Archive for the ‘திராவிட நம்பிக்கைகள்’ Category

பன்னாட்டு மையம், சத்திய தரும சாலை, சமரச சுத்த சன்மார்க்க சங்கம், திமுக, பெரியாரிஸம் வள்ளலார் பெயரில் நடப்பது என்ன? (1)

பிப்ரவரி 18, 2024

பன்னாட்டு மையம், சத்திய தருமசாலை, சமரச சுத்த சன்மார்க்க சங்கம், திமுக, பெரியாரிஸம் வள்ளலார் பெயரில் நடப்பது என்ன? (1)

வடலுரில் வள்ளலார் பன்னாட்டு மையமும் திராவிட அரசியலும்: வள்ளலாரின் கொள்கைளை பரவலாக்கும் விதமாக, வடலுரில் `வள்ளலார் பன்னாட்டு மையம்’ அமைக்கப்படும் என்று, சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். உண்மையில் நாத்திகவாதியான அவருக்கோ, இந்துவிரோத திமுகவுக்கோ மற்ற திராவிடத்துவ சித்தாந்திகளுக்கோ, இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனடிப்படையில் அவர் ஆட்சிக்கு வந்ததும் அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியானது. இப்பொழுதெல்லாம் எந்த திட்டம் என்றாலும் கோடிகள் தான், பொது மக்களுக்கு என்ன பலன் என்றெல்லாம் யோசிப்பதாத் தெரியவில்லை. செனையில் கார் ரேஸ் என்று சொல்லி, ஒரே வாரத்தில் 40 கோடிகள் விரயமாக்கப் பட்டன. ஆனால் இந்த அறிவிப்பு [வடலுரில் `வள்ளலார் பன்னாட்டு மையம்’] வெளியானதில் இருந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திராவிட, திராவிடத்துவ, பெரியாரிஸ கட்சிகள் உண்மையில் இந்துக்களுக்கு சாதகமாக வேலை செய்கின்றனவா?: அவர்கள் அதிலுள்ள அரசியலை வெளிகாட்டி விமர்சித்து வருகின்றனர். இவர்களும் செக்யூலரிஸத் தனமாகவே செயல்பட்டுள்ளனரா அல்லது சமயத்திற்கு ஏற்றபடி, வேடம் போட்டிருக்கின்றனரா என்றால், அப்படித்தான் இருக்கின்றனர். இப்பொழுதுகூட எடப்பாடி பழனிசாமி, குல்லா போட்டு பவனி வந்ததை அனைவருமறிவர். முன்பு ராமதாஸ், சங்கராச்சாரியார் மற்றும் ரஜினிகாந்தை ஒழித்தால் தான், தமிழகம் உருப்படும் என்றெல்லாம் பேசியது எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆக இவர்கள் எல்லோரும் பக்திக்கோ, வள்ளலாருக்கோ, சன்மார்க்கத்திற்கோ குடைபிடிப்பதாகத் தெரியவில்லை. அவற்றையும் மீறிய ஏதோ ஒன்றை மனத்தில் வைத்து தான் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் என்று வரும்பொழுது, எல்லா கட்சிகளும், தலைவர்களும், மைனாரிட்டி. சிறுபான்மையினர், முஸ்லிம்-கிருத்துவ ஓட்டு, ஓட்டு வங்கி என்று தான் ஓடுகின்றனர். ஆனால், பணம் எனும்பொழுது, கோவில் பணத்தின் மீது கை வைக்கின்றனர். ஆக, இங்கும் அத்தகைய போலித் தனம் வெளிப்படையாகவே அப்பட்டமாகத் தெரிகிறது.

17-02-2024 அன்று ஸ்டாலின் அடிக்கல் நாட்டுதல்: இந்த நிலையில் 17-02-2024 அன்று காலை முதலவர் ஸ்டாலின் காணொளி மூலம் அடிக்கல் நாட்டுவதற்கான விழா, வடலூரில் ஆரம்பித்தது[1]. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்[2]. வள்ளலாரின் ஆதரவாளர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்[3]. அப்படியென்றால், இந்த, “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” திமுகவுக்கு எதிராக செயல் படுகிறது என்பதா? அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது[4].  இதையொட்டி அங்கு 1500-க்கு மேலான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்[5], தடுப்புகளுடன் தயார் நிலையில் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த அளவுக்கு அங்கு என்ன பெரிய பிரச்சினையா எதிர்பார்க்கப் பட்டது?[6] இந்த போராட்டத்தால் வடலூரில் பரபரப்பும் நிலவியது[7], போக்குவரத்தும் பாதிக்கப் பட்டது. இந்த நிலையில், காணொளி மூலம் `வள்ளலார் பன்னாட்டு மையம்’ அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்[8] என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

சமரச சுத்த சன்மார்க்க சங்கமும், சைவமும், புலால் எதிர்ப்பும்:  சமரச சுத்த சன்மார்க்க சங்கம், வள்ளலார் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரால் நிறுவப்பட்டது. இவர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் 1823 ஆம் ஆண்டு பிறந்தார். 19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய சமூக-சமய சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இவர் ஆன்மீகத்தில் கொண்ட பற்று காரணமாக அவரது பாடல்களில் சமுதாய சீர்திருத்தங்கள் மற்றும் சமய உணர்வுகள் இரண்டறக் கலந்திருந்தன. ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். வள்ளலார் அன்பு வழியில் ஆன்மீகத்தை அடையலாம் என உறுதியாக நம்பினார். ஆகவே மனிதர்களிடத்து மட்டுமன்றி தாவரங்கள், புழு, பூச்சிகள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினார். இதனையே “ஜீவகாருண்யம்” என்று அழைக்கிறோம். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனக் கூறிய வள்ளலார், உயிர்களிடத்து எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதை அறியலாம். மூடப்பழக்கங்களையும், சமய சடங்குகளையும் எதிர்த்த வள்ளலார் உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டித்தார். சைவ உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

சத்திய தருமசாலை, உணவளித்தல்: பசி மற்றும் வறுமையே சமுதாயத்தின் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் என வள்ளலார் நம்பினார். ஏழைக்கு உணவு அளிப்பதே சிறந்த வழிபாடு என உறுதியாக நம்பினார். எனவே ஏழைகளின் பசியை நீக்குவதற்காக “சத்திய தருமசாலையை” வடலூரில் நிறுவினார். சத்திய தருமசாலையின் தொடக்க நாளன்று அடுப்பிற்குத் தீமூட்டி இந்தத் தீ எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கட்டும், அப்போது தான் ஏழைகளுக்கு எப்பொழுதும் உணவு அளிக்க முடியும் என உறுதியுடன் கூறினார். இவர் மேற்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்றவண்ணம் ஆண்டு முழுவதும் சாதி சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இராமலிங்க அடிகள், தமிழ் மக்களிடையே சமய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தினார். கடவுள் வழிகாட்டுதலால் மட்டுமே சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று எடுத்துரைத்ததோடு “இறைவன் ஜோதி வடிவானவன்” என்றும் ’அருட்பெரும் ஜோதியாக’ இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். இவர் பிறப்பினால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்தார். சாதி சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டதோடு அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவவேண்டும் என்றும் பாடுபட்டார்.

முதலமைச்சராக இல்லாமல், திமுகத் தலைவர் என்ற முறையில் தான் பிடிவாதமாகச் செயல் பட்டது ஏன்?: அப்படியென்றால், ஸ்டாலின் இதனை முதலமைச்சராக இல்லாமல், திமுகத் தலைவர் என்ற முறையில் தான் பிடிவாதமாகச் செயல் பட்டுள்ளார். பக்தர்கள் எதிர்க்கின்றனர் என்றால், முதலமைச்சர் அவர்களது கருத்தைக் கேட்டிருக்க வேண்டும். நேரிடையாகவும் வருவதற்கு தயக்கம் என்றும் தெரிகிறது. பிறகு காணொளி மூலம் அடிக்கல் நாட்டியது ஏன் என்பதை அலச வேண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் வடலூர் வள்ளலார் தலைமைச் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து[9], திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ரூ. 99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்[10]. ஆக, “திருவருட்பிரகாச வள்ளலார்” பெயரிலேயே பல கும்பல்கள் வேலை செய்வது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

18-02-2024


[1] தினத்தந்தி, வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க எதிர்ப்பு: பாமக போராட்டம்போலீஸ் குவிப்பு, தினத்தந்தி பிப்ரவரி 17, 11:32 am (Updated: பிப்ரவரி 17, 4:14 pm).

[2] https://www.dailythanthi.com/News/State/protest-against-setting-up-of-vallalar-international-center-bamakavins-gather-police-gather-in-vadalur-1094128

[3] தினமணி, வடலூா் பெருவெளியில் பன்னாட்டு மையம்: ராமதாஸ் கண்டனம்,Updated on: 17 பிப்ரவரி 2024, 1:46 am.

[4]  https://www.dinamani.com/chennai/2024/Feb/16/international-in-vadalur

[5] நக்கீரன், நாளை மக்கள் போராட்டம் வெடிக்கும்எச்சரிக்கும் ராமதாஸ், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 16/02/2024 | Edited on 16/02/2024

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ramadoss-condemn-vallalar-international-centre

[7] விகடன், வடலூர் வள்ளலார் பன்னாட்டு மையம்பாமக எதிர்ப்புபதற்றம், போலீஸார் குவிப்புக்கு இடையே அடிக்கல்!, ஜெ.முருகன், எஸ்.தேவராஜன்,

[8] https://www.vikatan.com/government-and-politics/admk-pmk-and-other-parties-opposed-for-setting-up-vadalur-vallalar-international-organization

[9] தமிழ்.நியூஸ்.18, வடலூர் சத்திய ஞான சபையில் `வள்ளலார் பன்னாட்டுமையம் அமைக்க முதலமைச்சர் மு..ஸ்டாலின் அடிக்கல், FIRST PUBLISHED : FEBRUARY 17, 2024, 6:06 PM IST’ LAST UPDATED : FEBRUARY 17, 2024, 6:06 PM IST.

[10] https://tamil.news18.com/tamil-nadu/mk-staling-lays-a-foundation-stone-for-vadalur-sathya-gana-sabha-1348615.html

சனாதன ஒழிப்பாளர், சிலையுடைப்பவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பது பகுத்தறிவா, பெரியாரிஸமா அல்லது திராவிடத்துவமா? (2)

நவம்பர் 28, 2023

சனாதன ஒழிப்பாளர், சிலையுடைப்பவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பது பகுத்தறிவா, பெரியாரிஸமா அல்லது திராவிடத்துவமா? (2)

வி.பி.சிங்கின் சிலை செலவு ரூ 52 லட்சமா இல்லை 31 லட்சமா?: இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைக்கப்பட்டது[1]. அதன் அடிப்படையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.31 லட்சம் மதிப்பில் தமிழக அரசின் சார்பில் புதிதாக வி.பி.சிங்கின் சிலை அமைக்கப்பட்டு உள்ளது என்கிறது இன்னொரு செய்தி[2]. 600 கிலோ எடை, சுமார் 8.5 அடி உயர பீடத்தில், 9.5 அடி உயரம் கொண்டதாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது[3]. இந்த சிலை அமைந்துள்ள கல்வெட்டில் வி.பி.சிங்கின் கருத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது[4]. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்[5]. தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் மற்றும் வி.பி.சிங் மகன் அஜய் சிங் உள்ளிட்டோர் உரையாற்றினர்[6].

வி.பி.சிங் குடும்பம் கலந்து கொண்டது: இந்த சிலையை இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்துக்கொண்டார்[8]. மேலும், வி.பி.சிங் மனைவி சீதாகுமாரி. அவருடைய மகன்கள் அஜயாசிங், அபய்சிங் ஆகியோரும் பங்கேற்றனர்[9]. இதுதவிர இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்[10]. அவ்விழாவில் சிலை திறந்து வைத்தபின்னர் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்[11], “வி.பி. சிங்கிற்கு உத்தரபிரதேசம் தாய்வீடு. தமிழ்நாடு தந்தை வீடு. தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் வி.பி. சிங் பேச்சு இருக்காது. இன்று நான் வி.பி. சிங்கிற்கு சிலை திறந்ததை விட வேறன்ன பெருமை இருக்கும்…….” என்றெல்லாம் பேசியதை கவனிக்கலாம்[12].

ஸ்டாலின் சிங்கைப் புகழ்ந்து எழுதியது: முன்னதாக இன்று காலை தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக் காட்டியவர் வி.பி.சிங். அவருடைய இந்தச் சிறப்பான முடிவின் பின்னணியில் ஊக்கசக்தியாக விளங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். சமூகநீதிக் காவலர் எனப் பெயர் பெற்ற வி.பி.சிங் ஆட்சியை, சமூக அநீதியை காலம் காலமாக ஆதரித்தும் – நிலைநாட்டியும் வரும் பா.ஜ.க. கவிழ்த்தது. ஓராண்டு கூட முழுமையாகப் பதவியில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமர்களின் வரிசையிலே நிலையான இடத்தைப் பிடித்திருப்பவர் வி.பி.சிங். அத்தகைய மாமனிதருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அன்று இளைஞரணிச் செயலாளரகவும் இன்று கழகத் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உள்ள உங்களில் ஒருவனான நான் அதனைத் திறந்து வைக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றுள்ளேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலின்இளைஞரணி மாநாட்டுக்கு வாழ்த்து: தொடர்ந்து அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு தனது வாழ்த்தினைப் பதிவு செய்துள்ளார். அதில். “ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதிக்காகவும், மாநில உரிமைக்காகவும் தேசிய முன்னணி தொடங்கப்பட்டபோது, கழகத்தின் இளைஞரணி எத்தகைய எழுச்சிமிக்க பேரணியை நடத்திக் காட்டியதோ, அதுபோல, சமூகநீதியை முற்றிலுமாக அழிக்கத் துடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறித்திடும் ஒன்றிய பா.ஜ.க அரசிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகவும் மக்களின் ஆதரவை நாடிக் கையெழுத்து இயக்கத்தையும், இரு சக்கர வாகனப் பரப்புரைப் பேரணியையும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது இன்றைய இளைஞரணி.

27-11-2023 உதயநிதி பிறந்த நாள் என்பது முக்கியமானது: சிங்கின் நினைவு நாள் உதயநிதீன் பிறந்த நாளோடு சேர்ந்து விட்டது. ஸ்டாலின் தொடர்ந்து எழுதியது, “முத்தாய்ப்பாக, டிசம்பர் 17-ஆம் நாள் சேலத்தில் ‘மாநில உரிமை மீட்பு முழக்க’த்துடன் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. இளைஞரணிச் செயலாளரும் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான தம்பி உதயநிதி இன்று தன் பிறந்தநாளில் என்னிடம் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். அவரை மட்டும் நான் வாழ்த்தவில்லை. இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என அயராது பாடுபடும் இருபத்தைந்து இலட்சம் இளைஞரணி உடன்பிறப்புகளையும் நான் வாழ்த்தி மகிழ்கிறேன்……மாநாட்டை இளைஞரணி நடத்தினாலும் கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் இதில் பங்கேற்கும் உரிமையுண்டு. இந்த மாநாடு, இன்னும் சில மாதங்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக் களம். கழகத்தினர் கூடுகின்ற பாசறைக் கூடம். அதனால்தான் நேற்று (நவம்பர் 26) நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தின் மையப் பொருளாக இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் குறித்தும், அதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.”

நான் அமைச்சர், உதயநிதி அமைச்சர்: 2007-ஆம் ஆண்டு உங்களில் ஒருவனான என் தலைமையில் இளைஞரணி செயல்பட்டபோது, அதன் வெள்ளி விழா ஆண்டையொட்டி முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இப்போது தம்பி உதயநிதி அமைச்சராக இருப்பதுபோல அப்போது நான் அமைச்சர். இப்போது நான் முதலமைச்சராக இருப்பதுபோல அப்போது தலைவர் கலைஞர் முதலமைச்சர். இளைஞரணி மாநாட்டுப் பணிகளை நான் முன்னின்று அப்போது மேற்கொண்ட போது, அதன் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, நெறிப்படுத்தி வழிநடத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதே பொறுப்புணர்வுடன்தான் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் என் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன்.

வெற்றி மாநாடு, வெற்றி விழா: கழகத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒவ்வொரு மாநாடும் வெற்றிக்கான விரைவுச்சாலை. அதில் கொள்கைப் பட்டாளம் வீறுநடைபோடும். மாநாடு தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே உடன்பிறப்புகளிடம் எழுச்சி உருவாகிவிடும். மாநாடு முடிந்து ஆறு மாதங்கள் கடந்தாலும் உத்வேகம் குறையாத களப்பணி தொடரும். எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் நம் கொள்கையுணர்வு ஒரு போதும் குறைவதில்லை. ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். கலைஞர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பெண்களின் நலன் காக்கும் திட்டங்கள் நேரடிப் பயன்களைத் தருவதால் தமிழ்நாட்டு பெண்களின் நம்பிக்கைகுரிய இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே இருக்கிறது. அதுபோல இளைஞர்களுக்கான நான் முதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, புதிய வேலைவாய்ப்புகள், மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள், விளையாட்டுப் பயிற்சிகளுக்கான ஊக்கம் இவற்றை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது.

© வேதபிரகாஷ்

28-11-2023.


[1] இ.டிவி.பாரத், ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் சென்னையில் வி.பி.சிங் சிலை: முதலமைச்சர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார்!, NOVEMBER 27, 2023, 11:41 AM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/cm-stalin-unveils-former-prime-minister-vp-singh-statue-in-chennai-presidency-college-campus/tamil-nadu20231127122116282282536

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னையில் வி.பி சிங் சிலை: அகிலேஷ் முன்னிலையில் திறந்து வைத்த ஸ்டாலின், WebDesk, Nov 27, 2023 16:50 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-speech-in-vp-singh-statue-opening-ceremony-1710634

[5] தினமணி, வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்!, By DIN  |   Published On : 27th November 2023 11:10 AM  |   Last Updated : 27th November 2023 11:22 AM

[6] https://www.dinamani.com/tamilnadu/2023/nov/27/ex-prime-minister-vp-singh-statue-opening-4112519.html

[7] தினத்தந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்அமைச்சர் மு..ஸ்டாலின்..!, நவம்பர் 27, 11:14 am.

[8] https://www.dailythanthi.com/News/State/prime-minister-m-k-stalin-inaugurated-the-statue-of-former-prime-minister-v-p-singh-1084078

[9] புதியதலைமுறை, விபி சிங் சிலை திறப்பு – “நாம் அவருக்கு காட்டவேண்டிய நன்றி முதல்வர் பெருமிதம்,  Angeshwar G,Published on : 27 Nov 2023, 1:49 pm.

[10] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/cm-stalin-speech-at-the-unveiling-of-the-statue-of-vp-singh

[11] ஹிந்துஸ்தான்.டைம்ஸ்.தமிழ், VP Singh’s statue: சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலையை திறந்து முதல்வர் செய்த சம்பவம்! ஆச்சர்யப்பட்ட அகிலேஷ்!, Kathiravan V HT Tamil, Nov 27, 2023 11:29 AM IST.

[12] https://tamil.hindustantimes.com/tamilnadu/former-prime-minister-vp-singhs-statue-inaugurated-by-cm-mk-stalin-in-chennai-attended-by-up-cm-former-akhilesh-yadav-131701064143891.html

சிலையுடைப்பவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பது பகுத்தறிவா, பெரியாரிஸமா அல்லது திராவிடத்துவமா? (1)

நவம்பர் 28, 2023

சிலையுடைப்பவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பது பகுத்தறிவா, பெரியாரிஸமா அல்லது திராவிடத்துவமா? (1)

சிலையுடைக்கும் கூட்டத்தினர் சிலைகள் வைப்பது: சிலையுடைக்கும் பெரியாரிஸ பகுத்தறிவுவாதிகள் தாம், தாங்கள் ஆட்சி-அதிகாரத்திற்கு வந்தவுடன், கடற்கரையில் வரிசையாக சிலைகள் வைத்தார்கள். பிறகு, மவுண்ட்ரோடில் சிலைகள் வைக்க ஆரம்பித்தார்கள். 1987ல் கருணாநிதி சிலை உடைக்கப் பட்ட போது, அது அமங்கலமாகக் கருதப் பட்டு, தெருக்களில் சிலை வைப்பதைக் குறைத்துக் கொண்டனர். ஆனால், அம்பேத்கர் சிலைகள் திடீரென்று அதிகமாக வைக்கப் பட்டன. அப்பொழுதே, “தமிழன் அல்லாதவருக்கு தமிழகத்தில் எதற்கு சிலை?” என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், எஸ்.சி, பட்டியல் இனம், தலித் என்ற சமரசத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு, “மணி மண்டபம்” என்று ஆரம்பித்து சிலை வைக்க ஆரம்பித்தனர்.  சில நேரங்களில், சில சிலைகள் அமங்கலமாக அல்லது தீங்கு விளைவிக்கும் என்ற குருட்டு நம்பிக்கையினையும் இந்த நாத்திக-பகுத்தறிவுவாதிகள் வளர்த்துக் கொண்டனர். கண்ணகி சிலையிலும் அந்த திராவிட-குருட்டு நம்பிக்கை வேலை செய்தது. மற்றவர்கள் தாக்கக் கூடும் என்ற நிலை உண்டான பொழுது, பதுகாப்பிற்காக, கூண்டுகள் செய்யப் பட்டு, உள்ளே சிலைகள்  இருக்குமாறு வைத்தனர்.

ஆரியர்திராவிடர் என்றோ மொழியை வைத்தோ இந்தியர்களைப் பிரிக்க முடியாது: ஆரியர்கள்-திராவிடர்கள் என்று தொடர்ந்து பேசி, வட-இந்திரர்களை ஆரியர்கள் என்றும் தென்னிந்தியர்களை திராவிடர்கள் என்றும் பிரித்து வேற்றுமையை உண்டாக்க கடந்த ஆண்டுகளில் திராவிடத்துவவாதிகள் ஈடுபட்டுள்ளனர். பிறகு கட்சி அரசியல் தேர்தல் போன்ற லாபங்களுக்காக திராவிடஸ்தானை மறந்து, மாநில சுயாட்சி என்ற இன்னொரு சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, அடிக்கடி இந்த ஆரிய-திராவிட பிரச்சனையை தூண்டி வருவ்தும் தெரிந்ததே. இந்தியை எதிர்க்கவில்லை இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம், என்றெல்லாம் பேசினாலும், தேசிய அளவில் பொதுமக்கள் போக்குவரத்து, பொருட்கள் உற்பத்தி, உபயோகம், பயன்பாடு என்றெல்லாம் வரும் பொழுது எல்லா மாநில மக்களும் – அவர்களது உழைப்பும், ஒத்துழைப்பும் மற்ற காரணிகளும் சேர்ந்து இணைந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆகையால் ஹிந்தி பேசும் மக்கள் இங்கு வரக்கூடாது என்றும் சொல்ல முடியாது. இந்த மாதிரி வெறுப்பை வளர்ப்பதினால் தான் மதராசி என்ற சொல்லாடல் இந்தி பேசும் மக்களிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை தமிழர்களை அல்லது தமிழ் பேசும் மக்களை மற்ற எந்த மாநிலத்திலும் யாரும் வித்தியாசமாக நடத்துவதில்லை. எனவே இக்காலத்தில் இத்தகைய முரண்பாடுகளை வைத்துக்கொண்டு அரசியல் நடத்துவது என்பது தகாதது.

இந்திஎதிர்ப்பாளர்கள், இந்திக்காரர்களை ஆதரிப்பது: 1950-60களில் “இந்தி ஒழிக”, என்று ஆர்பாட்டம் செய்து (பிரிவினைவாதமும் சேர்ந்தது), நேருவின் எரிச்சலையும் பெற்று திட்டு வாங்கிக் கொண்டவர்கள் தான் இந்த பகுத்தறிவுவாதிகள்[1]. “வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது” என்றும் கூச்சலிட்டனர். இவர்களை “இந்தி-எதிர்ப்புப் போராளிகள்” என்று தான் போற்றினர். பிறகு ஆட்சிக்கு வந்ததுவுடன் மத்திய அரசுடன் சுமுகமாக இருக்க, “இந்தி எதிர்ப்பு”  வேறு, “இந்தி திணிப்பு எதிர்ப்பு” வேறு என்று மாற்றிக் கொள்ள திட்டத்தை மாற்றிக் கொண்டனர். இருப்பினும், இதில் ஒன்றும் வித்தியாசம் இல்லை என்பது தெரிந்த விசயமே. “ரூப் தேரா மஸ்தானா, ப்யார் மேரா தீவானா,” [உனது உருவம் எனக்கு கிருக்கத்தை ஏற்ப்டுத்துகிறது, அதனால் நான் உன்மத்தன் ஆகி விட்டேன்[2]] என்றாகியது! 1986ல் ராஜீவ் காந்திக்கு எதிராக கருணாநிதி “இந்தி எதிர்ப்பு” செய்த ஆர்பாட்டம் வன்முறையில் முடிந்தது[3]. 2020ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், “இந்தி தெரியாது போடா” என்றெல்லாம் ஆர்பாட்டம், பிரச்சாரம் செய்தனர். இப்பொழுது, அதே இந்திக்காரர்களுடன் “ஜிகிரிதோஸ்த்” உறவு வைத்துக் கொண்டு, கூட்டணியை உருவாக்கியுள்ளனர். பிறகு, இவர்களிடமிருந்து மிகவும் மாறுபட்ட வி.பி.சிங்கிற்கு சிலை வைக்க திட்டம் போட்டு, முடித்து வைத்துள்ளனர்.

2023ல் வி.பி.சிங்கிற்கு மாநில கல்லூரி வளாகத்தில் சிலை வைத்தது: சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை 27-11-2023 அன்று (நவ.27) காலை 11.00 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்[4]. சிலை திறப்பு விழாவில் வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜயா சிங், அபய் சிங் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்[5]. உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. அவரது நினைவுநாளில் [27-11-2008] இந்நிகழ்சி ஏற்பாடு செய்யப் பட்டது[7]. 11-மாதங்கள் பிரதமராக இருந்த சிங் தமிழ்நாட்டுக்கு செய்ததை ஊடகங்கள் எடுத்துக் காட்டின. மறைந்த முன்னான பிரதமர் விபிசிங் தனது ஆட்சிக்காலத்தில், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தவர்[8]. அத்துடன் சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணாவின் பெயரையும் சூட்டினார்[9]. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி.மண்டல் தலைமையில் கமிஷன் அமைத்து, 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால், அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தினார்[10].

20-04-2023 முதல் 27-11-2023 வரை, மிகக் குறிகிய காலத்தில் வேலை செய்து சிலை வைத்த திராவிட மாடல்: சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர். வி.பி.சிங்கிற்கு சிலை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனராம்.  இந்நிலையில் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் (20.04.2023) நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சமூக நீதி காவலரான வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்[11]. 27-11-2023 அன்று சிலை திறந்து வைக்கப் பட்டது, ஆக 20-04-2023 முதல் 27-11-2023 வரை, மிகக் குறிகிய காலத்தில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது! திமுக ஆட்சியில் இது தான், வேகத்தில் நடந்து முடிந்த வேலை எனலாம். தினம்-தினம் மழை, சாலைகள் பாழ், நீர் தேக்கம், என்றெல்லாம் இருந்தாலும், இந்த விழா நடந்தே விட்டது.

© வேதபிரகாஷ்

28-11-2023.


[1]  1937, 1967 இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தேசியத்தை எதிர்த்து செய்யப் பட்ட ஆர்பாட்டங்கள் தான், ஆனால், திராவிடத்துவ வாதிகள் வேறு விதமாக விளக்கம் ளிக்கின்றனர். 

[2]  இத்தகைய காம-கொக்கோகங்களை அறிஞர்-கலைஞர் எழுத்துகளில் சுவைக்கலாம், அப்பொழுது சுவரொட்டிகளும் தென்பட்டன; நடைமுறையிலும் செயல்பட்டன.

[3] 17 நவம்பர் 1986 அன்று திமுக உறுப்பினர்கள் கல்விக்கொள்கைக்கெதிராக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியைத் தீயிலிட்டு கொளித்தனர். கருணாநிதி உட்பட 20,000 திமுக தொண்டர்கள் கைதாயினர். 21 நபர்கள் தம்மைத் தாமே கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். கருணாநிதிக்குப் பத்து வாரங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. க. அன்பழகன் உட்பட பத்து திமுக பேரவை உறுப்பினர்களை அவைத்தலைவர் பி. எச். பாண்டியன் அவையிலிருந்து வெளியேற்றினார். அதிமுகவிற்கு இடைஞல் ஏற்பட இத்தகைய வன்முறை கட்டவிழ்க்கப் பட்டது என்றும் கூறப் பட்டது.

[4] தமிழ்.இந்து, சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார், செய்திப்பிரிவு, Published : 27 Nov 2023 11:19 AM, Last Updated : 27 Nov 2023 11:19 AM.

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/1159775-cm-stalin-unveils-statue-of-vp-singh-3.html

[6] மாலைமலர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு..ஸ்டாலின், By மாலை மலர், 27 நவம்பர் 2023 11:44 AM

[7] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-inaugurated-vp-singh-statue-689986

[8] தமிழ்.நியூஸ்.18, உயர்ந்து நிற்கும் பிரம்மாண்ட வி.பி.சிங் சிலை…! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பு, FIRST PUBLISHED : NOVEMBER 27, 2023, 11:41 AM IST, LAST UPDATED : NOVEMBER 27, 2023, 11:41 AM IST.

[9] https://tamil.news18.com/tamil-nadu/chief-minister-stalin-inaugurate-the-statue-of-former-prime-minister-vp-singh-1247799.html

[10] நக்கீரன், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு, Published on 27/11/2023 (12:35) | Edited on 27/11/2023 (12:40).

[11] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ex-prime-minister-vp-singh-statue-inauguration

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல், நேற்று வரை கடுமையாக விமர்சித்து, இன்று தாங்கள் தான் காரணம் என்று கூறிக் கொள்ளும் திராவிட ஸ்டாக்குகள்!

ஓகஸ்ட் 27, 2023

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல், நேற்று வரை கடுமையாக விமர்சித்து, இன்று தாங்கள் தான் காரணம் என்று கூறிக் கொள்ளும் திராவிட ஸ்டாக்குகள்!

26-08-2023 அன்று மோடி இஸ்ரோ மையத்திற்குச் சென்று விஞ்ஞானிகளை வாழ்த்தியது: சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம், இந்தியா விண்வெளி வரலாற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்தி சாதனை படைத்துள்ளது. இந்திய விஞ்ஞானிகள் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார், இந்த நிகழ்வை தேசத்திற்கு மறக்க முடியாத நாள் என்று கூறினார். எவ்வாறாயினும், பணியின் உச்சம், தரையிறங்குவதற்கான இறுதி தருணங்களில் இருந்தது, இஸ்ரோவின் தானியங்கி தரையிறங்கும் வரிசை (ALS) எடுத்துக்கொண்டது, விக்ரம் எல்எம் சந்திர மேற்பரப்பில் ஒரு மென்மையான தொடுதலுக்கு வழிகாட்டியது. மோடி 23-08-2023 அன்று தென்னாப்பிரிக்காவில் இருந்ததால், இந்தியாவுக்கு வந்ததும், பெங்களூரில் எல்லா விஞ்ஞானிகளையும் சந்தித்து பாராட்டினார். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்து நேரடியாக 26-08-2023 அன்று (சனிக்கிழமை) காலை பெங்களூரு வந்தார். பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்குச் சென்றார்.

லேண்டர் தரையிறங்கிய இடம் இனிசிவசக்தி பாயின்ட்என்றழைக்கப்படும்: அப்போது விஞ்ஞானிகள் அனைவரையும் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் மோடிக்கு லேண்டர் எடுத்தப் புகைப்படங்கள் பரிசாக வழங்கப்பட்டன[1]. பிரதமரிடம் லேண்டர் விண்கலனின் மாதிரியை திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் வழங்கினார்[2]. அவருக்கு பிரதமர் மோடி கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்[3]. பின்னர் அங்கு விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்[4]. நமது நாட்டின் பெருமையை, கவுரவத்தை நாம் உலகத்துக்கே நிரூபித்துள்ளோம். லேண்டர் தரையிறங்கிய இடம் இனி ‘சிவசக்தி பாயின்ட்’ என்றழைக்கப்படும். நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும்” என்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவில் சந்திரயான்-2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு ‘திரங்கா பாயின்ட்’ எனப் பெயர் சூட்டப்பட்டது என்பதையும் பிரதமர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் விமர்சனம்: இந்நிலையில் அரசியல்வாதிகள் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை அறியாமல், புரிந்து கொள்ளாமல் அல்லது வேண்டுஎன்றே விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சிவசக்தி என்பதற்குப் பதிலாக வேறு பெயரை வைக்கலாம் என்றும், பெங்களூருக்குச் செல்லத் தெரிகிறது ஆனால், மணிப்பூருக்குச் செல்லத் தெரியவில்லை, இதை அரசியல் ஆக்கப் பார்க்கிறார் என்றெல்லாம் எதிர்கட்சியினர் பேச ஆரம்பித்துள்ளனர். இதுவரை, இஸ்ரோ, விண்வெளி பயணம், சந்திரயான் முதலியவற்றைப் பற்றி பேசியதில்லை, கண்டுகொண்டதில்லை. இஸ்ரோ விஞ்ஞானிகள் திருமலை கோவிலுக்குச் சென்று வழிபட்டதை கூட விமர்சித்துள்ளனர். பிறகு, இப்பொழுது உலகமே வியக்கும் வண்ணம், நிலவில் இறங்கியப் பிறகு தான், இத்தகைய கிண்டல், நக்கல்-விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன..

வெற்றிக்கு வேண்டியதை விமர்சித்து வெற்றிக்கு தாங்கள் தான் காரணம் என்று தம்பட்டம் அடிப்பது: இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றியில் தேசம் மகிழ்ந்த நிலையில், திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) கட்சியில் இருந்து ஒரு கடுப்பான குறிப்பு வெளிப்பட்டது, வெற்றிக்கு தங்கள் அரசியல் பாரம்பரியம் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது, அதாவது, தப்பட்டம் அடிக்க ஆரம்பித்தது. திமுக மாணவர் பிரிவுத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் காந்தி, மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனுடன் (மங்கள்யான்) சந்திரயான்-1, சந்திரயான்-2, சந்திரயான்-3 ஆகியவற்றின் சாதனைகளின் வெற்றிக்கு தமிழகம் தான் காரணம் என்று ட்விட்டரில் வலியுறுத்தி பதிவு செய்துள்ளது தமாஷாக உள்ளது. மறைந்த திமுக தலைவர் அண்ணாதுரையால் இருமொழிக் கொள்கை வலியுறுத்தப்பட்டது. பிறகு அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இந்த விமர்சகர் எப்பொழுதும், ஏடாகூடமாகத்தான் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சந்திரயான் வெற்றிக்கு கோடி கணக்கான இந்தியர்கள் வேண்டியபோதும் கிண்டல் அடித்தனர், ஆனால், இப்பொழுது வெற்றிக்கு தாங்கள் தான் காரணம் என்று தம்பட்டம் அடிப்பது வேடிக்கை தான்.

பெரியார், கருணாநிதி மற்றும் அண்ணாதுரை உதலியோருடன் தொடர்பு படுத்துவது: கடந்த காலங்களைப் போலவே, திராவிடப் ஸ்டாக்கிஸ்டுகள் தமிழ்நாட்டின் எந்தவொரு நேர்மறையான முன்னேற்றங்களையும் அல்லது தமிழர்களின் சாதனைகளையும் பெரியார், கருணாநிதி மற்றும் அண்ணாதுரை போன்ற திராவிடத் தலைவர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புபடுத்தி பொய்யான பிரச்சாரம் செய்வர். சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியபோது, திராவிட இயக்கத் தலைவர் ஈ.வி.ராமசாமி நாயக்கருக்குக் கூறப்பட்ட ஒரு பழைய அறிக்கை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு கிண்டல் அடிக்கப் பட்டது.. இந்தியாவைப் பற்றி இழிவான கருத்தைத் தெரிவித்ததற்காக பலர் இந்த அறிக்கையைப் பயன்படுத்தி கேலி செய்தனர். சுதந்திரத்தின் போது, ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறினால், ஒரு பாதுகாப்பு ஊசியை கூட இந்தியா தயாரிக்க முடியாது என்று ராமசாமி நாயக்கர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. சந்திரயான்-3யின் வெற்றிகரமான சாதனையைத் தொடர்ந்து, பெரியாரின் இந்த குறிப்பிட்ட அறிக்கை ட்ரெண்டாக்கத் தொடங்கியது, மேலும் சமூக ஊடகங்களில் பயனர்கள் அவரை நோக்கி கேலி செய்வதில் ஈடுபட்டனர்.

ஆரம்ப காலத்திலேயே ஒத்துழைப்புக் கொடுக்காத திமுக: இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிக்கு திமுக தலைவர் ஒருவர் அவமரியாதை காட்டியதாக கூறப்படும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. நம்பி நாராயணனின் புத்தகத்தில் இருந்து “ரெடி டு ஃபயர்” என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி, இஸ்ரோ ஏவுதளத்தை அமைப்பதற்கான முதன்மைத் தேர்வாக கன்னியாகுமரி இடத்தின் கடற்கரைகள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவத்தை விவரிக்கிறது. ஆனால், போதையில் இருந்த திமுக அமைச்சரின் நடவடிக்கையால் அந்த இடம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றப்பட்டது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி முயற்சிகளின் பின்னணியில் இருந்த விக்ரம் சாராபாயை திமுக அமைச்சர் எப்படி அவமதித்தார் என்பதையும் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.

நாகப்பட்டினத்திலிருந்து, ஶ்ரீஹரிகோட்டாவுக்கு மாறியது எப்படி?: புத்தகத்தின் ஒரு பகுதி கூறுகிறது: “ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கான முதல் தேர்வாக இஸ்ரோ இல்லை என்பது பலருக்குத் தெரியாது. மூத்த இஸ்ரோ விஞ்ஞானி ஆர் எம் வாசகம் கண்டறிந்த சில இடங்களில் இதுவும் ஒன்று, மற்றொன்று நாகப்பட்டினத்திற்கு தெற்கே உள்ள இடம். இருவரும் தமிழகத்தில் இருந்தனர். துருவ செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு, நமது ஏவுதளம் கிழக்குக் கடற்கரையில் இருக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பூமியின் சுழலுடன் ராக்கெட்டை ஏவியது, அது செலவில் பெரும் நன்மையைக் கொடுத்தது; ராக்கெட்டை அதன் ஆரம்ப கிழக்கு நோக்கிய பயணத்திற்குப் பிறகு தெற்கே சூழ்ச்சி செய்வதன் மூலம், நாங்கள் எந்த நிலப்பரப்பின் மீதும் பறப்பதைத் தவிர்த்தோம். கன்னியாகுமரியின் கடற்கரை 1960 களின் பிற்பகுதியில் கருதப்பட்டு தேர்ந்தெடுக்கப் பட்டது, ஆனால் தமிழ்நாடு அரசாங்கத்தின் மோசமான தவறான கையாளுதல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சரியான நேரத்தில் சுருதி ஸ்ரீஹரிகோட்டாவை உருவாக்கியது.

திமுக அமைச்சர் மதியழகன் சாராபாயை அவமதித்தது: விக்ரம் சாராபாய் முன்மொழிந்த குறுகிய பட்டியலில் இருந்து ஒரு இடத்தை அடையாளம் காண்பது தொடர்பாக சாராபாய் மற்றும் சில விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் தமிழக முதல்வர் சி என் அண்ணாதுரை பங்கேற்க இருந்தார். கடுமையான தோள்பட்டை வலி காரணமாக அண்ணாதுரை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை, மேலும் அவர் தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்திற்கு அனுப்பினார். சாராபாய் காத்திருக்க வைக்கப்பட்டார், சிறிது நேரம் கழித்து, அமைச்சர் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார், ஆனால், அவர் தட்டுத் தடுமாறி வந்தது திகைப்பாக இருந்த்து – ஒரு சிலர் அவரை விழாமல் தடுத்து நிறுத்தினர். அரசியல்வாதி சாராபாயை அவரது சாத்தியமற்ற கோரிக்கைகள் மற்றும் பொருத்தமின்மையால் எரிச்சலூட்டினார். கூட்டம் முடிவடைவதற்கு முன்பே, சாராபாய் தமிழ்நாடு இல்லை என்று முடிவு செய்தார். அதாவது தமிழ்நாடு ஒத்துழைப்பு கொடுக்காது என்று புலப்பட்டது.

ஆந்திரமும், தமிழகமும்: அப்போதுதான் ஆந்திர பிரதேசம் ஒரு வாய்ப்பை வழங்கியது என்பதை, யாரும் மறுக்க முடியாது. 26,000 ஏக்கர் ஸ்ரீஹரிகோட்டா தீவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆந்திர அதிகாரி சாராபாயிடம் கூறினார்[5]. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளம் அங்கு வருவதால், மக்கள் வசிக்கும் இடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடையக்கூடும் என்பதை ஆந்திர அரசு உணர்ந்திருக்க வேண்டும்[6]. ஆக, இவ்வாறு பல நேரங்களில் மத்திய அரசுடன் சண்டைப் போட்டுக் கொண்டு தான் காலத்தைக் கடத்தியுள்ளது. இப்பொழுதும், “ஒன்றிய அரசு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பிரிவினைவாதத்தை வளர்த்து வருகிறது. நீட்டை எதிர்க்கிறோம் என்று சொல்லி விட்டு, விஞ்ஞான வெற்றிக்கு, சம்பந்தமே இல்லாமல், “நாங்கள் தான் காரணம்,” என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது, வீணான செயலே. ஏனெனில், இன்று உலகம் முழுவதிலும், உண்மை நிலை என்ன என்று அறியப் பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

 27-08-2023


[1] தினமணி, சந்திரயான்-3 வெற்றி மிகப் பெரியது: பிரதமர் மோடி, By DIN  |   Published On : 27th August 2023 12:23 PM  |   Last Updated : 27th August 2023 12:23 PM .

[2] https://www.dinamani.com/india/2023/aug/27/chandrayaan-3-living-example-of-women-power-pm-modi-4062283.html

[3] தமிழ்.இந்து, நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடத்துக்குப் பெயர்சிவசக்தி‘ – பிரதமர் மோடி அறிவிப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Aug 2023 08:45 AM; Last Updated : 26 Aug 2023 08:45 AM.

[4] https://www.hindutamil.in/news/india/1108662-touchdown-point-of-chandrayaan-3-lander-on-moon-to-be-known-as-shiv-shakti-announces-pm-modi-1.html

[5] The Commune, How A Drunk DMK Minister Irritated Vikram Sarabhai And Drove Away ISRO’s Launchpad From Tamil Nadu To Andhra Pradesh, August 26, 2023 

[6] https://thecommunemag.com/how-a-drunk-dmk-minister-irritated-vikram-sarabhai-and-drove-away-isros-launchpad-from-tamil-nadu-to-andhra-pradesh/

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (2)

ஒக்ரோபர் 21, 2022

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (2)

2019ல் கோவில் கட்டுகிறோம் என்ற செய்தி: ராசிபுரம் அருகேயுள்ள குச்சிகாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பட்டியிலின மக்கள் 10 பேர், தங்களுடைய சொந்த நிலத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்[1]. கோயில் பணிக்காக நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது[2]. இதில் தி.மு.க மற்றும் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்[3]. இதுபற்றி அப்பகுதி மக்களிடம் பேசியபோது[4], ‘2008ல் எங்கள் இனமக்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் கருணாநிதி. பல்வேறு உதவிகளை எங்கள் மக்களுக்கு செய்த அவருக்கு நன்றி தெரிவிக்கவும், அவரை போற்றுவதற்கும் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டுகிறோம். அண்ணா அறிவாலயம், கலைஞர் அறிவாலயம் போல் இந்தக் கோயில், மக்களிடைய பகுத்தறிவை எடுத்துச்செல்ல, உதவ வேண்டிய பணியை சிறப்பாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு கருணாநிதி செய்த உதவிகள் காலம் கடந்து நிற்கும். அவரது சாதனைகளைச் சொல்வதற்கு, நாங்கள் ஒரு நினைவாலயம் போல் கட்டுவது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்,” என்றனர்[5]. ரூ.30 லட்சம் மதிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கட்டப்படும் கோயிலில் கருணாநிதியின் உருவச்சிலை, பூங்கா மற்றும் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக அருந்ததியர் முன்னேற்றப் பேரவை அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்[6].

திமுக தலைவர் கொடுத்த விளக்கம்: இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதியான கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதை பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் குச்சிக்காடு கிராமத்துக்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வன் நேரில் வருகை தந்தார். அங்கே கருணாநிதிக்குக் கோயில் கட்டப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தார்[7]. இதன்பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “குச்சிக்காடு கிராம மக்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்டவில்லை. இங்கே பகுத்தறிவாலயம்தான் எழுப்பப்படுகிறது. நினைவிடத்தில் இருப்பது போலவே கருணாநிதியின் சிலை இருக்கும். மேலும் போட்டித் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில்  இணைய வசதியும்கூடிய நூலகமும் அமைக்கப்பட உள்ளது. கணினி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது,” என்று காந்திச்செல்வன் தெரிவித்தார்[8]. 2019ல் இவ்வாறு எல்லாம் சப்பைக் கட்டினாலும், 2022 வரை ஒன்றும் நடக்கவில்லை போலும். ஏனெனில், 2022ல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

2022ல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது குச்சிகாடு என்ற கிராமம். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது[9]. கலைஞர் பகுத்தறிவு ஆலயம் என்று பெயரிடப்பட்ட இந்த கோவிலுக்கு பேரரூராட்சி துணை தலைவர் நல்லதம்பி என்பவர் தன்னுடைய நிலத்தை இலவசமாக கொடுத்து உள்ளார்[10]. மேலும், இவ்வூரை சேர்ந்த அரசு ஊழியர்கள் கலைஞர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டள்ளனர்[11]. இந்த நிலையில் பூமிபூஜை செய்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கோவில் கட்டும் பணி பாதியிலேயே நின்று உள்ளது[12]. குச்சிகாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோவில் கட்டும் பணியில் ஆர்வம் காட்டிய போதிலும் மேற்கொண்டு ஆதரவு கிடைக்காததால் கோவில் பணி பாதியிலேயே நின்றுள்ளது. தற்போது பாதியில் நிற்கும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இவ்வூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிறகு, 2019-2022 காலகட்டத்தில் என்ன நடந்தது, கோவில் கட்டமுடியாமல் யார் தடுத்தது, அதற்கு யார் காரணம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

2010ல் கருணாநிதிக்கு கோவில் கட்ட திட்டம் போட்ட ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி: முதல்வர் கருணாநிதி பெயரில் செம்மொழி விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவரது பெயரில் வீட்டு வசதித் திட்டம், உயிர் காப்பீட்டுத்திட்டம் ஆகியவை உள்ளன. முதல்வர் பெயரில் டிவி சானலும் கூட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் பெயரில் ஒரு கோவில் வரவுள்ளது வேலூரில். வேலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருக்கும் ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திதான் இந்தக் கோவிலை கட்ட முனைந்துள்ளார்[13]. முதல்வர் கருணாநிதியின் ஏழை மக்கள் நலத் திட்டங்களால் கவரப்பட்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்[14]. இந்தக் கோவிலுக்கு கலைஞர் திருக்கோவில் என அவர் பெயரிட்டுள்ளார். குடியாத்தம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சாமிரெட்டிப்பள்ளி கிராமத்தில் இந்தக் கோவில் வருகிறது.ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக்கோவில் உருவாகிறது. கிரானைட்டால் ஆன முதல்வர் கருணாநிதியின் சிலை இங்கு வைக்கப்படுகிறது. வெளியில் உள்ள தூண்களில் மு.க.ஸ்லாடின், துரைமுருகன், மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தியின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கிருஷ்ணூ்ர்த்தி கூறுகையில், முதல்வர் கருணாநிதி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எனது கிராமத்தில் மட்டும் 13 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரை தாங்கள் கடவுள் போல கருதுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்தே எனக்கு கோவில் கட்டும் ஐடியா வந்தது என்றார்.

2010 அக்கோவில் இடிக்கப் பட்டது: அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடித்தனராம்: இந்நிலையில், குடியாத்தத்தைச் சேர்ந்த வருவாய்த் துறையினர் 02-07-2010 அன்று காலை 10 மணிக்கு கோவில் இருந்த இடத்துக்கு வந்து மார்பளவு இருந்த கருணாநிதியின் சிலையை அகற்றினர்[15]. மேலும், கோவிலின் முகப்புத் தோற்றம் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றினர்[16]. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்து காரணம் கேட்ட போது, “அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்’ என, கூறினர்[17]. இங்குதான் விவகாரம் இருக்கும் போலிருக்கிறது. சமீபத்தில், “அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்”, என்று பெரும்பாலும் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன[18]. இதை திசைத் திருப்ப, ஒருவேளை கருணாநிதி, இப்படியொரு யுக்தியைக் கையாண்டாரா என்று தெரியவில்லை. நாளைக்கு சொல்வார், “பார் எனக்குக் கட்டிய கோவிலையே, நான் இடிக்க ஆணையிட்டு விட்டேன்”, என்று பீழ்த்திக் கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

20-10-2022.


[1] விகடன், `3% இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் அவர்!’- கருணாநிதிக்கு கோயில் கட்டும் கிராம மக்கள், ர.ரகுபதி, Published:26 Aug 2019 6 PMUpdated:26 Aug 2019 6 PM

[2] https://www.vikatan.com/news/tamilnadu/rasipuram-village-people-to-construct-temple-for-karunanidhi

[3] தமிழ்.சமயம், ராசிபுரம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டுவிழா!, Samayam TamilUpdated: 26 Aug 2019, 12:09 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/villagers-to-build-temple-for-dmk-leader-karunanidhi-near-rasipuram/articleshow/70837912.cms

[5] தமிழ்.இந்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில்: ராசிபுரம் அருகே அடிக்கல் நாட்டு விழா,  செய்திப்பிரிவு, Published : 26 Aug 2019 07:59 AM’ Last Updated : 26 Aug 2019 07:59 AM

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/512919-temple-for-karunanidhi.html

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கருணாநிதிக்குக் கட்டுவது பகுத்தறிவாலயமாம்கோயில் இல்லை என திமுக மா.செ. அறிவிப்பு,  Asianet Tamil, Rasipuram, First Published Aug 31, 2019, 8:53 AM IST ,  Last Updated Sep 6, 2019, 10:54 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/temple-of-karunanidhi-bulid-in-rasipuram-px303z

[9] தினத்தந்தி, முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதிக்கு கோவில்வியப்பில் ஆழ்த்திய ஊர் மக்கள்…! , ஆகஸ்ட் 7, 12:52 pm (Updated: ஆகஸ்ட் 7, 12:52 pm).

[10] https://www.dailythanthi.com/News/State/former-chief-minister-karunanidhis-temple-amazed-town-people-763645

[11] தமிழ்.வெப்.துனியா, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்! – எந்த ஊரில் தெரியுமா?, Written By Prasanth Karthick, Last Modified, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (13:37 IST).

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/peoples-build-a-temple-for-former-cm-karunanithi-122080700031_1.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, கருணாநிதிக்கு கோவில் கட்டும் வேலூர் திமுக கவுன்சிலர், By Sutha Published: Thursday, July 1, 2010, 14:39 [IST]

[14] https://tamil.oneindia.com/news/2010/07/01/dmk-councillor-karunanidhi-temple.html?story=2

[15] தினமலர், முதல்வருக்கு கட்டிய கோவில் அகற்றம், Added : ஜூலை 03, 2010  01:22 |

[16] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=31199

[17] வேதபிரகாஷ், கருணாநிதிக்கு கோயில் கட்டியுள்ள கவுன்சிலர், 01-07-2010.

[18]https://rationalisterrorism.wordpress.com/2010/07/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் – திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார்.

தமிழகத்திற்கு சிலைவைப்பு, சிலையுடைப்பு, சிலைஅரசியல் எல்லாம் புதியதல்ல: ஈவேராவால் தமிழகத்தில் சிலையுடைப்பு அரசியல் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு பிள்ளையார் / விநாயகர் சிலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அது இந்துவிரோதமாகி அந்த போலி நாத்திகர்களை வெளிப்படுத்தியது. உச்சநீதி மன்றம் வரை அவர் மீதான வழஜக்குச் சென்றாலும், ஈவேரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இருப்பினும் சிலையுடைப்பு அக்கிரமங்களை செய்து வந்தார். 1968ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிலிருந்தே சிலைவைத்தல்[1], அதிலும் மெரினா பீச்சில் சிலை வைத்தல் என்ற அரசியல் ஆரம்பித்தது. அப்பொழுதே, அண்ணா பலதரப் பட்ட அழுத்தங்களுக்குட் பட்டார். வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தம்-ஆதிக்கங்கள் அதிலிருந்தன. இதனால், சில சிலைகள் தேவையில்லாமல் சேர்க்கப் பட்டன, அதாவது, சில நீக்கவும் பட்டன. 1970களில் ஈவேராவின் பிள்ளையா சிலையுடைப்பு / ராமர் பட அவமதிப்பு உச்சங்களுக்குச் சென்றன[2].

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார். கருணாநிதியும் அந்த சடங்கை முறையாக செய்தார். ஆனால், அது உடைப்பு கிரியையில் முடிந்ததது. உடைப்பு சம்பிரதாயத்தையும் ஈவேரா தான் ஆரம்பித்து வைத்தார்.

ஈவேராஅண்ணாகருணாநிதி சிலைகள்: அதேபோல, பிறகு மவுண்ட் ரோடில் சிலைவைப்பதில், வைத்துக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. ஈவேரா (இந்து அலுவகத்து அருகில்), அண்ணா என்றாகி (மவுண்ட் ரோடு-வாலாஜா ரோட் சந்திப்பு), உயிரோடு இருக்கும் போதே கருணாநிதி தனக்கும் சிலை வைத்துக் கொண்டார் (மவுண்ட் ரோட்-பாட்டுலஸ் ரோட் சந்திப்பு). ஆனால், 1987ல் அது உடைக்கப் பட்டது. அது அரசியலாகி, திராவிடத்துவமாகி, ஒரு நம்பிக்கையாகவும் மாறியது. அதாவது, அது அபசகுனமாகக் கருதப் பட்டது. திமுக ஆட்சி அதிகாரம் இழந்தது. எம்ஜிஆருக்கு ஸ்பென்சர் சந்திப்பில் சிலை வைக்கப் பட்டது. இனி மவுண்ட் ரோடில் எங்கு, யாருக்கு வைப்பார்களோ தெரியாது.

மவுண்ட் ரோடில் முதலில் ஈவேரா, பிறகு அண்ணா, கருணாநிதி என்று வரிசையாக சிலைகள் வைக்கப் பட்டது.

அம்பேத்கர் சிலை வைத்தலும், போராட்டமும்: இதற்குள் அம்பேதகருக்கு சிலை வைக்கும் அரசியல் ஆரம்பித்து, அது தீவிரமாகி, அதிகமாகியது. முதலில் இந்துக்களைத் தாக்க அது உதவும் என்று நினைத்து ஊக்குவிக்கப் பட்டது, ஆனால், அது திராவிட உயர்ஜாதியினருக்கே எதிராக அமைந்தது. இது நிச்சயமாக திராவிடத்துவவாதிகளுக்குப் பிடிக்கவில்லை[3]. அதனால், திக ஈவேரா சிலை வைக்கும் அதிரடியை ஆரம்பித்தது. அந்த தீவிரம் ஶ்ரீரங்கம் கோவில் வாசலுக்குச் சென்ற போது பிரச்சினையாகியது[4]. இடையில் கண்ணகி சிலை வைத்தும் கருணாநிதி அர்சியல் நடத்தினார். ரஜினி 2021ல் பேசியதும் எதிர்க்கப் பட்டது, ஆனால், விவரங்கள் வெளியே வந்து விட்ட போது, திராவிட நாத்திக-இந்துவிரோத முகங்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

சிலைகளுக்குப் பிறகு கோவில்களும் கட்டப் பட்டது. இப்பொழுது சமாதிகள் கோவில்களாக மாறி அங்கு தினம்-தினம் பூஜைகள், படையல்கள், ஆராதனைகள், அலங்காரங்கள்-வாத்தியங்கள் சகிதம் நடந்து கொடிருக்கின்றன…

வள்ளுவர் கோட்ட அரசியல்: கடந்த 1971- 76 ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார்[5]. அதன் திறப்பு விழாவை 1976ம் ஆண்டு பிரவரி மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்த முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விழா தொடர்பாக வானொலியில் விளம்பரம்கூட ஒலிபரப்பப்பட்டது. அப்போது இந்திரா காந்தி பிரதமர். நெருக்கடிநிலை (மிசா) அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதனால் கோபமடைந்த இந்திராகாந்தி, பிப்ரவரி ஒன்றாம் தேதி, 1976 வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடக்க இருந்த நிலையில், ஜனவரி 30ம் தேதி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்[6]. அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது வந்து, வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் என்ற முறையில், வள்ளுவர் கோட்டம் திறப்புவிழாவில் பார்வையாளராகக் கலந்து கொள்ள கருணாநிதிக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. பத்தாவது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. விழா நடக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் காரை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து விழாவுக்கு கருணாநிதி நடந்து வரவேண்டும். விழாவைப் புறக்கணித்தார் கருணாநிதி[7].

ஈவேரா இந்த வழக்கில் தான் உச்சநீதி மன்றத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், நாங்கள் பார்க்காத கோர்ட்டா என்றெல்லாம் பேசுவார்கள். ஈவேரா இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவில்லை..

முதல்வராக இருந்த கருணாநிதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, கடற்கரைச் சாலையில் சிலை வைத்தார். 2011ல் அந்த சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்தில் இப்போது வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவின்போது, சிலையின் பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு, சிவாஜி சிலை பீடத்தில் இப்போது அகற்றப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.

அங்கில அடிவருடித்தனம் கட்டுக்கதைகளால் இவ்வாறெல்லாம் பகுத்தறிவு திராவிடத்துவ போதை கொண்டு, புதிய பக்தர்கள் உருவாகி வருகிறார்கள்!

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன், சென்னையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார் கருணாநிதி, சிலைக்கு மாலை அணிவிக்க இயலாதபடி, அங்கே வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை ஆட்சியாளர்கள் அகற்றிவிட்டனர். உலகத்தமிழ் மாநாட்டின்போது, அரசு சார்பில், அண்ணா முதல்வராக இருக்கும்போதே வைக்கப்பட்டதுதான் அந்தசிலை. ஆனால், அந்த சிலை நிறுவுவதற்கான தொகையை நன்கொடையாகக் கொடுத்தவர் எம்ஜிஆர். படிக்கட்டு அகற்றப்பட்டதையடுத்து,சிலையின் பீடத்தில் மாலையை வைத்துவிட்டுச் சென்றார் கருணாநிதி. இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுகவுக்கென்று தனியாக அண்ண சிலை நிறுவ முடிவு செய்தார் கருணாநிதி. இதற்காக அண்ணா சாலையில் இடம் ஒதுக்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் அரசு மறுத்துவிட்டது. வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க திமுகவுக்கு அனுமதி தரப்பட்டது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார் கருணாநிதி. சிலையின் பீடத்தில், “சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் கட்டியது கருணாநிதி என்பதை அங்கே பதிவு செய்தனர். அண்ணா பிறந்த நாளில், இந்த சிலைக்குதான் திமுகவினர் மாலை அணிவிப்பார்கள். அதிமுகவினர், அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.

கட்டுக் கதையைப் பரப்பும் திராவிடத்துவம், அதை அரசு ரீதியில், 2022ல் முதலமைச்சரே பரப்புகிறார்! சரித்திரம் பற்றி எந்த கவலையும் இல்லை.

1969 முதல் 2018 வரை – மெரினாவில் சமாதி அரசியல்: முதலில் 1969ல் அண்ணா இறந்தபோது, அவருக்கு சமாதி கட்டப் பட்டது. அப்பொழுது, அதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, 1987ல் எம்ஜிஆருக்கு சமாதி வைத்த போது, திமுகவினர் சில சலசலப்பு காட்டினாலும், கருணாநிதி சிலையுடைப்பு, வன்முறை முதலியவற்றை கவனித்து அமைதியாகினர். 2016ல் ஜெயலலிதாவுக்கு சமாதி வைக்க்ப்பட்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு 2018ல் கருணாநிதி இறந்தபோது, மெரினாவில் சமாதி அரசியலும் உண்டானது. வழக்கும் தொடரப் பட்டது, ஆனால், முடித்து வைக்கப் பட்டது, சமாதி வைக்கப் பட்டது. இனி, திராவிடத்துவவாதிகள், மெரினாவில் தங்களுக்கு சமாதி வைக்க “ரிசர்வ்” செய்துகொண்டு இடத்தைப் பிடித்து வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

Stuart Sampson – ஸ்ய்ரௌட் சாம்ப்ஸன் மதுரையின் பென்னிகுக்கிற்கு வீடு இருந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிலை அரசியலை ஆரம்பித்து விட்டது: இப்பொழுது 2022ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடம் அதைவிட தீவிரமான சிலை / மணிமண்டபம் அரசியல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அயோத்தி தாசர், வ.உ.சிதம்பரம், ஈவேரா, வள்ளலார், ஜான் பென்னிகுக் என்று நீள்கிறது. இதற்கெல்லாம் கோடிகளில் திட்டங்கள்! பிறகென்ன கட்டுக்கதைகளுக்கு குறைவா? இட்டுக்கட்டுவதில் வல்லவர்களான, தமிழ் செப்படி வித்தை[8] வல்லுனர்கள் சதுரங்க வேட்டையிலும் இறங்கி விடுவர். ஆனால், சரித்திர ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்க முன்படும் போது, உண்மைகள் வெளிவரத்தான் செய்யும். இவ்விதமாகத்தான், இப்பொழுது ஸ்டாலின் மாட்டிக் கொண்டுள்ளார். நிச்சயமாக யாரோ அவருக்கு இந்த ஸ்கிரிப்டை எழுதி கொடுத்துள்ளார்கள். அது நாகநாதன், ஜகதீசன், கருணானந்தம் போன்ற ஆஸ்தான சரித்திராசியர்களாக இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] World Tamil Conference (WTC) என்பது முதலில் 1966ல் கோலாலம்பூர் மற்றும் 1968ல் சென்னையில் நடத்தப் பட்டது.

[2] 1971ல் ராமர் போன்ற படங்களுக்கு செருப்பு மாலை போடப் பட்டது மற்றும் இந்து கடவுளர்களை நிர்வாணமாக, ஆபாசமாகச் சித்தரித்து திக-திமுகவினர் துருச்சியில் ஊர்வலம் நடத்தினர்.

[3] தமிழனே இல்லாத நபருக்கு, தமிழகத்தில் சிலை ஏன் என்று கூட கேள்விகள் எழுப்பப் பட்டன.

[4] One.India, Life-size Bronze statue of ‘Periyar’ was unveiled at Srirangam, By Staff | Published: Monday, December 18, 2006, 3:51 [IST]

https://www.oneindia.com/2006/12/16/life-size-bronze-statue-of-periyar-was-unveiled-at-srirangam-1166394083.html

Srirangam, Tamilnadu, Dec 16 (UNI) In an event preceded by controversy, a life-size bronze statue of late Rationalist leader and Founder of Dravidar Kazhagam (DK) Periyar E V Ramasamy Naicker,was formally unveiled near the Sri Ranganatha temple by DK General Secretary K Veeramani, here .  the statue mounted on a 12-feet high pedestal,was installed near the ‘Rajagopuram’ (temple tower). Union Minister for Environment and Forests A Raja, State Ministers K N Nehru and N Selvaraj, also participated in the event.

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சிலை அரசியல், Written by WebDesk, Updated: October 2, 2017 11:06:36 am.

[6] https://tamil.indianexpress.com/opinion/statue-politics/

[7] இதில் முக்கியமானது என்னவென்றால், வள்ளுவர் கோட்டத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு அகற்றப்பட்டதுதான். வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதிதான் கட்டினார் என்ற தகவல் அங்கு எந்த வகையிலும் இடம் பெறவில்லை. இது இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த வேலை.

[8] பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.

ரஜினியும் இக்கட்டுக்கதை வைத்து படம் எடுத்ததால், இரண்டாம் பெனிகுக் நிலைக்கு உயர்ந்துள்ளாறா அல்லது தள்ளப் பட்டாரா என்று தெரியவில்லை.

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

செப்ரெம்பர் 22, 2021

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

பெரியார் உலகம்சுற்றுலா தலம்நிச்சயமாக வியாபாரத்திற்கு வித்திட்டதே: பெரியார் பெயரைச் சொல்லி, திருச்சி-ஹைவேயில், இந்த பெரிய வணிக வளாகத்தைக் கட்டத் தீர்மானித்திருப்பது, நிச்சயமாக வியாபாரத்திற்குத் தான். ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது[1]. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன். இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம். இதனால், அருகில் உள்ள ஓட்டல்களுக்கு கூட்டம் குறையும். அவர்கள் கவலைப் படுவார்கள். ஆக, பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இங்கு சென்றால், பலன் கிடைக்காது என்று யாராவது கிளப்பி விட்டால்[2], ஒருவேளை இந்த நாத்திக வளாகத்தின் முக்கியத்துவம் குறையலாம். ஆனால், மற்றவர்கள் வரத்தான் செய்வார்கள்.

நாத்திக ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!: புரட்டாசி மாதம் ஆரம்பித்தாகி விட்டது, சும்மா இருப்பார்களா, பெருமாள் கோவில் கொள்ளை நடந்துள்ளது! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழாமூர் கிராமத்தில் உள்ள கைகொடுக்கும் பெருமாள் உள்ளது. இக்கோயிலில் 18-09-2021 அன்று புரட்டாசி மாத முதல் சனி என்பதால் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் வழக்கம்போல் இரவு கோயிலை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில், இரவு கோவிலின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், மூன்றடி உயரம் உள்ள மூலவர் பெருமாள் கல் சிலையை திருடிச்சென்றுள்ளனர்[3]. 19-09-2021 அன்று பிற்பகலில் அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் மூலவர் சிலை மாயமாகி உள்ளதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக பெருமாள் விக்கிரகம் (மூன்றடி உயரம்), நகைகள் கொள்ளை,..எனும்பொழுது, திராவிட ஔரங்கசீப்புகள், மாலிகாபூர்கள் கிளம்பி விட்டனர்! ஒரு பக்கம் சிலை வைக்கிறோம் என்கிறார்கள், இன்னொரு பக்கம் சிலைகள் மாயமாகின்றன.

வெங்கடாஜலபதி விசயத்தில் இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்துர்கா தம்பதியர்: 95 அடி உயரத்திற்கு சிலை உடைத்தவனுக்கு சிலை வைப்போம் என்கின்றனர், ஆனால், மூன்றடி வெங்கடாஜபதி சிலை திருடு போயுள்ளது. வேங்கட ராமசாமி நாயக்கருக்குக்கு சிலை வைக்கும் நாத்திக-இந்துவிரோதிகளுக்கு, வேங்கடாஜலபதி மீது ஏன் போர் என்று தெரியவில்லை! இந்த அழகில், மனைவி திருமலைக்கு சென்று கும்பிடு போடுவதும், திருமலை அர்ச்சகர்கள் கணவன் வீட்டிற்கு வந்து, தம்பதியரை வாழ்த்தி, மாலை போட்டு, கயிறு கட்டி விடுவதும் என்ன என்று தெரியவில்லை! இவற்றைப் பற்றி வீடியோ, புகைப் படங்கள் என்று அமர்க்களப் படுகின்றன. ஆனால், இத்தகைய விசயங்களில், ஸ்டாலின்-துர்கா தம்பதியர் இரட்டை வேடம் போடுகின்றனர் என்றாகிறது. புருஷன்-நாத்திகன், பெண்டாட்டி-ஆத்திகன் என்று இருந்தால், அந்த திருமலை அர்ச்சகர்களை உள்ளே விட்டிருக்கக் கூடாது, மந்திரங்கள் சொல்ல அனுமதித்து இருக்கக் கூடாது, கயிறு கட்டுதல், போன்றவை நடந்திருக்கக் கூடாது. துர்கா, தனது கணவரிடம், “எதுக்குங்க இப்படியெல்லாம் நடக்கிறது, நீங்கள் கொஞ்சம் நடவடிக்கை எடுக்கக் கூடாதா?,” என்று கேட்கலாம், ஆனால், அவ்வாறு செய்வாரா என்று தெரியவில்லை.

ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழியில், இந்த பெரியார் உலகம் எழும்புகிறது:

  1. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்கப் படவு ள்ளது.
  2. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர்.
  3. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.
  4. ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது.
  5. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன்.
  6. இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம்.
  7. ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழி – மதுர காளியம்மன் கோவில், திருவாலீஸ்வரர் கோவில், / வாலி கண்டபுரம், ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் என்று பல கோவில்கள் உள்ளன.
  8. ஆக அந்த 27 ஏக்கர் நிலமும் கோவிலுடையதாக இருக்கலாம். பிறகு, அதில் “பெரியார் உலகம்” வருவது, சிலை வைப்பது??????

பெரியாருக்கு வியாபாரம் செய்ய, புதிய கதைகளை உருவாக்குகின்றனர்: ஈவேராவை ஊதிப் பெரிதாக்கியதால், அப்பிம்பம் ஏதோ பெரிதாகி விட்டது என்று நினைப்பது பெரியாரிஸ்டுகளின் நம்பிக்கை, மூட-நம்பிக்கை, முட-நம்பிக்கை, அது மடத்தனம் ஆகிறது! விடுதலை, முரசொலி, நக்கீரன், கலைஞர்-செய்தி, சன்-குழுமம் மற்ற திக-திமுகவினருக்கு ஜால்றா போடும் ஊடகங்கள், புதியா-புதிய புராணங்களை அவிழ்த்து விடுகின்றன. அஜிதன் சந்திரஜோதி உயிர் தொழில்நுட்பவியல் & மரபணு பொறியியல் ஆராய்ச்சி மாணவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரிதாக ரீல் விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4].   “நீங்கள் தமிழரா? அல்லது தமிழகத்தில் வசிக்கிறீர்களா? ஒருவேளை ஆம் என்றால்ஒன்று நீங்கள் பெரியாரை ஆதரிப்பவராக இருக்க வேண்டும்; இல்லையேல் எதிர்ப்பவராக இருக்க வேண்டும்;….” என்று ஆரம்பித்து, வக்காலத்து வாங்கிக் கொண்டு, புராணம் பாடுவது, ஏதோ, அரசவைப் புலவர், மேடைப் பேச்சாளி போன்றவதை விட தமாஷாக இருக்கிறது. ஏதோ 2021ல் இருப்பவர்கள் எல்லாம் இவர் சொல்லித் தான் மற்றவர்கள் நம்ப வேண்டும், ஈரோடு நாயக்கரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல எழுதியிருப்பது வேடிக்கைத் தான்.

ஈவேராவின் கதைகள் இருக்கும் பெரியார்களுக்கு நன்றாகவே தெரியும், இந்த குஞ்சுகள் சொல்லித் தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை: இப்படி பொய்யான நம்பிக்கையினை உருவாக்கினால், அதனை அவர்கள் தாம், நம்ப வேண்டும்! 60/70/80 வயதானவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும்! பவானி நதிக்கரை கூத்துகள் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா என்பது சந்தேகமே, ஆனால், இது போல, பொய்களை அள்ளிவிட கிளம்பியிருக்கிறார்கள். ஈவேராவைப் பார்த்து, பேசி, பழகியுள்ளவர்களுக்கு நாயக்கரைப் பற்றி நன்றாகவேத் தெரியும். மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பாவம், நாத்திகர்களின் கடவுள் ஈவேராகி அவதாரம் மாறிய நிலை போலும்! தாம்பத்தியப் பிரச்சினை, பிறந்த குழந்தை இறந்தது, மனைவி இறந்தது, எல்லோருடனும் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தது, ……..பவனி ஆற்றங்கரை விவகாரங்கள், நாடகக் கம்பெனிகளுடன் சகவாசம், வீட்டை விட்டு ஓடினது, பணத்தால் அரசியலில் பெரிய ஆளாகி விடலாம் என்ற கனவு கனவானது, ஆங்கிலம் தெரியாதலால், எஸ்.ராமநாதன், அண்ணாவை நம்பி இருந்தது, ஐரோப்பிய சுற்றுலா பற்றிய ரகசியங்கள், அம்பேத்கர் இவரை நம்பாதது, ஜின்னா கழட்டி விட்டது, இப்படி ஏகபட்ட விவகாரங்கள் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] கார் வண்டிகள் நிறுத்த காசு, பூஜைப் பொருட்கள் விற்பனை, சிறப்பு தரிசனம், சுற்றிலும் ஏராளமான கடைகளும் முளைத்துள்ளன.முன்பு இவையெல்லாம் இல்லை.

[2]  அதாவது நாத்திகத்தை வைத்து ஆத்திகத்திற்கு எதிரான வியாபாரத்தை உரிய முறையில் அல்லது அதே மாதிரியான பிரச்சாரமுறையில் எதிர்க்கலாம்.

[3] இன்ஸ்டா.நியூஸ், மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து சிலை திருட்டு, By A.Mahendran, Reporter 19 Sep 2021 6:00 PM.

https://www.instanews.city/tamil-nadu/chengalpattu/maduranthakam/temple-idol-theft-at-keelamoor-village-neat-melmaruvathur-1019243

[4] நக்கீரன், யார் அந்த பெரியார்? என்னதான் வேண்டுமாம் அவருக்கு?, Published on 18/09/2021 (06:06) | Edited on 18/09/2021 (09:36).

https://www.nakkheeran.in/nakkheeran/who-periyar-what-does-he-want/who-periyar-what-does-he-want

பாரம்பரிய தீர்த்த யாத்திரை பாதையில் பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! (1)

செப்ரெம்பர் 22, 2021

பாரம்பரிய தீர்த்த யாத்திரை பாதையில் பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! (1)

தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பெயரில் வளாகம் அமைக்க அனுமதி: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தந்தை பெரியாரின் 95 அடி உயர் சிலை வைக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்[1].  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி 30-08-2021 அன்று சந்தித்தார்[2]. அப்போது, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூர் கிராமத்தில் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் ஆகியவை அமைக்க அனுமதி வழங்கி ஆணைப் பிறப்பித்ததற்கு பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, திராவிடர் கழக பொதுச்செயலாளர் அன்புராஜ்[3], துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பெரியார் சிலை வளாகமா, ஹைவே ரெஸ்டாரென்டா?: அதன்படி  திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க உள்ளதாக பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர். இங்கு 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க இருப்பதாக திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை அறிவித்துள்ளது. அங்கு 40 அடி உயர பீடத்தில் 95 அடி உயரம் கொண்டுள்ள தந்தை பெரியாரின் வெண்கல சிலை ஒன்று அமைய உள்ளது. 133 அடி உயரத்தில் அமையும் உலகின் மிக உயரமான பெரியார் சிலையாக இது அமைகிறது. 135 அடி என்று பிறகு சொல்லப் பட்டது[4]. அதாவது வள்ளுவர் சிலையை விட உயரமாக இருக்க வேண்டும் என்ற திட்டம் போலிருக்கிறது[5]. ஏற்கெனவே ஈவேராவுக்கு திருவள்ளுவர், திருக்குறள் மீதெல்லாம் அபாரமான விருப்பம் இருந்ததனால், நன்றாக வைது, வசை பாடி, திட்டியுள்ளது தெரிந்த விசயமான நிலையில், இப்படியொரு ஆசை, நாத்திகவாதிகளுக்கு! ஒரு துலுக்கர் திருக்குறள் மோசடி வியாபாரம் செய்து மாட்டிக் கொண்டதும், இப்பொழுது தான் செய்தியாக வந்துள்ளது[6].

பெரியார் உலகம்சுற்றுலா தலம்வளாகம் என்று வேறு விளக்கம்: இங்கு பெரியாரின் வரலாற்றை விளக்கும் ஒளி – ஒலி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், மெழுகு சிலை அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மிகப்பெரிய பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியார் படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம் ஆகியவனவும் அங்கு அமைக்கப்பட உள்ளன. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது[7]. இது தான் உண்மையே தவிர பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாக உள்ளதாக உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வதை தோழர்கள், பற்றாளர்கள் சமூக வைதளங்களில் வெளிப்படுத்துவீர் என  திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை தலைமை அறிவித்துள்ளது[8].  இதை ஈரோட்டில் அமைக்காமல், இங்கு அமைக்க வேண்டிய மர்மம் என்ன என்றும் ஆராய வேண்டியுள்ளது.

2018 முதல் 2021 வரை அனுமதி கிடைக்கவில்லையாம், ஸ்டாலின் வந்ததும் கிடைத்து விட்டதாம்: கலி. பூங்குன்றன் “இந்த வளாகம் அமைப்பதற்கான மத்திய அரசின் அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில், மாநில அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்தபோது, அதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்படவில்லை……..இப்போது மு.. ஸ்டாலின் முதல்வரான பிறகு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது[9]. இப்போது பெரியார் பிறந்து 143 ஆண்டுகளாகின்றன. 150 ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். முதல்கட்டமாக சிலையின் பணிகள் முடிவடையும். பிறகு படிப்படியாக அடுத்தடுத்த பணிகள் நடக்கும்,” என்கிறார்[10].  மூன்றாண்டுகளில் கிடைக்காதது, ஸ்டாலின் வந்தவுடன் கிடைத்து விட்டது என்றால், மத்திய அரசுடன், திமுக அல்லது திக என்ன பேரம் பேசியது, என்ன விவகாரம் என்பதனை வெளியில் சொல்வார்களா? பிஜேபிக்கும்-திமுகவிற்கும் ஏதாவது ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா? ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ரூ 100 கோடி செலவு யார் செய்யப் போகிறது?: இந்நிலையில், பெரியாருக்கு 95 அடி உயர சிலையை அரசு அமைக்கப்போவதாக பா.ஜ.க – நாம் தமிழர் பொய் செய்திகளை பரப்பினர்[11]. உண்மையான விவரங்களை வெளிப்படையாக அறிவித்திருந்தால், யாரும் ஒன்றும் கேட்டிருக்க மாட்டார்கள். “பெரியாருக்கு சிலை,” என்பதே முரண்பாடு என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்நிலையில் 95 அடி உயரம், 135 அடி உயரம், 135 அடி உயரம் என்றெல்லாம் செய்திகள் வருவது வேடிக்கையாக இருக்கிறது. மொத்த வளகத்திற்கு ஆகும் செலவு ரூ.100 கோடி என்று வீரமணி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மை இவ்வாறு இருக்க பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாகிறது என்று உண்மைக்கு மாறாகப் பிரச்சாரம் செய்வதை – கழகத் தோழர்கள், பற்றாளர்கள் சமூகவலை தளங்களில் வெளிப்படுத்துவீர்!” எனத் தெரிவித்துள்ளனர்[12]. சிலைக்கு ரூ 100 கோடிகளா அல்லது மொத்த வளாகத்திற்கான செலவு மதிப்பீடா என்பதெல்லாம் சரி, இதை யார் செலவு செய்யப் போகிறாற்கள்? தமிழக அரசு எத்தகைக் கொடுக்கிறது, பெரியார் டிரஸ்ட் எவ்வளவு செலவு செய்யப் போகிறது அல்லது புதியதாக ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பனி ஆரம்பிக்கப் போகிறார்களா? இவ்விவரங்களை வெளிப்படையாக சொல்லப் படவில்லை.

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை – பிஜேபி முன்னாள் மத்திய அமைச்சர் கூறியது (09-09-2021): நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்[13]. அப்போது அவர் கூறுகையில்[14], “…..பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துகளை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும்………” ஆக பிஜேபியின் ஆதரவும் கிடைத்து விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் முதல் பிஜேபி வரை பல தலைவர்கள் (வைத்யா, வானதி, குஷ்பு முதலியோர்) பெரியார், பெரியாரித்துவம், பெரியாரிஸம், பெரியாரின் சித்தாதம், சிலை என்று எல்லாவற்றிற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வணிக ரீதியில் செயல்படப் போகின்ற “பெரியார் உலகம்” திட்டத்தைப் புரிந்து கொண்டு பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. ஒருவேளை, பிஜேபி-திமுக கூட்டணி 2023ல் உருவாகும் என்ற கோணத்தில் ஒப்புக் கொண்டாரா என்றும் புரியவில்லை.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] தினகரன், பெரியாரின் 95 அடி உயர சிலை வைக்க அனுமதி: முதல்வருக்கு கி.வீரமணி நன்றி, ஆகஸ்ட் 31, 2021.

[2] https://m.dinakaran.com/article/News_Detail/701592/amp

[3] கே. வீரமணியின் மகன், இப்பொழுது பெரியார் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரி, வீரமணிக்குப் பிறகு பதவிக்கு வரத் தயாராக இருக்கும் இளவரசர், “பெரியாரின் வாரிசு” என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ் வள்ளுவர் சிலையை விட 2 அடி கூடுதல் உயரத்தில் பெரியார் சிலை.. காரணம் இதுதானா..?, Ezhilarasan Babu, Chennai, First Published Sep 9, 2021, 10:38 AM IST, Last Updated Sep 9, 2021, 10:38 AM IST.

[5] https://tamil.asianetnews.com/politics/periyar-statue-is-2-feet-higher-than-valluvar-statue-is-this-the-reason–qz5iaa

[6]  திராவிட, திராவிடத்துவ ஆட்சியில், திருக்குறள், திருவள்ளுவர் என்றும் வைத்துக் கொண்டு, நன்றாக அரசியல் செய்யலாம், வியாபாரமும் செய்யலாம்.

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், 133 அடி உயரத்தில் பெரியார் வெங்கல சிலை… 27 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவாகும் பெரியார் உலகம்.. எங்கு தெரியுமா?, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Sep 8, 2021, 1:24 PM IST, Last Updated Sep 8, 2021, 1:24 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/periyar-bronze-statue-at-a-height-of-133-feet-the-world-of-periyar-is-huge-on-27-acres-do-you-know-where–qz3vay

[9] பிபிசி தமிழ், பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு? உண்மை என்ன? #FactCheck, முரளிதரன் காசி விஸ்வநாதன், 7 செப்டெம்பர் 2021

[10] https://www.bbc.com/tamil/india-58476523

[11] கலைஞர்.செய்தி, ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? – உண்மை என்ன?”: பா..சீமான் வகையறாக்களுக்கு திராவிடர் கழகம் பதிலடி!, Prem Kumar, Updated on : 8 September 2021, 10:37 AM.

[12] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/08/dravidar-kazhagam-explains-what-is-the-truth-about-rs-100-crore-periyar-statue

[13] NEWS18 TAMIL, பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்,  LAST UPDATED: SEPTEMBER 10, 2021, 13:34 IST.

[14] https://tamil.news18.com/amp/news/tamil-nadu/there-is-nothing-wrong-with-placing-a-statue-of-periyar-ponradhakrishnan-ekr-556987.html

ஸ்டாலினின் ஓணம் வாழ்த்து, செக்யூலரிஸமா, திராவிடத்து-இந்துத்துவமா, அரசியல் சதுரங்கமா?

ஓகஸ்ட் 31, 2020

ஸ்டாலினின் ஓணம் வாழ்த்து, செக்யூலரிஸமா, திராவிடத்து-இந்துத்துவமா, அரசியல் சதுரங்கமா?

 

ஒணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும், ஸ்டாலின், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையேஇது என்ன கொள்கையோ?: கேரள மக்கள் கொண்டாடும் ஒணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையே… இது என்ன கொள்கையோ?’ என, சமூக வலைதளங்களில், பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்[1]. மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இது தொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி[2]: “கேரள பெருமக்களின் பண்பாடு, உணர்வுகளோடு ஒன்றியிருக்கும் திருவிழாக்களில் ஒன்றானது ஓணம் பண்டிகை.இந்த பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும், தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும், தி.மு.., சார்பில் என் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்,” இவ்வாறு, அவர் கூறியுள்ளார்[3]. வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.  திராவிடத்துவ நாத்திகம், இந்துவிரோதம் என்று தெரிந்த விசயம் தான். 70 ஆண்டுகளாக, இந்துக்கள்முறைப்படி அதனை எதிர்கொள்ள முடியவில்லை என்பது நிதர்சனம்.


அவர்களின் பதிவுகள்தினமலர் வெளியிட்டுள்ளது[4]: ஆகஸ்ட் 2020ல், அருமையாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்:

* ‘தி.மு.க.,வில், 90 சதவீதம் ஹிந்துக்கள் உள்ளனர்’ என, ஸ்டாலின் கூறுகிறார். ஹிந்துக்களின் பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், கேரள ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இது என்ன கொள்கையோ?

* தி.மு.க.,வில் உள்ள, 90 சதவீதம் ஹிந்துக்களில், எத்தனை சதவீதம் பேர் ஓணத்தை கொண்டாடுகின்றனர்?

* ஓணம் வாழ்த்து, தி.மு.க.,வின் ஓட்டு அரசியல்; நாடகத்தின் ஒருபகுதி தான்

* உதயநிதி, மண் பிள்ளையார் உருவப்படத்தை, ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்ட பின், அவர் கொடுத்த விளக்கத்தை கேட்டு நாடே சிரித்தது

* கந்த கஷ்டி கவசம் போன்ற பிரச்னை வரும் போது, ஸ்டாலின் வாய்மூடி மவுனம் காப்பார்

* ‘நரகாசுரன், பொய்யன்’ என்பார். ‘நாங்கள் ராவணின் வாரிசுகள்’ என்பார். ஆனால், வாமனன் வந்தது உண்மை; அதுபோல, மகாபலி இருந்தது உண்மை. இதற்கு பெயர் தான் திராவிட பகுத்தறிவு. தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் ஓட்டுக்களை வாங்க உதித்த திடீர் ஓட்டு அறிவு. இவ்வாறு, பலரும் விமர்சித்துள்ளர்.

சமத்துவம், செக்யூலரிஸம் போர்வைகளில் மறைந்து வேலை செய்வது:  கேரளாவில் ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்றுகூடி மகிழும் தேசிய விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது[5].  பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது என்று அரசியல் செய்யப் படுகிறது[6]. திமுக அதனை சாமர்த்தியமாக கையாள்கிறது. ராகுலைப் போல “இருவிதமான திராவிட இந்துத்துவத்தை,” கடைப்பிடிக்கிறது போலும்[7]. யாராவது ஆலோசனைக் கொடுத்தார்களா அல்லது யதேச்சையாக செயல்படுகிறாற்களா[8] என்று பிஜேபி தான் ஆராய வேண்டும். அதாவது, இப்பண்டிகையே செக்யூலரிஸமயமாக்கி, நீர்க்கப் படுகிறது. கிருத்துவர்கள், எல்லாவற்றையும் அப்படியே காப்பியடித்து, தங்கள் கடவுள் தான் அத்தகைய சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஏற்படுத்துகிறார் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். கம்யூனிஸ முதல்வரும் வாழ்த்துத் தெரிவிக்கிறார், ஆனால், இந்துத்துவ வாதிகள், சமூக ஊடகங்களில் அவரை தூஷிக்கின்றனர். பிஜேபி எல்லா மாநிலங்களிலும் தனது ஆட்சியை உண்டாக்க வேண்டும் என்று பாடுபடும் நிலையொல், இத்தகைய விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காவிரிப் பிரச்சினை போல ஆகிவிடக் கூடாது.

திமுகவின் விளம்பர யுக்திகள்: திமுகவின் ஓணம் வாழ்த்து தெரிவிக்கும் விளம்பர சித்திரங்கள், மிகவும் கவனமாக செய்யப் பட்டிருக்கிறது என்று தெரிகிறது. அத்தகைய யுக்தி யார் சொல்லிக் ஒடுத்தது என்று கவனிக்க வேண்டும். அப்பனவன், “என்ன நெற்றியிலே ரத்தமா,” என்று கேட்டு தொண்டனின் குங்குமத்தைக் களைத்தான், தனயனவன், அதேபோல மாரியாத்தா கோவில் வாசலில் வைத்த குங்குமத்தை அழித்தான். மாகாபலியின் வாரிசு என்றாயே, தனயன் இப்பொழுது கோலங்களை அழி, என்று பேச முடியாது விமர்சிக்கமுடியாது. எத்தனை இந்துத்துவ வாதிகள் இருந்து என்ன பயன்? எத்தனை இந்துத்துவ பேராசிரியர்கள், சரித்திராசிரியர்கள், விற்ப்பன்னர்கள்……. இருந்து என்ன நலன்? இந்துவிரோதி தைரியமாக, திராவிடத்துவம் பேசி சொல்வது வாழ்த்து! விதவிதமான வாழ்த்து அமைப்புகள்,  கதகளி உண்டு, கோவில் உண்டு,  ஆனால், அவை செக்யூலரிஸம் போல! அட குடை கூட உண்டு, ஆனால், வாமனன் இல்லை! மலையாளத்தவர் கண்டு கொள்ள வேண்டும். இதையெல்லாம் பிஜேபி மற்ற இந்துத்துவ வாதிகள் கவனித்தார்களா என்று தெரியவில்லை.

ஓணம் புராணம் சொல்லும் ஸ்டாலின்: “ஓணம் திருநாள் கொண்டாடப் படுவதையொட்டி, கேரள மக்களுக்கும், மலையாள மொழி பேசும் மக்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்[9]. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஓணம் பண்டிகையையொட்டி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கேரளப் பெருமக்களின் பண்பாட்டுடனும், உணர்வுகளோடும் ஒன்றிப்போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்[10]. “ஓணம் திருநாள்” பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது. கேரளாவின் “அறுவடைத் திருநாள்” என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையின் அருமை பெருமைகள் பல உண்டு. அதில் குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று, “அத்தப்பூ” கோலம் போட்டு இந்த பண்டிகை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது”. ஆக, ஸ்டாலின் இத்தனை விவரங்களை அறிந்து கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. திரவிட-இந்துத்துவம் ஆரம்பித்து விட்டது என்று தெரிகிறது.


ஓணம் கதையை விளக்கும் ஸ்டாலின்: கலைஞர் செய்திகள் தொடர்கிறது, “தீரமும், ஈரமும் மிகுந்த “மகாபலி” சக்ரவர்த்தியைக் கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வரவேற்கும் நாளாகத் துவங்கி, அடுத்தடுத்த நாட்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவுகள் பரிமாறுதல் போன்றவற்றைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டு, தங்களுக்குள் உள்ள மேம்பட்ட உறவினை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் விழா இது. இளைஞர்கள் மத்தியில் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரியப் படகுப்போட்டியைப் பத்து நாட்கள் நடத்தி – அந்த 10-வது நாளில் திருவோணம் என்ற எழுச்சிமிகு கொண்டாட்டத்துடன் ஓணம் திருவிழா இனிதாக நிறைவடைகிறது. “பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாள்”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் பழக்க வழக்கங்களையும் உணர்வுகளையும் மதிக்கும் பொருட்டு, ஓணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏதுவாக நாகர்கோவில், கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு விடுமுறை அளித்து, 2006-ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்”.

மலையாளிகளுக்காக அப்பன் வழி பின்பற்றும் பிள்ளை:  கலைஞர் செய்திகள் தொடர்கிறது, “பிறகு தமிழ்நாடு மலையாளி சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சென்னை மாநகரத்திற்கும் “உள்ளூர் விடுமுறை” என்று 14.8.2007 அன்று அறிவித்து – தமிழகத்தில் வாழும் மலையாள மக்களின் உணர்வுகளை மதித்துப் போற்றிப் பாதுகாத்தவர். பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில் – திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழகம் வாழ் மலையாள மக்களும் – கேரள மக்கள் அனைவரும் – ஆரோக்கியமான வாழ்வும் – அனைத்து வளங்களும் பெற்று எந்நாளும் இன்புற்றிருக்க வேண்டும் என்று “ஓணம் திருநாள்” வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்”.

ஓணம் வாழ்த்து அரசியலை பிஜேபி ஒழுங்காக எதிர்கொள்ளவேண்டும்: ஓணம் வாழ்த்து அரசியல் திராவிடத்து-இந்துத்துவத்தை  வெளிப்படுத்துகிறது.

  1. இந்துக்கள் என்றால், எல்லோருமே இந்துக்கள் தான்! சான்றிதழின் படி, அரசியல் நிர்ணயச் சட்டடத்தின் படி இந்துக்கள் தாம்!
  2. இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு, இந்து-விரோத வேலைகள் செய்ய முடிகிறது. இதைத்தான் திராவிடத்துவ வாதிகள் 70 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
  3. இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு, அதனை முறையாக எதிர்க்க முடியவில்லை. கடவுளை எதிர்த்தால், திக்ச்-திமுகத்தலைவர்களை எதிர்ப்பதில் லாஜிக்கே, தர்க்க முறையே இல்லை.
  4. 70 வருட திராவிடத்துவம் நாத்திகம், இந்து விரோதம் பேசி, ஆட்சி-அதிகாரம் எல்லாம் பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது.
  5. அந்நிலையில், இந்துத்துவம் என்று பேசி, ஒரே நாளில், மாதத்தில், ஆண்டில்  ஆட்சியைப் பிடிக்கக் கனவு காண்பது, இந்துக்களைப் பிரிப்பதில் முடியும்.
  6. மேலும் ஜாதியத்தை வைத்தும் ஆட்சி-அரசியல் நடந்து வருகிறது. அதில், இந்துத்துவ வாதிகள் தாக்கு பிடிக்க முடியாது.
  7. ஓணம் வாழ்த்து அரசியல் அதை வெளிப்படுத்துகிறது.

© வேதபிரகாஷ்

31-08-2020


[1] தினமலர், ஸ்டாலின் ஓணம் வாழ்த்து: விமர்சகர்கள் வறுத்தெடுப்பு, Updated : ஆக 31, 2020 13:12 | Added : ஆக 31, 2020 09:18

[2] தினகரன், ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மக்களுக்கு திமுக தலைவர் மு..ஸ்டாலின் வாழ்த்து, 2020-08-30@ 11:33:28

[3] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=613307

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2604925&Print=1

[5] புதியதலைமுறை, ஓணம் பண்டிகை சமத்துவத்தின் அடையாளம்மு..ஸ்டாலின் வாழ்த்து, Published :31,Aug 2020 12:16 PM.

[6] http://www.puthiyathalaimurai.com/newsview/79319/Onam-festival-is-a-symbol-of-equality-MK-Stalin-s-greeting

[7] தமிழ்.நியூஸ்.18, சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும்ஓணம் திருநாள்’ – மு. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து.. , LAST UPDATED: AUGUST 30, 2020, 1:23 PM IST

[8] https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-leader-mk-stalin-s-onam-2020-wishes-riz-339775.html

[9] கலைஞர் செய்திகள், பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாள்” : தி.மு. தலைவர் மு..ஸ்டாலின் வாழ்த்து!, Premkumar, Updated on : 30 August 2020, 11:53 AM.

[10] https://www.kalaignarseithigal.com/india/2020/08/30/dmk-chief-mk-stalin-wishes-for-onam-festival-2020

ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் – திராவிட ஜிஹாதிகளின் தொடக்கம்!

மே 28, 2013

ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் – திராவிட ஜிஹாதிகளின் தொடக்கம்!

19-05-2013 - stage Somu, ..., Karunanidhi, Stalin, etcஞாயிற்றுக்கிழமை (19.5.2013) அன்று  நடந்த திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம்: சென்ற ஞாயிற்றுக்கிழமை (19.5.2013) அன்று திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அதன் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. வழக்கம் போல[1], திமுக தலைவர்கள், சித்தாந்திகள், அபிமானிகள் ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் – திராவிட ஜிஹாதிகளின் தொடக்கம்!முதலியோர் கலந்து கொண்டனர். நக்கீரன் வெளியிட்டுள்ள புகைப்படங்களிலிருந்து கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்[2]. இந்த கூட்டம் ஏற்கெனவே 2 முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது[3]. ஆகையால், 19.5.2013 அன்று கூட்டம் நடந்தபோது விருவிருப்பாக இருந்தது.

19-05-2013 - kushbhu....................Kanimozhi R-Lமகளிர் சுயஉதவிக்குழுக்கள்வளர்த்த போட்டி மனப்பான்மை (2010-2012): திமுக மகளிர் அணி ஆரம்பிக்கப்பட்டப் பிறகு, அம்மகளிருள் சிலர் தீவிரமாகவே தயாரிக வருகின்றனர். சிலருக்கு சிகப்பு-கருப்பு நிறங்களில் சீறுடைகள் அணிவிக்கப்பட்டு, அவர்கள் ஏதோ போலீஸார் / ராணுவவீரர்களைப் போல தயார் படுத்தி வருகின்றனர். மேலும், ஆட்சியில் இருந்தபோது, மகளிர் அணிகள் போர்வையில், சங்கங்கள் நடத்தப் பட்டு, “மகளிர் சுய-உதவிக்குழுக்கள்” தொடங்கப்பட்டு, வங்கிக் கடன்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. அத்தகைய பணமாற்றங்களில் சுவை கண்டவர்கள், நிறைய பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு, திமுகவில் உயர வேண்டும் என்று நினைத்து அவ்வாறே செயபட்டு வந்தார்கள். எப்படியாவது தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்று உயர்ந்துவிட எனென்னவோ செய்து பார்த்தனர். குஷ்பு இவ்விஷயத்தில்  அப்பெண்களுக்கு போட்டியாகக் கருதப்பட்டார். அதனால், அவரை விமர்சித்தால், தலைவரிடம் நற்றான்றிதழ் பெற்றுவிடலாம் என்றும் போட்டிப் போட்டனர். இவர்களில் தீவிரமாக இருந்த பெண்மணி – கார்ல் மார்க்ஸ்!
DMK women wing.4ஜெயலலிதா கூட்டத்தில் மனித வெடிகுண்டு  (19-05-2013): மேலே குறிப்பீடக் கூட்டத்தில் இவர், “இந்த கூட்டத்தில் திமுக பெண் பேச்சாளர் காரல் மார்க்ஸ் என்பவர், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன்,” என்று பேசியுள்ளது தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது! ஏனெனில், சென்னையைப் பொறுத்த வரைக்கும், ஏற்கெனவே, ஒரு பெண் வெடிகுண்டால்தான், ராஜீவ் காந்தி மற்றும் பலபேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, தீக்குளித்து இறத்தல் என்பது திராவிட அரசியல் பாரம்பரியத்தில் ஒரு தியாகத்தின் உச்சக்கட்ட நடவடிக்கையக இருந்து, அது போற்றிப் பாராட்டப் பட்டது. அவர்கள் “தியாகிகள்” என்றும் வர்ணிக்கப் பட்டு, அவ்வாறான, தியாகத்தைச் செய்த குடும்பங்களுக்கு உதவியும் செய்யப்பட்டன. ஆகவே, தீக்குளிக்கும் மூளைசலவைச் செய்யப்பட்ட தொண்டர்கள், நாளைக்கு மனிதவெடிகுண்டுகளாக மாறினால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்ரும் இல்லை, ஆனால், அது “திராவிட ஜிஹாத்” என்ற நிலைக்கு வந்து விடும்.  மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் பற்றி, “தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானவை. ஜனநாயகத்தில் அவற்றை எந்த உருவத்திலும் ஊக்குவிப்பது பெரும் கேடாகவே முடியும்”, என்று 27-05-2013 அன்று கருத்துத் தெரிவித்துள்ளார்[4].
DMK women wing.5வழக்கறிஞர் பி.விசெல்வகுமார் அளித்துள்ள புகார் (24-05-2013): திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகனும், கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்[5]. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் ஒரு புகார் மனு அளித்துள்ளார். இந்த மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்[6].

DMK women wing.3புகாரில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்  (24-05-2013): அதில் அவர் கூறியிருப்பதாவது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 19.5.2013 அன்று திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அதன் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் மு..ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக பெண் பேச்சாளர் காரல் மார்க்ஸ் என்பவர், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் என்று பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது சம்பந்தமான செய்தி 26.5.2013 நாளிட்ட வாரம் இருமுறை வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது. எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும், கொலைவெறி நோக்கத்தோடு காரல் மார்க்ஸ் பேசியுள்ளார். இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கருணாநிதி மற்றும் மு.. ஸ்டாலின் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திமுக பேச்சாளர் காரல் மார்க்ஸ் தொடர்புடைய பயங்கரவாத சக்திகளின் தொடர்பை தீர விசாரித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் தெரிவித்துள்ளார்[7].

DMK women wing.2யார் இந்த காரல் மார்க்ஸ்?[8]: தஞ்சை, புதிய பேருந்து நிலையம் அருகே வசிக்கும் காரல் மார்க்ஸ், 51வது வார்டு கவுன்சிலராக இருந்தவர். இவரது மகன், செந்தில்குமார் அரசு துறையில், பி.ஆர்.ஓ.,வாக உள்ளார். மற்றொரு மகன், காரல் பாலாஜி, பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். சமீபத்தில், கனிமொழி, தஞ்சை வந்தபோது, மாவட்ட செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பழனி மாணிக்கத்தின் படத்தை போடாமல், நோட்டீஸ் அடித்து ஒட்டினார். கடந்த உள்ளாட்சி தேர்தலில், தஞ்சை நகராட்சி தலைவர் பதவிக்கு, இவரது மருமகளுக்கு, “சீட்’ கிடைத்தது. ஆனால், சொந்த கட்சியினரிடம் கூட இவருக்கு செல்வாக்கு இல்லாததால், தோல்வியே பரிசாக கிடைத்தது. தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த தஞ்சை நகராட்சி, முதன்முறையாக அ.தி.மு.க. வசமானது.

DMK women wing.fullகாரல்மார்க்ஸ் என்கிற திராவிடப் பெண்மணியின் போக்கு: தினமணியில், இப்படி வேடிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது[9]: “மகளிரும் காரல் மார்க்ஸ் என்கிற பெயரை வைத்துக் கொள்வது நமது தமிழகத்தில் மட்டுமாகத்தான் இருக்கும். மகளிரணியைச் சேர்ந்த ஓர் உடன்பிறப்பு, பேச்சாளர்கள் கூட்டத்தில் தான் மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் ஜெயலலிதாவை அழிக்கப் போவதாக சூளுரைத்தாராமே, மெய்யாலுமா? ஆளும் கூட்டணியின் ஆதரவு இருந்ததால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற கட்சித் தலைவர் அவர். தொழிலால் மருத்துவர். அவருக்கு எப்படியும் மக்களவை உறுப்பினராகி விட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இங்கே இருந்தால் வாய்ப்புக் கிடைக்காது என்பதால் அணி மாறத் தயாராகி விட்டாராம், கட்டபொம்மனையும், வ.உ.சி.யையும் நினைவுபடுத்தும் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் அந்தத் தலைவர். “சட்டசபை பள்ளிக்கூடம் மாதிரி இருக்கிறது. அந்த “அம்மா’ வந்தால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் ஆரம்பப் பள்ளிக்கூடக் குழந்தைகளைப் போல வாயைப் பொத்திக் கொண்டு உட்காராத குறை. சட்டப்பேரைவக்குப் போகவே வெறுப்பாக இருக்கிறது” என்றெல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறாராம்”.

DMK womenஅதிமுக பேச்சாளர்களைப் போல பேசாதீர்கள்: கலைஞர் (19-05-2013): தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டார் கலைஞர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதயங்களிலே பதிய வையுங்கள், அ.தி.மு.க. பேச்சாளர்களைப் போல பேசாதீர்கள், நாகரிகத்தோடும், பண்பாட்டோடு பேசுங்கள்’’ என்றார்[10]. பேச்சாளர்களுக்குச் சொல்லப்பட்டது என்றும், தடை போடுவது, மாவட்டங்களுக்குள் நுழையக் கூடாது என்று தடுப்பது – இது போன்ற அரசாங்கத்தினுடைய சட்டங்களை, உத்தரவுகளை ஏற்கனவே மறுத்து, எதிர்த்து அறிக்கை கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்துப் பேசப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவர் கருணாநிதி, முதலில் எங்களுக்குள் கூட்டணி அமையட்டும் என்று திமுக கோஷ்டிப் பூசலை சூசகமாக குறிப்பிட்டுப் பேசினார்[11]. செய்தியாள்கள் கருணாநிதியைச் சந்தித்தபோது, கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும்…

  • கேள்வி: பேச்சாளர்களுக்கு இன்றைய கூட்டத்தில் என்ன சொல்லப்பட்டது?

பதில்: நன்றாக பேசுங்கள், தெளிவாக பேசுங்கள், கழகத்தின் கருத்துக்களை மக்களின் காதுகளில் போடுங்கள். மக்களின் இதயங்களிலே பதிய வையுங்கள். நாகரிகத்தோடு பேசுங்கள். பண்பாட்டோடு பேசுங்கள் என்று பேச்சாளர்களுக்கு சொல்லப்பட்டது.

  • கேள்வி: கூட்டணி பற்றி பேசப்பட்டதா?

பதில்: எங்களுக்குள் கூட்டணி வேண்டும் என்பதற்கு வலுவான காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.

  • கேள்வி: தி.மு..,-பாட்டாளி மக்கள் கட்சிகளுக்கு இடையே கூட்டணி வரும் என்று செய்திகள் அடிபடுகின்றன. அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: நீங்களே ‘‘அடிபடுகின்றன” என்று சொல்லி விட்டீர்களே?

  • கேள்வி: திருமாவளவன், சீமான் பொதுக்கூட்டங்களுக்கு .தி.மு.. அரசு தடை விதித்ததைப் பற்றி?

பதில்: தடை போடுவது, மாவட்டங்களுக்குள் நுழையக்கூடாது என்று தடுப்பது, இதுபோன்ற அரசாங்கத்தினுடைய சட்டங்களை, உத்தரவுகளை, ஏற்கனவே நான் மறுத்து எதிர்த்து அறிக்கை கொடுத்திருக்கிறேன் என்றார் கருணாநிதி

Kumudam reporter2பிப்ரவரியில் ஸ்டாலினைப் பற்றிய குஷ்புவின் கருத்து (-02-2013): சமீபத்தில் வாரப் பத்திரிகை ஒன்றில் திமுக ஆதரவு நடிகையான குஷ்பு திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் அடுத்த தலைவராக வருவது குறித்து கேள்வி ஒன்றுக்கு சர்ச்சைக்குரிய பதில் அளித்தார்[12]. இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. குஷ்பு திருச்சியில் திமுக எம்.பி. திருச்சி சிவா இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு பெமினா ஓட்டலுக்கு திரும்பினார். அப்பொழுது அங்கிருந்த திமுகவினர் சிலர் குஷ்பு ஓட்டலுக்கு வந்த கார் மீது செருப்புகளை வீசினர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை குஷ்பு, தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை காலி செய்து விட்டு சென்னை செல்ல கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கும் சிலர் குஷ்பை கண்டித்து கோஷமிட்டு, செருப்பு வீசினர். பின்பு, அவர் விமானம் ஏறி சென்னை சென்று விட்டார். மேலும், சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டில் பிப்ரவரி 2013ல் கல்வீச்சு நடத்தப்பட்டது[13]. இந்த விவகாரத்தில் திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ் பெயர் அடிபட்டது[14].

Karl Marx and Sargunapandian. Kanimozhi, J Helene Davidsonகுஷ்புவின் மீது பாய்ந்த கார்ல் மார்க்ஸ்  (-03-2013): காரல்மார்க்ஸ் குஷ்புவை கடுமையான வார்த்தைகளால் ஏக வசனத்தில் அர்ச்சனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, காரல்மார்க்ஸ் திமுக தலைவர் கருணாநிதியை பார்த்து ஆசி வாங்க வந்தார். அப்போது, குஷ்பு விவகாரம் குறித்து காரல் மார்க்ஸிடம் விசாரணை நடத்திய கருணாநிதி கடும் கோபம் கொண்டு அவரை வறுத்தெடுத்துவிட்டாராம்[15]. இதனால் வெலவெலத்துப் போன அவர் ஆளை விட்டால் போதும் என கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

19-05-2013 - women activists sittingகருணாநிதியின் முன்பாக குஷ்பு – காரல் மார்க்ஸ் பேசுவது, பேசியது: கருணாநிதியின் முன்பாக குஷ்பு முன்பு தமிழில் தப்பு-தப்பாக பேசியபோது, அவர் விமர்சனம் செய்தார். இப்பொழுதே, அவர் முன்பாக காரல்மார்க்ஸ் தீவிரவாதத் தொணியில் பேசுகிறார். ஆகவே, திமுகவில், பெண்களுக்கு யாரோ அதிகமாக செல்லம் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது. இதை ஆர்வக்கோளாரா, ஆத்திரவேகமா, ஆணவவெறியா, செல்வாக்குப் போட்டியா என்றெல்லாம் பிறகு தெரியவரலாம். குஷ்பு, முன்பு, “தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன். திமுக-வில் இருந்து பிரிக்க எனக்கு எதிராக சதி நடக்கிறது. காங்கிரசில் சேரப்போவதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. எனக்கு எதிராக வேண்டாதவர்கள் நிறைய வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள். அந்த வதந்திகளில் இதுவும் ஒன்று”, என்று, சொன்னதற்கும், அவருக்கு எதிராக நடதப்படும் பிரச்சாரமும் கவனிக்கத்தக்கது[16].

© வேதபிரகாஷ்

28-05-2013


[1] ஆகஸ்ட் 2010ல் நடந்த கூட்டம்: முதல்வர் கருணாநிதி இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், திமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடையே எப்படிப் பிரசாரம் செய்வது, எடுத்துக் கூறுவது, ஜெயலலிதா தொடர்ந்து அடுக்கி வரும் புகார்களுக்கு எப்படி பதிலளிப்பது என்பது உள்ளிட்டவை குறித்து திமுக சொற்பொழிவாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி ஆலோசனை வழங்கினார்.

[12] சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்துள்ள நடிகை குஷ்பு, “திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்” என்று கூறியிருந்தார். Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/07/tamilnadu-stalin-supporters-attack-on-kushboo-house-169363.html