கால்டுவெல் புராணம் தொடர்கிறது……………

கால்டுவெல் புராணம் தொடர்கிறது……………

கால்டுவெல் இளமையான வயதிலேயே குடும்பம் சகிதமாக வந்து வாழ்க்கையினை அனுபவித்துள்ளார். அவரது மாமியார்-மாமனார் பற்றி முன்னமே குறிப்பிடப்பட்டது.

எலிஸா நீ மௌட், கால்டுவெல்லின் பெண்டாட்டி 

எலிஸா நீ மௌட், கால்டுவெல்லின் பெண்டாட்டி
எலிஸா வயதான காலத்தில் 

எலிஸா வயதான காலத்தில்

எலிஸா விதவை

எலிஸா விதவை

எலிஸா கால்டுவெல் அல்லது எலிஸா நீ மௌட் (1822-99) நாகர்கோவிலில்தான் சார்லஸ் மற்றும் மார்தாவிற்கு மூத்த மகளாக பிறந்தாள். இங்கிலாந்திற்கு படிப்பதற்காக அனுப்பப்பட்டாலும், தமிழ் பேசக் கற்றுக்கொண்டாளாம். 1836ல் திரும்பி வந்ததும், தனது சகோதரி சாராள் கூட அம்மாவிற்கு ஒத்தாசையாக கிருத்துவ மிஷனரி பள்ளிகளை நடத்த உதவினாள். 1844ல் ராபர்ட் கால்டுவெல்லை  நாகர்கோவிலில் மணந்துகொண்டாள், இளையன்குடியில் குடும்பம் நடத்தினாள், ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். வருடத்திற்கு ஒரு குழந்தை என்றால் கூட, அதாவது, 1851-52 வரை தீவிரமாக இல்லறத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர், இந்த இளைய தம்பதியர். ஆங்கிலேயர்களுக்குக் கூட குடும்பக் கட்டுப்பாடு இல்லை போலும்! அப்படியென்றால், கால்டுவெல் இல்லற வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஈடுபட்டிருப்பார் என்பதனை அறிந்து கொள்ளலாம். இது தனிபட்ட மனிதனின் விஷயம் என்று இருந்தாலும், நாடுவிட்டு நாடு வந்து அத்தம்பதியர் மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற வெறியைத்தான் கவனிக்க வேண்டும். 1883ல் தூத்துக்குடிக்கு இடம் பெயன்றனர். தனது கணவன் இறந்த பிறகு, அங்கேயே தங்கி வாழ்ந்தாள். 1899ல் இறந்தபோது, கால்டுவெல் இளையன்குடியில் கட்டிய சர்ச்சிலேயே புதைக்கப்பட்டாள்.

கால்டுவெல்லின் 800 கி.மீ தீர்த்தயாத்திரை? உண்மையில் கால்டுவெல் ஒன்றும் நடந்தே சென்றுவிடவில்லை. சாதாரணமாக ஐரோப்பியர்கள் எல்லோருமே பல்லக்கு அல்லது மாட்டுவண்டிகளில் தான் சொகுசாக உட்கார்ந்து கொண்டு செல்வார்கள். இந்திய கூலிகள் / வேலையாட்கள் அதற்கென பிரத்யேகமாக இருந்தனர். அவர்கள் தாம் கஷ்டப்பட்டு அந்த வேலைகளை செய்வார்கள். கால்டுவெல்லிற்கு, ஒரு குறிப்பிட்ட வேலை கொடுக்கப்பட்டதால், அதன்படி தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், அவர்களது சிந்தனைகள், பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை ஆராயச் சொன்னதால்தான் அவ்வாறு பல ஊர்களின் வழியாக சென்ன்னையிலிருந்து தனது ஆராய்ச்சி-பயணத்தை ஆரம்பித்தான்.
அதுதான், அவன் நாஜுக்காகச் சொல்கிறான் , “to get acquainted with the people and their ideas, manners, and to talk in a way in which I could never expect to do if I travelled in a palanquin or even a cart” !  எதிர்பார்க்கவில்லைதான், ஆனால் அவ்வாறுத்தான் பிரயாணம் செய்தான் என்பது உண்மையான விஷயம். நீலகிரி மலையில் சென்னை பிஷப்பான ஜியார்ஜ் ஸ்பென்ஸர் என்பரைப் பார்த்து விவரங்களைக் கேட்டுக் கொள்கிறான். ஒரு விசுவாச ஊழியனாக (Deacon) உறுதிமொழி எடுத்துக் கொள்கிறான். பிறகுதான், தனது ஊழியத்தைச் செய்வதாற்காக இடையன்குடிக்கு அனுபப்படுகிறான். 1841ல் வந்து சேர்கிறான். 1844ல் கல்யாணம்!
இளையன்குடி-சர்ச் 

இளையன்குடி-சர்ச்
கால்டுவெல் புருஷன் பெண்டாட்டி புதைக்கப்பட்ட இடம் 

கால்டுவெல் புருஷன் பெண்டாட்டி புதைக்கப்பட்ட இடம்

கால்டுவெல்-தங்கிய-பங்களா

கால்டுவெல்-தங்கிய-பங்களா

பிறகு எப்படி கால்டுவெல், தமிழுக்கு சேவை செய்திருக்க முடியும்? பிரௌனிடம் சமஸ்கிருதம் படித்து, மற்ற ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தியர்களை எப்படிப் பிரிக்கலாம் என்ற நோக்கத்துடந்தான், வேலை செய்தவன் கால்டுவெல். இவனைத் தூக்கி வைத்துக் கொண்டு தமிழர்கள் ஆடுவதை என்னவென்று சொல்வது? தமிழர்கள், “திராவிடர்கள்” என்று நினைக்கும் வரையில், இத்தகைய அடிமை சிந்தனை மற்றும் கூலி மனப்பாங்கு இருக்கத்தான் செய்யும்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “கால்டுவெல் புராணம் தொடர்கிறது……………”

  1. Kuppusamy Says:

    இப்படி உண்டு கொழுத்து, அனுபவித்த பரதேசிகளின் காலகளில் விழத்தான், இன்றுள்ள தமிழர்களும், இனமானத் தலைவர்களும் இருக்கிறர்கள் என்றால், இன்னமும் இவர்கள் அந்த “கூலி மனோபாவத்துடன்”தான் இருக்கிறர்கள் என்று தெரிகிறது.

    வித்தியாசம் என்னவென்றால், வெள்ளையர்கள் இப்பொழுது தூர இருந்து ஆட்டுவிக்கிறர்கள்.

    பரிசு, பணம்………………..கொடுத்தால் போதும், அவ்வளவே!

    மானம், மரியாதை……………எல்லாவற்ரையும் விற்றேவிடுவர்கள்!

  2. Brahmallahchrist Says:

    It is highly idiotic to honour this renegade!

  3. கால்டுவெல்லை வைத்துக் கொண்டு, தமிழர்களை இழிவு படுத்தும் செயல்கள்! « atheism Says:

    […] [2] வேதபிரகாஷ், கால்டுவெல் புராணம் தொடர்கிறது…………, https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/ […]

  4. எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்! « திராவிடநா Says:

    […] https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/ […]

  5. காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்! | ப Says:

    […] [1] https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/ […]

  6. கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது! | atheism Says:

    […] [6] வேதபிரகாஷ், கால்டுவெல்புராணம்தொடர்கிறது……………, https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/ […]

  7. கால்டுவெல் புராணம் பாடும் கருணநிதி: கோயம்புத்தூரிலிருந்து இடையன்குடிக்கு போகும் தீவிரவாத ஆத Says:

    […] [4] https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/ […]

பின்னூட்டமொன்றை இடுக