Posts Tagged ‘தயாநிதி’

எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு, பிள்ளைக்குட்டிகளோ பத்து தினுசு – திராவிடக் குடும்பத்தின் பிரச்சினை – தமிழர்கள் கற்றுக் கொள்ள பாடமா, பகுத்தறிவை பிரித்தறிய சந்தர்ப்பமா (2)

மே 8, 2013

எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு, பிள்ளைக்குட்டிகளோ பத்து தினுசு – திராவிடக் குடும்பத்தின் பிரச்சினைதமிழர்கள் கற்றுக் கொள்ள பாடமா, பகுத்தறிவை பிரித்தறிய சந்தர்ப்பமா (2)

எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு, பிள்ளைக்குட்டிகளோ பத்து தினுசு: திராவிடத் தலைவர் கருணாநிதி குடும்பம் பெரியது, அதனால், அவரின் குடும்பப் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கிறது. மகன்கள்-மகள்கள்; பேரன்கள்-பேத்திகள் என்று வளர்ந்து விஸ்தரிக்கப்பட்டுள்ள குடும்பம், ஆசியாவிலேயே மிகவும் செழிப்பான, வளமான, செல்வமிக்கக் குடும்பங்களில் ஒன்று புகழும் பெற்றுள்ளது[1]. அந்நிலையில், அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் தவிர, இவ்வாறான சொத்துப் பிரச்சினைகளும் வருகின்றன[2].னஆட்சியில் இருக்கும் போது வாரிசி சண்டை வந்தது, தொடர்கிறது. அடுத்தது, 2014 தேர்தலை குறிவைத்து நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. 2ஜி பணம் எங்கெல்லாம் சென்றுள்ளது, எப்படி பட்டுவாடா ஆகியிருக்கிறது என்பது இவ்வாறும் வெளிவரலாமோ என்னமோ?

07-05-2013 – தந்தை மகன் மீது கொடுத்த புகார் வாபஸ்: மிகவும் பரபரப்பாக செய்திகளில் வந்த, திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, தனது மகன் அறிவுநிதி தன்னை மிரட்டுவதாக அளித்திருந்த புகாரை திருப்பப் பெறுவதாக சென்னை பெருநகர காவல்துறைக்கு அஞ்சல் மூலம் பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பியுள்ளார்[3]. இதையடுத்து முத்துவின் புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதைக் கைவிடுவது குறித்து போலீஸ் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். பாவம், சென்னை போலீஸாருக்கு இத்தகைய வழக்குகளையும் தினசரி விசாரிக்க வேண்டியுள்ளது. சிறப்பு நீதிமன்றம் போல, கருணாநிதி குடும்பத்தாரின் புகார்கள், வழக்குகளை விசாரிக்க தனி போலீஸ் நிலையத்தையும் அமைத்து விடலாம்.

29-04-2013 – குறை தீர்க்கும் கூட்டத்தில் மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரி கொடுத்த புகார்: சென்னை பெருநகர காவல்துறையின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கடந்த 29ம் தேதி கலந்துக் கொண்ட மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரி, தனது மகன் அறிவுநிதி மீது புகார் தெரிவித்து இரு மனுக்களை அளித்தார்[4]. அதில் மு.க.முத்து தான் எழுதி கொடுத்தனுப்பிய மனுவில், தங்களிடமிருந்த கோபாலபுரம் வீட்டை அறிவுநிதி ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாகவும், அதனால் தாங்கள் கஷ்டப்படுவதாகவும் கூறியிருந்தார். மேலும் அறிவுநிதியிடமிருந்து அச்சுறுத்தலும், மிரட்டலும் இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்[5]. ஆனால், இப்பொழுது ஒன்றுல் இல்லை என்றாகி விட்டது.

தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட புகார்: முத்துவின் புகார் மனுவை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் சியாமளாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மு.க.முத்துவிடமும், சிவகாமசுந்தரியிடமும் நேரடியாக விசாரணை செய்தனர். விசாரணையின்போது, முத்து, புகாரில் தான் குறிப்பிட்டது அனைத்தும் உண்மையே என கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

30-04-2013 அன்றே ஆரம்பித்த விசாரணை: கடந்த 30ம் தேதி, ஒரு உதவி ஆணையர் தலைமையில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், மு.க.முத்துவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு, மு.க.முத்து உறுதியாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அரசு வழக்கறிஞருடன் போலீசார் ஆலோசனை செய்தனர். காவல் உயர் அதிகாரிகளிடம் இருந்து, சிக்னல் கிடைத்தவுடன், வழக்கு பதிந்து, அறிவுநிதியை கைது செய்து சிறையில் அடைக்க, போலீசார் திட்டமிட்டனர். இந்த புகார் தொடர்பாக, கைது செய்யாமல் இருப்பதற்காக, அறிவுநிதி தரப்பு முன்ஜாமின் பெறவும் திட்டமிட்டது[6].

கருணாநிதியின் குடும்பப் பிரச்னை, அரசின் அனுமதி, முதலிய சட்ட நுணுக்கங்கள்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பப் பிரச்னை என்பதால், இது தொடர்பாக அரசின் அனுமதியை சென்னை காவல்துறை கேட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும், அறிவுநிதி மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[7]. நல்லவேளை, ராம்ஜெத் மலானியைக் கூப்பிடாமல் விட்டுவிட்டனர். தமிழகத்தில் மிகப்பிரிய சட்டநுணுக்கமான புகார் இதுவாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

சட்ட வல்லுநர்களின் கருத்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கேட்டனர்: ஆமாம், சொன்னபடி, மிகப்பெரிய பிரச்சினை ஆயிற்றே. இதற்கிடையே, மு.க. முத்து மற்றும் சிவகாமசுந்தரி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அறிவுநிதி மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க அரசு சட்ட வல்லுநர்களின் கருத்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கேட்டனர். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பப் பிரச்னை என்பதால், மேலிட உத்தரவை சென்னை காவல்துறை கேட்டது.

மு.க.முத்து புகார் கொடுத்தது அவமானம், விஷயங்கள் வெளிவந்து விடும் என்ற பயம், கருணாநிதி சமரச்ம்: இந்த நிலையில், கோபாலபுரம் வீட்டிற்கு, முத்து, அவரது மனைவி சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி ஆகியோரை, தி.மு.க., தலைவர் கருணாநிதி அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, மூவரும் கருணாநிதியை சந்தித்தனர். மாதாமாதம், தன் பெற்றோருக்கு அறிவுநிதி ஒரு குறிப்பிட்ட தொகையை குடும்பச் செலவுக்காக தர வேண்டும் என, கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி பணம் கொடுப்பதற்கு, அறிவுநிதி சம்மதம் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் சமரச முயற்சியால், முத்து குடும்பத்தில் நிலவிய தகராறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அறிவுநிதி மீது சுமத்தப்பட்ட புகாரை, விரைவில் சிவகாமசுந்தரி வாபஸ் பெறுவார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

04-05-2013 – குறிப்பிட்டதொகையைதரவேண்டும், கருணாநிதிஉத்தரவு: இதற்கிடையே மு.க.முத்து புகார் கொடுத்ததை அவமானமாக கருதிய கருணாநிதியின் குடும்பத்தினர், முத்துவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். கருணாநிதி குடும்பத்தினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக, மு.க.முத்து தனது புகாரை திரும்ப பெறுவதாக தற்போது கடிதம் அனுப்பி உள்ளார். மு.க.முத்துவிடமிருந்து சென்னை பெருநகர காவல்துறைக்கு திங்கள்கிழமை (05-05-2013) ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், “எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையைப் பேசி தீர்த்துக் கொண்டோம், நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அந்தப் புகாரை திரும்ப பெறுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தாராம். அந்தக் கடிதத்தை எழுதியது முத்துதான் என்பது உறுதி செய்யப்பட்டதால், அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிடுவதா அல்லது விசாரணையைத் தொடர்வதா என போலீஸார் பரிசீலித்து வருகின்றனர்.

2009ல் அறிவுநிதி போலீஸிடம் புகார் கொடுத்திருந்தார்: அறிவுநிதி ஒரு டாக்டராக இருந்தும்[8] காலகட்டத்தில் அரசியலில் தலைதூக்க முயற்ச்சித்தபோது, திமுகவினர் அதனை அடக்கினர். ஒரு விழாவின் போது, அறிவுநிதி வைத்த பேனர்கள், ஒட்டிய போஸ்டர்கள் அனைத்தையும் கிழித்தனர்[9]. அதாவது, வாரிசு அரசியல் மூன்றவது தலைமுறைக்குச் செல்லக் கூடாது என்று ஜாக்கிரதையாக இருந்தது தெரிகிறது. பிறகு செப்டம்பர் 2011ல் இவர் மீதே மற்றவர்கள் புகார் கொடுத்து, முன் ஜாமீனும் பெற்றிருந்தார்[10]. படங்களில் நடித்தது மட்டுமல்லாது, சினிமாக்களை வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வருகிறார்[11]. சரி, இனி சினிமா வியாபாரத்தில் மட்டும் இருந்து விடு என்று சொன்னாலும் கேய்கவில்லை போலும். ஆக பிரச்சினை இத்துடன் முடிந்ததா, அல்லது தொடருமா என்பது தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

07-05-2013


[5] In a complaint filed with the city police commissioner on Monday, M.K. Muthu, the eldest son of DMK chief M. Karunanidhi, and his wife J. Sivagamisundari said that his son and family members had been threatening them. The 65-year-old Sivagamisundari, who is the daughter of the well-known playback singer, Chidambaram S. Jayaraman, said that over the past few months, their son, M.K.M. Arivunidhi, had been demanding money and property that belonged to the couple. She said that she was filing the complaint on behalf of her husband who had been unwell in recent times. She said that her son, along with his wife A. Poongodi and his mother-in-law, had threatened to kill them if they did not hand over all their property and savings. She said that in the complaint, she had urged the Commissioner to provide security for them and protect them from their son and his family members. “A few years ago, our son chased away us from our house in Gopalapuram. He has now rented it out while we stay in a rented, dingy house in Kanathur. This continuous mental torture by our son has been unbearable and due to this, our health also deteriorated,” said Ms. Sivagamisundari said in her complaint.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/m-k-muthu-alleges-torture-by-son/article4668762.ece

[6] தினமலர், 03-05-2013

[8] Arivunidhi, Karunanidhi’s eldest son M.K. Muthu’s son who is a doctor by profession, has turned singer with a film called ‘Perumal’.

http://newshopper.sulekha.com/karunanidhi-s-family-acquires-rights-of-forthcoming-tamil-blockbuster_news_986443.htm

[9] Tamil Nadu chief minister M Karunanidhi’s grandson MKM Arivunidhi on Saturday met the city police commissioner and complained that miscreants had damaged banners and posters put up by his supporters in several parts of the city. The posters and banners were put up to welcome him for a function to be held in Santhome to inaugurate the activities of a private educational trust on Sunday. Arivunidhi is the son of actor M K Muthu, Karunanidhi’s eldest son born to his first wife. Muthu’s family had reunited with the Chief Minister’s family a few months ago after an estrangement that lasted nearly two decades. “It is unfair to tear off the banners and posters. I suspect the handi-work of anti-social elements in this incident. It is not a political function. I have been informed that at least 15 to 20 posters have been damaged along Anna Salai till Saidapet,” Arivunidhi said. “I am not sure if the anti-socials belong to any political party. But this function is a non-political programme organised for a social cause,” Arivunidhi said. Senior musicians M S Viswanathan and Ramamurthy are slated to participate in the musical event, which Arivunidhi will inaugarate on Sunday (05-04-2009).

http://articles.timesofindia.indiatimes.com/2009-04-05/chennai/28037605_1_posters-musical-event-political-party

[10] Chennai, Sep 13 : The Madras High Court today granted anticipatory bail to a Arivunidhi, grandson of DMK Chief M Karunanidhi, who apprehended arrest for alleged trespass, forgery and intimidation. Justice T Sudanthiram directed the petitioner, to appear before the police concerned as and when required. A Venkatesh and Rajesh Annamalai lodged a complaint with the Central Crime Branch against Arivunidhi for alleged intimidation and offence under The Tamil Nadu Public Property (Prevention of Damage and Loss) Act. –PTI

http://www.newsreporter.in/arivunidhi-grandson-of-dmk-cheif-karunanidhi-granted-anticipatory-bail

[11]  the DMK family has in the media and entertainment world (Karunandhi’s grand-nephew Kalanithi Maran owns the Sun Media group). The third generation of the family—Dayanidhi and his cousins—are all involved in the Tamil Cinema industry. His cousins Arivunidhi,Arulnithi Tamilarasu and Udayanidhi Stalin are actors and producers.

http://www.livemint.com/Specials/jOhV5bimnmUayPSSM5WwgK/The-saga-of-Sagayam-and-Durai.html

திராவிடக் குடும்பத்தின் பிரச்சினை – தமிழர்கள் கற்றுக் கொள்ள பாடமா, பகுத்தறிவை பிரித்தறிய சந்தர்ப்பமா?

ஏப்ரல் 30, 2013

திராவிடக் குடும்பத்தின் பிரச்சினை – தமிழர்கள் கற்றுக் கொள்ள பாடமா, பகுத்தறிவை பிரித்தறிய சந்தர்ப்பமா?

கருணாநிதி குடும்பம் பெரியது: திராவிடத் தலைவர் கருணாநிதி குடும்பம் பெரியது, அதனல், அவரின் குடும்பப் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கும். மகன்கள்-மகள்கள்; பேரன்கள்-பேத்திகள் என்று வளர்ந்து விஸ்தரிக்கப்பட்டுள்ள குடும்பம். ஆசியாவிலேயே மிகவும் செழிப்பான, வளமான, செல்வமிக்கக் குடும்பங்களில் ஒன்று புகழும் பெற்றுள்ளது[1]. அந்நிலையில், அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் தவிர, இவ்வாறான சொத்துப் பிரச்சினைகளும் வருவதுண்டு. ஆனால், அதன் பின்னணியில் உள்ள பண்பாடு, கலாச்சார காரணிகளைப் பற்றி கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், கருணாநிதி ஒரு ஆட்சியாளர், சக்தி படைத்தவர், பேச்சால் மக்களைக் கவர்ந்தவர், இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அரசியல்வாதி. இவரது அரசியலை விரும்பாதர்கள் கூட, இவரது பேச்சை விரும்பிய காலம் உண்டு. அந்நிலையில், இவரத் குடும்பச் சண்டைகளும் திராவிட சமுதாயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும், என்ற நிலையில் இப்பிரச்சினை நோக்கப்படுகிறது.

மு..முத்துவின் மனைவி கூறும் புகார்: ஜெ. சிவகாமசுந்தரி தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன், மு.க.முத்துவின் மனைவியும், மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் மூத்த மகளும் ஆவர்[2]. அவர் கூறுவதாவது, “எனக்கு அறிவுநிதி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு, திருமணமாகி விட்டது. அவரும், அவர் கணவரும், எங்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்கின்றனர். சென்னை, கோயம்பேட்டில், என் பெயரில் உள்ள கடை மூலம், மாதந்தோறும், 40,000 ரூபாயும்; என் கணவருக்கு, மாதந்தோறும், 75,000 ரூபாயும் வருமானம் வருகிறது. இதை கொண்டு மருத்துவம் மற்றும் அன்றாட செலவுகளை செய்து வருகிறோம்”.

கார் கூட இல்லை: “என் மாமனார் கருணாநிதி, எங்களுக்கு பல்வேறு வகையில், தொடர்ந்து உதவி புரிந்து வருகிறார். அவர் தான், எங்களுக்கு கார் வாங்கி கொடுத்தார். தற்போது, அந்த காரும் பழுதடைந்து விட்டது[3]. மருத்துவமனைக்கு கூட, ஆட்டோவில் சென்று வருகிறோம். இன்று புகார் கொடுக்க கூட, ஆட்டோவில் தான் வந்துள்ளேன். வயதான நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு, உதவி செய்யாமல், அறிவுநிதி உபத்திரவம் செய்து கொண்டு இருக்கிறார். அறிவு நிதிக்கு, சென்னையில், மூன்று வீடுகளும், கோவையில் ஒரு வீடும் உள்ளன. இது தவிர, பல்வேறு தொழில் செய்து வருகிறார். அவரால் எங்களுக்கு, ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. நல்லபடியாக இருந்தால், அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். நாங்கள், கோபாலபுரத்தில் வசித்த வீட்டையும், எங்கள் காலத்துக்கு பின், அறிவுநிதி தான், அனுபவிக்க போகிறார்.

என் மகன் என்னைக் கொடுமைப் படுத்துகிறான்[4]: திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் மனைவி சிவகாமசுந்தரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்[5].  அதில் சொத்துக்காக மகன் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார். அவரது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: “கானத்தூரில் ஒரு வாடகை வீட்டில் நான் இப்போது வசித்து வருகிறேன். வயதாகிவிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு, இரண்டு முறை, தலையில், அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது நான், மேலும், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் எனது மகன் மு. . மு. அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, மாமியார் யோகமங்களம் ஆகியோர் சொத்துக்காக எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள், ஆள் மூலமாகவும் என்னை மிரட்டி வருகின்றனர். “ஆள் வைத்து அடித்து, எல்லாவற்றையும் பிடுங்கி விடுவேன்’ என, மிரட்டுவதுடன், தகாத வார்த்தைகளால், பேசி வருகின்றனர்.

 கோபாலபுரம் வீட்டிலிருந்து விரட்டப் பட்டேன்: “சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை கோபாலபுரத்தில் எனக்கு வீடு இருந்தது. ஆனால் அந்த வீட்டில் இருந்து என்னையும், என் கணவர் முத்துவையும் அறிவுநிதி விரட்டி அனுப்பிவிட்டார். இதன் பின்னர் அந்த வீட்டை அவர் வாடகைக்கு கொடுத்துள்ளார்[6]. இதனால் வேறுவழியின்றி நாங்கள் இங்கு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். அறிவுநிதி தொடர்ந்து மிரட்டி வருவதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. மேலும் எங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறை எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் எங்களை மிரட்டும் அறிவுநிதி, பூங்கொடி,யோகமங்களம் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மு..முத்து மறுக்கும் புகார்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மு.க. முத்து புகார் மனு கொடுத்த நிலையில் இந்த புகார் மனுவை மறுத்து மு.க. முத்து சார்பில் திங்கள்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தனது மனைவியை யாரோ தூண்டிவிட்டு இந்த புகார் மனுவை கொடுக்கச் செய்துள்ளதாகவும் தனக்கும் மகனுக்கும் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றும் கூறியுள்ளார். எங்களது குடும்பப் பிரச்னைக்கு நானும், எனது மனைவியும், மகனும் பேசி தீர்வு காண்போம் என்றும் கூறியுள்ளார்[7].  மு. க. முத்து கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதிக்குப் பிறந்த மகன். ஒருகாலத்தில் அதிமுகவில் இருந்தவர்[8].

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழியா அல்லது மாற்றுவழியில் செல்வார்களா?: திராவிடப் பாரம்பரியம் வளர்ந்ததிலிருந்து, தமிழக மக்கள் பேச்சில் வல்லவர்களாகி விட்டார்கள். இப்பொழுதே கேட்கவே வேண்டாம், சினிமாவின் போக்கை தமது போக்காக மாற்ரிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழியா அல்லது மாற்றுவழியில் செல்வார்களா என்று பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 60-70 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏன் குடும்பம் சார்ந்த முரண்பாடுகள், பிரழ்சிகள், குற்றங்கள்னாதிகமாக நடக்கின்றன, பெருகி வருகின்றன, அதற்கும் திராவிட சித்தாந்தத்திற்கும் தொடர்பு உண்டா இல்லை நாடெங்கிலும் நடப்பது தான் இது என்று ஒதுக்கிவிடலாமா?

இல்லை, நிச்சயமாக,

  • தமிழகத்தில் “திருமண முறிவு விழாக்கள்” இப்பொழுது தான் நடத்தப் பட்டன;
  • தாலி தேவையில்லை என்ற ரீதியில் விஜய் தொலைக் காட்சியும் தமிழகத்தில் நடத்தியுள்ளது;
  • தாலி அறுக்கும் தமிழர்களும் உருவாகி இருக்கிறார்கள்;
  • அது மட்டுமல்ல, கோயிலில் அம்மன் தாலிகளையும் திருட ஆரம்பித்துள்ளனர்.
  • அம்மனின் முன்பு கால் தூக்கி உட்கார்ந்த நடிகை குஷ்பு தான் கற்பின் விலைய பேசியுள்ளாள்.
  • ஆனால், இந்திய பெண்மையை விலைபேசி வரும் ஆங்கில ஊடகங்கள், இவளின் கற்பழிப்புப் பற்றி கருத்துக் கேட்கின்றனர்.
  • யார் வேண்டுமானாலும், யாருடைய மனைவியை கூட்டி வைத்துக் கொள்ளலாம், என்று நாத்திகம் பேசும் பிரபல நடிகனும் – கமல்ஹஸன் இங்குதான் இருக்கிறான்.
  • கணவனை தூரத்தில் வைத்து விட்டு, இந்த கேடு கெட்ட நடிகனுக்கு முத்தம் கொடுக்கும் தமிழச்சிகளும் உருவாகி இருக்கிறார்கள்.

ஆக இதெல்லாம் திராவிட சித்தாந்தத்தின் சாதனைகள் அல்ல; பெண்மையை சீரழித்த சித்தாந்தம்; அதனால் தான் கற்பை விலை பேசும் குஷ்பு போன்ற நடிகைகளும் இருக்கிறார்கள்.

வேதபிரகாஷ்

30-04-2013


[4] The Hindu, Karunanidhi’s eldest son alleges ill-treatment by heir,
CHENNAI, April 30, 2013, http://www.thehindu.com/news/cities/chennai/karunanidhis-eldest-son-alleges-illtreatment-by-heir/article4667607.ece

[6] “A few years ago, our son chased away us from our house in Gopalapuram. He has now rented it out while we stay in a rented, dingy house in Kanathur. This continuous mental torture by our son has been unbearable and due to this, our health also deteriorated,” said Ms. Sivagamisundari in her complaint.

http://www.thehindu.com/news/cities/chennai/karunanidhis-eldest-son-alleges-illtreatment-by-heir/article4667607.ece

[8] Karunanidhi married Dayaluammal four years after his first wife, Padmavathi, died in 1944, leaving behind a son, M.K. Muthu, a singer-actor who defected to the AIADMK. http://www.outlookindia.com/article.aspx?240630