சிந்துசமவெளி சித்திர-குறியீடுகள் படும்பாடு: “திராவிட இனவெறியின் மற்றொரு வெளிப்பாடு”.

சிந்துசமவெளி சித்திர-குறியீடுகள் படும்பாடு: “திராவிட இனவெறியின் மற்றொரு வெளிப்பாடு”.

பல இடங்களில் பலவாறு பேசும் வல்லுனர்: ஐராவதம் மஹாதேவன் பல இடங்களில், பல நிகழ்ச்சி அமைப்பாளர்கள் / நிறுவனங்கள் அவற்றின் விருப்பங்களுக்கு ஏற்ப “சிந்துசமவெளி நாகரிகத்தின்” சித்திர வடிவங்களை”ப் (pictogram) பற்றி, தனது கருத்துகளைக் கூறிவருவது நன்றாகத் தெரிகிறது. முன்பு இந்திய வரலாற்றுப் பேரவையில் (Presidential and Sectional Presdential addresses at தார்வார், போபால்) பலமுறை “நேதி, நேதி” (அதுவும் இல்லை, இதுவும் இல்லை) என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் மைக்கேல் விட்ஸெல் (Michael Witzel) வந்திருந்தபோது, அவரது சொற்பொழிவு நிகழ்ச்சிகளை மூன்று இடங்களில் –
1. சென்னை சமஸ்கிருத கல்லூரி (Rigveda and its language: 06-07-2009),
2. சென்னை பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவு (Origin and Development of Language: Language in South Asia: Phylogeny vs. Epigenetics: 09-07-2009 காலை), மற்றும் 3. ரோஜா முத்தையா நூலகம் (09-07-2009 மாலை) – ஏற்பாடு செய்திருந்தார்.

ஐராவதம் மஹாதேவன், ரோஜா முத்தையா அராய்ச்சி நூலகத்தில் “சிந்து ஆராய்ச்சி மையம்”, (Indus Research Centre, Roja Muthaiah Research Library, Chennai) என்பதின் தலைவர். 2008ல் ஆஸ்கோ பார்போல வந்து பேசியுள்ளார். இந்த ஆண்டு, மைக்கேல் விட்ஸெல் வந்துள்ளார். இந்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர் இவர்தாம்.
[Vedaprakash, Steve Farmer accuses Asko Parpola, I. Mahadevan and “The Hindu” too!, see at:
http://vedaprakash.indiainteracts.in/2008/02/19/steve-farmer-accuses-asko-parpola-i-mahadevan-and-the-hindu-too/
http://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/16/steve-farmer-accuses-asko-parpola-i-mahadevan-and-%E2%80%9Cthe-hindu-too/
¬Š§¸¡ À¡÷§À¡Ä, þò¾¨¸Â Å¡¾õ ãÄõ, «ÚÁ£ý ±ýÀ¨¾ ¸¡÷ò¾¢¨¸ ¦Àñ¸Ù¼ý ºõÀó¾ôÀÎò¾¢, ÓÕ¸¨Éì ÌÈ¢ìÌõ ±ý¸¢È¡÷.
விட்ஸெல், சிந்துசமவெளி சிவனை அறவே மறுக்கிறார். ஆனால், ¬Š§¸¡ À¡÷§À¡Ä ±Ú¨Á ¦¸¡õÒ «½¢ó¾ ¸¼×û, þÃñÎ ±Ú¨Á, þÕ-À¡õÒ¸û ÁüÚõ þÕ-Á£ý¸û Ýúó¾¢ÕôÀ¾¡¸ ÌÈ¢ôÀ¢Î¸¢ýÈ¡÷, “In one Indus-type cylinder seal from the Near East, this buffalo-horned deity is surrounded by a pair of buffaloes, a pair of snakes, and a pair of fish. http://www.harappa.com/script/parpola8.html#6
Myles Dillon, Celts and Aryans, Indian Institute of Advanced study, Simla, 1975, Picture.7. It is mentioned as the Horned God (Cernumnos?) as Lord of Animals (Pasupathi)].

போலீஸ் கெடுபிடியுடன் சென்னையில் நடந்த கருத்தரங்கங்கள்: அப்பொழுதும், விட்ஸெல் ரிக்வேத சமஸ்கிருதத்திற்கும், வேத / இந்திய சமஸ்கிருதத்திற்கும் சம்பந்தம் இல்லை, எல்லா மொழிகளும் ஐரோப்பிய நியாண்டர்தால் குரங்கிலிருந்துதான் தோன்றின, பிறகு மற்ற நாடுகளுக்குப் பரவின, என்று சொன்னதை மறுப்பதாகக் குறிப்பிட்டார்.
Gary F. Marcus and Simon E. Fisher, FOXP2 in focus: what can genes tell us about speech and language?, http://www.ai.mit.edu/projects/dm/foxp2.pdf

இருப்பினும், அவற்றைப் பரப்ப “உயிரையும் விடுவேன்” என்று பிடிவாதமாக இருந்தார் [சென்னை சமஸ்கிருத கல்லூரியில் விட்ஸெல்லின் நிகழ்ச்சி நடக்கக் கூடாது, ஏனெனில் அவருக்கு சமஸ்கிருதமே பேசத் தெரியவில்லை என்றபோது, “நான் தற்கொலை செய்து கொண்டு விடுவேன்” என்று மிரட்டி நிகழ்ச்சியை போலீசார் துணையுடன் நடத்தினார்!]. போலீஸுக்கு புகார் கொடுத்து, உள்ளே வருகின்றவர்களை சொதனையிட்டு, அடையாளங்கொள்ளப்பட்டு அதற்குப் பிறகுதான் அரங்கத்தினுள் அனுமதிக்கப் பட்டனர்! மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட தளங்களைப் பார்க்கவும்.
Vedaprakash, The first conference of Michael Witzel of Harvard University, Å¢ÅÃí¸ÙìÌ, ¸£ú¸ñ¼ þ¨½¾Çò¨¾ì ¸¡½×õ:
http://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-first-conference-of-micheal-witzel-of-harvard-university/
Vedaprakash, Iravatham Mahadevan’s Speech: Authorized Version, spoken version, tapped version and my version, For details, see at:
http://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/14/iravatham-mahadevan%E2%80%99s-speech-authorized-version-spoken-version-tapped-version-and-my-version/
Vedaprakash, The Third Conference of Michael Witzel at Pondicherrry, for details, see at:
http://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-third-conference-of-michael-witzel-at-pondicherry/
Vedaprakash, Ontogeny, Phylogeny and Epigeny: Or the revival of Race, racism and Racialism?For details, see at:
http://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/12/ontogeny-phylogeny-and-epigeny-or-the-revival-of-race-racism-and-racialism/
Alec MacAndrew, FOXP2 and the Evolution of Language, §ÁÖõ Å¢ÅÃí¸ÙìÌ, ¸£ú¸ñ¼ þ¨½¾Çò¨¾ì ¸¡½×õ: http://www.evolutionpages.com/FOXP2_language.htm,
Stephen Oppenheimer, Out of Africa: Human roots, in Prospect Magazine, Issue.91, October 2003, http://www.prospect-magazine.co.uk/pdfarticle.php?id=5732
Wilson, A.C., Cann, R.L. The Recent African Genesis of Humans. Scientific American, Vol. 266, April. 1992.
[ஒரு ஜனநாயக நாட்டில், எவ்வாறு இந்தியர்களுக்கு எதிரான பிரசாரம், இந்தியர்களின் இடங்களிலேயே, இந்தியர்களின் மூலமாக அரசியல்-அதிகார அடக்குமுறைகளினால் நடத்தப் படுகின்றன என்பதனை ஊடகங்களும் அறவே மறைத்துவிடுகின்றன]

இங்கும் தனக்கு அதிகமாக வயதாகி விட்டாலும், உடல் நலம் குறைந்து வந்தாலும் “முழுவதுமாக பதிப்பிக்கப்படாமல் உள்ள தன்னுடைய சில சிந்து-குறியீடுகளைப் பற்றிய கண்டுபிடுப்புகளை” பகிர்ந்து கொள்ளவே திருச்சிற்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றார் (ப.3). ஆனால், “ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கம்” என்றதில், பிரியான் வெல்ஸ் என்பவரின் “திராவிடம் சார்ந்த படிப்பதற்கான சில சிந்துகுறியீடுகளை மொழி-சாராத முறையில் கண்டு கொள்ளுதல் மற்றும் அவ்வாறு திராவிடம் என்பதற்கான பிரச்சினைகள்” (Language-Independent Identification for some Indus signs and the Implications for a Proto-Dravidian based Decipherment by Bryan wells) கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது உண்மையினை வெளிக்காட்டுகிறது. ஏனெனில், இவர்தான் விட்செலுடன் சென்னையில் கூட வந்தவர். அவர் விட்ஸெலின் “பாதுகாவலர்” என்றும் குறிப்பிடப் பட்டார். ஆகவே, நிச்சயமாக மஹாதேவன் சொல்லியே அத்தகைய “கூட்டு-ஏற்பாடு” செய்யப்பட்டது என்று தெரிகிறது.

விட்ஸெலும், மஹாதேவனும்: இதைத்தவிர பாண்டிச்சேரி மற்றும் தில்லியிலும் அதே தலைப்புகளில் உரையாற்றினார். விட்ஸெல் அங்கு, “சிந்துசமவெளி நாகரிகத்தின்” சித்திர வடிவகங்களை”ப் பற்றியும், மொழிகளின் தோற்றம் மற்றும் இந்திய மதம் பற்றிய விவரங்களில் பல தவறான கொள்கைகளை முன் வைத்துப் பேசினாfர். நிச்சயமாக இந்தியர்களின், குறிப்பாக சென்னை பண்டிதர்களின் விருப்பத்திற்கு மாறாக அந்நிகழ்ச்சி நடந்தேறியன. குறிப்பாக கே. வி. ராமகிருஷ்ண ராவ் என்பவர் கேட்டக் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. ஐராவதம் மஹாதேவன், பொள்ளாச்சி மHஆலிங்கம் முதலியோரே கேள்விகள் கேட்பதைத் தடுத்தபோது, அங்கிருந்த அறிஞர்கள் ஆச்சரியப் பட்டனர். ஏனெனில், அவர்கள் கேட்டக் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் மழுப்பிச் சென்றது படித்தவர்கள் அனைவர்களுக்கும் தெரியவந்தது. இதற்கு ஐராவதம் மஹாதேவன்தான் துணையாக இருந்தார். விட்ஸெல் அவ்வாறு வித்தியாசமான கருத்துகளை முன்வைத்தபோது, தான் அவற்றுடன் ஒத்துபோகவில்லை என்று சொன்னாலும், தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். அதுமட்டுமல்லாது, முரண்பாட்டை எடுத்துக் காட்டி, அவரைக் கேள்வி கேட்கவந்தபோது, தடுக்கவும் செய்தார்.

திருச்சியில் மஹாதேவன்: திருச்சியில், தமிழ்நாட்டு வரலற்றூப் பேரவையில் ஒரு அறக்கட்டளை சார்பில் நடத்தப் பட்ட நிகழ்ச்சியில் “பழந்தமிழில் சிந்து நாகரிகத்தின் அடிசுவடுகள்” (Vestiges of Indus Civilization in Old Tamil) என்ற தலைப்பில் அவர் “பவர்-பாய்ண்ட்”டுடன் ஆங்கிலத்தில் உறையாடினார். மூன்று முத்திரைச்சித்திரங்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு சமஸ்கிருதத்திலும், தமிழிலும் பொருள் கொடுத்தார்.

1. ஒருமனிதன் தனது தோளில் ஒரு கொம்பின் துணையிடன் இரு பாரங்களை (பாத்திரங்களை) ஏந்தி செல்வது போன்ற உருவம் (A. Bearer).
2. ஒருமனிதன் தனது தோளில் ஒரு கொம்பின் துணையிடன் இரு ஜாடிகளை ஏந்தி செல்வது போன்ற உருவம் (B. Jar-bearer).
3. ஒருமனிதன் தனது தோளில் ஒரு கொம்பின் துணையிடன் இரு அம்புகளை ஏந்தி செல்வது போன்ற உருவம் (C. Arrow-bearer).

தமிழா, சமஸ்கிருதமா? அதாவது ஒருமனிதன் தனது தோளில் ஒரு கொம்பின் துணையிடன் இரு பாத்திரங்களை ஏந்தி செல்வது போன்ற உருவத்திற்கு, அவர் பொருள் கொடுத்ததாவது, ஆங்கிலத்தில் “to bear” என்று சொல்லி, தமிழில் “பொறு” / “தாங்குதல்” மற்றும் “பொறுப்பு” அதாவது பாரத்தை / பொறுப்பை சுமப்பவன், ஆகையால், பொறை”, “பொறையன்”, “இரும்பொறை” என்று விளக்கம் கொடுத்தார். மறுபடியும், அதே முத்திரைப்படங்களைக் காட்டி, சமஸ்கிருதத்தில் “to bear” என்றால், “புரூ”, அதாவது “பாரத” என்று பொருள்படும். இவ்வாறு, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டிலுமே படிக்கலாம் என்றவாறு விளக்கம் கொடுத்தார். பிறகு எப்படி, சிந்து சமவெளி சித்திர-முத்திரைக் குறிகள் திராவிடத்தைச் சார்ந்து இருக்கிறது என்று தெரியவில்லை.

ஒரே குறியீட்டிற்கு பல விளக்கங்கள் அளிப்பது: பிறகு, ஒரு நாற்கரத்தில் ஓரத்தை ஒட்டி இருக்கும் நாற்கர வடிவமுள்ள சின்னத்தை “அகம்”, “தடவு / குடம்”, “தடவுனில் தோன்றிய அகத்தியன்”, என்றெல்லாம் விளக்கம் அளித்தார். அதே சின்னத்திற்கு “கட்டிடம்” / “மேலகம்” எனவும் பொருள் கொடுத்தார் (ப.41). எகிப்து சின்னங்களுடனும் (0.1, 0.6, 0.49) அத்தகைய ஒப்புமை உள்ளது என்பதற்காக மூன்று சின்னங்களை எடுத்துக் கொண்டார் (5090, 8106, 2522). இவற்றை (261/ 373,267, 284) அவற்றுடன் ஒப்பிட்டு முறையே “வீடு, பலப்படுத்தப்பட்ட / பாதுகாக்கப்படுகின்ற வீடு, நகரம்” என்றும் வுஇளக்கம் கொடுத்தார் (ப.43).

முன்கூட்டிய தீர்மானமான எண்ணங்களுடன் ஆராயும் தன்மை: இவ்வாறு சில முத்திரை-சின்னங்கள் / சித்திரக்குறியீடுகளை எடுத்துக் கொண்டு தமது முன்கூட்டிய தீர்மானங்களுக்கு ஏற்றவாறு “சங்க இலக்கியங்களில்” அங்கொன்று-இங்கொன்று என்று உதாரணங்களைக் காட்டி, அவற்றை DEDRன் பொருளை ஒட்டி விளக்கங்கொடுத்து விளக்கம் அளிப்பது வேடிக்கையாக இருக்கிறது. அத்தகைய குறியீடுகள் சுமார் 4500 இருப்பதாக கூறுகிறார்கள். ஆகவே, இத்தகைய அணுகுமுறை / ஆராய்ச்சி நெறியைவைத்து அந்த எல்லா குறியீடுகளையும் அவ்வாறே தமிழில் படித்துக் காட்டவேண்டும். அதுமாதிரி யாராலும் முடியவில்லை. ஏனெனில், இவரே, இங்கேயே ஒரே குறியீட்டிற்கு ஒன்றிற்க்கு மேலான பொருட்களைக் கொள்ளமுடியும் என்று ஒப்புக்கொள்கிறார். அது மட்டுமல்லாது, சமஸ்கிருதத்திலும் படிக்கலாம் என்கிறார். பிறகு எப்படி அக்குறியீடுகளின் மொழி “தமிஅ”தான் என்று உறுதியாகக் கூறமுடியும்?

செம்பியன் கண்டியூர் சர்ச்சை: 2007ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னை பலகலைக் கழகம் பிப்ரவரி 15-16 தேதிகளில் “தமிழரும் சிந்துவெளிப் பண்பாடும்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தியபோது, அழைக்கப்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் செம்பியன் கண்டியூர் “கீறல் குறியீடுகளை” சிந்து குறியீடுகளுடன் ஒப்பிடமுடியாது, நம்பமுடியாது என்று மறுத்து அவர்கள் கலந்து கொள்ளவில்லை (கட்டுரைகளின் சுருக்கம், ப.23-29). ஆனால், மஹாதேவன், அதனை வைத்துக் கொண்டு படித்து “தமிழ்”தான் என்கிறார் (Vestiges of Indus Civilization in Old Tamil ப.13-17). நிச்சயமாக ஐராவதம் மஹாதேவன் தலைசிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர்தான், சந்தேகமில்லை. ஆனால், இப்பொழுது, ஏதோ சில அரசியல் நிர்பந்தங்களுக்குக் கட்டுப் பட்டு இயங்குவது நன்றாகவே தெரிகிறது.

ஆரியர் / திராவிடர் இனமல்ல! தன்னுடைய பேச்சை முடித்தப் பிறகு, ஆராய்ச்சியாளடர்கள் “ஆரியர்” மற்றும் “திராவிடர்” என்ற இனவாதச் சர்ச்சைப் பிடிகளுக்குள் சிக்கிவிடாமல், மொழிரீதியிலான அலசல்களுக்கு மட்டும் உட்பட வேண்டும் என்று எச்சரித்தார். ஆனால், பி. ஜகதீஸனோ சிந்துகுறியீடுகள் தமிழ்தான் என்று மஹாதேவன் முடிவு செய்து விட்டார் என்று அறிவித்து விட்டார். அதுமட்டுமல்ல

இப்பொழுது, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை மாநாட்டில், இவ்வாறு இவர் பேசுவதும், அதற்கு பி. ஜகதீஸன் போன்றோர் ஆமாம் போடுவதும் வேடிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்ல, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமி, “சரஸ்வதி நதி இருந்தது உண்மை” என்று சொன்னதை மறந்து அல்லது கண்டுகொள்ளாமல், 40,000 ஆண்டுகளுக்கு முன்பு “குமரிக்கண்டம்” இருந்தது என்று சொன்னதாக பூரிக்கிறார்!

திருச்சியில் நடந்த முதல் நாள் மாநாட்டு குறிப்புகளை, தினமணி (திருச்சி) வெளியிட்டபடி, காணவும்:

தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுக்கு பாராட்டு

First Published : 10 Oct 2009 07:47:55 AM IST
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=137826

திருச்சி, அக். 9: திருச்சி தேசியக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக வரலாற்று ஆய்வு மன்றத்தின் 16-வது மாநாட்டில் தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் கெüரவிக்கப்பட்டார். கல்லூரி முதல்வர் கே. அன்பரசு தலைமை வகித்தார். இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தின் முன்னாள் தலைவர் எம்.ஜி.எஸ். நாராயணன் மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

வரலாற்றுத் துறையில் அரும்பணிகள் ஆற்றியுள்ள உலக அளவில் புகழ் பெற்ற இந்திய எழுத்தியல் வல்லுநரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவனுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெüரவித்தனர். 15-வது மாநாட்டில் படிக்கப்பட்டு, ஏற்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மாநிலத் திட்டக் குழு உறுப்பினருமான பி. ஜகதீசன் வெளியிட்டார்.

சென்னை பச்சையப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் டி.ஆர். ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத்துக்குமரன், பதிவாளர் த. ராமசாமி, தேசியக் கல்லூரிச் செயலர் கா. ரகுநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மன்றத்தின் பொதுச் செயலரும், பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவருமான என். ராஜேந்திரன் அறிக்கையை வாசித்தார்.

தொடர்ந்து, மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இந்திய அளவில் வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்று, 150 கட்டுரைகளை அளிக்கின்றனர்.

மாநாட்டின் நிறைவு விழாவில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமி நிறைவுரையாற்றுகிறார்.

முன்னதாக, மன்றத்தின் உள்ளூர் செயலர் பேராசிரியர் கே. பாண்டியன் வரவேற்றார். தேசியக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். கைலாசம் நன்றி கூறினார்.

“பழந்தமிழில் சிந்து நாகரிகத்தின் அடிசுவடுகள்” என்று மஹாதேவன் புத்தகம் வெளியிட்டாலும், தினமணி “திராவிடம்” என்று குறிப்பிடுகிறது!

சிந்துவெளி சமுதாயம் திராவிட நாகரிகமே: ஐராவதம் மகாதேவன்
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=138174

தினமணி (திருச்சி), First Published : 11 Oct 2009 04:59:35 AM IST

திருச்சி, அக். 10: சிந்துவெளி சமுதாயம் என்பது திராவிட நாகரிகமே என்றார் இந்திய எழுத்தியல் வல்லுநரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் (படம்). திருச்சி தேசியக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்று ஆய்வு மன்றத்தின் 16}வது மாநாட்டில் “பழந்தமிழ் இலக்கியங்களில் சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்கள்’ என்ற தலைப்பில் அவர் பேசியது:

“சிந்துவெளி நாகரிக மக்கள் திராவிட மொழியினர் என்பதற்கு அவர் பல சான்றுகளை எடுத்துக் காட்டினார். சிந்துவெளி நாகரிகம், ஆரிய நாகரிகமாக இருந்திருக்க முடியாது என்பதற்கும் பல சான்றுகளை எடுத்துரைத்தார். ஆரிய மொழி பேசும் மக்கள் சிந்துவெளி நாகரிகம் அழிந்த பிறகே, இந்திய துணைக் கண்டத்தில் குடியேறினர். அப்போது, சிந்துவெளி மக்கள் நலிந்து, சிதறுண்டு, வலுவான தலைமை இழந்த நிலையில் இருந்தனர். அதனால், ஆரியர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தாலும், அவர்களால் தங்களுடைய ஆதிக்கத்தை நிலை நாட்ட முடிந்தது.

காலப்போக்கில் வட இந்தியாவில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் ஆரிய மொழிகளை ஏற்றுக் கொண்டு விட்டனர். அதனால், வட இந்தியாவில் திராவிடமும், ஆரியமும் கலந்த புதிய சமுதாயம் உருவானது. இது வேதங்கள் ஏற்றப்படுவதற்கு முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து என்று அவர் கூறினார். வேதங்களிலிருந்தும், மகாபாரதம் போன்ற வட மொழி இலக்கியங்களிலிருந்தும் பல சொல்களை எடுத்துக்காட்டி, அவை திராவிட மொழியிலிருந்து ஆரிய மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உதாரணமாக, சிந்துவெளி எழுத்துகளில் காவடியை சுமந்து செல்லும் ஆள் போன்ற சித்திர எழுத்து காணப்படுகிறது. இது பழந்திராவிட மொழியில் “பொறை’ அல்லது “இரும்பொறை’ என்று வழங்கியது. இதுவே, வேத காலத்தில் ஆரியத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு “பரதர்’ என்று வழங்கியது. சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்த பிறகு, அங்கிருந்து கணிசமான தொகைகள் கொண்ட திராவிட மக்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். கொங்கணத்திலிருந்து வேளிர் முதலான திராவிட மொழி பேசும் மக்கள் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இதுவே, அகத்தியர், வேளிர் குடியினரை அழைத்துக் கொண்டு தென்னாட்டுக்கு வந்தார் என்ற கதையின் வரலாற்றுப் பின்னணியாகும். இவர்களின் சந்ததிகளே பிற்காலத்தில் தக்காணத்திலும், தமிழகத்திலும் பேரரசுகளை நிறுவினர் என்ற கருத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, திராவிட மொழிகளையும், ஆரிய மொழிகளையும் பேசிய மக்கள் ஒருங்கிணைந்து ஒரு கலப்பு சமுதாயமாக உருவாகிவிட்டனர். எனவே, இன்றைய நிலையில், ஆரியம், திராவிடம் என்ற சொல்கள் மொழிகளை மட்டுமே குறிக்கின்றன. இனங்களை அல்ல என்பதே என் கருத்து என்று அவர் பேசினார்.

பி. ஜகதீஸனை பூரிக்க வைத்த ராமசாமியின் பேச்சு:

கடந்த கால சம்பவங்கள் அனைத்தும் வரலாறுதான்
தினமணி Tuesday, October 13, 2009 2:46 PM IST
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=138822&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=

First Published : 12 Oct 2009 06:09:43 AM IST

Last Updated : 12 Oct 2009 10:10:06 AM IST

திருச்சி, அக். 11: கடந்த கால சம்பவங்கள் அனைத்தும் வரலாறுதான் என்றார் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமி. திருச்சி தேசியக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக வரலாற்று ஆய்வு மன்றத்தின் மூன்று நாள் மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் பேசியது:

“பூமியில் வடக்கின் பரப்பு உயரமாகி வருவதாகவும், தெற்குப் பகுதி தாழ்ந்துக் கொண்டிருப்பதாகவும் அல்லது தெற்கு உயர்ந்து வருவதாகவும், வடக்கு தாழ்ந்து வருவதாகவும் வரலாற்று ஆய்வாளர்களும், தமிழ் அறிஞர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். வட நாட்டில் முன்பு ஒரேயொரு நதி மட்டுமே இருந்ததாகவும், இந்த நதி அசாம், கயா வழியாக ஓடியதாகவும் கூறப்படுகிறது. இமயமலை உயர்ந்ததன் காரணமாக இந்த நதி பல துண்டுகளாகப் பிரிந்து கங்கா, யமுனை, சரஸ்வதி, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகள் உருவாகியதாகவும், அவை திருவேணி சங்கமத்தில் கலப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

காவிரி ஆறு முன்பு ஒகேனக்கல்லிருந்து மூன்றாகப் பிரிந்து, ஆம்புர், வாணியம்பாடி வழியாகவும், சென்னை வழியாகவும், தெற்கே புதுக்கோட்டை வழியாகவும் சென்றதாக ஆய்வில் தெரிய வருகிறது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. வடக்கே ஓடிய காவிரி 3,000, 4,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கே சோழநாட்டுக்கு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. காவிரி தெற்கே நகர்ந்தபோது, வடக்கில் அந்த இடத்தில் பாலாறு ஆக்கிரமித்துக் கொண்டது.

எனவே, சென்னையின் பூமி மட்டம் மேலே உயர்ந்து விட்டதாக கருத்து நிலவுகிறது. தற்போது, அடிக்கடி நிகழும் பூகம்பம் இதை உறுதிப்படுத்துகிறது. இதுபோல, பல அறிவியல் தகவல்கள் வரலாற்றிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. வரலாற்று ஆதாரங்களை வைத்துதான் புவி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தெற்குப் பகுதியில் குமரி கண்டம் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. புவியின் மட்டம் 40,000 ஆண்டுகளுக்கு 5 மீட்டர் உயர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கணினி மூலம் ஆய்வு செய்தபோது இலங்கை மற்றும் சுற்றுப்பகுதியில் மிகப்பெரிய பரப்பளவு தெரிகிறது. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு உயரத்தைக் கணக்கிட்டு பார்த்தபோது, கபாடபுரம் போன்றவை இருந்தது கண்டறிய முடிகிறது.

கடந்த ஆண்டுகளில் நடந்தவை அனைத்தும் வரலாறுதான். எனவே, புவியியல் விஞ்ஞானிகளுடன் இணைந்து வரலாற்று ஆய்வாளர்களும் ஆய்வு மேற்கொண்டால், இன்னும் பல தகவல்கள் கிடைக்கும்’ என்றார் ராமசாமி.

மாநிலத் திட்டக் குழு உறுப்பினரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பி. ஜகதீசன் தலைமை வகித்தார். முன்னதாக, தேசியக் கல்லூரி துணை முதல்வர் ஏ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மன்றத்தின் உள்ளூர் செயலர் கே. பாண்டியன் நன்றி கூறினார்.

வேதபிரகாஸ்
14-10-2009

Advertisements

குறிச்சொற்கள்: , ,

4 பதில்கள் to “சிந்துசமவெளி சித்திர-குறியீடுகள் படும்பாடு: “திராவிட இனவெறியின் மற்றொரு வெளிப்பாடு”.”

 1. vedaprakash Says:

  இன்று “விடுதலையில்” [31-10-2009, ப.2] ஐராவதம் மஹாதேவ ஐயர் திருச்சி மாநாட்டு பேச்சுக்கு, மறுப்புறை வெளியிட்டிருக்கிறது!

  ஆரிய – திராவிடக் கலப்பு – உண்மையா?

  டாக்டர் ப. காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி

  அண்மையில் திருச்சியில் நடந்த ஒரு வரலாற்றுக் கருத்தரங்கில் பேசிய அய்ராவதம் மகாதேவன் (அய்யர்) அவர்கள் சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்றும், சிந்து வெளியில் வாழ்ந்த (திராவிடர்) மக்கள் நலிந்து, சிதறுண்டு, வலுவான தலைமை இழந்த நிலையில், அதாவது சிந்துவெளி நாகரிகம் அழிந்த பிறகே ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறினர் என்றும், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் வலிமை குன்றியிருந்த காரணத்தால் ஆரியர்கள் எண்ணிக்-கையில் மிகக் குறைவாக இருந்த போதிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள முடிந்தது என்றும், காலப் போக்கில் ஆரிய _ திராவிடக் கலப்பு ஏற்பட்டு ஒரு புதிய சமுதாயம் உருவானது என்றும், வேளிர்குடியினர் கொங்கணத்திலிருந்து தமிழகத்தில் குடியேறியவர் என்றும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திராவிட மொழியையும் ஆரிய மொழியையும் பேசிய மக்கள் ஒருங்கிணைந்து ஒரு கலப்புச் சமுதாயமாக உருவாகிவிட்-டனர் என்றும் எனவே இன்றைய நிலை-யில் ஆரியம், திராவிடம் என்ற சொற்கள், மொழிகளை மட்டுமே குறிக்கின்றன, இனங்களை அல்ல என்றும் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். (தினமணி _ 11.10.09)

  மேலோட்டமாகப் பார்க்கும் போது…

  மேலோட்டமாகப் பார்க்கும்போது அய்ராவதம் மகாதேவன் எவ்வளவு பெரிய உண்மையைக் கண்டுபிடித்து வெளிப்படுத் தியிருக்கிறார் என்று எண்-ணத்தோன்றும். இளம் ஆய்வாளர்-களுக்-குப் பெரும் வியப்பாகவே இக்கருத்து, தோற்றமளிக்கும். ஆனால் உண்மை நிலை என்ன?

  சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதனை இருநூறு ஆண்டுகளுக்குமுன்பே (கி.பி. 1800) தொல்லியல் ஆய்வு மூலம் நிறுவிய அறிஞர்கள் சர் ஜான் மார்சல், ஈராஸ் பாதிரியார், மார்ட்டிமர் வீலர், வில் டுராண்ட், முதலியோராவர். இவர்-களும் இவர்களையொத்த பிற அய்-ரோப்பிய வரலாற்று ஆய்வாளர்களும் நிறுவிய கருத்தினையே இன்றுவரை ஆய்வாளர்கள் திரும்பத் திரும்பத் தம் சொந்தக் கண்டுபிடிப்புகளைப் போலக் கூறிவருகின்றனர். எனவே சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்னும் கருத்து அய்ராவதம் மகாதேவன் கண்டுபிடித்த கருத்தல்ல. அய்ரோப்பிய ஆய்வாளர்களுக்கே அப் பெருமை உரியதாகும். ஆதலின் அய்ராவதத்தின் கருத்து ஒன்றும் புதுமையானதல்ல!

  இரண்டாவதாக, சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் நலிந்து சிதறுண்டு வலுவான தலைமை இழந்த நிலையில், அதாவது சிந்து வெளி நாகரிகம் அழிந்த பிறகே ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறினர்; இவ்வாறு சிந்துவெளி மக்கள் வலிமை குன்றி-யிருந்த காரணத்தால் ஆரியர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தபோதிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள முடிந்தது, என்கிறார் அய்ராவதம். இக்கருத்தும் ஏற்புடையதில்லை.

  திராவிட மன்னரும் மக்களும் வலிமை குன்றிப் போனமைக்கு ஆரியர்-களே காரணம் என்னும் வரலாற்-றுண்மையை அய்ராவதம் மறைப்பதால் இனி என்ன பயன் விளையப்போகிறது? இமயம் வரை சென்று ஆரிய அர-சர்களை வணக்கிய சேரன் செங்குட்-டுவன், இறுதியில் மாடலமறையோன் என்னும் வேதியனின் கால்களில் விழுந்து இனி நீ சொல்கிறபடியே நடப்பேன் என்று கோழையானான். பார்ப்பனரைத் தவிர வேறு எவருக்கும் நீ பணியாதவனாயிற்றே என்று ஒரு சேரனைப்பற்றிப் பதிற்றுப்பத்து கூறுகிறது. வேள்வியறியாத் தமிழ் அரசர்களை வேள்வி செய்ய வைத்து இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்றும், பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி என்றும் பட்டங்கள் கொடுத்து வெஞ்சின வேந்தர்களை வேள்வித்தீமுன் மண்டியிடச் செய்தவர்-கள் ஆரியர்கள்! சேர்ந்தமங்கலம், சத்திய-மங்கலம், கண்ணாடி மானியம் _ முத-லான இத்தொடர்களின் பொருள்களை விரித்து எழுதினால் ஆரிய இனத்தின் ஒழுக்கம் பற்றி ஊர் சிரிக்குமே!

  வெள்ளை உடம்பு காட்டி வெறும் வாக்கு நயம் காட்டி

  கள்ளங்கள் செய்தாரடி! _ சகியே

  கள்ளங்கள் செய்தாரடி!

  என்று புரட்சிக் கவிஞர் ஆரியர் இயல்பைப் படம் பிடிப்பார். ஆதலின் திராவிடர் வலிமை குன்றிப் போன-மைக்கு ஆரியரே காரணமாவர். திரா-விடர் வலிமை குன்றிய பிறகு ஆரியர் வந்தனர் என்பது பொய். திராவிடர் வலிமையோடு இருந்த காலத்திலேயே சிந்து வெளிக்குள் ஆரியர் நுழைந்து-விட்டனர் என்பதுதான் உண்மை.

  நேரு எழுதியது

  அய்ராவதம் ஓர் உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஆரியர் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களாகவே இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழைந்தனர்; ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்-டனர்! அதன் பின்னர் அவர்கள் அலை அலையாய் இங்குவந்து குடியேறினர் என்று நேரு தமது இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திராவிடரின் போர் முறை நேருக்கு நேர் நின்று மோதுவது! அடுத்துக் கெடுப்பது ஆரியரின் போர் முறை ! அறிஞர் அண்ணா குறிப்பிடுவதைப்-போல ஆரியர்கள் அரச போகத்திற்கு ஆசைப்படுவதில்லை! ஏனென்றால் ஆரியம் விதைக்காது விளையும் கழனி, வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம். (அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம்) ஆரியரின் போர்முறை மரத்-தின்பின் மறைந்து தாக்குவது! ஆரியக் கூட்டம் ஒரு சிறு கும்பல்தான். மிகச்-சிறு கும்பல்! ஆனால் நீர் மூழ்கிக் கப்பல்போல் (சப்மெரைன் போல்) மறைந்திருந்து தாக்கும் இயல்பு விடவாயு போல் பரவினதும் மாய்க்கும் கொடிய சக்தி; வெடிகுண்டுபோல் வீசப்பட்ட-தும் அரண்களைப் பிளந்தெறியும் வலிமை பெற்றது. இல்லையேல் சிறுகும்பல் பெரிய-தோர் கூட்டத்தை எங்ஙனம் எதிர்க்கத் துணியும்? (அறிஞர் அண்ணா; தமிழ-ரின் மறு மலர்ச்சி) மூன்றாவதாக வேளிர்கள் வடக்கி-லிருந்துவந்து தமிழகத்தில் குடியேறி-னார்கள் என்னும் கருத்தைப் போகிற போக்கில் வீசி விட்டுப் போகிறார் அய்ராவதம்! இதன் உட்பொருள் தமிழர்களும் வடபுலத்திலிருந்து தெற்கு நோக்கிவந்து குடியேறியவர்கள் என்பதாகும். வேளிர் என்ற சொல் வேளாண்தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும். வேள்_ வேளாண் _ வேளாண்மாந்தர் _ வேளாண்மை _ வேளாளர் _ வேளிர் என்பன உழுதொழிலை மய்யமாகக் கொண்டு எழுந்தவை. தொல்பழங்-காலந் தொட்டு இம் மண்ணின் மைந்தர்களாக விளங்கிவரும் வேளாண் மக்களை (திராவிடரை) வடபுலத்தி-லிருந்து வந்தேறிகள் எனக் கூறுவது தமிழ் இனவரலாறு தெரியாதோர் கூற்றெனக் கொள்ள வேண்டும்.

  பறம்புமலையரசன் வேள்பாரியும், இருங்கோவேளும் அவன் மரபினரும், அயற்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பது வரலாற்றுப் பிழையாகும்.

  கலப்பு சமுதாயமா?

  நான்காவதாகக், காலப்போக்கில் ஆரிய _ திராவிடக் கலப்பு ஏற்பட்டு ஒரு புதிய சமுதாயம் உருவானது என்-றும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்-னரே திராவிட மொழியையும் ஆரிய மொழியையும் பேசிய மக்கள் ஒருங்கி-ணைந்து ஒரு கலப்புச் சமூதாயமாக உருவாகி விட்டனர்என்றும் அய்ரா-வதம் குறிப்பிடுகிறார்.

  ஆரியரும் திராவிடரும் ஒன்றாகக் கலந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்-கினர் என்றால் அந்தப் புதிய சமுதாயத்தின் பெயர் என்ன என்பதை அய்ராவதம் ஏன் குறிப்பிடவில்லை!

  ஆரியமாவது திராவிடமாவது _ எல்லாம் கலந்து ஒன்றாகி விட்டன _ என்று பார்ப்பனர் தொடர்ந்து இந்தப் பொய்யைப் பரப்பி வருகின்றனர். ஒன்றாகி விட்டன என்றால் அந்த ஒன்றின் பெயர் என்ன? இன்றுவரை ஆரியம் வேறாகவும், திராவிடம் வேறாகவும்தான் இருந்து வருகின்றன. ஆரியம் இல்லை என்றால் பூணூல் அணிவதன் நோக்கம் என்ன? பேச்சு வழக்கில் இல்லாத _ செத்துப் போன மொழியான சமற் கிருதத்தை தேவ பாஷை என்றும் திரா-விட மொழிகளை நீச பாஷைகள் என்-றும் சங்கராச்சாரிகள் கூறி வருவதன் பொருள் என்ன? திராவிடர் நிறத்தாலும் பழக்க வழக்கங்களாலும் பேசும் மொழியாலும் ஆரியரிடமிருந்து முற்றிலும் வேறு-பட்டவர்கள். திராவிடர் பேசும் மொழி-களில் சிற்சில வேறுபாடுகள் இருப்-பினும் இவர்கள் ஓரினத்தவர் என்பதை எளிதில் அடையாளம் காண முடியும் ஆனால் இன்றுவரை ஆரியர்கள், திராவிடத் தொல்குடி மக்களிடமிருந்து வேறுபட்டே வாழ்ந்து வருகின்றனர். ஆரியர் தமிழைப் பேசினாலும் அந்தத் தமிழே தனியானது கணவனை, அண்ணா என்றழைக்கும் கொடுமை உலகில் எந்த இனத்திலும் கிடையாது, ஆரிய இனத்தைத் தவிர ! அபிஷ்டு, அம்பி, அத்திம்பேர், அம்மாமி, அவாள், இவாள், இதராள் முதலான சொற்-களைக் கொண்டே இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

  ஆரியர் வேறு- திராவிடர் வேறு

  ஆரியரின் வாழ்வியல் முறையும் திராவிடமிருந்து வேறுபட்டதாகும். அவர்கள் உடுத்தும் உடை எப்படி? தலையில் குடுமி, மார்பில் பூணூல், வேட்டியை வேஷ்டியாக்கி அதை அருவருப்பான முறையில் உடுத்துவது. இவற்றைப் போன்ற எண்ணற்ற வேறுபாடுகளை நாம் எடுத்துக் காட்-டலாம். ஆரியர் ஒருபோதும் தாங்கள் குடியேறிய நாட்டு மக்களோடு ஒன்று சேர்ந்து_கலந்து வாழ்ந்தது கிடையாது. மக்களோடு கலந்து வாழாமல் தங்களுக் கென்று தனிக் குடியிருப்புகளை அவர்-கள் அமைத்துக் கொண்டனர். இன்று-வரை அவர்கள் தனித்தே வாழ்ந்து வருகின்றனர்.

  தமிழரின் பண்பாட்டையும் மொழி, கலை முதலான செல்வங்களையும் அழித்தொழிப்பதற்கு இன்றுவரை ஆரியர்கள் இடைவிடாது முயன்று வருகின்றனர். அறிஞர் அண்ணா இது பற்றிக் கூறுவதை அப்படியே தரு-கின்றோம். கூவுங்கள் ஆரியர்களே! கொக்-கரியுங்கள்! தமிழ் மீது மோதிக் கொள்ளுங்கள்; தமிழரின் முயற்சிக்-கெல்லாம் தடை செய்யுங்கள்! தமிழ் மொழியைத் தழைக்க விடாதீர்கள்; தமிழிலே வடமொழியை ஆங்கிலத்தை, இந்தியைக் கலக்கிக் குழப்புங்கள்; தமிழன் தன்னைத் தமிழன் என்றுரைத்-தால் சீறுங்கள். தமிழ்மொழியில் இசை இருக்கட்டும் என்றால் எதிர்த்துப்-பேசுங்கள். கலைச் சொற்களுக்கு வடமொழியே இருக்க வேண்டும் என்று வாதாடுங்கள்; தமிழனைத் தாழ்ந்த சாதி என்று சொல்லுங்கள். கூட இருக்கக் கூடாது என்று கட்டளை-யிடுங்கள். கோயிலிலும் குளத்திலும் இழிவு படுத்துங்கள். சாப்பாட்டு விடுதி-களிலும் சாக்கடை இடத்தையே தமிழருக்குத் தாருங்கள். உம் ஆணவச் செயலைத், திமிர்வாதத்தை, ஆரியத்தை நாம் வரவேற்கிறோம். ஆம்! உம் எதிர்ப்பு வளர வளரத்தான் தமிழனின் உள்ளத்தில் வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால் அவன் வேல்-பட்ட புலிபோலச் சீறுவான்! (தமிழரின் மறுமலர்ச்சி)

  அண்ணா தரும் பட்டியல்

  ஆரியர்கள் தமிழையும் தமிழரையும் அழித்து ஒழிப்பதற்கு என்னென்ன செய்துவருகிறார்கள் என்பதை அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இவ்-வளவு கொடுமைகளைச் செய்து கொண்டே ஆரியமும் திராவிடமும் ஒன்று கலந்து உருமாறிப் போய்விட்-டன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

  மாநிலங்களவையில் அண்ணா தன் உரையைத் தொடங்கும்போது, “I belong to the Dravidian stock; I am proud to call myself a Dravidian” என்று கம்பீரமாகத்தான் ஒரு திராவிடன் என்பதை டெல்லியில் வெளிப்படுத்தி-னார்கள். அண்ணாவின் உரையை முழுமையாகக் கேட்டுவிட்டு வெளியில் வந்த பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் அண்ணாவை மனந்திருந்து பாராட்டிவிட்டு நீங்கள் அடிக்கடி இந்த அவையில் இவ்வாறு பேச வேண்டும், மி ணீனீ ணீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ யீக்ஷீஷீனீ ஙிவீலீணீக்ஷீ என்று கைகுலுக்கிவிட்டுப் போனார். ஆதலின் திராவிடர் என்ற இனம் ஆரிய இனத்தோடு ஒரு போதும் ஒன்று சேர வாய்ப்பில்லை. கடைசிப் பூணூல் இருக்கும்வரை அய்ராவதம் மகாதேவனின் ஆசை நிறைவேறாது.

  இனி ஆரியம், திராவிடம் என்ற சொற்கள் மொழிகளை மட்டுமே குறிக்கின்றன; இனங்களை அல்ல என்-கிறார் அய்ராவதம் இவை அப்படியே மொழிகளை மட்டுமே குறிக்கின்றன என்று வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் திராவிட மொழியைப் பேசுபவன் யார்? ஆஸ்திரேலியனா இல்லை ஆங்கிலேயனா? திராவிட மொழியைப் பேசுபவன் திராவிடன் தானே! ஆரிய மொழியைப் பேசுபவன் ஆரியன்தானே! இஃது இயற்கை அறிவு படைத்த எவருக்கும் எளிதில் விளங்கும்.

  வெவ்வேறு இனமே!

  ஆதலின், ஆரியரும் திராவிடரும் வெவ்-வேறு இன மரபுகளைச் சேர்ந்-தவர்கள். வெவ்வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆரியர் வாழ்வியல் முறை வேறு; திராவிடர் வாழ்வியல் முறை வேறு; ஆரியக் கலாச்-சாரம் வேறு; திராவிடப் பண்பாடு வேறு; இவை இரண்டும் எதிர் எதிர் நிலையில் நிற்பவை. எக்காலத்தும் இவை இரண்டும் ஒன்று கலப்பதற்கு வாய்ப்பே இல்லை!

 2. M. Nachiappan Says:

  First of all, the “dravidologists” should update their knowledge to shred off the old discarded theories and hypotheses for the betterment of the Indians as a whole.

  Now, because of commercial interest, the Tamils have been moving towards Karnataka, otherwise, they woulkd be playing anti-Kannada sentiments.

  Of course, such hatred has been there with the fanatic ones, who very often blurt out in one way or the other.

  As for as the IVC script is concerned, the Tamil scholars or those interpret that it could be Tamil have been loosing their grouds, as the “racial theories and hypotheses have been discarded.”

 3. ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ திராவிடர்கள் புறப்பட்டு விட்டார்களா? | ஆரிய-திராவிட இனமாயைகளும், க Says:

  […] [9]https://dravidianatheism.wordpress.com/2009/10/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%A… […]

 4. ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ திராவிடர்கள் புறப்பட்டு விட்டார்களா? | ஆரிய-திராவிட இனமாயைகளும், க Says:

  […] [9]https://dravidianatheism.wordpress.com/2009/10/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%A… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: