Archive for மார்ச், 2011

தேர்தலுக்குப் பகுத்தறிவின் புறப்பாடு: சூறைத்தேங்காய், ராகு-காலம், எமகண்டம், கிழக்கு பார்த்தல் இத்யாதி!

மார்ச் 24, 2011

தேர்தலுக்குப் பகுத்தறிவின் புறப்பாடு: சூறைத்தேங்காய், ராகு-காலம், எமகண்டம், கிழக்கு பார்த்தல் இத்யாதி!

நாத்திவாதிகளின் அரசியல் விபச்சாரத்தனம்: நாத்திவாதிகளின் அரசியல் விபச்சாரத்தனத்தைப் பார்க்க சகிக்கமுடியவில்லை. நாய்களையும் விட கேவலமாக, பட்டப் பகலில் தெருக்களில், பொது இடங்களில், அவர்கள் செய்யும் நாத்திக-ஆத்திக-கூடல்கள் கேவலத்திலும் கேவலமாக இருக்கின்றன. மக்கள் இவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும். விலங்களைவிட மோசமாக, இரட்டை வேடம் போடும் இவர்களை, இறுதிவரை, வேடதாரிகளாகவே நடத்தப் படவேண்டும். கருணாநிதி கிளம்பும்போது, ஒப்பாரி வைத்தல்லவோ வழியனுப்பி இருந்திருக்க வேண்டும்? யாரிந்த ஜீயர்? ஜீயர் என்று ஆளுக்கு ஆள் கிளம்பிவிடுகின்றனர் போலும். முன்பு கூட, அச்ந்த மோசடி பேர்வழி தெய்வநாயகத்தின் மாநாட்டில், ஜீயர் என்று ஒருவர் சந்ட்கு கலந்து கொண்டது வேடிக்கையாக இருந்தது. ராவனணின் சந்ததியில் வந்தவர்கள் என்ரு பறைச்சாட்டிக் கொள்கிறவர்கள், ஏன் தெற்கு பார்த்து மனுதாக்கல் செய்யக் கூடாது?

பிரசாரத்திற்கு கிளம்பினார் கருணாநிதி: சூறைத் தேங்காய் உடைத்து வழியனுப்பினர்[1]: தி.மு.க., தலைவர் கருணாநிதி, தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்புமனு தாக்கலுக்காக நேற்று காலை சென்னை கோபாலபுரத்திலிருந்து கிளம்பினார். அப்போது வீட்டு வாசல் முன் சூறைத் தேங்காய் உடைத்து வழியனுப்பி வைத்தனர். திருவாரூரில் போட்டியிடும் கருணாநிதி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதன்பின், தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். இதற்காக, மூன்று நாள் சுற்றுப் பயணமாக சென்னையிலிருந்து நேற்று காலை திருவாரூர் புறப்பட்டார். பிரசார வேன் மூலம் திருவாரூர் புறப்பட கருணாநிதி வேனில் ஏறி அமர்ந்ததும், கோபாலபுரத்தில் அவர் வீட்டு முன் உள்ள வேணுகோபால்சாமி கோவிலுக்கு முன், சூறை தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இதற்காக, பிரசார வேன் சில நிமிடங்கள் நின்று, சூறை தேங்காய் உடைக்கப்பட்ட பின் புறப்பட்டு சென்றது. கருணாநிதியுடன், துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சென்றனர். திருஷ்டி கழிய, தடைகள் விலக, பயணம் வெற்றிபெற, தெய்வத்தை திருப்திப்படுத்த வெளியூர் புறப்படும்போது தேங்காய் உடைத்துச் செல்வது, இறை நம்பிக்கை உள்ளவர்களின் வழக்கம்.

ஜெ., போட்டி வேட்பாளர் ஆனந்த் ஸ்ரீரங்கம் ஜீயர் காலில் விழுந்து ஆசி[2]: “அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா முதல்வராக வெற்றி பெறுவார் என்றும், ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெ.,வை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர், வெற்றி பெறுவார்’ என்றும் ஸ்ரீரங்கம் ஜீயர் ஆசி வழங்கி உள்ளது, கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் வந்து விட்டாலே, பகுத்தறிவு கொள்கையில் உள்ள திராவிடக் கட்சியாக இருந்தாலும் கடவுளை தொழுது விட்டுத் தான் ஓட்டு சேகரிக்கச் செல்கின்றனர். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஸ்ரீரங்கம் ஜீயரிடம் ஆசி வாங்கிவிட்டுத் தான், காலம், காலமாக தேர்தல் பணியை துவக்குகின்றனர்.


அதிமுகவுக்கு வெற்றி பெற ஆசி: பூலோக வைகுண்டமாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின், 50வது பட்டம் ஜீயராக ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமி உள்ளார். சட்டசபை, லோக்சபா தேர்தல் வெற்றிக்காக, தன்னை சந்திக்கும் கட்சியினருக்கு பாகுபாடின்றி ஜீயர் ஆசி வழங்கி வருகிறார். நேற்று முன்தினம் காலை திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் மனோகரன் மற்றும் கட்சியினர் ஜீயரை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். “ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா, கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மனோகரன் வெற்றிபெறவும், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக ஆசி வழங்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர். அதன்படி, ஜெ., முதல்வராவார் என ஆசி வழங்கினார். ஜீயர் ஆசி வழங்கினால் நிச்சயம் அது நடக்கும் என்பது நம்பிக்கை. “ஜெ., மீண்டும் முதல்வராவார்’ என, ஜீயர் ஆசி வழங்கியதால், அ.தி.மு.க.,வினர் உற்சாகமடைந்தள்ளனர்.


திமுகவிற்கும் வெற்றி பெற ஆசி!: ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க., சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர், தீ.ப.மாயவன், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் குமரேசன், கவுன்சிலர் ரெங்கன், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலர் செவந்திலிங்கம், இளைஞரணி அன்பு மற்றும் தி.மு.க.,வினர் நேற்று ஜீயரை நேரில் சந்தித்தனர். அப்போது, ஜெ., போட்டி வேட்பாளர் ஆனந்த், ஜீயர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்த தேர்தலில் போட்டியிடும் தன்னை வெற்றி பெற ஆசி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். “நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்’ என, ஜீயர் ஆசி வழங்கினார். ஜீயர் மடத்தில் தி.மு.க.,வினர் பத்து நிமிடம் இருந்தனர்.
ஜீயர் ஆசி வழங்கியதில் கட்சியினர் மத்தியில் குழப்பம்: தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோவிலில் பெருமாள், தாயார் சன்னிதிக்கு ஆனந்த் சென்றார். அங்கு அவரது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. “ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, அவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ஆனந்த் இருவரும் வெற்றி பெறுவர்‘ என, ஜீயர் ஆசி வழங்கியது கட்சியினர் மத்தியில் குழப்பம், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “ஜெயலலிதா முதல்வராவார் என்று தான் ஜீயர் ஆசி வழங்கியுள்ளார். ஆனால், இந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என அவர் கூறவில்லை. அதே வேளையில், “நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்’ என்று தான் ஆனந்துக்கு ஜீயர் ஆசி வழங்கியுள்ளார். ஆனால், இந்த தேர்தலில் தானா என்று குறிப்பிடவில்லை’ என, விவாதம் நடத்தும் தி.மு.க., – அ.தி.மு.க.,வினர், “ஜீயர் ஆசி வழங்கியுள்ள இருவரில் யார் வெற்றி பெறுவர்?’ என்று பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.

கிழக்குபார்த்து மனு தாக்கல் ஐ.பெரியசாமி சென்டிமென்ட் : “திசையைமாற்றிய அதிகாரி[3]: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் பிரிவு தனித்துணை தாசில்தார் முருகவேல்; ஆத்தூர் தேர்தல் அதிகாரியாக உள்ளார். வேட்பு மனு தாக்கல் துவங்கிய நாள் முதல் வடக்கு பார்த்து உட்கார்ந்து மனுக்கள் வாங்கினார். நேற்று தனது நாற்காலியை மேற்கு திசையை பார்த்து மாற்றிக் கொண்டார். ஆத்தூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஐ.பெரியசாமி, கிழக்கு பார்க்கும் வகையில் நின்று மனு தாக்கல் செய்தார். புதன்கிழமையான நேற்று ராகுகாலம் (மதியம் 12 – 1.30) முடிந்த பின், மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஏன் தெற்கு பார்த்து மனுதாக்கல் செய்யக் கூடாது?

வேதபிரகாஷ்

24-03-2011


[1] தினமலர், பிரசாரத்திற்கு கிளம்பினார் முதல்வர் : சூறைத் தேங்காய் உடைத்து வழியனுப்பினர்,, http://election.dinamalar.com/election_news_detail.php?id=1091

[2] தினமலர், ஜெ., போட்டி வேட்பாளர் ஆனந்த் ஸ்ரீரங்கம் ஜீயர் காலில் விழுந்து ஆசி, பதிவு செய்த நாள் : மார்ச் 24, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=211815

[3] தினமலர், கிழக்குபார்த்து மனு தாக்கல் ஐ.பெரியசாமி சென்டிமென்ட் : “திசையைமாற்றிய அதிகாரி, மார்ச் 24,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=211812