித்தது எல்லாம் இவருக்குத் தெரியாது போலும். மேலும், ஜெயலலிதாவை சட்டசபையில் அவமானம் படுத்தியது, “பாப்பாத்தி” என்று பேசியது, முரசொலொயில் கட்டுரை எழுதியது என்றெல்லாம் கூட மறந்து விட்டது போலும்! ஜெயலலிதா எதிரி, இவருக்கு நண்பர் பாணியில் எழுதியது தெரிகிறது[4]. என்.ராம், “கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை” என்று வக்காலத்து வாங்கினார்[5]. “தி.இந்து” நிருபர் கணபதியை ஸ்கூட்டரிலிருந்து தள்ளி விட்டு, சர்ட்டை கிழித்து, பூணூலை அறுத்தது எல்லாம் இவருக்கு மறந்து விட்டது போலும்[6]. புதுகோட்டையிலோ, கருணாநிதி ஆன்மா பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் என்ற செய்தி. மகன் அழகிரி, “திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதி ஆன்மா தண்டிக்கும்,” என்று சாபம் விட்டார்!

செல்வி-காவேரி-முதலியோர்-கோவிலில்-காளஸ்தி

கருணாநிதி இறப்பிற்குப் பிறகு, மனைவிதுணைவி சுகவீனம், வருத்தம்: கருணாநிதி இறந்தவுடன் தயாளு அம்மாளுக்கு சுகவீனம் ஏற்பட்டது. அவர் வெளியே வருவதில்லை. அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, செல்வி செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை. முத்த மகனை ஒதுக்கி வைத்ததும் பிடிக்கவில்லை. மேலும், உரிய கிரியைகள் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம், ஆனால், அழகிரி தயாராக இருந்தாலும், ஸ்டாலின் மறுத்து விட்டார். ராஜாத்தி அம்மாளுக்கும் சுகவீனம் ஏற்பட்டது. இந்நிலையில், திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று, அங்கு தனது சகோதரி செல்வியிடம் வாழ்த்து பெற்ற அவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, சிஐடி காலணி வீட்டிற்கு சென்று, தனது சித்தி ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து வணங்கி ஆசி வாங்கியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது[7]. எலியும் பூனையுமாக இருந்த தயாளு – ராஜாத்தி அம்மாள் குடும்பம் தற்போது ஒன்றிணைந்து செயல்படுவது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது[8]. அதே நேரத்தில் அழகிரியை அமுக்கியதும் தெரிகிறது. ஆகவே, அரசியல் ரீதியில், கணவன் இவ்வாறு செயல்படும் போது, மனைவி ஆன்மீக ரீதியில் செயல்படுகிறார் என்று தெரிகிறது.

KARU Soul would punish traiters- AZHAGIRI

ஏகாதசி மரணம்துவாதசி தகனம்கருணாநிதியின் சாவைப் போற்றிய காசி ஜோதிடர்:  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிரதமர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில், கருணாநிதி குறித்த தேடுதல் தான் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், கருணாநிதி மறைவு குறித்து காசி புரோகிதர் தம்புசாமி ஒரு அதிரடி கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்[9]. அதில், ஏகாதசி மரணம்…துவாதசி தகனம்…கருணாநிதி ஒரு புண்யாத்மா..என தெரிவித்தார். அதாவது ஏகாதசி நாளான அன்று, திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததால், அந்த நன்னாளில் அவர் மறைந்தது மிகவும் புனிதமானது என்றும், நாளை துவாதசி தகனம் என்றும், மொத்தத்தில் கருணாநிதி புண்யாத்மா என்றும் பதிவிட்டார்[10]. சரி ஏன் திராவிடத்துவ வாதிகள், இவற்றையெல்லாம் எதிர்க்கவில்லை?  இனி அந்த ஜோதிடர் அ.கணேசனையும் மிஞ்சி விடுவார் எனத் தெரிகிறது, இது வரை, கணேசன் கருணாநிதியின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து வந்துள்ளார், இனி காசி புரோகிதர் தம்புசாமி அடுத்து தயாராகி விட்டார் போலும்.

Durga sojourn to Kasi , thithi given for KARU

குடும்பத்தோடு காசிக்குச் சென்ற துர்கா ஸ்டாலின்: திமுக தலைவர் ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் ஈடுபாடு மிக்கவர் என்றும், பல கோயில்களில் சென்று வழிபடுபவர் என்பதும் அரசியல் வட்டாரத்திலும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இருக்கட்டும், காசிக்கு போவானேன், வேங்காவது போயிருக்கலாமே? கடந்த 24-12-2018, திங்கள் கிழமை –

 1. துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர் சிலரோடு,
 2. சகோதரி சாருமதி
 3. அக்கா பார்வதி,
 4. தங்கை ஜெயந்தி மற்றும்
 5. பார்வதியின் கணவர் சண்முகசுந்தரம்,காசி போயிருக்கிறார்[11].

மேலும் துர்காவின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தியும் உடன் சென்றுள்ளார். அங்கே இருக்கும் பிரசித்தி பெற்ற சோமநாதர் கோயில் உட்பட பல கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் துர்கா ஸ்டாலின்.  கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதியன்று மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு சில சடங்குகளை காசியில் சென்று நடத்த கிளம்பியிருப்பதாக தகவல் வெளியானது. இதை அவர் திமுக தலைவர் என்ற ரீதியில் செய்யவில்லை. தன் குடும்பத் தலைவர் என்ற முறையில்தான் செய்ய விரும்பியிருக்கிறார் என்றார்கள்.  எப்படி சென்றால் என்ன, ஆள் மாறிவிடுமா, நிஜ வாழ்க்கையில், எல்லாமே மாறி விடுமா?

© வேதபிரகாஷ்

30-12-2018

Rajathi-with-Samiyar

[1] ரத்தம், அமாவாசை—ரம்ஜான் ஒப்பீடு, ராமர் எந்த கல்லூரியில் படித்தார், முதலியவை.

[2] துர்கா இதற்கும் பரிகாரம் செய்ய வேண்டியுள்ளது, இல்லையென்றால் தாய்குலம் கோபித்துக் கொள்ளும், ஓட்டு கிடைக்காது. ஜெயலலிதா இல்லாத நிலையில் பெண்கள் ஓட்டு தமிழகத்தில் முக்கியமாதாகும்.

[3] பிபிசி.தமிழ், கருணாநிதி: “ஆன்மாவை இழந்த தமிழகம், மணி சங்கர் ஐயர், முன்னாள் மத்திய அமைச்சர், 11 ஆகஸ்ட் 2018

[4] https://www.bbc.com/tamil/global-45150579

[5] பிபிசி தமிழ், “கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: என்.ராம், விவேக் ஆனந்த், 11 ஆகஸ்ட் 2018

[6] https://www.bbc.com/tamil/india-45108022

[7] தமிழ்.ஏசியா.நியூஸ், ராஜாத்தி காலில் விழுந்து வணங்கிய ஸ்டாலின்!! DMK வில் அதிசயம் இது, By Sathish KFirst Published 28, Aug 2018, 7:00 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/anwar-raja-discuss-about-muthalac-pkhgoq

[9] தமிழ்.ஏசியா.நியூஸ், ஏகாதசி மரணம் …துவாதசி தகனம்….”கருணாநிதி ஒரு புண்யாத்மா”… அதிரடி கிளப்பும் காசி புரோகிதர்….!, Last Updated 7, Aug 2018, 9:19 PM IST.

[10] https://tamil.asianetnews.com/politics/familiar-prohithar-thambusaami-reveled-karunanidhi-death-day-pd3kxr

[11] தமிழ்.ஏசியா.நியூஸ், துர்கா ஸ்டாலின் காசிக்கு திடீர் பயணம்..! “பாரதியார் இல்லம்பார்த்து வாயடைத்து போன சுவாரஸ்யம்..!, By Thenmozhi G, First Published 27, Dec 2018, 7:27 PM IST; Last Updated 27, Dec 2018, 7:48 PM IST