Archive for the ‘சேதுபதி மன்னர்’ Category

மணல் மேடு, ராமர் பாலம், ரோமிலா தாபர், கருணாநிதி – சரித்திரத்தைப் புரட்டும் வித்தகர்கள் – உடன் பிறப்புகளுக்கு எச்சரிக்கை!

பிப்ரவரி 28, 2013

மணல் மேடு, ராமர் பாலம், ரோமிலா தாபர், கருணாநிதி – சரித்திரத்தைப் புரட்டும் வித்தகர்கள் – உடன் பிறப்புகளுக்கு எச்சரிக்கை!

வயதாகியும் புத்தி மாறவில்லை என்பது கருணாநிதி விஷயத்தில் மெய்யாகிறது. நாத்திகம் என்ற “லைசென்ஸ்” இருந்தால் இந்துக்களைபற்றி எதுவேண்டுமானாலும் பேசலாம், இந்துமதத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம், இந்துமதநம்பிக்கைகளைப் பற்றி எப்படியும் விவாதிக்கலாம் என்ற எண்ணம், தைரியம் மிகவும் மோசமானது, கேவலமானது. ஏனெனில், “விஸ்வரூபம்” இவர்களின் போலித்தனத்தை முழுவதுமாகத் தோலுறுத்திக் காட்டி விட்டது. நாத்திக உடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி விட்டது. பகுத்தறிவை ரணகளமாக்கி விட்டது, இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சுரணை மேலாக “சுயமரியாதை” கூட இல்லாமல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

அன்று மணல்மேடு என்று சொன்னவர்கள் இன்று ராமர் பாலம் என்று சொல்லுவதா? கலைஞரின் அறிவார்ந்த வினாவிடுதலை[1], திங்கள், 25 பிப்ரவரி 2013 15:52

சென்னை, பிப்.25-  அன்று வெறும் மணல் திட்டு என்று சொன்னவர் இன்று ராமர் பாலம் என்று முரண்படுவது ஏன் என்று அறிவார்ந்த வினாவை எழுப்பினர் தி.மு.க தலைவர் கலைஞர். முரசொலியில் இன்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

உடன்பிறப்பே, இந்திய  உச்சநீதி மன்றம் 2007ஆம் ஆண்டு  செப்டம்பர் முதல் தேதியன்று சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, மாற்றுப் பாதை பற்றிப் பரிசீலிக்க வேண்டுமென்று மத்திய அரசை அறிவுறுத்தியது.   அதன்படி 20.7.2008 அன்று  டாக்டர் ஆர்.கே. பச்சௌரி தலைமையில்  வல்லுநர் குழு ஒன்றினை மத்திய அரசு அமைத் தது.   வல்லுநர் குழு 12-2-2012 அன்று தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியது. 11 மாதங்கள் கழித்து, இப்போது மத்திய அரசு பச்சௌரி குழு வழங்கியுள்ள  அறிக்கையின் மீது  தனது  கருத்துக் களைத் தெரிவித்து, உச்சநீதி மன்றத்தில் 23-2-2013 அன்று  பதில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது.   அந்தப் பதிலில், ஆதாம் பாலம் வழியாக மட்டுமே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சௌரி தலைமை யிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பச்சௌரி  குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத் திடம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன்  தாக்கல் செய்தார்.

அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பச்சௌரி கமிட்டியின் அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் ஆராயவில்லை என்பதால், இதன் மீது முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு உச்சநீதி மன்றத்திடம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்தப் பதிலைப் பற்றி பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் திரு. ரவிசங்கர் பிரசாத் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சேது சமுத்திரத் திட்டத்திற்காக எந்தவொரு சூழ்நிலையிலும் ராமர் பாலத்தை அழிக்கும் முடிவினை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புக்களும்,  சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும், பா.ஜ.க.வைப் பின்பற்றி இதே கருத்தைத்தான்  உச்சநீதிமன்றத்திலே  வலியுறுத்தி இருக்கின்றது.

8.5.2002 அன்றே நான் அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களுக்கு  எழுதிய கடிதத்திலேயே  சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவரங்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.   23.7.1967 அன்று சேது சமுத்திரத்தின் ஒரு பிரி வாக உள்ள தூத்துக்குடித் துறைமுகத் திட்டம், சேலம் இரும் பாலைத் திட்டம்  ஆகியவற்றை நிறைவேற்றக் கோரி அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சி நாளை அறி வித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 6 எண் பாதை முடிவு

இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால் வாய், பனாமா கால்வாய் போன்று சிறப்பினைப் பெறும் என்பதை அறிந்து இத்திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும் நீண்ட நாட்களாக கிடப்பிலே போடப்பட்டது.  மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசு அமைந்ததும்,  சேது சமுத்திரத் திட்டம் பற்றிய சாத்தியக் கூற்றினை ஆராய  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  சேது சமுத்திரக் கால்வாய் அமைய வேண்டிய வழித்தடம்  மற்றும் அதற்கான விவரங்கள் பா.ஜ.க. பிரதமரான  திரு. வாஜ்பாய் அவர்கள் தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு ஆறாவது எண்  பாதை (ஆடம்ஸ் பாலம் அதாவது பாஜக தற்போது ஏற்க முடியாது என்று கூறுகின்ற  ராமர் பாலம்) முடிவு செய்யப் பட்டது.  இவ்வாறு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் எந்தப் பாதையில் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டதை மறந்து இன்றைக்கு  அது ராமர் பாலம் உள்ள இடம் என்றும், அங்கே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் பா.ஜ.க. வினர் தற்போது கூறுவது எத்தகைய முரண்பாடு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பா.ஜ.க. மட்டுமல்ல;  இங்கே தமிழகத்தில்  ஆளு கின்ற அ.தி.மு.க. வின் சார்பில்  2001  தேர்தல் அறிக்கையில்;  இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொ டர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை.  மேற்கிலிருந்து கடல் வழி யாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால்,  இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற் குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம்.  இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேதுசமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று  ஆடம்ஸ் பாலம் அமைந்துள்ள பகுதியில்,  ராமர் பாலம்  என்று இப்போது சொல்கிறார்களே, அதே இடத்தில் அங்கே இருக்கும் மணல் மேடுகள், பாறைகள் ஆகியவற்றை அகற்றி விட்டு கால்வாய் அமைப்பதுதான் தலையாய நோக்கம் என்று சொன்னவர்கள், இன்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று சொன்னால்  அது எத்தகைய முரண்பாடு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.   தி.மு. கழகத்தின் முயற்சி யினால் இந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்ற உள் நோக்கம் தானே காரணம்?

தேர்தல் அறிக்கையில் சொன்னது மாத்திரமல் லாமல், அ.தி.மு.க. தலைவி  ஜெயலலிதா  26.6.2005 அன்று விடுத்த நீண்ட அறிக்கை ஒன்றில் என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத் திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற் கொள்ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுப் பணி;  தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப்பட்டது.  இந்நிறுவனத்தின் அறிக்கையும்,  1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது.  இவ்வாறாக, சேது சமுத் திரக் கால் வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்து வதற்கு நான் முக்கியக் காரண மாக இருந்திருக்கிறேன்” என்று அன்றைக்கு இத்திட்டத்திற்கே தான்தான் காரணம் என்பதைப் போலச் சொல்லிக் கொண்ட வரும் இதே ஜெயலலிதா தான் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சேது திட்டம்  நிறைவேற்றப் படுமானால், அதன் மூலம் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகும்; நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக் கும்; ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ்  மீன் பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால் கடல் சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின்  பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உயரும்; மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதி அளிக்கும்;

இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறை முகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப் படுவது தவிர்க்கப்படும்; நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்; இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்; சேது சமுத் திரத் திட்டத் தின் மூலம் ஆண்டுக்கு  8 கோடி மனித நாள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். ஏராளமான நேரடி மற்றும்  மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும்;

ராமேஸ்வரம், மற்றும் நாகப்பட்டினம்  துறைமுகங்கள் மேம்படுத்தப் படுவதன் வாயிலாக  சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிட்டும்; சேது சமுத்திரக் கால்வாயை  பயன்படுத்து வதன்  மூலம்  இந்தியா வின் கிழக்கு மற்றும் மேற்கு  கடல் பகுதி களுக்கு  இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம்  சுமார் 424 மைல் அளவுக்கு குறையும்.  இதன் மூலம் கப்பல்களின் பயண நேரம் 30 மணி அளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது.  கணிசமான எரிபொருள் சேமிப்பும், அன்னியச் செலாவணி  சேமிப்பும் ஏற்படும். கப்பல் வாடகை கட்டணத்தில் கணிசமான சேமிப்பு ஏற்படும். பயண நேரம் குறைவதால் கப்பல்கள் கூடுதல் பயணங்களை  மேற்கொள்வதன் மூலம் கூடுதல் சரக்குகளை கையாள இயலும்; தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்கு பெட்டக போக்குவரத்திற்கென  ஒருங்கிணைப்புத் துறை முகமாக மேம்படுத்தப்படும்; தூத்துக்குடி துறை முகமாக பெருமளவில்  வளர்ச்சி அடை யும்; கடற் படை மற்றும் கடலோரப் படை கப்பல்கள் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிகளுக்கு அதி விரைவில் செல்ல இயலும்.   இதன் மூலம் இந்தியப் படைத் திறன் பெருமளவில் மேம்படுத்தப்படும்; ராமனாதபுரம், நாகப் பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டமைப்பு வளர்ச்சி பெருகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும் இத்தகைய  ஏராளமான பயன் களைக் கருத்திலே கொண்டுதான்,  அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் உரு வானபோது அதன் குறைந்தபட்சச் செயல் திட்டத்தில் தி.மு. கழகத்தின் முயற்சியால்  சேது சமுத்திரத் திட்டம் இடம் பெற்றது மாத்திரமல்லாமல்,   அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதி நிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டு,  அதன் தொடக்க விழாவிற்கு  பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர் களும்,  அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும், நானும், மற்ற தோழமைக் கட்சித்தலைவர்களும்  மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவிலே கலந்து கொண்டோம்.   சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவை தடுக்க வேண்டும் என்பதற்காக அப்போது சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடை பெற முயன்றனர். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச்,

தேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு  மனுதாரர் நீதிமன்றத்துக்கு  விரைந்து வந்து  வழக்கு தொடுத்துள்ளார்.   சேது சமுத்திரத் திட்டம்  நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது  எல்லோருக்கும்  தெரிந்த ஒன்றாகும்.   ஏனென்றால்  தற்போது கப்பல்கள்  இலங்கை நாட்டைச் சுற்றி  வங்காள விரிகுடா  கட லுக்கு  வரவேண்டியுள்ளது.    பாக்  ஜலசந்தியிலே  குறுக்காக கப்பல்  கால்வாய்  அமைத்தால்  பெருமளவு  பணமும்,  நேரமும்  சேமிக்கப் பட ஏதுவாகும். இந்தக் கால் வாய்த் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்கு  தடை கிடையாது – என்று கூறி தீர்ப்பளித்தது. அவ்வாறு; தொடங்கி வைக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், அப்போது அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர்.பாலுவின் நல்ல முயற்சி யின் காரண மாக வேகமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், மதவாதச் சக்திகள் எப்படியும் அந்தத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைகளை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.   உச்ச நீதி மன்றம் விரைவில் இதுகுறித்து நல்ல முடிவெடுத்து தீர்ப்பளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், நல்ல தீர்ப்பினைப் பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு வழி வகுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள,
மு.க.

சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகங்களும், ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்களின் உளறல்களும்!சரித்திர ஆசிரியர்களின் போலித்தனம்[2]: சேதுசமுத்திர திட்டத்தை இந்துக்கள் சார்பாக எதிர்த்தபோது, பலர் அதற்கு எதிராகக் கிளம்பினர். அயோத்யாவை விட்டுவிட்டு, “ராமர் பாலம்” என்றதற்கு சீறி பாய்ந்து வந்தனர், புதிய சித்தாந்தத்தைத் திரித்தனர்[3]. ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்கள், ஏதோ தமக்குத்தாம் எல்லாமே தெரியும் என்பது போல பேசினர்[4]. மைக்கேல் விட்செல் போன்ற ஹார்வார்ட் பேராசிரியர்கள், பாகிஸ்தானிற்கு வக்காலத்து வாங்கினர்[5]. அதற்கு உடனே “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தன. கருணாநிதி வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டியபோது, அந்த ஆளின் வக்கிரம் வெளிப்பட்டது[6]. ஆனால், திட்டமே கிடப்பில் போட்டவுடன், எல்லோரும் அடங்கிவிட்டனர். இருப்பினும் நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வரைச் சென்று வழிபாடு செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதாவது அவர்களின் உளரல்கள் அல்லது அதி மேதாவித்தனமான கேள்விகள், விமர்சனங்கள் முதலியன குப்பையிலே போடப்பட்டன. அதுபோலவே, இப்பொழுது, “சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகம் பழைய இரும்பு கடையில் விற்பனை” என்று செய்திகள் வருகின்றன.

2008ல் சொன்னது – நம்மால் (கருணாநிதியால்)கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது[7]பல  லட்சம் ஆண்டுகளுக்கு  முன்பு  பிறந்ததாக  கூறப்படும்  ராமரின் பிறந்த இடத்தைக் கண்டு பிடித்து  விட்டார்களாம்.  ஆனால்  ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்பு  தென்னகத்தையே  ஆட்சி  புரிந்து  வந்த  மாமன்னன் ராஜராஜ  சோழன்  மறைந்த  இடத்தையோ,  அவனது உடல்  புதைக்கப்பட்ட  இடத்தையோ,  அதன்   நினைவாக  அமைக்கப்பட்ட  நினைவிடத்தையோ  நம்மால்  கண்டுபிடிக்க முடியாதது  வேதனை தருகிறது  என்று  கூறியுள்ளார்  முதல்வர் கருணாநிதி.

தம்மை அறியாத “தமிழர்கள்”: தமிழர்கள் 100-150 ஆண்டுகளுக்கு முன்னர், ஆரியமாயையில் திளைத்து, திராவிட மாயையில் சிக்குண்டு, தமது அடையாளத்தைத் தொலைத்தனர். “தமிழர்கள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய போலித்தனமான நாத்திகர்கள், இந்துவிரோதிகள் கூறுவதை, எழுதுவதை கவனித்து உண்மையறியாமல் இருந்து வந்தால், நிச்சயமாக அவர்கள் தங்களது மூலங்களை இழக்க நேரிடும், குறிப்பாக பத்துப்பாட்டு-எட்டுத்தொகை நூல்களையும், அவை காட்டும் தமிழர்களின் வாழ்க்கை முறையினையும் மறந்து விடுவர்.

© வேதபிரகாஷ்

28-02-2013


இந்திய நாட்டுப்பற்றும், திராவிட இயக்கமும்!

மார்ச் 31, 2010
தியாகிகளை நினைவுகூர்வதில் முன்னோடியாக திகழ்கிறது தமிழகம்: கருணாநிதி
First Published : 31 Mar 2010 03:06:48 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=219855&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0ba4%u0bbf%u0baf%u0bbe%u0b95%u0bbf%u0b95%u0bb3%u0bc8+%u0ba8%u0bbf%u0ba9%u0bc8%u0bb5%u0bc1%u0b95%u0bc2%u0bb0%u0bcd%u0bb5%u0ba4%u0bbf%u0bb2%u0bcd+%u0bae%u0bc1%u0ba9%u0bcd%u0ba9%u0bcb%u0b9f%u0bbf%u0baf%u0bbe%u0b95+%u0ba4%u0bbf%u0b95%u0bb4%u0bcd%u0b95%u0bbf%u0bb1%u0ba4%u0bc1+%u0ba4%u0bae%u0bbf%u0bb4%u0b95%u0bae%u0bcd%3a+%u0b95%u0bb0%u0bc1%u0ba3%u0bbe%u0ba8%u0bbf%u0ba4%u0bbf

சென்னை, மார்ச் 30, 2010: சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூர்வதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது என்று முதல்வர் கருணாநிதி பெருமிதம் தெரிவித்தார்.  சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் அஞ்சல் தலையை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:
இந்த மண்ணின் மானம் காக்க, தனது இன்னுயிர் ஈந்த மறவர் குல மன்னன் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு அஞ்சல் தலையை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதி மன்னருக்கு சகோதரி மகனாக 1760 மார்ச் 30-ம் தேதி ராமநாதபுரம் அரண்மனையில் பிறந்தார். அவர் பிறந்த 72-ம் நாளிலேயே அவருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
1772 மே மாதத்தில் ஆர்க்காடு நவாப் மகன் உம்ரத்துல் உம்ரா, ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித் ஆகியோர் இணைந்து ராமநாதபுரம் கோட்டையைத் தாக்கிய போரில் ஆயிரக்கணக்கான வீர மறவர்கள் மடிந்தார்கள்.
12 வயது சிறுவனாக இருந்த இளவரசரும், அவரது தாயார், சகோதரிகளும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே சிறை வைக்கப்பட்டார்கள். அவர் சிறையிலே இருந்த 10 ஆண்டு காலத்தில் மறவர் சீமையில் தொடர்ந்து கலவரங்களும், குழப்பங்களும் கொந்தளித்ததால் 1782-ல் இளவரசர் சேதுபதி 22 வயதில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, ராமநாதபுரம் மன்னராகப் பொறுப்பேற்றார்.
சேது நாட்டை ஆக்கிரமித்து தன்னையும், தனது குடும்பத்தாரையும் பத்தாண்டு காலம் சிறையில் அடைத்த ஆர்க்காடு நவாப்பையும், ஆங்கிலேயக் கும்பெனியாரையும், பழிவாங்கத் துடித்த சேதுபதி, டச்சுக்காரர்களின் உதவியுடன், ராமநாதபுரத்துக்கு அருகிலே இருந்த காட்டுப் பகுதியில் பெரிய பீரங்கிகள் தயாரிக்கும் ஆயுதச் சாலையைத் தொடங்கினார். அதன்மூலம் தனது படை பலத்தையும் பெருக்கினார். சேதுபதிச் சீமையில் தானியங்களை விற்பனை செய்வதில் சுங்கவரி விதித்தல் கூடாது என்ற கும்பெனியாரின் கோரிக்கையையும் முத்துராமலிங்க சேதுபதி மறுத்துவிட்டார்.

 

BjfÚXVÛW G‡Ÿ†‰ ÚTÖ¡yP
rR‹‡W ÚTÖWÖyP ®WŸ ¡ÙT¥ ˜†‰WÖU¦jL ÚN‰T‡ ŒÛ]° AtN¥RÛX
L£QÖŒ‡ ÙY¸›yPÖŸ

இப்படி ஆங்கிலேயர் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் மறுத்த முத்துராமலிங்க சேதுபதி, விசாரணைக்கு வருமாறு திருநெல்வேலியில் இருந்த மாவட்ட ஆட்சியர் பவுனி சம்மன் அனுப்பினார். வாணிகம் செய்து பிழைக்க வந்தவர்கள் தனக்கு ஆணையிடுவதா எனக் கொதித்த சேதுபதி, அந்த ஆணையைப் புறக்கணித்தார்.
இவை காரணமாக எரிச்சலடைந்த ஆங்கிலேயர், அவரை ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி எனக் கோபத்துடன் கூறத் தொடங்கினர்.  1795 பிப்ரவரி 8-ம் தேதி ராமநாதபுரம் அரண்மனையைக் கும்பெனிப் படை முற்றுகையிட்டு, சேதுபதி மன்னரைக் கைது செய்து திருச்சியிலும், பின்னர் சென்னை கோட்டையிலும் சிறையில் அடைத்தது. அதே இடத்தில் தான் இன்று அவருக்கு அஞ்சல் தலையை வெளியிட கூடியிருக்கிறோம். சேதுபதி மன்னரை விசாரணை எதுவுமின்றி 13 ஆண்டு காலம் சிறையிலேயே வைத்திருந்தது. அடங்காத விடுதலை வேட்கையோடு சிறைக் கூடத்தில் அடைபட்டிருந்த நிலையில் 1809 ஜனவரி 23-ம் தேதி தனது 49-வது வயதில் சேதுபதி உலக வாழ்வை நீத்தார்.
வீரத்தியாகி முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் தீரத்தை, தியாகத்தைப் போற்றி அவரது நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு இந்தத் தமிழக அரசு விடுத்தக் கோரிக்கை நிறைவேறி, இன்று அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது என்றார் கருணாநிதி. தலைமைச்செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, முதன்மை அஞ்சல் துறைத்தலைவர் (தமிழ்நாடு வட்டம்) சாந்தி நாயர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விமர்சனம்:

  1. கருணாநிதி அல்லது திராவிட சித்தாந்திகளின் இந்தியப்பற்று நன்றாகவேத் தெரிந்துள்ளது.
  2. இந்த விழாக்களெல்லாம், மத-ஜாதி-இனவெறிகளில் ஆதாரமாக தேதிகளைக் குறித்து வைத்துக் கொண்டு கொண்டாடப்படும் போலி விழக்களாகும்.
  3. முன்னர் ஏனிந்த வீரர்கள் தமிழர்களுக்கு / திராவிட சித்தாந்திகளுக்கு ஞாபகம் வரவில்லை?
  4. சுதந்திர வீரர்களைக் கேவலப் படுத்தவே அப்பொழுது “மொழிப்போர் தியாகிகள்”, அவர்களுக்கு பென்ஸன், என்றேல்லாம் ஆரம்பித்து இருட்டடிப்பு செய்ததும் தமிழர்கள் / இந்தியர்கள் அறிவர்.
  5. இப்பொழுது கூட பிரிவினையை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு சரித்திர ஆதாரமில்லாத “ஆரிய-திராவிட இனவாத்தை”ப் பேசிக்கொண்டு இருக்கும் ஒரே கூட்டம் இந்த “திராவிடக் கட்சிகளே” எனலாம்.
  6. இந்தியநாட்டின் மீதான பற்று “கொடிநாள்” கலக்ஸனிலும், இம்மாதிரி கள்ளத்தனக் கொண்டாட்டத்திலும் வெளிப்படாது, ஆனால் மஹாத்மாவை “மகாத்மா” என்று கூட சொல்ல மறுக்கும் துரோகத்தில் தான் வெளிப்படும்.
  7. ஆகவே, இப்படியெல்லாம் மக்களை ஏமாற்ற வேண்டாம், குறிப்பாக இக்கால இளைஞர்கள் நிறையவே தெரிந்து கொள்கிறர்கள், சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் நிச்சயமாக இந்தியாவில் உள்ள இத்தகைய பிரிவினைவாத சக்திகளை அடையாளம் கண்டு கொள்வார்கள்.