Posts Tagged ‘ஈவேரா’

பெரியாரும், இஸ்லாமும் – கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (2)

ஒக்ரோபர் 27, 2021

பெரியாரும், இஸ்லாமும்கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (2)

ஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929)[1]. ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை[2]. ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[3].

பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் முதலியன[4]: ஆனைமுத்து, விடுதலை ராஜேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, முதலியோர்களின் தொகுப்புகள் மற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தின் வெளியீடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு[5], தமக்கு வேண்டியவற்றைத் தொகுத்து, பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் என்றெல்லாம் எழுதுகிறார்கள், ஆனால், அவற்றை சரிபார்த்து, உண்மையறிந்து, மெய்யாகவே மறுபக்கம் அலசி, ஆராய்ந்து அவர்கள் எழுதுவது இல்லை[6]. அரசியல், பரிந்துரை, ஆதாயம், அதிகாரம் என்றெல்லாம் உள்ளதால், பரஸ்பர ரீதியில் அத்தகைய வெளியீடுகள், ஆதரவாளர்களிடம் பிரபலமாகி சுற்றில் இருக்கின்றன. ஆனால், 1940-80களில் திராவிடத் தலைவர்களின் பேச்சுகளை நேரில் கேட்டவர்களுக்கு, அவர்கள் பேசியதற்கும், இப்பொழுது தொகுப்பு புத்தகங்களில் இருப்பவற்றிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகளை காணலாம். எந்த அளவுக்கு ஒட்ட்யும், வெட்டியும், மாற்றியமைத்து, அவை வெளியிடப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இங்கும்-அங்கும் உள்ளவற்றை எடுத்தாண்டு, தொகுத்து எழுதியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து ஆராய்ச்சிக்கு வர வேண்டும்.

பிரச்சாரம் கட்டுக்கதைகள் ஆராய்ச்சி ஆகாது: இவ்வாறு, துலுக்கர் அடிக்கடி, புதிய கதைகளை உருவாக்கி, பிரபலமடையச் செய்து, பரப்பி வருவதில், பெரிய விற்பன்னர்கள் எனலாம். இப்பொழுது, இன்னொரு கதையைக் கிளப்பி விடுகிறார்கள் போலும். இந்துத்டுவ வாதிகள், முக்கியமாக, ஆவணங்களை சரிபார்த்து ஆராய்ச்சி செய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஏதோ, ஒருபக்கமாக ஒரு சாரார் பேசியதாக அச்சில் வந்துள்ளவை என்றெல்லாம் வைத்து, முடிவுக்கு வருவது, தொடரும் போக்கு தெரிகிறது. “தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,” என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று இப்பொழுது, இத்தகைய விசயங்கள் வெளிவருவது விசித்திரமாக இருக்கிறது..“முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று / போன்று பிதற்றினாரா?,” என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆன்மா இல்லை, ஆவி இல்லை …..என்றெல்லாம் பேசி, கிண்டலடித்து வந்த பெரியார், பெரிய சித்தர் என்றெல்லாம் சிலர் போற்றி வந்த நிலையில், அவர் அழுதார், அரற்றினார், உடன் இறக்க முயன்றார்… என்று செய்தி உருவானது திகைப்பாக இருக்கிறது. மூலம் / உண்மை ஒன்று என்றால், சமீபத்தை நிகழ்வுகள் பற்றி ஒன்றிற்கு மேலான விவரங்கள் வருவது சிந்திக்க வேண்டிய பொருளாக மாறுகிறது.

ஜின்னாபெரியார்அம்பேத்கர் சந்திப்புகள், கடிதங்கள் இந்த கட்டுக் கதைகளை கிழிக்கின்றன: இவர்கள் எல்லாம் ஒன்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இறக்கவில்லை. 70-80 ஆண்டுகள் முன்னர் இருந்தவர்கள், சென்னைக்கு வந்துள்ளனர். பலர் பார்த்திருக்கின்றனர், அவர்கள் பேசியதைக் கேட்டிருக்கின்றனர். இன்றைய 60-70-80 வயதானவர்களுக்கு விசயங்கள் தெரியும். முன்பு “தி மெயில்,” “சென்டினல்” போன்ற நாளிதழ்களில் வந்துள்ளன. இப்பொழுது, திராவிடத்துவவாதிகள், முஸ்லிம்கள், பெரியாரிஸ்டுகள் மறைத்தாலும், ஜின்னா கடிதங்கள் ஈவேராவைத் தோலுருத்திக் காட்டுகிறது. அம்பேத்கர் எப்படி ஈவேராவை பௌத்தம்மாறுவதற்கு எதிர்த்தாரோ, அதேபோல ஜின்னா இவரை பொருட்படுத்தியதே இல்லை. 1948ற்குப் பின்னர், இவர் பல தமாஷாக்களை (பிள்ளையார் சிலைகள் உடைத்தது. ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டது, இந்து விரோதம் செய்தது) செய்திருக்கிறார். இதனை, திமுக ஊக்குவித்து வந்தது. அம்பேத்கரை 1970கள் வரை தமிழகத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. பிறகு தான் அம்பேத்கர் சிலைகள் தோன்ற ஆரம்பித்தன. அதே போல, பெரியார் இறந்த பிறகு, 1970களில் ஊதி பெரிதாக்கப் பட்டார்.  ஆனால், முத்துராமலிங்க தேவர், மபொசி, கண்ணதாசன் முதலியோர் பேசியது, எழுதியது மறைக்கப் படுகின்றன.

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் இத்தகைய கட்டுக் கதைகளைப் பரப்புவது ஆபத்தானது: பச்சையப்பன் கல்லூரியில் திராவிட இயக்கத்தைப் பற்றி பலர் அரைத்த மாவையே அரைத்து பேசினர். அத்தொடர் சொற்பொழிவுகளக் கூர்ந்து கேட்கும் போது, அரசியல் செய்ததைத் தவிர வேறொதுவும் தெரியவில்லை. திராவிடத்துவத்தில் ஊறிய-நாறிய அவர்களால் வேறெதையும் பேச முடியவில்லை. ஏ.ஆர். வெங்கடசாலபதி போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை வைத்துக் கூட விவரிக்க முடியாது. ஆகவே, ஏதோ நடத்த வேண்டுமே என்ற போக்கில் நடத்துவது, ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது, முகஸ்துதி செய்தது, கேள்விகள் கேட்கக் கூடாது, விவாதிக்கக் கூடாது என்று இவ்வாறு கூட்டங்கள் நடத்துவது பிரயோஜனம் அல்லாதது மற்றும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றின் தரத்தையே கேலிக் கூத்தாக்கி விடும்.  இதனால் தான், மற்றவர்கள் திராவிடர்கள், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு அரசியல் செய்து கொண்டுவருபவர்களை மற்றவர்கள் கண்டு கொள்வதில்லை.

© வேதபிரகாஷ்

27-10-2021


[1]  வேதபிரகாஷ், 19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாராபெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!, 02-04-2016.

[2]https://dravidianatheism.wordpress.com/2016/04/02/islamization-of-dravidian-movement-by-making-periyar-a-mohammedan/

[3] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013, http://bushracare.blogspot.in/2013/09/5.html

[4] வேதபிரகாஷ், முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1], 07-02-2021.

[5] பெரும்பாலும், இத்துகுப்புகள்,  இப்பொழுது, இவை இணைதளங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவையெல்லாம், “கிரிடிகல் எடிஷன் பதிப்பு” போன்றவை இல்லை.

[6] ம.வெங்கடேசன், க. சுப்பு போன்ற வலதுசாரி, இந்துத்துவ எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகங்கள். இப்பொழுது இந்துத்துவவாதிகள் பெரியாரிஸத்தை ஆதரிப்பதால், இதைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.

ஶ்ரீராமநவமி அன்று ராமரை தூஷித்து, தப்லிக் ஜமாத் மர்கஸ் கோஷ்டியை ஆதரிக்கிறது! திராவிட நாத்திகம் துலுக்கரை ஆதரிக்கிறது, இந்துக்களை வெறுக்கிறது!

ஏப்ரல் 2, 2020

ஶ்ரீராமநவமி அன்று ராமரை தூஷித்து, தப்லிக் ஜமாத் மர்கஸ் கோஷ்டியை ஆதரிக்கிறது! திராவிட நாத்திகம் துலுக்கரை ஆதரிக்கிறது, இந்துக்களை வெறுக்கிறது!

Veeramani supporting Tabliq, Viduthalai, 02-04-2020

விடுதலைமூலம், இந்துவிரோதிவீரமணி கக்கும் துவேசம்: டில்லியில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கணிசமான எண்ணிக்கையில் ‘கரோனா’ தொற்று ஏற்பட்டதை மய்யப்படுத்தி, அந்த மதத்தின்மீது வெறுப்பை, காழ்ப்பைத் தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்றும்[1], அப்படி நடந்துகொள்வோரின் நடவடிக்கையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளதாக “விடுதலையில்,” முதல் பக்க செய்தி[2].  பிறகு, இரண்ட்சாம் பக்கத்தில், “ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  ” என்ற தோரணையில் விளித்து, கீழ்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது:

EVR asked idiotic questions, Viduthalai, 02-04-2020

பல லட்சங்களுக்கு முன்னர் இருந்தவைக்கு இப்பொழுது அத்தாட்சிகள் இருக்குமா?[3]: இருபது லட்ச வருடங்களுக்கு முன் இராமன், அயோத்தி இருந்தனவா? இந்த நாள் – கோள் இருந்தனவா? இராவணன் இருந்தானா? பார்ப்பனர்கள் ராமநவமி என்று சொல்லிக் கொண்டு வருடத்திற்கு ஒருநாள், போலி நாளை மக்களிடம் விளம்பரப் படுத்திக் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாட்டம் நடத்துகின்றார்கள். இதை அரசாங்கம் அனுமதிப்பதுடன் அதற்காகச் சில இடங்களில் ஒருநாள் லீவும் கொடுக்கிறார்கள். இராமன் பிறந்தநாள் என்று சொல்லப் படுவது இன்றைக்கு 20 லட்சம் (20,00,000) ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 20 லட்ச வருடத்தில் உலகத்தில் உள்ளது எல்லாம் நாசமடைவதும் – உலகமே மாற்றமடைவதும் போன்ற காரியங்கள் நடந்து இருக்க வேண்டும். அப்போது மனித சமுதாயம் – மனிதன் – காடு மேடு – உலக பூகோளம் – மலை – சமுத்திரம் போன்ற யாவும் அழிவும் – மாற்றமும் அடைந்துவிடும். இது யாவரும் அறிந்ததும் – புராணக் கூற்றும் – சரித்திர உண்மையும் ஆகும். இப்படிப்பட்ட நிலையில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தி என்ற ஒரு ஊரும், தசரதன் என்ற ஒரு அரசனும், அவனுக்கு அநேக பெண்டாட்டிகளும் இருந்தனர்; அவனுக்கு இராமன் என்று ஒரு பிள்ளை பிறந்தான். அதற்கு வருடம் – மாதம் – தேதி – கிழமை – நாள் – கோள் – இன்ன இன்னது என்பதும், அவை மாத்திரம் அல்லாமல் அந்த 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிட நாடு – பாண்டிய நாடு – இலங்கை நாடு என்பவை இருந்தன என்பதும் எப்படி உண்மையாக இருக்க முடியும்? 20 லட்சம் வருடங்களாகக் கோள்கள் மாறாமல் மறையாமல் இருக்க முடியுமா?

The hand bill that was seized -Salem

ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும்[4]: பார்ப்பனர்கள் தங்கள் சுக வாழ்வுக்காக எதையும் சொல்லுவார்கள் – செய்வார்கள் என்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் – விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? என்பதும் நமக்குப் புரியவில்லை. இந்தக் கற்பனைப் புளுகை நமது மாணவர்கள் எப்படி நம்புகிறார்கள்? என்பதும் அதிசயமாக உள்ளது. வடநாட்டில் இராவணனைக் கொளுத்தினார்கள் என்றால், தென்னாட்டில் ஏன் இராமனைக் கொளுத்தக் கூடாது? ஒரு பொய்யான கற்பனைக் கதையில் இருந்து தென்னாட்டு மக்களை அவமானமும், இழிவுபடுத்தலுமான காரியத்தைப் பார்ப்பனரும், வடநாட்டாரும் செய்தால் – அதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புத்தி வரும்படியான காரியத்தை நாம் ஏன் செய்யக் கூடாது? ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், கட்டாயமாகச் சிந்தித்து, நல்ல படி யோசித்து, எனக்காக என்றே அல்லாமல், தங்களுக்குச் சரி என்றும், அவசியம் என்றும் தோன்றினால், இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். நமது (பார்ப்பனரல்லாத) மக்கள் ஆதரவு, பார்ப்பனர்களுக்கு இந்தப்படி யான பித்தலாட்டங்களில் ஏமாறாமலும், நம்மை இழிவுபடுத்தும் இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும்தான் நாம் இராமன் படத்தைக் கொளுத்துவது போன்ற செயல்களில் இறங்க வேண்டும்.

1971 DK procession denigrating Rama.news cutting

ஈவேராவுக்கு அந்த அளவுக்கூத் தான் அறிவு இருந்தது என்று தெரிகிறது: இந்த மாதிரி ஆட்களை பேச விட்டால் தான், அது போன்ற ஆட்களுக்கு, எந்த அளவுக்கு வாதம் புரிய காரணம், தர்க்கத் தன்மை, வாதத் திறமை முதலிய உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கீழ்கண்ட கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

 1. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிடநாடு – பாண்டியநாடு – இலங்கை நாடு இருந்தன என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? கேட்பது ஈவேரா!
 2. இராவணன் இருந்தானா? என்று கேட்ட பிறகு, “இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்,” என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது.
 3. ராமாயணம் கட்டுக்கதை என்றால், அதைப் பற்றி நாத்திகள் கவலைப் படவேண்டும் என்ற அவசியம் இல்லை.
 4. இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் – விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? கேட்பது ஈவேரா!
 5. குமரிக் கண்டம் என்று ஊளையிடும் தமிழர்கள் ஈவேராவை எதிர்ப்பார்களா? கீழடி பற்றி என்ன சொல்வாரோ?
 6. ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும், என்று விடுதலையில் ஈவேரா சொன்னதாக செய்தியைப் போட்டுள்ள வீரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
 7. இந்த அளவுக்கு ஶ்ரீராம நவமி அன்று துவேசத்தை கக்கும் கயவர்கள் ! ராமனைக் கும்பிடும் இந்துத்துவ வாதிகளுக்கு சூடு-சொரணை இல்லையா?
 8. ரஜினி மீது திகவினர் வழக்குப் போட்டார்களே, இப்பொழுது இந்த இந்துவிரோதியின் மீது ரஜினி-ரசிகர்களே போடலாமே?!
 9. கடவுள் நம்பிக்கை இல்லாதவன், கடவுள்-நம்பிக்கைக் கொண்டவர்களை, எப்படி கேள்வி கேட்க முடியும்?இவை இரண்டும் நம்பிக்கை தானே?

o apology Rajini IE

செக்யூலரிஸ நாத்தில், வாதத்தில் செக்யூலரிஸத்திற்கு பதிலாக, இந்துவிரோதம் தான் இருக்கிறது: இப்பொழுது, இந்திய ஊடகங்கள் முழுவதிலும், நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் மாநாடு பற்றிய விவகாரங்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. ‘கரோனா’வில் மதச் சாயத்தை பூசவேண்டாம்! மாச்சரியங்களை மறந்து ஒன்று படவேண்டிய சமயம் இது என்று முதல் பக்கத்தில் வக்காலத்து வாங்கி, அடுத்த பக்கத்தில், இத்தகைய செய்தி ஏன் போட வேண்டும்? பெரியார் மண்ணில் இவ்வளவு நடந்து விட்டதே, அப்பொழுது ஏன் ஒன்றையும் கேட்கவில்லை. இப்பொழுது வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு பக்கத்தில் துலுக்கனுக்கு ஆதரவு, அடுத்த பக்கத்தில் இந்து துவேசம், இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா? இன்னும் மக்கள் முட்டாள்களாகவே இருப்பார்களா? மேலும்-மேலும் ஈவேரா உளறல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால், இனி இருக்கின்ற மரியாதையும் போய் விடும். ஏற்கெனவே, சில பெண்கள் வியாக்கியானம் கொடுத்து, அசிங்கப் பட்டு விட்டனர். ஆகவே, இனி மக்களை ஏமாற்ற முடியாது. இளைஞர்கள் முழித்துக் கொண்டு விட்டார்கள்!

EVR photos of naked Hindy gods 1971 paaraded

நாத்திகமும், கடவுள் நம்பிக்கையும், செக்யூலரிஸமும், ஆன்மீகமும்: உண்மையாக நாத்திகன் “கடவுள் இல்லை” என்றால், எந்த கடவுளும் இல்லை என்று தான் சொல்வான். இந்தியாவில், தமிழகத்தில், “கடவுள் இல்லை” என்றால், ஏதோ இந்துமத கடவுள் மட்டும் தான் இல்லை என்ற நிலையில், நாத்திகம்-கிருத்துவம்-இஸ்லாம்-கம்யூனிஸம் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, இந்துமதத்தை எதிர்த்து, இந்துதுரோகிகளாகிறனர். செக்யூலரிஸம் என்றால், எல்லாமதங்களையும் சரிசாமாக பாவிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில், அதையும் பின்பறுவதில்லை. உண்மையான நாத்திகம் எல்லா மதங்களையும் எதிர்க்க வேண்டும். திராவிட நாத்திகம், இந்துதுவேச நாத்திகத்தில் முடிகிறது. கருத்துருவாக்கம், எண்ணங்கள், அவற்றில் தோன்றி பேச்சுகள்-எழுத்துகள் என்றாக வெளிப்படும் போது, அவை, இந்து விரோதமாகவே இருக்கிறன. தெரிந்தும், தொடர்ந்து நடக்கும் போது, அது போலித்தனமாக செயல்பட்டு வருவதை அறிய நேர்கிறது.

©  வேதபிரகாஷ்

02-04-2020

15-02-1971 Thuglak issue-reconstructe d

[1] விடுதலை, மாச்சரியங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் இது! ‘கரோனாவில் மதச் சாயத்தை பூசவேண்டாம்!, வியாழன், 02 ஏப்ரல் 2020 13:37

[2] http://www.viduthalai.in/headline/197907-2020-04-02-08-14-36.html.

[3] விடுதலை, ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  வியாழன், 02 ஏப்ரல் 2020 14:510, பக்கம்.2, . http://www.viduthalai.in/e-paper/197917.html

[4] விடுதலை, ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  வியாழன், 02 ஏப்ரல் 2020 14:510 . http://www.viduthalai.in/e-paper/197917.html

காஞ்சிப் பெரியவர் – ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [1]

மார்ச் 18, 2020

காஞ்சிப் பெரியவர் ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [1]

Kanchi Periyavar, Erode EVR

திக-காரர்கள், இந்து-எதிரிகள், காஞ்சிமட-விரோதிகள், மாற்றுமத விசமிகள் என்று பலவகையறாக்கள் கதைகள், கட்டுக் கதைகள் என்று புனைந்து, உலா விட்டு வருகின்றன. அச்சில் இருப்பவற்றை கண்டு கொள்வதில்லை, அதனால், யாரும் கேள்விகள் கேட்கவில்லை. இப்பொழுது, இணைதளங்களில் பரப்புகிறார்கள். ஆகவே, நிச்சயம் கேள்விகள் கேட்டாக வேண்டும். மேலும், இந்துத்துவ வாதிகள், சில பேச்சாளர்களின் ஆட்கள், காசுக்காக ஈ-வேலை செய்யும் கூலிகள் போன்ற வகையறாக்கள், இதில் சேர்ந்து கொண்டுள்ளன.  காஞ்சிப் பெரியவர் [1894-1994] மற்றும்– ஈரோடு பெரியார் [1879-1973] பதினைந்து ஆண்டுகள் வித்தியாசம் கொண்டவர். 1960களில் ஈவேராவுக்கு வயது 81, ஆனால் காஞ்சிப் பெரியவருக்கு 56 தான். பால் பிரென்டன் இவரை 1931ல் வந்து பேட்டி கண்டபோது, இவருக்கு வயது 37 தான், ஈவேராவுக்கு 52. ஈவேரா அந்த அளவுக்கு புகழ் பெற்றிருந்தால், பால் பிரென்டன் ஈரோடுக்குச் சென்று அவரை சந்திருக்க வேண்டும். 1959ல் ஆர்தர் கோயஸ்ட்லர் காஞ்சி பெரியவரை பார்த்த போது, ஆச்சரியமாகத்தான் இருந்தது.  ஏனெனில், கம்யூனிஸ்ட்-நாத்திகன் என்ற நிலையில், பெரியாரைத்தான் பார்த்து பேட்டிக் கண்டிருக்க வேண்டும்……..இப்பொழுது சுகி [சுகி சிவம்] வீடியோ உலா வந்துள்ளதால், இது அவசியமாகிறது.

Suki.Sivam - intriguing - his DK connection

வீடியாவில் சுகி சிவம் சொல்வது (டிசம்பர் 2017): மறுபடியும் ஒரு பழைய வீடியோவை சுற்றில் விட்டு, முட்டாள் இந்துத்துவ வாதிகள் அரைகுறையாக விவாதிக்கிறார்கள். அந்த வீடியோவை பலமுறைகேட்டு, எழுதிவைத்து, சரிபார்த்து, பிறகு, டைப் அடித்தது, “காஞ்சி பெரியவருடைய அருமை தெரிந்த பல பேருக்கு சார்…..ஈரோட்டு பெரியாருடைய அருமை தெரியல்ல………..கொடுமை சார்………………..கொடுமை………….நீங்க சரியான இடத்திலிருந்து பார்த்தால் தான் அவங்க இரண்டு பேரும் ஏன் சமுதாயத்திற்கு தேவையானவங்கன்னு புரிஞ்சிச்சு. உங்களையும் என்னையும் விட கடவுள் அறிவாளி சார். பிரபஞ்சன் நம்பளை விட புத்திசாலி சார். அதாவது நல்ல ஒழுக்கங்களும், தவமும், இந்த உலகில் தோன்றுவதற்கு ஒரு காஞ்சி பெரியார் தேவைபடராறு. அதே காலகட்டத்தில் மதம் என்ற பெயரால் ஜாதி ஆதிக்கம் மேலோங்குவதை தடுப்பதற்கு சமூகநீதியை கேட்டதற்கு ஒரு பெரியார் தேவைப்படுகிறார்…… பெரியாரை மைனஸ் பண்ணி…… பெரியாரை மைனஸ் பண்ணி தமிழ்நாட்டோட வரலாறை பார்க்க முடியாது. பல பேருக்கு அது புரியாது, என் வூட்ல புஸ்தகம் எப்படி வச்சிருக்கேன் தெரியுங்களா? என் லைப்ரரியிலே தெய்வத்தின் குரல், காஞ்சி மஹா பெரியவரின் ஏழு வால்யூம்ஸ் வானதி பதிப்பகம் போட்டது. பாருங்க ஏழு வால்யூம்ஸ். தெய்வத்தின் குரல் அதற்குப் பிறகு 14 வால்யூம்ஸ் ஈவேரா சிந்தனைகள் எல்லாமே ஒரே செல்ஃப் தான். என்னப் பொறுத்த வரையிலும், நான் ஒரு தராசு வைத்திருக்கிறேன். அதில சமமான தட்டில் காஞ்சி பெரியாரும் இருக்கிறார். ஈரோட்டு பெரியாரும் இருக்கிறார். இது புரிந்து கொள்ளாத வரையில் ஞானம் அடைய முடியாது.”

Suki Sivam indulging in spiritual business exploiting Hindu religion

சுகி வீடியோ பேச்சுஇப்பேச்சிலிருந்து தெரிவதாவது: ஆக, கவனமாகக் கேட்டு, குறிப்பு எடுத்து, பிரின்ட் எடுத்து, படித்துப் பார்த்தப் பிறகு, தெரிவதாவது –

 1. இது ஆடியன்ஸை திருப்தி படுத்த, ஜாலியான பேச்சு போன்றது.
 2. காசுக்காக, மேடைக்கு மேடை மாறி, மாற்றிப் பேசுவதால், இந்த ஆளுக்கு, அத்தகைய பேச்சுக்கு, முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
 3. ஆனால், தமிழ்கத்தில் இவ்வாறு பட்டி மன்றம், தமாஷான பேச்சு, பொழுது போக்கு ரீதியில் 40 ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பதால், இப்பொழுதைய செல்போன், யூ-டியூப் போன்ற வசதிகளால், எல்லோரும் பார்க்கிறார்கள். வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களினால் பாவுகிறது.
 4. ஆனால், பெரும்போலோர், இவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, ஏதோ செந்தில்-கவுண்டமணி, விவேக் ஜோக், காமெடி போன்று பார்த்து, ரசித்து, மறந்து விடுகின்றனர் எனலாம்.
 5. இருப்பினும், முக்கியத்துவம் கொடுப்போம் எனும்போதும், அதில் விசயம் இல்லை என்றாகிறது. வீரமணி ஒப்புக்கொள்ள வில்லை. இந்துவிரோத நாத்திகர்களும் கவலைப் படவில்லை. ஆனால், இதனை பெரிதாக்குவது, இந்துத்துவ வாதிகள் தாம்.
 6. சுகி ஒரு முட்டாள் என்றால், இந்த இந்துத்துவ முட்டாள்களும், அந்த முட்டாளுக்கு துணை போய், விளம்பரம் கொடுக்கின்றனர்.

இதே போல, காஞ்சி பெரியவரையும், ஈவேராவையும் இணைத்து சில கதைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கும் நேரிடையான ஆதாரங்கள் இல்லை.

Veeramani refuted Suki comparisan 2018

சுகிசிவத்தின் ஒப்பீட்டை, திகவீரமணி அவ்வொப்பீட்டை ஒப்புக்கொள்ளவில்லை (பிப்ரவரி. 2018): சுகிசிவத்தின் ஒப்பீட்டை, திக- வீரமணி அவ்வொப்பீட்டை ஒப்புக்கொள்ளவில்லை என்பது, விடுதலையில் வெளியான கேள்வி-பதில்[1] பகுதியிலிருந்து தெரிகிறது.

கேள்வி 5: சுகிசிவம் காஞ்சி பெரியவரை, ஈ.வெ.ராவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளாரே?

பதில்: அவர் அப்படி பேசினாரா… என்ன பேசினார் என்று உறுதியாக தெரியாது;  ஒருவேளை பேசியிருந்தால் ‘யானைக்கும் அடி சறுக்கும்‘ என்று  எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

சுகி யானையா அல்லது அந்த அளவிற்கு பெரிய ஆளாக இருந்து, இவ்விசயத்தினால் “அடி சருக்கும்” நிலைக்கு அந்த யானை தள்ளப் பட்டாதா என்று தெரியவில்லை. அதாவது, ஈவேரா, அவரை விட பெரிதாக கருதுவது போலிருக்கிறது[2]. இதிலிருந்து, இவர்களுக்குள், ஏதோ, உரையாடல்கள் நடந்து வருவதை கவனிக்க முடிகிறது. 2016ல் சுகியின் “கருப்புச் சட்டை” வீரமணியால் வெளியிடப் பட்டது. இந்த வீடியோ[3] [ஶ்ரீடிவி] பிப்ரவரி 2018க்கு முன்பாக இருக்க வெண்டும். டிசம்பர் 24 2017 அல்லது அதற்குப் பிறகு அப்-லோட் செய்யப் பட்டிருக்க வேண்டும். பார்வையாளர் எண்ணிக்கை உயரவேண்டும், விளம்பரம் கிடைக்க வேண்டும் என்று அவ்வாறு “சுகி ரசிகன்” வியாபார ரீதியிலும் செய்திருக்கலாம். வீரமணிக்கே பிடிக்கவில்லை எனும் போது, காஞ்சி பெரியவர் பக்தர்கள் எப்படி விரும்புவார்கள். எனவே, இது ஒரு விசமத்தனமான பேச்சு மற்றும் அப்-லோடிங் எனலாம். ஆனால், இந்துத்துவ வாதிகள் வழக்கம் போல தூங்கி விட்டு, இப்பொழுது மார்ச் 2020ல் ஒப்பாரி வைத்துள்ளனர். ஆனால், வழக்கம் போல ஒரு வாரத்தில் அடங்கி விட்டது. வேறு விசயத்திற்கு சென்றுள்ளனர். இனி, “காஞ்சி பெரியவர்-ஈரோடு ஈவேரா பெரியார்” இவர்களை இணைக்கும் கதைகளை பார்ப்போம்.

Picture - manipulated-not original, EVR with Iyer in a Train

என்னுடைய மரியாதையை தயவு செய்து மஹா பெரியவாளுக்கு தெரியப் படுத்துங்கள்,” என்று கூப்பியக் கரங்களுடன் சொன்ன ஒருபிரபலமான நாஸ்திகர்”: ஒரு கதை இவ்வாறு உள்ளது: காஞ்சி பெரியவர் ஒரு முறை ஒரு சாஸ்திரிக்களை ஆந்திராவுக்கு செல்ல சொன்னார்கள். அதன் படி அவர் ரெயிலில் ஏறியதும், எதிர் சீட்டில் ஒரு “பிரபலமான நாஸ்திகர்” உட்கார்ந்து இருப்பதைக் கண்டார். அவர்கள் இரண்டு பேர் தான், அந்த முதல் வகுப்பு பெட்டியில் இருந்தனர். இரவு வந்தது. கோச்-இருக்கையை மாற்றிக் கொள்ள டிடிஆரைக் கேட்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தது, அவரது சங்கடத்தைப் புரிந்து கொண்ட அந்த “பிரபலமான நாஸ்திகர்”, “மிஸ்டர் ஐயர், எதற்காக பயப்படுகிறீர்? நான் ஒன்றும் செய்ய மாட்டேன். இன்னொரு கோச்சிற்கு செல்ல வேண்டாம். ஏனென்றால், நாம் போகும் வழியில், பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நீர் வேறு கோச்சிற்கு சென்றால், அவர்கள் கோச்சில் நுழைந்து உம்மை தாக்கக் கூடும். இந்த கோச்சில் எனக்கு பாதுகாப்பு போடப் பட்டிருக்கிறது. அதனால், பாதுகாப்பாக இருக்கலாம். உமது நன்மைக்காகத்தான் இதனை சொல்கிறேன்,” என்றார்.

EVR listening to Rajaji with due respect and attention

ஐயர் தொடர்ந்து ஈவேராவுடன் பயணித்தது: எப்பொழுதும் பிராமணர்களை எப்பொழுதும் வைது கொண்டிருக்கும் நாஸ்திகராக இவர் என்று சாஸ்திரிகள் நினைத்து ஆச்சரியப்பட்டார். பேசாமல், அதே கோச்சில் இருந்து விட்டார், பிறகு பேசிக் கொண்டிருக்கும் போது, நாஸ்திகர் மஹாபெரியவாளை பாராட்டி பேசினார். அது சாஸ்திருக்குத் திகைப்பாக இருந்தது, பிறகு தூங்கியும் விட்டார். காலை எழுந்ததும், சாஸ்திரியார் இறங்கும் ஸ்டேஷன் வந்தது. அந்த நாஸ்திகர், சாஸ்திரிகளின் லக்கேஜை எடுத்துக் கொள்ளவும் உதவினார். கீழே இறங்கியதும், “என்னுடைய மரியாதையை தயவு செய்து மஹா பெரியவாளுக்கு தெரியப் படுத்துங்கள்,” என்று கூப்பியக் கரங்களுடன் சொன்னார். “நான் அழ ஆரம்பித்து விட்டேன்…….சங்கரா…..,” என்று நெகிழ்ந்தார் சாஸ்திரி. இது வரகூரான் என்பவரது தமிழ் பதிவு, அதனை கணேஷ சர்மா என்பவர் ஆங்கிலத்தில் போட்டிருக்கிறார் என்று இன்னொருவர் – பஞ்சநாதன் சுரேஷ் – என்பவர் போட்டிருக்கிறார். அந்த ஒரு “பிரபலமான நாஸ்திகர்” ஈவேராக இருக்கக் கூடும் என்று பஞ்சநாதன் சுரேஷ் ஊகிக்கிறார்[4].

© வேதபிரகாஷ்

18-03-2020

பெரியார் முஸ்லிம்

[1] விடுதலை, விவாத மேடை, விஜயபாரதத்திற்கு சாட்டையடி, பிப்ரவரி 04, 2018, 13”33. http://www.viduthalai.in/headline/156840-2018-02-04-08-10-35.html

[2] http://www.viduthalai.in/headline/156840-2018-02-04-08-10-35.html

[3] சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியார் நினைவு தினம்…பெரியார் – பெரியவா…இப்படிக்கு சுகிசிவம் ஐயாவின் ரசிகன்….என்றுள்ளது. அப்படியென்றால், டிசம்பர் 24 2017 அல்லது அதற்குப் பிறகு அப்-லோட் செய்யப் பட்டிருக்க வேண்டும் –   https://www.facebook.com/devotee.of.sukisivam/videos/1189021844561700/

[4] பஞ்சநாதன் சுரேஷ், https://vandeguruparamparaam.wordpress.com/2016/09/17/convey-my-respects-to-mahaperiyava-said-a-famous-atheist/

ஈவேராவின் 1931-32 ஐரோப்பிய விஜயம், ரஷ்ய விவரங்கள் அடங்கிய டைரி காணாமல் போனது, மைனர் வாழ்க்கை! [2]

மே 29, 2019

ஈவேராவின் 1931-32 ஐரோப்பிய விஜயம், ரஷ்ய விவரங்கள் அடங்கிய டைரி காணாமல் போனது, மைனர் வாழ்க்கை! [2]

EVR at Nude society - 3

ஈவேராவின் ஐரோப்பியப் பயணம் ஏன் ரகசியமானது?: ஈவேரா ரஷ்யாவிற்குச் சென்றதாக எழுதி வருகின்றனர், ஆனால், அங்கு மூன்று மாதங்கள் இருந்ததற்கான, விவரங்களைப் பற்றிய ஆதாரங்கள் மறைக்கப் படுகின்றன. ஆராய்ச்சியாளர்களும் முரண்பாடான விசயங்களைக் கொடுக்கிறார்கள். எஸ். ராமநாதனை, பிரான்ஸில் “அம்போ” என்று விட்டு வந்தது[1], சித்தாந்தத்திற்காகவா, பாதுகாப்பு காரணங்களுக்காகவா, வேரெதையாவது மறைக்கவா என்றும் புரியவில்லை. இவர்களது ஐரோப்பியப் பயணம் உண்மையானதல்ல [உள்நோக்கம் கொண்டது] அதனால், இதனை, ரகசியமாக வைத்துக் கொள்ள CID ஆணையிடப்பட்டது. அப்படியென்றால், அவர்கள் அங்கு ஏன் செல்லவேண்டும் என்று தெரியவில்லை. பிறகு, நீதிகட்சியில் இவரது பங்கு, ராமநாதன் பிரிந்து காங்கிரஸில் சேர்ந்து மந்திரியானது, ஆனால், இவர் காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டது, முதலியவற்றைக் கவனிக்க வேண்டும்.

  Location of Potsdam and Moscow

ஈவேராவின் டைரி காணாமல் போன மர்மம் என்ன? பிறகு ஆராய்ச்சியாளர்கள் எப்படி ஆராய்ச்சி செய்கிறார்கள், எழுதுகிறார்கள்? : ஈவேரா ஒன்றிற்கும் மேற்பட்ட டைடரிகள் வைத்திருந்தார் என்று தெரிகிறது. ஆனால், குறிப்பாக,  ரஷ்ய குறிப்புகள் அடங்கிய டைரி காணப்படவில்லை என்கின்றனர்.

 1. 18-01-1932 முதல் 02-02-1932 வரை ரஷ்யா ஏன் ஈவேராவிற்கு அனுமதி கொடுக்கவில்லை? ரஷ்யா இவர்களைப் பற்றி விசாரித்த விவரங்கள் என்ன?
 2. 14-02-1932 முதல் 18-04-1932 வரை இவர்கள் மாஸ்கோவில் என்ன செய்து கொண்டிருந்தனர்?அப்படி ஏன் விவரங்களை மறைக்கவேண்டும்?
 3. துரோஸ்த்ஸ்கி கூட்டத்துடன் இவர்களின் தொடர்புகள் என்ன? அப்பரேட்சிக்குகள் அதனால் ஏன் கோபம் கொள்ளவேண்டும்?
 4. ரஷ்ய அரசு இவர்களை “ஆங்கில ஏஜென்டுகள்” என்றும், ஆங்கில அரசு இவர்களை “கம்யூனிஸ ஏஜென்டுகள்” என்றும் ஏன் கருத வேண்டும்? [9]

போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. “எஸ். ராமநாதனுடைய நடவடிக்கைகளில் ஏதோ சந்தேகம் கொண்ட சோவியத் அரசு, 19ம் நாளே இவர்கள் ரஷ்யாவிலிருந்து புறப்பட வேண்டும் என்று தெரிவித்து விட்டது,” என்று கருணானந்தம் குறிப்பிட்டுள்ளார்[2]. நிச்சயமாக, அது அவரது தனிப்பட்ட செயலாகா இருக்க முடியாது. மூவரும் சேர்ந்து சென்ற போது, நட்புடன், ஒரு பிணைப்புடன், ஒத்த எண்ணத்துடன், குறிக்கோளுடன் தான், ஒப்புக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆகவே, ரஷ்யா விசயத்தில், இவர்களுக்குள் வேறுபாடு ஏற்பட்டது என்றால், அதை விளக்க வேண்டும்.   “ராமநாதனுடைய நடவடிக்கைகளில் ஏதோ சந்தேகம்,” என்றால், மற்ற இருவர்களின் நிலை என என்று ஆராய வேண்டும்.

EVR, two wives

மனைவியை வேசி என்று நண்பர்களிடம் சொன்னது: சாமி.சிதம்பரனார் இதைப் பற்றி விவரிக்கிறார்[3], “நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது .வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்றுகொண்டார். நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள்,” என்றார். அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்”.

EVR, with women- not critized

ஈவேரா மனைவியை துன்புருத்தினாரா?: ஈவேரா பெரிய பணக்காரர் ஆதலால், அவரது மனைவியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். திருமணம் படோபடமாக நடந்திருக்கும் போது, நாயக்கரின் மனைவியை தெரியாமல் இருக்க முடியாது. எனவே, நண்பர்கள் அவ்வாறு நாகம்மையை தொந்தரவு செய்தனர் என்பது நம்புகின்றதாக இல்லை. இதை “குறும்பு” என்று எளிதாக, தமாஷாவாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும், ஒரு கணவனே அவ்வாறு செய்தான் என்பது சரியில்லை. அப்படி செய்திருந்தால், அது கணவனின் வக்கிரத்தை, குரூரத்தை வெளிப்படுத்துவாக உள்ளது. பெண்ணின் உரிமைகளையும் மீறியதாக உள்ளது. உண்மையில் அவர் தனது மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார் எனலாம். பிறகு, தாலி கழட்ட வற்புருத்திய நடவடிக்கையும் அதையே காட்டுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி ஆராய வேண்டும். பெண்ணிய ரீதியில் நோக்கும் பொழுது, ஈவேரா தன் மனைவியிடம், குறும்பு அல்லது சோதிக்கும் ரீதி என்றெல்லாம் விளக்கம் கொடுத்தாலும், அவையெல்லாம், கொடுமைப் படுத்தும் ரீதியிலாக உள்ளது.

EVR, father, mother, sister, wife

பவானிஆற்றங்கரையில் விலைமாதருடன் உல்லாசமாக இருந்தது: சாமி.சிதம்பரனார் இதைப் பற்றி விவரிப்பதாவது[4], “இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரியமைனராய்விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்நாளில் .வே.ரா. பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக்கூட்டத்துக்கு .வே.ராவின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டுபோக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. .வே.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவர் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ்வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.  ஈரோடு, சங்ககிரி, திருச்செங்கோடு பகுதிகளில் இருந்த 70-90 வயதிற்கு மேலாக இருந்தவர்கள், இதனை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், திருமா விசயத்தில், ஈ.வே.கி.எஸ். இளங்கோவன், “பெரியார் வாரிசு” விசயத்தில் கிண்டலாக இதைப் பற்றிக் குறிப்பிட்டார்.

Potsdam nude club, bath etc ads

காணாமல் போன மகனை தேடிய தந்தை: சாமி.சிதம்பரனார் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவது[5], “ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். அப்போது அவர் வீட்டைவிட்டு காசிக்குச் சென்றுவிட்டார். அப்போது .வே. ராமசாமி நாயக்கரின் அப்பா வெங்கட்டநாயக்கர் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார். . வே. கிருஷ்ணசாமியும், .வே.ராவின் நண்பரான . வெ. மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினர். தந்திகள் கொடுத்தனர். எதுவும் பலனில்லாது போயிற்று………”.  தகப்பனாருக்கு, தனயனின் பழக்க-வழக்கங்கள் தெரிந்ததால் தான், “டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர்,” எனவே, ஈவேராவுக்கு பெண்கள் மீதான சபலம் தெரிகிறது. ஆகவே, இப்பின்னணியில் தான், அவரது, நிர்வாண கிளப்புகள் விஜயத்தைக் கவனிக்க வேண்டும். மஹாவீரர் போன்று சிறக்க வேண்டியிருந்தால், அன்றே “திகம்பரர்” ஆகியிருக்கலாம். உண்மையில் உடலிச்சை வெல்ல ஆசைப்பட்டால், இதெல்லாம் தேவையில்லையே? சில ஆண்டுகளுக்கு முன்னர் திகம்பரர்கள் தமிழகத்தில் நடந்து சென்ற போது, திராவிட கழகத்தவர் தாக்கியுள்ளனர். இதுவே முரண்பாடாகும். பெரியாரின் நிர்வாண கொள்கையினை அவர்கள் மதிப்பவர்களானால், அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

27-05-2019

EVR acting as an atheist prohit for marriage

[1] http://www.periyarwritings.org/index.php/about-us/2-uncategorised/30418-2015-10-08-13-10-00

[2] எஸ். கருணானந்தம், தந்தை பெரியார் முழு முதல் வாழ்க்கை வரலாறு, மூவேந்தர் அச்சகம், சென்னை, 1979, ப.88.

[3] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார  நிறுவன வெளியீடு, சென்னை, 1938/1997, பக்கங்கள். 41-42.

[4] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார  நிறுவன வெளியீடு, சென்னை, 1938/1997, பக்கங்கள்- 38, 43-44,

[5] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார  நிறுவன வெளியீடு, சென்னை, 1938/1997, பக்கம்.53.

விநாயக சதுர்த்தியை கலவரமாக்கிய பெரியார் குஞ்சும், பிள்ளையார் பிறந்தநாளை அரசியலாக்கிய கருணாநிதி பிள்ளைகளும் – நஷ்டமடையப் போவது திமுக-தமிழக பிஜெபி தான் [2]

செப்ரெம்பர் 17, 2018

விநாயக சதுர்த்தியை கலவரமாக்கிய பெரியார் குஞ்சும், பிள்ளையார் பிறந்தநாளை அரசியலாக்கிய கருணாநிதி பிள்ளைகளும்நஷ்டமடையப் போவது திமுக-தமிழக பிஜெபி தான் [2]

பெரியார் ஜி டி நாயுடுக்கு வாழ்த்து கடவுளின் பெயரால் 1932. with English

பணசக்தியின் மகிமை, கலவரம் உண்டாக்கும்: வீரமணி தொடரும் கதை, வீரமணி தொடரும் கதை, “இப்போது செய்யப்படுவது தன்னிச்சையான பக்தியின் எழுச்சியால் அல்ல; பண சக்தியின் மகிமையே! அதுவும்கூட நாளுக்கு நாள் மங்கி குறைந்துதான் வரு கிறது! அறிவுபூர்வ பிரச்சாரத்திற்குப் பதில் இதை ஊடகங்கள் ஊதுவதால் அதற்குத் தனி மகிமைபோல சித்தரிக்கப்படுகிறது!

மூட நம்பிக்கையாளர்கள்அழுக்குருண்டைகணபதியை கம்ப்யூட்டர்மூலம் புகுத்தி, அறிவியலை மூடத்தனத்துக்கு முட்டுக்கொடுக்க வைப்பது அறியாமையின்அபத்தத்தின் வெளிப்பாடு! கோவில் திருவிழாக்களில்தானே பெரும் கலவரங்கள் வெடிக்கின்றன! தடையால் கோவில் கதவுகளுக்குப் பூட்டும் போடப்படுகிறதேபக்தியோ, மதமோ மக்களைப் பிளவுபடுத்துகிறதே தவிர, ஒன்றுபடுத்தப் பயன்படவில்லை என்பது உண்மை! இவைதான் இன்றைய பிள்ளையார்? என்பதைப் புரிந்துகொண்டு, மதவெறியை விரட்டி, மனிதநேயம் காக்க அணிவகுப்பீர் திராவிடர்களே!” தலைவர், திராவிடர் கழகம், சென்னை 13.9.2018”.

இப்படி அளந்து விட்ட உடனே, செங்கோட்டையில் துலுக்கர், விநாயக சிலையை உடைத்து, மாரியம்மன் கோவிலை சேதப் படுத்தி, கலவரத்தை உண்டாக்கியுள்ளனர்[1]. அப்படியென்றால், திக, வீரமணி முதலியோர் தான், துலுக்கரைத் தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றாகிறது. அதாவது 2018ல், தற்பொழுதைய நிலையில் கலவரங்கள் உண்டாகும் என்பது முன்னமே தெரிந்து, எழுத்துப் பூர்வமாக அறிக்கை விட்டுள்ளதிலிருந்து தெரிகிறது. மேலும், அதிலும் அந்த “அழுக்குருண்டைகணபதி” என்று தூஷித்திருப்பதை கவனிக்கலாம். அதாவது, இந்துவிரோதத் தனத்தை வெளிப்படுத்தும் போக்கு!

திக-திமுகவின் பிரச்சாரமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது[2]. தென் மாவட்டங்களில் – இப்பகுதிகளில் விநாயகர் கோவில் அவமதிப்பு, சிலைகளை உடைப்பது போன்றவை கடந்த ஆண்டுகளில் துலுக்க செய்து வந்துள்ளனர். 2009ல் நான்கு துலுக்கர் கைது செய்யப் பட்டனர்[3]. இந்தியாவில் துலுக்கர் என்றால், இலங்கையில் பௌத்தர்களே அந்த வேலையை செய்து வருகிறார்கள்.

Mohammedans, Buddhists attack Hindu temples-2018

விநாக சதுர்த்தியும், ஸ்டாலினும், தமிழிசையும்: நேற்று  [13-09-2018] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து தொலைக்காட்சிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் அதுகுறித்து ஒரு ட்வீட்டை பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  பதிவிட்டுள்ளார்[4]. அவர் அதில் சன் தொலைக்காட்சியையும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும் குறிப்பிட்டுள்ளார். அதில், “திமுகவின் TV விடுமுறை தின நிகழ்ச்சி என விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். விநாயகர்தின வாழ்த்து சொல்ல மனமில்லாதவர்கள் வியாபாரத்திற்காக விநாயகரை விடுமுறைக்குள் அடைக்கிறார்கள்.விநாயகர் விடுமுறை எடுத்தால் ஸ்டாலின் உட்பட யாரும் இயங்கமுடியாது என்பதே உண்மை[5]. அதாவது, ஸ்டாலினின் இந்துவிரோதமும், வெளிப்படையாகி விட்டதால், மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

Vinayaka caturti politics-2018 - Tamilisai-Stalin

2014- ஸ்டாலின் விநாயக சதுர்த்தி வாழ்த்தும், மறுப்பும்[6]: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டது. “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்…” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட விநாயகர் ஓவியத்துக்கு சுமார் 3,000 லைக்குகளும், 250-க்கும் மேற்பட்ட ஷேர்களும் கிடைத்தன. இந்த நிலையில், திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிரத்யேக இணையதளத்தில், அவர் விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்ததாக வந்துள்ளது.

Stalin, Karunanidhi Caturthi politics 2014-18

மு.க.ஸ்டாலினின் இணையதளத்தை பராமரிக்கின்றவர்களில் சிலர் ஆர்வமிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவித்திருப்பதைப் போல மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[7]. இந்த பதிவு அப்போது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கருணாநிதி கடும் அதிருப்தி வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக, ஸ்டாலின் மீதும், திமுக தலைமை மீதும் இந்துக்களில் சிலருக்கு அப்போது அதிருப்தி ஏற்பட்டிருந்தது[8]. சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை அவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு விநாயகர் சதுர்த்தி உட்பட இந்துக்கள் பண்டிகைகளுக்கு எப்போதும்போலவே, திமுகவோ, ஸ்டாலினோ வாழ்த்து கூறுவதை தவிர்த்து வருகிறார்கள்[9]. கருணாநிதியைப் பொறுத்த வரையில், இறக்கும் வரை இரட்டை வேடம் போட்டு, அனைவரும் ஏமாற்றியுள்ளார். அதற்கு கனிமொழி வக்காலத்து வாங்கிய முறைலேயே தெரிந்து விட்டது. இனி, தேர்தல் நேரத்தில் ஸ்டாலின், இத்தகைய இந்துவிரோத போக்கைக் காட்டினால், பிஜேபி கூட்டு வரும் போது, மறுபடியும் பிஜேபி ஓட்டுகள் சிதறும். பிஜேபி வேட்பாளர்கள் தமிழகத்தில் தோற்பர். அதனால், திராவிட அரசியல் வலுபெறும். இதனை தமிழ பிஜேபி புரிந்து கொள்ளாமல் இருக்கிறது.

Stalin greeted Vinayaka Caturthi and withdrawn in 2014

2018 – கருணாநிதிகளின் பிள்ளைகள் சண்டை: இந்த நிலையில்தான், மு.க.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் “விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு பூச்செண்டு எமோஜி போட்டுள்ளார். இதேபோல தயா அழகிரி நேற்று வெளியிட்ட விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியை அழகிரி ரீட்வீட் செய்துள்ளார். இந்துக்களை கவரும் நோக்கத்தில் அழகிரி இப்படி செய்து ஸ்டாலின் வாபஸ் பெற்ற அந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை நினைவுபடுத்தியுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அரசியல்வாதிகளை யாரும் நம்பப் போவதில்லை. இருப்பினும், “முஸ்லிம் ஓட்டு வங்கி” ரீதியில், ஜாதிகள் ஓட்டுக்களைப் பெற்றுவரும் நிலையில், இந்துக்களும் பல கட்சிகள், பேனர்களின் கீழ் பிரிந்துள்ள நிலையில், குறிப்பிட்ட ஓட்டுகளை பெற அரசியல்வாதிகள், கூட்டு பேரத்தில் சரிகட்டலாம். இருப்பினும், நாத்திகர் / திராவிட கட்சியினரும் இந்துக்களை ஏமாற்றப் போகின்றனர்.

© வேதபிரகாஷ்

16-09-2018

Paki youth ebjoy Ganesh bhajan and pray for peace - Sept.2018

[1] நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று முன்தினம் [13-09-2018] விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக் கப்பட்டனர். நேற்று 2-வது நாளாக அங்கு பதற்றம் நீடித்தது. செங்கோட்டையில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தென்காசி, செங்கோட்டை ஆகிய தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  இந்த தடை உத்தரவு நேற்று) முதல்  இன்று காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் ஷில்பா கூறியுள்ளார். இந்தநிலையில்,  செங்கோட்டை, தென்காசி, ஆகிய வட்டங்களில் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று நெல்லை எஸ்.பி அறிவித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 22-ம் தேதி காலை வரை  அமலில் இருக்கும் எனக்கூறினார்.  விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான பிரச்சனையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி, செங்கோட்டை, தென்காசி, ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு, பதிவு: செப்டம்பர் 15,  2018 20:38 PM

https://www.dailythanthi.com/News/State/2018/09/15203805/144-prohibition-order-extension.vpf

[2] வேதபிரகாஷ், தி..காரர்களை விநாயகன் பார்த்துக் கொள்வான் என்று சும்மா இருக்க வேண்டியதுதானே?, செப்டம்பர் 9, 2010.

https://dravidianatheism.wordpress.com/2010/09/12/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

[3] தினமலர், முஸ்லிம்கள் கோவில் சிலை உடைப்பு: கைது செய்யப்பட்டனர்! கோயில் சிலையை உடைத்த கல்லூரி மாணவர்கள், டிசம்பர் 13, 2009.
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14670

[4] நக்கீரன், விநாயகர் விடுமுறை எடுத்தால் ஸ்டாலின் உட்பட யாரும் இயங்கமுடியாது… –தமிழிசை, கமல்குமார், Published on 14/09/2018 (10:42) | Edited on 14/09/2018 (11:09)

[5] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tamizhisai-soundararajan-tweet-about-sun-tv-and-stalin

[6] தமிழ்.இந்து, மு..ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: திமுக விளக்கம், Published : 31 Aug 2014 14:37 IST; Updated : 31 Aug 2014 14:37 IST.

[7]https://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6366910.ece

[8] தமிழ்.ஒன்.இந்தியா, விநாயகர் சதுர்த்தி.. ஸ்டாலினுக்கு செக் வைக்கும் அழகிரி, By Veerakumar Published: Thursday, September 13, 2018, 13:01 [IST]

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-alagiri-extended-his-vinayagar-chaturthi-greeting-329659.html

ராமர் படம் அவமதிப்பு: 1971 முதல் 2018 வரை – செக்யூலரிஸ இந்தியாவில், இந்து-விரோத நாத்திக சக்திகளின் தூஷண வெறிச்செயல்கள் (1)

மார்ச் 24, 2018

ராமர் படம் அவமதிப்பு: 1971 முதல் 2018 வரைசெக்யூலரிஸ இந்தியாவில், இந்துவிரோத நாத்திக சக்திகளின் தூஷண வெறிச்செயல்கள் (1)

Ravana kavyam, Kulandai

இராமாயண எதிர்ப்பும், ஈவேராவும், பெரியாரும்: வெகுஜனமக்களால் விரும்பப்படுவதை எதிர்த்தால், சுலபமாக பிரபலம் அடந்து விடலாம் என்ற யுக்தியைக் கடைபிடித்து தான், திராவிட நாத்திகர்கள் தங்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். ஈவேராவைப் பொறுத்த வரையில், என்னத்தான், அதிரடி எதிர்ப்புகள் முதலியவற்றைச் செய்தாலும், தேசிய அளவில் பிரபலம் அடைய முடியவில்லை. தமிழகத்தில் கூட அத்தகைய நடவடிக்கைகளினால், எதிர்மறை விளைவுகளினால் வெறுப்பைத் தான் சம்பாதித்தார். புலவர் குழந்தை என்ற திககாரன் எழுதிய ராமாயணம் “இராவண காவியம்” எனப்பட்டது! 1946 இல் வெளிவந்தது! இவ்வாறு பொய்யாக எத்தனை ராமாயணங்கள் எழுதப் பட்டாலும், வால்மீகி ராமாயணத்தை, எவனாலும் மறைக்க, மறுக்க,  மறக்க முடியவில்லை! அதே போல, எத்தனை ராவணன்கள் வந்தாலும், ராமரை ஒன்றும் செய்ய முடியவில்லை. என்றும் பேசப்படுவது ராமர் புகழ் தான்! मर्यादा पुरुषोत्तम – மரியாதா புருஷோத்தம் – மனிதகர்ளில் உத்தமராக இருந்ததால் தான் அவர் “மரியாதைக்குரிய உத்தம புருஷர்” ராமர் என்று அழைக்கப் படுகிறார்! இருப்பினும், தான் அரசியலில் ஓரங்கட்டப் பட்ட நுலையில், அத்தகைய வேலைகளில் இறங்கினார்.

Ramayana- interpreted by EVR

ஈவேராவின் இராமாயணம் / பாத்திரங்களும்: இராமாயண பாத்திரங்கள் என்ற குறும்புத்தகத்தில் ஈவேரா, முன்னுரையில் எழுதியது, “…..இராமாயாணம் நடந்த கதை அல்ல அது ஒரு கட்டுக்கதையே, அக்கதையின் படி இராமன் தமிழன் அல்ல, அவன் தமிழ்நாட்டானும் அல்ல வடநாட்டான், இராமன் கொன்ற மன்னன் இராவணனோ தென்னாட்டான் இலங்கை அரசன், இராமனிடம் தமிழர் பண்பு (குறள் பண்பு) என்பது சிறிதும் இருந்ததாக இல்லை. இராமன் மனைவியும் அது போலவே வட நாட்டவள்அவளிடம் தமிழ் பெண் பண்பு இல்லவே  இல்லை. அதில் தமிழ்நாட்டு ஆண்கள் குரங்கு, அரக்கன், ராக்சதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் அரக்கிகள் என்று குறிக்கப்பட்டுள்ளார்கள். இராமாயண போராட்டத்தில் ஒரு பார்ப்பனர் கூட சிக்கவே இல்லை. போரில் ஒரு வடநாட்டானோ ஆரியனோ பார்ப்பானோ சிக்கவே இல்லை. பார்ப்பனப் பையன் நோய் வந்து இறந்ததற்காக சூத்திரன் கொல்லப்பட்டிருக்கின்றான்மற்றும் அதில் கொல்லப்பட்டவர்கள், செத்தவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டவர்களே ஆவார்கள். தன் தங்கையை மானப்பங்கம் செய்ததற்காக, இராவணன், இராமன் மனைவியை கொண்டு சென்றான். இராமன் மனைவியை கொண்டு போனதற்காக இலங்கை முழுவதிற்கும் ஏன் நெருப்பு வைக்க வேண்டும்ராக்கதர்களை ஏன் கொல்ல வேண்டும்?” 

 Ramayana- interpreted by EVR-3

இராமாயண கதை தமிழர்களை இழிவு படுத்துகிறது: ஈவேரா தொடர்ந்தது,  “இராமாயண கதை தமிழர்களை இழிவு படுத்துவதை தவிர, அதில் வேறு கருத்து இல்லை. தமிழ்நாட்டில் இராமாயணத்தையோ, இராமனையோ வைத்திருப்பதானது, மனித சுயமரியாதைக்கும், இன சுயமரியாதைக்கும், தமிழ்நாட்டு சுயமரியாதைக்கும் மிகமிக கேடும், இழிவும் ஆனதாகும். இராமாயண இராமன் சீதை ஆகியவர்களைப் பொருத்தவரைக்கும் கடுகளவும் கடவுள் தன்மை என்பது கானப்படவில்லைஎப்படி நாடு விடுதலைப் பெற்றவுடன்வெள்ளையர்கள் பெயரை மாற்றி இந்நாட்டவர் பெயர் வைத்ததைப் போலவும், வெள்ளையர்களின் உருவங்களை அப்புறப்படுத்தியது போலவும், தமிழன் சுயமரியாதை உணர்ச்சி பெற்றப்பிறகு, தமிழர்களை இழிவுபடுத்தி, கீழ்சாதி மக்களாக்கிய, ஆரிய சின்னங்களையும்ஆரிய கடவுள்களையும், ஆரிய கடவுள்கள் என்பதான உருவங்களையும், அழித்து ஒழிக்கவேண்டியது சுத்த இரத்த ஓட்டமுள்ள தமிழன் கடைமை ஆகும்”. என்றெல்லாம் அந்த புத்தகத்தின் முன்னுரையில் பெரியார் எழுதுகிறார். ஆக இதிலிருந்தே, அவரது ஞானத்தை அறிந்து கொள்ளலாம். ஜைன-ராமாயணம், பௌத்த-ராமாயணம் போன்ற போலிநூல்களில் உள்ள குறிப்புகளை வைத்துக் கொண்டு, இவ்வாறு, அரைப்வேக்காட்டுத் தனமாக எழுதியதை இன்றளவும், திகவினர், “சரித்திர உண்மை” போல பேசி-எழுதி வருகின்றனர். அதனால் தான், பெரும்பாலும், இவற்றை பொருட்படுத்தாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், இந்தமேதாவிகளோ, இவற்றையெல்லாம், எல்லோரும் ஏற்றுக் கொண்டு விட்டனர், என்று மேன்மேலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்களை முட்டாள்களாக்கி வைத்துள்ளனர்.

Ramayana- interpreted by EVR-2

மகேசன், தேவன், என்றெல்லாம் பேசி இந்து-விரோதத்தை வளர்த்தது:

 1. “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று அண்ணாதுரை சொல்லியதில் தான், திராவிடத்துவத்தின் போலித்தனம் வெளிப்பட்டது.
 2. கடவுள் இல்லைகடவுள் இல்லைகடவுள்இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; என்று நாயக்கர் சொன்னதால், இந்த முதலியாரின் மகேசன் யார்?
 3. கடவுளைபரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றால், நீ ஏன் ஊழலின் ஊற்றாக இருக்கிறாய்?
 4. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றால், அந்த தேவன் யார்? அந்த ஏகத்துவன் கடவுள் இல்லையா? எந்த செட்டியார் இதற்கு பதில் சொல்வது?
 5. ‘சீரங்க நாதனையும் தில்லைநட ராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் எந்நாளோ?’ என்றது யார் என்று சொல்ல பயப்படுகிறாயே, நீ சித்தாந்தியா?
 6. பாரதி தாசன் சொன்னான், அவன் சொன்னதை நான் சொன்னேன் என்று அண்ணா சொன்னான் என்ற அளவில் வந்துவிட்டதே தம்பி?
 7. நாகூர் ஆண்டவனையும், வேளாங்கண்ணி கன்னியையும் பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் எந்நாளோ என்று தம்பி நீ கவிதை எழுதுவாயா?
 8. ஏழைப்பெண்கள் ஏங்கி தவிக்க அடியே கள்ளி மதுரமீனாட்சி உனக்கெதுக்குடி வைர மூக்குத்தி என்றான் அண்ணன், தம்பி, நீ மாற்றி கேட்பாயா?
 9. ஈவேரா நாயக்கரின்கடவுள்”, அண்ணாதுரை முதலியாரின்மகேசன் / தேவன்எல்லோரும் ஒன்றா, கழகக் கண்மணிகளே, சொல்வீரா?
 10. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றால், நாயக்கர், முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் எல்லாம் “தேவனிடத்திலிருந்து” உண்டானார்களா?

Vedaprakash comments

உணர்ச்சிப் பூர்வமான கோஷங்களும், பொய்மை நாத்திகவாதங்களும் இந்துவிரோதமாக அமைந்ததது: 1967ஆம் ஆண்டு, பெரியார் முதன்முதலாக, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்னும் முழக்கத்தை எழுப்பினார, என்றால், அன்றே, “செக்யூலரிஸ நாத்திகத்தின்” போலித்தனம் தெரிந்து விட்டது. “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று அண்ணாதுரை சொல்லியதிலும், அந்த மோசடித்தனம் அதிகரித்தது தெரிகிறது. ஏனெனில், “கடவுளே” இல்லை என்றபோது, “மகேசன்” எம்க்கிருந்து வந்தான். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது அது போன்ற உணஃப்ர்ச்சிப் பூர்வமான கோஷம் மற்றும் தூண்டுதல் பித்தலாட்டம். ஏனெனில், இங்கும் “தேவன்” என்பதை கடவுள், இறைவன், ஆண்டவன் என்றேல்லாம் அர்த்தம் கொண்டால், அவனிருப்பதை, நாத்திகவாதியான துரை ஏற்றுக்கொள்ள முடியாது. “தேவன்” ஏசுதான் என்றால், கிருத்துவர் என்றோ அண்ணாவை கிழித்திருப்பர். ஆக, இந்த இந்து-விரோதிகள் திட்டமிட்டுதான், திராவிட வெறித்தனத்தை வளர்த்துள்ளனர். அந்த வெறித்தனம் தான், அத்தகைய வெறுப்பு சித்தாந்தமாக மாறி, மக்களை ஊக்குவித்த நிலையில், “திகவினர்” அடையாளத்தில், இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு வருகின்றனர்.

1971- ram- beated with chappals

1971ல் திகவினர் சேலத்தில் ராமர்லட்சுமணன்சீதை படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றது: தமிழகத்தில் இந்துக்களை அவமதிப்பது என்பது ஈவேரா போன்ற இந்து-விரோத நாத்திகர்களால் 1960களில் ஆரம்பித்து வைக்கப் பட்டது. அப்பொழுது, நாத்திக-திமுக ஆட்சியில் இருந்ததால், ஈவேரா மற்றும் திகவினரிடம், திராவிட-நாத்திகக் கட்சியினர் மெத்தனமாகவே நடந்து கொண்டனர். 1960களில் நிச்சயமாக, யாதாவது எதிர்த்து கேட்டால் அடிப்பார்கள் என்று எல்லோருமே திகவினருக்கு பயந்துதான் இருந்தனர். எனவே பிராமணர்களைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. திகவினர் 1971ல் சேலத்தில் ராமர்-லட்சுமணன்–சீதை படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்பொழுது வைணவர்களே அதனை எதிர்த்ததாகத் தெரியவில்லை. துக்ளக்கில் ஊர்வல படங்கள் வெளியிடப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்டது. இப்பொழுது அப்படங்கள் கிடைப்பதில்லை. ஒரே வேளை இப்பொழுது அவை ஆதாரங்கள் ஆகி விடும் என்று மறைக்கிறார்கள் போலும்.

©  வேதபிரகாஷ்

24-03-2018

Anna comments on God etc

நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!

ஏப்ரல் 2, 2016

நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!

சாவதற்கு முன்னார் கலிமா சொல்லி மரணிப்பேன் - பெரியார்புதிய கட்டுக்கதைகளை உருவாக்கும் முகமதியர்கள்: பெரியாரின் பேச்சு, எழுத்து, ஏற்கெனவே அச்சில் வந்துள்ளவை முதலியவை இவைதான் என்று அதிகாரப்பூர்வமாக தொகுத்து, ஆதாரங்களுடன் வெளியிடாததால், குழப்பங்கள், திரிபுகள் மற்றும் கட்டுக்கதைகள் பெருகி வருகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணமாக “ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்”, என்று துலுக்கர்கள் இப்பொழுது இன்னொருக் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டிருக்கின்றனர்[1]. பெரியாரின் ஒலிப்பதிவு பேச்சிற்கும், அச்சில் உள்ள பேச்சுகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது. உதாரணத்திற்கு பெரியார் இஸ்லாம் பற்றி பேசியதாக இணைதளங்களில் வரும் பேச்சுகள்[2]. எப்படி பல வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன, விடுபட்டுள்ளன, சேர்க்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம். பெரியாருடைய பேச்சு, சுத்தமான தமிழாக இல்லை என்பது தெரிந்த விசயம், அப்பொழுது வழக்கில் உள்ள சமஸ்கிருதம் கலந்த சொற்களும் அவரது சொற்பிரயோகத்தில் இருந்தது[3]. அதனால், ஒலிநாடா பேச்சைக் கேட்டு, அச்சில் உள்ளதைப் படித்துப் பார்த்தால் வித்தியாசங்களை அறிந்து-புரிந்து கொள்ளலாம். இதனால், பெரியாரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், அவ்வாறுதான் அவர் பேசினாரா, எழுதினாரா என்று சரிபார்க்க, அதிகாரப்பூர்வமான புத்தகம் (edited from the original manuscripts) இல்லை.

இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டைமுகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[4]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்.  “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார். இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[5]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[6]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா, எதிர்த்தாராஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929). ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை.  ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[7].

EVR listening to Rajaji with due respect and attention

இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்றது (20-10-1935): இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்:  தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார். (குடியரசு 20-10-1935), அதாவது, இக்கணக்கை வைத்துப் பார்த்தால், 1926லேயே அப்படி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர் அம்மாதிரியெல்லாம் பேசுவது வழக்கமாதலால், அதனை பெரிதாகவோ, முக்கிய விசயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

பெரியார் தாசன் புத்தகம்இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற அம்பேத்கர் தனது முடிவை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று அறிவுரை கூறிய .வே. ரா (குடியரசு 20-12-1935): தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம் அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’, என்று கூறுகிறார். (குடியரசு 20-12-1935). உண்மையில், அம்பேத்கரது திட்டம் முதலியன இவருக்குத் தெரியாது.

பெரியார் தாசன் புத்தகம்.2இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று சபதம் செய்த ஈவேரா (குடியரசு 31-05-1936): மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார். (குடியரசு 31-05-1936) அதாவது, இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்று தெரிகிறது. ஆனால் அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்! “நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து – இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்”. (விடுதலை 09-02-1950).

பெரியார் முஸ்லிம்சட்டநுணுக்கங்கள் அறிந்த அம்பேத்கரும், இடத்திற்கு ஏற்றப்படி பேசும் ஈவேராவும்: அம்பேத்கர் மதம் மாறியபோது, சட்டப்படி “இந்துவாக” இருக்கும் நிலையில், இடவொதிக்கீடு பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற முறையில், அவர் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார். பெரியாரும், வலிய வந்து, பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டு, பௌத்தத்தைத் தழுவுகிறேன் என்ற போது, அம்பேத்கர் விசயங்களை எடுத்துக் காட்டினார். பெரியார் ஒரு அவசரக்குடுக்கைகாரர் என்பது அம்பேத்கர்க்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், பெரியார் இந்துவாகவே இருக்க தீர்மானம் செய்து கொண்டார். டிசம்பர் 24, 1973ல் இறந்தபோது, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார்.

© வேதபிரகாஷ்

02-04-2016

[1] http://bushracare.blogspot.in/2013/09/5.html

[2] https://www.youtube.com/watch?v=2Ie5DrlDN3M

[3] ஒலி மற்றும் குடி அரசு முதலியவற்றில் கேட்டும், படித்தும் புரிந்து கொள்ளலாம், “ஆமா…..வெங்காயம்”!

[4] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[5] https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[6] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

[7] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013,  http://bushracare.blogspot.in/2013/09/5.html

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (3)

ஏப்ரல் 23, 2015

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (3)

திகவினரின் குற்றங்களை ஆவணப்படுத்தி வைக்காமல் இருப்பதே, திராவிட ஆராய்ச்சியில் பெரிய குறை மட்டுமல்லாது, மிக்கத்தவறான ஆய்வு நெறிமுறை எனலாம். மேலும், திகவினர் தாங்கள் எதனை சிறு-குறும் புத்தகங்களில் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவற்றை ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரம் போல குறிப்பிட்டு ஆய்வுகட்டுரைகள், புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. ருதலைப் பட்சமாக அவர்கள் எழுதி பதிப்பித்து வருவதை நம்பவேண்டிய நிலையுள்ளது. இது ஏதோ எசுவைட் / கிருத்துவ மிஷினரிகளின் எழுத்துகளளை அப்படியே எடுத்துக் கொள்வதை போலவுள்ளது. இதனால், பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில், முடிந்த வரையில் இருக்கும் விவரங்களை இங்கு தர முயன்றுள்ளேன். தயவு செய்து படிப்பவர்கள், மற்ற விவரங்களைக் கொடுத்தால், உரிய ஒப்புதலோடு, அவர்கள் பெயர்கள் குறிப்பிட்டு, சேர்த்துக் கொள்ளப்படும்.

குடி அரசு ஜனவரி 3 1926

குடி அரசு ஜனவரி 3 1926

1960 முதல் 1980 வரை திகவினரின் இந்துவிரோத செயல்கள்: 1960களில் நிச்சயமாக, யாதாவது எதிர்த்து கேட்டால் அடிப்பார்கள் என்று எல்லோருமே திகவினருக்கு பயந்துதான் இருந்தனர். எனவே பிராமணர்களைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. திகவினர் 1971ல் சேலத்தில் ராமர்-லட்சுமணன்–சீதை படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். துக்ளக்கில் ஊர்வல படங்கள் வெளியிடப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்டது. இப்பொழுது அப்படங்கள் கிடைப்பதில்லை. அக்டோபர் 1973ல் மதுரையில் இ.வே.ராவின் 95வது பிறந்த நாள் என்று இந்து மதம்-கடவுளர்களை தூஷிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலத்தின் முன்னால், ஒரு வேலைத் தூக்கிச் சென்று, அதனை செருப்பால் அடித்தவாறு சென்றனர். அதேபோல விநாயகர் விக்கிரகத்திற்கும் செய்தனர். கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலத்தில் எடுத்துச் என்றனர். ஆனால், அப்பொழுது முதலமைச்சராக இருந்த காமராஜர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1973ல் பெரியார் இறந்தார், ஆனால், இத்தகைய காரியங்கள் தொடர்ந்து நடந்தன[1]. 1974ல் “ராவண லீலா” அடத்தி, ராமர்-லட்சுமணன்–சீதை பொம்மைகளை எரித்தனர். எம்ஜியார் ஆட்சிக்கு வந்த பிறகு 1980-87 ஆண்டுகளில் நிலமை கொஞ்சம் மாறியது எனலாம்.

lord-sri-rama- 1971 DK chappal-garlanded

lord-sri-rama- 1971 DK chappal-garlanded

1980 முதல் 2006 வரை நடந்துள்ள தாக்குதல்: 1980களில் “தி இந்து” நிருபர் கணபதி என்பவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த போது திகவினர் அவரை நிறுத்தி, சட்டை-பனியனைக் கிழித்து, பூணூலை அறுத்தனர். அன்று 1983ம் ஆண்டு ஆலய மறியல் போராட்டம் என திராவிடர் கழகம் ஸ்ரீரங்கத்தில் அறிவித்திருந்தது. அப்போது பூஜ்யஸ்ரீ திரிதண்டி நாராயண ஜீயரும் ஹிந்து முன்னணியின் குழுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். சுமார் 500 பக்தர்கள் அனைவரும் சுவாமிகளின் தலைமையில் விஷ்ணு சஹஸ்ரநாமம், பிரபந்தம் ஜெபித்துக்கொண்டு நான்கு சித்திரை வீதி வழியாக ஊர்வலம் வந்து “ரங்கா ரங்கா” கோபுர வாசலில் சிதறு தேங்காய் நூற்றுக்கணக்கில் உடைத்து ஆலயப் பிரவேசம் செய்தனர். ஆலய மறியல் போராட்டத்துக்கு வந்திருந்த சுமார் 10 கருப்பு சட்டைகளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தி க தோற்றுப் போய்விட்ட ஆத்திரத்தில் இரண்டு நாள் சென்று ஆலயப் பிரகாரத்தில் அப்பிராணியாய் கிடந்த ஒரு நோஞ்சான் கிழவரின் பூணலை அறுத்து மூக்கை உடைத்து விட்டு தப்பி ஓடியது.

2006ல் பெரியார் சிலை உடைப்பு, பூணூல் அறுப்பு, கோவில்கள் தாக்கப்படுதல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது முதலியன: ஶ்ரீரங்கத்தில் திகவினர் விசமத்தனமாக, ஶ்ரீரங்கநாதர் கோவில் எதிரில், ஶ்ரீசைத்தன்யர் பாதக்கோவிலின் அருகில் பெரியார் சிலையை வைத்தனர். அப்போதே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது, ஆனால், ஆட்சியுள்ளவர்களின் ஆதரவால் அச்செயல் நிறைவேரியது. டிசம்பர் 2006ல் அச்சிலை சேதப்படுத்தப் பட்டது. இதனால், திகவினர் மற்றும் கருப்புப் பரிவார் கோஷ்டிகள் கோவில்களைத் தாக்குதல், விக்கிரங்களை உடைத்தல், மடங்களில் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்தல், பூணூல்களை அறுத்தல் என்று தமிழகத்தில் பல இடங்களில் குற்றங்களில் ஈடுபட்டனர்.

சங்கராபுரத்தில் இரண்டு கோவில்கள் தாக்கப்படுதல், விநாயகர் சிலைகள் உடைக்கப்படுதல்: விழுப்புரத்தில் சங்கராபுரம் கோவிலில் கருங்கல் விநாயகர் விக்கிரகம் பெர்த்தெடுக்கப்பட்டு, உடைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, வாகனம் மூஞ்சூறு மற்றும் பீடமும் உடைக்கப்படிருந்தன. கோவில் சுற்றுப்புறச் சுவர்களில் இருந்த சிற்பங்களும் உடைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது, கோபுரத்தில் இருந்த சிலைகளும் உடைக்கப்பட்டன[2]. அதேபோல, சங்கரபுரம்-கல்லக்குறிச்சி சாலையில், விவசாய சந்தை கமிட்டி அருகில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்த விநாயகர் விக்கிரகமும், அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, சுக்கு நூறாக உடைக்கப்பட்டிருந்தது[3]. இத்தாக்குதல்களுக்காக,

 1. வி. நாகராஜன் (29), நெடுமண்ணூர்.
 2. எஸ். நாகப்பிள்ளை (20), நெடுமண்ணூர்.
 3. ஏ. துரை (24), வனப்புரம்.
 4. எஸ். சாமித்துரை (25), கடவூர்.

இந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு, இதிய குற்றவியல் சட்டப்பிரிவு 153 (a) (1)ன் கீழ் மதச்சின்னங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை உடைத்தல் என்ற குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது[4].

2006ல் தாக்குதல் - அயோத்தியா மண்டபம், sakarapuram templ

2006ல் தாக்குதல் – அயோத்தியா மண்டபம், sakarapuram templ

சேலம் சங்கர மடத்தில் நுழைந்து தாக்குதல்: 2006ல் திகவினர் சேலத்தில் உள்ள சங்கரமடத்தில் நுழைந்து, எல்லா படங்களையும் அடித்து உடைத்தனர். அப்பொழுது மற்றவர்களின் உரிமைகள் பற்றி பேசும் செக்யூலரிஸப் பழங்கள் இந்துக்களின் உரிமைகளைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

Salem Sankara mutt attacked by DK - December 2006

Salem Sankara mutt attacked by DK – December 2006

ஈரோடு ராகவேந்திர மடம் தாக்கப்படல், ராமர் சிலை பெயர்த்துத் தூக்கியெறியப்படல்: அதேபோல, சம்பந்தமே இல்லாமல், ஈரோட்டில், அக்ரஹாரத் தெருவில் உள்ள ராகவேந்திர பிருந்தாவனத்தில் புகுந்து, ராமர் விக்கிரகத்தைப் பெயர்த்து எறிந்தனர்[5]. அப்பொழுதும் செக்யூலரிஸவாதிகள் மூச்சுக்கூட விடவில்லை.

erode Raghavendra mutt attacked, Vishnu idol uprooted and thrown by DK Dec.2006

erode Raghavendra mutt attacked, Vishnu idol uprooted and thrown by DK Dec.2006

சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்படல்: சென்னையில், பழைய மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. “தி இந்து” இதனை சூஜகமாக அமிலம் மற்றும் பெட்ரோல் கலந்த பாட்டில்கள் வீசப்பட்டன என்று குறிப்பிட்டது[6]. இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போது, சுவாமி தயானந்த சரஸ்வதியின் மீது, ஶ்ரீரங்கத்த்ல் கோவிலுக்கு எதிராக உள்ள சிலையை சேதப்படுத்தியதற்காக, முதல் குற்ரப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல சுப்பிரமணியன் சுவாமி, அது சட்டப்படி தவறு என்ரு சுட்டிக் காட்டினார்[7]. ஆக இது நாத்திகமும் இல்லை, நாத்திகவெறியும் இல்லை ஆனால், இனவெறியே ஆகும்.

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun

ஏப்ரல் 1929 அம்பேத்கர் முன்னர் பூணூல்-அணிவிப்பு, ஏப்ரல் 2015 ச்ஏப்ரல் மதத்தில் அம்பேத்கர் ஜெயந்திற்குப் பிறகு அம்பேத்கர் முன்னிலையில் வேதகோஷங்களோடு 6,000 பேருக்கு பூணூல் அணிவிக்கப்படலும், அம்பேத்கர் பெயரில் பெரியார் தொண்டர்கள் பூணூல்-அறுப்பு தாக்குதலில் ஈடுபடுவதும் நோக்கத்தக்கது. அம்பேத்கரின் நண்பர் பெரியாரின் தொண்டர்கள், இவ்வாறு அம்பேத்கர் பெயரில், அம்பேத்கர் ஜெயந்திக்குப் பிறகு ஏப்ரலில் இவ்வாறு தாலி-அறுப்பு நிகழ்சிக்குப் பிறகு, பூணூல்- அறுப்பு செய்திருக்கிறார்கள்! ஆனால், இதே ஏப்ரல் மாதத்தில் 86 ஆண்டுகளுக்கு முன்னர் 1929ல், அம்பேத்கர் தலைமையில், சிப்லுன் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் 6,000 பேருக்கு பூணூல் அளிக்கப்பட்டது. அம்பேத்கரின் பிராமண நண்பர், தியோராவ் நாயக் புரோகிதராக இருந்து, வேதமந்திரங்கள் முழங்க அவர்கள் பூணூல் அணிந்து கொண்டனர்! அம்பேத்கர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun.Tamil

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun.Tamil

வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது – எல்லாம் ஒன்றா என்று விடுதலை கேட்கிறது[8]: இன்றைய தி இந்து (தமிழ்) ஏட்டில் பக்கம் 7 இல் போலீசார் கடும் எச்சரிக்கை என்ற தலைப்பில் கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது. சென்னை மாநகர காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்துவதாக இருந்த பெண்களுக்கு தாலி தேவையா என்ற விவாத நிகழ்ச்சியை மய்யமாக வைத்து இந்து அமைப்புகள் பிரச்சினை செய்தன. அதைத் தொடர்ந்து இந்து அமைப்பினரும், பெரியாரின் பெயரில் இயங்கும் அமைப்பினரும் பல்வேறு வகைகளில் சென்னை நகரின் சட்டம் – ஒழுங்கை கெடுக்கின்றனர். வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது என பொதுமக்களின் அமைதியை தொடர்ந்து கெடுக்கின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. இனிமேல் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடும் அனைவர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். – இவ்வாறு அந்த ஏட்டில் செய்தி வெளிவந்துள்ளது. பொத்தாம் பொதுவாக இப்படி ஓர் அறிவிப்பைக் கொடுத்த காவல்துறை அதிகாரி யார்? என்பதை தி இந்து (தமிழ்) ஏடு தெரிவிக்கவில்லை. இதில் வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது என்று எல்லாவற்றையும் ஒன்றுபோல் காட்டுவது அசல் விஷமத்தனமாகும்[9]. வெடிகுண்டு வீசுவதையும், தாலி அகற்றிக் கொள்வதையும் ஒரே நிலையில் சம தட்டில் வைத்துப் பார்க்கிறதா காவல்துறை? தாலியை அகற்றிக் கொள்வது திராவிடர் கழகத்தின் கொள்கை சார்ந்தது – சட்டப்படியானதும்கூட! வெடிகுண்டு வீசுவது சட்டப்படியானதா? இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்புவது கண்டிக்கத்தக்கது! விஷமத்தனமானது!!

© வேதபிரகாஷ்

23-04-2015.

[1] After his demise in 1973 the Movement was being ably guided by the new President Annai E.V.R. Mani Ammaiyar. A notable event since her assuming the presidentship was the celebration of “Ravana Leela” in December, 1974, when the effigies of Rama, Sita and Lakshmana were burnt down. This event which rocked the entire orthodoxy all over India was no mean achievement of the movement today. A case was filed against Mrs.Maniammai and others including me. We were all acquitted.

http://www.modernrationalist.com/2011/march/page04.html

[2] The granite Vinayaka idol of a temple at Sankarapuram in Villupuram was found removed and broken. Devotees found that the `Moonjuru’ (mouse vahanam) and the pedestal of the idol had been destroyed. Cement decorative works that formed part of the temple compound were found broken. Images of the Hindu pantheon made of concrete and erected on the gopuram were damaged beyond recognition.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[3] The granite Vinayaka idol of the Selva Vinayaka temple near Agriculture Market Committee on the Sankarapuram-Kallakurichi road was also found uprooted and broken into pieces. The idol was found near the bus stand, about 200 feet away.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[4] The police have arrested four activists of the Thanthai Periyar Dravidar Iyakkam V. Natarajan (29) and S. Nagapillai (20) of Nedumanur, A. Durai (24) of Vanapuram and S. Samithurai (25) of Kaduvanur in connection with the Sankarapuram incident. They have been booked under Section 153 (a) (1) of Indian Penal Code (fanning communal tension by damaging religious symbols or religious places).

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[5] In Erode, a Ramar idol was found damaged. The police said around 5.15 p.m., a group of Dravidar Kazhagam volunteers, shouting slogans, entered the Raghavendraswamy temple, situated in Agrahara Street, went to the sanctum sanctorum and removed the deity. On hearing the news, hundreds of devotees rushed to the spot, and demanded the police take action against the persons responsible for the act. RSS and Hindu Munnani volunteers protested against the damage to the idol.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[6] In Chennai, some miscreants hurled a few bottles of acid and petrol at the Ayodhya Mandapam, West Mambalam.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[7] Janata Party president Subramanian Swamy condemned the police for registering a first information report (FIR) against Swami Dayanand Saraswati in the case related to damage caused to the statue in Srirangam. In a statement here, Dr. Swamy said by registering an FIR against Dayanand Saraswati merely for issuing a statement against the installation of the statue, the police had violated several Supreme Court judgments, including the one in the Bhajan Lal case in 1992.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[8] விடுதலை, வெடிகுண்டு வீசுவதும்தாலி அகற்றிக் கொள்வதும் ஒன்றா?, புதன், 22 ஏப்ரல் 2015 17:01

[9] Read more: http://www.viduthalai.in/component/content/article/72-2010-12-27-13-06-34/100150-2015-04-22-11-38-12.html#ixzz3Y5rhjTVv