Posts Tagged ‘பார்ப்பனீயம்’

காஞ்சிப் பெரியவர் – ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? பார்ப்பன ஐயர்கள், பிராமணர்களுக்கு எதிரானது எப்படி? [4]

மார்ச் 19, 2020

காஞ்சிப் பெரியவர்ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? பார்ப்பன ஐயர்கள், பிராமணர்களுக்கு எதிரானது எப்படி?

Anti-Hindu writings-against Kanchi mutt case

காஞ்சி சங்கரமட ரகசியங்கள்சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் 1986ல்  கி. வீரமணி வெளியிட்ட புத்தகம்: 1983ல் “இந்து சமயக் கலைவிழாஎன்ற பெயரில் காஞ்சி சங்கராச்சாரியார் சென்னையில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை அவர்களுக்குரிய பொருளாதா பலம், பத்திரிக்கை பலம், அரசு பலத்தோடு தடபுடலாக ஏற்பாடு செய்து கலையின் பெயரால் இந்து மதத்தைஅதாவது பார்ப்பன ஆதிக்கத் தத்துவத்தை வலுவூன்ற செய்ய ஏற்பாடு செய்தார்,” என்று வீரமணி பதிவு செய்தார்[1]. 1983ல் எம்ஜிஆர் தான் ஆண்டு கொண்டிருந்தார், திராவிடவெறி அதிகமாகத்தான் இருந்தது. “பார்ப்பனரல்லாதார் பல்லாயிரம் ஆண்டு காலமாக பார்ப்பன ஆதிக்க நுகத்தடியியின் கீழ் நசுக்கப்பட்டு, தந்தை பெரியார் என்ற தன்னிகரற்ற தத்துவப் பெரு ஒளியால் இந்நூற்றாண்டில் கண்ட விழிப்புணர்ச்சியை பொறுக்காத சங்கராச்சாரி மடம் என்கின்ற பார்ப்பனர் ஆதிக்க தத்துவப்பீடம் மீடும் ஆரியத்திற்கு  அரீயாசனம் தர மேற்கொள்ளும் முயற்சியே இந்து சமய கலைவிழா”, என்று ஒப்பாரி வைத்திருந்ததை கவனிக்க வேண்டும். ” ஆக பொறாமையில் வெந்து, வெதும்பிப் போனது யார் என்று தெரிகிறது. “தெய்வத்தின் குரல்” புத்தகங்களிலிருந்து, அங்கும்-இங்குமாக சில வரிகளையும், சிருங்கேரி மடத்தின் பங்களிப்புகளையும் சேர்த்து, சேற்றை வாரி இரைத்து பேசியதைத் தொகுத்து, இப்புத்தகம் வெளியிடப் பட்டது என்று தெரிகிறது.

Venugopals appreciation of DK book on Sankara mutt

ஓய்வு பெற்ற நீதிபதியின் பாரபட்சம் மிக்க அணிந்துரை: பி. வேணுகோபால் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி, இதற்கு “அணிந்துரை” கொடுத்திருப்பதை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், அவர் எந்த அளவுக்கு மோசமாக, பாரபட்சத்துடன், காழ்ப்பைக் கக்கியுள்ளார் என்று தெரிகிறது[2]. நீதிபதி ஓய்வு பெற்றாலும் அவரது உணர்வு ஓய்வு பெற்று சாய்ந்து விட்டது என்றாகிறது. நடுநிலை என்று பேசுவதற்கு இவருக்கு தகுதி போய் விட்டது, தராசு சாய்ந்து விட்டது என்று தெரிந்தது. இன்று அரி பரந்தாமன் போன்றோர் இந்நிலையில் தான் உள்ளனர். நீதி, சட்டம், மனசாட்சி என்பதெல்லாம் உள்ளுணர்வு மீதான விசயங்கள். பதவியில் இருக்கிறோம்-இல்லை என்ற நிலையில்லை, நடுநிலை என்பது எப்பொழுதுமே இருக்க வேண்டிய கட்டாயம். ஆகவே, மாறுவது, சார்புடைய போக்கைக் காட்டுகிறது. பிறகு இவர்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய போது, நடுநிலையுடன் செயல்பட்டார்களா என்பது பாதிக்கப் பட்டவர்களுக்குத் தான் தெரியும். 2012ல் அட்டையை மாற்றி, சிறிது பக்கங்களை சேர்த்து வெளியிடப்பட்டது.

Thygarajan - Sankaran book

பெரியவரை குறிவைத்து, பிறகு ஶ்ரீ ஜெயேந்திரரைத் தாக்கியது: சின்ன குத்தூசி மற்றும் ஞாநி பிறகு, ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியை சந்தித்து பேசியதை பேட்டி என்று வெளியிட்டதில் பல மாறுபாடுகள் இருந்ததால் சர்ச்சைக்குக்கு உள்ளானது. பேசியது எழுதியது, என்றதில் முரண்பாடுகள் முதலியன இருந்தன. அது பேட்டி அல்ல, என்றும் மறுக்கப் பட்டது. ஆனால், இதை விடாமல் எழுதி வந்தனர்[3]. “காஞ்சி சங்கரமட ரகசியங்கள் – சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் 1986ல்  கி. வீரமணி வெளியிட்ட புத்தக”த்தை வாசித்தால், கருணாநிதி தான் அதற்கு திட்டம் போட்டுக் கொடுத்தது என்று தெரிகிறது. முரசொலியில், “காமகோடி” என்று விரசமாக எழுதி, பேசி வந்தது, எதிரொலியில் தியாகராஜன்[4] எழுதியது முதலியவற்றிலிருந்து தெரிகிறது. அதாவது, கருவின் [கருணாநிதியின்] விரசம் முதலில், அத்தூண்டுதலால், கண்டித்தது பிறகு, “பேட்டி” அடுத்தது என்று தொடர்ந்தது. ஶ்ரீஜெயேந்திரர் மடத்தை விட்டுச் சென்றது, பெரியவர் காலம் ஆனது, மறுபடியும் ஶ்ரீஜெயேந்திரர் மடாதிபதி ஆனது, அரசியல் நுழைந்தது முதலியன பிறகு ஏற்பட்ட பிரச்சினைகள் ஆகி தொடர்ந்தன. ஆனால், தாக்கப் பட்டது, படுவது இந்து மத சின்னங்கள், அடையாளங்கள், நம்பிக்கைகள் முதலியன. இவற்றில் செக்யூலரிஸம் போர்வையில், அனைவரும் ஒன்று சேர்ந்து தாக்கியதும் தெரிந்தது.

Gnani Sankaran brahmin rebel-youth

தியாகராஜன்சங்கரன் திராவிட பார்ப்பனர் அல்லது சின்னக்குத்தூசிஞாநி பகுத்தறிவு ஜோடி செய்தது என்ன?: தியாகராஜனும், சங்கரனும் ஐயர் என்ற நிலையில் சென்று மடாதிபதியை சந்தித்து பேசினார்களா அல்லது பேட்டி கண்டார்களா என்பது புதிராகிறது. மடாதிபதி மறுத்த போது, எந்த செய்தியாளரும் / நிருபரும் வெளியிடக் கூடாது. நிச்சயமாக, எதிரொலி, முரசொலி, விடுதலை…போன்ற இதழ்களுக்கு மடாதிபதி பேட்டி கொடுக்க மாட்டார். ஆகவே, இந்த இரு ஐயர்களும் தங்களது “பார்ப்பன” அந்தஸ்த்தை வைத்து, அவருக்கு சொல்லாமலேயே, “பேட்டி” என்று வெளியிட ஆரம்பித்து விட்டனர் என்று தெரிகிறது. யாராவது பெரியார், அண்ணா, கருணாநிதி முதலியோர்களிடம் “பேட்டி” கண்டேன் என்று இவ்வாறு போட்டால் என்னாகும் என்று நினைத்துப் பார்க்கலாம். ஆகவே, தியாகராஜன் – சங்கரன் திராவிட பார்ப்பனர் அல்லது சின்னக்குத்தூசி-ஞாநி பகுத்தறிவு ஜோடி ஏதோ திட்டத்துடன் ஶ்ரீஜெயேந்திரரை அணுகியிருப்பது தெரிகிறது. அப்பொழுது விரித்த வலை பெரிதாகி, பிறகு சிக்கிக் கொண்டது சரித்திரமாகி விட்டது. ஏனெனில், “காஞ்சி சங்கராச்சாரியாரைப் புரிந்து கொள்வீர்,” என்ற புத்தகத்தை 1983லேயே, திக வெளியிட்டுள்ளது[5].. 2004ல் ஶ்ரீஜெயேந்திரர் கைதானபோது, 2005ல்,  “காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?” என்று புத்தகம் வெளியிட்டது[6]. எதிர்மறையான காரியங்களை செய்வது என்பது ஈவேராவின் போக்காக இருந்தது. அது திராவிட கழகத்தவரின் அடிப்படை தத்துவமாகியது. உண்ணாவிரதம் என்றால் உண்ணும் விரதம் என்பார்கள். அதே போல, மூதறிஞர் ராஜாஜி என்றால், தானும் அப்படித்தான் என்று அவரை வைது, அவர் ஆசிர்வப்பது போல சிலை செய்தது நோக்கத் தக்கது. அதுபோல, ராஜாஜி, “சக்கரவர்த்தி திருமகன்,” எழுதினால், கரு, “சக்கரவர்த்தியின் திருமகன்” என்று எழுதி கிண்டல் அடித்தார்[7]. அதே தலைகீழ்-எதிர்மறை வினைகள் தான் எல்லாவற்றிலும் உள்ளது. அதாவது, இங்கு தாக்கப் படுவது இந்து மதம் தான்!

Anti-Hindu writings-Karu-Rajaji

பார்ப்பனர்கள் திராவிட சித்தாந்திகளுக்கு, ஆட்சியாளர்களுக்குத் துணை போனது ஏன்?: 1962 வரை தியாகராஜன் [1934-2011] என்ற பார்ப்பனர் தான், “சின்ன குத்தூசி” என்ற பெயரில், முரசொலியில் பணியாற்றி வந்தார். அப்படியென்றால், பெரியாரைப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே தெரிந்திருக்கும், உண்மை வரலாற்றை அவர் எழுதியிருக்க முடியும். எம்ஜியாருக்கு எதிராக எழுதியதால், கருணாநிதி பக்கம் போனார்.

Gnani Sankaran brahmin rebel

ஞானி என்கின்ற சங்கரன் [1954-2018] பார்ப்பனராக இருந்தாலும், இளம் வயது முரண்பாடுகளால், எண்ணக் குளறுபடிகளால், ஏதோ “போராளி” என்று நினைத்துக் கொண்டு, திசைமாறிய, “பெரிய ஆளாகவேண்டும் என்று அதிக பேராசைக் கொண்ட மனிதர். இதனால், வேலைகளில் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. தன்னுடைய தனிமனித தோல்விகள்-விரக்திகள், புகழுக்காக, பார்ப்பன விரோதத்துவத்தை பின்பற்றியது நிதர்சனம்.

Savi Sankaran so close to DMK

சாவி விஸ்வநாதன் [1916-2001] காஞ்சி மகா பெரியவர் அவ்வப்போது போய்த் தங்கும் கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே சாமா சுப்பிரமணிய அய்யர், மங்களம் அம்மாள் தம்பதியின் புதல்வராகப் பிறந்தார் சாவி. எம்ஜிஆர், கருணாநிதி போன்றோருக்கு நெருக்கமான பார்ப்பனர். காஞ்சி பெரியவரின் நம்பிக்கையான பக்தர். அந்நிலையில், பெரியாரின் இந்து-விரோத வேலைகளைப் பற்றி சொல்லி, தடுத்திருக்கலாம். உண்மையான இந்து என்றால் எதிர்த்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. மாறாக, தயாநிதி மாறனுக்கு, ஒரு பார்ப்பன பெண் வேண்டும் என்று கருணநிதி சொல்லியபோது, அவ்வாறே நடந்தது.

Savi Viswanathan with MGR

இதெல்லாம் ஒரு உதாரணத்திற்குத் தான் கொடுக்கப் படுகின்றது. ஆனால், வலுக்கட்டாயமாக, பல பிராமணர்கள், இத்தகைய வலைகளில் விழ வைத்துள்ளனர். எம்.பி.பி.எஸ் படிக்கும் பிராமண பெண்களை மற்ற உயர்ஜாதி [முதலியார், செட்டியார், ரெட்டி, நாயுடு போன்றோர்] காதலித்து மணந்துள்ளனர். ஆனால், பிறகு பிரச்சினைகள், விவாக ரத்துகள் இவையெல்லாம் வெளியே சொன்னதில்லை. ஆகவே, இங்கு ஈவேராவை, பெரியாரை, திகவை, திமுகவை, அத்தகைய கும்பல்களின் ஆட்களை பார்ப்பனர், அந்தணர், பிராமணர் கண்டால் அஞ்சுவது இதனால் தான். 1950களில் அடித்தார்கள்; 1980களில் பூணூலை அறுத்தார்கள்; 1990களில் தாலிகளை அறுத்தார்கள். இன்று வரை திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்கள், சினிமா-டிவி, சமூக வளைதளங்கள், புத்தகங்கள் என்று எல்லாவற்றிலும் மென்மையான இலக்கில் பார்ப்பனர்கள் தான் இருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

19-03-2020

Karunanidhi appropriating Rajaji

[1] கி. வீரமணி, காஞ்சி சங்கரமட ரகசியங்கள்சங்கராச்சாரி யார்?, திராவிடர் கழக வெளியீடு, சென்னை, 1986, பதிப்புரை.

[2] பி. வேணுகோபால். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, “அணிந்துரை” 25-12-1986 தேதியிட்டது, பக்கங்கள்.1-4

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சங்கராச்சாரியார்? By Staff | Published: Thursday, February 2, 2006, 16:50 [IST] (தீம்தரிகிட ஏப்ரல் 2003ல் வெளியான கட்டுரை இது) : https://tamil.oneindia.com/art-culture/essays/2006/sivakumar1.html

[4] Chinna Kuthoosi (77), a veteran journalist and a Dravidian thinker, died in May 2011. Born as R. Thiagarajan in a Brahmin family, he served as a teacher for a few years and also as a private secretary to E.V.K. Sampath before dedicating himself to journalism. But for readers of Murasoli, the DMK mouthpiece, and those tuned in perpetually to Dravidian political debates, the name may not be familiar. For, he was the perfect backroom ideologue of the DMK. He didn’t appear on television, hesitantly gave few interviews, and was never in the crowd that thronged DMK leader Karunanidhi’s house or office to display loyalty or request favours. But he was the man whom Karunanidhi primarily relied on when it came to the printed propaganda through Murasoli. Chinnakuthoosi did that diligently for the last 25 years—defending Karunanidhi’s policies and practices, weaving in the historic Dravidian struggles into current issues to remind the DMK cadres of the party’s great past whenever he felt they were grappling with the troubled present. Chinnakuthoosi as a writer became a name to reckon with when he unleashed a storm of articles in the early 1980s against the then popular chief minister MGR. That must have endeared him to Karunanidhi, who took him under his fold in the mid-1980s. Chinnakuthoosi had remained fiercely loyal to Karunanidhi thereafter. He wrote regularly in Murasoli, the party organ of the Dravida Munnetra Kazhagam, besides contributing to Nakkeeran and Ethiroli.

https://timesofindia.indiatimes.com/blogs/chennaitalkies/obit-of-an-unknown-ideologue/

https://www.thehindu.com/news/national/tamil-nadu/cinema-express-editor-dead/article2040800.ece

[5] சின்னக்குத்தூசி-ஞாநி, காஞ்சி சங்கராச்சாரியாரைப் புரிந்து கொள்வீர், திராவிட கழக வெளியீடு, சென்னை, 1983.

[6] கி. வீரமணி, காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்? திராவிட கழக வெளியீடு, சென்னை, 2005,

2004 முதல் 2013 வரை நடந்தவற்றை விளக்கினால், திராவிட சதிகள் ஒருவேளை வெளியாகலாம். ஏனெனில், பார்ப்பனர்களை வைத்து தான், அவர் சிக்கவைக்கப் பட்டார். 1987லிருந்து, அவர் மீது ஊடகங்கள் தூஷித்துக் கொண்டிருந்தன. மடத்தை விட்டு போனபோது கூட, யாரோ அமெரிக்க பெண்மணியுடன் சென்று விட்டார் என்று ஊடகங்களில் செய்தி வெளியிட்டனர். மக்கள் இன்று மறந்து விடலாம், ஆனால், இந்து மடம் தாக்கப் பட்டதை, இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

[7] கருணாநிதி, சக்கரவர்த்தியின் திருமகன், திராவிட கழக வெளியீடு, சென்னை, 2019.

திராவிட ஆட்சி-ஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்பு- செக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (3)

ஓகஸ்ட் 12, 2017

திராவிட ஆட்சிஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்புசெக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (3)

PDௐ gang -Another person with police - caught by police- 07-08-2017

போலீஸார் பிடித்தது, கைது செய்தது முதலியன: பன்றிகளைப் பிடித்த பிறகு, பன்றிகளை தூக்கி வந்த பகுத்தறிவாளிகளும் பிடிக்கப் பட்டனர். வீடியோக்களில் பார்க்கும் போது, இரண்டும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.

 1. போலீஸ் அனுமதீல்லாமல், இப்போராட்டத்தை நடத்தியது.
 2. பார்ப்பனர்களுக்கு எதிராக பேசியது,
 3. அவர்களது மதநம்பிக்கைகளைப் புண்படுத்தியது, தூஷித்தது.

முதலியவற்றை விடுத்து, அவர்கள் மீது மிருகவதை தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது[1].  மிருகவதை தடுப்பு சட்டம் கீழ் கைது செய்யப்பட்டனர்-வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று பொதுவாக எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன[2]. வீடியோக்களுடன் இருந்த ஊடகக்காரர்கள் இந்த கூத்தை படமெடுத்தனர்[3]. சாலையில் செல்வோர், இதை கண்டுகொள்ளாமல் சென்றது வீடியோக்களில் காணப்படுகிறது. ஆக பொது மக்கள் இதை பொறுட்டாகவே கருதவில்லை என்று தெரிகிறது. இந்த உதிரி திக-கூட்டங்கள், –

 1. ஒன்று விளம்பரத்திற்காக செய்தது,
 2. யாரோ தூண்டுதல் மூலம் செய்தது,
 3. திமுக ஆதரவுடன் மறைமுகமாக செய்தது,
 4. அதிமுகவிற்கு எதிராக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற முறையில் செய்தது.
 5. அரசியல் ரீதியாக செய்தது.

என்றுதான் தெரிகிறது. ஆகவே, ஏதோ காலை கைது-மாலை விடுதலை என்றில்லாமல், இக்கூட்டத்தினரை தீரவிசாரித்து, உரிய தண்டனை கொடுக்கப் படவேண்டும்.

PDௐ gang - one person with police - caught by police- 07-08-2017

பன்றிகளைப் பற்றிய கவலை திராவிடர்களுக்கு ஏன்?: கோவை ராமகிருட்டிணன் பேச்சில், இந்த கவலை வெளிப்பட்டுள்ளது, “சில, சேரிப்பகுதிகளில்தான் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆகவே தங்களது போராட்டம் சேரி மக்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இது தவறான் விமர்சனம் சேரி மக்கள்தான் பன்றிகளை வளர்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது. பலரும் வளர்க்கிறார்கள். பண்ணைகள் அமைத்தும் வளர்க்கிறார்கள். ஆகவே எங்களது போராட்டத்தை தவறாக யாரும் நினைக்க மாட்டார்கள்,” என்றது நோக்கத்தக்கது. ‘‘நெல்லை ஒப்பிடும் போது, வெண்பன்றி வளர்ப்பில் அதிக லாபம் கிடைக்கும். பன்றிகளை இளக்காரமாக பார்க்காதீர்கள்… 6,700 ரூபாய் முதலீடு செய்து, 10 பன்றிக் குட்டிகளை வளர்த்தால், அடுத்த ஆறாவது மாதம் 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். நாங்களே பயிற்சிக் கொடுத்து, கடனும் கொடுத்து, விற்பனை வாய்ப்பும் ஏற்படுத்தித் தருகிறோம். விருப்பமுள்ள விவசாயிகள் என்னை அணுகலாம்’’ -இப்படிச் சொல்பவர் தஞ்சை பகுதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய பயிற்சி மைய இயக்குனர் ஜெகநாதன் (அலைபேசி 94436-18119)[4]. இந்திய ஓவர்சீஸ் வங்கி, கிராமப்புற பெண்களுக்கான பத்து நாள் பயிற்சி முகாம் ஒன்றை பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14-ம் தேதி வரை தஞ்சையில் நடத்தியது. இதில் காளான் வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பல தரப்பட்ட காய்களில் ஊறுகாய் தயாரிப்பு, ஜாம் தயாரிப்பு, பால் பண்ணை அமைத்தல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல தொழில்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது[5]. வெள்ளைப்பன்றி கறி எப்பொழுதுமே டிமான்டாக இருப்பதாக தெரிகிறது. அதன் வறுவல் விற்கும் கடைகளும் காணப்படுகின்றன. பிறகு மலத்தைத் தின்று ஊழலில் வளர்ந்த பன்றிகளின் கறியை எப்படி உண்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆக எத்தனை திராவிடர் பன்றிகளை வைத்து லாபம் பெறுகிறார்கள் என்றறிந்து கொள்ளலாம்.

PDk gang with police - a pig was caught- 07-08-2017

திராவிடமும், பன்றியும், பன்றி உவமையும் (1927-1961): திராவிடத் தலைவர்களின் உவமானம் – உபமேய பேச்சுகளைப் பற்றி கேட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். காதரைன் மேயோ என்ற அன்னிய நாட்டுப் பெண்மணி[6], இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள். அவர்களுக்கு விடுதலை உணர்வு கிடையாது எனும்நோக்கில் 1927இல் ‘இந்தியத் தாய்’ என்ற நூலை வெளியிட்டார்.  இதையெதிர்த்து, ‘மேயோ ஒரு பன்றி’ என்ற நூலை பாவேந்தர் எழுதியதாகவும் அது இன்று கிடைக்கவில்லை. ஈவேரா எப்பொழுதுமே, தீபாவளி சாக்கு வைத்து, பன்றியை கிண்டலடித்து எழுதியிருப்பது தெரிந்த விசயமே. 17-02-57 – காங்கிரசுக்கு மானமிருந்தால்– ஈ.வே.ரா காங்கிரசை கழுதை, பன்றி என்று பழித்து பேசியதை எதிர்த்து, மபொசி எழுதியுள்ளதாக தெரிகிறது. 1961ல் அண்ணாதுரை பேசும்போது[7], பன்றியை ஒன்றும் உயர்வாக பேசவில்லை,  “கூட்டம் நடந்தால் பத்திரிகைகளில் செய்தி வராது. இங்கு நீங்கள் பல்லாயிரக் கணக்கில் கூடியிருக்கிறீர்கள். கழகத்தைப் பற்றி வரலாற்று ஆதாரத்தோடு மதியழகன் பேசினார். உள்ளக் கிளர்ச்சியோடு கருணாநிதி பேசினார். இவர்களுடைய பேச்சுக்களெல்லாம் நாளை பத்திரிகைகளிலே வராதுஆற்றல் படைத்தவர்கள்ஆர்வமிக்கவர்கள் இங்கே லட்சக்கணக்கிலே கூடியிருக்கின்றீர்கள். உங்கள் யாரையும் பற்றிப் பத்திரிகையிலே போட மாட்டார்கள்இங்கே ஒரு பன்றி வந்ததென்றால் அதைப் பற்றி எட்டுப் பத்தித் தலைப்பில் கொட்டை எழுத்தில் போடுவார்கள். ‘அண்ணாதுரை கூட்டத்தில் பன்றி, கூட்டத்தில் பரபரப்புஎன்று தலைப்பு கொடுத்துச் செய்தி போட்டுத் தர்மத்தை நிலை நாட்டுவார்கள்மனிதனுக்கும் பன்றிக்கும் அதிக வித்தியாசம் தெரியாதவர்கள் என்ன எழுதினாலும் நான் கவலைப்படுவதில்லை.” ஆக பன்றி பற்றி அறிஞருக்கே இத்தனை கவலையிருந்தது.

Brahmin-snake-periyar-analogy

திராவிட சித்தாந்திகளின் பேச்சுகள் கவனிக்கப்படவேண்டும்: இவர்களின் எண்ணம் இந்து மதம், இந்துக்களை பழிப்பது, தூஷிப்பது என்பதுதான் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. இருப்பினும், இத்தகைய போலி சித்தாந்தம் பேசி, இன்றும் உணர்ச்சி பூர்வமாக, சிலரை உசுப்பி விட பார்க்கின்றனர். ஆனால், கடந்த 60-70 ஆண்டுகளில் இவர்களது பேச்சுகள், எழுத்துகள் முதலியவற்றை தெரிந்து கொண்டாலே, இவர்களது வக்கிரத்தை, அசிங்கத்தை, ஆபாசத்தை, காழ்ப்பை தெரிந்து கொண்டு விடுவார்கள். மேடைகளில் இரவில் பத்து மணிக்கு மேலே பேசியதை இன்றைய கிழவர்கள் சொல்லியாக வேண்டும். ஏனெனில், இன்றைய தொழிற்நுட்பம் போல, அக்காலத்தில் யாரும் பதிவு செய்து வைக்கவில்லை. பதிவு செய்து வைத்திருந்தாலும், திராவிட கழகங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு அனைவற்றையும் கொடுப்பதில்லை. தங்கள் மீது எதிர்மறை கருத்து வராமல் இருக்கும் வறையில் தான் ஆவணங்களைக் காட்டி வருகின்றனர். உண்மை எடுத்துக் காட்ட-காட்ட அவற்றையும் அழித்து விடவும் செய்வார்கள். 60-90 வயதானவர்கள் இறக்க- இறக்க அவர்களுடனே, அவ்வுண்மைகளும் மறைந்து விடும். இந்து திராவிடத் தலைவர்களின் உண்மை முகங்கங்களின் சரித்திரமும் மறைந்து விடும். பெரியார், அறிஞர், கலைஞர், கவிக்கோ, பெருங்கவிக்கோ ரீதியில் தான் விசயங்கள் பேசப்படும், எழுதப்படும். அதற்குள் உள்ள ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஆவணப்படுத்தப் பட வேண்டும்.

Veeramani spoke abour brahmin-snake 24-12-2004

பெரியாரின் பார்ப்பன உவமானமான பாம்பு, ஏன் பன்றியானது?: பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது[8]. கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் நூலைப் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் தமிழர் வீரமணி பேசும்போது[9], “பெரியார் பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார்[10]. அதனுடைய தத்துவம் என்ன? பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்குநல்ல பாம்புஎன்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி”. “காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் ,” என்றும் பெரியார் கூறியிருக்கிறார். ஆனால் பாண்டே-வீரமணி பேட்டி-விவாதம் பிறகு, அவ்வாறு சொல்லவில்லை என்று மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆக பெரியார் பக்தர்கள் விசுவாசத்துடன், பாம்பிற்கு பூணூல் போட்டிருக்கலாம், ஆனால், பன்றிதான் பிடித்திருக்கிறது போலும்!

© வேதபிரகாஷ்

07-08-2017

Parppans should get frightened-Karu-2012

[1] http://tamil.oneindia.com/news/tamilnadu/9-periyarist-held-panrikku-poonool-podum-porattum-292052.html

[2] தினகரன், பன்றிகளுக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்திய 9 பேர் மீது வழக்குப்பதிவு, 2017-08-07@ 17:17:36.

[3] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=325446

[4] விகடன், பன்றி வளர்ப்பில் பலே லாபம், Posted Date : 06:00 (10/03/2008)

[5] http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=71015

[6] Katherine Mayo, Mother India, 1927.

[7] அண்ணாதுரை, நம்நாடு – 10.4.61

[8] நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா.  இந்தியாவில் இருந்து கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி, மற்றும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது.

[9] கி. வீரமணி, பெரியாரை உலக மயமாக்குவோம், கீற்று, பிப்ரவரி 2006.

[10] http://keetru.com/thaagam/feb06/veeramani.php

திராவிட ஆட்சி-ஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்பு- செக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (2)

ஓகஸ்ட் 12, 2017

திராவிட ஆட்சிஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்புசெக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (2)

Kovai Ramakrishnan on sacred threat to pigs - 19-07-2017

பார்ப்பனர்கள், பூணூல் அணிந்து கொண்டு தங்களை உயர்ந்தவர்களாகவும், பிற சாதியினரை இழிவானவர்களாகவும் கருதுகிறார்கள்: கேவலமான போராட்டங்கள் நடத்துவதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் திகவினர் அவ்வப்போது தாலி அறுப்பு உள்ளிட்ட நகைப்புக்குரிய போராட்டங்களை நடத்துவது வழக்கம். அந்த வகையில் 07-08-2017 அன்று நான்கு பன்றிகளுக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்தினர்.  கோவை ராமகிருட்டிணன், “பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் ஏன்?”, என்று பேட்டி கொடுத்ததாக செய்தி உள்ளது. கோவை ராமகிருட்டிணன்[1], “பார்ப்பனர்கள், பூணூல் அணிந்து கொண்டு தங்களை உயர்ந்தவர்களாகவும், பிற சாதியினரை இழிவானவர்களாகவும் கருதுகிறார்கள். பூணூல் என்பது தங்களை உயர் சாதியாக காட்டும் அடையாளமாக நினைக்கிறார்கள். இது தவறு என்பதை உணர்ந்தவே பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். பன்றியை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் உண்டு. பூணூல் அணிந்து கொண்டு, மற்றவர்களை இழிவானவர்களாக பார்ப்பனர்கள் நினைக்கிறார்கள் அல்லவா….அது போல விலங்குகளில் இழிவானதாக பன்றியை கருதும் வழக்கம் மக்களிடையே உள்ளது. ஆகவேதான் பன்றிக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாம்.

 Sacred thgread to pigs - Priyanka- 07-08-2017

சேரிப்பகுதிகளில்தான் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆகவே தங்களது போராட்டம் சேரி மக்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது:சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில்சேரி பிஹேவியர் என்று ஒருவர் சொல்லப்போக……..சேரி மக்களை அவமதித்துவிட்டார் என்ற சர்ச்சை எழுந்தது. அதுபோல சில, சேரிப்பகுதிகளில்தான் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆகவே தங்களது போராட்டம் சேரி மக்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இது தவறான் விமர்சனம் சேரி மக்கள்தான் பன்றிகளை வளர்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது. பலரும் வளர்க்கிறார்கள். பண்ணைகள்  அமைத்தும் வளர்க்கிறார்கள். ஆகவே எங்களது போராட்டத்தை தவறாக யாரும் நினைக்க மாட்டார்கள், பசுவைத்தான் அவர்கள் ஏற்கெனவே புனிதம் என்கிறார்கள். ஆகவேதான் இழிவாக கருதப்படும் பன்றிக்கு பூணூல் அணிவித்து அவற்றை புனிதமாக்கி உயர்த்துகிறோம் (சிரிக்கிறார்)”. போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வாங்கி விட்டீர்களா என்று கேட்டதற்கு, “நிச்சயமாக அனுமது கிடைக்காது. போராட்டம் நடத்தி கைதாக வேண்டியது தான்,” என்று சொல்லி முடித்தார்[2]. பார்ப்பனர்கள் இன்னும் ஆதிக்கம் செல்லுத்துகிறார்கள்[3], அவர்கள் எழுதிய விளம்பரங்களை அழித்தாலும், கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம், அழித்ததற்கும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம் இன்னொரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்[4].

S V Sekar confronts Kovai Ramakrishnan

கோவை ராமகிருட்டிணனுக்கு, எஸ்.வி. சேகர் பதிலடி பேட்டி: எஸ்.வி. சேகர் இதற்கு பதிலாக கொடுத்த ஒரு பேட்டியும் உள்ளது[5].

 1. பிராமணர்கள் தாம் பூணூல் போடுகிறார்கள் என்பதில்லை, செட்டியார், ஆச்சாரி…….போன்றோரும் பூணூல் போட்டுக் கொள்கிறார்கள்,
 2. பூணூல் அணிவது ஒரு தந்தை மகனுக்கு செய்யும் சடங்கு, பன்றிக்கு பூணூல் போட்டால் இவர்களும் பன்றிதான்,
 3. அரசியல் ரீதியாக இதைச் செய்கிறார்கள்,
 4. திமுகவிற்கு ஆதரவாக செய்கிறார்களா என்று தெளிவு படுத்தவேண்டும்.
 5. சுவரில் எழுதியுள்ளதைப் பற்றி ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளேன்,
 6. பிராமணாள் மெஸ் எதிர்த்தவர்கள் செட்டியார் மெஸ், தேவர் மெஸ், ஆச்சி மசாலா…..முதலியவற்றை எதிர்ப்பதில்லை,…
 7. பன்றிக்கு குல்லா போடுகிறேன், சுன்னத் செய்கிறேன் என்று அறிவிக்க முடியுமா,……என்றெல்லாம் கூறினார்[6].

PDk gang with police -to ctch a pig- 07-08-2017

அனுமதியில்லா போராட்டம் இடம் மாறியது: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி அருகே பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்[7]. சமஸ்கிருத கல்லூரியை இவ்வாறு குறி வைப்பதையும் அரசு மற்றவர்கள் கவனிக்க வேண்டும். அதாவது, இக்கூட்டத்திற்கு எளிய இலக்காக இருப்பதும், அதனைக் குறிப்பிட்டு தாக்குவதும் கண்கூடாக இருக்கிறது. இதனையடுத்து சமஸ்கிருத கல்லூரி முன்பு 07-08-2017 காலை முதலே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது[8]. ஆனால், போலீசாரின் கவனத்தை திசை திருப்பி, ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர், என்பதே சரியான செய்தியல்ல. ஏனெனில் இன்னொரு செய்தி, இதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த போலீசார், ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி ஊழியர்களையும் வரவழைத்திருந்தனர், என்றுள்ளது. பன்றிகளைப் பிடிக்க சென்னை கார்ப்பரேஷனில் ஒரு பிரிவு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா சிலை ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தத்திற்கு ஐந்து பன்றிக் குட்டிகளுடன் வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வந்தனர். சுமார் பத்து –பன்னிரெண்டு பேர் வந்தனர். பன்றிகளைக் கொண்டு வந்திருந்தால், அவை இவர்களையே ஒரு பதம் பார்த்திருக்கும். அதனால் தான் பன்றிக்குட்டிகளை, இந்த இனமான வீரர்கள், சுயமரியாதை சூரர்கள் தூக்கி வந்துள்ளனர்.

PDk gang with police -to ctch a pig- 07-08-2017

நான்கு பன்றிகளில் ஒரு பன்றி இறந்தது அல்லது கொல்லப்பட்டது: பன்றிகளின் வாயை மூடி, சுற்றி கயிரால் இருக்கி கட்டி, சாலையில் தரதரவென இழுத்து வந்தனர்[9]. பன்றிகள் “கிரீச்-கிரீச்” என்று அசிங்கமாக கத்தும் என்பதனால், அவற்றின் வாய்களை பிளாஸ்டிக் வளையம் போட்டு கட்டப்பட்டிருந்தது[10]. பாவன், பன்றிகளுக்கு கத்தக் கூட உரிமை இல்லாமல் போயிற்று, ஆனால், இவர்கள் கத்திக் கொண்டிருந்தனர். அவற்றுக்கு பட்டையடித்து, பூணூல் அணிவித்ததுடன், அவற்றின் வாய்களை கட்டி, சாலையில் தரதரவென்று இழுத்து வந்தனர் என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[11]. “நான்கு பன்றிகளை அழைத்து வந்த திராவிடர் கழகத்தினர் அவைகளுக்கு பூணூல் போட முயற்சி செய்தனர். அப்போது ஒரு பன்றி எதிர்பாராமல் இறந்து போனது மற்ற மூன்று பன்றிகளுக்கும் காயம் ஏற்பட்டது”, என்கிறது இன்னொரு இணைதளம்[12]. இறந்த பன்றிக்கு “சிரார்த்தம்” ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.  மாநகராட்சி ஊழியர் வலையோடு இருந்ததால், பன்றிகளைப் பிடித்து வண்டியில் ஏற்றினர்[13]. மற்றவர்களை போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்தனர்[14]. இருவர் மட்டும் கத்திக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தை சேர்ந்த ஒன்பது பேர்களை கைது செய்யப்பட்டனர்[15].

© வேதபிரகாஷ்

07-08-2017

Sacred thread worn to four pigs- Dinakaran news- 08-08-2017

[1] பத்திரிக்கை.காம், பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் ஏன்?: கோவை ராமகிருட்டிணன் பேட்டி, Posted on July 18, 2017 at 11:46 am by டி.வி.எஸ். சோமு

[2] https://www.patrikai.com/why-the-struggle-is-the-pig-poonool-kovai-ramakrishnan-interview/

[3] பத்திரிக்கை.காம், பன்றிக்கு பூணூல் போராட்டம் நடந்தே தீரும்!: கோவை.ராமகிருட்டிணன், Posted on July 19, 2017 at 11:14 am by டி.வி.எஸ். சோமு

[4] https://www.patrikai.com/the-pig-poonool-protest-will-be-defenetly-kovai-ramakrishnan/

[5] பத்திரிக்கை.காம், பன்றிகளுக்கு குல்லா போட தைரியம் உண்டா?: எஸ்.வி.சேகர் பேட்டி, Posted on July 18, 2017 at 1:23 pm by டி.வி.எஸ். சோமு

[6] https://www.patrikai.com/can-the-pigs-be-able-to-hat-s-v-shekar-questioned/

[7] புதியதலைமுறை, பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்: மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, ஆகஸ்ட்.8, 2017.

[8] http://www.puthiyathalaimurai.com/news/crime/26383-scramble-for-the-swine-case-under-the-prevention-of-animals-act.html

[9] பத்திரிக்கை.காம், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி: பன்றி பட்ட பாடு, Posted on August 7, 2017 at 2:00 pm by டி.வி.எஸ். சோமு,

[10] https://www.patrikai.com/punool-dressing-show-pigs-harassed/

[11] தமிழ்.ஒன்.இந்தியா, பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம்தபெதிகவைச் சேர்ந்த 9 பேர் கைது, Posted By: Mayura Akilan, Updated: Monday, August 7, 2017, 20:09 [IST].

[12] தமிழ்.வெப்துனியா, 4 பன்றிகளுக்கு பூணூல் போட்ட தி.கவினர். ஒரு பன்றி இறந்ததால் பரபரப்பு, செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (00:30 IST).

[13] பத்திரிக்கை.காம், பன்றிக்கு பூணூல்: பெரியார் திராவிடர் கழகத்தினர்மீதுமிருகவதைவழக்கு பதிவு!, Posted on August 8, 2017 at 4:21 pm by A.T.S Pandian

[14] https://www.patrikai.com/the-pig-poonool-protest-case-filed-animal-prevention-act-over-the-protester/

[15] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/scramble-for-the-swine-case-under-the-prevention-of-animals-act-117080700063_1.html.

திராவிட ஆட்சி-ஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்பு- செக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (1)

ஓகஸ்ட் 12, 2017

 

திராவிட ஆட்சிஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்புசெக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (1)

Kar-Jeya- Aryan-Dravidian rules

திராவிட ஆட்சியும்ஆரிய ஆட்சியும், பார்ப்பன ஆட்சியும்சூத்திர ஆட்சியும்: “திராவிட” சித்தாந்திகள் சோரம் போய் விட்டனர், கருத்துகள் பொய்த்து விட்டன, அரசியல் தோற்று வீழும் நிலையில் உள்ளது. “பாப்பாத்தி” என்று பேசியபோது, “சூத்திரன்” இருந்தான் என்று தானே ஆகிறது. கருணாநிதி, ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்ற போது, தான் “சூத்திரன்” என்றுதானே குறித்துக் கொண்டார்.” உள்ள சூத்திரன் ஆட்சியைக் காப்போம்,” என்று கூட சுவரொட்டிகள் ஒட்டினர். ஆனால், இப்பொழுது அந்த “பாப்பாத்தி” இறந்தவுடன், இந்த “சூத்திரன்” படுத்திருக்கும் நிலையில், திராவிட ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. “ஆரிய அம்மையார்” ஆட்சி போனாலும், “திராவிட ஆட்சி” வராது என்ற நிலையாகி விட்டது. திமுக இப்பொழுது, அதிமுகவை சாடியே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. ஏதோ யோக்கியமான அரசியல்வாதிகள், ஒழுக்கமானவர்கள், புனிதர்கள் போல அதிமுகவை ஊழல், லாயக்கில்லை என்றெல்லாம் வசைப்பாடி வருகின்றது. வலுவுடன் இருக்கும் கட்சியைப் பிளந்து, ஆட்சியை வீழ்த்தலாம் என்று திட்டம் போடுகிறது.

Save the Sudra rule prevailing- Wall poster

ஜாதி துவேசம், தூஷணம், வெறி முதலியவற்றில் ஈடுபடுவது யார்?: சூத்திரன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப் பட்டுக் கொண்டவர்கள் குறிப்பிடத் தக்கது. 1973ல் ஆகஸ்ட் 8ம் தேதி, ஹண்டே சபையில் கலைஞரைப் பார்த்து, ‘யு ஆர் எ தேர்டு ரேட் சீஃப் மினிஸ்டர் [You are a third rate chief minister]’னார்[1]. திமுகவினர் கொதிச்சு எழுந்தனர். அப்பொழுது, ‘உட்காருங்க’னு சொன்ன கலைஞர், ‘ஹண்டே அவர்களே, நீங்கள் சொல்வதுபோல் இது மூன்றாம்தர அரசு அல்ல, இது நான்காம் தர ஆட்சி, ஆமாம்… பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று சொல்கிறீர்களே… அந்த நாலாந்தர சூத்திரனின் ஆட்சிதான்’ என்றார்[2]. ஆக ஜாதி ரீதியில், சாதி வெறியில் யார் அடிக்கடி தூஷணங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை கடந்த 60-70 ஆண்டு கால நாளிதழ்களைப் பிரித்துப் பார்த்தாலே உண்மை விளங்கி விடும்[3]. ஆகவே, பிராமண எதிர்ப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு என்றெல்லாம் பேசுவது நாடகமே. தமது சித்தாந்தம் பொய்த்து, முகமூடிகள் கிழிந்து விட்டதால், வேறு உருப்படியான விசயமும் இல்லாததால், இத்தகைய கூத்துகளை நடத்தி வருகிறார்கள்.

punal_2381693f

பூணூல் அறுக்கும் அரசியல், பன்றிக்கு பூணூல் போடும் நிலைக்ககு வந்துள்ளது (1969-2017): 1970லிருந்து நேற்று வரை திமுகவின் நிலை என்ன என்பது, ஏதோ மறந்து விட்டது போல பிதற்றிக் கொண்டிருக்கிறது. பூணூலை அறுக்கும் திராவிட வன்முறையை குற்றமாக, பிராமணர்கள் மீதான வெறி-தாக்குதல் என்ற உண்மையினை மறைத்து, அது ஏதோ வேடிக்கையான விசயமாக செய்திகளாக போடப்பட்டன. உண்மையில் பிராமணர்கள் பயந்ந்து தான் அடங்கி-ஒடுங்கிக் கிடந்தார்கள். சில நாட்கள் கூட வராமல் வீடுகளில் அடைந்து கிடந்தார்கள். இது 1950-70 நிலை. கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் என்ற காரணி வந்ததால், விமர்சனம் ஆரம்பித்தது. எம்.ஜி.ஆர் கணக்குக் கேட்டதில் ஓரளவிற்கு, கேட்கும் தைரியம் தமிழகத்தில் வர ஆரம்பித்தது. திராவிட ஊழல் விமர்சிக்கப் பட்டது. மதிமுக தலைவர் வைகோ, “அதிமுக ஊழலின் ஊற்று என்றால், அதன் ஊற்றுக்கண் திமுக” என்றெல்லாம் சொன்னது ஞாபகம் இல்லை போலும். கோதுமை ஊழல் முதல் 2ஜி வரை நினைத்துப் பார்க்க வேண்டும். திஹார் சிறையிலிருந்து வெளிவந்து, உலாவும் உறவுகளை கவனிக்க வேண்டும். உண்மைகளை மறைத்து நாடகமாடி, பிழைப்புத் தேடுவது கடினம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். துலுக்கரை ஆதரித்து அறிக்கை விடும் ஸ்டாலின், பன்றிகளுக்கு பூணூல் என்ற போது, தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால், விளம்பரத்திற்காக, ஸ்வாதியின் வீட்டிற்கு சென்று குசலம் விசாரித்தார். இந்த சூத்திரனும், அங்கு சென்றிருக்க வேண்டாமே?  திராவிட சித்தாந்திகள், அடிப்படைவாதிகள், வெறியர்கள், இனவாதிகள், அரசியல்வாதிகள் பார்ப்பனர்களின் விரோதி என்பது தெரிந்த விசயம் தானே, பிறகு எதற்கு முதலை கண்ணீர் வடிக்க வேண்டும்?

Sacred thread cut- 1969-2017- to pigs

பன்றிக்கு பூணூலும், பன்றி கறி சாப்பிடுகிறவர்களும், சாப்பிடாதவர்களும்[4]: கார்ட்டூனிஸ்ட் பாலா எழுதியதில் சில கருத்துகள் ஒத்துப் போவதால் அவை அப்படியே தரப்படுகின்றன: “ஃபேஸ்புக்கில் இந்த சுவர் விளம்பரம் கண்ணில் பட்டது. பன்றிக்கு இவிங்க எதுக்கு தனியா பூணூல் போட்டு போராடுறாங்க.. அதான் அவங்களே ஏற்கனவே எல்லா கோவிலிலும் வராகருக்கு (பன்றி) பூணூல் போட்டுதான் கும்பிட்டுட்டு இருக்காங்க.. எவ்வளவோ விலங்குகள் இருக்க பன்றியை ஏன் இவர்கள் பூனூல் போட தேர்வு செய்கிறார்கள்.. அதை இழிவான விலங்காக கருதுவதால்தானே.. அப்படியானால் பன்றிக்கறி சாப்பிடும் மக்களை இழிவாக கருதுகிறார்கள் என்றுதானே அர்த்தம்..பார்ப்பனர்கள் அணியும் பூணூல் மட்டும்தான் இங்கு மிகப்பெரிய பிரச்னையா[5].. தமிழகத்தில் சாதிவெறி ஆணவக் கொலைகள் என இடைநிலை சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. அதற்கு எதிராக சும்மா அடையாளப்போராட்டங்கள் நடத்திவிட்டு பார்ப்பனர்களை மட்டும் சாதிவெறியர்கள் போல் காட்டுகிறார்கள். 2009க்குப்பின் எழுந்த தமிழர் என்ற இன அடையாள அரசியலும் இந்திய தேசிய எதிர்ப்பு தமிழ்தேசம்.. போன்ற கண்ணோட்டங்களை பார்ப்பனிய எதிர்ப்பு.. திராவிடம் என்று மடை மாற்றப்பார்க்கிறார்கள். சாவின் கடைசி துடிப்பில் இருக்கும் திராவிட அரசியலுக்கு மீண்டும் பார்ப்பனியர்களை ஒற்றை எதிரிகளாக்கி உயிர் கொடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. பார்ப்பானர்கள் பார்ப்பனர் அல்லாதோரை வேசி மக்கள் என்று வெளிப்படையாக கூறியதைவிட இந்த திராவிட இயக்கத்தவர்கள் தான் அதிகம் கூறியிருக்கிறார்கள்”.

Sacred thread to pig- announcement by PDK - 07-08-2017

பார்ப்பானை பிராமணன் ஆக்குவதும்தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணுலே..”:  கார்ட்டூனிஸ்ட் பாலா எழுதியது, “கழுத.. இவங்க பூணூல் போடுறாய்ங்க.. அவிங்க அறுக்குறாய்ங்க என்னமும் பண்ணித்தொலையட்டும். ஆனால் அந்த சுவர் விளம்பரத்தில் இருக்கும் வாசகத்தில் இருக்கும் அரசியலே நான் இந்த பதிவை எழுத காரணம். அந்த விளம்பரத்தில் பாருங்கள்..“பார்ப்பானை பிராமணன் ஆக்குவதும்தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணுலே..” என்ற வரி இருக்கிறது. அந்த வரியில்தான் ஒரு சூட்சுமம் இருக்கிறது. திராவிடர் கழக கம்பெனியின் தற்போதைய ஓனர் வீரமணி, திராவிடர் தலைவர் என்று சொல்லாமல், `தமிழர் தலைவர்என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறார்.. ஆனால் தமிழர் திருநாளை திராவிடர் திருநாள் என்றுதான் வேண்டுமென்றே கொண்டாடுவார். அதேப்போல்தான் இந்த விளம்பர வாசகத்தில் இருக்கும் அரசியலும். அதாவது தமிழனை சூத்திரனாக்குவதும் பூணூலே என்கிறார்கள். இந்த பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை நடத்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் திராவிடர்கள் என்பதை வலியுறுத்தி அரசியல் செய்யும் இயக்கம். ஆக இவர்கள் பார்வையில் பூணூல் சூத்திரனாக்குவது திராவிடர்களாகதானே இருக்க வேண்டும்..”

Brahmin Sacred thread cut- 1969-2017- to pigs

பூணூல் போடாத மற்றவர் பிராமணாரா?: கார்ட்டூனிஸ்ட் பாலா எழுதியது, “எதற்கு இந்த இடத்தில் தமிழர்களை இழுக்கிறார்கள். இந்த இடத்தில் மட்டும் எப்படி திராவிடர்கள் தமிழர்கள் ஆனார்கள்.. அப்படியானால் பூணூல் போடாத தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மராட்டியர்கள் எல்லாம் பிராமணர்களா.. தமிழன் மட்டும்தான் சூத்திரனா..போராடுவது.. உட்பட இன்னபிற விசயங்களுக்கு தமிழர் என்ற அடையாளத்தையும், அதிகாரத்திற்கு வருவதற்கு திராவிடர் என்ற அடையாளத்தையும் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இது திராவிடர்களின் தந்திரமான அரசியல். முதலில் தமிழர்களா.. திராவிடர்களா என்பதுகுறித்து ஒரு தெளிவுக்கு வாங்க. மற்றபடி பூணூல் போடுவதாலோ பார்ப்பனர்கள் சொல்வதாலோ தமிழர்கள் சூத்திரர்களாக வேண்டியதில்லை. ஏனெனில் தமிழர்களுக்கு தமிழர் என்ற அடையாளம் இருக்கிறது. வேண்டுமானால் திராவிடர்கள் சூத்திரர்களாக இருந்து கொள்ளுங்கள்”. இப்படி கார்ட்டூனிஸ்ட் பாலா முடித்திருக்கிறார். சித்தாந்த ரீதியில், பன்றிகளுக்கு பூணூல் போடும் போராட்டத்தை ஆதரித்தும் எழுதியிருக்கிறார்கள்[6]. உதாரணத்திற்கு, இது கொடுக்கப்படுகிறது[7].

© வேதபிரகாஷ்

07-08-2017

Annadurai grudge against Brahmins

[1] http://www.murasoli.in/details.php?news_id=458

[2]https://thimuka.wordpress.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/

[3]  குடியரசு, விடுதலை, நாத்திகம் போன்ற நாளிதழ்களை தாராளமாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

[4] கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் எழுதியது, நிதர்சன கருத்தாக இருப்பதனால், இங்கு அப்படியே கொடுக்கப் பட்டுள்ளது.

[5] லைன்ஸ்.மீடியா, பன்றிக்கு பூணூலும்தமிழர்களின் காதில் பூ கூடை வைக்கும் திராவிடம்!, 18 Jul 2017, கார்ட்டூனிஸ்ட் பாலா 07-08-2017.

https://www.linesmedia.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

[6] கீற்று, பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றில் ஒரு மைல்கல், செ.கார்கி, வெளியிடப்பட்டது: 20 ஜூலை 2017.

[7] http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33490-2017-07-20-08-59-33

“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – நீர்த்துப் போய், இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும்!

மே 19, 2016

“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – நீர்த்துப் போய், இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும்!

பெரியாரும், ஆவியும், ஆத்மாவும்

2016 தேர்தல் நேரத்தில், அதிலும் ஓட்டளிக்கும் தேதியில், வீரமணி அதிகமாக பாதிக்கப்பட்டுவிட்டார் என்ற நிலையில், “திராவிட தமிழர்களே உஷார்! உஷார்!!” என்று தலையங்கம் எழுதியிருப்பது அவரது விரக்தியின் வெளிப்பாடு என்றே புலனாகிறது.  ஏனெனில், இத்தேர்தலில், “திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்றம் வேண்டும்” என்ற கருத்து பரவலாக வாத-விவாதங்களுக்கு உட்பட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது[1]. குறிப்பாக இளைஞர்கள் அதனை நன்றாகவே உணர்ந்து கொண்டு, திராவிட கட்சிகளின் ஆட்சியைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர்[2]. ஏன் அத்தகைய மாற்றம் தேவை என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர். மற்ற மாநிலங்கள் எல்லாம் தொழிற்துறை ரீதியில் சிறந்து முன்னேறிக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு ஏன் பின்தங்கி இருக்க வேண்டும்[3], டிவிஸ், லேலேண்ட், அமல்கமேஷன்ஸ் போன்ற குழுமங்களைத் தவிர[4] ஏன் மற்ற குழுமங்கள் கடந்த 50-100 ஆண்டுகளில் சிறக்கவில்ல, வெறும் சினிமா மற்றும் சினிமா சார்ந்த துறைகளில் மட்டும் சிறந்த, மற்றவற்றை பின்தள்ளிய நிலை என்ன போன்ற கேள்விகள் இளைஞர்களின் மனங்களில் எழுகின்றன. அந்நிலையில் அந்த தலையங்கம், அலச வேண்டியுள்ளது. அத்தலையங்கம் ஐந்து பத்திகளாக சேர்த்து, அங்கங்கு, அருகில் கட்டத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. கடைசியில், முடிவாக கருத்து கொடுக்கப்பட்டுள்ளது.

nedunchezhiyan_karunanidhi_mgr-eating-together

nedunchezhiyan_karunanidhi_mgr-eating-together

 1. திராவிட தமிழர்களே[5] உஷார்! உஷார்!![6]: இப்பொழுதெல்லாம் திராவிட இயக்கத்தைப்பற்றி குறை கூறுவது என்பது ஒரு வகையான ஃபேஷனாகப் போய் விட்டது.
1967 முதல் திமுகவும் அ.இ.அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில், இதில் மாற்றம் ஏதாவது நடக்க வேண்டுமானால் திராவிட இயக்கத்தைப்பற்றி ஏதாவது குறை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் – விரக்தியின் காரணமாகவும் இது இருக்கிறது. ஊடகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களின் கைகளில் சிக்குண்டு கிடப்பதால், திராவிட இயக்க எதிர்ப்பு செய்திகளையும் திராவிட இயக்கம் பற்றி கொச்சைப்படுத்தி எழுதுவோர்களையும் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்துவது பார்ப்பனீயத்துக்கே உரிய ‘கல்யாண திருக்குணங்களாகும்.

திராவிட ஆட்சியின் மோசடிகள், ஊழல், சீரழிவு மக்களுக்குத் தெரிந்து விட்டதால் தான், அத்தகைய கருத்து வலுவடைந்துள்ளது. வெறும் மேடைப்பேச்சால் மட்டும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. ஊடகங்களையும் திராவிட முதலாளிகள் கைகளில் சென்றாதால் தான், இலவச டிவி போன்ற திட்டங்கள் ஆரம்பம் ஆகின. ஏனெனில், நிறையபேர் டிவி-மோகத்தில் வீழ்ந்தால், லாபம் திராவிட முதலாளிக்களுக்குத்தான் என்பது தெரிந்த விசயம்[7]. தங்களது ஊடக ஆதிக்கத்தையும் மீறி அத்தகைய கருத்து வெளிப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

அதுவும் பிஜேபி சங்பரிவாரங்கள் தமிழ் மண்ணில் கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களின் சித்தாந்தமும், திராவிட இயக்கமும்தான் என்கிறபோது, அந்த இந்துத்துவா அமைப்பு இங்கு காலூன்ற வேண்டுமானால்  திராவிட இயக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரமும், செயல்பாடும் தவிர்க்க முடியாததாகி விட்டன.

krishna_tn_denigration[1]

கரு-கிருஷ்ணன், ஸ்டாலின்-அர்ஜுனன்!

 1. பிஜேபியும், சங்பரிவாரமும் தமிழ் மண்ணில் பரவ முடியாமல் போனதற்கு திராவிட இயக்கம் தான் காரணம்[8]: மோடி, ராஜ்நாத்சிங், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் குழுப் பாடலாக சுருதிப் பேதம் இல்லாமல் பாடுவதையும் கேட்க முடிகிறது.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பிஜேபியும், சங்பரிவாரமும் தமிழ் மண்ணில் பரவ முடியாமல் செய்த இந்த ஒரே ஒரு காரணம்கூட போதுமானது. திராவிட இயக்கத்தின் சாதனைக்கு!  தமிழ்த் தேசியவாதிகளாக இருந்தாலும் சரி, பதவி மேக நோய்கள் படர்ந்து சொரிந்து கொண்டவர்களாக இருந்தாலும் சரி, திராவிடர்கழகம் மற்றும் தி.மு.க. மீது பழி சுமத்திப் பிரச்சாரம், செய்வது யாருக்குப் பயன்படப் போகிறது என்பதுதான் மிக முக்கியம்?

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று ஆரம்பித்ததே, திராவிட சித்தாந்திகள் தாம். இதெல்லாம் அந்த இந்தி பேசும் அரசியல்வாதிகளுக்குத் தெரியாது. இந்துவிரோத நாத்திகத்தால் தான் திராவிடகட்சிகளின் முகமூடி கிழிந்து, அது “ஆதிபராசக்தி” போன்ற இயக்கங்களில் வெளிப்பட்டு, இன்று, வெளிப்படையாக, பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் என்று மாறிவிட்டது. இதனால் தான், திராவிட நாத்திகர்கள் அலறுகிறார்கள்.

பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தைத் தந்தை பெரியார் தொடங்கிப் பாடுபட்டதன் பலனை பார்ப்பனர் அல்லாதார் இன்று அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

 1. பிராமண எதிர்ப்பும், வேலை வாய்ப்பும்: அடி மட்டத்தில் அழுத்தி நொறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கல்வியும், வேலை வாய்ப்பும் செழித்துக் குலுங்குகிறது என்றால் அந்தப் பார்ப்பன எதிர்ப்பின் விளைச்சலால்தான்[9].
பார்ப்பன எதிர்ப்பு என்பதே எனக்கு ஏ.பி.சி.டி.யாக இருந்தது என்று தந்தை பெரியார் அவர்களே கூறி இருப்பது கவனிக்கத்தக்கதாகும். இத்திசையில் பார்ப்பனர் அல்லாதார் – தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் சிறுபான்மையினர் பயணிக்க வேண்டிய தூரம் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

வேலை விசயங்களில் இப்பொழுது பார்ப்பனர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்பது தெரிந்த விசயமாகி விட்டது. மற்ற ஜாதியினர் தான் முன்னுக்கு வந்துள்ளனர், இதனால், “இடவொதிக்கீட்டில்” தளர்ந்தவர்கள், பிந்தள்ளப்பட்டுள்ளார்கள். இன்றைய போட்டி-உலகத்தில், அவரவர் ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இன்னும் சொல்லப் போனால் 1928லேயே இடஒதுக்கீட்டை முதன் முதலில் செயல்படுத்தியது திராவிடர் இயக்கம்தான் – இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்ததும் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான்[10].

 1. வீரமணி சாதனை என்ற தம்பட்டம்: மத்திய அரசுத் துறைகளில் கல்வி வேலை வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்திட மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகமும் – அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு வீரமணி அவர்களும்தான்.
இன்றைக்கு அந்த இடஒதுக்கீட்டைக் கொல்லைப்புற வழியில் நுழைந்து தகர்த்திட பல்வேறு சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டு வருகின்றன. அதனுடைய சமீபத்திய நச்சுக் கொடுக்குதான் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பதாகும்.

இப்படி சுய-தம்பட்டம் அடித்துக் கொள்வதில் எந்த் பிரயோஜனமும் இல்லை. “பெரியார்” பெயரில் இயங்கிவரும், வீரமணியின் கல்வி நிறுவனங்களிலேயே, இவர் வெறுக்கும் ஜாதியினர் தான் பணம் கொடுத்து சேர்ந்துள்ளனர். இவர் ஒன்றும், இலவசமாக “திராவிடர்களுக்கு” சீட கொடுத்து படிக்கவைக்கவில்லை.

இந்த வகையில்கூட இந்தியாவிலேயே நுழைவுத் தேர்வை சட்டப்படி ஒழித்ததும் தமிழநாடுதான் – கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிதான்.

பெரியார் முஸ்லிம்

 1. அப்பழுக்கற்ற தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் காரணம்: சமூக சீர்திருத்த திசையில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டியாக இருப்பது தமிழ்நாடு என்பது வரையறுக்கப்பட்ட தெளிந்த உண்மையாகும்.
அந்த சீர்திருத்தத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதற்கு யார் காரணம்? எந்த இயக்கம் காரணம்? அழுக்காறற்ற[11] முறையில் அறிவைத் தங்கு தடையின்றிச் செலுத்துவோர் யாராக இருந்தாலும் அதற்கான காரணம் அப்பழுக்கற்ற தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் என்று எடுத்த எடுப்பிலேயே கூறி விடுவர்.

அழுக்காறற்ற முறையில், அப்பழுக்கற்ற……போன்ற அடைமொழிகள் ஏன் தேவைப்படுகின்றன என்று உபயோகித்த வீரமணியே யோசிக்க வேண்டும். தனக்குத்தானே, யாரும் தர-நிர்ணயம் செய்து “அக்-மார்க்” முத்திரை குத்திக் கொள்ளமாட்டார்கள், அழுக்காறற்ற …….. அப்பழுக்கற்ற……போன்ற சான்றிதழ்களையும் கொடுத்துக் கொள்ளமாட்டார்கள்..

தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்களே அவற்றின்மீது புழுதி வாரித் தூற்றுவது என்பது வெட்கக் கேடானதாகும்.

தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்களே அவற்றின்மீது புழுதி வாரித் தூற்றுவது என்பது வெட்கக் கேடானதாகும்: இந்த கடைசி வாக்கியம், வீரமணியை முழுவதுமாக தோலுருத்திக் காட்டுகிறது. பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் என்று ஆரம்பித்து, பிறகு “தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள்” என்று முடித்திருப்பதிலிருந்தே, “பழி ஓரிடம், பாவம் வேறிடம்” என்றுள்ளது என்றும் தெரிகிறது. ஏனெனில், பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் முதலியோரை “தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள்” என்றால், சிரிப்பார்கள்! இதில் பல கேள்விகள் எழுகின்றன:

 1. தந்தை பெரியாரால் பயன் பெற்றவர்கள் யார்?
 2. திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள் யார்?
 3. அவர்கள் ஏன் பெரியார் மீது புழுதி வாரித் தூற்ற வேண்டும்?
 4. அவர்கள் ஏன் திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரித் தூற்ற வேண்டும்?
 5. புழுதி வாரித் தூற்ற வேண்டிய நிலை என்ன?
 6. இப்பொழுது ஏன் அந்நிலை உருவாகியுள்ளது?
 7. உண்மையிலேயே பலன் பெற்றார்களா இல்லையா?
 8. பயன்பெற்றது போதவில்லையா அல்லது அதில் பாரபட்சம் இருந்ததா?
 9. வீரமணி அதனை எப்படி அந்நிலையை இப்பொழுது அறிந்து கொண்டார்?
 10. வீரமணியிடத்திலிருந்து இந்த ஒப்பாரி ஏன் வெளிவர வேண்டும்?

© வேதபிரகாஷ்

19-05-2016

[1] பாமக வெளிப்படையாகவே திராவிட கட்சிகள் ஒழிக்கப்படவேண்டும், மாற்று வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றது.

[2]  தினத்தந்தி போன்ற ஊடகங்களில் வாத-விவாதங்களும் நடத்தப்பட்டன. மக்கள் அவற்றை உன்னிப்பாக கவனித்துள்ளனர்.

[3]  பன்னாட்டு கம்பெனிகள், திராவிடகட்சிகளின் ஊழல் மற்றும் இதர அச்சுருத்தல்கள் காரணங்களினால், விலகி, மற்ற மாநிலங்களில் தங்களது தொழிலைத் தொடங்கினார்கள்.

[4] இவையெல்லாம் “பார்ப்பன” நிறுவனங்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அப்படியென்றால், மற்றவர்களின் நிறுவனங்கள் ஏன் அவ்வாறு அடையாளம் காணப்படவில்லை என்று விளக்கப்படவில்லை. செட்டியார்கள், ரெட்டியார்கள், முதலியார்கள், கவுண்டர்கள் கூட அத்தகைய நிறுவனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்த விசயமே.

[5] திராவிட சித்தாந்தத்தை ஆரம்பத்திலிருந்தே, மற்ற தென்னிந்திய மாநிலங்கள் ஒப்புக் கொள்ளாததால், “திராவிடஸ்தான்”, தமிழகத்தில் சுருங்கி, மறைந்து விட்டது.

[6] கே. வீரமணி, திராவிட தமிழர்களே உஷார்! உஷார்!!, விடுதலை, தலையங்கம்,, பக்கம்.2, திங்கள், 16-05-2016.

[7]  சன்-டிவி, ஜெயா-டிவி, ராஜ்-டிவி, விஜய்-டிவி, மக்கள் டிவி, என்றுள்ள நிறுவனங்கள் பார்ப்பன நிறுவனங்கள் அல்ல. பச்சையான திராவிடர்களின் நிறுவனங்கள் என்பது தெரிந்த விசயமே.

[8] http://viduthalai.in/page-2/122256.html

[9] அப்படியென்றால், திராவிட முதலாளிகள் நடத்தும் “பார்ப்பனர்-அல்லாத” நிறுவனங்களில் ஏன் இந்த அடக்கப்பட்டோர், நொறுக்கப்பட்டோர், முதலியோர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.

[10]  இத்தகைய திரிபு விளக்கம் முதலியவற்றைக் கொடுப்பதில் இவர்களுக்கு ஈடானவர்கள் இவர்களே தான். அம்பேத்கர் இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.

[11] இத்தனை அசுத்தங்கள் “அழுக்காறு, அப்பழுக்கு…..” உள்ளன என்றால், அவற்றை முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

மோடியிடம் கருணாநிதி கேட்பது என்ன? கூட்டத்தை அனுப்புவதென்ன?

செப்ரெம்பர் 7, 2010

மோடியிடம் கருணாநிதி கேட்பது என்ன? கூட்டத்தை அனுப்புவதென்ன?

ராஜராஜனைக் கண்டால் பிடிக்காது இந்த திராவிட சித்தாந்திகளுக்கு!

ஏனென்றால், அவன் பார்ப்பனர்களை ஆதரித்தானாம்!

மோடி சென்னைக்கு வந்தால் கருப்புக் கொடி ஆர்பாட்டங்கள்!

கருணாநிதி கண்டுகொள்வெதே இல்லை!

பிறகு இப்பொழுதென்ன மோடியிடம் கூட்டத்தோடு செல்வது?

ராஜ ராஜ சோழன் சிலையை மீட்க நரேந்திர மோடியிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை முதலாம் ராஜ ராஜ சோழன் கட்டினார்.  இந்த கோவில் கட்டி 1000 ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வருகிற 25-ம் தேதி விழா எடுக்கப்படுகிறது.

திராவிடர்களுக்கு கோவில்களின் மீது பற்றுதலே இல்லையே? ஔரங்கசீப், மாலிக்காஃபூர் மாதிரி கோவில்களை இடித்தும் கொள்ளையெடுத்தும் தானே வந்துள்ளார்கள்? கோவில் நிலங்களையே விற்றும் உள்ளார்களே?அந்நிலையில் இப்பொழுதென்ன ராஜராஜனின் மீது திடீரென்று பாசம்? இவர்கள் என்ன தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகங்களை, இனிமேல் என்ன காத்துவிடப் போகிறார்கள்?

இந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். 1000-வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகை யில் கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ராஜ ராஜ சோழன் காலத்து 7 சிலைகளில் 5 சிலைகள் தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ளது. 2 வெண்கல சிலைகள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதலாம் ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையும் ராணி சிலையும் இருப்பதாக தகவல் வெளியானது. தனியாருக்கு சொந்தமான காளிகோ அருங்காட்சியத்தில் சிலை இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து சிலையை மீட்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலமைச்சர் கருணாநிதி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். நல்லிணக்க அடிப்படையில் அந்த சிலையை குஜராத் அரசு அன்பளிப்பாக தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக குஜராத் முதல்வர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார்.  தஞ்சை பெரிய கோவில் 1,000-ம் ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில் முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி ராணி சிலையை அங்கு இருந்தால் சிறப்பாக இருக்கும். அதனால் சிலையை வழங்கி உதவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

திமுக ஆதரவு பார்ப்பன எஸ்.வி.சேகர் நித்யானந்தாவை சந்தித்த மர்மம் என்ன?

ஓகஸ்ட் 7, 2010

திமுக ஆதரவு பார்ப்பன எஸ்.வி.சேகர் நித்யானந்தாவை சந்தித்த மர்மம் என்ன?

நித்தியானந்தாவை வீட்டுக்கு அழைத்த எஸ்.வி. சேகர்!

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5, 2010,

http://thatstamil.oneindia.in/news/2010/08/05/s-ve-shekher-meets-nithyananda.html

சென்னை: நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, போலீஸில் சிக்கி, 50 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வந்துள்ள நித்யானந்தாவை பெங்களூரில் உள்ள பிடுதி ஆசிரமத்தில் நடிகரும், திமுக ஆதரவு எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி. சேகர் சந்தித்துப் பேசியுள்ளார். இதன் மர்மம் என்னவென்பது தெரியவில்லை!

எஸ்.வி.சேகர்-நித்யானந்தா

எஸ்.வி.சேகர்-நித்யானந்தா

விடுதலையான நித்யானந்ததவை நடிகைகள் சந்திக்கின்றனராம்: கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா செக்ஸ் உறவு கொள்ளும் காட்சி வெளியானது. அந்தக் காட்சிகள் உண்மை என்றும் நிரூபணமாகின. இதைத் தொடர்ந்து போலீஸுக்குப் பயந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை இமாசல பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வழக்கம் போல தனது உபதேசத்தையும் ஆரம்பித்துவிட்டார். அவரை நடிகை மாளவிகா உள்பட ஏராளமான பெண்கள் இப்போது பார்த்து வருகின்றனர்.

களை கட்டும் ஆசிரமம்! இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்யானந்தாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது தனது ஆதரவை அவருக்கு தெரிவித்தார். மேலும் தொண்டை வலியால் அவதிப்பட்ட எஸ்.வி. சேகருக்கு நித்தியானந்தா ஹீலிங் தெரபி சிகிச்சை அளித்தாராம். இதில் அவர் குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகரிடம் கூறியதாவது: நித்யானந்தா சாமிகளை கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எனது நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களை விட அவர்கள் மனவருத்தத்தில் இருக்கும் சமயங்களில் சென்று பார்த்து ஆறுதல் கூறுவது எனது வழக்கம். அந்த அடிப்படையில் நித்யானந்தாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். தற்போதுள்ள பிரச்சினைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அவரிடம் கூறினேன்.

லெனின் போன்றவர்களை சீடர்களாக எற்றுக்கொண்டதுதான் செய்த தவறு: லெனின் போன்றவர்களை உங்கள் சீடர்களாக எற்றுக்கொண்டதுதான் நீங்கள் செய்த தவறு என்ற அவரிடம் கூறினேன். எல்லாவற்றையும், சிரித்த முகத்துடன் பொறுமையாக கேட்டுக் கொண்ட நித்யானந்தா, ‘சுமார் 200 நாடுகளில் ஆசிரமம் கிளைகள் உள்ளன. எந்தவொரு சீடரும் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை. கடந்த வாரம் நான் நடத்திய பூஜையில் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக வரும் கூட்டத்தைவிட இது 2 மடங்கு அதிகமாகும்’என்றார். நித்யானந்தாவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. எனவே வழக்கில் இருந்து நித்யானந்தா மீண்டும் வருவார்…” என்றார்.

ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர்: ‘ரஞ்சிதாவுடன் உள்ள தொடர்பு குறித்து நித்யானந்தாவுடன் பேசினீர்களா?’, என்று கேட்டதற்கு, “கேட்டேன். அதற்கு அவர், ‘அந்த பெண்ணே மீது புகார் கொடுக்கவில்லை. இதற்கு மேல் அதில் சொல்ல என்ன இருக்கிறது’ என்று கூறிவிட்டார்” என்றார் எஸ்வி சேகர். ‘சரி… ஆன்மீகவாதியான நித்யானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது சரியா? இதை ஆதரிக்கிறீர்களா?” என்றதற்கு, “இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர். இதற்கு மேல் இந்த விஷயத்தில் நான் ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை.

ஆபாச படம் பிடித்த லெனினை ஏன் விட்டுவிட்டனர்? அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?” என்றார்.

நித்தியானந்தா சென்னைக்கு வராமல் தவிர்ப்பது ஏன்? இங்கு வருவதற்கு பயப்படுகிறாரா?, என்று கேட்டபோது, “தமிழ்நாட்டுக்கு அவர் வரவில்லை என்று கூற முடியாது. சென்னையில் உள்ள பக்தர்கள் வீடுகளுக்கு வந்து தற்போது ஆசி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார். வெளிப்படையாக விழாக்களில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வருகிறார். விரைவில் அதுவும் நடக்கும். எனது வீட்டுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன். நித்யானந்தாவும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.

கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக உள்ளது: பொதுவாக தமிழ்நாட்டில் கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக உள்ளது. நித்யானந்தா மீதான கோபத்தில் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்து படித்து வந்த 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது…” என்றார் எஸ்வி சேகர்.