Posts Tagged ‘இந்துவிரோத பேச்சுகள்’

இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பதால் ஆரிய-திராவிட போர் நின்று விடுமா? மதராசி இந்தி மொழி பேசுபவரை சுகவாசி ஆக்குவார்களா? (3)

நவம்பர் 28, 2023

இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பதால் ஆரியதிராவிட போர் நின்று விடுமா? மதராசி இந்திமொழி பேசுபவரை சுகவாசி ஆக்குவார்களா? (3)

இந்திய அளவில் நம் இந்தியா கூட்டணி வலுவான ஆட்சியை அமைக்கும்: பொய்களை விற்று அதில் கூலி பெற்று இளைஞர்களை ஏமாற்றும் கூட்டம் ஒரு புறம், வதந்திகளை பரப்பி – வன்முறையை விதைத்து தமிழ்நாட்டில் கால் ஊன்றி விடலாம் எனத் தப்புக் கணக்கு போடும் கூட்டம் மறுபுறம், தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்து விட்டுப் போன முதுகெலும்பற்ற கூட்டம் இன்னொரு புறம். இந்த மோசடி அரசியல் சக்திகளை எதிர்கொண்டு, மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வரும் தி.மு.கழகமும் அதன் தோழமை சக்திகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் முழுமையாக வென்றாக வேண்டும். அப்போதுதான் இந்திய அளவில் நம் இந்தியா கூட்டணி வலுவான ஆட்சியை அமைக்கும். இளைஞரணி முன்னெடுத்துள்ள நீட் விலக்கு என்ற இலக்கினை வெற்றிகரமாக எட்ட முடியும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.

தம்பி உதயநிதி அழைக்கிறார் என்று எழுதிய தந்தை: இவற்றை மனதில்கொண்டு, இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செயலாற்ற வேண்டும் என்பதை நேற்றைய கூட்டத்தில் எடுத்துரைத்தேன். தேர்தல்களத்திற்கான பயிற்சிக்களமாக அமையவிருக்கும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் வெற்றி அதனைப் பறைசாற்ற வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, புதிய ஆத்திசூடியை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதில், கழகம் வில்லாம் நின் அணியே கணையாம் என்று எழுதியிருந்தார். களத்தில் பாய்வதற்குத் தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டுத் தலைவர் தம்பி உதயநிதி அழைக்கிறார். கழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், அந்தந்த மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்துக் கிளைகளிலிருந்தும் தேர்தல் களத்திற்கான வீரர்களாக உடன்பிறப்புகள் திரளட்டும். கடல் இல்லாச் சேலம், கருப்பு – சிவப்புக் கடலினைக் காணட்டும்.”. என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி தலைவர் இறந்த நாள், மகன் பிறந்த நாள், திராவிட ஆன்மீகத்தின் நிலை: சனாதன ஒழிப்புப் பேச்சினால் பாதிக்கப் பட்டுள்ள பிம்பத்தை மாற்ற இந்த அதிரடி யுக்திகள் செயல்படலாம். ஊடக பலம் இருப்பதனால், அவற்றை தொடர்ந்து மக்கள் மீது திணிக்கலாம். ஒரே நாளில் சிங்-நினைவு நாளில் சிலைதிறப்பு விழா மற்றும் மகன் பிறந்த நாள் என்றிருப்பதால், திராவிட ஆன்மீகம் உருத்துகிஅரது போலும். அதாவது, தன் மகன் பிறந்த நாளில், இந்த விழாவும் கொண்டாட வேண்டியுள்ளதே என்று நெருடலாக இருந்தது தெரிகிறது. அதனால், தான், தன் மனைவி, மகன் சகிதம், தனியாக இருந்து, இரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். மகன் பெற்றோரிடம் ஆசி பெற்றானாம், தாய் கன்னத்தில் முத்தமிட்டாளாம்! இதெல்லாம் திராவிட மாடலா, ஆரிய மாடலா, என்று தெரியவில்லை.

உபி அரசியலில் போட்டியாளர்-எதிரிகள் நண்பர்கள் ஆவது வினோதமே: ஏராத கட்சிகள் எல்லாம் ஒன்றாக கூட்டணியில் சேர்ந்தது, காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என்றதால் தான். இதனால், துருவங்க/ல் பிஜேபி-கம்யூனிஸ்டுகள் ஒரே அணியில் இருந்து சிங்கை ஆதரித்தனர். அகிலேஷ் யாதவ் இதில் கலந்து கொண்டதே வேடிக்கையான விசயம் எனலாம். ஏனெனில், இவரது தந்தை முலாயம் சிங் 1990ல் வி.பி.சிங்கிற்கு எதிராக வாக்களித்து, சந்திரசேகருக்கு ஆதரவாக இருந்தார். அதனால், அவர் பிரதம மந்திரி ஆனார். வி.பி.சிங் காலத்தில் தான் ரூபையா சையத் கடத்தப் பட்டு, தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகமானது.

ரூபையா சையத் கடத்தல், தீவிரவாதிகள் விடுதலை: டிசம்பர் 8, 1989 அன்று ரூபையா சையது, இஸ்லாமிய தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப் பட்டனர். ஆனால், தினமும் அவளுக்கு வீட்டிலிருந்து உணவு சென்றது. டிசம்பர் 13, 1989 அன்று ரூபையா சையது விடுதலை செய்யப் பட்டாள். இந்திரகுமார் குஜரால், ஆரிப் முஹம்மது கான் மற்றும் பரூக் அப்துல்லா அங்கு சென்றனர். சிறைலிருந்து ஐந்து தீவிரவாதிகள் விடுவிக்கப் பட்டனர். காஷ்மீரில் தீவிரவாதம் பெருகியதற்கு, வி.பி.சி அரசு தான் என்று அப்துல்லா குற்றம் சாட்டியது, எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. அவளின் விடுதலைக்காக, தீவிரவாதிகள்  விடுதலை செய்யப் பட்டனர். இதுவமொரு “நாடகம்” என்று விமர்சிக்கப் பட்டது.

  1. செயிக் அப்துல் ஹமீது[Sheikh Abdul Hameed],
  2. குலாம் நபி பட் [a JKLF “area commander” Ghulam Nabi Butt, younger brother of the convicted and hanged rebel Maqbool Butt];
  3. நூர் மொஹம்மது கால்வால் [Noor Muhammad Kalwal];
  4. மொஹம்மது அட்லப்ஃ [Muhammed Altaf]; மற்றும்
  5. முஸ்டாக் அஹ்மத் ஜர்கர் [Mushtaq Ahmed Zargar.]

முதலிய தீவிரவாதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொலை செய்யப் பட்டது, வெளியேறியது: வி.பி.சிங் 02-12-1989 முதல் 10-11-21990  December 1989 to 10 November 1990] வரை தான் பிரதம மந்திரியாக இருந்தார். ஆனால், அந்த குறுகிய காலத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகமாகி, வன்முறை-கொலை என்று மாறியது. 19-01-1990 முதல் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகமாகியது. ஜெ.கே.எல்.எப் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் காஷ்மீரில் இந்துக்களை மிரட்டி கொலை செய்தனர். பயந்தவர் காஷ்மீரத்திலிருந்து சுமார் 6 லட்சம் இந்துக்கள் வெளியேறி மற்ற இடங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். நீதி, சமூக நிதி, சமநீதி என்றெல்லாம் பேசும் நியாயவான்கள், தர்மவான்கள் வாய்களை மூடிக் கொண்டுதான் இருந்தார்கள். உரிமை, மனித உரிமை, பெண் உரிமை, பெண்ணிய உரிமை…….பேருபவும் மூடிக் கொண்டுதான் இருந்தார்கள்……..அக, இவையெல்லாமே இந்த சிங்க்ன் குறுகிய ஆட்சியில் நடந்து முடிந்தது.

ராமர் கோவில் விசயத்தில் முரண்பாட்டுடன் இருந்த சிங்: வி.பி.சிங் இந்தியில் சொன்னது இந்த திராவிடத்துவ வாதிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார்! வி.பி.சிங்கிற்கு சிலை வைத்து, திறந்து விழா எடுத்திருக்கும் திராவிடத்துவ வாதிகளை நினைத்தால், படுகேவலமாக இருக்கிறது.  अरे भाई, वहां मस्जिद है ही कहाँ- ‘Arre bhai, wahan masjid hai hi kahan?‘  – Brother, is there a masjid there? – ‘ஏய் தம்பி, அங்கே மசூதி இருக்கிறதா? – என்றெல்லாம் பேசிய சிங், 15-08-1990 அன்று செங்கோட்டையில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று பேசிய சிங் தான், ராமரத யாத்திரையின் போது முரண்பட்டார். இதனால், பிஜேபி ஆதரவை வாபஸ் வாங்கியதால், சிங் பதவி இழக்க நேர்ந்தது.

காஷ்மீர்-தமிழம் நிலை: காஷ்மீரத்தில் விபி சிங் ஆட்சியில் எப்படி இஸ்லாமிய தீவிரவாதம் வளர்க்கப்பட்டு இந்துக்கள் பாதிக்கப்பட்டனரோ, அதேபோலத்தான் இன்றும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதே போன்ற ஒரு நிலைமை உண்டாக்கி இங்கு தமிழகத்திலும் கையாளப்பட்டு வருகிறது. அடிக்கடி முஸ்லிம்கள் தங்களது சிறை-கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்து-பழிப்பு, இந்து-வெறுப்பு, இந்து-தூஷண காரியங்களும் அதிகமாகி கொண்டே வருகின்றன. முதலமைச்சர் முதல் மற்ற அமைச்சர்கள் தொடர்ந்து இந்து மதத்தினை, பலவழிகளில் விமர்சித்து, எதிர்த்து வருகின்றனர். சனாதன ஒழிப்பு என்பது சமீபத்தில் உண்டான சர்ச்சை, அது நீதிமன்றங்கள் வரை சென்றுள்ளது. எனவே முரண்பட்ட சித்தந்திகள் இவ்வாறு ஒன்றாக வருவது நிச்சயமாக ஒரு ஸ்திரமற்றத் தன்மையை தான் காட்டுகிறது. ஒற்றுமையை காட்டுவதாக இல்லை. விளம்பரத்திற்காக வேண்டுமானாலும் இவ்வாறு பணத்தை லட்சங்களில் செலவழித்து விழாக்கள் எடுக்கலாம், சம்பந்தமே இல்லாதபடி சிலைகள் வைக்கலாம், கொண்டாடலாம், ஆனால் பொது மக்களுக்கு இவை எல்லாம் நிச்சயமாக பெரிய விஷயங்களாக இருப்பதில்லை.

© வேதபிரகாஷ்

28-11-2023.

சனாதன ஒழிப்பாளர், சிலையுடைப்பவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பது பகுத்தறிவா, பெரியாரிஸமா அல்லது திராவிடத்துவமா? (2)

நவம்பர் 28, 2023

சனாதன ஒழிப்பாளர், சிலையுடைப்பவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பது பகுத்தறிவா, பெரியாரிஸமா அல்லது திராவிடத்துவமா? (2)

வி.பி.சிங்கின் சிலை செலவு ரூ 52 லட்சமா இல்லை 31 லட்சமா?: இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைக்கப்பட்டது[1]. அதன் அடிப்படையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.31 லட்சம் மதிப்பில் தமிழக அரசின் சார்பில் புதிதாக வி.பி.சிங்கின் சிலை அமைக்கப்பட்டு உள்ளது என்கிறது இன்னொரு செய்தி[2]. 600 கிலோ எடை, சுமார் 8.5 அடி உயர பீடத்தில், 9.5 அடி உயரம் கொண்டதாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது[3]. இந்த சிலை அமைந்துள்ள கல்வெட்டில் வி.பி.சிங்கின் கருத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது[4]. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்[5]. தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் மற்றும் வி.பி.சிங் மகன் அஜய் சிங் உள்ளிட்டோர் உரையாற்றினர்[6].

வி.பி.சிங் குடும்பம் கலந்து கொண்டது: இந்த சிலையை இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்துக்கொண்டார்[8]. மேலும், வி.பி.சிங் மனைவி சீதாகுமாரி. அவருடைய மகன்கள் அஜயாசிங், அபய்சிங் ஆகியோரும் பங்கேற்றனர்[9]. இதுதவிர இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்[10]. அவ்விழாவில் சிலை திறந்து வைத்தபின்னர் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்[11], “வி.பி. சிங்கிற்கு உத்தரபிரதேசம் தாய்வீடு. தமிழ்நாடு தந்தை வீடு. தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் வி.பி. சிங் பேச்சு இருக்காது. இன்று நான் வி.பி. சிங்கிற்கு சிலை திறந்ததை விட வேறன்ன பெருமை இருக்கும்…….” என்றெல்லாம் பேசியதை கவனிக்கலாம்[12].

ஸ்டாலின் சிங்கைப் புகழ்ந்து எழுதியது: முன்னதாக இன்று காலை தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக் காட்டியவர் வி.பி.சிங். அவருடைய இந்தச் சிறப்பான முடிவின் பின்னணியில் ஊக்கசக்தியாக விளங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். சமூகநீதிக் காவலர் எனப் பெயர் பெற்ற வி.பி.சிங் ஆட்சியை, சமூக அநீதியை காலம் காலமாக ஆதரித்தும் – நிலைநாட்டியும் வரும் பா.ஜ.க. கவிழ்த்தது. ஓராண்டு கூட முழுமையாகப் பதவியில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமர்களின் வரிசையிலே நிலையான இடத்தைப் பிடித்திருப்பவர் வி.பி.சிங். அத்தகைய மாமனிதருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அன்று இளைஞரணிச் செயலாளரகவும் இன்று கழகத் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உள்ள உங்களில் ஒருவனான நான் அதனைத் திறந்து வைக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றுள்ளேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலின்இளைஞரணி மாநாட்டுக்கு வாழ்த்து: தொடர்ந்து அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு தனது வாழ்த்தினைப் பதிவு செய்துள்ளார். அதில். “ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதிக்காகவும், மாநில உரிமைக்காகவும் தேசிய முன்னணி தொடங்கப்பட்டபோது, கழகத்தின் இளைஞரணி எத்தகைய எழுச்சிமிக்க பேரணியை நடத்திக் காட்டியதோ, அதுபோல, சமூகநீதியை முற்றிலுமாக அழிக்கத் துடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறித்திடும் ஒன்றிய பா.ஜ.க அரசிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகவும் மக்களின் ஆதரவை நாடிக் கையெழுத்து இயக்கத்தையும், இரு சக்கர வாகனப் பரப்புரைப் பேரணியையும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது இன்றைய இளைஞரணி.

27-11-2023 உதயநிதி பிறந்த நாள் என்பது முக்கியமானது: சிங்கின் நினைவு நாள் உதயநிதீன் பிறந்த நாளோடு சேர்ந்து விட்டது. ஸ்டாலின் தொடர்ந்து எழுதியது, “முத்தாய்ப்பாக, டிசம்பர் 17-ஆம் நாள் சேலத்தில் ‘மாநில உரிமை மீட்பு முழக்க’த்துடன் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. இளைஞரணிச் செயலாளரும் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான தம்பி உதயநிதி இன்று தன் பிறந்தநாளில் என்னிடம் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். அவரை மட்டும் நான் வாழ்த்தவில்லை. இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என அயராது பாடுபடும் இருபத்தைந்து இலட்சம் இளைஞரணி உடன்பிறப்புகளையும் நான் வாழ்த்தி மகிழ்கிறேன்……மாநாட்டை இளைஞரணி நடத்தினாலும் கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் இதில் பங்கேற்கும் உரிமையுண்டு. இந்த மாநாடு, இன்னும் சில மாதங்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக் களம். கழகத்தினர் கூடுகின்ற பாசறைக் கூடம். அதனால்தான் நேற்று (நவம்பர் 26) நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தின் மையப் பொருளாக இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் குறித்தும், அதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.”

நான் அமைச்சர், உதயநிதி அமைச்சர்: 2007-ஆம் ஆண்டு உங்களில் ஒருவனான என் தலைமையில் இளைஞரணி செயல்பட்டபோது, அதன் வெள்ளி விழா ஆண்டையொட்டி முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இப்போது தம்பி உதயநிதி அமைச்சராக இருப்பதுபோல அப்போது நான் அமைச்சர். இப்போது நான் முதலமைச்சராக இருப்பதுபோல அப்போது தலைவர் கலைஞர் முதலமைச்சர். இளைஞரணி மாநாட்டுப் பணிகளை நான் முன்னின்று அப்போது மேற்கொண்ட போது, அதன் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, நெறிப்படுத்தி வழிநடத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதே பொறுப்புணர்வுடன்தான் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் என் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன்.

வெற்றி மாநாடு, வெற்றி விழா: கழகத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒவ்வொரு மாநாடும் வெற்றிக்கான விரைவுச்சாலை. அதில் கொள்கைப் பட்டாளம் வீறுநடைபோடும். மாநாடு தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே உடன்பிறப்புகளிடம் எழுச்சி உருவாகிவிடும். மாநாடு முடிந்து ஆறு மாதங்கள் கடந்தாலும் உத்வேகம் குறையாத களப்பணி தொடரும். எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் நம் கொள்கையுணர்வு ஒரு போதும் குறைவதில்லை. ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். கலைஞர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பெண்களின் நலன் காக்கும் திட்டங்கள் நேரடிப் பயன்களைத் தருவதால் தமிழ்நாட்டு பெண்களின் நம்பிக்கைகுரிய இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே இருக்கிறது. அதுபோல இளைஞர்களுக்கான நான் முதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, புதிய வேலைவாய்ப்புகள், மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள், விளையாட்டுப் பயிற்சிகளுக்கான ஊக்கம் இவற்றை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது.

© வேதபிரகாஷ்

28-11-2023.


[1] இ.டிவி.பாரத், ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் சென்னையில் வி.பி.சிங் சிலை: முதலமைச்சர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார்!, NOVEMBER 27, 2023, 11:41 AM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/cm-stalin-unveils-former-prime-minister-vp-singh-statue-in-chennai-presidency-college-campus/tamil-nadu20231127122116282282536

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னையில் வி.பி சிங் சிலை: அகிலேஷ் முன்னிலையில் திறந்து வைத்த ஸ்டாலின், WebDesk, Nov 27, 2023 16:50 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-speech-in-vp-singh-statue-opening-ceremony-1710634

[5] தினமணி, வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்!, By DIN  |   Published On : 27th November 2023 11:10 AM  |   Last Updated : 27th November 2023 11:22 AM

[6] https://www.dinamani.com/tamilnadu/2023/nov/27/ex-prime-minister-vp-singh-statue-opening-4112519.html

[7] தினத்தந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்அமைச்சர் மு..ஸ்டாலின்..!, நவம்பர் 27, 11:14 am.

[8] https://www.dailythanthi.com/News/State/prime-minister-m-k-stalin-inaugurated-the-statue-of-former-prime-minister-v-p-singh-1084078

[9] புதியதலைமுறை, விபி சிங் சிலை திறப்பு – “நாம் அவருக்கு காட்டவேண்டிய நன்றி முதல்வர் பெருமிதம்,  Angeshwar G,Published on : 27 Nov 2023, 1:49 pm.

[10] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/cm-stalin-speech-at-the-unveiling-of-the-statue-of-vp-singh

[11] ஹிந்துஸ்தான்.டைம்ஸ்.தமிழ், VP Singh’s statue: சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலையை திறந்து முதல்வர் செய்த சம்பவம்! ஆச்சர்யப்பட்ட அகிலேஷ்!, Kathiravan V HT Tamil, Nov 27, 2023 11:29 AM IST.

[12] https://tamil.hindustantimes.com/tamilnadu/former-prime-minister-vp-singhs-statue-inaugurated-by-cm-mk-stalin-in-chennai-attended-by-up-cm-former-akhilesh-yadav-131701064143891.html

சிலையுடைப்பவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பது பகுத்தறிவா, பெரியாரிஸமா அல்லது திராவிடத்துவமா? (1)

நவம்பர் 28, 2023

சிலையுடைப்பவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பது பகுத்தறிவா, பெரியாரிஸமா அல்லது திராவிடத்துவமா? (1)

சிலையுடைக்கும் கூட்டத்தினர் சிலைகள் வைப்பது: சிலையுடைக்கும் பெரியாரிஸ பகுத்தறிவுவாதிகள் தாம், தாங்கள் ஆட்சி-அதிகாரத்திற்கு வந்தவுடன், கடற்கரையில் வரிசையாக சிலைகள் வைத்தார்கள். பிறகு, மவுண்ட்ரோடில் சிலைகள் வைக்க ஆரம்பித்தார்கள். 1987ல் கருணாநிதி சிலை உடைக்கப் பட்ட போது, அது அமங்கலமாகக் கருதப் பட்டு, தெருக்களில் சிலை வைப்பதைக் குறைத்துக் கொண்டனர். ஆனால், அம்பேத்கர் சிலைகள் திடீரென்று அதிகமாக வைக்கப் பட்டன. அப்பொழுதே, “தமிழன் அல்லாதவருக்கு தமிழகத்தில் எதற்கு சிலை?” என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், எஸ்.சி, பட்டியல் இனம், தலித் என்ற சமரசத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு, “மணி மண்டபம்” என்று ஆரம்பித்து சிலை வைக்க ஆரம்பித்தனர்.  சில நேரங்களில், சில சிலைகள் அமங்கலமாக அல்லது தீங்கு விளைவிக்கும் என்ற குருட்டு நம்பிக்கையினையும் இந்த நாத்திக-பகுத்தறிவுவாதிகள் வளர்த்துக் கொண்டனர். கண்ணகி சிலையிலும் அந்த திராவிட-குருட்டு நம்பிக்கை வேலை செய்தது. மற்றவர்கள் தாக்கக் கூடும் என்ற நிலை உண்டான பொழுது, பதுகாப்பிற்காக, கூண்டுகள் செய்யப் பட்டு, உள்ளே சிலைகள்  இருக்குமாறு வைத்தனர்.

ஆரியர்திராவிடர் என்றோ மொழியை வைத்தோ இந்தியர்களைப் பிரிக்க முடியாது: ஆரியர்கள்-திராவிடர்கள் என்று தொடர்ந்து பேசி, வட-இந்திரர்களை ஆரியர்கள் என்றும் தென்னிந்தியர்களை திராவிடர்கள் என்றும் பிரித்து வேற்றுமையை உண்டாக்க கடந்த ஆண்டுகளில் திராவிடத்துவவாதிகள் ஈடுபட்டுள்ளனர். பிறகு கட்சி அரசியல் தேர்தல் போன்ற லாபங்களுக்காக திராவிடஸ்தானை மறந்து, மாநில சுயாட்சி என்ற இன்னொரு சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, அடிக்கடி இந்த ஆரிய-திராவிட பிரச்சனையை தூண்டி வருவ்தும் தெரிந்ததே. இந்தியை எதிர்க்கவில்லை இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம், என்றெல்லாம் பேசினாலும், தேசிய அளவில் பொதுமக்கள் போக்குவரத்து, பொருட்கள் உற்பத்தி, உபயோகம், பயன்பாடு என்றெல்லாம் வரும் பொழுது எல்லா மாநில மக்களும் – அவர்களது உழைப்பும், ஒத்துழைப்பும் மற்ற காரணிகளும் சேர்ந்து இணைந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆகையால் ஹிந்தி பேசும் மக்கள் இங்கு வரக்கூடாது என்றும் சொல்ல முடியாது. இந்த மாதிரி வெறுப்பை வளர்ப்பதினால் தான் மதராசி என்ற சொல்லாடல் இந்தி பேசும் மக்களிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை தமிழர்களை அல்லது தமிழ் பேசும் மக்களை மற்ற எந்த மாநிலத்திலும் யாரும் வித்தியாசமாக நடத்துவதில்லை. எனவே இக்காலத்தில் இத்தகைய முரண்பாடுகளை வைத்துக்கொண்டு அரசியல் நடத்துவது என்பது தகாதது.

இந்திஎதிர்ப்பாளர்கள், இந்திக்காரர்களை ஆதரிப்பது: 1950-60களில் “இந்தி ஒழிக”, என்று ஆர்பாட்டம் செய்து (பிரிவினைவாதமும் சேர்ந்தது), நேருவின் எரிச்சலையும் பெற்று திட்டு வாங்கிக் கொண்டவர்கள் தான் இந்த பகுத்தறிவுவாதிகள்[1]. “வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது” என்றும் கூச்சலிட்டனர். இவர்களை “இந்தி-எதிர்ப்புப் போராளிகள்” என்று தான் போற்றினர். பிறகு ஆட்சிக்கு வந்ததுவுடன் மத்திய அரசுடன் சுமுகமாக இருக்க, “இந்தி எதிர்ப்பு”  வேறு, “இந்தி திணிப்பு எதிர்ப்பு” வேறு என்று மாற்றிக் கொள்ள திட்டத்தை மாற்றிக் கொண்டனர். இருப்பினும், இதில் ஒன்றும் வித்தியாசம் இல்லை என்பது தெரிந்த விசயமே. “ரூப் தேரா மஸ்தானா, ப்யார் மேரா தீவானா,” [உனது உருவம் எனக்கு கிருக்கத்தை ஏற்ப்டுத்துகிறது, அதனால் நான் உன்மத்தன் ஆகி விட்டேன்[2]] என்றாகியது! 1986ல் ராஜீவ் காந்திக்கு எதிராக கருணாநிதி “இந்தி எதிர்ப்பு” செய்த ஆர்பாட்டம் வன்முறையில் முடிந்தது[3]. 2020ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், “இந்தி தெரியாது போடா” என்றெல்லாம் ஆர்பாட்டம், பிரச்சாரம் செய்தனர். இப்பொழுது, அதே இந்திக்காரர்களுடன் “ஜிகிரிதோஸ்த்” உறவு வைத்துக் கொண்டு, கூட்டணியை உருவாக்கியுள்ளனர். பிறகு, இவர்களிடமிருந்து மிகவும் மாறுபட்ட வி.பி.சிங்கிற்கு சிலை வைக்க திட்டம் போட்டு, முடித்து வைத்துள்ளனர்.

2023ல் வி.பி.சிங்கிற்கு மாநில கல்லூரி வளாகத்தில் சிலை வைத்தது: சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை 27-11-2023 அன்று (நவ.27) காலை 11.00 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்[4]. சிலை திறப்பு விழாவில் வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜயா சிங், அபய் சிங் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்[5]. உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. அவரது நினைவுநாளில் [27-11-2008] இந்நிகழ்சி ஏற்பாடு செய்யப் பட்டது[7]. 11-மாதங்கள் பிரதமராக இருந்த சிங் தமிழ்நாட்டுக்கு செய்ததை ஊடகங்கள் எடுத்துக் காட்டின. மறைந்த முன்னான பிரதமர் விபிசிங் தனது ஆட்சிக்காலத்தில், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தவர்[8]. அத்துடன் சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணாவின் பெயரையும் சூட்டினார்[9]. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி.மண்டல் தலைமையில் கமிஷன் அமைத்து, 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால், அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தினார்[10].

20-04-2023 முதல் 27-11-2023 வரை, மிகக் குறிகிய காலத்தில் வேலை செய்து சிலை வைத்த திராவிட மாடல்: சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர். வி.பி.சிங்கிற்கு சிலை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனராம்.  இந்நிலையில் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் (20.04.2023) நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சமூக நீதி காவலரான வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்[11]. 27-11-2023 அன்று சிலை திறந்து வைக்கப் பட்டது, ஆக 20-04-2023 முதல் 27-11-2023 வரை, மிகக் குறிகிய காலத்தில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது! திமுக ஆட்சியில் இது தான், வேகத்தில் நடந்து முடிந்த வேலை எனலாம். தினம்-தினம் மழை, சாலைகள் பாழ், நீர் தேக்கம், என்றெல்லாம் இருந்தாலும், இந்த விழா நடந்தே விட்டது.

© வேதபிரகாஷ்

28-11-2023.


[1]  1937, 1967 இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தேசியத்தை எதிர்த்து செய்யப் பட்ட ஆர்பாட்டங்கள் தான், ஆனால், திராவிடத்துவ வாதிகள் வேறு விதமாக விளக்கம் ளிக்கின்றனர். 

[2]  இத்தகைய காம-கொக்கோகங்களை அறிஞர்-கலைஞர் எழுத்துகளில் சுவைக்கலாம், அப்பொழுது சுவரொட்டிகளும் தென்பட்டன; நடைமுறையிலும் செயல்பட்டன.

[3] 17 நவம்பர் 1986 அன்று திமுக உறுப்பினர்கள் கல்விக்கொள்கைக்கெதிராக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியைத் தீயிலிட்டு கொளித்தனர். கருணாநிதி உட்பட 20,000 திமுக தொண்டர்கள் கைதாயினர். 21 நபர்கள் தம்மைத் தாமே கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். கருணாநிதிக்குப் பத்து வாரங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. க. அன்பழகன் உட்பட பத்து திமுக பேரவை உறுப்பினர்களை அவைத்தலைவர் பி. எச். பாண்டியன் அவையிலிருந்து வெளியேற்றினார். அதிமுகவிற்கு இடைஞல் ஏற்பட இத்தகைய வன்முறை கட்டவிழ்க்கப் பட்டது என்றும் கூறப் பட்டது.

[4] தமிழ்.இந்து, சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார், செய்திப்பிரிவு, Published : 27 Nov 2023 11:19 AM, Last Updated : 27 Nov 2023 11:19 AM.

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/1159775-cm-stalin-unveils-statue-of-vp-singh-3.html

[6] மாலைமலர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு..ஸ்டாலின், By மாலை மலர், 27 நவம்பர் 2023 11:44 AM

[7] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-inaugurated-vp-singh-statue-689986

[8] தமிழ்.நியூஸ்.18, உயர்ந்து நிற்கும் பிரம்மாண்ட வி.பி.சிங் சிலை…! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பு, FIRST PUBLISHED : NOVEMBER 27, 2023, 11:41 AM IST, LAST UPDATED : NOVEMBER 27, 2023, 11:41 AM IST.

[9] https://tamil.news18.com/tamil-nadu/chief-minister-stalin-inaugurate-the-statue-of-former-prime-minister-vp-singh-1247799.html

[10] நக்கீரன், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு, Published on 27/11/2023 (12:35) | Edited on 27/11/2023 (12:40).

[11] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ex-prime-minister-vp-singh-statue-inauguration

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (2)

ஒக்ரோபர் 21, 2022

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (2)

2019ல் கோவில் கட்டுகிறோம் என்ற செய்தி: ராசிபுரம் அருகேயுள்ள குச்சிகாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பட்டியிலின மக்கள் 10 பேர், தங்களுடைய சொந்த நிலத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்[1]. கோயில் பணிக்காக நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது[2]. இதில் தி.மு.க மற்றும் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்[3]. இதுபற்றி அப்பகுதி மக்களிடம் பேசியபோது[4], ‘2008ல் எங்கள் இனமக்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் கருணாநிதி. பல்வேறு உதவிகளை எங்கள் மக்களுக்கு செய்த அவருக்கு நன்றி தெரிவிக்கவும், அவரை போற்றுவதற்கும் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டுகிறோம். அண்ணா அறிவாலயம், கலைஞர் அறிவாலயம் போல் இந்தக் கோயில், மக்களிடைய பகுத்தறிவை எடுத்துச்செல்ல, உதவ வேண்டிய பணியை சிறப்பாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு கருணாநிதி செய்த உதவிகள் காலம் கடந்து நிற்கும். அவரது சாதனைகளைச் சொல்வதற்கு, நாங்கள் ஒரு நினைவாலயம் போல் கட்டுவது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்,” என்றனர்[5]. ரூ.30 லட்சம் மதிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கட்டப்படும் கோயிலில் கருணாநிதியின் உருவச்சிலை, பூங்கா மற்றும் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக அருந்ததியர் முன்னேற்றப் பேரவை அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்[6].

திமுக தலைவர் கொடுத்த விளக்கம்: இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதியான கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதை பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் குச்சிக்காடு கிராமத்துக்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வன் நேரில் வருகை தந்தார். அங்கே கருணாநிதிக்குக் கோயில் கட்டப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தார்[7]. இதன்பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “குச்சிக்காடு கிராம மக்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்டவில்லை. இங்கே பகுத்தறிவாலயம்தான் எழுப்பப்படுகிறது. நினைவிடத்தில் இருப்பது போலவே கருணாநிதியின் சிலை இருக்கும். மேலும் போட்டித் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில்  இணைய வசதியும்கூடிய நூலகமும் அமைக்கப்பட உள்ளது. கணினி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது,” என்று காந்திச்செல்வன் தெரிவித்தார்[8]. 2019ல் இவ்வாறு எல்லாம் சப்பைக் கட்டினாலும், 2022 வரை ஒன்றும் நடக்கவில்லை போலும். ஏனெனில், 2022ல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

2022ல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது குச்சிகாடு என்ற கிராமம். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது[9]. கலைஞர் பகுத்தறிவு ஆலயம் என்று பெயரிடப்பட்ட இந்த கோவிலுக்கு பேரரூராட்சி துணை தலைவர் நல்லதம்பி என்பவர் தன்னுடைய நிலத்தை இலவசமாக கொடுத்து உள்ளார்[10]. மேலும், இவ்வூரை சேர்ந்த அரசு ஊழியர்கள் கலைஞர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டள்ளனர்[11]. இந்த நிலையில் பூமிபூஜை செய்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கோவில் கட்டும் பணி பாதியிலேயே நின்று உள்ளது[12]. குச்சிகாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோவில் கட்டும் பணியில் ஆர்வம் காட்டிய போதிலும் மேற்கொண்டு ஆதரவு கிடைக்காததால் கோவில் பணி பாதியிலேயே நின்றுள்ளது. தற்போது பாதியில் நிற்கும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இவ்வூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிறகு, 2019-2022 காலகட்டத்தில் என்ன நடந்தது, கோவில் கட்டமுடியாமல் யார் தடுத்தது, அதற்கு யார் காரணம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

2010ல் கருணாநிதிக்கு கோவில் கட்ட திட்டம் போட்ட ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி: முதல்வர் கருணாநிதி பெயரில் செம்மொழி விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவரது பெயரில் வீட்டு வசதித் திட்டம், உயிர் காப்பீட்டுத்திட்டம் ஆகியவை உள்ளன. முதல்வர் பெயரில் டிவி சானலும் கூட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் பெயரில் ஒரு கோவில் வரவுள்ளது வேலூரில். வேலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருக்கும் ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திதான் இந்தக் கோவிலை கட்ட முனைந்துள்ளார்[13]. முதல்வர் கருணாநிதியின் ஏழை மக்கள் நலத் திட்டங்களால் கவரப்பட்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்[14]. இந்தக் கோவிலுக்கு கலைஞர் திருக்கோவில் என அவர் பெயரிட்டுள்ளார். குடியாத்தம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சாமிரெட்டிப்பள்ளி கிராமத்தில் இந்தக் கோவில் வருகிறது.ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக்கோவில் உருவாகிறது. கிரானைட்டால் ஆன முதல்வர் கருணாநிதியின் சிலை இங்கு வைக்கப்படுகிறது. வெளியில் உள்ள தூண்களில் மு.க.ஸ்லாடின், துரைமுருகன், மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தியின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கிருஷ்ணூ்ர்த்தி கூறுகையில், முதல்வர் கருணாநிதி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எனது கிராமத்தில் மட்டும் 13 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரை தாங்கள் கடவுள் போல கருதுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்தே எனக்கு கோவில் கட்டும் ஐடியா வந்தது என்றார்.

2010 அக்கோவில் இடிக்கப் பட்டது: அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடித்தனராம்: இந்நிலையில், குடியாத்தத்தைச் சேர்ந்த வருவாய்த் துறையினர் 02-07-2010 அன்று காலை 10 மணிக்கு கோவில் இருந்த இடத்துக்கு வந்து மார்பளவு இருந்த கருணாநிதியின் சிலையை அகற்றினர்[15]. மேலும், கோவிலின் முகப்புத் தோற்றம் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றினர்[16]. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்து காரணம் கேட்ட போது, “அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்’ என, கூறினர்[17]. இங்குதான் விவகாரம் இருக்கும் போலிருக்கிறது. சமீபத்தில், “அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்”, என்று பெரும்பாலும் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன[18]. இதை திசைத் திருப்ப, ஒருவேளை கருணாநிதி, இப்படியொரு யுக்தியைக் கையாண்டாரா என்று தெரியவில்லை. நாளைக்கு சொல்வார், “பார் எனக்குக் கட்டிய கோவிலையே, நான் இடிக்க ஆணையிட்டு விட்டேன்”, என்று பீழ்த்திக் கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

20-10-2022.


[1] விகடன், `3% இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் அவர்!’- கருணாநிதிக்கு கோயில் கட்டும் கிராம மக்கள், ர.ரகுபதி, Published:26 Aug 2019 6 PMUpdated:26 Aug 2019 6 PM

[2] https://www.vikatan.com/news/tamilnadu/rasipuram-village-people-to-construct-temple-for-karunanidhi

[3] தமிழ்.சமயம், ராசிபுரம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டுவிழா!, Samayam TamilUpdated: 26 Aug 2019, 12:09 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/villagers-to-build-temple-for-dmk-leader-karunanidhi-near-rasipuram/articleshow/70837912.cms

[5] தமிழ்.இந்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில்: ராசிபுரம் அருகே அடிக்கல் நாட்டு விழா,  செய்திப்பிரிவு, Published : 26 Aug 2019 07:59 AM’ Last Updated : 26 Aug 2019 07:59 AM

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/512919-temple-for-karunanidhi.html

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கருணாநிதிக்குக் கட்டுவது பகுத்தறிவாலயமாம்கோயில் இல்லை என திமுக மா.செ. அறிவிப்பு,  Asianet Tamil, Rasipuram, First Published Aug 31, 2019, 8:53 AM IST ,  Last Updated Sep 6, 2019, 10:54 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/temple-of-karunanidhi-bulid-in-rasipuram-px303z

[9] தினத்தந்தி, முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதிக்கு கோவில்வியப்பில் ஆழ்த்திய ஊர் மக்கள்…! , ஆகஸ்ட் 7, 12:52 pm (Updated: ஆகஸ்ட் 7, 12:52 pm).

[10] https://www.dailythanthi.com/News/State/former-chief-minister-karunanidhis-temple-amazed-town-people-763645

[11] தமிழ்.வெப்.துனியா, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்! – எந்த ஊரில் தெரியுமா?, Written By Prasanth Karthick, Last Modified, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (13:37 IST).

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/peoples-build-a-temple-for-former-cm-karunanithi-122080700031_1.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, கருணாநிதிக்கு கோவில் கட்டும் வேலூர் திமுக கவுன்சிலர், By Sutha Published: Thursday, July 1, 2010, 14:39 [IST]

[14] https://tamil.oneindia.com/news/2010/07/01/dmk-councillor-karunanidhi-temple.html?story=2

[15] தினமலர், முதல்வருக்கு கட்டிய கோவில் அகற்றம், Added : ஜூலை 03, 2010  01:22 |

[16] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=31199

[17] வேதபிரகாஷ், கருணாநிதிக்கு கோயில் கட்டியுள்ள கவுன்சிலர், 01-07-2010.

[18]https://rationalisterrorism.wordpress.com/2010/07/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/

நாத்திகர்கள், திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகள் வள்ளலாரைப் பிடித்துக் கொள்வதேன்? மாமிசம் சாப்பிட்டுக் கொண்டு, சாராயம் குடித்துக் கொண்டு சன்மார்க்கம் பேச முடியுமா? (1)

ஒக்ரோபர் 29, 2021

நாத்திகர்கள், திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகள் வள்ளலாரைப் பிடித்துக் கொள்வதேன்? மாமிசம் சாப்பிட்டுக் கொண்டு, சாராயம் குடித்துக் கொண்டு சன்மார்க்கம் பேச முடியுமா? (1)

புதிய ஆட்சி நடக்கிறதா, விளம்பரங்கள் மூலம் ஓடுகிறதா?: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினம்-தினம் அறிக்கைகள், திட்டங்கள், பணி நியமனங்கள், ஆணைகள், விழாக்கள், புகைப் படங்கள், செய்திகள், முதலமைச்சர்-அமைச்சர்கள் அதிரடி விசிட்டுகள்-விஜயங்கள், தொலைக் காட்சிகளில் வாத-விவாதங்கள்…..இப்படி 100 நாட்கள், 150 நாட்கள் என்று ஓடுகின்றன, சுவரொட்டிகள் ஒட்டப் படுகின்றன, விளம்பரங்கள் கொடுக்கப் படுகின்றன, நாங்கள் தான் நம்பர்.1 என்று கணிப்புகள் வருகின்றன. இடையிடையே, நீதிமன்ற வழக்குகள், தற்காலிக தடை, ஒத்தி வைப்பு, தள்ளி வைப்பு, தள்ளுபடி, …….பிறகு அமைதியான நிலை. எல்லாம் சரி, உண்மையில், இயல்பு வாழ்க்கையில், நிதர்சனத்தில் என்ன நடக்கிறது?  மக்கள் என்ன சினிமாவா பார்த்துக் கொண்டிருக்கின்றனர்? சாதாரண மக்கள் உழைக்கத்தான் வேண்டும், சம்பாதிக்க வேண்டும், பொருட்களை வாங்கத்தான் வேண்டும். அப்பொழுது தான் உலை எரியும், சாப்பாடு கிடைக்கும், குடும்பம் நடக்கும்! அவர்கள் ஆட்சியாளர்கள் போல படம் காட்டிக் கொண்டிருக்க முடியாது.

நாத்திகர்கள் கைகளில் வள்ளலார் படும் பாடு: நக்கீரன் நாரதராக ஆறியதை விட ஜோக்கராக, எட்டப்பனாக, அரைகுறை ஆதாரங்களுடன் கட்டுக் கதைகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கி வருவது தெரிகிறது. தமிழக மக்களுக்கு, விருவிருப்பாக, பரபரப்பாக, அதிரடியாக, ஆபாசம், விரசம், கொச்சைத்தனம், கொலை, கொள்ளை என்றெல்லாம் வரும் செய்திகள், படங்கள், வீடியோக்கள் என்றால் ஜாலியோ ஜாலிதான். கேட்டுக் கொண்டே, பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அத்தகையோர் இன்று தமிழக பாடதிட்டத்திற்கும் தலைவராக, உறுப்பினராக வது விட்டனர். ஆக, ராமலிங்கம், இராமலிங்க அடிகள், வள்ளலார், என்ன பாடு படப் போகிறார் என்பதனை அறிந்து கொள்ளலாம். நக்கீரன், “வடலூரில் சுத்த சன் மார்க்க நெறிகளுக்கு இடையூறு வராமல், தமிழக அரசு நெறிப் படுத்த வேண்டும்என்ற குரல், பக்தர்கள் தரப்பிலிருந்து பலமாக எழுந்துவருகிறது[1]. மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கொடி பிடித்த ஆன்மிகப் புரட்சியாளராக வடலூர் வள்ளலாரை முற்போக்கு உலகம் போற்றிவருகிறது[2]. சாதி மத பேதங்களுக்கு எதிராகக் கொடி பிடித்த ஆன்மீகப் புரட்சியாளராக வடலூர் வள்ளலாரை முற்போக்கு உடலகம் போற்றி வருகிறது,” என்ற பீடிகையோடு, தனது வேலையை ஆரம்பித்துள்ளது. 24-03-2010 தீர்ப்பினைக் குறிப்பிட்டு, “பார்ப்பன எதிர்ப்பைச்” சேர்த்து, ஜோதி வழிபடு மட்டும் நடத்தப் பட வேண்டும் என்று இழுத்து முடித்துள்ளது.

72 ஏக்கர் பரப்பளவில், கோடிக்கணக்கில் செலவுடன் சர்வதேச மையம்: வடலூரில் உள்ள சத்திய ஞான சபை வளாகத்தில் சர்வதேச வள்ளலார் மையம் அமைப்பதற்காக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் ஜூன் 2021ல் வடலூர் வந்து ஆய்வு செய்தனர்[3]. பின்னர் அவர்  சத்திய ஞானசபை, தர்மசாலை, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்[4]. அதன்பிறகு சர்வதேச மைய அமைப்பதற்கான திட்ட வரைபடத்தை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில்[5], விரைவில் டெண்டர் கோரப்பட்டு, 72 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச மையமாக தொடங்குவதற்கான திட்ட மதிப்பீடு உலக அளவில் கோரப்பட்டு முடிவு செய்யப்பட்டு வெகு விரைவில் சர்வதேச மைய பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்[6].  அதோடு, சென்னை ஏழுகிணறு இராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீடு அரசு சார்பில் சீரமைக்கப்பட்டு அமைக்கப்பட்டு, மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்ஜீனியர்  சிவக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள், சன்மார்க்க ஆர்வலர்கள் உடனிருந்தனர்[7].

திட்ட வரைபடம், திட்ட மதிப்பீடு, உலக அளவில் டெண்டர், 72 ஏக்கர் நிலம், கோடிக்கணக்கில் செலவு முதலியன: அயோத்திதாசருக்கு மணிமண்டபம், கருணாநிதிக்கு அதே இடத்தில் சிலை, பெரியாருக்கு ரூ 100 கோடிகளில் சிலை, என்றெல்லாம் ஆரம்பித்து “சர்வதேச மையம்,” ஏழுகிண்று வீடு என்று முடிந்துள்ளது. எல்லாமே தயாரக வைத்துக் கொண்டு, பார்வையிடுவது என்பது, திட்டமிட்டே செய்வது தெரிகிறது. திட்ட வரைபடம், திட்ட மதிப்பீடு, உலக அளவில் டெண்டர், 72 ஏக்கர் நிலம், கோடிக்கணக்கில் செலவு என்பதெல்லாம், “அல்லாவுத்தீனும் அற்புத விளக்கும் பாணியில் ஜீ பூம்பா,” அல்லது “கதவைத் திறந்திடு சீஸே” என்று வந்து விடாது. 11-06-2021 அன்று ஆணையிடப் படுகின்றது என்றால், முன்னமே தயாராகி, தயாராக உள்ளார்கள் என்று தெரிகிறது. இதன் மூலம், எத்தனை கான்ட்ராக்டர்கள், கம்பெனிகள், முதலாளிகள் பலன் பெறப் போகிறார்கள் என்பதை, “அரும்பெறும் ஜோதியே” வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். “தனிபெரும் கருணை”யுடன் தான் எல்லோருக்கும் ஆர்டர்கள் கொடுக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும். உலக டென்டர், உலக உதவி என்றெல்லாம் இருக்கும் போது, அவற்றின் பின்னணி முதலியவை இனிமேல் தான் தெரியவரும். கிருத்துவர்-துலுக்கர் முதலியோரின் ஆதிக்கம் இருக்கும். ராமலிங்கர் காலத்திலேயே இருந்த போது, இபொழுது இருப்பதில் ஆச்சரியமில்லை. வள்ளலார் வணிக சின்னமாகிறது, வியாபாரமயமாக்கப் படுகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

வள்ளலார் புத்தமதத்தைப் பின்பற்றச் சொன்னாரா?: ஓய்வு பெற்ற நீதிபதி, சந்துரு புத்தமதத்தைப் பின்பற்றும்படி மறைமுகமாக மக்களை வேண்டியுள்ளார் என்பதே அக்கருத்தாகும் என்று எடுத்துக் காட்டியுள்ளது திக பத்திரிக்கை[8]. இதற்குச் சான்றாக,

‘சாக்கிய வேதந் தேக்கிய பாதம்

தாக்கிய ஏதம் போக்கிய பாதம்’

‘புத்தந்தரும் போதா வித்தத்தருந் தாதா

நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா;

என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை முன் வைக்கிறார் என்றும் விளக்குகிறது[9]. ஓய்வு பெற்ற பிறகு இவர் தனது மார்க்சீய-திராவிடத்துவக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்[10]. சம்பந்தார் சாக்கியர்களை கடுமையாகத் தாக்கியுள்ளபோது, இவர் பௌத்தத்தை ஆதரித்தார் என்பது முரண்பாடானது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் “சைவசித்தாந்தத்” துறைத் தலைவர், சைவர்கள் இந்துக்கள் இல்லை என்று வெளிப்படையாக பேசி, உலக மாநாட்டையும் நடத்தியுள்ளார். இனி, வள்ளலார் கூட்டங்களும் அதே போல நாங்கள் இந்துக்கள் இல்லை என்று அறிவிக்கலாம், மைனாரிட்டி ஸ்டேடஸ் கூட கேட்கலாம்.

உலகத்தில் இருக்கும் நிறுவனங்கள் உதவ முன்வருவது: பசிப்பிணி போக்கிய வள்ளலார் பெருமானின் பெயரில் அமைய உள்ள இந்த சர்வதேச மையத்திற்கு ஹலோ ஒத்துழைப்பை நல்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயங்கிவரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை, வடலூர் தலைமைச் சங்கம், தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள சன்மார்க்க சங்கங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள சன்மார்க்க சங்கங்கள் கூட்டமைப்புகள் அனைத்தும் இணைந்து வள்ளலார் சர்வதேச மையத்திற்கு தேவையான பொருள் உதவியை வழங்க முடிவு செய்துள்ளனர்[11]. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளிடம் நிதியினை திரட்டித் தரவும் ஏற்பாடு செய்து வருகின்றன[12]. அரசு காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றி இந்த சர்வதேச மையமும் அதைச் சார்ந்த பணிகளையும் முழு ஈடுபாட்டோடு செய்வதற்கு சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர். உலகின் மிகப்பெரிய புரட்சியாளர்களில் ஒருவரான வள்ளல் பெருமானின் பெயரில் அமைய உள்ள இந்த சர்வதேச மையம் தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையும், சன்மார்க்கக் கொள்கைகளை உலகம் கொண்டு செல்லவும் இந்த சர்வதேச மையம் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

© வேதபிரகாஷ்

29-10-2021


[1] நக்கீரன், வள்ளலார் பக்தர்கள் கோரிக்கை நிறைவேறுமா? –அரசு உருவாக்கும் சர்வதேச மையம்!, Published on 27/10/2021 (04:12) | Edited on 27/10/2021 (09:55).

[2] https://www.nakkheeran.in/nakkheeran/will-request-vallalar-devotees-be-fulfilled/will-request-vallalar-devotees-be-fulfilled

[3] தினத்தந்தி, வடலூர் சத்திய ஞானசபையில்சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்அமைச்சர் சேகர்பாபு தகவல், ஜூன் 11, 10:39 PM.

[4] https://www.dailythanthi.com/amp/News/Districts/2021/06/11223919/The-task-of-setting-up-an-international

[5] NEWS18 TAMIL, சர்வதேச மையமாகும் வள்ளலார் சத்திய ஞான சபை: பணிகள் விரைவில் தொடங்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தகவல், LAST UPDATED : JUNE 13, 2021, 14:19 IST.

[6] https://tamil.news18.com/news/tamil-nadu/cuddalore-district-cuddalore-vadallur-vallalar-sathiya-gnana-shaba-will-change-into-international-centre-soon-says-dmk-sekarbabu-mur-481343.html

-center.vpf

[7] கடலூர் மாவட்டம், செ.வெ.எண்.19 நாள்: 11-06-2021, https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2021/06/2021061476.pdf

[8] உண்மை, பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முடித்த வழக்கின் தீர்ப்பு, பிப்ரவரி 16-28, 2015.

[9] http://www.unmaionline.com/index.php/2015-magazine/133-febraury-16-28/2446-finishing-brahmin-cultural-invasion-case-hearing.html

[10]  சிபிஎம் கட்சியின் உறுப்பினர், கம்யூனிஸ்ட் மாணவ இயக்கத்தின் தலைவர், என். ராமின் கல்லூரி தோழர். ஶ்ரீரங்கத்தில் பிறந்த இவரது குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருக்கின்றன. சிலைத் திருட்டு விவகாரத்தில் அர்ச்சகர்கள் ஏன் கைது செய்யப் படவில்லை என்று கேள்வி எழுப்பியவர். அப்படியென்றால் பொறுப்புள்ள அறநிலையத்துறை அமைச்சர், முதலமைச்சர் என்று எல்லோருமே கைது செய்யப் படலாமே?

[11] மக்கள் குரல், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்: தமிழக அரசுக்கு சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நன்றி, Posted on July 19, 2021

[12]https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87/

பெரியாரைத் தூஷித்ததால் சீதைமைந்தன் மீது புகார், கைது இத்யாதி! ஆனால், இந்து தூஷணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

ஒக்ரோபர் 16, 2021

பெரியாரைத் தூஷித்ததால் சீதைமைந்தன் மீது புகார், கைது இத்யாதி! ஆனால், இந்து தூஷணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

ஈவேரா அல்லது பெரியாரின் மீது தூஷணமா?: இதுவரை தமிழகத்தில், ஈவேரா, பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் போன்றோர் இந்துமதம், கடவுளர், நம்பிக்கை, முதலியவற்றைப் பற்றி அவதூறாகப் பேசிவந்ததது, புத்தகங்கள் போட்டது, அவை இன்றும் புழக்கத்தில் உள்ளது முதலியவை அறியப் பட்டுள்ளது. அவற்றைப் பற்றி ஆராய்ந்தால், அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்ற கேள்வி எழும். பிறகு, அவர்களின் பேச்சுகளை-எழுத்துகளை புத்தகங்களாகப் போட்டு, விற்று விநியோகிக்கும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகம், பெரியார் திராவிடக் கழகம், போன்ற பதிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுதும், இது இந்துவிரோத மற்றும் இந்திய தேசவிரோத சக்திகளின் உட்பூசலே தவிர உண்மையில் அவர்கள் ஒன்றும் விடாமல் சட்டப் படி நடவடிக்கை எடுத்து, மூன்றாண்டு-ஐந்தாண்டுகள் சிறையில் தள்ளப் போவதில்லை. அப்படி செய்தால், செய்திருந்தால், 90& அத்தகைய திராவிடத்துவ, தமிழ்தேசிய மற்ற வகையறாக்கள் சிறையில் தான் இருந்திருப்பர். சிறைத் தண்டன பெற்றவர்கள் மாறியிருப்பர். அதனால், இப்பொழுது ஒருவர் ஈவேராவை-பெரியாரை தூஷித்ததால் கைது செய்யப் பட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது.

பெரியார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக ழகரம் வாய்ஸ் யூடியூப்: பெரியார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலின் தட்சிணாமூர்த்த்தியை போலீசார் 15-10-2021, வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர்[1]. அன்றே, சில டிவிசெனல்களில் இச்செய்தியை வெளிட்டாலும் விவரங்கள் கொடுக்கப் படவில்லை. அதாவது, அதன் மூலம், அந்த விமர்சனங்களை மக்கள் அறியக் கூடாது என்று அமுக்கி வாசித்தனர் என்று தெரிகிறது. ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனல் தொடந்து அரசியல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளது[2]. இந்த யூடியூப் சேனலை சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி நடத்தி வருகிறார்[3]. இந்த நிலையில், ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் அக்டோபர் 11ம் தேதி 11-10-2021 அன்று பெரியார் குறித்து ஒரு வீடியோ வெளியானது[4]. அதில், பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்[5].

தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் புகார் கொடுத்தது: இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் என்பவர் அளித்த புகாரில்[6], “காலமெல்லாம் தமிழ் மக்களுக்காக உழைத்த தந்தை பெரியாரையும், நான் சார்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் அவர்களையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவு படுத்தி, தட்சிணாமூர்த்தி என்பவர் மிகவும் கீழ் தரமாக பேசியுள்ளார், தந்தை பெரியார் விபச்சாரம் செய்தார் என தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இந்த செயல் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுகிற என்னைப் போன்ற பெரியார் தொண்டர்களை மிகவும் கவலையடைய செய்துள்ளது. மேலும், முடிந்தால் தன் மீது வழக்கு தொடுத்து பார் என வீடியோவில் தட்சிணாமூர்த்தி சவால் விடுத்துள்ளார். இதுபோன்ற பேச்சுக்கள் அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாட்டில் மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் சூழலுக்கு வழிவகுக்கிறது.

திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் ஏன் புகார் கொடுக்கவில்லை?: இங்கு திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் ஏன் புகார் கொடுக்கவில்லை என்பது நோக்கத் தக்கது. ஏனெனில், உண்மையிலேயே பாதிப்பு ஏற்படும் என்றால் அவர்களுக்குத் தான் என்று நன்றாகத் தெரியும். பிறகு தந்தை பெரியார் திராவிட கழக ஏன் முந்திக் கொள்கிறது அல்லது பெரியார் பிராண்டிற்கு பாடுபடுகிறது என்று தெரியவில்லை. அயோத்தியா மண்டபத்து அப்பவி பார்ப்பனர்களை வெட்டியது முதல், பன்றிக்கு பூணூல் போட்டது வரை இந்த தந்தை பெரியார் திராவிட கழக தான் செய்து வருகிறது. இதனால், திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் கே.வீரமணி போன்றோர் இந்துக்களுக்கு உதவுகின்றனர் என்றாகாது. இது எதோ இவர்களுக்குள் உள்ள ஒப்பந்தம் போலே தோன்றுகிறது. சுப.வீரப் பாண்டியனும், திராவிடர் கழகத்தில் இல்லை, ஆனால், ஒத்து ஊதும் போது, இந்துக்களைத் தாக்கும் போது, ஒன்று படுகின்றனர். விடுதலை ராஜேந்திரனும் அமைதியாக அதே வேலையைச் செய்து வருவது கவனிக்கத் தக்கது.

திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் நோக்கு உள்ளதா?: தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை மிக மிக கீழ்த்தரமாக ஆபாசமாக விமர்சிக்கின்ற சீதையின் மைந்தன் என்கிற அந்த நபர் ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் கடந்த 11/10/21 தேதியன்று பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் நோக்கில் இவர் பேசி உள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது, ஆகவே அய்யா அவர்கள் இவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[7]. இந்த புகாரின் பேரில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி மீது போலீசார் 153A, 504B, 505 (1) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்[8]. இதையடுத்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். விசாரணையில் தட்சிணமூர்த்தி இதேபோல் மூன்று யூ-ட்யூப் சேனலை நடத்திவந்ததும், கச்சத்தீவு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவருவது தெரியவந்தது[9]. இதனையடுத்து தட்சிணமூர்த்தி பெரியார் குறித்து பேசிய காணொலியை சைபர் கிரைம் காவல் துறையினர் சேனலிலிருந்து நீக்கினர்[10]. இவரிடம் காவல் துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றது.

இபிகோ 153A, 504B, 505 (1) ஆகிய 3 பிரிவுகள் சொல்வது என்ன?: இபிகோ  153Aன்படி –

1. (a) பேச்சாலோ, எழுதாலோ அல்லது சைகையாலோ மத, இன, மொழி சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்வது குற்றமாகும்.

(b) அத்தகைய விரோத உணர்ச்சிகளால் போது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதும் குற்றமாகும்.

(c) குற்றம் என்று கருதக்கூடிய வன்முறை அல்லது வன்செயலை பயன்படுத்தும் கருத்துடன் அல்லது பயன்படுத்த பயிச்சி அளிக்கும் கருத்துடன் அல்லது சாதி, சமூகம், இனம், மதம், மொழி அல்லது வட்டாரக் குழு எதற்கும் விரோதமான வன்முறை அல்லது வன்செயலை பயன்படுத்தக்கூடிய பயிற்சி இயக்கம் உடற்பயிற்சி அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் பங்கு பெறுவோர் அநேகமாக பயன்படுத்த பயிற்சி அளிக்கக்கூடிய நடவடிக்கையாக அவை இருக்கின்றன என்று அறிந்தும் அவற்றில் பங்குபெறுவதும் பயிற்சி வேலையில் ஈடுபடுவதும் குற்றமாகும்.

அத்தகைய ஜாதி, சமூகம், இனம், மதம், மொழி அல்லது வட்டார குழுவினருக்கு அச்சத்தை அல்லது பீதியை அல்லது பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை அத்தகைய நடவடிக்கைகள் எந்த காரணம் கொண்டு உண்டாகின்றன. அல்லது உண்டாக்கக் கூடும் என்று அறிந்தும் அதில் பங்கு பெறுவோர் குற்றம் புரிந்தவர் ஆவார்.

இந்த குற்றத்திற்கு தண்டனையாக 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் சிறைக்காவலுடன் கூடிய அபராதங்கள் விதிக்கப்படும்.

2. மேலே விவரிக்கப்பட்டுள்ள குற்றத்தின் வழிபாடு நடைபெறும் இடத்தில் செய்வது குற்றம், மத வழிபாட்டுக்கு ஆன மக்கள் கூடியிருக்கும் அரங்கிலும் அந்த குற்றத்தினை புரிய கொடுத்தது. அப்படி புரிந்தால் அதற்காக 5 ஆண்டுகள் வரை சிறைக் காவலும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி முதலானவற்றின் அடிப்படைகளில் வெவ்வேறு வகுப்புகளிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிலக்கணப் பேணலுக்கு பாதகமான செயல்களைச் செய்தல்

(1) எவரேனும் :-

(a).பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தல்களால் அல்லது மற்றபடியாக, மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி, ஜாதி அல்லது பிரிவு அல்லது எந்தவிதமான ஏதாவதொரு பிற அடிப்படையில், வெவ்வேறான மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்புகள் அல்லது ஜாதிகள் அல்லது பிரிவுகளிடையே ஒற்றுமையின்மை அல்லது பகைமை உணர்வுகள், வெறுப்பு அல்லது மனக்கசப்பை ஊக்குவித்தால் அல்லது ஊக்குவிப்பதற்கு முயன்றால் அல்லது

(b). எந்தஒரு செயல், வெவ்வேறான மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்புகள் அல்லது ஜாதிகள் அல்லது பிரிவுகளிடையே நல்லிலக்கணத்தைப் பேணுவதற்குப் பாதகமாக இருக்கிறதோ, மற்றும் எந்தவொரு செயல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறதோ, அல்லது அநேகமாக விளைவிக்குமோ, அந்தவொரு செயலைப் புரிந்தால், அல்லது

(c) ஏதாவதொரு பயிற்சி, இயக்கம், படைப் பயிற்சி அல்லது பிற ஒத்த செய்கையை, அத்தகைய செய்கையில் பங்குபெறுவோர்கள் குற்றமுறு பலப்பிரயோகம் அல்லது வன்முறையைப் பயன்படுத்த அல்லது அநேகமாக பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்ட, அல்லது அத்தகைய செய்கையில் பங்குபெறுவோர்கள் குற்றமுறு பலப்பிரயோகத்தை அல்லது வன்முறையை பயன்படுத்துவார்கள் அல்லது அநேகமாக பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்படுவார்கள் என்று தெரிந்தே, ஏதாவதொரு மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவுக்கு எதிராக மற்றும் அத்தகைய செய்கை ஏதாவதொரு எந்தவிதமான காரணத்திற்க்காகவும், அத்தகைய மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவிற்கு இடையில் பயம் அல்லது பீதி அல்லது பாதுகாப்பற்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதற்கு அல்லது அநேகமாக ஏற்படுத்தலாமென்ற, ஏற்பாடு செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

அப்படி பார்த்தால், மேலே குறிப்பிட்டப் படி, அந்த நபர்களின் பேச்சுகள், வார்த்தைகள், எழுத்துகள், புத்தகங்கள் இன்றளவிலும் அத்தகைய குற்றங்களை செய்து கொண்டு தான் வருகின்றன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

© வேதபிரகாஷ்

16-10-2021


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், பெரியார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது!, Written By WebDesk, Updated: October 16, 2021 1:22:52 am

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/youtuber-arrested-for-derogatory-video-released-on-periyar-356213/

[3] டாப்.தமிழ்.நியூஸ், பெரியார் விபச்சாரம் செய்தாரா? என யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தவர் கைது!,  By AISHWARYA G , Fri, 15 Oct 20219:22:41 PM

[4] https://www.toptamilnews.com/thamizhagam/youtuber-arrested-for-commands-about-periyar/cid5537412.htm

[5] தினகரன், ழகரம் வாய்ஸ் என்ற யூட்டியூப் சேனலை நடத்தி வரும் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி கைது, 2021-10-15@ 19:09:01.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=712620

[7] தினத்தந்தி, பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுயூடியூபர் தட்சிணாமூர்த்தி கைது, Uploaded on 16/10/2021.

[8] https://www.youtube.com/watch?v=kl_2s7LxAbU

[9] ஈ.டிவி.பாரத், பெரியார் குறித்து அவதூறு: யூட்யூபர் கைது, Published on: 16-10-2021 7.00 hours.

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/youtuber-arrested-in-chennai-for-slandering-father-periyar/tamil-nadu20211016065810895

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

செப்ரெம்பர் 22, 2021

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

பெரியார் உலகம்சுற்றுலா தலம்நிச்சயமாக வியாபாரத்திற்கு வித்திட்டதே: பெரியார் பெயரைச் சொல்லி, திருச்சி-ஹைவேயில், இந்த பெரிய வணிக வளாகத்தைக் கட்டத் தீர்மானித்திருப்பது, நிச்சயமாக வியாபாரத்திற்குத் தான். ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது[1]. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன். இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம். இதனால், அருகில் உள்ள ஓட்டல்களுக்கு கூட்டம் குறையும். அவர்கள் கவலைப் படுவார்கள். ஆக, பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இங்கு சென்றால், பலன் கிடைக்காது என்று யாராவது கிளப்பி விட்டால்[2], ஒருவேளை இந்த நாத்திக வளாகத்தின் முக்கியத்துவம் குறையலாம். ஆனால், மற்றவர்கள் வரத்தான் செய்வார்கள்.

நாத்திக ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!: புரட்டாசி மாதம் ஆரம்பித்தாகி விட்டது, சும்மா இருப்பார்களா, பெருமாள் கோவில் கொள்ளை நடந்துள்ளது! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழாமூர் கிராமத்தில் உள்ள கைகொடுக்கும் பெருமாள் உள்ளது. இக்கோயிலில் 18-09-2021 அன்று புரட்டாசி மாத முதல் சனி என்பதால் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் வழக்கம்போல் இரவு கோயிலை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில், இரவு கோவிலின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், மூன்றடி உயரம் உள்ள மூலவர் பெருமாள் கல் சிலையை திருடிச்சென்றுள்ளனர்[3]. 19-09-2021 அன்று பிற்பகலில் அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் மூலவர் சிலை மாயமாகி உள்ளதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக பெருமாள் விக்கிரகம் (மூன்றடி உயரம்), நகைகள் கொள்ளை,..எனும்பொழுது, திராவிட ஔரங்கசீப்புகள், மாலிகாபூர்கள் கிளம்பி விட்டனர்! ஒரு பக்கம் சிலை வைக்கிறோம் என்கிறார்கள், இன்னொரு பக்கம் சிலைகள் மாயமாகின்றன.

வெங்கடாஜலபதி விசயத்தில் இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்துர்கா தம்பதியர்: 95 அடி உயரத்திற்கு சிலை உடைத்தவனுக்கு சிலை வைப்போம் என்கின்றனர், ஆனால், மூன்றடி வெங்கடாஜபதி சிலை திருடு போயுள்ளது. வேங்கட ராமசாமி நாயக்கருக்குக்கு சிலை வைக்கும் நாத்திக-இந்துவிரோதிகளுக்கு, வேங்கடாஜலபதி மீது ஏன் போர் என்று தெரியவில்லை! இந்த அழகில், மனைவி திருமலைக்கு சென்று கும்பிடு போடுவதும், திருமலை அர்ச்சகர்கள் கணவன் வீட்டிற்கு வந்து, தம்பதியரை வாழ்த்தி, மாலை போட்டு, கயிறு கட்டி விடுவதும் என்ன என்று தெரியவில்லை! இவற்றைப் பற்றி வீடியோ, புகைப் படங்கள் என்று அமர்க்களப் படுகின்றன. ஆனால், இத்தகைய விசயங்களில், ஸ்டாலின்-துர்கா தம்பதியர் இரட்டை வேடம் போடுகின்றனர் என்றாகிறது. புருஷன்-நாத்திகன், பெண்டாட்டி-ஆத்திகன் என்று இருந்தால், அந்த திருமலை அர்ச்சகர்களை உள்ளே விட்டிருக்கக் கூடாது, மந்திரங்கள் சொல்ல அனுமதித்து இருக்கக் கூடாது, கயிறு கட்டுதல், போன்றவை நடந்திருக்கக் கூடாது. துர்கா, தனது கணவரிடம், “எதுக்குங்க இப்படியெல்லாம் நடக்கிறது, நீங்கள் கொஞ்சம் நடவடிக்கை எடுக்கக் கூடாதா?,” என்று கேட்கலாம், ஆனால், அவ்வாறு செய்வாரா என்று தெரியவில்லை.

ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழியில், இந்த பெரியார் உலகம் எழும்புகிறது:

  1. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்கப் படவு ள்ளது.
  2. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர்.
  3. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.
  4. ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது.
  5. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன்.
  6. இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம்.
  7. ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழி – மதுர காளியம்மன் கோவில், திருவாலீஸ்வரர் கோவில், / வாலி கண்டபுரம், ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் என்று பல கோவில்கள் உள்ளன.
  8. ஆக அந்த 27 ஏக்கர் நிலமும் கோவிலுடையதாக இருக்கலாம். பிறகு, அதில் “பெரியார் உலகம்” வருவது, சிலை வைப்பது??????

பெரியாருக்கு வியாபாரம் செய்ய, புதிய கதைகளை உருவாக்குகின்றனர்: ஈவேராவை ஊதிப் பெரிதாக்கியதால், அப்பிம்பம் ஏதோ பெரிதாகி விட்டது என்று நினைப்பது பெரியாரிஸ்டுகளின் நம்பிக்கை, மூட-நம்பிக்கை, முட-நம்பிக்கை, அது மடத்தனம் ஆகிறது! விடுதலை, முரசொலி, நக்கீரன், கலைஞர்-செய்தி, சன்-குழுமம் மற்ற திக-திமுகவினருக்கு ஜால்றா போடும் ஊடகங்கள், புதியா-புதிய புராணங்களை அவிழ்த்து விடுகின்றன. அஜிதன் சந்திரஜோதி உயிர் தொழில்நுட்பவியல் & மரபணு பொறியியல் ஆராய்ச்சி மாணவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரிதாக ரீல் விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4].   “நீங்கள் தமிழரா? அல்லது தமிழகத்தில் வசிக்கிறீர்களா? ஒருவேளை ஆம் என்றால்ஒன்று நீங்கள் பெரியாரை ஆதரிப்பவராக இருக்க வேண்டும்; இல்லையேல் எதிர்ப்பவராக இருக்க வேண்டும்;….” என்று ஆரம்பித்து, வக்காலத்து வாங்கிக் கொண்டு, புராணம் பாடுவது, ஏதோ, அரசவைப் புலவர், மேடைப் பேச்சாளி போன்றவதை விட தமாஷாக இருக்கிறது. ஏதோ 2021ல் இருப்பவர்கள் எல்லாம் இவர் சொல்லித் தான் மற்றவர்கள் நம்ப வேண்டும், ஈரோடு நாயக்கரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல எழுதியிருப்பது வேடிக்கைத் தான்.

ஈவேராவின் கதைகள் இருக்கும் பெரியார்களுக்கு நன்றாகவே தெரியும், இந்த குஞ்சுகள் சொல்லித் தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை: இப்படி பொய்யான நம்பிக்கையினை உருவாக்கினால், அதனை அவர்கள் தாம், நம்ப வேண்டும்! 60/70/80 வயதானவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும்! பவானி நதிக்கரை கூத்துகள் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா என்பது சந்தேகமே, ஆனால், இது போல, பொய்களை அள்ளிவிட கிளம்பியிருக்கிறார்கள். ஈவேராவைப் பார்த்து, பேசி, பழகியுள்ளவர்களுக்கு நாயக்கரைப் பற்றி நன்றாகவேத் தெரியும். மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பாவம், நாத்திகர்களின் கடவுள் ஈவேராகி அவதாரம் மாறிய நிலை போலும்! தாம்பத்தியப் பிரச்சினை, பிறந்த குழந்தை இறந்தது, மனைவி இறந்தது, எல்லோருடனும் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தது, ……..பவனி ஆற்றங்கரை விவகாரங்கள், நாடகக் கம்பெனிகளுடன் சகவாசம், வீட்டை விட்டு ஓடினது, பணத்தால் அரசியலில் பெரிய ஆளாகி விடலாம் என்ற கனவு கனவானது, ஆங்கிலம் தெரியாதலால், எஸ்.ராமநாதன், அண்ணாவை நம்பி இருந்தது, ஐரோப்பிய சுற்றுலா பற்றிய ரகசியங்கள், அம்பேத்கர் இவரை நம்பாதது, ஜின்னா கழட்டி விட்டது, இப்படி ஏகபட்ட விவகாரங்கள் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] கார் வண்டிகள் நிறுத்த காசு, பூஜைப் பொருட்கள் விற்பனை, சிறப்பு தரிசனம், சுற்றிலும் ஏராளமான கடைகளும் முளைத்துள்ளன.முன்பு இவையெல்லாம் இல்லை.

[2]  அதாவது நாத்திகத்தை வைத்து ஆத்திகத்திற்கு எதிரான வியாபாரத்தை உரிய முறையில் அல்லது அதே மாதிரியான பிரச்சாரமுறையில் எதிர்க்கலாம்.

[3] இன்ஸ்டா.நியூஸ், மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து சிலை திருட்டு, By A.Mahendran, Reporter 19 Sep 2021 6:00 PM.

https://www.instanews.city/tamil-nadu/chengalpattu/maduranthakam/temple-idol-theft-at-keelamoor-village-neat-melmaruvathur-1019243

[4] நக்கீரன், யார் அந்த பெரியார்? என்னதான் வேண்டுமாம் அவருக்கு?, Published on 18/09/2021 (06:06) | Edited on 18/09/2021 (09:36).

https://www.nakkheeran.in/nakkheeran/who-periyar-what-does-he-want/who-periyar-what-does-he-want

பாரம்பரிய தீர்த்த யாத்திரை பாதையில் பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! (1)

செப்ரெம்பர் 22, 2021

பாரம்பரிய தீர்த்த யாத்திரை பாதையில் பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! (1)

தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பெயரில் வளாகம் அமைக்க அனுமதி: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தந்தை பெரியாரின் 95 அடி உயர் சிலை வைக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்[1].  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி 30-08-2021 அன்று சந்தித்தார்[2]. அப்போது, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூர் கிராமத்தில் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் ஆகியவை அமைக்க அனுமதி வழங்கி ஆணைப் பிறப்பித்ததற்கு பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, திராவிடர் கழக பொதுச்செயலாளர் அன்புராஜ்[3], துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பெரியார் சிலை வளாகமா, ஹைவே ரெஸ்டாரென்டா?: அதன்படி  திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க உள்ளதாக பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர். இங்கு 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க இருப்பதாக திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை அறிவித்துள்ளது. அங்கு 40 அடி உயர பீடத்தில் 95 அடி உயரம் கொண்டுள்ள தந்தை பெரியாரின் வெண்கல சிலை ஒன்று அமைய உள்ளது. 133 அடி உயரத்தில் அமையும் உலகின் மிக உயரமான பெரியார் சிலையாக இது அமைகிறது. 135 அடி என்று பிறகு சொல்லப் பட்டது[4]. அதாவது வள்ளுவர் சிலையை விட உயரமாக இருக்க வேண்டும் என்ற திட்டம் போலிருக்கிறது[5]. ஏற்கெனவே ஈவேராவுக்கு திருவள்ளுவர், திருக்குறள் மீதெல்லாம் அபாரமான விருப்பம் இருந்ததனால், நன்றாக வைது, வசை பாடி, திட்டியுள்ளது தெரிந்த விசயமான நிலையில், இப்படியொரு ஆசை, நாத்திகவாதிகளுக்கு! ஒரு துலுக்கர் திருக்குறள் மோசடி வியாபாரம் செய்து மாட்டிக் கொண்டதும், இப்பொழுது தான் செய்தியாக வந்துள்ளது[6].

பெரியார் உலகம்சுற்றுலா தலம்வளாகம் என்று வேறு விளக்கம்: இங்கு பெரியாரின் வரலாற்றை விளக்கும் ஒளி – ஒலி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், மெழுகு சிலை அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மிகப்பெரிய பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியார் படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம் ஆகியவனவும் அங்கு அமைக்கப்பட உள்ளன. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது[7]. இது தான் உண்மையே தவிர பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாக உள்ளதாக உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வதை தோழர்கள், பற்றாளர்கள் சமூக வைதளங்களில் வெளிப்படுத்துவீர் என  திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை தலைமை அறிவித்துள்ளது[8].  இதை ஈரோட்டில் அமைக்காமல், இங்கு அமைக்க வேண்டிய மர்மம் என்ன என்றும் ஆராய வேண்டியுள்ளது.

2018 முதல் 2021 வரை அனுமதி கிடைக்கவில்லையாம், ஸ்டாலின் வந்ததும் கிடைத்து விட்டதாம்: கலி. பூங்குன்றன் “இந்த வளாகம் அமைப்பதற்கான மத்திய அரசின் அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில், மாநில அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்தபோது, அதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்படவில்லை……..இப்போது மு.. ஸ்டாலின் முதல்வரான பிறகு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது[9]. இப்போது பெரியார் பிறந்து 143 ஆண்டுகளாகின்றன. 150 ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். முதல்கட்டமாக சிலையின் பணிகள் முடிவடையும். பிறகு படிப்படியாக அடுத்தடுத்த பணிகள் நடக்கும்,” என்கிறார்[10].  மூன்றாண்டுகளில் கிடைக்காதது, ஸ்டாலின் வந்தவுடன் கிடைத்து விட்டது என்றால், மத்திய அரசுடன், திமுக அல்லது திக என்ன பேரம் பேசியது, என்ன விவகாரம் என்பதனை வெளியில் சொல்வார்களா? பிஜேபிக்கும்-திமுகவிற்கும் ஏதாவது ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா? ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ரூ 100 கோடி செலவு யார் செய்யப் போகிறது?: இந்நிலையில், பெரியாருக்கு 95 அடி உயர சிலையை அரசு அமைக்கப்போவதாக பா.ஜ.க – நாம் தமிழர் பொய் செய்திகளை பரப்பினர்[11]. உண்மையான விவரங்களை வெளிப்படையாக அறிவித்திருந்தால், யாரும் ஒன்றும் கேட்டிருக்க மாட்டார்கள். “பெரியாருக்கு சிலை,” என்பதே முரண்பாடு என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்நிலையில் 95 அடி உயரம், 135 அடி உயரம், 135 அடி உயரம் என்றெல்லாம் செய்திகள் வருவது வேடிக்கையாக இருக்கிறது. மொத்த வளகத்திற்கு ஆகும் செலவு ரூ.100 கோடி என்று வீரமணி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மை இவ்வாறு இருக்க பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாகிறது என்று உண்மைக்கு மாறாகப் பிரச்சாரம் செய்வதை – கழகத் தோழர்கள், பற்றாளர்கள் சமூகவலை தளங்களில் வெளிப்படுத்துவீர்!” எனத் தெரிவித்துள்ளனர்[12]. சிலைக்கு ரூ 100 கோடிகளா அல்லது மொத்த வளாகத்திற்கான செலவு மதிப்பீடா என்பதெல்லாம் சரி, இதை யார் செலவு செய்யப் போகிறாற்கள்? தமிழக அரசு எத்தகைக் கொடுக்கிறது, பெரியார் டிரஸ்ட் எவ்வளவு செலவு செய்யப் போகிறது அல்லது புதியதாக ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பனி ஆரம்பிக்கப் போகிறார்களா? இவ்விவரங்களை வெளிப்படையாக சொல்லப் படவில்லை.

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை – பிஜேபி முன்னாள் மத்திய அமைச்சர் கூறியது (09-09-2021): நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்[13]. அப்போது அவர் கூறுகையில்[14], “…..பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துகளை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும்………” ஆக பிஜேபியின் ஆதரவும் கிடைத்து விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் முதல் பிஜேபி வரை பல தலைவர்கள் (வைத்யா, வானதி, குஷ்பு முதலியோர்) பெரியார், பெரியாரித்துவம், பெரியாரிஸம், பெரியாரின் சித்தாதம், சிலை என்று எல்லாவற்றிற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வணிக ரீதியில் செயல்படப் போகின்ற “பெரியார் உலகம்” திட்டத்தைப் புரிந்து கொண்டு பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. ஒருவேளை, பிஜேபி-திமுக கூட்டணி 2023ல் உருவாகும் என்ற கோணத்தில் ஒப்புக் கொண்டாரா என்றும் புரியவில்லை.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] தினகரன், பெரியாரின் 95 அடி உயர சிலை வைக்க அனுமதி: முதல்வருக்கு கி.வீரமணி நன்றி, ஆகஸ்ட் 31, 2021.

[2] https://m.dinakaran.com/article/News_Detail/701592/amp

[3] கே. வீரமணியின் மகன், இப்பொழுது பெரியார் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரி, வீரமணிக்குப் பிறகு பதவிக்கு வரத் தயாராக இருக்கும் இளவரசர், “பெரியாரின் வாரிசு” என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ் வள்ளுவர் சிலையை விட 2 அடி கூடுதல் உயரத்தில் பெரியார் சிலை.. காரணம் இதுதானா..?, Ezhilarasan Babu, Chennai, First Published Sep 9, 2021, 10:38 AM IST, Last Updated Sep 9, 2021, 10:38 AM IST.

[5] https://tamil.asianetnews.com/politics/periyar-statue-is-2-feet-higher-than-valluvar-statue-is-this-the-reason–qz5iaa

[6]  திராவிட, திராவிடத்துவ ஆட்சியில், திருக்குறள், திருவள்ளுவர் என்றும் வைத்துக் கொண்டு, நன்றாக அரசியல் செய்யலாம், வியாபாரமும் செய்யலாம்.

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், 133 அடி உயரத்தில் பெரியார் வெங்கல சிலை… 27 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவாகும் பெரியார் உலகம்.. எங்கு தெரியுமா?, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Sep 8, 2021, 1:24 PM IST, Last Updated Sep 8, 2021, 1:24 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/periyar-bronze-statue-at-a-height-of-133-feet-the-world-of-periyar-is-huge-on-27-acres-do-you-know-where–qz3vay

[9] பிபிசி தமிழ், பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு? உண்மை என்ன? #FactCheck, முரளிதரன் காசி விஸ்வநாதன், 7 செப்டெம்பர் 2021

[10] https://www.bbc.com/tamil/india-58476523

[11] கலைஞர்.செய்தி, ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? – உண்மை என்ன?”: பா..சீமான் வகையறாக்களுக்கு திராவிடர் கழகம் பதிலடி!, Prem Kumar, Updated on : 8 September 2021, 10:37 AM.

[12] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/08/dravidar-kazhagam-explains-what-is-the-truth-about-rs-100-crore-periyar-statue

[13] NEWS18 TAMIL, பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்,  LAST UPDATED: SEPTEMBER 10, 2021, 13:34 IST.

[14] https://tamil.news18.com/amp/news/tamil-nadu/there-is-nothing-wrong-with-placing-a-statue-of-periyar-ponradhakrishnan-ekr-556987.html

கிறிஸ்தவ மேடைக்குப் பிறகு, துலுக்க மேடை: ஸ்டாலினின் துர்பிரசாரம், ஆன்மீக எதிர்ப்பு மற்றும் இந்து தூஷணம் தொடர்கிறது – பெரியார் மண்ணில் எந்தக் கோயிலுக்கும் எந்தச் சேதாரமும் ஏற்பட்டதில்லை என்பது அப்பட்டமான பொய் (3)

ஜனவரி 8, 2021

கிறிஸ்தவ மேடைக்குப் பிறகு, துலுக்க மேடை: ஸ்டாலினின் துர்பிரசாரம், ஆன்மீக எதிர்ப்பு மற்றும் இந்து தூஷணம் தொடர்கிறதுபெரியார் மண்ணில் எந்தக் கோயிலுக்கும் எந்தச் சேதாரமும் ஏற்பட்டதில்லை என்பது அப்பட்டமான பொய் (3)

அரசியல், ஆன்மீகம், நாத்திகம், ஈவேரா[1]: ஸ்டாலின் தொடர்ந்து பேசியது, “அரசியலையும் ஆன்மிகத்தையும் ஒன்றாகக் குழப்பி மக்களை ஏமாற்ற முடியாது, இரண்டும் வேறு வேறு. அரசியலுக்கும், ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணா்ந்தவா்கள் தமிழக மக்கள். அவா்களை யாரும் ஏமாற்ற முடியாது. அரசியல் என்பது மக்களின் உரிமை சார்ந்தது. ஆன்மிகம் என்பது மனம் சார்ந்தது. இந்த இரண்டையும் ஒன்றோடு ஒன்றாகச் சோ்த்து குழப்ப முடியாது. ஏமாற்ற முடியாது[2]. இது தமிழக அரசியல் களத்தில் நிரூபிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு நூறு உண்மை. பக்தியை அரசியல் வியாபார பொருளாக மாற்றி விட்டனர்.  தங்களது கொள்கைகள், சாதனைகளை சொல்லிக்கொள்ள முடியாதவர்கள்தான் ஆன்மீகத்தில் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.  இறை நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதனால்தான், தந்தை பெரியார், ‘பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்துஎன்று சொன்னார்[3]. ‘பக்திப் பிரச்சாரம் நாடு முழுவதும் நடக்கட்டும், பகுத்தறிவுப் பிரச்சாரமும் நாடு முழுவதும் தொடரட்டும்என்று தலைவர் கருணாநிதி சொன்னார்[4]. இரண்டு பிரச்சாரமும் கருத்து விவாதமாக இருக்கலாமே தவிர கைகலப்பு மோதலாக மாறிவிடக் கூடாது என்பதில் திராவிட இயக்கம் தெளிவாக இருந்தது. அதனால்தான் பெரியார் மண்ணில் எந்தக் கோயிலுக்கும் எந்தச் சேதாரமும் ஏற்பட்டதில்லை. ஆனால், இன்றைக்கு பக்தியை வியாபாரப் பொருளாக, அதுவும் அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்கு சிலர் முயல்கிறார்கள்”.

பெரியார் மண்ணில் எந்தக் கோயிலுக்கும் எந்தச் சேதாரமும் ஏற்பட்டதில்லை: இப்படி பட்ட பேச்செல்லாம், அப்பட்டமான பொய்களே ஆகும்.

  1. ஈவேராவின் நாத்திகம் இந்துவிரோத நாத்திகம். அதனால் தான், துலுக்கர், கிறிஸ்துவர் அதனை ஆதரித்து வருகிறனர்.
  2. அலி-சகோதரர்கள் மற்றும் ஜின்னா-பெரியார் கூட்டினால், மீலாது நபி கூட்டங்களில் ஈவேரா கலந்து கொண்டு, இந்துமதத்தைத் தாக்கி பேசினார்.
  3. அம்பேத்கர் இஸ்லாம், முகமதியர் பற்றி எடுத்துக் காட்டினாலும், ஈவேரா கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் ஜின்னா-அம்பேத்கர்-பெரியார் பேச்சு தோல்வியில் முடிந்தது.
  4. அதே வழியைத் தான், அண்ணா, கருணாநிதி, இன்று ஸ்டாலின் பின்பற்றுகிறார்.
  5. ஈவேரா விநாயகர் சிலைகளை உடைத்தார், ஆனால், மேரி-ஏசு சிலைகளை அல்லது பிறை-நட்சத்திரம்-மசூதி போன்ற உருவங்களை உடைக்கவில்லை.
  6. இதனால் தான், 1950களிலிருந்து கோவில்கள், சிலைகள் தாக்கப் பட்டு வருகின்றன.
  7. சர்ச்சுகளை, மசூதிகளை, தர்காக்களை எதிர்த்து பேசவில்லை, எழுதவில்லை.
  8. அக்னிஹோத்திரம் புத்தகம் போல, “கிருத்துவம் எங்கே போகிறது” அல்லது “இஸ்லாம் எங்கே போகிறது” என்று எந்த பாதிரி அல்லது முல்லா எழுதி, வெளியிடவில்லை.

இப்படி எத்தனையோ உதாரணங்களை எடுத்துக் காட்டலாம்.

 ‘நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்,‘ – இந்துக்கள் இல்லாத துலுக்கர் ஆதரவு மாநாடு (06-01-2021): பெரும்பான்மை என்றெல்லாம் பேசினாலும், ஸ்டாலின், கருணாநிதி, அண்ணாதுரை அல்லது திமுக, இந்துக்களுக்கு நல்லது என்ன செய்தது என்று சொல்ல முடியவில்லை, சொல்லவும் இல்லை. “இதயங்களை இணைப்போம்” என்றதில், இந்துக்களை சேர்க்காததால், இந்துக்களுக்கு இதயமே இல்லை என்றாகிறது. வழக்கம் போல, நாத்திக-கிறிஸ்த-துலுக்க கும்பல்கள் தான் சேர்ந்து கூட்டம் போட்டு, இந்துக்களைத் தாக்கியுள்ளது. “நல்லாட்சி,” திமுக கொடுக்கும் என்பதே, அபத்தமானது, பொய்யானது மற்றும் ஏமாற்றுவேலை என்பது தெரிந்த விசயம். 1969லிருந்து திமுக தமிழகத்தை ஆண்டாலும், இதுவரை கொடுக்காத “நல்லாட்சியை” எப்படி இப்பொழுது 2021ல் கொடுக்க முடியும் என்று தெரியவில்லை. ஊழல், லஞ்சம்,அநியாயம், சட்டமீறல்கள், என்றெல்லாம் வரும் போது, திராவிடக் கட்சிகளை யாரும் மிஞ்ச முடியாது. மேடைக்கு மேடை, இடத்திற்கு இடம், எதையாவது தமிழில் உரக்கப் பேசி விட்டு,  தப்பித்துக் கொள்ளப் பார்ப்பர். அப்பேச்சுகள் எல்லாம் முரண்பட்டவையாகவும், எதிரும்-புதிருமாக, குழப்பமாகத் தான் இருந்து வருகிறது. இப்பொழுது, ஸ்டாலின் பேசுவதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு எல்லாம் “இதயங்கள்” இருந்திருந்தால், இவ்வாறு பாரபட்சமாக, இந்துக்களை, இந்துமத நம்பிக்கைகளை, இந்து கடவுளர்களை மட்டும் தாக்கி பேச மாட்டார்கள். ஆனால், அந்நிலை தொடர்வதால், இவர்களது இந்துவிரோதம் தெரிந்த விசயமாகிறது.

நான்கே மாதங்களில் நல்லாட்சி அமையும்: இன்னும் நான்கே மாதங்களில் நல்லாட்சி அமையும் என்று ஜோதிடம், ஆரூடம் சொல்லும்பாணியில், ஸ்டாலின் பேசியது தமாசாக இருந்தது[5]. இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றால், அட்தகைய பேச்செ வந்திருக்காது. ஒருவேளை துர்கா ஸ்டாலின் ஜாதகத்தைக் கொடுத்து பார்த்து சொன்னார் போலும். ஆனால், அதனைத் தடுக்க சிலர் முயற்சிக்கிறார்களாம்[6]. ஏதோ ஏழு இடங்களில் ஜெயக்கலாம் என்று சொல்லப் படுகிறது, அதையும், விடாமல், திமுக காப்பற்றும் என்று சொன்னது, தேர்தல் நடக்க வேண்டும், மக்கள் ஓட்டுப் போடவேண்டும், பிறகு முடிவுகளைக் கணிக்கலாம். ஆனால், எதுவுமே நடக்காமல், தீர்மானித்தது போல, இவ்வாறு பேசிவது, பகுத்தறிவா, எந்த அறிவு என்றுப் புரியவில்லை. அதற்கும் மேலான, ஆரூடம் தான். மேடைகள், இடங்கள், சில ஆட்கள் மாறினாலும், பேசும் பேச்சு, அதில் இருக்கும் வெறுப்பு, காழ்ப்பு, தாக்கும் குறி-இலக்கு முதலியவை மாறாமல் இருக்கின்றன. சிறுபான்மை என்ற முகமூடி அணிந்து, பெரும்பான்மையினரைத் தாக்குவதே திமுகவுக்கு வாடிக்கையாக இருக்கிறது என்பதும் தெரிந்த விசயமே! தமிழக மக்கள், செக்யூலரிஸத்துடன் தான் ஓட்டளித்து வருகிறார்கள், இனி ஸ்டாலின் பேச்சைப் புரிந்து கொண்டால், தக்க பதில் அளிப்பார்கள் என்பதும் நிதர்சனம் ஆகிறது.

பிஜேபியின் கண்டுகொள்ளா மனோபாவம்அரசியல் சமரசம்: பிஜேபி “வேல் யாத்திரை,” என்று ஆர்பாட்டம் செய்ததோடு சரி, பிறகு, அமைதியாகி விட்டார்கள். கிறிஸ்தவ பாதிரிகள், பிஜேபியில் சேர்ந்தார்கள் என்று ஆர்பாட்டம் செய்தார்கள். ஆனால், அடுத்த நாள், ஆளுக்கு ஆள், மறுப்புத் தெரிவித்து, விலகி விட்டார்கள். அதிமுகவுடன், கூட்டணி கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது. மத்திய ஆட்சி-அதிகாரத்தை வைத்து, அப்படியே அமுக்கி விடலாம், என்ற மமதை தான் வெளிப்படுகிறது. முறையாக, தமிழகத்தில் நிலையாக, இந்த்துத்துவ சித்தாந்தத்துடன் நிலைக்க வேண்டும், மக்களை கவர்ந்து, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற போக்கே காணப்படுவதில்லை. அமீத் ஷா வருவார், எல்லாமே மாறிவிடும், இல்லை, சசிகலா வெளியே வந்தால், எல்லாம் சரியாகி விடும் போன்ற யேஷ்யங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், இத்தகைய, கிறிஸ்தவ-துலுக்க திட்டங்கள் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் போலும்.. இவர்களால் அத்தகைய மேடைகள் போட்டு, இந்து ஆதரவையும் அல்லது நாத்திக-கிறிஸ்தவ-துலுக்க எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை, அரசியல், கூட்டணி, பதவி ஆசை போன்றவற்றால் அடங்கி, சுருங்கிக் கிடக்கின்றனர். இந்துத்துவம், இந்துத்த்வவாதங்கள், இந்துத்துவவாதிகள் வாய்சொற்களில், சமூக ஊடகங்களில் வீராப்பு காட்டுவதோடு சரி. உருப்படியாக எதையும் செய்வதில்லைமரசியல் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

07-01-2021


[1] தினமணி, அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு: மு..ஸ்டாலின், By DIN | Published on : 07th January 2021 12:41 AM

[2] https://www.dinamani.com/tamilnadu/2021/jan/07/politics-is-different-spirituality-is-different-mk-stalin-3538840.html

[3] தினமலர், ஆன்மிகமும் அரசியலும் வேறு கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு, Added : ஜன 07, 2021 00:12

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2684764&Print=1

[5] தினகரன், தமிழகத்தில் 4 மாதங்களில் நல்லாட்சி அமையும்: மு..ஸ்டாலின் பேச்சு, 2021-01-06@ 20:36:44

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=644984

கிறிஸ்தவ மேடைக்குப் பிறகு, துலுக்க மேடை – முகமது இஸ்மாயில்-கருணாநிதி கூட்டு, ஜின்னா-ஈவேரா கூட்டுப் போன்றதே – ஸ்டாலினின் துர்பிரசாரம், ஆன்மீக எதிர்ப்பு மற்றும் இந்து தூஷணம் தொடர்கிறது (2)

ஜனவரி 8, 2021

கிறிஸ்தவ மேடைக்குப் பிறகு, துலுக்க மேடைமுகமது இஸ்மாயில்-கருணாநிதி கூட்டு, ஜின்னா-ஈவேரா கூட்டுப் போன்றதே – ஸ்டாலினின் துர்பிரசாரம், ஆன்மீக எதிர்ப்பு மற்றும் இந்து தூஷணம் தொடர்கிறது (2)

திமுக, கருணாநிதி, முரசொலி இவற்றிற்கு உதவியவர்கள் முஸ்லிம்கள்[1]: தலைவர் கலைஞர் அவர்களே அடிக்கடி சொல்வார்கள்: நான் சிறு வயது இளைஞனாக இருந்தபோது ஒரு கையில் குடி அரசு இதழையும் இன்னொரு கையில் தாருல் இஸ்லாம் இதழையும் வைத்துக் கொண்டு திருவாரூரில் வலம் வந்தேன்,” என்று குறிப்பிடுவார்கள்.

  1. தந்தை பெரியாரைப் போலவே, என்னுள் சிந்தனை மாற்றம் ஏற்படுத்தியவர்களில் பா. தாவூத் ஷாவுக்கும் பங்குண்டு என்று கலைஞரே சொல்லி இருக்கிறார்கள்.
  2. பேரறிஞர் அண்ணா அவர்களையும் தலைவர் கலைஞர் அவர்களையும் இணைக்க, பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாயம் தான். திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாவுக்குப் பேச வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்த ஊரில் கருணாநிதி என்றால் யார்? அவரை அழைத்து வாருங்கள்’என்று சொல்லி அழைத்துள்ளார். இருவரும் முதன்முதலாக சந்திக்கக் காரணமாக இருந்தது மிலாதுநபி விழா தான்!
  3. பள்ளிக் காலத்தில் கலைஞருக்கு உற்ற தோழனாய் இருந்து உதவி செய்தவர் அசன் அப்துல் காதர்!
  4. கையெழுத்து இதழாக இருந்த முரசொலியை அச்சில் வெளியிடக் கலைஞர் திட்டமிட்டபோது அதனை அச்சிட்டுக் கொடுத்தவர் கருணை ஜமால்!
  5. உள்ளூரில் எழுதிக் கொண்டு இருந்த கலைஞரை சேலம் மார்டன் தியேட்டர்ஸூக்கு அழைத்துச் சென்று மாபெரும் கதை வசன கர்த்தாவாக ஆக அடித்தளம் இட்டவர் கவிஞர் காமு ஷெரீப்!
  6. கலைஞர் என்ற ஒரு தலைவரை தனது காந்தக் குரலால் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர் இசை முரசு நாகூர் அனீபா அவர்கள்!

இப்படி பட்டியல் இட்டு, எவ்வாறு, முஸ்லிம்கள் திமுக, அண்ணாதுரை, கருணாநிதி என்று உதவியவர்கள் துலுக்கர் தான் என்று விவரித்துப் பேசினார். அவ்வாறு, திமுகவுக்கும், அவர்களுக்கு அத்தகையப் பிணைப்பு இருக்கும் போது, திமுகவின் பெயரையும், “துலுக்க முன்னேற்றக் கழகம்,” என்று மாற்றி விடலாம் போலிருக்கிறது.

காயதே மில்லத்துடன் கருணாநிதியின் நெருக்கம்[2]: ஸ்டாலின் தொடர்ந்து பேசியது, “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தலைவர் ஆகியோருடன் இணைத்து கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் படமும் இங்கே வைக்கப்பட்டுள்ளது[3]. ஏன் இப்படி வெளியிட்டுள்ளோம் என்றால்காயிதே மில்லத் அவர்களும் நம்முடைய தலைவர்களுடைய வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டிய மாபெரும் தலைவர்! காயிதேமில்லத் அவர்கள் தன்னுடைய மதத்தை மட்டுமல்ல, இந்திய நாட்டையும், தாய்மொழியாம் தமிழ் மொழியையும் காப்பாற்றத் தொண்டு செய்தவர் ஆவார். …….தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணாவுக்கு அப்போது தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள்! ………”. முகமது இஸ்மாயில், முகமது அலி ஜின்னாவின் நெருங்கிய நண்பர், அவருக்கு இந்தியாவைப் பற்றிய விவரங்களை கொடுத்து உதவியவர். பாகிஸ்தானை ஆதரித்து, இந்தியன் முஸ்லிம் லீகை விடாமல், இந்தியாவில் தொடர்ந்து நடத்தியவர். ஆக அத்தகையோருடன் “தொப்புள் கொடி உறவு,” என்பதை அவர்கள் தான் விவரிக்க வேண்டும்.

1972- காயதே மில்லத்தை நேரில் சென்று பார்த்த கருணாநிதி: ஸ்டாலின் தொடர்ந்து பேசியது, “………………1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் காயிதேமில்லத் அவர்கள் மறைந்தார்கள். அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது என்ற செய்தி கிடைத்தபோது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோவையில் இருந்தார்கள். செய்தி கேள்விப்பட்டதும் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு சென்னை வந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ஸ்டேன்லி மருத்துவமனைக்குச் சென்றார்கள். கேரள சிங்கம் என்று போற்றப்பட்ட முகமது கோயா, அப்துல் சமது, அப்துல் லத்தீப் போன்றவர்கள் அப்போது இருந்தார்கள். ………1947 முதல் 1962 வரை தமிழகத்தில் இசுலாமிய அமைச்சர் இல்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் தான், இசுலாமிய சமூகத்துக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்கள். காங்கிரஸ் ஆட்சி காலம் அது. கடையநல்லூர் அப்துல் மஜீத் அவர்கள் அதன்பிறகு தான் அமைச்சர் ஆக்கப்பட்டார்கள்”.  இத்தகைய, இஸ்லாம் சார்பு, சம்பந்தம் மற்றும் அரசியலையும் மீறிய உறவுகளின் பின்னணி என்னவென்று தெரியவில்லை.

ஸ்டாலின் துலுக்க-திமுக கூட்டு, நெருக்கம், அந்நியோன்யம் ….முதலியவற்றைத் தொடர்ந்து விவரித்தது.
முகமது இஸ்மாயில், தொடர்ந்து திமுகவை ஆதரித்தது, திராவிடப் பிவினைவாதக் கொள்கையினால் தான்.

திமுக, கருணாநிதி, முஸ்லிம்களுக்காகச் செய்தது என்று ஸ்டாலின் பட்டியல் இட்டது[4]: பிறகு, ஸ்டாலின் எவ்வாறு திமுக, முஸ்லிம்களுக்கு உதவியது என்று பட்டியல்போட்டு, படித்துக் காட்டினார், “எதிர்க்கட்சியாக இருந்தபோதே சிறுபான்மையினர் உரிமைக்கு குரல் கொடுத்த கழகம், ஆட்சி அமைத்த பின்னர் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்தது.

உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

  1. 1989 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
  2. 1990 ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
  3. 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
  4. 2000 ஆம் ஆண்டில் உருது அகாடமி தொடங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
  5. தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகச் செலவுக்காக தமிழக அரசின் சார்பில் நிதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
  6. ஹஜ் மானியத்தை அதிகப்படுத்தியவர் முதலமைச்சர் கலைஞர்!
  7. 2002 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தத் துறையைத் தோற்றுவித்தவர் முதலமைச்சர் கலைஞர்!
  8. நபிகள் நாயகம் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்தவர் முதலமைச்சர் கலைஞர்!
  9. சிறுபான்மையின மாணவியர் விமானப் பணிப்பெண் பயிற்சி பெற இலவச வசதிகளைச் செய்து கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
  10. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இசுலாமியர்க்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 2007 ஆம் ஆண்டு வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
  11. 2007 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
  12. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவர் முதலமைச்சர் கலைஞர்!

இவை சிறுபான்மை இன மக்களுக்காகச் செய்யப்பட்டவை மட்டும் தான். இப்படி ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் கலைஞர்,” என்று முடித்தார். ஆனால், அதே நேரத்தில், பெரும்பான்மையினருக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்லவில்லை, ஏன், மூச்சுக் கூட விடவில்லை. பிறகு, எதற்கு, இந்த /மேடைகள், பேச்சுகள் எல்லாம்?

© வேதபிரகாஷ்

07-01-2021


[1] https://tamil.news18.com/news/politics/tn-assembly-election-2021-mk-stalin-campaign-vjr-390427.html

[2] கலைஞர்.செய்திகள், அரசியலுக்கும் ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்”- மு..ஸ்டாலின் எழுச்சியுரை!, 10:08:07 pm – Jan 06, 2021

[3] https://m.kalaignarseithigal.com/article/m-k-stalin/dmk-chief-mk-stalin-speech-at-dmk-minorities-wing-public-meeting/f2e9759e-148d-4884-adb0-e7862d47494b

[4]  முரசொலி, சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் அச்சுறுத்தலாக இருப்பது பாஜகஅதிமுக, 07-01-2021, பக்கங்கள்.1,4,5.