Posts Tagged ‘பெரியார்’

பெரியாரும், இஸ்லாமும் – கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (2)

ஒக்ரோபர் 27, 2021

பெரியாரும், இஸ்லாமும்கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (2)

ஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929)[1]. ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை[2]. ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[3].

பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் முதலியன[4]: ஆனைமுத்து, விடுதலை ராஜேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, முதலியோர்களின் தொகுப்புகள் மற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தின் வெளியீடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு[5], தமக்கு வேண்டியவற்றைத் தொகுத்து, பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் என்றெல்லாம் எழுதுகிறார்கள், ஆனால், அவற்றை சரிபார்த்து, உண்மையறிந்து, மெய்யாகவே மறுபக்கம் அலசி, ஆராய்ந்து அவர்கள் எழுதுவது இல்லை[6]. அரசியல், பரிந்துரை, ஆதாயம், அதிகாரம் என்றெல்லாம் உள்ளதால், பரஸ்பர ரீதியில் அத்தகைய வெளியீடுகள், ஆதரவாளர்களிடம் பிரபலமாகி சுற்றில் இருக்கின்றன. ஆனால், 1940-80களில் திராவிடத் தலைவர்களின் பேச்சுகளை நேரில் கேட்டவர்களுக்கு, அவர்கள் பேசியதற்கும், இப்பொழுது தொகுப்பு புத்தகங்களில் இருப்பவற்றிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகளை காணலாம். எந்த அளவுக்கு ஒட்ட்யும், வெட்டியும், மாற்றியமைத்து, அவை வெளியிடப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இங்கும்-அங்கும் உள்ளவற்றை எடுத்தாண்டு, தொகுத்து எழுதியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து ஆராய்ச்சிக்கு வர வேண்டும்.

பிரச்சாரம் கட்டுக்கதைகள் ஆராய்ச்சி ஆகாது: இவ்வாறு, துலுக்கர் அடிக்கடி, புதிய கதைகளை உருவாக்கி, பிரபலமடையச் செய்து, பரப்பி வருவதில், பெரிய விற்பன்னர்கள் எனலாம். இப்பொழுது, இன்னொரு கதையைக் கிளப்பி விடுகிறார்கள் போலும். இந்துத்டுவ வாதிகள், முக்கியமாக, ஆவணங்களை சரிபார்த்து ஆராய்ச்சி செய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஏதோ, ஒருபக்கமாக ஒரு சாரார் பேசியதாக அச்சில் வந்துள்ளவை என்றெல்லாம் வைத்து, முடிவுக்கு வருவது, தொடரும் போக்கு தெரிகிறது. “தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,” என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று இப்பொழுது, இத்தகைய விசயங்கள் வெளிவருவது விசித்திரமாக இருக்கிறது..“முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று / போன்று பிதற்றினாரா?,” என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆன்மா இல்லை, ஆவி இல்லை …..என்றெல்லாம் பேசி, கிண்டலடித்து வந்த பெரியார், பெரிய சித்தர் என்றெல்லாம் சிலர் போற்றி வந்த நிலையில், அவர் அழுதார், அரற்றினார், உடன் இறக்க முயன்றார்… என்று செய்தி உருவானது திகைப்பாக இருக்கிறது. மூலம் / உண்மை ஒன்று என்றால், சமீபத்தை நிகழ்வுகள் பற்றி ஒன்றிற்கு மேலான விவரங்கள் வருவது சிந்திக்க வேண்டிய பொருளாக மாறுகிறது.

ஜின்னாபெரியார்அம்பேத்கர் சந்திப்புகள், கடிதங்கள் இந்த கட்டுக் கதைகளை கிழிக்கின்றன: இவர்கள் எல்லாம் ஒன்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இறக்கவில்லை. 70-80 ஆண்டுகள் முன்னர் இருந்தவர்கள், சென்னைக்கு வந்துள்ளனர். பலர் பார்த்திருக்கின்றனர், அவர்கள் பேசியதைக் கேட்டிருக்கின்றனர். இன்றைய 60-70-80 வயதானவர்களுக்கு விசயங்கள் தெரியும். முன்பு “தி மெயில்,” “சென்டினல்” போன்ற நாளிதழ்களில் வந்துள்ளன. இப்பொழுது, திராவிடத்துவவாதிகள், முஸ்லிம்கள், பெரியாரிஸ்டுகள் மறைத்தாலும், ஜின்னா கடிதங்கள் ஈவேராவைத் தோலுருத்திக் காட்டுகிறது. அம்பேத்கர் எப்படி ஈவேராவை பௌத்தம்மாறுவதற்கு எதிர்த்தாரோ, அதேபோல ஜின்னா இவரை பொருட்படுத்தியதே இல்லை. 1948ற்குப் பின்னர், இவர் பல தமாஷாக்களை (பிள்ளையார் சிலைகள் உடைத்தது. ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டது, இந்து விரோதம் செய்தது) செய்திருக்கிறார். இதனை, திமுக ஊக்குவித்து வந்தது. அம்பேத்கரை 1970கள் வரை தமிழகத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. பிறகு தான் அம்பேத்கர் சிலைகள் தோன்ற ஆரம்பித்தன. அதே போல, பெரியார் இறந்த பிறகு, 1970களில் ஊதி பெரிதாக்கப் பட்டார்.  ஆனால், முத்துராமலிங்க தேவர், மபொசி, கண்ணதாசன் முதலியோர் பேசியது, எழுதியது மறைக்கப் படுகின்றன.

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் இத்தகைய கட்டுக் கதைகளைப் பரப்புவது ஆபத்தானது: பச்சையப்பன் கல்லூரியில் திராவிட இயக்கத்தைப் பற்றி பலர் அரைத்த மாவையே அரைத்து பேசினர். அத்தொடர் சொற்பொழிவுகளக் கூர்ந்து கேட்கும் போது, அரசியல் செய்ததைத் தவிர வேறொதுவும் தெரியவில்லை. திராவிடத்துவத்தில் ஊறிய-நாறிய அவர்களால் வேறெதையும் பேச முடியவில்லை. ஏ.ஆர். வெங்கடசாலபதி போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை வைத்துக் கூட விவரிக்க முடியாது. ஆகவே, ஏதோ நடத்த வேண்டுமே என்ற போக்கில் நடத்துவது, ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது, முகஸ்துதி செய்தது, கேள்விகள் கேட்கக் கூடாது, விவாதிக்கக் கூடாது என்று இவ்வாறு கூட்டங்கள் நடத்துவது பிரயோஜனம் அல்லாதது மற்றும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றின் தரத்தையே கேலிக் கூத்தாக்கி விடும்.  இதனால் தான், மற்றவர்கள் திராவிடர்கள், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு அரசியல் செய்து கொண்டுவருபவர்களை மற்றவர்கள் கண்டு கொள்வதில்லை.

© வேதபிரகாஷ்

27-10-2021


[1]  வேதபிரகாஷ், 19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாராபெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!, 02-04-2016.

[2]https://dravidianatheism.wordpress.com/2016/04/02/islamization-of-dravidian-movement-by-making-periyar-a-mohammedan/

[3] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013, http://bushracare.blogspot.in/2013/09/5.html

[4] வேதபிரகாஷ், முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1], 07-02-2021.

[5] பெரும்பாலும், இத்துகுப்புகள்,  இப்பொழுது, இவை இணைதளங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவையெல்லாம், “கிரிடிகல் எடிஷன் பதிப்பு” போன்றவை இல்லை.

[6] ம.வெங்கடேசன், க. சுப்பு போன்ற வலதுசாரி, இந்துத்துவ எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகங்கள். இப்பொழுது இந்துத்துவவாதிகள் பெரியாரிஸத்தை ஆதரிப்பதால், இதைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.

பெரியாரும், இஸ்லாமும் – கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (1)

ஒக்ரோபர் 27, 2021

பெரியாரும், இஸ்லாமும்கட்டுக் கதை உருவாக்கம், உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம், பல்கலைக் கழகங்களில் பரப்புவது ஆபத்தானது (1)

பெரியாரும், இஸ்லாமும் சொற்பொழிவு: திமுகவின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெரியாரைத் தூக்கிப் பிடித்து, பெரிய சிலை வைக்கிறோம் என்றெல்லாம் திராவிடத்துவாதிகள் கிளம்பி விட்டனர். இந்நிலையில், மனோன்மணியம் பல்கலைகழகத்தில் ‘பெரியாரும் இஸ்லாமும்’ சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்[1]. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் சமூக விலக்கல் மற்றும் ஆட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்துடன் இணைந்து ‘பெரியாரும் இஸ்லாமும்’ என்ற தலைப்பில் அக்டோபர் 27 அன்று பகுத்தறிவு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது[2]. இதில் புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அகமது சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சொற்பொழிவாற்ற இருந்த நிலையில், இந்து முன்னணியினர் திடீரென இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து முன்னணி மிரட்டல், ‘பல்கலைக் கழகமா அல்லது திராவிடர் கழகமா’ என கேள்வியெழுப்பி, பல்வேறு விமர்சனங்களை இந்து முன்னணியினர் முன்வைத்தனர். இந்து முன்னணியின் மிரட்டல் காரணமாக மேற்கண்ட சொற்பழிவு நிகழ்ச்சியை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தயக்கம் காட்டியது தெரியவந்தது.

உதயகுமார் கண்டனம்: இதுகுறித்து துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்டபோது, சில பாதிப்புகள் ஏற்படும் என்பதால் நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும், நடத்த வேண்டாம் என்பது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என 24-10-2021 அன்று தெரிவித்திருந்தார். இருப்பினும் தமிழ்நாடு அரசால் சமூகநீதி நாள் கடைபிடிக்கப்படும் ஒரு தலைவரின் பெயரில் நிகழ்ச்சி நடத்த பல்கலை நிர்வாகம் அஞ்சியது, சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப உதயகுமார்[3], “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர் கழக அலுவலகமா? ஐஎஸ் பயிற்சி கூடாரமா? என்றெல்லாம் உருட்டி மிரட்டி, ஓர் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தடுக்க முயலும் இந்து முன்னணி பாசிஸ்டுகளை வன்மையாக கண்டிப்போம்! பல்கலைக்கழக நிர்வாகமே முதுகெலும்புடன் செயல்படு!” என்று பதிவிட்டிருந்தார்[4].

இந்து முன்னணி எதிர்ப்பு, போலீஸ் காவல்: இதுகுறித்து ஈடிவி பாரத் தளத்தில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக தற்போது இந்து முன்னணியின் மிரட்டலுக்கு அஞ்சாமல் ‘பெரியாரும் இஸ்லாமும்’ தொடர்பான சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்த துணைவேந்தர் பிச்சுமணி சமூகவியல் துறைக்கு அனுமதி அளித்துள்ளார். இதனிடையே சொற்பொழிவு நடத்தினால் அக்டோபர் 27ஆம் தேதி காவிகள் நாம் பல்கலைக்கழகத்தில் அணி திரள்வோம் என இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. எனவே, அன்றைய தினம் பல்கலைக்கழகத்தில் காவல் பாதுகாப்பு கோருவது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர். அதன்படி, போலீஸ் பாதுகாப்பு கோரப் பட்டது.

இந்து முன்னணி சமூகவளைத் தள எதிர்ப்பு: இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர் கழக அலுவலகமா? ஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி கூடாரமா? புரியவில்லை. ‘பெரியார், சாமுவேல் ஆசீர்ராஜ், ரியாஸ் அகமது’ என்னவிதமான கூட்டணி. கல்வி நிலையத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சியா?மனோன்மணியம் பல்கலைக்கழகம்நிகழ்ச்சி குறித்த போஸ்டர் அக்டோபர் 27 ம் தேதி காவிகள் நாம் அணி திரள்வோம். என்ன பேசுகிறார்கள் என பார்ப்போம். கடவுள் மறுப்பு, இஸ்லாத்தின் சமூகநீதி என அனைத்திற்கும் எதிர் கேள்வி மற்றும் விளக்கம் கேட்போம்” எனத் தெரிவித்திருந்தனர்.

27-10-2021 அன்றுபெரியாரும் இஸ்லாத்தும்பெயரிலான கருத்தரங்கு நடைபெற்றது: இந்த நிலையில் திட்டமிட்டபடி பல்கலைக்கழக அரங்கில் “பெரியாரும் இஸ்லாத்தும்” பெயரிலான கருத்தரங்கு நடைபெற்றது[5]. இதில் துறை சார்ந்த மாணவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்[6]. பல்கலைக்கழக வாசலில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி முடியும் வரை வெளியாட்களை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய அதே நேரத்தில் பல்கலைக்கழகத்திற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்ததாக தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து காவல் அதிகாரி பல்கலைக்கழக துணைவேந்தரை செல்போனில் தொடர்பு கொண்டு அனுமதிக்கலாமா எனக்கேட்டார். அதற்கு அவர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மாணவர்கள் மட்டுமே அனுமதி என்பதால் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என்று மறுத்து விட்டார்.

ரியாஸ் அகமது பேசியது: வழக்கம் போல, ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தான் எடுத்துக் காட்டி பேசியுள்ளது, ஒரு பிரச்சாரம் என்று வெளிப்பட்டது. 2021 பிப்ரவரியில், மணிச்சுடரில்[7], “1972ம் ஆண்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலமானபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தந்தை பெரியோர் கதறி அழுத சம்பவம் நம் நெஞ்சங்களை உருகச் செய்யும். ஆம். இமைய மலை போல் எதற்கும் அசையாத் நெஞ்சுரம் கொண்ட தமிழர் தந்தை பெரியார் அவர்கள், காயிதேமில்லத் அவர்களின் மறைவு சற்று நிலை குலையச் செய்தது. “தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,” என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று வெளி வந்தது. முன்பு, பெரியார்தாசன் / அப்துல்லாஹ் இத்தகைய கட்டுக் கதையை விட்டுப் பார்த்தார், எடுபடவில்லை. புஷ்ரா நல அறக்கட்டளையும் 2013ல் முயன்றது, யாரும் கண்டு கொள்ளவில்லை.

பெரியார் துலுக்கர் ஆனாரா?- முகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[8]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்[9]. “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார்[10]. இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[11]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[12]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

27-10-2021


[1] இ.டிவி.பாரத், இந்து முன்னணி எதிர்ப்பை மீறிபெரியாரும் இஸ்லாமும்நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு, Published on: Oct 25, 2021, 4:19 PM IST; Updated on: Oct 25, 2021, 5:16 PM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/etv-bharat-story-impact-nellai-ms-university-approved-periyarum-islamum-program/tamil-nadu20211025161918390

[3] இ.டிவி.பாரத், மனோன்மணியம் பல்கலைக்கழகமே முதுகெலும்புடன் செயல்படு! – சு.. உதயகுமார், Published on: Oct 24, 2021, 10:58 PM IST; Updated on: Oct 24, 2021, 11:07 PM IST

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/periyarum-islamum-function-to-be-hold-by-nellai-manonmaniam-university/tamil-nadu20211024225831363

[5] மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன் இந்து முன்னணி போராட்டம், By M.Ganapathi, Reporter 27 Oct 2021 1:51 PM

[6] https://www.instanews.city/tamil-nadu/tirunelveli/tirunelveli/manonmaniyam-sundaranagar-university-hindu-munnani-protest-1060843

[7] மணிச்சுடர், தந்தை பெரியாரின் தம்பி காயிதே மில்லத், பிப்ரவரி 6, 2021, பக்கம்.4

[8] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[9] வேதபிரகாஷ், நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!, 02-04-2016.

[10]  https://dravidianatheism.wordpress.com/2016/04/02/converting-periyar-to-islam-falsification-of-recent-history-by-muslims/

[11]  https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[12] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

பெரியார் உலகம் பெயரில் சுற்றுலா தலம்-வணிக வளாகம் அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! சரித்திரத்தை மறைக்கும் போக்கு! (3)

செப்ரெம்பர் 22, 2021

பெரியார் உலகம் பெயரில் சுற்றுலா தலம்-வணிக வளாகம் அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! சரித்திரத்தை மறைக்கும் போக்கு! (3)

ஈவேராவின் இந்துவிரோதமும், பெரியாரின் ஆபாச ஊர்வலமும்: இந்த உண்மைகளும் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை, தெரிவதில்லை. அதனால், ஈவேரா ஏதோ பெரிய ரிஷி-முனிவர்-சீர்திருத்தவாதி என்பது போல மாயையினை உருவாக்கி வந்துள்ளனர், இன்றும் அதிகமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர் –

 1. ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தார்.
 2. அதற்காக, உச்சநீதி மன்றம் வரை வழக்கு சென்றபோது, ஆஜராகாமல் ஓடி ஒளிந்தார்.
 3. ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தினார்.
 4. முருகனைப் பற்றி ஆபாசமாக படம் வரைந்து, செருப்பால் அடிக்க வைத்தார்.
 5. ஐயப்பன் பிறப்பிப் பற்றியும் ஆபாசமாக சித்திரங்கள் வரைந்து, ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப் பட்டது.
 6. அப்பொழுது, துக்ளக்கில் அப்படங்கள் வெளியிட்ட போது, துக்ளக் இதழ்கள் வாங்கி எரிக்கப் பட்டன.
 7. அதாவது, எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை போன்றவற்றிற்கு திக-திமுக அந்த அளவுக்கு மதிப்பு கொடுத்தார்கள்.
 8. விடுதலையில், இன்றுவரை, ஒவ்வொரு இந்து பண்டிகை வரும் போது, தூஷித்து வருகிறது. அதனை பெரும்பாலானவர்களுக்குத் தெரியாமல் போகிறது. ஏனெனில், அதனை அவர்கள் வாங்கிப் படிப்பதில்லை.
 9. மேலும், அவர்களுடைய இந்துவிரோத ஆர்பாட்டங்கள், நிகழ்ச்சிகள், பெரியார் திடல் என்ற வளாகத்தில் உள்ளே இருக்கும் மண்டபத்தில் நடத்திக் கொள்கிறார்கள்.
 10. இவர்களுக்குத் தான் இன்று “இந்து” ராம், மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணு, கம்யூனிஸ்ட் இத்யாதிகள் முதலியவை வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகின்றனர்.

இப்பொழுது அமைக்கு வளாகத்தில் இவற்றை – இந்த விவரங்களை, புகைப் படங்களை, ஆதாரங்களை – தைரியமாக வைப்பார்களா?

செக்யூலரிஸ நாத்திகமும், கடவுள் மறுப்பும், விக்கிர ஆராதனை எதிர்ப்பும் இல்லாத பெரியாரிஸம், போலித்தனம்:

 1. கடவுள் மறுப்பு நம்பிக்கை, –
  1. நாத்திகம் (Atheism),
  1. ஞானத்தால் அறியும் தமையினை மறுப்பது (agnosticism), 
  1. பொதுவாக நம்பிக்கையில்லாதத் தன்மை (skepticism),
  1. ஏளனத் தனமாக அறியாமல் ஏற்றுக் கொள்ளா தன்மை (cynicism),
  1. இருக்கின்ற அமைப்புகளை எதிர்க்கும் தன்மை (rationalism)

இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டாலும், இந்த திராவிடத்துவ சித்தாந்திகள் இந்துவிரோதிகளாகத் தான் இருந்து வருகிறார்கள்.

 • கடவுள் இல்லை என்றால், எல்லா மதக் கடவுளர்களும் இல்லை, ஆனால், பெரியாருக்கு, பெரியாரிஸ்டுகளுக்கு இந்து கடவுள் மட்டும் இல்லை என்ற கொள்கையுள்ளது.
 • மற்ற மதங்களின் நூல்களை, புராணங்களை விமர்சிப்பதில்லை.
 • உண்ணும்நோன்பு, தீச்சட்டி ஏந்துதல் போன்று மற்ற மத சடங்குகளை செய்து கிண்டலடிப்பதில்லை. சிலுவையில் அறைந்து கொள்ளலாம், கத்திகளால் உடலில் கீறி காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம், சாட்டையினால் ரத்தம் வரும் வரை அடித்தும்கொள்ளலாம். ஆனால், செய்வதில்லை.
 • நாத்திக சமத்துவமாக, பிள்ளையாருடன், கிருத்துவ-துலுக்கக் கடவுள் உருவங்களை உடைக்கவில்லை.
 • மற்ற கடவுள் பிறப்புப் பற்றிய படங்களை வரையவில்லை, எந்தவித ஊர்வலமும் நடத்தவில்லை.
 • மற்ற மதங்களைப் பற்றி விமர்சிப்பதில்லை, ஆனால், அம்மத விழாக்களில் கலந்து கொண்டு, இந்துமதத்தை விமர்சித்துள்ளனர், கேலி பேசியுள்ளனர்.
 • மற்ற மதங்களுக்கு போட்டிப் போடுக் கொண்டு வாழ்த்துகள், ஆனால், இந்து மதத்திற்கு இல்லை, மாறாக தூஷணங்கள் உண்டு.
 • கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டத்திற்குச் சென்று கேக் தின்பது, துலுக்க ரம்ஜான் இஃப்தர் பார்ட்டிகளில் கஞ்சிக் குடிப்பது என்றெல்லாம் செய்து, அங்கேயே இந்து பண்டிகைகளை மோசமாக விமர்சிப்பது கருணாநிதி[1], ஸ்டாலின்[2] செய்து வந்தது தெரிந்த விசயமே.
 • இந்து பண்டிகைகளின் போது, தூஷணங்களை நேரிடையாக விடுதலை, முரசொலி நாளிதழ்களில் காணலாம், மறைமுகமாக சன் மற்றும் கலைஞர் டிவிசெனல்களில் பார்க்கலாம்.

இவற்றிலிருந்து, இவர்களின் போலித் தனமான சித்தாந்தத்தை அறிந்து-புரிந்து கொள்ளலாம்.

சிலைகள் உருவாக்கும் வியாபாரம் ஏற்கெனவே ஆரம்பித்தாகி விட்டது: ஈவேரா, அண்ணா, கருணாநிதி என்று சிலைகள் செய்து விற்க ஆரம்பித்து விட்டனர். கொலு பொம்மைகள் மாதிரி ஏற்கெனவே விற்கப் படுகின்றன. இப்பொழுது, மார்பளவு, நிற்கும் கோலம், திராவிட-மும்மூர்த்திகள், மார்பளவு, உயரமான தூண்-பீடத்துடன், கருப்பு மற்றும் தங்க முலாம் பூசியது, என்று ஒரு குறிப்பிட்ட கம்பெனி பலவிதமாக தயாரிக்கின்றனர். அவை வெவ்வேறு அளவுகளிலும், வெண்கலத்திலும் உற்பத்தி செய்கிறார்கள். நாத்திக ஆட்சியில், திராவிட கடவுள் மறுப்பு சித்தாந்தத்தில், பிள்ளையார் சிலைகள் உடைத்த ஈவேரா வழியில், அவருக்கும், உடன் பிறப்புகளுக்கு சிலைகள் தயாரிக்கின்றனர், விற்கின்றனர். இதில் ஆன்-லைன் வியாபாரம் வேறு! “திராவிட மும்மூர்த்திகள்” உருவாகி விட்டதால், இனி “ஈவேரா-நாகம்மை-மணியம்மை” என்று “பிள்ளையார்-ஶ்ரீதேவி-பூதேவி” கணக்காக சிலைகளையும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்! கருணாநிதி-பத்மாவதி-தயாளு-ராஜாத்தி ஜோடிகளும் உருவாகி விடும். இதற்கான “Iconography” (உருவமைப்பு முறை) ஏற்கெனவே உருவாகி விட்டது. ஆக, இது, “திராவிட சிற்பகலை” என்று நூல்களில் சேர்க்கப் படலாம். திராவிட வாஸ்துமுறையும் உண்டாக்கப் படலாம். அதற்கேற்ற பாடதிட்டங்களை சுப.வீரபாண்டியன், லியோனி முதலியோர் உருவாக்கத் தயாராக உள்ளார்கள். பாலகிருஷ்ணன்[3], உதயசந்திரன்[4] அவற்றை “எலைட்” லெவலில் (Elite level) எடுத்துச் செல்வார்கள். நன்றாக வியாபாரம் ஆகிறது. இனி இந்த ரூ 100 கோடி வியாபார திட்டத்தில், செலவு செய்தால் போல காண்பித்து, நன்றாகவே, வரியேய்ப்பும் நடக்கும்.

மறுப்புமறைப்பு முறை சித்தாதம் (Negationism) கடைபிடிப்பது சரியில்லை: சமீபகால சரித்திரத்தில் மறுப்பு-மறைப்பு முறை சித்தாதம் (Negationism) செயல்பட முடியாது, ஏனெனில், அக்காலத்தவர் இன்னும் இருக்கிறார்கள், சாட்சிகளாக வாழ்கிறார்கள். மறுப்பு-மறைப்பு முறை சித்தாதம் (Negationism) என்பது சரித்திரத்தில் ஒருவர் பற்றிய, ஒருவர் செய்த செயல்கள் பற்றிய உண்மைகளை மறைத்து, ஆதரங்களை மறைத்து, ஒருதலைப் பட்சமாக, அவர்கள் நல்லது செய்தார்கள் என்பது போல சித்தரித்துக் காட்டும் முறையாகும்[5]. இவர்கள் என்னவெல்லாம்-எப்படியெல்லாம்-எந்நிலைகளில்-எங்கு பேசியிருக்கிறார்கள், என்பதெல்லாம் தெரியும். நாடகம்-சினிமா என்று சம்பந்தப் பட்டிருப்பதால், அந்த வாழ்க்கை முறையும் தெரியும். அப்பொழுது “மீ-டூ” (Me Too) போன்றவை இருந்திருந்தால், பாதிக்கப் பட்டவர்களே சொல்லியிருப்பார்கள்[6]. கண்ணதாசன், மபோசி போன்றார் எழுதியதைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈவேரா, அண்ணா, கருணாநிதி பேசியதை-எழுதியதை மறைக்கவேண்டிய தேவையும் இல்லை. அவர்களை மீறி, மிரட்டி, உண்மைகளை மறைத்து சரித்திரத்தை எழுத முடியாது. அத்தகைய சரித்திரவரையறையும் (historiography) எடுபடாது. முரண்பாடுகள், எதிர்மறை நடவடிக்கைகள், இரட்டை செயல்பாடுகள், இரண்டு வேடங்கள், என்றெல்லாம் இருப்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1]  இந்துமதத்தில் ஏகாதசி போன்ற உண்ணா நோன்புகள் உள்ளன, ஆனால், இந்துக்கள் வகைவகையாக பலகாரங்கள் செய்து சாப்பிடுவார்கள் என்று கருணாநிதி பேசியுள்ளது தெரிந்த விசயம்.

[2]  ஒரு திருமண நிகழ்ச்சியில், இந்து திருமண மந்திரங்களைப் பற்றி ஆபாசமாக பேசியது வீடியோவில் உள்ளது. பலரும் அதனைப் பார்த்து-கேட்டுள்ளனர்.

[3] IAS (Retd.) அதிகாரி, சமீபத்தில், முழுவதுமாக திராவிடத்துவ சரித்திராசிரியராக மாறிவிட்டார். புத்தகமும் எழுதிவிட்டார். இவரது எழுத்துகள் தமிழக பாடபுத்தகங்களிலும் சேர்க்கப் பட்டுள்ளன.

[4] IAS பணியில் உள்ளார், திராவிட சித்தாந்தத்திற்கு வெளிப்படையாக உதவுகிறார், தங்கம் தென்னரசு அமைச்சருக்கு துணையாக இருக்கிறார்.

[5]  உதாரணத்திற்கு ஔரங்கசீப், மாலிகாபூர் போன்றவர்கள் நல்லவர்கள், அவர்கள் கோவில் கட்ட நிதி அளித்தார்கள், கோவில்களை காப்பாற்றினார்கள் என்றெல்லாம் கடைவிடும் முறைகள். இத்தகையை சரித்திரம் எழுதும் போக்கை, பலர் எடுத்துக் காட்டியுள்ளனர். அது மிகவும் ஆபத்தானதும் கூட.

[6] சமீபத்தில் கூட கண்ணதாசன் குறிப்பிட்டதை எடுத்துக் காட்டியதற்கு, வழக்குகள் போடப் பட்டன. பிறகு, உண்மைக்கு ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

கிறிஸ்தவ மேடைக்குப் பிறகு, துலுக்க மேடை – முகமது இஸ்மாயில்-கருணாநிதி கூட்டு, ஜின்னா-ஈவேரா கூட்டுப் போன்றதே – ஸ்டாலினின் துர்பிரசாரம், ஆன்மீக எதிர்ப்பு மற்றும் இந்து தூஷணம் தொடர்கிறது (2)

ஜனவரி 8, 2021

கிறிஸ்தவ மேடைக்குப் பிறகு, துலுக்க மேடைமுகமது இஸ்மாயில்-கருணாநிதி கூட்டு, ஜின்னா-ஈவேரா கூட்டுப் போன்றதே – ஸ்டாலினின் துர்பிரசாரம், ஆன்மீக எதிர்ப்பு மற்றும் இந்து தூஷணம் தொடர்கிறது (2)

திமுக, கருணாநிதி, முரசொலி இவற்றிற்கு உதவியவர்கள் முஸ்லிம்கள்[1]: தலைவர் கலைஞர் அவர்களே அடிக்கடி சொல்வார்கள்: நான் சிறு வயது இளைஞனாக இருந்தபோது ஒரு கையில் குடி அரசு இதழையும் இன்னொரு கையில் தாருல் இஸ்லாம் இதழையும் வைத்துக் கொண்டு திருவாரூரில் வலம் வந்தேன்,” என்று குறிப்பிடுவார்கள்.

 1. தந்தை பெரியாரைப் போலவே, என்னுள் சிந்தனை மாற்றம் ஏற்படுத்தியவர்களில் பா. தாவூத் ஷாவுக்கும் பங்குண்டு என்று கலைஞரே சொல்லி இருக்கிறார்கள்.
 2. பேரறிஞர் அண்ணா அவர்களையும் தலைவர் கலைஞர் அவர்களையும் இணைக்க, பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாயம் தான். திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாவுக்குப் பேச வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்த ஊரில் கருணாநிதி என்றால் யார்? அவரை அழைத்து வாருங்கள்’என்று சொல்லி அழைத்துள்ளார். இருவரும் முதன்முதலாக சந்திக்கக் காரணமாக இருந்தது மிலாதுநபி விழா தான்!
 3. பள்ளிக் காலத்தில் கலைஞருக்கு உற்ற தோழனாய் இருந்து உதவி செய்தவர் அசன் அப்துல் காதர்!
 4. கையெழுத்து இதழாக இருந்த முரசொலியை அச்சில் வெளியிடக் கலைஞர் திட்டமிட்டபோது அதனை அச்சிட்டுக் கொடுத்தவர் கருணை ஜமால்!
 5. உள்ளூரில் எழுதிக் கொண்டு இருந்த கலைஞரை சேலம் மார்டன் தியேட்டர்ஸூக்கு அழைத்துச் சென்று மாபெரும் கதை வசன கர்த்தாவாக ஆக அடித்தளம் இட்டவர் கவிஞர் காமு ஷெரீப்!
 6. கலைஞர் என்ற ஒரு தலைவரை தனது காந்தக் குரலால் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர் இசை முரசு நாகூர் அனீபா அவர்கள்!

இப்படி பட்டியல் இட்டு, எவ்வாறு, முஸ்லிம்கள் திமுக, அண்ணாதுரை, கருணாநிதி என்று உதவியவர்கள் துலுக்கர் தான் என்று விவரித்துப் பேசினார். அவ்வாறு, திமுகவுக்கும், அவர்களுக்கு அத்தகையப் பிணைப்பு இருக்கும் போது, திமுகவின் பெயரையும், “துலுக்க முன்னேற்றக் கழகம்,” என்று மாற்றி விடலாம் போலிருக்கிறது.

காயதே மில்லத்துடன் கருணாநிதியின் நெருக்கம்[2]: ஸ்டாலின் தொடர்ந்து பேசியது, “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தலைவர் ஆகியோருடன் இணைத்து கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் படமும் இங்கே வைக்கப்பட்டுள்ளது[3]. ஏன் இப்படி வெளியிட்டுள்ளோம் என்றால்காயிதே மில்லத் அவர்களும் நம்முடைய தலைவர்களுடைய வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டிய மாபெரும் தலைவர்! காயிதேமில்லத் அவர்கள் தன்னுடைய மதத்தை மட்டுமல்ல, இந்திய நாட்டையும், தாய்மொழியாம் தமிழ் மொழியையும் காப்பாற்றத் தொண்டு செய்தவர் ஆவார். …….தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணாவுக்கு அப்போது தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள்! ………”. முகமது இஸ்மாயில், முகமது அலி ஜின்னாவின் நெருங்கிய நண்பர், அவருக்கு இந்தியாவைப் பற்றிய விவரங்களை கொடுத்து உதவியவர். பாகிஸ்தானை ஆதரித்து, இந்தியன் முஸ்லிம் லீகை விடாமல், இந்தியாவில் தொடர்ந்து நடத்தியவர். ஆக அத்தகையோருடன் “தொப்புள் கொடி உறவு,” என்பதை அவர்கள் தான் விவரிக்க வேண்டும்.

1972- காயதே மில்லத்தை நேரில் சென்று பார்த்த கருணாநிதி: ஸ்டாலின் தொடர்ந்து பேசியது, “………………1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் காயிதேமில்லத் அவர்கள் மறைந்தார்கள். அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது என்ற செய்தி கிடைத்தபோது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோவையில் இருந்தார்கள். செய்தி கேள்விப்பட்டதும் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு சென்னை வந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ஸ்டேன்லி மருத்துவமனைக்குச் சென்றார்கள். கேரள சிங்கம் என்று போற்றப்பட்ட முகமது கோயா, அப்துல் சமது, அப்துல் லத்தீப் போன்றவர்கள் அப்போது இருந்தார்கள். ………1947 முதல் 1962 வரை தமிழகத்தில் இசுலாமிய அமைச்சர் இல்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் தான், இசுலாமிய சமூகத்துக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்கள். காங்கிரஸ் ஆட்சி காலம் அது. கடையநல்லூர் அப்துல் மஜீத் அவர்கள் அதன்பிறகு தான் அமைச்சர் ஆக்கப்பட்டார்கள்”.  இத்தகைய, இஸ்லாம் சார்பு, சம்பந்தம் மற்றும் அரசியலையும் மீறிய உறவுகளின் பின்னணி என்னவென்று தெரியவில்லை.

ஸ்டாலின் துலுக்க-திமுக கூட்டு, நெருக்கம், அந்நியோன்யம் ….முதலியவற்றைத் தொடர்ந்து விவரித்தது.
முகமது இஸ்மாயில், தொடர்ந்து திமுகவை ஆதரித்தது, திராவிடப் பிவினைவாதக் கொள்கையினால் தான்.

திமுக, கருணாநிதி, முஸ்லிம்களுக்காகச் செய்தது என்று ஸ்டாலின் பட்டியல் இட்டது[4]: பிறகு, ஸ்டாலின் எவ்வாறு திமுக, முஸ்லிம்களுக்கு உதவியது என்று பட்டியல்போட்டு, படித்துக் காட்டினார், “எதிர்க்கட்சியாக இருந்தபோதே சிறுபான்மையினர் உரிமைக்கு குரல் கொடுத்த கழகம், ஆட்சி அமைத்த பின்னர் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்தது.

உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

 1. 1989 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 2. 1990 ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 3. 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 4. 2000 ஆம் ஆண்டில் உருது அகாடமி தொடங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
 5. தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகச் செலவுக்காக தமிழக அரசின் சார்பில் நிதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
 6. ஹஜ் மானியத்தை அதிகப்படுத்தியவர் முதலமைச்சர் கலைஞர்!
 7. 2002 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தத் துறையைத் தோற்றுவித்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 8. நபிகள் நாயகம் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 9. சிறுபான்மையின மாணவியர் விமானப் பணிப்பெண் பயிற்சி பெற இலவச வசதிகளைச் செய்து கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 10. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இசுலாமியர்க்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 2007 ஆம் ஆண்டு வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
 11. 2007 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
 12. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவர் முதலமைச்சர் கலைஞர்!

இவை சிறுபான்மை இன மக்களுக்காகச் செய்யப்பட்டவை மட்டும் தான். இப்படி ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் கலைஞர்,” என்று முடித்தார். ஆனால், அதே நேரத்தில், பெரும்பான்மையினருக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்லவில்லை, ஏன், மூச்சுக் கூட விடவில்லை. பிறகு, எதற்கு, இந்த /மேடைகள், பேச்சுகள் எல்லாம்?

© வேதபிரகாஷ்

07-01-2021


[1] https://tamil.news18.com/news/politics/tn-assembly-election-2021-mk-stalin-campaign-vjr-390427.html

[2] கலைஞர்.செய்திகள், அரசியலுக்கும் ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்”- மு..ஸ்டாலின் எழுச்சியுரை!, 10:08:07 pm – Jan 06, 2021

[3] https://m.kalaignarseithigal.com/article/m-k-stalin/dmk-chief-mk-stalin-speech-at-dmk-minorities-wing-public-meeting/f2e9759e-148d-4884-adb0-e7862d47494b

[4]  முரசொலி, சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் அச்சுறுத்தலாக இருப்பது பாஜகஅதிமுக, 07-01-2021, பக்கங்கள்.1,4,5.

ஶ்ரீராமநவமி அன்று ராமரை தூஷித்து, தப்லிக் ஜமாத் மர்கஸ் கோஷ்டியை ஆதரிக்கிறது! திராவிட நாத்திகம் துலுக்கரை ஆதரிக்கிறது, இந்துக்களை வெறுக்கிறது!

ஏப்ரல் 2, 2020

ஶ்ரீராமநவமி அன்று ராமரை தூஷித்து, தப்லிக் ஜமாத் மர்கஸ் கோஷ்டியை ஆதரிக்கிறது! திராவிட நாத்திகம் துலுக்கரை ஆதரிக்கிறது, இந்துக்களை வெறுக்கிறது!

Veeramani supporting Tabliq, Viduthalai, 02-04-2020

விடுதலைமூலம், இந்துவிரோதிவீரமணி கக்கும் துவேசம்: டில்லியில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கணிசமான எண்ணிக்கையில் ‘கரோனா’ தொற்று ஏற்பட்டதை மய்யப்படுத்தி, அந்த மதத்தின்மீது வெறுப்பை, காழ்ப்பைத் தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்றும்[1], அப்படி நடந்துகொள்வோரின் நடவடிக்கையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளதாக “விடுதலையில்,” முதல் பக்க செய்தி[2].  பிறகு, இரண்ட்சாம் பக்கத்தில், “ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  ” என்ற தோரணையில் விளித்து, கீழ்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது:

EVR asked idiotic questions, Viduthalai, 02-04-2020

பல லட்சங்களுக்கு முன்னர் இருந்தவைக்கு இப்பொழுது அத்தாட்சிகள் இருக்குமா?[3]: இருபது லட்ச வருடங்களுக்கு முன் இராமன், அயோத்தி இருந்தனவா? இந்த நாள் – கோள் இருந்தனவா? இராவணன் இருந்தானா? பார்ப்பனர்கள் ராமநவமி என்று சொல்லிக் கொண்டு வருடத்திற்கு ஒருநாள், போலி நாளை மக்களிடம் விளம்பரப் படுத்திக் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாட்டம் நடத்துகின்றார்கள். இதை அரசாங்கம் அனுமதிப்பதுடன் அதற்காகச் சில இடங்களில் ஒருநாள் லீவும் கொடுக்கிறார்கள். இராமன் பிறந்தநாள் என்று சொல்லப் படுவது இன்றைக்கு 20 லட்சம் (20,00,000) ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 20 லட்ச வருடத்தில் உலகத்தில் உள்ளது எல்லாம் நாசமடைவதும் – உலகமே மாற்றமடைவதும் போன்ற காரியங்கள் நடந்து இருக்க வேண்டும். அப்போது மனித சமுதாயம் – மனிதன் – காடு மேடு – உலக பூகோளம் – மலை – சமுத்திரம் போன்ற யாவும் அழிவும் – மாற்றமும் அடைந்துவிடும். இது யாவரும் அறிந்ததும் – புராணக் கூற்றும் – சரித்திர உண்மையும் ஆகும். இப்படிப்பட்ட நிலையில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தி என்ற ஒரு ஊரும், தசரதன் என்ற ஒரு அரசனும், அவனுக்கு அநேக பெண்டாட்டிகளும் இருந்தனர்; அவனுக்கு இராமன் என்று ஒரு பிள்ளை பிறந்தான். அதற்கு வருடம் – மாதம் – தேதி – கிழமை – நாள் – கோள் – இன்ன இன்னது என்பதும், அவை மாத்திரம் அல்லாமல் அந்த 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிட நாடு – பாண்டிய நாடு – இலங்கை நாடு என்பவை இருந்தன என்பதும் எப்படி உண்மையாக இருக்க முடியும்? 20 லட்சம் வருடங்களாகக் கோள்கள் மாறாமல் மறையாமல் இருக்க முடியுமா?

The hand bill that was seized -Salem

ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும்[4]: பார்ப்பனர்கள் தங்கள் சுக வாழ்வுக்காக எதையும் சொல்லுவார்கள் – செய்வார்கள் என்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் – விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? என்பதும் நமக்குப் புரியவில்லை. இந்தக் கற்பனைப் புளுகை நமது மாணவர்கள் எப்படி நம்புகிறார்கள்? என்பதும் அதிசயமாக உள்ளது. வடநாட்டில் இராவணனைக் கொளுத்தினார்கள் என்றால், தென்னாட்டில் ஏன் இராமனைக் கொளுத்தக் கூடாது? ஒரு பொய்யான கற்பனைக் கதையில் இருந்து தென்னாட்டு மக்களை அவமானமும், இழிவுபடுத்தலுமான காரியத்தைப் பார்ப்பனரும், வடநாட்டாரும் செய்தால் – அதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புத்தி வரும்படியான காரியத்தை நாம் ஏன் செய்யக் கூடாது? ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், கட்டாயமாகச் சிந்தித்து, நல்ல படி யோசித்து, எனக்காக என்றே அல்லாமல், தங்களுக்குச் சரி என்றும், அவசியம் என்றும் தோன்றினால், இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். நமது (பார்ப்பனரல்லாத) மக்கள் ஆதரவு, பார்ப்பனர்களுக்கு இந்தப்படி யான பித்தலாட்டங்களில் ஏமாறாமலும், நம்மை இழிவுபடுத்தும் இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும்தான் நாம் இராமன் படத்தைக் கொளுத்துவது போன்ற செயல்களில் இறங்க வேண்டும்.

1971 DK procession denigrating Rama.news cutting

ஈவேராவுக்கு அந்த அளவுக்கூத் தான் அறிவு இருந்தது என்று தெரிகிறது: இந்த மாதிரி ஆட்களை பேச விட்டால் தான், அது போன்ற ஆட்களுக்கு, எந்த அளவுக்கு வாதம் புரிய காரணம், தர்க்கத் தன்மை, வாதத் திறமை முதலிய உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கீழ்கண்ட கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

 1. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிடநாடு – பாண்டியநாடு – இலங்கை நாடு இருந்தன என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? கேட்பது ஈவேரா!
 2. இராவணன் இருந்தானா? என்று கேட்ட பிறகு, “இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்,” என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது.
 3. ராமாயணம் கட்டுக்கதை என்றால், அதைப் பற்றி நாத்திகள் கவலைப் படவேண்டும் என்ற அவசியம் இல்லை.
 4. இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் – விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? கேட்பது ஈவேரா!
 5. குமரிக் கண்டம் என்று ஊளையிடும் தமிழர்கள் ஈவேராவை எதிர்ப்பார்களா? கீழடி பற்றி என்ன சொல்வாரோ?
 6. ராமன் படத்தைக் கொளுத்த வேண்டும், என்று விடுதலையில் ஈவேரா சொன்னதாக செய்தியைப் போட்டுள்ள வீரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
 7. இந்த அளவுக்கு ஶ்ரீராம நவமி அன்று துவேசத்தை கக்கும் கயவர்கள் ! ராமனைக் கும்பிடும் இந்துத்துவ வாதிகளுக்கு சூடு-சொரணை இல்லையா?
 8. ரஜினி மீது திகவினர் வழக்குப் போட்டார்களே, இப்பொழுது இந்த இந்துவிரோதியின் மீது ரஜினி-ரசிகர்களே போடலாமே?!
 9. கடவுள் நம்பிக்கை இல்லாதவன், கடவுள்-நம்பிக்கைக் கொண்டவர்களை, எப்படி கேள்வி கேட்க முடியும்?இவை இரண்டும் நம்பிக்கை தானே?

o apology Rajini IE

செக்யூலரிஸ நாத்தில், வாதத்தில் செக்யூலரிஸத்திற்கு பதிலாக, இந்துவிரோதம் தான் இருக்கிறது: இப்பொழுது, இந்திய ஊடகங்கள் முழுவதிலும், நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் மாநாடு பற்றிய விவகாரங்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. ‘கரோனா’வில் மதச் சாயத்தை பூசவேண்டாம்! மாச்சரியங்களை மறந்து ஒன்று படவேண்டிய சமயம் இது என்று முதல் பக்கத்தில் வக்காலத்து வாங்கி, அடுத்த பக்கத்தில், இத்தகைய செய்தி ஏன் போட வேண்டும்? பெரியார் மண்ணில் இவ்வளவு நடந்து விட்டதே, அப்பொழுது ஏன் ஒன்றையும் கேட்கவில்லை. இப்பொழுது வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு பக்கத்தில் துலுக்கனுக்கு ஆதரவு, அடுத்த பக்கத்தில் இந்து துவேசம், இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா? இன்னும் மக்கள் முட்டாள்களாகவே இருப்பார்களா? மேலும்-மேலும் ஈவேரா உளறல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால், இனி இருக்கின்ற மரியாதையும் போய் விடும். ஏற்கெனவே, சில பெண்கள் வியாக்கியானம் கொடுத்து, அசிங்கப் பட்டு விட்டனர். ஆகவே, இனி மக்களை ஏமாற்ற முடியாது. இளைஞர்கள் முழித்துக் கொண்டு விட்டார்கள்!

EVR photos of naked Hindy gods 1971 paaraded

நாத்திகமும், கடவுள் நம்பிக்கையும், செக்யூலரிஸமும், ஆன்மீகமும்: உண்மையாக நாத்திகன் “கடவுள் இல்லை” என்றால், எந்த கடவுளும் இல்லை என்று தான் சொல்வான். இந்தியாவில், தமிழகத்தில், “கடவுள் இல்லை” என்றால், ஏதோ இந்துமத கடவுள் மட்டும் தான் இல்லை என்ற நிலையில், நாத்திகம்-கிருத்துவம்-இஸ்லாம்-கம்யூனிஸம் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, இந்துமதத்தை எதிர்த்து, இந்துதுரோகிகளாகிறனர். செக்யூலரிஸம் என்றால், எல்லாமதங்களையும் சரிசாமாக பாவிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில், அதையும் பின்பறுவதில்லை. உண்மையான நாத்திகம் எல்லா மதங்களையும் எதிர்க்க வேண்டும். திராவிட நாத்திகம், இந்துதுவேச நாத்திகத்தில் முடிகிறது. கருத்துருவாக்கம், எண்ணங்கள், அவற்றில் தோன்றி பேச்சுகள்-எழுத்துகள் என்றாக வெளிப்படும் போது, அவை, இந்து விரோதமாகவே இருக்கிறன. தெரிந்தும், தொடர்ந்து நடக்கும் போது, அது போலித்தனமாக செயல்பட்டு வருவதை அறிய நேர்கிறது.

©  வேதபிரகாஷ்

02-04-2020

15-02-1971 Thuglak issue-reconstructe d

[1] விடுதலை, மாச்சரியங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் இது! ‘கரோனாவில் மதச் சாயத்தை பூசவேண்டாம்!, வியாழன், 02 ஏப்ரல் 2020 13:37

[2] http://www.viduthalai.in/headline/197907-2020-04-02-08-14-36.html.

[3] விடுதலை, ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  வியாழன், 02 ஏப்ரல் 2020 14:510, பக்கம்.2, . http://www.viduthalai.in/e-paper/197917.html

[4] விடுதலை, ராமநவமி கொண்டாடும் பக்தர்களே, உங்களைத்தான்,  வியாழன், 02 ஏப்ரல் 2020 14:510 . http://www.viduthalai.in/e-paper/197917.html

காஞ்சிப் பெரியவர் – ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [3]

மார்ச் 19, 2020

காஞ்சிப் பெரியவர்ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [3]

Meetings against Sankaracharyas-DK book

ஈரோட்டு ஈவேரா அல்லது பெரியாரின் அனுபவம்: ஆனால், ஈவேராவை வெளிநாட்டவர் யாரும் சந்தித்ததாகத் தெரியவில்லை. அவரைப் பற்றி எழுதியுள்ளதாகவும் இல்லை. ஈவேரா தான், ராமநாதனுடன் 1932ல் அயல்நாடுகளுக்குச் சென்று வந்தார். 1973 வரை இந்திய விரோத, இந்து துவேச செயல்களை செய்து கொண்டு, பேசிக் கொண்டிருந்தது அவரது வழக்கமாக இருந்தது. பொதுவாக எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற போக்கில் இருந்தார். கிளர்ச்சி, போராட்டம், கலாட்டா, கைது, சிறை, வழக்கு என்ற ரீதியில் இருந்தார்[1]. அவர் இறந்த பிறகு, திகவினர் செய்த பிரச்சாரம், விளம்பரங்களினால், அவர் பெயர் திடீரென்று பரவ ஆரம்பித்தது. திமுக அட்சிக்கு வந்த பிறகு, அது அதிகமாகி, பரவ ஆரம்பித்தது. பணத்தை செலவழித்து, ஈவேரா வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். அந்நிலையில், காஞ்சிப் பெரியவரை, ஈவேரா,  இவ்வாறு ஒன்றிற்கும் மேலாக சந்தித்திருந்தால், அதைப் பற்றி விவரமாக பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இக்கதைகளை உலாவிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, நாள், நேரம், புகைப்படம், போன்ற ஆதாரங்களைக் கொடுப்பதில்லை. இவையெல்லாம் 60-70 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்றால், ஆதாரங்கள் கொடுப்பதில் என்ன பிரச்சினை?

Meetings against Sankaracharyas-DK book.audience

காஞ்சி பெரியவரை கிண்டல் அடித்த பகுத்தறிவு தலைவர்களும், அடிவருடி தொண்டர்களும்: அந்நிலையில் தான், காஞ்சிப் பெரியவரை, திராவிட தலைவர்கள் உட்பட கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். “மூக்குக் கண்ணாடி” போட்டுக் கொண்டார். “காட்ரேக்ட் ஆபரேஷன்” செய்து கொண்டார் என்றெல்லாம் நக்கல் அடித்தன. அண்ணா கேன்சர் நோயுக்கு, அமெரிக்கா சென்றது, சிகிச்சை பெற்றது, பலன் இல்லாமல் இறந்தது பற்றியெல்லாம் பகுத்தறிவுகள் அறிந்தும், இவரை கிண்டல் செய்தன. பெரியாருக்கும் சுகவினங்கள் பல இருந்தன. எல்லோருக்கும் தெரிந்தும் இருந்தன. ஆனால், “பகுத்தறிவு” இல்லாதவர்கள் அவ்வாறு கிண்டல் செய்யவில்லை. பெரியார், அண்ணா, கரு, மற்ற திகக்காரர்கள் பேசியதை எழுத முடியாத அளவில் அசிங்கமாக இருந்தததால், அவை மறைக்கப் பட்டன [எழுதாமல் விடப்பட்டன]. ஞாபகம் இருந்தாலும், இன்றும் அவை அவ்வாறுத்தான் உள்ளன. அவர்கள் இல்லை என்றாலும், கேட்டவர்கள் பலர் சாட்சிகளாக இன்றும் இருக்கிறார்கள். நாகரிகம் கருதி தான் அவற்றையெல்லாம் வெளியே சொல்லாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தால், அவர்களுடன் அந்த உண்மைகளும் மறைந்து விடும்.

1986 to 2012 anti-Hindu DK book

காஞ்சி சங்கரமட ரகசியங்கள்சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் 1986ல்  கி. வீரமணி[2] வெளியிட்ட புத்தகம்:  06-04-1983 முதல் 01-08-1983 வரை நடந்த கூட்டங்கள் என்று குறிப்பிட்டு, கீழ்கண்ட தலைப்புகளில், அப்புத்தகம் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தில் இருக்கும் படி அத்தியாயங்கள், பக்க எண்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:

 1. மனிதாபிமானமற்ற சங்கராச்சாரியார். 5
 2. மோசடியில் பிறந்த காஞ்சி மடம் 15
 3. ஜாதியும், சங்கராச்சாரியும்.35
 4. அரசியல் சட்டத்தில் சங்கராச்சாரியாரின் திருவிளையாடல்! 41
 5. சங்கராச்சாரியாரின் கம்யூனல்! வகுப்புரிமைப் பற்றிய கருத்து. 63
 6. விளம்பரக் கலை. 67
 7. காமக் கதை படிக்கும் காமகோடி.74
 8. அறிவு நாணயம் இல்லை பார்ப்பனருக்கு வக்காலத்து. 81.
 9. சங்கராச்சாரியார் பார்வையில் நாத்திகன் யார்? 86
 10. சங்கராச்சாரியாரின் மனிதாபிமானம் – நாத்திகனுக்கு வைத்தியம் செய்யக் கூடாதாம். 94
 11. சமஸ்கிருதப் பற்று.101.
 12. சங்கராச்சாரியார் நடத்தும் டிரஸ்டுகள் யாருக்காக? 104
 13. விவேகசாகரம் என்ற அய்ந்தாம் வேதம்.126
 14. பார்ப்பனர் இல்லாவிட்டால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டா?.131.
 15. சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் கூடாதாம்! 135
 16. எல்லோருக்கும் சமவாய்ப்பும் கூடாதாம்!.146
 17. சிவமதத்தை ஏற்க மறுக்கும் சங்கராச்சாரியார் திருஞானசம்பந்தரை மட்டும் ஏற்பது ஏன்? 151.
 18. தேவதாசி ஒழிப்புக்கு வருத்தம்!. 158.
 19. பார்ப்பனர்கள் மேளம்-நாயனம் வாசிக்காதது ஏன்? 161.
 20. முத்ராதிகாரி திட்டம்! 164
 21. சங்கராச்சாரியார் பற்றி அண்ணாவின் படப்பிடிப்பு.171.
 22. சம்பந்தியை வெறுக்கும் சங்கராச்சாரியார்.179.
 23. கோவிலில் கூட்டம் கூடுவது ஏன்? 184.
 24. நேருவை கேலி செய்யும் சங்கராச்சாரியார்! 197.
 25. பெண்களின் உரிமைகளை நசுக்கும் தெய்வத்தின் குரல் (!) 203.
 26. சங்கராச்சாரியாரி வீட்டிலும் கலப்புத் திருமணம். 225.
 27. ஆதிசங்கரர் நடத்திய ஆபாச பரிசோதனை! 234.

சங்கரரைப் பற்றி விவேகானந்தர் என்று முடிகிறது. இவவற்றை பொறுமையாகப் படித்துப் பார்த்தால், எந்த அளவுக்கு, ஆதாரங்கள் இல்லாமல், வாய்ஜாலம், திராவிடப் பேச்சு, மேடைமுழக்கம் போன்ற ரீதியில் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

Sankaracharyas-DK book.speakers

1986-87களில் பிரிவினை வாதம் எழுந்த நேரத்தில் இப்பிரச்சினை எழும்புவது[3]: இக்கூட்டங்களில் பேசியவர்கள்[4]

1.       கே. வீரமணி

2.       கீ. ராமலிங்கன்.

3.       தெ. தருமராசன்.

4.       கா. அப்பாதுரை.

5.       சுரதா.

6.       மா. நன்னன்.

7.       ந. ராமநாதன்.

8.      பழனிசாமி

9.       பொன்னிவளவன்.

10.   இறையன்.

11.    பெருஞ்சித்தரனார்.

இவர்கள் எல்லோருமே தமிழ்-பிரிவினை [Tamil separatism], தனித்தமிழகம் [Separate Tamil Country], தமிழ்தேசியம் [Tamil Nation], தமிழ் இனவெறி [Tamil race, racism, racialism], போன்ற தீவிர சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் [extreme / extremist ideologists] என்பது தெரிந்த விசயமே. தமிழ்நாடு விடுதலைப்படை தமிழ்நாடு பொதுவுடைமைக்கட்சியின் ஆயுதப்படை ஆகும். இதன் தலைமைத்தளபதியாக தமிழரசன் இருந்தான். இது தமிழர்களுக்காக தனி தேசம் அமைக்க போராடிய தமிழ்த்தேசிய அமைப்பாகும். 1980களில் பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தமிழ்நாட்டில் தோன்றின. அதிலும் குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்ற போது இந்த இயக்கங்கள் தீவிரமாக இயங்கிவந்தன. அதில் குறிப்பிடத்தகுந்தது இந்த தமிழ்நாடு விடுதலைப்படை பல கொள்ளைகள், கொலைகள், குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டன. இந்த இயக்கம் ஜூலை 2, 2002 அன்று இந்திய அரசால் பொடா சட்டப்படி தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசால் 2002ல் பொடா சட்டப்படி தடை செய்யப்பட்ட பின்னர் இது தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் செயல்படுகிறது. எனவே, இவர்களுக்கு, சங்கராச்சாரியாரை, சங்கர மடத்தை எதிர்க்க ஏன் ஒன்று சேர்ந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது எவ்வாறு சின்னங்கள், அடையாளங்கள் கண்டெடுக்கப் பட்டு, தாக்கப் பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனெனில், இவையெல்லாம் மிருதுவான, எளிமையான, இலக்குகள் [soft targets] என்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

19-03-2020

Meetings against Sankaracharyas-DK book.wrapper

[1] அண்ணா, கரு முதலில் இவரது சட்டவிரோத வேலைகளை ஆதரித்தாலும், பிறகு, அவை தலைவலியாக மாறியதை அவர்களே கண்டு நொந்து கொண்டார்கள். பெரியாரும், இதையெல்லாம் உணர்ந்திருந்தார். அரசியலில் அவரை தனிமைப் படுத்தியது அண்ணா, கரு முதலியோரின் சாதுர்யம் என்றாகியது.

[2] Veeramani was born in a middle-class family in Cuddalore, South Arcot District, Tamil Nadu, his original name was Sarangapani. ஆனால், இவரது பெற்றோர் பெயர்கள் விகியில் குறிப்பிடப் படவில்லை. C.S.Krishnaswamy and Meenakshi  என்று மற்ற தளங்களில் காணப்படுகிறது.

[3] Tamil Nadu Liberation Army (TNLA) was a small militant separatist movement in India. It seeks an independent nation for the Tamil people, and first appeared in the 1980s, when the Indian Peacekeeping Force (IPKF) was sent to Sri Lanka. It had its roots in the Naxalite movement, and was headed by Thamizharasan, an engineering student from Ponparappi village. TNLA was involved in minor bomb blasts, murders and looting banks. On September 1, 1987, the people of Ponparappi village lynched Thamizharasan and four of his associates, when they attempted to rob a bank. After his death, the group is believed to have splintered into factions. TNLA was banned by the Tamil Nadu State Government, and also by the Union Government on the recommendation of the State Government. It has been declared a terrorist organisation by the Government of India. https://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/TNLA.htm

[4] கி. வீரமணி, காஞ்சி சங்கரமட ரகசியங்கள்சங்கராச்சாரி யார்?, திராவிடர் கழக வெளியீடு, சென்னை, 1986, பதிப்புரை. இரண்டாம் பக்கம்.

காஞ்சிப் பெரியவர் – ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [2]

மார்ச் 18, 2020

காஞ்சிப் பெரியவர் ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [2]

V. Ganapathy, the Hindu reporter attacked in 1989

[சென்ற பதிவின் தொடர்ச்சி] இக்கதை மூலம் அறியப் படுவதாவது –

 1. பிராமணர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக, அந்த “பிரபலமான நாஸ்திகரை”க் கண்டு பயந்து கொண்டிருந்தனர்.
 2. ஏன் பயந்தனர் என்று யாரும் விளக்கவில்லை, காரணம் சொல்லவில்லை.
 3. “பிரபலமான நாஸ்திகர்”, பிராமணரைப் பார்த்து, “மிஸ்டர் ஐயர், எதற்காக பயப்படுகிறீர்? நான் ஒன்றும் செய்ய மாட்டேன்….” என்றால், அந்த அளவுகு அந்த ஆள் என்ன பயமுருத்தி வைத்திருந்தார் என்று சொல்லவில்லை.
 4. “பிரபலமான நாஸ்திகர்”, தொடர்ந்து சொன்னது, “…………ஏனென்றால், நாம் போகும் வழியில், பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நீர் வேறு கோச்சிற்கு சென்றால், அவர்கள் கோச்சில் நுழைந்து உம்மை தாக்கக் கூடும். இந்த கோச்சில் எனக்கு பாதுகாப்பு போடப் பட்டிருக்கிறது. அதனால், பாதுகாப்பாக இருக்கலாம். உமது நன்மைக்காகத்தான் இதனை சொல்கிறேன்,” அப்படியென்றால் –
  1. அந்த போராட்டம் என்ன, ஏன்?
  2. அவர்கள் கோச்சில் நுழைந்து [பிராமணரை]தாக்கக் கூடும்,” ஏன் அப்படி?
 5. எப்பொழுது நடந்தது என்று தெரியா விட்டாலும், அத்தகைய நிலை இருந்தது உண்மையாகிறது.

இதே போன்று கீழ் கண்ட சம்பவங்கள்.

V. Ganapathy, the Hindu reporter attacked in 1989-2

தந்தை பெரியாரும், காஞ்சி பெரியவரும்! லஸ்ஸில் எதிர்எதிரில் வந்தது[1]: லக்ஷ்மிநாராயணன் என்பவர் சொன்னது, “காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது. காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்”.

1963 padayatra, Madurai

காஞ்சி பெரியவர் கோவிலுக்குச் சென்று கும்பிட்டது, ஈவேரா கும்பலுக்கு ஆணை இட்டது: லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்து சொன்னது, “பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்புஅந்த நேரத்தில், .வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார். பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது. இனி இன்னொரு கதையினைப் பார்ப்போம்.

Sri Chandrasekhara Saraswati, taken in rickshaw

தந்தை பெரியாரும், காஞ்சி பெரியவரும்! பல்லக்கில் வந்தது, ஈவேரா விமர்சித்தது![2]: இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.  ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது. அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்,!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள். “இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்,” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன…,

The Lotus and robot

1931லிருந்து வெளிநாட்டவர் பெரியவரை சந்திப்பது அவரைப் பற்றி புத்தகங்களில் எழுதுவது: 1994 வரை வாழ்ந்த ஶ்ரீசந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியாருடன், பல வெளிநாட்டு அறிஞர்கள், எழுத்தாளர்கள் என்று வந்து பேட்டி கண்டு தங்களது அனுபவங்களை எழுதி வந்தனர். இந்த விசயத்தில் தான் மற்றவர்களுக்கு [மற்ற சங்கரமடாதிபதிகளுக்கு] இவர் மீது பொறாமையாக இருந்தது. பால் பிரென்டன் இவரை 1931ல் வந்து பேட்டி கண்டபோது, இவருக்கு வயது 37 தான்[3]. இருப்பினும் தனது அறிவுசாதுர்யத்தால், அவரை கவர்ந்தார். குறிப்பாக அவரது எளிமை அனைவரையும் ஈர்த்தது, திகைக்க வைத்தது.

1955ல் பேராசிரியர் மில்டன் சிங்கர், சிகாகோ பல்கலைகழகம், சந்தித்தார்[4].

Prof. Milton Singer of the University of Chicago, met the Sage in 1955.

1959ல் ஆர்தர் கோயஸ்ட்லர் இவரை பார்த்த போது, ஆச்சரியமாகத்தான் இருந்தது.

Arthur Koestler met Arthor Koestler with V. Raghavan 1959

1962ல் அர்ஜென்டினாவைச் சேர்ந்த, யூஹினா போர்கினி என்ற ஆராய்ச்சியாளர் சந்தித்தார்[5].

1963ல், டாக்டர் ஆல்பர்ட் பிராங்ளின் என்ற அமெரிக்கத் தூதுவர், பெரியவரை மதுரையில் சந்தித்தார்[6].

1965ல் கிரேக்க அரசி மற்றும் இளவரசி  காளாஹஸ்தியில் பெரியவரை சந்தித்து பேசினர்[7].

Sri Chandrasekhara Saraswati,met Queen Frederica Greece and Irene

1970ல், சென்னையில் உலக தத்துவ மாநாடு நடந்தபோது, டெஹ்ரான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியர், சையீத் நாசர் சந்தித்தார்[8]. இப்படி, அயல்நாட்டவர் குறிப்பாக, மதம், தத்துவம், ஆன்மிகம் போன்ற விசயங்களில் கவரப் பட்டவர்கள், இவரை பேட்டி எடுக்க, உரையாட ஏன் சோதிக்கக் கூட வந்த போது, அவர்களுடன் இணையாக உரையாடினார். அவர் மேனாட்டு அறிஞர்களை மேற்கோளாகக் காட்டிய போது, அவர்கள் வியந்தனர். அதாவது, 20ம் நூற்றாண்டு வரையிலான  மதம், தத்துவம், ஆன்மிகம் போன்ற சங்கதிகளில் உள்ள பிரபலங்கள், அக்கால கருத்துகள் முதலியவற்றை அறிந்திருந்தார்.

© வேதபிரகாஷ்

18-03-2020

With Ramsuratkumar

[1] இது அப்படியே பலரால் பதிவு செய்யப் பட்டுள்ளது, ஆனால், ஆதாரத்தை யாரும் கொடுக் கவில்லை. சிலர், பல்லாக்கு சமாசாரம் மட்டும் தனியாக போட்டிருக்கிறார்கள்.

[2] இது அப்படியே பலரால் பதிவு செய்யப் பட்டுள்ளது, ஆனால், ஆதாரத்தை யாரும் கொடுக்கவில்லை. சிலர், பல்லாக்கு சமாசாரம் மட்டும் தனியாக போட்டிருக்கிறார்கள் இது “வேதம் புதிது” படத்திலும் சித்தரிக்கப் பட்டுள்ளது.

[3]  Dr.Paul Brunton, author of the well-known book “A Search in Secret India”, first published in London in 1934, was the first Westerner to have an interview with the Sage in 1931.

[4] Prof. Milton Singer of the University of Chicago, met the Sage in 1955.

[5] A scholar from Argentina, Miss. Eughina Borghini met His Holiness in 1962

[6] Dr.Albert Franklin, U.S.Consul General in Madras, saw the Paramachrya for the first time in 1963 in the Madurai Meenakhi Temple during the Kumbhabhishekham ceremony

[7] Queen Frederica from Greece and her daughter Princess Irene met the Paramacharya in 1965 at Kalahasti.

[8]  Professor Sayeed Nasr, the Vice-Chancellor of Teheran University who participated in a World Conference on Philosophy in Madras in 1970 met the Paramacharya in Kanchi

காஞ்சிப் பெரியவர் – ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [1]

மார்ச் 18, 2020

காஞ்சிப் பெரியவர் ஈரோடு பெரியார்: சரித்திரமா, கட்டுக்கதையா? சமீப கால உண்மைகளை மறைக்கின்றனரா, மாற்றுகின்றனரா? [1]

Kanchi Periyavar, Erode EVR

திக-காரர்கள், இந்து-எதிரிகள், காஞ்சிமட-விரோதிகள், மாற்றுமத விசமிகள் என்று பலவகையறாக்கள் கதைகள், கட்டுக் கதைகள் என்று புனைந்து, உலா விட்டு வருகின்றன. அச்சில் இருப்பவற்றை கண்டு கொள்வதில்லை, அதனால், யாரும் கேள்விகள் கேட்கவில்லை. இப்பொழுது, இணைதளங்களில் பரப்புகிறார்கள். ஆகவே, நிச்சயம் கேள்விகள் கேட்டாக வேண்டும். மேலும், இந்துத்துவ வாதிகள், சில பேச்சாளர்களின் ஆட்கள், காசுக்காக ஈ-வேலை செய்யும் கூலிகள் போன்ற வகையறாக்கள், இதில் சேர்ந்து கொண்டுள்ளன.  காஞ்சிப் பெரியவர் [1894-1994] மற்றும்– ஈரோடு பெரியார் [1879-1973] பதினைந்து ஆண்டுகள் வித்தியாசம் கொண்டவர். 1960களில் ஈவேராவுக்கு வயது 81, ஆனால் காஞ்சிப் பெரியவருக்கு 56 தான். பால் பிரென்டன் இவரை 1931ல் வந்து பேட்டி கண்டபோது, இவருக்கு வயது 37 தான், ஈவேராவுக்கு 52. ஈவேரா அந்த அளவுக்கு புகழ் பெற்றிருந்தால், பால் பிரென்டன் ஈரோடுக்குச் சென்று அவரை சந்திருக்க வேண்டும். 1959ல் ஆர்தர் கோயஸ்ட்லர் காஞ்சி பெரியவரை பார்த்த போது, ஆச்சரியமாகத்தான் இருந்தது.  ஏனெனில், கம்யூனிஸ்ட்-நாத்திகன் என்ற நிலையில், பெரியாரைத்தான் பார்த்து பேட்டிக் கண்டிருக்க வேண்டும்……..இப்பொழுது சுகி [சுகி சிவம்] வீடியோ உலா வந்துள்ளதால், இது அவசியமாகிறது.

Suki.Sivam - intriguing - his DK connection

வீடியாவில் சுகி சிவம் சொல்வது (டிசம்பர் 2017): மறுபடியும் ஒரு பழைய வீடியோவை சுற்றில் விட்டு, முட்டாள் இந்துத்துவ வாதிகள் அரைகுறையாக விவாதிக்கிறார்கள். அந்த வீடியோவை பலமுறைகேட்டு, எழுதிவைத்து, சரிபார்த்து, பிறகு, டைப் அடித்தது, “காஞ்சி பெரியவருடைய அருமை தெரிந்த பல பேருக்கு சார்…..ஈரோட்டு பெரியாருடைய அருமை தெரியல்ல………..கொடுமை சார்………………..கொடுமை………….நீங்க சரியான இடத்திலிருந்து பார்த்தால் தான் அவங்க இரண்டு பேரும் ஏன் சமுதாயத்திற்கு தேவையானவங்கன்னு புரிஞ்சிச்சு. உங்களையும் என்னையும் விட கடவுள் அறிவாளி சார். பிரபஞ்சன் நம்பளை விட புத்திசாலி சார். அதாவது நல்ல ஒழுக்கங்களும், தவமும், இந்த உலகில் தோன்றுவதற்கு ஒரு காஞ்சி பெரியார் தேவைபடராறு. அதே காலகட்டத்தில் மதம் என்ற பெயரால் ஜாதி ஆதிக்கம் மேலோங்குவதை தடுப்பதற்கு சமூகநீதியை கேட்டதற்கு ஒரு பெரியார் தேவைப்படுகிறார்…… பெரியாரை மைனஸ் பண்ணி…… பெரியாரை மைனஸ் பண்ணி தமிழ்நாட்டோட வரலாறை பார்க்க முடியாது. பல பேருக்கு அது புரியாது, என் வூட்ல புஸ்தகம் எப்படி வச்சிருக்கேன் தெரியுங்களா? என் லைப்ரரியிலே தெய்வத்தின் குரல், காஞ்சி மஹா பெரியவரின் ஏழு வால்யூம்ஸ் வானதி பதிப்பகம் போட்டது. பாருங்க ஏழு வால்யூம்ஸ். தெய்வத்தின் குரல் அதற்குப் பிறகு 14 வால்யூம்ஸ் ஈவேரா சிந்தனைகள் எல்லாமே ஒரே செல்ஃப் தான். என்னப் பொறுத்த வரையிலும், நான் ஒரு தராசு வைத்திருக்கிறேன். அதில சமமான தட்டில் காஞ்சி பெரியாரும் இருக்கிறார். ஈரோட்டு பெரியாரும் இருக்கிறார். இது புரிந்து கொள்ளாத வரையில் ஞானம் அடைய முடியாது.”

Suki Sivam indulging in spiritual business exploiting Hindu religion

சுகி வீடியோ பேச்சுஇப்பேச்சிலிருந்து தெரிவதாவது: ஆக, கவனமாகக் கேட்டு, குறிப்பு எடுத்து, பிரின்ட் எடுத்து, படித்துப் பார்த்தப் பிறகு, தெரிவதாவது –

 1. இது ஆடியன்ஸை திருப்தி படுத்த, ஜாலியான பேச்சு போன்றது.
 2. காசுக்காக, மேடைக்கு மேடை மாறி, மாற்றிப் பேசுவதால், இந்த ஆளுக்கு, அத்தகைய பேச்சுக்கு, முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
 3. ஆனால், தமிழ்கத்தில் இவ்வாறு பட்டி மன்றம், தமாஷான பேச்சு, பொழுது போக்கு ரீதியில் 40 ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பதால், இப்பொழுதைய செல்போன், யூ-டியூப் போன்ற வசதிகளால், எல்லோரும் பார்க்கிறார்கள். வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களினால் பாவுகிறது.
 4. ஆனால், பெரும்போலோர், இவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, ஏதோ செந்தில்-கவுண்டமணி, விவேக் ஜோக், காமெடி போன்று பார்த்து, ரசித்து, மறந்து விடுகின்றனர் எனலாம்.
 5. இருப்பினும், முக்கியத்துவம் கொடுப்போம் எனும்போதும், அதில் விசயம் இல்லை என்றாகிறது. வீரமணி ஒப்புக்கொள்ள வில்லை. இந்துவிரோத நாத்திகர்களும் கவலைப் படவில்லை. ஆனால், இதனை பெரிதாக்குவது, இந்துத்துவ வாதிகள் தாம்.
 6. சுகி ஒரு முட்டாள் என்றால், இந்த இந்துத்துவ முட்டாள்களும், அந்த முட்டாளுக்கு துணை போய், விளம்பரம் கொடுக்கின்றனர்.

இதே போல, காஞ்சி பெரியவரையும், ஈவேராவையும் இணைத்து சில கதைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கும் நேரிடையான ஆதாரங்கள் இல்லை.

Veeramani refuted Suki comparisan 2018

சுகிசிவத்தின் ஒப்பீட்டை, திகவீரமணி அவ்வொப்பீட்டை ஒப்புக்கொள்ளவில்லை (பிப்ரவரி. 2018): சுகிசிவத்தின் ஒப்பீட்டை, திக- வீரமணி அவ்வொப்பீட்டை ஒப்புக்கொள்ளவில்லை என்பது, விடுதலையில் வெளியான கேள்வி-பதில்[1] பகுதியிலிருந்து தெரிகிறது.

கேள்வி 5: சுகிசிவம் காஞ்சி பெரியவரை, ஈ.வெ.ராவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளாரே?

பதில்: அவர் அப்படி பேசினாரா… என்ன பேசினார் என்று உறுதியாக தெரியாது;  ஒருவேளை பேசியிருந்தால் ‘யானைக்கும் அடி சறுக்கும்‘ என்று  எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

சுகி யானையா அல்லது அந்த அளவிற்கு பெரிய ஆளாக இருந்து, இவ்விசயத்தினால் “அடி சருக்கும்” நிலைக்கு அந்த யானை தள்ளப் பட்டாதா என்று தெரியவில்லை. அதாவது, ஈவேரா, அவரை விட பெரிதாக கருதுவது போலிருக்கிறது[2]. இதிலிருந்து, இவர்களுக்குள், ஏதோ, உரையாடல்கள் நடந்து வருவதை கவனிக்க முடிகிறது. 2016ல் சுகியின் “கருப்புச் சட்டை” வீரமணியால் வெளியிடப் பட்டது. இந்த வீடியோ[3] [ஶ்ரீடிவி] பிப்ரவரி 2018க்கு முன்பாக இருக்க வெண்டும். டிசம்பர் 24 2017 அல்லது அதற்குப் பிறகு அப்-லோட் செய்யப் பட்டிருக்க வேண்டும். பார்வையாளர் எண்ணிக்கை உயரவேண்டும், விளம்பரம் கிடைக்க வேண்டும் என்று அவ்வாறு “சுகி ரசிகன்” வியாபார ரீதியிலும் செய்திருக்கலாம். வீரமணிக்கே பிடிக்கவில்லை எனும் போது, காஞ்சி பெரியவர் பக்தர்கள் எப்படி விரும்புவார்கள். எனவே, இது ஒரு விசமத்தனமான பேச்சு மற்றும் அப்-லோடிங் எனலாம். ஆனால், இந்துத்துவ வாதிகள் வழக்கம் போல தூங்கி விட்டு, இப்பொழுது மார்ச் 2020ல் ஒப்பாரி வைத்துள்ளனர். ஆனால், வழக்கம் போல ஒரு வாரத்தில் அடங்கி விட்டது. வேறு விசயத்திற்கு சென்றுள்ளனர். இனி, “காஞ்சி பெரியவர்-ஈரோடு ஈவேரா பெரியார்” இவர்களை இணைக்கும் கதைகளை பார்ப்போம்.

Picture - manipulated-not original, EVR with Iyer in a Train

என்னுடைய மரியாதையை தயவு செய்து மஹா பெரியவாளுக்கு தெரியப் படுத்துங்கள்,” என்று கூப்பியக் கரங்களுடன் சொன்ன ஒருபிரபலமான நாஸ்திகர்”: ஒரு கதை இவ்வாறு உள்ளது: காஞ்சி பெரியவர் ஒரு முறை ஒரு சாஸ்திரிக்களை ஆந்திராவுக்கு செல்ல சொன்னார்கள். அதன் படி அவர் ரெயிலில் ஏறியதும், எதிர் சீட்டில் ஒரு “பிரபலமான நாஸ்திகர்” உட்கார்ந்து இருப்பதைக் கண்டார். அவர்கள் இரண்டு பேர் தான், அந்த முதல் வகுப்பு பெட்டியில் இருந்தனர். இரவு வந்தது. கோச்-இருக்கையை மாற்றிக் கொள்ள டிடிஆரைக் கேட்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தது, அவரது சங்கடத்தைப் புரிந்து கொண்ட அந்த “பிரபலமான நாஸ்திகர்”, “மிஸ்டர் ஐயர், எதற்காக பயப்படுகிறீர்? நான் ஒன்றும் செய்ய மாட்டேன். இன்னொரு கோச்சிற்கு செல்ல வேண்டாம். ஏனென்றால், நாம் போகும் வழியில், பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நீர் வேறு கோச்சிற்கு சென்றால், அவர்கள் கோச்சில் நுழைந்து உம்மை தாக்கக் கூடும். இந்த கோச்சில் எனக்கு பாதுகாப்பு போடப் பட்டிருக்கிறது. அதனால், பாதுகாப்பாக இருக்கலாம். உமது நன்மைக்காகத்தான் இதனை சொல்கிறேன்,” என்றார்.

EVR listening to Rajaji with due respect and attention

ஐயர் தொடர்ந்து ஈவேராவுடன் பயணித்தது: எப்பொழுதும் பிராமணர்களை எப்பொழுதும் வைது கொண்டிருக்கும் நாஸ்திகராக இவர் என்று சாஸ்திரிகள் நினைத்து ஆச்சரியப்பட்டார். பேசாமல், அதே கோச்சில் இருந்து விட்டார், பிறகு பேசிக் கொண்டிருக்கும் போது, நாஸ்திகர் மஹாபெரியவாளை பாராட்டி பேசினார். அது சாஸ்திருக்குத் திகைப்பாக இருந்தது, பிறகு தூங்கியும் விட்டார். காலை எழுந்ததும், சாஸ்திரியார் இறங்கும் ஸ்டேஷன் வந்தது. அந்த நாஸ்திகர், சாஸ்திரிகளின் லக்கேஜை எடுத்துக் கொள்ளவும் உதவினார். கீழே இறங்கியதும், “என்னுடைய மரியாதையை தயவு செய்து மஹா பெரியவாளுக்கு தெரியப் படுத்துங்கள்,” என்று கூப்பியக் கரங்களுடன் சொன்னார். “நான் அழ ஆரம்பித்து விட்டேன்…….சங்கரா…..,” என்று நெகிழ்ந்தார் சாஸ்திரி. இது வரகூரான் என்பவரது தமிழ் பதிவு, அதனை கணேஷ சர்மா என்பவர் ஆங்கிலத்தில் போட்டிருக்கிறார் என்று இன்னொருவர் – பஞ்சநாதன் சுரேஷ் – என்பவர் போட்டிருக்கிறார். அந்த ஒரு “பிரபலமான நாஸ்திகர்” ஈவேராக இருக்கக் கூடும் என்று பஞ்சநாதன் சுரேஷ் ஊகிக்கிறார்[4].

© வேதபிரகாஷ்

18-03-2020

பெரியார் முஸ்லிம்

[1] விடுதலை, விவாத மேடை, விஜயபாரதத்திற்கு சாட்டையடி, பிப்ரவரி 04, 2018, 13”33. http://www.viduthalai.in/headline/156840-2018-02-04-08-10-35.html

[2] http://www.viduthalai.in/headline/156840-2018-02-04-08-10-35.html

[3] சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியார் நினைவு தினம்…பெரியார் – பெரியவா…இப்படிக்கு சுகிசிவம் ஐயாவின் ரசிகன்….என்றுள்ளது. அப்படியென்றால், டிசம்பர் 24 2017 அல்லது அதற்குப் பிறகு அப்-லோட் செய்யப் பட்டிருக்க வேண்டும் –   https://www.facebook.com/devotee.of.sukisivam/videos/1189021844561700/

[4] பஞ்சநாதன் சுரேஷ், https://vandeguruparamparaam.wordpress.com/2016/09/17/convey-my-respects-to-mahaperiyava-said-a-famous-atheist/

இந்து-விரோத நாத்திக வீரமணியின் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது! மலேசிய இந்துக்களின் வெற்றி!! இது ஒரு பாடமாக அமைய வேண்டும்!!!! [2]

நவம்பர் 24, 2019

இந்துவிரோத நாத்திக வீரமணியின் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது! மலேசிய இந்துக்களின் வெற்றி!! இது ஒரு பாடமாக அமைய வேண்டும்!!!! [2]

Veeramani, Malaysia programme cancelled-MHS-2

முன்பு பெரியார் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே இப்போதும் எதிர்க்கிறார்கள்: இதற்கிடையே பிபிசி தமிழிடம் பேசிய மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலர் கே.ஆர்.ஆர்.அன்பழகன், கி.வீரமணி உரையாற்ற எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமல்ல என்றார். “கி.வீரமணி என்ன தலைப்பில் பேசப் போகிறார், எது குறித்துப் பேசப் போகிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே பலமுறை மலேசியாவுக்கு வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி உள்ளார்.” “இந்நிலையில் திடீரென எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. தந்தை பெரியார் குறித்து பலர் ஆய்வுகள் மேற்கொண்டு நூல்களும் படைத்துள்ளனர். எனவே யாரும் புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையும் கருத்துக்களையும்தான் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். ‘பெரியார்’ திரைப்படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு திரையிட்ட போதும் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போதும் அதே தரப்பினர்தான் எதிர்க்கிறார்கள்,” என்றார் அன்பழகன். ஆக, இவர் என்னமாக பொய் சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம். 2012 கதைகளை மறந்து விட்டார் போலும்!

Veeramani, Malaysia programme cancelled

ஈவேரா / பெரியார் பற்றிய உண்மைகள் முதலில் எல்லோருக்கும் தெரிந்தாக வேண்டும்: இந்தியாவிற்கும் மலேசியாவுக்கும் இருக்கும் தொடர்புகள் மலேசிய மக்களுக்கு வீரமணி வந்து தான், தெரிவிக்க வேண்டும் என்பதெல்லாம் விசித்திரமாக இருக்கின்றது. ஏனெனில் ஈவேரா பேசியது, எழுதியது எனச் சொல்லப்படுகின்ற எல்லாமே இதுவரையில் அதிகார பூர்வமாக ஆராய்ந்து “கிரிடிகல் எடிஷன்” என்று சொல்கின்ற வகையில் எந்த புத்தகம் வெளியிடப்படவில்லை. அவருடைய கையெழுத்துப் பிரதிகள், குறிப்புகள், எல்லாமே ரகசியமாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது ஆராய்ச்சியாளர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தில் உள்ள, பழைய குடி அரசு, விடுதலை மற்றும் குறும்புத்தகங்களில் ஏற்கனவே அச்சில் என்ன இருக்கின்றனவோ அவற்றை வைத்துத்தான் ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலான இவரைப் பற்றிய குறிப்புகளை சமகாலத்தில் உள்ள மற்றவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை ஒப்பீடு செய்து பார்க்கும்போது பல விஷயங்கள் ஒத்துப்போவதில்லை. உதாரணத்திற்கு 1940 ஜின்னா, பெரியார், அம்பேத்கர் கலந்து பேசிய பேச்சுகளை பற்றிய முழு தகவல்கள் தகவல்களை மறைத்து வைத்துள்ளனர். பாகிஸ்தானில் ஜின்னாவின் எழுத்துகளின் தொகுப்புகள் மூலம் தான் பெரியாருக்கு எழுதிய கடிதங்கள் தெரிய வருகின்றன. எனவே பெரியாரைப் பற்றி, வீரமணி சொல்லித்தான் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது ஆராய்ச்சியும் அல்ல, சரித்திரமும் அல்ல, உண்மையும் அல்ல. ஏனெனில் இது இப்பொழுது நடந்த நிகழ்வுகள், என்றைக்கும் 60, 70, 80, 90 வயது கொண்டவர்கள், அவர் பேசியது, நடந்துகொண்ட விதம் நிறைவேற்ற நன்றாகவே அறிந்துள்ளனர் ஆகவே உண்மையை மறைப்பதை விட வெளிப்படையாக ஆவணப்படுத்துவதில் தான் சரியானதாக இருக்கும்.

Veeramani and Zakir Naik, any difference
வீரமணியின் மலேசிய வருகையே நாட்டின் கொள்கைக்கு எதிரானது: இந்நிலையில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, திராவிடர் கழகம் தொடர்ந்து இந்து மதத்தை விமர்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்றார்[1]. இறை நம்பிக்கை என்பது மலேசியாவின் கொள்கை என்றும், மலேசியர்கள் அனைவருக்கும் இறை நம்பிக்கை உண்டு என்றும் குறிப்பிட்ட அவர், இறை நம்பிக்கை இல்லாத ஒருவர் மலேசியாவுக்கு வருவதே நாட்டின் கொள்கைக்கு எதிரானதுதான் என்றார்[2]. “திராவிடர் கழகம் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்துப் பேசும். மற்ற மதங்களைக் குறித்துப் பேசாது. ஒருவரை உரையாற்ற அழைக்கும்போது அவரதுபின்னணி குறித்து ஆராய வேண்டும்.” “எனவேதான் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு எங்கள் மாமன்றம் புகார் கடிதமும் அனுப்பியது. எங்கள் மாமன்றம் மட்டுமல்லாமல் மேலும் சில இந்து அமைப்புகளும் அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தன,” என்றார் ராதாகிருஷ்ணன்.

Veeramani, Malaysia programme cancelled-viduthalai

விடுதலையின் சப்பைக் கட்டு[3]: கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு மலேசிய திராவிடர் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  மலேசிய திராவிடர் கழகத் தலைவர்  ச. த. அண்ணாமலை, பொதுச்செயலாளர் பொன்வாசகம், துணைத் தலைவர் சா.பாரதி,   பொருளாளர் கு.கிருட்டிணன்,  திருச்சுடர் கே. ஆர். ஆரின் மகன்  இரா. அன்பழகன் மற்றும் பொன்மறை முதல்வன் ஆகியோர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். மலேசியாவில் நடைபெறவுள்ள சுயமரியாதைச் சுடரொளி திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி (இரா.அன்பழகனின் மகள் மணவிழா) இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார் (மலேசியா, 23.11.2019)[4]. அதாவது, “மணவிழாவில் பங்கேற்கிறார்,” என்ற நிலையில் உள்ளபோது, என்ன பெரிய வக்காலத்து. அதே போல, தாலி அறுப்பு விழாக்கள் நடத்த வீரமணியை கூப்பிடுவார்களா? உண்ணா நோன்பிற்கு எதிராக உண்ணும் நோன்பு நடத்துவார்களா? ஐயப்பனைத் தூற்றியது எல்லாம் ஞாபகம் இல்லையா?

Veeramani, Malaysia programme cancelled-attended marriage

ஊடகங்கள், போலி நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், இந்துக்களைத் தான் தாக்கி வருகின்றனர்: பிபிசி தமிழ் ஒட்டுமொத்தமாக இங்கு எதிர்ப்பு வாதிகளுக்கு துணை போகும் வகையில் செயல்பட்டு வருவது பத்திரிகா தர்மத்திற்கு விரோதமானது. இந்த வீரமணி விஷயத்தில் பாரபட்சமாக பேட்டி எடுத்து, கருத்துகளை வெளியிட்டுள்ளது. வீரமணி பலமுறை மலேசியாவிற்கு வந்து செல்கிறார் என்ற கதைகளை, அன்பழகன் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இப்பொழுது சட்ட ரீதியில் பல விஷயங்கள் அணுக வேண்டிய நிலை உள்ளது. இந்து தூஷணம் செய்பவர்கள் மீது புகார் கொடுத்தாலும் அதன் உண்மைத் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்காமல், சட்ட ஓட்டைகளை வைத்து, வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அதேபோல வீரமணி, இந்தியாவில் பேசலாம் மலேசியாவில் பேசலாம், பொதுக்கூட்டத்தில் பேசலாம் அல்லது மூடப்பட்ட உள்ளரங்கைளில் பேசலாம். ஆனால், இந்துவிரோத பேச்சுகளை தொடர்ந்து செய்து வருவது நோக்கத்தக்கது. ஈவேரா முன்னர் பேசிவிட்டார், எழுதிவிட்டார், புத்தகங்கள் வந்துவிட்டன, அதைத்தானே நானும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாலும், அவர்கள் வன்முறையை வைத்து மிரட்டி தான் இவ்வளவு ஆண்டுகளாக வழக்குகளை பதிவு செய்யாமல் செய்துள்ளனர். அரசு ஆட்சி அதிகாரம் மற்றும் அதிகாரிகள் அவர்களுடைய விசுவாசமான ஊழியர்களாக இருப்பதால் தான், இவ்வாறு தொடர்ந்து இந்துக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள், நொறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இந்நிலை யாருக்கும் நல்லது அல்ல.

© வேதபிரகாஷ்

24-11-2019.

பெரியார் ஜி டி நாயுடுக்கு வாழ்த்து கடவுளின் பெயரால் 1932. with English

 

[1] பிபிசி.தமிழ், இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து, 22 நவம்பர் 2019.

[2] https://www.bbc.com/tamil/global-50516687

[3] விடுதலை, மலேசியாவில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு, சனி, 23 நவம்பர் 2019 15:19.

[4] https://viduthalai.in/e-paper/191755.html

புத்தர், ஈவேரா சிலை ஊர்வலங்கள், திராவிட முகமூடிகள், இந்துவிரோதிகளின் உலாக்கள், ஏற்றுக் கொள்ளாத மக்கள்!

செப்ரெம்பர் 10, 2019

புத்தர், ஈவேரா சிலை ஊர்வலங்கள், திராவிட முகமூடிகள், இந்துவிரோதிகளின் உலாக்கள், ஏற்றுக் கொள்ளாத மக்கள்!

EVR procession Viduthalai 2018

சென்ற வருட வீரமணி வீரம் மறைந்து விட்டது. இப்பொழுது, உதிரிகள் கிளம்பியுள்ளன.

ஈவேர சிலை ஊர்வலமாம்! பிள்ளையார் உடைத்தவனுக்கே சிலை மற்றும் ஊர்வலம்!

ஈவேர சிலை ஊர்வலமாம்! பிள்ளையார் உடைத்தவனுக்கே சிலை மற்றும் ஊர்வலம்!

புத்தரைப் பற்றித் தெரியாத பித்தர்களின் வன்முறை தூண்டும் ஊர்வலம் புஸ்வாணம் ஆகியது

புத்தரைப் பற்றித் தெரியாத பித்தர்களின் வன்முறை தூண்டும் ஊர்வலம் புஸ்வாணம் ஆகியது

இந்துவிழாக்களுக்கு எதிராக நடத்தப் படும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் முதலியன: இந்துக்கள் ஒரு விழாவோ, பண்டிகையோ கொண்டாடினால் அது நாத்திக வாதிகளுக்கு சுத்தமாக பிடிக்காது. பகுத்தறிவு பேசும் இவர்கள் மற்ற மத திருவிழாக்களை இணைந்து கொண்டாடிவிட்டு இந்து மத திருவிழாக்களை மட்டும் விமர்சனம் செய்வதுண்டு[1]. உண்ணாவிரதம் என்றால் உண்ணும் விரதம் இருந்ததுண்டு. ஏனெனில், அதில் பிரச்சினையே இல்லை, சாப்பிடுவதற்கே கூட்டம் வந்தது. அதனால், திக அதை கைவிட்டது. ரம்ஜான் நோன்பில் கஞ்சி குடித்து, கருணாநிதி, ஏகாதசியில் நன்றாக உண்பார்கள் என்று கமென்ட் அடித்ததும் தெரிந்த விசயமே. தந்தை பெரியார் சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவிப்போம் என்று, விடுதலையில் சென்ற வருடம், அதிரடியாக செய்தி வெளிவந்தது, ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று விநாயகர் சிலை கடலில் கரைக்கும் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நூதன போராட்டம் ஒன்றை பெரியார் அமைப்பினர் நடத்தினர்.

அரசியல் விநாயகன் என்று, அரசியல் செய்து, மாட்டிக் கொண்ட பகுத்தறிவுகள்

அரசியல் விநாயகன் என்று, அரசியல் செய்து, மாட்டிக் கொண்ட பகுத்தறிவுகள்

வன்முறையைத் தூண்டும் வீராப்புப் பேச்சு கைதில் முடிந்தது

வன்முறையைத் தூண்டும் வீராப்புப் பேச்சு கைதில் முடிந்தது

ஊர்வலத்தில் புத்தரை பற்றி முழக்கமிடாமல் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்: சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் அமைப்புகள் நூதன போராட்டம் நடத்தின[2]. அதாவது சுற்றுச்சூழல் என்ற முகமூடி! விநாயகர் சிலை ஊர்வலகத்திற்கு மாற்றாக, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புத்தர் ஊர்வலம் நடத்தப்பட்டது[3]. ஆனால், கூட்டம் இல்லை. விநாயகர் சிலை ஊர்வலத்தால் பல இடங்களில் அமைதி குலைவதாக குற்றம்சாட்டிய அவர்கள், சமத்துவத்தை போதித்த புத்தர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றதாக தெரிவித்தனர். ஆனால் புத்தர் சிலை ஊர்வலத்தில் புத்தரை பற்றி முழக்கமிடாமல் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இவர்கள் பேச்சு தான், வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தது. மேலும், ஒரு வாகனத்தில் பெரிய அளவிலான அலங்கரிக்கப்பட்ட பெரியார் சிலையையும், கைகளில் சிறிய சிலைகளையும் கையில் ஏந்தியபடி தொண்டர்கள் உற்சாகத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர், என்று செய்தி வெளியிட்டாலும், பொது மக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. உண்மையில் அவர்களது தாய், சகோதரிகள் கண்டித்ததும் தெரிகிறது.

புதியதாக முளைத்துள்ள தலைவன்கள், பிரிவினைவாத பின்னணிகள்!

புதியதாக முளைத்துள்ள தலைவன்கள், பிரிவினைவாத பின்னணிகள்!

புதியதாக முளைத்துள்ள தலைவன்கள், பிரிவினைவாத பின்னணிகள்!

புதியதாக முளைத்துள்ள தலைவன்கள், பிரிவினைவாத பின்னணிகள்!

ஏன் ஊர்வலம் – விளக்கம்[4]: கலைஞர் செய்தி மட்டும் இதனை பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது. இதிலிருந்து அதன் பாரபட்சமும், ஊடக அதர்மமும் வெளிப் படுகிறதூ. ஊர்வலத்தினை தொடக்கி வைத்த பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் பேசும்போது[5], “தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் இந்துத்துவ இயக்கங்கள் மதக் கலவரத்தை தூண்ட எண்ணுகின்றன. குறிப்பாக, பிற மதத்தினர் வாழ்கின்ற பகுதியில் கட்டாயமாக விநாயகர் சிலைகளை கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இவர்களிடம் உண்டு. இவர்கள் காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறி, கலவரம் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதை கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் காவி கூட்டமானது வணிகர்கள், மக்களை அச்சுறுத்தி பணம் வசூல் செய்வது அதிகரித்துவருகிறது. அரசு இதை கவனத்தில்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விநாயகர் ஊர்வலத்தை தடைசெய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும்,” என்று கூறினார். ஆனால், மற்ற வீடியோக்களில் உள்ள கோஷங்கள், பேச்சுகள் மோடி-அரசு எதிர்ப்பு, இந்துவிரோத பாணிகளில் இருந்தன[6]. இந்த வீடியோவில் பேசும் நபர், அரசியலைத் தான் பேசியுள்ளது தெரிகிறது[7].இந்த வீடியோ பேச்சு, இந்துவிரோதத்தை வெளிப்படுத்துகிறது[8].

ஐந்து பேர் பின்னணியில் ஏழு பேர் ஊடக வித்தை காட்டும் தந்திரம்

ஐந்து பேர் பின்னணியில் ஏழு பேர் ஊடக வித்தை காட்டும் தந்திரம்

Buddha procession to incite riot-6, umapathy

போலி பௌத்தம் பேசும் நாத்திகர்கள், இந்துவிரோதிகள்: இவர்களது போலித் தனம் தான் வெளிப்பட்டுள்ளது. ஏனெனில், கோடிக்கணக்கில் மக்கள் கொண்டாடி வரும் நேரத்தில், இந்த 30-50 பேர் வேண்டும் என்றே, பிரச்சினை உண்டாக்கி, வன்முறையைத் தூண்டி, கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற ரீதியில் பேசி, செயல்பட்டது வெளிப்பட்டுள்ளது. மேலும், கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடிப்பதாக கூறும் பகுத்தறிவுவாதிகள் இந்துமத கடவுள்களை விமர்சனம் செய்வது மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வழிபடும் கடவுளாக உள்ள புத்தருக்கு ஊர்வலம் நடத்தி புத்தர் மீது திடீர்ப்பாசம் கொண்டது கேலிக்குரியதாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது[9] என்று ஒரு இணைத்தளமே கருத்தை வெளியிட்டுள்ளது. ANI யும் இவர்களது இரட்டைவேடத்தை சுட்டிக் காட்டியுள்ளது[10]. ஏனெனில், அவர்கள் பேசியது, நடந்து கொண்டது முரண்பாடாக இருந்தது[11].

DK Buddha procession 08-09-2019

திராவிடத்துவ பித்தர்கள், போலிகள் யோசிக்க வேண்டும்: பௌத்தமும் தெரியமல், ஈவேராவைப் பற்றியும்தெரியாமல், இந்த கிருக்கர்கள் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு விசயம் தெரிந்தால், கீழ்கண்டவைப் பற்றி யோசித்துப் பார்க்கட்டும்:

 1. புத்தர் பெயரால் ஊர்வலம் நடத்துகிறோம் இந்து விரோதிகள் என்றால், புத்த பூர்ணிமாவில் நடத்துங்கள் என்று இந்துத்துவ வாதிகள் ஐடியா கொடுப்பது வேடிக்கை!
 1. ஏன் மகாவீரர் பெயரில், அவரது ஜெயந்தி தினத்தில் நடத்துங்கள் என்று ஐடியா கொடுக்க முடியுமா, ஜைனர்கள் இந்த கூட்டங்களை ஏற்பார்களா?
 1. எப்படி ஈவேராவுக்கும் அம்பேத்கருக்கும் ஒத்துப் போகவில்லையோ, பௌத்தத்திற்கும் பெரியாரிஸத்திற்கும் எந்த சம்பதமும் இல்லை.
 1. ஈவேரா பௌத்த மதம் மாறுகிறேன் என்று பிடிவாதமாக பர்மா வந்த போது, அத்தகைய விசயங்களில் தலையிட வேண்டாம் என்றார் அம்பேத்கர்.
 1. பெரியாரிஸ்டுகள் பௌத்தத்தைக் கடை பிடிக்க முடியாது, ஏனெனில், அவர்கள் புத்தர் சொன்னதை கடைப் பிடிக்க முடியாது, மாட்டார்கள்!
 1. ஈவேராவைப் பற்றி முழுமையாக உண்மைகளை வெளியிட தைரியம் இல்லாத இந்த கூட்டத்தினருக்கு, விளம்பரம் பெரிதாகி விட்டது.
 1. ஈவேரா சிலைக்கு மாலை போட்டும் அர்ச்சகர் வேலை கிடைக்கவில்லை, புத்தரை ஊர்வலம் கொண்டு சென்றாலும், அகிம்சை வராது!
 1. புத்தர் பன்றி கறி சாப்பிட்டது போல, இந்த போலிகள், அரைவேக்காட்டுகள், பெரியாரிஸ்டுகள், பன்றி கறி தின்ன தயாரா?
 1. புத்தர் விழா கொண்டாடும் போது, பன்றி கறி பிரசாதம் கொடுக்க வேண்டியது தானே, பன்றிக்கு பூணூல் போட்டது போல புத்தருக்கு போடுவார்களா?
 1. கிருஸ்துமஸ் அன்று சிலுவையில் அறைந்து கொண்டு ஊர்வலம் நடத்துவார்களா? மற்ற நாடுகளில் நடத்துகிறார்களே?

© வேதபிரகாஷ்

09-09-2019

EVR procession ANI

[1] தமிழ்.வெப்.துனியா, புத்தர் மீது திடீர்ப்பாசம் கொண்ட பெரியார் அமைப்பினர், Last Modified திங்கள், 9 செப்டம்பர் 2019 (07:44 IST)

[2] தினத்தந்தி, விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு : புத்தர் சிலை ஊர்வலம் நடத்திய பெரியார் அமைப்புகள், பதிவு : செப்டம்பர் 09, 2019, 07:27 AM.

[3] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/09072702/1051202/Buddha-Statue-Vinayagar-Statue.vpf.

[4] கலைஞர் செய்தி, விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் மதக் கலவர முயற்சிஎதிர்த்து பெரியார் சிலை ஊர்வலம் நடத்திய பெ.தி.வினர், PNS Pandian, Updated on : 9 September 2019, 01:54 PM.

[5] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2019/09/09/periyar-statue-rally-against-vinayagar-chathurthi-procession-in-chennai

[6] https://www.youtube.com/watch?v=XZ879MOCRLo

[7] https://www.youtube.com/watch?v=GiKy6ZLAN4Y

[8] https://www.youtube.com/watch?v=KAbX2kAJtIQ.

[9] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/buddha-statue-rally-against-vinayagar-statue-rally-119090900004_1.html

[10] ANI, TN: DVK stage protests against Vinayak procession, accuse BJP of disrupting religious harmony, Source : ANI, Last Updated: Mon, Sep 09, 2019 10:35 hrs

https://www.aninews.in/news/national/general-news/tn-dvk-stage-protests-against-vinayak-procession-accuse-bjp-of-disrupting-religious-harmony20190909103545/

[11] He clarified that the DVK did not protest against any particular culture. Several people gathered here with black flags, a statue of Buddha and posters which read, “this is not North India” and raised slogans. Protesters said that they support religious harmony but the procession was being used by political parties for their ulterior motives.

https://www.aninews.in/news/national/general-news/tn-dvk-stage-protests-against-vinayak-procession-accuse-bjp-of-disrupting-religious-harmony20190909103545/