Posts Tagged ‘ஆரிய அம்மையார்’

திராவிட ஆட்சி-ஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்பு- செக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (1)

ஓகஸ்ட் 12, 2017

 

திராவிட ஆட்சிஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்புசெக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (1)

Kar-Jeya- Aryan-Dravidian rules

திராவிட ஆட்சியும்ஆரிய ஆட்சியும், பார்ப்பன ஆட்சியும்சூத்திர ஆட்சியும்: “திராவிட” சித்தாந்திகள் சோரம் போய் விட்டனர், கருத்துகள் பொய்த்து விட்டன, அரசியல் தோற்று வீழும் நிலையில் உள்ளது. “பாப்பாத்தி” என்று பேசியபோது, “சூத்திரன்” இருந்தான் என்று தானே ஆகிறது. கருணாநிதி, ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்ற போது, தான் “சூத்திரன்” என்றுதானே குறித்துக் கொண்டார்.” உள்ள சூத்திரன் ஆட்சியைக் காப்போம்,” என்று கூட சுவரொட்டிகள் ஒட்டினர். ஆனால், இப்பொழுது அந்த “பாப்பாத்தி” இறந்தவுடன், இந்த “சூத்திரன்” படுத்திருக்கும் நிலையில், திராவிட ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. “ஆரிய அம்மையார்” ஆட்சி போனாலும், “திராவிட ஆட்சி” வராது என்ற நிலையாகி விட்டது. திமுக இப்பொழுது, அதிமுகவை சாடியே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. ஏதோ யோக்கியமான அரசியல்வாதிகள், ஒழுக்கமானவர்கள், புனிதர்கள் போல அதிமுகவை ஊழல், லாயக்கில்லை என்றெல்லாம் வசைப்பாடி வருகின்றது. வலுவுடன் இருக்கும் கட்சியைப் பிளந்து, ஆட்சியை வீழ்த்தலாம் என்று திட்டம் போடுகிறது.

Save the Sudra rule prevailing- Wall poster

ஜாதி துவேசம், தூஷணம், வெறி முதலியவற்றில் ஈடுபடுவது யார்?: சூத்திரன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப் பட்டுக் கொண்டவர்கள் குறிப்பிடத் தக்கது. 1973ல் ஆகஸ்ட் 8ம் தேதி, ஹண்டே சபையில் கலைஞரைப் பார்த்து, ‘யு ஆர் எ தேர்டு ரேட் சீஃப் மினிஸ்டர் [You are a third rate chief minister]’னார்[1]. திமுகவினர் கொதிச்சு எழுந்தனர். அப்பொழுது, ‘உட்காருங்க’னு சொன்ன கலைஞர், ‘ஹண்டே அவர்களே, நீங்கள் சொல்வதுபோல் இது மூன்றாம்தர அரசு அல்ல, இது நான்காம் தர ஆட்சி, ஆமாம்… பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று சொல்கிறீர்களே… அந்த நாலாந்தர சூத்திரனின் ஆட்சிதான்’ என்றார்[2]. ஆக ஜாதி ரீதியில், சாதி வெறியில் யார் அடிக்கடி தூஷணங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை கடந்த 60-70 ஆண்டு கால நாளிதழ்களைப் பிரித்துப் பார்த்தாலே உண்மை விளங்கி விடும்[3]. ஆகவே, பிராமண எதிர்ப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு என்றெல்லாம் பேசுவது நாடகமே. தமது சித்தாந்தம் பொய்த்து, முகமூடிகள் கிழிந்து விட்டதால், வேறு உருப்படியான விசயமும் இல்லாததால், இத்தகைய கூத்துகளை நடத்தி வருகிறார்கள்.

punal_2381693f

பூணூல் அறுக்கும் அரசியல், பன்றிக்கு பூணூல் போடும் நிலைக்ககு வந்துள்ளது (1969-2017): 1970லிருந்து நேற்று வரை திமுகவின் நிலை என்ன என்பது, ஏதோ மறந்து விட்டது போல பிதற்றிக் கொண்டிருக்கிறது. பூணூலை அறுக்கும் திராவிட வன்முறையை குற்றமாக, பிராமணர்கள் மீதான வெறி-தாக்குதல் என்ற உண்மையினை மறைத்து, அது ஏதோ வேடிக்கையான விசயமாக செய்திகளாக போடப்பட்டன. உண்மையில் பிராமணர்கள் பயந்ந்து தான் அடங்கி-ஒடுங்கிக் கிடந்தார்கள். சில நாட்கள் கூட வராமல் வீடுகளில் அடைந்து கிடந்தார்கள். இது 1950-70 நிலை. கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் என்ற காரணி வந்ததால், விமர்சனம் ஆரம்பித்தது. எம்.ஜி.ஆர் கணக்குக் கேட்டதில் ஓரளவிற்கு, கேட்கும் தைரியம் தமிழகத்தில் வர ஆரம்பித்தது. திராவிட ஊழல் விமர்சிக்கப் பட்டது. மதிமுக தலைவர் வைகோ, “அதிமுக ஊழலின் ஊற்று என்றால், அதன் ஊற்றுக்கண் திமுக” என்றெல்லாம் சொன்னது ஞாபகம் இல்லை போலும். கோதுமை ஊழல் முதல் 2ஜி வரை நினைத்துப் பார்க்க வேண்டும். திஹார் சிறையிலிருந்து வெளிவந்து, உலாவும் உறவுகளை கவனிக்க வேண்டும். உண்மைகளை மறைத்து நாடகமாடி, பிழைப்புத் தேடுவது கடினம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். துலுக்கரை ஆதரித்து அறிக்கை விடும் ஸ்டாலின், பன்றிகளுக்கு பூணூல் என்ற போது, தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால், விளம்பரத்திற்காக, ஸ்வாதியின் வீட்டிற்கு சென்று குசலம் விசாரித்தார். இந்த சூத்திரனும், அங்கு சென்றிருக்க வேண்டாமே?  திராவிட சித்தாந்திகள், அடிப்படைவாதிகள், வெறியர்கள், இனவாதிகள், அரசியல்வாதிகள் பார்ப்பனர்களின் விரோதி என்பது தெரிந்த விசயம் தானே, பிறகு எதற்கு முதலை கண்ணீர் வடிக்க வேண்டும்?

Sacred thread cut- 1969-2017- to pigs

பன்றிக்கு பூணூலும், பன்றி கறி சாப்பிடுகிறவர்களும், சாப்பிடாதவர்களும்[4]: கார்ட்டூனிஸ்ட் பாலா எழுதியதில் சில கருத்துகள் ஒத்துப் போவதால் அவை அப்படியே தரப்படுகின்றன: “ஃபேஸ்புக்கில் இந்த சுவர் விளம்பரம் கண்ணில் பட்டது. பன்றிக்கு இவிங்க எதுக்கு தனியா பூணூல் போட்டு போராடுறாங்க.. அதான் அவங்களே ஏற்கனவே எல்லா கோவிலிலும் வராகருக்கு (பன்றி) பூணூல் போட்டுதான் கும்பிட்டுட்டு இருக்காங்க.. எவ்வளவோ விலங்குகள் இருக்க பன்றியை ஏன் இவர்கள் பூனூல் போட தேர்வு செய்கிறார்கள்.. அதை இழிவான விலங்காக கருதுவதால்தானே.. அப்படியானால் பன்றிக்கறி சாப்பிடும் மக்களை இழிவாக கருதுகிறார்கள் என்றுதானே அர்த்தம்..பார்ப்பனர்கள் அணியும் பூணூல் மட்டும்தான் இங்கு மிகப்பெரிய பிரச்னையா[5].. தமிழகத்தில் சாதிவெறி ஆணவக் கொலைகள் என இடைநிலை சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. அதற்கு எதிராக சும்மா அடையாளப்போராட்டங்கள் நடத்திவிட்டு பார்ப்பனர்களை மட்டும் சாதிவெறியர்கள் போல் காட்டுகிறார்கள். 2009க்குப்பின் எழுந்த தமிழர் என்ற இன அடையாள அரசியலும் இந்திய தேசிய எதிர்ப்பு தமிழ்தேசம்.. போன்ற கண்ணோட்டங்களை பார்ப்பனிய எதிர்ப்பு.. திராவிடம் என்று மடை மாற்றப்பார்க்கிறார்கள். சாவின் கடைசி துடிப்பில் இருக்கும் திராவிட அரசியலுக்கு மீண்டும் பார்ப்பனியர்களை ஒற்றை எதிரிகளாக்கி உயிர் கொடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. பார்ப்பானர்கள் பார்ப்பனர் அல்லாதோரை வேசி மக்கள் என்று வெளிப்படையாக கூறியதைவிட இந்த திராவிட இயக்கத்தவர்கள் தான் அதிகம் கூறியிருக்கிறார்கள்”.

Sacred thread to pig- announcement by PDK - 07-08-2017

பார்ப்பானை பிராமணன் ஆக்குவதும்தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணுலே..”:  கார்ட்டூனிஸ்ட் பாலா எழுதியது, “கழுத.. இவங்க பூணூல் போடுறாய்ங்க.. அவிங்க அறுக்குறாய்ங்க என்னமும் பண்ணித்தொலையட்டும். ஆனால் அந்த சுவர் விளம்பரத்தில் இருக்கும் வாசகத்தில் இருக்கும் அரசியலே நான் இந்த பதிவை எழுத காரணம். அந்த விளம்பரத்தில் பாருங்கள்..“பார்ப்பானை பிராமணன் ஆக்குவதும்தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணுலே..” என்ற வரி இருக்கிறது. அந்த வரியில்தான் ஒரு சூட்சுமம் இருக்கிறது. திராவிடர் கழக கம்பெனியின் தற்போதைய ஓனர் வீரமணி, திராவிடர் தலைவர் என்று சொல்லாமல், `தமிழர் தலைவர்என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறார்.. ஆனால் தமிழர் திருநாளை திராவிடர் திருநாள் என்றுதான் வேண்டுமென்றே கொண்டாடுவார். அதேப்போல்தான் இந்த விளம்பர வாசகத்தில் இருக்கும் அரசியலும். அதாவது தமிழனை சூத்திரனாக்குவதும் பூணூலே என்கிறார்கள். இந்த பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை நடத்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் திராவிடர்கள் என்பதை வலியுறுத்தி அரசியல் செய்யும் இயக்கம். ஆக இவர்கள் பார்வையில் பூணூல் சூத்திரனாக்குவது திராவிடர்களாகதானே இருக்க வேண்டும்..”

Brahmin Sacred thread cut- 1969-2017- to pigs

பூணூல் போடாத மற்றவர் பிராமணாரா?: கார்ட்டூனிஸ்ட் பாலா எழுதியது, “எதற்கு இந்த இடத்தில் தமிழர்களை இழுக்கிறார்கள். இந்த இடத்தில் மட்டும் எப்படி திராவிடர்கள் தமிழர்கள் ஆனார்கள்.. அப்படியானால் பூணூல் போடாத தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மராட்டியர்கள் எல்லாம் பிராமணர்களா.. தமிழன் மட்டும்தான் சூத்திரனா..போராடுவது.. உட்பட இன்னபிற விசயங்களுக்கு தமிழர் என்ற அடையாளத்தையும், அதிகாரத்திற்கு வருவதற்கு திராவிடர் என்ற அடையாளத்தையும் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இது திராவிடர்களின் தந்திரமான அரசியல். முதலில் தமிழர்களா.. திராவிடர்களா என்பதுகுறித்து ஒரு தெளிவுக்கு வாங்க. மற்றபடி பூணூல் போடுவதாலோ பார்ப்பனர்கள் சொல்வதாலோ தமிழர்கள் சூத்திரர்களாக வேண்டியதில்லை. ஏனெனில் தமிழர்களுக்கு தமிழர் என்ற அடையாளம் இருக்கிறது. வேண்டுமானால் திராவிடர்கள் சூத்திரர்களாக இருந்து கொள்ளுங்கள்”. இப்படி கார்ட்டூனிஸ்ட் பாலா முடித்திருக்கிறார். சித்தாந்த ரீதியில், பன்றிகளுக்கு பூணூல் போடும் போராட்டத்தை ஆதரித்தும் எழுதியிருக்கிறார்கள்[6]. உதாரணத்திற்கு, இது கொடுக்கப்படுகிறது[7].

© வேதபிரகாஷ்

07-08-2017

Annadurai grudge against Brahmins

[1] http://www.murasoli.in/details.php?news_id=458

[2]https://thimuka.wordpress.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/

[3]  குடியரசு, விடுதலை, நாத்திகம் போன்ற நாளிதழ்களை தாராளமாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

[4] கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் எழுதியது, நிதர்சன கருத்தாக இருப்பதனால், இங்கு அப்படியே கொடுக்கப் பட்டுள்ளது.

[5] லைன்ஸ்.மீடியா, பன்றிக்கு பூணூலும்தமிழர்களின் காதில் பூ கூடை வைக்கும் திராவிடம்!, 18 Jul 2017, கார்ட்டூனிஸ்ட் பாலா 07-08-2017.

https://www.linesmedia.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

[6] கீற்று, பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றில் ஒரு மைல்கல், செ.கார்கி, வெளியிடப்பட்டது: 20 ஜூலை 2017.

[7] http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33490-2017-07-20-08-59-33

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (3)

ஏப்ரல் 23, 2015

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (3)

திகவினரின் குற்றங்களை ஆவணப்படுத்தி வைக்காமல் இருப்பதே, திராவிட ஆராய்ச்சியில் பெரிய குறை மட்டுமல்லாது, மிக்கத்தவறான ஆய்வு நெறிமுறை எனலாம். மேலும், திகவினர் தாங்கள் எதனை சிறு-குறும் புத்தகங்களில் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவற்றை ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரம் போல குறிப்பிட்டு ஆய்வுகட்டுரைகள், புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. ருதலைப் பட்சமாக அவர்கள் எழுதி பதிப்பித்து வருவதை நம்பவேண்டிய நிலையுள்ளது. இது ஏதோ எசுவைட் / கிருத்துவ மிஷினரிகளின் எழுத்துகளளை அப்படியே எடுத்துக் கொள்வதை போலவுள்ளது. இதனால், பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில், முடிந்த வரையில் இருக்கும் விவரங்களை இங்கு தர முயன்றுள்ளேன். தயவு செய்து படிப்பவர்கள், மற்ற விவரங்களைக் கொடுத்தால், உரிய ஒப்புதலோடு, அவர்கள் பெயர்கள் குறிப்பிட்டு, சேர்த்துக் கொள்ளப்படும்.

குடி அரசு ஜனவரி 3 1926

குடி அரசு ஜனவரி 3 1926

1960 முதல் 1980 வரை திகவினரின் இந்துவிரோத செயல்கள்: 1960களில் நிச்சயமாக, யாதாவது எதிர்த்து கேட்டால் அடிப்பார்கள் என்று எல்லோருமே திகவினருக்கு பயந்துதான் இருந்தனர். எனவே பிராமணர்களைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. திகவினர் 1971ல் சேலத்தில் ராமர்-லட்சுமணன்–சீதை படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். துக்ளக்கில் ஊர்வல படங்கள் வெளியிடப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்டது. இப்பொழுது அப்படங்கள் கிடைப்பதில்லை. அக்டோபர் 1973ல் மதுரையில் இ.வே.ராவின் 95வது பிறந்த நாள் என்று இந்து மதம்-கடவுளர்களை தூஷிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலத்தின் முன்னால், ஒரு வேலைத் தூக்கிச் சென்று, அதனை செருப்பால் அடித்தவாறு சென்றனர். அதேபோல விநாயகர் விக்கிரகத்திற்கும் செய்தனர். கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலத்தில் எடுத்துச் என்றனர். ஆனால், அப்பொழுது முதலமைச்சராக இருந்த காமராஜர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1973ல் பெரியார் இறந்தார், ஆனால், இத்தகைய காரியங்கள் தொடர்ந்து நடந்தன[1]. 1974ல் “ராவண லீலா” அடத்தி, ராமர்-லட்சுமணன்–சீதை பொம்மைகளை எரித்தனர். எம்ஜியார் ஆட்சிக்கு வந்த பிறகு 1980-87 ஆண்டுகளில் நிலமை கொஞ்சம் மாறியது எனலாம்.

lord-sri-rama- 1971 DK chappal-garlanded

lord-sri-rama- 1971 DK chappal-garlanded

1980 முதல் 2006 வரை நடந்துள்ள தாக்குதல்: 1980களில் “தி இந்து” நிருபர் கணபதி என்பவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த போது திகவினர் அவரை நிறுத்தி, சட்டை-பனியனைக் கிழித்து, பூணூலை அறுத்தனர். அன்று 1983ம் ஆண்டு ஆலய மறியல் போராட்டம் என திராவிடர் கழகம் ஸ்ரீரங்கத்தில் அறிவித்திருந்தது. அப்போது பூஜ்யஸ்ரீ திரிதண்டி நாராயண ஜீயரும் ஹிந்து முன்னணியின் குழுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். சுமார் 500 பக்தர்கள் அனைவரும் சுவாமிகளின் தலைமையில் விஷ்ணு சஹஸ்ரநாமம், பிரபந்தம் ஜெபித்துக்கொண்டு நான்கு சித்திரை வீதி வழியாக ஊர்வலம் வந்து “ரங்கா ரங்கா” கோபுர வாசலில் சிதறு தேங்காய் நூற்றுக்கணக்கில் உடைத்து ஆலயப் பிரவேசம் செய்தனர். ஆலய மறியல் போராட்டத்துக்கு வந்திருந்த சுமார் 10 கருப்பு சட்டைகளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தி க தோற்றுப் போய்விட்ட ஆத்திரத்தில் இரண்டு நாள் சென்று ஆலயப் பிரகாரத்தில் அப்பிராணியாய் கிடந்த ஒரு நோஞ்சான் கிழவரின் பூணலை அறுத்து மூக்கை உடைத்து விட்டு தப்பி ஓடியது.

2006ல் பெரியார் சிலை உடைப்பு, பூணூல் அறுப்பு, கோவில்கள் தாக்கப்படுதல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது முதலியன: ஶ்ரீரங்கத்தில் திகவினர் விசமத்தனமாக, ஶ்ரீரங்கநாதர் கோவில் எதிரில், ஶ்ரீசைத்தன்யர் பாதக்கோவிலின் அருகில் பெரியார் சிலையை வைத்தனர். அப்போதே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது, ஆனால், ஆட்சியுள்ளவர்களின் ஆதரவால் அச்செயல் நிறைவேரியது. டிசம்பர் 2006ல் அச்சிலை சேதப்படுத்தப் பட்டது. இதனால், திகவினர் மற்றும் கருப்புப் பரிவார் கோஷ்டிகள் கோவில்களைத் தாக்குதல், விக்கிரங்களை உடைத்தல், மடங்களில் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்தல், பூணூல்களை அறுத்தல் என்று தமிழகத்தில் பல இடங்களில் குற்றங்களில் ஈடுபட்டனர்.

சங்கராபுரத்தில் இரண்டு கோவில்கள் தாக்கப்படுதல், விநாயகர் சிலைகள் உடைக்கப்படுதல்: விழுப்புரத்தில் சங்கராபுரம் கோவிலில் கருங்கல் விநாயகர் விக்கிரகம் பெர்த்தெடுக்கப்பட்டு, உடைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, வாகனம் மூஞ்சூறு மற்றும் பீடமும் உடைக்கப்படிருந்தன. கோவில் சுற்றுப்புறச் சுவர்களில் இருந்த சிற்பங்களும் உடைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது, கோபுரத்தில் இருந்த சிலைகளும் உடைக்கப்பட்டன[2]. அதேபோல, சங்கரபுரம்-கல்லக்குறிச்சி சாலையில், விவசாய சந்தை கமிட்டி அருகில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்த விநாயகர் விக்கிரகமும், அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, சுக்கு நூறாக உடைக்கப்பட்டிருந்தது[3]. இத்தாக்குதல்களுக்காக,

  1. வி. நாகராஜன் (29), நெடுமண்ணூர்.
  2. எஸ். நாகப்பிள்ளை (20), நெடுமண்ணூர்.
  3. ஏ. துரை (24), வனப்புரம்.
  4. எஸ். சாமித்துரை (25), கடவூர்.

இந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு, இதிய குற்றவியல் சட்டப்பிரிவு 153 (a) (1)ன் கீழ் மதச்சின்னங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை உடைத்தல் என்ற குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது[4].

2006ல் தாக்குதல் - அயோத்தியா மண்டபம், sakarapuram templ

2006ல் தாக்குதல் – அயோத்தியா மண்டபம், sakarapuram templ

சேலம் சங்கர மடத்தில் நுழைந்து தாக்குதல்: 2006ல் திகவினர் சேலத்தில் உள்ள சங்கரமடத்தில் நுழைந்து, எல்லா படங்களையும் அடித்து உடைத்தனர். அப்பொழுது மற்றவர்களின் உரிமைகள் பற்றி பேசும் செக்யூலரிஸப் பழங்கள் இந்துக்களின் உரிமைகளைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

Salem Sankara mutt attacked by DK - December 2006

Salem Sankara mutt attacked by DK – December 2006

ஈரோடு ராகவேந்திர மடம் தாக்கப்படல், ராமர் சிலை பெயர்த்துத் தூக்கியெறியப்படல்: அதேபோல, சம்பந்தமே இல்லாமல், ஈரோட்டில், அக்ரஹாரத் தெருவில் உள்ள ராகவேந்திர பிருந்தாவனத்தில் புகுந்து, ராமர் விக்கிரகத்தைப் பெயர்த்து எறிந்தனர்[5]. அப்பொழுதும் செக்யூலரிஸவாதிகள் மூச்சுக்கூட விடவில்லை.

erode Raghavendra mutt attacked, Vishnu idol uprooted and thrown by DK Dec.2006

erode Raghavendra mutt attacked, Vishnu idol uprooted and thrown by DK Dec.2006

சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்படல்: சென்னையில், பழைய மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. “தி இந்து” இதனை சூஜகமாக அமிலம் மற்றும் பெட்ரோல் கலந்த பாட்டில்கள் வீசப்பட்டன என்று குறிப்பிட்டது[6]. இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போது, சுவாமி தயானந்த சரஸ்வதியின் மீது, ஶ்ரீரங்கத்த்ல் கோவிலுக்கு எதிராக உள்ள சிலையை சேதப்படுத்தியதற்காக, முதல் குற்ரப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல சுப்பிரமணியன் சுவாமி, அது சட்டப்படி தவறு என்ரு சுட்டிக் காட்டினார்[7]. ஆக இது நாத்திகமும் இல்லை, நாத்திகவெறியும் இல்லை ஆனால், இனவெறியே ஆகும்.

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun

ஏப்ரல் 1929 அம்பேத்கர் முன்னர் பூணூல்-அணிவிப்பு, ஏப்ரல் 2015 ச்ஏப்ரல் மதத்தில் அம்பேத்கர் ஜெயந்திற்குப் பிறகு அம்பேத்கர் முன்னிலையில் வேதகோஷங்களோடு 6,000 பேருக்கு பூணூல் அணிவிக்கப்படலும், அம்பேத்கர் பெயரில் பெரியார் தொண்டர்கள் பூணூல்-அறுப்பு தாக்குதலில் ஈடுபடுவதும் நோக்கத்தக்கது. அம்பேத்கரின் நண்பர் பெரியாரின் தொண்டர்கள், இவ்வாறு அம்பேத்கர் பெயரில், அம்பேத்கர் ஜெயந்திக்குப் பிறகு ஏப்ரலில் இவ்வாறு தாலி-அறுப்பு நிகழ்சிக்குப் பிறகு, பூணூல்- அறுப்பு செய்திருக்கிறார்கள்! ஆனால், இதே ஏப்ரல் மாதத்தில் 86 ஆண்டுகளுக்கு முன்னர் 1929ல், அம்பேத்கர் தலைமையில், சிப்லுன் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் 6,000 பேருக்கு பூணூல் அளிக்கப்பட்டது. அம்பேத்கரின் பிராமண நண்பர், தியோராவ் நாயக் புரோகிதராக இருந்து, வேதமந்திரங்கள் முழங்க அவர்கள் பூணூல் அணிந்து கொண்டனர்! அம்பேத்கர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun.Tamil

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun.Tamil

வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது – எல்லாம் ஒன்றா என்று விடுதலை கேட்கிறது[8]: இன்றைய தி இந்து (தமிழ்) ஏட்டில் பக்கம் 7 இல் போலீசார் கடும் எச்சரிக்கை என்ற தலைப்பில் கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது. சென்னை மாநகர காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்துவதாக இருந்த பெண்களுக்கு தாலி தேவையா என்ற விவாத நிகழ்ச்சியை மய்யமாக வைத்து இந்து அமைப்புகள் பிரச்சினை செய்தன. அதைத் தொடர்ந்து இந்து அமைப்பினரும், பெரியாரின் பெயரில் இயங்கும் அமைப்பினரும் பல்வேறு வகைகளில் சென்னை நகரின் சட்டம் – ஒழுங்கை கெடுக்கின்றனர். வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது என பொதுமக்களின் அமைதியை தொடர்ந்து கெடுக்கின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. இனிமேல் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடும் அனைவர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். – இவ்வாறு அந்த ஏட்டில் செய்தி வெளிவந்துள்ளது. பொத்தாம் பொதுவாக இப்படி ஓர் அறிவிப்பைக் கொடுத்த காவல்துறை அதிகாரி யார்? என்பதை தி இந்து (தமிழ்) ஏடு தெரிவிக்கவில்லை. இதில் வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது என்று எல்லாவற்றையும் ஒன்றுபோல் காட்டுவது அசல் விஷமத்தனமாகும்[9]. வெடிகுண்டு வீசுவதையும், தாலி அகற்றிக் கொள்வதையும் ஒரே நிலையில் சம தட்டில் வைத்துப் பார்க்கிறதா காவல்துறை? தாலியை அகற்றிக் கொள்வது திராவிடர் கழகத்தின் கொள்கை சார்ந்தது – சட்டப்படியானதும்கூட! வெடிகுண்டு வீசுவது சட்டப்படியானதா? இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்புவது கண்டிக்கத்தக்கது! விஷமத்தனமானது!!

© வேதபிரகாஷ்

23-04-2015.

[1] After his demise in 1973 the Movement was being ably guided by the new President Annai E.V.R. Mani Ammaiyar. A notable event since her assuming the presidentship was the celebration of “Ravana Leela” in December, 1974, when the effigies of Rama, Sita and Lakshmana were burnt down. This event which rocked the entire orthodoxy all over India was no mean achievement of the movement today. A case was filed against Mrs.Maniammai and others including me. We were all acquitted.

http://www.modernrationalist.com/2011/march/page04.html

[2] The granite Vinayaka idol of a temple at Sankarapuram in Villupuram was found removed and broken. Devotees found that the `Moonjuru’ (mouse vahanam) and the pedestal of the idol had been destroyed. Cement decorative works that formed part of the temple compound were found broken. Images of the Hindu pantheon made of concrete and erected on the gopuram were damaged beyond recognition.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[3] The granite Vinayaka idol of the Selva Vinayaka temple near Agriculture Market Committee on the Sankarapuram-Kallakurichi road was also found uprooted and broken into pieces. The idol was found near the bus stand, about 200 feet away.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[4] The police have arrested four activists of the Thanthai Periyar Dravidar Iyakkam V. Natarajan (29) and S. Nagapillai (20) of Nedumanur, A. Durai (24) of Vanapuram and S. Samithurai (25) of Kaduvanur in connection with the Sankarapuram incident. They have been booked under Section 153 (a) (1) of Indian Penal Code (fanning communal tension by damaging religious symbols or religious places).

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[5] In Erode, a Ramar idol was found damaged. The police said around 5.15 p.m., a group of Dravidar Kazhagam volunteers, shouting slogans, entered the Raghavendraswamy temple, situated in Agrahara Street, went to the sanctum sanctorum and removed the deity. On hearing the news, hundreds of devotees rushed to the spot, and demanded the police take action against the persons responsible for the act. RSS and Hindu Munnani volunteers protested against the damage to the idol.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[6] In Chennai, some miscreants hurled a few bottles of acid and petrol at the Ayodhya Mandapam, West Mambalam.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[7] Janata Party president Subramanian Swamy condemned the police for registering a first information report (FIR) against Swami Dayanand Saraswati in the case related to damage caused to the statue in Srirangam. In a statement here, Dr. Swamy said by registering an FIR against Dayanand Saraswati merely for issuing a statement against the installation of the statue, the police had violated several Supreme Court judgments, including the one in the Bhajan Lal case in 1992.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[8] விடுதலை, வெடிகுண்டு வீசுவதும்தாலி அகற்றிக் கொள்வதும் ஒன்றா?, புதன், 22 ஏப்ரல் 2015 17:01

[9] Read more: http://www.viduthalai.in/component/content/article/72-2010-12-27-13-06-34/100150-2015-04-22-11-38-12.html#ixzz3Y5rhjTVv

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (2)

ஏப்ரல் 23, 2015

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (2)

நாடார்கள் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார்களா அல்லது அரசியல் லாபத்திற்காக பேசுகிறார்களா?; தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது[1]: “நேற்று மாலை 7மணி அளவில் மயிலாப்பூர் கோவிலில் பிரார்த்தனை முடித்துக் கொண்டு மாதவப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 80 வயது நிரம்பிய பெரியவரான விஸ்வநாத குருக்களைத் தாக்கி துன்புறுத்தி அவரது பூணூலையும் அறுத்தெறிந்து பெரியார் வாழ்க என்று கோஷமிட்டவாறே அராஜகம் செய்துள்ளனர். கொளத்தூர் மணியை தலைவராக கொண்டுள்ள திராவிட விடுதலை கழகத்தினர் இச்செயல் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் யாருக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்கவியலாது. தமிழக பாரதிய ஜனதா கட்சி இதை மிக வன்மையாக கண்டிக்கிறது. அவரவர் கொள்கைகளை ஓங்கிப்பிடித்து கருத்துக்களை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்காக ஏதுமறியாத அப்பாவி பெரியவரை அவரது வீட்டிற்கு அருகிலேயே, நடுத்தெருவில் தாக்கியது மிகக் கொடூரமான செயல் என்பதோடு, அனைத்து தரப்பினராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். விஸ்வநாத குருக்கள், பாரதிய ஜனதா கட்சியின் தென்சென்னை கலை மற்றும் கலாச்சாரப்பிரிவில் பொறுப்பாளராக இருக்கும் மங்கலநாதனின் தகப்பனார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்திற்குப் பிறகு, அப்பெரியவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.

 

தாலி அறுப்பு, இணைதள யுத்தங்கள், நாத்திகம்

தாலி அறுப்பு, இணைதள யுத்தங்கள், நாத்திகம்

பிரதான கட்சிகள் அமைகாக்கும் போதது, உள்ளூர் பிஜேபி மட்டும் கண்டிக்கிறது: கருத்துச் சுதந்திரமும், கொள்கைப்பிடிப்பும் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளும் அவரவரின் விருப்பு, வெறுப்புக்களைப் பொறுத்தது. இதில் மற்றவர் தலையீடு என்பது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பாகும். திராவிடக் கழகத்தினர் இம்மாதிரியான கோழைத்தனமான செயல்களை அரங்கேற்றுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளுடனும் உரிமைகளுடனும், விளையாடுவதை இனியும் தொடரக்கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் இதே மாதிரியான பிறிதொரு நிகழ்வு, நேற்று, மேற்கு மாம்பலம் சத்திய நாராயணா கோவில் அருகிலும் நடந்தேறியுள்ளது என்பதை நோக்குகையில், திராவிடக் கழகத்தினர் திட்டமிட்ட முறையில் இம்மாதிரியான நாகரீகமற்ற செயல்களை நடத்தியுள்ளனர் என்பது தெரியவருகிறது. திராவிட விடுதலைக் கழகத்தினர் தமது கருத்துக்களை மற்றவர்கள் மீது நேரடியாகத் திணிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்து குழப்பத்தையும், வேறுபாடுகளையும் தோற்றுவிக்கும் இம்மாதிரியான அராஜக செயல்களை இனியும் அவர்கள் தொடராத வண்ணம் இந்நிகழ்வினை அனைத்துக் கட்சியினரும் வன்மையாகக் கண்டிக்க முன் வர வேண்டும். வன்முறையில் ஈடுபட்டுள்ள திராவிட விடுதலைக் கழகத்தின் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருப்பினும் தமிழக அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்து இம்மாதிரியான அராஜகங்கள் தமிழ்நாட்டில் தொடராத வண்ணம் சட்டம் ஒழுங்கினைப் பேண வேண்டும். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். வன்முறைச் செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்[2]. இருப்பினும் மற்ற பிரதான அரசியல் கட்சிகள் மௌனமாக இருக்கின்றன[3].

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

தாக்கப்பட்டது எத்தனை பிராமணர், அறுக்கப்பட்டது எத்தனை பூணூல்: பூணூல் என்பது பிராமணர்களுக்கு மட்டுமல்ல, மற்ற சமூகத்தினருக்கும் புனிதமாக உள்ளது, எனவே, அதனை அவமதித்தல், அவற்றை அணிந்தவர்களைத் தாக்குதல் முதலியன குற்றம் ஆகும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது[4]. இருப்பினும் பிராமணர்களிடையே இது ஒரு பீதியினையும், பயத்தையும் கிளப்பிவிட்டுள்ளது என்றும் அறியப்படுகிறது[5]. 80லிருந்து 12 வயதுள்ள நான்கு பிராமணர்கள் தாக்கப்பட்டனர் என்று “தி டெலிகிராப்” தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. மேலே குறிப்பிட்ட இருவரைத் தவிர, திருவல்லிக்கேணியில் ஒரு வயதானவர் மற்றும் 12 வயது பையன் கோவிலுக்குச் சென்று வரும்போது தாக்கப்பட்டு, பூணூல் அறுக்கப்பட்டுள்ளது[7]. அப்படியென்றால், இவர்கள் இருவரும் பயந்துகொண்டு புகார் கொடுக்கவில்லை என்றாகிறது. இத்தகைய நிகழ்சிகள் 1960களிலிருந்தே நடந்து வருகின்றன. பூணூல் அறுப்புகளில் பலியான பிராமணர்கள் நிறைய பேர்கள் உள்ளனர். பொதுவாக பிராமணர்களை பயமுறுத்த அவர்களை “ஏய் பாப்பான்” என்று விளித்து ஏளனம் செய்வது, “என்ன ஐயரே?” என்று அடையாளங்காட்டி பேசுவது, “ஏ குடுமி, பார்த்து போ”, “ஐயரே வீட்ல அம்மா சௌக்கியமா?” என்ற பல தொணியில் கத்திப் பேசி அவர்களை கிண்டல் செய்வது என்பதைவிட, தாக்குதலில் ஈடுபடுவர். ஆனால், 90% பேர் அவற்றை வெளியில் சொல்வதில்லை. செய்திகள் வழியாகத்தான் இப்பொழுது விசயங்களை அறிய வேண்டிய நிலயுள்ளது. ஆனால், சாதாரண மக்கள் இருக்கும் செய்திகளைத் தேடி பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள். அந்நிலையில் செய்திகளை காலந்தாழ்த்தி வெளியிடுவது, முன்னும்-பின்னுமாக வெளியிடுவது, நடந்த கண்டனத்திற்குரிய குற்றத்தை முதலில் வெளியிடாமல், அதனை கண்டித்த செய்தியை முதலில் போடுவது போன்ற யுக்திகளை சித்தாந்த, பாரபட்ச மற்றும் வியாபார பலன்களை எதிர்பார்க்கும் ஊடகங்கள் கையாளுகின்றன.

பொன்.ராதா, விடுதலை, சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்சாரியார்

பொன்.ராதா, விடுதலை, சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்சாரியார்

பொன்.ராதாகிருஷ்ணன், சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்ச்சாரி படம் போட்டு விடுதலை திரிபுவாதம்: முன்பு பேஸ்புக்கில், ஒரு படத்தில் சங்கராச்சாரிரியார் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும், அவருக்கெதிரே, கீழே பொன்.ராதாகிருஷ்ணன், உட்கார்ந்திருப்பது போலவும், இன்னொரு படத்தில் சுப்ரமணியன் சுவாமி அவருக்கிணையாக நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும் காட்டி, இப்படித்தான் நாடார்கள் நடத்தப்படுகிறார்கள் என்பது போல விவாதித்திருந்தார்கள். இப்பொழுது, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் பூணூல்-அறுப்பு விசயத்தில் கண்டித்து பேசியிருந்ததால், வீரமணி உடனே அப்படத்தைப் போட்டு, திரிபுவாதம் செய்திருக்கிறார்[8].  “கருங்சட்டை” என்ற பெயரில் பேஸ்புக்கில், சில இந்துக்கள் ஜாதி ரீதியில் விவாதித்தை இங்கு உபயோகப்படுத்தி விமர்சிக்கப்பட்டுள்ளது[9]. இந்துக்கள் தாங்களே பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். ஏனெனில், அது எதிரிகளுக்கு உபயோகமாகி விடும்.

Attack on temples racial in US and Tamilnadu also

Attack on temples racial in US and Tamilnadu also

இனவெறி குற்றங்கள் இந்தியாவில் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை?: சமீபத்தில், வெளியில் நடந்த ஒரு நிகழ்சியில், மத்திய அமைச்சர் கிரிராஜ் கிஷோர் என்பவர், “ராஜிவ் காந்தி ஒரு நைஜீரிய நாட்டுப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால், காங்கிரஸ் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா?”, என்று பேசினார். அதனை, காங்கிரஸ் ஊடகங்களின் உதவியோடு, ஊதி பெரிதாக்கி, அமைச்சர் உடல்-நிறம் பற்றி பேசி, இனரீதியில், பாரபட்சமாக தாக்கியுள்ளார், அதனால், பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். அவரும் அவ்வாறே, வெளியே-உள்ளே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதேபோல, தமிழகத்திலும், திராவிடக்கழகம் மற்றும் கருப்புப் பரிவார் கூட்டங்கள், மேலே எடுத்துக் காட்டியபடி, பலவிதங்களில் பிராமணர்களைத் தாக்கி வருகிறார்கள். அது இனரீதியில், இனவெறி மனப்பாங்கில் தான் உள்ளது. அத்தகைய இனவெறி மனப்பாங்கை, வார்த்தை தீவிரவாதம் முறையில் பேசி-எழுதுவதை விட, இவ்வாறான “கொலைவெறி” தாக்கிதல்களிலும் வெளிப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இப்பொழுது இந்து கோவில்கள் தாக்கப்பட்டு வருவதை, “இனவெறி தாக்குதல்” என்றே அடையாளம் கண்டுள்ளனர். அதேபோல, நாத்திகத்தால் இந்து மதத்தை மட்டும் தாக்கி, பிராமணர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப் பட்டுவருவதால், இவர்கள் அத்தகய குற்றங்களை செய்து வருவது கவனிக்கத்தக்கது. நாகரிகத்தில் சிறந்த, வளர்ச்சியில் உயர்ந்த, அதிக முன்னேற்றம் கண்ட ‪அமெரிக்கர் ‪ இனவெறி ரீதியில் இந்து கோவில்களைத் தாக்கி வருகின்றனர்! இங்கு ‪திகவினரும், கடந்த 60 ஆண்டுகளாக அதே குற்றங்களை செய்து வருகின்றனர்! பிறகு எப்படி இவ்விரு கூட்டத்தினரும் ஒரே குற்றங்களை செய்து வருகின்றனர்?

© வேதபிரகாஷ்

23-04-2015.

[1] http://www.maalaimalar.com/2015/04/21133515/Thamizhisai-condemns-Traditiou.html

[2] மாலைமலர், பூசாரிகள் பூணூல் அறுப்பு: தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் , பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 1:35 PM IST

[3] The Bharatiya Janata Party’s Tamil Nadu unit president Tamizhisai Soundararajan said she was shocked and condemned the attacks. However, major political parties in the state were silent on the issue.

http://www.business-standard.com/article/news-ians/six-held-for-attacks-on-brahmins-in-chennai-115042101166_1.html

[4] http://newstodaynet.com/chennai/brahmins-attacked-poonool-cut-city

[5] G. C. Sekhar, Attacks fuel Brahmin fears, The Telegraph, Wednesday, April.22, 2015. http://www.telegraphindia.com/1150422/jsp/nation/story_15964.jsp#.VTboMdKqqko

[6]  Four Brahmins, including an 80-year-old and a 12-year-old, were attacked here by suspected activists of a fringe group who snapped their holy threads, the first such assaults in over two decades.

http://www.telegraphindia.com/1150422/jsp/nation/story_15964.jsp#.VTboMdKqqko

[7] A third elderly man and a 12-year old boy were attacked at Triplicane today while on way to a temple. G. C. Sekhar, Attacks fuel Brahmin fears, The Telegraph, Wednesday, April.22, 2015.

[8] http://www.viduthalai.in/page-8/100141.html

[9] கருங்சட்டை, வன்முறையைத் தூண்டுகிறார் மத்திய அமைச்சர்?, http://www.viduthalai.in/page-8/100141.html

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (1)

ஏப்ரல் 23, 2015

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (1)

Viswanatha sastri and 5 arrested youth of DK

Viswanatha sastri and 5 arrested youth of DK

பூணூல் அறுப்பு பற்றி தமிழ் ஊடகங்களின் செய்தி வெளியீடுகள்: சென்னையில் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில், இரண்டு இடங்களில் கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு, தாக்கப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னை மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் 4வது தெரு  மாதவப் பெருமாள் அக்ரகாரத்தில் வசிக்கும் விஸ்வநாத குருக்கள் என்பவர் 19-04-2015 அன்று இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, கருப்பு சட்டை அணிந்து  3 பைக்குகளில் வந்த “6 பேர்” என்று தினகரனும், மோட்டர் சைக்கிள்களில் வந்த “சிலர்” என்று பிபிசியும் குறிப்பிட்டு, திடீரென அவரைத் தாக்கி, அவரது பூணூலை அறுத்ததாகக் கூறப்படுகிறது[1] என்கிறது தமிழ்.பிபிசி. விஸ்வநாத குருக்களை வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தி பூணூலை அறுத்தெறிந்தது. அவர் விழுந்து மயங்கினார் என்றும் தினகரன் கூறுகிறது.  76 வயதாகும் விஸ்வநாதன்[2] காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்துவருகிறார், என்கிறது பிபிசி. ஆனால், தினகரன், சிவ விஸ்வநாத குருக்கள் (78) திண்டிவனம் அருகே உள்ள கோயில் ஒன்றின் பூசாரி. இவரது மகனும் பூசாரி.  மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.  துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் ஷியாம் வின்சென்ட் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அதற்குள் கும்பல் பைக்கில் தப்பியது.  விஸ்வநாத குருக்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலிசிடம் புகார் - seythikal.com photo

போலிசிடம் புகார் – seythikal.com photo

பார்ப்பன ஆட்சியில் சூத்திரர்களின் தாக்குதலா அல்லது திராவிடர் கலகமா?: “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்” என்று கடந்த மாநில தேர்தலுக்கு முன்னர் போஸ்டர்கள் ஒட்டினார்கள், “ஆரிய அம்மையார் ஆட்சிக்கு வந்து விடுவார்”, என்று கருணாநிதியே வெளிப்படையாக பேசினார். அதாவது திராவிடம் பேசி, திராவிடக் கட்சிகளை வைத்துக் கொண்டு, ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், ஜெயலலிதா ஆண்டால் “பிரமாண ஆட்சி”, கருணாநிதி ஆண்டால் “சூத்திர ஆட்சி” என்றுதான் விளக்கம் கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் வெளிப்ப்டையாக, “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்”, “ஆரிய அம்மையாரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம்”, என்றுதான் சுவரொட்டிகள் ஒட்டினார்கள், பேசி வருகிறார்கள். திராவிடத்துனுள் இப்படி நடந்து வரும் ஆரிய-திராவிடம் தமிழ்-மலையாள[3], பார்ப்பன-சுத்திரப் போராட்டங்கள் அலாதியானவை தாம்! குற்றம் புரிய தூண்டும் நோக்கம்-மூலம் (mens rea) எங்கிருந்து வந்துள்ளது, பாதுக்காக்கப்படுகிறது என்பதனை, “இந்துக்கள்” கண்டு கொள்ள வேண்டும்[4]. வீரமணி, ஜெயலலிதா முதலில் ஆட்சிக்கு வந்தபோது, “ஆரிய-திராவிட யுத்தம் தொடர்கிறது” என்ற சிறுபுத்தகத்தை வெளியிட்டார், பிறகு மறைத்துவிட்டார். இப்பொழுது, இத்தாக்குதல் கடந்த ஆண்டுகளில் பிரமண துவேசத்தில், அவர்கள் இலக்கானது நினைவுகூற வைக்கிறது[5] என்று “பிசினஸ் ஸ்டான்டெர்ட்” என்ற ஆங்கில நாளேடு குறிப்பிடுகிறாது. இதை எழுதி முடிக்கும் வேளையில், “தி இந்து”வின் செய்தி ஏனோதானோ என்ற விதத்தில் “BJP condemns attack” வந்துள்ளது[6].  அதாவது இச்செய்தி, செய்தி இல்லையா அல்லது அறிவிக்கப்பட வேண்டிய அவசியல் இல்லையா அல்லது மறைக்கப்பட வேண்டிய தேவையா?

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கைது: இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து, இரவு 8.30 மணியளவில் மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சந்தான கோபாலன் என்ற 69 வயது முதியவர் ஒருவரும் தாக்கப்பட்டார்.  அவர் அணிந்திருந்த பூணூலை பைக்கில் வந்த கும்பல் அறுத்து வீசியது. அங்குள்ள சத்திய பெருமாள் கோயிலில் பஜனை பாடும் சந்தான கோபால் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இன்னொரு நாளேடு குறிப்பிடுகிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் [ Dravidar Viduthalai Kazhagam (DVK)] முதலில் கைது செய்யப்பட்டனர். பிறகு இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாக பேசித் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7] என்று பிபிசி கூறுகிறது. போலீசார் இரவோடு இரவாக விசாரணை நடத்தி, திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ராயப்பேட்டை நந்தகுமார், பிரபாகரன், திவாகர், பிரதீப்,  ராவணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் திருவல்லிக்கேணியை சேர்ந்த அருண் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர் என்று தினகரன் கூறுகிறது[8].

2006ல் தாக்குதல் - அயோத்தியா மண்டபம்- விழுப்புரம் கோவில்

2006ல் தாக்குதல் – அயோத்தியா மண்டபம்- விழுப்புரம் கோவில்

குற்றங்களில் ஈடுபட்டவரை, மறுபடிமறுபடி குற்றங்களில் ஈடுபடுத்தும் போக்கு: கைது செய்யப்பட்டவர்களுள் இருவர் ஏற்கெனவே 2013ல் பெட்ரோல் குண்டு எறிந்த வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது[9] என்று “பிசினஸ் ஸ்டான்டெர்ட்” எடுத்துக் காட்டிட்டியுள்ளது. இவ்வாறு, குற்றங்களில் ஈடுபட்டவரை, மறுபடி-மறுபடி குற்றங்களில் ஈடுபடுத்தும் போக்கு (habitual offenders), ஜிஹாதிகள், அல்-உம்மா-சிமி கோஷ்டிகளின் போக்கைக் காட்டுகிறது.  குற்றங்களை கூட்டி-ஒன்றக்கும் (Compunding of offences) முறையில் தண்டனை கொடுப்பதால், அதே குற்றத்தை மறுபடி-மறுபடி செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு கொலை செய்தாலும் கொலை, ஒன்றிற்கு மேற்பட்ட கொலைகள் செய்தாலும் கொலை தான் என்று கொலைக்குற்றத்திற்கு தண்டனைக் கொடுக்கப்படுகிறது. இதே நிலை தான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு, நூற்றூக்கணக்கான அப்பாவி மக்களைக் கொள்ளும் கிராதகர்களுக்கும் இருக்கிறது! “காலையில் கைது, மாலையில் விடுதலை” என்ற பாரம்பரியமும் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், இவர்களும் தொடர்ந்து, அதே குற்றங்களை செய்து வருகின்றனர்.

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

பிராமணர்களின் எதிர்ப்பும், உள்ளூர் பிஜேபி ஆதரவும்: இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மைலாப்பூரில் பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்[10]. இதுதொடர்பாக, தேசிய அகில பாரத பிராமணர் சங்க கொள்கை பரப்பு செயலாளர் ராமசுப்பிரமணியன் கூறும்போது, ‘விசுவநாத குருக்களை தாக்கி பூணூலை அறுத்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், பெரியார் கொள்கைகளை பின்பற்றும் அமைப்பை தடை செய்ய வேண்டும். நாங்கள் ஒன்று சேருவோம். பொங்கி எழுவோம்’ என்றார்[11]. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகளைத் தடைசெய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரினர். ஆனால், இவர்கள் எல்லோருமே, மற்ற நேரங்களில் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். திராவிட சித்தாந்திகளின் தொந்தரவுகள், தாக்குதல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்ந்து இருப்பதை கண்டும் காணாமல் இருக்குக் போது, குற்றங்கள் பெருங்குற்றங்கள் ஆகும் மற்றும் திட்டமிட்ட குற்றங்களாகவும் (organized crimes) வெளிப்பட்டு பாதிக்கும்.

thamizh mithran photo- thread cut

thamizh mithran photo- thread cut

தாலி அறுப்பு, பூணூல் அறுப்பாக மாறியுள்ளது: சில நாட்களுக்கு முன்பு வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் போராட்டம் நடந்தது. அப்போது திராவிடர் கழகத்தினருக்கும் சிவசேனா தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களின் தாலியை அகற்றிய திராவிடர் கழகத்தினரின் கறுப்பு சட்டையை அகற்றுவோம் என்று பாஜக எச்சரிக்கை விடுத்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது, “கருப்பு சட்டை அணிவது அவர்கள் உரிமை என்றால் தாலி அணிவது இவர்கள் உரிமை”, என்று பேசினார். இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் “திராவிடர் கழகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேட்டி அளித்தார்”, என்கிறது இன்னொரு நாளேடு! “கருப்பு துணி என்பது துக்க நிகழ்ச்சிக்கு அடையாளமாக அணிவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்க கூடாது என்று பெண்கள் வெகுண்டெழுந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? நம்பிக்கை சார்ந்த விசயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும்”, என்று எச்சரிக்கை விடுத்தார்[12]. எச். ராஜா கூறுகையில், ‘‘இந்துக்களின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் திராவிடர் கழகத்தினரின் வாசகங்களை அழிப்போம்’’, என்றார். இதற்கு பழிவாங்கும் செயலாக பூணூல் அறுப்பு செயல் நடந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்[13]. இதற்கிடையே பாஜவின் கலை கலாசார அணி சார்பில் லஸ் கார்னரில் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது[14]. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், ஊடகங்களிடம் பேசிய போது, பாஜகவின் எச். ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இது போன்ற சம்பவங்களைத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டார்[15]. ஆனால், இந்த மெத்தப் படித்த வழக்கறிஞர், பெரியார் இந்துக்களைப் பற்றியும், இந்து மதம், மத-கடவுளர்கள் பற்றியும் அவதூறாக, ஆபாசமாக தூஷித்து பேசி-எழுதியதை சிறு-குறும்புத்தகங்களாக வெளியிட்டதை, வெளியிட்டு வருவதை கண்டுகொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

22-04-2015.

[1] பிபிசி.தமிழ், கோவில் அர்ச்சர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது, 21-04-2015

[2] இவரது வயதும் 76, 78, 80 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 80 என்று குறிப்பிட்டால், இரக்கம் அதிகமாகும் என்று 70களிலேயே போட விரும்புகிறார்கள் போலும்!

[3] எம்ஜியார் ஆட்சியின் போது, அவரை “மலையாளத்தான்”, “தமிழன்” அல்ல, அதனால், “தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்”, என்ற கோஷத்தை வைத்தார்கள்.

[4] https://dravidianatheism.wordpress.com/2010/10/23/jayalalitas-arayan-rule/

[5] The attacks were reminiscent of the hatred towards Brahmins in Tamil Nadu that prevailed many decades ago.

http://www.business-standard.com/article/news-ians/six-held-for-attacks-on-brahmins-in-chennai-115042101166_1.html

[6] The BJP on Tuesday strongly condemned the attack on priests carried out by workers of the Dravidar Viduthalai Kazhagam (DVK) and urged the State government to take stern action to put an end to such incidents. In a statement, BJP leader, Subramanian Swamy, said there were reports that miscreants entered houses of several Brahmin priests and attacked them violently. Their sacred threads were also cut. “These wanton attacks are because of the incompetent administration in Tami Nadu, which is today unable to maintain law and order or act in any way which is required of them under the Constitution,” he alleged. Reacting to the development, BJP Tamil Nadu president, Tamilisai Soundararajan, said the attacks were cowardly. One of the victims, Vishwanatha Gurukkal of Mylapore, was the father of a BJP functionary. “No one can accept the DVK imposing its views on others. In order to ensure they do not continue such divisive activities, all political parties should condemn these attacks,” she said. The State should ensure protection for the people against such attacks and stern punishment should be awarded to the perpetrators of such violence, she said.

http://www.thehindu.com/news/cities/chennai/bjp-condemns-attack/article7127944.ece

இதற்கான பதிலை ஏற்கெனவே, அங்கு இவ்வாறு பதிவு செய்து, “When Churches were targeted for petty theft or otherwise, the media hype created would be phenomenal, but when Brahmins attacked and their sacred threads cut, it has been very slow to report. Incidentally,  One of those held included a man detained in 2013 under the National Security Act for allegedly hurling a petrol bomb. In other words, the habitual offenders are used to commit such crimes targeting Brahmin community. Then what is the difference between the racial attacks on Hindu temples there in US and here on the Hindus? By the way how is Ganapathy, your reporter was attacked and his sacred threat cut some 35 years ago?”, பேஸ்புக்கில் ஷேரும் செய்து விட்டேன்.

[7] All those arrested have been booked under several sections of IPC, including rioting, wrongful restraint, promoting enmity on grounds of religion or caste and causing public mischief.

http://www.business-standard.com/article/pti-stories/priest-bhajan-singer-attacked-sacred-threads-cut-115042101204_1.html

[8] தினகரன், கோயில் குருக்கள் பூணூல் அறுப்பு தி.வி.கழகத்தினர் 6 பேர் கைது, 22-04-2015: 02:01:14.

[9] While five of the attackers, belonging to Dravidar Viduthalai Kazhagam and aged between 25 to 30, were arrested and remanded to judicial custody, police said they are on the lookout for the other two.  One of those held included a man detained in 2013 under the National Security Act for allegedly hurling a petrol bomb, police said.

http://www.business-standard.com/article/pti-stories/priest-bhajan-singer-attacked-sacred-threads-cut-115042101204_1.html

[10] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/04/22042018/Hindu-organizationsDemonstration.vpf

[11] தினத்தந்தி, பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு: இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், மாற்றம் செய்த நாள்: புதன், ஏப்ரல் 22,2015, 4:20 AM IST; பதிவு செய்த நாள்: புதன், ஏப்ரல் 22,2015, 4:20 AM IST

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/dvk-cadres-misbehave-with-archakar-chennai-225168.html

[13] http://www.ptinews.com/news/5944477_Priest–bhajan-singer-attacked–sacred-threads-cut.html

[14] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=142158

[15] http://www.bbc.co.uk/tamil/india/2015/04/150421_punool

திராவிட கட்சிகளின் வெற்றியும், தோல்வியும்: ஆரிய அம்மையாரின் வெற்றியும், திராவிட தாத்தாவின் தோல்வியும்!

மே 22, 2014

திராவிட கட்சிகளின் வெற்றியும், தோல்வியும்: ஆரிய அம்மையாரின் வெற்றியும், திராவிட தாத்தாவின் தோல்வியும்!

அம்மா மிக்சி கிரைன்டர் பேன் திட்டம்

அம்மா மிக்சி கிரைன்டர் பேன் திட்டம்

2011ல் ஆட்சிக்கு வந்த ஆரிய அம்மையார்: கோவை மாவட்ட தி.மு.க.  நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில்  22-10-2010 அன்று காலை நடைபெற்றபோது,  “ நாம் ஒற்றுமையுடன் இருந்து,  தேர்தலில் வெற்றிக்காக போரிட வேண்டும்.  அப்படி இல்லாவிட்டால் ஆரிய அம்மையார் ஆட்சி வந்துவிடும், தமிழ்நாடு மூடநம்பிக்கைகள்  அடர்ந்த காடாகி விடும்”,  என்று கூறினார் அப்பொழுதைய முதல்வர் கருணாநிதி[1]. கருணாநிதி கிண்டலாகச் சொன்னாரா,  தீர்க்க தரிசனத்துடன் சொன்னாரா என்று தெரியவில்லை! ஆனால், 2011ல் ஆரிய அம்மையார் ஆட்சிக்கு வந்தேவிட்டார்!  1991-96 மற்றும்  2002-06 ஆண்டு காலங்களிலும் கோமளவல்லி[2] என்கின்ற இவர் ஜெயலலிதா முதலமைச்சராகத் தான்இருந்தார், ஆனால், பச்சைத் திராவிட தாத்தாக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  இனமான வீரமணிகளாலும் முடியவில்லை. தமிழ்நாடு மூடநம்பிக்கைகள் படர்ந்த காடா கி விட்டதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

 

சாய்பாபா கரு ராஜாத்தி

சாய்பாபா கரு ராஜாத்தி

2014லும் ஜெயித்த ஆரிய அம்மையார்: 2014ல் திமுக கூட்டணி, குறிப்பாக திமுக தோற்றது மற்றும் அதிமுக  வெற்றது தமிழகத்தில் விசித்திரமாகவே உள்ளது.  செக்யூலரிஸம், முஸ்லிம்கட்சிகளின்ஆதரவு, இடதுசாரி ஆதரவு என்று திராவிட கட்சிகள் சித்தாந்த வேடங்கள் போட்டு வந்தாலும், நாத்திக மாயையில் மூழ்கியிருந்த,  இன்னும் மூழ்கியிருக்கும்         “விண்ணப்ப இந்துக்கள்”, மற்ற இந்துக்களுக்கு எதிராக ஓட்டுப்போட்டு வந்திருப்பதால், “தமிழர்கள்” என்றுசொல்லிக்கொள்ளும் “இந்தியர்கள்” தேசிய நீரோட்டத்தில் உண்மையாக சேர முடியாமல்  இருக்கிறார்கள். 1977ல் அதிமுக உருவானதிலிருந்தே[3] “திரா   பச்சைத் திராவிட திமுக பிஜேபியுடன் கூட்டுவைத்தது:  1999-2004 ஆண்டுகளில்திமுக “மதவாதகட்சி” என்று சாயம் பூசப்பட்ட பிஜேபியுடன் தான் கூட்டு வைத்துக் கொண்டது.  பிறகு காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தொடர்ந்து 2004 மற்றும் 2009 தேர்தல்களில் காங்கிரஸ்-கூட்டணியிலேயே இருந்து மந்திரி பதவிகளைப் பெற்றது.  இந்த இரண்டு கட்சிகளும்வடநாட்டுக்கட்சிகள், ஆரியக்கட்சிகள், வந்தேறிகளால் நடத்தப்பட்டுவருபவை. அதவாதுதிமுக, “செக்யூலரிஸ” மதவாதகட்சியுடன்கூட்டுவைத்துக்கொண்டு, “கோடி-கோடி” ஊழலில்சிக்கிக்கொண்டது. எப்படியாகிலும், தமிழர்கள் அல்லது திராவிடர்கள் எப்படி,  கருணாநிதி ஆரியர்களுடன், ஆரியக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டார் என்று எந்த திராவிடப்பழமும், பெரியார்பிஞ்சும், பகுத்தறிவு வெங்காயமும் கேள்வி கேட்கவில்லை. ஆனானப் பட்ட திக மற்றும் திக உதிரிகளும் அமைதியாகத் தான் இருந்தன.  ஆர்.எஸ்.எஸ் பூச்சாண்டி காட்டிக் கொண்டு, காந்தி கொலையாளர்கள் என்று மேடையில், நாளிதழ்களில் ஒப்பாரிவைத்த பகுத்தறிவுவாதிகள்  அடங்கிவிட்டார்கள்!

 

கரு ஆசிர்வதிக்கும் அழகிரி

கரு ஆசிர்வதிக்கும் அழகிரி

2014ல் திராவிட குடும்பத்தில் சண்டை,  ஆரிய அம்மையார் தனியாக போட்டியிட தீர்மானம்: திமுகவில் சகோதர சண்டை வந்ததும்,  அம்மா குளிர்ந்து போய்விட்டார்.  அழகிரி-ஸ்டாலின் விரிசலிலும் திராவிடம் தொய்யத்தான் செய்தது. காங்கிரசு திமுகவுடன் கூட்டணி இல்லை என்றது,  இன்னும் குஷியாகி விட்டுதனியாகவே போராட ஜெயலலிதா தீர்மானித்துக் கொண்டார்.  இதனால், பிஜேபிதான் கூட்டணியை வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. திமுக-கூட்டணி கூட்டணியே இல்லை என்ற அளவிற்கு போய்விட்டது. இம்முறை, அதனால், நான்குமுன போட்டியாகியதால், ஓட்டுகள் சிதறியதில் அதிமுக பெருமளவில் லாபம் அடைந்தது.  ஆக அதிமுகவை அதிக அளவில் ஜெயக்க வைக்க, திமுகத் தான் காரணமாகியது. ஒருவேளை, திமுகபிஜேபியுடன்கூட்டுவைத்திருந்தால், இருகட்சிகளும்இன்னும்சிலசீட்டுகளில்ஜெயித்திருக்கலாம். ஆனால், செக்யூலரிஸம் ஒருபக்கம், ஊழல்இன்னொருபக் கம், அதனைஒதுக்கிவிட்டது.

 

மோடி-லேடி-டாடி-2014

மோடி-லேடி-டாடி-2014

மோடியா, லேடியா, டாடியா: மோடி அலை என்றால் பா.ஜ.க.வின் வெற்றி கேரளத்திலும், தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் கூடப் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டுமே; அப்படி ஏற்படவில்லை என்று சிலர் வாதம் புரிகிறார்கள்[4]. ஆனால், பிரச்சாரத்தின் போது, நிர்வாகத்தில் சிறந்து விளங்குவது இந்த லேடிதான், மோடி இல்லை என்று ஜெயலலிதா பேசினார்.  குஜராத்தை விட தமிழகம் தான் சிறந்து விளங்குகிறது என்று அடுக்கினார். பதிலுக்கு ஸ்டாலினும் விடவில்லை, மோடியும் இல்லை,  லேடியும் இல்லை, எங்கள் டாடித் தான் சிறந்தவர் என்று, பேசினார். மோடியின் தாக்கத்தை எப்படி வர்ணித்தாலும், நிச்சயம் அவரது தாக்கம்,  இந்திய அரசியல்வாதிகளின் மீது இருந்தது. நிறைய பேர் பயந்துதான் போயிருந்தார்கள்.  நிதிஷ் குமார் தான் தவறு செய்து விட்டதை அப்பொழுதே உணர்ந்து கொண்டார். மம்தா பானர்ஜி நிலையும் அதுதான்,  இருப்பினும் தான் என்ற அகம்பாவம் அதிகமாக இருந்ததால், கூட்டணிக்குச் செல்ல மறுத்தார். தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், பிஜேபிக்காரர்கள் மோடியைப் பற்றி கிராமத்தவர்களிடம் எடுத்துச் செல்லவில்லை. இணைத்தளத்திலேயே மாவை அறைத்து விடலாம் என்று கனவு கண்டனர்.

 

Jeya on Sonia Maino 2002

Jeya on Sonia Maino 2002

திராவிட கட்சிகளை எதிர்த்த ராமதாஸ்: திராவிடக் கட்சிகளை வேரறுப்போம் என்று ராம்தாஸ் முன்னர் கூறியது நோக்கத் தக்கது.  பாமக 1999ல் பிஜேபி மற்றும் 2004ல் காங்கிரஸ் என்று கூட்டணியில் இருந்து,  அன்புமணிக்கு தொடர்ந்து மந்திரி வாசம் கிடைத்ததால், ஆரிய-திராவிட மாயைகளினின்று மீண்டு விட்டார்.  பாமக ஆரம்பித்தில் வன்னியர்களை ஆதரிக்கும் கட்சியாக ஆரம்பித்து, கம்யூனிஸப் பிரிவினைவாத சித்தாந்தத்துடன் செயல்பட்டு வந்தது.  இந்தியா ஒரு தேசமல்ல பலநாடுகளைக் கொண்ட தேசம் என்றெல்லாம், தனது கட்சிக் கொள்கை விளக்கப் புத்தகங்களில் வெளியிட்டது. ஆனால், தேசியக் கட்சிகளுடன் கூட்டுவைத்து, அன்புமணி அமைச்சராகியதும், அந்த சித்தாந்தம் எல்லாம் போய், திராவிடக் கட்சி எதிர்ப்பாக மாறிவிட்டது.  அண்ணாதுரைக்குப் பிறகு எப்படி திமுகவில் உயர்சாதி-பிற்படுத்தப்பட்ட சாதியினர் போட்டி ஏற்பட்டதோ, பாமகவினால், மிகவும் படுத்தப்பட்ட சாதியினர்-பட்டியிலிடப் பட்ட சாதியினர்களிடையே போட்டி ஏற்பட்டது. ஆனால், பதவி, பணம் என்று வந்த போது, திராவிடத்துவம் நீர்த்தது போல, இவையும் சமரசம் செய்துக் கொள்ளப் பட்டன.

 

nedunchezhiyan_karunanidhi_mgr-eating-together

nedunchezhiyan_karunanidhi_mgr-eating-together

ஊழலில் மறைந்த ஆரிய-திராவிட இனவாதங்கள்: ஆரிய நீராராடியாவுடன் பேரம் பேசிய போதே, திமுக தனது திராவிடத்தை இழந்து விட்டது, ஆரியத்தின் கால்களில் விழுந்து விட்டது.  அமைச்சர் பதவிக்காக திராவிட தாத்தாக்களின் மனைவிகள் பேரம் பேசிய விவரங்கள் வெளிவந்த போது, மக்கள் ஆஹா, இப்படியா இவர்கள் நம்மை ஏமாற்றி வருகிறார்கள் என்று திகைத்தார்கள்.  தயாநிதி மாறன், கனிமொழி, பாலு என்று எல்லோரும் சோனியாவுடன் இந்தியில் பேசுவதை அறிந்தவுடன்,  ஆஹா,  இவர்களா இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியவர்கள் என்று துடித்தார்கள். மக்களை இந்தி படிக்க விடாமல் செய்து,  இவர்கள் தங்களது அரசியல் வியாபாரத்தை நன்றாகவே பெருக்கி விட்டார்கள். உண்மையினை சொன்னால் 1969லேயே,  இந்து திருமணச் சட்டத்தில் நுழைந்த, சுயமரியாதைவாதிகள், தங்களது மரியாதையை இழந்து, சட்டரீதியில் “இந்துக்கள்” ஆனார்கள், இருப்பினும், தெருக்களில் “இந்து” துவேசத்தைப் பாராட்டி வந்தார்கள்.

 

nedunchezhiyan_karunanidhi_mgr-eating-together

nedunchezhiyan_karunanidhi_mgr-eating-together

1969-2014 காலகட்டத்தில் திராவிடத்தின் மாயைகள்: இந்தி எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு, நாத்திகம்,  பகுத்தறிவு என்று சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு 1969 முதல் 1977 வரை நன்றாகத்தான் வியாபாரம் செய்து வந்தனர்[5].  திராவிடத்துவம் என்ற போர்வையில் உண்மையில் ஜாதி அரசியலைத்தான் அவர்கள் நடத்தி வந்தனர். ஆனால், அதனை மறைக்க பிராமண எதிர்ப்பு, ஆரிய-திராவிட இனவாதங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினர். கருணாநிதி பதவிக்கு வந்தபோது, முதலியார்கள் ஓரங்கட்டப் பட்டனர். எம்.ஜி.ஆர் காலத்தில் ஜாதிகளுக்கு சங்கங்கள் வைக்கலாம் என்ற அளவில் வெளிப்படையானது ஜாதிஅரசியல். ஆகையால் “திராவிட ஓட்டு வங்கி” என்று எதுவும் இல்லையென்றாலும், திமுக, அதிமுக கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு வரும் விசுவாசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறகு ஜெயா-கரு மாறிமாறி ஆட்சி செய்தலில், தேசிய அளவில் கூட்டு வைத்ததில் செக்யூலரிஸம்-கம்யூனலிஸம் சித்தாந்தக் குழப்பங்களில், கோடி-கோடி ஊழல்களில் திராவிடத்துவம் மறைந்தே போய் விட்டது. திராவிட கட்சிகளின் வெற்றியும், தோல்வியும் 2014ல்கருணாநிதி-ஜெயலலிதா என்று வைத்துப் பார்த்தால் கூட, மக்கள் ஊழலில் சிறிய ஊழலைக் கண்டு பிடித்து ஓட்டளித்துள்ளார்கள். ஆரிய அம்மையாரின் வெற்றியும்,  திராவிட தாத்தாவின் தோல்வியும் சித்தாந்திலோ, மின்சார வெட்டுகளிலேயோ இல்லை, கருணாநிதி ஆரம்பித்த இலவசங்களை, அம்மையார் “மிக்சி-கிரைன்டர்-பேன்திட்டம்[6] 2013-14” என்று ஏற்கெனவே நிறைவேற்றி வைத்ததில் பெண்களிடம் ஓட்டுகளை அள்ளியுள்ளார்.

 

© வேதபிரகாஷ்

22-05-2014

[1] http://tamil.oneindia.in/news/2010/10/23/dmk-karunanidhi-coimbatore-unity.html

[2]ஜெ. ஜெயலலிதா எனப்படும் கோமளவள்ளிஜெயராம் (பிறப்பு: பிப்ரவரி 241948) தமிழகமுதல்வரும், அரசியல்தலைவரும், பிரபலமுன்னாள்  தென்னிந்தியத் திரைப்பட நடிகையும்ஆவார். தமிழ்நாடுதிருச்சிராப்பள்ளிமாவட்டம் ஸ்ரீரங்கம் எனும்ஊரைபூர்வீகமாககொண்டஇவர், கர்நாடகமாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர்செல்லும்நெடுஞ்சாலையில்அமைந்துள்ள மேல்கோட்டை எனும்கிராமத்தில்பிறந்தவர்.

[3] 1972-இல் அண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகம் என்றபெயரில்புதியகட்சியொன்றைஎம்.ஜி.ஆர் ஆரம்பித்தார். பின்புஅக்கட்சிஅனைத்திந்தியஅண்ணாதிராவிடமுன்னேற்றக்கழமாகமாறியது. முதன்முதலாகபோட்டியிட்டதிண்டுக்கல்பகுதியில்பெரும்வெற்றிபெற்றது.

[4] Read more: http://www.viduthalai.in/headline/80548-kveeramani-statement-dmk-basement.html#ixzz32FmIwEHQ

[5]  தமிழகத்தில்பிராமணர்அல்லாதோர் என்ற ரீதியில் 1912-ஆம்ஆண்டுதுவங்கப்பட்டதிராவிடசங்கமேஇன்றையதிராவிடஇயக்கங்களுக்குமுன்னோடி, முன்மாதிரி, இருப்பினும், தலைமைகள் மாற, அரசியல் மாற அத்தகைய சித்தாந்தமும் மாறித்தான் வந்துள்ளது.

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=61483

திராவிடக் குடும்பத்தின் பிரச்சினை – தமிழர்கள் கற்றுக் கொள்ள பாடமா, பகுத்தறிவை பிரித்தறிய சந்தர்ப்பமா?

ஏப்ரல் 30, 2013

திராவிடக் குடும்பத்தின் பிரச்சினை – தமிழர்கள் கற்றுக் கொள்ள பாடமா, பகுத்தறிவை பிரித்தறிய சந்தர்ப்பமா?

கருணாநிதி குடும்பம் பெரியது: திராவிடத் தலைவர் கருணாநிதி குடும்பம் பெரியது, அதனல், அவரின் குடும்பப் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கும். மகன்கள்-மகள்கள்; பேரன்கள்-பேத்திகள் என்று வளர்ந்து விஸ்தரிக்கப்பட்டுள்ள குடும்பம். ஆசியாவிலேயே மிகவும் செழிப்பான, வளமான, செல்வமிக்கக் குடும்பங்களில் ஒன்று புகழும் பெற்றுள்ளது[1]. அந்நிலையில், அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் தவிர, இவ்வாறான சொத்துப் பிரச்சினைகளும் வருவதுண்டு. ஆனால், அதன் பின்னணியில் உள்ள பண்பாடு, கலாச்சார காரணிகளைப் பற்றி கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், கருணாநிதி ஒரு ஆட்சியாளர், சக்தி படைத்தவர், பேச்சால் மக்களைக் கவர்ந்தவர், இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அரசியல்வாதி. இவரது அரசியலை விரும்பாதர்கள் கூட, இவரது பேச்சை விரும்பிய காலம் உண்டு. அந்நிலையில், இவரத் குடும்பச் சண்டைகளும் திராவிட சமுதாயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும், என்ற நிலையில் இப்பிரச்சினை நோக்கப்படுகிறது.

மு..முத்துவின் மனைவி கூறும் புகார்: ஜெ. சிவகாமசுந்தரி தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன், மு.க.முத்துவின் மனைவியும், மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் மூத்த மகளும் ஆவர்[2]. அவர் கூறுவதாவது, “எனக்கு அறிவுநிதி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு, திருமணமாகி விட்டது. அவரும், அவர் கணவரும், எங்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்கின்றனர். சென்னை, கோயம்பேட்டில், என் பெயரில் உள்ள கடை மூலம், மாதந்தோறும், 40,000 ரூபாயும்; என் கணவருக்கு, மாதந்தோறும், 75,000 ரூபாயும் வருமானம் வருகிறது. இதை கொண்டு மருத்துவம் மற்றும் அன்றாட செலவுகளை செய்து வருகிறோம்”.

கார் கூட இல்லை: “என் மாமனார் கருணாநிதி, எங்களுக்கு பல்வேறு வகையில், தொடர்ந்து உதவி புரிந்து வருகிறார். அவர் தான், எங்களுக்கு கார் வாங்கி கொடுத்தார். தற்போது, அந்த காரும் பழுதடைந்து விட்டது[3]. மருத்துவமனைக்கு கூட, ஆட்டோவில் சென்று வருகிறோம். இன்று புகார் கொடுக்க கூட, ஆட்டோவில் தான் வந்துள்ளேன். வயதான நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு, உதவி செய்யாமல், அறிவுநிதி உபத்திரவம் செய்து கொண்டு இருக்கிறார். அறிவு நிதிக்கு, சென்னையில், மூன்று வீடுகளும், கோவையில் ஒரு வீடும் உள்ளன. இது தவிர, பல்வேறு தொழில் செய்து வருகிறார். அவரால் எங்களுக்கு, ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. நல்லபடியாக இருந்தால், அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். நாங்கள், கோபாலபுரத்தில் வசித்த வீட்டையும், எங்கள் காலத்துக்கு பின், அறிவுநிதி தான், அனுபவிக்க போகிறார்.

என் மகன் என்னைக் கொடுமைப் படுத்துகிறான்[4]: திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் மனைவி சிவகாமசுந்தரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்[5].  அதில் சொத்துக்காக மகன் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார். அவரது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: “கானத்தூரில் ஒரு வாடகை வீட்டில் நான் இப்போது வசித்து வருகிறேன். வயதாகிவிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு, இரண்டு முறை, தலையில், அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது நான், மேலும், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் எனது மகன் மு. . மு. அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, மாமியார் யோகமங்களம் ஆகியோர் சொத்துக்காக எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள், ஆள் மூலமாகவும் என்னை மிரட்டி வருகின்றனர். “ஆள் வைத்து அடித்து, எல்லாவற்றையும் பிடுங்கி விடுவேன்’ என, மிரட்டுவதுடன், தகாத வார்த்தைகளால், பேசி வருகின்றனர்.

 கோபாலபுரம் வீட்டிலிருந்து விரட்டப் பட்டேன்: “சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை கோபாலபுரத்தில் எனக்கு வீடு இருந்தது. ஆனால் அந்த வீட்டில் இருந்து என்னையும், என் கணவர் முத்துவையும் அறிவுநிதி விரட்டி அனுப்பிவிட்டார். இதன் பின்னர் அந்த வீட்டை அவர் வாடகைக்கு கொடுத்துள்ளார்[6]. இதனால் வேறுவழியின்றி நாங்கள் இங்கு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். அறிவுநிதி தொடர்ந்து மிரட்டி வருவதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. மேலும் எங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறை எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் எங்களை மிரட்டும் அறிவுநிதி, பூங்கொடி,யோகமங்களம் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மு..முத்து மறுக்கும் புகார்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மு.க. முத்து புகார் மனு கொடுத்த நிலையில் இந்த புகார் மனுவை மறுத்து மு.க. முத்து சார்பில் திங்கள்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தனது மனைவியை யாரோ தூண்டிவிட்டு இந்த புகார் மனுவை கொடுக்கச் செய்துள்ளதாகவும் தனக்கும் மகனுக்கும் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றும் கூறியுள்ளார். எங்களது குடும்பப் பிரச்னைக்கு நானும், எனது மனைவியும், மகனும் பேசி தீர்வு காண்போம் என்றும் கூறியுள்ளார்[7].  மு. க. முத்து கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதிக்குப் பிறந்த மகன். ஒருகாலத்தில் அதிமுகவில் இருந்தவர்[8].

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழியா அல்லது மாற்றுவழியில் செல்வார்களா?: திராவிடப் பாரம்பரியம் வளர்ந்ததிலிருந்து, தமிழக மக்கள் பேச்சில் வல்லவர்களாகி விட்டார்கள். இப்பொழுதே கேட்கவே வேண்டாம், சினிமாவின் போக்கை தமது போக்காக மாற்ரிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழியா அல்லது மாற்றுவழியில் செல்வார்களா என்று பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 60-70 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏன் குடும்பம் சார்ந்த முரண்பாடுகள், பிரழ்சிகள், குற்றங்கள்னாதிகமாக நடக்கின்றன, பெருகி வருகின்றன, அதற்கும் திராவிட சித்தாந்தத்திற்கும் தொடர்பு உண்டா இல்லை நாடெங்கிலும் நடப்பது தான் இது என்று ஒதுக்கிவிடலாமா?

இல்லை, நிச்சயமாக,

  • தமிழகத்தில் “திருமண முறிவு விழாக்கள்” இப்பொழுது தான் நடத்தப் பட்டன;
  • தாலி தேவையில்லை என்ற ரீதியில் விஜய் தொலைக் காட்சியும் தமிழகத்தில் நடத்தியுள்ளது;
  • தாலி அறுக்கும் தமிழர்களும் உருவாகி இருக்கிறார்கள்;
  • அது மட்டுமல்ல, கோயிலில் அம்மன் தாலிகளையும் திருட ஆரம்பித்துள்ளனர்.
  • அம்மனின் முன்பு கால் தூக்கி உட்கார்ந்த நடிகை குஷ்பு தான் கற்பின் விலைய பேசியுள்ளாள்.
  • ஆனால், இந்திய பெண்மையை விலைபேசி வரும் ஆங்கில ஊடகங்கள், இவளின் கற்பழிப்புப் பற்றி கருத்துக் கேட்கின்றனர்.
  • யார் வேண்டுமானாலும், யாருடைய மனைவியை கூட்டி வைத்துக் கொள்ளலாம், என்று நாத்திகம் பேசும் பிரபல நடிகனும் – கமல்ஹஸன் இங்குதான் இருக்கிறான்.
  • கணவனை தூரத்தில் வைத்து விட்டு, இந்த கேடு கெட்ட நடிகனுக்கு முத்தம் கொடுக்கும் தமிழச்சிகளும் உருவாகி இருக்கிறார்கள்.

ஆக இதெல்லாம் திராவிட சித்தாந்தத்தின் சாதனைகள் அல்ல; பெண்மையை சீரழித்த சித்தாந்தம்; அதனால் தான் கற்பை விலை பேசும் குஷ்பு போன்ற நடிகைகளும் இருக்கிறார்கள்.

வேதபிரகாஷ்

30-04-2013


[4] The Hindu, Karunanidhi’s eldest son alleges ill-treatment by heir,
CHENNAI, April 30, 2013, http://www.thehindu.com/news/cities/chennai/karunanidhis-eldest-son-alleges-illtreatment-by-heir/article4667607.ece

[6] “A few years ago, our son chased away us from our house in Gopalapuram. He has now rented it out while we stay in a rented, dingy house in Kanathur. This continuous mental torture by our son has been unbearable and due to this, our health also deteriorated,” said Ms. Sivagamisundari in her complaint.

http://www.thehindu.com/news/cities/chennai/karunanidhis-eldest-son-alleges-illtreatment-by-heir/article4667607.ece

[8] Karunanidhi married Dayaluammal four years after his first wife, Padmavathi, died in 1944, leaving behind a son, M.K. Muthu, a singer-actor who defected to the AIADMK. http://www.outlookindia.com/article.aspx?240630

ஒற்றுமையாக இல்லாவிட்டால் ஆரிய அம்மையார் ஆட்சி வந்து விடும்- மிரட்டும் திராவிட கலைஞர்!

ஒக்ரோபர் 23, 2010

ஒற்றுமையாக இல்லாவிட்டால் ஆரிய அம்மையார் ஆட்சி வந்து விடும்-கருணாநிதி!

ஆரிய அம்மையார் ஆட்சி வந்து விடும்: மிரட்டும் திராவிட கலைஞர்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தான், தமிழகத்தில் லஞ்சம், கையூட்டு, ஊழல் முதலியவை தாராளமாக வித்திட்டு, வளர்த்து பரவ ஆரம்பித்தது என்பது எல்லொருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதிமுகவும் அதில் சளைத்தது இல்லை.

மாறி-மாறி இந்த மாநிலத்தைக் கெடுத்தவைதாம்.

இப்பொழுது திமுக எந்த அளவிற்கும் இல்லாத வகையில் ஊழலை, லஞ்சத்தை,…..மொத்தமாக வசூல் செய்து கொடுக்கின்ற நிலையை வெற்றிகரமாக செய்துள்ளது.

இதனால்தால், மக்கள் சாகின்றனர், விலைவாசி ஏறியுள்ளது.

பத்து ரூபாய் பொருளை இருபது ரூபாய்க்கு விற்று, பத்து ரூபாயை லஞ்சமாகக் கொடுக்கிறேன் என்கிறான்.

கோவை மாவட்ட நிர்வாகிகளிடையே முதல்வர் பேசியதாவது: நாம் ஒற்றுமையுடன் இருந்து, தேர்தலில் வெற்றிக்காக போரிட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆரிய அம்மையார் ஆட்சி வந்து விடும்[1], தமிழ்நாடு மூட நம்பிக்கைகள் படர்ந்த காடாகி விடும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

செம்மொழி மாநாடல்ல, திமுகவை செம்மைப்படுத்தும் மாநாடு: கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓரளவு ஒற்றுமை, செல்வாக்கு இருந்த நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியது – நற்பெயரை ஈட்டித் தந்ததோடு; தி.மு.கழகத்தின் செல்வாக்கையும் கணிசமாக உயர்த்தியுள்ளது என்றும்[2]; கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் கழகத்திற்குத் தற்போது சுமார் 30 முதல் 38 சதவிகித வாக்குகள் உள்ள நிலையில், இஸ்லாமியருக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு – அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடும் வழங்கியதும், அந்தச் சமூக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது[3].

வேற்றுமைகள் மறைய வேண்டும்: கூட்டணிக் கட்சியினரோடும் இணக்கமான சூழ்நிலை உள்ளது. தி.மு.க. நிர்வாகிகளிடையே நிலவும் சிறு கருத்து வேறுபாடுகளை முழுமையாகக் களைவதன்மூலம், தொகுதிகளுக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் – மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி வாய்ப்பு உள்ளது என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த 9 என்பது, 10 ஆகவும் உயரலாம் – நான் கோவை மாவட்டத்தைப் பற்றி எனக்குக் கிடைத்த நம்பகமான, நடுநிலையான தகவலைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆபரேஷன் நேரத்திலே புண்படுத்தாமல் எந்த டாக்டரும் சிகிச்சை செய்ய முடியாது[4]: ஆனால், அந்தத் தகவல் எனக்கும் உங்களுக்கும் எதை அறிவுறுத்துகிறது என்றால், நான் சொல்லப் போகின்ற சில விஷயங்களைப் பற்றி இந்தக் கூட்டத்திலே இருக்கின்றவர்களுடைய உள்ளத்தைப் பாதிக்கக்கூடியதாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், கழகத்தினுடைய தலைவர் இங்கே சில விஷயங்களைச் சொல்லி, என்னைப் புண்படுத்திவிட்டாரே? என்று எண்ணாமல்; ஆபரேஷன் நேரத்திலே புண்படுத்தாமல் எந்த டாக்டரும் சிகிச்சை செய்ய முடியாது என்பதால், அப்படி நீங்கள் இதனைக் கருதிக் கொள்ள வேண்டுமென்று அதைச் சொல்ல விரும்புகிறேன்.

தவறைத் திருத்திக் கொள்ளவேண்டும்: நான் அறிந்த தகவல்களை இங்கே பெரிதுபடுத்தி, ஒரு விசாரணை மன்றம் அமைத்து, இது உண்மையா அல்லது பொய்யா அல்லது உண்மைக்கு மாறானதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. தவறே இருந்தாலும், செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய தவறினாலும், அவற்றையெல்லாம் திருத்திக் கொண்டு, இந்தத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் – ஒன்றுபட்டுப் போரிட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டத்தான் இந்தக் கூட்டம் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு கழக உறுப்பினரும் மறந்து விடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கட்சியின் கொள்கைதான் பெரியது: தந்தை பெரியாரும், அவர் வழியில் வந்த அண்ணாவும், இந்த இயக்கத்தை உருவாக்கி, அதை வளர்த்து, எங்கள் கையிலே ஒப்படைத்திருக்கிறார்கள் என்றால், இந்தக் கைகளிலே ஓட்டுக்களைப் பெற்று, இந்தக் கழகத்தை ஆட்சியிலே அமர்த்த வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தக் கட்சியினுடைய கொள்கையை விட்டுவிட்டு, லட்சியத்தை விட்டுவிட்டு, ஆட்சியிலே உட்கார வேண்டும் என்று எண்ணுகின்ற யாரும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கத் தகுதி உள்ளவர்கள் அல்ல. அது எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆட்சிக்கே வர முடியாவிட்டால், தெருவிலே நின்று போராடுவோம்[5]: இந்த லட்சியம் காப்பாற்றப்பட, கொள்கை உறுதிப்பட, நம்முடைய கொள்கைகள் வெற்றி பெற – நாடு பலன் பெற இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஆட்சி பயன்படுமேயானால், முடிந்த வரையில் இந்த ஆட்சியைப் பயன்படுத்திக் கொள்கிறோம். ஒருவேளை, ஆட்சிக்கே வர முடியாவிட்டால், தெருவிலே நின்று போராடுவோம். தி.மு.க.வின் வெற்றிக்காகப் போராடுவோம் என்றால், திராவிட இயக்கத்தினுடைய கொள்கைகளுக்காக கடைசி வரையிலே போராடக் கூடிய சுபாவமும், அந்த உறுதியும் நமக்கு என்றென்றும் உண்டு. அந்த உறுதியோடுதான் நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

வேறுபாடுகளைப் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் வருகிற தேர்தலிலே வெற்றி பெற முடியாது: இதற்கிடையிலே, கொள்கை மாற்றங்களால், லட்சியங்களால் மாறுபடாமல்; நிர்வாக ரீதியாக வேறுபட்டு, இந்த இயக்கத்தை ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற பகுதிக் கழகத்தை, கிளைக் கழகத்தை, மன்றங்களை – அது மகளிர் மன்றமானாலும் அந்த மன்றத்தை, தொழிலாளர் இயக்கமானாலும், அந்த இயக்கத்தை எப்படி நடத்துவது என்பதிலே வேறுபாடுகளைப் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் வருகிற தேர்தலிலே வெற்றி பெற முடியாது. வெற்றி பெறாவிட்டால், நான் எனக்குச் சொல்வதாகக் கருதக்கூடாது.  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றியில் திராவிட இயக்கத்தினுடைய கொள்கை வெற்றி இருக்கிறது. அதை மறந்து விடக்கூடாது – பெரியாருடைய கொள்கை இருக்கிறது – அண்ணாவினுடைய லட்சியம் இருக்கிறது. அந்த இரண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேர்தலிலே வெற்றி பெறச் செய்தால்தான் நிலைக்கும்; அவைகளைக் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால், அந்த லட்சியங்கள் எல்லாம் பறிபோய்விடும்.

பார்ப்பனியத்தைப் பாதுகாக்கிற ஆட்சி தமிழகத்திலே வருமேயானால் என்ன ஆகும்? நாளைக்கு நம்முடைய ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, வேறு ஒரு ஆட்சி – பார்ப்பனியத்தைப் பாதுகாக்கிற ஆட்சி – பக்கபலமாக இருக்கின்ற ஆட்சி இந்தத் தமிழகத்திலே வருமேயானால் என்ன ஆகும்? நான் இங்கே சொன்னேனே, நண்பர்கள் பேசும்போது, நம்முடைய தம்பி கண்ணப்பன் பேசும்போது கூடக் குறிப்பிட்டு, இந்த அண்ணா என்ற பதத்தைப் பயன்படுத்தாதீர்கள் என்று சொன்னேனே, ஏன்? அண்ணா தி.மு.க. என்று சொல்லாதீர்கள் என்றேன். அருமை நண்பர் எம்.ஜி.ஆர்[6]. – அந்தப் பெயரை வைத்தபோது, அவர் அந்தப் பெயரை வைக்கத் தகுதி படைத்தவர் என்றுகூட நான் கருதியதுண்டு[7]. அப்படிக் கருதியதால் தான், அதைப்பற்றிய அபிப்பிராயத்தை இன்றைக்கும் நான் அறுதியிட்டுச் சொல்லக்கூடிய அவசியத்திற்கு ஆளாகி இருக்கின்றேன்.

விஜயதசமி கொண்டாடுகின்ற நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துக் கொள்ள என்ன அருகதை இருக்கிறது? ஆண்டாண்டுதோறும் விஜயதசமி கொண்டாடுகின்ற[8] அம்மையாருடைய ஆட்சியிலே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துக் கொள்ள என்ன அருகதை இருக்கிறது? எந்தக் காரியமானாலும், அதற்கொரு யாகம் நடத்தி, பூஜை நடத்தி, அந்தப் பூஜைக்குப் பிறகுதான், அந்தக் காரியத்திலேபோய் இறங்குவது என்று எண்ணுகின்ற ஒரு ஆரிய அம்மையார் ஆட்சியில்[9] அண்ணாவுக்கு என்ன வேலையிருக்கிறது? இந்த ஆட்சி போனால் – நீங்கள் ஞாபகத்திலே வைத்துக் கொள்ளுங்கள் – போகப் போவதுமில்லை; அது நடக்கப் போவதுமில்லை[10].

 

ஆரிய ஆட்சி வந்தால்………….: இருந்தாலும், நீங்கள் ஒரு யூகமாக எண்ணிப் பார்த்தால், நம்முடைய ஆட்சி போய்விட்டால், வேறொரு ஆட்சி வந்தால், அப்படி வருகிற ஆட்சி அம்மையாருடைய ஆட்சியாக இருக்குமேயானால், அங்கே அண்ணாவினுடைய கொள்கைகளுக்கு இடமில்லை; பெரியாருடைய கொள்கைகளுக்கு இடமில்லை; சாதி மறுப்புக்கு இடமில்லை; மூட நம்பிக்கை மறுப்புக்கு இடமில்லை. அப்படிப்பட்ட மௌடீகம், மூட நம்பிக்கை படர்ந்து, காடாக ஆகியிருக்கின்ற[11] ஒரு நாட்டைத்தான் தமிழகத்திலே நாம் காண நேரிடும்.

கழகம் காப்பாற்றப்படவேண்டும்: முக்கியமாக, நாம் வெற்றி பெற வேண்டுமென்று – நானோ, இந்த மேடையிலே அமர்ந்திருக்கின்ற நம்முடைய கழகத் தலைவர்களோ எண்ணுவதற்குக் காரணம், எழுதுவதற்குக் காரணம், உங்களையெல்லாம் அழைத்துப் பேசுவதற்குக் காரணம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருக்க வேண்டுமென்பதற்காக அல்ல; அல்லவே அல்ல; முக்காலும் இல்லை; நிச்சயமாக இல்லை.எங்களிடத்திலே ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு, நாம் இயக்கத்தைக் காப்பாற்றுவதற்கு, உங்களை அழைக்கிறோம் என்று இந்த நாட்டு மக்கள் தந்துள்ள பொறுப்பு, பெரியார் வழங்கிய பொறுப்பு, அண்ணா தந்துள்ள பொறுப்பு, இவைகளைக் காப்பாற்றமுடியாமல் போய் விடுமோ என்ற ஏக்கமே தவிர; இந்த இயக்கத்தை – திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்த முடியாமல் போய்விட்டதே என்ற கவலை அல்ல. அந்தக் கவலை ஏற்படாது. அந்தக் கவலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தால், இவைகளெல்லாம் நடைபெற்றிருக்க முடியுமா? இந்தியாவிலே இல்லாத அளவிற்கு ஒரு பெரிய நூலகத்தை ஏற்படுத்துகிறோம் என்றால், ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தால், இவைகளெல்லாம் நடைபெற்றிருக்க முடியுமா? நாளைக்கு ஒருவேளை – நடக்காது – நடக்கக்கூடாது. நாம் மாற்றப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த நூலகத்தை இடித்துத் தள்ளமாட்டார்கள்[12] என்று என்ன நிச்சயம்? அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அதை நாம் காணப் போகிறோமா? அப்படிப்பட்ட ஒரு நிலை இந்த நாட்டிற்கு ஏற்பட வேண்டும் – தமிழனுக்கு ஏற்பட வேண்டும் என்று எண்ணலாமா?

இன்னொரு ஆட்சி வருமேயானால், நிச்சயமாக அண்ணா கனவாகிவிடுவார்[13]: தஞ்சையிலே இராஜராஜனுக்கு விழா எடுத்தோம் என்றால், கோவையிலே செம்மொழி மாநாடு நடத்தினோம் என்றால், அங்கெல்லாம் நம்முடைய[14] இலக்கியத்தை, காவியங்களை, நூல்களை நாம் பெற்றிருந்த கலைகளை, சரித்திர ஆதாரங்களையெல்லாம் நினைவூட்டக்கூடிய சொற்பொழிவுகள், நாடகங்கள், கூத்துக்கள் இத்தனையும் அங்கே நடைபெற்றன என்றால் அதற்கு என்ன காரணம்? நம்முடைய இயக்கத்தினுடைய ஆட்சி நடை பெறுவதுதான் காரணம். இதற்கு ஒரு இம்மியளவு ஊனம் வந்தாலும், இந்த ஆட்சி போய்விட்டால் – இன்னொரு ஆட்சி வருமேயானால், நிச்சயமாக அண்ணா கனவாகிவிடுவார்[15]. பெரியார் கடந்த காலமாகிவிடுவார் – என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆகவே, நாம் எல்லோரும் தமிழர்கள் – எல்லோரும் திராவிடர்கள்[16] – எல்லோரும் சுயமரியாதைக்காரர்கள் – எல்லோரும் பெரியாரின் பிள்ளைகள் – எல்லோரும் அண்ணாவின் தம்பிகள் என்ற அந்த உணர்வோடு நாம் ஒன்றுபடுவோம்; தொடர்ந்து நமது அணியை நடத்திச் செல்வோம் என்றார் கருணாநிதி.


[2] உண்மையை ஒப்புக்கொள்ளும் கருணாநிதி, ஆக மக்களின் கோடிகள் கட்சி வளர்ச்சிக்குத்தான் செலவழிக்கப்பட்டுள்ளது.

[3] கிருத்துவர்கள் வேண்டாம் என்பதை மறைத்துவிட்டார்.

[4] டாக்டர் மருத்துவராகி விட்டார் போலும்!

[6] எம்.ஜி.ஆரை மளையாளத்தான், கூத்தாடி, …………………………………என்றெல்லாம் வசவு பாடியதையும் மக்கள் அறிவர்.

[7] பெரிய புளுகு புளுகுகிறார் – அதிமுக என்ர பெயர் வைத்தபோது அது நியாயம், தர்மம், நீதி ………………..முதலியவற்றிற்கெல்லாம் முன்னால் “அ” போட்டால் எப்படி அநியாயம், அதர்மம், அநீதி……………..என்றாகுமோ அப்படி என்று புலம்பி வசைப்பாடியது எமக்கெல்லாம் நன்றாகவே நினைவிருக்கிறது.

[8] அதனால்தான் பெரியார் கரடிகளை விட்டு சேலத்திலே கலாட்டா செய்ய வைத்தாரா? பொலீஸுக்கே அவர்தான் மந்திரி என்பதால், எல்லாமே சாத்தியம்தான்.

[9] வேடிக்கை என்னவென்றால், அந்த நாளில்தான், இன்னொரு ஆரிய அம்மையாரின் வேண்டுகோளிணங்க திறப்புவிழா செய்துவிட்டு வந்துள்ளார்.

[10] குல்லா போட்டு கஞ்சி குடித்தால், எல்லாம் வந்து விடுகிறதா?

[11] இப்பொழுது இம்மாநிலம் காடாகத்தான் இருக்கிறது, எங்கும் ஊழல், அராஜகம், இருட்டு……………….இப்படித்தான் உள்ளது.

[12] ஆஹா, இத்தகைய மடத்தனத்துடன் பேசுவதிலிருந்தே, தோல்வியின் பயம் வந்து விட்டது போல இருக்கிறது!

[14] அங்கெல்லாம் எத்தனை “ஆரியர்கள்” இருந்தார்கள், எத்தனை “பார்ப்பனர்கள்” இருந்தார்கள் என்று “:திராவிட” கண்மணிகளுக்குத் தெரிந்துதான் இருக்கும்!

[15] அண்ணா, அம்பேத்கார், பெரியார்…………….என்று பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி வருவது நல்ல அரசியல் வியாபாரம் தான்.

[16] இன்னும் இந்த மாயைகளை வைத்துக் கொண்டு தான் அரசியல் செய்யவேண்டும் என்றால், “விட்டாலாச்சார்யா” மாதிரித்தான் படங்கள் எடுத்து “தமிழர்களின்” பகுத்தறிவை வளர்க்க வேண்டியிருக்கும்!