Posts Tagged ‘ஆரியர்’

பெரியாரிஸ கூத்தாடியும், திமுக உறுப்பினரும், இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞரும், ஆகிய வித்தகர் பாலியல் புகாரில் சிக்கியது ஏன், எப்படி?

ஏப்ரல் 3, 2022

பெரியாரிஸ கூத்தாடியும், திமுக உறுப்பினரும், இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞரும், ஆகிய வித்தகர் பாலியல் புகாரில் சிக்கியது ஏன், எப்படி?

பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை அளித்ததால் தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு இசைப்பள்ளி ஆசிரியை எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[1]. தமிழக பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன். இவர் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார்.இசை பள்ளிக்கு ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றபோது பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது[2]. தினமலர் மற்றும் ஒரு சில தமிழ் ஊடகங்கள் தவிர மற்ற ஊடகங்கள் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இது வரை போக்சோ சட்டத்தின் படி புகார் பதிவு செய்யப் பட்டதாகத் தெரியவில்லை, ஏனெனில், அத்தகைய செய்தியும் இல்லை.

ஆசிரியை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு அனுப்பியுள்ள புகார் கடிதம்: இது குறித்து அந்த ஆசிரியை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு அனுப்பியுள்ள புகார் கடிதம்: “நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசு இசை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். பிப். 28ல் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார். தலைமை ஆசிரியை அறைக்கு என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார். அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்துஇப்படி நடனமாட வேண்டும்என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.’ஏப்ரல் மாதம் பயிலரங்கம் மூன்று நாள் நடத்த போகிறேன். அங்கு உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும்என ஆசிரியைகளை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. நடந்த விஷயங்களை கடிதத்தின் வாயிலாக என்ன கூற முடியுமோ அவற்றை மட்டும் தங்கள் கவனத்திற்கு பணிந்து அனுப்பியுள்ளேன்,” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது: இதேபோல சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது பெண் ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை ஆசிரியர்கள் – ஊழியர்கள் பேரவை மாநில பொதுச்செயலர் அய்யனார் கூறியதாவது: “ஜாகீர் உசேன் பல மாவட்டங்களில் பெண் ஆசிரியைகளிடம் பாலியல் ரீதியாக பேசி இருக்கிறார். பெண்கள் மட்டும் பங்கேற்கும் நடன பயிலரங்கம் ஏப்ரலில் நடக்கிறது. இம்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி கூறுகையில் ”கரூர் மாவட்ட இசை பள்ளி ஆசிரியை அளித்த புகார் கடிதம் கிடைத்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றார். என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து ‘இப்படி நடனமாட வேண்டும்’ என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். நடந்த விஷயங்களை கடிதத்தின் வாயிலாக என்ன கூற முடியுமோ அவற்றை மட்டும் தங்கள் கவனத்திற்கு பணிந்து அனுப்பியுள்ளேன்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீரங்கம் சர்ச்சையில் பிரபலமான திமுக உறுப்பினர்: பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன். இவர் பல்வேறு கலை கலாச்சார நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்து வருகிறார். பிறப்பால் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் ஒரு இந்து தாயால் வளர்க்கப்பட்டவர் ஜாகிர் உசேன். கடந்த 30 ஆண்டுகளாக பரத நாட்டிய கலைஞராகவும் வைணவ சொற்பொழிவாளராகவும் இருந்துவருகிறார். இவருக்கு இந்திய அரசின் சமூக நல்லிணக்க விருது, அதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைமாமணி விருது, நாட்டிய செல்வன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்குள் செல்ல முயன்ற இவரை ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தடுத்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் தமிழ்நாடு கலை பண்பாடு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக இவர் நியமிக்கப்பட்டதிலிருந்து ஆய்வு என்று சுற்றி வருவது: அடிக்கடி இசை பள்ளிகளுக்கு ஜாகீர் உசேன் ஆய்வு மேற்கொண்டும் வருகிறார்[3]. அச்சமயத்தில் தான் அவர்  இசை மற்றும் நடன ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது[4]. இதுதொடர்பாக  பாதிக்கப்பட்டதாக கூறி கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியை கலை பண்பாட்டு துறை இயக்குனர் அவர்களுக்கு ஜாகிர் உசேன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்[5]. அந்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் ஒரு பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர், அரசு இசைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன்,  பிப்ரவரி 28 அன்று கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார். அப்போது என்னை மட்டும் தலைமை ஆசிரியை அறைக்கு உள்ளே வர சொல்லி அழைத்து கதவை மூடினார். அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து இப்படித்தான்  நடனமாட வேண்டும் என சொல்லி மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டார்.  ஏப்ரல் மாதம் மூன்று நாள் பயிலரங்கம் நடத்த போகிறேன், அங்கு உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும் என கூறி ஆசிரியைகளை தரக்குறைவாகப் பேசினார். இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது, தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணினேன்,” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது[6]. இதேபோல் சிவகங்கை மாவட்ட இசைப்பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போதும் ஆசிரியையிடம் ஜாகீர்உசேன் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது[7]. ஆனால், புகார் கொடுக்கப் பட்டுள்ளது[8]. இது தொடர்பாக அவர் மீது அடுத்தடுத்து புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது[9]. இதையடுத்து அவர் எழுதியுள்ள கடிதத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்[10].

ஏன் செய்திகள் வராமல் இருக்கின்றன, புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படால் இருக்கின்றது?: ஒரு பெண் கைப்பட எழுதி புகார் கொடுத்திருந்தாலும், அதை பற்றி அமுக்கி வாசிக்கும் போக்கு மிக பிரமிப்பாக இருக்கிறது. ஜாகீர் உசேன் ஏற்கெனவே ஶ்ரீரங்கம் விசயத்தில் அடாவடித் தனமாக நடந்து கொண்டதால், ஊடகங்கள் மூலம் அறியப் பட்ட நிலை உண்டாயிற்று. இப்பொழுது வேறு முறையில், பெயர் அடிபடுகிறது. பொறுப்புள்ள மனிதன், அதன்படி ஒழுக்கமாக, நேர்மையாக, நடந்து கொ/ண்டிருக்க வேண்டும். அரசியல் அதிகாரம் என்ற தோரணையில் இந்த பதவி கிடைத்திருக்கிறது, ஏதோ, தனது கலைத்திறமையால் கிடைத்து விடவில்லை. 2021ல் உறுப்பினர் ஆகி, மேலும், தேர்தலின் போது, கொடி பிடித்து, தெருக்களில் பிரசாரம் செய்து, உடனடியாக இந்த பதவி பெறப் பட்டுள்ளது. இத்துறையில் சென்னையிலேயே ஆயிரக் கணக்கான வல்லுனர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு இத்தகைய பதவி, கௌரவம், சிறப்புக் கிடைப்பதில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையான நாட்டியகலைஞர்கள் அவ்வளவே. அரசியல்வாதிகள் பரிந்துரைக்கும் அளவில் இல்லாத சாதாரண மக்கள்.

மகளிர் அமைப்புகள், பெண்ணிய போராளிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?: பாலியல் புகார்களை உடனடியாகக் கவனிக்கப் படவேண்டும், நடவ்டிக்கை எடுக்கப் படவேண்டும் என்றுள்ளது. அந்நிலையில், இந்த பாலியல் குற்றம், சுற்றாச்சாட்டு, புகார் பற்றிய செய்திகள் கூட வராமல் இருப்பது எதோ அடிப்படையில் சரியாக இல்லை என்றெ தெரிகிறது. ஆளும் கட்சியி உறுப்பினர், சென்ற வாரம் கூட முதலமைச்சர் கூட துபாய் எல்லாம் சென்று வந்தவர், அதனால், அவருக்கு வேண்டியவர் என்றேல்லாம் புகார் பெற்ற அதிகாரிகள் நினைத்து, தயங்குகிறார்கள் போலும். வழக்கம் போல மகளிர் அமைப்புகள், பெண்ணியப் போராளிகள் என்றெல்லாம் இருப்பவர்கள் கூட அமைதியாகத் தான் இருக்கின்றனர். பிறகு இத்தகைய பாலியல் புகார்கள், பாதிக்கப் பட்ட பெண்கள் இவர்களது நிலை என்னவாகும்?.

© வேதபிரகாஷ்

03-04-2022


[1] தினமலர்,அரசு இசைப்பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: ஜாகீர் உசேன் மீது புகார்,  Updated : ஏப் 02, 2022  12:45 |  Added : ஏப் 02, 2022  11:1.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2998215

நடன கலைஞர் ஜாகீர் உசேன் மீது குவியும் பாலியல் புகார்மேலும் ஒரு பெண் ஆசிரியை கலை பண்பாட்டு துறைக்கு பரபரப்பு கடிதம், Author: Babu Lakshmanan, 2 April 2022, 10:05 am.

[4] https://www.updatenews360.com/trending/karur-dance-school-teacher-sexual-complaint-against-dancer-zaheer-ushen-020422/

கதிர்.நியூஸ், ஆய்வு என்ற பெயரில் அரசு இசைப்பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை: ஜாகீர் உசேன் மீது பரபரப்பு புகார்!, By : Thangavelu  |  2 April 2022 1:35 PM

https://kathir.news/tamil-nadu/–1362877

[5] தமிழ்.ஏசியா.நெட்.நியூஸ், டேன்ஸ் டீச்சருடன் அறைக்குள் கதவை மூடிக்கொண்ட ஜாகீர் உசேன்.. அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. பயங்கர புகார், Ezhilarasan Babu, Chennai, First Published Apr 2, 2022, 2:26 PM IST; Last Updated Apr 2, 2022, 2:26 PM IST.

[6] https://tamil.asianetnews.com/crime/zakir-hussain-closes-the-door-to-the-room-with-the-dance-teacher-sexual-complaint-against-him–r9pfi0

[7] கதிர்.நியூஸ், ஆய்வு என்ற பெயரில் அரசு இசைப்பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை: ஜாகீர் உசேன் மீது பரபரப்பு புகார்!, By : Thangavelu  |  2 April 2022 1:35 PM.

[8] https://kathir.news/tamil-nadu/–1362877

[9] குமுதம், அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராளர் மீது பாலியல் புகார், kumud

am  | TAMILNADU| Updated: Apr 02, 2022. https://www.kumudam.com/news/tamilnadu/42220

[10] https://www.kumudam.com/news/tamilnadu/42220

தமிழ் நூல்களை அழித்த பெஸ்கி என்ற வீரமாமுனிவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவது பகுத்தறிவா, வெள்ளைக்கார அடிமைத்தனமா, காலனிய கூலி மனப்பாங்கா?

நவம்பர் 9, 2021

தமிழ் நூல்களை அழித்த பெஸ்கி என்ற வீரமாமுனிவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவது பகுத்தறிவா, வெள்ளைக்கார அடிமைத்தனமா, காலனிய கூலி மனப்பாங்கா?

வீரமாமுனிவர், சித்திரக் கதைகள் புத்தகங்களை முதலமைச்சர் வெளியிட்டார்: சென்னையில் 2015ம் வருடத்தை விட அதிகமான மழை பெய்து, வெள்ளம் உண்டாகி, லட்சக் கணக்கான மக்கள் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இப்படி, பெஸ்கிவியின் பிறந்த நாளைக் கொண்டாடி இருப்பது வேடிக்கையான விசயம் தான். தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, வீரமாமுனிவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் “வீரமாமுனிவர்”[1] மற்றும் வீரமாமுனிவரின் கையெழுத்து பிரதி ஆவணத்தின் அச்சுப் பிரதியான “சித்திரக் கதைகள்”[2] ஆகிய புத்தகங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 8.11.2021 அன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு வெளியிட்டார்[3], என்ற செய்தி வந்துள்ளது. ஒரு பக்கம் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இடங்களுக்குச் சென்றார் என்ற செய்திகளும் வரும் நேரத்தில், இச்செய்தியும் வந்துள்ளது. ஸ்டாலினும் உடைகளை மாற்றிக் கொண்டு, தயாராக இந்நிகழ்ச்சிற்கு வந்துவிட்டார். இந்நிகழ்வின்போது, புத்தகங்களின் ஆசிரியர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க. சுபாஷினி மற்றும் பேராசிரியர் ஆனந்த் அமல்தாஸ், எழிலினி பதிப்பக உரிமையாளர்கள் ஒளிவண்ணன் மற்றும் நல்லினி, பேராசிரியர் முனைவர் பாப்பா, ஆய்வாளர் வேதநாயகம் ஆகியோர் இருந்தனர்[4].

யார் இவர்கள், எவ்வாறு ஒன்றாகக் கூடினர், புத்தகங்களை வெளியிட்டனர்?: யார் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் எழுதலாம், அதை யார் வேண்டுமானாலும் பதிப்பிடலாம், அச்சிடலாம், யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஆனால், தமிழ் என்று சொல்லிக் கொண்டு, பெஸ்கி என்கின்ற கொடூரமான ஒரு கிருத்துவப் பாதிரியைத் தூக்கி[ப் பிடித்து உண்மைகளை மறைத்து, அவன் ஏதோ யோக்கியன், புனிதன், தமிழ் வளர்த்தவன் என்றெல்லாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது மோசமான விசயாமாகும். பிரான்சிஸ் சேவியல் குளூனி மற்றும் ஆனந்த் அமல்தாஸ்  ஏற்கெனவே பரிச்சயம் ஆனவர்கள் சேர்ந்து புத்தகங்களை எழுதியுள்ளனர், கிருத்துக் கூட்டங்களில் பங்கு கொண்டுள்ளனர். வேதநாயகமும், மற்றவர்களும் ஒருவருக்கு ஒருவர் அறிந்தவர்கள் தாம். அ.பாப்பா, மதுரை கிருத்துவக் கல்லூரியில் தமிழ்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் எல்லோரும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள். சரியாக இன்று பெஸ்கியின் பிறந்த நாளன்று அப்புத்தகங்களை வெளியிட தீர்மானித்து, காரியத்தை முடித்துள்ளனர்.

வீரமாமுனிவர் போர்வையில், கிருத்துவர்கள் புகழ்ந்து பிரச்சாரம் செய்வது: டொமினிக் ராஜ் எழுதிய தேம்பாவணி மொழிபெயர்ப்பு என்று “தி ஹிந்து” ஆங்கில நாளிதழில் நவம்பர் 2020 இதே தேதியில் பிரம்மாண்டமாக செய்தி வந்திருந்தது. பெஸ்கி செய்த அட்டூழியங்களையெல்லாம் மறைத்து, எழுதியதாக அக்கட்டுரை இருந்தது. அதாவது பல தமிழ் ஓலைச்சுவடிகளை அழித்தொழித்த பெஸ்கி தமிழுக்குத் தொண்டாற்றினால் என்ற பாட்டைப் பாடியிருந்தார். ஆக இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பெஸ்கியை வெள்ளையடித்து, புனிதராக்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதை கவனிக்கலாம்.  உண்ம்மையில், இவன் தமிழகத்தில் பல நூற்சுவடிகளை சேகரித்தான். பலவற்றை தான் எழுதியது போல, சில ஓலைச்சுவடிகளை சேர்த்து, சுற்றில் விட்டான். சதுர அகராதி போன்றவை அப்படித்தான். பிறகு, தனது குருவான சுரதீப கவிராயரை ஏமாற்றி பல நூல்களைத் திருடிக் கொண்டான். அவற்றையும் தனது போல அறிவித்துக் கொண்டான்.

சுப்ரதீப கவிராயர் (c.1620-1700): சுப்பிரதீபக் கவிராயர் என்பவர், 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர் ஆவர். மதுரையைச் சேர்ந்த இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவரது பாடல்களை ஒருமுறையாவது படித்தவர்கள், அவரது தமிழ் வார்த்தைப் பிரயோகம், சொல்லாட்சி, கவித்துவம், தமிழ்பாரம்பரிய யதுகை-மோனை, அகத்துறை முதலியனவற்றை அறிந்து கொள்ளலாம். இவையெல்லாம், சுட்டுப் ஓட்டாலும் பெஸ்கிக்கு வராது. “தேம்பாவணி என்னும் நூலை எழுதியதாகக் கருதப்படும் வீரமாமுனிவர் என அறியப்படும் கிறித்தவப் பாதிரியாரான கான்சுடன்டைன் ஜோசப் பெஸ்கி (1680-1747) என்பவருக்குத் தமிழ் கற்பித்தவர் இவரே. தேம்பாவணியின் கதையை வீரமாமுனிவர் சொல்ல, அதைப் பாடலாக எழுதியவர் சுப்பிரதீபக் கவிராயரே என்ற கருத்தும் உண்டு, வீரமாமுனிவரின் தூண்டுதலால் இவர் கிறித்தவராக மதம் மாறினார்”, என்று இப்பொழுது விகிபீடியா போன்றவை திரித்துக் கூறுகின்றன. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலக்கோட்டையை ஆண்ட பாளையக்காரரான கூளப்பநாயக்கரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். இவற்றைப் படித்து, தேம்பாவணியைப் படித்தால், ஆசிரியர் யார் என்பதனைக் கண்டு பிடித்து விடலாம்.

பெஸ்கி சிவப்பிரகாசரின் நூலை எரித்தது: ஏசுமத நிராகரணம் என்னும் நூல், சதுரகராதி யயற்றிய “வீரமாமுனிவர்” என்னும் கிருஸ்துவன், கவிச்சக்கரவர்த்தியாகிய ஸ்ரீ சிவப்பிரகாட சுவாமிகள் கண்டிதெழுயதுமாகும். ஆனால், அப்பாதிரி அந்நூலை மற்றநூல்களோட சேர்த்து எரித்துவிட்டமையால், அது கிடைதில. இருப்பினும் கிடைதுள்ள சில பாடல்கள் இதோ:

அறிகிலை நரர்க்காய் வேண்டி யளித்தனன் மிருகமாறி
யுஇறைவ னென்றோ யோரீ யீன்றிட மலமீ தூருஞ்
சிறுபுழு விரையு றாதென் செல்குவை யதனை நோக்க
வறிவரு நுணிய தேகி யனந்தநீ யவையென் செய்வாய்

வாய்திறந் தலறும் வேங்கை வல்விட முமிழ்பாம் பாதி
நேயமற் றெவர்கூற் றாய நிகழ்வதெ னுலகத் தந்தாட்
டூயவ னாதிக் கோதுஞ் சொன்னெறி யடங்கா தென்னி
குயகோ வாதி மாந்தர்க் கூங்கிய விதமென் கொல்லோ

சொல்லியன னவர்க்க சாதி யடங்கவுந் துயரஞ் செய்தே
கொல்லமற்று றையவு மீச னென்றிடிற் கொடுநா காதி
நல்லவா வோரோர் காலத் தடங்கலா னவிலச் சாதி
யெல்லல்செய் திடலாற் ரீயோ யறைந்தசொற் பழுதே யாகும்

நன்றி: பாடல்களைக் கொடுத்துதவிய ஆராய்ச்சியாளர் திரு கே. வி. ராமகிருஷ்ண ராவ்.

* மற்ற பாடல்கள் கிடைக்குமா?

* மற்ற பாடல்கள் இருந்தால், கிடைத்தால் கொடுத்துதவுங்கள்.

* அக்காலத்தில் முதலில், ஓலையில் புலவரே எழுதுவர் அல்லது அவர் சொல்ல மாணவன் அல்லது சுவடியெழுதுபவன் எழுதுவான்.

* பிறகு புலவர் / கவிஞர் ஏற்றுக் கொண்டவுடன், அரங்கேறியப் பிறகு அல்லது மற்றவர் ஏற்றுக் கொண்டவுடன், பிரதிகள் எடுக்கப் படும்.

* அவைதாம் குருக்குலங்கள், மடாலயங்கள் முதலிய இடங்களில் இருக்கும்.

* ஆகவே, ஒருவேளை ஏதாவது பிரதி இருந்தால், ஒருவேளை ஐரோப்பிய, வாடிகன் நூலகங்களில், ஆவணக்காப்பகங்களில் இருந்தால், ஒருபிரதியை இந்தியர்கள் வாங்கிக் கொள்ளவேண்டும்.

* கிருத்துவ மிஷனரிகள், அவ்வாறு பல்லாயிர / லட்சகணக்கான ஓலைச்சுவடிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இன்றும் அச்செயல்கள் நடக்கின்றன.

* ஒரு கூகுள் தேடலில், எவ்வளவு ஓலைச்சுவடிகள் இன்றும் விற்பனைக்கு உள்ளன என்பதை பார்த்து அறியலாம்!

வால்டர் எலியட் கால்டுவெல்லுடன் பேசி ஓலைச்சுவடிகளை அழித்தது: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (1680-1747), மற்ற கிருத்துவ பாதிரிகளின் நண்பர். ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், நாணயங்கள் என்று முக்கியமான ஆதாரங்களை சேகரிப்பது அவர்களது முக்கியமான வேலை. இதை ஒவ்வொரு கம்பனி அதிகாரியும் செய்து வந்தான். சர் வால்டர் எல்லியட் (1803-1887), சென்னையில் ரான்டல் தெருவில் 1820-முதல் 1860 வரை நாற்பது ஆண்டுகள் வசித்தவன். வழக்கம் போல செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இவனுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. பெர்டினான்ட்கிட்டல் (1832-1903) ராபர்ட் கால்டுவெல் (1814-1891) மற்றும் ஜார்ஜ் போப் (1820-1908) முதலியோர் நண்பர்கள். இவர்கள் எல்லோருமே கூடி பேசி, திட்டம் படி வேலை செய்துள்ளனர். வால்டர் எலியட்டிடம் பெஸ்கியின் ஒலைச்சுவடிகள் தொகுப்பு முழுவதும் வந்தது. அப்பொழுது, சில முக்கியமான ஓலைச்சுவடிகளை அழித்தான், ஒரு நகலை மட்டும் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தான். முன்பு, பெஸ்கியியே சில ஓலைச்சுவடிகளை அழித்துள்ளான். ஆகவே, இவர்கள் எல்லோரும் தமிழுக்காக உழைத்தார்கள் என்றெல்லாம் இன்று பிரச்சாரம் செய்து, சிலைகள் வைத்து, வருடா வருடம் மாலைப் போட்டுக் கும்பிட்டு வருவது படுகேவலமாகும். வெள்ளைக்கார அடிவருடி கூலிப் புத்தியைத்தான் காட்டுகிறது. பகுத்தறிவு போர்வையில் இதையெல்லாம் செய்து வருகிறார்கள். அதனால் தான் அது இந்து விரோதமாகவும் இருக்கிறது. ஆகவே, இத்தகைய பின்னணியில் உள்ள பெஸ்கியை ஆதரித்து சுபாஷிணி போன்றோர், மற்ற கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு புத்தகங்களை வெளியிடுவது, அவர்கள் தமிழ் நூல்களை அழித்த கொடுமையான காரியங்களை மறைத்து, வெள்ளை அடிக்கும் வேலையாக இருக்கிறது. ஏற்கெனவே இவர் மீது ஓலைச்சுவடிகளை இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்கிறார் என்ற புகார் உள்ளது. ஒரு வேளை அதனை மறைக்க இத்தகைய நாடகங்களை அரங்கேற்றி வருவது போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

09-11-2021


[1] வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாறு, பல்வேறு புனைவுகளைக் களைந்து களப்பணியின் வழியாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கண்காணிப்பாளராக எல்லீஸ் அவர்களிடம் பணியாற்றிய முத்துச்சாமி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய வீரமாமுனிவர் வரலாறு மற்றும் வீரமாமுனிவரின் தொடர்பான வரலாற்றுச் செய்திகள். தொகுப்பும் பதிப்பும்: முனைவர் க. சுபாஷிணி, முனைவர் ஆனந்த் அமலதாஸ், விலை ரூ 350/- [சுபாஷிணியின் பதிவின்படி]

[2] சித்திரக்கதைகள் – பாரிஸ் தேசிய நூலகத்தில் கையெழுத்துப் பதிவாகப் பாதுகாக்கப்படும் 1730 ஆம் ஆண்டு ஆவணம் முதல்முறையாக அச்சுப் பதிப்பாக. ..! பதிப்பாசிரியர்கள்: முனைவர் க. சுபாஷிணி, முனைவர் ஆனந்த் அமலதாஸ், விலை ரூ 300/-[சுபாஷிணியின் பதிவின்படி].

[3] தினமலர், வீரமாமுனிவர் பிறந்த நாள்தமிழக அரசு சார்பில் மலர்மரியாதை, பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2021 14:40.

[4] http://www.dinamalarnellai.com/web/news/108167

நாத்திகர்கள், திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகள் வள்ளலாரைப் பிடித்துக் கொள்வதேன்? மாமிசம் சாப்பிட்டுக் கொண்டு, சாராயம் குடித்துக் கொண்டு சன்மார்க்கம் பேச முடியுமா? (1)

ஒக்ரோபர் 29, 2021

நாத்திகர்கள், திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகள் வள்ளலாரைப் பிடித்துக் கொள்வதேன்? மாமிசம் சாப்பிட்டுக் கொண்டு, சாராயம் குடித்துக் கொண்டு சன்மார்க்கம் பேச முடியுமா? (1)

புதிய ஆட்சி நடக்கிறதா, விளம்பரங்கள் மூலம் ஓடுகிறதா?: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினம்-தினம் அறிக்கைகள், திட்டங்கள், பணி நியமனங்கள், ஆணைகள், விழாக்கள், புகைப் படங்கள், செய்திகள், முதலமைச்சர்-அமைச்சர்கள் அதிரடி விசிட்டுகள்-விஜயங்கள், தொலைக் காட்சிகளில் வாத-விவாதங்கள்…..இப்படி 100 நாட்கள், 150 நாட்கள் என்று ஓடுகின்றன, சுவரொட்டிகள் ஒட்டப் படுகின்றன, விளம்பரங்கள் கொடுக்கப் படுகின்றன, நாங்கள் தான் நம்பர்.1 என்று கணிப்புகள் வருகின்றன. இடையிடையே, நீதிமன்ற வழக்குகள், தற்காலிக தடை, ஒத்தி வைப்பு, தள்ளி வைப்பு, தள்ளுபடி, …….பிறகு அமைதியான நிலை. எல்லாம் சரி, உண்மையில், இயல்பு வாழ்க்கையில், நிதர்சனத்தில் என்ன நடக்கிறது?  மக்கள் என்ன சினிமாவா பார்த்துக் கொண்டிருக்கின்றனர்? சாதாரண மக்கள் உழைக்கத்தான் வேண்டும், சம்பாதிக்க வேண்டும், பொருட்களை வாங்கத்தான் வேண்டும். அப்பொழுது தான் உலை எரியும், சாப்பாடு கிடைக்கும், குடும்பம் நடக்கும்! அவர்கள் ஆட்சியாளர்கள் போல படம் காட்டிக் கொண்டிருக்க முடியாது.

நாத்திகர்கள் கைகளில் வள்ளலார் படும் பாடு: நக்கீரன் நாரதராக ஆறியதை விட ஜோக்கராக, எட்டப்பனாக, அரைகுறை ஆதாரங்களுடன் கட்டுக் கதைகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கி வருவது தெரிகிறது. தமிழக மக்களுக்கு, விருவிருப்பாக, பரபரப்பாக, அதிரடியாக, ஆபாசம், விரசம், கொச்சைத்தனம், கொலை, கொள்ளை என்றெல்லாம் வரும் செய்திகள், படங்கள், வீடியோக்கள் என்றால் ஜாலியோ ஜாலிதான். கேட்டுக் கொண்டே, பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அத்தகையோர் இன்று தமிழக பாடதிட்டத்திற்கும் தலைவராக, உறுப்பினராக வது விட்டனர். ஆக, ராமலிங்கம், இராமலிங்க அடிகள், வள்ளலார், என்ன பாடு படப் போகிறார் என்பதனை அறிந்து கொள்ளலாம். நக்கீரன், “வடலூரில் சுத்த சன் மார்க்க நெறிகளுக்கு இடையூறு வராமல், தமிழக அரசு நெறிப் படுத்த வேண்டும்என்ற குரல், பக்தர்கள் தரப்பிலிருந்து பலமாக எழுந்துவருகிறது[1]. மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கொடி பிடித்த ஆன்மிகப் புரட்சியாளராக வடலூர் வள்ளலாரை முற்போக்கு உலகம் போற்றிவருகிறது[2]. சாதி மத பேதங்களுக்கு எதிராகக் கொடி பிடித்த ஆன்மீகப் புரட்சியாளராக வடலூர் வள்ளலாரை முற்போக்கு உடலகம் போற்றி வருகிறது,” என்ற பீடிகையோடு, தனது வேலையை ஆரம்பித்துள்ளது. 24-03-2010 தீர்ப்பினைக் குறிப்பிட்டு, “பார்ப்பன எதிர்ப்பைச்” சேர்த்து, ஜோதி வழிபடு மட்டும் நடத்தப் பட வேண்டும் என்று இழுத்து முடித்துள்ளது.

72 ஏக்கர் பரப்பளவில், கோடிக்கணக்கில் செலவுடன் சர்வதேச மையம்: வடலூரில் உள்ள சத்திய ஞான சபை வளாகத்தில் சர்வதேச வள்ளலார் மையம் அமைப்பதற்காக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் ஜூன் 2021ல் வடலூர் வந்து ஆய்வு செய்தனர்[3]. பின்னர் அவர்  சத்திய ஞானசபை, தர்மசாலை, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்[4]. அதன்பிறகு சர்வதேச மைய அமைப்பதற்கான திட்ட வரைபடத்தை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில்[5], விரைவில் டெண்டர் கோரப்பட்டு, 72 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச மையமாக தொடங்குவதற்கான திட்ட மதிப்பீடு உலக அளவில் கோரப்பட்டு முடிவு செய்யப்பட்டு வெகு விரைவில் சர்வதேச மைய பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்[6].  அதோடு, சென்னை ஏழுகிணறு இராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீடு அரசு சார்பில் சீரமைக்கப்பட்டு அமைக்கப்பட்டு, மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்ஜீனியர்  சிவக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள், சன்மார்க்க ஆர்வலர்கள் உடனிருந்தனர்[7].

திட்ட வரைபடம், திட்ட மதிப்பீடு, உலக அளவில் டெண்டர், 72 ஏக்கர் நிலம், கோடிக்கணக்கில் செலவு முதலியன: அயோத்திதாசருக்கு மணிமண்டபம், கருணாநிதிக்கு அதே இடத்தில் சிலை, பெரியாருக்கு ரூ 100 கோடிகளில் சிலை, என்றெல்லாம் ஆரம்பித்து “சர்வதேச மையம்,” ஏழுகிண்று வீடு என்று முடிந்துள்ளது. எல்லாமே தயாரக வைத்துக் கொண்டு, பார்வையிடுவது என்பது, திட்டமிட்டே செய்வது தெரிகிறது. திட்ட வரைபடம், திட்ட மதிப்பீடு, உலக அளவில் டெண்டர், 72 ஏக்கர் நிலம், கோடிக்கணக்கில் செலவு என்பதெல்லாம், “அல்லாவுத்தீனும் அற்புத விளக்கும் பாணியில் ஜீ பூம்பா,” அல்லது “கதவைத் திறந்திடு சீஸே” என்று வந்து விடாது. 11-06-2021 அன்று ஆணையிடப் படுகின்றது என்றால், முன்னமே தயாராகி, தயாராக உள்ளார்கள் என்று தெரிகிறது. இதன் மூலம், எத்தனை கான்ட்ராக்டர்கள், கம்பெனிகள், முதலாளிகள் பலன் பெறப் போகிறார்கள் என்பதை, “அரும்பெறும் ஜோதியே” வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். “தனிபெரும் கருணை”யுடன் தான் எல்லோருக்கும் ஆர்டர்கள் கொடுக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும். உலக டென்டர், உலக உதவி என்றெல்லாம் இருக்கும் போது, அவற்றின் பின்னணி முதலியவை இனிமேல் தான் தெரியவரும். கிருத்துவர்-துலுக்கர் முதலியோரின் ஆதிக்கம் இருக்கும். ராமலிங்கர் காலத்திலேயே இருந்த போது, இபொழுது இருப்பதில் ஆச்சரியமில்லை. வள்ளலார் வணிக சின்னமாகிறது, வியாபாரமயமாக்கப் படுகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

வள்ளலார் புத்தமதத்தைப் பின்பற்றச் சொன்னாரா?: ஓய்வு பெற்ற நீதிபதி, சந்துரு புத்தமதத்தைப் பின்பற்றும்படி மறைமுகமாக மக்களை வேண்டியுள்ளார் என்பதே அக்கருத்தாகும் என்று எடுத்துக் காட்டியுள்ளது திக பத்திரிக்கை[8]. இதற்குச் சான்றாக,

‘சாக்கிய வேதந் தேக்கிய பாதம்

தாக்கிய ஏதம் போக்கிய பாதம்’

‘புத்தந்தரும் போதா வித்தத்தருந் தாதா

நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா;

என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை முன் வைக்கிறார் என்றும் விளக்குகிறது[9]. ஓய்வு பெற்ற பிறகு இவர் தனது மார்க்சீய-திராவிடத்துவக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்[10]. சம்பந்தார் சாக்கியர்களை கடுமையாகத் தாக்கியுள்ளபோது, இவர் பௌத்தத்தை ஆதரித்தார் என்பது முரண்பாடானது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் “சைவசித்தாந்தத்” துறைத் தலைவர், சைவர்கள் இந்துக்கள் இல்லை என்று வெளிப்படையாக பேசி, உலக மாநாட்டையும் நடத்தியுள்ளார். இனி, வள்ளலார் கூட்டங்களும் அதே போல நாங்கள் இந்துக்கள் இல்லை என்று அறிவிக்கலாம், மைனாரிட்டி ஸ்டேடஸ் கூட கேட்கலாம்.

உலகத்தில் இருக்கும் நிறுவனங்கள் உதவ முன்வருவது: பசிப்பிணி போக்கிய வள்ளலார் பெருமானின் பெயரில் அமைய உள்ள இந்த சர்வதேச மையத்திற்கு ஹலோ ஒத்துழைப்பை நல்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயங்கிவரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை, வடலூர் தலைமைச் சங்கம், தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள சன்மார்க்க சங்கங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள சன்மார்க்க சங்கங்கள் கூட்டமைப்புகள் அனைத்தும் இணைந்து வள்ளலார் சர்வதேச மையத்திற்கு தேவையான பொருள் உதவியை வழங்க முடிவு செய்துள்ளனர்[11]. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளிடம் நிதியினை திரட்டித் தரவும் ஏற்பாடு செய்து வருகின்றன[12]. அரசு காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றி இந்த சர்வதேச மையமும் அதைச் சார்ந்த பணிகளையும் முழு ஈடுபாட்டோடு செய்வதற்கு சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர். உலகின் மிகப்பெரிய புரட்சியாளர்களில் ஒருவரான வள்ளல் பெருமானின் பெயரில் அமைய உள்ள இந்த சர்வதேச மையம் தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையும், சன்மார்க்கக் கொள்கைகளை உலகம் கொண்டு செல்லவும் இந்த சர்வதேச மையம் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

© வேதபிரகாஷ்

29-10-2021


[1] நக்கீரன், வள்ளலார் பக்தர்கள் கோரிக்கை நிறைவேறுமா? –அரசு உருவாக்கும் சர்வதேச மையம்!, Published on 27/10/2021 (04:12) | Edited on 27/10/2021 (09:55).

[2] https://www.nakkheeran.in/nakkheeran/will-request-vallalar-devotees-be-fulfilled/will-request-vallalar-devotees-be-fulfilled

[3] தினத்தந்தி, வடலூர் சத்திய ஞானசபையில்சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்அமைச்சர் சேகர்பாபு தகவல், ஜூன் 11, 10:39 PM.

[4] https://www.dailythanthi.com/amp/News/Districts/2021/06/11223919/The-task-of-setting-up-an-international

[5] NEWS18 TAMIL, சர்வதேச மையமாகும் வள்ளலார் சத்திய ஞான சபை: பணிகள் விரைவில் தொடங்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தகவல், LAST UPDATED : JUNE 13, 2021, 14:19 IST.

[6] https://tamil.news18.com/news/tamil-nadu/cuddalore-district-cuddalore-vadallur-vallalar-sathiya-gnana-shaba-will-change-into-international-centre-soon-says-dmk-sekarbabu-mur-481343.html

-center.vpf

[7] கடலூர் மாவட்டம், செ.வெ.எண்.19 நாள்: 11-06-2021, https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2021/06/2021061476.pdf

[8] உண்மை, பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முடித்த வழக்கின் தீர்ப்பு, பிப்ரவரி 16-28, 2015.

[9] http://www.unmaionline.com/index.php/2015-magazine/133-febraury-16-28/2446-finishing-brahmin-cultural-invasion-case-hearing.html

[10]  சிபிஎம் கட்சியின் உறுப்பினர், கம்யூனிஸ்ட் மாணவ இயக்கத்தின் தலைவர், என். ராமின் கல்லூரி தோழர். ஶ்ரீரங்கத்தில் பிறந்த இவரது குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருக்கின்றன. சிலைத் திருட்டு விவகாரத்தில் அர்ச்சகர்கள் ஏன் கைது செய்யப் படவில்லை என்று கேள்வி எழுப்பியவர். அப்படியென்றால் பொறுப்புள்ள அறநிலையத்துறை அமைச்சர், முதலமைச்சர் என்று எல்லோருமே கைது செய்யப் படலாமே?

[11] மக்கள் குரல், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்: தமிழக அரசுக்கு சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நன்றி, Posted on July 19, 2021

[12]https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87/

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

செப்ரெம்பர் 22, 2021

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

பெரியார் உலகம்சுற்றுலா தலம்நிச்சயமாக வியாபாரத்திற்கு வித்திட்டதே: பெரியார் பெயரைச் சொல்லி, திருச்சி-ஹைவேயில், இந்த பெரிய வணிக வளாகத்தைக் கட்டத் தீர்மானித்திருப்பது, நிச்சயமாக வியாபாரத்திற்குத் தான். ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது[1]. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன். இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம். இதனால், அருகில் உள்ள ஓட்டல்களுக்கு கூட்டம் குறையும். அவர்கள் கவலைப் படுவார்கள். ஆக, பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இங்கு சென்றால், பலன் கிடைக்காது என்று யாராவது கிளப்பி விட்டால்[2], ஒருவேளை இந்த நாத்திக வளாகத்தின் முக்கியத்துவம் குறையலாம். ஆனால், மற்றவர்கள் வரத்தான் செய்வார்கள்.

நாத்திக ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!: புரட்டாசி மாதம் ஆரம்பித்தாகி விட்டது, சும்மா இருப்பார்களா, பெருமாள் கோவில் கொள்ளை நடந்துள்ளது! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழாமூர் கிராமத்தில் உள்ள கைகொடுக்கும் பெருமாள் உள்ளது. இக்கோயிலில் 18-09-2021 அன்று புரட்டாசி மாத முதல் சனி என்பதால் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் வழக்கம்போல் இரவு கோயிலை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில், இரவு கோவிலின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், மூன்றடி உயரம் உள்ள மூலவர் பெருமாள் கல் சிலையை திருடிச்சென்றுள்ளனர்[3]. 19-09-2021 அன்று பிற்பகலில் அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் மூலவர் சிலை மாயமாகி உள்ளதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக பெருமாள் விக்கிரகம் (மூன்றடி உயரம்), நகைகள் கொள்ளை,..எனும்பொழுது, திராவிட ஔரங்கசீப்புகள், மாலிகாபூர்கள் கிளம்பி விட்டனர்! ஒரு பக்கம் சிலை வைக்கிறோம் என்கிறார்கள், இன்னொரு பக்கம் சிலைகள் மாயமாகின்றன.

வெங்கடாஜலபதி விசயத்தில் இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்துர்கா தம்பதியர்: 95 அடி உயரத்திற்கு சிலை உடைத்தவனுக்கு சிலை வைப்போம் என்கின்றனர், ஆனால், மூன்றடி வெங்கடாஜபதி சிலை திருடு போயுள்ளது. வேங்கட ராமசாமி நாயக்கருக்குக்கு சிலை வைக்கும் நாத்திக-இந்துவிரோதிகளுக்கு, வேங்கடாஜலபதி மீது ஏன் போர் என்று தெரியவில்லை! இந்த அழகில், மனைவி திருமலைக்கு சென்று கும்பிடு போடுவதும், திருமலை அர்ச்சகர்கள் கணவன் வீட்டிற்கு வந்து, தம்பதியரை வாழ்த்தி, மாலை போட்டு, கயிறு கட்டி விடுவதும் என்ன என்று தெரியவில்லை! இவற்றைப் பற்றி வீடியோ, புகைப் படங்கள் என்று அமர்க்களப் படுகின்றன. ஆனால், இத்தகைய விசயங்களில், ஸ்டாலின்-துர்கா தம்பதியர் இரட்டை வேடம் போடுகின்றனர் என்றாகிறது. புருஷன்-நாத்திகன், பெண்டாட்டி-ஆத்திகன் என்று இருந்தால், அந்த திருமலை அர்ச்சகர்களை உள்ளே விட்டிருக்கக் கூடாது, மந்திரங்கள் சொல்ல அனுமதித்து இருக்கக் கூடாது, கயிறு கட்டுதல், போன்றவை நடந்திருக்கக் கூடாது. துர்கா, தனது கணவரிடம், “எதுக்குங்க இப்படியெல்லாம் நடக்கிறது, நீங்கள் கொஞ்சம் நடவடிக்கை எடுக்கக் கூடாதா?,” என்று கேட்கலாம், ஆனால், அவ்வாறு செய்வாரா என்று தெரியவில்லை.

ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழியில், இந்த பெரியார் உலகம் எழும்புகிறது:

 1. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்கப் படவு ள்ளது.
 2. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர்.
 3. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.
 4. ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது.
 5. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன்.
 6. இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம்.
 7. ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழி – மதுர காளியம்மன் கோவில், திருவாலீஸ்வரர் கோவில், / வாலி கண்டபுரம், ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் என்று பல கோவில்கள் உள்ளன.
 8. ஆக அந்த 27 ஏக்கர் நிலமும் கோவிலுடையதாக இருக்கலாம். பிறகு, அதில் “பெரியார் உலகம்” வருவது, சிலை வைப்பது??????

பெரியாருக்கு வியாபாரம் செய்ய, புதிய கதைகளை உருவாக்குகின்றனர்: ஈவேராவை ஊதிப் பெரிதாக்கியதால், அப்பிம்பம் ஏதோ பெரிதாகி விட்டது என்று நினைப்பது பெரியாரிஸ்டுகளின் நம்பிக்கை, மூட-நம்பிக்கை, முட-நம்பிக்கை, அது மடத்தனம் ஆகிறது! விடுதலை, முரசொலி, நக்கீரன், கலைஞர்-செய்தி, சன்-குழுமம் மற்ற திக-திமுகவினருக்கு ஜால்றா போடும் ஊடகங்கள், புதியா-புதிய புராணங்களை அவிழ்த்து விடுகின்றன. அஜிதன் சந்திரஜோதி உயிர் தொழில்நுட்பவியல் & மரபணு பொறியியல் ஆராய்ச்சி மாணவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரிதாக ரீல் விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4].   “நீங்கள் தமிழரா? அல்லது தமிழகத்தில் வசிக்கிறீர்களா? ஒருவேளை ஆம் என்றால்ஒன்று நீங்கள் பெரியாரை ஆதரிப்பவராக இருக்க வேண்டும்; இல்லையேல் எதிர்ப்பவராக இருக்க வேண்டும்;….” என்று ஆரம்பித்து, வக்காலத்து வாங்கிக் கொண்டு, புராணம் பாடுவது, ஏதோ, அரசவைப் புலவர், மேடைப் பேச்சாளி போன்றவதை விட தமாஷாக இருக்கிறது. ஏதோ 2021ல் இருப்பவர்கள் எல்லாம் இவர் சொல்லித் தான் மற்றவர்கள் நம்ப வேண்டும், ஈரோடு நாயக்கரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல எழுதியிருப்பது வேடிக்கைத் தான்.

ஈவேராவின் கதைகள் இருக்கும் பெரியார்களுக்கு நன்றாகவே தெரியும், இந்த குஞ்சுகள் சொல்லித் தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை: இப்படி பொய்யான நம்பிக்கையினை உருவாக்கினால், அதனை அவர்கள் தாம், நம்ப வேண்டும்! 60/70/80 வயதானவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும்! பவானி நதிக்கரை கூத்துகள் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா என்பது சந்தேகமே, ஆனால், இது போல, பொய்களை அள்ளிவிட கிளம்பியிருக்கிறார்கள். ஈவேராவைப் பார்த்து, பேசி, பழகியுள்ளவர்களுக்கு நாயக்கரைப் பற்றி நன்றாகவேத் தெரியும். மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பாவம், நாத்திகர்களின் கடவுள் ஈவேராகி அவதாரம் மாறிய நிலை போலும்! தாம்பத்தியப் பிரச்சினை, பிறந்த குழந்தை இறந்தது, மனைவி இறந்தது, எல்லோருடனும் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தது, ……..பவனி ஆற்றங்கரை விவகாரங்கள், நாடகக் கம்பெனிகளுடன் சகவாசம், வீட்டை விட்டு ஓடினது, பணத்தால் அரசியலில் பெரிய ஆளாகி விடலாம் என்ற கனவு கனவானது, ஆங்கிலம் தெரியாதலால், எஸ்.ராமநாதன், அண்ணாவை நம்பி இருந்தது, ஐரோப்பிய சுற்றுலா பற்றிய ரகசியங்கள், அம்பேத்கர் இவரை நம்பாதது, ஜின்னா கழட்டி விட்டது, இப்படி ஏகபட்ட விவகாரங்கள் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] கார் வண்டிகள் நிறுத்த காசு, பூஜைப் பொருட்கள் விற்பனை, சிறப்பு தரிசனம், சுற்றிலும் ஏராளமான கடைகளும் முளைத்துள்ளன.முன்பு இவையெல்லாம் இல்லை.

[2]  அதாவது நாத்திகத்தை வைத்து ஆத்திகத்திற்கு எதிரான வியாபாரத்தை உரிய முறையில் அல்லது அதே மாதிரியான பிரச்சாரமுறையில் எதிர்க்கலாம்.

[3] இன்ஸ்டா.நியூஸ், மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து சிலை திருட்டு, By A.Mahendran, Reporter 19 Sep 2021 6:00 PM.

https://www.instanews.city/tamil-nadu/chengalpattu/maduranthakam/temple-idol-theft-at-keelamoor-village-neat-melmaruvathur-1019243

[4] நக்கீரன், யார் அந்த பெரியார்? என்னதான் வேண்டுமாம் அவருக்கு?, Published on 18/09/2021 (06:06) | Edited on 18/09/2021 (09:36).

https://www.nakkheeran.in/nakkheeran/who-periyar-what-does-he-want/who-periyar-what-does-he-want

பாரம்பரிய தீர்த்த யாத்திரை பாதையில் பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! (1)

செப்ரெம்பர் 22, 2021

பாரம்பரிய தீர்த்த யாத்திரை பாதையில் பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! (1)

தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பெயரில் வளாகம் அமைக்க அனுமதி: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தந்தை பெரியாரின் 95 அடி உயர் சிலை வைக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்[1].  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி 30-08-2021 அன்று சந்தித்தார்[2]. அப்போது, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூர் கிராமத்தில் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் ஆகியவை அமைக்க அனுமதி வழங்கி ஆணைப் பிறப்பித்ததற்கு பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, திராவிடர் கழக பொதுச்செயலாளர் அன்புராஜ்[3], துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பெரியார் சிலை வளாகமா, ஹைவே ரெஸ்டாரென்டா?: அதன்படி  திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க உள்ளதாக பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர். இங்கு 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க இருப்பதாக திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை அறிவித்துள்ளது. அங்கு 40 அடி உயர பீடத்தில் 95 அடி உயரம் கொண்டுள்ள தந்தை பெரியாரின் வெண்கல சிலை ஒன்று அமைய உள்ளது. 133 அடி உயரத்தில் அமையும் உலகின் மிக உயரமான பெரியார் சிலையாக இது அமைகிறது. 135 அடி என்று பிறகு சொல்லப் பட்டது[4]. அதாவது வள்ளுவர் சிலையை விட உயரமாக இருக்க வேண்டும் என்ற திட்டம் போலிருக்கிறது[5]. ஏற்கெனவே ஈவேராவுக்கு திருவள்ளுவர், திருக்குறள் மீதெல்லாம் அபாரமான விருப்பம் இருந்ததனால், நன்றாக வைது, வசை பாடி, திட்டியுள்ளது தெரிந்த விசயமான நிலையில், இப்படியொரு ஆசை, நாத்திகவாதிகளுக்கு! ஒரு துலுக்கர் திருக்குறள் மோசடி வியாபாரம் செய்து மாட்டிக் கொண்டதும், இப்பொழுது தான் செய்தியாக வந்துள்ளது[6].

பெரியார் உலகம்சுற்றுலா தலம்வளாகம் என்று வேறு விளக்கம்: இங்கு பெரியாரின் வரலாற்றை விளக்கும் ஒளி – ஒலி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், மெழுகு சிலை அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மிகப்பெரிய பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியார் படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம் ஆகியவனவும் அங்கு அமைக்கப்பட உள்ளன. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது[7]. இது தான் உண்மையே தவிர பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாக உள்ளதாக உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வதை தோழர்கள், பற்றாளர்கள் சமூக வைதளங்களில் வெளிப்படுத்துவீர் என  திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை தலைமை அறிவித்துள்ளது[8].  இதை ஈரோட்டில் அமைக்காமல், இங்கு அமைக்க வேண்டிய மர்மம் என்ன என்றும் ஆராய வேண்டியுள்ளது.

2018 முதல் 2021 வரை அனுமதி கிடைக்கவில்லையாம், ஸ்டாலின் வந்ததும் கிடைத்து விட்டதாம்: கலி. பூங்குன்றன் “இந்த வளாகம் அமைப்பதற்கான மத்திய அரசின் அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில், மாநில அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்தபோது, அதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்படவில்லை……..இப்போது மு.. ஸ்டாலின் முதல்வரான பிறகு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது[9]. இப்போது பெரியார் பிறந்து 143 ஆண்டுகளாகின்றன. 150 ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். முதல்கட்டமாக சிலையின் பணிகள் முடிவடையும். பிறகு படிப்படியாக அடுத்தடுத்த பணிகள் நடக்கும்,” என்கிறார்[10].  மூன்றாண்டுகளில் கிடைக்காதது, ஸ்டாலின் வந்தவுடன் கிடைத்து விட்டது என்றால், மத்திய அரசுடன், திமுக அல்லது திக என்ன பேரம் பேசியது, என்ன விவகாரம் என்பதனை வெளியில் சொல்வார்களா? பிஜேபிக்கும்-திமுகவிற்கும் ஏதாவது ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா? ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ரூ 100 கோடி செலவு யார் செய்யப் போகிறது?: இந்நிலையில், பெரியாருக்கு 95 அடி உயர சிலையை அரசு அமைக்கப்போவதாக பா.ஜ.க – நாம் தமிழர் பொய் செய்திகளை பரப்பினர்[11]. உண்மையான விவரங்களை வெளிப்படையாக அறிவித்திருந்தால், யாரும் ஒன்றும் கேட்டிருக்க மாட்டார்கள். “பெரியாருக்கு சிலை,” என்பதே முரண்பாடு என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்நிலையில் 95 அடி உயரம், 135 அடி உயரம், 135 அடி உயரம் என்றெல்லாம் செய்திகள் வருவது வேடிக்கையாக இருக்கிறது. மொத்த வளகத்திற்கு ஆகும் செலவு ரூ.100 கோடி என்று வீரமணி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மை இவ்வாறு இருக்க பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாகிறது என்று உண்மைக்கு மாறாகப் பிரச்சாரம் செய்வதை – கழகத் தோழர்கள், பற்றாளர்கள் சமூகவலை தளங்களில் வெளிப்படுத்துவீர்!” எனத் தெரிவித்துள்ளனர்[12]. சிலைக்கு ரூ 100 கோடிகளா அல்லது மொத்த வளாகத்திற்கான செலவு மதிப்பீடா என்பதெல்லாம் சரி, இதை யார் செலவு செய்யப் போகிறாற்கள்? தமிழக அரசு எத்தகைக் கொடுக்கிறது, பெரியார் டிரஸ்ட் எவ்வளவு செலவு செய்யப் போகிறது அல்லது புதியதாக ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பனி ஆரம்பிக்கப் போகிறார்களா? இவ்விவரங்களை வெளிப்படையாக சொல்லப் படவில்லை.

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை – பிஜேபி முன்னாள் மத்திய அமைச்சர் கூறியது (09-09-2021): நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்[13]. அப்போது அவர் கூறுகையில்[14], “…..பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துகளை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும்………” ஆக பிஜேபியின் ஆதரவும் கிடைத்து விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் முதல் பிஜேபி வரை பல தலைவர்கள் (வைத்யா, வானதி, குஷ்பு முதலியோர்) பெரியார், பெரியாரித்துவம், பெரியாரிஸம், பெரியாரின் சித்தாதம், சிலை என்று எல்லாவற்றிற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வணிக ரீதியில் செயல்படப் போகின்ற “பெரியார் உலகம்” திட்டத்தைப் புரிந்து கொண்டு பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. ஒருவேளை, பிஜேபி-திமுக கூட்டணி 2023ல் உருவாகும் என்ற கோணத்தில் ஒப்புக் கொண்டாரா என்றும் புரியவில்லை.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] தினகரன், பெரியாரின் 95 அடி உயர சிலை வைக்க அனுமதி: முதல்வருக்கு கி.வீரமணி நன்றி, ஆகஸ்ட் 31, 2021.

[2] https://m.dinakaran.com/article/News_Detail/701592/amp

[3] கே. வீரமணியின் மகன், இப்பொழுது பெரியார் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரி, வீரமணிக்குப் பிறகு பதவிக்கு வரத் தயாராக இருக்கும் இளவரசர், “பெரியாரின் வாரிசு” என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ் வள்ளுவர் சிலையை விட 2 அடி கூடுதல் உயரத்தில் பெரியார் சிலை.. காரணம் இதுதானா..?, Ezhilarasan Babu, Chennai, First Published Sep 9, 2021, 10:38 AM IST, Last Updated Sep 9, 2021, 10:38 AM IST.

[5] https://tamil.asianetnews.com/politics/periyar-statue-is-2-feet-higher-than-valluvar-statue-is-this-the-reason–qz5iaa

[6]  திராவிட, திராவிடத்துவ ஆட்சியில், திருக்குறள், திருவள்ளுவர் என்றும் வைத்துக் கொண்டு, நன்றாக அரசியல் செய்யலாம், வியாபாரமும் செய்யலாம்.

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், 133 அடி உயரத்தில் பெரியார் வெங்கல சிலை… 27 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவாகும் பெரியார் உலகம்.. எங்கு தெரியுமா?, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Sep 8, 2021, 1:24 PM IST, Last Updated Sep 8, 2021, 1:24 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/periyar-bronze-statue-at-a-height-of-133-feet-the-world-of-periyar-is-huge-on-27-acres-do-you-know-where–qz3vay

[9] பிபிசி தமிழ், பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு? உண்மை என்ன? #FactCheck, முரளிதரன் காசி விஸ்வநாதன், 7 செப்டெம்பர் 2021

[10] https://www.bbc.com/tamil/india-58476523

[11] கலைஞர்.செய்தி, ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? – உண்மை என்ன?”: பா..சீமான் வகையறாக்களுக்கு திராவிடர் கழகம் பதிலடி!, Prem Kumar, Updated on : 8 September 2021, 10:37 AM.

[12] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/08/dravidar-kazhagam-explains-what-is-the-truth-about-rs-100-crore-periyar-statue

[13] NEWS18 TAMIL, பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்,  LAST UPDATED: SEPTEMBER 10, 2021, 13:34 IST.

[14] https://tamil.news18.com/amp/news/tamil-nadu/there-is-nothing-wrong-with-placing-a-statue-of-periyar-ponradhakrishnan-ekr-556987.html

ஶ்ரீராமநவமி அன்று ராமரை தூஷித்து, தப்லிக் ஜமாத் மர்கஸ் கோஷ்டியை ஆதரிக்கிறது! திராவிட நாத்திகம் துலுக்கரை ஆதரிக்கிறது, இந்துக்களை வெறுக்கிறது!

ஏப்ரல் 2, 2020

ஶ்ரீராமநவமி அன்று ராமரை தூஷித்து, தப்லிக் ஜமாத் மர்கஸ் கோஷ்டியை ஆதரிக்கிறது! திராவிட நாத்திகம் துலுக்கரை ஆதரிக்கிறது, இந்துக்களை வெறுக்கிறது!

Veeramani supporting Tabliq, Viduthalai, 02-04-2020

விடுதலைமூலம், இந்துவிரோதிவீரமணி கக்கும் துவேசம்: டில்லியில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கணிசமான எண்ணிக்கையில் ‘கரோனா’ தொற்று ஏற்பட்டதை மய்யப்படுத்தி, அந்த மதத்தின்மீது வெறுப்பை, காழ்ப்பைத் தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்றும்[1], அப்படி நடந்துகொள்வோரின் நடவடிக்கையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளதாக “விடுதலையில்,” முதல் பக்க செய்தி[2].  பிறகு, இரண்ட்சாம் பக்கத்தில், “ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  ” என்ற தோரணையில் விளித்து, கீழ்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது:

EVR asked idiotic questions, Viduthalai, 02-04-2020

பல லட்சங்களுக்கு முன்னர் இருந்தவைக்கு இப்பொழுது அத்தாட்சிகள் இருக்குமா?[3]: இருபது லட்ச வருடங்களுக்கு முன் இராமன், அயோத்தி இருந்தனவா? இந்த நாள் – கோள் இருந்தனவா? இராவணன் இருந்தானா? பார்ப்பனர்கள் ராமநவமி என்று சொல்லிக் கொண்டு வருடத்திற்கு ஒருநாள், போலி நாளை மக்களிடம் விளம்பரப் படுத்திக் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாட்டம் நடத்துகின்றார்கள். இதை அரசாங்கம் அனுமதிப்பதுடன் அதற்காகச் சில இடங்களில் ஒருநாள் லீவும் கொடுக்கிறார்கள். இராமன் பிறந்தநாள் என்று சொல்லப் படுவது இன்றைக்கு 20 லட்சம் (20,00,000) ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 20 லட்ச வருடத்தில் உலகத்தில் உள்ளது எல்லாம் நாசமடைவதும் – உலகமே மாற்றமடைவதும் போன்ற காரியங்கள் நடந்து இருக்க வேண்டும். அப்போது மனித சமுதாயம் – மனிதன் – காடு மேடு – உலக பூகோளம் – மலை – சமுத்திரம் போன்ற யாவும் அழிவும் – மாற்றமும் அடைந்துவிடும். இது யாவரும் அறிந்ததும் – புராணக் கூற்றும் – சரித்திர உண்மையும் ஆகும். இப்படிப்பட்ட நிலையில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தி என்ற ஒரு ஊரும், தசரதன் என்ற ஒரு அரசனும், அவனுக்கு அநேக பெண்டாட்டிகளும் இருந்தனர்; அவனுக்கு இராமன் என்று ஒரு பிள்ளை பிறந்தான். அதற்கு வருடம் – மாதம் – தேதி – கிழமை – நாள் – கோள் – இன்ன இன்னது என்பதும், அவை மாத்திரம் அல்லாமல் அந்த 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிட நாடு – பாண்டிய நாடு – இலங்கை நாடு என்பவை இருந்தன என்பதும் எப்படி உண்மையாக இருக்க முடியும்? 20 லட்சம் வருடங்களாகக் கோள்கள் மாறாமல் மறையாமல் இருக்க முடியுமா?

The hand bill that was seized -Salem

ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும்[4]: பார்ப்பனர்கள் தங்கள் சுக வாழ்வுக்காக எதையும் சொல்லுவார்கள் – செய்வார்கள் என்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் – விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? என்பதும் நமக்குப் புரியவில்லை. இந்தக் கற்பனைப் புளுகை நமது மாணவர்கள் எப்படி நம்புகிறார்கள்? என்பதும் அதிசயமாக உள்ளது. வடநாட்டில் இராவணனைக் கொளுத்தினார்கள் என்றால், தென்னாட்டில் ஏன் இராமனைக் கொளுத்தக் கூடாது? ஒரு பொய்யான கற்பனைக் கதையில் இருந்து தென்னாட்டு மக்களை அவமானமும், இழிவுபடுத்தலுமான காரியத்தைப் பார்ப்பனரும், வடநாட்டாரும் செய்தால் – அதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புத்தி வரும்படியான காரியத்தை நாம் ஏன் செய்யக் கூடாது? ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், கட்டாயமாகச் சிந்தித்து, நல்ல படி யோசித்து, எனக்காக என்றே அல்லாமல், தங்களுக்குச் சரி என்றும், அவசியம் என்றும் தோன்றினால், இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். நமது (பார்ப்பனரல்லாத) மக்கள் ஆதரவு, பார்ப்பனர்களுக்கு இந்தப்படி யான பித்தலாட்டங்களில் ஏமாறாமலும், நம்மை இழிவுபடுத்தும் இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும்தான் நாம் இராமன் படத்தைக் கொளுத்துவது போன்ற செயல்களில் இறங்க வேண்டும்.

1971 DK procession denigrating Rama.news cutting

ஈவேராவுக்கு அந்த அளவுக்கூத் தான் அறிவு இருந்தது என்று தெரிகிறது: இந்த மாதிரி ஆட்களை பேச விட்டால் தான், அது போன்ற ஆட்களுக்கு, எந்த அளவுக்கு வாதம் புரிய காரணம், தர்க்கத் தன்மை, வாதத் திறமை முதலிய உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கீழ்கண்ட கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

 1. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிடநாடு – பாண்டியநாடு – இலங்கை நாடு இருந்தன என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? கேட்பது ஈவேரா!
 2. இராவணன் இருந்தானா? என்று கேட்ட பிறகு, “இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்,” என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது.
 3. ராமாயணம் கட்டுக்கதை என்றால், அதைப் பற்றி நாத்திகள் கவலைப் படவேண்டும் என்ற அவசியம் இல்லை.
 4. இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் – விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? கேட்பது ஈவேரா!
 5. குமரிக் கண்டம் என்று ஊளையிடும் தமிழர்கள் ஈவேராவை எதிர்ப்பார்களா? கீழடி பற்றி என்ன சொல்வாரோ?
 6. ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும், என்று விடுதலையில் ஈவேரா சொன்னதாக செய்தியைப் போட்டுள்ள வீரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
 7. இந்த அளவுக்கு ஶ்ரீராம நவமி அன்று துவேசத்தை கக்கும் கயவர்கள் ! ராமனைக் கும்பிடும் இந்துத்துவ வாதிகளுக்கு சூடு-சொரணை இல்லையா?
 8. ரஜினி மீது திகவினர் வழக்குப் போட்டார்களே, இப்பொழுது இந்த இந்துவிரோதியின் மீது ரஜினி-ரசிகர்களே போடலாமே?!
 9. கடவுள் நம்பிக்கை இல்லாதவன், கடவுள்-நம்பிக்கைக் கொண்டவர்களை, எப்படி கேள்வி கேட்க முடியும்?இவை இரண்டும் நம்பிக்கை தானே?

o apology Rajini IE

செக்யூலரிஸ நாத்தில், வாதத்தில் செக்யூலரிஸத்திற்கு பதிலாக, இந்துவிரோதம் தான் இருக்கிறது: இப்பொழுது, இந்திய ஊடகங்கள் முழுவதிலும், நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் மாநாடு பற்றிய விவகாரங்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. ‘கரோனா’வில் மதச் சாயத்தை பூசவேண்டாம்! மாச்சரியங்களை மறந்து ஒன்று படவேண்டிய சமயம் இது என்று முதல் பக்கத்தில் வக்காலத்து வாங்கி, அடுத்த பக்கத்தில், இத்தகைய செய்தி ஏன் போட வேண்டும்? பெரியார் மண்ணில் இவ்வளவு நடந்து விட்டதே, அப்பொழுது ஏன் ஒன்றையும் கேட்கவில்லை. இப்பொழுது வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு பக்கத்தில் துலுக்கனுக்கு ஆதரவு, அடுத்த பக்கத்தில் இந்து துவேசம், இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா? இன்னும் மக்கள் முட்டாள்களாகவே இருப்பார்களா? மேலும்-மேலும் ஈவேரா உளறல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால், இனி இருக்கின்ற மரியாதையும் போய் விடும். ஏற்கெனவே, சில பெண்கள் வியாக்கியானம் கொடுத்து, அசிங்கப் பட்டு விட்டனர். ஆகவே, இனி மக்களை ஏமாற்ற முடியாது. இளைஞர்கள் முழித்துக் கொண்டு விட்டார்கள்!

EVR photos of naked Hindy gods 1971 paaraded

நாத்திகமும், கடவுள் நம்பிக்கையும், செக்யூலரிஸமும், ஆன்மீகமும்: உண்மையாக நாத்திகன் “கடவுள் இல்லை” என்றால், எந்த கடவுளும் இல்லை என்று தான் சொல்வான். இந்தியாவில், தமிழகத்தில், “கடவுள் இல்லை” என்றால், ஏதோ இந்துமத கடவுள் மட்டும் தான் இல்லை என்ற நிலையில், நாத்திகம்-கிருத்துவம்-இஸ்லாம்-கம்யூனிஸம் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, இந்துமதத்தை எதிர்த்து, இந்துதுரோகிகளாகிறனர். செக்யூலரிஸம் என்றால், எல்லாமதங்களையும் சரிசாமாக பாவிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில், அதையும் பின்பறுவதில்லை. உண்மையான நாத்திகம் எல்லா மதங்களையும் எதிர்க்க வேண்டும். திராவிட நாத்திகம், இந்துதுவேச நாத்திகத்தில் முடிகிறது. கருத்துருவாக்கம், எண்ணங்கள், அவற்றில் தோன்றி பேச்சுகள்-எழுத்துகள் என்றாக வெளிப்படும் போது, அவை, இந்து விரோதமாகவே இருக்கிறன. தெரிந்தும், தொடர்ந்து நடக்கும் போது, அது போலித்தனமாக செயல்பட்டு வருவதை அறிய நேர்கிறது.

©  வேதபிரகாஷ்

02-04-2020

15-02-1971 Thuglak issue-reconstructe d

[1] விடுதலை, மாச்சரியங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் இது! ‘கரோனாவில் மதச் சாயத்தை பூசவேண்டாம்!, வியாழன், 02 ஏப்ரல் 2020 13:37

[2] http://www.viduthalai.in/headline/197907-2020-04-02-08-14-36.html.

[3] விடுதலை, ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  வியாழன், 02 ஏப்ரல் 2020 14:510, பக்கம்.2, . http://www.viduthalai.in/e-paper/197917.html

[4] விடுதலை, ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  வியாழன், 02 ஏப்ரல் 2020 14:510 . http://www.viduthalai.in/e-paper/197917.html

இந்தி-எதிர்ப்பு காங்கிரஸ்-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு என்றெல்லாம் இருந்தபோது – அவற்றை மீறி தெய்வீகத் திரைப் படங்கள் வெளியானது! [4]

செப்ரெம்பர் 19, 2019

இந்திஎதிர்ப்பு காங்கிரஸ்-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு என்றெல்லாம் இருந்தபோது – அவற்றை மீறி தெய்வீகத் திரைப் படங்கள் வெளியானது! [4]

Annadurai, A P Nagarajan

இந்திஎதிர்ப்பு நாத்திகமாகவும் வேலை செய்து, சினிமாவில் பாரபட்சம் காட்டியது: மேலே விவரித்தப் படி, திராவிடத்துவ-நாத்திகர், அவ்வாறு இந்தி-எதிர்ப்பு ஆர்பாட்டங்கள்-போராட்டங்கள் 1930-70  காலகட்டத்தில் தான், தெய்வீகத் திரைப் படங்கள் ஆண்டு கணக்காக ஓடிக் கொண்டிருந்தன. தியாகராஜ பாகவதர் (1910-1959) பதினைந்து திரைப்படங்களில் நடித்தாலும், அதில் ஆறு படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக இருந்தன. 1944ல் வெளியிடப்பட்ட ஹரிதாஸ் மூன்று ஆண்டுகள் 1947 வரை, ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை பெற்றது. இதிகாசங்கள், புராணங்கள், சமஸ்கிருத இலக்கியங்கள் மீதான கதைகள் வைத்து தான் பெரும்பாலான திரைப்படங்கள் தயாரிக்கப் பட்டன. அப்பொழுது, ஆரியர்-சமஸ்கிருதம் திணிப்பு என்று போராடவில்லை. கர்நாடக சங்கீதத்தை பார்ப்பன சங்கீதம் என்று ஏசியவர்கள் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தினர் எடுத்துக் காட்டவில்லை. “தமிழ் இசை” என்று எழுந்தவர்களும் பாடல்களை எதிர்க்கவில்லை. NSK, MKT

எம்.கே.டியின் வீழ்ச்சியும், என்.எஸ்.கேவின் மீட்சியும்: 1946ல் லட்சுமிகாந்தன்[1] கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் நண்பர் என். எஸ். கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். இருப்பினும் மேல்முறையீட்டில், 1948ல் இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை. எல்லா அரசியல் தலைவர்களை அறிந்திருந்தாலும், உதவி கேட்டு செல்லவில்லை. காமராஜர் கூப்பிட்டும் அரசியலுக்குச் செல்லவில்லை. 1959ல் காலமானார். ஆனால், என்.எஸ்.கே படங்கள் ஓடின. அதாவது, திமுக ஆதரவால் என்.எஸ்.கே மறுபடியும் உயர்ந்தார். 1957ல் அவரும் காலமானார். பாகவதருக்குப் பதிலாக, சிவாஜியை, உருவாக்கினாலும், தேசியம்-தெய்வீக பிரச்சினைகளால், அவரும் திமுகவிலிருந்து விலக்கப் பட்டார்.

Haridass and Bihana

.பி.நாகரஜன் பள்ளியில் படிக்காதவர்: படிப்பறிவே இல்லாத அவர், தமிழில் சிறந்த வசனங்களை எழுதி சிறப்புப் பெற்றவர் என்று கவனிக்கத் தக்கது. 1949-56 ஆண்டுகளில் ஏ.பி.நாகராஜன், திமுகவின் நாத்திகம் மற்றும் கடவுட் மறுப்புக் கொள்கைகளை எதிர்க்கும் முறையில் படங்களை எடுத்தார். பின்னர் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் உதவி ஒளிப்பதிவாளராக ஏ.பி.நாகராஜன் சேர்ந்தார். 1953-ல் சங்கீதா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம், ஏ.பி.நாகராஜன் எழுதிய “நால்வர்” என்ற கதையை படமாக்கியது. ஒரே குடும்பத்தில் நான்கு பிள்ளைகள்[2]. மூத்தவன் போலீஸ் அதிகாரி. இரண்டாம் பில்ளை – வக்கீல், மூன்றவ்ச்து பிள்ளை, மில்லில் வேலை செய்பவன், கடைசி பிள்ளை அரசியல்வாதி / சமூக சேவகன்[3]. மற்றவர்கள் மாறுபட்ட குணம் கொண்டவர்கள். இதில், கடமையே உருவான போலீஸ் அதிகாரியாக நாகராஜன் நடித்தார். ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை குமாரி தங்கம். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட “நால்வர்”, வெற்றிப்படமாக அமைந்தது. கதை- வசனத்தையும் நாகராஜன் சிறப்பாக எழுதியிருந்தார். அரசியல்வாதியாக வரும் பாத்திர்த்தை திமுக-காரன் மாதிரி சித்தரித்தார். எந்த வேலையும் செய்யாமல், சோம்பேரியாக பேசிக் கொண்டிருக்கும் பாத்திரமாக இருந்தது[4]. இந்தப்படம் வெளிவந்தபின் “நால்வர்” நாகராஜன் என்று அழைக்கப்பட்டார்.A P NAgarajan

. பி. நாகராஜனின் [1928 –1977] பணி அளப்பரியது: திராவிடத்துவ வாதிகளை மக்களை பேச்சால் ஏமாற்றிக் கொண்டிருந்த போது, இப்படங்களை அவர் எடுத்தார். வருடக்கணக்கில் அவை ஓடின! ஈவேரா, அண்ணாதுரை, கருணாநிதி எல்லோரும் இருந்த போது தான், இப்படங்கள், படத்தின் வசனங்கள் பாடல்கள், பட்டி-தொட்டிகளில் ஒலித்துக் கொண்டிருந்தன!

திருவிளையாடல் (1965)
சரஸ்வதி சபதம் (1966)
கந்தன் கருணை (1967)
திருவருட்செல்வர் (1967)
திருமால் பெருமை (1968)
தில்லானா மோகனாம்பாள் (1968)
திருமலை தென்குமரி (1970)
அகத்தியர் (1972)
திருப்பதி கன்னியாகுமாரி யாத்ரா (1972)
காரைக்கால் அம்மையார் (1973)
ராஜராஜ சோழன் (1973)
திருமலை தெய்வம் (1973)

1965லிருந்து திராவிடத்துவ வாதிகளின் கதை-வசனம் தோற்று விட்டது. அதே சிவாஜி கணேசன் இவரது படங்களில் நடிக்க ஆரம்பித்தார்! திருவிளையாடல் படத்தில் நக்கீரனாகவும், “அருட்பெருஞ்ஜோதி”யில் – ராமலிங்க அடிகளார் சுவாமியாகவும் நடித்திருக்கிறார்! சிவன் – நக்கீரன் வசனமே சித்தாந்த மோதல் எனலாம், ஏனெனில் வசனம் எழுதி நக்கீரனாக நடித்தது நாகராஜனே தான்! நெற்றிக்கண் திறந்தாலும், குற்றம் குற்றம் தான் என்பது திராவிடத்துவ வாதிகளைக் கலக்கியது! ராஜராஜ சோழனை 1973ல் சினிமாஸ்கோப்பில் எடுத்தார். சரித்திரம் படைத்ததால், அவன் பார்ப்பன வருடி என்று திரிபு விளக்கம் கொடுக்கப் பட்டது! ஏ.பி.நாகராஜனின் வசனங்கள் முன்பாக அண்ணா-கருணாநிதி வசனங்கள் தோய்ந்தன, மகளிடையே மிஞ்சின, பிரபலமாக இன்றும் ஒலிக்கின்றன!

Kannadasan and Annadurai

தில்லானா மோகனாம்பாளும்,அண்ணாதுரையும் 1967-69: “தில்லானா மோகனாம்பாள்’ செப்டம்பர் 15, 1968 அன்று வெளிவந்த படம்.அண்ணா முதலமைச்சரான பிறகு வந்த இரண்டாவதாக வந்த பிறந்த நாள். 15-09-1967 போல, உற்சாகமாக இல்லை. 1968 செப்டம்பர் 15ல் அந்த மகிழ்ச்சி இல்லை, ஏனெனில், உடல் அசௌகரியம்……..பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டு மேல்துண்டு அணிந்த கோலத்தில் நடு வீட்டிற்கு வந்து நின்ற அண்ணா, கன்னங்களை உப்ப வைத்துக் கொண்டு கைகளால் நாதசுரம் வாசிப்பதுபோல சைகை காட்டி அனைவரையும் மகிழ்வித்தார்கள். தில்லானா மோகனாம்பாள் பார்த்து விட்டு வந்தபோது, “இது கண்ணதாசன் எனக்காக எழுதிய பாட்டு’ என்று சொன்னார். “நலந்தானா… நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா நலம் பெற வேண்டும் நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு நலந்தானா… இலை மறை காய் போல் பொருள்கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று’ 1964ல் வெளியான கர்ணன் வசங்கள் எல்லாமே, திராவிடத்துவத்திற்கு / நாத்திகத்திற்கு பதில் சொல்கின்ற முறையில் அமைந்தன. கருணாநிதி காசுக்குத் தான் முதலில் வசனம் எழுதினார், பிறகு தான் கொள்கை வந்தது. 1948-ல் வெளிவந்த ஜூபிடர் பிக்சர்ஸ் `அபிமன்யு’ படத்தின் வசன கர்த்தா கருணாநிதி தான்! அதில் எம்ஜிஆர், சிறிய வேடத்தில் [அர்ஜுனன்] நடித்தார்.

Shivaji, nationalist films

தமிழரசு கழகம், மபொசி, தேசியம் (1955-57): தேசியம், அஹிம்சை, கதர் முதலிய விசயங்களில், திராவிடப் பிரிவினை வாதத்தை 1946ல் துவக்கப் பட்ட தமிழரசு கழகம் எதிர்த்தது. ஏ.பி.என் அதனுடன் சேர்ந்து செயல்பட்டார்.  1946-54 ஆண்டுகளில் திராவிட இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டாலும், தேசிய விசயத்தில் மாறுபட்டது. “திராவிடஸ்தான்” போன்ற பிரிவினைவாதங்களை எதிர்த்தது. “கப்பலோட்டித் தமிழன்” போன்ற படங்கள் மூலம், தேசியத்தை வளர்த்தது. “பராசக்தியில்” நடித்த சிவாஜி தான், அதிலும் நடித்தார். 1955ல் சிவாஜி கணேசன்[5], திருப்பதிக்கு சென்று வந்ததை, திராவிடத்து வாதிகள் கண்டித்து, விமர்சித்து, சுவர்களில் எழுதினர், “திருப்பதி கணேசா! திரும்பிப் பார் நடந்துவந்த பாதையை, நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?” அதுமட்டுமல்லாது, அவரது சுவரொட்டிகள் முதலியவற்றின் மீது சேற்றையும், சாணத்தையும் பூசினர். இதெல்லாம், சிவாஜியின் மனத்தைப் புண்படுத்தியது. Shivaji, Nambiyar and MGRஅண்ணாவிடமிருந்து சிவாஜியைப் பிரிக்க, எம்ஜிஆரை அண்ணாவுக்கு நெருக்கமாக்க, என்று பல காரணங்கள் கூறப் பட்டது[6]. எப்படியாகிலும், சிவாஜி திமுகவிலிருந்து, விலகினார் அல்லது விலக்கப் பட்டார். பராசக்தி 1952ல் வெளிவந்தபோது, அவர் திராவித்துவ வாதி, நாத்திகர் போல சித்தரிக்கப் பட்டார், ஆனால், திருப்பதி சென்று வந்ததும், “சிவாஜி எப்பொழுது ஆத்திகர் ஆனார்,” என்று தினத்தந்தியில் நக்கலாக, செய்தி வெளியிடப் பட்டது. தொடர்ந்து தெய்வீக-தேசிய படங்களில் நடித்து, அவை வெற்றிப் பெறுவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது நிதர்சனம். சிவாஜி திருமலைக்குச் சென்றது 1955[7], 1956, 1957 என்றெல்லாம் குறிப்பிடப் படுவது நோக்கத் தக்கது. அவர்கள் மூல ஆவணத்தை காட்டாததால், புத்தகங்களில், நாளிதழ்களில் என்ன வருகிறாதோ, அவற்றை ஆதாரமாகக் கொள்ள வேண்டியடுள்ளது. அதாவது, திராவிடத்துவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உள்ள பிரச்சினையை எடுத்துக் காட்டவே, இது குறிப்பிட வேண்டியதாகிறது.

© வேதபிரகாஷ்

19-09-2019

Karunanidhi with Shivaji

[1] சி.என். இலட்சுமிகாந்தன் 1940இல் சென்னையில் சினிமாதூது என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். திரைப்பட பெரும்புள்ளிகளை பற்றி தாறுமாறாக எழுதியதால், சிலர் அனுமதியில்லாமல் சினிமாதூது வெளியிடுப்படுவதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து, அதை மூடும் படி செய்தனர். அடுத்து லட்சுமிகாந்தன், இந்து நேசன் எனும் பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா புள்ளிகளின் கெட்ட நடத்தையை அநாமதேய செய்திகளாக பதித்தார். அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், கோணங்கித்தனங்களையும் பச்சையாக எழுத ஆரம்பித்தார். அதனால் அவர் பல எதிரிகளை பெற்றார்.

[2] The Hindu, Blast from the past – Naalvar 1953, Randor Guy, MARCH 17, 2012 16:40 IST, UPDATED: MARCH 17, 2012 16:40 IST.

[3] https://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-naalvar-1953/article3006148.ece

[4] M. S. S. Pandian, The Image Trap: M.G. Ramachandran in Film and Politics, Sage publications private limited, New Delhi, 2015, p.1865, ft.4

[5] 1957ல் சிவாஜி சினிமாவில் உயர்ந்து கொண்டிருந்த நேரம்.  ஒரு முறை திருப்பதி சென்றார். அப்போது திமுக ஆதரவு பத்திரிகைகள் சில, `திருப்பதி கணேசா கோவிந்தா’ என்று கிண்டல் செய்து எழுதியிருந்தார்கள்.  1957 என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.

1956ஆம் ஆண்டு திருப்பதி சென்றதற்காக அவதூறு செய்யப்பட்ட சிவாஜி கணேசன், இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும், என்று இன்னொருவர் குறிப்பிடுகின்றார் – https://minnambalam.com/k/2019/01/29/16

[6]  தினமலர், ஒரு பேனாவின் பயணம் – 103 – சுதாங்கன், பதிவு செய்த நாள் : 17 ஏப்ரல் 2017; http://www.dinamalarnellai.com/web/news/26131

[7] Hardgrave, Robert L. Politics and the Film in Tamilnadu: The Stars and the DMK., Asian Survey 13.3 (1973): 288-305.

இந்தி-எதிர்ப்பு மாறிய நிலைகள்: காங்கிரஸ்-எதிர்ப்பின் பன்முக வெளிப்பாடுகள், குழப்பவாதங்கள் மற்றும் பிரிவினைகள் [3]

செப்ரெம்பர் 18, 2019

இந்திஎதிர்ப்பு மாறிய நிலைகள்: காங்கிரஸ்-எதிர்ப்பின் பன்முக வெளிப்பாடுகள், குழப்பவாதங்கள் மற்றும் பிரிவினைகள் [3]

Anti-Hindi agitation, procession

காங்கிரஸ்எதிர்ப்பும், இந்திஎதிர்ப்பும்: 1930-40 காலகட்டத்தில் காங்கிரஸ்-எதிர்ப்பு தான், இந்தி-எதிர்ப்பு, இந்து-எதிர்ப்பு என்றெல்லாம் மாறியது. அதற்கு பிராமண-எதிர்ப்பு, வடவிந்தியர்-எதிர்ப்பு போன்றவையும் உபயோகப்படுத்தப் பட்டன. 1937-40 இந்தி-எதிர்ப்பு போராட்டம் இவ்வாறு தான் உருவானது. இதனால், நீதிகட்சி முழுமையாக செத்து விட்டது என்ற இலைக்குத் தள்ளப் பட்டது[1]. செப்டம்பர் 1939ல் உலக யுத்தம் ஆரம்பித்ததும், இந்தி-எதிர்ப்பு போராட்டம் அடங்கியது. 1940-50களில் இந்தி-எதிர்ப்பு அடக்கி வாசிக்கப் பட்டாலும், அது, இந்திய-எதிர்ப்பாக மாறியது. 1940ல் ஜின்னா, அம்பேட்கர், ஈவேரா சந்தித்து, காங்கிரஸுக்கு எதிராக செயல்பட திட்டமிட்டாலும், ஈவேராவைப் பொருட்படுத்தவில்லை. எம்.என்.ராய் 1941ல் சென்னைக்கு வந்தாலும், ஈவேராவால் அரசியல் பேச முடியவில்லை. காங்கிரஸ்-விரோத அரசியல் தான் வெளிப்பட்டது[2]. இந்நிலையில், இந்தி-எதிர்ப்பு போலித்தனமானது. ஏனெனில், வடவிந்திய தலைவர்களுடன், ஆங்கில அல்லது இந்தி தான் பேச வேண்டும். பிறகு, ஈவேரா, அண்ணா முதலியோருக்கு பதிலாக யார் பேசினர், மொழிபெயர்த்தனர் என்று தெரியவில்லை. அதாவது துபாஷிகளை வைத்து அரசியல் நடத்திய இவர்கள், அதே மொழியை எதிர்த்தது வியக்கத் தக்கது தான்.

Anti-Hindi agitation, Rajaji

ஈவேரா திருமணம் (1948), எம்ஜிஆர் சுடப் பட்டது (1967), அண்ணா முதலமைச்சர் ஆனது (1967): ஈவேராவின் திருமணம் 1948ல் நடக்க, அண்ணா கூட்டம் பிரிந்து, 1948ல் திமுகவை துவக்கினர். 1950-60 காலக் கட்டத்தில் திமுகவும் “திராவிடஸ்தான்” பிரிவினைவாதம் வைத்து அரசியல் நடத்தியது. சென்னையில், பொட்டி ஶ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து டிசம்பர் 15, 1952ல் இறந்ததால், தெலுங்கர், “அரவவாடு சாவால, ஆந்திர ராஜ்யம் காவால” என்று கோஷமிட்டனர்[3]. இதனால் “திராவிடமும்” பொய்த்து விட்டது. நவம்பர் 1, 1953 அன்று முதன் முதலாக, ஆந்திர பிரதேசம் உருவானது.  1959 தேர்தலில், திமுகவிற்கு இரண்டு இடம் தான் கிடைத்தது. ஜனவர் 17, 1967 அன்று எம்.ஆர்.ராதா, எம்ஜிஆரை சுட்டது, அவரத்ய் படத்தை வைத்து, திமுக தேர்தலில் ஓட்டைக் கேட்டது, அண்ணா முதலமைச்சர் ஆனது சரித்திரம் ஆனது[4].  இங்கு, திராவிட சித்தாந்தமும் பொய்த்தது மற்றும் இந்தி-எதிர்ப்பும் பின்னால் சென்றது.

Parasakti, Kandan Karunai-Shivaji changing roles

1952-பராசக்திஎபெக்ட்லிருந்து மீண்டது எப்படி?: 1952-பராசக்தி படத்தின் வெற்றிக்குப் பின், வறுமையில் வாடிய தமிழர்களில் பெரும்பாலோர், தி.மு.க.,வில் நம்பிக்கை வைத்தனர். எம்.ஜி.ஆரும் அதுவரை கதர் ஆடை அணிந்த காந்தியவாதியாகவும், கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் சந்தனம், குங்குமம், திருநீறு என்று பக்திப் பழமாகவே வாழ்ந்தவர் தான். பராசக்தி அடித்த புயலில், அவரும் தி.மு.க.,வில் கரை ஒதுங்கினார். ஆனாலும், அவர் மனசுக்குள் எப்போதும் முருகனே குடியிருந்தான். கவிஞர் வாலியின் நெற்றியில் பூசிய விபூதியை, கே.ஆர்.ராமசாமி விரும்ப வில்லை என்பதற்காக, அதை அழிக்கச் சொன்னவர் எம்.ஜி.ஆர்., ஆனால், தேவர், தனக்கு முருகனின் திருநீற்றைத் தராவிட்டால், அவரிடம் பேசக்கூட மாட்டார் எம்.ஜி.ஆர்., ‘சும்மா நடிங்கண்ணே ஜோரா இருக்கும்…’ என்றார் விடாப்பிடியாக தேவர். எம்.ஜி.ஆருக்காகவே ஆள் உயர வெள்ளி வேலுக்கும் ஆர்டர் கொடுத்தார். நீண்ட தயக்கத்துக்குப் பின், தேகமெங்கும் நகைகளும், ஆபரணங்களும் தவழ, கையில் வேலோடு முருகனாகக் காட்சி அளித்தார் எம்.ஜி.ஆர்., அக்காட்சி படமாக்கப்பட்ட போது, தேவர் – எம்.ஜி.ஆர்., உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தனர். முருகன் கை வேலை, தன் நண்பருக்கே அன்புப் பரிசாக கொடுத்தார் தேவர். செப்டம்பர்.16, 1966 அன்று அப்படம் வெளியிடப்பட்டது.

DMK in Hindi

எம்ஜிஆரின் முருக பக்தி[5]: எம்.ஜி.ஆரின் முருக பக்தி குறித்து, பிப்., 1974ல், ‘பொம்மை’ இதழுக்கு தேவர் அளித்த பேட்டி இது: “நான் இப்போ சொல்லப் போற சேதி உங்களுக்கெல்லாம் பிரமிப்பா இருக்கும். எம்.ஜி.ஆருக்கு தெய்வ பக்தி இல்லன்னு ரொம்ப பேரு சொல்றாங்க. ஆனா, நான் எப்ப மருதமலைக்கு போனாலும், எம்.ஜி.ஆர்., பேருக்கு அர்ச்சனை செய்வேன்; அந்தப் பிரசாதத்தைக் கொடுக்கும் போது, உட்கார்ந்திருந்தால் கூட, எழுந்து, பய பக்தியோட வாங்கிப்பார். எம்.ஜி.ஆரிடம்., ஒருநாள், ‘மருதமலை போயிட்டு வந்தேன்னு சொன்னேன்; உடனே, ‘பிரசாதம் எங்கே?’ன்னு கேட்டார். ஆனால், பிரசாதத்தை எடுத்துப் போக மறந்து விட்டேன். அன்று முழுவதும் எம்.ஜி.ஆர்., என்னுடன் பேசவே இல்ல!,” – இவ்வாறு கூறியிருந்தார் தேவர். 1967ல் திமுக அமோகமாக வெற்றி பெற்றது, அண்ணா முதலமைச்சர் ஆனார்.

Jinnah, EVR, Ambedkar meeting 1940

1967 இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு தொழிலதிபர்கள் நிதியுதவி அளித்தது: தொழிலதிபர்கள் ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்றோர் நிதியுதவியுடன், இந்தி திணிப்பை எதிர்த்து பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. 17 சனவரி 1967 அன்று, திருச்சியில் நடத்தப்பட்ட, சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் இராஜாஜி (சுதந்திராக் கட்சி), வி. ஆர். நெடுஞ்செழியன் (திமுக), பி. டி. ராஜன் (நீதிக்கட்சி), ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார், சி. பா. ஆதித்தனார் (நாம் தமிழர்), முகமது இஸ்மாயில் (முஸ்லிம் லீக்) ஆகியோர் பங்கு கொண்டனர். இராஜாஜி அரசியலமைப்பின் XVII பகுதியைக் “கிழித்து அரபிக் கடலில் போட வேண்டும்” என்று பேசியது தமாஷாக இருந்தது.உண்மையில் காங்கிரஸ்-எதிர்ப்பை அவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டார். 16 சனவரி 1967அன்று அண்ணாதுரை எதிர் வந்த குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். முன்னதாக அவர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழக மக்கள் குடியரசு நாளைக் கொண்டாட ஏதுவாக மொழி மாற்ற நாளை ஒரு வாரம் தள்ளிப் போடுமாறு கோரியிருந்தார். அதற்கு பிரதமர் ஒப்பாதது மோதலுக்கு வழி செய்தது என்று சாக்கு சொல்வதும் புரிகிறது.

Anti-Hindi agitation, Bobby

1970-75 காலம்: ஸ்டார் தியேட்டரில் யாதோன்கி பாரத் முதல் ஷோலே வரை: ஸ்டார் தியேட்டரில் யாதோன் கி பாராத் 1973ல் வெளியிடப் பட்டு 100 வாரங்கள் / சுமார் இரண்டு வருடங்கள் ஓடியது! பாபியும் வெற்றி கரமாக ஓடியது. மக்கள் விருப்பம் இல்லாமல், அவ்வாறு ஓடியிருக்க முடியாது. பிறகு, “இந்தி ஒழிக” போராட்ட நிலையில், தியேட்டட்களுக்குச் சென்று, பார்த்து ரசித்தது எப்படி? “ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த ஹோ” என்று ரொமேன்டிக்கா பாடிக் கொண்டிருந்தனர். திக-திமுகவினர் கண்டு கொள்ளவில்லை என்பதா அல்லது தமிழர் இந்தி படங்களை ரசிக்கின்றனர் என்று விட்டுவிட்டனரா?  1975ல் ஷோலே திரையிடப்பட்ட போது, திராவிட-பச்சைத் தமிழர்கள் பலமுறைப் பார்த்து, “கப்பர் சிங்” வசனம் பேசினார்கள்! எப்படி ஓடியது என்று சொல்ல வேண்டாம். அபிதாப் பச்சன், ரிஷிகபூர் போன்று, ஸ்டெப்-கட் என்று முடியை மாற்றி வெட்டிக் கொண்டான். பெல்-பாட்டம் பேன்ட் போட ஆரம்பித்தான். சுவரொட்டிகள் தமிழில் தாராளமாக ஒட்டப் பட்டன. தமிழ் நாளிதழ்களில் விளம்பரங்கள் இருந்தன. பேசும் படம், சித்தாரலயா போன்ற சினிமா இதழ்களில் புகைப்படங்களுடன் விவரங்கள் வந்தன.

Anatharama Dikshitar, Variar and TSB

கதாகாலக்ஷேபங்கள் நடந்தது: இன்னொரு பக்கம் சேங்காலி அனந்தராம தீக்ஷிதர் [1903-1969], கிருபானந்த வாரியார் [1906-1993], டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி [1919-2003] முதலியோரும் தமிழில் பேசி, புராண இதிகாங்களில் உள்ளவற்றை மக்களுக்குச் சென்றடையச் செய்தனர். திராவிடட் தலைவர்கள் மேடை போட்டு பேசினால் கூட்டம் வரும் என்றால், இவர்களுக்கும் தினமும் கூட்டம் வந்தது. மக்கள் – பெண்கள் முதல் சிறுவர் வரை வந்து அமைதியாக் கேட்டுச் சென்றனர். கர்நாடக இசைக் கச்சேரிகளும் பிரபலமாக இருந்தது. தெருவில் மணிக்கணக்காக உட்கார்ந்து கேட்டுச் சென்றனர். எம்.எஸ், சிட்டிபாபு வீணை எனும் போது, காத்திருந்து கேட்டுச் சென்றனர். 1950-1970களில் திராவிடத்துவ வாதிகள் அரசியல், ஆள்பலம், பணம் எல்லாம் இருந்த போது நடந்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்நிலையில் தான் ஏ.பி.நாகராஜனின் பக்திப் படங்கள் வெளிவர ஆரம்பித்தன.

© வேதபிரகாஷ்

18-09-2019

Bobby song

[1]  A. Nambi Arroran, Tamil Renaissance and Dravidan Nattionalim 1905-1944, Koodal Publisher, Madurai, 1980.

[2] Sami Chidambaranar, Thamizhar Thanathai Periyar EVR Vazhkkai Varalaru (Tamil), Periyar Self-Respect Propaganda Publications, Madras, 1997, pp.257-258.

[3] “Aravavalantha chavala, Andhra Rajyam kavala” M. P. Sivagnanam, Suyaatchi Pirivinaiya? (Is Autonomy Separation?), Inba Nilayam, Chennai,  1959, p.27.

[4] K. Sathyaprakash Rao,A Critical Analysis of Dravidian Movement, Politics and Governance – Changing trends from 1910-2017, paper presented at the SIC-3, Chennai, 2018

[5] மு. தெய்வநாயகம் போன்ற கிருத்துவ போலிகள், மோசடிகள் எம்ஜிஆர், “தமிழர் மதத்தைச்” சேர்ந்தவர் என்றெல்லாம் புளுகிக் கொண்டிருந்ததை கவனிக்கலாம். அத்தகையோர் ஆராய்ச்சியின் நேர்மையினையும் எடைபோட்டு அறிந்து கொள்ளலாம்.

இந்தி-எதிர்ப்பு ஆனால் இந்தி-சினிமா எதிர்ப்பு இல்லை, திராவிடத் தலைவர்கள் மற்றும் இந்தி சினிமா திராவிட தயாரிப்பாளர்கள் [2]

செப்ரெம்பர் 18, 2019

இந்திஎதிர்ப்பு ஆனால் இந்தி-சினிமா எதிர்ப்பு இல்லை, திராவிடத் தலைவர்கள் மற்றும் இந்தி சினிமா திராவிட தயாரிப்பாளர்கள் [2]

Mangalyam 1954 criticizig DMK

நால்வர் பட மூலம், திமுகவை விமர்சித்தது (1953): என்.எஸ்.கிருஷ்ணன். 1952ல் ‘பணம்’ தயாரித்தார். இதன் கதை வசனம் மு.கருணாநிதி மற்றும் ”பராசக்தி: மூலம் பிரபலமாகி அப்போது திமுக நடிகராக இருந்த சிவாஜி கணேசன் தான் கதாநாயகன். ‘தீனா மூனா கானா’ என்ற கண்ணதாசன் பாடலில் “திமுக” குறிக்கப் பட்டது! ‘மாங்கல்யம்’ 1953ல் தயாரிப்பில் இருந்து, மே 1954ல் திரைக்கு வந்த அந்த படத்தில், இந்தப் பாடலை கிண்டலடித்து ஒரு பாடல் அமைக்கப்பட்டது. ஆனால் முந்தையப் பாடலைப் போல், அதில்  எந்தக் கட்சிப் பிரசாரமும் இல்லை[1].

‘வானா மூனா கானா மூனாத்தனத்தை மறைச்சு வச்சு,

முதலாளியைக் காக்கா பிடிக்கும் வானா மூனா கானா…..

ஷோக்குப் பண்ண பிராடு கணக்கு ஜோடிப்பதிலே ராஜா,

பணத்தை சுரண்டும் உங்க விஷயமெல்லாம் தெரியும்

எனக்குப் பேஷா மூட்டை அடிக்கிறதும் நீங்க,

பணத்தை மூட்டை அடிக்கிறதும் நீங்க,

கம்பெனி மூடுவிழா செய்யறதும் நீங்க

சேட்டைகள் பண்ணுறதும் நீங்க,

பொம்பளையைத் தேடி அலையறதும் நீங்க,’’ ஏபிநாகராஜனின் படத்தில் பாடல் வந்தது! இவையெல்லாமே, திமுகவினரை மறைமுகமாகக் குறிப்பிட்டன என்று அறியப்பட்டது. இருப்பினும், பெரிய அளவில் தெரிந்து விடக் கூடாது என்று, அமைதி காத்து, அமுக்கப் பட்டது. தெரிந்தவர்களும், திராவிட இயக்கத்தைப் பற்றி ஆராய்பவர்களும் எடுத்துக் காடுவதில்லை.

DMK, MGR, Shivaji, Hindi

சிவாஜி கணேசன் திமுகவில் இருந்து விலக்கப் படுதல், எம்ஜிஆருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படல் (1952-1957): கருணாநிதியின் வசனத்துடன் நாத்திகத்தை உயர்த்திப் பிடித்த, பராசக்தி 1952ல் வெளிவந்தது. சிவாஜி கணேசன், ஒரே படத்தில், பிரபலமாகி, திமுகவி நடிகர் ஆனார். கருணாநிதி திரைக்கதை எழுதி, என். எஸ். கிருஷ்ணன் இயக்கி “பணம்,” 1952 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தயாரானாலும், இது பிறகு வெளிவந்தது. சிவாஜி கண்ட சாம்ராஜ்யம் நாடகம் பார்த்து “சிவாஜி” பட்டத்தை, ஈவேரா அளித்ததால், வி.சி.கணேசன், சிவாஜி கணேசன் ஆனார்! 1946ல் அண்ணா எழுதிய “பணத் தோட்டத்திற்கும்” இதற்கும் சம்பந்தம் இல்லை[2]. ஆனால், 1957ல் அவர் திமுகவிலிருந்து வெளியேற்றப் படுகிறார். பல காரணங்கள் சொல்லப் பட்டாலும், சிவாஜி தனது புத்தகத்தில் குறிப்பிட்டதாவது, எம்ஜிஆரை, திமுகவில் முக்கியப்படுத்தவே, தான் ஓரங்கட்டப் பட்டதாக கூறியுள்ளார். வெள்ளநிதிக்கு அதிகமாக வசூலித்துக் கொடுத்திருந்தும், பாராட்டு விழாவிற்கு தன்னை அழைக்காமல், சம்பந்தமே இல்லாத, எம்ஜிஆரை அழைத்துப் பாராட்டியதை சுட்டிக் காட்டினார். பிறகு, திருப்பதிக்குச் சென்று வந்ததை வைத்து, திமுகவினர், திட்டத்தை நிறைவேற்றி விட்டனர். அதாவது, திமுகவில், பெரிய தலைவர்கள், நடிகர்கள் முதலியோரும் எத்தகைய விளைவுகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர், அதன் பின்னணி என்ன, யார் அவ்வாறு செய்வது முதலியவை மர்மமாகவே உள்ளன.

Anna and Shivaji, drama 1945 color

1966ல் சிவாஜி சின்னப்பா தேவரிடம் திருமணம் விசயமாக வந்தது[3]: 1966ல், எம்.ஜி.ஆர்., ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துக் கொண்டிருந்த காலம். சிவாஜி கணேசன் மார்க்கெட் மொத்தமாக காலியானது போன்ற சூழல்! இந்நிலையில், அன்று, தேவர் அலுவலகத்திற்கு வேகமாக வந்து கொண்டிருந்தார் சிவாஜி கணேசன். படிய வாரப்பட்ட தலை, நெற்றியில் விபூதி, வழக்கமான பைஜாமா, ஜிப்பா, இதழ்களில் புன்சிரிப்பு! வருவது அவர் தானா என ஆச்சரியமாக பார்த்தனர் அங்கிருந்தோர். சிவாஜி கணேசனைப் பார்த்த தேவர், ‘என்ன முருகா… இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்துருக்கீங்க…’ என்றார். ‘நல்ல விஷயமாத்தேன் வந்துருக்கேண்ணே…’ என்றார் சிவாஜி கணேசன். தொடர்ந்து தேவரின் அறையில் ஒலித்த உற்சாகம் கலந்த உரையாடல், கதை இலாகாவை எட்ட, அவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ள வராண்டாவுக்கு வந்தனர். ‘அண்ணே… சிவாஜி இங்க எதுக்காக வந்துருக்காரு… உங்களுக்கு ஏதாவது தெரியுமா…’ என எடிட்டர் பாலுராவைக் கேட்டனர். அவர் தெரியாது என்றதும், ‘பத்மஸ்ரீ விருது கிடைச்சுருக்கில்ல…  அதுக்கு ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பார்…’ என்றும், ‘இப்ப சிவாஜி கணேசனோட மார்க்கெட் அவுட்டுப்பா… மோட்டார் சுந்தரம்பிள்ளை கூட, இந்தியில வசூல் ஆன மாதிரி, இங்கே போகாதுங்கறாங்க; புதுப்படம் எதுவும், ‘புக்’ ஆகலே. அதான் வாய்ப்பு கேட்டு வந்திருப்பார்…’ என்றும் ஆளாளுக்கு கருத்துக் கூறினர். Santo with Shivaji Ganesanசிவாஜி கணேசனை வழியனுப்பி விட்டு வந்த தேவர்,  ‘இங்கே என்னப்பா செய்யறீங்க… நான் சொன்ன சீனை யோசிச்சீங்களா…’ என்று குரலை உயர்த்தினார். ‘அண்ணே… சிவாஜி இப்ப எதுக்காக வந்தாருன்னு சொன்னாத் தான் எங்களுக்கு வேலை ஓடும்…’ என்றனர். ‘என் பெரிய பொண்ணு சுப்புலட்சுமிக்கு, கணேசன் வரன் கொண்டு வந்துருக்காருப்பா. நாம அவருக்கு தொழில் கொடுக்கலன்னாலும், அவருக்கு என்மேல ஒரு தனிப் பாசம் இருக்கத் தான் செய்யுது. அவரே வீடு தேடி வந்து பேசிட்டுப் போறாரு…’ என்று கணேசனை, புகழ்ந்து தள்ளினார் தேவர்[4]. மாப்பிள்ளை ஆர்.தியாகராஜனின் மூத்த சகோதரர் சேது, பொள்ளாச்சியில் பிரபல வணிகர்; சிவாஜி கணேசனின் நண்பர். கணேசனின் முயற்சியால், ஜூன் 1, 1966ல் தேவர் மகள் சுப்புலட்சுமி, திருமதி தியாகராஜன் ஆனார்.  அதாவது அவ்வளவு நெருக்கம் இருந்தும், எம்ஜிஆரை வைத்து, இந்தி-ரீமேக் படங்கள் எடுத்தார் என்பது கவனிக்கத் தக்கது.

MGR, Jaya donning Murugan, Valli

1966ல் எம்ஜிஆர்ஜெயலலிதா, முருகன்வள்ளியாக நடித்தது: தி.மு.க.,வை எப்படியாவது ஆட்சியில் அமர வைத்து விட வேண்டும் என்று இளைஞர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நேரம் அது. அச்சமயத்தில், ‘அண்ணே… தனிப்பிறவி படத்துல ஒரு கனவு பாட்டு சீன் வருது; அதுல, நீங்க முருகர் வேஷமும், அம்மு வள்ளியா வந்தா நல்லா ருக்கும்ண்ணே… கவிஞர் பல்லவியை அற்புதமா ஆரம்பிச்சுருக்காரு…’ என்று தேவர் கூறியதும், அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்., ஏற்கனவே, நல்ல தங்காள் படத்துக்கு வசனம் எழுத தடை விதித்து, கதை, வசனகர்த்தா ஏ.கே.வேலனுக்கு, நாவலர் நெடுஞ்செழியனுக்கு, கடிதம் அனுப்பிய வரலாறும் உண்டு. அதாவது, கருத்துரிமை போன்றவற்றிற்கு எந்த அளவிற்கு இடம் கொடுக்கப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவர்கள் தான், பகுத்தறிவு என்றெல்லாம் பேசுகிறார்கள். மேலும், ‘அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா…’ என்று நடித்து கைத்தட்டல் வாங்கிய பின், திடீரென்று முருகனாகத் தோன்றினால், கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்புமே…’ என்று தயங்கியவர், ‘முகராசிக்கு கிடைச்ச வெற்றியில, ‘ரிஸ்க்’ எடுக்காதீங்க அண்ணே…’ என்றார். உண்மையில், எம்.ஜி.ஆரும் முருக பக்தரே! ஜூபிடர் படங்களில் நடிக்கிற காலத்தில், தேவரோடு சென்று, மருதமலை முருகனை வழிபடுவார் எம்.ஜி.ஆர்.,

Hati mere sati and Nalla neram

இந்தி திரைப்படங்கள், சிவாஜியும், எம்ஜிஆரும்: சாண்டோ சின்னப்பத் தேவர், ஏ.வி.எம் போல, இந்தியில் படம் எடுத்தவர். குறிப்பாக, ஆராதனா ஹிட் ஆனதை அடுத்து, ராஜேஸ் கன்னாவை வைத்து, “ஹாதி மேரா சாதி” படம் எடுத்தவர். பிறகு எம்ஜிஆரையும் வைத்து, அதே படத்தை தமிழில் எடுத்தார். ராஜேஸ் கன்னாவின் படங்கள் பல்லவற்றை, எம்ஜிஆர் தமிழில் எடுத்தார். ஆனால், சிவாஜி கணேசன், இரண்டே இந்தி படங்க்களில் நடித்துள்ளார். அதிலும், அவை இரண்டுமே தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் எடுத்தவை அல்லது டப் செய்தவை. மனோஹரா (1954) மற்றும்தான வீர கர்ணன் (1965). தவிர ஸ்கூல் மாஸ்டர் (நட்பிற்காக) மற்றும் தர்தி (1970) நட்பிற்காக தோன்றி நடித்துள்ளார். இந்தியில் எடுத்த படங்களில் நடித்தாலும், அவை வெற்றி பெறவில்லை. ஆனால், எம்ஜிஆர் தமிழில் ரீமேக் செய்த படங்கள் நன்றாக ஓடின. 1951ல் “ஏக் தா ராஜா” [மர்ம யோகி, இந்தி ரீமேக்], எம்ஜிஆர், அதே சிறிய வேடத்தில் நடித்தார். ஆக, இந்தி-தமிழ் படங்கள் எடுப்பதில், சென்னையில் இந்தி படங்கள் எடுப்பதில், எந்த பிரசினையும் இல்லை என்றே தெரிகிறது. இந்தி-எதிர்ப்பு போராட்டக் காரர்களும், அனுசரித்து நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் தலைவர்கள் அவ்வாறே கட்டளை இட்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

18-09-2019

MGR, Jaya donning Murugan, Valli.2

[1] வாமனன், திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018 – 20, தினமலர், பதிவு செய்த நாள் : 15 ஜூலை 2018.

http://www.dinamalarnellai.com/web/news/52765

[2]  பி. ராமமூர்த்தி, ஆரியமாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1983. இதில் ராமமூர்த்தி, அண்ணாவின் பொருளாதாரக் கருத்துகளை விமர்சித்துள்ளார்.

[3] தினமலர், சாண்டோ சின்னப்பா தேவர்! (16), பதிவு செய்த நாள் 22நவம்பர், 2015, 00:00, நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை. பா. தீனதயாளன்

[4] https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27841&cat=2&Print=1

விநாயக சதுர்த்தியை கலவரமாக்கிய பெரியார் குஞ்சும், பிள்ளையார் பிறந்தநாளை அரசியலாக்கிய கருணாநிதி பிள்ளைகளும் – நஷ்டமடையப் போவது திமுக-தமிழக பிஜெபி தான் [2]

செப்ரெம்பர் 17, 2018

விநாயக சதுர்த்தியை கலவரமாக்கிய பெரியார் குஞ்சும், பிள்ளையார் பிறந்தநாளை அரசியலாக்கிய கருணாநிதி பிள்ளைகளும்நஷ்டமடையப் போவது திமுக-தமிழக பிஜெபி தான் [2]

பெரியார் ஜி டி நாயுடுக்கு வாழ்த்து கடவுளின் பெயரால் 1932. with English

பணசக்தியின் மகிமை, கலவரம் உண்டாக்கும்: வீரமணி தொடரும் கதை, வீரமணி தொடரும் கதை, “இப்போது செய்யப்படுவது தன்னிச்சையான பக்தியின் எழுச்சியால் அல்ல; பண சக்தியின் மகிமையே! அதுவும்கூட நாளுக்கு நாள் மங்கி குறைந்துதான் வரு கிறது! அறிவுபூர்வ பிரச்சாரத்திற்குப் பதில் இதை ஊடகங்கள் ஊதுவதால் அதற்குத் தனி மகிமைபோல சித்தரிக்கப்படுகிறது!

மூட நம்பிக்கையாளர்கள்அழுக்குருண்டைகணபதியை கம்ப்யூட்டர்மூலம் புகுத்தி, அறிவியலை மூடத்தனத்துக்கு முட்டுக்கொடுக்க வைப்பது அறியாமையின்அபத்தத்தின் வெளிப்பாடு! கோவில் திருவிழாக்களில்தானே பெரும் கலவரங்கள் வெடிக்கின்றன! தடையால் கோவில் கதவுகளுக்குப் பூட்டும் போடப்படுகிறதேபக்தியோ, மதமோ மக்களைப் பிளவுபடுத்துகிறதே தவிர, ஒன்றுபடுத்தப் பயன்படவில்லை என்பது உண்மை! இவைதான் இன்றைய பிள்ளையார்? என்பதைப் புரிந்துகொண்டு, மதவெறியை விரட்டி, மனிதநேயம் காக்க அணிவகுப்பீர் திராவிடர்களே!” தலைவர், திராவிடர் கழகம், சென்னை 13.9.2018”.

இப்படி அளந்து விட்ட உடனே, செங்கோட்டையில் துலுக்கர், விநாயக சிலையை உடைத்து, மாரியம்மன் கோவிலை சேதப் படுத்தி, கலவரத்தை உண்டாக்கியுள்ளனர்[1]. அப்படியென்றால், திக, வீரமணி முதலியோர் தான், துலுக்கரைத் தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றாகிறது. அதாவது 2018ல், தற்பொழுதைய நிலையில் கலவரங்கள் உண்டாகும் என்பது முன்னமே தெரிந்து, எழுத்துப் பூர்வமாக அறிக்கை விட்டுள்ளதிலிருந்து தெரிகிறது. மேலும், அதிலும் அந்த “அழுக்குருண்டைகணபதி” என்று தூஷித்திருப்பதை கவனிக்கலாம். அதாவது, இந்துவிரோதத் தனத்தை வெளிப்படுத்தும் போக்கு!

திக-திமுகவின் பிரச்சாரமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது[2]. தென் மாவட்டங்களில் – இப்பகுதிகளில் விநாயகர் கோவில் அவமதிப்பு, சிலைகளை உடைப்பது போன்றவை கடந்த ஆண்டுகளில் துலுக்க செய்து வந்துள்ளனர். 2009ல் நான்கு துலுக்கர் கைது செய்யப் பட்டனர்[3]. இந்தியாவில் துலுக்கர் என்றால், இலங்கையில் பௌத்தர்களே அந்த வேலையை செய்து வருகிறார்கள்.

Mohammedans, Buddhists attack Hindu temples-2018

விநாக சதுர்த்தியும், ஸ்டாலினும், தமிழிசையும்: நேற்று  [13-09-2018] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து தொலைக்காட்சிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் அதுகுறித்து ஒரு ட்வீட்டை பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  பதிவிட்டுள்ளார்[4]. அவர் அதில் சன் தொலைக்காட்சியையும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும் குறிப்பிட்டுள்ளார். அதில், “திமுகவின் TV விடுமுறை தின நிகழ்ச்சி என விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். விநாயகர்தின வாழ்த்து சொல்ல மனமில்லாதவர்கள் வியாபாரத்திற்காக விநாயகரை விடுமுறைக்குள் அடைக்கிறார்கள்.விநாயகர் விடுமுறை எடுத்தால் ஸ்டாலின் உட்பட யாரும் இயங்கமுடியாது என்பதே உண்மை[5]. அதாவது, ஸ்டாலினின் இந்துவிரோதமும், வெளிப்படையாகி விட்டதால், மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

Vinayaka caturti politics-2018 - Tamilisai-Stalin

2014- ஸ்டாலின் விநாயக சதுர்த்தி வாழ்த்தும், மறுப்பும்[6]: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டது. “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்…” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட விநாயகர் ஓவியத்துக்கு சுமார் 3,000 லைக்குகளும், 250-க்கும் மேற்பட்ட ஷேர்களும் கிடைத்தன. இந்த நிலையில், திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிரத்யேக இணையதளத்தில், அவர் விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்ததாக வந்துள்ளது.

Stalin, Karunanidhi Caturthi politics 2014-18

மு.க.ஸ்டாலினின் இணையதளத்தை பராமரிக்கின்றவர்களில் சிலர் ஆர்வமிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவித்திருப்பதைப் போல மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[7]. இந்த பதிவு அப்போது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கருணாநிதி கடும் அதிருப்தி வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக, ஸ்டாலின் மீதும், திமுக தலைமை மீதும் இந்துக்களில் சிலருக்கு அப்போது அதிருப்தி ஏற்பட்டிருந்தது[8]. சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை அவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு விநாயகர் சதுர்த்தி உட்பட இந்துக்கள் பண்டிகைகளுக்கு எப்போதும்போலவே, திமுகவோ, ஸ்டாலினோ வாழ்த்து கூறுவதை தவிர்த்து வருகிறார்கள்[9]. கருணாநிதியைப் பொறுத்த வரையில், இறக்கும் வரை இரட்டை வேடம் போட்டு, அனைவரும் ஏமாற்றியுள்ளார். அதற்கு கனிமொழி வக்காலத்து வாங்கிய முறைலேயே தெரிந்து விட்டது. இனி, தேர்தல் நேரத்தில் ஸ்டாலின், இத்தகைய இந்துவிரோத போக்கைக் காட்டினால், பிஜேபி கூட்டு வரும் போது, மறுபடியும் பிஜேபி ஓட்டுகள் சிதறும். பிஜேபி வேட்பாளர்கள் தமிழகத்தில் தோற்பர். அதனால், திராவிட அரசியல் வலுபெறும். இதனை தமிழ பிஜேபி புரிந்து கொள்ளாமல் இருக்கிறது.

Stalin greeted Vinayaka Caturthi and withdrawn in 2014

2018 – கருணாநிதிகளின் பிள்ளைகள் சண்டை: இந்த நிலையில்தான், மு.க.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் “விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு பூச்செண்டு எமோஜி போட்டுள்ளார். இதேபோல தயா அழகிரி நேற்று வெளியிட்ட விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியை அழகிரி ரீட்வீட் செய்துள்ளார். இந்துக்களை கவரும் நோக்கத்தில் அழகிரி இப்படி செய்து ஸ்டாலின் வாபஸ் பெற்ற அந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை நினைவுபடுத்தியுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அரசியல்வாதிகளை யாரும் நம்பப் போவதில்லை. இருப்பினும், “முஸ்லிம் ஓட்டு வங்கி” ரீதியில், ஜாதிகள் ஓட்டுக்களைப் பெற்றுவரும் நிலையில், இந்துக்களும் பல கட்சிகள், பேனர்களின் கீழ் பிரிந்துள்ள நிலையில், குறிப்பிட்ட ஓட்டுகளை பெற அரசியல்வாதிகள், கூட்டு பேரத்தில் சரிகட்டலாம். இருப்பினும், நாத்திகர் / திராவிட கட்சியினரும் இந்துக்களை ஏமாற்றப் போகின்றனர்.

© வேதபிரகாஷ்

16-09-2018

Paki youth ebjoy Ganesh bhajan and pray for peace - Sept.2018

[1] நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று முன்தினம் [13-09-2018] விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக் கப்பட்டனர். நேற்று 2-வது நாளாக அங்கு பதற்றம் நீடித்தது. செங்கோட்டையில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தென்காசி, செங்கோட்டை ஆகிய தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  இந்த தடை உத்தரவு நேற்று) முதல்  இன்று காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் ஷில்பா கூறியுள்ளார். இந்தநிலையில்,  செங்கோட்டை, தென்காசி, ஆகிய வட்டங்களில் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று நெல்லை எஸ்.பி அறிவித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 22-ம் தேதி காலை வரை  அமலில் இருக்கும் எனக்கூறினார்.  விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான பிரச்சனையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி, செங்கோட்டை, தென்காசி, ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு, பதிவு: செப்டம்பர் 15,  2018 20:38 PM

https://www.dailythanthi.com/News/State/2018/09/15203805/144-prohibition-order-extension.vpf

[2] வேதபிரகாஷ், தி..காரர்களை விநாயகன் பார்த்துக் கொள்வான் என்று சும்மா இருக்க வேண்டியதுதானே?, செப்டம்பர் 9, 2010.

https://dravidianatheism.wordpress.com/2010/09/12/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

[3] தினமலர், முஸ்லிம்கள் கோவில் சிலை உடைப்பு: கைது செய்யப்பட்டனர்! கோயில் சிலையை உடைத்த கல்லூரி மாணவர்கள், டிசம்பர் 13, 2009.
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14670

[4] நக்கீரன், விநாயகர் விடுமுறை எடுத்தால் ஸ்டாலின் உட்பட யாரும் இயங்கமுடியாது… –தமிழிசை, கமல்குமார், Published on 14/09/2018 (10:42) | Edited on 14/09/2018 (11:09)

[5] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tamizhisai-soundararajan-tweet-about-sun-tv-and-stalin

[6] தமிழ்.இந்து, மு..ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: திமுக விளக்கம், Published : 31 Aug 2014 14:37 IST; Updated : 31 Aug 2014 14:37 IST.

[7]https://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6366910.ece

[8] தமிழ்.ஒன்.இந்தியா, விநாயகர் சதுர்த்தி.. ஸ்டாலினுக்கு செக் வைக்கும் அழகிரி, By Veerakumar Published: Thursday, September 13, 2018, 13:01 [IST]

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-alagiri-extended-his-vinayagar-chaturthi-greeting-329659.html