Posts Tagged ‘ஆவி’

கருணாநிதிக்கு ஈமச்சடங்கு நடத்தப் படவில்லை, துர்கா காசிக்கு சென்றது ரூ.இரண்டு லட்சம் பனாரஸ் புடவை வாங்கத்தான்! சொந்தக்கார நாளிதழ் “தி.இந்து” கொடுக்கும் விளக்கம் [3]

திசெம்பர் 30, 2018

கருணாநிதிக்கு ஈமச்சடங்கு நடத்தப் படவில்லை, துர்கா காசிக்கு சென்றது ரூ.இரண்டு லட்சம் பனாரஸ் புடவை வாங்கத்தான்! சொந்தக்கார நாளிதழ்தி.இந்துகொடுக்கும் விளக்கம் [3]

Durga sojourn to Kasi , boat

ஸ்டாலின் அநாகரிகமும், யோகி ஆதித்யநாத்தின் பெருந்தன்மையும்: ஸ்டாலின் மனைவி துர்கா காசி வருகை பற்றி அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் துர்காவுக்கும், அவர் குழுவினருக்கும் தேவையான வசதிகளை செய்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிததார். ஆங்கிலமோ இந்தியோ தெரியாத துர்காவுக்கு உதவ தமிழ் தெரிந்தரொரு இளம் ஐஏஎஸ் அதிகாரியை முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமித்ததாகவும் கூறுகிறார்கள். சரி, இதையெல்லாம் அந்த ஸ்டாலின் நினைத்துப் பார்த்தாரா? பதிலுக்கு என்ன செய்தார்? ஊடகங்கள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லக் காணோம். “முரசொலியில்” ஏதாவது வருமா என்று பார்க்க வேண்டும்ம். அந்த வீரமணியும், ஒன்றையும் சொல்லக் காணோம். இனி “விடுதலையில்” யாதாவது வருமா என்று பார்ப்போம்.

Durga sojourn to Kasi , thithi given for KARU-crticism

இது தவறில்லை: திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா காசி சென்று திரும்பிய படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதைப் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் செய்து வருகின்றனர். அதே நேரம் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர் அதில் இந்த விஷயத்தில் துர்காவை விமர்சிக்க தேவையில்லை. அவர் எப்போதுமே தெய்வ நம்பிக்கை உள்ளவராக இருக்கிறார். தன்னை நாத்திகர் என்றோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று ஒரு நாளும் சொன்னதில்லை. திமுகவில் இப்போது 90 சதவீதம் பேர் ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

Durga sojourn to Kasi , riksha

துர்காவின் ரிக்ஷா நகர்வலம்: துர்கா ரிக்ஷாவில் பயணம் மேற்கொண்டு காசியில் சுற்றி வந்திருக்கிறார், இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. அதேபோல படகில் செல்வது, சாமியாருடன் பேசுவது, மடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன “ஆன்மா சாந்தி அடைய இல்லை,” என்ற தலைப்புகளில் வெளியான செய்தி திருச்சி பதிப்பில் வந்துள்ளது[1]. டிசம்பர் 29 2018 என்ற செய்துவிட்டு நான்காம் பக்கத்தில் புகைப்படங்களுடன் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது இருந்தாலும் மற்ற பிரதிகளில் காணப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. ஆங்கில ஊடகங்களில் ஒன்றையும் காணவில்லை. துப்பறியும் ஜார்னலிஸம் இங்கு வேலை செய்யவில்லை போலும்!

Durga sojourn to Kasi , taking food at mutt

காசியும், பெரியாரும், பிண்டமும், கிரியைகளும்: ஈவேரா கிண்டலாக எழுதியது:

சுயமரியாதைக்காரன்:- சுயமரியாதை இயக்கத்திற்கும் தாங்கள் காசிக் குப் போவதற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லையே?

புராண மரியாதைக்காரன்:- என்ன சம்பந்தம் என்றா கேட்கின்றீர்கள்? நானோ வயது முதிர்ந்த கிழவன். ஒரு வேளை திடீர் என்று செத்துப்போய் விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னுடைய பிள்ளைகள் எனக்கு கர்மம் செய்வார்களா? திதி செய்வார்களா? …. எள்ளுந் தண்ணீர் இறைப்பார்களா? பிண்டம் போடுவார்களா? நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். இந்த நாசமாய்ப் போன சுயமரியாதைக் காரர்களால் எவ்வளவு தொல்லை?

சுயமரியாதைக்காரன்:- சரி. அதைப் பற்றி பிறகு பேசுவோம். அதற்காக நீங்கள் காசிக்கேனையா போகின்றீர்கள்? என்றால் அதற்கு ஒன்றும் பதில் இல்லாமல் சும்மா சுயமரியாதைக்காரரையே வைகின்றீர்களே?

புராண மரியாதைக்காரன்:-  சொல்லுகிறேன் கேளுங் கள். முதலாவது காசியில் செத்தால், திதி பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் பிண்டம் போட்டாலும் போடாவிட்டாலும் மோட்சம் கிடைக்கும். இரண்டாவது அதில் ஏதாவது கொஞ்ச நஞ்சம் சந்தேகமிருந்தாலும் கயாவுக்குப் போய் நமக்கு நாமே பிண்டம் போட்டுக் கொண்டு விட்டால் பிறகு எவனுடைய தயவும் நமக்கு வேண்டியதில்லை. ஆதலால் இப்போது நேரே கயாவுக்குப் போய் எனக்கே நான் பிண்டம் போட்டு விட்டுப் பிறகு காசிக்குப் போய் சாகப் போகின்றேன். அப்போது இந்த சுயமரியாதைகள் என்ன பண்ணுமோ பார்ப்போம்”.

எப்படியோ, துர்கா செய்து முடித்து விட்டார்! இருப்பினும், 3012-2018 அன்று, தி.இந்து, “இங்கு துர்கா எந்த சடங்கும் செய்யவில்லை,” என்று செய்தி போட்டுள்ளது!

Tamilnadu with soul - Karu

தமிழ்.இந்துவின் வக்காலத்து சிரிப்பாக இருக்கிறது: “தமிழ்.இந்துவை” நம்புவதானால், “தினமலர்” சொல்வது பொய் என்றாகிறது, பிறகு, மற்ற நாளிதழ்களும் பொய் என்றாகிறது. பத்து நாளிதழ்கள் பத்துவிதமான செய்திகளை வெளியிட்டால், வாசகர்கள் எதை நம்புவது? பிறகு, எதற்காக காசு கொடுத்து, அவற்றைப் படிக்க துர்கா ஸ்டாலின் காசிக்குச் சென்றது உண்மை, மடங்களுக்கு சென்றது உண்மை, அங்கு [மடங்களில்] உணவு உண்டது உண்மை, மடத்தில் புரோகிதகளுடன் பேசியதும் உண்மை, ஆனால், பிண்டம் வைக்கவில்லை என்றால், அதனை அவரிடமே கேட்டு உறுதியாக செய்தியை வெளியிட்டிருக்கலாமே?  அங்கு ஈமம் இல்லாதலால், ஈமசடங்கு செய்ய முடியாது என்பது தெரிந்த விசயம் தானே? அதாவது உடல் சென்னை மெரினாவில் புதைக்கப் பட்டு விட்டது. எரிக்கப்படவில்லை. எரித்திருந்தால், சாம்பல் / அஸ்தி வந்திருக்கும், பிறகு சடங்கை அங்கு / காசியில் செய்திருக்கலாம். பிறகென்ன, “இங்கு துர்கா எந்த சடங்கும் செய்யவில்லை,” என்று எதையோ கண்டு பிடித்து சொல்வது மாதிரி செய்தி போடுவது?

Durga sojourn to Kasi 29-12-2018 DM

ஊடக ஊழல், கருத்து மறப்பு, உண்மை மறுப்பு முதலியன: இன்றைய நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கின்ற காலத்திலேயே, ஊடகங்கள் துர்கா காசிக்கு சென்று வந்த நிகழ்ச்சியை பலவிதமாக செய்திகளை வெளியிட்டதை கவனிக்கவும். ஆங்கில ஊடகங்கள் மொத்தமாக மௌனமாக இருக்கின்றன. சுமார் ஒரு வாரம் கழித்து “தி.இந்து” குழுமத்தின் தமிழ் நாளிதழ் துர்கா வாரணாசிக்கு சென்றதும் மடங்களுக்கு சென்றதும், அதில் உணவு உண்டதும், பட்டுப்புடவையை வாங்கியதும், படகுகளில் சவாரி செய்தும் எல்லாமே உண்மை என்று சொல்லிவிட்டு ஈமச்சடங்குகள் எதுவும் செய்யவில்லை என்று செய்தி வெளியிட்டு இருப்பது நோக்கத்தக்கது தி இந்து குழுமம் இப்பொழுது கருணாநிதி குடும்பத்துடன் உறவினர் ஆகி விட்டதால், அவர்களை மீறி செய்திகள் வராது போலும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட நாத்திகம், அதிலும் இந்து மத எதிர்ப்பு மறுப்பு கொள்கை கொண்ட பகுத்தறிவுவாதம், சித்தாந்தத்தில் வந்தவர் என்று இருப்பவர் மற்றும் அவர்களுக்கு துணை போகும் தொழிலதிபர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு இத்தகைய பாரபட்ச போக்கு உண்மையை மறைக்கும் தங்களது ஊடக சாம்ராஜ்யம் மூலம் தகவல்களை மறைக்கும் வேலையை நோக்கும் பொழுது மிகவும் அச்சமாகவே இருக்கின்றது. ஈவேரா பெரியார் பேசியது, எழுதியது பற்றிய உண்மையான தகவல்கள் இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைப்பதில்லை. திராவிட சுயமரியாதை பிரச்சார கழகம் வெளியிட்டுள்ள குறும்புத்தகங்கள், தொகுப்புகள் தவிர, கையெழுத்துப் பிரதிகள் அதாவது மூல Manuscrpts கயெழுத்துப் பிரதிகள் / ஆவணங்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு கிடைப்பதில்லை. குடியரசு நாழ்தழ்கள் மட்டும் கிடைக்கின்றன. அதாவது 1940-1973 காலத்தைச் சேர்ந்த விவரங்கள் கூட மறைக்கப்படுன்றன. கடந்தகால நிகழ்ச்சிகளை மறந்து மக்கள் மறந்து விடுவர் என்ற தைரியத்தில் உள்ளனர். இதனை ஊடக ஊழல் எனலாம்.

DNK Cadre take oath in the name of KARU Soul

இதை எழுதி முடிக்கும் நேர்த்தில்தி.இந்துஇதையும் சேர்த்துள்ளது[2]: 13:14 ISTக்கு, “தி இந்து” அப்டேட் செய்தது:

மடத்துடன சம்பந்தம்: வாரணாசியில் உள்ள திருக்கோவிலூர் மடம் மற்றும் ஸ்ரீகுமாரசாமி மடத்திற்கும் துர்கா சென்றுள்ளார். இவ்விரு மடங்களும் தமிழகத்தைச் சேர்ந்தவை. குமாரசாமி மடத்துடன் துர்காவின் மாமனார் குடும்பத்திற்கு சம்பந்தம் உள்ளது.

மாமனாரின் தந்தை பணியாற்றிய மடம்: திருவாரூரில் உள்ள தட்சணாமூர்த்தி மடத்தில் கருணாநிதியின் தந்தை பணியாற்றி இருந்தார். இது, திருக்குவளையின் தர்மபுரம் ஆதீனம் மடத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த ஆதீனம் மடத்தார், தன் கிளை மடமாகக் கருதி குமாரசாமி மடத்தின் மடாதிபதிகளாக வருபவர்களுக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

30-12-2018

இந்த மூஞ்சிகளுக்கு தேவைப்பட்டதோ

[1] தினமலர், கருணாநிதி ஆன்மா சாந்தியடையலே, திருச்சி, 29-12-2018, பக்கம்.4

[2] https://tamil.thehindu.com/india/article25863478.ece?fbclid=IwAR305Pjus7wYCe-Ic_v1T-llL2R20opSxQ-8Rlc2lhp_crL2NUcHg-quEJ4

நாத்திக-இந்துவிரோதி கருணாநிதிக்கு, ஆத்மா சாந்தியடைய காசியில் பிண்ட-பிரதானம் கொடுத்தது! [1]

திசெம்பர் 30, 2018

நாத்திகஇந்துவிரோதி கருணாநிதிக்கு, ஆத்மா சாந்தியடைய காசியில் பிண்டபிரதானம் கொடுத்தது! [1]

பெண்ட்டாட்டி வணங்குவது

திராவிடத் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் இந்துவிரோத போக்கு, நடவரடிக்கைகள் (1940-2018): தமிழகத்தை பொறுத்தவரையில் ஈவேரா பெரியார் ஆரம்பித்து வைத்த இந்து விரோத போக்கு அவரது குறும்புத்தகங்களிலும், பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு, மேடையில் பேசிய தூஷணங்கள், என்று பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளன. திமுக 1969 இல் பதவிக்கு வந்ததிலிருந்து, இந்த துவேசம், கடவுள் மறுப்பு கொள்கை என்ற போர்வையில், இந்துமதம் மற்றும் இந்துக்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்துள்ளது. பிறகு, பிராமண எதிர்ப்பாக மாறிய போது, பூணூல் அறுப்பு படலத்தில் முடிந்து, தொடர்ந்து இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு பிராமணரின் பூணூல் அறுக்கப் பட்டது மட்டுமல்லாது, பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்ற நிலையிலும் சென்னையிலேயே அரங்கேறியுள்ளது. கருணாநிதியைப் பொறுத்த வரையிலும் அவரது இந்துவிரோத பேச்சுகள், காரியங்கள் முதலியவற்றை விளக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், மக்களுக்கு அவை நன்றாகவே தெரியும்[1]. ஸ்டாலின் நெற்றியில் வைத்த குங்குமம், சந்தனம் முதலியவற்றை அழித்ததும், மக்கள் பார்த்து விட்டனர்[2]. இவ்வாறெல்லாம் இந்துக்கள் கடைபிடிக்கும் விழாக்கள், முறைகள் முதலியவற்றை கேவலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தான், கருணாநிதி ஆத்மா சாந்தியடைய காசியில் பிண்டப்பிரதானம் கொடுக்கப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது.

KARU Soul -vairamuthu poured milk.jpg

கருணாநிதிக்கு ஆன்மா இருந்ததா, இல்லையா?: வைரமுத்து, கருணாநிதி சமாதிக்கு வந்து பால் ஊற்றி மரியாதை செய்தபோது, திராவிடத்துவ வாதிகளுக்கு சுருக்கென்றது. மணிசங்கர் போன்ற பீப்-உண்ணும் பார்ப்பனர், கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், “ஆன்மாவை இழந்த தமிழகம்”, என்றெல்லாம் கட்டுரை எழுதினர்[3]. அதாவது கருணாநிதி இறந்ததால், தமிழகத்திற்கு ஆன்மாவே இல்லாமல் போய் விட்டதாம்! பார்ப்பனர்களை தூஷித்தது எல்லாம் இவருக்குத் தெரியாது போலும். மேலும், ஜெயலலிதாவை சட்டசபையில் அவமானம் படுத்தியது, “பாப்பாத்தி” என்று பேசியது, முரசொலொயில் கட்டுரை எழுதியது என்றெல்லாம் கூட மறந்து விட்டது போலும்! ஜெயலலிதா எதிரி, இவருக்கு நண்பர் பாணியில் எழுதியது தெரிகிறது[4]. என்.ராம், “கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை” என்று வக்காலத்து வாங்கினார்[5]. “தி.இந்து” நிருபர் கணபதியை ஸ்கூட்டரிலிருந்து தள்ளி விட்டு, சர்ட்டை கிழித்து, பூணூலை அறுத்தது எல்லாம் இவருக்கு மறந்து விட்டது போலும்[6]. புதுகோட்டையிலோ, கருணாநிதி ஆன்மா பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் என்ற செய்தி. மகன் அழகிரி, “திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதி ஆன்மா தண்டிக்கும்,” என்று சாபம் விட்டார்!

செல்வி-காவேரி-முதலியோர்-கோவிலில்-காளஸ்தி

கருணாநிதி இறப்பிற்குப் பிறகு, மனைவிதுணைவி சுகவீனம், வருத்தம்: கருணாநிதி இறந்தவுடன் தயாளு அம்மாளுக்கு சுகவீனம் ஏற்பட்டது. அவர் வெளியே வருவதில்லை. அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, செல்வி செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை. முத்த மகனை ஒதுக்கி வைத்ததும் பிடிக்கவில்லை. மேலும், உரிய கிரியைகள் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம், ஆனால், அழகிரி தயாராக இருந்தாலும், ஸ்டாலின் மறுத்து விட்டார். ராஜாத்தி அம்மாளுக்கும் சுகவீனம் ஏற்பட்டது. இந்நிலையில், திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று, அங்கு தனது சகோதரி செல்வியிடம் வாழ்த்து பெற்ற அவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, சிஐடி காலணி வீட்டிற்கு சென்று, தனது சித்தி ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து வணங்கி ஆசி வாங்கியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது[7]. எலியும் பூனையுமாக இருந்த தயாளு – ராஜாத்தி அம்மாள் குடும்பம் தற்போது ஒன்றிணைந்து செயல்படுவது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது[8]. அதே நேரத்தில் அழகிரியை அமுக்கியதும் தெரிகிறது. ஆகவே, அரசியல் ரீதியில், கணவன் இவ்வாறு செயல்படும் போது, மனைவி ஆன்மீக ரீதியில் செயல்படுகிறார் என்று தெரிகிறது.

KARU Soul would punish traiters- AZHAGIRI

ஏகாதசி மரணம்துவாதசி தகனம்கருணாநிதியின் சாவைப் போற்றிய காசி ஜோதிடர்:  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிரதமர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில், கருணாநிதி குறித்த தேடுதல் தான் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், கருணாநிதி மறைவு குறித்து காசி புரோகிதர் தம்புசாமி ஒரு அதிரடி கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்[9]. அதில், ஏகாதசி மரணம்…துவாதசி தகனம்…கருணாநிதி ஒரு புண்யாத்மா..என தெரிவித்தார். அதாவது ஏகாதசி நாளான அன்று, திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததால், அந்த நன்னாளில் அவர் மறைந்தது மிகவும் புனிதமானது என்றும், நாளை துவாதசி தகனம் என்றும், மொத்தத்தில் கருணாநிதி புண்யாத்மா என்றும் பதிவிட்டார்[10]. சரி ஏன் திராவிடத்துவ வாதிகள், இவற்றையெல்லாம் எதிர்க்கவில்லை?  இனி அந்த ஜோதிடர் அ.கணேசனையும் மிஞ்சி விடுவார் எனத் தெரிகிறது, இது வரை, கணேசன் கருணாநிதியின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து வந்துள்ளார், இனி காசி புரோகிதர் தம்புசாமி அடுத்து தயாராகி விட்டார் போலும்.

Durga sojourn to Kasi , thithi given for KARU

குடும்பத்தோடு காசிக்குச் சென்ற துர்கா ஸ்டாலின்: திமுக தலைவர் ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் ஈடுபாடு மிக்கவர் என்றும், பல கோயில்களில் சென்று வழிபடுபவர் என்பதும் அரசியல் வட்டாரத்திலும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இருக்கட்டும், காசிக்கு போவானேன், வேங்காவது போயிருக்கலாமே? கடந்த 24-12-2018, திங்கள் கிழமை –

 1. துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர் சிலரோடு,
 2. சகோதரி சாருமதி
 3. அக்கா பார்வதி,
 4. தங்கை ஜெயந்தி மற்றும்
 5. பார்வதியின் கணவர் சண்முகசுந்தரம்,காசி போயிருக்கிறார்[11].

மேலும் துர்காவின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தியும் உடன் சென்றுள்ளார். அங்கே இருக்கும் பிரசித்தி பெற்ற சோமநாதர் கோயில் உட்பட பல கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் துர்கா ஸ்டாலின்.  கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதியன்று மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு சில சடங்குகளை காசியில் சென்று நடத்த கிளம்பியிருப்பதாக தகவல் வெளியானது. இதை அவர் திமுக தலைவர் என்ற ரீதியில் செய்யவில்லை. தன் குடும்பத் தலைவர் என்ற முறையில்தான் செய்ய விரும்பியிருக்கிறார் என்றார்கள்.  எப்படி சென்றால் என்ன, ஆள் மாறிவிடுமா, நிஜ வாழ்க்கையில், எல்லாமே மாறி விடுமா?

© வேதபிரகாஷ்

30-12-2018

Rajathi-with-Samiyar

[1] ரத்தம், அமாவாசை—ரம்ஜான் ஒப்பீடு, ராமர் எந்த கல்லூரியில் படித்தார், முதலியவை.

[2] துர்கா இதற்கும் பரிகாரம் செய்ய வேண்டியுள்ளது, இல்லையென்றால் தாய்குலம் கோபித்துக் கொள்ளும், ஓட்டு கிடைக்காது. ஜெயலலிதா இல்லாத நிலையில் பெண்கள் ஓட்டு தமிழகத்தில் முக்கியமாதாகும்.

[3] பிபிசி.தமிழ், கருணாநிதி: “ஆன்மாவை இழந்த தமிழகம், மணி சங்கர் ஐயர், முன்னாள் மத்திய அமைச்சர், 11 ஆகஸ்ட் 2018

[4] https://www.bbc.com/tamil/global-45150579

[5] பிபிசி தமிழ், “கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: என்.ராம், விவேக் ஆனந்த், 11 ஆகஸ்ட் 2018

[6] https://www.bbc.com/tamil/india-45108022

[7] தமிழ்.ஏசியா.நியூஸ், ராஜாத்தி காலில் விழுந்து வணங்கிய ஸ்டாலின்!! DMK வில் அதிசயம் இது, By Sathish KFirst Published 28, Aug 2018, 7:00 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/anwar-raja-discuss-about-muthalac-pkhgoq

[9] தமிழ்.ஏசியா.நியூஸ், ஏகாதசி மரணம் …துவாதசி தகனம்….”கருணாநிதி ஒரு புண்யாத்மா”… அதிரடி கிளப்பும் காசி புரோகிதர்….!, Last Updated 7, Aug 2018, 9:19 PM IST.

[10] https://tamil.asianetnews.com/politics/familiar-prohithar-thambusaami-reveled-karunanidhi-death-day-pd3kxr

[11] தமிழ்.ஏசியா.நியூஸ், துர்கா ஸ்டாலின் காசிக்கு திடீர் பயணம்..! “பாரதியார் இல்லம்பார்த்து வாயடைத்து போன சுவாரஸ்யம்..!, By Thenmozhi G, First Published 27, Dec 2018, 7:27 PM IST; Last Updated 27, Dec 2018, 7:48 PM IST

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திர-தந்திர-யந்திர அகோரி ஜாலங்கள் – அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும் என்று இணைய தளம் மூலம் நடக்கும் வியாபாரம் (7)

மார்ச் 23, 2017

 

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திரதந்திரயந்திர அகோரி ஜாலங்கள்அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும் என்று இணைய தளம் மூலம் நடக்கும் வியாபாரம் (7)

Mantrika books arabic-malayala-printed and circulated

இணைதளத்தில் மாந்தீரிகம் செய்வது, புத்தகங்கள் விற்பது வியாபாரமாகி விட்டது: பகுத்தறிவு பேசும், பெரியார் மண்ணில் தான், “ஆவிகள் உலகம்” போன்ற பத்திரிக்கைகள் விற்கப்படுகின்றன. போதாகுறைக்கு, தொலைவழி கல்வி, பயிற்சி என்றெல்லாம் கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு இணைதளத்தில் உள்ளது கொடுக்கப் படுகிறது[1] . “வாழ்வை வளமாக்கவும், நடைமுறை துன்பங்கள் நீங்கவும் தெய்வ பலத்துடன் நாம் சிறப்பாக வாழ்வுமே இந்த மலையாள மாந்திரீக பயிற்சி புத்தகத்தினை வெளியிடுகிறோம், இதனால் பொதுமக்கள் ஜோதிடர்கள், பூசாரிகள், குறி சொல்பவர்கள், ஆன்மிகவாதிகள் எந்த வித முன் அனுபவம் இல்லாதவர்கள் ஆர்வம் சுயவிருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பயிற்சி புத்தகத்தினை வாங்கி பயனடையலாம். இதனால் பல ஆயிரம் பேர்கள் பயனடைந்துள்ளனர்.  இந்த பயிற்சி புத்தகத்தில்

1.        குலதெய்வ அழைப்பு பூஜை முறை,

2.       அஷ்ட கணபதி சித்தி முறை,

3.       ஜனவசியம் தான வசியம்,

4.       கணவன் மனைவி வசியம்,

5.        நம் எதிரிகள் செயல் இழந்து ஸ்தம்பித்து நிற்க,

6.       தோஷம் துஷ்ட சக்தி ஏவல்,

7.        பில்லி சூன்யம் உடன் நிவாரண முறை,

8.       கொடுத்த கடன் வசூலாக்கும் முறை

9.       தீராத நாட்பட்ட வியாதிகள் நீக்கும் அற்புத முறை,

10.     குடும்ப ஒற்றுமை உண்டாக்கும் அற்புத சக்கரம்,

11.      வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உடனே வேலைகிடைக்க,

12.     மனிதர்கள் மரண கண்டம் நீங்கி ஆயள் விருத்தி முறை,

13.     வேறு மந்திரவாதியின் கட்டுகளை தகர்க்கும் முறை,

14.     தொழிலை கெடுக்க மாந்திரீகம் செய்த கட்டுகளுடைக்கும் முறை,

15.     மாந்திரீக பாதிப்பு உள்ளதா என அறிய,

16.     சொர்ண பைரவர் பூஜை முறை,

மேலும் இன்னும் ஏராளமான விசயங்கள் எளிய வழியில் பிரயோகிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். இந்த பயிற்சி புத்தகம் மொத்தம்  3 பாகங்கள் அடங்கியது, ஒரு புத்தகத்தின் விலை 2000 ரூபாய் மொத்தம் 3 புத்தகங்களின் விலை  6000 மூன்று புத்தகத்தையும் வாங்குவோருக்கு 5000 ரூபாய் மதிப்புள்ள குலதெய்வ வசிய அஞ்சனம் ஓன்று இலவசமாக கொடுக்கப்படும்”, இப்படியெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. இன்னொரு இணைதளம்அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும்” என்ற முறையில் அறிவிப்புகள்[2].

Mantrika correspondence course -books- offered for 5000

ஒரு மணி நேரத்தில் ஆவிகளுடன் பேசும் பயிற்சி: “இதுவரை அனைவராலும் மறைக்கப்பட்ட அதிரகசிய அபூர்வ தெய்வீக கலை[3]. பயிற்சிக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே நீங்கள் ஆவிகளுடன் பேசலாம். உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும்நொடிப்பொழுதில் ஆவிகளுடன் பேசலாம். நீங்கள் கூப்பிட்ட உடனேயே ஆவிகள் வந்து உங்களிடத்தில் பேசும். இக்கலையினால் எந்த ஒரு ஆவியினாலும், உங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும், எந்த ஒரு சூழ்நிலையிலும், வரவே வராது. காலை, பகல், இரவு என எந்த வேளையிலும் நீங்கள் ஆவிகளை அழைத்து பேசி, அவர்களது உதவியையும் பெற முடியும். இக்கலையை கற்றுக்கொல்வதினால், முன்னோர் ஆன்மாக்களுடன் பேசுவது மட்டுமில்லாமல், அவர்களது ஆசியும் பெற்று, அவர்களது வழிக்கட்டுதலும் கிடைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவார்கள். நம்முடன் வாழ்ந்து இறந்த ஆன்மாக்களுடன் பேச நினைப்பவர்கள், நமது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய உறவுகளின் இறப்பால் துயரப்படும் நபர்கள், நிச்சயம் இக்கலையை கற்று, அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களின் வழிக்கட்டுதலும், பாசத்தையும் பெற முடியும். வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைக்கும், சரியான தீர்வை நாம் ஆவிகள் மூலம் பெறமுடியும். இக்கலை மிகவும் பாதுகாப்பான, மிகவும் சக்திவாய்ந்த கலையாகும். இக்கலையை கற்றுக்கொள்ளும் மாணவர்களின் கவனத்திற்கு. உங்களைப்போன்றே உங்களை சுற்றி உள்ளவர்களும், நிச்சயம் உறவுகளை பிரிந்து வாடுவார்கள், அவர்களுக்கு நிச்சயம் இந்த கலையை என்னிடம் பழக எடுத்துரைக்கவும். பெண்களுக்கு இந்த பயிற்சி கற்பிக்கப்பட மாட்டாது. 100% MONEY BACK GUARANTEE[4]. குறிப்பு: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இங்கிருந்தபடியே பயிற்சி கொடுத்து 1 மணி நேரத்தில் பேச வைக்க முடியும். பயிற்ச்சி தொகை: ரூ: 10,000”, இப்படி இன்னொரு இணைதளம் விளக்குகிறது[5].

Mantra-tantra-yantra books plenty in market

மந்திரதந்திரயந்திர ஏராளமாக புத்தகங்கள் வெளியாகி வருவது: இந்த மந்திர-தந்திர-யந்திர புத்தகங்கள் என்று பார்த்தால், புத்தகக் கடைகளில் எதையும் விட்டு வைக்காத அளவிற்கு புத்தகங்களை எழுதி, பதிப்பித்துக் குவித்து வைத்துள்ளார்கள்[6]. அவற்றில் 10% கூட பிரயோஜனமில்லாத வகையில், மற்ற மொழிகளில் உள்ள புத்தகங்கள், பழைய பதிப்புகளில் உள்ளவை[7] முதலியவற்றை அப்படியே “ஈ அடிச்சான் காப்பி” முறையில், காப்பியடித்து எழுதப் பட்டவைகளாக இருக்கின்றன. ஜோசியத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். சுலபமாகக் கிடைக்கும் சாப்ட்வேர்களையே மாற்றி ஆயிரக்கணக்கு ரூபாய் விலை வைத்து விற்க முயல்கிறார்கள்[8]. “சித்தர்கள்” பெயரில் ஏகப்பட்ட புரட்டு நூல்கள். ஒரு பக்கம் சித்தர்களை வைத்துக் கொண்டு தமிழ்வெறியோடு, சமஸ்கிருதத்தை எதிர்ப்பதை காணலாம். மறு புறம் சமஸ்கிருத மொழியை தூஷித்து, அதே மொழியில் உள்ள தந்திர-யந்திர படங்களை போட்டு புத்தகங்கள் எழுதுகிறார்கள்[9]. பார்ப்பனர்களின் அயோக்கியத் தனம் என்று சொல்லப்படுகின்ற மந்திரங்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இவர்களே எல்லாவற்றையும் கண்டு பிடித்தது போலவும், எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்குடன், இவ்வாறு அரைகுறை அளவில் கூட இல்லாமல், மிகமோசமாக புத்தகங்களை எழுதி, பதிப்பித்து, பரப்பி வருவது, போலித் தனமாக இருக்கிறது. “திருடுவது எப்படி-திருட்டைத் தடுப்பது எப்படி” என்று எதிர்-புதிருமாக புத்தகங்களை வெலியிடுவது, வியாபாரம் என்று நியாயப் படுத்தலாம். ஆனால், படித்து ஏமாந்தவர்கள் சபித்தால், அது ஏமாற்றியவர்களை பாதிக்குமா-பாதிக்காதா என்று யோசிக்க வேண்டும்.

Tantrik sheets sold - faking

மந்திரதந்திரயந்திர தகடுகள் தயாரிப்பு, வியாபாரம்: பிரம்ம்ப முகூர்த்தத்தில் எழுத்து, நித்திய கர்மாக்களை சிரத்தையாக செய்து, மன-உடல் தூய்மையுடன், ஆராதித்து, பூஜை செய்து, ஒரு மண்டலம், இரண்டு மண்டலங்கள் என்று அவ்வாறு கிரியைகள் செய்து, முறைப்படி தாமிர தகடு தயாரித்து, அதில் சக்கரங்களை-மந்திரங்களை எழுதி, சுருட்டி தாயத்தில் வைத்து, மந்திரித்து, பூஜை செய்து கொடுப்பதற்கு பதிலாக, தொழிற்சாலையில், தகடுகளில் யந்திரங்களில் வெட்டி, எழுத்துகள்-படங்கள் பொரித்து விற்கிறார்கள், சஞ்சிகைகளுடன் இலவசமாகக் கொடுக்கிறார்கள்[10]. ஏன் ரூ 10/- என்று கூட கோவில்களில் விற்கிறார்கள். இதெல்லாம் எந்த வழியில் சரியானது, என்பதை அத்தொழில் செய்பவர்களுக்கேத் தெரியும். போலியாக “படிப்பு சான்றிதழ்கள்”, கள்ள நோட்ட்டுகள் அடிப்பதற்கு சமமான, ஈனத்தனமான, சமூக-விரோத, மனிதத்தன்மையற்ற தொழில் என்றே இவற்றைச் சொல்லலாம். ஆனால், திராவிட அதிகாரம், பாதுகாப்பு, ஆதரவு, முதலியவற்றால், இத்தொழில்கள் அமோகமாக நடக்கிறது. அதனால், கைதான ஒருவன், சசிகலாவைக் காப்பாற்றவே அவ்வாறான “அகோரி” பூஜை செய்தேன் என்று அளக்கிறான்.

Mantrika correspondence course by some people

கஷ்டப்பட்டு உழைக்காமல், கற்காமல், குறுக்கு வழியில் எதையும் அடைய முடியாது: மனிதன் படிப்படியாக, பள்ளியிலிருந்து, கல்லூரிக்குச் சென்று, பட்டம் பெற்று, வேலைக்குச் சென்று சம்பாதித்து, திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை நிர்வகிக்க அடையும் நிலையை, இத்தகைய போலி புத்தகங்கள வைத்து அடையலாம் என்று சில சோம்பேறி மனிதர்களை கவர, ஏமாற்றவே செய்யப்படுகின்ற வேலையாக இருக்கிறது. தனக்கே வழியில்லாமல், இப்படி ஏமாற்றி அலையும் இவர்கள், மற்றவர்களின் நலன்களைப் பற்றி எப்படி கவலைப் பட முடியும் என்று யோசிப்பதே இல்லை. கலை என்று சொன்னால், முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும், ஏதோ “பாஸ்ட் புட்” [துரித உணவகம்] போன்று, துரிதமாக, எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்பதெல்லாம் அபத்தமானது[11]. இன்றைக்கு “காப்பி ரைட்” அறிவுஜீவித்தனத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு முதலியவை அதிகமாகவே பேசப்படுகின்றன. ஆனால், இந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் முதலியோர் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதேயில்லை. நாளைக்கு “நுகர்வோர்” என்ற முறையில், வழக்கு போட்டால், அப்பொழுது தான் புரியும் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-03-2017

Mantrika books printed and circulated

[1] http://src83.blogspot.in/2016/12/blog-post_17.html

[2] http://www.ujiladevi.in/

[3]  சரித்திரம் மறைக்கப்பட்டுள்ள நிலையில், பொய்கள் பரப்படும் நிலையில், அவற்றைப் பற்றிக் கவலைப் படாமல், இப்படி அதிரடி ரீதியில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

[4]  இது சுத்தமான வியாபாரன் என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது. அதாவது, பொருள் நன்றாக இல்லை, பிரயோஜனம் இல்லை, பிடிக்கவில்லை என்றால், திருப்பிக் கொடுத்தால், பணம் வாபஸ் என்ற ரீதியில் செய்யப்படும் ரீதியில், இந்த விளம்பரம் உள்ளதை கவனிக்கலாம்.

[5] http://vasiyam.co.in/en/HOME/

[6] இதில் நர்மதா பதிப்பகம், செண்பகா பதிப்பகம் என்று எல்லோருமே அடக்கம்.

[7] 1940களில் வெளிவந்த பெரிய எழுத்து புத்தகங்கள், 1980களில் வெளிவந்த பிரேமா பிரசுரம் முதலியன.

[8] http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89982

[9] திராவிடத்துவ சித்தாந்திகள், திக-திமுகக் கட்சி ஆதரவாளர்கள், அவர்களுடைய உறவினர்கள் என்றிருப்பவர்கள், இத்தொழிலி அதிகமாக ஈடுபட்டிருப்பதை கவனிக்கலாம்.

[10]  நக்கீரன் போன்ற போலி ஆத்திக, பெரியாரிஸ சித்தாந்த கோஷ்டிகள் செய்து வந்ததை, வருவதை கவனிக்கலாம்.

[11] ஒரு மணி நேரத்தில் ஆவிகளுடன் பேசும் பயிற்சி, http://vasiyam.co.in/en/HOME/

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திர-தந்திர-யந்திர அகோரி ஜாலங்கள் – பரம்பரை தொழில் செய்வது, மாந்தீரீக மாநாடுகள் நடத்துவது, பகுத்தறிவை பாதிக்காதா? – (6)

மார்ச் 22, 2017

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திரதந்திரயந்திர அகோரி ஜாலங்கள் – பரம்பரை தொழில் செய்வது, மாந்தீரீக மாநாடுகள்  நடத்துவது, பகுத்தறிவை பாதிக்காதா? – (6)

Karthikeyan -Rajarahavan-Tantrik - conducted conference -workshop-in 2015

போலீஸார் கைப்பற்றிய பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்: மருதடி குடில், ஆசிரமத்தில், திராவிட பூசாரி, மந்திர-தந்திர-யந்திர வேலைகள் செய்தது விளக்கப்பட்டது. இந்த குடிலில் இருந்து, தடயங்கள் எதையும் போலீசார் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காக, மந்திரவாதி கார்த்திகேயன், தன் ஆதரவாளர்கள் மூலம், குடிலை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது[1]. மந்திரவாதியின், எம்.எம்., நகர் வீட்டில், 11 மண்டை ஓடுகள், ஒரு கூடை மண்டை ஓட்டு துகள்கள், சடலம் இருந்த, 6 அடி மரப்பெட்டி, விநாயகர், காளி, லிங்கம் சிலைகள், ஏ.டி.எம்., கார்டுகள், அவன் பயன்படுத்தி வந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மகேந்திரா சொகுசு கார் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை 20-03-20117 அன்று, பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவன் உருது, மலையாளம், தெலுங்கு மொழிகளில் எழுதிய புத்தகத்தைப் பற்றி விசாரித்தார்கள என்று தெரியவில்லை. போலீஸார் மாற்றுதல், சட்டம் மீறி மயானத்தில் உள்-நுழைதல், பிணத்தை வைத்திருந்ததால் நோய் பரவும் என்ற சட்டமீறல், மதத்தின் பெயரால் ஏமாற்றியது[2] முதலிய பிரிவுகளில் தன் வழக்குப் பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

Karthikeyan Tantrik - conducted conference -workshop-in 2015

2015ல் நடத்திய மூன்று நாட்கள் மாந்திரீக மாநாடு[3]: திராவிட மாந்தீரிகன், பெரம்பலூரில் 2015ல் மூன்று நாட்கள் மாந்தீரீக மாநாடு நடத்தியிருப்பது தமாஷாக இருக்கிறது, ஏனெனில், எந்த பகுத்தறிவுவாதியும் இதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்யவில்லை, பெரியார் பக்தனும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை. “மாந்தீரீக ஆசான்”, “மாந்தீரிக மன்னன்” என்று அட்டகாசமாக, பின்னணி பேனர் வைத்து, இவன் சொற்பிழிவு நடத்தினான். நசீமா பானுவின் கணவனாக இருந்தாலும், ராஜராகவ் என்ற பெயர் கொண்ட அவன், பேன்ட்-சர்ட் சகிதம் நவீன தோற்றத்தில் மாநாட்டை நடத்தியுள்ளான். “கார்புரேட்” ஸ்டைலில் விளக்கம் கொடுத்து கூட்டம் கூடியுள்ளான். சுழலும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி அசத்தியுள்ளான். இதற்காக நாளிதழ்களிலும் விளம்பரங்கள் கொடுத்துள்ளான். “ராஜராஹவன்” என்று தன்னக் குறிப்பிட்டு கொண்டு மூன்று தலைமுறைகளாக மாந்தீரீகம் செய்வதாக சொல்லிக் கொண்டான்[4]. அண்டை மாநிலங்களில் இருந்து நிறைய பேர் கலந்து கொண்டார்கள். அவர்களிடம், ரூ 3,000/- முதல் 5,000/- வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. 300-400 பேர் வந்துள்ளதாக, வீடியோவில் பார்க்கும் போது தெரிகிறது. மந்திரம், தந்திரம், யந்திரம், வசியம், சூனியம், பில்லை போன்றவற்றைப் பற்றி பேசினர், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மூன்றாவது நாளன்று, குறிப்பிட்ட மாந்தீரீகர்கள் தனியாக உட்கார்ந்து, சில விசயங்களைப் பற்றி, பேசினர், கலந்தாலோசித்தனர். விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Karthikeyan Tantrik - conducted conference in 2015- participants

தாத்தா விஜயராகவ ஆச்சாரியின் பேரன் அதே வேலையைமாந்தீரிகம்செய்தது: மாநாட்டில் தாத்தா விஜயராகவ ஆச்சாரியிடமிருந்து கற்றுக் கொண்டு, பிறகு, கேரளா சென்று, அரேபிய-முகமதிய முறைகளையும் கற்றுக் கொண்டதாக அறிவித்தான். ஆக, இதில் குலத்தொழில் செய்வதை எந்த பகுத்தறிவுவாதியும் எதிர்க்கவில்லை. நல்லவேளை, ஒருவேளை, நாளைக்கு “பெரியார் பல்கலைக்கழகம்”, “பெரியார்-மணியம்மை” பல்கலைக்கழகம் போன்றவற்றில், இதைப் பற்றிய பாடம் அறிமுகப் படுத்தினால், அப்பொழுது, இடவொதிக்கீடு என்று கேட்டுப் பிரிக்கலாம். போலீஸார், இம்மாநாடு பற்றிய விவரங்களை விசாரித்தார்களா, போன்ற விவரங்களும் வெளியிடப் படவில்லை. நான்காவது கூட தேறாதவன், எப்படி மாந்திரீக மாநாடு நடத்தினான், புத்தகங்களை வெளியிட்டான், முதலியவை போலீஸாருக்கே ஆச்சரியமாக இருக்கிறாதாம்[5]. 11-03-2017 அன்று கைது செய்யப்பட்டதிலிருந்து, தனது பிரதாபங்களை போலீஸாரிடம் கூறி வருகிறானாம்[6]. ஊடகங்கள் சசிகலா பற்றிய விவரங்கள், இவன் சொன்னதாக முதலில் செய்தியில் வெளியிட்டாலும், பிறகு அமைதியாகி விட்டன.

Karthikeyan Tantrik - interested as his grandfather practiced black magic

ஊடகங்கள் மூடநம்பிக்கை ஆதரிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவது ஏன்?: பெரியாரிஸத்தில் ஊறியவர்கள், பெரியாரின் அடிமைகள் / பக்தர்கள், பகுத்தறிவு பிரகஸ்பதிகள் ஏன் இவ்வாறு மூட நம்பிக்கைகளை ஆதரிக்கும் முறையில் செய்திகளை வெளியிட வேண்டும்?

 1. குடில் கடந்த ஒரு ஆண்டாக காலியாகவே இருந்தது என்கிறது தினகரன்.
 2. இந்த தீ விபத்தில் கொட்டகையிலிருந்த பூஜை பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகிவிட்டன என்கிறது தினத்தந்தி.
 3. திராவிட மந்திரவாதி கார்த்திகேயன் 2016ல் ஆலத்தூர் தாலுகா, மருதடி மலையடிவாரத்தில்ஐந்து ஏக்கரை வளைத்துப்போட்டு குடில் அமைத்து மண்டை ஓடுகளுடன் மாந்திரீகம் செய்துவந்தார் என்கிறது தினகரன்.
 4. பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் இருந்து மருதடி செல்லும் சாலையில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மந்திரவாதி கார்த்திகேயனுக்கு சொந்தமான நிலம் உள்ளது என்கிறது தினமலர்.
 5. ஏப்ரல் 2016ல் கைதானவன் எப்படி வெளியே வந்தான் என்று விளக்கவில்லை.
 6. இப்பொழுது கைதாகி உள்ளேயிருக்கும் போது, “சிறையில் இருந்தவாறே கார்த்திகேயன் குடிலைத் தீப்பிடிக்க செய்துவிட்டதாக ஊர் மக்கள் கருதுவதால் பரபரப்பு நிலவுகிறது”, என்கிறது தினகரன்[7].

Karthikeyan Tantrik - conducted conference in 2015

முஸ்லிம் தொடர்புகள் திகைக்க வைக்கின்றன: தனது பரம்பரை தொழிலை செய்தாலும், கேரளாவுக்குச் சென்று அங்கிருக்கும் முறைகளையும் கற்று வந்ததாக ஒப்புக்கொண்டான். நஸீமா பானு முஸ்லிம் என்று ஊடகங்கள் குறிப்பிடாமல் இருப்பதும் அவர்களது “செக்யூலரிஸத் தன்மையினை” காட்டுகிறதா “ஶ்ரீ மஹா காளி மந்த்ராலயம்” என்பதால், இந்துமதத்தின் மீது பழி போடும் நோக்கம் உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. அல்லது 2016 மற்றும் 2017 கைதுகளில் முஸ்லிம்கள் இருப்பதால், முஸ்லிம்களின் தொடர்பு இதில் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து, அடிக்கடி வந்து செல்கின்றனர் என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. அவன் வீட்டில் அரேபிய மாந்தீரிக புத்தகங்கள் இருப்பதை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். காளி படங்களைப் போட்டு, இந்துமத மந்திரவாதி போன்று சித்தரிக்க முயன்றாலும், இதில் சம்பந்தப் பட்டவர்கள் முஸ்லிம்களாக உள்ளனர்[8]. மேலும், மதமாற்றத்திற்கும் இத்தகைய வேலைகளை பெரம்பலூரில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களை அணுகி, அவர்களது பிரச்சினையை பில்லி-சூன்யம் முறைகளில் தீர்த்து வைக்கிறோம் என்று வளைவீசி வருகின்றனர்[9]. இதையெல்லாம், இந்துத்துவவாதிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

22-03-2017

Kartikeyan and Naseema - the tantrics-Arabic book

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1734932

[2]  நாளைக்கு இந்து மதம் தான் காரணம் என்பான், அதைப் பெரிதாக்கி விவாதங்கள் நடத்தலாம். பொறுத்துப் பார்க்க வேண்டும்.

[3] சன் – டிவி வீடியோ –  https://www.youtube.com/watch?v=G1PcnI9V0XA

[4] Raj TV video, Koppiyam – இளம்பெண் சடலம் மீது அமர்ந்து மந்திரவாதி கார்த்திகேயன் நள்ளிரவு பூஜை !!!, https://www.youtube.com/watch?v=T1Tm3jmUvVA

[5]  “A class IV dropout, he had even conducted a conference on Mantrika. As editor, he publishes books on the subject. It looks like he has lots of rich clients who seek advice and black magic help from him to solve their problems. He had been also spending a lot,” police revealed. Ever since the police picked him up on Saturday [11-03-2017], he had been boasting about his capabilities to the police team. More than 20 skulls were recovered along with many other pooja articles, books and idols of god and goddess from his apartment. It is not clear if he had procured any other body from any graveyards in the past.

DECCAN CHRONICLE. Four more held in black magic case, by  R VALAYAPATHY, Published: Mar 13, 2017, 6:08 am IST; Updated: Mar 13, 2017, 6:20 am IST.

[6] Perambalur police had arrested him in 2015 for his suspicious activities. http://www.deccanchronicle.com/nation/in-other-news/130317/four-more-held-in-black-magic-case.html

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=288578

[8] http://www.perambalur.kalaimalar.com/the-human-body-is-made-to-keep-the-wizards-plea-to-arrest-mantirikam/

[9] http://www.perambalur.kalaimalar.com/in-perambalur-district-efforts-to-increase-proselytizing/

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திர-தந்திர-யந்திர அகோரி ஜாலங்கள், கூடு விட்டு கூடு பாயும் மாயங்கள், திராவிட சித்து வேலைகள் (4)

மார்ச் 18, 2017

பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திரதந்திரயந்திர அகோரி ஜாலங்கள், கூடு விட்டு கூடு பாயும் மாயங்கள், திராவிட சித்து வேலைகள் (4)

Kartikeyan and Naseema - the tantrics-to save Sasikala

2,000 ஆவிகளை வைத்திருக்கும் நஸீமாகார்த்திகேயன் தம்பதி: இதைவிட அடுத்த அதிர்ச்சியாக, தன்னிடம் 2,000 ஆவிகள் உள்ளன என்றும் அதனை யார் மீது வேண்டுமானாலும் ஏவலாம் என்று கூறியது வேடிக்கையாக இருந்தது. “ஜெர்க் கொடுத்துள்ளார்”, என்று மரியாதையோடு குறிப்பிட்டது அதைவிட வேடிக்கை! மந்திரவாதியா அல்லது சைக்கோவா என்ற சந்தேகம் அவரது பேச்சு காரணமாக போலீசாருக்கு எழுந்துள்ளது[1]. எனவே, அவரை அழைத்து சென்று பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மந்திரவாதி கார்த்திகேயன் அறையில் இருந்து வசிய மை, ஏராளமான இளம்பெண்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இருந்தன. இந்த போட்டோக்கள் இறந்த பெண்களுடையதாக இருக்குமா அல்லது நரபலி கொடுக்க தேர்வு செய்யப்பட்டதா என்ற உச்சக்கட்ட சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்[2]. மந்திரவாதிவீட்டிலிருந்து அடிக்கடி அலறல் சத்தம் கேட்கும் என்று அந்த ஏரியா மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. தேடி பார்த்தும் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது போலீஸாரின் வாதம்!

Black magic things - Perambalur- earlier hut

பிணம் மறுபடியும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, எரியூட்டப்பட்டது: மந்திரவாதி கார்த்திகேயன் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட, இளம்பெண் அபிராமியின் உடல், மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அப்பிணத்தின் மீது ஏதாவது செய்யப்பட்டிருக்கிறதா என்று பரிசோதிக்கப் பட்டது. மஞ்சள், குங்குமம், கருப்புப் பொடி முதலியவை காணப்பட்டன[3]. அவற்றையெல்லாம் வைத்து பிணத்திற்கு பூசை செய்யப்பட்டிருக்கிறது[4]. பிறகு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது[5].  பின், பெரம்பலுார் ஆத்துார் சாலையில் உள்ள மின் மயானத்தில், 12-03-2017 அன்று மாலை, அபிராமியின் உடல் தகனம் செய்யப்பட்டது[6].  ஒரு பிணத்திற்கு இரண்டு விதமான புதைத்தல் மற்றும் எரித்தல் என்று நடந்தது இதுதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. தற்கொலைக்குப் பிறகு, அவளது உடல் இவ்வாறு பாடுபடுவது, திராவிடத்தின் மகத்துவம் போலிருக்கிறது.

Kartikeyan and Naseema - the tantrics-Arabic book

மனைவி நஸீமா, அரேபியபாரசீக சக்கரங்கள், மந்திரங்கள், தகடுகள்: கார்த்திக்கின் மனைவி நஸீமா என்கிறார்கள், அவளும் முஸ்லிம் போலவே காணப்படுகிறாள். அவள் திருமணம் ஆனவள் என்றால், கார்த்திக் எப்படி “கார்த்திக்காக” இருக்கிறான் என்பது மர்மமாக இருக்கிறது. இஸ்காத்தைப் பொறுத்த வரையில், ஆணோ-பெண்ணோ ஒரு முஸ்லீமை கல்யாணம் செய்து கொண்டால் அவன் அல்லது அவள் முஸ்லீமாக மதம் மாற வேண்டும். பிறகு, கார்த்திக் எப்படி, நஸீமாவை மனையாக்கி அப்படியே இருந்திருக்கிறான் என்பது புதிராக இருக்கிறது. அரேபிக், பாரசீகம், மலையாளம், தமிழ் மொழிகளில் மந்திரம், தந்திரம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வித்தைகளைக் குறித்த புத்தகங்கள், படங்கள் முதலியவை இருந்தன[7]. இவ்வித்தியை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க, விளம்பரம் கொடுப்பதற்கும் தயராக இருந்ததாக சொல்லிக் கொண்டான்[8]. அப்படியென்றால், அரேபிய-பாரசீக மொழிகள் தெர்ந்தவர்கள் யார், இவர்களுக்கே தெரியுமா அல்லது தெரிந்தவர்கள் உதவுகிறார்களா என்று தெரியவில்லை. கேரள தொடர்புகள் நிச்சயமாக முஸ்லிம் மாந்திரிகத்துடனான தொடர்பைக் காட்டுகிறது. அங்கிருந்து வந்து இவனை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன, யார் சந்திப்பது என்பதையும் விசாரிக்க வேண்டும்.

Black magic things - Perambalur

போலீஸார் கொடுக்கும் விவரங்கள்[9]: பெரம்பலூர் நாரணமங்கலம் அருகே மருதடி செல்லும் பாதையில் குடில் அமைத்து மாந்திரீகம் செய்ததாக கார்த்திகேயன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  அவர் அருகில் உள்ளவர்களிடம் அதிகம் பேசமாட்டார். கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வாலிபர்கள் கார்த்திகேயனிடம் மாந்திரீகம் பற்றி கேட்டு விட்டு செல்வது உண்டு என்று கூறினர்.  கேரள தொடர்புகள் நிச்சயமாக முஸ்லிம் மாந்திரிகத்துடனான தொடர்பைக் காட்டுகிறது. முன்பு மருதாடி என்ற இடத்தில் இருந்து, இத்தகைய வேலைகளை செய்ததால், 2015ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து விரட்டப் பட்டான். அதனால், இப்பொழுது எம்.எம்.நகருக்கு வந்து விட்டான் என்று ஊடகங்கள் கூறுகின்றன[10]. முன்பு புகாரின் மீது, வீட்டை சோதனையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை, ஆனால், இப்பொழுது, 20 மண்டையோடுகள், எலும்புகள், ரத்தக்கறைத் தோய்ந்த துணிகள் முதலியவைக் கிடைத்துள்ளன. அத்துணிகள், இரண்டு பைகளில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன.

Kartikeyan and Naseema - the tantrics

ஆதாரங்கள் கிடைக்கும் வரை போலீஸார் காத்திருந்தது ஏன்?: ஆக, ஆதாரங்கள் கிடைக்கும் வரை போலீஸார் காத்திருந்தனர் என்று தெரிகிறது. இது அவனது அரசியல் மற்றும் இதர தொடர்புகளைக் காட்டுகிறது. திராவிட அரசியல்வாதிகள் எதற்காக இத்தகைய மூட நம்பிக்கைகளை ஆதரிக்க வேண்டும்? பெரியார் வழி வந்தவர்களுக்கு தான் எதுவுமே இல்லை எனும்போது, இவ்வாறு கோஷ்டிகளை உருவாக்கி, ஆதரித்து, வளர்த்து அவர்கள் மூலம், இவர்கள் என்ன பலனை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை பெரியார் ஆவியை வரவழைத்து, அதன் மூலம், பகுத்தறிவு ரீதியில், பேசி பலனைப் பெறப் போகிறார்களா? முன்பு கூட, ஒருவர், எல்லா ஆவிகளுடனும் தொடர்பு கொண்டாராம், ஆனால், பெரியார் ஆவி மட்டும் வரவில்லையாம்.

Can talk with Periyar Spirit - Amudha

பெரியாருக்கு ஆவி இருந்ததாஇல்லையா?: மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆவி ஆராய்ச்சியாளர்  ஆர். ரமணி, “பெரியார்கிட்ட பேசணும்னு பல தடவை முயற்சி பண்ணிக் கூப்பிட்டும் வரவே இல்லை” என்றார்[11]! இவர் ஆத்திகர் என்றதால் வரவில்லியா அல்லது ஆவியே இல்லையா? அப்படியென்றால், பெரியாருக்கு ஆவி இருந்ததா-இல்லையா என்று தெரியவில்லை. “பேய், பில்லி, சூனியம், ஆவி, சோதிட மோசடிகள்ளென்று குறும்புத்தகத்தை திகவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால், வருடாவருடம் கல்லறைக்கு மாலை போட்டு கும்பிட்டு வருகின்றனர், படையலும் வைக்கின்றனர். அப்படியென்றால், பெரியார் ஆவி அவர்களுக்கு மட்டும் இருக்கின்றது என்றாகிறது. திராவிட சித்தாந்திகளுக்கு இதில் குழப்பம் அதிகமாகத்தான் இருக்கிறது. கருணாநிதி கூட இதைப் பற்றி அதிகமாகவே உளறியிருக்கிறார்[12]. எது எப்படியாகிலும், இப்படி திராவிட கட்சிகள் சூனியம் வைத்துக் கொள்வதாக, ஒருவர் சொல்வது நோக்கத்தக்கது. ஒருவேளை பெரியார் ஆவி வந்து இவர்களைக் காப்பாறுமா என்று பார்க்க வேண்டும்! “ஆவி உமா” என்பவரோ, “பெரியார் ஆவியோட பேச முடியும்” என்றாராம்!

© வேதபிரகாஷ்

18-03-2017

Kartikeyan and Naseema - the tantrics-skull, body etc

[1] தமிழ்.ஒன்.இந்தியா, சசிகலாவை சிறையிலிருந்து மீட்க, கூடுவிட்டு கூடு பாய தயாரான மந்திரவாதி.. மடக்கிப்பிடித்த போலீசார், By: Veera Kumar, Published: Wednesday, March 15, 2017, 18:21 [IST].

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/wizard-arrested-keeping-woman-body-277002.html

[3] Times of India, Re-postmortem done on girl’s body, TNN | Mar 14, 2017, 06.59 AM IST

[4] http://timesofindia.indiatimes.com/city/trichy/re-postmortem-done-on-girls-body/articleshow/57621933.cms

[5] தினமலர், சசிகலாவை விடுதலை செய்திருப்பேன்: ‘அகோரிமந்திரவாதி திடுக் தகவல், பதிவு செய்த நாள். மார்ச்.13, 2017.22:07.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1729591

[7] India Today, Tamil Nadu: 3 arrested along with black magic teacher who used dead body for practice, Pramod Madhav | Posted by Dianne Nongrum, Perambalur, March 12, 2017 | UPDATED 15:13 IST.

[8] Karthikeyan admitted that he used the body to conduct Agori poojas and that he was planning to put an advertisement in the papers stating that he was willing to teach black magic.

 http://indiatoday.intoday.in/story/black-magic-mylapore-cemetery-tantric-arrested-perambalur/1/902850.html

[9] A police officer said that they have got calls in the past claiming that there were black magic rituals taking place at the house of Karthik and Naseema but whenever they went there to conduct a search they could not find anything. But on Friday, police found more than 20 skulls, some human bones and two large bags stuffed with blood-stained clothes.http://www.thenewsminute.com/article/five-people-arrested-smuggling-dead-body-chennai-practicing-black-magic-58493

[10] A police officer told TOI that Karthik has been involved in such cases when he lived at Marudhadi. He said that he was chased away from the place due to his black magic activities. A case was registered in 2015 and then he had moved to MM Nagar.

 http://www.thenewsminute.com/article/five-people-arrested-smuggling-dead-body-chennai-practicing-black-magic-58493

[11] விகடன், பெரியார் ஆவி மட்டும் பேச மாட்டேங்குது, Posted Date : 06:00 (21/11/2014)

http://www.vikatan.com/timepassvikatan/2014-nov-29/special/100938.art

[12] மறைந்த க. இராசாராம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து – 29.2.2008.

திராவிட கட்சிகள், பெரியார் குஞ்சுகள், பெரியாரிஸப் பழங்கள் தங்களது தலைவர்களுக்கு மாறி-மாறி பில்லி-சூனியம் வைத்துக் கொண்டனரா?

நவம்பர் 1, 2016

திராவிட கட்சிகள், பெரியார் குஞ்சுகள், பெரியாரிஸப் பழங்கள் தங்களது தலைவர்களுக்கு மாறிமாறி பில்லிசூனியம் வைத்துக் கொண்டனரா?

jayalaita-suffering-due-to-black-magic-daily-mailதமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோரின் உடல்நிலை பாதிப்புக்கு காரணம், ஒரு சிலர் வைத்துள்ள சூனியமே’ என, பிரபல ஜோதிடர் கூறியதாக, லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது[1] என்று தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்[2]. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல், 35 நாட்களுக்கு மேலாக சிகிக்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடைய உடல்நலக் குறைவு குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. திராவிடத்தில் ஊறிய சித்தாந்திகள், அரசியல்வாதிகள், தலைவர்கள் என்று பலர் ஜெயலலிதா ஒரு வயதான பெண்மணி என்று கூட பாராமல், மிகவும் நக்கலாக, கேவலமாக, மோசமாக விமர்சங்கள் செய்தார்கள். அவருக்கு என்ன பிரச்சினை என்ற விவரங்கள் வெளியிட வேண்டும், அவரது புகைப்படங்கள் வெளியிட வேண்டும் என்று கருணாநிதி போன்றோர் கூட கேட்டனர். ஜெயலலிதா எதிர்ப்பு என்றுமே, பார்ப்பன-எதிர்ப்பு என்ற போர்வையில், நாத்திகர்கள், இந்து-விரோதிகள் எல்லோரும் சேர்ந்து கொள்வர் என்பது தெரிந்த விசயமே. அவ்வாறுதான், இப்பொழுதும் ஏற்பட்டுள்ளது.

e0aeaae0af86e0aeb0e0aebfe0aeafe0aebee0aeb0e0af8d-e0ae86e0aeb5e0aebf-e0ae95e0af8be0aeb5e0aebfe0aeb2e0af88e0ae95e0af8d-e0ae95e0aea3

ஜெயலலிதாவுக்கு சூனியம்வைக்கப்பட்டுள்ளதாக, பிரபல வெளிநாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது: இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சூனியம்வைக்கப்பட்டுள்ளதாக, பிரபல வெளிநாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து, பிரிட்டனின் லண்டன் நகரில் இருந்து வெளியாகும், ‘டெய்லி மெயில்’ என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் உடல்நிலைபாதிப்புக்கு, சூனியம் வைக்கப்பட்டுள்ளதே காரணம் என, பெயர் குறிப்பிட விரும்பாத, ஒரு பிரபல ஜோதிடர் கூறியுள்ளார்[3]. தமிழக அரசியலில், அரசியல் கட்சிகள் இடையே கடுமையான விரோதம் இருக்கும். அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மீது சூனியம் வைக்கும் அளவுக்கு மோசமானதாக இல்லை. “ஜெயலலிதாவுக்கு எதிராக திமுகவில் சிலர் ஏகப்பட்ட பணத்தை வாரி இறைத்து, செய்வினை, பில்லி, சூனியங்களில் ஈடுபட்டனர்[4]. ஆனால் எதிர்க்கட்சியினரை மட்டுமே நான் குறை சொல்ல மாட்டேன். அவரின் சொந்த கட்சியிலும் கூட இதுபோல செய்திருக்க வாய்ப்புள்ளது,” என அந்த ஜோதிடர் கூறியுள்ளார்[5]. மேலும், ஜெயலலிதாவுக்கு பிறகு கருணாநிதி உடல் நிலை பாதிப்படைந்துள்ளதற்கும், பில்லி, சூனிய வேலைகள் காரணம் என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார்[6]. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8dஜெயலலிதாவோடு கருணாநிதியையும் சேர்த்துக் கொண்டது: லைவ்டுடே, முதலில் “தி.மு..,வினர் பணத்தை வாரி இரைத்து ஜெ.,விற்கு பில்லி, சூனியம்..! லண்டன் நியூஸ் ரிலீஸ்..!,” என்று செய்தி போட்டுவிட்டு, பிறகு, “ஜெயலைதா, கருணாநிதிக்கு பில்லி, சூனியம்..! லண்டனில் பரபரப்பு……..!” என்று மாற்றி வெளியிட்டுள்ளது[7]. இதை “திராவிட சமமுறையா, சமநாத்திகமா” என்று நோக்கத்தக்கது[8]. தமிழ்.வெப்துனியாவும் அப்படியே போட்டு, “இது எப்படியிருக்கு?” என்று கேட்டு, நிறுத்துக் கொண்டது[9]. அலசி, என்ன காரணம் என்றோ, பெரியார் வழியில் உள்ள திராவிட பழங்கள் இவ்வாறு ஈடுபடலாமா, என்றெல்லாம் எடுத்துக் காட்டவில்லை[10]. ஜெயலலிதாவை திமுக மட்டும் சூனியம் வைத்தது என்றில்லாமல், கருணாநிதிக்கும், அதிமுகவினர் சூனியம் வைத்திருப்பர் என்று சமநோக்குடன் செய்தியை வெளியிட்டார்கள் போலும். அத்தகைய நிலையை அந்த “சென்னையைச் சேர்ந்த மிகப்பெரிய ஆன்மீக குரு ஒருவர்” என்பரே செய்துள்ளார்!

jayalaita-suffering-due-to-black-magic-daily-mail-fullடெயிலி மெயில்வெளியிட்ட செய்தி[11]: பாதுகாப்பு காரணமாக தனது பெயரை வெளியிட விரும்பாத சென்னையைச் சேர்ந்த மிகப்பெரிய ஆன்மீக குரு ஒருவர், “ஜெயலலிதாவுக்கு ஏகப்பட்ட விரோதிகள் இருக்கின்றனர். திமுகவினரைச் சேர்ந்தவர்கள் மட்டும் நிறைய பணத்திச் செலவழித்து, அவ்வாறு அவரது உடல்நிலையை பாதிக்கும் முறையில், மந்திரதந்திர ஏவல்களில் ஈடுபடவில்லை. அவரது கட்சிக்குள்ளேயே அவரை அவ்வாறு பாதிக்கும் முறையில் செய்துள்ளனர் என்று நான் தயங்காமல் சொல்கிறேன்,” என்றார். அதுமட்டுமல்லாது, திடீரென்று கருணாநிதியும் உடல்நல குறைவு ஏற்பட்டதற்கும், இதுதான் காரணம் என்றார். “அரசியல் போட்டிகளில் இதெல்லாம் சகஜமான விசயமாக இருப்பதால், நான் மந்திரம்தந்திரம், பில்லிசூனியம், ஏவல் முதலியவற்றில் ஈடுபட்டது என்று ஒரு கட்சியினை மட்டும் குறை கூறமாட்டேன். இதில் எல்லாமே ஒன்றுதான்,” என்றார்[12].

%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%80%e0%ae%9f%e0%af%81பெரியார் பக்தர்கள், பெரியாரிஸ தொண்டர்கள், நாத்திகப் பழங்கள் இவ்வாறு செய்யலாமா?: ஜெயலலிதா குணமடைய பூலைகள், வழிபாடுகள், மண்சோறு தின்றது, அலகு குத்திக் கொண்டது, பால்குடம் தூக்கியது…..போன்ற செயல்களை விமர்சித்து கிண்டலடித்துள்ளனர். பிறகு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கூட அவ்வாறு செய்த போது, அளந்து வாசித்தனர். சிலர் அவர்களை குறைகூறினர். செக்யூலரிஸ விதத்தில் தொழுகை செய்தனர், ஜெபித்தனர் என்று கொள்ளலாம். இருந்தாலும், எதிர்கட்சி தலைவருக்கு உடல் சுகவீனம் ஏற்பட வேண்டும் என்று திராவிட கட்சிகள் அவ்வாறு செய்யுமா என்பது தான் வியப்பாக இருக்கிறது. ஜெயலலிதாவுக்காக இறைவனிடம் பூஜித்து வேண்டிக் கொண்டவர்கள், கருணாநிதிக்காக அவ்வாறு செய்யவில்லை. செய்தால், அது அவர்களது நாத்திக, பெரியாரிஸ, கடவுள் எதிர்ப்பு கொள்கைகளுக்கு எதிராக போய்விடும் என்று அமைதியாக இருந்தார்கள் போலும்.

%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%99%e0%af%8dசொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதும், திராவிட சித்தாந்தத்தில் இவ்வாறு சூனியம் வைக்கச் சொவதும் ஒன்றாகுமா?: பேய்-பிசாசு-பூதம் முதலியவற்றை திராவிட சித்தாந்துகள் நம்ப மாட்டார்கள். மந்திர-தந்திர-யந்திர வேலகளை எல்லாம் மூடநம்பிக்கை என்று ஏளனம் செய்து விரட்டியடிப்பார்கள். குங்முமம் வகித்ததையே துடைத்து போட்ட ஸ்டாலின், பெரியாரின் குஞ்சு எனலாம். அப்பா கருணாநிதி குங்குமம் வைத்த தொண்டரை, “என்ன நெற்றியில் ரத்தம் வருகிறாதா?”, என்று ஏளனமாகாகக் கேட்டது நினைவிருக்கலாம். ரத்தம் என்றாலே, கருணாநிதிக்கு அலாதியான மூட் வந்து விடும் எனலாம். முன்பு, இந்திரா காந்தியை திமுகவினர் கற்களால் அடித்து ரத்தம் வந்த போது கூட, ஏடா-கூடமான விமர்சனம் செய்து, தனது தகுதியை எடுத்துக் காட்டிக் கொண்டார். ரத்தத்துடன் பில்லி-சூனியம் வைப்பவர்கள் தாம் அவ்வாறேல்லாம் வினைசெய்வர். ரத்தம் என்றாலே கருணாநிதிக்கு கொஞ்சம் நக்கல் அதிகமாகவே இருந்திருக்கிறது.

%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%99%e0%af%8dபெரியாருக்கு ஆவி இருந்ததாஇல்லையா?: மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆவி ஆராய்ச்சியாளர்  ஆர். ரமணி, “பெரியார்கிட்ட பேசணும்னு பல தடவை முயற்சி பண்ணிக் கூப்பிட்டும் வரவே இல்லை” என்றார்[13]! இவர் ஆத்திகர் என்றதால் வரவில்லியா அல்லது ஆவியே இல்லையா? அப்படியென்றால், பெரியாருக்கு ஆவி இருந்ததா-இல்லையா என்று தெரியவில்லை. “பேய், பில்லி, சூனியம், ஆவி, சோதிட மோசடிகள்ளென்று குறும்புத்தகத்தை திகவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால், வருடாவருடம் கல்லறைக்கு மாலை போட்டு கும்பிட்டு வருகின்றனர், படையலும் வைக்கின்றனர். அப்படியென்றால், பெரியார் ஆவி அவர்களுக்கு மட்டும் இருக்கின்றது என்றாகிறது. திராவிட சித்தாந்திகளுக்கு இதில் குழப்பம் அதிகமாகத்தான் இருக்கிறது. கருணாநிதி கூட இதைப் பற்றி அதிகமாகவே உளறியிருக்கிறார்[14]. எது எப்படியாகிலும், இப்படி திராவிட கட்சிகள் சூனியம் வைத்துக் கொள்வதாக, ஒருவர் சொல்வது நோக்கத்தக்கது. ஒருவேளை பெரியார் ஆவி வந்து இவர்களைக் காப்பாறுமா என்று பார்க்க வேண்டும்!

© வேதபிரகாஷ்

01-11-2016

%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d

[1] தினமலர், ஜெ., கருணாநிதி உடல் நிலை பாதிப்புக்கு காரணம் என்ன?, பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016,22:51 IST

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1638854

[3] லைவ்டே, தி.மு..,வினர் பணத்தை வாரி இரைத்து ஜெ.,விற்கு பில்லி, சூனியம்..! லண்டன் நியூஸ் ரிலீஸ்..!, Oct 31, 2016 at 8:10 PM : By LIVEDAY

[4] http://liveday.in/tamilnadu-live-headline-news/jaya-billy-london-news/

[5] தனிழ்.ஒன்.இந்தியா, ஜெயலலிதா, கருணாநிதி சுகவீனத்திற்கு காரணம், பில்லிசூனியம்! சொல்வது லண்டன் நாளிதழ், By: Veera Kumar, Published: Monday, October 31, 2016, 10:23 [IST]

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/shocking-revelations-jayalalithaa-is-victim-black-magic-266029.html

[7] லைவ்டே, ஜெயலைதா, கருணாநிதிக்கு பில்லி, சூனியம்..! லண்டனில் பரபரப்பு……..!, Oct 31, 2016 at 11:01 PM : By LIVEDAY

[8] http://liveday.in/tamilnadu-live-headline-news/jayalalitha-and-karunanidhi-health-report/

[9] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதாவிற்கு பில்லிசூனியம் வைத்ததுதான் காரணம், Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2016 (10:15 IST).

[10] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/daily-mail-news-says-blackmagic-made-jayalalitha-week-116110100002_1.html

[11] The Daily Mail, ‘Her enemies are making her suffer’: Top Astro Guru says CM Jayalalithaa is a victim of Black Magic, By MAIL TODAY BUREAU, PUBLISHED: 23:52 GMT, 26 October 2016 | UPDATED: 00:16 GMT, 27 October 2016.

[12] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3875860/Her-enemies-making-suffer-Astro-Guru-says-CM-Jayalalithaa-victim-BLACK-MAGIC.html

[13] விகடன், பெரியார் ஆவி மட்டும் பேச மாட்டேங்குது, Posted Date : 06:00 (21/11/2014)

http://www.vikatan.com/timepassvikatan/2014-nov-29/special/100938.art

[14] மறைந்த க. இராசாராம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து – 29.2.2008.

பெரியார் ஆவி, மணியம்மை ஆவி, பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்!

மார்ச் 17, 2016

பெரியார் ஆவி, மணியம்மை ஆவி, பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்!

பெரியார் அழைக்கிறார் - மார்ச்.17, 201616-03-2016 அன்று செய்திகளை கவனித்து வாசித்து, பார்த்துக் கொண்டிருக்கு வேளையில் போது சில விசயங்கள் பொருந்தி போகும் போது எனக்கு வியப்பாக இருந்தது. குறிப்பாக “விடுதலை”யில் இருந்தவை மிக்க சிந்திக்க வேண்டிய செய்திகளாக இருந்தன.

 1. ஒவைசி “என் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினாலும்,பாரத் மாதா ஜி ஜே” என்று சொல்லமாட்டேன் என்று கூறியது[1].
 1. ”பாரத் மாதா கி ஜே” என முழக்கமிடுவது எனது உரிமை என காங்., எம்.பி.,யும், பிரபல இந்தி சினிமா பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் ராஜ்யசபாவில் பேசியது[2].
 1. மஹாராஷ்ட்ரா எம்.எல்.ஏ, வரீஸ் பதான் “பாரத் மாதா ஜி ஜே” என்று சொல்லமாட்டேன் என்றதால் சஸ்பென்ட் செய்யப்பட்டது[3].
 1. மணியம்மையின் நினைவு தினம் என்று திகவின் “மாதா கி ஜே” திருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி முதலியவை நடந்துள்ளது.
 1. திகவினரின் சித்தாந்த குக்குரல்கள் / கோஷங்கள்:
  1. தந்தை பெரியார் அழைக்கிறார் வாரீர்!”,
  2. “பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார்”,
  3. பெரியாரோ பிடிக்க வரும் பேயைத் தன் தடியால் துரத்தியே விடுவார்.
  4. பெரியார் மண்ணில் பேயேது பிசாசேது?
  5. அழைத்து மேடை ஏற்றாமலிருந்தால் சரி, போன்ற வாதங்கள்!
 1. பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்; அவர் முதுமை அல்ல; அவருடைய பிணிகள் அல்ல என்று குறிப்பிட்டது.
 2. குருசாமி,
 3. குஞ்சிதம் அம்மையார்,
 4. அண்ணாதுரை,
 5. பொன்னம்பலனார்.
 1. பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு:
 2. அவரின் பெருந்தொண்டு
 3. சிறுநீர் கலம்.

இவையெல்லாம் வெவ்வேறு இடங்களில் நடந்தாலும், செய்திகளாக வெளியிட்டாலும், அவற்றிற்கு சம்பதம், இணைப்பு, சம்பந்தம் முதலிய இருப்பது தெரிகிறது. இனி விசயங்களைப் பார்ப்போம்.

பெரியாரின் மனைவிகள்ஆவி, பேய், பிசாசி, பூதம் முதலியவற்றைப் பற்றி பெரியார்நாத்திகர்களின் நிலை: 16-03-2016 தேதியிட்ட “விடுதலை” நாளிதழில் அத்தகைய செய்திகள் வெளிவந்துள்ளன. பெரியார் முதல் அவரது சீடர்கள் வரை ஆவி, பேய், பிசாசி, பூதம் முதலியவை எல்லாம் இல்லை என்று இன்று வரை பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், “பேய் படங்கள்” ஹிட் ஆவது பற்றி, மு.வி.சோமசுந்தரம் “பெரியார் மண்ணில் பேயாட மேடை போடலாமா?”, என்று கேட்டு “விடுதலை”யில் எழுதியுள்ளார்[4]. அதில், “பேய் பற்றி இங்கர்சால்”, இந்தப் பேய், பிசாசு பற்றி ராபர்ட் கிரீன் இங்கர்சாலின் விளக்கமும் சம்மட்டி அடியும் சிந்திக்கத்தக்கவை, என்று அவரது கருத்துகளைக் கொடுத்துள்ளார்.

 • “அந்தக் காலத்தில் (பூமி தட்டை என்று கூறிவந்த காலத்தில்) அறியாமை அரியாசனத்தில் இருந்தது; அறிவியல் ஒதுக்கப்பட்டது.’’ (In those days Gnorance was a king; and science was an outcast).
 • “பேய், பிசாசு என்ற பெயரில் அவற்றின் ஆணை என்ற பெயரில், மனிதர்கள், தங்களின் சக மனிதர்களை அடிமைப்படுத்தினர்’’ (In the name and by the authority of the ghosts men inslaved their fellowmen);
 • “கற்பனையில் உருவெடுக்கும் அரக்கர்களையும், ஆவி உருவங்களையும் நான் தாக்குகிறேன். காரணம், அவை உலகை ஆள்கின்றன. பேய், பிசாசுகள் தொலையட்டும், நாம் இனிமேல் அவற்றைத் துதிக்க மாட்டோம். அவை தங்களின் சதை இல்லாத கைகளால், கண் இல்லாத குழியை மூடிக் கொண்டு, மனிதர்களின் கற்பனையிலிருந்து நிலையாக மறைந்து போகட்டும் (I attack the monsters, the phantorms of imagination that have ruled the world. Let the Ghosts go We will worship them no more let them cover their less pockets with their fleshless hands and faste forever from the imagination of men).

 மு.வி.சோமசுந்தரம் தொடர்கிறார். ஆனால், இடைக்கால ஐரோப்பிய நிலை, இடைக்கால இந்தியாவோடு ஒப்பிடமுடியாது.

பெரியார் ஆவி கோவிலைக் கண்டு பயப்படுகிறதா 17-03-2016பெரியாரைப் பார்த்து பேய்கள் ஓடுமா, ஓடாதா?: “ஆத்திகர் -நாத்திகர் என சகலரும் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கிறார்களே, என்பதற்கு, “இந்த உளவியலை புரிந்து கொள்வது கடினம்” என்று, நாத்திகர், கடவுள் தத்துவத்தையே ஏற்காதவர்கள். பேய் பிசாசுகளையா ஏற்றுக் கொள்வார்கள்? திரைப்படங்களுக்குச் செல்வது பொழுது போக்குவ தற்காக. நாத்திகர்கள் அங்கு செல்கிறார்கள் என்றால், ஆய்வுக் கண்ணோடு பார்க்கச் செல்கிறார்கள் என்பது தான் சரியானது….. பெரியாரோ பிடிக்க வரும் பேயைத் தன் தடியால் துரத்தியே விடுவார். பெரியார் மண்ணில் பேயேது பிசாசேது? அழைத்து மேடை ஏற்றாமலிருந்தால் சரி. என்று மு.வி.சோமசுந்தரம் முடிக்கிறார்[5]. ஆனால், அதன் கீழேயே, தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்திலே கோவிலா? என்று திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வள்ளியூர் தந்தை பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக ஒரு கோவிலின் புகைப்படத்தைப் போட்டு, அது அகற்றப்படுமா, என்று கேட்டிருக்கிறது வியப்பாக இருக்கிறது[6]. மேலும், “குறிப்பு: பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்தவித வழிபாட்டு நிலையங்களுக்கும் இடம் இல்லை என்பது அரசாணை அதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டுதான் ஒவ்வொருவரும் அங்குக் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது”, என்று கூறுகிறது!. பெரியாரைக் கண்டதும், இந்த சாமிகள், சிலைகள், கற்கள் ஏல்லாம் ஓடிப்போக வேண்டாமா, ஏன் போகவில்லை. மேலும், அந்த கற்களைக் கட்டு பயப்படுவானேன்? பெரியாரோ பிடிக்க வரும் பேயைத் தன் தடியால் துரத்தியே விடுவார். பெரியார் மண்ணில் பேயேது பிசாசேது? அழைத்து மேடை ஏற்றாமலிருந்தால் சரி. என்றவர்கள், இதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? ஆத்திகர் –நாத்திகர் ஆவி, பேய், பிசாசி, பூதம் முதலியவற்றை நம்புகிறார்களா இல்லையா என்பது தான் பிரச்சினை.

பெரியாரும், ஆவியும், ஆத்மாவும்ஆத்மா பற்றி பெரியாரின் கருத்து[7]: ஆத்மா பற்றி பெரியார் சொன்னதாக உள்ளது, “ஆத்மா என்னும் விஷயத்தில் சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால், அது ஒருவித உணர்ச்சியே ஒழிய ஒரு தனிப்பட்ட வஸ்துவல்ல. அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும் என்பதேயாகும். இதைப்பற்றி இரண்டு விசயங்கள் குடிஅரசுவில் முன்னாலேயே எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது விஷயமும் சமீபத்தில் வரும் ஆத்மா என்பதைப் பற்றிய பேச்சே பேசாமலிருந்தால் நல்லதென்றும், இதனால் பல ஜனங்களுடைய அதிருப்தி ஏற்பட்டு, நமக்கு வெளி உதவிகள் குறைந்து போகுமெனவும் சிலர் கூறுகின்றார்கள். அதை ஒத்துக் கொள்ள என்னால் முடியவில்லை.” ஆத்மா உணர்ச்சி, அது அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும், என்றால், ஆத்மா-சரீரம் தொடர்பு தெரிந்துள்ளது. உடல் இருக்கும் வரை ஆத்மா இருக்கும் என்பதும் தெரிந்துள்ளது. பிறகு, ஆத்மா இல்லை என்றெல்லாம் பேசுவது, விதண்டாவாதம் என்று நன்றாகவே விளங்குகிறது.

பெரியாரின் மனைவி.1பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார்[8]: தந்தை பெரியார் அழைக்கிறார் வாரீர்!” – என்று தலைப்பிட்டு, இன்னொரு கட்டுரை[9]. பெரியார் தான் இறந்து விட்டாரே, அவர் எப்படி கூப்பிடுவார் என்று பகுத்தறிவும் யோசிக்கவில்லை போலும். ஏசு இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற பாணியில் அழைக்கும் போக்கு ஏன் பகுத்தறிவுகளுக்கு வர வேண்டும்? பகுத்தறிவி பேசி முதலியார், பிள்ளை, கவுண்டர், நாடார், வாண்டையார், மூப்பனார், என்று ஜாதிகளை வளர்த்ததே திராவிடக் கூட்டதினர் தானே? பிறகு எப்படி பெரியார் பிறந்த மண், ஜாதி ஒழிப்பு மண் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்கிறது. “சமூகநீதி” என்று பேசி மக்களை புதுவகையில் திசைத் திருப்ப முடியுமா? “பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார்” என்று சொல்லிக் கொள்வதில் வேடிக்கையாக இல்லையா என்று யோசிக்க வேண்டும். தத்துவ ரீதியில், கொள்கை ரீதியில், சித்தாந்த ரீதியில் பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார் என்று வாதிக்கலாம். ஆனால், பெரியாருக்கு என்ன இருந்தது, அவரிடத்திலிருந்து இவர்களுக்கு என்ன வந்தது என்பதையும் சொல்லியாக வேண்டுமே? அதுவும் உணர்ச்சியா, உடல் இருக்கும் வரை உணர்ச்சியா அல்லது உடல் இல்லாவிட்டாலும் தொடரும் உணர்ச்சியா என்று விளக்க வேண்டும். உடல் இல்லாவிட்டாலும் தொடரும் உணர்ச்சி என்றால், அவர்களது வாதம் அடிபட்டு போகிறாது. அதனால், பெரியார் ஆவியைக் கண்டு பயப்படத் தேவையில்லை!!

© வேதபிரகாஷ்

17-03-2016

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1478578

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1479789&Print=1

[3] http://www.dailythanthi.com/News/Districts/Mumbai/2016/03/17023007/Maharashtra-AssemblyMajlis-MLA-Pathan-varis-suspensionBharat.vpf

[4] http://viduthalai.in/page2/118626.html

[5] மு.வி.சோமசுந்தரம் “பெரியார் மண்ணில் பேயாட மேடை போடலாமா?”, 12-03-2016 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2.

[6] http://viduthalai.in/page2/118627.html

[7] http://viduthalai.periyar.org.in/20101023/snews04.html; http://naathigam.blogspot.in/2010/10/blog-post_1684.html

[8] http://viduthalai.in/page1/118898.html

[9] விடுதலை, முதல் பக்கம்; http://viduthalai.in/page1/118898.html