நான் ராவணனின் ரசிகன்! -கமல்

நான் ராவணனின் ரசிகன்! -கமல்

http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?

நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது, “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன்.அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.

நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம்.

ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது.

ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது.

முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு!

“ராவணின் பரம ரசிகன் நான்.

அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும்.

தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.

அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள்.

எதிர் நாயகனையும் ரசிப்பார்கள்.

ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது.

எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும்.

என்னய்யா இது?

ராவணனுடைய காலம் என்ன?

திரேதாயுகமா?

இதென்ன புருடா?

“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்?” என்று கொக்கரித்தான் அவன்

 

தமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .

பெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது

விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.

 

கதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்

எதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்

மருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத-அடிப்ப்டைவாதம் அது

கதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது!

 

ராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்?

எதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா?

அவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா?

கனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்”  நாடகம் நடக்குமா?

8 பதில்கள் to “நான் ராவணனின் ரசிகன்! -கமல்”

  1. vedaprakash Says:

    ராவணனின் ரசிகன் நான் என்று கூறினார் நடிகர் கமல்ஹாசன்.

    சென்னை, ஆக. 27 நடிகை ஷோபனா நடத்திய நாட்டிய நாடக நிகழ்ச்சியை ஷமாரோ என்ற நிறுவனம் குறுந்தகடாக வெளியீட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடந்தது. கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார்.

    விழாவில் கமல்ஹாசன் பேசியது:

    “”நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்கு தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு பெருமை பேச தெரியாது. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும்.

    சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று இன்றும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது. வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம். ராவணனைப் போல் மாயா நரகாசுரனையும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும்.

    பயிற்சி இல்லாதவன் நடனத்தைப் பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பும் பணிவும் என்னிடம் இருக்கிறது.

    தமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் நன்றாக பாராட்டுவோம். மண்ணுக்குள் இருந்தாலும் வைரம் வைரம்தான் ஆனால் அது வெளிவந்தால்தான் அதற்கு மதிப்பு. வைரத்தைத் தோண்டி எடுப்பது போல திறமைகளைத் தோண்டி எடுக்க வேண்டும்” என்றார் கமல்ஹாசன்.

    விழாவில் ஷமாரோ நிறுவன இயக்குநர் அதுல்மாரு, நடிகர் பிரபு, நல்லி குப்புசாமி, கமலா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  2. devapriyaji Says:

    God Save TAMILS From these Actors whom people think as Idols

  3. devapriyaji Says:

    Ravanan is a Son of Brahmin Rishi and A Siva Bakhtha.

    • vedaprakash Says:

      நாத்திகர்களுக்கு ராமன் பிடிக்காது, ஆனால் ராவணன் பிடிக்காது!

      ராமன் கட்டுக்கதை என்றால், ராவணனும் அப்படியே!

      இதில் உள்ளதுதான் அவர்களின் முரண்பாடு.

      ஏன் “முஹமதியனைப்போல” பெயரை மாற்றிக் கொண்ட “கமல் ஹஸனும்” பிராமணன் தானே?

  4. M. Nachiappan Says:

    This fellow got a honorary Ph.D from Sathyabhama university, as if he has done something great to our culture, heritage, tradition and civilization!

    Thus, in Tamilnadu, the value of “Ph.D” is getting degraded!

    Getting “Ph.D” or prefixing “Doctor” has become a craze in “dravidian” culture!

    When Karunanidhi was CM, in his earlier tenure, thousands of invitation cards printed spending lakhs of rupees were rejected and destroyed, as it did not mention “Doctor” before his other adjectives!

    Such has been the attachment to prefixes!

    Anyway, with all such “decorations” give free, they could not talk properly with decency and decorum, as could be noted from their nonsensical and blasphemous blabbering.

    Can any student of the university from where the Dr was offered could relish such nonsense talked by such “doctorate holders”?

    Would / could they hold their heads high with such rubbish talking and getting more and more honours?

  5. தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல Says:

    […] [8] https://dravidianatheism.wordpress.com/2009/11/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%… […]

  6. தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல Says:

    […] [8] https://dravidianatheism.wordpress.com/2009/11/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%… […]

  7. சினிமாவின் சீரழவுகள்-தீமைகள் Says:

    […] [4] https://dravidianatheism.wordpress.com/2009/11/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%… […]

devapriyaji -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி