Archive for மார்ச், 2018

ராமர் படம் அவமதிப்பு: 1971 முதல் 2018 வரை – செக்யூலரிஸ இந்தியாவில், இந்து-விரோத நாத்திக சக்திகளின் தூஷண வெறிச்செயல்கள் (3)

மார்ச் 24, 2018

ராமர் படம் அவமதிப்பு: 1971 முதல் 2018 வரைசெக்யூலரிஸ இந்தியாவில், இந்துவிரோத நாத்திக சக்திகளின் தூஷண வெறிச்செயல்கள் (3)

Case filed on DK for desectrating RAMA

ராமர் படத்தை செருப்பால் அடித்ததை போலீஸார் தடுக்காமல் இருந்தது: திகவினர் மற்ற இந்து-விரோத ஆட்ககள் பத்து பேர் தான் கலாட்டா செய்து கொண்டு நடந்து சென்றனர். அவ்வாறு தெருக்களில் ஊர்வலமாக சென்ற போது, போலீஸார் தடுக்காமல், கூடவே சென்று கொண்டிருந்தது, வீடியோக்களில் அப்பட்டமாகவே தெரிந்தது. அதாவது, அதற்கு அவர்களும் துணை போனார்கள் என்றாகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ராமர் படத்தை அவமதிப்பு செய்ததாக அவர்கள் அனைவரையும் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்[1]. இதைத்தொடர்ந்து, கைதான மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த. ஜெயராமன், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு. மகேசு, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த இளையராஜா, தெ. மகேசு, தில்லைநாதன் உள்ளிட்ட 14 பேரும் 20-03-2018 செவ்வாய்க்கிழமை நள்ளிரவில், மயிலாடுதுறை நீதிமன்றம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி செல்லப்பாண்டியன் உத்தரவின்பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்[2]. பெரியார் சிலை சேதப்படுத்தியதை கண்டித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் ஜெயராமன் தலைமையில் மறியல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

M K Stalin on Ramrath

செக்யூலரிஸ ஆங்கில ஊடகங்களின் குறுகியத் தன்மை: “ராமர் படத்தை அவமதித்த 14 பேர் சிறையில் அடைப்பு” என்ற செய்தி பி.டி.ஐ [Press Trust of India, PTI] செய்தியாக வெளிவந்ததால், ஆங்கில ஊடகங்களிலும், சுருக்கமாக செய்தி வந்துள்ளது[3]. இந்துக்களின் மத உணர்வுகள் புண்படுத்தப் பட்டது பற்றி மூச்சுவிடவில்லை. மாறாக பெரியார் சிலையுடைப்புடன் முடிச்சுப் போட்டன. ஆனால், இதைப் பற்றி யாருமே கண்டுகொண்டதாக தெரியவில்லை[4]. ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறவில்லை[5]. செக்யூலரிஸ இந்தியாவில், இந்துக்களின் உரிமைகள் பற்றும் மூச்சு விடவில்லை[6]. இதே, வேறு மத கடவுளை செருப்பால் அடித்திருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும் போலிருக்கிறது. அண்ணாவின் மகேசன், தேவன் யார் என்பது மக்கள் மறுபடியும் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பெரியார் சிலையுடைப்புடன், இதனை முடிச்சுப் போடுவதும், விசமத்தனமாக உள்ளது[7]. ஏனெனில், ஒரு இந்து-விரோத நாத்திகனையும், ராமரையும் ஒப்பீடு செய்வதே மிக்கத் தவறாகும்[8]. இது எல்லாவித சித்தாந்தங்களுக்கும் ஒவ்வாத, போலித்தனமானது. ஆகவே, இதெல்லாம், வேண்டுமென்றே, திராவிடத்துவவாதிகள் திசைத் திருப்பும் போக்காக உள்ளது. ஆனால், ஆங்கில ஊடகங்களே அவ்வாறு செய்வது, பின்னணியில் ஒரு விதமான “செக்யூலரிஸ திட்டம்” இருப்பதை அறிந்து கொள்ளலாம்[9]. 23-03-2018 அன்று மயிலாடுதுறையில் கடைகள் அடைபட்டிருந்த செய்தியும் அவ்வாறே பி.டி.ஐ செய்தியாக வெளியிடப்பட்டது.  இந்து அமைப்புகள் கண்டன ஆர்பாட்டம் அறிவித்திருந்ததால், 2000 கடைகள் மூட்டப்பட்டதாம்.

Case filed on DK for desectrating RAMA-2

ராமர் படத்தை செருப்பால் அடித்த நிகழ்ச்சியை அடக்கி வாசிப்பது ஏன்?: போராட்டத்தின் போது ராமர் படத்தை அவமதித்த பேராசியர் ஜெயராமன் உள்ளிட்டோரை கண்டித்து இந்து கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் 23-03-2018 அன்று, கடையடைப்பு போராட்டம் நடந்தது[10]. மயிலாடுதுறை பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகள் மற்றும் கச்சேரி சாலை, கும்பகோணம் ரோடு, மகாத்மா காந்தி சாலை, பட்டமங்கலம் சாலை, பெரிய கடை வீதி, பெரிய கண்ணார வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மயிலாடுதுறை பகுதியில் சுமார் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடையடைப்பு போராட்டத்தையொட்டி மயிலாடுதுறையில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்[11]. ஆக, இதனை, உள்ளூர் பிரச்சினை போன்று சித்தரிக்கப் படுகிறது. செய்தி பரவாமல், அமுக்கப் படுகிறது என்பது தெரிகிறது.

Rama, Ramarajya - DK viramani , Periyar Tidal - 23-03-2018

இராமாயணம்இராமன்இராம ராஜ்ஜியம்பெயரில் கலாட்டா, கலவரம்: 23-03-2018 அன்று சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் “இராமாயணம் – இராமன் – இராம ராஜ்ஜியம்” என்னும் தலைப்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்  சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இராமராஜ்ஜியம் என்று சொன்னால் சம்பூகனுக்கு ஏற்பட்ட கெதிதான் சூத்திரர்களாகிய நமக்கெல்லாம் ஏற்படும் என்று விளக்கியது வேடிக்கையாக இருந்தது[12].  மேலும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை கவனித்தால், யார் என்று கண்டு கொள்ளலாம். வால்மீகி ராமாயணத்தில் இல்லாததை சொல்லி, பிரச்சாரம் செய்து, கலவரத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என்று தெரிகிறது[13]. இப்பொழுது மறுபடியும் ராமரை வைத்து அரசியல் செய்வது திகவினர் மற்ற இந்துவிரோதிகள் என்று தெறிகிறது. இப்பொழுதுள்ள ராம-ராஜ்ஜிய ரதம் ஒன்றும் “அத்வானி ரதம்” போன்றது இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், ஊர்வலத்திற்கு தகுந்த பாதுகாப்பு இருந்திருக்கும், கலாட்டா செய்தவர்கள், கைது செய்யப் பட்டு, இத்தகைய “ராமர் படத்தை செருப்பால் அடித்தவர்கள்” சிறையில் அடைபட்டிருப்பர். ஆகவே, இல்லாத பிரச்சினையை, பிரச்சினையாக்கி, பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக்க சதி நடந்து கொண்டிருப்பது தெரிகிறது.

©  வேதபிரகாஷ்

24-03-2018

Rama, Ramarajya - DK viramani , Periyar Tidal - 23-03-2018-2

[1] தினமணி, ராமர் படத்தை அவமதித்த 14 பேர் சிறையில் அடைப்பு, By DIN | Published on : 22nd March 2018 09:49 AM.

[2] http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/22/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-14-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2885493.html

[3] மின்முரசு, ராமர் படத்தை அவமதித்த 14 பேர் சிறையில் அடைப்பு, மார்ச்.21, 2018.

[4]https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/232211/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-14-%E0%AE%AA%E0%AF%87/

[5] The First Post, Tamil Nadu: 14 arrested for desecrating Lord Ram’s portrait while protesting over Periyar statue vandalism, India PTI Mar 21, 2018 22:30:39 IST

[6] http://www.firstpost.com/india/tamil-nadu-14-arrested-for-desecrating-lord-rams-portrait-while-protesting-over-periyar-statue-vandalism-4400183.html

[7] Indian Express, 14 arrested for allegedly desecrating Lord Ram portrait in Tamil Nadu, By PTI | Published: 21st March 2018 11:34 PM ; Last Updated: 21st March 2018 11:34 PM.

[8] http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/mar/21/14-arrested-for-allegedly-desecrating-lord-ram-portrait-in-tamil-nadu-1790591.html

[9] Business Standard, 14 arrested for desecrating Lord Ram portrait in TN, Press Trust of India | Mayiladuthurai (TN), Last Updated at March 21, 2018 21:35 IST.

http://www.business-standard.com/article/pti-stories/14-arrested-for-desecrating-lord-ram-portrait-in-tn-118032101229_1.html.

[10] மாலைமலர், பேராசிரியர் ஜெயராமனை கண்டித்து மயிலாடுதுறையில் கடையடைப்பு, பதிவு: மார்ச் 23, 2018 09:58.

[11] https://www.maalaimalar.com/News/District/2018/03/23095842/1152646/bandh-in-mayiladuthurai-Condemning-professor-jayaraman.vpf

 

[12] விடுதலை, இராமாயணம்இராமன் இராமராஜ்ஜியம், 23-03-2018.

[13] http://www.viduthalai.in/page-2/159090.html

ராமர் படம் அவமதிப்பு: 1971 முதல் 2018 வரை – செக்யூலரிஸ இந்தியாவில், இந்து-விரோத நாத்திக சக்திகளின் தூஷண வெறிச்செயல்கள் (2)

மார்ச் 24, 2018

ராமர் படம் அவமதிப்பு: 1971 முதல் 2018 வரைசெக்யூலரிஸ இந்தியாவில், இந்துவிரோத நாத்திக சக்திகளின் தூஷண வெறிச்செயல்கள் (2)

Case filed on Karunanidhi

அக்டோபர் 1973ல் மதுரையில் .வே.ராவின் 95வது பிறந்த நாள் என்று இந்து மதம்கடவுளர்களை தூஷித்தது: அக்டோபர் 1973ல் மதுரையில் ஈ.வே.ராவின் 95வது பிறந்த நாள் என்று இந்து மதம்-கடவுளர்களை தூஷிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலத்தின் முன்னால், ஒரு வேலைத் தூக்கிச் சென்று, அதனை செருப்பால் அடித்தவாறு சென்றனர். அதேபோல விநாயகர் விக்கிரகத்திற்கும் செய்தனர். கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலத்தில் எடுத்துச் என்றனர். ஆனால், அப்பொழுது முதலமைச்சராக இருந்த காமராஜர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1973ல் பெரியார் இறந்தார், ஆனால், இத்தகைய காரியங்கள் தொடர்ந்து நடந்தன[1]. 1974ல் “ராவண லீலா” அடத்தி, ராமர்-லட்சுமணன்–சீதை பொம்மைகளை எரித்தனர். எம்ஜியார் ஆட்சிக்கு வந்த பிறகு 1980-87 ஆண்டுகளில் நிலமை கொஞ்சம் மாறியது எனலாம்.

2006ல் தாக்குதல் - அயோத்தியா மண்டபம், sakarapuram temple

2006ல் தாக்குதல் – அயோத்தியா மண்டபம், sakarapuram templ

2007ல் யார் இந்த ராமர்? அவர் என்ன சிவில் இஞ்சினியரா? எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தார்: என்றெல்லாம் கருணாநிதி கேள்விகளை எழுப்பினார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி ராமர் ஒரு கற்பனை பாத்திரம் என்றும் ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது கிடையாது எனவும் கூறினார்[2]. சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுக்க சில சக்திகள் செயல்படுவதாக சமீபத்தில் ஆவேசப்பட்ட தமிழக முதல்வர் கருணாநிதி, ‘‘இந்தத் திட்டத்தைத் தடுக்க ஒரு ஆளைப் பிடித்தார்கள். யார்? 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இருந்தாராம். அவர் பெயர் ராமராம். ‘அந்த ராமர் கட்டிய அணை அங்கே உள்ளது. அதைத் தொடாதே!’ என்கிறார்கள். யார் ராமன்? எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்துப் பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா? இல்லை!’’ என்று பேசினார்[3]. அதாவது,ராமர் விசயத்தில், இந்தாளவுக்கு ஞானத்தை வெளிப்படுத்தும், இந்த இந்து-விரோதி கருணாநிதி, ஏசு மாறும் அல்லா போன்றவர்களின் சரித்திரட்ன் தன்மை குறித்து கேள்வி கேட்டதில்லை. இதிலிருந்தே, இவர்களின் போலித் தனத்தை கண்டுகொள்ளலாம்.

erode Raghavendra mutt attacked, Vishnu idol uprooted and thrown by DK Dec.2006

erode Raghavendra mutt attacked, Vishnu idol uprooted and thrown by DK Dec.2006

டிசம்பர் 2006ல் ஈரோடு ராகவேந்திர மடம் தாக்கப்படல், ராமர் சிலை பெயர்த்துத் தூக்கியெறியப்படல்: அதேபோல, சம்பந்தமே இல்லாமல், ஈரோட்டில், அக்ரஹாரத் தெருவில் உள்ள ராகவேந்திர பிருந்தாவனத்தில் புகுந்து, ராமர் விக்கிரகத்தைப் பெயர்த்து எறிந்தனர்[4]. அப்பொழுதும் செக்யூலரிஸவாதிகள் மூச்சுக்கூட விடவில்லை. சென்னையில், பழைய மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. “தி இந்து” இதனை சூஜகமாக அமிலம் மற்றும் பெட்ரோல் கலந்த பாட்டில்கள் வீசப்பட்டன என்று குறிப்பிட்டது[5]. இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போது, சுவாமி தயானந்த சரஸ்வதியின் மீது, ஶ்ரீரங்கத்த்ல் கோவிலுக்கு எதிராக உள்ள சிலையை சேதப்படுத்தியதற்காக, முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல சுப்பிரமணியன் சுவாமி, அது சட்டப்படி தவறு என்ரு சுட்டிக் காட்டினார்[6]. ஆக இது நாத்திகமும் இல்லை, நாத்திகவெறியும் இல்லை ஆனால், இனவெறியே ஆகும்.

Stalin opposing Ramrajya rath- 20-03-2018

மார்ச் 2018 – ராம ராஜ்ய ரதயாத்திரையை எதிர்த்து ஸ்டாலின் செய்த கலாட்டா: தமிழகத்தில் “ராம ராஜ்யம் ரதம்” ஊர்வலமாக வருகிறது என்ற சாக்கை வைத்துக் கொண்டு இந்து-விரோத கும்பல்கள் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினே அநாகரிகமான முறையில் கையினால் சைகை செய்து, அத்தகைய போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது கேவலமாக இருந்தது. மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது[7]: “ராம் ராஜ்ய யாத்திரைஎன்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுகிறோம் என்ற போர்வையில் தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்துவதற்கும், அந்த யாத்திரை நடத்துவதற்கு அனுமதித்துள்ள அதிமுக அரசுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் பா.. ஆட்சி இருப்பதையும், தமிழகத்தில் அவர்களின் எடுபிடியாக அதிமுக அரசு நடப்பதையும் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் விஷ விதையை விதைக்க விஸ்வ இந்து பரிஷத் முயற்சிப்பது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகும்[8]. தமிமுன் அன்சாரி வெறி பிடித்தால் போல, சட்டசபையில் கத்திக் கொண்டு ஓடியதும், தரையில் உட்கார்ந்து கொண்டதும் கேவலமாக இருந்தது. இதனால், உசுப்பிவிடப்பட்ட மற்ற இந்துவிரோத நாத்திக கும்பல்கள் வெறித்தனமான வேலைகளில் இறங்கின.

Beating Rama with chappals- 20-03-2018

மார்ச் 2018 – ராமர் படம் செருப்பால் அடிக்கப் படுதல்: திராவிடர் விடுதலைக் கழகம் தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் இளையராஜா, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு. மகேஷ்[9] ஆகியோர்களது தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மயிலாடுதுறை கச்சேரி சாலையிலிருந்து பேரணியாக கிட்டப்பா அங்காடிமுன்பு வந்தனர்[10]. இவர்களது பின்னணியை வைத்துப் பார்க்கும் போது, இவர்கள் எல்லோருமே தேசவிரோத, இந்துவிரோதக் கொள்கைகளைக் கொண்டவர்கள் என்று தெரிகிறது. பின்னர், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர்[11]. கிட்டப்பா அங்காடி முன்பு ஒன்றிணைந்து, ராமர் உருவப்படத்தை அவமதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[12].   தொடர்ந்து, ராமர் படத்துக்கு அவமரியாதை செய்தனர்[13]. பேராசிரியரராக இருக்கும் ஜெயராமனே, இத்தகைய வேலையில் இறங்கினால், அவரிடம் படுக்கும் மாணவர்களின் நிலை எப்படியிருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது. சமூகவலைதளங்களில் இதைப் பற்றிய வினர்சனங்களும் பதிவாகியுள்ளன[14].

©  வேதபிரகாஷ்

24-03-2018

Tamimun Ansari, Karnas, Taniyarasu-anti-Hindu- identify and remember- 20-03-2018

[1] After his demise in 1973 the Movement was being ably guided by the new President Annai E.V.R. Mani Ammaiyar. A notable event since her assuming the presidentship was the celebration of “Ravana Leela” in December, 1974, when the effigies of Rama, Sita and Lakshmana were burnt down. This event which rocked the entire orthodoxy all over India was no mean achievement of the movement today. A case was filed against Mrs.Maniammai and others including me. We were all acquitted.

http://www.modernrationalist.com/2011/march/page04.html

[2] விகடன், யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!, Posted Date : 06:00 (26/09/2007)

[3] https://www.vikatan.com/anandavikatan/2007-sep-26/politics/72646.html

[4]  In Erode, a Ramar idol was found damaged. The police said around 5.15 p.m., a group of Dravidar Kazhagam volunteers, shouting slogans, entered the Raghavendraswamy temple, situated in Agrahara Street, went to the sanctum sanctorum and removed the deity. On hearing the news, hundreds of devotees rushed to the spot, and demanded the police take action against the persons responsible for the act. RSS and Hindu Munnani volunteers protested against the damage to the idol.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[5] In Chennai, some miscreants hurled a few bottles of acid and petrol at the Ayodhya Mandapam, West Mambalam.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[6] Janata Party president Subramanian Swamy condemned the police for registering a first information report (FIR) against Swami Dayanand Saraswati in the case related to damage caused to the statue in Srirangam. In a statement here, Dr. Swamy said by registering an FIR against Dayanand Saraswati merely for issuing a statement against the installation of the statue, the police had violated several Supreme Court judgments, including the one in the Bhajan Lal case in 1992.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[7] தமிழ்.ஒன்.இந்தியா, விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும்ஸ்டாலின், Posted By: Lakshmi Priya Published: Monday, March 19, 2018, 20:31 [IST].

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-demands-ban-the-rath-yatra-conducted-viswa-hindu-314749.html

[9] தமுமுகவுக்கு ஆதவாக டிசம்பர் 6 நிகழ்ச்சியில் பேசுவதை இங்கு காணலாம் – https://www.youtube.com/watch?v=ymPmgImyJ6E

[10] தினகரன், ராமர் படத்தை அவமதித்த 14 பேர் சிறையில் அடைப்பு, 2018-03-21@ 07:34:00

[11] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=386208

[12] தினமணி, ராமர் படத்தை அவமதித்த 14 பேர் கைது,By DIN | Published on : 21st March 2018 08:05 AM

[13] http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/21/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-14-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2884634.html

[14] http://dhinasari.com/politics/32223-professor-jayaraman-arrested.html

ராமர் படம் அவமதிப்பு: 1971 முதல் 2018 வரை – செக்யூலரிஸ இந்தியாவில், இந்து-விரோத நாத்திக சக்திகளின் தூஷண வெறிச்செயல்கள் (1)

மார்ச் 24, 2018

ராமர் படம் அவமதிப்பு: 1971 முதல் 2018 வரைசெக்யூலரிஸ இந்தியாவில், இந்துவிரோத நாத்திக சக்திகளின் தூஷண வெறிச்செயல்கள் (1)

Ravana kavyam, Kulandai

இராமாயண எதிர்ப்பும், ஈவேராவும், பெரியாரும்: வெகுஜனமக்களால் விரும்பப்படுவதை எதிர்த்தால், சுலபமாக பிரபலம் அடந்து விடலாம் என்ற யுக்தியைக் கடைபிடித்து தான், திராவிட நாத்திகர்கள் தங்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். ஈவேராவைப் பொறுத்த வரையில், என்னத்தான், அதிரடி எதிர்ப்புகள் முதலியவற்றைச் செய்தாலும், தேசிய அளவில் பிரபலம் அடைய முடியவில்லை. தமிழகத்தில் கூட அத்தகைய நடவடிக்கைகளினால், எதிர்மறை விளைவுகளினால் வெறுப்பைத் தான் சம்பாதித்தார். புலவர் குழந்தை என்ற திககாரன் எழுதிய ராமாயணம் “இராவண காவியம்” எனப்பட்டது! 1946 இல் வெளிவந்தது! இவ்வாறு பொய்யாக எத்தனை ராமாயணங்கள் எழுதப் பட்டாலும், வால்மீகி ராமாயணத்தை, எவனாலும் மறைக்க, மறுக்க,  மறக்க முடியவில்லை! அதே போல, எத்தனை ராவணன்கள் வந்தாலும், ராமரை ஒன்றும் செய்ய முடியவில்லை. என்றும் பேசப்படுவது ராமர் புகழ் தான்! मर्यादा पुरुषोत्तम – மரியாதா புருஷோத்தம் – மனிதகர்ளில் உத்தமராக இருந்ததால் தான் அவர் “மரியாதைக்குரிய உத்தம புருஷர்” ராமர் என்று அழைக்கப் படுகிறார்! இருப்பினும், தான் அரசியலில் ஓரங்கட்டப் பட்ட நுலையில், அத்தகைய வேலைகளில் இறங்கினார்.

Ramayana- interpreted by EVR

ஈவேராவின் இராமாயணம் / பாத்திரங்களும்: இராமாயண பாத்திரங்கள் என்ற குறும்புத்தகத்தில் ஈவேரா, முன்னுரையில் எழுதியது, “…..இராமாயாணம் நடந்த கதை அல்ல அது ஒரு கட்டுக்கதையே, அக்கதையின் படி இராமன் தமிழன் அல்ல, அவன் தமிழ்நாட்டானும் அல்ல வடநாட்டான், இராமன் கொன்ற மன்னன் இராவணனோ தென்னாட்டான் இலங்கை அரசன், இராமனிடம் தமிழர் பண்பு (குறள் பண்பு) என்பது சிறிதும் இருந்ததாக இல்லை. இராமன் மனைவியும் அது போலவே வட நாட்டவள்அவளிடம் தமிழ் பெண் பண்பு இல்லவே  இல்லை. அதில் தமிழ்நாட்டு ஆண்கள் குரங்கு, அரக்கன், ராக்சதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் அரக்கிகள் என்று குறிக்கப்பட்டுள்ளார்கள். இராமாயண போராட்டத்தில் ஒரு பார்ப்பனர் கூட சிக்கவே இல்லை. போரில் ஒரு வடநாட்டானோ ஆரியனோ பார்ப்பானோ சிக்கவே இல்லை. பார்ப்பனப் பையன் நோய் வந்து இறந்ததற்காக சூத்திரன் கொல்லப்பட்டிருக்கின்றான்மற்றும் அதில் கொல்லப்பட்டவர்கள், செத்தவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டவர்களே ஆவார்கள். தன் தங்கையை மானப்பங்கம் செய்ததற்காக, இராவணன், இராமன் மனைவியை கொண்டு சென்றான். இராமன் மனைவியை கொண்டு போனதற்காக இலங்கை முழுவதிற்கும் ஏன் நெருப்பு வைக்க வேண்டும்ராக்கதர்களை ஏன் கொல்ல வேண்டும்?” 

 Ramayana- interpreted by EVR-3

இராமாயண கதை தமிழர்களை இழிவு படுத்துகிறது: ஈவேரா தொடர்ந்தது,  “இராமாயண கதை தமிழர்களை இழிவு படுத்துவதை தவிர, அதில் வேறு கருத்து இல்லை. தமிழ்நாட்டில் இராமாயணத்தையோ, இராமனையோ வைத்திருப்பதானது, மனித சுயமரியாதைக்கும், இன சுயமரியாதைக்கும், தமிழ்நாட்டு சுயமரியாதைக்கும் மிகமிக கேடும், இழிவும் ஆனதாகும். இராமாயண இராமன் சீதை ஆகியவர்களைப் பொருத்தவரைக்கும் கடுகளவும் கடவுள் தன்மை என்பது கானப்படவில்லைஎப்படி நாடு விடுதலைப் பெற்றவுடன்வெள்ளையர்கள் பெயரை மாற்றி இந்நாட்டவர் பெயர் வைத்ததைப் போலவும், வெள்ளையர்களின் உருவங்களை அப்புறப்படுத்தியது போலவும், தமிழன் சுயமரியாதை உணர்ச்சி பெற்றப்பிறகு, தமிழர்களை இழிவுபடுத்தி, கீழ்சாதி மக்களாக்கிய, ஆரிய சின்னங்களையும்ஆரிய கடவுள்களையும், ஆரிய கடவுள்கள் என்பதான உருவங்களையும், அழித்து ஒழிக்கவேண்டியது சுத்த இரத்த ஓட்டமுள்ள தமிழன் கடைமை ஆகும்”. என்றெல்லாம் அந்த புத்தகத்தின் முன்னுரையில் பெரியார் எழுதுகிறார். ஆக இதிலிருந்தே, அவரது ஞானத்தை அறிந்து கொள்ளலாம். ஜைன-ராமாயணம், பௌத்த-ராமாயணம் போன்ற போலிநூல்களில் உள்ள குறிப்புகளை வைத்துக் கொண்டு, இவ்வாறு, அரைப்வேக்காட்டுத் தனமாக எழுதியதை இன்றளவும், திகவினர், “சரித்திர உண்மை” போல பேசி-எழுதி வருகின்றனர். அதனால் தான், பெரும்பாலும், இவற்றை பொருட்படுத்தாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், இந்தமேதாவிகளோ, இவற்றையெல்லாம், எல்லோரும் ஏற்றுக் கொண்டு விட்டனர், என்று மேன்மேலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்களை முட்டாள்களாக்கி வைத்துள்ளனர்.

Ramayana- interpreted by EVR-2

மகேசன், தேவன், என்றெல்லாம் பேசி இந்து-விரோதத்தை வளர்த்தது:

  1. “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று அண்ணாதுரை சொல்லியதில் தான், திராவிடத்துவத்தின் போலித்தனம் வெளிப்பட்டது.
  2. கடவுள் இல்லைகடவுள் இல்லைகடவுள்இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; என்று நாயக்கர் சொன்னதால், இந்த முதலியாரின் மகேசன் யார்?
  3. கடவுளைபரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றால், நீ ஏன் ஊழலின் ஊற்றாக இருக்கிறாய்?
  4. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றால், அந்த தேவன் யார்? அந்த ஏகத்துவன் கடவுள் இல்லையா? எந்த செட்டியார் இதற்கு பதில் சொல்வது?
  5. ‘சீரங்க நாதனையும் தில்லைநட ராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் எந்நாளோ?’ என்றது யார் என்று சொல்ல பயப்படுகிறாயே, நீ சித்தாந்தியா?
  6. பாரதி தாசன் சொன்னான், அவன் சொன்னதை நான் சொன்னேன் என்று அண்ணா சொன்னான் என்ற அளவில் வந்துவிட்டதே தம்பி?
  7. நாகூர் ஆண்டவனையும், வேளாங்கண்ணி கன்னியையும் பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் எந்நாளோ என்று தம்பி நீ கவிதை எழுதுவாயா?
  8. ஏழைப்பெண்கள் ஏங்கி தவிக்க அடியே கள்ளி மதுரமீனாட்சி உனக்கெதுக்குடி வைர மூக்குத்தி என்றான் அண்ணன், தம்பி, நீ மாற்றி கேட்பாயா?
  9. ஈவேரா நாயக்கரின்கடவுள்”, அண்ணாதுரை முதலியாரின்மகேசன் / தேவன்எல்லோரும் ஒன்றா, கழகக் கண்மணிகளே, சொல்வீரா?
  10. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றால், நாயக்கர், முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் எல்லாம் “தேவனிடத்திலிருந்து” உண்டானார்களா?

Vedaprakash comments

உணர்ச்சிப் பூர்வமான கோஷங்களும், பொய்மை நாத்திகவாதங்களும் இந்துவிரோதமாக அமைந்ததது: 1967ஆம் ஆண்டு, பெரியார் முதன்முதலாக, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்னும் முழக்கத்தை எழுப்பினார, என்றால், அன்றே, “செக்யூலரிஸ நாத்திகத்தின்” போலித்தனம் தெரிந்து விட்டது. “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று அண்ணாதுரை சொல்லியதிலும், அந்த மோசடித்தனம் அதிகரித்தது தெரிகிறது. ஏனெனில், “கடவுளே” இல்லை என்றபோது, “மகேசன்” எம்க்கிருந்து வந்தான். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது அது போன்ற உணஃப்ர்ச்சிப் பூர்வமான கோஷம் மற்றும் தூண்டுதல் பித்தலாட்டம். ஏனெனில், இங்கும் “தேவன்” என்பதை கடவுள், இறைவன், ஆண்டவன் என்றேல்லாம் அர்த்தம் கொண்டால், அவனிருப்பதை, நாத்திகவாதியான துரை ஏற்றுக்கொள்ள முடியாது. “தேவன்” ஏசுதான் என்றால், கிருத்துவர் என்றோ அண்ணாவை கிழித்திருப்பர். ஆக, இந்த இந்து-விரோதிகள் திட்டமிட்டுதான், திராவிட வெறித்தனத்தை வளர்த்துள்ளனர். அந்த வெறித்தனம் தான், அத்தகைய வெறுப்பு சித்தாந்தமாக மாறி, மக்களை ஊக்குவித்த நிலையில், “திகவினர்” அடையாளத்தில், இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு வருகின்றனர்.

1971- ram- beated with chappals

1971ல் திகவினர் சேலத்தில் ராமர்லட்சுமணன்சீதை படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றது: தமிழகத்தில் இந்துக்களை அவமதிப்பது என்பது ஈவேரா போன்ற இந்து-விரோத நாத்திகர்களால் 1960களில் ஆரம்பித்து வைக்கப் பட்டது. அப்பொழுது, நாத்திக-திமுக ஆட்சியில் இருந்ததால், ஈவேரா மற்றும் திகவினரிடம், திராவிட-நாத்திகக் கட்சியினர் மெத்தனமாகவே நடந்து கொண்டனர். 1960களில் நிச்சயமாக, யாதாவது எதிர்த்து கேட்டால் அடிப்பார்கள் என்று எல்லோருமே திகவினருக்கு பயந்துதான் இருந்தனர். எனவே பிராமணர்களைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. திகவினர் 1971ல் சேலத்தில் ராமர்-லட்சுமணன்–சீதை படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்பொழுது வைணவர்களே அதனை எதிர்த்ததாகத் தெரியவில்லை. துக்ளக்கில் ஊர்வல படங்கள் வெளியிடப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்டது. இப்பொழுது அப்படங்கள் கிடைப்பதில்லை. ஒரே வேளை இப்பொழுது அவை ஆதாரங்கள் ஆகி விடும் என்று மறைக்கிறார்கள் போலும்.

©  வேதபிரகாஷ்

24-03-2018

Anna comments on God etc