Archive for the ‘சுன்னத்’ Category

பெரியாரும், இஸ்லாமும் – கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (2)

ஒக்ரோபர் 27, 2021

பெரியாரும், இஸ்லாமும்கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (2)

ஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929)[1]. ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை[2]. ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[3].

பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் முதலியன[4]: ஆனைமுத்து, விடுதலை ராஜேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, முதலியோர்களின் தொகுப்புகள் மற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தின் வெளியீடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு[5], தமக்கு வேண்டியவற்றைத் தொகுத்து, பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் என்றெல்லாம் எழுதுகிறார்கள், ஆனால், அவற்றை சரிபார்த்து, உண்மையறிந்து, மெய்யாகவே மறுபக்கம் அலசி, ஆராய்ந்து அவர்கள் எழுதுவது இல்லை[6]. அரசியல், பரிந்துரை, ஆதாயம், அதிகாரம் என்றெல்லாம் உள்ளதால், பரஸ்பர ரீதியில் அத்தகைய வெளியீடுகள், ஆதரவாளர்களிடம் பிரபலமாகி சுற்றில் இருக்கின்றன. ஆனால், 1940-80களில் திராவிடத் தலைவர்களின் பேச்சுகளை நேரில் கேட்டவர்களுக்கு, அவர்கள் பேசியதற்கும், இப்பொழுது தொகுப்பு புத்தகங்களில் இருப்பவற்றிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகளை காணலாம். எந்த அளவுக்கு ஒட்ட்யும், வெட்டியும், மாற்றியமைத்து, அவை வெளியிடப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இங்கும்-அங்கும் உள்ளவற்றை எடுத்தாண்டு, தொகுத்து எழுதியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து ஆராய்ச்சிக்கு வர வேண்டும்.

பிரச்சாரம் கட்டுக்கதைகள் ஆராய்ச்சி ஆகாது: இவ்வாறு, துலுக்கர் அடிக்கடி, புதிய கதைகளை உருவாக்கி, பிரபலமடையச் செய்து, பரப்பி வருவதில், பெரிய விற்பன்னர்கள் எனலாம். இப்பொழுது, இன்னொரு கதையைக் கிளப்பி விடுகிறார்கள் போலும். இந்துத்டுவ வாதிகள், முக்கியமாக, ஆவணங்களை சரிபார்த்து ஆராய்ச்சி செய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஏதோ, ஒருபக்கமாக ஒரு சாரார் பேசியதாக அச்சில் வந்துள்ளவை என்றெல்லாம் வைத்து, முடிவுக்கு வருவது, தொடரும் போக்கு தெரிகிறது. “தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,” என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று இப்பொழுது, இத்தகைய விசயங்கள் வெளிவருவது விசித்திரமாக இருக்கிறது..“முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று / போன்று பிதற்றினாரா?,” என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆன்மா இல்லை, ஆவி இல்லை …..என்றெல்லாம் பேசி, கிண்டலடித்து வந்த பெரியார், பெரிய சித்தர் என்றெல்லாம் சிலர் போற்றி வந்த நிலையில், அவர் அழுதார், அரற்றினார், உடன் இறக்க முயன்றார்… என்று செய்தி உருவானது திகைப்பாக இருக்கிறது. மூலம் / உண்மை ஒன்று என்றால், சமீபத்தை நிகழ்வுகள் பற்றி ஒன்றிற்கு மேலான விவரங்கள் வருவது சிந்திக்க வேண்டிய பொருளாக மாறுகிறது.

ஜின்னாபெரியார்அம்பேத்கர் சந்திப்புகள், கடிதங்கள் இந்த கட்டுக் கதைகளை கிழிக்கின்றன: இவர்கள் எல்லாம் ஒன்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இறக்கவில்லை. 70-80 ஆண்டுகள் முன்னர் இருந்தவர்கள், சென்னைக்கு வந்துள்ளனர். பலர் பார்த்திருக்கின்றனர், அவர்கள் பேசியதைக் கேட்டிருக்கின்றனர். இன்றைய 60-70-80 வயதானவர்களுக்கு விசயங்கள் தெரியும். முன்பு “தி மெயில்,” “சென்டினல்” போன்ற நாளிதழ்களில் வந்துள்ளன. இப்பொழுது, திராவிடத்துவவாதிகள், முஸ்லிம்கள், பெரியாரிஸ்டுகள் மறைத்தாலும், ஜின்னா கடிதங்கள் ஈவேராவைத் தோலுருத்திக் காட்டுகிறது. அம்பேத்கர் எப்படி ஈவேராவை பௌத்தம்மாறுவதற்கு எதிர்த்தாரோ, அதேபோல ஜின்னா இவரை பொருட்படுத்தியதே இல்லை. 1948ற்குப் பின்னர், இவர் பல தமாஷாக்களை (பிள்ளையார் சிலைகள் உடைத்தது. ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டது, இந்து விரோதம் செய்தது) செய்திருக்கிறார். இதனை, திமுக ஊக்குவித்து வந்தது. அம்பேத்கரை 1970கள் வரை தமிழகத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. பிறகு தான் அம்பேத்கர் சிலைகள் தோன்ற ஆரம்பித்தன. அதே போல, பெரியார் இறந்த பிறகு, 1970களில் ஊதி பெரிதாக்கப் பட்டார்.  ஆனால், முத்துராமலிங்க தேவர், மபொசி, கண்ணதாசன் முதலியோர் பேசியது, எழுதியது மறைக்கப் படுகின்றன.

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் இத்தகைய கட்டுக் கதைகளைப் பரப்புவது ஆபத்தானது: பச்சையப்பன் கல்லூரியில் திராவிட இயக்கத்தைப் பற்றி பலர் அரைத்த மாவையே அரைத்து பேசினர். அத்தொடர் சொற்பொழிவுகளக் கூர்ந்து கேட்கும் போது, அரசியல் செய்ததைத் தவிர வேறொதுவும் தெரியவில்லை. திராவிடத்துவத்தில் ஊறிய-நாறிய அவர்களால் வேறெதையும் பேச முடியவில்லை. ஏ.ஆர். வெங்கடசாலபதி போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை வைத்துக் கூட விவரிக்க முடியாது. ஆகவே, ஏதோ நடத்த வேண்டுமே என்ற போக்கில் நடத்துவது, ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது, முகஸ்துதி செய்தது, கேள்விகள் கேட்கக் கூடாது, விவாதிக்கக் கூடாது என்று இவ்வாறு கூட்டங்கள் நடத்துவது பிரயோஜனம் அல்லாதது மற்றும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றின் தரத்தையே கேலிக் கூத்தாக்கி விடும்.  இதனால் தான், மற்றவர்கள் திராவிடர்கள், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு அரசியல் செய்து கொண்டுவருபவர்களை மற்றவர்கள் கண்டு கொள்வதில்லை.

© வேதபிரகாஷ்

27-10-2021


[1]  வேதபிரகாஷ், 19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாராபெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!, 02-04-2016.

[2]https://dravidianatheism.wordpress.com/2016/04/02/islamization-of-dravidian-movement-by-making-periyar-a-mohammedan/

[3] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013, http://bushracare.blogspot.in/2013/09/5.html

[4] வேதபிரகாஷ், முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1], 07-02-2021.

[5] பெரும்பாலும், இத்துகுப்புகள்,  இப்பொழுது, இவை இணைதளங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவையெல்லாம், “கிரிடிகல் எடிஷன் பதிப்பு” போன்றவை இல்லை.

[6] ம.வெங்கடேசன், க. சுப்பு போன்ற வலதுசாரி, இந்துத்துவ எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகங்கள். இப்பொழுது இந்துத்துவவாதிகள் பெரியாரிஸத்தை ஆதரிப்பதால், இதைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.

பெரியாரும், இஸ்லாமும் – கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (1)

ஒக்ரோபர் 27, 2021

பெரியாரும், இஸ்லாமும்கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (1)

பெரியாரும், இஸ்லாமும் சொற்பொழிவு: திமுகவின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெரியாரைத் தூக்கிப் பிடித்து, பெரிய சிலை வைக்கிறோம் என்றெல்லாம் திராவிடத்துவாதிகள் கிளம்பி விட்டனர். இந்நிலையில், மனோன்மணியம் பல்கலைகழகத்தில் ‘பெரியாரும் இஸ்லாமும்’ சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்[1]. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் சமூக விலக்கல் மற்றும் ஆட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்துடன் இணைந்து ‘பெரியாரும் இஸ்லாமும்’ என்ற தலைப்பில் அக்டோபர் 27 அன்று பகுத்தறிவு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது[2]. இதில் புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அகமது சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சொற்பொழிவாற்ற இருந்த நிலையில், இந்து முன்னணியினர் திடீரென இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து முன்னணி மிரட்டல், ‘பல்கலைக் கழகமா அல்லது திராவிடர் கழகமா’ என கேள்வியெழுப்பி, பல்வேறு விமர்சனங்களை இந்து முன்னணியினர் முன்வைத்தனர். இந்து முன்னணியின் மிரட்டல் காரணமாக மேற்கண்ட சொற்பழிவு நிகழ்ச்சியை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தயக்கம் காட்டியது தெரியவந்தது.

உதயகுமார் கண்டனம்: இதுகுறித்து துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்டபோது, சில பாதிப்புகள் ஏற்படும் என்பதால் நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும், நடத்த வேண்டாம் என்பது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என 24-10-2021 அன்று தெரிவித்திருந்தார். இருப்பினும் தமிழ்நாடு அரசால் சமூகநீதி நாள் கடைபிடிக்கப்படும் ஒரு தலைவரின் பெயரில் நிகழ்ச்சி நடத்த பல்கலை நிர்வாகம் அஞ்சியது, சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப உதயகுமார்[3], “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர் கழக அலுவலகமா? ஐஎஸ் பயிற்சி கூடாரமா? என்றெல்லாம் உருட்டி மிரட்டி, ஓர் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தடுக்க முயலும் இந்து முன்னணி பாசிஸ்டுகளை வன்மையாக கண்டிப்போம்! பல்கலைக்கழக நிர்வாகமே முதுகெலும்புடன் செயல்படு!” என்று பதிவிட்டிருந்தார்[4].

இந்து முன்னணி எதிர்ப்பு, போலீஸ் காவல்: இதுகுறித்து ஈடிவி பாரத் தளத்தில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக தற்போது இந்து முன்னணியின் மிரட்டலுக்கு அஞ்சாமல் ‘பெரியாரும் இஸ்லாமும்’ தொடர்பான சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்த துணைவேந்தர் பிச்சுமணி சமூகவியல் துறைக்கு அனுமதி அளித்துள்ளார். இதனிடையே சொற்பொழிவு நடத்தினால் அக்டோபர் 27ஆம் தேதி காவிகள் நாம் பல்கலைக்கழகத்தில் அணி திரள்வோம் என இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. எனவே, அன்றைய தினம் பல்கலைக்கழகத்தில் காவல் பாதுகாப்பு கோருவது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர். அதன்படி, போலீஸ் பாதுகாப்பு கோரப் பட்டது.

இந்து முன்னணி சமூகவளைத் தள எதிர்ப்பு: இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர் கழக அலுவலகமா? ஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி கூடாரமா? புரியவில்லை. ‘பெரியார், சாமுவேல் ஆசீர்ராஜ், ரியாஸ் அகமது’ என்னவிதமான கூட்டணி. கல்வி நிலையத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சியா?மனோன்மணியம் பல்கலைக்கழகம்நிகழ்ச்சி குறித்த போஸ்டர் அக்டோபர் 27 ம் தேதி காவிகள் நாம் அணி திரள்வோம். என்ன பேசுகிறார்கள் என பார்ப்போம். கடவுள் மறுப்பு, இஸ்லாத்தின் சமூகநீதி என அனைத்திற்கும் எதிர் கேள்வி மற்றும் விளக்கம் கேட்போம்” எனத் தெரிவித்திருந்தனர்.

27-10-2021 அன்றுபெரியாரும் இஸ்லாத்தும்பெயரிலான கருத்தரங்கு நடைபெற்றது: இந்த நிலையில் திட்டமிட்டபடி பல்கலைக்கழக அரங்கில் “பெரியாரும் இஸ்லாத்தும்” பெயரிலான கருத்தரங்கு நடைபெற்றது[5]. இதில் துறை சார்ந்த மாணவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்[6]. பல்கலைக்கழக வாசலில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி முடியும் வரை வெளியாட்களை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய அதே நேரத்தில் பல்கலைக்கழகத்திற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்ததாக தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து காவல் அதிகாரி பல்கலைக்கழக துணைவேந்தரை செல்போனில் தொடர்பு கொண்டு அனுமதிக்கலாமா எனக்கேட்டார். அதற்கு அவர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மாணவர்கள் மட்டுமே அனுமதி என்பதால் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என்று மறுத்து விட்டார்.

ரியாஸ் அகமது பேசியது: வழக்கம் போல, ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தான் எடுத்துக் காட்டி பேசியுள்ளது, ஒரு பிரச்சாரம் என்று வெளிப்பட்டது. 2021 பிப்ரவரியில், மணிச்சுடரில்[7], “1972ம் ஆண்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலமானபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தந்தை பெரியோர் கதறி அழுத சம்பவம் நம் நெஞ்சங்களை உருகச் செய்யும். ஆம். இமைய மலை போல் எதற்கும் அசையாத் நெஞ்சுரம் கொண்ட தமிழர் தந்தை பெரியார் அவர்கள், காயிதேமில்லத் அவர்களின் மறைவு சற்று நிலை குலையச் செய்தது. “தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,” என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று வெளி வந்தது. முன்பு, பெரியார்தாசன் / அப்துல்லாஹ் இத்தகைய கட்டுக் கதையை விட்டுப் பார்த்தார், எடுபடவில்லை. புஷ்ரா நல அறக்கட்டளையும் 2013ல் முயன்றது, யாரும் கண்டு கொள்ளவில்லை.

பெரியார் துலுக்கர் ஆனாரா?- முகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[8]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்[9]. “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார்[10]. இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[11]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[12]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

27-10-2021


[1] இ.டிவி.பாரத், இந்து முன்னணி எதிர்ப்பை மீறிபெரியாரும் இஸ்லாமும்நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு, Published on: Oct 25, 2021, 4:19 PM IST; Updated on: Oct 25, 2021, 5:16 PM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/etv-bharat-story-impact-nellai-ms-university-approved-periyarum-islamum-program/tamil-nadu20211025161918390

[3] இ.டிவி.பாரத், மனோன்மணியம் பல்கலைக்கழகமே முதுகெலும்புடன் செயல்படு! – சு.. உதயகுமார், Published on: Oct 24, 2021, 10:58 PM IST; Updated on: Oct 24, 2021, 11:07 PM IST

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/periyarum-islamum-function-to-be-hold-by-nellai-manonmaniam-university/tamil-nadu20211024225831363

[5] மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன் இந்து முன்னணி போராட்டம், By M.Ganapathi, Reporter 27 Oct 2021 1:51 PM

[6] https://www.instanews.city/tamil-nadu/tirunelveli/tirunelveli/manonmaniyam-sundaranagar-university-hindu-munnani-protest-1060843

[7] மணிச்சுடர், தந்தை பெரியாரின் தம்பி காயிதே மில்லத், பிப்ரவரி 6, 2021, பக்கம்.4

[8] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[9] வேதபிரகாஷ், நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!, 02-04-2016.

[10]  https://dravidianatheism.wordpress.com/2016/04/02/converting-periyar-to-islam-falsification-of-recent-history-by-muslims/

[11]  https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[12] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html