Archive for the ‘விக்கிரகம்’ Category

கோவிலை உடைத்து பகவான் கடத்தல்: பெரியார் பிறந்த நாள் அதிசயம்!

செப்ரெம்பர் 18, 2010

கோவிலை உடைத்து பகவான் கடத்தல்

http://www.viduthalai.periyar.org.in/20100917/news25.html

திருத்துறைப்பூண்டி, செப். 17- திருத்துறைப் பூண்டி பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து சாமி சிலை களை கொள்ளை யடித்து சென்ற மனிதர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

திருவாரூர் மாவட் டம், திருத்துறைப்பூண்டி காவல் சரகம், பாமணி கிராமம் பெருமாள் கோவில்தெருவில் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இக் கோவிலை அதே கிராமத் தைச்சேர்ந்த கிருஷ் ணய்யா முதலியார் குடும் பத்தினர் நிருவாகம் செய்து வருகின்றன. இங்கு தண்டபாணி குருக்கள் என்பவர் பூஜை செய்து வருகிறார்.

நேற்று முன் தினம்இரவு பூஜை முடிந்தவுடன் கோவில் நடையை சாத்திவிட்டு அவர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்ற போது கோவிலின் வெளிக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த சீனி வாசப் பெருமாள், சிறீ தேவி, பூதேவி என 3 செப்பு சிலைகள் கொள் ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் இருக்கும். இது குறித்து கிருஷ்ணய்யா முதலியார் திருத்துறைப் பூண்டி காவல் துறையில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

விமர்சனம்:

  1. வழக்கம் போல, வீரமணி இதனை செய்தியாகக் கொடுத்தூள்ளார். ஆனால், இதை ஆத்திகம் செய்தானா, நாத்திகன் செய்தானா என்று சொல்லவில்லை.
  2. அதாவது பெரியார் பிறந்த நாளில்  செய்ததா-செய்விக்கப்பட்டதா என்ரு தெரியவில்லை.
  3. “இது குறித்து கிருஷ்ணய்யா முதலியார் திருத்துறைப் பூண்டி காவல் துறையில் புகார் செய்தார்” – என்றுள்ளது, ஜாதியை எதிர்க்கும் இவர் ஏன் “கிருஷ்ணய்யா முதலியார்” என்று குறிப்பிட வேண்டும்?
  4. உயர்ஜாதி மோகமா, அண்ணாதுரை முதலியாரின் மேலுள்ள பாசமா?