Archive for the ‘கோகுலாஷ்டமி’ Category

சிசுபாலன் கிருஷ்ணரை தூஷித்ததை விடவா, அம்பேத்கர் தூஷித்து விட்டார்? அம்பேத்கரின் இந்து விரோத உளறல்களும், அரைவேக்காடு நாத்திக பச்சோந்திகளின் அறிவுஜீவித்தனமும்- 2

செப்ரெம்பர் 2, 2010

சிசுபாலன் கிருஷ்ணரை தூஷித்ததை விடவா, அம்பேத்கர் தூஷித்து விட்டார்? அம்பேத்கரின் இந்து விரோத உளறல்களும், அரைவேக்காடு நாத்திக பச்சோந்திகளின் அறிவுஜீவித்தனமும்- 2

சிசுபாலன் தூஷித்ததன் பின்னணி: தருமர் எல்லா நாட்டு அரசர்களையும் அழைத்து ராஜசூய யாகம் நடத்துகிறார். அப்பொழுது, கிருஷ்ணருக்கு முதல் மரியாதை செய்ய தருமர் தீர்மானித்தபோது, பீஷ்மர் ஆமோதிக்கிறார். இதனால் கோபமடைந்த சேதி நாட்டு மன்னன் சிசுபாலன் கோபம் கொள்கிறான்.

100 பிழைகளை பொறுத்த கிருஷ்ணர்: மஹாபாரதத்தில் சபா பருவத்தில், சிசுபால வத பர்வம் என்றதில் (அத்தியாயம் 63 முதல் 74 வரை), சிசுபாலன் எப்படி பீஷ்மரையும், கிருஷ்ணரையும் வாய்க்கு வந்தபடி கிண்டலாகத் திட்டுகிறான், வசைபாடுகிறன், தூஷிக்கிறான் என்றுள்ளது. அதில் 100 வகையான தூஷணங்கள் உள்ளன. அதையெல்லாம், இங்கு பட்டியல் இட்டுக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. கிருஷ்ணர், சிசுபாலனின் தாயாருக்கு கொடுத்த வாக்கின் படி, பொறுத்திருந்து, எல்லைகளைக் கடந்தபோது, அதாவது 100 பிழைகளை மீறிய போது, எல்லா அரசர்களின் முன்னாலேயே, சிசுபாலன் தனியாக போருக்கு அழைத்தபோது, கிருஷ்ணர் சக்கராயுதத்தால் சாகடிக்கிறார்.

இலக்கிய ரீதியில் இந்த தூஷணங்கள் எல்லாம் உயர்வு நவிர்ச்சி அணியில், இரட்டை அர்த்தங்களில் இருக்கும். எப்படி குறிப்பிட்ட செய்யுட்களை தமிழில் படித்தல்தான், அதனை ரசிக்க முடியுமோ, அதுபோல சமஸ்கிருத மொழியை அறிந்தால்தான், அதன் நெளிவு-சுளிவு, அதாவது வார்த்தை பிரயோக முறையை அறிந்து ரசிக்கலாம்.

ஆக அந்த 100 தூஷணங்களிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டு,

  1. ஒன்றும் தெரியாதவன் (படிக்காதவன்) [பிரஹஸ்பதி என்றால் அதிமேதாவி என்ற பொருள், ஆனால் தமிழில் இப்பொழுது தூஷணமாக உபயோகிக்கப்படுகிறது]
  2. திருடன் (பால், தயிர் முதலியவற்றை) [கருணாநிதி சொன்னது போல “உள்ளங்கவர் திருடன்”]
  3. பறவையைக் கொன்றவன் [எறும்புகளைக் கொல்வது]
  4. குதிரையைக் கொன்றவன் (சண்டையை அறியாத மிருகம்)
  5. காளையைக் கொன்றவன்
  6. பெண்ணைக் கொன்றவன் (பூதனை)
  7. அசேதனமான சடகத்தைக் கொன்றவன் (உயிரற்ற ஜடம்).
  8. சின்ன மரங்களைத் தள்ளியவன் (உரலை இழுத்து).
  9. சின்ன எறும்புப் புற்றளவில் இருந்த மலையை ஏழு நாட்கள் தூக்கி வைத்திருந்தவன்

10.  மலைமேல் உட்கார்ந்து கொண்டு சாதம் சாப்பிட்டவன்.

11.  சாப்பிட்டுக் கொழுத்தவன் (கம்சனைக் கொன்று)

12.  எல்லாவற்றையும் அறிந்தவன்.

13.  மாடுகளை மேய்த்தவன்.

14.  பிராமண வேஷம் போட்டவன் (ஜராசந்தனை சந்திக்க).

15.  திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்தவன் (ஜராசந்தனின் அரண்மனைக்குள்).

16.  தாய் தந்தை இல்லாதவன்

17.  மதுசூதன் –மது என்ற அரக்கனைக் கொன்றவன்.

18.  போட்டியாக ருக்மணியை திருமணம் செய்துகொள்ள வந்தவன்.

19.  ஜனார்த்தனன் (மக்களை அறியாதவன்)

20.  கேசவன் (மனிதன் இல்லாதவன்)

……………………………………..

இதில் சில முன்னுக்கு முரணகவும் இருப்பதைக் காணலாம். ஏனெனில், ஒருவன் கோபத்துடன் மற்றவனைத் திட்டும் போது அப்படித்தான் இருக்கும்.

இதைத் தவிர, ஆயர்பாடி பெண்களே, கிருஷ்ணனை பலவாறுத் திட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, பிறகு ஒரு இடத்தில் பீஷ்மரைக் கொல்ல சக்கராயுதத்தைக் கொண்டு கொல்ல வரும் போதும், பீஷ்மர் நக்கலாக கிருஷ்ணரைப் பார்த்து கேட்கும்போதும், அத்தகைய வார்த்தைகள் உண்டு [கிருஷ்ணர் யுத்தத்தில் ஆயுதம் எடுத்து போராடக் கூடாது என்பது கண்டிஷன்].

மேலும் இங்கு சமஸ்கிருதத்தில் உள்ள கேசவா, ஜனார்த்தனா, முகுந்தா…..போன்ற வார்த்தைகளுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. சிசுபாலன் மற்றும் கிருஷ்ணருக்கு எதிராக பேசும் போது, புராணங்களில் அத்தகைய வார்த்தைகள்தான் உபயோகப் படுத்தப் பட்டுள்ளன. இதை, ஆபாசமாக, கொச்சையாக விளக்கம் அளித்து, எழுதியுள்ளதை, அம்பேத்கர் போன்றவர்கள் எடுத்தாண்டுள்ளனர். அதை மறுபடியும் எழுதி, இப்பொழுது அவதூறு பேசுகின்றனர்.

உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வது கேவலமானது: தமிழ் வார்த்தைகளுக்கு எப்படி அசிங்கமான, ஆபாசமான, கொச்சையான அர்த்ததைக் கொடுத்து இன்று பேசுகிறார்களோ, அதுபோலத் தான், கிருஷ்ணரை மஹாபாரத்ததில் மற்ற புராணங்களில், மற்றவர்கள் திட்டியதை வைத்துக் கொண்டு, கிருஷ்ணரை விமர்சிக்கும் சாக்கில் தூஷிக்கின்றனர் மதி கெட்டவர்கள். அம்பேதகாருக்கு, இந்து மதத்தை இழிவு படுத்தவேண்டும் என்ற எண்ணம் இருந்தபோது, விடாப்படியாக,, அவ்வாறானவற்றை வைத்துக் கொண்டு எழுதினார். ஆக, அதனை உண்மை என்று நினத்துக் கொண்டு, மடத்தனமாக சிலர் எழுதி பிரச்சாரம் செய்வது, மிகவும் கேவலமானது.