Posts Tagged ‘திராவிட அரசியல்’

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (2)

ஒக்ரோபர் 21, 2022

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (2)

2019ல் கோவில் கட்டுகிறோம் என்ற செய்தி: ராசிபுரம் அருகேயுள்ள குச்சிகாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பட்டியிலின மக்கள் 10 பேர், தங்களுடைய சொந்த நிலத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்[1]. கோயில் பணிக்காக நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது[2]. இதில் தி.மு.க மற்றும் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்[3]. இதுபற்றி அப்பகுதி மக்களிடம் பேசியபோது[4], ‘2008ல் எங்கள் இனமக்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் கருணாநிதி. பல்வேறு உதவிகளை எங்கள் மக்களுக்கு செய்த அவருக்கு நன்றி தெரிவிக்கவும், அவரை போற்றுவதற்கும் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டுகிறோம். அண்ணா அறிவாலயம், கலைஞர் அறிவாலயம் போல் இந்தக் கோயில், மக்களிடைய பகுத்தறிவை எடுத்துச்செல்ல, உதவ வேண்டிய பணியை சிறப்பாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு கருணாநிதி செய்த உதவிகள் காலம் கடந்து நிற்கும். அவரது சாதனைகளைச் சொல்வதற்கு, நாங்கள் ஒரு நினைவாலயம் போல் கட்டுவது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்,” என்றனர்[5]. ரூ.30 லட்சம் மதிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கட்டப்படும் கோயிலில் கருணாநிதியின் உருவச்சிலை, பூங்கா மற்றும் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக அருந்ததியர் முன்னேற்றப் பேரவை அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்[6].

திமுக தலைவர் கொடுத்த விளக்கம்: இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதியான கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதை பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் குச்சிக்காடு கிராமத்துக்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வன் நேரில் வருகை தந்தார். அங்கே கருணாநிதிக்குக் கோயில் கட்டப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தார்[7]. இதன்பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “குச்சிக்காடு கிராம மக்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்டவில்லை. இங்கே பகுத்தறிவாலயம்தான் எழுப்பப்படுகிறது. நினைவிடத்தில் இருப்பது போலவே கருணாநிதியின் சிலை இருக்கும். மேலும் போட்டித் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில்  இணைய வசதியும்கூடிய நூலகமும் அமைக்கப்பட உள்ளது. கணினி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது,” என்று காந்திச்செல்வன் தெரிவித்தார்[8]. 2019ல் இவ்வாறு எல்லாம் சப்பைக் கட்டினாலும், 2022 வரை ஒன்றும் நடக்கவில்லை போலும். ஏனெனில், 2022ல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

2022ல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது குச்சிகாடு என்ற கிராமம். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது[9]. கலைஞர் பகுத்தறிவு ஆலயம் என்று பெயரிடப்பட்ட இந்த கோவிலுக்கு பேரரூராட்சி துணை தலைவர் நல்லதம்பி என்பவர் தன்னுடைய நிலத்தை இலவசமாக கொடுத்து உள்ளார்[10]. மேலும், இவ்வூரை சேர்ந்த அரசு ஊழியர்கள் கலைஞர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டள்ளனர்[11]. இந்த நிலையில் பூமிபூஜை செய்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கோவில் கட்டும் பணி பாதியிலேயே நின்று உள்ளது[12]. குச்சிகாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோவில் கட்டும் பணியில் ஆர்வம் காட்டிய போதிலும் மேற்கொண்டு ஆதரவு கிடைக்காததால் கோவில் பணி பாதியிலேயே நின்றுள்ளது. தற்போது பாதியில் நிற்கும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இவ்வூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிறகு, 2019-2022 காலகட்டத்தில் என்ன நடந்தது, கோவில் கட்டமுடியாமல் யார் தடுத்தது, அதற்கு யார் காரணம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

2010ல் கருணாநிதிக்கு கோவில் கட்ட திட்டம் போட்ட ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி: முதல்வர் கருணாநிதி பெயரில் செம்மொழி விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவரது பெயரில் வீட்டு வசதித் திட்டம், உயிர் காப்பீட்டுத்திட்டம் ஆகியவை உள்ளன. முதல்வர் பெயரில் டிவி சானலும் கூட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் பெயரில் ஒரு கோவில் வரவுள்ளது வேலூரில். வேலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருக்கும் ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திதான் இந்தக் கோவிலை கட்ட முனைந்துள்ளார்[13]. முதல்வர் கருணாநிதியின் ஏழை மக்கள் நலத் திட்டங்களால் கவரப்பட்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்[14]. இந்தக் கோவிலுக்கு கலைஞர் திருக்கோவில் என அவர் பெயரிட்டுள்ளார். குடியாத்தம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சாமிரெட்டிப்பள்ளி கிராமத்தில் இந்தக் கோவில் வருகிறது.ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக்கோவில் உருவாகிறது. கிரானைட்டால் ஆன முதல்வர் கருணாநிதியின் சிலை இங்கு வைக்கப்படுகிறது. வெளியில் உள்ள தூண்களில் மு.க.ஸ்லாடின், துரைமுருகன், மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தியின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கிருஷ்ணூ்ர்த்தி கூறுகையில், முதல்வர் கருணாநிதி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எனது கிராமத்தில் மட்டும் 13 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரை தாங்கள் கடவுள் போல கருதுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்தே எனக்கு கோவில் கட்டும் ஐடியா வந்தது என்றார்.

2010 அக்கோவில் இடிக்கப் பட்டது: அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடித்தனராம்: இந்நிலையில், குடியாத்தத்தைச் சேர்ந்த வருவாய்த் துறையினர் 02-07-2010 அன்று காலை 10 மணிக்கு கோவில் இருந்த இடத்துக்கு வந்து மார்பளவு இருந்த கருணாநிதியின் சிலையை அகற்றினர்[15]. மேலும், கோவிலின் முகப்புத் தோற்றம் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றினர்[16]. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்து காரணம் கேட்ட போது, “அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்’ என, கூறினர்[17]. இங்குதான் விவகாரம் இருக்கும் போலிருக்கிறது. சமீபத்தில், “அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்”, என்று பெரும்பாலும் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன[18]. இதை திசைத் திருப்ப, ஒருவேளை கருணாநிதி, இப்படியொரு யுக்தியைக் கையாண்டாரா என்று தெரியவில்லை. நாளைக்கு சொல்வார், “பார் எனக்குக் கட்டிய கோவிலையே, நான் இடிக்க ஆணையிட்டு விட்டேன்”, என்று பீழ்த்திக் கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

20-10-2022.


[1] விகடன், `3% இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் அவர்!’- கருணாநிதிக்கு கோயில் கட்டும் கிராம மக்கள், ர.ரகுபதி, Published:26 Aug 2019 6 PMUpdated:26 Aug 2019 6 PM

[2] https://www.vikatan.com/news/tamilnadu/rasipuram-village-people-to-construct-temple-for-karunanidhi

[3] தமிழ்.சமயம், ராசிபுரம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டுவிழா!, Samayam TamilUpdated: 26 Aug 2019, 12:09 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/villagers-to-build-temple-for-dmk-leader-karunanidhi-near-rasipuram/articleshow/70837912.cms

[5] தமிழ்.இந்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில்: ராசிபுரம் அருகே அடிக்கல் நாட்டு விழா, செய்திப்பிரிவு, Published : 26 Aug 2019 07:59 AM’ Last Updated : 26 Aug 2019 07:59 AM

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/512919-temple-for-karunanidhi.html

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கருணாநிதிக்குக் கட்டுவது பகுத்தறிவாலயமாம்கோயில் இல்லை என திமுக மா.செ. அறிவிப்பு,  Asianet Tamil, Rasipuram, First Published Aug 31, 2019, 8:53 AM IST ,  Last Updated Sep 6, 2019, 10:54 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/temple-of-karunanidhi-bulid-in-rasipuram-px303z

[9] தினத்தந்தி, முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதிக்கு கோவில்வியப்பில் ஆழ்த்திய ஊர் மக்கள்…! , ஆகஸ்ட் 7, 12:52 pm (Updated: ஆகஸ்ட் 7, 12:52 pm).

[10] https://www.dailythanthi.com/News/State/former-chief-minister-karunanidhis-temple-amazed-town-people-763645

[11] தமிழ்.வெப்.துனியா, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்! – எந்த ஊரில் தெரியுமா?, Written By Prasanth Karthick, Last Modified, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (13:37 IST).

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/peoples-build-a-temple-for-former-cm-karunanithi-122080700031_1.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, கருணாநிதிக்கு கோவில் கட்டும் வேலூர் திமுக கவுன்சிலர், By Sutha Published: Thursday, July 1, 2010, 14:39 [IST]

[14] https://tamil.oneindia.com/news/2010/07/01/dmk-councillor-karunanidhi-temple.html?story=2

[15] தினமலர், முதல்வருக்கு கட்டிய கோவில் அகற்றம், Added : ஜூலை 03, 2010  01:22 |

[16] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=31199

[17] வேதபிரகாஷ், கருணாநிதிக்கு கோயில் கட்டியுள்ள கவுன்சிலர், 01-07-2010.

[18]https://rationalisterrorism.wordpress.com/2010/07/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (1)

ஒக்ரோபர் 21, 2022

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (1)

சிலையுடைப்பவருக்கு கோவில்: கருணாநிதிக்கு கோவில், கலைஞருக்கு கோயில் என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டே இருக்கும். பிறகு, அமைதியாகி விடும், ஊடகங்களும் செய்திகளை அப்படியே முடக்கிவிடும். அதாவது, அவ்வாறு கோவில் எல்லாம் கட்டக் கூடாது, சிலைகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்று தீர்மானம் போட்டிருக்கலாம், அவ்வாறே அறிவுருத்தப் பட்டிருக்கலாம். கோவிலை எதிர்த்தவருக்கு, கோவிலைத் தூற்றியவருக்கு, இந்துமதத்தை தூஷித்தவருக்கு, இந்துவிரோதிக்கு அப்படி செய்வார்களா என்பதே விசித்திரமானது.  கருணாநிதி இறந்த பிறகு, பிள்ளைகள் முறையாக இறுதி சடங்குகள் செய்தார்களா இல்லையா என்றெல்லாம் தெரியாது, ஆனால், துர்கா ஸ்டாலின், காசி, கயா எல்லாம் சென்று ஏதோ சடங்குகள் செய்ததாக செய்திகள் வந்துள்ளன. தனது பூஜை அறையில் தனது பெற்றோர், கணவனின் பெற்றோர், கருணாநிதியின் பெற்றோர் என்று அவர்களது படங்களை வைத்து பூஜித்து வருகிறார்.

சிலையுடைப்பவருக்கு சிலை (Iconoclast) மற்றும் கோவில்: கருணாநிதிக்கு உயிருடன் இருக்கும் பொழுதே, மவுண்ட் ரோடில் சிலை வைக்கப் பட்டது. அதற்கு குன்றக்குடி அடிகள், பெரியார் எல்லாம் ஒப்புக் கொண்டார்களாம். செப்டம்பர் 21, 1975 அன்று அண்ணா சாலை – ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு சந்திப்பில், அன்னை மணியம்மையார் தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தார்கள். இப்பொழுது அவர்கள் இல்லாதலால், வீரமணி மற்ற ஆதினம் அதே போல ஒப்புக் கொள்வர்களா என்று தெரியவில்லை. ஆனால், 1987ல் எம்ஜிஆர் இறந்தபொழுது, இறுதி ஊர்வலம் சென்ற நிலையில் (24-12-1987), தொண்டர்கள், கருணாநிதி சிலையை உடைத்து எரிந்தனர். கருணாநிதி, எம்ஜிஆரை வசைப் பாடியது தெரிந்த விசயமே. அதனால், தொண்டர்கள் அச்சிலைப் பார்த்ததும், கோபம் கொன்டு, கொதித்த நிலையில் அவ்வாறு செய்தனர். திராவிடர்களே திராவிடனின் சிலையை உடைத்தது பகுத்தறிவு சித்தாந்தத்தில் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயம். பிறகு அதே இடத்தில் சிலை வைக்க வேண்டும் என்று முயற்சிகள் நடந்தன. பிறகு, அவர் காலமாகியப் பிறகு, சிலை வைக்கப் பட்டது. இப்பொழுது தொடர்ந்து சிலைகள் வைப்பது நடந்து வருகிறது. பேனா சின்னம் வைப்போம் என்றும் திட்டத்துடன் உள்ளார்கள்.

திராவிடியன் மாடலில் திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோதம் (2020-2022): சிலையுடைப்பவன் (Iconoclast) என்று ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தது, நிறையப் பேருக்குத் தெரிந்திருந்தாலும், உச்சநீதி மன்றத்தில் டோஸ் வாங்கிக் கொண்டது ஒருசிலருக்கேத் தெரியும், உருவம், சிலை, விக்கிரகம் (Idol) கூடாது, விக்கிரக ஆராதனை (Idoltary) கூடாது, உருவ வழிபாடு (Idol worship) கிடையாது என்றெல்லாம் பறைச்சாற்றும், கொக்கரிக்கும், ஊளையிடும் பகுத்தறிவு கூட்டங்கள், இப்பொழுது தாங்கள் திராவிட ஸ்டாக் (Dravidian stock) என்று இனவெறியுடன் சொல்லிக் கொள்கின்றன. திராவிடியன் மாடல் (Dravidian Model) என்றும் ஏதோ ஒரு புதிய சித்தாந்தத்தைக் கண்டு பிடித்து விட்டதை போல ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். பெரியாரிஸம் (Periyarism) என்றாலும், நாத்திகம் என்றாலும், இறுதியில் தாக்கப் படுவது இந்து மதமே. போதாகுறைக்கு இக்கூட்டங்கள் கோலோச்சும் போது, இந்துஇரோத அக்கிரமங்களும் அதிகமாகும். ஒழுங்காக ஆட்சி செய்து, மக்களுக்கு வேண்டிய காரியங்களை செய்யாமல், தினம்-தினம் இவ்வாறு கோவில், கோவில் சொத்து விவகாரங்களை வைத்து காலம் தள்ளிக் கொன்டிருக்கிறார்கள்.

20-10-2022 அன்று கருணநிதிக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா: அந்நிலையில் காஞ்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க. சுந்தர் தலைமையில், கோவில் கட்ட மறுபடியும் 20-10-2022 அன்று பூமிபூஜை போட்டுள்ளார்கள்.  செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ள ஆட்டுபட்டி கோட்டை புஞ்சை கிராமத்தில் ஸ்ரீ வனதுர்கை அம்மன் சித்தர் பீடத்திற்கு சொந்தமான நிலத்தில் 7 அடி உயரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வெண்கல சிலையுடன் கூடிய கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது[1]. இந்நிகழ்ச்சியில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம். எல். ஏ, ஒன்றிய பெருந் தலைவர்கள் ஆர். டி. அரசு, ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் டைகர்குணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அங்கு வைக்கப் பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்[2]. அதனை தொடர்ந்து கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். விழா ஏற்பாடுகளை வனதுர்க்கை அடிகளார் வினோத் செய்திருந்தார்.

மே 2022 – கருணாநிதி சமாதியில் கோபுர வடிவம் வைத்தது: தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது[3]. தமிழ்நாட்டில் ஒரு முறை கூட தோல்வி அடையாத சட்டமன்ற உறுப்பினர் என்றால் அது திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிதான். அதுவும் தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இருக்கிறார்[4]. அதுமட்டுமல்லாமல் ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சுமார் முப்பத்தி ஒன்பது ஆண்டு காலம் பதவி வகித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வயது முதிர்ந்த நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக கலைஞர் கருணாநிதி காலமானார். இது எடுத்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

மே 2022 – வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை: மேலும் நாள்தோறும் கலைஞரின் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கலைஞரின் செல்ல குழந்தை என வர்ணிக்கப்படும் முரசொலி நாளிதழ் அங்கு வைக்கப்படுவது வழக்கம். இது குறித்த சில விமர்சனங்கள் எழுந்த போதிலும், தற்போது வரை அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது வருகிறது. இதேபோல் திமுக தலைவராகவும், முதல்வராகவும் பதவியேற்ற போது முதலில் கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற பிறகே மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இதேபோல், திமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலைஞர் நினைவிடத்தில் நாள்தோறும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை என வெள்ளைப் பூக்களால் எழுதப்பட்டுள்ளது.

மே 2022 – கருணாநிதியும்கோவில்களும்: மேலும் கலைஞரின் உருவப்படத்திற்கு எதிரே பல வண்ணங்களில் கோவில் கோபுரம் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. இதனை அங்கு வரும் திமுக தொண்டர்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் அதனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.கடவுள் மறுப்பு கொள்கை இருந்தபோதிலும் கோவில்கள் மீதும் இந்து சமய அறநிலையத்துறை மீது தனி கவனம் செலுத்தியவர் கலைஞர் கருணாநிதி. பல ஆண்டுகள் ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் என்ற பெருமை அவருக்கு உள்ளது. இதேபோல பல்வேறு கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள், நூற்றுக்கணக்கான கோயில்களை புணரமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த ஊடகம் விவரித்தாலும், நடந்தது, நடப்பது பொது மக்களுக்கு, நன்றாகவே தெரியும். இந்துவிரோதத் தன்மை புரியும்.

© வேதபிரகாஷ்

20-10-2022.


[1] தமிழ்.கெட்,லோக், முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, By Rajasekar, Oct 20, 2022, 08:10 IST

[2] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/kanchipuram/seiyur/ground-breaking-ceremony-for-the-construction-of-a-temple-for-muthamizh-scholar-artist-7908939

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கருணாநிதி நினைவிடத்தில் திடீர்கோவில்ஒரு நிமிடம் திடுக்கிட்ட உடன்பிறப்புகள்.. ஆனால் மேட்டரே வேற!, By Rajkumar R Updated: Wednesday, May 4, 2022, 12:34 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/a-temple-tower-like-decoration-has-been-erected-at-the-memorial-of-former-kalaignar-karunanidhi-457034.html

பெரியாரைத் தூஷித்ததால் சீதைமைந்தன் மீது புகார், கைது இத்யாதி! ஆனால், இந்து தூஷணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

ஒக்ரோபர் 16, 2021

பெரியாரைத் தூஷித்ததால் சீதைமைந்தன் மீது புகார், கைது இத்யாதி! ஆனால், இந்து தூஷணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

ஈவேரா அல்லது பெரியாரின் மீது தூஷணமா?: இதுவரை தமிழகத்தில், ஈவேரா, பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் போன்றோர் இந்துமதம், கடவுளர், நம்பிக்கை, முதலியவற்றைப் பற்றி அவதூறாகப் பேசிவந்ததது, புத்தகங்கள் போட்டது, அவை இன்றும் புழக்கத்தில் உள்ளது முதலியவை அறியப் பட்டுள்ளது. அவற்றைப் பற்றி ஆராய்ந்தால், அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்ற கேள்வி எழும். பிறகு, அவர்களின் பேச்சுகளை-எழுத்துகளை புத்தகங்களாகப் போட்டு, விற்று விநியோகிக்கும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகம், பெரியார் திராவிடக் கழகம், போன்ற பதிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுதும், இது இந்துவிரோத மற்றும் இந்திய தேசவிரோத சக்திகளின் உட்பூசலே தவிர உண்மையில் அவர்கள் ஒன்றும் விடாமல் சட்டப் படி நடவடிக்கை எடுத்து, மூன்றாண்டு-ஐந்தாண்டுகள் சிறையில் தள்ளப் போவதில்லை. அப்படி செய்தால், செய்திருந்தால், 90& அத்தகைய திராவிடத்துவ, தமிழ்தேசிய மற்ற வகையறாக்கள் சிறையில் தான் இருந்திருப்பர். சிறைத் தண்டன பெற்றவர்கள் மாறியிருப்பர். அதனால், இப்பொழுது ஒருவர் ஈவேராவை-பெரியாரை தூஷித்ததால் கைது செய்யப் பட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது.

பெரியார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக ழகரம் வாய்ஸ் யூடியூப்: பெரியார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலின் தட்சிணாமூர்த்த்தியை போலீசார் 15-10-2021, வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர்[1]. அன்றே, சில டிவிசெனல்களில் இச்செய்தியை வெளிட்டாலும் விவரங்கள் கொடுக்கப் படவில்லை. அதாவது, அதன் மூலம், அந்த விமர்சனங்களை மக்கள் அறியக் கூடாது என்று அமுக்கி வாசித்தனர் என்று தெரிகிறது. ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனல் தொடந்து அரசியல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளது[2]. இந்த யூடியூப் சேனலை சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி நடத்தி வருகிறார்[3]. இந்த நிலையில், ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் அக்டோபர் 11ம் தேதி 11-10-2021 அன்று பெரியார் குறித்து ஒரு வீடியோ வெளியானது[4]. அதில், பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்[5].

தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் புகார் கொடுத்தது: இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் என்பவர் அளித்த புகாரில்[6], “காலமெல்லாம் தமிழ் மக்களுக்காக உழைத்த தந்தை பெரியாரையும், நான் சார்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் அவர்களையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவு படுத்தி, தட்சிணாமூர்த்தி என்பவர் மிகவும் கீழ் தரமாக பேசியுள்ளார், தந்தை பெரியார் விபச்சாரம் செய்தார் என தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இந்த செயல் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுகிற என்னைப் போன்ற பெரியார் தொண்டர்களை மிகவும் கவலையடைய செய்துள்ளது. மேலும், முடிந்தால் தன் மீது வழக்கு தொடுத்து பார் என வீடியோவில் தட்சிணாமூர்த்தி சவால் விடுத்துள்ளார். இதுபோன்ற பேச்சுக்கள் அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாட்டில் மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் சூழலுக்கு வழிவகுக்கிறது.

திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் ஏன் புகார் கொடுக்கவில்லை?: இங்கு திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் ஏன் புகார் கொடுக்கவில்லை என்பது நோக்கத் தக்கது. ஏனெனில், உண்மையிலேயே பாதிப்பு ஏற்படும் என்றால் அவர்களுக்குத் தான் என்று நன்றாகத் தெரியும். பிறகு தந்தை பெரியார் திராவிட கழக ஏன் முந்திக் கொள்கிறது அல்லது பெரியார் பிராண்டிற்கு பாடுபடுகிறது என்று தெரியவில்லை. அயோத்தியா மண்டபத்து அப்பவி பார்ப்பனர்களை வெட்டியது முதல், பன்றிக்கு பூணூல் போட்டது வரை இந்த தந்தை பெரியார் திராவிட கழக தான் செய்து வருகிறது. இதனால், திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் இந்துக்களுக்கு உதவுகின்றனர் என்றாகாது. இது எதோ இவர்களுக்குள் உள்ள ஒப்பந்தம் போலே தோன்றுகிறது. சுப.வீரப் பாண்டியனும், திராவிடர் கழகத்தில் இல்லை, ஆனால், ஒத்து ஊதும் போது, இந்துக்களைத் தாக்கும் போது, ஒன்று படுகின்றனர். விடுதலை ராஜேந்திரனும் அமைதியாக அதே வேலையைச் செய்து வருவது கவனிக்கத் தக்கது.

திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் நோக்கு உள்ளதா?: தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை மிக மிக கீழ்த்தரமாக ஆபாசமாக விமர்சிக்கின்ற சீதையின் மைந்தன் என்கிற அந்த நபர் ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் கடந்த 11/10/21 தேதியன்று பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் நோக்கில் இவர் பேசி உள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது, ஆகவே அய்யா அவர்கள் இவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[7]. இந்த புகாரின் பேரில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி மீது போலீசார் 153A, 504B, 505 (1) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்[8]. இதையடுத்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். விசாரணையில் தட்சிணமூர்த்தி இதேபோல் மூன்று யூ-ட்யூப் சேனலை நடத்திவந்ததும், கச்சத்தீவு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவருவது தெரியவந்தது[9]. இதனையடுத்து தட்சிணமூர்த்தி பெரியார் குறித்து பேசிய காணொலியை சைபர் கிரைம் காவல் துறையினர் சேனலிலிருந்து நீக்கினர்[10]. இவரிடம் காவல் துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றது.

இபிகோ 153A, 504B, 505 (1) ஆகிய 3 பிரிவுகள் சொல்வது என்ன?: இபிகோ  153Aன்படி –

1. (a) பேச்சாலோ, எழுதாலோ அல்லது சைகையாலோ மத, இன, மொழி சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்வது குற்றமாகும்.

(b) அத்தகைய விரோத உணர்ச்சிகளால் போது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதும் குற்றமாகும்.

(c) குற்றம் என்று கருதக்கூடிய வன்முறை அல்லது வன்செயலை பயன்படுத்தும் கருத்துடன் அல்லது பயன்படுத்த பயிச்சி அளிக்கும் கருத்துடன் அல்லது சாதி, சமூகம், இனம், மதம், மொழி அல்லது வட்டாரக் குழு எதற்கும் விரோதமான வன்முறை அல்லது வன்செயலை பயன்படுத்தக்கூடிய பயிற்சி இயக்கம் உடற்பயிற்சி அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் பங்கு பெறுவோர் அநேகமாக பயன்படுத்த பயிற்சி அளிக்கக்கூடிய நடவடிக்கையாக அவை இருக்கின்றன என்று அறிந்தும் அவற்றில் பங்குபெறுவதும் பயிற்சி வேலையில் ஈடுபடுவதும் குற்றமாகும்.

அத்தகைய ஜாதி, சமூகம், இனம், மதம், மொழி அல்லது வட்டார குழுவினருக்கு அச்சத்தை அல்லது பீதியை அல்லது பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை அத்தகைய நடவடிக்கைகள் எந்த காரணம் கொண்டு உண்டாகின்றன. அல்லது உண்டாக்கக் கூடும் என்று அறிந்தும் அதில் பங்கு பெறுவோர் குற்றம் புரிந்தவர் ஆவார்.

இந்த குற்றத்திற்கு தண்டனையாக 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் சிறைக்காவலுடன் கூடிய அபராதங்கள் விதிக்கப்படும்.

2. மேலே விவரிக்கப்பட்டுள்ள குற்றத்தின் வழிபாடு நடைபெறும் இடத்தில் செய்வது குற்றம், மத வழிபாட்டுக்கு ஆன மக்கள் கூடியிருக்கும் அரங்கிலும் அந்த குற்றத்தினை புரிய கொடுத்தது. அப்படி புரிந்தால் அதற்காக 5 ஆண்டுகள் வரை சிறைக் காவலும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி முதலானவற்றின் அடிப்படைகளில் வெவ்வேறு வகுப்புகளிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிலக்கணப் பேணலுக்கு பாதகமான செயல்களைச் செய்தல்

(1) எவரேனும் :-

(a).பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தல்களால் அல்லது மற்றபடியாக, மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி, ஜாதி அல்லது பிரிவு அல்லது எந்தவிதமான ஏதாவதொரு பிற அடிப்படையில், வெவ்வேறான மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்புகள் அல்லது ஜாதிகள் அல்லது பிரிவுகளிடையே ஒற்றுமையின்மை அல்லது பகைமை உணர்வுகள், வெறுப்பு அல்லது மனக்கசப்பை ஊக்குவித்தால் அல்லது ஊக்குவிப்பதற்கு முயன்றால் அல்லது

(b). எந்தஒரு செயல், வெவ்வேறான மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்புகள் அல்லது ஜாதிகள் அல்லது பிரிவுகளிடையே நல்லிலக்கணத்தைப் பேணுவதற்குப் பாதகமாக இருக்கிறதோ, மற்றும் எந்தவொரு செயல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறதோ, அல்லது அநேகமாக விளைவிக்குமோ, அந்தவொரு செயலைப் புரிந்தால், அல்லது

(c) ஏதாவதொரு பயிற்சி, இயக்கம், படைப் பயிற்சி அல்லது பிற ஒத்த செய்கையை, அத்தகைய செய்கையில் பங்குபெறுவோர்கள் குற்றமுறு பலப்பிரயோகம் அல்லது வன்முறையைப் பயன்படுத்த அல்லது அநேகமாக பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்ட, அல்லது அத்தகைய செய்கையில் பங்குபெறுவோர்கள் குற்றமுறு பலப்பிரயோகத்தை அல்லது வன்முறையை பயன்படுத்துவார்கள் அல்லது அநேகமாக பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்படுவார்கள் என்று தெரிந்தே, ஏதாவதொரு மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவுக்கு எதிராக மற்றும் அத்தகைய செய்கை ஏதாவதொரு எந்தவிதமான காரணத்திற்க்காகவும், அத்தகைய மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவிற்கு இடையில் பயம் அல்லது பீதி அல்லது பாதுகாப்பற்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதற்கு அல்லது அநேகமாக ஏற்படுத்தலாமென்ற, ஏற்பாடு செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

அப்படி பார்த்தால், மேலே குறிப்பிட்டப் படி, அந்த நபர்களின் பேச்சுகள், வார்த்தைகள், எழுத்துகள், புத்தகங்கள் இன்றளவிலும் அத்தகைய குற்றங்களை செய்து கொண்டு தான் வருகின்றன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

© வேதபிரகாஷ்

16-10-2021


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், பெரியார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது!, Written By WebDesk, Updated: October 16, 2021 1:22:52 am

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/youtuber-arrested-for-derogatory-video-released-on-periyar-356213/

[3] டாப்.தமிழ்.நியூஸ், பெரியார் விபச்சாரம் செய்தாரா? என யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தவர் கைது!,  By AISHWARYA G , Fri, 15 Oct 20219:22:41 PM

[4] https://www.toptamilnews.com/thamizhagam/youtuber-arrested-for-commands-about-periyar/cid5537412.htm

[5] தினகரன், ழகரம் வாய்ஸ் என்ற யூட்டியூப் சேனலை நடத்தி வரும் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி கைது, 2021-10-15@ 19:09:01.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=712620

[7] தினத்தந்தி, பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுயூடியூபர் தட்சிணாமூர்த்தி கைது, Uploaded on 16/10/2021.

[8] https://www.youtube.com/watch?v=kl_2s7LxAbU

[9] ஈ.டிவி.பாரத், பெரியார் குறித்து அவதூறு: யூட்யூபர் கைது, Published on: 16-10-2021 7.00 hours.

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/youtuber-arrested-in-chennai-for-slandering-father-periyar/tamil-nadu20211016065810895

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

செப்ரெம்பர் 22, 2021

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

பெரியார் உலகம்சுற்றுலா தலம்நிச்சயமாக வியாபாரத்திற்கு வித்திட்டதே: பெரியார் பெயரைச் சொல்லி, திருச்சி-ஹைவேயில், இந்த பெரிய வணிக வளாகத்தைக் கட்டத் தீர்மானித்திருப்பது, நிச்சயமாக வியாபாரத்திற்குத் தான். ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது[1]. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன். இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம். இதனால், அருகில் உள்ள ஓட்டல்களுக்கு கூட்டம் குறையும். அவர்கள் கவலைப் படுவார்கள். ஆக, பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இங்கு சென்றால், பலன் கிடைக்காது என்று யாராவது கிளப்பி விட்டால்[2], ஒருவேளை இந்த நாத்திக வளாகத்தின் முக்கியத்துவம் குறையலாம். ஆனால், மற்றவர்கள் வரத்தான் செய்வார்கள்.

நாத்திக ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!: புரட்டாசி மாதம் ஆரம்பித்தாகி விட்டது, சும்மா இருப்பார்களா, பெருமாள் கோவில் கொள்ளை நடந்துள்ளது! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழாமூர் கிராமத்தில் உள்ள கைகொடுக்கும் பெருமாள் உள்ளது. இக்கோயிலில் 18-09-2021 அன்று புரட்டாசி மாத முதல் சனி என்பதால் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் வழக்கம்போல் இரவு கோயிலை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில், இரவு கோவிலின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், மூன்றடி உயரம் உள்ள மூலவர் பெருமாள் கல் சிலையை திருடிச்சென்றுள்ளனர்[3]. 19-09-2021 அன்று பிற்பகலில் அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் மூலவர் சிலை மாயமாகி உள்ளதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக பெருமாள் விக்கிரகம் (மூன்றடி உயரம்), நகைகள் கொள்ளை,..எனும்பொழுது, திராவிட ஔரங்கசீப்புகள், மாலிகாபூர்கள் கிளம்பி விட்டனர்! ஒரு பக்கம் சிலை வைக்கிறோம் என்கிறார்கள், இன்னொரு பக்கம் சிலைகள் மாயமாகின்றன.

வெங்கடாஜலபதி விசயத்தில் இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்துர்கா தம்பதியர்: 95 அடி உயரத்திற்கு சிலை உடைத்தவனுக்கு சிலை வைப்போம் என்கின்றனர், ஆனால், மூன்றடி வெங்கடாஜபதி சிலை திருடு போயுள்ளது. வேங்கட ராமசாமி நாயக்கருக்குக்கு சிலை வைக்கும் நாத்திக-இந்துவிரோதிகளுக்கு, வேங்கடாஜலபதி மீது ஏன் போர் என்று தெரியவில்லை! இந்த அழகில், மனைவி திருமலைக்கு சென்று கும்பிடு போடுவதும், திருமலை அர்ச்சகர்கள் கணவன் வீட்டிற்கு வந்து, தம்பதியரை வாழ்த்தி, மாலை போட்டு, கயிறு கட்டி விடுவதும் என்ன என்று தெரியவில்லை! இவற்றைப் பற்றி வீடியோ, புகைப் படங்கள் என்று அமர்க்களப் படுகின்றன. ஆனால், இத்தகைய விசயங்களில், ஸ்டாலின்-துர்கா தம்பதியர் இரட்டை வேடம் போடுகின்றனர் என்றாகிறது. புருஷன்-நாத்திகன், பெண்டாட்டி-ஆத்திகன் என்று இருந்தால், அந்த திருமலை அர்ச்சகர்களை உள்ளே விட்டிருக்கக் கூடாது, மந்திரங்கள் சொல்ல அனுமதித்து இருக்கக் கூடாது, கயிறு கட்டுதல், போன்றவை நடந்திருக்கக் கூடாது. துர்கா, தனது கணவரிடம், “எதுக்குங்க இப்படியெல்லாம் நடக்கிறது, நீங்கள் கொஞ்சம் நடவடிக்கை எடுக்கக் கூடாதா?,” என்று கேட்கலாம், ஆனால், அவ்வாறு செய்வாரா என்று தெரியவில்லை.

ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழியில், இந்த பெரியார் உலகம் எழும்புகிறது:

 1. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்கப் படவு ள்ளது.
 2. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர்.
 3. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.
 4. ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது.
 5. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன்.
 6. இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம்.
 7. ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழி – மதுர காளியம்மன் கோவில், திருவாலீஸ்வரர் கோவில், / வாலி கண்டபுரம், ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் என்று பல கோவில்கள் உள்ளன.
 8. ஆக அந்த 27 ஏக்கர் நிலமும் கோவிலுடையதாக இருக்கலாம். பிறகு, அதில் “பெரியார் உலகம்” வருவது, சிலை வைப்பது??????

பெரியாருக்கு வியாபாரம் செய்ய, புதிய கதைகளை உருவாக்குகின்றனர்: ஈவேராவை ஊதிப் பெரிதாக்கியதால், அப்பிம்பம் ஏதோ பெரிதாகி விட்டது என்று நினைப்பது பெரியாரிஸ்டுகளின் நம்பிக்கை, மூட-நம்பிக்கை, முட-நம்பிக்கை, அது மடத்தனம் ஆகிறது! விடுதலை, முரசொலி, நக்கீரன், கலைஞர்-செய்தி, சன்-குழுமம் மற்ற திக-திமுகவினருக்கு ஜால்றா போடும் ஊடகங்கள், புதியா-புதிய புராணங்களை அவிழ்த்து விடுகின்றன. அஜிதன் சந்திரஜோதி உயிர் தொழில்நுட்பவியல் & மரபணு பொறியியல் ஆராய்ச்சி மாணவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரிதாக ரீல் விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4].   “நீங்கள் தமிழரா? அல்லது தமிழகத்தில் வசிக்கிறீர்களா? ஒருவேளை ஆம் என்றால்ஒன்று நீங்கள் பெரியாரை ஆதரிப்பவராக இருக்க வேண்டும்; இல்லையேல் எதிர்ப்பவராக இருக்க வேண்டும்;….” என்று ஆரம்பித்து, வக்காலத்து வாங்கிக் கொண்டு, புராணம் பாடுவது, ஏதோ, அரசவைப் புலவர், மேடைப் பேச்சாளி போன்றவதை விட தமாஷாக இருக்கிறது. ஏதோ 2021ல் இருப்பவர்கள் எல்லாம் இவர் சொல்லித் தான் மற்றவர்கள் நம்ப வேண்டும், ஈரோடு நாயக்கரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல எழுதியிருப்பது வேடிக்கைத் தான்.

ஈவேராவின் கதைகள் இருக்கும் பெரியார்களுக்கு நன்றாகவே தெரியும், இந்த குஞ்சுகள் சொல்லித் தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை: இப்படி பொய்யான நம்பிக்கையினை உருவாக்கினால், அதனை அவர்கள் தாம், நம்ப வேண்டும்! 60/70/80 வயதானவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும்! பவானி நதிக்கரை கூத்துகள் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா என்பது சந்தேகமே, ஆனால், இது போல, பொய்களை அள்ளிவிட கிளம்பியிருக்கிறார்கள். ஈவேராவைப் பார்த்து, பேசி, பழகியுள்ளவர்களுக்கு நாயக்கரைப் பற்றி நன்றாகவேத் தெரியும். மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பாவம், நாத்திகர்களின் கடவுள் ஈவேராகி அவதாரம் மாறிய நிலை போலும்! தாம்பத்தியப் பிரச்சினை, பிறந்த குழந்தை இறந்தது, மனைவி இறந்தது, எல்லோருடனும் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தது, ……..பவனி ஆற்றங்கரை விவகாரங்கள், நாடகக் கம்பெனிகளுடன் சகவாசம், வீட்டை விட்டு ஓடினது, பணத்தால் அரசியலில் பெரிய ஆளாகி விடலாம் என்ற கனவு கனவானது, ஆங்கிலம் தெரியாதலால், எஸ்.ராமநாதன், அண்ணாவை நம்பி இருந்தது, ஐரோப்பிய சுற்றுலா பற்றிய ரகசியங்கள், அம்பேத்கர் இவரை நம்பாதது, ஜின்னா கழட்டி விட்டது, இப்படி ஏகபட்ட விவகாரங்கள் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] கார் வண்டிகள் நிறுத்த காசு, பூஜைப் பொருட்கள் விற்பனை, சிறப்பு தரிசனம், சுற்றிலும் ஏராளமான கடைகளும் முளைத்துள்ளன.முன்பு இவையெல்லாம் இல்லை.

[2]  அதாவது நாத்திகத்தை வைத்து ஆத்திகத்திற்கு எதிரான வியாபாரத்தை உரிய முறையில் அல்லது அதே மாதிரியான பிரச்சாரமுறையில் எதிர்க்கலாம்.

[3] இன்ஸ்டா.நியூஸ், மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து சிலை திருட்டு, By A.Mahendran, Reporter 19 Sep 2021 6:00 PM.

https://www.instanews.city/tamil-nadu/chengalpattu/maduranthakam/temple-idol-theft-at-keelamoor-village-neat-melmaruvathur-1019243

[4] நக்கீரன், யார் அந்த பெரியார்? என்னதான் வேண்டுமாம் அவருக்கு?, Published on 18/09/2021 (06:06) | Edited on 18/09/2021 (09:36).

https://www.nakkheeran.in/nakkheeran/who-periyar-what-does-he-want/who-periyar-what-does-he-want

பாரம்பரிய தீர்த்த யாத்திரை பாதையில் பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! (1)

செப்ரெம்பர் 22, 2021

பாரம்பரிய தீர்த்த யாத்திரை பாதையில் பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! (1)

தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பெயரில் வளாகம் அமைக்க அனுமதி: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தந்தை பெரியாரின் 95 அடி உயர் சிலை வைக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்[1].  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி 30-08-2021 அன்று சந்தித்தார்[2]. அப்போது, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூர் கிராமத்தில் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் ஆகியவை அமைக்க அனுமதி வழங்கி ஆணைப் பிறப்பித்ததற்கு பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, திராவிடர் கழக பொதுச்செயலாளர் அன்புராஜ்[3], துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பெரியார் சிலை வளாகமா, ஹைவே ரெஸ்டாரென்டா?: அதன்படி  திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க உள்ளதாக பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர். இங்கு 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க இருப்பதாக திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை அறிவித்துள்ளது. அங்கு 40 அடி உயர பீடத்தில் 95 அடி உயரம் கொண்டுள்ள தந்தை பெரியாரின் வெண்கல சிலை ஒன்று அமைய உள்ளது. 133 அடி உயரத்தில் அமையும் உலகின் மிக உயரமான பெரியார் சிலையாக இது அமைகிறது. 135 அடி என்று பிறகு சொல்லப் பட்டது[4]. அதாவது வள்ளுவர் சிலையை விட உயரமாக இருக்க வேண்டும் என்ற திட்டம் போலிருக்கிறது[5]. ஏற்கெனவே ஈவேராவுக்கு திருவள்ளுவர், திருக்குறள் மீதெல்லாம் அபாரமான விருப்பம் இருந்ததனால், நன்றாக வைது, வசை பாடி, திட்டியுள்ளது தெரிந்த விசயமான நிலையில், இப்படியொரு ஆசை, நாத்திகவாதிகளுக்கு! ஒரு துலுக்கர் திருக்குறள் மோசடி வியாபாரம் செய்து மாட்டிக் கொண்டதும், இப்பொழுது தான் செய்தியாக வந்துள்ளது[6].

பெரியார் உலகம்சுற்றுலா தலம்வளாகம் என்று வேறு விளக்கம்: இங்கு பெரியாரின் வரலாற்றை விளக்கும் ஒளி – ஒலி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், மெழுகு சிலை அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மிகப்பெரிய பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியார் படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம் ஆகியவனவும் அங்கு அமைக்கப்பட உள்ளன. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது[7]. இது தான் உண்மையே தவிர பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாக உள்ளதாக உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வதை தோழர்கள், பற்றாளர்கள் சமூக வைதளங்களில் வெளிப்படுத்துவீர் என  திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை தலைமை அறிவித்துள்ளது[8].  இதை ஈரோட்டில் அமைக்காமல், இங்கு அமைக்க வேண்டிய மர்மம் என்ன என்றும் ஆராய வேண்டியுள்ளது.

2018 முதல் 2021 வரை அனுமதி கிடைக்கவில்லையாம், ஸ்டாலின் வந்ததும் கிடைத்து விட்டதாம்: கலி. பூங்குன்றன் “இந்த வளாகம் அமைப்பதற்கான மத்திய அரசின் அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில், மாநில அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்தபோது, அதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்படவில்லை……..இப்போது மு.. ஸ்டாலின் முதல்வரான பிறகு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது[9]. இப்போது பெரியார் பிறந்து 143 ஆண்டுகளாகின்றன. 150 ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். முதல்கட்டமாக சிலையின் பணிகள் முடிவடையும். பிறகு படிப்படியாக அடுத்தடுத்த பணிகள் நடக்கும்,” என்கிறார்[10].  மூன்றாண்டுகளில் கிடைக்காதது, ஸ்டாலின் வந்தவுடன் கிடைத்து விட்டது என்றால், மத்திய அரசுடன், திமுக அல்லது திக என்ன பேரம் பேசியது, என்ன விவகாரம் என்பதனை வெளியில் சொல்வார்களா? பிஜேபிக்கும்-திமுகவிற்கும் ஏதாவது ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா? ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ரூ 100 கோடி செலவு யார் செய்யப் போகிறது?: இந்நிலையில், பெரியாருக்கு 95 அடி உயர சிலையை அரசு அமைக்கப்போவதாக பா.ஜ.க – நாம் தமிழர் பொய் செய்திகளை பரப்பினர்[11]. உண்மையான விவரங்களை வெளிப்படையாக அறிவித்திருந்தால், யாரும் ஒன்றும் கேட்டிருக்க மாட்டார்கள். “பெரியாருக்கு சிலை,” என்பதே முரண்பாடு என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்நிலையில் 95 அடி உயரம், 135 அடி உயரம், 135 அடி உயரம் என்றெல்லாம் செய்திகள் வருவது வேடிக்கையாக இருக்கிறது. மொத்த வளகத்திற்கு ஆகும் செலவு ரூ.100 கோடி என்று வீரமணி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மை இவ்வாறு இருக்க பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாகிறது என்று உண்மைக்கு மாறாகப் பிரச்சாரம் செய்வதை – கழகத் தோழர்கள், பற்றாளர்கள் சமூகவலை தளங்களில் வெளிப்படுத்துவீர்!” எனத் தெரிவித்துள்ளனர்[12]. சிலைக்கு ரூ 100 கோடிகளா அல்லது மொத்த வளாகத்திற்கான செலவு மதிப்பீடா என்பதெல்லாம் சரி, இதை யார் செலவு செய்யப் போகிறாற்கள்? தமிழக அரசு எத்தகைக் கொடுக்கிறது, பெரியார் டிரஸ்ட் எவ்வளவு செலவு செய்யப் போகிறது அல்லது புதியதாக ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பனி ஆரம்பிக்கப் போகிறார்களா? இவ்விவரங்களை வெளிப்படையாக சொல்லப் படவில்லை.

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை – பிஜேபி முன்னாள் மத்திய அமைச்சர் கூறியது (09-09-2021): நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்[13]. அப்போது அவர் கூறுகையில்[14], “…..பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துகளை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும்………” ஆக பிஜேபியின் ஆதரவும் கிடைத்து விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் முதல் பிஜேபி வரை பல தலைவர்கள் (வைத்யா, வானதி, குஷ்பு முதலியோர்) பெரியார், பெரியாரித்துவம், பெரியாரிஸம், பெரியாரின் சித்தாதம், சிலை என்று எல்லாவற்றிற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வணிக ரீதியில் செயல்படப் போகின்ற “பெரியார் உலகம்” திட்டத்தைப் புரிந்து கொண்டு பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. ஒருவேளை, பிஜேபி-திமுக கூட்டணி 2023ல் உருவாகும் என்ற கோணத்தில் ஒப்புக் கொண்டாரா என்றும் புரியவில்லை.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] தினகரன், பெரியாரின் 95 அடி உயர சிலை வைக்க அனுமதி: முதல்வருக்கு கி.வீரமணி நன்றி, ஆகஸ்ட் 31, 2021.

[2] https://m.dinakaran.com/article/News_Detail/701592/amp

[3] கே. வீரமணியின் மகன், இப்பொழுது பெரியார் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரி, வீரமணிக்குப் பிறகு பதவிக்கு வரத் தயாராக இருக்கும் இளவரசர், “பெரியாரின் வாரிசு” என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ் வள்ளுவர் சிலையை விட 2 அடி கூடுதல் உயரத்தில் பெரியார் சிலை.. காரணம் இதுதானா..?, Ezhilarasan Babu, Chennai, First Published Sep 9, 2021, 10:38 AM IST, Last Updated Sep 9, 2021, 10:38 AM IST.

[5] https://tamil.asianetnews.com/politics/periyar-statue-is-2-feet-higher-than-valluvar-statue-is-this-the-reason–qz5iaa

[6]  திராவிட, திராவிடத்துவ ஆட்சியில், திருக்குறள், திருவள்ளுவர் என்றும் வைத்துக் கொண்டு, நன்றாக அரசியல் செய்யலாம், வியாபாரமும் செய்யலாம்.

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், 133 அடி உயரத்தில் பெரியார் வெங்கல சிலை… 27 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவாகும் பெரியார் உலகம்.. எங்கு தெரியுமா?, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Sep 8, 2021, 1:24 PM IST, Last Updated Sep 8, 2021, 1:24 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/periyar-bronze-statue-at-a-height-of-133-feet-the-world-of-periyar-is-huge-on-27-acres-do-you-know-where–qz3vay

[9] பிபிசி தமிழ், பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு? உண்மை என்ன? #FactCheck, முரளிதரன் காசி விஸ்வநாதன், 7 செப்டெம்பர் 2021

[10] https://www.bbc.com/tamil/india-58476523

[11] கலைஞர்.செய்தி, ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? – உண்மை என்ன?”: பா..சீமான் வகையறாக்களுக்கு திராவிடர் கழகம் பதிலடி!, Prem Kumar, Updated on : 8 September 2021, 10:37 AM.

[12] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/08/dravidar-kazhagam-explains-what-is-the-truth-about-rs-100-crore-periyar-statue

[13] NEWS18 TAMIL, பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்,  LAST UPDATED: SEPTEMBER 10, 2021, 13:34 IST.

[14] https://tamil.news18.com/amp/news/tamil-nadu/there-is-nothing-wrong-with-placing-a-statue-of-periyar-ponradhakrishnan-ekr-556987.html

ஸ்டாலினின் ஓணம் வாழ்த்து, செக்யூலரிஸமா, திராவிடத்து-இந்துத்துவமா, அரசியல் சதுரங்கமா?

ஓகஸ்ட் 31, 2020

ஸ்டாலினின் ஓணம் வாழ்த்து, செக்யூலரிஸமா, திராவிடத்து-இந்துத்துவமா, அரசியல் சதுரங்கமா?

 

ஒணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும், ஸ்டாலின், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையேஇது என்ன கொள்கையோ?: கேரள மக்கள் கொண்டாடும் ஒணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையே… இது என்ன கொள்கையோ?’ என, சமூக வலைதளங்களில், பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்[1]. மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இது தொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி[2]: “கேரள பெருமக்களின் பண்பாடு, உணர்வுகளோடு ஒன்றியிருக்கும் திருவிழாக்களில் ஒன்றானது ஓணம் பண்டிகை.இந்த பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும், தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும், தி.மு.., சார்பில் என் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்,” இவ்வாறு, அவர் கூறியுள்ளார்[3]. வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.  திராவிடத்துவ நாத்திகம், இந்துவிரோதம் என்று தெரிந்த விசயம் தான். 70 ஆண்டுகளாக, இந்துக்கள்முறைப்படி அதனை எதிர்கொள்ள முடியவில்லை என்பது நிதர்சனம்.


அவர்களின் பதிவுகள்தினமலர் வெளியிட்டுள்ளது[4]: ஆகஸ்ட் 2020ல், அருமையாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்:

* ‘தி.மு.க.,வில், 90 சதவீதம் ஹிந்துக்கள் உள்ளனர்’ என, ஸ்டாலின் கூறுகிறார். ஹிந்துக்களின் பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், கேரள ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இது என்ன கொள்கையோ?

* தி.மு.க.,வில் உள்ள, 90 சதவீதம் ஹிந்துக்களில், எத்தனை சதவீதம் பேர் ஓணத்தை கொண்டாடுகின்றனர்?

* ஓணம் வாழ்த்து, தி.மு.க.,வின் ஓட்டு அரசியல்; நாடகத்தின் ஒருபகுதி தான்

* உதயநிதி, மண் பிள்ளையார் உருவப்படத்தை, ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்ட பின், அவர் கொடுத்த விளக்கத்தை கேட்டு நாடே சிரித்தது

* கந்த கஷ்டி கவசம் போன்ற பிரச்னை வரும் போது, ஸ்டாலின் வாய்மூடி மவுனம் காப்பார்

* ‘நரகாசுரன், பொய்யன்’ என்பார். ‘நாங்கள் ராவணின் வாரிசுகள்’ என்பார். ஆனால், வாமனன் வந்தது உண்மை; அதுபோல, மகாபலி இருந்தது உண்மை. இதற்கு பெயர் தான் திராவிட பகுத்தறிவு. தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் ஓட்டுக்களை வாங்க உதித்த திடீர் ஓட்டு அறிவு. இவ்வாறு, பலரும் விமர்சித்துள்ளர்.

சமத்துவம், செக்யூலரிஸம் போர்வைகளில் மறைந்து வேலை செய்வது:  கேரளாவில் ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்றுகூடி மகிழும் தேசிய விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது[5].  பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது என்று அரசியல் செய்யப் படுகிறது[6]. திமுக அதனை சாமர்த்தியமாக கையாள்கிறது. ராகுலைப் போல “இருவிதமான திராவிட இந்துத்துவத்தை,” கடைப்பிடிக்கிறது போலும்[7]. யாராவது ஆலோசனைக் கொடுத்தார்களா அல்லது யதேச்சையாக செயல்படுகிறாற்களா[8] என்று பிஜேபி தான் ஆராய வேண்டும். அதாவது, இப்பண்டிகையே செக்யூலரிஸமயமாக்கி, நீர்க்கப் படுகிறது. கிருத்துவர்கள், எல்லாவற்றையும் அப்படியே காப்பியடித்து, தங்கள் கடவுள் தான் அத்தகைய சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஏற்படுத்துகிறார் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். கம்யூனிஸ முதல்வரும் வாழ்த்துத் தெரிவிக்கிறார், ஆனால், இந்துத்துவ வாதிகள், சமூக ஊடகங்களில் அவரை தூஷிக்கின்றனர். பிஜேபி எல்லா மாநிலங்களிலும் தனது ஆட்சியை உண்டாக்க வேண்டும் என்று பாடுபடும் நிலையொல், இத்தகைய விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காவிரிப் பிரச்சினை போல ஆகிவிடக் கூடாது.

திமுகவின் விளம்பர யுக்திகள்: திமுகவின் ஓணம் வாழ்த்து தெரிவிக்கும் விளம்பர சித்திரங்கள், மிகவும் கவனமாக செய்யப் பட்டிருக்கிறது என்று தெரிகிறது. அத்தகைய யுக்தி யார் சொல்லிக் ஒடுத்தது என்று கவனிக்க வேண்டும். அப்பனவன், “என்ன நெற்றியிலே ரத்தமா,” என்று கேட்டு தொண்டனின் குங்குமத்தைக் களைத்தான், தனயனவன், அதேபோல மாரியாத்தா கோவில் வாசலில் வைத்த குங்குமத்தை அழித்தான். மாகாபலியின் வாரிசு என்றாயே, தனயன் இப்பொழுது கோலங்களை அழி, என்று பேச முடியாது விமர்சிக்கமுடியாது. எத்தனை இந்துத்துவ வாதிகள் இருந்து என்ன பயன்? எத்தனை இந்துத்துவ பேராசிரியர்கள், சரித்திராசிரியர்கள், விற்ப்பன்னர்கள்……. இருந்து என்ன நலன்? இந்துவிரோதி தைரியமாக, திராவிடத்துவம் பேசி சொல்வது வாழ்த்து! விதவிதமான வாழ்த்து அமைப்புகள்,  கதகளி உண்டு, கோவில் உண்டு,  ஆனால், அவை செக்யூலரிஸம் போல! அட குடை கூட உண்டு, ஆனால், வாமனன் இல்லை! மலையாளத்தவர் கண்டு கொள்ள வேண்டும். இதையெல்லாம் பிஜேபி மற்ற இந்துத்துவ வாதிகள் கவனித்தார்களா என்று தெரியவில்லை.

ஓணம் புராணம் சொல்லும் ஸ்டாலின்: “ஓணம் திருநாள் கொண்டாடப் படுவதையொட்டி, கேரள மக்களுக்கும், மலையாள மொழி பேசும் மக்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்[9]. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஓணம் பண்டிகையையொட்டி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கேரளப் பெருமக்களின் பண்பாட்டுடனும், உணர்வுகளோடும் ஒன்றிப்போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்[10]. “ஓணம் திருநாள்” பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது. கேரளாவின் “அறுவடைத் திருநாள்” என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையின் அருமை பெருமைகள் பல உண்டு. அதில் குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று, “அத்தப்பூ” கோலம் போட்டு இந்த பண்டிகை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது”. ஆக, ஸ்டாலின் இத்தனை விவரங்களை அறிந்து கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. திரவிட-இந்துத்துவம் ஆரம்பித்து விட்டது என்று தெரிகிறது.


ஓணம் கதையை விளக்கும் ஸ்டாலின்: கலைஞர் செய்திகள் தொடர்கிறது, “தீரமும், ஈரமும் மிகுந்த “மகாபலி” சக்ரவர்த்தியைக் கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வரவேற்கும் நாளாகத் துவங்கி, அடுத்தடுத்த நாட்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவுகள் பரிமாறுதல் போன்றவற்றைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டு, தங்களுக்குள் உள்ள மேம்பட்ட உறவினை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் விழா இது. இளைஞர்கள் மத்தியில் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரியப் படகுப்போட்டியைப் பத்து நாட்கள் நடத்தி – அந்த 10-வது நாளில் திருவோணம் என்ற எழுச்சிமிகு கொண்டாட்டத்துடன் ஓணம் திருவிழா இனிதாக நிறைவடைகிறது. “பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாள்”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் பழக்க வழக்கங்களையும் உணர்வுகளையும் மதிக்கும் பொருட்டு, ஓணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏதுவாக நாகர்கோவில், கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு விடுமுறை அளித்து, 2006-ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்”.

மலையாளிகளுக்காக அப்பன் வழி பின்பற்றும் பிள்ளை:  கலைஞர் செய்திகள் தொடர்கிறது, “பிறகு தமிழ்நாடு மலையாளி சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சென்னை மாநகரத்திற்கும் “உள்ளூர் விடுமுறை” என்று 14.8.2007 அன்று அறிவித்து – தமிழகத்தில் வாழும் மலையாள மக்களின் உணர்வுகளை மதித்துப் போற்றிப் பாதுகாத்தவர். பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில் – திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழகம் வாழ் மலையாள மக்களும் – கேரள மக்கள் அனைவரும் – ஆரோக்கியமான வாழ்வும் – அனைத்து வளங்களும் பெற்று எந்நாளும் இன்புற்றிருக்க வேண்டும் என்று “ஓணம் திருநாள்” வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்”.

ஓணம் வாழ்த்து அரசியலை பிஜேபி ஒழுங்காக எதிர்கொள்ளவேண்டும்: ஓணம் வாழ்த்து அரசியல் திராவிடத்து-இந்துத்துவத்தை  வெளிப்படுத்துகிறது.

 1. இந்துக்கள் என்றால், எல்லோருமே இந்துக்கள் தான்! சான்றிதழின் படி, அரசியல் நிர்ணயச் சட்டடத்தின் படி இந்துக்கள் தாம்!
 2. இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு, இந்து-விரோத வேலைகள் செய்ய முடிகிறது. இதைத்தான் திராவிடத்துவ வாதிகள் 70 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
 3. இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு, அதனை முறையாக எதிர்க்க முடியவில்லை. கடவுளை எதிர்த்தால், திக்ச்-திமுகத்தலைவர்களை எதிர்ப்பதில் லாஜிக்கே, தர்க்க முறையே இல்லை.
 4. 70 வருட திராவிடத்துவம் நாத்திகம், இந்து விரோதம் பேசி, ஆட்சி-அதிகாரம் எல்லாம் பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது.
 5. அந்நிலையில், இந்துத்துவம் என்று பேசி, ஒரே நாளில், மாதத்தில், ஆண்டில்  ஆட்சியைப் பிடிக்கக் கனவு காண்பது, இந்துக்களைப் பிரிப்பதில் முடியும்.
 6. மேலும் ஜாதியத்தை வைத்தும் ஆட்சி-அரசியல் நடந்து வருகிறது. அதில், இந்துத்துவ வாதிகள் தாக்கு பிடிக்க முடியாது.
 7. ஓணம் வாழ்த்து அரசியல் அதை வெளிப்படுத்துகிறது.

© வேதபிரகாஷ்

31-08-2020


[1] தினமலர், ஸ்டாலின் ஓணம் வாழ்த்து: விமர்சகர்கள் வறுத்தெடுப்பு, Updated : ஆக 31, 2020 13:12 | Added : ஆக 31, 2020 09:18

[2] தினகரன், ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மக்களுக்கு திமுக தலைவர் மு..ஸ்டாலின் வாழ்த்து, 2020-08-30@ 11:33:28

[3] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=613307

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2604925&Print=1

[5] புதியதலைமுறை, ஓணம் பண்டிகை சமத்துவத்தின் அடையாளம்மு..ஸ்டாலின் வாழ்த்து, Published :31,Aug 2020 12:16 PM.

[6] http://www.puthiyathalaimurai.com/newsview/79319/Onam-festival-is-a-symbol-of-equality-MK-Stalin-s-greeting

[7] தமிழ்.நியூஸ்.18, சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும்ஓணம் திருநாள்’ – மு. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து.. , LAST UPDATED: AUGUST 30, 2020, 1:23 PM IST

[8] https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-leader-mk-stalin-s-onam-2020-wishes-riz-339775.html

[9] கலைஞர் செய்திகள், பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாள்” : தி.மு. தலைவர் மு..ஸ்டாலின் வாழ்த்து!, Premkumar, Updated on : 30 August 2020, 11:53 AM.

[10] https://www.kalaignarseithigal.com/india/2020/08/30/dmk-chief-mk-stalin-wishes-for-onam-festival-2020

காஞ்சிப் பெரியவர் – ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? பார்ப்பன ஐயர்கள், பிராமணர்களுக்கு எதிரானது எப்படி? [4]

மார்ச் 19, 2020

காஞ்சிப் பெரியவர்ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? பார்ப்பன ஐயர்கள், பிராமணர்களுக்கு எதிரானது எப்படி?

Anti-Hindu writings-against Kanchi mutt case

காஞ்சி சங்கரமட ரகசியங்கள்சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் 1986ல்  கி. வீரமணி வெளியிட்ட புத்தகம்: 1983ல் “இந்து சமயக் கலைவிழாஎன்ற பெயரில் காஞ்சி சங்கராச்சாரியார் சென்னையில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை அவர்களுக்குரிய பொருளாதா பலம், பத்திரிக்கை பலம், அரசு பலத்தோடு தடபுடலாக ஏற்பாடு செய்து கலையின் பெயரால் இந்து மதத்தைஅதாவது பார்ப்பன ஆதிக்கத் தத்துவத்தை வலுவூன்ற செய்ய ஏற்பாடு செய்தார்,” என்று வீரமணி பதிவு செய்தார்[1]. 1983ல் எம்ஜிஆர் தான் ஆண்டு கொண்டிருந்தார், திராவிடவெறி அதிகமாகத்தான் இருந்தது. “பார்ப்பனரல்லாதார் பல்லாயிரம் ஆண்டு காலமாக பார்ப்பன ஆதிக்க நுகத்தடியியின் கீழ் நசுக்கப்பட்டு, தந்தை பெரியார் என்ற தன்னிகரற்ற தத்துவப் பெரு ஒளியால் இந்நூற்றாண்டில் கண்ட விழிப்புணர்ச்சியை பொறுக்காத சங்கராச்சாரி மடம் என்கின்ற பார்ப்பனர் ஆதிக்க தத்துவப்பீடம் மீடும் ஆரியத்திற்கு  அரீயாசனம் தர மேற்கொள்ளும் முயற்சியே இந்து சமய கலைவிழா”, என்று ஒப்பாரி வைத்திருந்ததை கவனிக்க வேண்டும். ” ஆக பொறாமையில் வெந்து, வெதும்பிப் போனது யார் என்று தெரிகிறது. “தெய்வத்தின் குரல்” புத்தகங்களிலிருந்து, அங்கும்-இங்குமாக சில வரிகளையும், சிருங்கேரி மடத்தின் பங்களிப்புகளையும் சேர்த்து, சேற்றை வாரி இரைத்து பேசியதைத் தொகுத்து, இப்புத்தகம் வெளியிடப் பட்டது என்று தெரிகிறது.

Venugopals appreciation of DK book on Sankara mutt

ஓய்வு பெற்ற நீதிபதியின் பாரபட்சம் மிக்க அணிந்துரை: பி. வேணுகோபால் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி, இதற்கு “அணிந்துரை” கொடுத்திருப்பதை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், அவர் எந்த அளவுக்கு மோசமாக, பாரபட்சத்துடன், காழ்ப்பைக் கக்கியுள்ளார் என்று தெரிகிறது[2]. நீதிபதி ஓய்வு பெற்றாலும் அவரது உணர்வு ஓய்வு பெற்று சாய்ந்து விட்டது என்றாகிறது. நடுநிலை என்று பேசுவதற்கு இவருக்கு தகுதி போய் விட்டது, தராசு சாய்ந்து விட்டது என்று தெரிந்தது. இன்று அரி பரந்தாமன் போன்றோர் இந்நிலையில் தான் உள்ளனர். நீதி, சட்டம், மனசாட்சி என்பதெல்லாம் உள்ளுணர்வு மீதான விசயங்கள். பதவியில் இருக்கிறோம்-இல்லை என்ற நிலையில்லை, நடுநிலை என்பது எப்பொழுதுமே இருக்க வேண்டிய கட்டாயம். ஆகவே, மாறுவது, சார்புடைய போக்கைக் காட்டுகிறது. பிறகு இவர்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய போது, நடுநிலையுடன் செயல்பட்டார்களா என்பது பாதிக்கப் பட்டவர்களுக்குத் தான் தெரியும். 2012ல் அட்டையை மாற்றி, சிறிது பக்கங்களை சேர்த்து வெளியிடப்பட்டது.

Thygarajan - Sankaran book

பெரியவரை குறிவைத்து, பிறகு ஶ்ரீ ஜெயேந்திரரைத் தாக்கியது: சின்ன குத்தூசி மற்றும் ஞாநி பிறகு, ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியை சந்தித்து பேசியதை பேட்டி என்று வெளியிட்டதில் பல மாறுபாடுகள் இருந்ததால் சர்ச்சைக்குக்கு உள்ளானது. பேசியது எழுதியது, என்றதில் முரண்பாடுகள் முதலியன இருந்தன. அது பேட்டி அல்ல, என்றும் மறுக்கப் பட்டது. ஆனால், இதை விடாமல் எழுதி வந்தனர்[3]. “காஞ்சி சங்கரமட ரகசியங்கள் – சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் 1986ல்  கி. வீரமணி வெளியிட்ட புத்தக”த்தை வாசித்தால், கருணாநிதி தான் அதற்கு திட்டம் போட்டுக் கொடுத்தது என்று தெரிகிறது. முரசொலியில், “காமகோடி” என்று விரசமாக எழுதி, பேசி வந்தது, எதிரொலியில் தியாகராஜன்[4] எழுதியது முதலியவற்றிலிருந்து தெரிகிறது. அதாவது, கருவின் [கருணாநிதியின்] விரசம் முதலில், அத்தூண்டுதலால், கண்டித்தது பிறகு, “பேட்டி” அடுத்தது என்று தொடர்ந்தது. ஶ்ரீஜெயேந்திரர் மடத்தை விட்டுச் சென்றது, பெரியவர் காலம் ஆனது, மறுபடியும் ஶ்ரீஜெயேந்திரர் மடாதிபதி ஆனது, அரசியல் நுழைந்தது முதலியன பிறகு ஏற்பட்ட பிரச்சினைகள் ஆகி தொடர்ந்தன. ஆனால், தாக்கப் பட்டது, படுவது இந்து மத சின்னங்கள், அடையாளங்கள், நம்பிக்கைகள் முதலியன. இவற்றில் செக்யூலரிஸம் போர்வையில், அனைவரும் ஒன்று சேர்ந்து தாக்கியதும் தெரிந்தது.

Gnani Sankaran brahmin rebel-youth

தியாகராஜன்சங்கரன் திராவிட பார்ப்பனர் அல்லது சின்னக்குத்தூசிஞாநி பகுத்தறிவு ஜோடி செய்தது என்ன?: தியாகராஜனும், சங்கரனும் ஐயர் என்ற நிலையில் சென்று மடாதிபதியை சந்தித்து பேசினார்களா அல்லது பேட்டி கண்டார்களா என்பது புதிராகிறது. மடாதிபதி மறுத்த போது, எந்த செய்தியாளரும் / நிருபரும் வெளியிடக் கூடாது. நிச்சயமாக, எதிரொலி, முரசொலி, விடுதலை…போன்ற இதழ்களுக்கு மடாதிபதி பேட்டி கொடுக்க மாட்டார். ஆகவே, இந்த இரு ஐயர்களும் தங்களது “பார்ப்பன” அந்தஸ்த்தை வைத்து, அவருக்கு சொல்லாமலேயே, “பேட்டி” என்று வெளியிட ஆரம்பித்து விட்டனர் என்று தெரிகிறது. யாராவது பெரியார், அண்ணா, கருணாநிதி முதலியோர்களிடம் “பேட்டி” கண்டேன் என்று இவ்வாறு போட்டால் என்னாகும் என்று நினைத்துப் பார்க்கலாம். ஆகவே, தியாகராஜன் – சங்கரன் திராவிட பார்ப்பனர் அல்லது சின்னக்குத்தூசி-ஞாநி பகுத்தறிவு ஜோடி ஏதோ திட்டத்துடன் ஶ்ரீஜெயேந்திரரை அணுகியிருப்பது தெரிகிறது. அப்பொழுது விரித்த வலை பெரிதாகி, பிறகு சிக்கிக் கொண்டது சரித்திரமாகி விட்டது. ஏனெனில், “காஞ்சி சங்கராச்சாரியாரைப் புரிந்து கொள்வீர்,” என்ற புத்தகத்தை 1983லேயே, திக வெளியிட்டுள்ளது[5].. 2004ல் ஶ்ரீஜெயேந்திரர் கைதானபோது, 2005ல்,  “காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?” என்று புத்தகம் வெளியிட்டது[6]. எதிர்மறையான காரியங்களை செய்வது என்பது ஈவேராவின் போக்காக இருந்தது. அது திராவிட கழகத்தவரின் அடிப்படை தத்துவமாகியது. உண்ணாவிரதம் என்றால் உண்ணும் விரதம் என்பார்கள். அதே போல, மூதறிஞர் ராஜாஜி என்றால், தானும் அப்படித்தான் என்று அவரை வைது, அவர் ஆசிர்வப்பது போல சிலை செய்தது நோக்கத் தக்கது. அதுபோல, ராஜாஜி, “சக்கரவர்த்தி திருமகன்,” எழுதினால், கரு, “சக்கரவர்த்தியின் திருமகன்” என்று எழுதி கிண்டல் அடித்தார்[7]. அதே தலைகீழ்-எதிர்மறை வினைகள் தான் எல்லாவற்றிலும் உள்ளது. அதாவது, இங்கு தாக்கப் படுவது இந்து மதம் தான்!

Anti-Hindu writings-Karu-Rajaji

பார்ப்பனர்கள் திராவிட சித்தாந்திகளுக்கு, ஆட்சியாளர்களுக்குத் துணை போனது ஏன்?: 1962 வரை தியாகராஜன் [1934-2011] என்ற பார்ப்பனர் தான், “சின்ன குத்தூசி” என்ற பெயரில், முரசொலியில் பணியாற்றி வந்தார். அப்படியென்றால், பெரியாரைப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே தெரிந்திருக்கும், உண்மை வரலாற்றை அவர் எழுதியிருக்க முடியும். எம்ஜியாருக்கு எதிராக எழுதியதால், கருணாநிதி பக்கம் போனார்.

Gnani Sankaran brahmin rebel

ஞானி என்கின்ற சங்கரன் [1954-2018] பார்ப்பனராக இருந்தாலும், இளம் வயது முரண்பாடுகளால், எண்ணக் குளறுபடிகளால், ஏதோ “போராளி” என்று நினைத்துக் கொண்டு, திசைமாறிய, “பெரிய ஆளாகவேண்டும் என்று அதிக பேராசைக் கொண்ட மனிதர். இதனால், வேலைகளில் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. தன்னுடைய தனிமனித தோல்விகள்-விரக்திகள், புகழுக்காக, பார்ப்பன விரோதத்துவத்தை பின்பற்றியது நிதர்சனம்.

Savi Sankaran so close to DMK

சாவி விஸ்வநாதன் [1916-2001] காஞ்சி மகா பெரியவர் அவ்வப்போது போய்த் தங்கும் கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே சாமா சுப்பிரமணிய அய்யர், மங்களம் அம்மாள் தம்பதியின் புதல்வராகப் பிறந்தார் சாவி. எம்ஜிஆர், கருணாநிதி போன்றோருக்கு நெருக்கமான பார்ப்பனர். காஞ்சி பெரியவரின் நம்பிக்கையான பக்தர். அந்நிலையில், பெரியாரின் இந்து-விரோத வேலைகளைப் பற்றி சொல்லி, தடுத்திருக்கலாம். உண்மையான இந்து என்றால் எதிர்த்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. மாறாக, தயாநிதி மாறனுக்கு, ஒரு பார்ப்பன பெண் வேண்டும் என்று கருணநிதி சொல்லியபோது, அவ்வாறே நடந்தது.

Savi Viswanathan with MGR

இதெல்லாம் ஒரு உதாரணத்திற்குத் தான் கொடுக்கப் படுகின்றது. ஆனால், வலுக்கட்டாயமாக, பல பிராமணர்கள், இத்தகைய வலைகளில் விழ வைத்துள்ளனர். எம்.பி.பி.எஸ் படிக்கும் பிராமண பெண்களை மற்ற உயர்ஜாதி [முதலியார், செட்டியார், ரெட்டி, நாயுடு போன்றோர்] காதலித்து மணந்துள்ளனர். ஆனால், பிறகு பிரச்சினைகள், விவாக ரத்துகள் இவையெல்லாம் வெளியே சொன்னதில்லை. ஆகவே, இங்கு ஈவேராவை, பெரியாரை, திகவை, திமுகவை, அத்தகைய கும்பல்களின் ஆட்களை பார்ப்பனர், அந்தணர், பிராமணர் கண்டால் அஞ்சுவது இதனால் தான். 1950களில் அடித்தார்கள்; 1980களில் பூணூலை அறுத்தார்கள்; 1990களில் தாலிகளை அறுத்தார்கள். இன்று வரை திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்கள், சினிமா-டிவி, சமூக வளைதளங்கள், புத்தகங்கள் என்று எல்லாவற்றிலும் மென்மையான இலக்கில் பார்ப்பனர்கள் தான் இருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

19-03-2020

Karunanidhi appropriating Rajaji

[1] கி. வீரமணி, காஞ்சி சங்கரமட ரகசியங்கள்சங்கராச்சாரி யார்?, திராவிடர் கழக வெளியீடு, சென்னை, 1986, பதிப்புரை.

[2] பி. வேணுகோபால். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, “அணிந்துரை” 25-12-1986 தேதியிட்டது, பக்கங்கள்.1-4

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சங்கராச்சாரியார்? By Staff | Published: Thursday, February 2, 2006, 16:50 [IST] (தீம்தரிகிட ஏப்ரல் 2003ல் வெளியான கட்டுரை இது) : https://tamil.oneindia.com/art-culture/essays/2006/sivakumar1.html

[4] Chinna Kuthoosi (77), a veteran journalist and a Dravidian thinker, died in May 2011. Born as R. Thiagarajan in a Brahmin family, he served as a teacher for a few years and also as a private secretary to E.V.K. Sampath before dedicating himself to journalism. But for readers of Murasoli, the DMK mouthpiece, and those tuned in perpetually to Dravidian political debates, the name may not be familiar. For, he was the perfect backroom ideologue of the DMK. He didn’t appear on television, hesitantly gave few interviews, and was never in the crowd that thronged DMK leader Karunanidhi’s house or office to display loyalty or request favours. But he was the man whom Karunanidhi primarily relied on when it came to the printed propaganda through Murasoli. Chinnakuthoosi did that diligently for the last 25 years—defending Karunanidhi’s policies and practices, weaving in the historic Dravidian struggles into current issues to remind the DMK cadres of the party’s great past whenever he felt they were grappling with the troubled present. Chinnakuthoosi as a writer became a name to reckon with when he unleashed a storm of articles in the early 1980s against the then popular chief minister MGR. That must have endeared him to Karunanidhi, who took him under his fold in the mid-1980s. Chinnakuthoosi had remained fiercely loyal to Karunanidhi thereafter. He wrote regularly in Murasoli, the party organ of the Dravida Munnetra Kazhagam, besides contributing to Nakkeeran and Ethiroli.

https://timesofindia.indiatimes.com/blogs/chennaitalkies/obit-of-an-unknown-ideologue/

https://www.thehindu.com/news/national/tamil-nadu/cinema-express-editor-dead/article2040800.ece

[5] சின்னக்குத்தூசி-ஞாநி, காஞ்சி சங்கராச்சாரியாரைப் புரிந்து கொள்வீர், திராவிட கழக வெளியீடு, சென்னை, 1983.

[6] கி. வீரமணி, காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்? திராவிட கழக வெளியீடு, சென்னை, 2005,

2004 முதல் 2013 வரை நடந்தவற்றை விளக்கினால், திராவிட சதிகள் ஒருவேளை வெளியாகலாம். ஏனெனில், பார்ப்பனர்களை வைத்து தான், அவர் சிக்கவைக்கப் பட்டார். 1987லிருந்து, அவர் மீது ஊடகங்கள் தூஷித்துக் கொண்டிருந்தன. மடத்தை விட்டு போனபோது கூட, யாரோ அமெரிக்க பெண்மணியுடன் சென்று விட்டார் என்று ஊடகங்களில் செய்தி வெளியிட்டனர். மக்கள் இன்று மறந்து விடலாம், ஆனால், இந்து மடம் தாக்கப் பட்டதை, இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

[7] கருணாநிதி, சக்கரவர்த்தியின் திருமகன், திராவிட கழக வெளியீடு, சென்னை, 2019.

காஞ்சிப் பெரியவர் – ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [3]

மார்ச் 19, 2020

காஞ்சிப் பெரியவர்ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [3]

Meetings against Sankaracharyas-DK book

ஈரோட்டு ஈவேரா அல்லது பெரியாரின் அனுபவம்: ஆனால், ஈவேராவை வெளிநாட்டவர் யாரும் சந்தித்ததாகத் தெரியவில்லை. அவரைப் பற்றி எழுதியுள்ளதாகவும் இல்லை. ஈவேரா தான், ராமநாதனுடன் 1932ல் அயல்நாடுகளுக்குச் சென்று வந்தார். 1973 வரை இந்திய விரோத, இந்து துவேச செயல்களை செய்து கொண்டு, பேசிக் கொண்டிருந்தது அவரது வழக்கமாக இருந்தது. பொதுவாக எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற போக்கில் இருந்தார். கிளர்ச்சி, போராட்டம், கலாட்டா, கைது, சிறை, வழக்கு என்ற ரீதியில் இருந்தார்[1]. அவர் இறந்த பிறகு, திகவினர் செய்த பிரச்சாரம், விளம்பரங்களினால், அவர் பெயர் திடீரென்று பரவ ஆரம்பித்தது. திமுக அட்சிக்கு வந்த பிறகு, அது அதிகமாகி, பரவ ஆரம்பித்தது. பணத்தை செலவழித்து, ஈவேரா வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். அந்நிலையில், காஞ்சிப் பெரியவரை, ஈவேரா,  இவ்வாறு ஒன்றிற்கும் மேலாக சந்தித்திருந்தால், அதைப் பற்றி விவரமாக பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இக்கதைகளை உலாவிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, நாள், நேரம், புகைப்படம், போன்ற ஆதாரங்களைக் கொடுப்பதில்லை. இவையெல்லாம் 60-70 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்றால், ஆதாரங்கள் கொடுப்பதில் என்ன பிரச்சினை?

Meetings against Sankaracharyas-DK book.audience

காஞ்சி பெரியவரை கிண்டல் அடித்த பகுத்தறிவு தலைவர்களும், அடிவருடி தொண்டர்களும்: அந்நிலையில் தான், காஞ்சிப் பெரியவரை, திராவிட தலைவர்கள் உட்பட கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். “மூக்குக் கண்ணாடி” போட்டுக் கொண்டார். “காட்ரேக்ட் ஆபரேஷன்” செய்து கொண்டார் என்றெல்லாம் நக்கல் அடித்தன. அண்ணா கேன்சர் நோயுக்கு, அமெரிக்கா சென்றது, சிகிச்சை பெற்றது, பலன் இல்லாமல் இறந்தது பற்றியெல்லாம் பகுத்தறிவுகள் அறிந்தும், இவரை கிண்டல் செய்தன. பெரியாருக்கும் சுகவினங்கள் பல இருந்தன. எல்லோருக்கும் தெரிந்தும் இருந்தன. ஆனால், “பகுத்தறிவு” இல்லாதவர்கள் அவ்வாறு கிண்டல் செய்யவில்லை. பெரியார், அண்ணா, கரு, மற்ற திகக்காரர்கள் பேசியதை எழுத முடியாத அளவில் அசிங்கமாக இருந்தததால், அவை மறைக்கப் பட்டன [எழுதாமல் விடப்பட்டன]. ஞாபகம் இருந்தாலும், இன்றும் அவை அவ்வாறுத்தான் உள்ளன. அவர்கள் இல்லை என்றாலும், கேட்டவர்கள் பலர் சாட்சிகளாக இன்றும் இருக்கிறார்கள். நாகரிகம் கருதி தான் அவற்றையெல்லாம் வெளியே சொல்லாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தால், அவர்களுடன் அந்த உண்மைகளும் மறைந்து விடும்.

1986 to 2012 anti-Hindu DK book

காஞ்சி சங்கரமட ரகசியங்கள்சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் 1986ல்  கி. வீரமணி[2] வெளியிட்ட புத்தகம்:  06-04-1983 முதல் 01-08-1983 வரை நடந்த கூட்டங்கள் என்று குறிப்பிட்டு, கீழ்கண்ட தலைப்புகளில், அப்புத்தகம் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தில் இருக்கும் படி அத்தியாயங்கள், பக்க எண்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:

 1. மனிதாபிமானமற்ற சங்கராச்சாரியார். 5
 2. மோசடியில் பிறந்த காஞ்சி மடம் 15
 3. ஜாதியும், சங்கராச்சாரியும்.35
 4. அரசியல் சட்டத்தில் சங்கராச்சாரியாரின் திருவிளையாடல்! 41
 5. சங்கராச்சாரியாரின் கம்யூனல்! வகுப்புரிமைப் பற்றிய கருத்து. 63
 6. விளம்பரக் கலை. 67
 7. காமக் கதை படிக்கும் காமகோடி.74
 8. அறிவு நாணயம் இல்லை பார்ப்பனருக்கு வக்காலத்து. 81.
 9. சங்கராச்சாரியார் பார்வையில் நாத்திகன் யார்? 86
 10. சங்கராச்சாரியாரின் மனிதாபிமானம் – நாத்திகனுக்கு வைத்தியம் செய்யக் கூடாதாம். 94
 11. சமஸ்கிருதப் பற்று.101.
 12. சங்கராச்சாரியார் நடத்தும் டிரஸ்டுகள் யாருக்காக? 104
 13. விவேகசாகரம் என்ற அய்ந்தாம் வேதம்.126
 14. பார்ப்பனர் இல்லாவிட்டால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டா?.131.
 15. சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் கூடாதாம்! 135
 16. எல்லோருக்கும் சமவாய்ப்பும் கூடாதாம்!.146
 17. சிவமதத்தை ஏற்க மறுக்கும் சங்கராச்சாரியார் திருஞானசம்பந்தரை மட்டும் ஏற்பது ஏன்? 151.
 18. தேவதாசி ஒழிப்புக்கு வருத்தம்!. 158.
 19. பார்ப்பனர்கள் மேளம்-நாயனம் வாசிக்காதது ஏன்? 161.
 20. முத்ராதிகாரி திட்டம்! 164
 21. சங்கராச்சாரியார் பற்றி அண்ணாவின் படப்பிடிப்பு.171.
 22. சம்பந்தியை வெறுக்கும் சங்கராச்சாரியார்.179.
 23. கோவிலில் கூட்டம் கூடுவது ஏன்? 184.
 24. நேருவை கேலி செய்யும் சங்கராச்சாரியார்! 197.
 25. பெண்களின் உரிமைகளை நசுக்கும் தெய்வத்தின் குரல் (!) 203.
 26. சங்கராச்சாரியாரி வீட்டிலும் கலப்புத் திருமணம். 225.
 27. ஆதிசங்கரர் நடத்திய ஆபாச பரிசோதனை! 234.

சங்கரரைப் பற்றி விவேகானந்தர் என்று முடிகிறது. இவவற்றை பொறுமையாகப் படித்துப் பார்த்தால், எந்த அளவுக்கு, ஆதாரங்கள் இல்லாமல், வாய்ஜாலம், திராவிடப் பேச்சு, மேடைமுழக்கம் போன்ற ரீதியில் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

Sankaracharyas-DK book.speakers

1986-87களில் பிரிவினை வாதம் எழுந்த நேரத்தில் இப்பிரச்சினை எழும்புவது[3]: இக்கூட்டங்களில் பேசியவர்கள்[4]

1.       கே. வீரமணி

2.       கீ. ராமலிங்கன்.

3.       தெ. தருமராசன்.

4.       கா. அப்பாதுரை.

5.       சுரதா.

6.       மா. நன்னன்.

7.       ந. ராமநாதன்.

8.      பழனிசாமி

9.       பொன்னிவளவன்.

10.   இறையன்.

11.    பெருஞ்சித்தரனார்.

இவர்கள் எல்லோருமே தமிழ்-பிரிவினை [Tamil separatism], தனித்தமிழகம் [Separate Tamil Country], தமிழ்தேசியம் [Tamil Nation], தமிழ் இனவெறி [Tamil race, racism, racialism], போன்ற தீவிர சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் [extreme / extremist ideologists] என்பது தெரிந்த விசயமே. தமிழ்நாடு விடுதலைப்படை தமிழ்நாடு பொதுவுடைமைக்கட்சியின் ஆயுதப்படை ஆகும். இதன் தலைமைத்தளபதியாக தமிழரசன் இருந்தான். இது தமிழர்களுக்காக தனி தேசம் அமைக்க போராடிய தமிழ்த்தேசிய அமைப்பாகும். 1980களில் பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தமிழ்நாட்டில் தோன்றின. அதிலும் குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்ற போது இந்த இயக்கங்கள் தீவிரமாக இயங்கிவந்தன. அதில் குறிப்பிடத்தகுந்தது இந்த தமிழ்நாடு விடுதலைப்படை பல கொள்ளைகள், கொலைகள், குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டன. இந்த இயக்கம் ஜூலை 2, 2002 அன்று இந்திய அரசால் பொடா சட்டப்படி தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசால் 2002ல் பொடா சட்டப்படி தடை செய்யப்பட்ட பின்னர் இது தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் செயல்படுகிறது. எனவே, இவர்களுக்கு, சங்கராச்சாரியாரை, சங்கர மடத்தை எதிர்க்க ஏன் ஒன்று சேர்ந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது எவ்வாறு சின்னங்கள், அடையாளங்கள் கண்டெடுக்கப் பட்டு, தாக்கப் பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனெனில், இவையெல்லாம் மிருதுவான, எளிமையான, இலக்குகள் [soft targets] என்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

19-03-2020

Meetings against Sankaracharyas-DK book.wrapper

[1] அண்ணா, கரு முதலில் இவரது சட்டவிரோத வேலைகளை ஆதரித்தாலும், பிறகு, அவை தலைவலியாக மாறியதை அவர்களே கண்டு நொந்து கொண்டார்கள். பெரியாரும், இதையெல்லாம் உணர்ந்திருந்தார். அரசியலில் அவரை தனிமைப் படுத்தியது அண்ணா, கரு முதலியோரின் சாதுர்யம் என்றாகியது.

[2] Veeramani was born in a middle-class family in Cuddalore, South Arcot District, Tamil Nadu, his original name was Sarangapani. ஆனால், இவரது பெற்றோர் பெயர்கள் விகியில் குறிப்பிடப் படவில்லை. C.S.Krishnaswamy and Meenakshi  என்று மற்ற தளங்களில் காணப்படுகிறது.

[3] Tamil Nadu Liberation Army (TNLA) was a small militant separatist movement in India. It seeks an independent nation for the Tamil people, and first appeared in the 1980s, when the Indian Peacekeeping Force (IPKF) was sent to Sri Lanka. It had its roots in the Naxalite movement, and was headed by Thamizharasan, an engineering student from Ponparappi village. TNLA was involved in minor bomb blasts, murders and looting banks. On September 1, 1987, the people of Ponparappi village lynched Thamizharasan and four of his associates, when they attempted to rob a bank. After his death, the group is believed to have splintered into factions. TNLA was banned by the Tamil Nadu State Government, and also by the Union Government on the recommendation of the State Government. It has been declared a terrorist organisation by the Government of India. https://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/TNLA.htm

[4] கி. வீரமணி, காஞ்சி சங்கரமட ரகசியங்கள்சங்கராச்சாரி யார்?, திராவிடர் கழக வெளியீடு, சென்னை, 1986, பதிப்புரை. இரண்டாம் பக்கம்.

காஞ்சிப் பெரியவர் – ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [2]

மார்ச் 18, 2020

காஞ்சிப் பெரியவர் ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [2]

V. Ganapathy, the Hindu reporter attacked in 1989

[சென்ற பதிவின் தொடர்ச்சி] இக்கதை மூலம் அறியப் படுவதாவது –

 1. பிராமணர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக, அந்த “பிரபலமான நாஸ்திகரை”க் கண்டு பயந்து கொண்டிருந்தனர்.
 2. ஏன் பயந்தனர் என்று யாரும் விளக்கவில்லை, காரணம் சொல்லவில்லை.
 3. “பிரபலமான நாஸ்திகர்”, பிராமணரைப் பார்த்து, “மிஸ்டர் ஐயர், எதற்காக பயப்படுகிறீர்? நான் ஒன்றும் செய்ய மாட்டேன்….” என்றால், அந்த அளவுகு அந்த ஆள் என்ன பயமுருத்தி வைத்திருந்தார் என்று சொல்லவில்லை.
 4. “பிரபலமான நாஸ்திகர்”, தொடர்ந்து சொன்னது, “…………ஏனென்றால், நாம் போகும் வழியில், பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நீர் வேறு கோச்சிற்கு சென்றால், அவர்கள் கோச்சில் நுழைந்து உம்மை தாக்கக் கூடும். இந்த கோச்சில் எனக்கு பாதுகாப்பு போடப் பட்டிருக்கிறது. அதனால், பாதுகாப்பாக இருக்கலாம். உமது நன்மைக்காகத்தான் இதனை சொல்கிறேன்,” அப்படியென்றால் –
  1. அந்த போராட்டம் என்ன, ஏன்?
  2. அவர்கள் கோச்சில் நுழைந்து [பிராமணரை]தாக்கக் கூடும்,” ஏன் அப்படி?
 5. எப்பொழுது நடந்தது என்று தெரியா விட்டாலும், அத்தகைய நிலை இருந்தது உண்மையாகிறது.

இதே போன்று கீழ் கண்ட சம்பவங்கள்.

V. Ganapathy, the Hindu reporter attacked in 1989-2

தந்தை பெரியாரும், காஞ்சி பெரியவரும்! லஸ்ஸில் எதிர்எதிரில் வந்தது[1]: லக்ஷ்மிநாராயணன் என்பவர் சொன்னது, “காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது. காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்”.

1963 padayatra, Madurai

காஞ்சி பெரியவர் கோவிலுக்குச் சென்று கும்பிட்டது, ஈவேரா கும்பலுக்கு ஆணை இட்டது: லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்து சொன்னது, “பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்புஅந்த நேரத்தில், .வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார். பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது. இனி இன்னொரு கதையினைப் பார்ப்போம்.

Sri Chandrasekhara Saraswati, taken in rickshaw

தந்தை பெரியாரும், காஞ்சி பெரியவரும்! பல்லக்கில் வந்தது, ஈவேரா விமர்சித்தது![2]: இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.  ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது. அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்,!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள். “இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்,” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன…,

The Lotus and robot

1931லிருந்து வெளிநாட்டவர் பெரியவரை சந்திப்பது அவரைப் பற்றி புத்தகங்களில் எழுதுவது: 1994 வரை வாழ்ந்த ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியாருடன், பல வெளிநாட்டு அறிஞர்கள், எழுத்தாளர்கள் என்று வந்து பேட்டி கண்டு தங்களது அனுபவங்களை எழுதி வந்தனர். இந்த விசயத்தில் தான் மற்றவர்களுக்கு [மற்ற சங்கரமடாதிபதிகளுக்கு] இவர் மீது பொறாமையாக இருந்தது. பால் பிரென்டன் இவரை 1931ல் வந்து பேட்டி கண்டபோது, இவருக்கு வயது 37 தான்[3]. இருப்பினும் தனது அறிவுசாதுர்யத்தால், அவரை கவர்ந்தார். குறிப்பாக அவரது எளிமை அனைவரையும் ஈர்த்தது, திகைக்க வைத்தது.

1955ல் பேராசிரியர் மில்டன் சிங்கர், சிகாகோ பல்கலைகழகம், சந்தித்தார்[4].

Prof. Milton Singer of the University of Chicago, met the Sage in 1955.

1959ல் ஆர்தர் கோயஸ்ட்லர் இவரை பார்த்த போது, ஆச்சரியமாகத்தான் இருந்தது.

Arthur Koestler met Arthor Koestler with V. Raghavan 1959

1962ல் அர்ஜென்டினாவைச் சேர்ந்த, யூஹினா போர்கினி என்ற ஆராய்ச்சியாளர் சந்தித்தார்[5].

1963ல், டாக்டர் ஆல்பர்ட் பிராங்ளின் என்ற அமெரிக்கத் தூதுவர், பெரியவரை மதுரையில் சந்தித்தார்[6].

1965ல் கிரேக்க அரசி மற்றும் இளவரசி  காளாஹஸ்தியில் பெரியவரை சந்தித்து பேசினர்[7].

Sri Chandrasekhara Saraswati,met Queen Frederica Greece and Irene

1970ல், சென்னையில் உலக தத்துவ மாநாடு நடந்தபோது, டெஹ்ரான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியர், சையீத் நாசர் சந்தித்தார்[8]. இப்படி, அயல்நாட்டவர் குறிப்பாக, மதம், தத்துவம், ஆன்மிகம் போன்ற விசயங்களில் கவரப் பட்டவர்கள், இவரை பேட்டி எடுக்க, உரையாட ஏன் சோதிக்கக் கூட வந்த போது, அவர்களுடன் இணையாக உரையாடினார். அவர் மேனாட்டு அறிஞர்களை மேற்கோளாகக் காட்டிய போது, அவர்கள் வியந்தனர். அதாவது, 20ம் நூற்றாண்டு வரையிலான  மதம், தத்துவம், ஆன்மிகம் போன்ற சங்கதிகளில் உள்ள பிரபலங்கள், அக்கால கருத்துகள் முதலியவற்றை அறிந்திருந்தார்.

© வேதபிரகாஷ்

18-03-2020

With Ramsuratkumar

[1] இது அப்படியே பலரால் பதிவு செய்யப் பட்டுள்ளது, ஆனால், ஆதாரத்தை யாரும் கொடுக் கவில்லை. சிலர், பல்லாக்கு சமாசாரம் மட்டும் தனியாக போட்டிருக்கிறார்கள்.

[2] இது அப்படியே பலரால் பதிவு செய்யப் பட்டுள்ளது, ஆனால், ஆதாரத்தை யாரும் கொடுக்கவில்லை. சிலர், பல்லாக்கு சமாசாரம் மட்டும் தனியாக போட்டிருக்கிறார்கள் இது “வேதம் புதிது” படத்திலும் சித்தரிக்கப் பட்டுள்ளது.

[3]  Dr.Paul Brunton, author of the well-known book “A Search in Secret India”, first published in London in 1934, was the first Westerner to have an interview with the Sage in 1931.

[4] Prof. Milton Singer of the University of Chicago, met the Sage in 1955.

[5] A scholar from Argentina, Miss. Eughina Borghini met His Holiness in 1962

[6] Dr.Albert Franklin, U.S.Consul General in Madras, saw the Paramachrya for the first time in 1963 in the Madurai Meenakhi Temple during the Kumbhabhishekham ceremony

[7] Queen Frederica from Greece and her daughter Princess Irene met the Paramacharya in 1965 at Kalahasti.

[8]  Professor Sayeed Nasr, the Vice-Chancellor of Teheran University who participated in a World Conference on Philosophy in Madras in 1970 met the Paramacharya in Kanchi

இந்தி-எதிர்ப்பு மாறிய நிலைகள்: காங்கிரஸ்-எதிர்ப்பின் பன்முக வெளிப்பாடுகள், குழப்பவாதங்கள் மற்றும் பிரிவினைகள் [3]

செப்ரெம்பர் 18, 2019

இந்திஎதிர்ப்பு மாறிய நிலைகள்: காங்கிரஸ்-எதிர்ப்பின் பன்முக வெளிப்பாடுகள், குழப்பவாதங்கள் மற்றும் பிரிவினைகள் [3]

Anti-Hindi agitation, procession

காங்கிரஸ்எதிர்ப்பும், இந்திஎதிர்ப்பும்: 1930-40 காலகட்டத்தில் காங்கிரஸ்-எதிர்ப்பு தான், இந்தி-எதிர்ப்பு, இந்து-எதிர்ப்பு என்றெல்லாம் மாறியது. அதற்கு பிராமண-எதிர்ப்பு, வடவிந்தியர்-எதிர்ப்பு போன்றவையும் உபயோகப்படுத்தப் பட்டன. 1937-40 இந்தி-எதிர்ப்பு போராட்டம் இவ்வாறு தான் உருவானது. இதனால், நீதிகட்சி முழுமையாக செத்து விட்டது என்ற இலைக்குத் தள்ளப் பட்டது[1]. செப்டம்பர் 1939ல் உலக யுத்தம் ஆரம்பித்ததும், இந்தி-எதிர்ப்பு போராட்டம் அடங்கியது. 1940-50களில் இந்தி-எதிர்ப்பு அடக்கி வாசிக்கப் பட்டாலும், அது, இந்திய-எதிர்ப்பாக மாறியது. 1940ல் ஜின்னா, அம்பேட்கர், ஈவேரா சந்தித்து, காங்கிரஸுக்கு எதிராக செயல்பட திட்டமிட்டாலும், ஈவேராவைப் பொருட்படுத்தவில்லை. எம்.என்.ராய் 1941ல் சென்னைக்கு வந்தாலும், ஈவேராவால் அரசியல் பேச முடியவில்லை. காங்கிரஸ்-விரோத அரசியல் தான் வெளிப்பட்டது[2]. இந்நிலையில், இந்தி-எதிர்ப்பு போலித்தனமானது. ஏனெனில், வடவிந்திய தலைவர்களுடன், ஆங்கில அல்லது இந்தி தான் பேச வேண்டும். பிறகு, ஈவேரா, அண்ணா முதலியோருக்கு பதிலாக யார் பேசினர், மொழிபெயர்த்தனர் என்று தெரியவில்லை. அதாவது துபாஷிகளை வைத்து அரசியல் நடத்திய இவர்கள், அதே மொழியை எதிர்த்தது வியக்கத் தக்கது தான்.

Anti-Hindi agitation, Rajaji

ஈவேரா திருமணம் (1948), எம்ஜிஆர் சுடப் பட்டது (1967), அண்ணா முதலமைச்சர் ஆனது (1967): ஈவேராவின் திருமணம் 1948ல் நடக்க, அண்ணா கூட்டம் பிரிந்து, 1948ல் திமுகவை துவக்கினர். 1950-60 காலக் கட்டத்தில் திமுகவும் “திராவிடஸ்தான்” பிரிவினைவாதம் வைத்து அரசியல் நடத்தியது. சென்னையில், பொட்டி ஶ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து டிசம்பர் 15, 1952ல் இறந்ததால், தெலுங்கர், “அரவவாடு சாவால, ஆந்திர ராஜ்யம் காவால” என்று கோஷமிட்டனர்[3]. இதனால் “திராவிடமும்” பொய்த்து விட்டது. நவம்பர் 1, 1953 அன்று முதன் முதலாக, ஆந்திர பிரதேசம் உருவானது.  1959 தேர்தலில், திமுகவிற்கு இரண்டு இடம் தான் கிடைத்தது. ஜனவர் 17, 1967 அன்று எம்.ஆர்.ராதா, எம்ஜிஆரை சுட்டது, அவரத்ய் படத்தை வைத்து, திமுக தேர்தலில் ஓட்டைக் கேட்டது, அண்ணா முதலமைச்சர் ஆனது சரித்திரம் ஆனது[4].  இங்கு, திராவிட சித்தாந்தமும் பொய்த்தது மற்றும் இந்தி-எதிர்ப்பும் பின்னால் சென்றது.

Parasakti, Kandan Karunai-Shivaji changing roles

1952-பராசக்திஎபெக்ட்லிருந்து மீண்டது எப்படி?: 1952-பராசக்தி படத்தின் வெற்றிக்குப் பின், வறுமையில் வாடிய தமிழர்களில் பெரும்பாலோர், தி.மு.க.,வில் நம்பிக்கை வைத்தனர். எம்.ஜி.ஆரும் அதுவரை கதர் ஆடை அணிந்த காந்தியவாதியாகவும், கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் சந்தனம், குங்குமம், திருநீறு என்று பக்திப் பழமாகவே வாழ்ந்தவர் தான். பராசக்தி அடித்த புயலில், அவரும் தி.மு.க.,வில் கரை ஒதுங்கினார். ஆனாலும், அவர் மனசுக்குள் எப்போதும் முருகனே குடியிருந்தான். கவிஞர் வாலியின் நெற்றியில் பூசிய விபூதியை, கே.ஆர்.ராமசாமி விரும்ப வில்லை என்பதற்காக, அதை அழிக்கச் சொன்னவர் எம்.ஜி.ஆர்., ஆனால், தேவர், தனக்கு முருகனின் திருநீற்றைத் தராவிட்டால், அவரிடம் பேசக்கூட மாட்டார் எம்.ஜி.ஆர்., ‘சும்மா நடிங்கண்ணே ஜோரா இருக்கும்…’ என்றார் விடாப்பிடியாக தேவர். எம்.ஜி.ஆருக்காகவே ஆள் உயர வெள்ளி வேலுக்கும் ஆர்டர் கொடுத்தார். நீண்ட தயக்கத்துக்குப் பின், தேகமெங்கும் நகைகளும், ஆபரணங்களும் தவழ, கையில் வேலோடு முருகனாகக் காட்சி அளித்தார் எம்.ஜி.ஆர்., அக்காட்சி படமாக்கப்பட்ட போது, தேவர் – எம்.ஜி.ஆர்., உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தனர். முருகன் கை வேலை, தன் நண்பருக்கே அன்புப் பரிசாக கொடுத்தார் தேவர். செப்டம்பர்.16, 1966 அன்று அப்படம் வெளியிடப்பட்டது.

DMK in Hindi

எம்ஜிஆரின் முருக பக்தி[5]: எம்.ஜி.ஆரின் முருக பக்தி குறித்து, பிப்., 1974ல், ‘பொம்மை’ இதழுக்கு தேவர் அளித்த பேட்டி இது: “நான் இப்போ சொல்லப் போற சேதி உங்களுக்கெல்லாம் பிரமிப்பா இருக்கும். எம்.ஜி.ஆருக்கு தெய்வ பக்தி இல்லன்னு ரொம்ப பேரு சொல்றாங்க. ஆனா, நான் எப்ப மருதமலைக்கு போனாலும், எம்.ஜி.ஆர்., பேருக்கு அர்ச்சனை செய்வேன்; அந்தப் பிரசாதத்தைக் கொடுக்கும் போது, உட்கார்ந்திருந்தால் கூட, எழுந்து, பய பக்தியோட வாங்கிப்பார். எம்.ஜி.ஆரிடம்., ஒருநாள், ‘மருதமலை போயிட்டு வந்தேன்னு சொன்னேன்; உடனே, ‘பிரசாதம் எங்கே?’ன்னு கேட்டார். ஆனால், பிரசாதத்தை எடுத்துப் போக மறந்து விட்டேன். அன்று முழுவதும் எம்.ஜி.ஆர்., என்னுடன் பேசவே இல்ல!,” – இவ்வாறு கூறியிருந்தார் தேவர். 1967ல் திமுக அமோகமாக வெற்றி பெற்றது, அண்ணா முதலமைச்சர் ஆனார்.

Jinnah, EVR, Ambedkar meeting 1940

1967 இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு தொழிலதிபர்கள் நிதியுதவி அளித்தது: தொழிலதிபர்கள் ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்றோர் நிதியுதவியுடன், இந்தி திணிப்பை எதிர்த்து பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. 17 சனவரி 1967 அன்று, திருச்சியில் நடத்தப்பட்ட, சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் இராஜாஜி (சுதந்திராக் கட்சி), வி. ஆர். நெடுஞ்செழியன் (திமுக), பி. டி. ராஜன் (நீதிக்கட்சி), ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார், சி. பா. ஆதித்தனார் (நாம் தமிழர்), முகமது இஸ்மாயில் (முஸ்லிம் லீக்) ஆகியோர் பங்கு கொண்டனர். இராஜாஜி அரசியலமைப்பின் XVII பகுதியைக் “கிழித்து அரபிக் கடலில் போட வேண்டும்” என்று பேசியது தமாஷாக இருந்தது.உண்மையில் காங்கிரஸ்-எதிர்ப்பை அவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டார். 16 சனவரி 1967அன்று அண்ணாதுரை எதிர் வந்த குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். முன்னதாக அவர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழக மக்கள் குடியரசு நாளைக் கொண்டாட ஏதுவாக மொழி மாற்ற நாளை ஒரு வாரம் தள்ளிப் போடுமாறு கோரியிருந்தார். அதற்கு பிரதமர் ஒப்பாதது மோதலுக்கு வழி செய்தது என்று சாக்கு சொல்வதும் புரிகிறது.

Anti-Hindi agitation, Bobby

1970-75 காலம்: ஸ்டார் தியேட்டரில் யாதோன்கி பாரத் முதல் ஷோலே வரை: ஸ்டார் தியேட்டரில் யாதோன் கி பாராத் 1973ல் வெளியிடப் பட்டு 100 வாரங்கள் / சுமார் இரண்டு வருடங்கள் ஓடியது! பாபியும் வெற்றி கரமாக ஓடியது. மக்கள் விருப்பம் இல்லாமல், அவ்வாறு ஓடியிருக்க முடியாது. பிறகு, “இந்தி ஒழிக” போராட்ட நிலையில், தியேட்டட்களுக்குச் சென்று, பார்த்து ரசித்தது எப்படி? “ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த ஹோ” என்று ரொமேன்டிக்கா பாடிக் கொண்டிருந்தனர். திக-திமுகவினர் கண்டு கொள்ளவில்லை என்பதா அல்லது தமிழர் இந்தி படங்களை ரசிக்கின்றனர் என்று விட்டுவிட்டனரா?  1975ல் ஷோலே திரையிடப்பட்ட போது, திராவிட-பச்சைத் தமிழர்கள் பலமுறைப் பார்த்து, “கப்பர் சிங்” வசனம் பேசினார்கள்! எப்படி ஓடியது என்று சொல்ல வேண்டாம். அபிதாப் பச்சன், ரிஷிகபூர் போன்று, ஸ்டெப்-கட் என்று முடியை மாற்றி வெட்டிக் கொண்டான். பெல்-பாட்டம் பேன்ட் போட ஆரம்பித்தான். சுவரொட்டிகள் தமிழில் தாராளமாக ஒட்டப் பட்டன. தமிழ் நாளிதழ்களில் விளம்பரங்கள் இருந்தன. பேசும் படம், சித்தாரலயா போன்ற சினிமா இதழ்களில் புகைப்படங்களுடன் விவரங்கள் வந்தன.

Anatharama Dikshitar, Variar and TSB

கதாகாலக்ஷேபங்கள் நடந்தது: இன்னொரு பக்கம் சேங்காலி அனந்தராம தீக்ஷிதர் [1903-1969], கிருபானந்த வாரியார் [1906-1993], டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி [1919-2003] முதலியோரும் தமிழில் பேசி, புராண இதிகாங்களில் உள்ளவற்றை மக்களுக்குச் சென்றடையச் செய்தனர். திராவிடட் தலைவர்கள் மேடை போட்டு பேசினால் கூட்டம் வரும் என்றால், இவர்களுக்கும் தினமும் கூட்டம் வந்தது. மக்கள் – பெண்கள் முதல் சிறுவர் வரை வந்து அமைதியாக் கேட்டுச் சென்றனர். கர்நாடக இசைக் கச்சேரிகளும் பிரபலமாக இருந்தது. தெருவில் மணிக்கணக்காக உட்கார்ந்து கேட்டுச் சென்றனர். எம்.எஸ், சிட்டிபாபு வீணை எனும் போது, காத்திருந்து கேட்டுச் சென்றனர். 1950-1970களில் திராவிடத்துவ வாதிகள் அரசியல், ஆள்பலம், பணம் எல்லாம் இருந்த போது நடந்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்நிலையில் தான் ஏ.பி.நாகராஜனின் பக்திப் படங்கள் வெளிவர ஆரம்பித்தன.

© வேதபிரகாஷ்

18-09-2019

Bobby song

[1]  A. Nambi Arroran, Tamil Renaissance and Dravidan Nattionalim 1905-1944, Koodal Publisher, Madurai, 1980.

[2] Sami Chidambaranar, Thamizhar Thanathai Periyar EVR Vazhkkai Varalaru (Tamil), Periyar Self-Respect Propaganda Publications, Madras, 1997, pp.257-258.

[3] “Aravavalantha chavala, Andhra Rajyam kavala” M. P. Sivagnanam, Suyaatchi Pirivinaiya? (Is Autonomy Separation?), Inba Nilayam, Chennai,  1959, p.27.

[4] K. Sathyaprakash Rao,A Critical Analysis of Dravidian Movement, Politics and Governance – Changing trends from 1910-2017, paper presented at the SIC-3, Chennai, 2018

[5] மு. தெய்வநாயகம் போன்ற கிருத்துவ போலிகள், மோசடிகள் எம்ஜிஆர், “தமிழர் மதத்தைச்” சேர்ந்தவர் என்றெல்லாம் புளுகிக் கொண்டிருந்ததை கவனிக்கலாம். அத்தகையோர் ஆராய்ச்சியின் நேர்மையினையும் எடைபோட்டு அறிந்து கொள்ளலாம்.