Archive for the ‘ரம்ஜான்’ Category

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

செப்ரெம்பர் 22, 2021

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

பெரியார் உலகம்சுற்றுலா தலம்நிச்சயமாக வியாபாரத்திற்கு வித்திட்டதே: பெரியார் பெயரைச் சொல்லி, திருச்சி-ஹைவேயில், இந்த பெரிய வணிக வளாகத்தைக் கட்டத் தீர்மானித்திருப்பது, நிச்சயமாக வியாபாரத்திற்குத் தான். ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது[1]. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன். இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம். இதனால், அருகில் உள்ள ஓட்டல்களுக்கு கூட்டம் குறையும். அவர்கள் கவலைப் படுவார்கள். ஆக, பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இங்கு சென்றால், பலன் கிடைக்காது என்று யாராவது கிளப்பி விட்டால்[2], ஒருவேளை இந்த நாத்திக வளாகத்தின் முக்கியத்துவம் குறையலாம். ஆனால், மற்றவர்கள் வரத்தான் செய்வார்கள்.

நாத்திக ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!: புரட்டாசி மாதம் ஆரம்பித்தாகி விட்டது, சும்மா இருப்பார்களா, பெருமாள் கோவில் கொள்ளை நடந்துள்ளது! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழாமூர் கிராமத்தில் உள்ள கைகொடுக்கும் பெருமாள் உள்ளது. இக்கோயிலில் 18-09-2021 அன்று புரட்டாசி மாத முதல் சனி என்பதால் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் வழக்கம்போல் இரவு கோயிலை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில், இரவு கோவிலின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், மூன்றடி உயரம் உள்ள மூலவர் பெருமாள் கல் சிலையை திருடிச்சென்றுள்ளனர்[3]. 19-09-2021 அன்று பிற்பகலில் அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் மூலவர் சிலை மாயமாகி உள்ளதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக பெருமாள் விக்கிரகம் (மூன்றடி உயரம்), நகைகள் கொள்ளை,..எனும்பொழுது, திராவிட ஔரங்கசீப்புகள், மாலிகாபூர்கள் கிளம்பி விட்டனர்! ஒரு பக்கம் சிலை வைக்கிறோம் என்கிறார்கள், இன்னொரு பக்கம் சிலைகள் மாயமாகின்றன.

வெங்கடாஜலபதி விசயத்தில் இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்துர்கா தம்பதியர்: 95 அடி உயரத்திற்கு சிலை உடைத்தவனுக்கு சிலை வைப்போம் என்கின்றனர், ஆனால், மூன்றடி வெங்கடாஜபதி சிலை திருடு போயுள்ளது. வேங்கட ராமசாமி நாயக்கருக்குக்கு சிலை வைக்கும் நாத்திக-இந்துவிரோதிகளுக்கு, வேங்கடாஜலபதி மீது ஏன் போர் என்று தெரியவில்லை! இந்த அழகில், மனைவி திருமலைக்கு சென்று கும்பிடு போடுவதும், திருமலை அர்ச்சகர்கள் கணவன் வீட்டிற்கு வந்து, தம்பதியரை வாழ்த்தி, மாலை போட்டு, கயிறு கட்டி விடுவதும் என்ன என்று தெரியவில்லை! இவற்றைப் பற்றி வீடியோ, புகைப் படங்கள் என்று அமர்க்களப் படுகின்றன. ஆனால், இத்தகைய விசயங்களில், ஸ்டாலின்-துர்கா தம்பதியர் இரட்டை வேடம் போடுகின்றனர் என்றாகிறது. புருஷன்-நாத்திகன், பெண்டாட்டி-ஆத்திகன் என்று இருந்தால், அந்த திருமலை அர்ச்சகர்களை உள்ளே விட்டிருக்கக் கூடாது, மந்திரங்கள் சொல்ல அனுமதித்து இருக்கக் கூடாது, கயிறு கட்டுதல், போன்றவை நடந்திருக்கக் கூடாது. துர்கா, தனது கணவரிடம், “எதுக்குங்க இப்படியெல்லாம் நடக்கிறது, நீங்கள் கொஞ்சம் நடவடிக்கை எடுக்கக் கூடாதா?,” என்று கேட்கலாம், ஆனால், அவ்வாறு செய்வாரா என்று தெரியவில்லை.

ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழியில், இந்த பெரியார் உலகம் எழும்புகிறது:

  1. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்கப் படவு ள்ளது.
  2. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர்.
  3. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.
  4. ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது.
  5. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன்.
  6. இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம்.
  7. ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழி – மதுர காளியம்மன் கோவில், திருவாலீஸ்வரர் கோவில், / வாலி கண்டபுரம், ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் என்று பல கோவில்கள் உள்ளன.
  8. ஆக அந்த 27 ஏக்கர் நிலமும் கோவிலுடையதாக இருக்கலாம். பிறகு, அதில் “பெரியார் உலகம்” வருவது, சிலை வைப்பது??????

பெரியாருக்கு வியாபாரம் செய்ய, புதிய கதைகளை உருவாக்குகின்றனர்: ஈவேராவை ஊதிப் பெரிதாக்கியதால், அப்பிம்பம் ஏதோ பெரிதாகி விட்டது என்று நினைப்பது பெரியாரிஸ்டுகளின் நம்பிக்கை, மூட-நம்பிக்கை, முட-நம்பிக்கை, அது மடத்தனம் ஆகிறது! விடுதலை, முரசொலி, நக்கீரன், கலைஞர்-செய்தி, சன்-குழுமம் மற்ற திக-திமுகவினருக்கு ஜால்றா போடும் ஊடகங்கள், புதியா-புதிய புராணங்களை அவிழ்த்து விடுகின்றன. அஜிதன் சந்திரஜோதி உயிர் தொழில்நுட்பவியல் & மரபணு பொறியியல் ஆராய்ச்சி மாணவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரிதாக ரீல் விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4].   “நீங்கள் தமிழரா? அல்லது தமிழகத்தில் வசிக்கிறீர்களா? ஒருவேளை ஆம் என்றால்ஒன்று நீங்கள் பெரியாரை ஆதரிப்பவராக இருக்க வேண்டும்; இல்லையேல் எதிர்ப்பவராக இருக்க வேண்டும்;….” என்று ஆரம்பித்து, வக்காலத்து வாங்கிக் கொண்டு, புராணம் பாடுவது, ஏதோ, அரசவைப் புலவர், மேடைப் பேச்சாளி போன்றவதை விட தமாஷாக இருக்கிறது. ஏதோ 2021ல் இருப்பவர்கள் எல்லாம் இவர் சொல்லித் தான் மற்றவர்கள் நம்ப வேண்டும், ஈரோடு நாயக்கரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல எழுதியிருப்பது வேடிக்கைத் தான்.

ஈவேராவின் கதைகள் இருக்கும் பெரியார்களுக்கு நன்றாகவே தெரியும், இந்த குஞ்சுகள் சொல்லித் தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை: இப்படி பொய்யான நம்பிக்கையினை உருவாக்கினால், அதனை அவர்கள் தாம், நம்ப வேண்டும்! 60/70/80 வயதானவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும்! பவானி நதிக்கரை கூத்துகள் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா என்பது சந்தேகமே, ஆனால், இது போல, பொய்களை அள்ளிவிட கிளம்பியிருக்கிறார்கள். ஈவேராவைப் பார்த்து, பேசி, பழகியுள்ளவர்களுக்கு நாயக்கரைப் பற்றி நன்றாகவேத் தெரியும். மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பாவம், நாத்திகர்களின் கடவுள் ஈவேராகி அவதாரம் மாறிய நிலை போலும்! தாம்பத்தியப் பிரச்சினை, பிறந்த குழந்தை இறந்தது, மனைவி இறந்தது, எல்லோருடனும் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தது, ……..பவனி ஆற்றங்கரை விவகாரங்கள், நாடகக் கம்பெனிகளுடன் சகவாசம், வீட்டை விட்டு ஓடினது, பணத்தால் அரசியலில் பெரிய ஆளாகி விடலாம் என்ற கனவு கனவானது, ஆங்கிலம் தெரியாதலால், எஸ்.ராமநாதன், அண்ணாவை நம்பி இருந்தது, ஐரோப்பிய சுற்றுலா பற்றிய ரகசியங்கள், அம்பேத்கர் இவரை நம்பாதது, ஜின்னா கழட்டி விட்டது, இப்படி ஏகபட்ட விவகாரங்கள் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] கார் வண்டிகள் நிறுத்த காசு, பூஜைப் பொருட்கள் விற்பனை, சிறப்பு தரிசனம், சுற்றிலும் ஏராளமான கடைகளும் முளைத்துள்ளன.முன்பு இவையெல்லாம் இல்லை.

[2]  அதாவது நாத்திகத்தை வைத்து ஆத்திகத்திற்கு எதிரான வியாபாரத்தை உரிய முறையில் அல்லது அதே மாதிரியான பிரச்சாரமுறையில் எதிர்க்கலாம்.

[3] இன்ஸ்டா.நியூஸ், மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து சிலை திருட்டு, By A.Mahendran, Reporter 19 Sep 2021 6:00 PM.

https://www.instanews.city/tamil-nadu/chengalpattu/maduranthakam/temple-idol-theft-at-keelamoor-village-neat-melmaruvathur-1019243

[4] நக்கீரன், யார் அந்த பெரியார்? என்னதான் வேண்டுமாம் அவருக்கு?, Published on 18/09/2021 (06:06) | Edited on 18/09/2021 (09:36).

https://www.nakkheeran.in/nakkheeran/who-periyar-what-does-he-want/who-periyar-what-does-he-want

ரம்ஜான் கஞ்சியும், இந்து-விரோத திராவிட பேச்சுகளும்

ஒக்ரோபர் 7, 2009

karunanidhi-with-kulla

ஸ்டாலின் 2010 வருடத்தில் குல்லாவோடு கஞ்சி குடித்துள்ளார்!

தைரியமுடன் குல்லாவோடு பேசியுள்ளார்!

இதைபற்றிய பதிவை கீழ்காணும் தளத்தில் பார்க்கவும்:

www.islamindia.wordpress.com

முதல்வரின் குல்லா அன்பழகனுக்கு…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சென்னையில் நடத்திய சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவில், இந்தோனேசியாவிலிருந்து எஸ்றா சற்குணம் வாங்கி வந்த குல்லாவை, நிதியமைச்சர் அன்பழகன் தலையில் காதர்மொய்தீன் அணிவித்தார்.

எஸ்றா சற்குணம் பேசுகையில், “குல்லாவை வாங்கியவர் கிறிஸ்தவர்; அணிவிப்பவர் இஸ்லாமியர்; பெற்றவர் அன்பழகன். இதுதான் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளம்‘ என்றார்.

விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வதாக இருந்தது. உடல்நலக் குறைவால், அவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில் அன்பழகன் கலந்து கொண்டதால், முதல்வருக்கு வாங்கி வந்த குல்லா, அன்பழகன் தலைக்கு வந்தது.

அன்பழகன் மகிழ்ச்சி பொங்க, “மத நல்லிணக்க அடையாளச் சின்னமாக இதைக் கருதுகிறேன்’ என்றவர், விழா முடியும் வரை குல்லாவை எடுக்கவில்லை.

“வழங்கியவர் கிறிஸ்தவர்; அணிவித்தவர் இஸ்லாமியர்; பெற்றவர் இந்துன்னு சொல்லி இருக்கணும்…’ என, முன் வரிசை வி.ஐ.பி., ஒருவர் கமுக்கமாக, “கமென்ட்’ அடித்தார்.

anbalagan-without-capகடவுளின் பெயரால் நடக்கும் சடங்குகளால் தமிழ் கலாசாரம் அழிந்தது: அன்பழகன்
First Published : 18 Sep 2009 01:28:34 AM IST
Last Updated : 18 Sep 2009 12:13:44 PM IST
“ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை’யின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் க. அன்பழகன். உடன் (

சென்னை, செப். 17, 2009:   “”கடவுளின் பெயரால் நடத்தப்படும் சடங்குகளால் தமிழ் கலாசாரம் அழிந்தது” என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார்.  “ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை’யின் சார்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:  உலகின் முதல் மொழி தமிழ். முதல் மனிதன் தமிழன். உலகில் கடைசியாக தோன்றிய மார்க்கம் இஸ்லாம். அதற்குப் பிறகு மதங்கள் தோன்றவில்லை. சீர்திருத்த இயக்கங்கள்தான் தோன்றின.  “இஸ்லாம் எங்கள் மார்க்கம்; தமிழ் எங்கள் மொழி’ என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். இஸ்லாமியர்கள் தங்களுக்கென்று ஒரு மொழியை வைத்துள்ளனர். ஆனாலும் ஆரிய கலாசாரத்தால் தமிழ் தாழ்த்தப்பட்டதைப்போல இஸ்லாமியர்களால் தமிழ் தாழ்த்தப்படவில்லை.  இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையில்லாதவர்கள் அதாவது இந்த மண்ணில் தோன்றியதாகக் கூறப்படும் ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள், கடவுளின் பெயரால் நடத்திய சடங்குகள் ஏராளம். அதனால் தான் தமிழர்கள் தங்களை மறந்தார்கள். திருவள்ளுவரை மறந்தார்கள். தமிழ் கலாசாரம் அழிந்தது.  “ஒரே கடவுள்’ கொள்கை மூலம் மக்களை ஒருங்கிணைத்தவர் நபிகள் நாயகம். ஏழைகளை மறந்துவிட்டு யாரும் கடவுளைத்தேட முடியாது. அதனால் தான் “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று அண்ணா கூறினார் என்றார் அன்பழகன். குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப. தங்கவேலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

anbazhagan-with-kullaகருணாநிதி இந்துமதத்தை தூஷித்தது: 1980லளில் கருணாநிதி இதைப் போன்ற கஞ்சி குட்டிம் விழாவில் கலந்து கொள்ளும் போது, ஏகாதசி போன்ற பட்டினி நோன்புகள் கொண்டாடுகிறார்கள், ஆனால், இந்துக்கள் பிறகு வகை-வகையாக பலகாரங்களை செய்து வைத்துக் கொண்டு தின்பார்கள். ஆனால், நீங்களோ உண்மையாகவே உபவாசம் இருக்கிறீர்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார். உண்மையில், சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் வரை உபவாசம் இருந்து, முஸ்லிகளும் அதைவிட, ஜோராக உண்கின்றனர். கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்குக் கொள்ளை ஆசை அதுவும் குல்லா போட்டு கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்கு ஆசையோ ஆசை!! முன்பெல்லாம் “குல்லா போட்ட கருணாநிதி”யின் போட்டோக்கள் நூற்றுக்கணக்கான இருந்தன. ஆனால், திடீரென்று அவையெல்லாம் மறைந்துவிட்டன! அப்படி கஞ்சிக் குடித்துக் கொண்டே இந்துக்களை வசைப்பாட, அவதூறு பேச, தூஷிக்க, தூஷணம்…………… செய்யவேண்டும் என்றால் பேராசை!!!

Stalin with skull capகருணாநிதிக்குப் பிறகு, வாரிசுகள்  பின்பற்றுவது:  தனக்குப் பிறகு, கனிமொழி, அன்பழகனை அனுப்பி வைக்கிறார் போலும். அவர்களும் தங்களது அபிமானத்தைக் காட்டி வருகிறார்கள். கனிமொழி, பொட்டில்லாமல், பூவில்லாமல், (நாத்திகர் என்பதால் தாலி இருக்கிறாதா என்று தெரியவில்லை), கருப்பு ஜாக்கெட்-புடவை சகிதம் சென்று கஞ்சி குடித்தூள்ளார். இது ஆத்திகத்தின் அமங்கலமா, நாத்திகத்தின் புரட்சியா என்று பெண்ணினம் தான் சொல்லவேண்டும் [ஆமாம், இத்தகைய பகுத்தரிவு புரட்சியாளர்கள் திருமணத்தின்போது ஏன் கருப்பு உடைகளை அணிவதில்லை என்று  பெரியாரிடம்தான்  கேட்க வேண்டும்]. அன்பழனுக்கோ சொல்லவே வேண்டாம், சிறப்பான உபச்சாரம், மரியாதை, சலுகைகள் எல்லாம்! எஸ்ரா சற்குணம் பாதிரியார் கேட்கவே வேண்டாம், “உங்களுக்காகத்தான் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்தேன் “, என்று ஒரு குல்லாவை மாட்டிவிட்டார். அன்பழகன் குல்லாவில் அழகாகவே இருந்தார். ஆனால், பத்திரிக்கைக் காரர்கள் புகைப்படம் எடுக்கும் போது குல்லாவை எடுத்து கஞ்சிக் குடிப்பது போன்று போஸ் கொடுத்தது வேடிக்கையாக இருந்தது!

Karunanidhi with skull cap