Archive for the ‘சைத்தான்’ Category

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திர-தந்திர-யந்திர அகோரி ஜாலங்கள் – அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும் என்று இணைய தளம் மூலம் நடக்கும் வியாபாரம் (7)

மார்ச் 23, 2017

 

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திரதந்திரயந்திர அகோரி ஜாலங்கள்அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும் என்று இணைய தளம் மூலம் நடக்கும் வியாபாரம் (7)

Mantrika books arabic-malayala-printed and circulated

இணைதளத்தில் மாந்தீரிகம் செய்வது, புத்தகங்கள் விற்பது வியாபாரமாகி விட்டது: பகுத்தறிவு பேசும், பெரியார் மண்ணில் தான், “ஆவிகள் உலகம்” போன்ற பத்திரிக்கைகள் விற்கப்படுகின்றன. போதாகுறைக்கு, தொலைவழி கல்வி, பயிற்சி என்றெல்லாம் கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு இணைதளத்தில் உள்ளது கொடுக்கப் படுகிறது[1] . “வாழ்வை வளமாக்கவும், நடைமுறை துன்பங்கள் நீங்கவும் தெய்வ பலத்துடன் நாம் சிறப்பாக வாழ்வுமே இந்த மலையாள மாந்திரீக பயிற்சி புத்தகத்தினை வெளியிடுகிறோம், இதனால் பொதுமக்கள் ஜோதிடர்கள், பூசாரிகள், குறி சொல்பவர்கள், ஆன்மிகவாதிகள் எந்த வித முன் அனுபவம் இல்லாதவர்கள் ஆர்வம் சுயவிருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பயிற்சி புத்தகத்தினை வாங்கி பயனடையலாம். இதனால் பல ஆயிரம் பேர்கள் பயனடைந்துள்ளனர்.  இந்த பயிற்சி புத்தகத்தில்

1.        குலதெய்வ அழைப்பு பூஜை முறை,

2.       அஷ்ட கணபதி சித்தி முறை,

3.       ஜனவசியம் தான வசியம்,

4.       கணவன் மனைவி வசியம்,

5.        நம் எதிரிகள் செயல் இழந்து ஸ்தம்பித்து நிற்க,

6.       தோஷம் துஷ்ட சக்தி ஏவல்,

7.        பில்லி சூன்யம் உடன் நிவாரண முறை,

8.       கொடுத்த கடன் வசூலாக்கும் முறை

9.       தீராத நாட்பட்ட வியாதிகள் நீக்கும் அற்புத முறை,

10.     குடும்ப ஒற்றுமை உண்டாக்கும் அற்புத சக்கரம்,

11.      வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உடனே வேலைகிடைக்க,

12.     மனிதர்கள் மரண கண்டம் நீங்கி ஆயள் விருத்தி முறை,

13.     வேறு மந்திரவாதியின் கட்டுகளை தகர்க்கும் முறை,

14.     தொழிலை கெடுக்க மாந்திரீகம் செய்த கட்டுகளுடைக்கும் முறை,

15.     மாந்திரீக பாதிப்பு உள்ளதா என அறிய,

16.     சொர்ண பைரவர் பூஜை முறை,

மேலும் இன்னும் ஏராளமான விசயங்கள் எளிய வழியில் பிரயோகிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். இந்த பயிற்சி புத்தகம் மொத்தம்  3 பாகங்கள் அடங்கியது, ஒரு புத்தகத்தின் விலை 2000 ரூபாய் மொத்தம் 3 புத்தகங்களின் விலை  6000 மூன்று புத்தகத்தையும் வாங்குவோருக்கு 5000 ரூபாய் மதிப்புள்ள குலதெய்வ வசிய அஞ்சனம் ஓன்று இலவசமாக கொடுக்கப்படும்”, இப்படியெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. இன்னொரு இணைதளம்அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும்” என்ற முறையில் அறிவிப்புகள்[2].

Mantrika correspondence course -books- offered for 5000

ஒரு மணி நேரத்தில் ஆவிகளுடன் பேசும் பயிற்சி: “இதுவரை அனைவராலும் மறைக்கப்பட்ட அதிரகசிய அபூர்வ தெய்வீக கலை[3]. பயிற்சிக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே நீங்கள் ஆவிகளுடன் பேசலாம். உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும்நொடிப்பொழுதில் ஆவிகளுடன் பேசலாம். நீங்கள் கூப்பிட்ட உடனேயே ஆவிகள் வந்து உங்களிடத்தில் பேசும். இக்கலையினால் எந்த ஒரு ஆவியினாலும், உங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும், எந்த ஒரு சூழ்நிலையிலும், வரவே வராது. காலை, பகல், இரவு என எந்த வேளையிலும் நீங்கள் ஆவிகளை அழைத்து பேசி, அவர்களது உதவியையும் பெற முடியும். இக்கலையை கற்றுக்கொல்வதினால், முன்னோர் ஆன்மாக்களுடன் பேசுவது மட்டுமில்லாமல், அவர்களது ஆசியும் பெற்று, அவர்களது வழிக்கட்டுதலும் கிடைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவார்கள். நம்முடன் வாழ்ந்து இறந்த ஆன்மாக்களுடன் பேச நினைப்பவர்கள், நமது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய உறவுகளின் இறப்பால் துயரப்படும் நபர்கள், நிச்சயம் இக்கலையை கற்று, அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களின் வழிக்கட்டுதலும், பாசத்தையும் பெற முடியும். வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைக்கும், சரியான தீர்வை நாம் ஆவிகள் மூலம் பெறமுடியும். இக்கலை மிகவும் பாதுகாப்பான, மிகவும் சக்திவாய்ந்த கலையாகும். இக்கலையை கற்றுக்கொள்ளும் மாணவர்களின் கவனத்திற்கு. உங்களைப்போன்றே உங்களை சுற்றி உள்ளவர்களும், நிச்சயம் உறவுகளை பிரிந்து வாடுவார்கள், அவர்களுக்கு நிச்சயம் இந்த கலையை என்னிடம் பழக எடுத்துரைக்கவும். பெண்களுக்கு இந்த பயிற்சி கற்பிக்கப்பட மாட்டாது. 100% MONEY BACK GUARANTEE[4]. குறிப்பு: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இங்கிருந்தபடியே பயிற்சி கொடுத்து 1 மணி நேரத்தில் பேச வைக்க முடியும். பயிற்ச்சி தொகை: ரூ: 10,000”, இப்படி இன்னொரு இணைதளம் விளக்குகிறது[5].

Mantra-tantra-yantra books plenty in market

மந்திரதந்திரயந்திர ஏராளமாக புத்தகங்கள் வெளியாகி வருவது: இந்த மந்திர-தந்திர-யந்திர புத்தகங்கள் என்று பார்த்தால், புத்தகக் கடைகளில் எதையும் விட்டு வைக்காத அளவிற்கு புத்தகங்களை எழுதி, பதிப்பித்துக் குவித்து வைத்துள்ளார்கள்[6]. அவற்றில் 10% கூட பிரயோஜனமில்லாத வகையில், மற்ற மொழிகளில் உள்ள புத்தகங்கள், பழைய பதிப்புகளில் உள்ளவை[7] முதலியவற்றை அப்படியே “ஈ அடிச்சான் காப்பி” முறையில், காப்பியடித்து எழுதப் பட்டவைகளாக இருக்கின்றன. ஜோசியத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். சுலபமாகக் கிடைக்கும் சாப்ட்வேர்களையே மாற்றி ஆயிரக்கணக்கு ரூபாய் விலை வைத்து விற்க முயல்கிறார்கள்[8]. “சித்தர்கள்” பெயரில் ஏகப்பட்ட புரட்டு நூல்கள். ஒரு பக்கம் சித்தர்களை வைத்துக் கொண்டு தமிழ்வெறியோடு, சமஸ்கிருதத்தை எதிர்ப்பதை காணலாம். மறு புறம் சமஸ்கிருத மொழியை தூஷித்து, அதே மொழியில் உள்ள தந்திர-யந்திர படங்களை போட்டு புத்தகங்கள் எழுதுகிறார்கள்[9]. பார்ப்பனர்களின் அயோக்கியத் தனம் என்று சொல்லப்படுகின்ற மந்திரங்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இவர்களே எல்லாவற்றையும் கண்டு பிடித்தது போலவும், எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்குடன், இவ்வாறு அரைகுறை அளவில் கூட இல்லாமல், மிகமோசமாக புத்தகங்களை எழுதி, பதிப்பித்து, பரப்பி வருவது, போலித் தனமாக இருக்கிறது. “திருடுவது எப்படி-திருட்டைத் தடுப்பது எப்படி” என்று எதிர்-புதிருமாக புத்தகங்களை வெலியிடுவது, வியாபாரம் என்று நியாயப் படுத்தலாம். ஆனால், படித்து ஏமாந்தவர்கள் சபித்தால், அது ஏமாற்றியவர்களை பாதிக்குமா-பாதிக்காதா என்று யோசிக்க வேண்டும்.

Tantrik sheets sold - faking

மந்திரதந்திரயந்திர தகடுகள் தயாரிப்பு, வியாபாரம்: பிரம்ம்ப முகூர்த்தத்தில் எழுத்து, நித்திய கர்மாக்களை சிரத்தையாக செய்து, மன-உடல் தூய்மையுடன், ஆராதித்து, பூஜை செய்து, ஒரு மண்டலம், இரண்டு மண்டலங்கள் என்று அவ்வாறு கிரியைகள் செய்து, முறைப்படி தாமிர தகடு தயாரித்து, அதில் சக்கரங்களை-மந்திரங்களை எழுதி, சுருட்டி தாயத்தில் வைத்து, மந்திரித்து, பூஜை செய்து கொடுப்பதற்கு பதிலாக, தொழிற்சாலையில், தகடுகளில் யந்திரங்களில் வெட்டி, எழுத்துகள்-படங்கள் பொரித்து விற்கிறார்கள், சஞ்சிகைகளுடன் இலவசமாகக் கொடுக்கிறார்கள்[10]. ஏன் ரூ 10/- என்று கூட கோவில்களில் விற்கிறார்கள். இதெல்லாம் எந்த வழியில் சரியானது, என்பதை அத்தொழில் செய்பவர்களுக்கேத் தெரியும். போலியாக “படிப்பு சான்றிதழ்கள்”, கள்ள நோட்ட்டுகள் அடிப்பதற்கு சமமான, ஈனத்தனமான, சமூக-விரோத, மனிதத்தன்மையற்ற தொழில் என்றே இவற்றைச் சொல்லலாம். ஆனால், திராவிட அதிகாரம், பாதுகாப்பு, ஆதரவு, முதலியவற்றால், இத்தொழில்கள் அமோகமாக நடக்கிறது. அதனால், கைதான ஒருவன், சசிகலாவைக் காப்பாற்றவே அவ்வாறான “அகோரி” பூஜை செய்தேன் என்று அளக்கிறான்.

Mantrika correspondence course by some people

கஷ்டப்பட்டு உழைக்காமல், கற்காமல், குறுக்கு வழியில் எதையும் அடைய முடியாது: மனிதன் படிப்படியாக, பள்ளியிலிருந்து, கல்லூரிக்குச் சென்று, பட்டம் பெற்று, வேலைக்குச் சென்று சம்பாதித்து, திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை நிர்வகிக்க அடையும் நிலையை, இத்தகைய போலி புத்தகங்கள வைத்து அடையலாம் என்று சில சோம்பேறி மனிதர்களை கவர, ஏமாற்றவே செய்யப்படுகின்ற வேலையாக இருக்கிறது. தனக்கே வழியில்லாமல், இப்படி ஏமாற்றி அலையும் இவர்கள், மற்றவர்களின் நலன்களைப் பற்றி எப்படி கவலைப் பட முடியும் என்று யோசிப்பதே இல்லை. கலை என்று சொன்னால், முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும், ஏதோ “பாஸ்ட் புட்” [துரித உணவகம்] போன்று, துரிதமாக, எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்பதெல்லாம் அபத்தமானது[11]. இன்றைக்கு “காப்பி ரைட்” அறிவுஜீவித்தனத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு முதலியவை அதிகமாகவே பேசப்படுகின்றன. ஆனால், இந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் முதலியோர் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதேயில்லை. நாளைக்கு “நுகர்வோர்” என்ற முறையில், வழக்கு போட்டால், அப்பொழுது தான் புரியும் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-03-2017

Mantrika books printed and circulated

[1] http://src83.blogspot.in/2016/12/blog-post_17.html

[2] http://www.ujiladevi.in/

[3]  சரித்திரம் மறைக்கப்பட்டுள்ள நிலையில், பொய்கள் பரப்படும் நிலையில், அவற்றைப் பற்றிக் கவலைப் படாமல், இப்படி அதிரடி ரீதியில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

[4]  இது சுத்தமான வியாபாரன் என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது. அதாவது, பொருள் நன்றாக இல்லை, பிரயோஜனம் இல்லை, பிடிக்கவில்லை என்றால், திருப்பிக் கொடுத்தால், பணம் வாபஸ் என்ற ரீதியில் செய்யப்படும் ரீதியில், இந்த விளம்பரம் உள்ளதை கவனிக்கலாம்.

[5] http://vasiyam.co.in/en/HOME/

[6] இதில் நர்மதா பதிப்பகம், செண்பகா பதிப்பகம் என்று எல்லோருமே அடக்கம்.

[7] 1940களில் வெளிவந்த பெரிய எழுத்து புத்தகங்கள், 1980களில் வெளிவந்த பிரேமா பிரசுரம் முதலியன.

[8] http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89982

[9] திராவிடத்துவ சித்தாந்திகள், திக-திமுகக் கட்சி ஆதரவாளர்கள், அவர்களுடைய உறவினர்கள் என்றிருப்பவர்கள், இத்தொழிலி அதிகமாக ஈடுபட்டிருப்பதை கவனிக்கலாம்.

[10]  நக்கீரன் போன்ற போலி ஆத்திக, பெரியாரிஸ சித்தாந்த கோஷ்டிகள் செய்து வந்ததை, வருவதை கவனிக்கலாம்.

[11] ஒரு மணி நேரத்தில் ஆவிகளுடன் பேசும் பயிற்சி, http://vasiyam.co.in/en/HOME/

நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!

ஏப்ரல் 2, 2016

நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!

சாவதற்கு முன்னார் கலிமா சொல்லி மரணிப்பேன் - பெரியார்புதிய கட்டுக்கதைகளை உருவாக்கும் முகமதியர்கள்: பெரியாரின் பேச்சு, எழுத்து, ஏற்கெனவே அச்சில் வந்துள்ளவை முதலியவை இவைதான் என்று அதிகாரப்பூர்வமாக தொகுத்து, ஆதாரங்களுடன் வெளியிடாததால், குழப்பங்கள், திரிபுகள் மற்றும் கட்டுக்கதைகள் பெருகி வருகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணமாக “ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்”, என்று துலுக்கர்கள் இப்பொழுது இன்னொருக் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டிருக்கின்றனர்[1]. பெரியாரின் ஒலிப்பதிவு பேச்சிற்கும், அச்சில் உள்ள பேச்சுகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது. உதாரணத்திற்கு பெரியார் இஸ்லாம் பற்றி பேசியதாக இணைதளங்களில் வரும் பேச்சுகள்[2]. எப்படி பல வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன, விடுபட்டுள்ளன, சேர்க்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம். பெரியாருடைய பேச்சு, சுத்தமான தமிழாக இல்லை என்பது தெரிந்த விசயம், அப்பொழுது வழக்கில் உள்ள சமஸ்கிருதம் கலந்த சொற்களும் அவரது சொற்பிரயோகத்தில் இருந்தது[3]. அதனால், ஒலிநாடா பேச்சைக் கேட்டு, அச்சில் உள்ளதைப் படித்துப் பார்த்தால் வித்தியாசங்களை அறிந்து-புரிந்து கொள்ளலாம். இதனால், பெரியாரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், அவ்வாறுதான் அவர் பேசினாரா, எழுதினாரா என்று சரிபார்க்க, அதிகாரப்பூர்வமான புத்தகம் (edited from the original manuscripts) இல்லை.

இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டைமுகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[4]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்.  “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார். இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[5]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[6]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா, எதிர்த்தாராஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929). ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை.  ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[7].

EVR listening to Rajaji with due respect and attention

இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்றது (20-10-1935): இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்:  தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார். (குடியரசு 20-10-1935), அதாவது, இக்கணக்கை வைத்துப் பார்த்தால், 1926லேயே அப்படி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர் அம்மாதிரியெல்லாம் பேசுவது வழக்கமாதலால், அதனை பெரிதாகவோ, முக்கிய விசயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

பெரியார் தாசன் புத்தகம்இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற அம்பேத்கர் தனது முடிவை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று அறிவுரை கூறிய .வே. ரா (குடியரசு 20-12-1935): தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம் அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’, என்று கூறுகிறார். (குடியரசு 20-12-1935). உண்மையில், அம்பேத்கரது திட்டம் முதலியன இவருக்குத் தெரியாது.

பெரியார் தாசன் புத்தகம்.2இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று சபதம் செய்த ஈவேரா (குடியரசு 31-05-1936): மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார். (குடியரசு 31-05-1936) அதாவது, இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்று தெரிகிறது. ஆனால் அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்! “நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து – இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்”. (விடுதலை 09-02-1950).

பெரியார் முஸ்லிம்சட்டநுணுக்கங்கள் அறிந்த அம்பேத்கரும், இடத்திற்கு ஏற்றப்படி பேசும் ஈவேராவும்: அம்பேத்கர் மதம் மாறியபோது, சட்டப்படி “இந்துவாக” இருக்கும் நிலையில், இடவொதிக்கீடு பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற முறையில், அவர் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார். பெரியாரும், வலிய வந்து, பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டு, பௌத்தத்தைத் தழுவுகிறேன் என்ற போது, அம்பேத்கர் விசயங்களை எடுத்துக் காட்டினார். பெரியார் ஒரு அவசரக்குடுக்கைகாரர் என்பது அம்பேத்கர்க்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், பெரியார் இந்துவாகவே இருக்க தீர்மானம் செய்து கொண்டார். டிசம்பர் 24, 1973ல் இறந்தபோது, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார்.

© வேதபிரகாஷ்

02-04-2016

[1] http://bushracare.blogspot.in/2013/09/5.html

[2] https://www.youtube.com/watch?v=2Ie5DrlDN3M

[3] ஒலி மற்றும் குடி அரசு முதலியவற்றில் கேட்டும், படித்தும் புரிந்து கொள்ளலாம், “ஆமா…..வெங்காயம்”!

[4] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[5] https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[6] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

[7] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013,  http://bushracare.blogspot.in/2013/09/5.html

கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது!

மே 6, 2013

கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது!

ஞாயிற்றுக்கிழமைதிருப்பலி நாள்: தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருந்தது. “யூகேரிஸ்ட்” அந்த பலியில் அப்பம் மற்றும் சாராயம் ஏசுகிருஸ்துவின் மாமிசம் மற்றும் ரத்தமாக மாற்றி உண்மை கிருத்துவனுக்கு ஞானத்தைக் கொடுக்கும். அத்தகைய பலியில் பங்கு கொண்டிருந்தபொழுது அருள்ராஜின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பது கர்த்தருக்கும், ஏசுவிற்கு, பரித்த ஆவிக்கும் தான் தெரியும். அந்த திரியேகத்துவ சர்ச், கால்டுவெல் நினைவிடத்திற்கு முன்னால் தான் இருக்கிறது. ஆராதனை முடிந்ததும், வெளிவந்த அருள்ராஜுக்கு கால்டுவெல்லின் சிலை தெரிகிறது. ஏதோ தீர்மானம் செய்தது போல வேகமாக நடந்தான்.

கால்டுவெல் சிலையைத் தாக்கி சேதப் படுத்தியது: முன்னர் குறிப்பிரடப்பட்டபடி, காலை 11 மணியளவில் நினைவு இல்லத்தின் முன்பகுதியில் உள்ள தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்தது. அப்போது இடையன்குடி சேகரம் இலக்கரிவிளையை சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் (29) என்பவர் நினைவு இல்லத்திற்குள் நுழைந்தார். இந்நிலையில் இடையன்குடி அருகே உள்ள இலக்கரிவிளையை சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் (29) நேற்று காலை சுமார் 10.15 மணிக்கு பிஷப் கால்டுவெல் சிலையின் பின்புற தலைப்பகுதி, இடது தோள்பகுதி, சிலையின் பீடம் ஆகியவற்றை சுத்தியலால் சேதப்படுத்தினார்[1]. திடீரென சம்மட்டியால் பிஷப் கால்டுவெல் சிலை யின் பக்கவாட்டு பகுதி மற்றும் தலையின் பின்பகுதியை சேதப்படுத்தினார். பீடத்தில் பதிக்கப்பட்ட கிரானைட்டையும் உடைத்தார்.

கிருத்துவமதம் பரப்பிய கால்டுவெல் சிலையை உடைக்கத் தூண்டியது என்ன?: இவர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். ஆகவே, கிருத்துவமதம் பரப்பிய கால்டுவெல் மீது, கிறிஸ்தவனான அவனுக்கே ஏன் அத்தகைய கோபம் வந்தது, உணர்ச்சி மேலிட சிலையை சேதப்படுத்த, எது தூண்டியது என்று யோசிக்கும் போது வியப்பாக இருக்கிறது. ஆனால், சாணர்களுக்கு, இவர் மீது நிச்சயம் கோபம் இருக்கிறது. ஏனெனில், தனது புத்தகத்தில் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாக எழுதியிருக்கிறார் தமிழுக்காக பாடுபட்ட கால்டுவெல்.

தானாகவே சுத்தியுடன் சென்று போலீஸில் சரணடைந்தது: சிலை சேதபடுத்தப்பட்டதற்காக, உவரி இடையன்குடி பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் சி.எஸ்.ஐ. சேகர செயலர், ஜேகர் உவரி போலீசில் புகார் செய்தார்[2]. ஆனால், அருள்ராஜ் தானாகவே உவரி போலீசில் சென்று சுத்தியலுடன் சரணடைந்தார். ஏதோ சாதித்து விட்டது போல, சுத்தியலை வைத்து சரணடைந்தது கண்டு, போலீஸாரே வியஎது போயினர். அவரை உவரி இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை விசாரணை நடத்தி கைது செய்தார்[3]. இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

கால்டுவெல் நினைவிடம் வந்த விதம்[4]: இடையன்குடியில் தமிழுக்கு ஓப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் (1814–1891) வாழ்ந்த இல்லம் உள்ளது. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியவருமான பிஷப் கால்டுவெல்லின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி, திசையன்விளை அருகே இடையன்குடியில் அவர் வசித்த வீட்டை தமிழக அரசு நினைவிடமாக அறிவித்தது.  இந்த இல்லத்தில் பிஷப் கால்டுவெல்லுக்கு அரை உருவ வெண்கல சிலை மற்றும் 19 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடந்தன. கடந்த 2011ம் ஆண்டு அரசு நினைவில்லமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட்டது[5].

மூத்த, முதிய தமிழ் பண்டிதர்களை ஒதுக்கிய கருணாநிதி: அப்பொழுதே, உண்மையான, நேர்மையான தமிழ் பண்டிதர்களுக்கு மனம் கஷ்டப்பட்டது. ஆனால், 60-90 வயதானவர்கள் இப்பொழுதெல்லாம் ஒன்றும் பேசுவதேயில்லை. அவர்களது கருத்துகளையும் யாரும் கேட்பதில்லை. கருணாநிதியைப் புகழ்ந்து, பாராட்டிப் பேசினால் தான் கௌரவம், பாராட்டு, பட்டம், பதவி என்ற நிலை வந்த பிறகு, அவர்கள் மௌனிகளாக ஆகிவிட்டனர். ஆனால், கால்டுவெல் அப்படியொன்றும் தமிழைக் காக்க வரவில்லை, கெடுக்கவே வந்தான்[6].

சாணார்களை இழிவுபடுத்தி எழுதிய புத்தகங்களைப் பற்றி மறைத்தது: சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள், அவர்கள் படிப்பதர்கு லாயக்கில்லை…..என்றெல்லாம் ஒரு புத்தகத்தில் எழுதினார்[7]. பிரச்சினை எழுந்தவுடன், அப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதாக, ஆங்கில அரசு அரிவித்தது. ஆனால், விரிவான மற்றொரு புத்தகத்தை, லண்டனில் வெளியிட்டது. அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், அது திரும்பப் பெற்றதாக இருக்கலாம், ஆனால், உலகத்தைப் பொறுத்த வரைக்கும், அக்கருத்துதான், படித்தவர்கள் எல்லோரும் கொண்டிருப்பர். கருணாநிதி, நிச்சயமாக, வேண்டுமென்றே அமைதியாக இருந்திருக்கிறார். சாணர்களை இழுவு படுத்திய புத்தகம் முதலில் சென்னையில் 1849ல் வெளியிடப்பட்டது[8]. அப்பொழுதே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. அதனால், பிரதிகளை ஆங்கில அரசு பதுக்கிவிட்டது. ஆனால், மறு வருடமே, அதாவது 1850 லண்டனில் அதனை விரிவாக்கி வெளியிடப்பட்டது[9].

© வேதபிரகாஷ்

06-05-2013


[4] வேதபிரகாஷ், கால்டுவெல்வாழ்ந்தவீடுநினைவிடமாகமாற்றம், https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

[5] வேதபிரகாஷ், சரித்திரத்தைமறைத்தகிருத்துவபாதிரிக்குகருணாநிதி கௌரவம்!, https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[6] வேதபிரகாஷ், கால்டுவெல்புராணம்தொடர்கிறது……………, https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

[7] வேதபிரகாஷ், கால்டுவெல்லைவைத்துக்கொண்டு, தமிழர்களைஇழிவுபடுத்தும்செயல்கள், https://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

[8] Robert Caldwell, The Tinnevelly Shanars: A Sketch of Their Religion and Their Moral Condition, and Characteristics as a Caste. With Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, London, 1849.

[9] Michael Bergunder, Heiko Frese, and Ulrike Schröder (Edited by), Ritual, Caste, and Religion in Colonial South India, Verlag der Franckeschen Stiftungen zu Halle, 2010, p.139