Posts Tagged ‘முஸ்லிம்’

நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!

ஏப்ரல் 2, 2016

நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!

சாவதற்கு முன்னார் கலிமா சொல்லி மரணிப்பேன் - பெரியார்புதிய கட்டுக்கதைகளை உருவாக்கும் முகமதியர்கள்: பெரியாரின் பேச்சு, எழுத்து, ஏற்கெனவே அச்சில் வந்துள்ளவை முதலியவை இவைதான் என்று அதிகாரப்பூர்வமாக தொகுத்து, ஆதாரங்களுடன் வெளியிடாததால், குழப்பங்கள், திரிபுகள் மற்றும் கட்டுக்கதைகள் பெருகி வருகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணமாக “ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்”, என்று துலுக்கர்கள் இப்பொழுது இன்னொருக் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டிருக்கின்றனர்[1]. பெரியாரின் ஒலிப்பதிவு பேச்சிற்கும், அச்சில் உள்ள பேச்சுகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது. உதாரணத்திற்கு பெரியார் இஸ்லாம் பற்றி பேசியதாக இணைதளங்களில் வரும் பேச்சுகள்[2]. எப்படி பல வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன, விடுபட்டுள்ளன, சேர்க்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம். பெரியாருடைய பேச்சு, சுத்தமான தமிழாக இல்லை என்பது தெரிந்த விசயம், அப்பொழுது வழக்கில் உள்ள சமஸ்கிருதம் கலந்த சொற்களும் அவரது சொற்பிரயோகத்தில் இருந்தது[3]. அதனால், ஒலிநாடா பேச்சைக் கேட்டு, அச்சில் உள்ளதைப் படித்துப் பார்த்தால் வித்தியாசங்களை அறிந்து-புரிந்து கொள்ளலாம். இதனால், பெரியாரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், அவ்வாறுதான் அவர் பேசினாரா, எழுதினாரா என்று சரிபார்க்க, அதிகாரப்பூர்வமான புத்தகம் (edited from the original manuscripts) இல்லை.

இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டைமுகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[4]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்.  “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார். இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[5]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[6]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா, எதிர்த்தாராஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929). ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை.  ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[7].

EVR listening to Rajaji with due respect and attention

இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்றது (20-10-1935): இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்:  தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார். (குடியரசு 20-10-1935), அதாவது, இக்கணக்கை வைத்துப் பார்த்தால், 1926லேயே அப்படி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர் அம்மாதிரியெல்லாம் பேசுவது வழக்கமாதலால், அதனை பெரிதாகவோ, முக்கிய விசயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

பெரியார் தாசன் புத்தகம்இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற அம்பேத்கர் தனது முடிவை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று அறிவுரை கூறிய .வே. ரா (குடியரசு 20-12-1935): தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம் அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’, என்று கூறுகிறார். (குடியரசு 20-12-1935). உண்மையில், அம்பேத்கரது திட்டம் முதலியன இவருக்குத் தெரியாது.

பெரியார் தாசன் புத்தகம்.2இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று சபதம் செய்த ஈவேரா (குடியரசு 31-05-1936): மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார். (குடியரசு 31-05-1936) அதாவது, இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்று தெரிகிறது. ஆனால் அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்! “நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து – இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்”. (விடுதலை 09-02-1950).

பெரியார் முஸ்லிம்சட்டநுணுக்கங்கள் அறிந்த அம்பேத்கரும், இடத்திற்கு ஏற்றப்படி பேசும் ஈவேராவும்: அம்பேத்கர் மதம் மாறியபோது, சட்டப்படி “இந்துவாக” இருக்கும் நிலையில், இடவொதிக்கீடு பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற முறையில், அவர் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார். பெரியாரும், வலிய வந்து, பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டு, பௌத்தத்தைத் தழுவுகிறேன் என்ற போது, அம்பேத்கர் விசயங்களை எடுத்துக் காட்டினார். பெரியார் ஒரு அவசரக்குடுக்கைகாரர் என்பது அம்பேத்கர்க்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், பெரியார் இந்துவாகவே இருக்க தீர்மானம் செய்து கொண்டார். டிசம்பர் 24, 1973ல் இறந்தபோது, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார்.

© வேதபிரகாஷ்

02-04-2016

[1] http://bushracare.blogspot.in/2013/09/5.html

[2] https://www.youtube.com/watch?v=2Ie5DrlDN3M

[3] ஒலி மற்றும் குடி அரசு முதலியவற்றில் கேட்டும், படித்தும் புரிந்து கொள்ளலாம், “ஆமா…..வெங்காயம்”!

[4] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[5] https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[6] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

[7] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013,  http://bushracare.blogspot.in/2013/09/5.html

திராவிட இயக்கம், கேடு விளைவிக்காத கட்சி, அக்கட்சியுடன் கூட்டணி, கருணாநிதி: திராவிட மாயையில் உழலும் வயோதிக அரசில் சாணக்கியர்கள்!

திசெம்பர் 15, 2013

திராவிட இயக்கம், கேடு விளைவிக்காத கட்சி, அக்கட்சியுடன் கூட்டணி, கருணாநிதி: திராவிட மாயையில் உழலும் வயோதிக அரசில் சாணக்கியர்கள்!

திராவிட  இயக்கத்துக்கு  கேடு  விளைவிக்காத  கட்சியுடன்  கூட்டணி:   கருணாநிதி[1]: கருணாநிதியின் சுயசரிதை நூலான “நெஞ்சுக்கு நீதி’ 6-ஆம் பாகம் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறவுள்ள திமுகவின் பொதுக்குழுவில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதை சிந்தித்துச் செயலாற்றுவோம்[2]. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்; எந்தக் கட்சியுடன் சேரமாட்டோம் என்பதை கடந்த கால அனுபவத்தில் நியாயமாக சிந்தித்துப் பார்த்து நீங்களே (திமுகவினர்) முடிவு செய்து கொள்ளுங்கள். தற்போது எந்த அணியோடு கூட்டணி அமைப்போம் என்று கேட்காதீர்கள். அது பிணியாகி விடும். ஆனால், நாம் கூட்டணி அமைக்கும் அணி திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்காத அணியாக இருக்கும் என்பதை மட்டும் கூறுகிறேன்”, என்று கருணாநிதி சொன்னது இன்னொரு திராவிட மாயையின் தோற்றன் எனலாம்[3]. கடந்த கால அனுபவத்தில் நியாயமாக சிந்தித்துப் பார்த்து முடிவு செய்து கொள்ள திமுகவினருக்கு எந்த அதிகாரமும் இல்லை. திமுகவினரைக் கேட்டால், பெரும்பான்மையானவர் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்வார்கள். மேலும், ஜெயலலிதா முந்தும் முன்னர், தாம் முந்திவிடலாம் என்றும் ஆலோசனை கூறுவர்[4].

எந்தக்  கட்சியுடன்  கூட்டணி  அமைப்போம்; எந்தக் கட்சியுடன்  சேரமாட்டோம்: இப்படி கருணாநிதிக்கே உரிய பேச்சைக் கேட்டு, பழக்கமாகி விட்டவர்களுக்கு, பாம்பின் கால், பாம்பறியும் என்ற ரீதியில் தான் இருக்கும். 2ஜி ஊழல் கூட்டணியிலிருந்து காங்கிரஸோ-திமுகவோ பிரிந்துவிட முடியாது, இதுதான் உண்மை. இப்பணத்தை செலவழித்து, காங்கிரஸ் அதிரடியாக செயல்பட ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதை முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி அமையாது என தெரிவித்துள்ளதிலிருந்து அறியலாம்[5]. கூட சிதம்பரம் அவர்கள் வரும் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்[6]. பலவித கட்சிகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். இப்பொழுது காங்கிரசுக்கு பெரிய சவாலாக இருப்பவர் மோடிதானே தவிர, பிஜேபி கூட இல்லை என்ற நிலை வந்து விட்டது. அந்நிலையில் மோடியை இன்னொரு வாஜ்பேயியாக மக்களும், அரசியல்வாதிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றுதான், மோடி-விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆகவே, இவ்விசயத்தில் கருணாநிதி மோடியுடன் ஒட்டி வரமுடியாது. காங்கிரஸுடன் சென்றால், இப்பொழுதைக்கு ராகுல் மட்டும் தான் எதிராக உள்ளார், அதனை சோனியா பார்த்துக் கொள்வார்.

கமலாலயம்  குளத்தில்  நீந்தி  களித்த  கருணாநிதி: திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் சிறுவயதில் கருணாநிதியும் அவர் நண்பர் தென்னனும் நீந்தி களித்தனர். பாதி தூரத்துக்கு மேல் நீந்த முடியாமல் திரும்பிவிடலாம் என்று தென்னன் கூறினார். ஆனால் திரும்ப வேண்டாம் என்று கூறி எதிர்நீச்சல்போட்டு கருணாநிதி கரை சேர்ந்தார். கமலாலயத்தை அன்றே கருணாநிதி கடந்தவர் என்று அழுத்தம் கொடுத்துப் பேசினார். கமலம் என்றால் தாமரை. அது பாஜக சின்னத்தைக் குறிக்கக்கூடியது. பாஜகவின் அலையைக் கருணாநிதி கடப்பார் என்பதேயே வைரமுத்து இவ்வாறு குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய கவிஞர்கள், பேச்சாளிகளின் கருத்தை ஏற்றுக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது எனலாம், ஏனெனில், இப்பொழுதுள்ள இளைஞர்கள் உண்மையிலேயே சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நடக்காதத்தை கேட்கும் கேஜரிவால் மாதிரியான திமுக பொதுக்குழுவின் 23-தீர்மானங்கள்[7]: 15-12-2013 செயல்கூட்டத்தின் 23 தீர்மானங்கள்[8] / அம்சங்கள், கேஜரிவாலின் கோரிக்கைகள் போலத்தான் இருக்கின்றன[9]. இவையெல்லாம் நடக்காது என்று தெரிந்தும், வெறுமனே கோரிக்கைகளகவும், தீர்மானங்களாகவும் வைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஆட்சியில் இருக்கும் போது செய்யாததை, ஆட்சியில் இல்லாதபோது பேசுவது மடத்தனமானது. விளம்பரத்திற்காக அவ்வாறு பேசலாம், செய்திகள் ஆக்கி விற்பனை செய்யலாம். ஆனால், மக்களிடம் எடுபட முடியாது. கேஜரிவாலைப் போல, காங்கிரஸுக்கு எதிரான ஓட்டுகளைப் பிரிப்பதில், கூட்டணி அமைக்க, காங்கிரஸின் ஆதரவான காட்சிகள் வேலை செய்யும். இதில் தேசிய அளவில் காங்கிரஸின் பங்கும் வெளிவருகிறது. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸைத் தோற்கடித்தது என்பதை விட, பிஜேபி பதவிக்கு வருவதைத் தடுத்துள்ளது எனலாம். ஏனெனில், பிஜேபி-காங்கிரஸ் என்று தேர்தல் இருந்திருந்தால், நிச்சயம் பிஜேபி அமோகமாகவே ஜெயித்திருக்கும்.

 

திராவிட இயக்கம்  இன்றளவில்  செல்லாத  காசாகி  விட்டது  எனலாம்: பிஜேபியுடன் 1999ல் கூட்டு வைத்துக் கொண்டபோது, திராவிடர்களுக்கு “திராவிட இயக்கம்” கொள்கை மறந்து விட்டது போலும். பிறகு, சுத்தமான 100% “ஆரிய அம்மையார்” சோனியாவுடன் கூட்டு வைத்து 2ஜி கொள்ளையடித்தபோதும், திராவிடத்துவம் ஒன்றும் மனசாட்சியைக் குத்திக் காட்டவில்லை[10]. மாறன் குடும்பம் முழுவதுமாக பார்ப்பன மயமாக்கப்பட்டு விட்டது; கருவின் மூன்றாம் தலைமுறையும் ஆரியமயமாக்கப் பட்டுவிட்டது. இனி திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்காத அணி என்றால், எந்த தங்கமாளிகையில் போய் வாங்குவது என்று தெரியவில்லை. ஊழல் என்ற பிணியில் ஊறியிருக்கும் போது, ஊழலில்லாத அணியை எங்கும் செய்து பார்க்க முடியாது. இன்று மதவாதத்தை விட ஊழல் ஒரு பெரிய பிரச்சினையாகி உள்ளது. “குற்றவாளி” அரசியல்வாதிகள் என்ற அளவுகோல் வரும் போது, ஊழல்தான் அதனை அடையாளம் காட்டுகிறது. காங்கிரஸ்-திமுக அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. முஸ்லிம்களே மாறிவரும்போது, திராவிடமாயை மொத்தமாகவே மறைந்து விடும்  நேரம் வந்தாகிவிட்டது எனலாம்.

வேதபிரகாஷ்

© 14-12-2013


[1] தினமணி, திராவிட  இயக்கத்துக்கு  கேடு  விளைவிக்காத கட் சியுடன்  கூட்டணி:  கருணாநிதி, By dn, சென்னை, First Published : 15 December 2013 04:25 AM IST

[4] இல. கணேசன் ஜெயலலிதா பிரதம மந்திரி வேட்பாளர் என்பதால், அதிமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது என்று அறிவித்தது, ஒரு யுக்தியே தவிர உண்மையில்லை. இருப்பினும், ஜெயலலிதாவின் துரோகத்தை உண்மையான பிஜேபிக்காரர்கள் மறக்க மாட்டார்கள்.

[10] ஜெயலலிதாவை திக-திமுகவினர் செல்லமாக “ஆரிய அம்மையார்” என்று குறிப்பிடுவதுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போதெல்லாம், வீரமணி “ஆரிய-திராவிட போராட்டம் தொடர்கின்றது” என்று சிறுபுத்தகத்தைப் போடுவது வழக்கமாக இருக்கிறது என்பதை திராவிட சித்தாந்திகள் அறிவர்.