Posts Tagged ‘சரித்திர புரட்டுகள்’

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? வேறெந்த காரணமா? (1)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? வேறெந்த காரணமா? (1)

இட்டுக்கதை, கட்டுக்கதை, மாயைகள் முதலியவற்றை உருவாக்குவதில் வல்லவர்கள் திராவிடத்துவ வாதிகள்: கட்டுக்கதைகளை உருவாக்குதில் திராவிடத்துவவாதிகள் கைத் தேர்ந்தவர்கள் ஆவர்.  அவற்றில் அரசியல் ஆதாயம், பணம், கான்ட்ராக்ட் கிடைக்கும் என்றால், பெரிதாக்கி ஊதுவார்கள்! சம்பந்தமே இல்லாத ஆட்கள் எல்லாம் திடீரென்று தோன்றி அதில் அதி-தீவிரமான விருப்பம் கொண்டிருப்பதைப் போலவும், அதற்கு உயிரையே கொடுப்பேன் என்ற ரீதியில் உழைப்பது போலவும் நாடகம் ஆடுவர். விவகாரங்கள் தெரிய வந்தால், சமாளித்துப் பார்ப்பார்கள், மாட்டிக் கொண்டால் அடங்கி விடுவார்கள், வழக்கு என்றெல்லாம் ஆகி விட்டால், எல்லாவற்றையும் அடியோடு மறைக்கப் பார்ப்பர்கள். திராவிடத்துவ சரித்திரம் என்றதே கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப் பட்டதே. எல்லாமே, ஒருதலைப் பட்ட கதைகள், அவர்களே வெளியிட்டுள்ள புத்தகங்கள், முதலியன…. அவற்றை சரிபார்க்க முடியாது, அவர்கள் சொல்லியுள்ளதை, எழுதியுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தான் எழுது முறை ஆராய்ச்சி நெறிமுறை எல்லாமே நடந்து வருகிறது. சரித்திராசிரியர்கள் என்று பிரகடப் படுத்திக் கொள்பவர்களும், அவ்வாறே ஆதரித்து, விருதுகள், பட்டங்கள், நிதியுதவிகள் பெற்றுக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். உண்மையுரைக்க அவர்களுக்கு திராணி இல்லை, மன்னசாட்சியும் கிடையாது. அப்படி செய்தால், தூக்கியெறியப் படுவர்.

திராவிடத்துவ வாதிகளின் பதினெண் புராணங்கள் உருவாக்கும் முறைகள்: பெரியார் புராணம், நாகம்மை புராணம், பெரியம்மை புராணம், பெஸ்கி புராணம், அண்ணா புராணம், கருணாநிதி புராணம், வீரமாமுனிவர் புராணம், தத்துவ போதகர் புராணம், எல்லீஸர் புராணம், ஜி.யு.போப் புராணம், வரிசையில் பென்னி குக் புராணமும் சேர்ந்துள்ளது. “நதிமூலம், ரிஷி மூலம் கேட்கக் கூடாது,” என்றால், இங்கும் மூலங்கள் கேட்கக் கூடாது, காண்பிக்கப் படாது. எழுதி வைத்ததைப் படி, ஒப்புக்கொள், பிரச்சரம் செய், கேள்விகள் கேட்காதே – என்பவை தான் ஆணைகள், ஏற்றுக் கொள்ளப் படவேண்டும். ஒருவர் முதலில் எழுதுவார், இன்னொருவர் விரிவாக்குவார், இன்னொமொருவர் இன்னும் கொஞ்சம் சேர்ப்பார், புத்தகங்கள் வெளிவரும், பிஎச்.டிக்களும் உருவாக்கப் படும், விழா எடுப்பர், விருதுகள்-பட்டகள் கொடுக்கப் படும், அவ்வளவு தான், பொற்றாமரைக் குளத்தில், பூமேடையில் வைத்து, தமிழ் சங்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது போன்ற ரீதியில் அரங்கேற்றப் படும். கலைமாமணி, பெரியார் விருது என்றெல்லாமும் கொடுக்கப் படும்.

2018 – முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கின் பெயரால் நூதன மோசடி அரங்கேறி வருவதாக திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது:. முல்லைப்பெரியாறு அணை என்பது தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குக் ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு முன்பு இராணுவப் பணிப் பொறியாளராகப் பணியாற்ற இந்தியா வந்தவர். அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் ஒருபுறம் தென் மாவட்ட மக்கள் தண்ணீர்ப் பிரச்னையால் வாடுவதையும் மறுபுறம் பெரியாற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதையும் பார்த்து, ஆற்றின் குறுக்காக ஒரு அணையைக் கட்டலாம் என்று ஆங்கில அரசிடம் அனுமதி பெற்றார். பின் பாதி கட்டப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அணை உடைந்து ஆங்கில அரசு திட்டத்தை மூட்டை கட்டினாலும் இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையெல்லாம் விற்று அணையைக் கட்டி முடித்தார். இன்றளவும் அவர் பெயரைச் சொல்லி பொங்கல் வைக்கும் அளவுக்கு அன்பும் நன்றியும் பாராட்டுகிறார்கள் தென்மாவட்ட மக்கள். இந்நிலையில், கடந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் பென்னி குக்கின் கொள்ளு பேரன் பேத்திகள் என டயானா ஸிப், ஸானி மற்றும் உறவினர்கள் என்று சிலர் தேனிக்கு வந்தனர்.ஆனால், இவர்கள் யாரும் பென்னி குக்கின் நேரடி வாரிசுகள் அல்ல என்பதும் இவர்களில் ஒருவர் மட்டும் பென்னிகுக்கிற்கு தூரத்து சொந்தம் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

சந்தன பீர் ஓலி ஈடுபடுள்ளதாக, கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி குற்றம் சாட்டுகிறார்: கம்பம் அருகே உத்தமப்பாளையம் பகுதியைச் நேர்ந்த சந்தன பீர் ஓலி என்பவர், லண்டனைச்சேர்ந்த டயானா ஸிப் உள்ளிட்ட 3 பேரும் பென்னிகுக்கின் கொள்ளு பேத்திகள் என்று கூறி அறிமுகப்படுத்தி அழைத்து வந்ததோடு, லண்டனில் உள்ள பென்னிகுக் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையை சீர்செய்யவும் அங்கு பென்னிகுக்கிற்கு நினைவுச்சிலை எழுப்பவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக கூறுகிறார்கள் கம்பம் பகுதி மக்கள். இந்நிலையில்  பென்னிகுக்கின் பேத்திகள் என்று நம்பி தாங்கள் உதவி செய்ததாக கூறுகிறார்கள் அந்த நிகழ்ச்சிக்கு உதவி புரிந்தவர்கள்.  ஒரு பக்கம் பேரன், இன்னொரு பக்கம் பேத்திகள் என்று வருவதும் விசித்திரமாக இருக்கிறது.

கம்ப – கோவிந்தன் என்பவர் வழக்கு தொடர்வதாகக் கூறியது: இதனைதொடர்ந்து கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி தேனி கம்பம் பகுதியில் பென்னி குக்கின் பெயரில் நிதி வசூல் செய்தநிலையில், கொடைக்கானலில் பென்னிகுக் ட்ரஸ்ட் என்ற பெயரில் இதே சந்தன பீர் ஒலி என்பவர் பென்னிகுக்கின் நிலத்தை அபகரிக்க, முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்[1]. மேலும் 1‌980 வரை பென்னி குக் பெயரில் கொடைக்கானலில் இருந்த 21 ஏக்கருக்கும் அதிக நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிர்ச்சித்தகவலை கூறுகிறார்[2]. இச்சுழலில் கம்பம் பகுதி மக்களின் புகார்கள் குறித்து லண்டனில் வசிக்கும் சந்தன பீர் ஒலியிடம் கேட்டபோது இந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் மறுப்பு தெரிவித்தாலும், பென்னிகுக்கின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளார் கோவிந்தன். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

ஜனவரி 2022 – ஸ்டாலின் – பென்னி குயிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப் படும்: முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்குக்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தன்னிடம் இருந்த சொத்தை எல்லாம் விற்று அரும்பாடு பட்டு 1895-ம் ஆண்டு இந்த அணையை கட்டியவர் இங்கிலாந்தை சேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுயிக். இந்த நிலையில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்[3]. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்[4], “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான இன்று (ஜனவரி 15) அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்[5].

கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகரத்தில் அமைக்கப் படும்: கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள்[6]. ஆங்கிலேயப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக், தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்தார்[7]. அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இம்மாவட்ங்களில் தற்பொழுது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன[8].

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] புதிய தலைமுறை, பென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி: திடுக்கிடும் புகார் , NewsPT, Published :07,Dec 2018 08:14 AM.

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/39312/Fraud-in-the-name-of-PennyCuick-at-theni

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு சிலை நிறுவப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, By Rayar A, Updated: Saturday, January 15, 2022, 13:29 [IST].

[4] https://tamil.oneindia.com/news/chennai/a-statue-of-john-pennycuick-will-be-erected-in-england-on-behalf-of-the-government-of-tamil-nadu-say/articlecontent-pf640795-445443.html

[5] தினத்தந்தி, இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலைமுதல் அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, பதிவு: ஜனவரி 15,  2022 12:25 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2022/01/15122526/Statue-of-Pennywick-in-the-UK–Announcement-by-Chief.vpf

[7] புதியதலைமுறை, இங்கிலாந்தில் பென்னிகுயிக்கிற்கு சிலை நிறுவப்படும்” – முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, தமிழ்நாடு,  கலிலுல்லா,  Published :15,Jan 2022 12:33 PM.

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/127124/John-Pennycuick-statue-will-be-installed-in-uk

“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – வாத-விவாதங்கள் ஏற்பட்டுவிட்டதால் திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும் வெளிப்படுகின்றன!

மே 19, 2016

“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – வாத-விவாதங்கள் ஏற்பட்டுவிட்டதால் திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும் வெளிப்படுகின்றன!

Alternative to Dravidian parties - PMK, IJK etc

திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்களே[1]: “திராவிட கட்சிகளுக்கு மாற்று” என்று பிஜேபிகாரர்கள் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் பேசியுள்ளனர்.  மொடக்குறிச்சி தொகுதி நாம் கட்சி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, மொடக்குறிச்சி நால்ரோட்டில் அக்கட்சி தலைவர் சீமான், நேற்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: “கடந்த, 50 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் நாட்டை சீரழித்து விட்டன.

 • எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என அனைத்து துறைகளிலும் வந்துவிட்டது. தமிழகத்தில் லஞ்சம், ஊழல்களை ஒழிக்க போராடி வருகிறோம்.
 • ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழக மக்களை அடிமையாக்கி வைத்துள்ளனர்.
 • குடிக்க குடிநீர், படிக்க பள்ளி, இருக்க வீடு என அனைத்தும் வியாபாரம் ஆகிவிட்டது.
 • திராவிட கட்சிகள் இரண்டுமே, சாராய ஆலை வைத்துள்ளனர். இந்நிலை மாற வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம், விவசாயம், மும்முனை மின்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்போம். திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி நாங்கள்தான், “இவ்வாறு அவர் பேசினார். ஓரளவுக்கு திராவிடகட்சிகளின் ஆட்சியின் விளைவால் ஏற்பட்ட நிலையை, இப்பேச்சில் கண்டுகொள்ளலாம்.

PMK - opined about alternative to Dravidian parties2014லிருந்து ஆரம்பித்துள்ள கருத்து – திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்பது: ஜி.கே. வாசன்[2], அன்புமணி ராமதாஸ் என்ற மற்ற கட்சியினரும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர்[3]. ஜி.கே வாசன் தனது கட்சியைத் துவங்கும் போது நவம்பர் 2014 அத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது நோக்கத்தக்கது[4]. காங்கிரஸ்காரர்கள் பிரச்சாரத்தின் மீது இவ்வாறு பேசியுள்ளார்கள். அப்படியென்றால், எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவுடன் மற்றும் கருணாநிதி காலத்தில் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது காங்கிரசுக்கு தெரியாதா என்ன? கூட்டினால் யார்-யார் எப்படி ஆதாயம் பெற்றார்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். “ஆரிய-திராவிட” கூட்டு என்பதும், நன்றாக தெரிந்த விசயமே. இருந்தும் வைத்துக் கொண்டார்கள். அப்பொழுது, பெரியாரே புலம்பவில்லை. கருணாநிதி-இந்திரா கூட்டை அவர் சுட்டிக்க்காட்டி, இன்னொரு முறை “கண்ணிர் துளிகள்” என்றெல்லாம் சொல்லி ஒப்பாரி வைக்கவில்லை. ஆகவே வீரமணியின் “இப்பொழுதெல்லாம் திராவிட இயக்கத்தைப்பற்றி குறை கூறுவது என்பது ஒரு வகையான ஃபேஷனாகப் போய் விட்டது” முதல் வாக்கியமும் பொய்யாகிறது! ஏனெனில், வாசனை எதிர்த்து ஒன்றும் கூறவில்லை. அப்துல் ஹமீது ஷேக் மொஹம்மது என்கின்ற மனுஷ்யபுத்திரனின் எதிர்வாதத்தை இங்கு காணலாம்[5]. மத்திய அரசில் பங்கு கொண்டு, கோடிகளில் ஊழல் செய்தத்தை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இன்று கோடி கணக்கில் “ஓட்டுக்கு ஆயிரம்” என்று விநியோகம் நடக்கிறது என்று செய்திகள் வந்தபோது, எந்த திராவிடக்கட்சி கொடுக்காதே என்று போதித்தது?

Alternative to Dravidian parties -BJPதிராவிட இயக்கங்களைப் புறக்கணித்துவிட்டு சமுதாயப் பணியாற்ற முடியாது[6]: கருணாநிதி அத்தகைய வாதம் ஏற்புடையதல்ல என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்[7]. திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்ற முன்னெடுப்பு என்ற வாதம் குறித்த உங்கள் கருத்து? கருணாநிதியின் பதில்: “திராவிட இயக்கங்களின் மீது அலுப்பு வருவது நியாயமே இல்லை. ஏனென்றால், திராவிட இயக்கம் ஒரு சமுதாய இயக்கம் என்ற வகையில் தொடர்ந்து சமுதாயத்துக்காக பாடுபடுகிறது, பணியாற்றுகிறது. சமுதாயப் பணிக்கு என்றும் முடிவில்லை, சமுதாயப் பணி என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நாங்கள் அரசியலிலே ஈடுபட்டிருந்தாலும், அரசியல் மூலமாக சமுதாயப் பணி ஆற்றத்தான் தயாராக இருக்கிறோம். முழுநேரமும் அதைத்தான் எங்களின் கடமையாகக் கருதுகிறோம்.எங்களுடைய சமுதாயப் பணிதான் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்திருப்பது திராவிட இயக்கத்தின் சமுதாயப் பணியின் பெருங்கட்டமாக கருதுகிறேன். திராவிட இயக்கங்களைப் புறக்கணித்துவிட்டு சமுதாயப் பணியாற்ற முடியாது”. ஆக, “திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்ற முன்னெடுப்பு என்ற வாதம்” கருணாநிதியையும் பாதித்துள்ளது என்று தெரிகிறது. சமுதாயப்பணி, இடவொதிக்கீடு என்றெல்லாம் பேசினாலும், ஆசிரியர், டிரைவர், கன்டெக்டர், எஞ்சினியர் …….வேலைகளுக்கு இரண்டு கட்சிகளும் லட்சங்கள் வாங்கிக் கொள்கின்றான என்று ஊடகங்களில் எடுத்துக் காட்டப்படுகிறதே, அதை ஏன் மறுப்பதில்லை?

பெரியார், லஞ்சம்

பெரியார் லஞ்சம் வாங்கச் சொன்னாரா?: மேற்குறிப்பிட்ட முரண்பாடுகளிலிருந்து, வீரமணி அப்பட்டமான பொய் சொல்கிறார் என்று தெரிகிறது.

 1. “திராவிட தமிழர்கள்” என்ற போதே, தெலுங்கர்கள், கன்னடகாரர்கள், மலையாளிகள் முதலியோர் அந்த “திராவிட சித்தாந்தத்தை”த் தூக்கியெரிந்து விட்டார்கள் என்பதை ஒப்புக்க்கொண்டது தெரிகிறது.
 2. “அப்பழுக்கற்ற தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்” என்று வீரமணி குறிப்பிடுவதிலிருந்தே, அத்தகைய நிலையை உணர்ந்த நிலை ஏற்பட்டுவிட்டது.
 3. இதுவரை “அப்பழுக்கற்ற தந்தை பெரியார்” என்று யாராவது குறிப்பிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
 4. ஆனால், வீரமணி அவ்வாறு குறிப்பிட்டுள்ளதிலிருந்தே, சந்தேகம் வந்து விட்டது என்று தெரிகிறது. அதாவது, மற்றவர்கள் “அழுக்காறு / அப்பழுக்கு” என்ன என்று சோதிக்க ஆரம்பித்து விட்டனர்.
 5. ஜாதியத்தை முதலியார்கள், செட்டியார்கள், ரெட்டியார்கள், கவுண்டர்கள்……..என்றெல்லாம் வளர்த்தது திராவிட இயக்கம் மற்றும் பெரியார் போன்ற ஜாதியத்துவ தலைவர்கள்தாம்.
 6. பிறகு அவர்கள் ஏதோ, ஜாதியத்தை எதிர்த்தது போல சித்தரிக்கப் பட்டு, ஏமாற்றப்பட்டனர்.
 7. பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி…..என்று அவரவர் ஆட்சி காலத்தில், அவர்களது ஜாதியினர் உயர்பதிவிகளை அடைந்தனர், அவர்களது வாரிசுகள் எல்லாவற்றையும் குத்தகை எடுத்துக் கொண்டன.
 8. லஞ்சம் வாங்காதே, ஊழல் புரியாதே என்று பெரியாரோ, அண்ணாவோ, கருணாநிதியோ போதித்ததாகத் தெரியவில்லை.
 9. அவர்களது தாசர்களாக, தொண்டர்களாக, ஏன் பக்தர்களாக இருந்து வந்தவர்கள், அதெல்லாம் தவறு, குற்றம்…….என்றெல்லாம் உணரவில்லை.
 10. திமுக அல்லது அதிமுக மாறி-மாறி ஆட்சி செய்தால், இருகட்சிகளிலிருந்தும் ஆதாயம் பெற்றது திராவிடகழகமும், வீரமணியும் தான்.

ஆகவே, கடந்த ஆண்டுகளில் அவதி, கஷ்டம், துன்பம் மற்ற கொடுமைகளை அனுபவித்த மக்களுக்கு, திராவிடத்தின் பாதிப்பு தெரிந்துள்ளது. இது நீடித்தால், சாவைவிட கொடுமையான நிலை ஏற்படும் என்ற நிலையும் உணரப்பட்டது. திமுக-அதிமுக ஒன்றையொன்று குற்றம் சாட்டிக் கொண்டாலும், உள்ளவர்கள் தீராவிடர்கள், தமிழர்கள், தமிழ் திராவிடர்கள், திராவிட தமிழர்கள் தாம்! பிறாகு அவர்கள் எப்படி அவர்கள் மீதே அத்தகைய கொடுமைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

பெரியார், லஞ்சம் வாங்காதே என்று சொல்லவில்லை© வேதபிரகாஷ்

19-05-2016

[1]  தினமலர், திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்களே, மே.4, 2016, 05.30.

[2] http://www.vikatan.com/news/article.php?module=news&aid=34576&r_frm=news_related

[3]http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2016/05/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article3424636.ece

[4] விகடன், திராவிட கட்சிகளுக்கு மாற்று எங்கள் இயக்கம்: ஜி.கே.வாசன் நம்பிக்கை!, Posted Date : 11:05 (09/11/2014).

[5] https://www.facebook.com/manushya.puthiran/posts/1009326045759973?fref=nf

[6] புதியதலைமுறை, திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்ற வாதம்?: ஏற்புடையதல்ல என்கிறார் கருணாநிதி, பதிவு செய்த நாள் : April 30, 2016 – 11:50 AM; மாற்றம் செய்த நாள் : April 30, 2016 – 01:17 PM.

[7] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/politics/20/21895/karunanidhi-exclusive-3

19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாரா – பெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!

ஏப்ரல் 2, 2016

19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாராபெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!

Usman Road Siva-Vishnu temple and EVR statue

சிவவிஷ்ணு கோவில் அருகில் பெரியார் பேசிய பொதுகூட்டம் (19-12-1973): தியாகராய நகர், சிவ-விஷ்ணு கோவில் அருகில் திகவினர், 19-12-1973 அன்றைய பெரியாரின் கூட்டம் ஏற்பாடு செய்ய நினைத்த போது, அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. உள்ளூர் திமுகவினரே அதனை எதிர்த்தனர். உண்மையில் திகவினர்களில் சிலரே அக்கூட்டம் தேவையில்லை என்று இரண்டு காரணங்களை வைத்தனர், 1. பெரியாருக்கு உடம்பு அசௌகரியமாக இருந்தது மற்றும் 2. சிவ-விஷ்ணு கோவில் அருகில் இருப்பதாலும், கூட்டம் இருக்கும் என்பதினாலும், இந்துக்கள் அவர்கள் பேச்சைக் கேட்டால் “அசிங்கமாக” இருக்கும் என்று சங்கடப்பட்டனர். மணியம்மை கூட வேண்டாம் என்றுதான் கூறி பார்த்தார். ஆனால், வீரமணி பிடிவாதமாக இருந்தார். போலீஸ் ஸ்டேசனுக்கு பக்கத்தில் உள்ள தெருவில் வைத்துக் கொள்ளல்லாம் என்று கூறி பார்த்தனர், ஆனால், ஒப்புக் கொள்ளவில்லை. தியாகராய நகர் பேரூந்து நிலைய ஜங்ஷனில் தான் வைப்போம் என்று வீரமணி பிடிவாதமாக இருந்தார். அப்பொழுது ஷேசாசல முதலியார் அதாவது பெரியார் தாசன் அங்கு வந்தாரா இல்லையா என்று கூட யாருக்கும் தெரியாது. அக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டு, பெரியார் பேசியதைக் கேட்டேன்.

19-12-1973 பெரியார் தி.நகர் கூட்டம்வழக்கமான தெவிடியா பையன் பேச்சும், இந்துமத தூஷணமும்: பேச்சு ஒன்றும் புதியதாக இல்லை, ஏற்கெனவே பேசியதை திரும்ப-திரும்ப பேசினார். வழக்கமாக இந்துமதத்தைத் தாக்கி கண்டபடி உடம்பு சரியில்லை என்றதால் முக்கவும்-முனகவும் செய்தார். ஒரு நிலையில் “அம்மா, அம்மா” என்று கத்தவும் செய்தார். ஆனால், பிடிவாதமாக பேச்சைத் தொடர்ந்தார். இஸ்லாம் என்ற விசயத்தால், இங்கு முக்கியமாக சொல்ல வேண்டியுள்ளது. “தெவிடியா பையன்” என்று பேசுவது அவருக்கு வழக்கமாக இருந்தது, “உலகத்திலே, தமிழர் இருக்கிறதைப் போல எத்தனையோ பங்கு முஸ்லிம் இருக்கான்; அவர்களுக்குள்ளே தெவிடியாள் மகனே கிடையாது, ஈனசாதியே கிடையாது. எல்லோருமே சகோதரர்கள், ஒருவனுக்குகொருவன் தொட்டுக்கொள்ளுவாங்கோ, ஒருவன் சாப்பிட்டதை இன்னொருவன் சாப்பிடுவாங்கோ, ஒருவன் இலையிலே இன்னொருவன் சாப்பிடிவான், எச்சில் கூட பார்க்க மாட்டான். அதாவது என்ன? அவ்வளவு சகோதரத்துவம் அந்த மதத்தின் தன்மை! அதே மாதிரி பார்ப்பான்……….பார்ப்பானும் அதேமாதிரி தங்களுகுள்ளே மேல், கீழ் சாதி கிடையாது; எல்லோரும் ஒஸ்தி. நாம் எல்லாம் அவனுக்குத் தெவிடியாள் மக்கன், இப்படி இருக்க காரணம் என்ன?”, என்று பெரியார் பேசியுள்ளார்[1].

19-12-1973 பெரியார் தி.நகர் கூட்டம்.2ஷேசாசல முதலியார் 19-12-1973 அன்று இருந்தாரா, இல்லையா?: ஷேசாசல முதலியார் அதாவது பெரியார் தாசன் அங்கிருந்திருந்தால், இதையும் கேட்டிருக்க வேண்டுமே? முதலியார் அப்பொழுது பக்திமானாக இருந்திருந்தால், சிவன், பார்வதி, முருகன், நாயன்மார்கள் பற்றியெல்லாம் ஆபாசமாகப் பேசியதற்கு கோபம் வந்திருக்க வேண்டும். அல்லது “உம்…..அம்மா,……அம்மா”, என்று முனகியபோது, கலிமா சொன்னால் பிழைப்பார் என்று ஞானதிருஷ்டியோடு சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஷேசாசல முதலியார் அதாவது பெரியார் தாசன் அவ்வாறு செய்யவில்லை. ஆனால், பெரியார் தாசன் ஆகி, அப்துல்லாவாகியப் பிறகு, “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது[2].

abdullah-in-different-poses17/18-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா பெரியாருக்கு சுன்னத் செய்தது எப்படி?: சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ்! 11-03-2010 முதல் 17/18-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்? இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா? நாத்திகன் சேஷாசலம் இறந்தாரா? பெரியார்தாசன்  இறந்தாரா? “……….” –இறந்தாரா? சித்தார்த்தா என்ற பௌத்தர் – இறந்தாரா? அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா? யார் இறந்தது என்ற குழப்பம் இருக்கத்தான் செய்தது[3]. ஒரு நிலையில் முகமதியரே இவரது மதமாற்ரத்தில் குழம்பியதால், கண்காணிக்க ஆரம்பித்தனர்[4]. இக்குழப்பத்தில் “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை விட்டுள்ளதால், பெரியாருக்கு என்னவாயிற்று என்று ஆராய வேண்டியுள்ளது! ஒருவேளை இறந்தவர்களுக்குக் கூட “சுன்னத்” செய்யும் வித்தை இஸ்லாத்தில் உள்ளதா? இல்லை, மோடி மஸ்தான் வித்தை செய்து கலிமா சொல்லவைத்து, சுன்னத செய்யும் வித்தையும் உள்ளதா? அப்துல்லாஹ் தான், சமாதியிலிருந்து வெளியே வந்து உண்மையினை கூற வேண்டும்[5].

பெரியார் தாசன் கண்காணிக்கப்படுதல்உலகத்திலே, தமிழர் இருக்கிறதைப் போல எத்தனையோ பங்கு முஸ்லிம் இருக்கான்; அவர்களுக்குள்ளே தெவிடியாள் மகனே கிடையாது: பெரியார் இப்படி பேசியதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை? “அதே மாதிரி பார்ப்பான்……….” என்று பார்ப்பனை முஸ்லிமோடு, ஒப்பிட்டு பேசியதை ஏன் எந்த முசல்மானும் கண்டுகொள்ளவில்லை? ஒரு வேளை, பெரியாரே இப்படி பேசியதால், சந்தோஷமாகி விட்டு விட்டார்களா, மறந்து விட்டார்களா? “, ஈனசாதியே கிடையாது. எல்லோருமே சகோதரர்கள், ஒருவனுக்குகொருவன் தொட்டுக்கொள்ளுவாங்கோ, ஒருவன் சாப்பிட்டதை இன்னொருவன் சாப்பிடுவாங்கோ, ஒருவன் இலையிலே இன்னொருவன் சாப்பிடிவான், எச்சில் கூட பார்க்க மாட்டான். அதாவது என்ன? அவ்வளவு சகோதரத்துவம் அந்த மதத்தின் தன்மை!” என்றதை தவறு என்று சொல்ல தயக்கமா? இன்று இஸ்லாத்திக் ஜாதிகள் உண்டு என்கிறார்கள், “தலித்” என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள், பிறகு எப்படி அவையெல்லாம் உண்மையாகும்? பெரியார் பொய் சொன்னாரா அல்லது முஸ்லிம்கள் பொய் சொல்கிறார்களா?

பெரியார் முஸ்லிம்19-12-1973 முதல் 24-12-1973 வரை: 20-12-1973 அன்றே இரனியா நோய் காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலனில்லாததால், 21-12-1973 அன்று வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 24-12-1973 அன்று காலை 7.22க்கு காலமானார். அவரது உடல் பிற்பகல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு, ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. உடலை தரிசிக்க வந்தவர்கள், மாலை போட்டு மரியாதை செய்தவர்கள், காலைத் தொட்டு வணங்கியவர்கள், கைக்கூப்பி வணங்கியவர்கள் முதலியவற்றை அவரது உடல் வைத்த இடம் மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும்[6]. 25-12-1973 பிற்பகல் மூன்று மணிக்கு ராஜாஜி மண்டபத்திலிருந்து உடல்  இறுதி ஊர்வலமாக பெரியார் திடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 4.15க்கு உடல் வந்தடைய, அங்கு மாலை 4.57க்கு தேக்கு மரப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது[7]. ஆனால், ஷேசாசல முதலியார் இங்கு எங்குமே இருந்ததாக தகவல் இல்லை!

இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டைதியாகராய நகரில் நிலவரம்: அதே நேரத்தில் அப்பகுதியில் அடுத்த நாள், அப்படியொரு கூட்டம் நடந்தது, பெரியார் அப்படியெல்லாம் பேசினார் என்று மக்கள் பிறகு கேள்வி பட்டனர். நிச்சயமாக இந்துக்கள் வருந்தத்தான் செய்தனர். அசிங்கமாக-ஆபாசமாக பேசியதை அறிந்தவர்கள் சிலர் கோபத்துடன் பேசினர். இருப்பினும் அவர்களது வருத்தங்களோ, கோபங்களோ பதிவாகவில்லை. உண்மையில் 24-12-1973 அன்று பல இந்துக்கள் பயத்துடன் இருந்தனர், வெளியே வந்தால் அடிப்பார்களோ என்ற அச்சம் இருந்தது. இது நிச்சயமாக அண்ணா மற்றும் பெரியார் இருவர்களுக்கிடையே இருந்த வேறுபாடு வெளிப்பட்டது. கோடிக்கணக்கில் மக்கள் தெருக்களில் வந்து, நடந்து, மெரினா கடற்கரைக்குச் சென்றதை அண்ணா இறுதி ஊர்வலத்தில் கண்டது. ஆனால், பெரியார் இறந்த தினத்தன்று மக்கள் அவ்வாறு, அதாவது, அத்தகைய திரண்ட கூட்டமாக, கோடிக்கணக்கில் வரவில்லை.

அண்ணா, பெரியார் இறுதி ஊர்வலங்கள்பெரியாருக்கு அரசு சார்பில் அடக்கம், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்தது: இந்திய விடுதலை நாளை துக்கதினமாகக் “கொண்டாடிய”, ஜின்னாவுடன் கூட்டு வைத்துக் கொண்ட, “திராவிட நாடு” கேட்டு பிரிவினைவாதம் பேசி, போராட்டங்கள் நடத்திய, பெரியார் இறப்பிற்கு, தமிழக அரசு விடுமுறை அளித்ததோடல்லாமல், “தேசிய கொடி இன்றும் (24-12-1973), நாளையும் (25-12-1973) அரைக்கம்பத்தில் பறக்கும்,” என்று அறிவித்தது. அத்தகைய மரியாதைகளை வீரமணியோ, திராவிட கழகமோ மற்ற பகுத்தறிவுகளோ எதிர்க்கவில்லை.

© வேதபிரகாஷ்

02-04-2016

[1] https://www.youtube.com/watch?v=o3OC3Jf-_-c, இந்த ஆடியோவில் குறிப்பிட்ட பேச்சைக் கேட்கலாம்.

[2] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013,  http://bushracare.blogspot.in/2013/09/5.html

[3] https://dravidianatheism.wordpress.com/2013/08/19/seshachala-mudaliar-seshachalam-periyardasan-siddhartha-abdullah-who-died/

[4]https://dravidianatheism2.wordpress.com/2010/04/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/

[5] https://dravidianatheism2.wordpress.com/2013/08/19/seshachalam-periyardasan-siddharth-abdullah-passed-way/

[6] https://www.youtube.com/watch?v=5jEzaWFuHGk – இந்த வீடியோவிலும் சிலவற்றை காணலாம்.

[7] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர் – பெரியார் ஈ.வே.ரா வாழ்க்கை வரலாறு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, வேப்பேரி, சென்னை, 1997, பக்கம்.271.

நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!

ஏப்ரல் 2, 2016

நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!

சாவதற்கு முன்னார் கலிமா சொல்லி மரணிப்பேன் - பெரியார்புதிய கட்டுக்கதைகளை உருவாக்கும் முகமதியர்கள்: பெரியாரின் பேச்சு, எழுத்து, ஏற்கெனவே அச்சில் வந்துள்ளவை முதலியவை இவைதான் என்று அதிகாரப்பூர்வமாக தொகுத்து, ஆதாரங்களுடன் வெளியிடாததால், குழப்பங்கள், திரிபுகள் மற்றும் கட்டுக்கதைகள் பெருகி வருகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணமாக “ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்”, என்று துலுக்கர்கள் இப்பொழுது இன்னொருக் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டிருக்கின்றனர்[1]. பெரியாரின் ஒலிப்பதிவு பேச்சிற்கும், அச்சில் உள்ள பேச்சுகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது. உதாரணத்திற்கு பெரியார் இஸ்லாம் பற்றி பேசியதாக இணைதளங்களில் வரும் பேச்சுகள்[2]. எப்படி பல வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன, விடுபட்டுள்ளன, சேர்க்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம். பெரியாருடைய பேச்சு, சுத்தமான தமிழாக இல்லை என்பது தெரிந்த விசயம், அப்பொழுது வழக்கில் உள்ள சமஸ்கிருதம் கலந்த சொற்களும் அவரது சொற்பிரயோகத்தில் இருந்தது[3]. அதனால், ஒலிநாடா பேச்சைக் கேட்டு, அச்சில் உள்ளதைப் படித்துப் பார்த்தால் வித்தியாசங்களை அறிந்து-புரிந்து கொள்ளலாம். இதனால், பெரியாரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், அவ்வாறுதான் அவர் பேசினாரா, எழுதினாரா என்று சரிபார்க்க, அதிகாரப்பூர்வமான புத்தகம் (edited from the original manuscripts) இல்லை.

இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டைமுகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[4]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்.  “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார். இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[5]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[6]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா, எதிர்த்தாராஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929). ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை.  ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[7].

EVR listening to Rajaji with due respect and attention

இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்றது (20-10-1935): இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்:  தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார். (குடியரசு 20-10-1935), அதாவது, இக்கணக்கை வைத்துப் பார்த்தால், 1926லேயே அப்படி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர் அம்மாதிரியெல்லாம் பேசுவது வழக்கமாதலால், அதனை பெரிதாகவோ, முக்கிய விசயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

பெரியார் தாசன் புத்தகம்இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற அம்பேத்கர் தனது முடிவை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று அறிவுரை கூறிய .வே. ரா (குடியரசு 20-12-1935): தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம் அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’, என்று கூறுகிறார். (குடியரசு 20-12-1935). உண்மையில், அம்பேத்கரது திட்டம் முதலியன இவருக்குத் தெரியாது.

பெரியார் தாசன் புத்தகம்.2இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று சபதம் செய்த ஈவேரா (குடியரசு 31-05-1936): மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார். (குடியரசு 31-05-1936) அதாவது, இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்று தெரிகிறது. ஆனால் அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்! “நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து – இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்”. (விடுதலை 09-02-1950).

பெரியார் முஸ்லிம்சட்டநுணுக்கங்கள் அறிந்த அம்பேத்கரும், இடத்திற்கு ஏற்றப்படி பேசும் ஈவேராவும்: அம்பேத்கர் மதம் மாறியபோது, சட்டப்படி “இந்துவாக” இருக்கும் நிலையில், இடவொதிக்கீடு பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற முறையில், அவர் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார். பெரியாரும், வலிய வந்து, பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டு, பௌத்தத்தைத் தழுவுகிறேன் என்ற போது, அம்பேத்கர் விசயங்களை எடுத்துக் காட்டினார். பெரியார் ஒரு அவசரக்குடுக்கைகாரர் என்பது அம்பேத்கர்க்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், பெரியார் இந்துவாகவே இருக்க தீர்மானம் செய்து கொண்டார். டிசம்பர் 24, 1973ல் இறந்தபோது, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார்.

© வேதபிரகாஷ்

02-04-2016

[1] http://bushracare.blogspot.in/2013/09/5.html

[2] https://www.youtube.com/watch?v=2Ie5DrlDN3M

[3] ஒலி மற்றும் குடி அரசு முதலியவற்றில் கேட்டும், படித்தும் புரிந்து கொள்ளலாம், “ஆமா…..வெங்காயம்”!

[4] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[5] https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[6] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

[7] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013,  http://bushracare.blogspot.in/2013/09/5.html

கருப்பு, கருப்புச் சட்டை, பாசிஸ பின்னணி, அவற்றை விரும்பும் திகவினர் – ஆனால், பழி போடுவது மற்றவர்கள் மேல்!

மார்ச் 25, 2016

கருப்பு, கருப்புச் சட்டை, பாசிஸ பின்னணி, அவற்றை விரும்பும் திகவினர் – ஆனால், பழி போடுவது மற்றவர்கள் மேல்!

விடுதலை, ஞாயிறு மலர், முதல் பக்கம், 19-03-2016

My Dream Store  (எனது கனவு வணிக நிறுவனம்) என்ற நிறுவனம் பற்றிய செய்தி: திராவிடகழகத்தின் விடுதகை, ஞாயிறு மலர் 19-03-2016 இதழின் முதல் பக்கத்தில், “பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்களாம் – நம்பித் தொலையுங்கள்!”, என்ற தலைப்பில், ஒரு செய்தி, இப்படி ஆரம்பக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது[1], “அய்தராபாத்தைச் சேர்ந்த    நிறுவனத்தின் தலைவர் கார்த்திக் வெங்கட் டைம்ஸ் ஆப் இந்தியா விற்கு அளித்த நேர்காணலில் எங்களின் நிறுவனத்திற்கு முக்கிய தொழிலதிபர்கள் ரூ.1.8 கோடி  முதலீடு செய்துள்ளனர். எங்களது    My Dream Store  (எனது கனவு வணிக நிறுவனம்) என்ற நிறுவும் சிறிய தொழில் முனைவோர் களின் தேவைக்கு இணையத்தில் விற்பனைத் தளங்கள் அமைத்துக் கொடுக்கும், மேலும் நாங்கள் வணிகர்களுக்கு புதிய புதிய யோசனைகளைக் கொடுத்து வணிகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்று கூறி அவர்களுக்கு வழிகாட்டும் ஆலோசனை நிறுவனமாகவும் இதை நடத்தி வருகிறோம்.எங்களுடைய நிறுவனத்தின் முக்கிய வியாபாரப் பொருளாக டி சர்ட்டுகள், கீ செயின்கள், மற்றும் விளம்பர பெயர்களைத் தாங்கி வரும் பரிசுப் பொருட்களை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரித்து வழங்குகிறோம். தற்போது புதிய வடிவத்தில் டிசர்ட்டுகள் தயாரித்து வெளியிட்டுள்ளோம் என்று கூறினார்”. பிறகு, கீழ்கண்டமுறையில், செய்தி தொடர்ந்துள்ளது.

பிராமண டி-சர்டுகள்- வீரமணி எதிர்ர்ப்புப் பிரச்சாரம்

பார்ப்பனர்களுக்கான டிசர்டும், அதில் உள்ள வாசகங்களும்[2]: “அதில் பார்ப்பனர்களுக்கு மட்டும் இந்த டி-சர்ட் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும். மிகவும் குறைந்த அளவே ஸ்டாக் உள்ளது. 100% பருத்தி ஆடை, உயர்தர அச்சு, எளிதில் எழுத்துக்கள் மங்காது, உங்களுக்கு இந்த டி-சர்ட் பிடிக்கவில்லை என்றால் 15 நாட்களுக்குள் நாங்களே நேரில் வந்து வாங்கிக் கொள்வோம்!” என்று போட்டு விட்டு, சம்பந்தமே இல்லாமல், “(அய்தராபாத்தில் இப்படி ஒரு விளம்பரம்)” என்று ஒரு படத்டைப் போட்டுள்ளது. பிறகு, ஒரு குறிப்பிட டி-சர்டின் படத்தைப் போட்டு, அதிலுள்ள ஹிந்தி வார்த்தைகளை, தனக்கேயுரிய பாணியில், கீழ்கண்டவாறு மொழி பெயர்துள்ளது:

“பார்ப்பான் விரதமிருப்பான் சுதாமாவைப் போல்

பார்ப்பானுடைய சிந்தனை சாணக்கியனைப் போல்

பார்ப்பானுடைய கோபம் பரசுராமனைப்போல்”,

 அதற்கும் பிறகு, ‘இப்பொழுதெல்லாம் பிராமணன் எங்கப்பா?’ மாறி விட்டார்கள் எனும் ‘மாமேதைகள்’ மண்டையில் பார்ப்பான் அடித்துள்ள செருப்பு ஆணிகள் இவை, என்று முடித்துள்ளது[3].

Blackshirts facism. Italian and Dravidian

கருப்பு நிறம் யாருக்கு பிடிக்கும், சொந்தம், அதில் விவகாரம் என்ன?: இது என்ன, ஏதோ இந்த கம்பெனி பிராமணர்களுக்கு மட்டும் என்றா டி-சர்டு விற்கிறது, அதிலும் கருப்பு கலரில் இப்படி விற்கிறது என்று வியப்பாக இருந்தது. பொதுவாக, பிராமணர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் கருப்பு நிறம் துக்கம், தீமை, ஒவ்வாதது, கெட்டது போன்றவற்றுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளதால், அதனை தேர்ந்தெடுப்பது, விரும்புவது கிடையாது. துக்கம் அனுஷ்டிக்க, இறப்பு முதலியவற்றைக் கடைபிடிக்க, எதையாவது எதிர்க்க வேண்டும் என்று தெரிவுக்க கருப்பு சர்ட், கருப்பு துணி, கருப்பு நிறத்தில் பேட்ஜ் முதலியவற்றை அணிவது வழக்கமாக இருக்கிறது.  மேலும் இந்த திகவினர்கள் “கருப்புச் சட்டைகள்” பற்றி பெருமைப்பட்டுக் கொள்வது தெரிந்த விசயமே[4]. “கருப்புச் சட்டை இயக்கம்” 1948ல் அரசால் தடை செய்யப்பட்டது[5]. எனவே, பிராமணர்களுக்கு மட்டும் அந்த டி-சர்ட் என்று கூறுவது, அறிவிப்பது, விற்பனைக்கு என்று விளம்பரப்படுத்துவது சரியில்லை என்று தெரிகிறது. இருப்பினும், உண்மை அறிய, அக்கம்பெனியைப் பற்றி தேடிப் பார்க்கப்பட்டது.

Brahmin T-shirts with extreme depictionsMy Dream Store  (எனது கனவு வணிக நிறுவனம்) என்ற நிறுவனம் பற்றிய விவரங்கள்: “எனது கனவு வணிக நிறுவனம்” என்றதன் இணைதளத்தில், அதைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இணைதளத்திலேயே, தயாராக ஒரு “அமைப்பு உதவி ஸ்ட்டுடியோ”, அமைப்பு உருவாக்கும் தயாரான வடிவமைப்பு முறை உள்ளது, அதைக் கொண்டு, ஒருவர் தாங்கள் விரும்பியபடி, நிறம், எழுத்துகள், வாசகங்கள், வடிவங்கள், படங்கள் என்று எதை வேண்டுமானாலும், பலவித பொருட்கள் (tees, hoodies, phone-cases, coffee mugs, tote bags and manymore) மீது உருவாக்கலாம்[6]. அப்படி செய்யும் போது அப்பொருளை வியாபார ரீதியில் விற்பதற்கு தூண்டுவதாக, ஊக்குவிப்பதாக ஆகிறது[7]. அவ்வாறு அப்பொருட்கள் விற்கப்படும் போது, வடிவமைத்தவர்களுக்கு, பணம் கிடைக்கிறது என்று சொல்கிறது[8]. அதைபற்றி விவரித்து ஒரு விளக்கும் படமும் போட்டுள்ளது[9]. அதாவது, கலைநயம், ஓவியத் திறமை, நுண்கலை ஆர்வம் முதலியவை உள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையாக இதுவுள்ளது. ஆனால், அதைத்தான் அப்படி திரித்து வெளியிட்டுள்ளது.

இது எப்படி வேலை செய்கிறது.

மாமேதைகள்மண்டையில் பார்ப்பான் அடித்துள்ள செருப்பு ஆணிகள் இவை: மேலும் இணைதளங்களைத் தேடிப் பார்த்த போது, இத்தகைய “பிராமின் டி-சர்ட்” வியாபாரத்தை வெளிநாட்டு கம்பெனிகள் அமோகமாக நடத்தி வருவது தெரிகிறது[10]. திக குறிப்பிட்ட ஒன்றல்ல, பலவகையான டி-சர்டுகள் காணப்படுகின்றன[11]. ஆகவே, பிராமணர்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. முன்பு “பிராமணர்களால் தயாரிக்கப்பட்டது” என்று போட்டு பொருட்களை விற்று வந்தார்கள். அதுபோலத்தான், இதுவும். வீரமணிக்கு இவ்விசயம் நிச்சயம் தெரிந்திருக்கிறது, இல்லையென்றால், “மணீச் கபே”யை மூடு என்று ஶ்ரீரங்கத்திற்குச் சென்றது போல, சென்றிருப்பார்களே? அமெரிக்காவுக்குச் சென்றால், உதை கொடுத்து, சிறையில்தான் போடுவார்கள்!

பிராமண டி-சர்டுகள்

பொய்களைப் பரப்பும் சித்தாந்த கூட்டங்கள்: ஆரிய-திராவிட இனவாதத்தை ஆங்கிலேய இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்றாலும், இவர்களுக்கு எங்கு புத்தி போயிற்று என்பது கவனிக்க வேண்டும். உண்மையில், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விடும், கொள்ளையடித்த ஆங்கிலேயர்கள் சென்று விடுவர், அப்பொழுது அதிகாரத்தை எப்படி பெறுவது என்ற நிலையில் தான், பொய்யான சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு தங்களது தலைவர்களைப் பற்றிய கட்டுக்கதைகளை உருவாக்கினர். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பொய்யையே ஆதாரமாக வைத்துக் கொண்டு, மக்களிடம் துவேசத்தைம் வெறுப்பை, காழ்ப்பை உண்டாக்கி, மக்களைப் பிரித்து, சித்தாந்த ரீதியில் வியாபாரம் செய்ய முடியும் என்பதனை திராவிட சித்தாந்திகளிடமிருந்து தான் அறிந்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றே பொய்களை வைத்துக் கொண்டு செய்திகளை உருவாக்குவது, விவரங்களைத் திரித்து செய்திகளை உருவாக்குவது, பாதி உண்மை – பாதி பொய், அரைகுறை விசயங்கள், சரிபார்க்காமல் முடிவுக்கு வருவது அல்லது முடிவைக்கொள்வது போன்ற முறைகளில் செய்திகளை உருவாக்குவது, வெளியிடுவது, பரப்புவது முதலியவற்றை அவர்களது பிரச்சார பீரங்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். அதிலும் சரித்திர ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை உருவாக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தாம் எனலாம்.

Many t-shirts for Brahmins

விவரங்களை சரிபார்த்து சோதனை, பரிசோதனை செய்யும் போது உண்மை வெளிப்பட்டு விடுகிறது: சமீபத்தைய நிகழ்வுகளில் தான் அவர்களது வரலாறே இருக்கிறது. ஆனால், அதிலேயே ஏகப்பட்ட பொய்மாலங்கள், அசத்தியங்கள், திரிபுகள் முதலியவற்றைக் காணலாம். எப்படியே பணம், அதிகாரம், பின்பற்றுவதற்கு ஒரு கூட்டம் முதலியவை இருப்பதனால் எப்படியோ 60 வருடங்களைக் கழித்து விட்டனர். ஆனால், இப்பொழுதெல்லாம் விசயங்கள், அறிவார்ந்த தகவல்கள், சரித்திரக்குறிப்புகள் முதலியவற்றை பலரும், பல இடங்களிலிருந்து பெறக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். ஒருவர் சொல்வது உண்மையா-பொய்யா, எந்த அளவுக்கு உண்மை-பொய், அவ்வாறு சொல்லவேண்டிய அவசியம் என்ன, அப்படி சொல்பவர்களின் பின்னணி என்ன என்று எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாம், விசயங்களை சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படி சரிபார்த்து சோதனை, பரிசோதனை செய்யும் போது அவர்களது நிலை தெரிந்து விடுகிறது. பிறகு அவர்களைப் பற்றிய நம்புகின்ற தன்மை முதலியவையும் போய் விடுகிறது.

© வேதபிரகாஷ்

25-03-2016

[1] விடுதலை, ஞாயிறு மலர், பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்களாம்நம்பித் தொலையுங்கள்!, 19-03-2016, பக்கம்.1.

[2] “விடுதலை” நாளிதழ், திகவின் அதிகாரப்பூர்வமான நாளேடு, இதன் ஆசிரியர் கே. வீரமணி, பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைகழகத்தின் வேந்தர். அதனால், மிகவும் பொறுப்பானவர். ஆனால், அந்த நாளிதழில் இத்தகைய பொய்யான, திரிபுவாத செய்திகள் வந்துக் கொண்டிருப்பதனால், அதனை எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது.

[3]  http://viduthalai.in/page-1.html

[4] ஆனால், பெரியார் அந்த நிறத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிந்து கொண்டால், அவர்களது பாசிஸ்ட் குணாதிசங்களையும் புரிந்து கொள்ளலாம். ஆனால், இவர்கள் மற்றவர்களை “பாசிஸ்டுகள்” என்று சொல்லி ஏமாற்றி வர்கிறார்கள். Blackshirt, Italian Camicia Nera, plural Camicie Nere, member of any of the armed squads of Italian Fascists under Benito Mussolini, who wore black shirts as part of their uniform. The first squads—each of which was called Squadre d’Azione (“Action Squad”)—were organized in March 1919 to destroy the political and economic organizations of socialists. By the end of 1920 the Blackshirts were attacking and destroying the organizations not only of socialists but also of communists, republicans, Catholics, trade unionists, and those in cooperatives, and hundreds of people were killed as the Fascist squads expanded in number. http://www.britannica.com/topic/Blackshirt

[5] On 15 August 1947, Periyar wanted Indian Independence Day as a day of mourning, by way of wearing black shirts. The Congress Government of Madras Province banned the Black Shirt Volunteer Corps created by Periyar in March 1948.

[6] https://mydreamstore.in/active_campaigns; https://mydreamstore.in/design

[7] All you have to do is create the Products using our Design Studio or upload your own Unique artwork and promote the Product, the best you can within your social network (Remember, the more you promote, the better are the chances that your one-of-a-kind product will sell like hotcakes!). https://mydreamstore.in/about-us

[8] Buyers pre-order the products. We will take care of manufacturing, delivering, as well as customer support while you make money! If you are a designer/artist/marketer/student/social media page owner/hobby group member or belong to any fan club or music band – here is your chance to sell amazing products to your community. Increase the bonding or make money via products. We make – ‘Selling Easy!’ https://mydreamstore.in/about-us

[9] https://mydreamstore.in/cms/t-faq

[10]  http://www.freshmonk.com/brahminr?utm_source=shop

[11] http://www.freecultr.com/base-product.html?design=50352 – men

“சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை” – 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து…. பெரியாரை வெளிக்காட்டும் கட்டுரை – உபயம் – திருவாளர் வீரமணி!

மார்ச் 20, 2016

சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை”  1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து…. பெரியாரை வெளிக்காட்டும் கட்டுரை உபயம் – திருவாளர் வீரமணி!

EVR-karu-atheist-path-of-jihadi

பால் குத்திக் கொள்ளுதலும், கரகம்கட்டுவதும், கண்முழிப்பதும், துள்ளுமாவு இடித்து தின்பதும், கஞ்சி குடிப்பதும்: பூசாரி, மாரியம்மனை உதைத்ததால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க மறு தினம் பிராமண குருக்களைக் கொண்டு பிராயச்சித்தம் செய்யப்பட்டது.

பூசாரி போதை வெறியால் செய்த போக்கிரித்தனமும், கஞ்சி காய்ச்சியும் கரகமெடுத்தும் ஊரைப் புழுதி பண்ணிய பக்த சிகாமணிகளின் லீலைகளும் எப்படியாவது போகட்டும். அதைப் பற்றி நாம் கவலைகொள்ளவுமில்லை. வைசூரி நோய் அபிவிர்த்தியானால் பால் குத்திக் கொண்டால் பரவிக் கொண்டிருக்கும் நோயானது தடைப்பட்டு விடுமென்பது சுகாதார முறை.

“பூசாரி போதை வெறியால் செய்த போக்கிரித்தனம்” எனும் போது, ஈவேராவுக்கே உண்மை தெரிந்திருந்திருக்கிறது. பிறகு, ஏன் இவ்வாறான மோசமான, வக்கிரமான கட்டுரை எழுத வேண்டும்? அங்குதன் அவரது அசிங்கமான மனோநிலை வெளிப்படுகிறது. மக்களின் நம்பிக்கையை மதிக்காத குணமும் வெளிப்படுகிறது.

இதைப்பின்பற்றாமல் கரகம்கட்டுவதும், கண்முழிப்பதும், துள்ளுமாவு இடித்து தின்பதும், கஞ்சி குடிப்பதுமான காரியமுமெல்லாம் வைசூரி நோயுடன், காலரா நோயும் சேர்த்துக்கொள்ளச் செய்யும் முட்டாள்தனமென்பதை புத்திசாலிகள் உணர்ந்த உண்மை. இதுவும் ஒரு பக்கமிருக்கட்டும்.

How EVR regarded pulaichi - low caste woman

மாரியம்மன் தரிசனத்துக்கு தங்கள் தங்கள் வீட்டு பெண்மணிகளை தனியாக அனுப்ப வேண்டாம்: சித்தர்க்காடு மாரியம்மன் கோவிலில் நடந்த பிரஸ்தாப நிகழ்ச்சியைக் கொண்டு குறிப்பாக சித்தர்க்காடு வாசிகளுக்கும் ஒரு வார்த்தை சொல்லவிரும்புகிறேன். அதாவது:-

பொதுவாக மக்களுக்கும், சிறப்பாக பெண்களுக்கும் மாரியம்மன் என்ற ஒரு தேவதையிடத்திலிருக்கும் மூட பக்தி அளவு கடந்ததாகும். மாரி, காளி, பிடாரி போன்ற தெய்வங்களிடத்தில் பெண்கள் கொள்ளும் மூட பக்தியை தணிக்க வேண்டுவது அந்தந்த ஆண் மகனின் கடமையில் முக்கியமானதாகும். ஏனென்றால், பெண்களுக்கிருக்கும் பக்தியை ஒரு கருவியாக கோயில் பூசாரிகள் உபயோகப்படுத்திக் கொண்டு, பெண்களை வசப்படுத்தி கற்பழிக்கவும் எத்தனிக்கிறார்கள். கற்பழித்துமிருக்கிறார்கள்.

பூசாரி மட்டுமல்ல, டாக்டரும், இஞ்சினியரும், ஏன் எத்தகைய ஆளானாலும், போதை வெறி, போக்கிரித்தனம் முதலியவை இருந்தால், அயோக்கியத் தனங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். இப்பொழுதே பப்புக்குச் செல்வது, குடிப்பது, கூத்தாடுவது எல்லாம் எங்கள் உரிமை என்று சொல்லும் அளவிற்கு, பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். கற்ப்பைப் பற்றி கவ்லை இல்லை என்ற அளவுக்கு, மனியம்மையாக நடித்த நாத்திக நடிகை குஷ்புவே விளக்கம் கொடுத்துள்ளது, அவரது ஆவிக்குத் தெரிந்தால் சரிதான்!

கோயில் பூசாரியை பக்தி சம்பாதித்துக் கொடுக்கும் பக்தன் என்ற பேதை எண்ணத்தால் எத்தனையோ பெண்கள் பூசாரியின் வலையில் சிக்கிவிடுகிறார்கள். முடிவாக மாரியம்மன் தரிசனத்துக்கு தங்கள் தங்கள் வீட்டு பெண்மணிகளை தனியாக அனுப்பிவைக்கும் ஆண் மக்கள் கவனித்து தக்கபடி நடந்து கொள்ள வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன், என்று அக்கட்டுரை முடிந்து விடுகிறது.

ஆரிய-திராவிட கூட்டணி

கடவுளை எதிர்க்கும் பக்தனும், ஆத்திகனும், நாத்திகனும்: கடவுள்-மறுப்பு, நாத்திகம், முதலியவற்றைப் பற்றி பேசும் சித்தாந்திகள் இந்த வித்தியாசத்தை அறிந்தும் அறியாத மாதிரி நடிப்பது தான், நிதர்சனமாக இருக்க்கிறது, அவர்களது போலி சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறது. கடவுள் பக்தி கொண்டுள்ளவர்களிலும் பலநிலைகளில் உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள்.

 1. சுகம்-துக்கம், இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு என்ற எல்லா நிலைகளிலும் சமமாக பாவிக்கும் கடவுள்-நம்பிக்கையாளர்கள் எல்லாவற்றிற்கும் கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
  1. உயர்ந்த நிலையில், இவர்களும் கடவுள் இல்லை என்று சொல்லலாம்.
  2. கடவுளுக்கு உருவம் இல்லை, அதனால் விக்கிரகம் வேண்டாம் என்ரு சொல்லலாம்.
  3. பூசை-புனஸ்காரம் தேவையில்லை, மனிதன்–மனிதனாக, ஒழுக்கமாக இருந்தாலே போதும் எனலாம்.
 2. அவ்வாறு பாவிக்கத் தெரியாதவர்கள் தான் வேண்டியபடி / விரும்பியபடி நடந்தால் கடவுளுக்கு நன்றி சொல்வான்.
  1. எதிர்பார்த்து செய்யும் பூசை-புனஸ்காரங்கள் முதலியவை – அத்தகைய வகையறாக்கள்.
  2. எல்லாவற்றிற்கும் பரிகாரங்கள் செய்பவர்கள்.
 3. அவ்வாறு நடக்காவிட்டால், ஐயோ நான் ஏதோ தவறு செய்து விட்டேன், என்று மறுபடியும் வேண்டிக் கொள்வான்.
 4. அதில் இன்னொரு வகை, நடக்காதலால், கடவுளைக் கோபித்துக் கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
  1. அதிக எதிர்பார்ப்பு, நடக்காவிட்டால் தெய்வ-நிந்தனை.
  2. விரக்தியினால் நடந்து கொள்ளும் வகையறாக்கள்.
 5. அப்படியே நடக்காவிட்டாலோ, தொடர்ந்து வேண்டிக்கொண்டு நடக்காவிட்டாலும், கடவுளே இல்லை, நீ கல் தான் என்று வெறுத்துப்போய் ஒரு நிலைக்கு வந்துவிடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
 6. ஆனால், இவர்கள் எல்லோருமே கடவுள் இருக்கிறார் என்று தான் நம்பிக்க்கொண்டு இருக்கிறார்கள்.
 7. திருடன், கொள்ளைக்காரன், கொலைக்காரன், சமூக-விரோதி, அரசியல்வாதி, முதலியோர்களும் கடவுளை வேண்டிக் கொள்கிறார்கள். இது சமூகத்தில் தனது நிலையைக் காட்டிக் கொள்வதற்காகவோ, அல்லது வேண்டியது கிடைத்தது என்ற நிலையிலோ இருக்கும்.
  1. இங்கு பூசாரி இவ்வகையில் தான் வருகிறான்.
  2. திருடன், கொள்ளைக்காரன், கொலைக்காரன் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
  3. இதில் அரசியல்வாதி, ஒட்டுமொத்த குற்றங்களையும் செய்பவனாக இருக்கிறான்.
 8. திராவிட நாத்திகம் வளர்ந்த நிலையில், திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவதும், மனைவி-மக்கள்-சுற்றத்தாரை வைத்து சாமி கும்பிடும் நிலையும் இருந்து வருகிறது. இதில் பெரியாரே விலக்கல்ல.
  1. இறைன்றைய நிலையில் திராவிட-நாத்திகர்களில் 90% இப்படித்தான் இருக்கிறார்கள்.
  2. வீடுகளில் சாமிபடங்களை வைத்துக் கொண்டு பூசை செய்து வருகிறர்கள்.
 9. வெளியில் சாமியில்லை என்பது, உள்ளே சாமி குடும்பிடுவது என்ற போலி நாத்திகனும் இருக்கிறான்.
  1. இவன் போலி நாத்திகன்.
  2. இவனால் பெரிய அளவில் பாதிப்பில்லை.
 10. வெளியில் கடவுள் இருக்கிறார் என்று அறிவித்து, சாமி குடும்பிடுவது, உள்ளே ஆனால் உள்ளே சாமியில்லை என்ற போலி ஆத்திகனும் இருக்கிறான்.
  1. இவன் போலி ஆத்திகன்.
  2. ஆனால், இவனால் ஆபத்து அதிகமாக இருக்கிறது.
 11. இதையெல்லாம் மீறி, உண்மையான நாத்திகன் இருக்கிறான். ஆனால், அவன் ஆத்திகன் போலத்தான், மனிதனுக்கு எந்த விதத்திலும் தீங்கு நினைக்க மாட்டான்.
  1. வேற்றுமை வளர்க்க மாட்டான்.
  2. மனிதர்களை சித்தாந்தம் மூலம் பிரித்து வைக்க மாட்டான்.
  3. மனிதர்களுக்குள் துவேசத்தை, வெறுப்பை வித்திட மாட்டான், வளர்க்க மாட்டான்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், ஈவேரா அல்லது பெரியர் அந்த அளவுக்கு சிந்தனையாளன் அல்ல.

EVR listening to Rajaji with due respect and attention

ஈவேரா அல்லது பெரியாரின் குணாதிசயங்கள்: ஈவேராவுக்கு அகந்தை, ஆணவம், அகம்பாவம், மமதை முதலியவை அதிகமாகவே இருந்தது. தன்னை யாரும் குறைக்கூறக்கூடாது என்ற மனப்பாங்கும் இருந்தது. தான் பெரிய பணக்காரன் என்பதனால் –

 1. பணத்தை வைத்து எல்லோரையும் பணிய வைத்து விடலாம் என்ற யதேச்சதிகாரமான போக்கு;
 2. முதலில் உதவுவது போல காட்டிக் கொண்டு, ஒருவரை தன்னிடம் பணிய வைப்பது;
 3. எல்லோருமே தான் நினைத்தப்படி / சொல்லியபடி செய்ய வேண்டும், இல்லையென்றால், அவனுக்கு பலவகைகளில் துன்பம் கொடுப்பது;
 4. அதிகமான பேராசைக் கொண்டு, அது நடக்காவிட்டால் எல்லாமே மோசடி என்று கற்பனை-விரோதியை உண்டாக்கி அவனுடன் போராடிக் கொண்டிருப்பது;
 5. ஜாதியத்தை வளர்ப்பதற்காக, ஜாதியத்தை எதிர்ப்பது போலக் காட்டிக் கொள்வது;
 6. தீண்டாமை எதிர்ப்பு, பெண்கள் விடுதலை முதலியவை அத்தகைய எதிர்மறை பிரச்சாரங்களில் உருவானது;
 7. தொடந்து தோல்விகளை சந்தித்தப் பிறகு, விரக்தியாகி எல்லாவற்றையும் எதிர்ப்பது;
 8. முடிந்த வரை ஒருவருக்கு அதிக அளவில் எப்படி தொல்லை-தொந்தரவு-பாதிப்பு கொடுக்கலாம்-ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு வேலைசெய்வது;
 9. குடும்பப் பிரச்சினை, குழந்தை இறந்தது, விரக்தியான வாழ்க்கை, கூடாத உறவுகள்-சகவாசங்கள், தனிமனித தோல்வி, முதலியவை அரசியல்-அதிகார ஆசைகள் கூடாததனால், இரண்டும் சேர்ந்து உதுக்கிவிட்ட நிலை உருவானது;
 10. விகல்பமான மனப்பாங்கு, வக்கிரமான எண்ணங்கள், குதர்க்கமான சிந்தனை, விரச வார்த்தைப் பிரயோகம், முதலியவற்றை பயன்படுத்தி, தனது விரோதிகளைத் தாக்குவது;

இவையெல்லாம் தான் ஈவேரா அல்லது பெரியார் என்ற மனிதனின் குணாதிசயக்களாக இருந்தன. சமீப காலத்தைய ஒரு மனிதனின் வாழ்க்கை உண்மைகளில் பலவற்றை மறைத்து உருவாக்கப்பட்டுள்ளது தான் பெரியாரின் கதை!

 

© வேதபிரகாஷ்

20-03-2016

பெரியாரின் வக்கிர எழுத்துகள் – “சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை” – 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து….- உபயம் – திருவாளர் வீரமணி!

மார்ச் 20, 2016

பெரியாரின் வக்கிர எழுத்துகள் – சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை”  1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து….- உபயம் – திருவாளர் வீரமணி!

 சித்தர்காடு மாரியாத்தாளுக்கு உதை 1934 - 2016 மார்ச் விடுதலை

பெரியாரின் வக்கிர மனத்தை அறிந்து கொள்ளுங்கள்: பெரியார் எழுதியுள்ளதாக, “விடுதலையில் வழக்கம் போல, சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதைஒரு கட்டுரை வெளியாகியுள்ளது[1]. தலைப்பிலேயே, விகல்பமான மனப்பாங்கு, வக்கிரமான எண்ணங்கள், குதர்க்கமான சிந்தனை, விரச வார்த்தைப் பிரயோகம், என்று அனைத்தையும் பார்க்க முடிந்தது.  1934ல் இதை இவர் எழுதிய போது, யார் படித்தார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் படித்திருந்தால், அப்பொழுதே, இவரது யோக்கியதை எல்லோராலும் அறியப்பட்டிருக்கும். தமிழில் அந்நேரத்தில் சுதந்திரம், பக்தி, நாட்டுப்பற்று முதலிய விசயங்களில் பாடல்கள், நாட்டியங்கள், தெருகூத்துகள் முதலியவை நடந்து கொண்டிருக்கும் போது, இத்தகைய மோசமான தமிழில் எழுதியுள்ளதை யாரும் படித்திருக்க மாட்டார்கள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் சுமார் 50-100 பேர் படித்திருக்கலாம். அப்படி படித்திருந்தாலும், இவரது யோக்கியதையை தெரிந்து கொண்டவர்கள் மனதிற்குள் வைது, அமைதியாகத்தான் இருந்திருப்பார்கள். இப்பொழுது 2016ல், அதை “விடுதலை”யில் மறுபடியும் பதிப்பித்து, ஈ.வே.ராவின் தன்மையினை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுத்துள்ளது திருவாளர் வீரமணிதான். வழக்கம் போல அக்கட்டுரையை அப்படியே போடு, வேண்டிய இடத்தில், எனது விமர்சனத்தை வலது பக்கத்தில் குறிப்பிட்ட இடங்களில் கொடுத்திருக்கிறேன்.

 EVR at Kasi - unveriafiable mythical stories floated

சித்தர்க்காடு மாரியம்மன் கோவில், வைசூரி வியாதி, கஞ்சி ஊற்றல், கரகாட்டம்[2]: சித்தர்க்காடு என்ற ஊர் மாயவரம் முனிசிபாலிட்டியின் ஒரு பாகம். அதாவது டவுனின்மேல் கோடியைச் சேர்ந்தது, மாயவரம் ஜங்ஷனும் இந்த சித்தர்க்காட்டில் தான் இருக்கிறது. இந்த ஊரில் பிரபலமான மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்தப் பக்கத்து ஜனங்களுக்கு இந்த மாரியம்மன் தான் பிரபலமான தெய்வம்.

அந்த மாரியம்மா இடத்தில் ஜனங்களுக்கு இருக்கும் பக்தி மேலீட்டிலேயே மிக க்ஷீண திசையுடனிருந்த கோவில் இப்போது பலமாகக் கட்டப் பட்டிருக்கிறது.இம்மாதிரியான ஒரு மாரியம்மா இருந்தும் சித்தர்க் காட்டைச் சுற்றிலும் சில காலமாய் வைசூரிநோய் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்த நோயால் சிலர் இறந்து விட்டார்கள். சிலர் இறக்கும் தருவாயை எதிர்பார்த்துக் கொண்டு மிருக்கிறார்கள். வைசூரி வியாதியால் ஏற்படும் இந்த மோசமான நிலையில் பாமர மக்கள் பீதிகொள்வதில் ஆச்சரியமொன்றுமில்லை. இக்காலத்திலும் புதிய-புதிய நோய்கள் வரத்தான் செய்கின்றன, மக்கள் இறக்கத்தான் செய்கின்றனர். மருத்துவத் துறை, மருந்துகள், சிகிச்சை முறைகள் எலாம் அபாரமாக முன்னேறியிருந்தாலும், அத்தகைய இறப்புகளைத் தடுக்கமுடிவதில்லை. இதனால், விஞ்ஞானத்தைக் குறைகூற முடியாது. மருந்தால் குஅப்படுத்த முடியாத நிலையில், மருத்துவர்களே, இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று விட்டு விடுகிறார்கள். அத்தகைய நிலையில் தப்பித்து குணமானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இதனால் சித்தர்க்காடு மாரியம்மாவின் மனதைக் குளிர வைக்க அந்தப்பக்கத்து வாசிகள் நினைத்தார்கள். மாரியாத்தாளின் மனது குளிர்ந்துவிட்டால் வைசூரி நோய் பறந்துவிடுமென்று மனப்பால் குடித்த சித்தர்க்காடுவாசிகள், தங்கள் நிறைந்த பக்தியை பூர்த்திசெய்ய வேண்டி சென்ற 1.4.1934 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பகலில் கஞ்சி காய்ச்சி ஊற்றினார்கள். இரவில் கரகம் கட்டி வீதி வலம் வந்தார்கள்.

பெரியார் ஜி டி நாயுடுக்கு வாழ்த்து கடவுளின் பெயரால் 1932. with English

நிவேத்தியம் செய்ய வந்த பெண்ணிடம் தவறாகப் பேசிய பூசாரி[3]: வழக்கம்போல் கோவில் பூசாரி கரகத்தை எடுத்து வீதிவலம் வந்துகொண்டிருந்தான்.

ஊர் ஜனங்களும் கரகத்தைக் சூழ்ந்து கொண்டு ஆரோக்கியசாமி ஆசாரி பட்டறையின் மேல் பக்கத்துச் சந்தில் கரகம் வந்து கொண்டிருந்தது. இந்தத் தெருவிலுள்ள ஒரு யவனப் பெண்மணி கரகத்திற்குத் தீபாராதனை எடுக்க நிவேத்திய சாமான்களுடன் முன்வந்து நின்றாள், நிவேத்தியத் தட்டை நிவேத்தியம் புரியும் தனி பூசாரியிடம் கொடுத்துவிட்டு பிரசாதம் பெற்றுப்போக பிரஸ்தாபப் பெண்மணி நின்று கொண்டிருந்தாள். கரகம் தூக்கிக் கொண்டிருந்த கோவில் பூசாரியான வன் தன் எதிரில் நிற்கும் பெண்மணியின் கையைக் கெட்டியாகப் பிடித்து பிசைந்துகொண்டு பின்வருமாறு சம்பாஷிக்கலானான்: பூசாரி ஒரு பெண்ணுடன் கையைப் பிடித்து தவறாக நடந்து கொண்டான் என்பது இங்கு பிரச்சினை. அது தவறுதான். தட்டிக் கேட்க வேண்டியதுதான், நன்றாக உதைக்க வேண்டியதுதான். ஆனால், ஏதோ சினிமா “டையலாக்” மாதிரி எழுதுவதில் அல்லது கதை எழுதுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒழுக்கம், தனிமனித ஒழுக்கம் முதலிய நற்பண்புகள் இல்லையென்றல், சமூகத்தில் இத்தகைய சீர்கேடுகள் நடக்கும். அதனால், நற்பண்புகளைப் பேண வேண்டிய அவசியம் உள்ளது. அதை விட்டுவிட்டு, விரசமாக எழுதுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

நீ ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்! உனக்கு எவரும் லட்சியமில்லை. நான் இருக்கிற வரையில் உனக்கென்ன பயம் சொல்லு. உன்னை நான் வைத்து காப்பாற்றுகிறேன். உனக்கு எது வேண்டுமானாலும் தருகிறேன். நான் சொல்லுகிறபடி கேட்கிறயா?” என்பது போன்ற வார்த்தைகளே நடந்தது. மேற்படி சம்பாஷணை பெண்ணின் கையைப்பிடித்து பிசைந்து கொண்டபடியே முக்கால் மணிநேரம் நடைபெற்றது.

Periyar statue damged December 2006

கரகம் முடிந்த பிறகு காளாஞ்சி கொடுக்கும் சம்பிரதாயம் ஆரம்பமானது[4]: கரகம் தூக்கிய பூசாரியானவன் வாலிப வர்க்கத்தைச் சார்ந்தவன். கரகத்துக்கு நிவேத்தியம் செய்து போக வந்த பெண்மணியும் இளம் வயதைச் சேர்ந்தவள், என்றாலும் கரகத்தை சூழ்ந்து கொண்டிருக்கும் பக்த சிகாமணிகளெல்லாம் பிரஸ்தாப சம்பாஷணையை மாரியம்மன் சன்னதியின் பேரிலேயே நடப்பதாகக் கருதிக் கொண்டிருந்தார்கள். இது எத்தனையோ இடத்தில் நடத்தும் வழக்கத்தை ஒட்டியதால் இதைப்பற்றி ஆச்சரியப்பட வேண்டிய தில்லை. இந்த சம்பவம் முடிந்து கரகம் கோயிலுக்குப் போய் இறங்கியது. இறக்கும்படி சடங்குகள் முறையே முடிந்ததும் வந்திருக்கும் பக்தர்களுக்கு காளாஞ்சி கொடுக்கும் சம்பிரதாயம் ஆரம்பமாயிற்று, கரகம் தூக்கிய பூசாரி ஒரு தட்டில் தேங்காய் மூடி, பழம், பாக்கு, வெற்றிலை, புஷ்பம் உள்பட விபூதி பிரசாதங்களுடன் மகா மண்டபத்தில் நிற்கும் பக்த கோடிகளான பொது ஜனங்கள் முன் தோன்றினான்.

சுயமரியாதை திருமணம் பெரியார் முன்னிலையில்

போதையில் இருந்த பூசாரி பக்தர்கள் மரியாதை செய்த பணத்தைத் தூக்கியெரிந்தது: நின்ற மகாஜனங்களில் முக்கியமானவர்களிடத்தில் காளாஞ்சி தட்டை சமர்ப்பித்தான், பெற்றுக்கொண்ட முக்கியஸ்தர்கள் பூசாரிக்கும் மரியாதை செய்வான் வேண்டி ரூபாய் 1.7.0 கொடுத்தார்கள்.

இந்தத் தொகை வழக்கத்துக்கு மீறியதாகவும், மிக கொஞ்சமாகவுமிருந்ததாக பூசாரி கருதினான். இது சமயமும் பிரஸ்தாப பூசாரியானவன் கரகமெடுத்து வீதிவலம் வருகிற போதும், லேகிய உருண்டையை அளவுக்கு மீறி தின்றிருந்த தால் அவன் வீதி வலத்தில் வரும் போதும், கோயிலில் இறங்கியதும் தன் நிலை தடுமாறி எல்லா காரியத்திலும் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதாய் சொல்லப்படுகிறது. இது எப்படியாவது இருக்கட்டும். பக்தர்கள் மரியாதை செய்த ரூ.1-7-0 பெற்றுக்கொள்ளாமல் தூக்கி எறிந்து விட்டான். ஈவேராவுக்கு வீட்டு வாடகை குறைவாக இருந்தாலே, வழக்குப் போட்டு, இடைஞ்சல் கொடுத்து, வெளியேற்றிய மனிதர். நன்கொடை விசயத்திலும் ஈவேரா கடுமையாகத்தான் நடந்து கொண்டார். ஆகவே, இவரும் பூசாரியை விட எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. உண்மையினை சொல்வதானால், மோசமாகவே எல்லோரிடத்திலும் நடந்து கொண்டார். அப்படியிருக்கும் போது, போதையுடன், பூசாரி இருந்திருக்கிறான் என்றால், அவனை அவ்வாறு அனுமதித்தது தவறாகும்.

வந்திருந்த பக்த கோடிகளை லேகிய உருண்டை வெறியால் வாயில் வந்தபடி திட்டினதோடு கர்ப்பகிரகத்தில் அலங்காரத்துடனிருக்கும் மாரியம்மனை நோக்கினான்.

12 வயதில் தாம் விரும்பிய தந்தை பெரியாரை மணந்த நாகம்மை 48 வயதில் மறைந்தார்.

ஆத்தாள் மகமாயியை நோக்கி 5,6 உதை காலாலேயே கொடுத்தது: இவ்வளவு நாள் உனக்கு உழைத்தும் நீ எனக்கு ஒன்றும் செய்யவில்லை என்றான். நீ இருந்துதான் என்ன? தொலைந்து தான் என்ன?

என்று பலவாறு சொல்லிக்கொண்டே ஆத்தாள் மகமாயியை நோக்கி 5,6 உதை காலாலேயே கொடுத்தான். மகமாயிக்கு செய்திருந்த அலங்கார புஷ்பங்களை எல்லாம் பிய்த்து நாலா பக்கமும் எறிந்தான். பூசாரியின் போக்கிரித் தனத்தை கண்ட பக்த கோடிகள் ஒன்றும் சொல்ல முடியாமல் தங்கள் தங்கள் வீடு திரும்பினார்கள். “பூசாரியின் போக்கிரித் தனத்தை கண்ட பக்த கோடிகள் ஒன்றும் சொல்ல முடியாமல் தங்கள் வீடு திரும்பினார்கள்” என்பதிலிருந்தே, அவன் பெரிய ரௌடியாக இருந்திருப்பான் என்று தெரிகிறது. அதாவது, கடவுள் மீது நம்பிக்கையில்லாதவன், பூசாரியானால், அத்தகைய நிலை தான் ஏற்படும்[5].

மறுதினம் தெருக் கூட்டம் போட்டு பூசாரியின் நடத்தையைக் கண்டிக்கப்பட்டது. கரகம் வீதி வலம் வரும்போது நிவேத்திய மெடுத்து வந்த பெண்மணியின் கையைப் பிடித்து பிசைந்ததற்கும், மாரியம் மனை காலால் உதைத்து பக்த கோடிகளை அவமானப் படுத்தியதற்கும் ரூபாய் 25 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட தொகையும் வசூலாகிவிட்டது.

© வேதபிரகாஷ்

20-03-2016

[1] .வே.ரா, சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை”  1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து….,, குடியரசு, 1934.

[2] http://viduthalai.in/page-7.html

[3] .வே.ரா, சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை, விடுதலை / குடியரசு, 1934.

[4] http://viduthalai.in/page-7/119051.html

[5] இன்று ஏதோ டிப்ளாமோ / பயிற்சி வகுப்பு முடித்து விட்டு, பூசாரி வேலை வேண்டும் என்று கிளம்பி விட்டார்கள். பெரியார் சிலைக்கு மாலை போட்டு, நாத்திக வாதம் பேசிக்கொண்டு, ஆர்பாட்டம்-போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பூசாரி பதவிக்கு வந்தால் என்னாகும் என்று மக்கள் நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (1)

ஒக்ரோபர் 24, 2014

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறிவு கொண்ட தமிழச்சிகள், தமிழச்சர்கள், இத்யாதிகள் (1)

ஆபாச தீபாவளி - தமிழ் ஓவியா படம்

ஆபாச தீபாவளி – தமிழ் ஓவியா படம்

தீபாவளிக்கு தீபாவளிக்கு வலி வந்து துடிக்கும் திராவிட நோயாளிகள்: தீபாவளி சமயத்தில் “திராவிடப் போர்வையில்”, இந்துவிரோதிகள் வருடாவருடம் தூஷித்து வருவது வழக்கமாகி விட்டது. ஆனால், மற்ற பண்டிகைகளின் போது பொத்திக் கொண்டிருப்பது தான் அவர்களது அறிவிஜீவித்தனம், அதிபுத்திசாலித்தனம், மேதாவித்தனம், முதலியவை அடையாளம் காணப்பட வேண்டும் என்று அவையே பறைச்சாற்றிக் கொண்டு பிரசாரம் செய்து கொண்டிருக்கும். செக்யூலரிஸ இந்தியாவில், முஸ்லிம், கிருத்துவ, பௌத்த, ஜைன பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன, அரசு விடுமுறைகளும் போட்டிப் போட்டுக் கொண்டு கொடுக்கப் படுகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும் திக-திமுக கோஷ்டிகள் முஸ்லிம், கிருத்துவ பண்டிகைகளுக்கு தாராளமாக வாழ்த்துத் தெரிவித்தும், பௌத்த பண்டிகைகளுக்கு அளந்து வாசித்தும் (ஆரியமாக இருந்தாலும், அம்பேத்கர் என்றால் திராவிடமாகி விடும்), ஜைன பண்டிகைகளுக்கு யோசித்தும் (மார்வாடிகள் கொண்டாடுவதால் ஆரியமாகி விடும்) தான் வாழ்த்து சொல்லும் வழக்கம் உள்ளது. ஆனால், அவையெல்லாம் ஆபாசமாக, அசிங்கமாக, பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக, விஞ்ஞானத்திற்கு புறம்பாக, பொருளாஹார ரீதியிலோ அல்லது வேறு விதத்திலோ இருப்பதில்லை. ஆனால், இந்து பண்டிகைகள் என்றால் அலர்ஜி, சூடு வந்து அழுத்தம் ஏறி வெளிப்பட்டு விடும். இக்த்தகைய போக்கை, மனப்பாங்கை “செக்யூலரிஸ” வியாதி எனலாம் போலிருக்கிறது.

 

தீபாவலி-ஆரியர்-திராவிடர்-தமிழச்சி-மதிமாறன் - சீமான்

தீபாவலி-ஆரியர்-திராவிடர்-தமிழச்சி-மதிமாறன் – சீமான்

அரைத்த மாவையே அரைத்து வரும் பகுத்தறிவுகள்: தீபாவளி தீபாவலி, ஆரியர்கள் பண்டிகை, பார்ப்ப சூழ்ச்சி என்றெல்லாம் ஒரு தளத்தில் போட்டால், உடனே அதனை, இன்னொரு தளத்தில் போடும் போக்கும் உள்ளது[1]. ஆனால், இந்த இணைதளங்கள் எல்லாம் ஒத்த சித்தாந்த்தைக் கொண்டவையல்ல. முகமூடிகளைப் போட்டிக் கொண்டு மறைந்து அல்லது தங்களது மதம்-சித்தாந்களை மறைத்து தாக்கும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. விவாதமும் சரித்திர ஆதாரமில்லாத “ஆரிய-திராவிட” போராட்டத்தினுள்ளேயே உழன்று வருகிறது[2]. மற்ற விசயங்களையும் குழப்பி, குழப்பவும் பார்க்கும் முறையுள்ளது[3]. மேலும், இது வருடா வருடம்[4] அரைத்த மாவையே அரைப்பது போன்று[5] செய்து வருகிறது[6]. இதனை யாரும் கண்டிப்பதில்லை மற்றும் மறுப்பதில்லை என்று, அவை தாராளமாக திருப்பி-திருப்பிப் போட்டுக் கொண்டு வருகின்றன. முன்பு இதைப் பற்றி மறுத்து எழுதியிருந்தாலும், அவை வேண்டுமென்றே இதை செய்து வருகின்றன. ஆகவே, தலைப்பு மற்றும் விமர்சனம் மட்டும் இப்பொழுது செய்யப் படுகிறது. “பார்ப்பான்.பிளாக்.ஸ்பாட்” என்ற தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள புகைப்படங்கள் நன்றியுடன் உபயோகப் படுத்தப் பட்டுள்ளன[7]. அத்தளத்தில் “அவர்” (பெயர் தெரியவில்லை), கடந்தகால ஆவணங்களை பத்திரமாக இணைதளத்தில் மின்னணு-முறையில் பதிவு செய்துள்ளார்.

 

தீபாவளி போலித்தனம், திராவிடம், -சில எழுத்தாளர்கள்.- அரைக்கும் மாவு

தீபாவளி போலித்தனம், திராவிடம், -சில எழுத்தாளர்கள்.- அரைக்கும் மாவு

பெரியார், தமிழச்சி, தமிழச்சன்களுக்குப் பிறகு கும்பலிங்கனின் கும்பியிலிருந்து வெளிவந்துள்ளது: பாப்பாத்தி என்று ஒரு புறம், ஜெயலலிதா போன்ற திராவிடக் கட்சி தலைவரையே திட்டித் தீர்த்து, இன்னொரு பக்கம் “தமிழச்சி” என்று பெயரை வௌத்துக் கொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டும் தமிழக நாரிகள் உள்ளனர். இது எந்தவித பெண்ணியம் என்று தெரியவில்லை. சரி தமிழச்சன்கள் என்று பார்த்தால், அவையும் போலிப் பெயர்களில் தான் உலா வருகின்றன. இவ்வருடம் (2014), யாரோ “வை.மு. கும்பலிங்கன்” என்ற ஒரு பகுத்தறிவு, புத்தங்களிலிருந்து எடுக்கப்பட்டது, என்று குறிப்பிட்டு, தொகுத்தது என்று –“விடுதலை”யில் “பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா?” என்று தலைப்பிட்டு வெளிவந்துள்ளது[8] என்று மற்ற பகுத்தறிவுகள் இணைதளங்களில் போட்டுள்ளன[9]. இவை இரண்டாம் தர புத்தகங்களிலுள்ள (secondary sources) குறிப்புகள் என்றாலும், அப்பகுத்தறிவுகளின் மூலம் வெளிப்பட்டிருப்பதால், அப்படியே கொடுக்கப்படுகின்றன. முதலில் கும்பலிங்கனின் கதையைப் பார்ப்போம்.

 

தீபாவளி போலித்தனம், திராவிடம், -சில எழுத்தாளர்கள்

தீபாவளி போலித்தனம், திராவிடம், -சில எழுத்தாளர்கள்

அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று[10]: “தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப் படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது.

ஆரியர்திராவிடர் இனவாதத்தை நம்பி கொடுத்த கருத்தை, இப்பொழுதும் போட்டு வாதிப்பது வேடிக்கை. இப்பொழுது ரோமிலா தாபர் போன்ற சரித்திராசிரியர்கள் மறுத்த பின்னரும், இதைப் பிடித்து வைத்துள்ளதும் வேடிக்கை.

அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப”, என்று கா.சுப்பிரமணியன் (பிள்ளை) சொன்னதாக உள்ளது.

 

தீபாவலியை நிறுத்தி விடலாமா

தீபாவலியை நிறுத்தி விடலாமா

வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி![11]: தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை. தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜயநகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட் டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக்

.கி.பரந்தாமனார்  தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை, என்கிறார். ஆனால், திகவினர் மற்ற திரிபுவாதிகள், அந்த கதையைப் பிடித்துக் கொண்டு, நரகாசுரனை துதிபாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு வேளை தீபாவளி பண்டிகை நிறுட்திவிட்டால், இவர்கள் பிழைப்பு போய்விடுமோ, என்னமோ?

கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை – செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை. இது பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் என்பவரது குறிப்பு!

 

கரு-கிருஷ்ணன், ஸ்டாலின்-அர்ஜுனன்!

கரு-கிருஷ்ணன், ஸ்டாலின்-அர்ஜுனன்! நரகாசுரன், கிருஷ்ணர் ஆகும் ரகசியம்!

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி- நரகாசுரனுக்கும் தீபாவளிக்கும் சம்பந்தம் இல்லை[12]: வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மேன்மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதா யிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும். பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு

மறைமலை அடிகள், கூறியுள்ளார், “ஆக நரகாசுரன் மற்றும் கண்ணன் இருவரும் தமிழரே.  அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். பிறகு என்ன பிரச்சினை?

உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்… ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று. எப்படி உள்ளது வேதாசல முதலியார் என்கின்ற மறைமலை அடிகளின் கருத்தாம்.

 

அகராதிக் குறிப்பில்அபிதான சிந்தாமணி[13]: இரண்யாட்சன், நரகாசுரன் இவர்களுக்கு விளக்கம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இரண்யாட்சன்: இவன் கதா பாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலி யோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேத வராக (பன்றி)வுருக் கொண்டு கொம் பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக்கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)

நரகாசுரன்: வராக (பன்றி) உருக் கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக் கும் பிறந்த அசுரன் (934) சுரர்: பிரமன் சொற்படி மது உண்ட தால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24).

 

சமண சமயப் பண்டிகையே தீபாவளி[14]: தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார்.

எப்படி கிருத்துவர்கள் மற்றவர்களின் பண்டிகைகளை தமதாகிக் கொண்டார்களோ, அதேபோல, சமணர்கள் ஆட்சிக்கு வந்தபோது, இந்து பண்டிகைகளை தமாதிக்கிக் கொண்டார்கள்ராமாயணத்தை மாற்றி எழுதினார்கள். தமிழகத்தில் அவர்கள் பலவிதங்களிலும் தாக்குதல்கள் மேற்கொண்டதால் தான், மற்றவர்களால் வெறுக்கப் பட்டனர்.

பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்த போது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கைஎய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்திய படியால் தீபாவளி என்ற பெயரில் விடியற் காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ! இது சீனி. வேங்கடசாமியின் கருத்தாம்.

 

ஆரியர்கள் சமணர்கள் பண்டிகைய தொடர்ந்து கொண்டாடினர்புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.[15]: சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப் படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று.

சீனி. வேங்கடசாமி எந்தவித ஆதாரமும் இல்லாமல், ஏதோ மனதுக்க்குப் பட்டதை சொல்லியுள்ளார். இந்துக்களாக இருந்தவர்கள், கஜைனர்களாக மாறி, பிறகு மறுபடியும் இந்துக்கள் ஆகின்றனர் என்றால், அப்பண்டிகையை அப்படியே பின்பற்றுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், முன்னர் இருந்த நராகாருரன் கதையை, மகா வீரர் கதையாக ஆக்கி, மறுபடொயும் நரகாசுரன் கதையாக மாற்றினர் என்பது, வெறும் வெற்றுப்பேச்சு!

சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

 

அறிவுக்குப் பொருத்தமற்ற கதை வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர்[16]:. அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத் திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் தமது உயிர்க்கொலை வேள்விக்கு

இராசமாணிக்கனார் அடுத்தவர் சொன்ன கருத்தை பிரதிபலித்திருக்கிறார் என்று தெரிகிறது. சீனி.வெங்கடசாமி கூறியவற்றில் பாதி, மற்றும் அவரே சிலதை சேர்த்து கொடுத்துள்ளார் என்று தெரிகிறது. சமணம் தேந்ததால், சமணர்கள் வைணவசைவ சமயங்களைத் தழுவியபோது, தீபாவளியையும் ஏற்றுக் கொண்டனர் என்கிறார்.

ஆண்டு தோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் – விளக்கு; ஆவலி – வரிசை, தீபாவலி – விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும். இப்படி  மா.இராசமாணிக்கனார் முடிவுக்கு வந்துள்ளார். இதையே தொ.பரமசிவன் சொன்னார் என்ரும் “விடுதலை” போட்டிருக்கிறது[17].

 

© வேதபிரகாஷ்

24-10-2014

[1]http://www.velichaveedu.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/

[2] http://www.periyarthalam.com/2012/11/12/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85.html

[3] http://viduthalai.in/page-8/89750.html#ixzz3GsakRIwZ

[4] http://newsalai.blogspot.in/2012/11/blog-post_5868.html

[5] http://thamizhoviya.blogspot.in/

[6] http://www.unmaionline.com/new/archives/30-unmaionline/unmai2011/october-16-31/495-deepavali.html

[7] http://paarpaan.blogspot.in/2010/11/16.html

[8] தொகுப்பு: வை.மு. கும்பலிங்கன் -”விடுதலை” 21-10-2014, Read more: http://viduthalai.in/page-2/89688.html#ixzz3GmndeNjM

[9]http://www.periyarthalam.com/2014/10/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4-2.html

[10] தமிழறிஞர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை) நூல்: தமிழ் சமயம் பக்கம் : 62.

[11] பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434

[12] சைவப் பெரியார் மறைமலை அடிகள் நூல்: தமிழர் மதம் பக்கம் : 200-201

[13] சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார் – நூல்: அபிதான சிந்தாமணி

[14] கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80

[15] கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80

[16] டாக்டர் மா.இராசமாணிக்கனார் நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும் பக்கம்: 33, 34

[17] http://www.unmaionline.com/2010/November/16-30/page17.php

கால்டுவெல் புராணம் பாடும் கருணாநிதி: கோயம்புத்தூரிலிருந்து இடையன்குடிக்கு போகும் தீவிரவாத ஆதரவு!

மே 5, 2014

கால்டுவெல் புராணம் பாடும் கருணாநிதி: கோயம்புத்தூரிலிருந்து இடையன்குடிக்கு போகும் தீவிரவாத ஆதரவு!

கால்டுவெல் 200 வருட விழா 2014.ஸ்டாம்ப்

கால்டுவெல் 200 வருட விழா 2014.ஸ்டாம்ப்

கோயம்புத்தூரிலிருந்து   இடையன்குடிக்கு போகும் தீவிரவாத  ஆதரவு!: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடித்து, இரண்டு நாட்களிலேயே, கருணாநிதி கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை அலசிவிட்டு, வேகமாக இடையன்குடிக்குச் சென்றுள்ளது வியப்பாக இருந்தாலும்,  எப்படி சிறுபான்மையினரை தாஜா செய்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். கருணநிதிக்கும், ஜெயலலிதாவுக்கு “சஷ்டாஸ்டகம்” என்ற தோஷம் இருப்பதுபோல, ஒருவர் ஒன்று சொன்னால், உடனே அடுத்தவர் அதனை மறுத்துப் பேசுவது என்ற நிலைதான் உள்ளது.  அந்த தத்துவத்தை நாத்திக கருணாநிதி நன்றாகப் புரிந்துகொண்டு, இப்பொழுது ஆத்திக ஜெயலலிதாவை சீண்டி பார்க்க, கால்டுவெல்லை எடுத்திருக்கிறார்!ஒட்டுமொத்த உலகத்தமிழ்ச் சமுதாயம் சார்பில், நன்றியுடன் நினைத்து வணங்கி மகிழ்வோம்,  என்று ஒரேயடியாக கும்பிடு போட்டிருக்கிறார்!

கால்டுவெல் 200 வருட விழா 2014.குடும்பத்தார் வந்தனர்

கால்டுவெல் 200 வருட விழா 2014.குடும்பத்தார் வந்தனர்

1968 முதல்  2010  வரை: 1968ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டின் போது,  சென்னை கடற்கரை சாலையில் கால்டுவெல்லுக்கு சிலை அமைக்கப்பட்டது.  பிறகு அச்சிலைகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 42 வருடம் கழித்து திடீரென்று 2010 ஜனவரியில்நெல்லைமாவட்டம், இடையன்குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை, அவரது நினைவைப் போற்றும் வகையில்,  அரசு நினைவு இல்லமாக மேம்படுத்திப் பராமரிக்க அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார்[1]. ஆனால், அப்பாதிரி உண்மையில்,  இந்திய சரித்திரத்தைப் புரட்டத்தான் வந்தார் என்பது கலைஞருக்கு தெரியவில்லை போலும்.  1821ல் தமிழ் பேசப்பட்ட பகுதிகள் கொச்சிற்கு மாற்றப் பட்டபோதும், 1828-30களில் நடந்த ஜாதிக்கலவரங்களுக்கும் கால்டுவெல்- மாமனார்-மாமியார் தான் காரணம், திருட்டுத்தனமான அகழ்வாய்வு மேற்கொண்டு பலஆதாரங்களை மறைத்தது,  இந்தியர்களை இனரீதியில் பிரிக்கத்தான்“திராவிடக் குடும்ப மொழிகள்” என்று கருதுகோளை வைத்தது, போன்ற உண்மைகளை வெளிப்படுத்தவில்லை[2].

 

எலிஸா விதவை

எலிஸா விதவை

தமிழுக்கோ,  தமிழ்நாட்டுக்கோ,  எந்த  கௌரமும்  இல்லை: இவ்வாறு அரசின் சார்பில் செய்வது, தமிழுக்கோ, தமிழகத்திற்கோ, எந்த பெருமையும் இல்லை. உண்மையை அறிந்தால், தமிழுக்கு கேவலம், தமிழகத்திற்கு, அசிங்கம், தமிழர்களுக்கு அவமானம் தான் என்பதை விவரங்களோடு விளக்கியிருந்தேன்[3].  ஏனெனில்,  நீலகிரி மலையில் சென்னை பிஷப்பான ஜியார்ஜ்ஸ் பென்ஸர் என்பரைப் பார்த்து விவரங்களை கால்டுவெல் கேட்டுக் கொள்கிறார்.  ஒரு விசுவாச ஊழியனாக (Deacon) உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார். பிறகுதான்,  தனது ஊழியத்தைச் செய்வதாற்காக இடையன்குடிக்கு அனுபப்படுகிறார். 1841ல் வந்து சேர்கிறான். 1844ல் கல்யாணம்! 1844 முதல் 1851-52 வரை ஏழு குழந்தைகளைப் பேற்றுக் கொள்கிறார். பிறகு எப்படி கால்டுவெல், தமிழுக்கு சேவை செய்திருக்க முடியும்?  பிரௌனிடம் சமஸ்கிருதம் படித்து, மற்ற ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு,  இந்தியர்களை எப்படிப் பிரிக்கலாம் என்ற நோக்கத்துடந்தான், வேலை செய்தவன் கால்டுவெல்.  இவரைத் தூக்கி வைத்துக் கொண்டு தமிழர்கள் ஆடுவதை என்னவென்று சொல்வது? தமிழர்கள், “திராவிடர்கள்” என்று நினைக்கும் வரையில்,  இத்தகைய அடிமை சிந்தனை மற்றும் கூலிமனப்பாங்கு இருக்கத்தான் செய்யும்[4].

எலிஸா வயதான காலத்தில்

எலிஸா வயதான காலத்தில்

சாணார்களை  இழிவுபடுத்தி  எழுதிய  புத்தகங்களைப்  பற்றி  மறைப்பதும்  கருணாநிதியின்  கயமைத்தனம்  தான்[5]  (2011): சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள்,  அவர்கள் படிப்பதற்கு லாயக்கில்லை…..என்றெல்லாம் கால்டுவெல் ஒரு புத்தகத்தில் எழுதினார். பிரச்சினை எழுந்தவுடன்,  அப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதாக, ஆங்கில அரசு அறிவித்தது. ஆனால், விரிவான மற்றொரு புத்தகத்தை, லண்டனில் வெளியிட்டது. அதாவது, இந்தியாவைப் பொறுத்த வரைக்கும், அது திரும்பப் பெற்றதாக இருக்கலாம், ஆனால், உலகத்தைப் பொறுத்தவரைக்கும், அக்கருத்துதான், படித்தவர்கள் எல்லோரும் கொண்டிருப்பர்.  சாணர்களை இழுவு படுத்திய புத்தகம் முதலில் சென்னையில் 1849ல் வெளியிடப் பட்டது[6]. அப்பொழுதே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. அதனால், பிரதிகளை ஆங்கில அரசு பதுக்கிவிட்டது. ஆனால், மறுவருடமே, அதாவது 1850ல்  லண்டனில் அதனை விரிவாக்கி வெளியிடப் பட்டது[7]. இவைற்றையெல்லாம் நன்கறிந்த கருணாநிதி, நிச்சயமாக, வேண்டுமென்றே அமைதியாக இருந்திருக்கிறார்.  இப்பொழுது நாடார்கள் கருணாநிதியை எதிர்த்து கேட்டால் என்ன செய்வார்?

எலிஸா நீ மௌட், கால்டுவெல்லின் பெண்டாட்டி

எலிஸா நீ மௌட், கால்டுவெல்லின் பெண்டாட்டி

கால்டுவெல்  சிலை  ஊழியம்  செய்யும்  கிறிஸ்தவராலேயே  சேதப்படுத்தப்  பட்டது –  ஞாயிற்றுக் கிழமைதிருப்பலி  நாள்  (2013): தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருந்தது. “யூகேரிஸ்ட்”  அந்த பலியில் அப்பம் மற்றும் சாராயம் ஏசுகிருஸ்துவின் மாமிசம் மற்றும் ரத்தமாக மாற்றி உண்மை கிருத்துவனுக்கு ஞானத்தைக் கொடுக்கும்.  அத்தகைய பலியில் பங்கு கொண்டிருந்த பொழுது அருள் ராஜின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பது கர்த்தருக்கும், ஏசுவிற்கு, பரித்தஆவிக்கும் தான் தெரியும். அந்த திரியேகத்துவ சர்ச்,  கால்டுவெல் நினைவிடத்திற்கு முன்னால் தான் இருக்கிறது. ஆராதனை முடிந்ததும்,  வெளி வந்த அருள் ராஜுக்கு கால்டுவெல்லின் சிலை தெரிகிறது.  ஏதோ தீர்மானம் செய்தது போல வேகமாக நடந்தான். திடீரென சம்மட்டியால் பிஷப் கால்டுவெல் சிலையின் பக்கவாட்டு பகுதி மற்றும் தலையின் பின்பகுதியை சேதப்படுத்தினார்.  பீடத்தில் பதிக்கப் பட்ட கிரானைட்டையும் உடைத்தார். இவர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். ஆகவே,  கிருத்துவ மதம் பரப்பிய கால்டுவெல் மீது, கிறிஸ்தவனான அவனுக்கே ஏன் அத்தகைய கோபம் வந்தது,  உணர்ச்சி மேலிட சிலையைத் சேதப்படுத்த, எது தூண்டியது என்று யோசிக்கும் போது வியப்பாக இருக்கிறது. ஆனால், சாணர்களுக்கு,  இவர் மீது நிச்சயம் கோபம் இருக்கிறது. ஏனெனில்,  தனது புத்தகத்தில் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாக எழுதியிருக்கிறார் தமிழுக்காக பாடுபட்ட கால்டுவெல். பிறகு, அவர் போலீசில் தானாகாவே சரணடைந்தார்[8]. ஆக 2013 நிகழ்ச்சி இவ்வாறு முடிந்தது.

கால்டுவெல் புருஷன் பெண்டாட்டி புதைக்கப்பட்ட இடம்

கால்டுவெல் புருஷன் பெண்டாட்டி புதைக்கப்பட்ட இடம்

 கால்டுவெல்  200வது  ஆண்டு  விழாவை,   நன்றியுடன் போற்றி  மகிழ்வோம்: இத்தகைய பின்னணியில்,  ”கால்டுவெல் 200வது ஆண்டுவிழாவை, நன்றியுடன் போற்றி மகிழ்வோம்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்[9] என்று இப்பொழுது 2014ல் படிக்கும் போது சரித்திரம் அறிந்தவர்கள் சொல்ல வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப் படுகிறார்கள். கருணாநிதி சொல்கிறார், “தமிழ்மொழியின், இலக்கணக் கட்டமைப்பும், இலக்கியச் செழுமையும் எவரையும் ஈர்க்கவில்லை. அதனால் தான் சமயத் தொண்டுகளாற்றிட வந்த, ஐரோப்பிய பாதிரியார்கள்  / குருமார்கள்[10], தமிழ் மொழியினால், ஈர்க்கப்பட்டு, அதன் சிறப்புகளில் மயங்கி,  அதன் மேன்மைகளை மேதினிக்கும் புலப்படுத்தினர். அவர்களுள் முதன்மையானவர், தமிழ் தனித்தன்மை வாய்ந்த மொழி, செம்மொழி, திராவிட மொழி குடும்பத்தின் மூத்த முதல்மொழி எனக்கூறி, உரியசான்றுகளுடன் நிறுவிய மாமேதை கால்டுவெல்”. இவ்வாறு  ஒட்டுமொத்தமாக எல்லா தமிழ் புலவர்கள், வித்வான்கள், ஆசிரியர்கள் எல்லோரையும் அந்த அளவுக்கு கேவலமாக மதிக்கிறார் கருணாநிதி!

இளையன்குடி-சர்ச்

இளையன்குடி-சர்ச்

கால்டுவெல்  புராணம்  பாடும் கருணாநிதி[11]: கருணநிதி சொல்கிறார், “அயர்லாந்து நாட்டில்,  கிளாடி ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூரில், ஓர் ஏழைக் குடும்பத்தில் 1814-ஆம் ஆண்டு மேதிங்கள் 7-ஆம்நாள் பிறந்தவர்.  கால்டுவெல், தமது 24வது வயதில் மதபோதகராக சென்னை வந்ததை குறிப்பிட்டுள்ளார்[12]. 1841-ல் நெல்லையில் பேராயராகப் பொறுப்பேற்று இடையன்குடி என்னும் ஊரில் தங்கி, தமது சமயப்பணிகளைச் சிறப்புடன் ஆற்றி,  தமிழ் மொழியையும் செம்மையாகக் கற்றார்.  மதகுருவாக அங்குப் பணியாற்றிய காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று புதைபொருள் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.  அதன் பயனாகப் பழங்காலக் கட்டடங்களின் அடிப்படைகளையும், ஈமத்தாழிகள் பலவற்றையும் வெளிக் கொணர்ந்தார்.  இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தாம் கண்டவற்றை, “திருநெல்வேலி சரித்திரம்’ எனும் பெயரில் நூலாக உருவாக்கினார். அந்நூல், 1881-ம் ஆண்டு சென்னையில் அப்போதிருந்த ஆங்கிலேய சென்னை மாகாண அரசினால் வெளியிடப் பட்டது”. ஆனால், சாணர்களின் சரித்திரம் புத்தகம் பற்றி மூச்சுவிடவில்லை, இதுதான் கருணாநிதியுன் விசமத்தனம்.

கால்டுவெல் 200 வருட விழா 2014.அகஸ்டின் ஜெபகுமார்.அழைப்பிதழ்

கால்டுவெல் 200 வருட விழா 2014.அகஸ்டின் ஜெபகுமார்.அழைப்பிதழ்

18 மொழிகளைக்  கற்றவராக  விளங்கினார்: இவ்வளவு விசயங்களையும் மறைத்து, இப்பொழுது, கருணாநிதி தொடர்கிறார், “இவர், தமிழகத்தில்தங்கியிருந்தபோது, தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிடமொழிகளுடன், 18 மொழிகளைக் கற்றவராக விளங்கினார்.  பின்னர், கால்டுவெல் அவர் ஆற்றி வந்த சமயப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்று, கொடைக்கானல் மலையில் தங்கி வாழ்ந்து வந்தார். 1891  ஜனவரி 31-ஆம் தேதி கொடைக்கானலிலேயே காலமானார். அவரது உடல் இடையன்குடியில்,  அவர் எழுப்பிய தேவாலய வளாகத்திலேயே அடக்கம் செய்யப் பட்டுள்ளது”. இந்த அளவிற்கு தேதியுடன் விவரத்தைச் சொல்லும் போது, மற்ற விவரங்களும் தெரிந்திருக்கிறது என்றாகிறது. இருப்பினும், தனக்கேயுரித்தான, திறனமையுடன் உண்மைகளை அப்பட்டமாக மறைத்திருக்கிறார்.

கால்டுவெல் 200 வருட விழா 2014

கால்டுவெல் 200 வருட விழா 2014

ஒட்டுமொத்த  உலகத்  தமிழ்ச்  சமுதாயம்  சார்பில்,  நன்றியுடன்  நினைத்து  வணங்கி  மகிழ்வோம்: கருணாநிதி முடிவாக சொல்கிறார், “தன், 77 ஆண்டுகளில், 53 ஆண்டுகள், தமிழகத்தில் வாழ்ந்துள்ளார்.  தமிழ் மொழிக்கு செய்த தொண்டுகளால், இன்றும் உலகம் முழுவதும் புகழப்படும் கால்டுவெல் பிறந்த, 200ம் ஆண்டு, 7ம் தேதி நிறைவு பெறும் வேளையில், ஒட்டுமொத்த உலகத் தமிழ்ச் சமுதாயம் சார்பில், நன்றியுடன் நினைத்து வணங்கி மகிழ்வோம்”, இவ்வாறு, கருணாநிதி கூறிஉள்ளார்[13]. அதென்ன வணங்கி மகிழ்வோம் என்று தெரியவில்லை. இந்தியர்களுக்கு எதிராக இவ்வளவு மோசடிகளை செய்த ஆளை நன்றியுடன் நினைத்து வணங்கி மகிழ்வோம் என்றால், எத்தகைய அடிமைத்தனம் ஆட்டிப்படைக்கிறது என்பதைத்தன் காட்டுகிறது. இதுவும் ஒருவகையான தீவிரவாதம் தான்!

கால்டுவெல் 200 வருட விழா 2014.தேர்தல் புறக்கணிப்பு

கால்டுவெல் 200 வருட விழா 2014.தேர்தல் புறக்கணிப்பு

© வேதபிரகாஷ்

05-05-2014

[1] https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

[2] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[3]https://dravidianatheism.wordpress.com/2010/01/29/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/

[4] https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

[5] https://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

[6] Robert Caldwell, The Tinnevelly Shanars: A Sketch of Their Religion and Their Moral Condition, and Characteristics as a Caste. With Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, London, 1849.

[7] Michael Bergunder, Heiko Frese, and Ulrike Schröder (Edited by), Ritual, Caste, and Religion in Colonial South India, Verlag der Franckeschen Stiftungen zu Halle, 2010, p.139

[8] https://dravidianatheism.wordpress.com/2013/05/06/christian-damages-the-statue-of-caldwell/

[9]தினமலர், கால்டுவெல் 200வதுஆண்டுவிழா : போற்றிமகிழகருணாநிதிஅழைப்பு, சென்னை, 05-05-2014.

[10]தினமணி, ,

[11] http://www.dinamani.com/tamilnadu/2014/05/05/200-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F/article2206095.ece

[12]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-200%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-137939.html

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=968537

ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் – திராவிட ஜிஹாதிகளின் தொடக்கம்!

மே 28, 2013

ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் – திராவிட ஜிஹாதிகளின் தொடக்கம்!

19-05-2013 - stage Somu, ..., Karunanidhi, Stalin, etcஞாயிற்றுக்கிழமை (19.5.2013) அன்று  நடந்த திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம்: சென்ற ஞாயிற்றுக்கிழமை (19.5.2013) அன்று திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அதன் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. வழக்கம் போல[1], திமுக தலைவர்கள், சித்தாந்திகள், அபிமானிகள் ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் – திராவிட ஜிஹாதிகளின் தொடக்கம்!முதலியோர் கலந்து கொண்டனர். நக்கீரன் வெளியிட்டுள்ள புகைப்படங்களிலிருந்து கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்[2]. இந்த கூட்டம் ஏற்கெனவே 2 முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது[3]. ஆகையால், 19.5.2013 அன்று கூட்டம் நடந்தபோது விருவிருப்பாக இருந்தது.

19-05-2013 - kushbhu....................Kanimozhi R-Lமகளிர் சுயஉதவிக்குழுக்கள்வளர்த்த போட்டி மனப்பான்மை (2010-2012): திமுக மகளிர் அணி ஆரம்பிக்கப்பட்டப் பிறகு, அம்மகளிருள் சிலர் தீவிரமாகவே தயாரிக வருகின்றனர். சிலருக்கு சிகப்பு-கருப்பு நிறங்களில் சீறுடைகள் அணிவிக்கப்பட்டு, அவர்கள் ஏதோ போலீஸார் / ராணுவவீரர்களைப் போல தயார் படுத்தி வருகின்றனர். மேலும், ஆட்சியில் இருந்தபோது, மகளிர் அணிகள் போர்வையில், சங்கங்கள் நடத்தப் பட்டு, “மகளிர் சுய-உதவிக்குழுக்கள்” தொடங்கப்பட்டு, வங்கிக் கடன்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. அத்தகைய பணமாற்றங்களில் சுவை கண்டவர்கள், நிறைய பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு, திமுகவில் உயர வேண்டும் என்று நினைத்து அவ்வாறே செயபட்டு வந்தார்கள். எப்படியாவது தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்று உயர்ந்துவிட எனென்னவோ செய்து பார்த்தனர். குஷ்பு இவ்விஷயத்தில்  அப்பெண்களுக்கு போட்டியாகக் கருதப்பட்டார். அதனால், அவரை விமர்சித்தால், தலைவரிடம் நற்றான்றிதழ் பெற்றுவிடலாம் என்றும் போட்டிப் போட்டனர். இவர்களில் தீவிரமாக இருந்த பெண்மணி – கார்ல் மார்க்ஸ்!
DMK women wing.4ஜெயலலிதா கூட்டத்தில் மனித வெடிகுண்டு  (19-05-2013): மேலே குறிப்பீடக் கூட்டத்தில் இவர், “இந்த கூட்டத்தில் திமுக பெண் பேச்சாளர் காரல் மார்க்ஸ் என்பவர், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன்,” என்று பேசியுள்ளது தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது! ஏனெனில், சென்னையைப் பொறுத்த வரைக்கும், ஏற்கெனவே, ஒரு பெண் வெடிகுண்டால்தான், ராஜீவ் காந்தி மற்றும் பலபேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, தீக்குளித்து இறத்தல் என்பது திராவிட அரசியல் பாரம்பரியத்தில் ஒரு தியாகத்தின் உச்சக்கட்ட நடவடிக்கையக இருந்து, அது போற்றிப் பாராட்டப் பட்டது. அவர்கள் “தியாகிகள்” என்றும் வர்ணிக்கப் பட்டு, அவ்வாறான, தியாகத்தைச் செய்த குடும்பங்களுக்கு உதவியும் செய்யப்பட்டன. ஆகவே, தீக்குளிக்கும் மூளைசலவைச் செய்யப்பட்ட தொண்டர்கள், நாளைக்கு மனிதவெடிகுண்டுகளாக மாறினால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்ரும் இல்லை, ஆனால், அது “திராவிட ஜிஹாத்” என்ற நிலைக்கு வந்து விடும்.  மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் பற்றி, “தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானவை. ஜனநாயகத்தில் அவற்றை எந்த உருவத்திலும் ஊக்குவிப்பது பெரும் கேடாகவே முடியும்”, என்று 27-05-2013 அன்று கருத்துத் தெரிவித்துள்ளார்[4].
DMK women wing.5வழக்கறிஞர் பி.விசெல்வகுமார் அளித்துள்ள புகார் (24-05-2013): திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகனும், கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்[5]. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் ஒரு புகார் மனு அளித்துள்ளார். இந்த மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்[6].

DMK women wing.3புகாரில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்  (24-05-2013): அதில் அவர் கூறியிருப்பதாவது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 19.5.2013 அன்று திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அதன் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் மு..ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக பெண் பேச்சாளர் காரல் மார்க்ஸ் என்பவர், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் என்று பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது சம்பந்தமான செய்தி 26.5.2013 நாளிட்ட வாரம் இருமுறை வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது. எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும், கொலைவெறி நோக்கத்தோடு காரல் மார்க்ஸ் பேசியுள்ளார். இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கருணாநிதி மற்றும் மு.. ஸ்டாலின் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திமுக பேச்சாளர் காரல் மார்க்ஸ் தொடர்புடைய பயங்கரவாத சக்திகளின் தொடர்பை தீர விசாரித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் தெரிவித்துள்ளார்[7].

DMK women wing.2யார் இந்த காரல் மார்க்ஸ்?[8]: தஞ்சை, புதிய பேருந்து நிலையம் அருகே வசிக்கும் காரல் மார்க்ஸ், 51வது வார்டு கவுன்சிலராக இருந்தவர். இவரது மகன், செந்தில்குமார் அரசு துறையில், பி.ஆர்.ஓ.,வாக உள்ளார். மற்றொரு மகன், காரல் பாலாஜி, பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். சமீபத்தில், கனிமொழி, தஞ்சை வந்தபோது, மாவட்ட செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பழனி மாணிக்கத்தின் படத்தை போடாமல், நோட்டீஸ் அடித்து ஒட்டினார். கடந்த உள்ளாட்சி தேர்தலில், தஞ்சை நகராட்சி தலைவர் பதவிக்கு, இவரது மருமகளுக்கு, “சீட்’ கிடைத்தது. ஆனால், சொந்த கட்சியினரிடம் கூட இவருக்கு செல்வாக்கு இல்லாததால், தோல்வியே பரிசாக கிடைத்தது. தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த தஞ்சை நகராட்சி, முதன்முறையாக அ.தி.மு.க. வசமானது.

DMK women wing.fullகாரல்மார்க்ஸ் என்கிற திராவிடப் பெண்மணியின் போக்கு: தினமணியில், இப்படி வேடிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது[9]: “மகளிரும் காரல் மார்க்ஸ் என்கிற பெயரை வைத்துக் கொள்வது நமது தமிழகத்தில் மட்டுமாகத்தான் இருக்கும். மகளிரணியைச் சேர்ந்த ஓர் உடன்பிறப்பு, பேச்சாளர்கள் கூட்டத்தில் தான் மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் ஜெயலலிதாவை அழிக்கப் போவதாக சூளுரைத்தாராமே, மெய்யாலுமா? ஆளும் கூட்டணியின் ஆதரவு இருந்ததால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற கட்சித் தலைவர் அவர். தொழிலால் மருத்துவர். அவருக்கு எப்படியும் மக்களவை உறுப்பினராகி விட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இங்கே இருந்தால் வாய்ப்புக் கிடைக்காது என்பதால் அணி மாறத் தயாராகி விட்டாராம், கட்டபொம்மனையும், வ.உ.சி.யையும் நினைவுபடுத்தும் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் அந்தத் தலைவர். “சட்டசபை பள்ளிக்கூடம் மாதிரி இருக்கிறது. அந்த “அம்மா’ வந்தால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் ஆரம்பப் பள்ளிக்கூடக் குழந்தைகளைப் போல வாயைப் பொத்திக் கொண்டு உட்காராத குறை. சட்டப்பேரைவக்குப் போகவே வெறுப்பாக இருக்கிறது” என்றெல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறாராம்”.

DMK womenஅதிமுக பேச்சாளர்களைப் போல பேசாதீர்கள்: கலைஞர் (19-05-2013): தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டார் கலைஞர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதயங்களிலே பதிய வையுங்கள், அ.தி.மு.க. பேச்சாளர்களைப் போல பேசாதீர்கள், நாகரிகத்தோடும், பண்பாட்டோடு பேசுங்கள்’’ என்றார்[10]. பேச்சாளர்களுக்குச் சொல்லப்பட்டது என்றும், தடை போடுவது, மாவட்டங்களுக்குள் நுழையக் கூடாது என்று தடுப்பது – இது போன்ற அரசாங்கத்தினுடைய சட்டங்களை, உத்தரவுகளை ஏற்கனவே மறுத்து, எதிர்த்து அறிக்கை கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்துப் பேசப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவர் கருணாநிதி, முதலில் எங்களுக்குள் கூட்டணி அமையட்டும் என்று திமுக கோஷ்டிப் பூசலை சூசகமாக குறிப்பிட்டுப் பேசினார்[11]. செய்தியாள்கள் கருணாநிதியைச் சந்தித்தபோது, கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும்…

 • கேள்வி: பேச்சாளர்களுக்கு இன்றைய கூட்டத்தில் என்ன சொல்லப்பட்டது?

பதில்: நன்றாக பேசுங்கள், தெளிவாக பேசுங்கள், கழகத்தின் கருத்துக்களை மக்களின் காதுகளில் போடுங்கள். மக்களின் இதயங்களிலே பதிய வையுங்கள். நாகரிகத்தோடு பேசுங்கள். பண்பாட்டோடு பேசுங்கள் என்று பேச்சாளர்களுக்கு சொல்லப்பட்டது.

 • கேள்வி: கூட்டணி பற்றி பேசப்பட்டதா?

பதில்: எங்களுக்குள் கூட்டணி வேண்டும் என்பதற்கு வலுவான காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.

 • கேள்வி: தி.மு..,-பாட்டாளி மக்கள் கட்சிகளுக்கு இடையே கூட்டணி வரும் என்று செய்திகள் அடிபடுகின்றன. அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: நீங்களே ‘‘அடிபடுகின்றன” என்று சொல்லி விட்டீர்களே?

 • கேள்வி: திருமாவளவன், சீமான் பொதுக்கூட்டங்களுக்கு .தி.மு.. அரசு தடை விதித்ததைப் பற்றி?

பதில்: தடை போடுவது, மாவட்டங்களுக்குள் நுழையக்கூடாது என்று தடுப்பது, இதுபோன்ற அரசாங்கத்தினுடைய சட்டங்களை, உத்தரவுகளை, ஏற்கனவே நான் மறுத்து எதிர்த்து அறிக்கை கொடுத்திருக்கிறேன் என்றார் கருணாநிதி

Kumudam reporter2பிப்ரவரியில் ஸ்டாலினைப் பற்றிய குஷ்புவின் கருத்து (-02-2013): சமீபத்தில் வாரப் பத்திரிகை ஒன்றில் திமுக ஆதரவு நடிகையான குஷ்பு திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் அடுத்த தலைவராக வருவது குறித்து கேள்வி ஒன்றுக்கு சர்ச்சைக்குரிய பதில் அளித்தார்[12]. இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. குஷ்பு திருச்சியில் திமுக எம்.பி. திருச்சி சிவா இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு பெமினா ஓட்டலுக்கு திரும்பினார். அப்பொழுது அங்கிருந்த திமுகவினர் சிலர் குஷ்பு ஓட்டலுக்கு வந்த கார் மீது செருப்புகளை வீசினர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை குஷ்பு, தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை காலி செய்து விட்டு சென்னை செல்ல கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கும் சிலர் குஷ்பை கண்டித்து கோஷமிட்டு, செருப்பு வீசினர். பின்பு, அவர் விமானம் ஏறி சென்னை சென்று விட்டார். மேலும், சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டில் பிப்ரவரி 2013ல் கல்வீச்சு நடத்தப்பட்டது[13]. இந்த விவகாரத்தில் திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ் பெயர் அடிபட்டது[14].

Karl Marx and Sargunapandian. Kanimozhi, J Helene Davidsonகுஷ்புவின் மீது பாய்ந்த கார்ல் மார்க்ஸ்  (-03-2013): காரல்மார்க்ஸ் குஷ்புவை கடுமையான வார்த்தைகளால் ஏக வசனத்தில் அர்ச்சனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, காரல்மார்க்ஸ் திமுக தலைவர் கருணாநிதியை பார்த்து ஆசி வாங்க வந்தார். அப்போது, குஷ்பு விவகாரம் குறித்து காரல் மார்க்ஸிடம் விசாரணை நடத்திய கருணாநிதி கடும் கோபம் கொண்டு அவரை வறுத்தெடுத்துவிட்டாராம்[15]. இதனால் வெலவெலத்துப் போன அவர் ஆளை விட்டால் போதும் என கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

19-05-2013 - women activists sittingகருணாநிதியின் முன்பாக குஷ்பு – காரல் மார்க்ஸ் பேசுவது, பேசியது: கருணாநிதியின் முன்பாக குஷ்பு முன்பு தமிழில் தப்பு-தப்பாக பேசியபோது, அவர் விமர்சனம் செய்தார். இப்பொழுதே, அவர் முன்பாக காரல்மார்க்ஸ் தீவிரவாதத் தொணியில் பேசுகிறார். ஆகவே, திமுகவில், பெண்களுக்கு யாரோ அதிகமாக செல்லம் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது. இதை ஆர்வக்கோளாரா, ஆத்திரவேகமா, ஆணவவெறியா, செல்வாக்குப் போட்டியா என்றெல்லாம் பிறகு தெரியவரலாம். குஷ்பு, முன்பு, “தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன். திமுக-வில் இருந்து பிரிக்க எனக்கு எதிராக சதி நடக்கிறது. காங்கிரசில் சேரப்போவதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. எனக்கு எதிராக வேண்டாதவர்கள் நிறைய வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள். அந்த வதந்திகளில் இதுவும் ஒன்று”, என்று, சொன்னதற்கும், அவருக்கு எதிராக நடதப்படும் பிரச்சாரமும் கவனிக்கத்தக்கது[16].

© வேதபிரகாஷ்

28-05-2013


[1] ஆகஸ்ட் 2010ல் நடந்த கூட்டம்: முதல்வர் கருணாநிதி இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், திமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடையே எப்படிப் பிரசாரம் செய்வது, எடுத்துக் கூறுவது, ஜெயலலிதா தொடர்ந்து அடுக்கி வரும் புகார்களுக்கு எப்படி பதிலளிப்பது என்பது உள்ளிட்டவை குறித்து திமுக சொற்பொழிவாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி ஆலோசனை வழங்கினார்.

[12] சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்துள்ள நடிகை குஷ்பு, “திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்” என்று கூறியிருந்தார். Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/07/tamilnadu-stalin-supporters-attack-on-kushboo-house-169363.html