குருக்களின் காமவிளையாட்டு!

ஊரே சிரிக்கிறது பக்தி மோசடி!
கோயிலுக்குள் குருக்களின் காம விளையாட்டு

காஞ்சிபுரம்,நவ.18_-காஞ்-சிபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறை-யில் அடைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் தேவநாதனுக்கு, வெளிநாட்டு ஆபாச படக்-கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற பரபரப்பான தக-வல் வெளியாகி உள்ளது. காஞ்சி அர்ச்சகரின் ஆபாச நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தவு-டன் கோயிலுக்கு செல்-லவே பெண்கள் அச்ச-மடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிறீமச்சேஸ்வரர் கோவி-லில் அர்ச்சகராக இருந்த தேவநாதன் மீது கோவி-லுக்குள் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக புகார் கூறப்பட்டது. இது-தொடர்பான செல்போன் ஆபாச பட காட்சிகளும் வெளியானது. பெரிய காஞ்-சிபுரம் காவல்துறை-யினர் அவர் மீது வழக்-குப் பதிவு செய்து விசா-ரணை நடத்தி வந்தனர். இதனால் தலைமறை-வான தேவநாதன், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில், பெண் நீதிபதி சுதா முன்பு சர-ண-டைந்தார். அவரை வருகிற 30 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அர்ச்சகர் தேவ-நாதன், காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

கோவில் கருவறைக்-குள் அர்ச்சகர் தேவநா-தன் பல பெண்களுடன் உல்-லாசமாக இருந்ததற்-கான வீடியோ ஆதாரங்-களை காவல்துறையினர் சேகரித்து வைத்துள்ள-னர். பாதிக்கப்பட்ட பெண்களின் நலன் கருதி அவற்றை ரகசியமாக பாதுகாத்து வரும் காவல்-துறையினர் இந்த வழக்-கில் அர்ச்சகருக்கு எதி-ராக வீடியோ ஆதா-ரத்தை பயன்படுத்த திட்-ட-மிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அர்ச்சகர் தேவநாதனை 5 நாள்கள் காவலில் எடுத்துவிசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று காலை காஞ்சிபுரம் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் பெரிய காஞ்சிபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாபிராமன் மனுதாக்கல் செய்தார்.

அப்போது அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஆதாரங்களையும் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். அந்த படக்காட்சிகளில் அர்ச்சகர் தேவநாதனை கட்டிப்பிடித்தபடி இருக்கும் பெண்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய குடும்ப பின்னணி என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. அர்ச்சகர் தேவநாதனை காவலில் எடுத்து விசாரிக்கும் போதுதான் இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் தெளிவாக தெரியும் என்று எதிர்பார்க்-கப்படுகிறது. அர்ச்சகர் தேவநாதனுக்கும், அந்த பெண்களுக்கும் எப்படி உறவு ஏற்பட்டது என்பது குறித்தும் காவல்-துறையினர் விசாரிக்க திட்டமிட்-டுள்ளனர்.

கோவிலுக்குள் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை ரகசியமாக படம்பிடித்து வெளிநாடு-களுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கும் கும்பலுடன் தேவநாதனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தேவநாதனை காவல்-துறை-யினர் காவலில் எடுத்து விசா-ரணை நடத்தினால், இதுபோன்ற மேலும் பரபரப்பான தகவல்கள் வெளி-யாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.டி.க்கள் அமோக விற்பனை

இதற்கிடையே அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாக தொடங்கியுள்ளன. கடந்த 2 நாள்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு விலை போன ஆபாச சி.டி. தற்போது 500 ரூபாய்க்கு விலை பேசப்படுகிறது. இதற்கிடையே ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்ததாக காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்போன் கடை வியாபாரி ஒருவரை காவல்-துறையினர் பிடித்துள்ளனர். அவரது பெயர் செந்தில் குமார், அர்ச்சகர் தேவநாதன் இவரிடம் தான் தனது செல்போனை பழுது பார்க்க கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அர்ச்சகர் செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை நகல் செய்து செந்தில்குமார் பல நகல்கள் போட்டு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபாச சி.டி.க்கள் சென்னையில் தற்போது அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது. ஆபாச படங்களை மெமரி கார்டில் பதிவு செய்து கொடுத்து ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் பணம் சம்-பாதிக்கும் வக்கிர கும்பல் ஒன்று அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்களையும் மிக மிக ரகசியமாக விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இக்கும்பலை பிடிப்பதற்காக காவல்-துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

கோயிலுக்குச் செல்ல பெண்கள் அச்சம்

அர்ச்சகரின் ஆபாச நடவடிக்கை-களுக்குப் பிறகு பெண்கள் தனியாக கோயிலுக்குச் செல்ல அச்சமடைந்-துள்ளனர். ஆபாச அர்ச்சகரின் நடவடிக்கையால் பெண்கள் அரு-வெறுப்பும், ஆத்திரமும் அடைந்-துள்ளனர். ஆன்மிகம் என்ற போர்வையில் இதுபோன்ற பல்வேறு அசிங்கமான காரியங்களும் திரைமறைவில் அரங்கேறி வருவதாக பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். கோயில்கள் ‘‘புனிதமான இடங்கள்’’ என்ற பகுத்தறிவற்ற போலி பிரச்சாரத்தை பார்ப்பனக் கூட்டம் திட்டமிட்டு பரப்பி இதுபோன்ற அருவருப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.

கோவிலில் உல்லாசம் விவகாரம்: ஏட்டிடம் தகராறு, அர்ச்சகரின் தந்தை கைது

காஞ்சிபுரம்: கோவிலில் பெண் களுடன் உல்லாசமாக இருந்த வழக்கு தொடர்பாக அர்ச்சகரிடம் விசாரணை க்கு சென்ற தலைமைக் காவலரிடம் தகராறு செய்த அர்ச்சகரின் தந்தை கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே கிழக்கு ராஜவீதியில் மச்சேசப் பெருமாள் கோவில்  உள்ளது. இக்கோவிலில் தேவநாதன் (35) என்பவர் அர்ச்சகராக இருந்தார்.

இவர் கருவறைக்குள்ளேயே இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தொட்ரபாக வீடியோ வெளியானது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆரம்பித்த நிலையில் அர்ச்சகர் தேவநாதன் தலைமறைவாகி விட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக அர்ச்சகர் தேவநாதனைத் தேடி காவல் நிலைய ஏட்டு கோபால் பெரிய காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவுக்கு சென்றார். அங்கு தேவநாதனின் தந்தை சுப்பிரமணிய குருக்களிடம் (57) `உங்கள் மகன் தேவநாதன் எங்கு இருக்கிறார்’ என்று விசாரித்தார்.

அப்போது சுப்பிரமணிய குருக்கள் ஏட்டு கோபாலைத் திட்டியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஏட்டு தந்த புகாரின் அடிப்படையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப் பதிவு செய்தார்.

பின்னர் சுப்பிரமணிய குருக்களை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் துணை சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே தேவநாதனைப் பிடிக்க தனிப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

சிடி போட்டு விற்கிறார்கள் என்றால் அதன் பின்னணியையும் விசாரிக்கவேண்டும்.

4 பதில்கள் to “குருக்களின் காமவிளையாட்டு!”

 1. vedaprakash Says:

  ‘காம லீலை’யில் ஈடுபட்ட அர்ச்சகரிடம் விசாரணை
  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்
  http://viduthalai.periyar.org.in/20091119/news09.html

  சென்னை, நவ. 19_- காஞ்சிபுரம் மச்-சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன். கோவில் கருவறையில் வைத்து இவர் பெண்-களுடன் காம லீலையில் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளி-யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்-தியது. இதனைத் தொடர்ந்து தேவ-நாதன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தீவிரமானதால் தேவ-நாதன் காஞ்சிபுரம் நீதிமன்றத்-தில் சரண் அடைந்தார். அவரை வரு-கிற 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சுதா உத்தர-விட்டார். அர்ச்சகர் தேவநாதனுடன் கருவறையில் வைத்து உல்லாசமாக இருக்கும் பெண்கள் பற்றிய எந்த விவரங்களும் இதுவரை வெளிவர-வில்லை. இது தொடர்பாக விசா-ரணை நடத்துவதற்காக தேவ-நாதனை காவலில் எடுக்க மனுதாக்-கல் செய்தனர். 2 நாள்கள் காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இத-னைத் தொடர்ந்து தேவநாதனை விசாரணைக்காக காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

  கோவில் கருவறையில் வைத்து மொத்தம் எத்தனை பெண்களுடன் உல்லாசமாக இருந்தீர்கள்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? இப்பெண்களின் குடும்ப பின்னணி என்ன? உங்களது வலையில் அவர்-கள் எப்படி விழுந்தார்கள்? என்பது போன்ற சரமாரியான கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

  காவல்துறையினரின் அத்தனை கேள்விகளுக்கும் தேவநாதன் சளைக்-காமல் பதில் அளித்ததாக கூறப்-படு-கிறது. இந்த பதில்கள் அனைத்-தையும் அவர்கள் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். இந்த விசா-ரணையின் போது தேவநாதன் தன்னுடன் நெருக்கமாக இருந்த பெண்களின் பெயர்களை வெளியிட்-டுள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்-படையில் சம்பந்தப்பட்ட பெண்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். எனவே அர்ச்சகர் தேவநாதனிடம் விசாரணை நடத்தி முடித்த பின்னர் இந்த பெண்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

  அப்போது அவர்கள் சொல்லும் தகவலின் அடிப்படையில் அவர்களை கைது செய்யவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன்பிறகு அர்ச்சகர் தேவநாதனின் ஆபாச படங்கள் அடங்கிய கணினியை-யும் நீதிமன்ற அனுமதியுடன் பெற்று ஆய்வு செய்ய காவல்துறையினர் திட்ட-மிட்டுள்ளனர். தேவநாதன் 2 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடை-கிறது. எனவே இன்று மாலையில் அவரை ஆஜர்படுத்திய பின் காவல்-துறையினர் மீண்டும் அவரை சிறையில் அடைக்கிறார்கள். அர்ச்சகரிடம் இன்று நடத்தப்படும் விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்-பார்க்கப்படுகிறது.

 2. vedaprakash Says:

  பெண்களுடன் உல்லாசம்: ரசித்துப் பார்க்க படம் பிடித்தேன்- தேவநாதன்
  வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2009, 12:41 [IST]
  http://thatstamil.oneindia.in/news/2009/11/20/archakar-devanathan-opens-his-mouth.html

  காஞ்சிபுரம்: கருவறையில் நான் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதை பின்னர் போட்டுப் பார்த்து ரசிப்பேன் என்று கூறியுள்ளார் காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் பெண்களுடன் உல்லாசமாக இருந்து அசிங்கப்படுத்திய அர்ச்சகர் தேவநாதன்.

  தலைமறைவாக இருந்து வந்த தேவநாதன் சமீபத்தில் காஞ்சி கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து அவரை 2 நாள் போலீஸ் காவலில் போலீஸார் எடுத்தனர்.

  இதையடுத்து காவல் நிலையம் கொண்டு சென்று அவரை தீவிரமாக விசாரித்தனர்.

  அப்போது தேவநாதன் கூறுகையில், காஞ்சீபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண்கள் தங்களது குடும்ப கஷ்டத்தைக் கூறுவார்கள். அவர்களுக்கு நான் அர்ச்சனை செய்து ஆறுதல் கூறுவேன்.

  இவ்வாறு வரும் சில பெண்களுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் கருவறையிலேயே அவர்களது சம்மதத்தோடு நான் உல்லாசமாக இருப்பேன். அந்த காட்சியை நான் என்னுடைய செல்போன் கேமராவில் ரகசியமாக படம் பிடிப்பேன். பிறகு ஓய்வாக இருக்கும் நேரத்தில் அந்த காட்சியை நானே பார்த்து, ரசித்து, இன்பமடைவேன்.

  மேலும் சில பெண்களை லாட்ஜூக்கும் கூட்டிக் கொண்டு போய் உல்லாசமாக இருப்பேன். கோவில் கருவறையில் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ எனது செல்போனில் இருந்து எப்படி பரவியது என்பது எனக்கு தெரியவில்லை.

  செல்போனை ஒரு கடையில் ரிப்பேருக்கு கொடுத்தேன். அவர்கள் இந்த வீடியோ காட்சியை எனது செல்போனிலிருந்து எடுத்து பரப்பினார்களா? என்று எனக்கு புரியவில்லை என்றார் தேவநாதன்.

 3. vedaprakash Says:

  கோவில் கருவறையில் காம விளையாட்டில் ஈடுபட்ட அர்ச்சகரை
  அய்ந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்
  உயர்நீதிமன்றத்தில் மனு
  http://viduthalai.periyar.org.in/20091124/news09.html

  சென்னை, நவ.24_ கோவில் கருவறையில் காம விளையாட்டில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் தேவநாதனை 5 நாள் காவல்துறை காவ-லில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று காவல் நிலைய ஆய்-வாளர் சென்னை உயர்-நீதிமன்றத்தில் மனு-தாக்-கல் செய்துள்ளார்.

  காஞ்சிபுரம் மச்சேஸ்-வரர் கோவிலில் அர்ச்சக-ராக பணிபுரிந்து வந்தவர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் பெண்களுடன் உல்லாச-மாக இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் கொண்ட சி.டி. வெளியா-னது. இந்த ஆபாச காட்சி-கள் செல்போனில் வேகமாக பரவியது.

  இந்த வழக்கில் சரண் அடைந்த தேவநாதனை 2 நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசா-ரிக்க நீதிபதி அனுமதித்-தார். மேலும் காவல் நீடிப்பு காவல்துறை தரப்பில் கேட்டபோது, நீதிபதி அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.

  எனவே, சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வா-ளர் சென்னை உயர்நீதி-மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியி-ருப்ப-தாவது:

  அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறைக்குள் பெண்களிடம் உல்லாச-மாக இருப்பது போன்ற காட்சிகள் கொண்ட சி.டி. ஒன்று கிடைத்ததாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மத உணர்வை புண்படுத்தும் நோக்கில் தேவநாதன் நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்-பட்டது. இதன்பிறகு இந்-திய தண்டனைச் சட்டம் 163 (அதாவது செல்-வாக்கை பயன்படுத்துதல்), 506 (பெண்களின் கற்புக்கு களங்கத்தை ஏற்படுத்து-தல்) போன்ற பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டது. ஆனால் அர்ச்சகர் தலை-மறைவாக இருந்தார்.

  அவரை பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டது. அர்ச்சகரின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது. இதைத்தொடர்ந்து 16.11.2009 அன்று காஞ்சி 1 ஆவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்-றத்-தில் அர்ச்சகர் தேவ-நாதன் சரண் அடைந்-தார். 7 நாள் போலீஸ் காவ-லில் வைத்து விசா-ரிக்க அனுமதி கேட்டோம். கடந்த 18 ஆம் தேதி 2 நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசா-ரிக்க நீதிபதி அனுமதித்-தார். 2 நாள் போலீஸ் காவ-லில் வைத்து விசாரித்த-பிறகு மேற்கொண்டு விசா-ரணை நடத்த 3 நாள் அனுமதி கேட்டோம். ஆனால், நீதிபதி அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.

  மேலும் அர்ச்சகர் தேவநாதனை போலீஸ் காவலில் வைத்து விசாரித்-தால் தான் முழு சம்பவம் வெளியாகும். எனவே, ஜுடிசியல் மாஜிஸ்தி-ரேட்டு பிறப்பித்த உத்த-ரவை ரத்து செய்யவேண்-டும். மேலும் 5 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து அர்ச்சகரை விசாரிக்க இந்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.

  இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

  இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுபற்றி பதில் தருமாறு சிறையில் இருக்கும் தேவநாதனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு நாளை (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 4. VIRUMANDI Says:

  FFFFFFFFFFFF

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: