Posts Tagged ‘கனிமொழி’

குங்குமத்தை அழித்து, பெண்மையை பழித்த ஸ்டாலினுக்கு நாட்டை ஆள அருகதை உண்டா – தமிழக பெண்கள் இத்தகைய அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

மே 13, 2016

குங்குமத்தை அழித்து, பெண்மையை பழித்த ஸ்டாலினுக்கு நாட்டை ஆள அருகதை உண்டா – தமிழக பெண்கள் இத்தகைய அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஸ்டாலின் மூஞ்சில் குங்குமம் வைத்தது.வாக்காளர் ஒருவர் நெற்றியில் வைத்த குங்குமத்தை வேண்டுமென்றே உடனேயே அழித்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது[1], பரபரப்பு ஏற்பட்டது, சர்ச்சை என்றெல்லாம் நான்கு வரிகளில் விழயத்தை முடித்துக் கொண்டாலும், உடகங்கள் சரியா-தவறா என்று விவாதிக்கவில்லை. சென்னையில், எழும்பூர், தி.நகர், துறைமுகம் உள்ளிட்ட பல தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் மே 12.2016 அன்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்[2]. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடந்து சென்று கை குலுக்கி, செல்போனில் செல்ஃபிகள் எடுக்க அனுமதித்தார்[3]. எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆதரித்து, கே.வி.கார்டனில் ஸ்டாலின் வாக்கு சேகரித்தபோது, அங்குள்ள கோவிலை கடந்து சென்றார். அப்போது, ஸ்டாலின் நெற்றியில், ஒருவர் குங்குமம் வைத்து விட்டார். உடனே கும்பிட்டு, திரும்பி, நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டார்[4].

ஸ்டாலின் உம்பிட்டு திரும்பியதுவைத்த குங்குமத்தை அழித்த ஸ்டாலின்: அந்த இடத்தை கடந்ததும், ஸ்டாலின் தனது கைக்குட்டையால் குங்குமத்தை அழிக்க தொடங்கினார். முழுமையாக அழியும்வரை மீண்டும் மீண்டும் கர்ஃசீப்பால் அதை துடைத்தார். நான்கு-ஐந்து தடவை துடைத்து, அழித்து, நடந்து சென்றது வீடியோவில் நன்றாகவே பதிவாகியுள்ளது[5].

 1. முதலில் குங்குமம் வைக்கப்படுகிறது.
 2. குங்கும் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொள்கிறார்.
 3. கைக்குட்டையை எடுக்கிறார்.
 4. கையில் ஓட்டிக்கொண்டிருந்த குங்குமத்தைத் தட்டித் துடைத்துக் கொள்கிறார்.
 5. பிறகு, நான்கு-ஐந்து தடவை துடைத்து, முழுவதுமாக அழிக்கிறார்.

இது அங்கிருந்த டிவி சேனல் வீடியோ கேமராவில் பதிவானது[6]. இதைக் கண்ட பொது மக்கள். என்னடா கோவில் குங்குமத்தை இப்படி உடனடியாக அழிக்கிறாரே என்றூ பெண்கள் முணுமுணுத்தனர். ஸ்டாலினுக்கு அவரது தாயார் குங்குமம் வைப்பது போன்றபுகைப்படங்கள் வெளியாகியுள்ளதால், அவர் இவ்வாறு நடந்து கொண்டது, மக்களின் னமனத்தைப் புண்படுத்துவதாக தெரிந்தது.

ஸ்டாலின் குங்குமத்துடன்குங்குமம் இல்லை என்றால் என்ன அர்த்தம்?: நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து ரத்தம் வழிகிறதா என்று கருணாநிதி கேலி செய்ததாக கூறப்படுவதுண்டு, என்று தமிழ்.ஒன்.இந்தியா குறிப்பிட்டு நிறுத்தியுள்ளது[7]. இப்போது அதே குங்குமம் சர்ச்சையில் ஸ்டாலினும் சிக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஸ்டாலின் செயலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன[8]. தாய், சகோதரி, மைத்துனி, மனைவி, என்று எல்லோருமே மதம் கிடையாது, கடவுள் கிடையாது என்று பகுத்தறிவு பேசும் திமுக சமீபகாலமாக ஒழுங்காக குங்குமம் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குங்கும் வைத்துக் கொள்ளவில்லை, குங்குமம் இல்லை என்றால் மக்கள் என்ன நினைப்பார்கள், எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிந்த விசயம் தான். அதன் கொள்கைகளை மறந்து மதம் போன்ற வழிபாடுகளில் கவனம் செலுத்துவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது[9] என்று வெப்துனியா சேர்த்துள்ளது.

ஸ்டாலின் கும்பிட்டு திரும்பி தொட்டட்ப் பார்த்துக் கொண்டதுநெற்றியில் குங்கும் என்றால் ரத்தமா?: கடலூர் ஆதிசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து கருணாநிதிக்கு முன்னால் காட்சி தந்தார். வியர்வையால் குங்குமம் நனைந்து வடிந்த காட்சி, கருணாநிதிக்கு ரத்தமாகத் தெரிந்தது, “என்ன நெற்றியில் ரத்தம் ஒழுகுகிறதா”, என்று ஹனக்கேயுரிய நக்கலாக கேட்டார். பதறிப்போனவராக ஆதிசங்கரைக் கிண்டல் அடித்தார். ‘உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் எப்போதும் குங்குமத்துடன்தானே காட்சி தருகிறார்?’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ”அது பரம்பரைப் பொட்டு. இது பஞ்சத்துக்கு வைத்த பொட்டு!” என்று விளக்கம் அளித்தார் கருணாநிதி. பயந்து போன அவர், குங்குமத்தை அழித்து விட்டாராம். அதே நேரத்தில், அவரது மனைவி, துணைவி இத்யாதிகள் அப்படி வைத்துக் கொள்வது பற்றி நக்கல், கிண்டல் இல்லை. ஆனால், முன்பு, இந்திராகாந்தியை தாக்கியபோது, நெற்றியில் ரத்தம் வந்தபோது, மிகக்கேவலமாக விமர்சித்தத்தும் தெரிந்த விசயமே.

ஸ்டாலின் குங்குமத்தை அழித்ததுகுங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்[10]: “மத்திய அமைச்சர் சிதம்பரம், தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்றார். அதனால், என்னை பெண் வீட்டுக்காரனாக ஆக்கி, இந்த இல்லறக் கூட்டணியின் சார்பாக இருவரும் இணைந்து மணமக்களை வாழ்த்துவோம். பெரியகருப்பனின் பணிகள் என்னை மாத்திரமல்ல, ஆன்மிகவாதிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒரு கோவில் விழாவில், மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன். பெயராலும், மீசையாலும் பெரியகருப்பன் அச்சுறுத்தல் தரக் கூடியவர்; ஆனால், உள்ளத்தால் நம் அன்பையெல்லாம் கவர்ந்தவர். அவர் கொண்டிருக்கும் தெய்வ நம்பிக்கையைக் கூட, என் மீது கொண்டிருக்கும் மரியாதையால், அதை கொஞ்சம் மறைத்து திறம்பட பணி புரிகிறார்”. இப்பொழுது அந்த ஆளும் வீடியோ விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த மூஞ்சிகளுக்கு தேவைப்பட்டதோதமிழக பெண்கள் இவர்களது அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்; குங்குமம் அழித்தல் என்பதே அபசகுனமாகக் கருதப்படுகிறது. பெண்களைப் பொறுத்த வரையில், அது அமங்கலமமாகக் கருதப் படுகிறது. தாலியறுத்த கையறுநிலையைக் குறிக்கிறது. அதனால் தான் போலும், தாலியறுக்கும் விழாவிலிஉம் ஈடுபட்டுள்ளனர். இப்படி பெண்களுக்கு, பெண்மைக்கு, பெண்ணின் பாரம்பரியத்திற்கு, தமிழக கலாச்சாரத்திற்கு, மங்கலநாண், மங்க நிலை என்று அனைவற்றிற்கும் எதிராக செயல்படும் இவர்களை தமிழக மக்கள் ஒதுக்க வேண்டும். நாத்திகம், சுயமரியாதை என்றெல்லாம் பேசி, ஏமாற்றி வருவதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. இப்பொழுது தேர்தல் காலம் என்பதாலும், 60 வருட இந்த திராவிட ஆட்சியில், நன்றாக கஷ்ட பட்டு, மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளதாலும், மக்கள் இவர்களுக்கு, உரிய பாடத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். குறிப்பாக தமிழக பெண்கள் இவர்களது அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

© வேதபிரகாஷ்

13-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தாரா ஸ்டாலின்? சென்னை பிரசாரத்தில் சர்ச்சை, By: Veera Kumar, Updated: Thursday, May 12, 2016, 15:50 [IST].

[2] நியூஸ்.7.டிவி, வாக்கு சேகரிப்பின் போது நெற்றியில் இடப்பட்ட குங்குமத்தை அழித்த மு.. ஸ்டாலின், May 12, 2016

[3] வெப்துனியா, நெற்றியில் இட்ட கோயில் குங்குமத்தை உடனடியாக அழித்த மு..ஸ்டாலின் (வீடியோ இணைப்பு), வியாழன், 12 மே 2016 (15:07 IST).

[4] விவேகம்.நியூஸ், ஸ்டாலின் குங்குமத்தை அழித்ததால் பரபரப்பு, மஹா 12/05/2016 02:45 PM; http://www.vivegamnews.com/Page.aspx?id=22581

[5] http://ns7.tv/ta/mk-stalin-destroyed-vermilion-forehead-during-collection-ballot-cast.html

[6] https://www.youtube.com/watch?v=VflEJXwRjJg&sns=fb&app=desktop

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-vanish-kungumam-which-was-applied-a-voter-his-forehead-253467.html

[8] பிபிசி.தமிழ், தேர்தல் பரப்புரையின் போது நெற்றியில் இடப்பட்ட குங்குமத்தை அழித்த மு.க. ஸ்டாலின், பதிவு செய்த நாள்: 12 May 2016 2:02 pm, By : Amuthan.

[9] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/stalin-destruction-vermilion-in-his-forehead-116051200042_1.html

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=173030

திராவிடக் குடும்பத்தின் பிரச்சினை – தமிழர்கள் கற்றுக் கொள்ள பாடமா, பகுத்தறிவை பிரித்தறிய சந்தர்ப்பமா?

ஏப்ரல் 30, 2013

திராவிடக் குடும்பத்தின் பிரச்சினை – தமிழர்கள் கற்றுக் கொள்ள பாடமா, பகுத்தறிவை பிரித்தறிய சந்தர்ப்பமா?

கருணாநிதி குடும்பம் பெரியது: திராவிடத் தலைவர் கருணாநிதி குடும்பம் பெரியது, அதனல், அவரின் குடும்பப் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கும். மகன்கள்-மகள்கள்; பேரன்கள்-பேத்திகள் என்று வளர்ந்து விஸ்தரிக்கப்பட்டுள்ள குடும்பம். ஆசியாவிலேயே மிகவும் செழிப்பான, வளமான, செல்வமிக்கக் குடும்பங்களில் ஒன்று புகழும் பெற்றுள்ளது[1]. அந்நிலையில், அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் தவிர, இவ்வாறான சொத்துப் பிரச்சினைகளும் வருவதுண்டு. ஆனால், அதன் பின்னணியில் உள்ள பண்பாடு, கலாச்சார காரணிகளைப் பற்றி கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், கருணாநிதி ஒரு ஆட்சியாளர், சக்தி படைத்தவர், பேச்சால் மக்களைக் கவர்ந்தவர், இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அரசியல்வாதி. இவரது அரசியலை விரும்பாதர்கள் கூட, இவரது பேச்சை விரும்பிய காலம் உண்டு. அந்நிலையில், இவரத் குடும்பச் சண்டைகளும் திராவிட சமுதாயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும், என்ற நிலையில் இப்பிரச்சினை நோக்கப்படுகிறது.

மு..முத்துவின் மனைவி கூறும் புகார்: ஜெ. சிவகாமசுந்தரி தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன், மு.க.முத்துவின் மனைவியும், மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் மூத்த மகளும் ஆவர்[2]. அவர் கூறுவதாவது, “எனக்கு அறிவுநிதி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு, திருமணமாகி விட்டது. அவரும், அவர் கணவரும், எங்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்கின்றனர். சென்னை, கோயம்பேட்டில், என் பெயரில் உள்ள கடை மூலம், மாதந்தோறும், 40,000 ரூபாயும்; என் கணவருக்கு, மாதந்தோறும், 75,000 ரூபாயும் வருமானம் வருகிறது. இதை கொண்டு மருத்துவம் மற்றும் அன்றாட செலவுகளை செய்து வருகிறோம்”.

கார் கூட இல்லை: “என் மாமனார் கருணாநிதி, எங்களுக்கு பல்வேறு வகையில், தொடர்ந்து உதவி புரிந்து வருகிறார். அவர் தான், எங்களுக்கு கார் வாங்கி கொடுத்தார். தற்போது, அந்த காரும் பழுதடைந்து விட்டது[3]. மருத்துவமனைக்கு கூட, ஆட்டோவில் சென்று வருகிறோம். இன்று புகார் கொடுக்க கூட, ஆட்டோவில் தான் வந்துள்ளேன். வயதான நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு, உதவி செய்யாமல், அறிவுநிதி உபத்திரவம் செய்து கொண்டு இருக்கிறார். அறிவு நிதிக்கு, சென்னையில், மூன்று வீடுகளும், கோவையில் ஒரு வீடும் உள்ளன. இது தவிர, பல்வேறு தொழில் செய்து வருகிறார். அவரால் எங்களுக்கு, ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. நல்லபடியாக இருந்தால், அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். நாங்கள், கோபாலபுரத்தில் வசித்த வீட்டையும், எங்கள் காலத்துக்கு பின், அறிவுநிதி தான், அனுபவிக்க போகிறார்.

என் மகன் என்னைக் கொடுமைப் படுத்துகிறான்[4]: திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் மனைவி சிவகாமசுந்தரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்[5].  அதில் சொத்துக்காக மகன் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார். அவரது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: “கானத்தூரில் ஒரு வாடகை வீட்டில் நான் இப்போது வசித்து வருகிறேன். வயதாகிவிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு, இரண்டு முறை, தலையில், அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது நான், மேலும், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் எனது மகன் மு. . மு. அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, மாமியார் யோகமங்களம் ஆகியோர் சொத்துக்காக எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள், ஆள் மூலமாகவும் என்னை மிரட்டி வருகின்றனர். “ஆள் வைத்து அடித்து, எல்லாவற்றையும் பிடுங்கி விடுவேன்’ என, மிரட்டுவதுடன், தகாத வார்த்தைகளால், பேசி வருகின்றனர்.

 கோபாலபுரம் வீட்டிலிருந்து விரட்டப் பட்டேன்: “சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை கோபாலபுரத்தில் எனக்கு வீடு இருந்தது. ஆனால் அந்த வீட்டில் இருந்து என்னையும், என் கணவர் முத்துவையும் அறிவுநிதி விரட்டி அனுப்பிவிட்டார். இதன் பின்னர் அந்த வீட்டை அவர் வாடகைக்கு கொடுத்துள்ளார்[6]. இதனால் வேறுவழியின்றி நாங்கள் இங்கு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். அறிவுநிதி தொடர்ந்து மிரட்டி வருவதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. மேலும் எங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறை எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் எங்களை மிரட்டும் அறிவுநிதி, பூங்கொடி,யோகமங்களம் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மு..முத்து மறுக்கும் புகார்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மு.க. முத்து புகார் மனு கொடுத்த நிலையில் இந்த புகார் மனுவை மறுத்து மு.க. முத்து சார்பில் திங்கள்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தனது மனைவியை யாரோ தூண்டிவிட்டு இந்த புகார் மனுவை கொடுக்கச் செய்துள்ளதாகவும் தனக்கும் மகனுக்கும் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றும் கூறியுள்ளார். எங்களது குடும்பப் பிரச்னைக்கு நானும், எனது மனைவியும், மகனும் பேசி தீர்வு காண்போம் என்றும் கூறியுள்ளார்[7].  மு. க. முத்து கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதிக்குப் பிறந்த மகன். ஒருகாலத்தில் அதிமுகவில் இருந்தவர்[8].

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழியா அல்லது மாற்றுவழியில் செல்வார்களா?: திராவிடப் பாரம்பரியம் வளர்ந்ததிலிருந்து, தமிழக மக்கள் பேச்சில் வல்லவர்களாகி விட்டார்கள். இப்பொழுதே கேட்கவே வேண்டாம், சினிமாவின் போக்கை தமது போக்காக மாற்ரிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழியா அல்லது மாற்றுவழியில் செல்வார்களா என்று பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 60-70 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏன் குடும்பம் சார்ந்த முரண்பாடுகள், பிரழ்சிகள், குற்றங்கள்னாதிகமாக நடக்கின்றன, பெருகி வருகின்றன, அதற்கும் திராவிட சித்தாந்தத்திற்கும் தொடர்பு உண்டா இல்லை நாடெங்கிலும் நடப்பது தான் இது என்று ஒதுக்கிவிடலாமா?

இல்லை, நிச்சயமாக,

 • தமிழகத்தில் “திருமண முறிவு விழாக்கள்” இப்பொழுது தான் நடத்தப் பட்டன;
 • தாலி தேவையில்லை என்ற ரீதியில் விஜய் தொலைக் காட்சியும் தமிழகத்தில் நடத்தியுள்ளது;
 • தாலி அறுக்கும் தமிழர்களும் உருவாகி இருக்கிறார்கள்;
 • அது மட்டுமல்ல, கோயிலில் அம்மன் தாலிகளையும் திருட ஆரம்பித்துள்ளனர்.
 • அம்மனின் முன்பு கால் தூக்கி உட்கார்ந்த நடிகை குஷ்பு தான் கற்பின் விலைய பேசியுள்ளாள்.
 • ஆனால், இந்திய பெண்மையை விலைபேசி வரும் ஆங்கில ஊடகங்கள், இவளின் கற்பழிப்புப் பற்றி கருத்துக் கேட்கின்றனர்.
 • யார் வேண்டுமானாலும், யாருடைய மனைவியை கூட்டி வைத்துக் கொள்ளலாம், என்று நாத்திகம் பேசும் பிரபல நடிகனும் – கமல்ஹஸன் இங்குதான் இருக்கிறான்.
 • கணவனை தூரத்தில் வைத்து விட்டு, இந்த கேடு கெட்ட நடிகனுக்கு முத்தம் கொடுக்கும் தமிழச்சிகளும் உருவாகி இருக்கிறார்கள்.

ஆக இதெல்லாம் திராவிட சித்தாந்தத்தின் சாதனைகள் அல்ல; பெண்மையை சீரழித்த சித்தாந்தம்; அதனால் தான் கற்பை விலை பேசும் குஷ்பு போன்ற நடிகைகளும் இருக்கிறார்கள்.

வேதபிரகாஷ்

30-04-2013


[4] The Hindu, Karunanidhi’s eldest son alleges ill-treatment by heir,
CHENNAI, April 30, 2013, http://www.thehindu.com/news/cities/chennai/karunanidhis-eldest-son-alleges-illtreatment-by-heir/article4667607.ece

[6] “A few years ago, our son chased away us from our house in Gopalapuram. He has now rented it out while we stay in a rented, dingy house in Kanathur. This continuous mental torture by our son has been unbearable and due to this, our health also deteriorated,” said Ms. Sivagamisundari in her complaint.

http://www.thehindu.com/news/cities/chennai/karunanidhis-eldest-son-alleges-illtreatment-by-heir/article4667607.ece

[8] Karunanidhi married Dayaluammal four years after his first wife, Padmavathi, died in 1944, leaving behind a son, M.K. Muthu, a singer-actor who defected to the AIADMK. http://www.outlookindia.com/article.aspx?240630

தமிழைக் காக்கும் அரை நிர்வாண நடிகைகள், கவர்ச்சி பெண்கள், “தமிழச்சி” போர்வையில் உலா வரும் மகளிர்!

ஜனவரி 27, 2012

தமிழைக் காக்கும் அரை நிர்வாண நடிகைகள், கவர்ச்சி பெண்கள், “தமிழச்சி” போர்வையில் உலா வரும் மகளிர்!

திராவிடச்சியா, தமிழச்சியா? இனி தமிழ்தான், வேறொதுவுமில்லை என்று திராவிடர்கள் தங்களது போர்வாட்களை ஏந்தி கிளம்பி விட்டார்கள். அடலேறுகள், மடலேறுகள் போரில் குதித்துவிட தயாராக இருக்கிறார்கள். திக, திமிக, அதிமுக, தேமுக, என்று அதுவாக இருந்தாலும், தமிழ்தான். நடிகை ஒன்றை வைத்துக் கொண்டு பேச விடுகிறர்கள், முன்னோட்டமாக! அவள் திராவிடச்சியா என்றால், தமிழச்சி என்று சொல்லிக் கொண்டால் போதும் என்ற நிலையையும் வைத்து விட்டார்கள். முதுகைக் காட்டி நடித்தவர்கள், இன்று புறமுதுகிடாமல் எதிர்த்து நிற்பார்களா? அரைகுறையாக மார்பைக் காட்டியர்வர்கள், மார்பில் விழிப்புண் பெறுவார்களா, இல்லையா? திராவிட சிங்கங்கள் தாம் பதில் சொல்லியாக வேண்டும். மாம், முறத்தையல்ல, முதுகையும், மார்பையும் காட்டியவர்கள் புறப்பட்டு விட்டார்கள்! புலி வருகிறதா, சிங்கம் வருகிறதா என்று தெரியவில்லை!

அதிமுக ஆட்சியில் தான் தமிழ் மொழி வளர்கிறது நடிகை விந்தியா: காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவர் அணியின் சார்பில் மொழிபோர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளரும்,நடிகையுமான விந்தியா பங்கேற்று பேசியது: “அறிஞர் அண்ணா உலக தமிழ் மாநாடு நடத்தினார்.அவர் வழியில் வந்த எம்ஜிஆர் மதுரையில் 5-வது உலக தமிழ்மாநாடு நடத்தினார். எம்ஜிஆரின் வழி வந்த ஜெயலலிதா தஞ்சையில் 1995-ஆம் ஆண்டு 8-வது உலக தமிழ் மாநாடு நடத்தினார். தமிழ் மொழிக்காக போராடும் இயக்கம் அதிமுகதான் அதிமுக ஆட்சியில் தான் தமிழ் மொழி வளர்க்கிறது[1]. தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசாமல் தமிழ் மொழியில் மட்டுமே பேசி பழகுவோம்”, என்றார். ஆமாம், தமிழிலே பேசி பழக வேண்டியதுதான்!

குச்பு தமிழ் வளர்த்த / வளர்க்கும் விதம்: குச்பு என்றால் நாற்றம்,றஆனால், சூடு-சுரணையுள்ளா திடராவிடன் யாரும் குச்பு என்று சொல்வதில்லை. மாறாக, குஷ்பு என்று சொல்லி, கோவில் கட்டி கும்பிடுகிறான். அந்த குச்பு, இன்று தமிளைக் காக்க புறப்பட்டு விட்டாள், தமிழச்சியாக! ஒருமுறை, கருணாநிதி மேடையில் இருக்கும் போது, குச்பு தமிழ் பேசி நாறடித்த போது, கருணாநிதியே “அம்மாடி போதும்டி” என்ற அளவிற்கு வந்து கண்டித்தார். இன்றோ, ஈரோட்டில், குச்பு நாறடித்துக் கொண்டிருக்கிறது. இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழி குறித்துத் தெரியவில்லை என்று தமிழில் புலமை பெற்ற திமுக நடிகை குஷ்பு ஈரோட்டில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் கவலை வெளியிட்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும்[2].

சமஸ்கிருதத்திற்குப் பிறகு செம்மொழி ஸ்தானத்தை தமிழுக்கு வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதி: நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். தமிழ் மொழியை பேசுகிறேன். தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு – நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது. இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது. இந்த மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான். இதனால் உலகம் முழுவதும் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான். தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறான். இந்த பெருமையை நமக்கு பெற்று கொடுத்தவர் கலைஞர் தான் என்றார் அவர்.

மொழிப்போரில் மொத்தத் தமிழர்களும் குதிப்போம்: இனி கருணாநிதி சும்மா இருப்பாரா? கருணாநிதி அழைப்பு[3] இப்படி உள்ளது! தமிழை மத்திய ஆட்சி மொழியாக கொண்டு வர அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்[4]. காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் அருகில் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சுந்தர், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்மொழி, எட்டியப்பன், மல்லிகா மோகன், மாவட்ட பொருளாளர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சன் பிராண்ட் ஆறுமுகம்[5] ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் நகர செயலாளர் அ.சேகர் வரவேற்றார்.  கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது: “ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். இதனை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஏராளமான தியாக உள்ளங்கள், நம்முடைய தமிழ் தலை நிமிர உயிர் நீத்தார்கள். இவர்களால் தலைக்கு வந்த ஆபத்து நீங்கி விட்டது. தமிழுக்காக அவர்கள் உயிரையும், மூச்சையும் இழந்ததால் பின்னுக்கு தள்ளப்பட்டது இந்தி மொழி. 1938ம் ஆண்டு 14 வயது பள்ளி மாணவனாக, நான் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். இன்றைக்கு எனக்கு வயது 88. ஆகவே, தமிழ் மொழிக்காக 74 ஆண்டுகள், நான் போராடி வருகிறேன்[6]. பெரியார் வழியில் அண்ணா கை பிடித்து போராடினேன். அந்த போராட்டங்கள் நடந்து முடிந்து விட்டது”.

இன்றைக்கும்இந்திமொழிஆதிக்கம்வேண்டுமா? என்ற விவாதம் எழுந்த போது சிறைப்பட்டோம், சித்ரவதை பட்டோம். மொழி போருக்காக போராடிய ஒரே கட்சி திமுக என்று, இங்கு சிலர் பேசினார்கள். ஆனால், எல்லா கட்சிகளும் உரிமை எடுத்து கொண்டு ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அண்ணா வழியில் வந்தவர்கள் என்ற உணர்வுகளோடு, முல்லை பெரியாறு பிரச்னையில் மொத்த தமிழகமும் போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும். இந்தியை மற்ற மாநிலங்களில் ஆட்சி மொழியாக கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதனை கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்று கொள்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நாங்கள் தோற்கவில்லை[7] மக்கள்தான் தோற்றார்கள்! நாம் ஆட்சியை இழந்தாலும் தோற்றுப்போனாலும், மக்கள் நம்பக்கம்தான் இருக்கிறார்கள், அவர்கள் என்னை மாத்திரம் அல்ல எனது தலைமையில் உள்ள இந்த கழகத்தையும் கைவிட மாட்டார்கள் என்ற உறுதியோடு உங்கள் முன்னால் நிற்கிறேன். கடையில் போய் சாமான் வாங்கும்போது அந்தத் தோல்வியின் கனம் உங்களுக்குத் தெரியும்[8]. ஆகவே தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள். தாங்கள் தவறு செய்ததை உணர்ந்த பிறகு வாழ்க்கையில் தவறே செய்ய மாட்டார்கள், வாழ்க்கை முழுவதும். அப்படிப்பட்ட ஒரு படிப்பை காஞ்சிபுரத்தில் உள்ள உங்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது.  அந்த பாடத்தை பெற்றுக் கொண்டிருக்கிற நீங்கள், அந்தப் பாடத்துக்கு மதிப்பளித்து எதிர்காலத்திலாவது இப்போது செய்த தவறை இனியும் செய்யமாட்டோம் என்ற உறுதியோடு உங்களையும் காப்பாற்றிக் கொண்டு, இந்த சமுதாயத்தின் எதிர்கால தலைமுறையையும் காப்பாற்றுங்கள்.

திராவிடம்என்றசொல்லைதற்போதுஏற்றுக்கொள்ளமறுக்கிறார்கள்: திமுகவின் நோக்கம், மூத்த மொழியான தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும். அதற்காக அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் பாடுபட வேண்டும். திராவிடம் என்ற சொல்லை தற்போது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். திராவிடம் என்பது கலாசாரம், இனம், பண்பாடுகளை கொண்டது. திராவிடர்கள், இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள். ஆரியர்கள் வருவதற்கு முன்பே, இங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். திராவிடம் என்பது நீயும், நானும் ஏற்படுத்தியது அல்ல[9].

திராவிடம்என்பதுகற்பனைஅல்ல:. நம்முடைய முப்பாட்டன் கண்டுபிடித்த இனத்தின் பெயரை, நாம் பெற்றுள்ளோம்[10]. பேரறிஞர் அண்ணாவே திராவிட நாடு என்ற கைப்பட புத்தகம் எழுதியுள்ளார். அதில், அவர் திராவிட நாடு என்ற கொள்கையை கைவிடவில்லை. திராவிடம் என்பது கற்பனை அல்ல. ஒரு இனத்தின் தாகம், எழுச்சி, மானத்தை உரமாக கொள்கின்ற லட்சியத்தின் அடித்தளம் திராவிடம். ஆகவே, நாம் யாரையும் நம்பி ஏமாந்து விட வேண்டாம்.  தேர்தலுக்கு முன்பு, இந்த எழுச்சி இல்லை. இப்போது, இந்த கூட்டத்தை பார்க்கும் போது, மிக எழுச்சியை காண்கிறேன். எப்படி வந்தது, இந்த எழுச்சி. அடிபட்டால் தான் தெரியும் என்று நீங்கள் சொல்லாமல் சொல்லும் எழுச்சி இது. அறிஞர் அண்ணா, ஒரு முறை தேர்தலின் போது வாக்குகளை சேகரிக்க சென்றார். அப்போது பலர் முகத்தை திருப்பி கொண்டு சென்றார்கள். அண்ணா அடுத்த முறை முதல்வரானதும், சென்னை ராஜ்ஜியம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார்[11].

தமிழர்கள்பகுத்தறிவோடு, அண்ணாவின்தம்பிகளாக, கழகத்தின்உடன்பிறப்புகளாகசிந்தித்துவாக்களிக்கவேண்டும்:. அதே அண்ணா தமிழ்நாட்டில் இந்தி மொழி கட்டாயம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ் மொழி மட்டும் தான் ஆட்சி மொழி என்று முழங்கினார். தோல்வி என்பது திமுகவிற்கு இல்லை. உங்களுக்கு தான். இப்போது தான் உங்களுக்கு தோல்வியின் கணம் தெரிகிறது. தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள் தான். ஆகவே, எதிர்காலத்தில் மன உறுதியோடு, எதிர்கால தலைமுறையை காக்கும் வகையில், தமிழர்கள் பகுத்தறிவோடு, அண்ணாவின் தம்பிகளாக, கழகத்தின் உடன் பிறப்புகளாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் திருவள்ளூர் வேளாண் விற்பனை குழு முன்னாள் தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் நன்றி கூறினார்.


[5] எதற்கெல்லாம் சன் பிராண்டு உள்ளதோ தெரியவில்லை. குச்பு கூட சன் பிராண்ட் தான், அக்மார்க் முத்திரை மாதிரி. பச்சைக் குத்துவது விட்டுவிட்டு, இப்பொழுது பிராண்ட் என்று சொல்லிக் கொள்கிறார்கள் போல!

[6] இப்படியே, அவரவர் வயதை சொல்லிக் கொண்டு, இத்தனை ஆண்டுகள் தமிழுக்காக போராடுகிறேன் என்று சொல்லலாம். குச்பு கூட நாளைக்கு சொல்வார். திராவிடர்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்!

[8] 2ஜியின் கனத்தை விட அதிகமா, குறைவா என்று கனியும், ராஜாவும், பூங்கோதையும், ராஜாத்தியும் மற்றவர்களும் சொல்ல வேண்டும்.

[9] ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினார்கள் என்று சொல்லமல் சொல்கிறார் போலும்!

[10] அதாவது, முப்பாட்டன் காலத்தில், கால்டுவெல் கண்டுபிடித்ததை, அப்படி நாஜுக்காக சொல்கிறார் போலும்! திராவிடர்கள் புரிந்து கொண்டால் சரிதான்.

[11] ஆனால் உதய சூரியன், ராஜாத்தி, மற்ற சமஸ்கிருத பெயர்களை மாற்றவில்லை.

தமிழச்சி குச்பு, கவர்ச்சி குஷ்பு, திமுக நடிகை குஷ்பு, குஷ்பு சுந்தர் – மாறிவரும் அவதாரங்கள்!

திசெம்பர் 7, 2011

தமிழச்சி குச்பு, கவர்ச்சி குஷ்பு, திமுக நடிகை குஷ்பு, குஷ்பு சுந்தர் – மாறிவரும் அவதாரங்கள்!

தமிழனுக்கு பித்தேறியபோது, மும்பையிலிருந்து இறக்குமதியான இந்த முஸ்லீம் நடிகைக்குக் கோவில் கட்டி கும்பிட்டானாம்!

கவர்ச்சி காட்டி நடித்தபோது, பித்தம் இன்னும் ஏறி பலான படங்கள் கிடைக்குமா என்று ஏங்கவும் செய்தார்களாம்!!

ஜெயா டிவியிலிருந்து விரட்டியடிக்கப் பட்டதும், கொதித்து போய், பித்தம் இவருக்கு ஏறிவிட்டதாம்.

ஜாக்பாட்டும் மாறி விட்டது, ஜாக்கெட்டுகளும் மாறி விட்டன. கண்ணாடி போட்ட ஜிகினா ஜாக்கேட்டுகளில் வேறு நடிகைகள் வந்து விட்டார்கள்!

உடம்பு சிறுத்து விட்டதே என்று மக்களுக்கு ஏக்கம் தான், ஆனால் என்ன செய்வது? கலைஞர் டிவியில் ஜாக்பாட்டா காட்டமுடியும்?

நடுவில் சுந்தருக்கு கோபம் வந்துவிட, குழந்தைகளோடு, ஹனிமூன் / தேன்நிலவு என்று லண்டனுக்குச் சென்று விட்டாராம்!!

திமுகவில் சேர்ந்து மேடை பேச்சாளராகி விடலாம் என்று குழறி மழலை தமிள் பேச, ஒருமுறை கருணாநிதியிடமே வாங்கிக் கட்டிக் கொண்டாராம்!!!

திமுக தோற்றவுடன், நிலைமை மோசமாகியவுடன், மழலையோட பேச ஆரம்பித்து விட்டார். ஜாக்பாட் மேடையேறிவிட்டது போலும்!

கனிமொழி பிரச்சினையில், இந்த மழலைமொழி பெண்ணுக்கு சுதந்திரமாம்! வேறு வழியில்லை, தமிழன் இந்த தமிழை கேட்டே ஆகவேண்டும்!!!

வடக்கில் அன்பழகனாம் தெற்கில் குஷ்புவாம், பாவம் திசைகள் மாறிவிட்டன!! அண்ணாதுரை இருந்திருந்தால் “தெற்கு பெருக்கிறது, வடக்கு சிறுக்கிறது” என்று மாற்றி சொல்லியிருப்பார்!!

வடக்கில் வந்த குச்பு, தெற்கில் ஆதிக்கம். ராமையா பாடு திண்டாட்டம்தான்!!! எல்லாம் தட்சிணாமூர்த்தி வேலைதான்!!!!

இனி தட்சிணாமூர்த்தி வடக்கு பார்க்கவே மாட்டார், பெயருக்கேற்றார்போல இருந்து விடுவார். ஆனால், தெற்கில் தான் சனி உள்ளது. இருப்பினும் பகுத்தறிவு உள்ளதே, சனியை வடக்கே அனுப்பி விடுவாரா என்று பார்ப்போம்!!

வேதபிரகாஷ்

07-12-2011

கருணாநிதியின் துணைவி பொட்டு வைத்துக் கோண்டு கோவிலில் வழிபாடு நடத்தினாராம்!

செப்ரெம்பர் 28, 2011

கருணாநிதியின் துணைவி பொட்டு வைத்துக் கோண்டு கோவிலில் வழிபாடு நடத்தினாராம்!

 

உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு நடத்தினார் ராஜாத்தி[1]: 28-09-2011 அன்றைய தினமலரில், புகைப்படத்துடன் இப்படியொரு செய்தி வந்துள்ளது.  பிறகு இணைத்தளத்தில் தேடி பார்த்தபோது, ஆங்கில நாளிதழ்களில் அதிகமாகவே செய்திகள் வந்துள்ளன என்று தெரிகிறது. தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் தாயாரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியாருமான ராஜாத்தி, கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், நேற்று முன்தினம் வழிபாடு நடத்தினார். பிறகு விசாரித்ததில் உண்மையிலேயே, நாத்திக கருணாநிதியின் துணைவி, சிறிதும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் சாமி கும்பிட சென்றுள்ளனர். இதற்காக பெங்களூருவில் இருக்கும் செல்வம் முதலியோர் பிரத்யேகமாக ஏற்பாடுகளை செய்துள்ளனர். காவேரியுடன் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ள உடுப்பி நகருக்கு வந்த ராஜாத்தி, சுமார் ஒரு மணி அளவில் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்[2]. கன்னத்தில் போட்டுக் கொண்டு நமஸ்காரம் செய்தார்.

சிரூர் மடத்தின் சுவாமிகளை ராஜாத்தி தரிசித்தது: பொதுவாக மத்வ சம்பிரதாயத்தில் இருக்கும் மதகுருமார்கள், ஆச்சார்யர்கள் மிகவும் ஆசாரமாக இருப்பார்கள். சம்பிரதாயங்களிலிருந்து சிறிதும் விலக மாட்டார்கள். இந்நிலையில் நாத்திக துனைவி அத்தகைய சூவாமிகளை பிரத்யேகமாக தரிசித்து, ஆசிகளைப் பெற்று, தங்க விக்கிரத்தைப் பெறுவது என்றெல்லாம் உள்ள விஷயங்கள், மத்வ சம்பிரதாய பக்தர்களுக்கு வியப்பையும், அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சுவாமியை வழிபட்ட அவர், சிறிது நேரம் பிரார்த்தனை செய்ததாக, சிரூர் மடத்தின்[3] திவான் பி.லாதவ்ய ஆச்சாரியா, நிருபர்களிடம் தெரிவித்தார். கோவிலில், லட்சுமி வராஹ தீர்த்த சுவாமி, சிரூர் மடத்தின் பர்யாய சுவாமி ஆகியோர், மந்திரங்கள் ஓதி, அட்சதை தூவி, ராஜாத்தியை ஆசீர்வதித்தனர். “மந்திராட்சதையை” பவ்யமாக வாங்கி வைத்துக் கொண்டாராம்[4]. கோவிலில் வழங்கப் பட்ட பிரசாதத்தையும் அவர் சாப்பிட்டார். தினசரி நிகழ்ச்சிகள் மற்றும் புகைப்படங்கள் இந்த மடத்தின் இணைதளத்தில் அதிகமாகவே வெளியிட்டு வருகின்றனர். ஆனால், அவற்றில் (26-09-2011 அன்றைய) ராஜாத்தியைக் காணவில்லை[5]. ஆகவே, ராஜாத்தி விசேஷமாகத்தான் வது சந்தித்துள்ளார் என்று தெரிகிறது. 48 தினங்களில் கனிமொழி எல்லா குற்றச்சாட்டுகளிலிலிருந்தும் விடுபடுவார் என்று ப்ர்யாய லட்சுமிவர் தீர்த்தர் ராஜாத்தி அம்மாவிடம்[6] உறுதியளித்தாராம்!

48 தினங்களில் கனிமொழி எல்லா குற்றச்சாட்டுகளிலிலிருந்தும் விடுபடுவார்! இப்படி ப்ர்யாய லட்சுமிவர் தீர்த்தர் ராஜாத்தி அம்மாவிடம் உறுதியளித்தாக வந்துள்ள செய்திகளையும், புகைப்படங்களையும் பார்த்த மத்வர்கள் ஆடிபோயுள்ளனர். ஒருவேளை, ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த, இவ்விதமாக நாத்திகர்கள் திட்டமிட்டு செய்துள்ளனரா அன்று கூட அவர்கள் வெளிப்படையாக பேசுகின்றனர். சுவாமிகள் அவர்களை அறைக்குள் அனுமதித்தே இருக்கக் கூடாது என்றும் பொறுமுகின்றனர். பல பக்தர்களுக்கே கிடைக்காத அத்தகைய ஆசி, எப்படி நாத்திக-இந்து-விரோத கருணநிதியின் துணைவிக்கு அளிக்கப்பட்டது என்றும் கேட்கிறார்கள்.

கர்நாட தீர்த்த யாத்திரை செய்யும் கருணநிதி துணைவி: இந்து கடவுளர்களை தூஷித்துக் கொண்டே பிழைப்பு நடத்தி வரும், இந்த கேடு கெட்ட இந்து விரோதிகள், எப்படி இப்படி எதுவும் இல்லாமல் கோவில்-கோவில்களாகச் சுற்றி, சாமியார்களிடம் சென்று வேண்ட வேண்டும்? பெரியார் ஏன் கைவிட்டு விட்டார் இந்த பகுத்தறிவி சிற்பிகளை, நாத்திக பக்தர்களை? உடுப்பி மாவட்டம் கொல்லூரில் அமைந்துள்ள தாய் மூகாம்பிகை கோவிலுக்கும் ராஜாத்தி சென்று சாமி தரிசனம் செய்ததாக தெரியவந்துள்ளது. அவர், திகார் சிறையில் உள்ள தன் மகள் கனி மொழிக்காக, கர்நாடக மாநில கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து பிரார்த்தித்து கொண்டதாகத் தெரிகிறது.

வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் தூக்கில் தொங்குவார்களா? திராவிட நாத்திகர்கள் ஏதேதோ பேசி வந்துள்ளனர். மூன்று நாட்கள் முன்பு கூட, வீரமணி கோஷ்டியினர், இந்துக்களுக்கு எதிராக பேசி “அடி வாங்கி” உள்ளனர், அதாவது, வெளிப்படையாக இந்துக்கள் அந்த போலித்தனமான, இந்து விரோதிகளை, மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், இப்படி பல மனைவி-துணைவிகளை வைத்துக் கொண்டு, அவர்களை இப்படி கோவில்-குளம் சுற்ற அனுமதிக்கலாமா? பெரியார்ன் ஆவி என்ன செய்து கொண்டிருக்கிறது? திராவிட புரோகிதர்களுக்கு என்னவாயிற்று? வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் தூக்கில் தொங்குவார்களா? நாங்கள் கவரிமான் இனம் என்று பேசுவார்களா அல்லது, கவரி வீசிக் கொண்டு, வெட்கங் கெட்டு வாழ்வார்களா?

வேதபிரகாஷ்

27-09-2011


[1] தினமலர், உடுப்பிகிருஷ்ணன்கோவிலில்வழிபாடுநடத்தினார்ராஜாத்தி, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2011,01:05 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=322042

[4] The Hindu, Udipi, September 26, 2011, http://www.thehindu.com/news/national/article2487890.ece

ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்துக் கொள்ளை!

செப்ரெம்பர் 27, 2010

ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்துக் கொள்ளை!

ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்துக் கொள்ளை![1]: இதுவரைக்கும் ராஜராஜனைப் பற்றி எந்த தமிழனுக்கும், குறிப்பாக திராவிடம், திராவிட சித்தாந்தம் பேசும் பகுத்தறிவாளனுக்கு, அக்கரையிருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இன்று திடீரென்று ராஜராஜன் பெயரில் ஏகப்பட்ட கூத்துகள், ஆட்டங்கள், கொண்டாட்டங்கள்! லட்சங்களை செலவு செய்து, தங்கள் பெயரும் அதில் வராதா என்ற ரீதியில் விளம்பரங்கள். இதில் கருணாநிதி குடும்பத்தினரின் தொல்லையான கொண்டாட்டங்கள் தாங்க முடியவில்லை.

செம்மை நெல்லுக்கு செம்மை, “ராஜராஜன் 1000”: நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், “ராஜராஜன் 1000′ என்று பெயரிடுகிறேன். என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஏதோ இவர் பெயர் வைத்துதான் ஆகப்போகிறது என்பது போல இருக்கிறது, அகம்பாவம், ஆணவம்! உருப்படியாக, உண்மையாக தான் என்ன செய்திருக்கிறார் என்று யோசித்துப் பார்ர்க்கவேண்டும்.

பிச்சையை அள்ள வந்த பெருமாள்: தஞ்சை பெரியகோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “ராஜராஜனுக்கு நாம் பெருமை சேர்க்கவில்லை. நமக்குத்தான் ராஜராஜன் புகழை பிச்சையாக வழங்கியுள்ளான். அப்படிப்பட்ட பெருமைக்குரிய மன்னாதி மன்னன் ராஜராஜன். உள்ளூர் ஆட்சி முறை, கலை, சமயம், இலக்கியம் என பல்வேறு துறைகளில், பிற்காலங்களில் மீண்டும் அடைய முடியாத மேன்மையை அப்போதே தமிழகம் பெற்றது[2]. சோழர்களுடைய பாரம்பரியம் கி.மு., – கி.பி., என்று பகுத்து பார்க்கும் போது, 176 ஆண்டு ஒரு சேர சோழப் பேரரசு தென்னகத்தில் இருந்தது, நிலைத்து வாழ்ந்தது. அப்போது, தஞ்சை, சோழப்பேரரசின் தலைநகராக இருந்தது. சோழ சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்தில், குறிப்பாக ராஜராஜன் நிர்வாகம் அனைத்து மன்னர்களுக்கும் உதாரணமாக விளங்கியது[3]. ராஜராஜன் திரட்டிய நிதி எப்படியெல்லாம் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிட முடியாது. மக்களின் நலவாழ்வுக்கு, நாட்டை காப்பாற்ற, வசூலிக்கப்பட்ட வரிப்பணம் செலவிடப்பட்டது.

உலகளந்த போரும், வரி வசூலும்: வரியை வசூலித்து, மக்களுடைய பணத்தை திரட்டி இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் அரசு, ஒவ்வொருவர் தலையிலும் இவ்வளவு கடனை சுமத்தியிருக்கிறது என்று பேசுகின்றனர். அப்படி மக்கள் தலையில் கடனை சுமத்தும் எந்த அரசும் இந்தியாவில் இல்லை. அப்படிப்பட்ட அரசும் தமிழக அரசு இல்லை. நாம் வாங்கும் கடன்களை மக்கள் தொகையால் வகுத்து புத்திசாலி அரசியல்வாதிகள், தலைக்கு இவ்வளவு கடன் என்று சொல்கின்றனர். நாம் வாங்கும் கடன்கள், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதம் வரை இருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் காலத்தில் நிலங்களை அளக்க போர் உருவாக்கப்பட்டது. அதற்கு உலகளந்த போர் என்று பெயர். ராஜராஜன் காலத்தில் நிலங்களை அளக்க ஒரு முறை கையாளப்பட்டிருந்தது. இதற்கென பயன்படுத்தப்பட்ட ஒரு கோலுக்கு உலகளந்தான் கோல் என்று பெயர். நிலங்களை நிலம், கொல்லை, காடு எனப் பிரித்து, அக்காலத்திலேயே அளவீடுகள் செய்யப்பட்டன[4]. ராஜராஜன் சைவன் என்றாலும் சமணத்தையோ, பவுத்தத்தையோ வெறுத்தவன் அல்ல[5].

யோக்கியதை இல்லாதவகள் ராஜராஜ ஆட்சிமுறையைப் பற்றி பேசுவது: ராஜராஜன் காலத்தில் ஊராட்சித் தலைவர்களாக, கால்வேலி சொந்த நிலம் இருக்க வேண்டும்[6]. படித்தவனாகவும், எதையும் மற்றவர்களுக்கு புரிய வைக்கும் தன்மை உள்ளவனாகவும், எண்ணத்திலும், செயலிலும் தூய்மை உடையவனாகவும், 30 வயதுக்கு மேற்பட்டவனாகவும், ஒழுக்கம் மிகுந்தவனாகவும், குற்றமில்லாதவனாகவும் இருக்க வேண்டும். கள்ளக் கையெழுத்து போட்டோர், லஞ்சம் வாங்கியவர், அபராதம் செலுத்தியவர் போட்டியிட முடியாது என்பது, ராஜராஜன் காலத்தில் விதிமுறைகளாக இருந்தது. இப்போது போட்ட கையெழுத்தையே சிலர் இல்லை என்று கூறுகின்றனர்[7]. ராஜராஜன் காலத்தில் குடவோலை முறையில் உள்ளூர் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழன் நிர்வாகத்திறமை, கவிதைத்தன்மை, வீரத்தின் விளை நிலமாக இருப்பான். ராஜராஜன் செல்லாத பகுதிகள் இல்லை. வெல்லாத பகுதிகள் இல்லை. அவனைக்கண்டு அஞ்சாதவர்கள் இல்லை. பல போர்களில் தந்தைக்கு துணையாக நின்று வெற்றிகளை குவித்தான் ராஜேந்திரன். ராஜராஜன் பெயர் இந்த கோவிலில் ஆயிரம் ஆண்டு நிலைத்து, ஆயிரமாவது ஆண்டை நாம் கொண்டாடும் நேரத்தில், அடுத்த ஆயிரமாவது விழா நடத்தும் போது நாம் இருக்கப்போவதும் இல்லை.

நம்மை யாரும் மறக்கப் போவதுமில்லை!: இரண்டாயிரமாவது ஆண்டு விழா நடக்கும் போது, நம்மை யாரும் மறக்கப்போவதுமில்லை. பெரியகோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் வேளையில், தஞ்சை நகரின் வளர்ச்சிக்கு தமிழக அரசின் சார்பில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவிர, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், சாலை வசதி மேம்படுத்தப்படுகிறது. தஞ்சை அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு என்று தனியாக பிரிவு ஏற்படுத்தப்படும்.தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதிபோல், மத்திய அரசும் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மத்திய திட்ட மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நிதியில்லாமலேயே நிதியின் பெயரில் தானம், தம்பட்டம்: அந்த நிதி இன்னும் வந்துசேரவில்லை. அதை சேர வைக்கும் வேலையை அவரே செய்ய வேண்டும். ஏற்கனவே, தமிழக அரசால் செம்மை நெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது நல்ல உற்பத்தித் திறன் கொண்டது. எனவே, செம்மை நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், “ராஜராஜன் 1000′ என்று பெயரிடுகிறேன். இது, தமிழக மக்கள் எப்போதும் ராஜராஜனை நினைத்துக் கொண்டிருக்க உதவும். மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப சோழர்கால வரலாற்று கண்காட்சி மேலும் ஒருவார காலம் வரை நீடிக்கப்படுகிறது.இவ்வாறு முதல்வர் பேசினார்.

கருணாநிதி-ஸ்டாலின் மற்றும் ராஜராஜன்-ராஜேந்திரன்: ராஜராஜ சோழன் கட்டிய சுவரை உடைத்துத் ததருடன் போல பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்து, அரசு பணத்தில் விழா எடுத்து, ……இப்படி ஒன்றுமே சொந்தத்தில் இல்லாது ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்துக் கொள்ளையடிக்குக் யுக்தி / வித்தை, இந்த திராவிட மந்திரவாதிக்குத்தான் தெரியும் போல!

1. “ராஜராஜன் திரட்டிய நிதி எப்படியெல்லாம் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிட முடியாது. மக்களின் நலவாழ்வுக்கு, நாட்டை காப்பாற்ற, வசூலிக்கப்பட்ட வரிப்பணம் செலவிடப்பட்டது”, என்று சொல்லி தான் எப்படி அரசு பணத்தை விரயமடித்தார் என்கிறார்.

2. “நாம் வாங்கும் கடன்கள், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதம் வரை இருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது” – அதாவது, அதேபோல கொள்ளயடிப்பேன், மக்கள்தானே பிறகு கட்டவேண்டும்!

3. “பல போர்களில் தந்தைக்கு துணையாக நின்று வெற்றிகளை குவித்தான் ராஜேந்திரன்” – ஸ்டாலின் அதே போல உதவினாராம்! சொல்லாவா வேண்டும், துரைமுருகன் அதை சொல்லியே விட்டார்[8].

4. குடவோலை முறையை குடும்பவோலை முறையாக மாற்றி பேசியது படு கேவலமாக இருந்தது[9].

5. நாணயமில்லாது நாணயக் கொள்ளையடித்து, ராஜராஜன் பெயரில் நாணய வெளியீடு.

6. கோடிகளில் ஊழல் செய்த ஸ்பெக்டரம் ராஜாவை வைத்துக் கொண்டு, ராஜராஜனின் “தபால் தலை” வெளியிடுவது, ராஜராஜனையே கேவலப்படுத்துவது போல இருந்தது.


[1]தினமலர், செம்மை நெல்லுக்கு ராஜராஜன் 1000 : முதல்வர் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010,23:46 IST;மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 27,2010,00:32 IST,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=93554

[2] ஆக உண்மையை ஒப்புக்கொள்கிறார்!

[3] இப்பொழுதுள்ள திராவிட கழகக்கட்சிகளின் ஆட்சி, ஊழல் மிகுந்து, மக்களை சுரண்டும் கொள்ளையாட்சியாக உள்ளது.

[4] http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=309323&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

[5] தினமலரில், இன்னுமொரு கமென்ட்: paramarasenthiran – chennai,இந்தியா  2010-09-27 03:56:31 IST : “ராஜராஜன் சைவன் என்றாலும் சமணத்தையோ, பவுத்தத்தையோ வெறுத்தவன் அல்ல. அனால் நான் நாத்திகன் என்ற போர்வையில் இஸ்லாத்திற்கும் கிருத்துவ சமயங்களுக்கு கொடுக்கும் மரியாதையை சைவ , வைணவ சமயத்துக்கு கொடுக்க மாட்டேன். பகுத்தறிவு பேசும் போதும் ராசராசன் வாயில் வழியே கோயில் உள்ளே செல்லமாட்டேன். என்னே பகுத்தறிவு ? …எல்லாம் சரி இவருக்கு (நாத்திகர் ) கோயிலில் என்ன வேலை ?… …”

[6] ஆனால், இப்பொழுதோ, பதவிக்கு வந்த பிறகு, நிலத்தைக் கொள்ளஒயடித்துச் சேர்த்துக் கொள்கின்றனர். குறிப்பாக கோவில் நிலம் கொள்ளையென்றால், அல்வா சாப்பிடுவது போல இந்த திராவிட-நாத்திகக் கொள்ளையருக்கு!

[7] தினமலரில், “Ancient vs Modern – சென்னை, இந்தியா” என்பவரின் கமென்ட்: “……………இன்றைய மன்னர் ஆட்சியில் கொலைசெய்பவர்கள் கொள்ளைஅடிப்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், ஒழுக்கம் இல்லாமல் பல தாரம் கண்டவர்கள், படிக்காதவர்கள், எதையும் மற்றவர்களுக்கு புரிய வைக்கும் தன்மைஇல்லாதவர்கள், ஜாதி வெறியர்கள், மரவெட்டிகள், பகுத்தறிவு என்று சொல்லி ஊரை ஏமாற்றும் பச்சோந்திகள் மட்டுமே போட்டியிட முடியும் என்பது விதிமுறைகளாக இருக்கிறது…………”!

[8] http://www.dailythanthi.com/article.asp?NewsID=596788&disdate=9/27/2010

[9] http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=16411&id1=4

நடந்துள்ள வைதீக மற்றும் சுயமைரியாதைத் திருமணங்கள்: நாத்திகப் போர்வையில் நடிக்கும் நிஜ நடிகர்களும், அரசியல்வாதிகளும்!

செப்ரெம்பர் 7, 2010

நடந்துள்ள வைதீக மற்றும் சுயமைரியாதைத் திருமணங்கள்: நாத்திகப் போர்வையில் நடிக்கும் நிஜ நடிகர்களும், அரசியல்வாதிகளும்!

ரஜினியின் மகளின் திருமணம் வைதிகமுறைப்படி நடந்தது என்பது முக்கிய செய்தியாக உள்ளது[1]: ரஜினிகாந்த் எல்லாம் வைதீக முறைப்படி சரியாக நடக்கவேண்டும் என்று, மிகவும் குறிப்பாக இருந்தார், அக்கரையுடன் கவனித்துக் கொண்டு வந்தார். திருமணத்திற்கு, அதாவது முகூர்த்தத்திற்கு திருவாளர் கருணாநிதி வராதது வியப்பாக இருந்தது. இப்படி வைதீக முறைப்படி நடப்பதால், அங்கு செல்லாமல் தவிர்த்து விட்டார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்றாலும் மிகையாகாது. வயதில் பெரியவராக இருந்தும், சம்பிரதாயப்படி, அழைத்தும் வராதது, மற்றவர்களும் புரிந்தது, அவர் வராதது நன்றாகவே புலப்பட்டது.

வைதீக மற்றும் சுயமைரியாதைத் திருமணங்கள்: இப்படி வைதீகத் திருமணம் நடந்தவுடன், “சுயமரியாதைத் திருமணம்” நடக்கிறது. அதிலும் அரசியல்வாதிகள், நடிகர்கள், இத்யாதி கலந்து கொள்கிறார்கள், பேசுகிறார்கள். ஆனால், அவர்களுக்குள், ஒரு மனப்போராட்டம் நடக்கிறது என்று அவர்களது பேச்சுகளினின்றே வெளிப்பட்டது.  அது நிச்சயமாக நாத்திக-ஆத்திக போராட்டம்தான். ஆட்சி, அதிகாரம், பணம் என்றுள்ளாதால், கருணாநிதியை அடிவருடும் கூட்டமும், உண்மையிலேயே, தன்மானத்துடன், அதாவது, “உனக்கு உன் நம்பிக்கை என்றால், எனக்கு என் நம்பிக்கை, ஆகவே, எனர்து நம்பிக்கைப் பற்றி விமர்சனம் செய்ய உனக்கு அதிகாரம் கிடையாது. அப்படி செய்தால், நாங்களும் செய்யவேண்டியிருக்கும்”, என்ற வெளிப்படையான நிலை உருவாகிவரும் நேரம் எனலாம். இந்த முகாந்திரத்துடன், இனி இவர்களின் பேச்சுகளைப் படித்தால், உண்மை விளங்கும்.

வைமுத்து மகன் திருமணத்தில் கருணாநிதி பேசியது[2]: “நான் சொன்னதையெல்லாம் வைத்துக் கொள்ளாமல் வைரமுத்து, கருணாநிதியிடம் சொல்லிவிடுவாரோ என்று ரஜினி பயப்பட வேண்டாம். சொல்லிவிட்டார்; இருந்தாலும், அது என்ன விஷயம் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை,” என முதல்வர் கருணாநிதி பேசினார்.  வைரமுத்து வெளிப்படையானவர் என்றும் குறிப்பிட்டார். கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா, சென்னையில் நடந்தது.

கருணாநிதி நடத்திவைத்த திருமணம்: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி மணமக்களுக்கு மாலையையும், மங்கல நாணையம் எடுத்துக்கொடுத்து[3] நடத்தி வைத்தார்[4]. இதில் திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “எல்லாருக்கும் வராத இரக்கம், “தினமலர்பத்திரிகைக்குக் கூட வந்து, “கொஞ்சம் கருணாநிதியை ஓய்வெடுக்க விடுங்கள்; மேடையிலே அவரை அதிக நேரம் உட்கார வைத்து துன்புறுத்தாதீர்கள்என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.ஆனால், நம்மீதுள்ள உரிமையின் காரணமாக, வைரமுத்து நன்றியுரை என்ற பெயரால், மணமக்களுக்கு வாழ்த்துரையுடன், விளக்க உரையையும் ஆற்றியிருக்கிறார். மணமக்கள் இப்படியெல்லாம் வாழ வேண்டுமென்று அவர்களுக்கு, அதிகாரக் குரலில் ஆணையிட்டதை கேட்டோம்.
வரப்போகிற மருமகள், வீட்டிலிருக்கும் பையனுக்கும் வீட்டிலே வைத்து சொல்லியிருக்கலாம். இவ்வளவு பேர் முன் சொன்னதற்கு காரணம், அவரவர் வீடுகளில் உள்ள மணமக்களும் அறிவுரையை பெற வேண்டுமென்ற பரந்த நோக்கம்தான்.

மணமகன் மண்மகளுக்கு எழுதி வைத்த உயில்: “அண்மையில் கபிலன் எழுதிய புத்தகத்தை படித்தேன். அதில் தன் மனைவிக்கு இல்லத்துக்கு வரப்போகும் அரசிக்கு சில அறிவுரைகளை கூறி இருந்தார். உனக்கு பிடித்த சட்டை எனக்கு பிடித்த புடவை அடிக்கடி உடுத்தி கொள்ளும் தியாகம் தவிர்ப்போம். வெளியூர் புறப்படும் போது பதறி வந்து வழி அனுப்பாதே. வாசல் படி வரை வந்து சொல்ல வேண்டாம். சமையல் அறையில் நின்று கொண்டே சொல்[5]. பிரிவின் துயர் குறைப்போம். இந்த கவிதை வரிகள் இப்போது போற்றப்படாவிட்டாலும் எதிர் காலத்தில் போற்றப்படும் என்பதை புரிந்து கொண்டேன்[6].”

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்: “வைரமுத்து எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். மனதில் ஒன்றையும் வைத்துக் கொள்ள மாட்டார். “நான் சொன்னதை எல்லாம் மனதில் மட்டுமே வைத்துக் கொள்ளாமல், கருணாநிதியிடம் சொல்லிவிடுவாரோஎன்று ரஜினி பயப்பட வேண்டாம்[7]. எதையெதை வைத்துக் கொள்ள வேண்டுமோ, அவைகளை வைத்துக் கொண்டு, எதையெதை வெளியிடலாமோ அதைத்தான் வெளியிடுவார். உங்கள் விஷயத்தில் எதையுமே சொல்லாமல் வைத்திருக்கிறார் என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம்; சொல்லியிருக்கிறார்[8]. இருந்தாலும் அது என்ன விஷயம் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை[9]”, இவ்வாறு கருணாநிதி பேசினார்.

திருமண விழாக்களில் தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்: கருணாநிதி அளிக்கும் விளக்கம்[10]: திருமண விழாக்களில் தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி அறிவுரை கூறினார். கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன்- ரம்யா ஆகியோரின் திருமணம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமணத்துக்கு தலைமை வகித்து முதல்வர் கருணாநிதி பேசியது:

கருணாநிதி பேசியது: “திருமண விழாவில் அனைவரிடத்திலும் உள்ள உரிமை காரணமாக கவிஞர் வைரமுத்து நன்றி உரை என்ற பெயரில் மணமக்களுக்கான வாழ்த்துரையுடன், விளக்க உரையும் இங்கு ஆற்றியுள்ளார். மணமக்களுக்கு அவர் கூறிய அறிவுரையை, வீட்டிலேயே சொல்லியிருக்கலாம். ஆனால், இங்கு கூடியுள்ள அனைவரின் வீட்டில் உள்ள மாப்பிள்ளைகள் மற்றும் மருமகள்களுக்கும் சேர்த்து பரந்த நோக்கோடு அவர் அறிவுரை கூறியுள்ளார் என்று கருதுகிறேன். இதுபோன்ற திருமண விழாக்களில் விளக்க உரை தேவை. ஆனால், அது எப்போது என்பது எனக்கும், திராவிட கட்சித் தலைவர் வீரமணிக்கும் நன்றாகத் தெரியும்[11]. எனவே, தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்”, என்றார் முதல்வர் கருணாநிதி.

துணை முதல்வர் மு.. ஸ்டாலின்: தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. ஆனால், 1967ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அப்போதைய முதல்வர் அண்ணா பெற்றுத் தந்தார்[12]. அந்த வகையில் இப்போது நடைபெற்றிருக்கும் கபிலன்ரம்யா தம்பதியினரின் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்[13]. தமிழகத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுபோல், நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுத் தருவார்[14].

நடிகர் கமலஹாசன்: கவிஞர் வைரமுத்து கொடுக்கல் வாங்கலில் மிகவும் கறாரானவர். அதாவது கொடுக்கப்படும் அன்புக்கு இரு மடங்காக கொடுக்கவேண்டும் என்ற கடமை உணர்வு உடையவர். அவர் காட்டும் அன்புக்கு நிகராக, நானும் காட்ட வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அதனால்தான் எங்கள் இருவர் இடையேயான நட்பு இத்தனை நாளும் தொடர்கிறது. திருமணத்துக்கு வந்தவர்களை வைரமுத்துவின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினர் வரவேற்றது பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

இதுபோல் முதல்வர் கருணாநிதி, அவரைப் பார்த்து எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்த இயக்குநர் பாலச்சந்தர், நான், கவிஞர் வைரமுத்து மற்றும் எங்களுடைய பிள்ளைகள் என்ற கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறைகளை இந்த மேடையில் காண முடிகிறது[15].

நடிகர் ரஜினிகாந்த்: திருமணத்தில் அனைவரையும் திருப்திபடுத்தவேண்டும் என்பது முடியாத காரியம்[16]. அவ்வாறு அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று நினைப்பவன் மிகப் பெரிய முட்டாள்[17]. இரண்டு திருமணத்தை நடத்தியதன் மூலம் நான் தெரிந்து கொண்டது இதுதான்[18]. இது தெரிந்திருந்தும் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து இங்கு எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது[19]. கோபம் என்பது என்னுடைய பலம் என நீண்ட நாள் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அது பலம் அல்ல, பலவீனம் என புரிய வைத்தவர் வைரமுத்து. ஏனெனில் அவர் என்னை விட அதிக கோபக்காரர். வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தால்தான், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்[20]. எனவே, மணமக்கள் இருவரும் முதலில் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்[21].

இயக்குநர் பாரதிராஜா: வாழ்க்கை வழிநடத்தலுக்கும், வாழ்க்கை புரிதலுக்கும் கவிஞர் வைரமுத்துவை மிஞ்சியவர் எவரும் இல்லை. எனவே, வாழ்வில் எப்படி பிழைக்க வேண்டும் என்பதை தந்தையிடமே கபிலன் கற்றுக்கொள்ளலாம்[22]. எப்படிப் பழகவேண்டும் என்பதை என்னிடம் கற்றுக்கொள்ளலாம். புழுதி மண்ணில் பிறந்தபோதும், பூலோகத்தைப் படித்து மிக உயரத்துக்கு சென்றுள்ளார் வைரமுத்து. பட்டினத்தில் பிறந்துள்ள கபிலன், சிறிது புழுதி மண்ணையும் படிக்க வேண்டும். ஏனெனில் அங்கு ஈரம் உள்ளது என்றார் பாரதிராஜா.

வேதபிரகாஷ்

07-09-2010


[1] http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/rajini-daughter-marriage-aswin.html

[2] தினமலர், வைரமுத்து வெளிப்படையானவர் : முதல்வர் பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2 010 ; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 06, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=78433

[3] http://www.maalaisudar.com/newsindex.php?id=35276%20&%20section=19

[4] http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/5-kapilan-vairamuthu-marriage-karunanidhi-rajini.html

[5] இவ்வளவு பகுத்தறிவு இருந்தாலும், மனைவியை சமையல் அறையில்தான் அடைக்கிறது போலும்! அதுவும் படித்தாண்டி வராதே என்றும் கவனமாக இருப்பது தெரிகிறது!

[6] http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/5-kapilan-vairamuthu-marriage-karunanidhi-rajini.html

[7] ரஜினிகாந்த் ஏன் பயப்படவேண்டும், அப்படியென்ன பெரிய ரகசியத்தை வைரமுத்து கருணாநிதியிடம் சொல்லிவிட்டார்? இது ஏதோ “பிளக் மெயில்” மிரட்டல் போலல்லவா இருக்கிறது?

[8] அப்படியென்றால், அது உண்மையான நட்பாக இருக்க முடியுமா? அல்லது வைரமுத்து, கருணாநிதியின் ஒற்றராக வேலை செய்து வேவு பார்த்து வந்தாரா? அவருக்கு அப்படியொரு ஆஸ்தான வேலையையும் கருணாநிதி கொடுத்துள்ளார் என்றாலும், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

[9] கருணாநிதி மிகவும் வக்கிர புத்தி படைத்தவர், பிடிவாதக்காரர், பழி வாங்குவதில் வல்லவர், தமக்குப் பிடிக்காதவரை கடைசிவரை மனத்தில் வைத்துக் கொண்டு பழி வாங்குவதில் வல்லவர்…….., முதலியவையெல்லாம், அவருடம் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தான் தெரியும்.

[10] தினமணி, திருமண விழாக்களில் தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்: கருணாநிதி, First Published : 06 Sep 2010 12:00:00 AM IST; Last Updated : 06 Sep 2010 12:41:43 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?………….&SectionName=Tamilnadu

[11] தன்னை மாதிரி வீரமணியும் எப்படிப்ப் பட்டவர் என்று எடுத்துக் காட்டுகிறார். பாம்பின் கால் பாம்பறியுமா இல்லையா என்பதை மற்றவர்கள் தாம் அறிந்து கொள்ளவேண்டும்.

[12] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[13] பாவம், வைரமுத்து மற்றும் பகுத்தறிவுவாதிகளுக்கு இப்படியொரு சந்தேகம் வந்துவிட்டது போலும்! ரஜினியின் திருமணம் வெளிப்படையாக அனைவரும் பார்க்கும்படி நடந்தபோது, இவரது மகனின் கல்யாணம் ஏனப்படி நடக்கவில்லை என்று மக்கள் கேட்டுவிடப்போகிறார்களா?

[14] கருணாநிதிக்கும் இப்படியொரு சபலம் உள்ளதா, அல்லது, சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றி சந்தேகம் வந்து விட்டதா? தமிழகத்திற்கு வெளியே சென்றால், அசிங்கமாகி விடும் என்று நினைக்கிறார்களா?

[15] திருமணம் என்ற விஷயத்தில் மட்டும் படுதோல்வி அடைந்துள்ள கமல்ஹஸனிற்கு, இப்படி கல்யாணங்களில் கந்து கொள்ளும்போது, எப்பொழுதுமே, மனம் குறுகுறுத்துக் கொண்டுதான் இருக்கும். அதனால், ஏதோ பெரிய தத்துவம் பேசுவது மாதிரி, இப்படி தனது உணர்வுகளை மறைத்து பேசி போய்விடுவார்.

[16] குறிப்பாக கருணாநிதி, மற்றும் மிகவும் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள்.

[17] கருணாநிதியைப் பொறுத்த வரைக்கும், ரஜினிகாந்த் ஒரு மாபெரும் ஆத்திக முட்டாள்! முன்பு ராமதாஸ் சொன்னதையும் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும், “தமிழ்நாடு உருப்பட வேண்டுமானால், இந்த சங்கரச்சாரி, ரஜினிகாந்த ஒழிக்கப்படவேண்டும்”!

[18] இரண்டு திருமணங்கள் என்று போட்டு உடைத்தே விட்டார், ரஜினிகாந்த், இனி இந்த விவகாரம் நிச்சயம் தொடரும்.

[19] வைரமுத்துவிற்கு இப்படியொரு “டோஸ்” கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் நடந்துவிட்டதால், வேறு வழியில்லை என்ற நிலை போலும்!

[20] திருமணத்தில் தோல்வி கண்டவர்கள், டைவர்ஸ் செய்தவர்கள், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்பவர்கள், பிரிபவர்கள்…………………………(அத்தகையோர் அங்கு அதிகமாக இருப்பதினால்) முதலியோர் எல்லொருக்கும் ஒரு பெரிய “டோஸ்”!

[21] மற்றவர்களுக்கு இங்குக் கூட பிரச்சினை வருகிறது. ஏனெனில், ஒரு ஆண் மூன்று-நான்கு என்று கல்யாணம் செய்துள்ளான் இல்லை ஐந்து-ஆறு என்று பெண்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளான், இன்றும் வாழ்கிறான். அதே போலத்தான் பெண்களும்! ஒரு பெண் மூன்று-நான்கு என்று கல்யாணம் செய்துள்ளாள் இல்லை ஐந்து-ஆறு என்று ஆண்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளாள், இன்றும் வாழ்கிறாள்! இதுவும் பகுத்தறிவு, சுய மரியாதை வரையறைகளுக்குள் வருமா என்று தெரியவில்லை.

[22] அதாவது கருணாநிதியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியல் இல்லை என்கிறார் போலும்!

நீராவை சுத்தப் படுத்துதல், கொசு ஒழிப்பு முதலிய வேலைகளில் இறங்கியுள்ள ராசா!

மே 10, 2010
நீராவை சுத்தப் படுத்துதல், கொசு ஒழிப்பு முதலிய வேலைகளில் இறங்கியுள்ள ராசா!
வன்மொழி பேசி, வசவு பாடி, பெண்களைத் தள்ளி, கோபக்கனல் தெரித்து, ஆட்கள் சூழ, ஊடகக் காரர்களின் கேள்விக்கணைகளினின்று தப்பி, காரில் ஏறி, மூன்றாம் படையில் இல்லாத மந்திரி பதவி கொடுத்த கருணாநிதியைச் சந்தித்து, அவரது ஆணையின் படி, செம்மொழி மாநாட்டு வளாகத்திர்கு வந்து நீராவை / நீரை சுத்தப்டுத்துதல், கொசு ஒழிப்பு………போன்ற துறைகளில் கவனமாக அறிவுரைகளை சொல்ல ஆரம்பித்துவிட்டார்! தனது ராடியா / ரேடார் கண்களை வைத்துக் கொண்டு, ‘குப்பைகளை போடாதே”, என்றெல்லாம் அறிவுறுத்துகிறார்!
செம்மொழி மாநாடு: சுகாதாரத்தில் கவனம்: மத்திய அமைச்சர் ராசா அறிவுரை
மே 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18248

Latest indian and world political news information

ராசாவின் அறிவுரை: கோவை:’செம்மொழி மாநாட் டில் பல லட்சம் பேர் கூடுவார்கள்; சுகாதார பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என, மத்திய தொழில்நுட்ப அமைச்சர் ராசா, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராசா, கோவை வந்தார். ‘கொடிசியா’ வளாகத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்கம், கண்காட்சி அரங்கம் அமைக்கப்படும் இடங்களை பார்வையிட்டார். தமிழக ஊரக தொழில் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பழனிச்சாமி, கலெக்டர் உமாநாத் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். உணவுக்கூடம், திறந்தவெளி கலையரங்கம், இணைய தள மாநாடு நடக்கும் அரங்க பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

ராசா நீரா ராடியாவிடம் கலந்தாலோசித்தாரா என்று தெரியவில்லை: செம்மொழி மாநாட்டையொட்டி நடக்கும் இணையதள மாநாட்டு பணிகள் குறித்து, கலெக்டரிடம் ஆலோசித்தார். அதன்பின், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்கு வெளியே, மாநாட்டுப் பந்தல் மற்றும் கண்காட்சி அரங்கம் அமைக்கும் இடங்களை ஆய்வு செய்தார்.மாநாட்டு பந்தல் பற்றி அமைச்சரிடம், கலெக்டர் கூறுகையில், ‘பந்தல் 1000 அடி நீளம், 4000 அடி அகலம், 30 அடி உயரத்தில் 60 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்படும். மேடை, 60 அடி நீளம், 80 அடி அகலத்தில் அமையும். மேடையின் இரு புறமும் வி.வி.ஐ.பி.,களுக்கான அறை, 16 அடிக்கு 16 அடி அளவில் தயார் செய்யப்படுகிறது. இரு புறத்திலிருந்தும் மேடைக்கு போகமுடியும்’ என்றார்.

கொசு, குப்பை,கொசு ஒழிப்பு பணி என்றெல்லாம்  அறிவுரைக்கூறும் ராசா: மாநாடுக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் சுகாதார வசதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார். மாநாடு நாட்களில் குப்பை சேர்ந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, நகரம் முழுவதும் ஏராளமான குப்பை தொட்டிகளை வைக்க வேண்டுமென்று கூறிய அமைச்சர் ராசா, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகளை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நீராவை, இல்லை நீரை, குடி நீரை சுத்தப் படுத்தவேண்டும் என்கிறார்: நன்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வினியோகிப்பதுடன், அவை வினியோகம் செய்யப்படும் இடங்களும் சுத்தமாக இருக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார். ஆய்வின்போது, வணிகவரித்துறை இணை கமிஷனர் ஆனந்தகுமார், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் நாச்சிமுத்து, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தன், துடியலூர் பேரூராட்சித் தலைவர் சுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

டெல்லியில் பத்திரிகையாளரை ராஜா தாக்கியதாக தா. பாண்டியன் கூறி பதவி நீக்க வேண்டும் என்கிறார்!

மே 9, 2010

ராசாவை பதவி நீக்க வேண்டும்: தா. பாண்டியன் வ‌லியுறு‌த்த‌ல்
செ‌ன்னை, ஞாயிறு, 9 மே 2010( 08:57 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1005/09/1100509001_1.htm

டெல்லியில் பத்திரிகையாளரை தாக்கியதாகக் கூறப்படும் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் கூறினார்.

நெ‌ல்லை மாவ‌ட்ட‌் அம்பாசமுத்திரத்தில் செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், டெல்லியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை மத்திய அமைச்சர் ஆ. ராசா தாக்கியதாகக் கூறப்படுகிறது. அது உண்மையானால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். கண்ணியம் காக்க தவறிவிட்டார் என ராசாவை அமைச்சர் பதவியில் இருந்து கருணாநிதி விலகச் சொல்ல வேண்டும்.

தமிழ் ஊடகங்களின் போலித்தனம்: கருணாநிதி ராஜாவைக் காக்கும் பின்னணி என்ன?

மே 9, 2010

தமிழ் ஊடகங்களின் போலித்தனம்: கருணாநிதி ராஜாவைக் காக்கும் பின்னணி என்ன?

சென்னை விமானநிலையத்தில் அத்தகைய விவகாரங்கள் நடந்த பிறகும், தமிழ் ஊடகங்களின் செய்தி வெளியீட்டுத் தன்மையின் போக்கு வினோதமாகத்தான் இருக்கிறது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் மத்திய மந்திரி ஆ.ராசா

தினத் தந்தி – ‎3 மணிநேரம் முன்பு‎ ராசா ஆலோசனை நடத்தினார். மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா நேற்று கோவை வந்தார். பின்னர் அவர் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.

தினத்தந்தி சொல்வது இப்படி……………………

அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க தகுந்த ஆதாரம் இல்லை

தினமணி – ‎5 மணிநேரம் முன்பு‎
ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறினார். ராசா மீது குற்றச்சாட்டு கூறும் கட்சிகள், அதற்குரிய

அபிஷேக் மனு சிங்வி சாதாரண நேரத்தில் சட்ட நுணுக்கங்களைப் பற்றி அதிகமாகவேப் பேசக்கூடியவர், ஆனால், இப்பொழுது சொல்வதோ இப்படி……….ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லை“!

அதாவது, காங்கிரஸ் ஆன மனு, சூத்திரராகிய திமுகவைக் காப்பாற்றக் கிளம்பிவிட்டது என்றும் நாளைக்கு திராவிட எழித்தாளர்கள் விளக்கம் கொடுக்கலாம்!

காங்கிரஸின் திருவிளையாடல்

ஆனால் மணீஸ் திவாரி, ராஜா ஏதோ கம்பெனிகளின் போராட்டத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார், இல்லை மாட்டிவிடப் பட்டுள்ளார், பலிக்கடா ஆக்கப் பட்டுள்ளார், என்றேல்லாம் விளக்கம் அளித்தது ஏன் என்று தெரியவில்லை.

ஏனெனில் பிரச்சினையே அங்குதான் ஆரம்பித்துள்ளது. கோடிகளில் பனம் கிடைக்கும் என்றுதான் அத்துறை விலைக் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

கொடுத்த கோடிகளை அதிகமாக அள்ள வேண்டும் என்பதினால்தான், கம்பெனிகளே முளைத்துள்ளன, அதில் சம்பந்தப் பட்டவர்களின் பங்கு உள்ளன.

பிறகு எதற்கு அத்தகைய போரில் சிக்கப் போகிறார்?

சரியான வேடிக்கைத்தான்!

அரசியல் அரங்கம்: ராசா பதவி விலக வேண்டுமா?

தினமணி – ‎7 மே, 2010‎

ஓரு லட்சம் கோடியா? அம்மாடியோ! என்று அதிர்ச்சியில் சாமானியன் ஆடிப்போய் இருக்க, அரசியல் கட்சிகளோ வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. ஆம், ஸ்பெக்ட்ரம் ஊழல்

தினமணி மட்டும் இப்படிஇப்பிரச்சினைப் பற்றி செய்திகள் வெளியிட்டிருப்பதால், உடனே திராவிட / தமிழ் சித்தாந்திகள் “வைத்தியநாத ஐயர்” / பார்ப்பனப் பத்திரிக்கை என்று ஆரம்பித்து விடுவர்!

ஆ. ராசா தலித் எனக் கூறி ஸ்பெக்ட்ரம் பிரச்னையை

தினமணி – ‎6 மே, 2010‎
சென்னை, மே 6: மத்திய அமைச்சர் ஆ. ராசா தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர் என்று கூறி, அவருக்கு எதிரான ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையை

ஆமாம், அந்த “பாப்பாத்தி” அப்படித்தான் சொல்வார். இதோ தெரிகிறதே “பார்ப்பனீயம்” என்று ஊளையிட ஆரம்பித்து விடுவர்!

‘தலித்’: கருணாநிதி மீது ஜெயலலிதா கடும் தாக்கு!

வியாழக்கிழமை, மே 6, 2010, 17:11[IST]

Jayalalitha

சென்னை: தன்னுடைய தேர்தல் தொடர்பான தேவைகளுக்கு எப்பொழுதெல்லாம் பொருத்தமாய் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் தன்னுடைய மருமகள் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, தலித் இனத்துடன் தனக்குள்ள நெருக்கத்தை காட்டிக் கொள்பவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராசா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கு காரணம், தொலைதொடர்புத் துறை அமைச்சரான ராசா தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பது தான் என்று டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறார் கருணாநிதி!

தன்னுடைய கட்சிக்காரரால் நிகழ்த்தப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை எந்த அளவுக்கு முக்கியத்துவமில்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக ஒரு முடிவு எடுப்பதற்கு முன் தன்னிடம் தெரியப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் பிரத்யேக அறிவுரையை மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராசா முற்றிலுமாக அவமதித்தது,

ஸ்பெக்ட்ரம் உரிமத்தை முதலில் வருபவருக்கு முதலில் அளிப்பது என்ற கோட்பாட்டிற்கு இந்திய தொலைதொடர்பு முறைப்படுத்தும் ஆணையம் தெரிவித்த எதிர்ப்புகளை புறக்கணித்தது,

சினிமா டிக்கெட்டை விற்பனை செய்வது போல், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை விற்பனை செய்யும் முடிவை ராசா எடுத்திருக்கிறார் என்று டெல்லி உயர் நீதிமன்றம் [^] கருத்து தெரிவித்தது,

ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத் தேதியினை முன் தேதியிட்டு ராசா மாற்றியமைத்தது தவறு என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ராசா எடுத்த முடிவின் காரணமாக குறைந்தபட்சம் ரூ. 26,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற இந்திய கணக்குத் தணிக்கைத் தலைவர் கோடிட்டுக் காட்டியது,

ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் கோரியது போன்ற பிரச்சனைகள் எதற்கும் கருணாநிதி பதில் அளிக்கவில்லை.
மாறாக, ராசா தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவே இந்தப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இது போன்ற பதிலின் மூலம், நாடாளுமன்றத்தில் ராசாவின் ராஜினாமாவைக் கோரும் தலித் தலைவர்களின் வாயை அடைத்துவிடலாம் என்று நினைக்கிறார்.

தன்னுடைய தேர்தல் தொடர்பான தேவைகளுக்கு எப்பொழுதெல்லாம் பொருத்தமாய் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் தன்னுடைய மருமகள் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, தலித் இனத்துடன் தனக்குள்ள நெருக்கத்தை காட்டிக் கொள்பவர் கருணாநிதி.

ஆனால், தன்னுடைய முந்தைய அமைச்சரவை சகாவான திமுக தலித் தலைவர் ஓ.பி.ராமனின் மைத்துனியை அழகிரி திருமணம் செய்தபோது, கருணாநிதி நிலைகுலைந்து போனதையும், அழகிரியை மதுரைக்கு சென்றுவிடுமாறு கட்டளையிட்டதையும் மூடி மறைத்துவிட்டார்.

இதன் காரணமாகத்தான், திமுகவில் இரண்டாம் இடத்திற்கான போட்டியில் அழகிரி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தன்னுடைய இனத்திலேயே பெண் எடுத்த இளைய மகன் ஸ்டாலினை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி.

இது போன்ற தவறான எண்ணத்தையும், அறுவெறுப்பையும் தலித் இனத்தவர் மீது கொண்டுள்ள அதே கருணாநிதி தான், ஊழல் கறை படிந்துள்ள ராசாவை எதிர்த்து குரல் எழுப்பும் எதிர்க்கட்சிகள் மீது, அவர் தலித் என்பதாலேயே அவருக்கு எதிராக குரல் எழுப்புவதாக குற்றம் சுமத்துகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தன் குடும்ப கருவூலத்தில் சென்றடைந்துள்ளதை மூடி மறைத்து பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே தலித் என்ற ஆயுதத்தை கருணாநிதி பயன்படுத்துகிறார்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ராஜ்யசபாவில் அதிமுக வெளிநடப்பு: இந் நிலையில் அமைச்சர் ராசாவைப் பதவி நீக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் இன்று அதிமுக எம்பிக்கள் கோஷமிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை கூடியதும், அமைச்சர் ராசா, நிரா ராடியா ஆகியோரின் உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்ட சிடிக்களையும், அதுதொடர்பாக வெளிவந்த செய்தித் தாள்களையும் அதிமுக எம்பிக்கள் காட்டி கோஷமிட்டனர்.  அப்போது பேசிய அதிமுக எம்பி மைத்ரேயன், ராசா உரையாடலை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதுதொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றப நோட்டீஸ் தந்துள்ளேன் என்றார்.  இதையடுத்து, அவையில் செய்தித் தாள்களையோ, சிடிக்களையோ காட்டக்கூடாது என்று அவைத் தலைவர் அன்சாரி அதிமுகவினருக்கு நினைவூட்டினார்.

எம்பிக்கள் அவரவர் இருக்கைகளில் அமர வேண்டும் என்று பலமுறை அன்சாரி கேட்டுக் கொண்டும் அதை அதிமுகவினர் ஏற்கவில்லை.  ராசாவை பதவி நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் அவை கூடியபோதும் அதிமுக எம்பிக்கள் அதே கோரி்க்கையை மீண்டும் வலியுறுத்தி கோஷமிடவே, இது பொறுப்பற்ற செயல் என்று எச்சரித்த அன்சாரி, அதிமுக எம்பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
இதையடுத்து அதிமுக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பியவாறு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இவ்வாறு, இதனை ஏதோ ஜெயலலிதா-கருணாநிதி பிரச்சினை மாதிரி தமிழ் ஊடகங்கள் காட்ட முயல்கின்றன.

கருணாநிதி அதிகாரத்தில் இயங்கும் ஊடகங்கள், இதைப் பற்றி மூச்சுக் கூடவிடவில்லை!

சரி, “தலித்” என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓட்டுவங்கி அரசியல் மட்டும் தான் குறி என்றால் கோடிக் கணக்கில் ஊழல் செய்த் பணம் எங்கே?

மற்றவை……………..

பவர் புரோக்கர் நீரா ராடியா – ஜூவி ரிப்போர்ட் [ஜூனியர் விகடனில் இச்செய்தி வந்துள்ளது – நன்றியுடன் இங்கு சேர்த்துக் கொல்லப்படுகிறது]

”முதல்வரின் டெல்லி விசிட் ரொம்ப சூப்பரா போச்சு. தலைவர் சொன்னது எல்லாத்தையும் சோனியாம்மா ஏத்துக்கிட்டாங்க. இனி கனிதான் டெல்லிக்கு ராணி…” – இப்படியெல்லாம் உற்சாக பலத்துடன் இருந்த தி.மு.க. மேலிட தலைவர்கள், கடந்த புதன் இரவு வெளியாகத் தொடங்கிய தொலைபேசி டேப் செய்திகளைக் கண்டு ஆடித்தான் போனார்கள்.. நீரா ராடியா என்கிற பலம்வாய்ந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி அடுத்தடுத்து சில பிரபலங்களுடன் பேசிய தொலைபேசிப் பேச்சின் சில பகுதிகள் என்று சொல்லி, அந்த டேப் விவரங்கள் செய்தியாகப் படிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி முடிந்த கையோடு… தி.மு.க. தரப்பிலிருந்து யாருக்கு என்ன பதவி என்று மத்திய அரசோடு பேரங்கள் தொடங்கிய சமயத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்கள் அவை. மறுபடி தொலைதொடர்புத் துறை கிடைக்குமா?’ என்று ஆ.ராசாவுடனும்… ‘அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய மூன்று குடும்பங்களுக்கும் மந்திரி பதவி வாங்கித் தருவதில் கருணாநிதி படும் சிரமங்கள்’ குறித்து கனிமொழியுடனும் நீரா ராடியா பேசியதாக விவரங்கள் அந்த டேப் தொகுப்பில் இருந்தன.

ஆ.ராசாவுக்கு தொலை தொடர்புத் துறை கிடைத்தால் தயாநிதி மாறன் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது பற்றியும், டி.ஆர்.பாலுவின் மன ஓட்டங்கள் பற்றியும் இந்த நீரா ராடியாவுடன் ஆ.ராசாவும், கனிமொழியும் எதற்காக இத்தனை நம்பிக்கை வைத்து பேசவேண்டும் என்ற கேள்வியும் குழப்பமும் இயல்பாகவே இதனால் எழத்தான் செய்தது. மத்திய அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களை ஒதுக்கும் விஷயங்கள் குறித்து அப்படியரு அதிகாரத் தொனி மிக்க வார்த்தைகளில் அந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி பேசுவதாகச் சொன்னது டேப் தொகுப்பு!

விவகாரம் அதுமட்டுமல்ல…. தொலைதொடர்புத் துறையின் சார்பாக அதற்கு முன்பும் அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் இந்த நீரா ராடியாவும் பல மணி நேரங்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு, வருமான வரித்துறைக்கென்றே உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவின் வசம் இருப்பதாகவும் அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கிவிட்டன தகவல்கள். வருமான வரித் துறை டேப் செய்திருந்த இந்த உரையாடல்களை, சி.பி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அளித்து உதவும்படி டெபுடி ஐ.ஜி-யான வினித் அகர்வால் வைத்த வேண்டுகோள் கடிதம் என்று ஒரு நகலும்…. ‘ஆமாம்… நிறைய விவகாரங்களை இது தொடர்பாக டேப் செய்திருக்கிறோம். உரியமுறையில் கேட்டு எங்களிடம் பெற்றுக் கொள்ளுங்கள். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக உங்கள் வசம் ஏதேனும் தகவல் வைத்திருந்தால், அதை எங்கள் விசாரணைக்கு நீங்களும் கொடுத்து உதவுங்கள்’ என்று வருமான வரித்துறையின் இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால் என்பவர் பதில் எழுதியாக ஒரு நகலும் இப்போது டெல்லியில் கசிந்து… பெரும் புயலைக் கிளப்பத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் 2009 வருடம் நவம்பர் மாதத்தில் நடந்ததாக அந்த நகல்களில் உள்ள தேதி குறிப்பிடுகிறது.

அதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து புயலடிக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே, அது தொடர்பான ரகசிய விசாரணைகளில் வருமான வரித் துறைக்கென்று உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவு இறங்கிவிட்டதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வருமான வரி அதிகாரி அளித்த பதில் கடிதத்திலேயே இந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி நீரா நாடியா பற்றி அதிர்ச்சியும் பிரமிப்பும் கலந்த தகவல்கள் அடுக்கப்பட்டுள்ளன.

வைஷ்ணவி கார்ப்பரேட் கன்ஸல்டன்ட், நோயஸிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீஸ், விட்காம் மற்றும் நியூகாம் கன்சல்டன்ஸி என்று பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அச்சாணியாக இயங்கும் இந்த பெண்மணியின் தொலைபேசி உரையாடல்களை, மத்திய உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றே டேப் செய்து வந்ததாகக் கூறுகிறது வருமானவரி கடித நகல். விமானப் போக்குவரத்து மற்றும் பல துறைகளில் உள்ள பிரமாண்ட நிறுவனங்களுக்கு ‘ஆலோசகராக’ செயல்படும் நீரா ராடியாவின் நிறுவனங்கள், தொலை தொடர்புத் துறை தொடர்பான நிறுவனங்களுடன் இறுக்கமான நட்பில் இருப்பதையும் கடித நகல் கூறுகிறது. ‘தொலைதொடர்புத் துறை தொடர்பான லைசென்ஸ்கள் பெற்றுக் கொடுப்பதில் இந்தப் பெண்மணிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். கூடவே, முக்கிய மீடியாக்களையும் தன் கட்டுப்பாட்டில் இவர் வைத்திருக்கிறார். தொலைபேசி லைசென்ஸ் தொடர்பான சில நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவுக்குள் படிப்படியாகக் கொண்டு வரும்படி இவர் அறிவுறுத்தும் சில தொலைபேசி உரையாடல்களும் எங்களிடம் உள்ளது. இல்லையென்றால், லைசென்ஸ் பெற்றதன் மூலம் கொள்ளை லாபம் பெற்றது தெரிந்துவிடும் என்றும் இவர் அறிவுரை கூறுகிறார்’ என்று சொல்லும் அந்த வருமான வரி கடிதம்…

‘தொலைதொடர்பு அமைச்சருடன் நேரடியாகவே இவர் பேசிய உரையாடல்களை நாங்கள் வைத்துள்ளோம். டெலிகாம் லைசென்ஸை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குப் பெற்றுத் தருவதில் தனக்குள்ள முக்கியப் பங்கு குறித்து இந்த நீரா ராடியா பெருமையோடு மத்திய அமைச்சரிடம் பகிர்ந்துகொள்கிறார்’ என்று கூறுகிறது. இது விவகாரமாக நீரா ராடியா தொடர்புகொண்டிருந்த மற்ற முக்கிய நபர் பற்றிய தகவல்களும் தங்களிடம் உள்ளதாகக் கூறுகிறது அந்தக் கடித நகல்.

மத்திய அமைச்சர் பதவியில் ஆ.ராசாவை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்காக முதல்வர் கருணாநிதி காய்களை நகர்த்தி வரும் நிலையில், அடுத்தடுத்து ராசாவின் பதவிக்கு வெடி வைக்கும் விதமாகவே கடித நகல், டேப் விவகாரம் என்று பரவுவது எப்படி என்பதுதான் இப்போது டெல்லியில் மிக சுவாரஸ்யமான விவாதம். அந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு சிலரை நோக்கி கைகள் நீள்வதையும் காண முடிகிறது.

”தொலைதொடர்பு தொடர்பான ரகசிய புலனாய்வு ஆவணங்கள் பகிரங்கமாக வெளியானது மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்!” என்று ஒரு தரப்பினர் சொல்லிக் கொண்டிருக்க… ”தொடர்ந்து பிரஷர் கொடுத்து வரும் தி.மு.க-வை பின்வாங்கச் செய்வதற்கு இந்த விவகாரமெல்லாம் உதவும். அந்த வகையில் காங்கிரஸ் அரசுக்கு இதில் நிம்மதிதான்!” என்று சொல்லி கண் சிமிட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

நமக்கும் அந்த ஆவண நகல்களில் சில கிடைத்தன. ‘டாப் சீக்ரெட்’, ‘கான்ஃபிடன்ஷியல்’ என குறியிடப்பட்ட அவையெல்லாம் யாரோ ஒரு உயர் அதிகாரிக்கு விசாரணை டீம் கொடுத்த தகவல் சுருக்கம் போலவே இருக்கிறது. அவை ஒரிஜினலான ஆவணங்கள்தானா… அதை வைத்து சி.பி.ஐ. தனது விசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்லும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தோடு இன்னும் ஏராளமான பல பகீர் விவரங்களையும் அதில் காண முடிகிறது.

நீரா ராடியாவை மையம் கொண்டு மொரீஷியஸ், ஆப்பிரிக்கா, கினியா என்று எல்லை தாண்டி நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் குறித்து ஒட்டுக் கேட்டதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன.

”இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற, மரியாதைக்குரிய ஒரு வடநாட்டுத் தொழிலதிபர், எக்காரணம் கொண்டும் தொலைதொடர்புத் துறைக்கு தயாநிதி மாறன் மீண்டும் அமைச்சராகிவிடக் கூடாது என்று நீரா ராடியாவிடம் கேட்டுக் கொள்ளும் உரையாடல் கிடைத்துள்ளது. அதையும் மீறி தயாநிதி மாறன் வந்துவிட்டால், தொலைதொடர்புத் துறையில் தான் செய்து வரும் பிசினஸ்களிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் தொழிலதிபர், நீரா ராடியாவிடம் கூறுகிறார்.

ஆ.ராசாவுக்கு குறிப்பிட்ட பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பெருந்தலைகளை பிரெயின்வாஷ் செய்யும் வேலையில் இந்தியாவின் பிரபல சேனல் முகங்கள் இருவர் செயல்பட்டனர். நீரா ராடியா மற்றும் அரசியல் பெண் வி.ஐ.பி. ஒருவருக்காகவே இவர்கள் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை நடத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த பவர்ஃபுல் பெண்மணி ஒருவருக்கு நீரா ராடியா மிக நெருக்கமானவர் போலவே போன் பேச்சுகளில் தொனிக்கிறது!” என்று கூறும் இந்த ஆவணங்கள், ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில் சர்ச்சைப் புயலில் சிக்கிய ஸ்வான் டெலிகாமையும் இதில் தொடர்புபடுத்துகின்றன.

”ஜார்கண்ட் மாநிலத்தில் டாடாவின் சுரங்க உரிமத்தை நீட்டிக்க நீரா ராடியா அப்போதைய ஜார்கண்ட் முதல்வர் மதுகோடாவுடன் பேசிய உரையாடலில் மதுகோடா 180 கோடி ரூபாய் கேட்டது தெரிய வந்துள்ளது. அதே உரிமத்தை ஜார்கண்ட் ஆளுநரிடம் நீட்டித்து வாங்கியுள்ளார் இந்த ‘சேவைக்காக’ ஒரு கோடி ரூபாய் நீராவுக்கு வழங்கப்பட்டுள்ளது!” என்று வேறு மாநில விவகாரங்களையும் இந்த ‘டாப் சீக்ரெட்’ ஆவண நகல்களில் காண முடிகிறது. மதுகோடா தொடர்பான ரெய்டுகளுக்கு இந்த ‘டாப் சீக்ரெட்’ ஆவணமும் ஒரு காரணமா என்பது தெரியவில்லை!

தொலைதொடர்புத் துறையின் ‘கிங்’களில் ஒருவரான சுனில் மிட்டல்கூட நீராவின் ‘சேவை’யை நாடினார் என்று தொலைபேசி மூலம் ஒட்டுக் கேட்டுச் சொல்கிறது இந்த ஆவணம். இந்த ரேஞ்சில் படிக்கப் படிக்க தலை சுற்ற செய்யும் தகவல்கள் கொண்ட ஆவணங்களில் தொழில் அதிபர்களுக்கும், மிகப் பெரிய அதிகாரிகளும், அரசியலின் உச்ச பதவிகளில் இருப்பவர்களுக்கும் இடையே எத்தனை ‘சாலிட்’டான பேரங்களும், புரிந்துகொள்ளல்களும் இருக்க முடியும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்து வைக்கும் வேலையில் நீரா ராடியா போன்ற இன்னும் எத்தனை மெகா ‘லாபியிஸ்ட்’கள் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்று யோசிக்கும்போது பயங்கரமாகத் தலை சுற்றுகிறது.

”குறிப்பிட்ட அந்த டேப் உரையாடல்களில் இருப்பது மத்திய அமைச்சர் ஆ.ராசா அல்லது ராஜ்யசபா எம்.பி-யான கனிமொழி ஆகியோரின் குரல்தானா என்பதற்கு என்ன ஆதாரம்? தி.மு.க-வை ஒழித்துக் கட்டுவதற்கு டெல்லியில் நடக்கும் பயங்கரமான சதிவலையின் அங்கம்தான் இதெல்லாம்!” என்று மறுக்கும் தி.மு.க. தலைவர்கள்,

”அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல்… தலைவரின் குடும்பத்துக்குள் பதவிப் போட்டி ஏற்பட்டதாகச் சொல்லி, அதை வைத்து ஒருத்தர் இன்னொருத்தரைப் பற்றி பேசிக்கொண்டதாக விவகாரத்தை நாடறியப் பரப்பினால், அதை வைத்து குடும்பத்துக்குள் மறுபடி குழப்பம் வரும் என்பதும் எங்கள் எதிரிகளின் திட்டம்!” என்று கூறுகிறார்கள் இந்த தி.மு.க. தலைகள்.

( நன்றி: ஜூவி )